1
சொற்பிரிப்பு
உரை
சிவபெருமான் தனது நீண்டு உயர்ந்த சடைமுடிமீது பிறைமதியைச் சூடியுள்ளார். வேத விதிப்படி வளர்க்கப் பெற்றுச் சுழன்று எரியும் தீயில் அவர் ஆடுதலை விரும்புபவர். அவர் உறையும் தலம் அனேகதங்காவதம். அத்தலத்தைப் பற்றிப் பாடுதலை விரும்பும் பக்தர்கள் இசையோடு பாடுகின்றார்கள். இறைவர் அவர்கள் வினைகளையும் அவற்றால் விளையும் பற்றுக்களையும் அறுத்து அவர்களை ஆசீர்வதிப்பார்.