1
சொற்பிரிப்பு
உரை
வெண்சங்கினால் ஆன அழகிய குழையும் தோடும் காதில் பெய்து, ஒப்பற்ற நால்வேதங்களை ஐயமின்றிச் சொன்னவரே. சுடுகாட்டினில் விருப்பம் உடையவரே! குலையாகச் சிவந்த காய்களை உடைய பசிய கமுகஞ்சோலைகளில் குயில்கள் கூவும் தலைச்சங்காட்டில் உள்ள திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு எழுந்தருளியுள்ளீரே.