1
சொற்பிரிப்பு
உரை
வன்னி இலை, கொன்றை மலர், ஊமத்த மலர், எருக்கம்பூ, வில்வ இலை ஆகியவற்றைத் தன் செஞ்சடையில் தாங்கி அவற்றினுக்கு ஏற்றம் தந்தவர் பழம்பொருளான பரமசிவனார் என்க. அவர் திருவாஞ்சியம் என்னும் திருத்தலத்தில், வண்டுகள் தென்னதென்ன என்று பாட கோயில் கொண்டவர் ஆவார். என்னை ஆட்கொண்டருளும் எம்பெருமான் உகந்து வீற்றிருக்கும் திருவாஞ்சியத்தை நானும் விரும்பிப் போற்றுவேனாக !