1
திருக்கிளர் சீர் மாடங்கள் திருந்து பெருங்குடி நெருங்கிப்பெருக்கு வட வெள்ளாற்றுத் தென் கரைப்பால் பிறங்கு பொழில்வருக்கை நெடுஞ்சுளை பொழிதேன் மடு நிறைத்து வயல் விளைக்கும்இருக்கு வேளூர் என்பது இவ்வுலகில் விளங்கு பதி.
சொற்பிரிப்பு
திருக்கிளர் சீர் மாடங்கள் திருந்து பெரும் குடி நெருங்கிப்பெருக்கு வட வெள்ஆற்றுத் தென்கரைப்பால் பிறங்கு பொழில்வருக்கை நெடும் சுளை பொழி தேன் மடு நிறைத்து வயல் விளைக்கும்இருக்கு வேளூர் என்பது இவ்உலகில் விளங்கு பதி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.