திருமுறை 12 · 12.061 · 7

செருத்துணை நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

உள்ளும் புறம்பும் குலமரபின் ஒழுக்கம் வழுவா ஒருமை நெறிகொள்ளும் இயல்பில் குடி முதலோர் மலிந்த செல்வக் குலபதியாம்தெள்ளும் திரைகள் மதகு தொறும் சேலும் கயலும் செழுமணியும்தள்ளும் பொன்னி நீர் நாட்டு மருகல் நாட்டுத் தஞ்சாவூர்.
சொற்பிரிப்பு
உள்ளும் புறம்பும் குலமரபில் ஒழுக்கம் வழுக்கா ஒருமை நெறிகொள்ளும் இயல்பில் குடி முதலோர் மலிந்த செல்வக் குலப்பதியாம்தெள்ளும் திரைகள் மதகுதொறும் சேலும் கயலும் செழுமணியும்தள்ளும் பொன்னி நீர் நாட்டு மருகல் நாட்டுத் தஞ்சாவூர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

சீரின் விளங்கும் அப்பதியில் திருந்து வேளாண் குடி முதல்வர்நீரின் மலிந்த செய்ய சடை நீற்றர் கூற்றின் நெஞ்சு இடித்தவேரி மலர்ந்த பூங்கழல் சூழ் மெய்யன்பு உடைய சைவர் எனப்பாரில் நிகழ்ந்த செருத் துணையார் பரவும் தொண்டின் நெறி நின்றார்.
சொற்பிரிப்பு
சீரின் விளங்கும் அப்பதியில் திருந்து வேளாண்குடி முதல்வர்நீரின் மலிந்த செய்யசடை நீற்றர், கூற்றின் நெஞ்சு இடித்தவேரி மலர்ந்த பூங்கழல் சூழ் மெய் அன்பு உடைய சைவர் எனப்பாரில் நிகழ்ந்த செருத்துணையார் பரவும் தொண்டின் நெறி நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஆன அன்பர் திருவாரூர் ஆழித் தேர்வித்தகர் கோயில்ஞான முனிவர் இமையவர்கள் நெருங்கு நலம் சேர் முன்றிலினுள்மான நிலவு திருப்பணிகள் செய்து காலங்களின் வணங்கிக்கூனல் இளவெண் பிறைமுடியார் தொண்டு பொலியக் குலவு நாள்.
சொற்பிரிப்பு
ஆன அன்பர் திருஆரூர் ஆழித் தேர் வித்தகர் கோயில்ஞான முனிவர், இமையவர்கள் நெருங்கு நலம் சேர் முன்றிலின் உள்மானம் நிலவு திருப்பணிகள் செய்து காலங்களின் வணங்கிக்கூனல் இள வெண்பிறை முடியார் தொண்டு பொலியக் குலவும் நாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

உலகு நிகழ்ந்த பல்லவர் கோச் சிங்கர் உரிமைப் பெருந்தேவிநிலவு திருப்பூ மண்டபத்து மருங்கு நீங்கிக் கிடந்ததொருமலரை எடுத்து மோந்ததற்கு வந்து பொறாமை வழித் தொண்டர்இலகு சுடர்வாய்க் கருவி எடுத்து எழுந்த வேகத்தால் எய்தி.
சொற்பிரிப்பு
உலகு நிகழ்ந்த பல்லவர் கோச்சிங்கர் உரிமைப் பெரும்தேவிநிலவு திருப்பூ மண்டபத்து மருங்கு நீங்கிக் கிடந்தது ஒருமலரை எடுத்து மோந்ததற்கு வந்து பொறாமை வழித் தொண்டர்இலகு சுடர் வாய்க் கருவிஎடுத்து எழுந்த வேகத்தால் எய்தி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கடிது முற்றி மற்றவள் தன் கருமென் கூந்தல் பிடித்து ஈர்த்துப்படியில் வீழ்த்தி மணிமூக்கைப் பற்றிப் பரமர் செய்ய சடைமுடியில் ஏறும் திருப்பூ மண்டபத்து மலர் மோந்திடும் மூக்கைத்தடிவன் என்று கருவியினால் அரிந்தார் தலைமைத் தனித்தொண்டர்.
சொற்பிரிப்பு
கடிது முற்றி, மற்று அவள்தன் கருமென் கூந்தல் பிடித்து ஈர்த்துப்,படியில் வீழ்த்தி, மணிமூக்கைப் பற்றிப், “பரமர் செய்ய சடைமுடியில் ஏறும் திருப்பூ மண்டபத்து மலர் மோந்திடும் மூக்கைத்தடிவன்” என்று கருவியினால் அரிந்தார் தலைமைத் தனித் தொண்டர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

அடுத்த திருத் தொண்டு உலகறியச் செய்த அடல் ஏறு அனையவர்தாம்தொடுத்த தாமம் மலர் இதழி முடியார் அடிமைத் தொண்டு கடல்உடுத்த உலகில் நிகழச் செய்து உய்யச் செய்ய பொன் மன்றுள்எடுத்த பாத நிழல் அடைந்தே இறவா இன்பம் எய்தினார்.
சொற்பிரிப்பு
அடுத்த திருத்தொண்டு உலகு அறியச் செய்த அடல் ஏறு அனையவர் தாம்தொடுத்த தாம மலர் இதழிமுடியார் அடிமைத் தொண்டு, கடல்உடுத்த உலகில் நிகழச் செய்து, உய்யச், செய்ய பொன் மன்றுள்எடுத்த பாத நிழல் அடைந்தே இறவா இன்பம் எய்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

செங்கண் விடையார் திருமுன்றில் விழுந்த திருப்பள்ளித் தாமம்அங்கண் எடுத்து மோந்த அதற்கு அரசன் உரிமைப் பெருந்தேவிதுங்க மணி மூக்கு அரிந்த செருத் துணையார் தூய கழல் இறைஞ்சிஎங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார் உரிமை அடிமை எடுத்து உரைப்பாம்.
சொற்பிரிப்பு
செங்கண் விடையார் திருமுன்றில் விழுந்த திருப்பள்ளித் தாமம்அங்கண் எடுத்து மோந்த அதற்கு அரசன் உரிமைப் பெருந்தேவிதுங்க மணிமூக்கு அரிந்த செருத்துணையார் தூய கழல் இறைஞ்சிஎங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார் உரிமை அடிமை எடுத்துரைப்பாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.