1
சொற்பிரிப்பு
உரை
ஆகாயத்தில் இருந்த மூன்று கோட்டைகளும் அழியக் கொடிய அம்பால் எய்தாய். பண் இசை தங்கிய புறவார் பனங்காட்டூரில் பெண் ஒரு பாகமாகிய திருவுருவுடைய பிஞ்ஞகனே! பிறை சேர்ந்த நெற்றியில் ஒரு கண்ணை உடையவனே! உன்னைப் புகலாகஅடைந்தாருக்கு அருள்வாயாக.
ஆகாயத்தில் இருந்த மூன்று கோட்டைகளும் அழியக் கொடிய அம்பால் எய்தாய். பண் இசை தங்கிய புறவார் பனங்காட்டூரில் பெண் ஒரு பாகமாகிய திருவுருவுடைய பிஞ்ஞகனே! பிறை சேர்ந்த நெற்றியில் ஒரு கண்ணை உடையவனே! உன்னைப் புகலாகஅடைந்தாருக்கு அருள்வாயாக.
நீண்ட இதழ்களையுடைய வெண் காந்தள், அலர்ந்த வெண்ணிற முல்லை மலர்கள், நீரில் பூக்கும் மலர்கள் முதலியன வரிசையாக உகுத்த வெண்மையான தாதுக்கள் உப்பளத்தைப் போல அழகு செய்ய, பண்ணிசை போல் வண்டுகள் முரலும் புறவார் பனங்காட்டூரில், தோடு விளங்கும் காதின் பக்கத்தில் மின்னொளி தோன்ற அசையும் வெண்குழை துள்ள, நள்ளிரவில் கூத்தாடும் சங்கரனே! உன்னைப் புகலாக அடைந்தாருக்கு அருள்வாயாக.
வாளை மீன்களும் கயல்மீன்களும் பிறழும் நீர் நிறைந்த பொய்கைக் கரையின் அருகெலாம் வயலும், பாளைகள் ஒளிரும் கமுகுகள் காட்சியளிக்கும் புறவார் பனங்காட்டூரில், பூளைப் பூவும் நறுமணமுடைய கொன்றை மலரும், பித்தமளிக்கும் ஊமத்தம்பூவும் திருமேனியில் புனைவோனே! உன் கழலிணைகளையே துதிக்கும் தவத்தை உடையவருக்கு அருள்வாயே.
எருமைகள் விடியற்காலைப் பொழுதில் இளஞ்செந்நெல் கதிர்களைக் கவ்வி மேய்ந்து, பின் படுகரில் பாயும் குளிர்ந்த வயல்களை உடைய புறவார் பனங்காட்டில், ஆராய்ந்த நான்கு வேதங்களையும் பாடி ஆடும் அடிகள் என்று அரற்றி நன்மலர்களைச் சாய்த்து அடி பரவும் தவம் உடையாருக்கு அருள்வாயே.
செங்கயல்மீன் சேல் மீன் இரண்டும் போர் செய்ய, சீறி யாழ் போல வண்டுகள் கூட்டம் முரல தாமரைப் பூக்கள் மலரும் நீர்வளம் உடைய புறவார் பனங்காட்டூரில் , கங்கையும் மதியும் விளங்கும் சடைக் கேண்மையாளுடன் கூடி, மான்மறியை அங்கையில் கொண்டு ஆடல் புரிபவனே! நின் அடியார்களுக்கு அருள்வாயே.
நீர் அரணாகப் பொருந்திய எல்லையை அமைத்துக் கடல்போல் நீண்ட சோலைகளால் சூழப் பெற்றுப் பாருலகத்தவர்கள் நாள்தோறும் பிரியாத புறவார் பனங்காட்டூரில் கார்காலத்தில் மலரும் கொன்றை மலரை அணியும் கடவுளே என்று கைகூப்பி நாள்தோறும் புகழுடன் வணங்கும் திறமுடையவர்களுக்கு அருள்வாயே.
மகளிரின் கையில் அமைந்துள்ள மெல்லிய விரல்களைப் போல அரும்பிப் பாம்பின் படம் போலக் காந்தள் விரியும் புறவார் பனங்காட்டூரில், உமையம்மை, ஒரு பாகமாகத் திருமேனியில் மேவினாய்! உம்முடைய கழலணிந்த திருவடிகளைப் புகழ்ந்து நாள்தோறும் பொய்யிலா அடிமை புரிந்தாருக்கு அருள்வாயே.
மெல்லிய பூஞ்சிறகுகளையுடைய அன்னப் பறவைகள் நிறைந்து தங்குதலால் நுடங்கும் தாமரை மலர்களுடைய பொய்கைப் பரப்பில் வண்டுகள் ஒலிக்கும் திருவார் பனங்காட்டூரில் மேவி இருப்பவரே! அரக்கனாகிய இராவணன் வலிமையை அடர்த்துப் பின் அவன் பாடல் கேட்டு அருள் செய்தாய். நின் பணி செய்ய ஆணை தருக என்னும் அடியவருக்கு அருள்வாயே.
அழகும் குளிர்ச்சியும் வாய்ந்த மாதவி, புன்னை, நல்ல அசோகு,தாமரை, மல்லிகை பசிய குளிர்ச்சியுடைய ஞாழல்கள் சூழ்ந்த திருவார் பனங்காட்டூரில், மேக வண்ணனாகிய திருமால், நான்முகன் என்னும் இத்தேவர்களின் காட்சிக்கு அரிதாக உயர்ந்தவனே!தவமுடையவருக்கு அருள்வாயே.
வண்டுகள் தேனை மிகுதியாக உண்டு பெரிய நீல மலர்களில் தங்கி நேரிசை என்னும் பண்ணை யாழில் மிழற்றுவது போல முரலும் திருவார் பனங்காட்டூரனே! ஆடையின்றி நாணம் அழிந்து திரியும் சமணரும் நட்புச் செய்யத் தகுதியில்லாத சாக்கியரும் சிரிக்க, மண்டையோட்டில் பிச்சை ஏற்று உணவு கொள்ளுதற்கு உரியவனே!உன்னை விரும்பும் அடியவர்களுக்கு அருள்வாயே.
நீலமணி போன்ற கண்டத்தை உடையவனை, குற்றம் நீக்கும் திருநீறு பூசும் மார்பனை, பசிய தேன் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட புறவார் பனங்காட்டூரின் தலைவனை, புகழ் நிறைந்த சீகாழியுள் நான்கு வேதங்களுள் ஆராய்ச்சி மிக்க ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகச் செய்யுளைப் பாடவல்லவர்கள் சிவலோகம் சேர்வர்களே.