1
ஆழி மாநிலத்து அகிலம் ஈன்று அளித்தவள் திருமுலை அமுதுண்டவாழி ஞான சம்பந்தர் வந்து அருளிய வனப்பினது அளப்பு இல்லாஊழி மாகடல் வெள்ளத்து மிதந்து உலகினுக்கு ஒரு முதலாயகாழி மாநகர்த் திரு மறையவர் குலக் காவலர் கணநாதர்.
சொற்பிரிப்பு
ஆழி மாநிலத்து அகிலம் ஈன்று அளித்தவள் திருமுலை அமுதுண்டவாழி ஞானசம்பந்தர் வந்தருளிய வனப்பினது; அளப்பு இல்லாஊழி மாகடல் வெள்ளத்து மிதந்து உலகினுக்கு ஒரு முதல் ஆயகாழி மாநகர்த் திருமறையவர் குலக் காவலர் கணநாதர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.