1
சொற்பிரிப்பு
உரை
வானில் மகிழ்ந்து உலாவுகின்ற சந்திரன், வந்து உலாவுகின்ற திருச்சிக்கல் என்ற திருத்தலத்துள் கோயில் கொண்டுள்ள வெண்ணெய்ப் பெருமானே! நீ, அகன்ற உயர்ந்த மாளிகைகளும் சோலைகளும் நிறைந்த திருச்சிக்கலுள் பொருந்தியுள்ளாய். தன்முனைப்புடன் உன்மீது மலர்களைத் தூவிய மன்மதனை நீ அழித்தாய். உண்மையான அன்பு கொண்டு உன்னை நினைத்து வழிபடுவோர்க்கு அருளுவாய். வழிபடும் எங்களின் வினைகளும் நீங்கப் பெறும்.