1
சொற்பிரிப்பு
உரை
திருத்தொண்டர்கள் மலர் தூவி சிவபெருமானை வழிபடுவர். அவர் நஞ்சுண்டு கருத்த கண்டத்தினைக் கொண்டவராய் கருவூரானிலை திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ளார். அண்டங்களுக்கெல்லாம் தலைவராகிய அவரை நாமும் அன்புடன் வழிபடுவோம். அவர் உறுதியாக அருள்புரிவார்.