1
சொற்பிரிப்பு
உரை
சடைமுடி உடையவனை, சந்திரனையும் பாம்பையும் அணிந்தவனை, பிரம கபாலத்தைக் கையில் ஏந்திப் பலி தேர்பவனை, தேவர்களும் தொழும் வெண்ணிப்பதியானை,நான் எப்பொழுதும் நினைவேன். அவனைத் தவிர என் உள்ளம் வேறு எவரையும் நினைக்காது.
சடைமுடி உடையவனை, சந்திரனையும் பாம்பையும் அணிந்தவனை, பிரம கபாலத்தைக் கையில் ஏந்திப் பலி தேர்பவனை, தேவர்களும் தொழும் வெண்ணிப்பதியானை,நான் எப்பொழுதும் நினைவேன். அவனைத் தவிர என் உள்ளம் வேறு எவரையும் நினைக்காது.
ஒளி மயமானவனை, வெண்ணீறு அணிந்திட்ட எம் ஆதியனை, ஆதியும் அந்தமும் இல்லாத வேதியனை, அந்தணர்களால் விரும்பி வணங்கப் பெறுபவனை, வெண்ணிப் பதியில் உறைபவனை, நினைப்பவர்கள் வினை நீக்கப் பெறுவார்கள் என்க.
நற்கனி போன்றவனை, உள்ளம் கனிந்தவரை ஆட்கொள்ளும் அண்ணலை, மூவுலகுக்கும் ஒப்பற்ற தலைவனாக விளங்கும் இறைவனை, நல்லவர்களால் வணங்கப் படுபவனை, திருவெண்ணிப் பதியில் கோயில் கொண்டுள்ளவனை, ஏத்தி வழிபடும் அடியவர்கள் குற்றமற்றவராய் துன்பமின்றி விளங்குவர்.
முன்னைப் பழம் பொருளாய் உள்ளவனை, மூவுலகிற்கும் தலைவனை, உயிர்களைக் காத்து அருள்பவனை, உள்ளம் கனிந்தவர்களின் உள்ளத்தில் பொருந்தி இருப்பவனை, அழகான வெண்ணிப் பதியில் உறைபவனை ஏத்தி வணங்காதவர்கள் கீழ்மைத்தனம் கொண்டவர்களாய் பேய் போன்றவர்கள் என்க.
ஒளிமயமானவனை, நிறை புனலாகிய கங்கையைத் தன் தலையில் கொண்டவனை, கொன்றை மலர் மாலை அணிந்தவனை, உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டவனை, சிறப்பு மிக்கவனை, வெண்ணிப் பதியில் கோயில் கொண்டவனை, அன்புடன் நினைப்பவர்களின் வினை எல்லாம் நீங்கப் பெறும்.
முத்தாகவும், வயிரமாகவும், மாணிக்க மணியாகவும் விளங்குகின்ற ஈசனை அணையா விளக்காக விளங்குபவனை, எல்லாப் பொருள்களுக்கும் வித்தானவனை விண்ணவர்களால் வணங்கப் பெறுபவனை, வெண்ணித்தலத்தின் நாதனை அன்புடன் அடைய வல்லார்களுக்கு அல்லல் என்பதே இல்லையாம் என்க.
மன்மதனைக் காய்ந்து பொடிப்பொடியாக்கியவனை, காலனைக் காலால் உதைத்து அருளியவனை, கரியின் தோலை உரித்து ஆடையாகக் கொண்டவனை, விண்ணவர்களால் தொழப் பெறுபவனை, வெண்ணியில் உறைபவனை நினைய வல்லார்களின் வினைகள் நில்லாவாம்.
இறைவனை மறந்து கயிலாய மலையைத் தூக்கிட நினைத்த இராவணனின்வலிமையை அழித்தவனை, அவனது தோள்களையும் முடிகளையும் நெறித்தவனை, அழகு பொருந்திய வெண்ணிப் பதியில் உறைபவனை, போற்றும் அடியார்கள் எல்லாவிதமானஆற்றலையும் பெற்றவர்கள் ஆவார்கள்.
மண்ணாகவும் விளங்கும் இறைவனை, தேவர்க்கும் மனிதர்க்கும் கண்ணாக இருப்பவனை, கண்ணனும் நான்முகனும் அறிய முடியாப் பெருமானை, தேவர்களால்வணங்கப் பெறும் சிறப்புடையவனை, வெண்ணியின் அண்ணலை அடைய வல்லவர்களுக்கு அல்லல் இல்லை என்க.
சமணரும், சாக்கியரும் நற்குணமற்றவர்கள். முரட்டுத்தனம் கொண்டவர்கள்ஆவார்கள். அவர்கள் கூறும் பொய்யுரை கேட்டு கோபம் கொள்ள வேண்டாம். நம் பெருமான் முப்புரங்களை சிரித்தே எரித்தவர் ஆவார். அவர் கோயில் கொண்டுள்ள வெண்ணிப் பதியில் வாழ்கின்ற மெய்த்தொண்டர்களே நீங்கள் எம்பெருமானையே ஏத்தி வழிபாடு செய்யுங்கள். உங்களைத் துன்பமே வந்து அடையாது என்க.
மணம் நிறைந்த சீர்காழிப்பதியில் அவதரித்தவரே திருஞான சம்பந்தர் ஆவார். அவர் அழகு பொருந்திய வெண்ணிப் பதியில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானை நினைத்து தமிழ்மாலை செய்துள்ளார். அதனை விரும்பிப் பாடும் அடியார்கள் சிவலோகத்தை அடைந்து சிறப்புறுவார்கள் என்க.