திருமுறை 12 · 12.064 · 8

பத்தராய்ப் பணிவார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

ஈசருக்கே அன்பு ஆனார் யாவரையும் தாம் கண்டால்கூசி மிகக் குது குதுத்துக் கொண்டாடி மனம் மகிழ்வுற்றுஆசையினால் ஆவின்பின் கன்று அணைந்தால் போல் அணைந்துபேசுவன பணிந்த மொழி இனியனவே பேசுவார்.
சொற்பிரிப்பு
ஈசருக்கே அன்பு ஆனார் யாவரையும் தாம் கண்டால்கூசி மிகக் குதுகுதுத்துக் கொண்டாடி மன மகிழ்வுற்றுஆசையினால் ஆவின் பின் கன்று அணைந்தால் போல் அணைந்துபேசுவன பணிந்த மொழி இனியனவே பேசுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

தாவரிய அன்பினால் சம்புவினை எவ்விடத்தும்யாவர்களும் அர்ச்சிக்கும் படி கண்டால் இனிது உவந்துபாவனையால் நோக்கினால் பலர் காணப் பயன் பெறுவார்மேவரிய அன்பினால் மேலவர்க்கும் மேல் ஆனார்.
சொற்பிரிப்பு
தாவரிய அன்பினால் சம்புவினை எவ்இடத்தும்யாவர்களும் அர்ச்சிக்கும் படி கண்டால் இனிது வந்துபாவனையால் நோக்கினால் பலர் காணப் பயன் பெறுவார்மேவரிய அன்பினால் மேலவர்க்கும் மேல் ஆனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அங்கணனை அடியாரை ஆராத காதலினால்பொங்கிவரும் உவகையுடன் தாம் விரும்பிப் பூசிப்பார்பங்கய மா மலர் மேலான் பாம்பணையான் என்று இவர்கள்தங்களுக்கும் சார்வரிய சரண் சாரும் தவம் உடையார்.
சொற்பிரிப்பு
அங்கணனை அடியாரை ஆராத காதலினால்பொங்கி வரும் உவகையுடன் தாம் விரும்பிப் பூசிப்பார்பங்கய மாமலர் மேலான் பாம்பு அணையான் என்று இவர்கள்தங்களுக்கும் சார்வு அரிய சரண் சாரும் தவம் உடையார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

யாதானும் இவ்வுடம்பால் செய்வினைகள் ஏறுயர்த்தார்பாதார விந்தத்தின் பால் ஆக எனும் பரிவால்காதார் வெண் குழையவர்க்காம் பணி செய்வார் கருக்குழியில்போதார்கள் அவர் புகழ்க்குப் புவனம் எல்லாம் போதாவால்.
சொற்பிரிப்பு
“யாதானும் இவ் உடம்பால் செய்வினைகள் ஏறு உயர்த்தார்பாதார விந்தத்தின் பாலாக” எனும் பரிவால்காதார் வெண் குழையவர்க்காம் பணி செய்வார் கருக்குழியில்போதார்கள் அவர் புகழ்க்குப் புவனம் எலாம் போதாவால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

சங்கரனைச் சார்ந்த கதை தான் கேட்கும் தன்மையராய்அங்கணனை மிக விரும்பி அயல் அறியா அன்பினால்கங்கை நதி மதி இதழி காதலிக்கும் திருமுடியார்செங்கமல மலர்ப் பாதம் சேர்வதனுக்கு உரியார்கள்.
சொற்பிரிப்பு
சங்கரனைச் சார்ந்த கதை தான் கேட்கும் தன்மையராய்அங்கணனை மிக விரும்பி அயல் அறியா அன்பினால்கங்கை நதி, மதி, இதழி காதலிக்கும் திருமுடியார்செங்கமல மலர்ப்பாதம் சேர்வதனுக்கு உரியார்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஈசனையே பணிந்து உருகி இன்பம் மிகக் களிப்பு எய்திப்பேசினவாய் தழுதழுப்பக் கண்ணீரின் பெருந் தாரைமாசிலா நீறழித்து அங்கு அருவி தர மயிர் சிலிப்பக்கூசியே உடல் கம்பித்திடுவார் மெய்க் குணம் மிக்கார்.
சொற்பிரிப்பு
ஈசனையே பணிந்து உருகி இன்பம் மிகக் களிப்பு எய்திப்பேசினவாய் தழுதழுப்பக் கண்ணீரின் பெரும் தாரைமாசு இலா நீறு அழித்து அங்கு அருவி தர மயிர் சிலிர்ப்பக்கூசியே உடல் கம்பித்திடுவார் மெய்க் குணமிக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்மன்றாடும் மலர்ப்பாதம் ஒரு காலும் மறவாமைகுன்றாத உணர்வு உடையார் தொண்டராம் குணம் மிக்கார்.
சொற்பிரிப்பு
நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்மன்று ஆடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமைகுன்றாத உணர்வு உடையார் தொண்டராம் குணமிக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

சங்கரனுக்காளான தவம் காட்டித் தாம் அதனால்பங்கமறப் பயன் துய்யார் படி விளக்கும் பெருமையினார்அங்கணனைத் திருவாரூர் ஆள்வானை அடிவணங்கிப்பொங்கி எழும் சித்தம் உடன் பத்தராய்ப் போற்றுவார்.
சொற்பிரிப்பு
சங்கரனுக்கு ஆள் ஆன தவம் காட்டித் தாம் அதனால்பங்கம் அறப் பயன் துய்ப்பார் படி விளக்கும் பெருமையினார்அங்கணனைத் திருஆரூர் ஆள்வானை அடி வணங்கிப்பொங்கி எழும் சித்தம் உடன் பத்தராய்ப் போற்றுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.