திருமுறை 12 · 12.065 · 2

பரமனையே பாடுவார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

புரம் மூன்றும் செற்றானைப் பூணாகம் அணிந்தானைஉரனில் வரும் ஒரு பொருளை உலகு அனைத்தும் ஆனானைக்கரணங்கள் காணாமல் கண் ஆர்ந்து நிறைந்தானைப்பரமனையே பாடுவார் தம் பெருமை பாடுவாம்.
சொற்பிரிப்பு
புரம் மூன்றும் செற்றானைப் பூண்நாகம் அணிந்தானைஉரனில் வரும் ஒரு பொருளை உலகு அனைத்தும் ஆனானைக்கரணங்கள் காணாமல் கண் ஆர்ந்து நிறைந்தானைப்பரமனையே பாடுவார் தம் பெருமை பாடுவாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

தென் தமிழும் வட கலையும் தேசிகமும் பேசுவனமன்றினிடை நடம் புரியும் வள்ளலையே பொருள் ஆகஒன்றிய மெய்யுணர் வோடும் உள் உருகிப் பாடுவார்பன்றியுடன் புட்காணாப் பரமனையே பாடுவார்.
சொற்பிரிப்பு
தென்தமிழும் வடகலையும் தேசிகமும் பேசுவனமன்றின் இடை நடம் புரியும் வள்ளலையே பொருள் ஆகஒன்றிய மெய் உணர்வோடும் உள் உருகிப் பாடுவார்பன்றி உடன் புள் காணாப் பரமனையே பாடுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.