திருமுறை 12 · 12.070 · 2

அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

மூவேந்தர் தமிழ் வழங்கு நாட்டுக்கு அப்பால் முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும்நா வேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும் நல் தொண்டர் காலத்து முன்னும் பின்னும்பூ வேய்ந்த நெடுஞ் சடை மேல் அடம்பு தும்பை புதிய மதி நதி இதழி பொருந்த வைத்தசேவேந்து வெல் கொடியான் அடிச்சார்ந்தாரும் செப்பிய அப்பாலும் அடிச் சார்ந்தார் தாமே.
சொற்பிரிப்பு
மூவேந்தர் தமிழ் வழங்கு நாட்டுக்கு அப்பால் முதல்வனார் அடிச் சார்ந்த முறைமையோரும்நா வேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும் நல் தொண்டர் காலத்து முன்னும் பின்னும்பூ வேய்ந்த நெடும்சடை மேல் அடம்பு தும்பை புதிய மதி நதி இதழி பொருந்த வைத்தசேவேந்து வெல்கொடியான் அடிச் சார்ந்தார்கள் செப்பிய அப்பாலும் அடிச் சார்ந்தார் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

செற்றார் தம் புரம் எரித்த சிலையார் செல்வத் திருமுருகன் பூண்டியினில் செல்லும் போதில்சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்டதொகு நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டுமுற்றாத முலை உமையாள் பாகன் பூத முதற்கணமே உடன் செல்ல முடியாப் பேறுபெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னைப் பிறவியினில் செய்த தவம் பெரியவாமேபத்தராய்ப் பணிவார் சருக்கம் முற்றிற்று.
சொற்பிரிப்பு
செற்றார் தம் புரம் எரித்த சிலையார் செல்வத் திருமுருகன் பூண்டியினில் செல்லும் போதில்சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்ட தொகுநிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டுமுற்றாத முலை உமையாள் பாகன் பூத முதல் கணமே உடன் செல்ல முடியாப் பேறுபெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னைப் பிறவியினில் செய்த தவம் பெரியவாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.