1
சொற்பிரிப்பு
உரை
பூதகணங்கள் சூழ, இரவில் மயானத்தில் நெருப்பைக் கையில் ஏந்தித் திருநடனம் புரிபவரே சிவபெருமான். தலையில் அரவத்தை அணிந்தவரே சிவபெருமான். அவரே குரவ மலர்கள் நிறைந்து விளங்கும் குரங்காடுதுறை தலத்துள் கோயில் கொண்டுள்ளார். அவரைப் பரவித் தொழும் அடியவர்களின் வல்வினைகள் கெட்டு அழியும்.