திருமுறை 12 · 12.048 · 9

நரசிங்க முனையரைய நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

கோடாத நெறி விளக்கும் குலமரபின் அரசு அளித்துமாடாக மணி கண்டர் திருநீறே மனம் கொள்வார்தேடாத பெருவளத்தில் சிறந்த திருமுனைப் பாடிநாடாளும் காவலனார் நரசிங்க முனையரையர்.
சொற்பிரிப்பு
கோடாத நெறி விளங்கும் குலமரபின் அரசு அளித்துமாடு ஆக மணிகண்டர் திருநீறே மனம் கொள்வார்தேடாத பெருவளத்தில் சிறந்த திருமுனைப்பாடிநாடு ஆளும் காவலனார் நரசிங்க முனை அரையர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

இம்முனையர் பெருந்தகையார் இருந்து அரசு புரந்து போய்த்தெம் முனைகள் பல கடந்து தீங்கு நெறிப் பாங்கு அகலமும்முனை நீள் இலைச் சூல முதற்படையார் தொண்டுபுரிஅம் முனைவர் அடி அடைவே அரும் பெரும் பேறு என அடைவார்.
சொற்பிரிப்பு
இம்முனையர் பெரும்தகையார் இருந்து அரசு புரந்து போய்த்தெம்முனைகள் பல கடந்து தீங்கு நெறிப் பாங்கு அகலமும்முனை நீள் இலைச் சூல முதல் படையார் தொண்டு புரிஅம்முனைவர் அடி அடைவே அரும் பெரும் பேறு என அடைவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

சின விடையார் கோயில் தொறுந் திருச் செல்வம் பெருக்குநெறிஅனவிடை ஆருயிர் துறக்க வரும் எனினும் அவை காத்துமனவிடையாமைத் தொடையல் அணிமார்பர் வழித்தொண்டுகனவிடை ஆகிலும் வழுவாக் கடன் ஆற்றிச் செல்கின்றார்.
சொற்பிரிப்பு
சினவிடையார் கோயில்தொறும் திருச்செல்வம் பெருக்கு நெறிஅன இடை ஆருயிர் துறக்க வரும் எனினும் அவை காத்துமன விடை ஆமைத் தொடையல் அணி மார்பர் வழித் தொண்டுகனவிடை ஆகிலும் வழுவாக் கடன் ஆற்றிச் செல்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஆறு அணிந்த சடை முடியார்க்கு ஆதிரை நாள் தொறும் என்றும்வேறு நிறை வழிபாடு விளங்கிய பூசனை மேவிநீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும் பொன்நூறு குறையாமல் அளித்து இன் அமுது நுகர்விப்பார்.
சொற்பிரிப்பு
ஆறு அணிந்த சடைமுடியார்க்கு ஆதிரை நாள்தொறும் என்றும்வேறு நிறை வழிபாடு விளங்கிய பூசனை மேவிநீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும்பொன்நூறு குறையாமல் அளித்து இன்அமுது நுகர்விப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஆன செயல் முறை புரிவார் ஒரு திருவாதிரை நாளில்மேன்மை நெறித் தொண்டர்க்கு விளங்கிய பொன் இடும் பொழுதில்மான நிலை அழிதன்மை வரும் காமக்குறி மலர்ந்தஊனம் நிகழ் மேனியராய் ஒருவர் நீறு அணிந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
ஆன செயல் முறை புரிவார் ஒரு திருவாதிரை நாளில்மேன்மை நெறித் தொண்டர்க்கு விளங்கிய பொன் இடும் பொழுதில்மான நிலை அழி தன்மை வரும் காமக் குறி மலர்ந்தஊன நிகழ் மேனியராய் ஒருவர் நீறு அணிந்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மற்று அவர் தம் வடிவு இருந்த படி கண்டு மருங்குள்ளார்உற்ற இகழ்ச்சியராக ஒதுங்குவார் தமைக் கண்டுகொற்றவனார் எதிர் சென்று கைகுவித்துக் கொடு போந்தப்பெற்றியினார் தமை மிகவும் கொண்டாடிப் பேணுவார்.
சொற்பிரிப்பு
மற்றவர் தம் வடிவு இருந்தபடி கண்டு மருங்கு உள்ளார்உற்ற இகழ்ச்சியர் ஆகி ஒதுங்குவார் தமைக்கண்டுகொற்றவனார் எதிர்சென்று கைகுவித்துக், கொடுபோந்து, அப்பெற்றியினார் தமை மிகவும் கொண்டாடிப் பேணுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

சீலம் இலரே எனினும் திருநீறு சேர்ந்தாரைஞாலம் இகழ்ந்து அருநரகம் நண்ணாமல் எண்ணுவார்பாலணைந்தார் தமக்கு அளித்தபடி இரட்டிப் பொன் கொடுத்துமேலவரைத் தொழுது இனிய மொழி விளம்பி விடை கொடுத்தார்.
சொற்பிரிப்பு
சீலம் இலரே எனினும் திருநீறு சேர்ந்தாரைஞாலம் இகழ்ந்து அருநரகம் நண்ணாமல் எண்ணுவார்பால் அணைந்தார் தமக்கு அளித்தபடி இரட்டிப் பொன் கொடுத்துமேலவரைத் தொழுது, இனிய மொழி விளம்பி விடை கொடுத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

இவ்வகையே திருத் தொண்டின் அருமை நெறி எந்நாளும்செவ்விய அன்பினில் ஆற்றித் திருந்திய சிந்தையர் ஆகிப்பை வளர் வாள் அரவு அணிந்தார் பாதமலர் நிழல் சேர்ந்துமெய் வகைய வழி அன்பின் மீளாத நிலை பெற்றார்.
சொற்பிரிப்பு
இவ்வகையே திருத்தொண்டின் அருமை நெறி எந்நாளும்செவ்விய அன்பினில் ஆற்றித் திருந்திய சிந்தையர் ஆகிப்பைவளர் வாள் அரவு அணிந்தார் பாதமலர் நிழல் சேர்ந்துமெய்வகைய வழி அன்பின் மீளாத நிலைபெற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

விட நாகம் அணிந்த பிரான் மெய்த்தொண்டு விளைந்த நிலைஉடனாகும் நரசிங்க முனையர் பிரான் கழல் ஏத்தித்தடநாகம் மதம் சொரியத் தனம் சொரியும் கலம் சேரும்கடனாகை அதிபத்தர் கடனாகைக் கவின் உரைப்பாம்.
சொற்பிரிப்பு
விட நாகம் அணிந்த பிரான் மெய்த்தொண்டு விளைந்த நிலைஉடன் ஆகும் நரசிங்க முனையர் பிரான் கழல் ஏத்தித்தடநாகம் மதம் சொரியத் தனம் சொரியும் கலம் சேரும்கடல் நாகை அதிபத்தர் கடன் ஆகைக் கவின் உரைப்பாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.