திருமுறை 12 · 12.057 · 10

வாயிலார் நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

சொல் விளங்கு சீர்த் தொண்டைநன்னாட்டிடைமல்லல் நீடிய வாய்மை வளம்பதிபல்பெருங்குடி நீடு பரம்பரைச்செல்வ மல்கு திருமயிலா புரி.
சொற்பிரிப்பு
சொல் விளங்கு சீர்த் தொண்டை நன் நாட்டிடைமல்லல் நீடிய வாய்மை வளம்பதிபல் பெரும் குடி நீடு பரம்பரைச்செல்வம் மல்கு திருமயிலாபுரி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நீடு வேலை தன் பால் நிதி வைத்திடத்தேடும் அப்பெருஞ் சேம வைப்பாம் எனஆடு பூங்கொடி மாளிகை அப்பதிமாடு தள்ளும் மரக்கலச் செப்பினால்.
சொற்பிரிப்பு
நீடு வேலை தன்பால் நிதி வைத்திடத்தேடும் அப்பெரும் சேம வைப்பாம் எனஆடு பூங்கொடி மாளிகை அப்பதிமாடு தள்ளு மரக்கலச் செப்பினால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கலம் சொரிந்த கரிக்கருங்கன்று முத்துஅலம்பு முந்நீர் படிந்து அணை மேகமும்நலங் கொள் மேதி நன்னாகும் தெரிக்க ஒணாசிலம்பு தெண்திரைக் கானலின் சேண் எலாம்.
சொற்பிரிப்பு
கலம் சொரிந்த கரிக் கரும்கன்று முத்துஅலம்பு முந்நீர் படிந்து அணை மேகமும்நலங்கொள் மேதி நல் நாகும் தெரிக்கொணாசிலம்பு தெண் திரைக் கானலின் சேண் எலாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

தவள மாளிகைச் சாலை மருங்கிறைத்துவள் பதாகை நுழைந்து அணை தூமதிபவள வாய் மடவார் முகம் பார்த்து அஞ்சிஉவளகம் சேர்ந்து ஒதுங்குவது ஒக்குமால்.
சொற்பிரிப்பு
தவள மாளிகைச் சாலை மருங்கு இறைத்துவள் பதாகை நுழைந்து அணை தூமதிபவள வாய் மடவார் முகம் பார்த்து அஞ்சிஉவளகம் சேர்ந்து ஒதுங்குவது ஒக்குமால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வீதி எங்கும் விழா அணிக் காளையர்தூது இயங்கும் சுரும்பு அணி தோகையர்ஓதி எங்கும் ஒழியா அணிநிதிபூதி எங்கும் புனை மணிமாடங்கள்.
சொற்பிரிப்பு
வீதி எங்கும் விழா அணி; காளையர்தூது இயங்கும் சுரும்பு அணி தோகையர்ஓதி எங்கும்; ஒழியா அணிநிதிபூதி எங்கும் புனைமணி மாடங்கள்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மன்னு சீர் மயிலைத் திரு மாநகர்த்தொன்மை நீடிய சூத்திரத் தொல் குலநன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார்தன்மை வாயிலார் என்னும் தபோதனர்.
சொற்பிரிப்பு
மன்னு சீர் மயிலைத் திருமாநகர்த்தொன்மை நீடிய சூத்திரத் தொல்குலம்நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார்தன்மை வாயிலார் என்னும் தபோதனர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

வாயிலார் என நீடிய மாக்குடித்தூய மா மரபின் முதல் தோன்றியேநாயனார் திருத்தொண்டின் நயப்புறுமேய காதல் விருப்பின் விளங்குவார்.
சொற்பிரிப்பு
வாயிலார் என நீடிய மாக்குடித்தூய மாமரபின் முதல் தோன்றியேநாயனார் திருத்தொண்டின் நயப்புறுமேய காதல் விருப்பின் விளங்குவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மறவாமையான் அமைத்த மனக்கோயிலுள் இருத்திஉறவாதிதனை உணரும் ஒளி விளக்குச் சுடர் ஏற்றிஇறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டிஅறவாணர்க்கு அன்பென்னும் அமுதமைத்து அர்ச்சனை செய்வார்.
சொற்பிரிப்பு
மறவாமையால் அமைத்த மனக்கோயில் உள் இருத்திஉறவு ஆதி தனை உணரும் ஒளி விளக்குச் சுடர் ஏற்றிஇறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டிஅறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

அகம் மலர்ந்த அர்ச்சனையில் அண்ணலார் தமை நாளும்நிகழ வரும் அன்பினால் நிறை வழிபாடு ஒழியாமேதிகழ நெடுநாள் செய்து சிவபெருமான் அடிநிழல் கீழ்ப்புகல் அமைத்துத் தொழுது இருந்தார் புண்ணிய மெய்த் தொண்டனார்.
சொற்பிரிப்பு
அகம் மலர்ந்த அர்ச்சனையில் அண்ணலார் தமை நாளும்நிகழ வரும் அன்பினால் நிறை வழிபாடு ஒழியாமேதிகழ நெடுநாள் செய்து சிவபெருமான் அடிநிழல் கீழ்ப்புகல் அமைத்துத் தொழுது இருந்தார் புண்ணிய மெய்த் தொண்டனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

நீராருஞ் சடையாரை நீடுமன ஆலயத்துள்ஆராத அன்பினால் அருச்சனை செய்து அடியவர்பால்பேராத நெறி பெற்ற பெருந் தகையார் தமைப்போற்றிச்சீர் ஆரும் திரு நீடூர் முனையடுவார் திறம் உரைப்பாம்.
சொற்பிரிப்பு
நீர் ஆரும் சடையாரை நீடு மன ஆலயத்துள்ஆராத அன்பினால் அருச்சனை செய்து அடியவர்பால்பேராத நெறி பெற்ற பெருந்தகையார் தமைப் போற்றிச்சீர் ஆரும் திருநீடூர் முனை அடுவார் திறம் உரைப்பாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.