திருமுறை 12 · 12.050 · 10

கலிக்கம்ப நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

உரிமை ஒழுக்கம் தலை நின்ற உயர் தொல் மரபில் நீடு மனைத்தரும நெறியால் வாழ் குடிகள் தழைத்து வளரும் தன்மையதாய்வரும் மஞ்சு உறையும் மலர்ச் சோலை மருங்கு சூழ்ந்த வளம் புறவில்பெருமை உலகு பெற விளங்கும் மேல் பால் பெண்ணாகட மூதூர்.
சொற்பிரிப்பு
உரிமை ஒழுக்கம் தலைநின்ற உயர் தொன் மரபில், நீடுமனைத்தரும நெறியால் வாழ்குடிகள் தழைத்து வளரும் தன்மையதாய்வருமஞ்சு உறையும் மலர்ச்சோலை மருங்கு சூழ்ந்த வளம்புறவில்பெருமை உலகு பெற விளங்கும் மேல்பால் பெண்ஆகட மூதூர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மற்றப் பதியினிடை வாழும் வணிகர் குலத்து வந்து உதித்தார்கற்றைச் சடையார் கழற்காதலுடனே வளர்ந்த கருத்து உடையார்அற்றைக்கு அன்று தூங்கானை மாடத்து அமர்ந்தார் அடித்தொண்டுபற்றிப் பணி செய் கலிக்கம்பர் என்பார் மற்றோர் பற்று இல்லார்.
சொற்பிரிப்பு
மற்று அப்பதியின் இடைவாழும் வணிகர் குலத்து வந்து உதித்தார்கற்றைச் சடையார் கழல் காதல் உடனே வளர்ந்த கருத்துடையார்அற்றைக்கு அன்று தூங்கானை மாடத்து அமர்ந்தார் அடித்தொண்டுபற்றிப் பணிசெய் கலிக்கம்பர் என்பார் மற்றோர் பற்று இல்லார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஆன அன்பர் தாம் என்றும் அரனார் அன்பர்க்கு அமுது செயமேன்மை விளங்கு போனகமும் விரும்பு கறி நெய் தயிர் தீம் பால்தேனின் இனிய கனி கட்டி திருந்த அமுது செய்வித்தேஏனை நிதியம் வேண்டுவன எல்லாம் இன்பமுற அளிப்பார்.
சொற்பிரிப்பு
ஆன அன்பர் தாம் என்றும் அரனார் அன்பர்க்கு அமுதுசெயமேன்மை விளங்கு போனகமும் விரும்பு கறி, நெய், தயிர், தீம்பால்,தேனின் இனிய கனி, கட்டி திருந்த அமுது செய்வித்தேஏனை நிதியம் வேண்டுவன எல்லாம் இன்பம் உறஅளிப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அன்ன வகையால் திருத்தொண்டு புரியுநாளில் அங்கு ஒரு நாள்மன்னும் மனையில் அமுது செய வந்த தொண்டர் தமை எல்லாம்தொன்மை முறையே அமுது செயத் தொடங்கு விப்பார் அவர் தம்மைமுன்னர் அழைத்துத் திருவடிகள் எல்லாம் விளக்க முயல்கின்றார்.
சொற்பிரிப்பு
அன்ன வகையால் திருத்தொண்டு புரியும் நாளில் அங்கு ஒருநாள்மன்னு மனையில் அமுது செய வந்த தொண்டர் தமை எல்லாம்தொன்மை முறையே அமுது செயத் தொடங்குவிப்பார் அவர் தம்மைமுன்னர் அழைத்துத் திருவடிகள் எ ல்லாம் விளக்க முயல்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

திருந்து மனையார் மனை எல்லாம் திகழ விளக்கிப் போனகமும்பொருந்து சுவையில் கறி அமுதும் புனிதத் தண்ணீருடன் மற்றும்அருந்தும் இயல்பில் உள்ளனவும் அமைத்துக் கரக நீர் அளிக்கவிரும்பு கணவர் பெருந்தவர் தாள் எல்லாம் விளக்கும் பொழுதின் கண்.
சொற்பிரிப்பு
திருந்து மனையார் மனை எல்லாம் திகழ விளக்கிப் போனகமும்பொருந்து சுவையில் கறி அமுதும் புனிதத் தண்ணீர் உடன்மற்றும்அருந்தும் இயல்பில் உள்ளனவும் அமைத்துக் கரகநீர் அளிக்கவிரும்பு கணவர் பெருந்தவர் தாள் எல்லாம் விளக்கும் பொழுதின்கண்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

முன்பு தமக்குப் பணி செய்யும் தமராய் ஏவல் முனிந்து போய்என்பும் அரவும் அணிந்த பிரான் அடியார் ஆகி அங்கு எய்தும்அன்பருடனே திருவேடம் தாங்கி அணைந்தார் ஒருவர் தாம்பின்பு வந்து தோன்ற அவர் பாதம் விளக்கும் பெருந் தகையார்.
சொற்பிரிப்பு
முன்பு தமக்குப் பணிசெய்யும் தமராய் ஏவல் முனிந்துபோய்என்பும் அரவும் அணிந்த பிரான் அடியார் ஆகி அங்கு எய்தும்அன்பர் உடனே திருவேடம் தாங்கி அணைந்தார் ஒருவர் தாம்பின்பு வந்து தோன்ற அவர் பாதம் விளக்கும் பெருந்தகையார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கையால் அவர் தம் அடி பிடிக்கக் காதல் மனையார் முன்பு ஏவல்செய்யாது அகன்ற தமர் போலும் என்று தேரும் பொழுது மலர்மொய்யார் வாசக் கரக நீர் வார்க்க முட்ட முதல் தொண்டர்மையார் கூந்தல் மனையாரைப் பார்த்து மனத்துள் கருதுவார்.
சொற்பிரிப்பு
கையால் அவர் தம் அடி பிடிக்கக் காதல் மனையார் “முன்பு ஏவல்செய்யாது அகன்ற தமர் போலும்” என்று தேரும் பொழுது மலர்மொய்யார் வாசக் கரக நீர் வார்க்க முட்ட முதல்தொண்டர்மையார் கூந்தல் மனையாரைப் பார்த்து மனத்து உள் கருதுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வெறித்த கொன்றை முடியார் தம் அடியார் இவர் முன் மேவு நிலைகுறித்து வெள்கி நீர் வாராது ஒழிந்தாள் என்று மனம் கொண்டுமறித்து நோக்கார் வடிவாளை வாங்கிக் கரகம் வாங்கிக் கைதறித்துக் கரக நீர் எடுத்துத் தாமே அவர் தாள் விளக்கினார்.
சொற்பிரிப்பு
“வெறித்த கொன்றை முடியார் தம் அடியார் இவர் முன் மேவும் நிலைகுறித்து வெள்கி நீர் வாராது ஒழிந்தாள்” என்று மனம்கொண்டுமறித்து நோக்கார் வடிவாளை வாங்கிக், கரகம் வாங்கிக், கைதறித்துக் கரக நீர் எடுத்துத் தாமே அவர்தாள் விளக்கினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

விளக்கி அமுது செய்வதற்கு வேண்டுவன தாமே செய்துதுளக்கில் சிந்தையுடன் தொண்டர் தம்மை அமுது செய்வித்தார்அளப்பில் பெருமை அவர் பின்னும் அடுத்த தொண்டின் வழி நின்றுகளத்தில் நஞ்சம் அணிந்து அவர் தாள்நிழல் கீழ் அடியாருடன் கலந்தார்.
சொற்பிரிப்பு
விளக்கி, அமுது செய்வதற்கு வேண்டுவன தாமே செய்துதுளக்கு இல் சிந்தை உடன் தொண்டர் தம்மை அமுது செய்வித்தார்அளப்பில் பெருமை அவர் பின்னும் அடுத்த தொண்டின் வழிநின்றுகளத்தில் நஞ்சம் அணிந்தவர் தாள் நிழல்கீழ் அடியாருடன் கலந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

ஓத மலிநீர் விடம் உண்டார் அடியார் என்றுணராமாதரார் கை தடிந்த கலிக் கம்பர் மலர்ச் சேவடி வணங்கிபூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங்களில் பொலிந்தகாதல் அன்பர் கலிநீதியார் தம் பெருமை கட்டுரைப்பாம்.
சொற்பிரிப்பு
ஓத மலி நீர் விடம் உண்டார் அடியார் வேடம் என்று உணராமாதரார் கை தடிந்த கலிக் கம்பர் மலர்ச்சேவடி வணங்கிப்பூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங்களில் பொலிந்தகாதல் அன்பர் கலி நீதியார் தம் பெருமை கட்டுஉரைப்பாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.