திருமுறை 12 · 12.045 · 9

கூற்றுவ நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

துன்னார் முனைகள் தோள் வலியால் வென்று சூலப் படையார் தம்நன்னாமம் தம் திரு நாவில் நாளும் நவிலும் நலம் மிக்கார்பன்னாள் ஈசரடியார்தம் பாதம் பரவிப் பணிந்து ஏத்திமுன்னாகிய நல் திருத் தொண்டின் முயன்றார் களந்தை முதல்வனார்.
சொற்பிரிப்பு
துன்னார் முனைகள் தோள்வலியால் வென்று சூலப் படையார் தம்நன் நாமம் தம் திருநாவில் நாளும் நவிலும் நலம் மிக்கார்;பன்நாள் ஈசர் அடியார் தம் பாதம் பரவிப் பணிந்து ஏத்திமுன் ஆகிய நல் திருத்தொண்டின் முயன்றார் களந்தை முதல்வனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அருளின் வலியால் அரசு ஒதுங்க அவனி எல்லாம் அடிப் படுப்பார்பொருளின் முடிவும் காண்பரிய வகையால் பொலிவித்து இகல் சிறக்கமருளும் களிறு பாய் புரவி மணித்தேர் படைஞர் முதல் மாற்றார்வெருளும் கருவி நான்கு நிறை வீரச் செருக்கின் மேலானார்.
சொற்பிரிப்பு
அருளின் வலியால் அரசு ஒதுங்க, அவனி எல்லாம் அடிப்படுப்பார்பொருளின் முடிவும் காண்பரிய வகையால் பொலிவித்து, இகல் சிறக்கமருளும் களிறு, பாய் புரவி, மணித்தேர், படைஞர் முதல், மாற்றார்வெருளும் கருவி நான்கும் நிறை வீரச் செருக்கின் மேல் ஆனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வென்றி வினையின் மீக்கூர வேந்தர் முனைகள் பல முருக்கிச்சென்று தும்பைத் துறை முடித்தும் செருவில் வாகைத் திறம் கெழுமிமன்றல் மாலை மிலைந்தவர் தம் வள நாடு எல்லாம் கவர்ந்து முடிஒன்றும் ஒழிய அரசர் திரு எல்லாம் உடைய ராயினார்.
சொற்பிரிப்பு
வென்றி வினையின் மீக்கூர, வேந்தர் முனைகள் பல முருக்கிச்சென்று தும்பைத் துறைமுடித்துச், செருஇல் வாகைத் திறம் கெழுமிமன்றல் மாலை மிலைந்தவர் தம் வளநாடு எல்லாம் கவர்ந்து, முடிஒன்றும் ஒழிய அரசர் திரு எல்லாம் உடையர் ஆயினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணி மா மவுலி புனைவதற்குத்தில்லை வாழ் அந்தணர் தம்மை வேண்ட அவரும் செம்பியர்தம்தொல்லை நீடும் குல முதலோர்க்கு அன்றிச் சூட்டோம் முடி என்றுநல்காராகிச் சேரலன் தன் மலை நாடு அணைய நண்ணுவார்.
சொற்பிரிப்பு
மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணி மா மவுலி புனைவதற்குத்தில்லை வாழ் அந்தணர் தம்மை வேண்ட, அவரும், “செம்பியர் தம்தொல்லை நீடும் குலமுதலோர்க்கு அன்றிச் சூட்டோம் முடி” என்றுநல்கார் ஆகிச், சேரலன் தன் மலைநாடு அணைய நண்ணுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஒருமை உரிமைத் தில்லை வாழ் அந்தணர்கள் தம்மில் ஒரு குடியைப்பெருமை முடியை அருமை புரி காவல் பேணும் படி இருத்திஇருமை மரபும் தூயவர் தாம் சேரர் நாட்டில் எய்தியபின்வரும் ஐயுறவால் மனம் தளர்ந்து மன்றுள் ஆடும் கழல் பணிவார்.
சொற்பிரிப்பு
ஒருமை உரிமைத் தில்லை வாழ் அந்தணர்கள், தம்மில் ஒரு குடியைப்பெருமை முடியை, அருமை புரி காவல் பேணும் படி இருத்தி,இருமை மரபும் தூயவர் தாம், சேரர் நாட்டில் எய்திய பின்,வரும் ஐயுறவால் மனம் தளர்ந்து, மன்றுள் ஆடும் கழல் பணிவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

அற்றை நாளில் இரவின் கண் அடியேன் தனக்கு முடியாகப்பெற்ற பேறு மலர் பாதம் பெறவே வேண்டும் எனப் பரவும்பற்று விடாது துயில்வோர்க்குக் கனவில் பாத மலர் அளிக்கஉற்ற அருளால் அவை தாங்கி உலகம் எல்லாம் தனிப் புரந்தார்.
சொற்பிரிப்பு
அற்றை நாளில் இரவின்கண் “அடியேன் தனக்கு முடி ஆகப்பெற்ற பேறு மலர்ப்பாதம் பெறவே வேண்டும்” எனப் பரவும்பற்று விடாது துயில்வோர்க்குக் கனவில் பாத மலர் அளிக்கஉற்ற அருளால் அவை தாங்கி உலகம் எல்லாம் தனிப் புரந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

அம் பொன் நீடும் அம்பலத்துள் ஆரா அமுதத் திரு நடம் செய்தம்பிரானார் புவியில் மகிழ் கோயில் எல்லாம் தனித் தனியேஇம்பர் ஞாலம் களி கூர எய்தும் பெரும் பூசனை இயற்றிஉம்பர் மகிழ அரசு அளித்தே உமையாள் கணவன் அடிசேர்ந்தார்.
சொற்பிரிப்பு
அம்பொன் நீடும் அம்பலத்துள் ஆரா அமுதத் திருநடம் செய்தம்பிரானார் புவியின் மகிழ் கோவில் எல்லாம், தனித்தனியே,இம்பர் ஞாலம் களி கூர எய்தும் பெரும் பூசனை இயற்றிஉம்பர் மகிழ அரசு அளித்தே உமையாள் கணவன் அடி சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

காதல் பெருமைத் தொண்டின் நிலைக் கடல் சூழ் வையம் காத்தளித்துக்கோதங்ககல முயல் களந்தைக் கூற்றனார் தம் கழல் வணங்கிநாத மறை தந்து அளித்தாரை நடைநூல் பாவில் நவின்று ஏத்தும்போதம் மருவிப் பொய் அடிமை இல்லாப் புலவர் செயல் புகல்வாம்.
சொற்பிரிப்பு
காதல் பெருமைத் தொண்டின் நிலைக் கடல் சூழ் வையம் காத்து அளித்துக்கோது அங்கு அகல முயல் களந்தைக் கூற்றனார் தம் கழல் வணங்கிநாத மறை தந்து அளித்தாரை நடை நூல் பாவில் நவின்று ஏத்தும்போதம் மருவிப் பொய் அடிமை இல்லாப் புலவர் செயல் புகல்வாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

தேனும் குழலும் பிழைத்த திரு மொழியாள் புலவி தீர்க்க மதிதானும் பணியும் பகை தீர்க்கும் சடையார் தூது தரும் திருநாள்கூனும் குருடும் தீர்த்து ஏவல் கொள்வார் குலவு மலர்ப் பாதம்யானும் பரவித் தீர்க்கின்றேன் ஏழு பிறப்பின் முடங்குகூன்.வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் முற்றிற்று.
சொற்பிரிப்பு
தேனும் குழலும் பிழைத்த திரு மொழியாள் புலவி தீர்க்க, மதிதானும் பணியும் பகை தீர்க்கும் சடையார் தூது தரும் திருநாள்கூனும் குருடும் தீர்த்து ஏவல் கொள்வார் குலவு மலர்ப்பாதம்யானும் பரவித் தீர்க்கின்றேன் ஏழு பிறப்பின் முடங்கு கூன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.