திருமுறை 12 · 12.056 · 10

நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

தடுமாறும் நெறி அதனைத் தவம் என்று தம் உடலைஅடுமாறு செய்து ஒழுகும் அமண் வலையில் அகப்பட்டுவிடுமாறு தமிழ் விரகர் வினை மாறும் கழல் அடைந்தநெடுமாறனார் பெருமை உலகு ஏழும் நிகழ்ந்ததால்.
சொற்பிரிப்பு
தடுமாறும் நெறி அதனைத் தவம் என்று தம் உடலைஅடுமாறு செய்து ஒழுகும் அமண் வலையில் அகப்பட்டுவிடுமாறு தமிழ் விரகர் வினை மாறும் கழல் அடைந்தநெடுமாறனார் பெருமை உலகு ஏழும் நிகழ்ந்ததால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் அருளாலேதென்னாடு சிவம் பெருகச் செங்கோல் உய்த்து அறம் அளித்துசொன்னாம நெறிபோற்றிச் சுரர் நகர்க்கோன் தனைக் கொண்டபொன்னாரம் அணி மார்பில் புரவலனார் பொலி கின்றார்.
சொற்பிரிப்பு
அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் அருளாலேதென்நாடு சிவம் பெருகச், செங்கோல் உய்த்து, அறம் அளித்துச்சொல் நாம நெறி போற்றிச் சுரர் நகர்க் கோன் தனைக் கொண்டபொன் ஆரம் அணி மார்பில் புரவலனார் பொலிகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஆய அரசு அளிப்பார் பால் அமர் வேண்டி வந்து ஏற்றசேய புலத் தெவ்வர் எதிர் நெல்வேலிச் செருக் களத்துப்பாய படைக் கடல் முடுகும் பரிமாவின் பெரு வெள்ளம்காயும் மதக் களிற்றின் நிரை பரப்பி அமர் நடக்கின்றார்.
சொற்பிரிப்பு
ஆய அரசு அளிப்பார்பால் அமர் வேண்டி வந்து ஏற்றசேய புலத் தெவ்வர் எதிர் நெல்வேலிச் செருக்களத்துப்பாயபடைக் கடல், முடுகும் பரிமாவின் பெருவெள்ளம்,காயு மதக் களிற்றின் நிரை பரப்பி அமர் கடக்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

எடுத்துடன்ற முனைஞாட்பின் இருபடையில் பொரு படைஞர்படுத்த நெடுங் கரித்துணியும் பாய் மாவின் அறு குறையும்அடுத்து அமர் செய் வயவர் கருந் தலையும் மலையும் அலை செந்நீர்மடுத்த கடல் மீளவும் தாம் வடிவேல் வாங்கிடப் பெருக.
சொற்பிரிப்பு
எடுத்து உடன்ற முனை ஞாட்பின் இருபடையில் பொரு படைஞர்படுத்த நெடும் கரித் துணியும் பாய்மாவின் அறுகுறையும்அடுத்து அமர்செய் வயவர் கரும் தலை மலையும் அலை செந்நீர்மடுத்த கடல் மீளவும் தாம் வடிவேல் வாங்கிடப் பெருக.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வயப்பரியின் களிப்பு ஒலியும் மறவர் படைக்கல ஒலியும்கயப் பொருப்பின் முழக்கு ஒலியும் கலந்து எழு பல்லிய ஒலியும்வியக்குமுகக் கடை நாளின் மேக முழக்கு என மீளச்சயத்தொடர் வல்லியும் இன்று தாம் விடுக்கும் படி தயங்க.
சொற்பிரிப்பு
வயப் பரியின் களிப்பு ஒலியும் மறவர் படைக்கல ஒலியும்கயப் பொருப்பின் முழக்கு ஒலியும் கலந்து எழு பல்லிய ஒலியும்வியக்கு முகக் கடைநாளின் மேக முழக்கு என மீளச்சயத் தொடர் வல்லியும் இன்று தாம் விடுக்கும் படி தயங்க.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

தீயுமிழும் படை வழங்கும் செருக்களத்து முருக்கும் உடல்தோயும் நெடும் குறுதி மடுக் குளித்து நிணம் துய்த்து ஆடிபோய பருவம் பணிகொள் பூதங்களே அன்றிப்பேயும் அரும் பணி செய்ய உணவு அளித்தது எனப் பிறங்க.
சொற்பிரிப்பு
தீயுமிழும் படை வழங்கும் செருக்களத்து முருக்கும் உடல்தோயும் நெடும் குருதி மடுக் குளித்து நிணம் துய்த்து ஆடிப்போய பருவம் பணிகொள் பூதங்களே அன்றிப்பேயும் அரும் பணி செய்ய உணவு அளித்தது எனப் பிறங்க.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

இனைய கடுஞ் சமர் விளைய இகலுழந்த பறந்தலையில்பனை நெடுங்கை மதயானைப் பஞ்சவனார் படைக் குடைந்துமுனை அழிந்த வடபுலத்து முதல் மன்னர் படைசரியப்புனையும் நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து.
சொற்பிரிப்பு
இனைய கடும் சமர் விளைய இகழ் உழந்த பறந்தலையில்பனை நெடும் கை மதயானைப் பஞ்சவனார் படைக்கு உடைந்துமுனை அழிந்த வடபுலத்து முதல் மன்னர் படை சரியப்புனையு நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வளவர் பிரான் திருமகளார் மங்கையருக்கு அரசியார்களப மணி முலை திளைக்கும் தடமார்பில் கவுரியனார்இளவள வெண் பிறை அணிந்தார்க்கு ஏற்ற திருத்தொண்டு எல்லாம்அளவில் புகழ் பெற விளங்கி அருள் பெருக அரசு அளித்தார்.
சொற்பிரிப்பு
வளவர் பிரான் திருமகளார் மங்கையருக்கு அரசியார்களப மணி முலை திளைக்கும் தடமார்பில் கவுரியனார்இளவள வெண் பிறை அணிந்தார்க்கு ஏற்ற திருத்தொண்டு எல்லாம்அளவில் புகழ் பெற விளக்கி அருள் பெருக அரசு அளித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

திரை செய் கடல் உலகின் கண் திருநீற்றின் நெறி விளங்கஉரைசெய் பெரும்புகழ் விளக்கி ஓங்கு நெடு மாறனார்அரசு உரிமை நெடும் காலம் அளித்து இறைவர் அருளாலேபரசு பெரும் சிவலோகத்தில் இன் புற்று பணிந்து இருந்தார்.
சொற்பிரிப்பு
திரைசெய் கடல் உலகின்கண் திருநீற்றின் நெறி விளங்கஉரைசெய் பெரும் புகழ் விளக்கி ஓங்கு நெடுமாறனார்அரசு உரிமை நெடும் காலம் அளித்து இறைவர் அருளாலேபரசு பெரும் சிவலோகத்து இன்புற்றுப் பணிந்து இருந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பொன் மதில் சூழ் புகலி காவலர் அடிக்கீழ்ப் புனிதராந்தென்மதுரை மாறனார் செங் கமலக் கழல் வணங்கிப்பன்மணிகள் திரை ஓதம் பரப்பு நெடும் கடல் படப்பைத்தொல் மயிலை வாயிலார் திருத்தொண்டின் நிலைதொழுவாம்.
சொற்பிரிப்பு
பொன்மதில் சூழ் புகலி காவலர் அடிக்கீழ்ப் புனிதராம்தென்மதுரை மாறனார் செங்கமலக் கழல் வணங்கிப்பன்மணிகள் திரை ஓதம் பரப்பு நெடும் கடல் படப்பைத்தொல் மயிலை வாயிலார் திருத்தொண்டின் நிலை தொழுவாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.