திருமுறை 12 · 12.068 · 3

முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

எப்போதும் இனிய பிரான் இன்னருளால் அதிகரித்துமெய்ப் போத நெறி வந்த விதி முறைமை வழுவாமேஅப்போதைக்கு அப்போதும் ஆர்வம் மிகும் அன்பினராய்முப்போதும் அர்ச்சிப்பார் முதல் சைவராம் முனிவர்.
சொற்பிரிப்பு
எப்போதும் இனிய பிரான் இன்அருளால் அதிகரித்துமெய்ப் போதநெறி வந்த விதி முறைமை வழுவாமேஅப்போதைக்கு அப்போதும் ஆர்வமிகும் அன்பினராய்முப்போதும் அர்ச்சிப்பார் முதல் சைவராம் முனிவர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

தெரிந்து உணரின் முப்போதும் செல் காலம் நிகழ் காலம்வருங்காலம் ஆனவற்றின் வழிவழியே திருத்தொண்டின்விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அப்பெருந்தகையார் குலப் பெருமை யாம் புகழும் பெற்றியதோ.
சொற்பிரிப்பு
தெரிந்து உணரின் முப்போதும் செல்காலம் நிகழ்காலம்வருங்காலம் ஆனவற்றின் வழிவழியே திருத்தொண்டின்விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அப்பெருந்தகையார் குலப்பெருமை யாம் புகழும் பெற்றியதோ?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

நாரணற்கும் நான்முகற்கும் அறிய ஒண்ணாநாதனை எம்பெருமானை ஞானமானஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும் அண்ணலை எண்ணிய காலம் மூன்றும் அன்பின்காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர் தங்கள் கமல மலர்க் கழல் வணங்கிக் கசிந்து சிந்தைப்பூரணத்தால் முழு நீறு பூசி வாழும் புனிதர் செயல் அறிந்தவாறு புகலல் உற்றேன்.
சொற்பிரிப்பு
நாரணற்கும் நான்முகற்கும் அறிய ஒண்ணா நாதனை, எம்பெருமானை, ஞானம் ஆனஆரணத்தின் உள் பொருள்கள் அனைத்தும் ஆகும் அண்ணலை, எண்ணிய காலம் மூன்றும், அன்பின்காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர் தங்கள் கமல மலர்க் கழல் வணங்கிக் கசிந்து சிந்தைப்பூரணத்தால் முழுநீறு பூசி வாழும் புனிதர் செயல் அறிந்தவா புகலல் உற்றேன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.