1
சொற்பிரிப்பு
உரை
நீர் மிகுந்ததும், கயல்மீன்கள் பெருகி வாழ்வதுமாகிய வாவிகள் பொழில்கள்சூழ்ந்ததும், நீண்ட பெரிய வயல்கள் நெருங்கியதும், மதிற்சுற்றுகளை உடைய தேரோடும்வீதிகளில் விழாக்கள் நிறைந்ததுமாகிய திருக்களர் என்னும் இத்திருத்தலத்தில், ஊர் மக்கள்இடுகின்ற பிச்சையை விரும்பும் ஒருவனே! செஞ்சடையில் பிறை பொருந்த நின்றவனே! நின்னை அடைந்த அன்பர்களுக்கு அருள் புரிவாய்.