1
சொற்பிரிப்பு
உரை
சீகாழிச் சிவனை நல்லான் என்றும், நான்மறை ஆறங்கம் வல்லான் என்றும் அடியவர்களின் உள்ளத்தில் பொருந்திய சொல்லான் என்றும் மதில் சூழ்ந்த சீர்காழியில் கோயில் கொண்டுள்ளான் என்றும் ஏத்தி நின்று வழிபடுவோர்க்கு எக்காலத்தும் இன்பமேயாம்!
சீகாழிச் சிவனை நல்லான் என்றும், நான்மறை ஆறங்கம் வல்லான் என்றும் அடியவர்களின் உள்ளத்தில் பொருந்திய சொல்லான் என்றும் மதில் சூழ்ந்த சீர்காழியில் கோயில் கொண்டுள்ளான் என்றும் ஏத்தி நின்று வழிபடுவோர்க்கு எக்காலத்தும் இன்பமேயாம்!
சீகாழிச் சிவனை, பிறவின் வழி எம்மோடு பொருந்திய ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை நீக்கி எமக்கருளும் பெருமானை, பேயுடன் காட்டில் ஆடல் புரிபவனை, வேதம் ஓதும் அந்தணர்கள் வாழும் சீர்காழியில் கோயில் கொண்டுள்ள எம்மானை, உணர்ந்து ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையாம் என்க.
சீகாழிச் சிவன் தனக்கென்று உண்ணும் பொருள் ஏதும் இல்லாதவனாய், தன்மீது அன்பு கொண்டு வழிபடாதவரிடத்துப் பொருந்தாமலும், பொய்யடிமைத் தொழில் புரிவருக்குப் புரியாதவனாய் விளங்குவார். வேதம் ஓதும் அந்தணர்கள் நிறைந்த சீர்காழியில் கோயில் கொண்டுள்ளார். அவரை மெய்யாய் வணங்குபவர்களின் வினைகள் நிச்சயம் நீங்கும் என்க.
சீகாழிச் சிவன் புற்றாகவும் புற்றில் வாழும் அரவத்தை அரையில் சுற்றியவராகவும் விளங்குகின்றார். தொண்டு செய்யும் அடியவர்பால் பொருந்துகின்றார். தன்முனைப்பு அற்றவர்பால் உறைகின்றார். வேதம் ஓதும் அந்தணர்கள் நிறைந்த சீர்காழியில் கோயில் கொண்டுள்ளார். அவரைப் பற்றி நின்றவர்களைப் பாவங்கள் பற்றாது என்க.
சீகாழிச் சிவன் அரிய செல்வமும், தியானம் செய்யும் அடியவர் உள்ளத்தில் பொருந்தி இருப்பவரும், விண்ணவர்கள் வியக்கும் நெறியும் ஆவார். சோலைகள் சூழ்ந்த சீர்காழிப் பதியில் உறைபவரும் அவரே. அவரைப் பாடும் நம் வினைகளை நீக்கி அருள்பவரும் அவர்தாம்.
சீகாழிச் சிவன் உமாதேவியை இடபாகத்தில் கொண்டு ஒளித்திருமேனியோடு காட்சியளிப்பவர். தம்முடைய திருவடிகளை நினைந்து வழிபடும் அடியார்களுக்கு அருள் செய்பவர். கடல் அலைகள் உலாவி வரும் சீர்காழிப் பதியில் மெய்யாய் மேவுபவர். தம்மை வணங்கும் அடியார்கள் பெரும் பேறு பெற்றவர்கள் ஆவார்கள்.
சீகாழிச் சிவன், அடியவர்களை ஆட்கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் துன்பம் தருபவரும், இறுதியில் துன்பத்தை நீக்கி அருளின்பத்தைத் தருபவரும், ஏழிசையின் இன்பமாய் உறைபவரும் ஆவார். அழகிய சீர்காழி நகரில் உறைபவரை விரும்பி வணங்கும் அடியார்களின் வினைகள் உறுதியாக நாசமடையும் என்க.
சீகாழிச் சிவன் குறைவற்ற நிறைவானவன். கயிலாய மலையைத் தூக்க முயன்ற இராவணனின் இருபது கைகளின் வலிமையினை அழித்தவன். பிரமனும் திருமாலும் அடிமுடி தேடிட ஒளிமயமாய் நின்றவன். உமாதேவியுடன் சீர்காழிப் பதியில் உறையும் நம்பெருமானை வணங்கி மகிழ்வோமாக!
"குன்றான் - கயிலை முதலிய குன்றுகளை உடையவன். குன்றெடுத்தான் - கயிலையைத் தூக்கிய இராவணன். வென்றான்- நொறுக்கியவன். மலரான்- பிரமன். மால் - விண்டு . நேர் இழையாள் - திருநிலைநாயகி. இழை - ஆபரணம். நன்றான்- பெரியவன். நல்லதுடையான். சிவன்- குறைவிலா மங்கலக் குணத்தன். நணுகும் முன்னிலை ஏவல் வினை."
இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.
10ஆம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சீகாழிச் சிவன், உப்பங்கழிகள் நிறைந்த கடற்காழியுள் கோயில் கொண்டுள்ளவரை மனமொழி மெய் பொருந்த ஞானசம்பந்தப் பெருமான் போற்றிப் பாடியுள்ளார். அவர் பாடிய ஞானத் தமிழ்ப் பாடல்களைப் பாடுபவர்கள் மூவுலகினாலும் போற்றப்படுவார்கள்.