1
சொற்பிரிப்பு
உரை
சிவன் உமாதேவியை ஒருபாகத்தில் கொண்டவன். பிறைச்சந்திரனைச் சூடிய சிவந்த சடையினன். நீலகண்டத்தினைக் கொண்டவன். மறைகளை விரித்து இசைப்பவன். நெய் பூசப்பெற்ற மூவிலைச் சூலத்தைக் கையில் ஏந்தியவன். ஒளிதிகழும் தேவேந்திரனின் கைரேகை பதியப் பெற்றவன். அவன் விரும்பி உறைகின்ற திருத்தலமே கைச்சினம் ஆகும்.