1
பேருலகில் ஓங்கு புகழ்ப் பெருந் தொண்டை நன்னாட்டுநீருலவும் சடைக் கற்றை நிருத்தர் திருப்பதியாகும்காருலவும் மலர்ச் சோலைக் கன்னிமதில் புடை சூழ்ந்துதேருலவு நெடு வீதி சிறந்த திருஒற்றியூர்.
சொற்பிரிப்பு
பேருலகில் ஓங்கு புகழ்ப் பெருந்தொண்டை நன்நாட்டுநீர் உலவும் சடைக்கற்றை நிருத்தர் திருப்பதி ஆகும்கார் உலவு மலர்ச்சோலைக் கன்னி மதில் புடை சூழ்ந்துதேர் உலவு நெடுவீதி சிறந்த திரு ஒற்றியூர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.