1
ஆதாரமாய் அனைத்தும் ஆகிநின்ற அங்கணன் எம்பெருமான் நீரணிந்த வேணிக்காதார் வெண் திருக் குழையான் அருளிச் செய்த கற்பம் அநுகற்பம் உபகற்பம் தானாம்ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி ஆமென்று முன் மொழிந்த மூன்று பேதம்மோகாதி குற்றங்கள் அறுக்கும் நீற்றை மொழிவது நம் இரு வினைகள் கழிவதாக.
சொற்பிரிப்பு
ஆதாரமாய் அனைத்தும் ஆகி நின்ற அங்கணன் எம்பெருமான் நீர் அணிந்த வேணிக்காதார் வெண் திருக்குழையான் அருளிச் செய்த கற்பம் அநுகற்பம் உபகற்பம் தானும்ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி ஆம் என்று முன் மொழிந்த மூன்று பேதம்மோகாதி குற்றங்கள் அறுக்கும் நீற்றை மொழிவது நம் இருவினைகள் கழிவது ஆக.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.