1
சொற்பிரிப்பு
உரை
தவழும் பூணூல் அணிந்த மார்பினை உடையீர்! கணங்களாகிய படையினை உடையீர்! அழகிய கங்கை தங்கும் செந்நிறமான சடையினை உடையீர்! சாம வேதத்தை ஓதியருளினீர்! எங்கும் அழகாக மறையோர்கள் வேதாகம முறைப்படி வழிபடத் திருவிடைமருதூரில் மேகக்கூட்டம் வந்து தோயும் திருக்கோயிலையே உம்முடைய கோயிலாக மகிழ்ந்தீரே.