1
சொற்பிரிப்பு
உரை
எலும்பு மாலையும், ஆடுகின்ற பாம்பும், ஆமைஓடும் பொருந்திய மார்பினை உடையவன் ஈசனே! யானைத்தோலையும் புலித்தோலையும் ஆடையாகக் கொண்டவன் ஈசன். திருநீற்றைப் பூசிய அப்பெருமான் பொய்யற்ற மெய்ந்நெறியாளர் பொருந்தியிருக்கும் ஆக்கூர் தான் தோன்றி மாடத்தில் விளங்குகின்றான்.