1
எழுந்திரை மா கடல்ஆடை இரு நிலமா மகள் மார்பில்அழுந்து பட எழுதும் இலைத் தொழில் தொய்யில் அணியினவாம்செழுந்தளிரின் புடை மறைந்த பெடை களிப்பத் தேமாவின்கொழுந் துணர் கோதிக் கொண்டு குயில் நாடு கோனாடு.
சொற்பிரிப்பு
எழுந்திரை மா கடல் ஆடை இருநில மாமகள் மார்பில்அழுந்து பட எழுதும் இலைத் தொழில் தொய்யில் அணியினவாம்செழுந்தளிரின் புடை மறைந்த பெடை களிப்பத் தேமாவின்கொழுந்துணர் கோதிக்கொண்டு குயில் நாடும் கோனாடு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.