1
மாறு கடிந்து மண்காத்த வளவர் பொன்னித் திரு நாட்டுநாறு விரைப்பூஞ் சோலைகளின் நனைவாய் திறந்து பொழி செழுந்தேன்ஆறு பெருகி வெள்ளம் இடும் அள்ளல் வயலின் மள்ளர் உழும்சேறு நறுவாசம் கமழும் செல்வ நீடூர் திருநீடூர்.
சொற்பிரிப்பு
மாறு கடிந்து மண் காத்த வளவர் பொன்னித் திருநாட்டுநாறு விரைப் பூஞ்சோலைகளின் நனைவாய் திறந்து பொழிசெழும் தேன்ஆறு பெருகி வெள்ளம் இடும் அள்ளல் வயலின் மள்ளர் உழும்சேறு நறு வாசம் கமழும்செல்வ நீடூர் திருநீடூர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.