1
மங்கையர்க்குத் தனி அரசி எங்கள் தெய்வம் வளவர் திருக்குலக் கொழுந்து வளைக்கைமானிசெங்கமலத் திருமடந்தை கன்னிநாடாள் தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவைஎங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே இருந்தமிழ் நாடுற்ற இடர் நீக்கித் தங்கள்பொங்கொளி வெண் திருநீறு பரப்பினாரைப் போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே.
சொற்பிரிப்பு
மங்கையர்க்குத் தனி அரசி, எங்கள் தெய்வம், வளவர் திருக்குலக் கொழுந்து, வளைக்கை மானி,செங்கமலத் திருமடந்தை, கன்னி நாடாள், தென்னர் குலப் பழி தீர்த்த தெய்வப் பாவை,எங்கள்பிரான் சண்பையர் கோன் அருளினாலே இருந் தமிழ்நாடு உற்ற இடர் நீக்கித், தங்கள்பொங்கு ஒளி வெண் திருநீறு பரப்பினாரைப் போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.