1
சொற்பிரிப்பு
உரை
நெல்லி மரங்களுக்கு மத்தியில் கோவில் கொண்டவர் ஈசன். அவர் சிறு பறவைகள் பொருந்தி வாழும் மடைகள் சூழ்ந்த நெல்வாயில் என்னும் தலத்தில் கோயில் கொண்டுள்ளார். உயர் பண்புகள் அனைத்தும் நிறைந்த அவர், மறைநான்கையும் நால்விரற் கோவண ஆடையாகக் கொண்டுள்ளார். உச்சியார் என்னும் திருப்பெயர் கொண்ட அவரே எனது தலைஉச்சியிலும் பொருந்திய மாண்பினர்.