திருமுறை 12 · 12.063 · 13

கோட்புலி நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

நலம் பெருகும் சோணாட்டு நாட்டி யத்தான் குடி வேளாண்குலம் பெருக வந்து உதித்தார் கோட்புலியார் எனும் பெயரார்தலம் பெருகும் புகழ் வளவர் தந்திரியாராய் வேற்றுப்புலம் பெருகத் துயர் விளைப்பப் போர் விளைத்துப் புகழ் விளைவிப்பார்.
சொற்பிரிப்பு
நலம்பெருகும் சோணாட்டு நாட்டியத்தான் குடிவேளாண்குலம்பெருக வந்துஉதித்தார் கோட்புலியார் எனும் பெயரார்தலம் பெருகும் புகழ் வளவர் தந்திரியாராய், வேற்றுப்புலம் பெருகத் துயர் விளைப்பப் போர் விளைத்துப் புகழ் விளைப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மன்னவன்பால் பெறுஞ் சிறப்பின் வளம் எல்லாம் மதி அணியும்பிஞ்ஞகர் தம் கோயில் தொறும் திரு அமுதின் படிபெருகச்செந்நெல் மலைக் குவடாகச் செய்து வரும் திருப்பணியேபன்னெடு நாள் செய்து ஒழுகும் பாங்கு புரிந்து ஓங்கும் நாள்.
சொற்பிரிப்பு
மன்னவன்பால் பெறும் சிறப்பின் வளம் எல்லாம் மதி அணியும்பிஞ்ஞகர் தம் கோயில்தொறும் திருஅமுதின் படி பெருகச்செந்நெல் மலைக் குவடு ஆகச் செய்து வரும் திருப்பணியேபன் நெடுநாள் செய்து ஒழுகும் பாங்கு புரிந்து ஓங்கும் நாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வேந்தன் ஏவலில் பகைஞர் வெம் முனைமேல் செல்கின்றார்பாந்தள் பூண் என அணிந்தார் தமக்கு அமுது படியாகஏந்தலார் தாம் எய்தும் அளவும் வேண்டும் செந்நெல்வாய்ந்த கூடவை கட்டி வழிக் கொள்வார் மொழிகின்றார்.
சொற்பிரிப்பு
வேந்தன் ஏவலில் பகைஞர் வெம்முனைமேல் செல்கின்றார்பாந்தள் பூண் என அணிந்தார் தமக்கு அமுது படி ஆகஏந்தலார் தாம் எய்தும் அளவும் வேண்டும் செந்நெல்வாய்ந்த கூடு அவை கட்டி வழிக்கொள்வார் மொழிகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

தம் தமர்கள் ஆயினார் தமக்கு எல்லாம் தனித்தனியேஎந்தையார்க்கு அமுது படிக்கு ஏற்றிய நெல் இவை அழிக்கச்சிந்தை ஆற்றால் நினைவார் திருவிரையாக் கலி என்றுவந்தனையால் உரைத்து அகன்றார் மன்னவன் மாற்றார் முனைமேல்.
சொற்பிரிப்பு
தந்தமர்கள் ஆயினார் தமக்கு எல்லாம் தனித்தனியே“எந்தையார்க்கு அமுது படிக்கு ஏற்றிய நெல் இவை அழிக்கச்சிந்தையால் தான் நினைவார் திருவிரையாக் கலி” என்றுவந்தனையால் உரைத்து அகன்றார் மன்னவன் மாற்றார் முனை மேல்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மற்றவர் தாம் போயின பின் சில நாளில் வற்காலம்உற்றலும் அச் சுற்றத்தார் உணவு இன்றி இறப்பதனில்பெற்றம் உயர்த்தவர் அமுது படி கொண்டாகிலும் பிழைத்துக்குற்றம் அறப் பின் கொடுப்போம் எனக் கூடு குலைத்து அழித்தார்.
சொற்பிரிப்பு
மற்று அவர் தாம் போயின பின், சிலநாளில் வற்காலம்உற்றலும், அச்சுற்றத்தார்“உணவு இன்றி இறப்பு அதனில்பெற்றம் உயர்த்தவர் அமுதுபடி கொண்டாகிலும் பிழைத்துக்குற்றம் அறப் பின் கொடுப்போம்” எனக் கூடு குலைத்து அழித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மன்னவன் தன் தெம் முனையில் வினை வாய்த்து மற்றவன்பால்நன்னிதியின் குவை பெற்ற நாட்டியத்தான் குடித்தலைவர்அந்நாளில் தமர் செய்த பிழை அறிந்தது அறியாமேதுன்னினார் சுற்றம் எலாம் துணிப்பன் எனும் துணிவினராய்.
சொற்பிரிப்பு
மன்னவன் தன் தெம்முனையில் வினை வாய்த்து மற்றவன்பால்நன்நிதியின் குவை பெற்ற நாட்டியத்தான் குடித் தலைவர்அந்நகரில் தமர் செய்த பிழை அறிந்து அது அறியாமேதுன்னினார் “சுற்றம் எலாம் துணிப்பன்” எனும் துணிவினராய்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

எதிர் கொண்ட தமர்க்கு எல்லாம் இனிய மொழி பல மொழிந்துமதி தங்கு சுடர் மணி மாளிகையின் கண் வந்து அணைந்துபதி கொண்ட சுற்றத் தார்க்கு எல்லாம் பைந் துகில் நிதியம்அதிகம் தந்து அளிப்பதனுக்கு அழைமின்கள் என்று உரைத்து.
சொற்பிரிப்பு
எதிர்கொண்ட தமர்க்கு எல்லாம் இனிய மொழி பல மொழிந்துமதி தங்கு சுடர்மணி மாளிகையின் கண் வந்து அணைந்து“பதி கொண்ட சுற்றத்தார்க்கு எல்லாம் பைந்துகில் நிதியம்அதிகம் தந்து அளிப்பதனுக்கு அழைமின்கள்” என்று உரைத்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

எல்லாரும் புகுந்த அதன்பின் இருநிதியம் அளிப்பார் போல்நல்லார்தம் பேரோன் முன் கடை காக்க நாதன் தன்வல்லாணை மறுத்து அமுதுபடி அழைத்த மறக்கிளையைக்கொல்லாதே விடுவேனோ எனக் கனன்று கொலைபுரிவார்.
சொற்பிரிப்பு
எல்லாரும் புகுந்ததன் பின் இருநிதியம் அளிப்பார் போல்“நல்லார் தம் பேரோன் முன் கடைகாக்க நாதன் தன்வல் ஆணை மறுத்து, அமுது படி அழித்த மறக் கிளையைக்கொல்லாதே விடுவேனோ”எனக் கனன்று கொலை புரிவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

தந்தையார் தாயார் மற்றுடன் பிறந்தார் தாரங்கள்பந்தமார் சுற்றத்தார் பதி அடியார் மதி அணியும்எந்தையார் திருப்படி மற்று உண்ண இசைந்தார் களையும்சிந்த வாள் கொடு துணிந்தார் தீய வினைப் பவம் துணிப்பார்.
சொற்பிரிப்பு
தந்தையார், தாயார், மற்று உடன் பிறந்தார், தாரங்கள்,பந்தம் ஆர் சுற்றத்தார், பதி அடியார், மதி அணியும்எந்தையார் திருப்படி மற்று உண்ண இசைந்தார்களையும்சிந்த வாள் கொடு துணித்தார் தீய வினைப் பவம் துணிப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பின் அங்குப் பிழைத்த ஒரு பிள்ளையைத் தம் பெயரோன் அவ்வன்னம் துய்த்திலது குடிக்கு ஒரு புதல்வன் அருளும் எனஇந்நெல் உண்டாள் முலைப்பால் உண்டது என எடுத்து எறிந்துமின்னல்ல வடிவாளால் இரு துணியாய் விழ ஏற்றார்.
சொற்பிரிப்பு
பின் அங்குப் பிழைத்தது ஒரு பிள்ளையைத் தம் பெயரோன் ”அவ்அன்னம் துய்த்து இலது; குடிக்கு ஒரு புதல்வன்; அருளும்” என“இந்நெல் உண்டாள் முலைப்பால் உண்டது” என எடுத்து எறிந்துமின் நல்ல வடிவாளால் இருதுணியாய் விழ ஏற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

அந் நிலையே சிவபெருமான் அன்பர் எதிர் வெளியே நின்றுஉன்னுடைய கை வாளால் உறுபாசம் அறுத்த கிளைபொன் உலகின் மேல் உலகம் புக்கு அணையப் புகழோய் நீஇந்நிலை நம்முடன் அணைக என்றே எழுந்தருளினார்.
சொற்பிரிப்பு
அந்நிலையே சிவபெருமான் அன்பர் எதிர் வெளியே நின்று“உன் உடைய கைவாளால் உறுபாசம் அறுத்த கிளைபொன் உலகின் மேல் உலகம் புக்கு அணையப் புகழோய் நீஇந்நிலை நம் உடன் அணைக” என்று ஏவி எழுந்தருளினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

அத்தனாய் அன்னையாய் ஆர் உயிராய் அமிர்தாகிமுத்தனாம் முதல்வன் தாள் அடைந்து கிளை முதல் தடிந்தகொத்து அலர் தார்க் கோட்புலியார் அடிவணங்கிக் கூட்டத்தில்பத்தராய் பணிவார் தம் பரிசினையாம் பகருவாம்.
சொற்பிரிப்பு
அத்தனாய் அன்னையாய் ஆர் உயிராய் அமிர்து ஆகிமுத்தனாம் முதல்வன் தாள் அடைந்து கிளை முதல் தடிந்தகொத்து அலர் தார்க் கோட்புலியார் அடி வணங்கிக், கூட்டத்தில்பத்தராய்ப் பணிவார் தம் பரிசினை யாம் பகருவாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

மேவரிய பெருந் தவம் யான் முன்பு விளைத்தன என்னோஆவதும் ஓர்பொருளல்லா என் மனத்தும் அன்றியேநாவலர் காவலர் பெருகு நதி கிழிய வழி நடந்தசேவடிப் போது எப்போதும் சென்னியினும் மலர்ந்தனவால்.
சொற்பிரிப்பு
மேவரிய பெருந்தவம் யான் முன்பு விளைத்தன என்னோ?யாவதும் ஓர் பொருள் அல்லா என் மனத்தும் அன்றியேநாவலர் காவலர் பெருகு நதி கிழிய வழி நடந்தசேவடிப் போது எப்போதும் சென்னியினும் மலர்ந்தனவால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.