திருமுறை 12 · 12.062 · 7

புகழ்த்துணை நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

செருவிலிபுத்தூர் மன்னும் சிவ மறையோர் திருக்குலத்தார்அருவரை வில்லாளி தனக்கு அகத்து அடிமையாம் அதனுக்குஒருவர் தமை நிகர் இல்லார் உலகத்துப் பரந்து ஓங்கிப்பொருவரிய புகழ் நீடு புகழ்த்துணையார் எனும் பெயரார்.
சொற்பிரிப்பு
செருவிலி புத்தூர் மன்னும் சிவமறையோர் திருக்குலத்தார்அருவரை வில்லாளி தனக்கு அகத்து அடிமையாம் அதனுக்குஒருவர் தமை நிகர் இல்லார்,உலகத்துப் பரந்து ஓங்கிப்பொருவரிய புகழ் நீடு புகழ்த்துணையார் எனும் பெயரார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

தம் கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடு நாள்பொங்கோத ஞாலத்து வற்கடமாய்ப் பசி புரிந்தும்எம் கோமான் தனை விடுவேன் அல்லேன் என்று இராப் பகலும்கொங்கார் பன் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார்.
சொற்பிரிப்பு
தங்கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடு நாள்பொங்கு ஓத ஞாலத்து வற்கடமாய்ப் பசி புரிந்தும்“எங்கோமான் தனை விடுவேன் அல்லேன்” என்று இராப்பகலும்கொங்கார் பன்மலர் கொண்டு குளிர்புனல் கொண்டு அருச்சிப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மால் அயனுக்கு அரியானை மஞ்சனம் ஆட்டும் பொழுதுசாலவுறு பசிப்பிணியால் வருந்தி நிலை தளர்வு எய்திக்கோல நிறை புனல் தாங்கு குடம் தாங்க மாட்டாமைஆலமணி கண்டத்தார் முடி மீது வீழ்த்து அயர்வார்.
சொற்பிரிப்பு
மால் அயனுக்கு அரியானை மஞ்சனம் ஆட்டும் பொழுதுசால உறு பசிப்பிணியால் வருந்தி, நிலை தளர்வு எய்திக்கோல நிறை புனல் தாங்கு குடம் தாங்க மாட்டாமைஆலய மணி கண்டத்தார் முடி மீது வீழ்த்து அயர்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

சங்கரன் தன் அருளால் ஓர் துயில் வந்து தமை அடையஅங்கணனும் கனவின்கண் அருள் புரிவான் அருந்தும் உணவுமங்கிய நாள் கழிவளவும் வைப்பது நித்தமும் ஒரு காசுஇங்கு உனக்கு நாம் என்ன இடர் நீங்கி எழுந்திருந்தார்.
சொற்பிரிப்பு
சங்கரன் தன் அருளால் ஓர் துயில் வந்து தமை அடையஅங்கணனும் கனவின்கண் அருள்புரிவான் “அருந்து உணவுமங்கிய நாள் கழிவு அளவும் வைப்பது நித்தமும் ஒரு காசுஇங்கு உனக்கு நாம்” என்ன இடர் நீங்கி எழுந்து இருந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பெற்றம் உகந்து ஏறுவார் பீடத்தின் கீழ் ஒரு காசுஅற்றம் அடங்கிட அளிப்ப அன்பரும் மற்று அது கைக்கொண்டுஉற்ற பெரும் பசி அதனால் உணங்கும் உடம்புடன் உவந்துமுற்றுணர்வு தலை நிரம்ப முகம் மலர்ந்து களி கூர்ந்தார்.
சொற்பிரிப்பு
பெற்றம் உகந்து ஏறுவார் பீடத்தின் கீழ் ஒருகாசுஅற்றம் அடங்கிட அளிப்ப அன்பரும் மற்று அது கைக்கொண்டுஉற்ற பெரும் பசி அதனால் உணங்கும் உடம்புடன் உவந்துமுற்றுணர்வு தலைநிரம்ப முகமலர்ந்து களி கூர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

அந்நாள் போல் எந்நாளும் அளித்த காசு அது கொண்டேஇன்னாத பசிப் பிணி வந்து இறுத்த நாள் நீங்கிய பின்மின்னார் செஞ்சடையார்க்கு மெய்யடிமைத்தொழில் செய்துபொன்னாட்டின் அமரர் தொழப் புனிதர் அடிநிழல் சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
அந்நாள் போல் எந்நாளும் அளித்த காசு அது கொண்டேஇன்னாத பசிப்பிணி வந்து இறுத்த நாள் நீங்கிய பின்மின் ஆர் செஞ்சடையார்க்கு மெய் அடிமைத் தொழில் செய்துபொன்நாட்டின் அமரர் தொழப் புனிதர் அடி நிழல் சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பந்தணையும் மெல் விரலாள் பாகத்தார் திருப் பாதம்வந்தணையும் மனத் துணையார் புகழ்த்துணையார் கழல் வாழ்த்திச்சந்தணியும் மணிப் புயத்துத் தனிவீரராம் தலைவர்கொந்தணையும் மலர் அலங்கல் கோட்புலியார் செயல் உரைப்பாம்.
சொற்பிரிப்பு
பந்து அணையும் மெல் விரலாள் பாகத்தார் திருப்பாதம்வந்து அணையும் மனத்துணையார் புகழ்த்துணையார் கழல் வாழ்த்திச்சந்து அணியும் மணிப்புயத்துத் தனி வீரராம் தலைவர்கொந்து அணையும் மலர் அலங்கல் கோட்புலியார் செயல் உரைப்பாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.