1
சொற்பிரிப்பு
உரை
அழகுமிக்க உழத்தியர் வேணுபுர வயல்வெளிகளில் மகிழ்ந்து உழுதொழில் புரிவர். அவர்களது ஒளிமிக்க பற்களோடு போட்டியிடுவதுபோல் கடலில் உள்ள முத்துக்களும் வேணுபுர வயல்களில் வந்து சிதறுகின்றன. எல்லாம் ஒன்றுபட்டு விளங்குவதற்குக் காரணம் வேணுபுரப் பெருமான் தலையில் மாறுபட்ட பொருள்களாகிய பிறைநிலவும், கங்கை நதியும், கொடிய பாம்பும் ஒன்றுபட்டிருப்பதைக் காணமுடிந்த பாக்கியம்தான் என்க.