1
மாவீற்றிருந்த பெரும் சிறப்பின் மன்னும் தொன்மை மலை நாட்டுப்பா வீற்றிருந்த பல்புகழில் பயிலும் இயல்பில் பழம்பதி தான்சேவீற்று இருந்தார் திருவஞ்சைக் களமும் நிலவிச் சேரர் குலக்கோவீற்றிருந்து முறை புரியும் குலக்கோ மூதூர் கொடுங்கோளூர்.
சொற்பிரிப்பு
மா வீற்று இருந்த பெருஞ்சிறப்பின் மன்னும் தொன்மை மலைநாட்டுப்பா வீற்று இருந்த பல்புகழார் பயிலும் இயல்பில் பழம்பதி தான்சே வீற்று இருந்தார் திருஅஞ்சைக்களமும் நிலவிச் சேரர் குலக்கோ வீற்று இருந்து முறைபுரியும் குலக்கோ மூதூர் கொடுங்கோளூர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
காலை எழும் பல் கலையின் ஒலி களிற்றுக் கன்று வடிக்கும் ஒலிசோலை எழும் மென் சுரும்பின் ஒலி துரகச் செருக்கால் சுலவும் ஒலிபாலை விபஞ்சி பயிலும் ஒலி பாடல் ஆடல் முழவின் ஒலிவேலை ஒலியை விழுங்கிஎழ விளங்கி ஓங்கும் வியப்பினதால்.
சொற்பிரிப்பு
காலை எழும்பல் கலையின் ஒலி களிற்றுக் கன்று வடிக்கும் ஒலிசோலை எழுமென் சுரும்பின் ஒலி துரகச் செருக்கால் சுலவும் ஒலிபாலை விபஞ்சி பயிலும் ஒலி பாடல் ஆடல் முழவின் ஒலிவேலை ஒலியை விழுங்கி எழ விளங்கி ஓங்கும் வியப்பினதால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
3
மிக்க செல்வம் மனைகள் தொறும் விளையும் இன்பம் விளங்குவனபக்கம் நெருங்கும் சாலை தொறும் பயில் சட்ட அறங்கள் பல்குவனதக்க அணி கொள் மாடங்கள் தொறும் சைவ மேன்மை சாற்றுவனதொக்க வளங்கள் இடங்கள் தொறும் அடங்க நிதியம் துவன்றுவன.
சொற்பிரிப்பு
மிக்க செல்வம் மனைகள்தொறும் விளையும் இன்பம் விளங்குவனபக்கம் நெருங்கு சாலைதொறும் பயில் சட்ட அறங்கள் பல்குவனதக்க அணிகொள் மடங்கள்தொறும் சைவ மேன்மை சாற்றுவனதொக்க வளங்கொள் இடங்கள்தொறும் அடங்க நிதியம் துவன்றுவன.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
4
வேத நெறியின் முறை பிறழா மிக்க ஒழுக்கம் தலை நின்றசாதி நான்கு நிலை தழைக்கும் தன்மைத்து ஆகி தடமதில் சூழ்சூத வகுள சரள நிரை துதையும் சோலை வள நகர் தான்கோதை அரசர் மகோதை எனக் குலவும் பெயரும் உடைத்துலகில்.
சொற்பிரிப்பு
வேத நெறியின் முறை பிறழா மிக்க ஒழுக்கம் தலைநின்றசாதி நான்கு நிலை தழைக்கும் தன்மைத்து ஆகித் தடமதில் சூழ்சூதம் வகுளம் சரள நிரை துதையும் சோலை வளநகர்தான்கோதை அரசர் மகோதை எனக் குலவு பெயரும் உடைத்து உலகில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
5
முருகு விரியும் மலர்ச் சோலை மூதூர் அதன் கண் முறை மரபின்அருதி அழியும் கலி நீக்கி அறம் கொள் சைவத் திறம் தழைப்பத்திருகு சின வெம் களியானைச் சேரர் குலமும் உலகும் செய்பெருகும் தவத்தால் அரன் அருளால் பிறந்தார் பெருமாக் கோதையார்.
சொற்பிரிப்பு
முருகு விரியும் மலர்ச்சோலை மூதூர் அதன்கண் முறை மரபின்அருகி அழியும் கலி நீக்கி அறம்கொள் சைவத் திறம் தழைப்பத்திருகு சின வெம் களியானைச் சேரர் குலமும் உலகும் செய்பெருகு தவத்தால் அரன் அருளால் பிறந்தவர் பெருமாக் கோதையார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
6
திருமா நகரம் திரு அவதாரம் செய் விழவின் சிறப்பினால்வருமா களிகூர் நெய்யாடல் எடுப்ப வான மலர் மாரிதருமா விசும்பின் மிக நெருங்கத் தழங்கும் ஒலி மங்கலம் தழைப்பப்பெருமா நிலத்தில் எவ்வுயிரும் பெருகு மகிழ்ச்சி பிறங்கினவால்.
சொற்பிரிப்பு
திருமா நகரம் திருஅவதாரம் செய் விழவின் சிறப்பினால்வரு மாகளி கூர் நெய் ஆடல் எடுப்ப வான மலர்மாரிதருமா விசும்பின் மிக நெருங்கத் தழங்கும் ஒலி மங்கலம் தழைப்பப்பெருமா நிலத்தில் எவ்உயிரும் பெருகு மகிழ்ச்சி பிறங்கினவால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
7
மண் மேல் சைவ நெறி வாழ வளர்ந்து முன்னை வழி அன்பால்கண் மேல் விளங்கு நெற்றியினார் கழலே பேணூம் கருத்தினராய்உள் மேவிய அன்பினர் ஆகி உரிமை அரசர் தொழில் புரியார்தெள் நீர் முடியார் திரு வஞ்சைக் களத்தில் திருத்தொண்டே புரிவார்.
சொற்பிரிப்பு
மண் மேல் சைவ நெறி வாழ வளர்ந்து முன்னை வழி அன்பால்கண் மேல் விளங்கு நெற்றியினார் கழலே பேணும் கருத்தினராய்உள் மேவிய அன்பினர் ஆகி உரிமை அரசர் தொழில் புரியார்தெண்ணீர் முடியார் திருஅஞ்சைக் களத்தில் திருத்தொண்டே புரிவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
8
உலகின் இயல்பும் அரசு இயல்பும் உறுதி அல்ல என உணர்வார்புலரி எழுந்து புனல் மூழ்கிப் புனித வெண்ணீற்றினும் மூழ்கிநிலவு திரு நந்தன வனத்து நீடும் பணிகள் பல செய்துமலரும் முகையும் கொணர்ந்து திருமாலை சாத்த மகிழ்ந்து அமைத்து.
சொற்பிரிப்பு
‘உலகின் இயல்பும் அரசு இயல்பும் உறுதி அல்ல’ என உணர்வார்புலரி எழுந்து புனல் மூழ்கிப் புனித வெண்நீற்றினும் மூழ்கிநிலவு திருநந்தன வனத்து நீடும் பணிகள் பல செய்துமலரும் முகையும் கொணர்ந்து திரு மாலை சாத்த மகிழ்ந்து அமைத்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
9
திரு மஞ்சனமும் கொணர்ந்து திரு அலகும் இட்டுத் திரு மெழுக்குவரும் அன்புடன் இன்புறச் சாத்தி மற்றும் உள்ள திருப்பணிகள்பெருமை பிறங்கச் செய்து அமைத்துப் பேணும் விருப்பில் திருப்பாட்டும்ஒருமை நெறியின் உணர்வுவர ஓதிப் பணிந்தே ஒழுகும் நாள்.
சொற்பிரிப்பு
திருமஞ்சனமும் கொணர்ந்து திரு அலகும் இட்டுத் திருமெழுக்குவரும் அன்புடன் இன்புறச் சாத்தி மற்றும் உள்ள திருப்பணிகள்பெருமை பிறங்கச் செய்து அமைத்துப் பேணும் விருப்பில் திருப்பாட்டும்ஒருமை நெறியின் உணர்வு வர ஓதிப் பணிந்தே ஒழுகும் நாள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
10
நீரின் மலிந்த கடல் அகழி நெடுமால் வரையின் கொடிமதில் சூழ்சீரின் மலிந்த திரு நகரம் அதனில் செங்கோல் பொறையன் எனும்காரின் மலிந்த கெடை நிழல் மேல் கவிக்கும் கொற்றக் குடை நிழல் கீழ்த்தாரின் மலிந்த புயத்து அரசன் தரணி நீத்துத் தவம் சார்ந்தான்.
சொற்பிரிப்பு
நீரின் மலிந்த கடல் அகழி நெடுமால் வரையின் கொடிமதில் சூழ்சீரின் மலிந்த திருநகரம் அதனில் செங்கோல் பொறையன் எனும்காரின் மலிந்த கொடை நிழல்மேல் கவிக்கும் கொற்றக் குடைநிழல் கீழ்த்தாரின் மலிந்த புயத்து அரசன் தரணி நீத்துத் தவம் சார்ந்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
11
வந்த மரபின் அரசு அளிப்பான் வனம் சார் தவத்தின் மருவிய பின்சிந்தை மதி நூல் தேர் அமைச்சர் சில நாள் ஆய்ந்து தெளிந்த நெறிமுந்தை மரபில் முதல்வர் திருத் தொண்டு முயல்வார் முதற்று ஆகஇந்து முடியார் திருவஞ்சைக் களத்தில் அவர் பால் எய்தினார்.
சொற்பிரிப்பு
வந்த மரபின் அரசு அளிப்பான் வனம் சார் தவத்தின் மருவிய பின்சிந்தை மதி நூல் தேர் அமைச்சர் சிலநாள் ஆய்ந்து தெளிந்த நெறிமுந்தை மரபில் முதல்வர் திருத்தொண்டு முயல்வார் முதற்று ஆகஇந்து முடியார் திருஅஞ்சைக் களத்தில் அவர்பால் எய்தினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
12
எய்தி அவர் தம் எதிரில் இறைஞ்சி இருந்தண் சாரல் மலை நாட்டுச்செய்தி முறைமையால் உரிமைச் செங்கோல் அரசு புரிவதற்குமைதீர் நெறியின் முடி சூடி அருளும் மரபால் வந்தது எனப்பொய்தீர் வாய்மை மந்திரிகள் போற்றிப் புகன்ற பொழுதின்கண்.
சொற்பிரிப்பு
எய்தி அவர் தம் எதிர் இறைஞ்சி “இருந்தண் சாரல் மலைநாட்டுச்செய்தி முறைமையால் உரிமைச் செங்கோல் அரசு புரிவதற்குமைதீர் நெறியின் முடிசூடி அருளும் மரபால் வந்தது” எனப்பொய்தீர் வாய்மை மந்திரிகள் போற்றிப் புகன்ற பொழுதின்கண்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
13
இன்பம் பெருகும் திருத் தொண்டுக்கு இடையூறாக இவர் மொழிந்தார்அன்பு நிலைமை வழுவாமை அரசு புரக்கும் அருள் உண்டேல்என்பும் அரவும் புனைந்தாரை இடை பெற்று அறிவேன் எனப் புக்குமுன்பு தொழுது விண்ணப்பம் செய்தார் முதல்வர் அருளினால்.
சொற்பிரிப்பு
“இன்பம் பெருகும் திருத்தொண்டுக்கு இடையூறு ஆக இவர் மொழிந்தார்அன்பு நிலைமை வழுவாமை அரசு புரக்க அருள் உண்டேல்என்பும் அரவும் புனைந்தாரை இடைபெற்று அறிவேன்” எனப் புக்குமுன்பு தொழுது விண்ணப்பம் செய்தார்; முதல்வர் அருளினால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
14
மேவும் உரிமை அரசு அளித்தே விரும்பு காதல் வழிபாடும்யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும் ஈறு இல்லாத்தாவில் விறலும் தண்டாத கொடையும் படை வாகனம் முதலாம்காவல் மன்னர்க்கு உரியனவும் எல்லாம் கைவந்துறப் பெற்றார்.
சொற்பிரிப்பு
மேவும் உரிமை அரசு அளித்தே விரும்பு காதல் வழிபாடும்யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும், ஈறு இல்லாத்தாவில் விறலும், தண்டாத கொடையும், படை வாகனம் முதலாம்காவல் மன்னர்க்கு உரியனவும் எல்லாம் கைவந்து உறப் பெற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
15
ஆன அருள் கொண்டு அஞ்சலி செய்து இறைஞ்சிப் புறம் போந்து அரசு அளித்தல்ஊனம் ஆகும் திருத் தொண்டுக்கு எனினும் உடையான் அருளாலேமேன்மை மகுடம் தாங்குதற்கு வேண்டும் அமைச்சர்க்கு உடன் படலும்மான அமைச்சர் தாம் பணிந்து அவ் வினைமேல் கொண்டு மகிழ்ந்து எழுந்தார்.
சொற்பிரிப்பு
ஆன அருள் கொண்டு அஞ்சலி செய்து இறைஞ்சிப் புறம்போந்து அரசளித்தல்ஊனம் ஆகும் திருத்தொண்டுக்கு எனினும் உடையான் அருளாலேமேன்மை மகுடம் தாங்குவதற்கு வேண்டும் அமைச்சர்க்கு உடன்படலும்மான அமைச்சர் தாள் பணிந்து அவ்வினை மேல் கொண்டு மகிழ்ந்து எழுந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
16
உரிமை நாளில் ஓரை நலன் எய்த மிக்க உபகரணம்பெருமை சிறக்க வேண்டுவன எல்லாம் பிறங்க மங்கலம் செய்துஇருமை உலகுக்கு ஒருமை முடி கவித்தார் எல்லா உயிரும் மகிழ்தரும நிலைமை அறிந்து புவி தாங்கும் கழறிற் அறிவார் தாம்.
சொற்பிரிப்பு
உரிமை நாளில் ஓரை நலன் எய்த மிக்க உபகரணம்பெருமை சிறக்க, வேண்டுவன எல்லாம் பிறங்க, மங்கலம் செய்துஇருமை உலகுக்கு ஒருமை முடி கவித்தார்; எல்லா உயிரும் மகிழ்தரும நிலைமை அறிந்து புவி தாங்கும் கழறிற்று அறிவார் தாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
17
தம்பிரானார் கோயில் வலம் கொண்டு திருமுன் தாழ்ந்து எழுந்துகும்ப யானை மேல் கொண்டு கொற்றக் குடையும் சாமரையும்நம்பும் உரிமை யவர் தாங்க நலம் கொள் நகர் சூழ் வலம் கொள்வார்மொய்ம்பில் உவரின் பொதி சுமந்தோர் வண்ணான் முன்னே வரக் கண்டார்.
சொற்பிரிப்பு
தம்பிரானார் கோயில் வலம் கொண்டு திருமுன் தாழ்ந்து எழுந்துகும்ப யானை மேல் கொண்டு கொற்றக் குடையும் சாமரையும்நம்பும் உரிமையவர் தாங்க, நலம்கொள் நகர் சூழ் வலம் கொள்வார்,மொய்ம்பில் உவரின் பொதி சுமந்து ஓர் வண்ணான் முன்னே வரக் கண்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
18
மழையில் கரைந்து அங்கு உவர் ஊறி மேனி வெளுத்த வடிவினால்உழையில் பொலிந்த திருக்கரத்தார் அடியார் வேடம் என்று உணர்ந்தேஇழையிற் சிறந்த ஓடை நுதல் யானைக் கழுத்தின் நின்று இழிந்துவிழைவில் பெருகும் காதலினால் விரைந்து சென்று கை தொழுதார்.
சொற்பிரிப்பு
மழையில் கரைந்து அங்கு உவர் ஊறி மேனி வெளுத்த வடிவினால்“உழையில் பொலிந்த திருக்கரத்தார் அடியார் வேடம்” என்று உணர்ந்தேஇழையில் சிறந்த ஓடை நுதல் யானைக் கழுத்தின் நின்று இழிந்துவிழைவில் பெருகும் காதலினால் விரைந்து சென்று கைதொழுதார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
19
சேரர் பெருமான் தொழக் கண்டு சிந்தை கலங்கி முன் வணங்கியார் என்று அடியேனைக் கொண்டது அடி வண்ணான் எனச்சேரர் பிரானும் அடிச்சேரன் அடியேன் என்று திருநீற்றின்வார வேடம் நினைப்பித்தீர் வருந்தாது ஏகும் என மொழிந்தார்.
சொற்பிரிப்பு
சேரர் பெருமான் தொழக்கண்டு சிந்தை கலங்கி முன் வணங்கி“யார் என்று அடியேனைக் கொண்டது அடியேன் அடி வண்ணான்” என்னச்சேரர் பிரானும் “அடிச்சேரன் அடியேன்” என்று “திருநீற்றின்வார வேடம் நினைப்பித்தீர்; வருந்தாது ஏகும்” என மொழிந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
20
மன்னர் பெருமான் திருத்தொண்டு கண்டு மதி நீடு அமைச்சர் எலாம்சென்னி மிசை அஞ்சலி செய்து போற்றச் சினமால் களிறு ஏறிமின்னு மணிப் பூண் கொடி மாட வீதி மூதூர் வலம் கொண்டுபொன்னின் மணி மாளிகை வாயில் புக்கார் புனை மங்கலம் பொலிய.
சொற்பிரிப்பு
மன்னர் பெருமான் திருத்தொண்டு கண்டு மதி நீடு அமைச்சர் எல்லாம்சென்னி மிசை அஞ்சலி செய்து போற்றச் சினமால் களிறு ஏறிமின்னு மணிப்பூண் கொடிமாட வீதி மூதூர் வலம்கொண்டுபொன்னின் மணிமாளிகை வாயில் புக்கார் புனை மங்கலம் பொலிய.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
21
யானை மிசை நின்று இழிந்தருளி இலங்கு மணி மண்டபத்தின் கண்மேன்மை அரிஆசனத்து ஏறி விளங்கும் கொற்றக் குடை நிழற்றப்பானல் விழியார் சாமரை முன் பணி மாறப்பன் மலர் தூவிமான அரசர் போற்றிட வீற்றிருந்தார் மன்னர் பெருமானார்.
சொற்பிரிப்பு
யானை மிசைநின்று இழிந்தருளி இலங்கும் மணி மண்டபத்தின்கண்மேன்மை அரி ஆசனத்து ஏறி விளங்கும் கொற்றக் குடை நிழற்றப்பானல் விழியார் சாமரை முன் பணிமாறப் பன் மலர்தூவிமான அரசர் போற்றிட வீற்று இருந்தார் மன்னர் பெருமானார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
22
உலகு புரக்கும் கொடைவளவர் உரிமைச் செழியருடன் கூடநிலவு பெருமுக் கோக்களாய் நீதி மனுநூல் நெறி நடத்திஅலகில் அரசர் திறை கொணர அகத்தும் புறத்தும் பகை அறுத்துமலரும் திரு நீற்று ஒளிவளர மறைகள் வளர மண் அளிப்பார்.
சொற்பிரிப்பு
உலகு புரக்கும் கொடைவளவர் உரிமைச் செழியருடன் கூடநிலவு பெரு முக்கோக்களாய் நீதி மனுநூல் நெறி நடத்திஅலகில் அரசர் திறைகொணர அகத்தும் புறத்தும் பகை அறுத்துமலரும் திருநீற்று ஒளிவளர, மறைகள் வளர மண் அளிப்பார்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
23
நீடும் உரிமைப் பேரரசால் நிகழும் பயனும் நிறை தவமும்தேடும் பொருளும் பெருந் துணையும் தில்லைச் திருச்சிற்றம் பலத்துள்ஆடும் கழலே எனத் தெளிந்த அறிவால் எடுத்த திருப்பாதம்கூடும் அன்பில் அர்ச்சனை மேற் கொண்டார் சேரர் குலப் பெருமாள்.
சொற்பிரிப்பு
“நீடும் உரிமைப் பேரரசால் நிகழும் பயனும் நிறை தவமும்தேடும் பொருளும் பெரும் துணையும் தில்லைத் திருச்சிற்றம்பலத்துள்ஆடும் கழலே” எனத் தெளிந்த அறிவால் எடுத்த திருப்பாதம்கூடும் அன்பில் அர்ச்சனை மேல் கொண்டார் சேரர் குலப்பெருமாள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
24
வாசத் திருமஞ்சனம் பள்ளித் தாமம் சாந்தம் மணித் தூபம்தேசில் பெருகும் செழும் தீபம் முதலாயினவும் திரு அமுதும்ஈசர்க்கு ஏற்ற பரிசினால் அர்ச்சித்து அருள எந்நாளும்பூசைக்கு அமர்ந்த பெருங் கூத்தர் பொற்பார் சிலம்பின் ஒலி அளித்தார்.
சொற்பிரிப்பு
வாசத் திருமஞ்சனம், பள்ளித் தாமம், சாந்தம், மணித்தூபம்தேசில் பெருகும் செழும் தீபம் முதல் ஆயினவும் திருஅமுதும்ஈசர்க்கு ஏற்ற பரிசினால் அருச்சித்து அருள எந்நாளும்பூசைக்கு அமர்ந்த பெருங்கூத்தர் பொற்பார் சிலம்பின் ஒலி அளித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
25
நம்பர் தாளின் வழிபாட்டால் நாளும் இன்புற்று அமர்கின்றார்இம்பர் உலகில் இரவலர்க்கும் வறியோர் எவர்க்கும் ஈகையினால்செம் பொன் மழையாம் எனப் பொழிந்து திருந்து வென்றியுடன் பொருந்திஉம்பர் போற்றத் தம் பெருமாற்கு உரிய வேள்வி பல செய்தார்.
சொற்பிரிப்பு
நம்பர் தாளின் வழிபாட்டால் நாளும் இன்புற்று அமர்கின்றார்இம்பர் உலகில் இரவலர்க்கும் வறியோர் எவர்க்கும் ஈகையினால்செம்பொன் மழையாம் எனப் பொழிந்து திருந்து வென்றி உடன்பொருந்திஉம்பர் போற்றத் தம்பெருமாற்கு உரிய வேள்வி பல செய்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
26
இன்ன வண்ணம் இவர் ஓழுக எழில் கொள் பாண்டி நன்னாட்டுமன்னும் மதுரைத் திருவால வாயில் இறைவர் வரும் அன்பால்பன்னும் இசைப் பாடலில் பரவும் பாணனார் பத்திரனார்க்குநன்மை நீடு பெரும் செல்வம் நல்க வேண்டி அருள் புரிவார்.
சொற்பிரிப்பு
இன்ன வண்ணம் இவர் ஒழுக எழில்கொள் பாண்டி நன்நாட்டுமன்னும் மதுரைத் திருஆலவாயில் இறைவர் வரும் அன்பால்பன்னும் இசைப்பாடலில் பரவும் பாணனார் பத்திரனார்க்குநன்மை நீடு பெரும்செல்வம் நல்க வேண்டி அருள்புரிவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
27
இரவு கனவில் எழுந்து அருளி என்பால் அன்பால் எப்பொழுதும்பரவும் சேரன் தனக்கு உனக்குப் பைம் பொன் காணம் பட்டாடைவிரவு கதிர் செய் நவமணிப் பூண் வேண்டிற்று எல்லாம் குறைவின்றித்தர நம் ஓலை தருகின்றோம் தாழாது ஏகி வருக என்று.
சொற்பிரிப்பு
இரவு கனவில் எழுந்தருளி, “என்பால் அன்பால் எப்பொழுதும்பரவு சேரன் தனக்கு, உனக்குப் பைம்பொன் காணம் பட்டு ஆடைவிரவு கதிர்செய் நவமணிப் பூண் வேண்டிற்று எல்லாம் குறைவு இன்றித்தர நம் ஓலை தருகின்றோம் தாழாது ஏகி வருக” என்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
28
அதிர் கழல் உதியர் வேந்தற்கு அருள் செய்த பெருமை யாலேஎதிர் இல் செல்வத்துக்கு ஏற்ற இருநிதி கொடுக்க என்றுமதிமலி புரிசை என்னும் வாசகம் வரைந்த வாய்மைக்கதிர் ஒளி விரிந்த தோட்டுத் திருமுகம் கொடுத்தார் காண.
சொற்பிரிப்பு
அதிர்கழல் உதியர் வேந்தற்கு அருள்செய்த பெருமையாலே“எதிர் இல் செல்வத்துக்கு ஏற்ற இருநிதி கொடுக்க” என்று“மதிமலி புரிசை” என்னும் வாசகம் வரைந்த வாய்மைக்கதிர்ஒளி விரிந்த தோட்டுத் திருமுகம் கொடுத்தார் காண.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
29
சங்கப் புலவர் திருமுகந்தந் தலைமேல் கொண்டு பத்திரனார்அங்கு அப்பொழுதே புறப்பட்டு மலை நாடு அணைய வந்து எய்தித்துங்கப் பரிசை கொடுங் கோளூர் தன்னில் புகுந்து துன்னு கொடிமங்குல் தொடக்கும் மாளிகை முன் வந்து மன்னர்க்கு அறிவித்தார்.
சொற்பிரிப்பு
சங்கப் புலவர் திருமுகத்தைத் தலைமேல் கொண்டு பத்திரனார்அங்கு அப்பொழுதே புறப்பட்டு மலைநாடு அணைய வந்து எய்தித்துங்கப் புரிசைக் கொடுங்கோளூர் தன்னில் புகுந்து துன்னு கொடிமங்குல் தொடக்கும் மாளிகை முன் வந்து மன்னர்க்கு அறிவித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
30
கேட்ட பொழுதே கை தலைமேல் கொண்டு கிளர்ந்த பேரன்பால்நாட்டம் பொழி நீர் வழிந்து இழிய எழுந்து நடுக்கம் மிக எய்திஓட்டத் தம் பொன் மாளிகையின் புறத்தில் உருகும் சிந்தையுடன்பாட்டின் தலைமைப் பாணனார் பாதம் பலகால் பணிகின்றார்.
சொற்பிரிப்பு
கேட்ட பொழுதே கைதலைமேல்கொண்டு கிளர்ந்த பேரன்பால்நாட்டம் பொழிநீர் வழிந்து இழிய எழுந்து நடுக்கம் மிக எய்திஓட்டத்து அம்பொன் மாளிகையின் புறத்தில் உருகும் சிந்தையுடன்பாட்டின் தலைமைப் பாணார் பாதம் பலகால் பணிகின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
31
அடியேன் பொருளாத் திருமுகம் கொண்டு அணைந்தது என்ன அவர் தாமும்கொடிசேர் விடையார் திருமுகம் கைக்கொடுத்து வணங்கக் கொற்றவனார்முடிமேல் கொண்டு கூத்து ஆடி மொழியும் குழறிப் பொழி கண்ணீர்பொடியார் மார்பில் பரந்து விழப் புவிமேல் பலகால் வீழ்ந்து எழுந்தார்.
சொற்பிரிப்பு
“அடியேன் பொருளாத் திருமுகம்கொண்டு அணைந்தது” என்ன அவர் தாமும்கொடிசேர் விடையார் திருமுகம் கைக் கொடுத்து வணங்கக் கொற்றவனார்முடிமேல் கொண்டு கூத்து ஆடி மொழியும் குழறிப் பொழிகண்ணீர்பொடியார் மார்பில் பரந்து விழப் புவிமேல் பலகால் வீழ்ந்து எழுந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
32
பரிவில் போற்றித் திருமுகத்தைப் பலகால் தொழுது படி எடுக்கஉரிய வகையில் எடுத்து ஓதி உம்பர் பெருமான் அருள் போற்றிவிரிபொன் சுடர் மாளிகை புக்கு மேவும் உரிமைச் சுற்றம் எலாம்பெரிது விரைவில் கொடு போந்து பேணு அமைச்சர்க்கு அருள் செய்வார்.
சொற்பிரிப்பு
பரிவில் போற்றித் திருமுகத்தைப் பலகால் தொழுது படிஎடுக்கஉரிய வகையால் எடுத்து ஓதி உம்பர் பெருமான் அருள் போற்றிவிரி பொன் சுடர் மாளிகை புக்கு மேவும் உரிமைச் சுற்றம் எலாம்பெரிதும் விரைவில் கொடுபோந்து பேணும் அமைச்சர்க்கு அருள்செய்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
33
நங்கள் குல மாளிகை இதனுள் நலத்தின் மிக்க நிதிக் குவையாய்ப்பொங்கி நிறைந்த பலவேறு வகையில் பொலிந்த பண்டாரம்அம்கண் ஒன்றும் ஒழியாமை அடையக் கண்டு புறப்பட்டுத்தங்கும் பொதிசெய் தாளின்மேல் சமைய ஏற்றிக் கெணரும் என.
சொற்பிரிப்பு
“நங்கள் குல மாளிகை இதன் உள் நலத்தின் மிக்க நிதிக் குவையாய்ப்பொங்கி நிறைந்த பலவேறு வகையில் பொலிந்த பண்டாரம்அங்கண் ஒன்றும் ஒழியாமை அடையக் கொண்டு புறப்பட்டுத்தங்கும் பொதிசெய்து ஆளின்மேல் சமைய ஏற்றிக் கொணரும்” என.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
34
சேரர் பெருமான் அருள் செய்யத் திருந்து மதிநூல் மந்திரிகள்சாரும் மணி மாளிகையுள்ளால் தனங்கள் எல்லாம் நிறைந்த பெரும்சீர் கொள் நிதியம் எண்ணிறந்த எல்லாம் பொதி செய்தாளின் மேல்பாரில் நெருங்க மிசை ஏற்றிக் கொண்டு வந்து பணிந்தார்கள்.
சொற்பிரிப்பு
சேரர் பெருமான் அருள்செய்யத் திருந்து மதிநூல் மந்திரிகள்சாரும் மணிமாளிகை உள்ளால் தனங்கள் எல்லாம் நிறைந்த பெரும்சீர்கொள் நிதியும் எண் இறந்த எல்லாம் பொதிசெய்து ஆளின்மேல்பாரில் நெருங்க மிசைஏற்றிக் கொண்டு வந்து பணிந்தார்கள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
35
பரந்த நிதியின் பரப்பு எல்லாம் பாணனார் பத்திரனார்க்குநிரந்த தனங்கள் வேறு வேறு நிரைத்துக் கட்டி மற்று இவையும்உரம் தங்கிய வெம் கரிபரிகள் முதலாம் உயிர் உள்ளன தனமும்புரந்த அரசும் கொள்ளும் என மொழிந்தார் பொறையர் புரவலனார்.
சொற்பிரிப்பு
பரந்த நிதியின் பரப்பு எல்லாம் பாணனார் பத்திரனார்க்குநிரந்த தனங்கள் வெவ்வேறு நிரைத்துக் காட்டி “மற்று இவையும்உரந் தங்கிய வெம்கரி பரிகள் முதலாம் உயிர் உள்ளன தனமும்புரந்த அரசும் கொள்ளும்” என மொழிந்தார் பொறையர் புரவலனார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
36
பாணனார் பத்திரனாரும் பைம்பொன் மௌலிச் சேரலனார்காணக் கொடுத்த நிதி எல்லாம் கண்டு மகிழ்வுற்று அதிசயித்துப்பேண எனக்கு வேண்டுவன அடியேன் கொள்ள பிஞ்ஞகனார் ஆணைஅரசும் அரசு உறுப்பும் கைக் கொண்டு அருளும் என இறைஞ்ச.
சொற்பிரிப்பு
பாணனார் பத்திரனாரும் பைம்பொன் மௌலிச் சேரலனார்காணக் கொடுத்த நிதி எல்லாம் கண்டு மகிழ்வுற்று அதிசயித்துப்“பேண எனக்கு வேண்டுவன அடியேன்கொள்ளப் பிஞ்ஞகனார்ஆணை அரசும் அரசு உறுப்பும் கைக்கொண்டு அருளும்” என இறைஞ்ச.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
37
இறைவர் ஆணை மறுப்ப அதனுக்கு அஞ்சி இசைந்தார் இகல் வேந்தர்நிறையும் நிதியின் பரப்பு எல்லாம் நிலத்தை நெளிய உடன் கொண்டேஉறை மும்மதத்துக் களிறு பரி உள் இட்டன வேண்டுவ கொண்டோர்பிறை வெண் கோட்டுக் களிற்றுமேல் கொண்டு போந்தார் பெரும்பாணர்.
சொற்பிரிப்பு
இறைவர் ஆணை மறுப்பதனுக்கு அஞ்சி இசைந்தார் இகல் வேந்தர்;நிறையும் நிதியின் பரப்பு எல்லாம் நிலத்தை நெளிய உடன்கொண்டேஉறை மும்மதத்துக் களிறு பரி உள்ளிட்டன வேண்டுவ கொண்டு ஓர்பிறைவெண் கோட்டுக் களிற்றுமேல் கொண்டு போந்தார் பெரும்பாணர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
38
பண்பு பெருகும் பெருமாளும் பாணனார் பத்திரனார் பின்கண்கள் பொழிந்த காதல் நீர் வழியக் கையால் தொழுது அணையநண்பு சிறக்கும் அவர் தம்மை நகரின் புறத்து விடை கொண்டுதிண் பொற் புரிசைத் திரு மதுரை புக்கார் திருந்தும் இசைப் பாணர்.
சொற்பிரிப்பு
பண்பு பெருகும் பெருமாளும் பாணனார் பத்திரனார் பின்கண்கள் பொழிந்த காதல் நீர் வழியக் கையால் தொழுது அணையநண்பு சிறக்கும் அவர் தம்மை நகரின் புறத்து விடைகொண்டுதிண்பொன் புரிசைத் திருமதுரை புக்கார் திருந்தும் இசைப்பாணர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
39
வான வரம்பர் குலம் பெருக்கும் மன்னனாரும் மறித்து ஏகிக்கூனல் இளம் வெண் பிறைக் கண்ணி முடியார் அடிமை கொண்டு அருளும்பான்மை அருளின் பெருமையினை நினைந்து பலகால் பணிந்து ஏத்திமேன்மை விளங்கு மாளிகை மண்டபத்துள் அரசு வீற்றிருந்தார்.
சொற்பிரிப்பு
வான வரம்பர் குலம் பெருக்கும் மன்னனாரும் மறித்து ஏகிக்கூனல் இளவெண் பிறைக்கண்ணி முடியார் அடிமை கொண்டருளும்பான்மை அருளின் பெருமையினை நினைந்து பலகால் பணிந்து ஏத்திமேன்மை விளங்கு மாளிகை மண்டபத்து உள் அரசு வீற்றிருந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
40
அளவில் பெருமை அகில யோனிகளும் கழறிற்று அறிந்து அவற்றின்உளம் மன்னிய மெய்யுறு துயரம் ஒன்றும் ஒழியா வகை அகற்றிக்களவு கொலைகள் முதலான கடிந்து கழற்றிற்று அறிவார் தாம்வளவர் பெருமானுடன் செழியர் மகிழும் கலப்பில் மகிழும் நாள்.
சொற்பிரிப்பு
அளவில் பெருமை அகில யோனிகளும் கழறிற்று அறிந்து அவற்றின்உளம் மன்னிய மெய் உறு துயரம் ஒன்றும் ஒழியா வகை அகற்றிக்களவு கொலைகள் முதல் ஆன கடிந்து கழறிற்று அறிவார் தாம்வளவர் பெருமான் உடன் செழியர் மகிழும் கலப்பில் வைகும் நாள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
41
வானக் கங்கை நதி பொதிந்த மல்கு கடையார் வழிபாட்டுத்தூ நல் சிறப்பின் அர்ச்சனையாம் தொண்டு புரிவார் தமக்கு ஒரு நாள்தேன் நக்கலர்ந்த கொன்றையினார் ஆடல் சிலம்பின் ஒலி முன் போல்மானப் பூசை முடிவின்கண் கேளாது ஒழிய மதிமயங்கி.
சொற்பிரிப்பு
வானக் கங்கை நதி பொதிந்த மல்கு சடையார் வழிபாட்டுத்தூநல் சிறப்பின் அர்ச்சனையாம் தொண்டு புரிவார் தமக்கு ஒருநாள்தேன் நக்கு அலர்ந்த கொன்றையினார் ஆடல் சிலம்பின் ஒலி முன்போல்மானப் பூசை முடிவின்கண் கேளாது ஒழிய மதி மயங்கி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
42
பூசை கடிது முடித்து அடியேன் என்னோ பிழைத்தது எனப் பொருமிஆசை உடம்பால் மற்று இனி வேறு அடையும் இன்பம் யாது என்றுதேசின் விளங்கும் உடைவாளை உருவித் திருமார்பினில் நாட்டஈசர் விரைந்து திருச்சிலம்பின் ஓசை மிகவும் இசைப்பித்தார்.
சொற்பிரிப்பு
பூசை கடிது முடித்து ”அடியேன் என்னோ பிழைத்தது?” எனப் பொருமி“ஆசை உடம்பால் மற்றினி வேறு அடையும் இன்பம் யாது?” என்றுதேசின் விளங்கும் உடைவாளை உருவித் திருமார்பினில் நாட்டஈசர் விரைந்து திருச்சிலம்பின் ஓசை மிகவும் இசைப்பித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
43
ஆடல் சிலம்பின் ஒலிகேளா உடைவாள் அகற்றி அங்கைமலர்கூடத் தலைமேல் குவித்து அருளிக் கொண்டு விழுந்து தொழுது எழுந்துநீடப் பரவி மொழிகின்றார் நெடுமால் பிரமன் அருமறை முன்தேடற்கு அரியாய் திருவருள் முன் செய்யாதொழிந்தது என் என்றார்.
சொற்பிரிப்பு
ஆடல் சிலம்பின் ஒலி கேளா உடைவாள் அகற்றி அங்கை மலர்கூடத் தலைமேல் குவித்தருளிக் கொண்டு விழுந்து தொழுது எழுந்துநீடப் பரவி மொழிகின்றார் “நெடுமால் பிரமன் அருமறை முன்தேடற்கு அரியாய்! திருஅருள் முன் செய்யாது ஒழிந்தது என்?” என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
44
என்ற பொழுதில் இறைவர் தாம் எதிர் நின்று அருளாது எழும் ஒலியால்மன்றினிடை நம் கூத்தாடல் வந்து வணங்கி வன் தொண்டன்ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி உரை சேர் பதிகம் பாடுதலால்நின்று கேட்டு வரத் தாழ்த்தோம் என்றார் அவரை நினைப்பிப்பார்.
சொற்பிரிப்பு
என்ற பொழுதில் இறைவர் தாம் எதிர் நின்று அருளாது எழும் ஒலியால்“மன்றில் இடை நம் கூத்து ஆடல் வந்து வணங்கி வன்தொண்டன்ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி உரைசேர் பதிகம் பாடுதலால்நின்று கேட்டு வரத் தாழ்த்தோம்” என்றார் அவரை நினைப்பிப்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
45
என்னே அடியார்க்கு இவர் அருளும் கருணை இருந்தவாறு என்றுபொன் நேர் சடையார் திருநடம் செய் புலியூர் பொன்னம்பலம் இறைஞ்சித்தன் நேர் இல்லா வன்தொண்டர் தமையும் காண்பன் என விரும்பிநன்னீர் நாட்டுக் செல நயந்தார் நாமச் சேரர் கோமானார்.
சொற்பிரிப்பு
“என்னே! அடியார்க்கு இவர் அருளும் கருணை இருந்தவாறு” என்றுபொன் நேர் சடையார் திருநடம் செய் புலியூர்ப் பொன் அம்பலம் இறைஞ்சித்தன் நேர் இல்லா வன்தொண்டர் தமையும் காண்பன்” என விரும்பிநன்னீர் நாட்டுச் செல நயந்தார் நாமச் சேரர் கோமானார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
46
பொன்னார் மௌலிச் சேரலனார் போற்றும் அமைச்சர்க்கு அஃது இயம்பிநல் நாள் கொண்டு பெரும் பயணம் எழுக என்று நலம் சாற்றமின்னார் அயில் வேல் குல மறவர் வென்றி நிலவும் சிலை வீரர்அந் நாட்டு உள்ளார் அடைய நிரந்து அணைந்தார் வஞ்சி அகநகர்வாய்.
சொற்பிரிப்பு
பொன்னார் மௌலிச் சேரலனார் போற்றும் அமைச்சர்க்கு அஃது இயம்பி“நன்நாள் கொண்டு பெரும்பயணம் எழுக” என்று நலம் சாற்றமின் ஆர் அயில்வேல் குலமறவர் வென்றி நிலவும் சிலை வீரர்அந்நாட்டு உள்ளார் அடைய நிரந்து அணைந்தார் வஞ்சி அகல் நகர்வாய்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
47
இட்ட நல்நாள் ஓரையினில் இறைவர் திருவஞ்சைக் களத்துமட்டுவிரிபூங் கொன்றையினார் தம்மை வலம் கொண்டு இறைஞ்சிப் போய்பட்டநுதல் வெங் களியானைப் பிடர்மேல் கொண்டு பனி மதியம்தொட்ட கொடிமாளிகை மூதூர் கடந்தார் உதியர் தோன்றலார்.
சொற்பிரிப்பு
இட்ட நன்நாள் ஓரையினில் இறைவர் திருஅஞ்சைக் களத்துமட்டு விரி பூம் கொன்றையினார் தம்மை வலம்கொண்டு இறைஞ்சிப் போய்ப்பட்ட நுதல் வெம்களி யானைப் பிடர்மேல் கொண்டு பனி மதியம்தொட்ட கொடி மாளிகை மூதூர் கடந்தார் உதியர் தோன்றலார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
48
யானை அணிகள் பரந்து வழி எங்கும் நிரந்து செல்லுவனமான மலை நாட்டினில் மலிந்த மலைகள் உடன் போதுவ போன்றசேனைவீரர் புடைபரந்து செல்வது அங்கண் மலை சூழ்ந்தகானம் அடைய உடன் படர்வ போலும் காட்சி மேவினதால்.
சொற்பிரிப்பு
யானை அணிகள் பரந்து வழி எங்கும் நிரந்து செல்லுவன,மான மலைநாட்டினில் மலிந்த மலைகள் உடன் போதுவ போன்ற;சேனை வீரர் புடைபரந்து செல்வது அங்கண் மலைசூழ்ந்தகானம் அடைய உடன் படர்வ போலும் காட்சி மேவினதால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
49
புரவித் திரள்கள் ஆயோகப் பொலிவின் அசைவில் போதுவனஅரவச் சேனைக் கடல் தரங்கம் மடுத்து மேல் மேல் அடர்வன போல்விரவிப் பரந்து சென்றனவால் மிசையும் அவலும் ஒன்றாகநிரவிப் பரந்த நெடுஞ் சேனை நேமி நெளியச் சென்றனவால்.
சொற்பிரிப்பு
புரவித் திரள்கள் ஆயோகப் பொலிவின் அசைவில் போதுவனஅரவச் சேனைக் கடல் தரங்கம் மடுத்து மேன்மேல் அடர்வன போல்விரவிப் பரந்து சென்றனவால்; மிசையும் அவலும் ஒன்று ஆகநிரவிப் பரந்த நெடும் சேனை நேமி நெளியச் சென்றனவால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
50
அந் நாட்டு எல்லை கடந்து அணைய அமைச்சர்க்கு எல்லாம் விடையருளிமின்னார் மணிப்பூண் மன்னவனார் வேண்டுவாரை உடன்கொண்டுகொன்னார் அயில் வேல் மறவர் பயில் கொங்கர் நாடு கடந்தருளிபொன் நாட்டவரும் அணைந்து ஆடும் பொன்னி நீர் நாட்டிடைப் போவார்.
சொற்பிரிப்பு
அந்நாட்டு எல்லை கடந்தணைய அமைச்சர்க்கு எல்லாம் விடை அருளிமின்ஆர் மணிப்பூண் மன்னவனார் வேண்டுவாரை உடன்கொண்டுகொன்னார் அயில்வேல் மறவர் பயில் கொங்கர் நாடு கடந்தருளிப்பொன் நாட்டவரும் அணைந்து ஆடும் பொன்னி நீர் நாட்டிடைப் போவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
51
சென்ற திசையில் சிவன் அடியார் சிறப்பினோடும் எதிர்கொள்ளக்குன்றும் கானும் உடைக் குறும்பர் இடங்கள் தோறும் குறைவறுப்பத்துன்று முரம்பும் கான் ஆறும் துறுகற் சுரமும் பல கடந்துவென்றி விடையாரிடம் பலவும் மேவிப் பணிந்து செல்கின்றார்.
சொற்பிரிப்பு
சென்ற திசையில் சிவன் அடியார் சிறப்பினோடும் எதிர்கொள்ளக்குன்றும் கானும் உடைக் குறும்பர் இடங்கள் தோறும் குறைவறுப்பத்துன்று முரம்பும் கான் யாறும் துறுகல் சுரமும் பல கடந்துவென்றி விடையார் இடம் பலவும் மேவிப் பணிந்து செல்கின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
52
பொருவில் பொன்னித் திருநதியின் கரை வந்து எய்திப் புனித நீர்மருவும் தீர்த்தம் மகிழ்ந்து ஆடி மருங்கு வடபால் கரை ஏறித்திருவில் பொலியும் திருப்புலியூர் செம்பொன் மன்றுள் நடம் போற்றஉருகும் மனத்தினுடன் சென்றார் ஒழியா அன்பின் வழி வந்தார்.
சொற்பிரிப்பு
பொரு இல் பொன்னித் திருநதியின் கரைவந்து எய்திப் புனித நீர்மருவும் தீர்த்தம் மகிழ்ந்து ஆடி மருங்கு வடபால் கரை ஏறித்திருவில் பொலியும் திருப்புலியூர்ச் செம்பொன் மன்றுள் நடம் போற்றஉருகு மனத்தின் உடன்சென்றார் ஒழியா அன்பின் வழி வந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
53
வந்து தில்லை மூதூரின் எல்லை வணங்கி மகிழ்ச்சியினால்அந்தணாளர் தொண்டர் குழாம் அணைந்த போதில் எதிர் வணங்கிச்சந்த விரைப் பூந்திருவீதி இறைஞ்சித் தலைமேல் கரம் முகிழ்ப்பச்சிந்தை மகிழ எழு நிலைக் கோபுரத்தை அணைந்தார் சேரலனார்.
சொற்பிரிப்பு
வந்து தில்லை மூதூரின் எல்லை வணங்கி மகிழ்ச்சியினால்அந்தணாளர், தொண்டர் குழாம் அணைந்த போதில் எதிர் வணங்கிச்சந்த விரைப்பூம் திருவீதி இறைஞ்சித் தலைமேல் கரம் முகிழ்ப்பச்சிந்தை மகிழ எழுநிலைக் கோபுரத்தை அணைந்தார் சேரலனார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
54
நிலவும் பெருமை எழுநிலைக் கோபுரத்தின் முன்னர் நிலத்து இறைஞ்சிமலரும் கண்ணீர்த் துளி ததும்பப் புகுந்து மணி மாளிகை வலம் கொண்டுஉலகு விளக்கும் திருப் பேரம்பலத்தை வணங்கி உள் அணைந்தார்அலகில் அண்டம் அளித்தவர் நின்றாடும் திருச்சிற்றம்பலம் முன்.
சொற்பிரிப்பு
நிலவும் பெருமை எழுநிலைக் கோபுரத்தின் முன்னர் நிலத்து இறைஞ்சிமலரும் கண்ணீர்த் துளி ததும்பப் புகுந்து மணிமாளிகை வலம்கொண்டுஉலகு விளக்கும் திருப்பேரம்பலத்தை வணங்கி உள் அணைந்தார்உலகில் அண்டம் அளித்தவாநின்று ஆடும் திருச்சிற்றம்பல முன்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
55
அளவில் இன்பப் பெரும் கூத்தர் ஆட எடுத்த கழல் காட்டஉளமும் புலனும் ஒருவழிச் சென்று உருகப் போற்றி உய்கின்றார்களனில் விடம் வைத்து அளித்த அமுது அன்றி மன்றில் கழல் வைத்துவளரும் திருக்கூத்து அமுது உலகுக்கு அளித்த கருணை வழுத்தினார்.
சொற்பிரிப்பு
அளவில் இன்பப் பெருங்கூத்தர் ஆட எடுத்த கழல் காட்டஉளமும் புலனும் ஒருவழிச் சென்று உருகப் போற்றி உய்கின்றார்களனில் விடம் வைத்து அளித்த அமுது அன்றி மன்றில் கழல் வைத்துவளரும் திருக்கூத்து அமுது உலகுக்கு அளித்த கருணை வழுத்தினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
56
ஆரா ஆசை ஆனந்தக் கடலுள் திளைத்தே அமர்ந்து அருளால்சீரார் வண்ணப் பொன் வண்ணத் திரு அந்தாதி திருப்படிக்கீழ்ப்பாரா தரிக்க எடுத்து ஏத்திப் பணிந்தார் பருவ மழை பொழியும்காரால் நிகர்க்க அரிய கொடைக் கையார் கழற்றிவார் தாம்.
சொற்பிரிப்பு
ஆரா ஆசை ஆனந்தக் கடல் உள் திளைத்தே அமர்ந்து அருளால்சீரார் வண்ணப் பொன்வண்ணத் திருஅந்தாதி திருப்படிக் கீழ்ப்பார் ஆதரிக்க எடுத்து ஏத்திப் பணிந்தார், பருவ மழை பொழியும்காரால் நிகர்க்க அரியகொடைக் கையார் கழறிற்று அறிவார் தாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
57
தம்பிரானார்க்கு எதிர் நின்று தமிழ்ச்சொல் மாலை கேட்பிக்கஉம்பர் வாழ நடம் ஆடும் ஒருவர் அதற்குப் பரிசில் எனச்செம்பொன் மணி மன்றினில் எடுத்த செய்ய பாதத் திருச்சிலம்பின்இம்பர் நீட எழுந்த ஒலிதாமும் எதிரே கேட்பித்தார்.
சொற்பிரிப்பு
தம்பிரானார்க்கு எதிர் நின்று தமிழ்ச்சொன் மாலை கேட்பிக்கஉம்பர் வாழ நடம் ஆடும் ஒருவர் அதற்குப் பரிசில் எனச்செம்பொன் மணிமன்றினில் எடுத்த செய்ய பாதத் திருச்சிலம்பின்இம்பர் நீட எழுந்த ஒலி தாமும் எதிரே கேட்பித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
58
ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார் அளவில் இன்ப ஆனந்தம்கூடப் பெற்ற பெரும் பேற்றின் கொள்கை வாய்ப்பக் கும்பிடுவார்நீடப் பணியும் காலம் எலாம் நின்று தொழுது புறம் போந்துமாடத் திரு மாளிகை வீதி வணங்கிப் புறத்து வைகினார்.
சொற்பிரிப்பு
ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார் அளவில் இன்ப ஆனந்தம்கூடப் பெற்ற பெரும்பேற்றின் கொள்கை வாய்ப்பக் கும்பிடுவார்நீடப் பணியும் காலம் எலாம் நின்று தொழுது புறம்போந்துமாடத் திருமாளிகை வீதி வணங்கிப், புறத்து வைகினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
59
பரவும் தில்லை வட்டத்துப் பயில்வார் பைம் பொன் அம்பலத்துள்அரவும் புனலும் சடை ஆட ஆடுவார் கூத்து ஆராமைவிரவும் காதல் மிக்கு ஓங்க வேதம் படியும் திருப்படிக்கீழ்இரவும் பகலும் பணிந்து ஏத்தி இன்பம் சிறக்கும் அந் நாளில்.
சொற்பிரிப்பு
பரவும் தில்லை வட்டத்துப் பயில்வார் பைம்பொன் அம்பலத்துள்அரவும் புனலும் சடை ஆட ஆடுவார் கூத்து ஆராமைவிரவும் காதல் மிக்கு ஓங்க வேதம் படியும் திருப்படிக் கீழ்இரவும் பகலும் பணிந்து ஏத்தி இன்பம் சிறக்கும் அந்நாளில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
60
ஆடும் பெருமான் பாடல் கேட்டருளித் தாழ்த்த படி தமக்குக்கூடும் பரிசால் முன்பு அருளிச் செய்த நாவலூர்க் கோவைநீடும் பெரும் காதலில் காண நிறைந்த நினைவு நிரம்பாமல்தேடும் பாதர் அருளினால் திருவாரூர் மேல் செல எழுந்தார்.
சொற்பிரிப்பு
ஆடும் பெருமான் பாடல் கேட்டு அருளித் தாழ்த்த படி தமக்குக்கூடும் பரிசால் முன்பு அருளிச் செய்த நாவலூர்க் கோவைநீடும் பெரும்காதலில் காண நிறைந்த நினைவு நிரம்ப, மால்தேடும் பாதர் அருளினால் திருஆரூர் மேல் செல எழுந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
61
அறிவின் எல்லை ஆய திருத்தில்லை எல்லை அமர்ந்து இறைஞ்சிப்பிறிவிலாத திருவடியைப் பெருகும் உள்ளத்தினில் பெற்றுசெறியும் ஞான போனகர் வந்து அருளும் புகலி சென்று இறைஞ்சிமறி சேர் கரத்தார் கோயில் பல வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார்.
சொற்பிரிப்பு
அறிவின் எல்லை ஆய திருத்தில்லை எல்லை அமர்ந்து இறைஞ்சிப்பிறிவிலாத திருவடியைப் பெருகும் உள்ளத்தினில் பெற்றுச்செறியும் ஞான போனகர் வந்து அருளும் புகலி சென்றிறைஞ்சிமறிசேர் கரத்தார் கோயில் பல வணங்கி மகிழ்ந்து வழிக் கொள்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
62
வழியில் குழியில் செழுவயலின் மதகின் மலர் வாவிகளின் மடுச்சுழியில் தரளம் திரை சொரியும் துறை நீர்ப் பொன்னி கடந்து ஏறிவிழியில் திகழும் திருநுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சி உகக்கழிவில் பெரும் வெள்ளமும் கொள்ளாக் கழனி ஆரூர் கண்ணுற்றார்.
சொற்பிரிப்பு
வழியில், குழியில் செழுவயலின், மதகின், மலர் வாவிகளின், மடுச்சுழியில் தரளம் திரைசொரியும் துறைநீர்ப் பொன்னி கடந்து ஏறிவிழியில் திகழும் திருநுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சி யுகக்கழிவில் பெருவெள்ளமும் கொள்ளாக் கழனி ஆரூர் கண் உற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
63
நம்பி தாமும் அந் நாள் போய் நாகைக் காரோணம் பாடிஅம் பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடை சாந்தம் அடல் பரிமாபைம் பொன் சுரிகை முதலான பெற்று மற்றும் பல பதியில்தம்பிரானைப் பணிந்து ஏத்தித் திருவாரூரில் சார்ந்து இருந்தார்.
சொற்பிரிப்பு
நம்பி தாமும் அந்நாள் போய் நாகைக் காரோணம் பாடிஅம்பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடை சாந்தம் அடல் பரிமாபைம்பொன் சுரிகை முதலான பெற்று மற்றும் பல பதியில்தம்பிரானைப் பணிந்து ஏத்தித் திருஆரூரில் சார்ந்து இருந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
64
வந்து சேரர் பெருமானார் மன்னும் திருவாரூர் எய்தஅந்தணாளர் பெருமானும் அரசர் பெருமான் வரப்பெற்றுச்சிந்தை மகிழ எதிர் கொண்டு சென்று கிடைத்தார் சேரலனார்சந்த விரைத்தார் வன்தொண்டர் முன்பு விருப்பினுடன் தாழ்ந்தார்.
சொற்பிரிப்பு
வந்து சேரர் பெருமானார் மன்னும் திருஆரூர் எய்தஅந்தணாளர் பெருமானும் அரசர் பெருமான் வரப்பெற்றுச்சிந்தை மகிழ எதிர்கொண்டு சென்று கிடைத்தார்; சேரலனார்சந்த விரைத்தார் வன்தொண்டர் முன்பு விருப்பினுடன் தாழ்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
65
முன்பு பணிந்த பெருமாளைத் தாமும் பணிந்து முகந்து எடுத்தேஅன்பு பெருகத் தழுவ விரைந்து அவரும் ஆர்வத்தொடு தழுவஇன்ப வெள்ளத்திடை நீந்தி ஏற மாட்டாதலைவார் போல்என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என இசைந்தார்.
சொற்பிரிப்பு
முன்பு பணிந்த பெருமாளைத் தாமும் பணிந்து முகந்து எடுத்தேஅன்பு பெருகத் தழுவ விரைந்து அவரும் ஆர்வத்தொடு தழுவஇன்ப வெள்ளத்து இடைநீந்தி ஏற மாட்டாது அலைவார் போல்என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என இசைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
66
ஆன நிலைமை கண்ட திருத்தொண்டர் அளவில் மகிழ்வு எய்தமானச் சேரர் பெருமானார் தாமும் வன்தொண்டரும் கலந்தபான்மை நண்பால் சேரமான் தோழர் என்று பார் பரவும்மேன்மை நாமம் முனைப்பாடி வேந்தர்க்கு ஆகி விளங்கியதால்.
சொற்பிரிப்பு
ஆன நிலைமை கண்ட திருத்தொண்டர் அளவில் மகிழ்வு எய்தமானச் சேரர் பெருமானார் தாமும் வன்தொண்டரும் கலந்தபான்மை நண்பால் “சேரமான் தோழர்” என்று பார் பரவும்மேன்மை நாமம் முனைப்பாடி வேந்தர்க்கு ஆகி விளங்கியதால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
67
ஒருவர் ஒருவரில் கலந்த உணர்வால் இன்ப மொழி உரைத்துமருவ இனியார் பால் செய்வது என்னாம் என்னும் மகிழ்ச்சியினால்பருவ மழைச் செங்கை பற்றிக் கொண்டு பரமர் தாள் பணியத்தெருவு நீங்கிக் கோயிலினுள் புகுந்தார் சேரமான் தோழர்.
சொற்பிரிப்பு
ஒருவர் ஒருவரில் கலந்த உணர்வால் இன்ப மொழி உரைத்து“மருவ இனியார் பால்செய்வது என்னவாம்?” என்னும் மகிழ்ச்சியினால்பருவ மழைச் செங்கைப் பற்றிக் கொண்டு பரமர் தாள் பணியத்தெருவு நீங்கிக் கோயிலின் உள் புகுந்தார் சேரமான் தோழர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
68
சென்று தேவாசிரியனை முன் இறைஞ்சித் திருமாளிகை வலம் கொண்டுஒன்றும் உள்ளத்தொடும் புகுவார் உடைய நம்பி முன் ஆகநின்று தொழுது கண் அருவி வீழ நிலத்தின் மிசை வீழ்ந்தேஎன்றும் இனிய தம் பெருமான் பாதம் இறைஞ்சி ஏத்தினார்.
சொற்பிரிப்பு
சென்று தேவாசிரியனை முன் இறைஞ்சித் திருமாளிகை வலம்கொண்டுஒன்றும் உள்ளத்தொடும் புகுவார் உடைய நம்பி முன் ஆகநின்று தொழுது கண் அருவி வீழ, நிலத்தின் மிசை வீழ்ந்தே,என்றும் இனிய தம்பெருமான் பாதம் இறைஞ்சி ஏத்தினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
69
தேவர் முனிவர் வந்து இறைஞ்சும் தெய்வப் பெருமாள் கழல் வணங்கிமூவர் தமக்கு முதல் ஆகும் அவரைத் திருமும் மணிக் கோவைநாவலூரர் தம் முன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார்தாவில் பெருமைச் சேரலனார் தம்பிரானார் தாம் கொண்டார்.
சொற்பிரிப்பு
தேவர் முனிவர் வந்து இறைஞ்சும் தெய்வப் பெருமாள் கழல் வணங்கிமூவர் தமக்கு முதல் ஆகும் அவரைத் திருமும்மணிக் கோவைநாவலூரர் தம் முன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார்தாவில் பெருமைச் சேரலனார்; தம்பிரானார் தாம் கொண்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
70
அங்கண் அருள் பெற்று எழுவாரைக் கொண்டு புறம் போந்து ஆரூரர்நங்கை பரவையார் திருமாளிகையில் நண்ண நன்னுதலார்பொங்கு விளக்கு நிறை குடமும் பூ மாலைகளும் புகை அகிலும்எங்கும் மடவார் எடுத்து ஏத்த அணைந்து தாமும் எதிர் கொண்டார்.
சொற்பிரிப்பு
அங்கண் அருள்பெற்று எழுவாரைக் கொண்டு புறம்போந்து ஆரூரர்நங்கை பரவையார் திருமாளிகையில் நண்ண நன்நுதலார்பொங்கு விளக்கும் நிறைகுடமும் பூமாலைகளும் புகை அகிலும்எங்கும் மடவார் எடுத்து ஏந்த அணைந்து தாமும் எதிர்கொண்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
71
சோதி மணி மாளிகையின் கண் சுடரும் பசும் பொற்கால் அமளிமீது பெருமாள் தமை இருத்தி நம்பி மேவி உடன் இருப்பக்கோதில் குணத்துப் பரவையார் கொழுநனார்க்கும் தோழர்க்கும்நீதி வழுவா ஒழுக்கத்து நிறை பூசனைகள் முறை அளித்தார்.
சொற்பிரிப்பு
சோதி மணி மாளிகையின்கண் சுடரும் பசும்பொன் கால் அமளிமீது பெருமாள் தமை இருத்தி நம்பி மேவி உடன் இருப்பக்கோதில் குணத்துப் பரவையார் கொழுநனார்க்கும் தோழர்க்கும்நீதி வழுவா ஒழுக்கத்து நிறை பூசனைகள் முறை அளித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
72
தாண்டு புரவிச் சேரர் குலப் பெருமாள் தமக்குத் திரு அமுதுதூண்டும் சோதி விளக்கு அனையார் அமைக்கத் துணைவர் சொல்லுதலும்வேண்டும் பரிசு வெவ்வேறு விதத்துக் கறியும் போனகமும்ஈண்டச் சமைப்பித்து உடன் வந்தார்க்கு எல்லாம் இயல்பின் விருந்து அமைத்தார்.
சொற்பிரிப்பு
தாண்டும் புரவிச் சேரர் குலப் பெருமாள் தமக்குத் திருஅமுதுதூண்டும் சோதி விளக்கனையார் அமைக்கத் துணைவர் சொல்லுதலும்வேண்டும் பரிசு வெவ்வேறு விதத்துக் கறியும் போனகமும்ஈண்டச் சமைப்பித்து உடன்வந்தார்க்கு எல்லாம் இயல்பின் விருந்து அமைத்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
73
அரசர்க்கு அமைத்த சிறப்பினும் மேல் அடியார்க்கு ஏற்கும் படியாகவிரவிப் பெருகும் அன்பினுடன் விரும்பும் அமுது சமைத்ததன்பின்புரசைக் களிற்றுச் சேரலனார் புடை சூழ்ந்து அவரோடு அமுது செயப்பரவைப் பிறந்த திருவனைய பரவையார் வந்து அறிவித்தார்.
சொற்பிரிப்பு
அரசர்க்கு அமைத்த சிறப்பினும் மேல் அடியார்க்கு ஏற்கும் படி ஆகவிரவிப் பெருகும் அன்பின் உடன் விரும்பும் அமுது சமைத்ததன் பின்புரசைக் களிற்றுச் சேரலனார் புடைசூழ்ந்து அவரோடு அமுது செயப்பரவைப் பிறந்த திருஅனைய பரவையார் வந்து அறிவித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
74
சேரர் பெருமான் எழுந்தருளி அமுத செய்யச் செய்தவத்தால்தாரின் மலிபூம் குழல் மடவாய் தாழாது அமுது செய்வி எனப்பாரின் மலிசீர் வன்தொண்டர் அருளிச் செய்யப் பரிகலங்கள்ஏரின் விளங்கத் திருத்திக்கால் இரண்டில் படியா ஏற்றுதலும்.
சொற்பிரிப்பு
“சேரர் பெருமான் எழுந்தருளி அமுது செய்யச் செய் தவத்தால்தாரின் மலி பூங்குழல் மடவாய்! தாழாது அமுது செய்வி” எனப்பாரின் மலி சீர் வன்தொண்டர் அருளிச் செய்யப் பரிகலங்கள்ஏரின் விளங்கத் திருக்கரத்தில் இரண்டு படியா ஏற்றுதலும்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
75
ஆண்ட நம்பி பெருமாளை உடனே அமுது செய்தருளவேண்டும் என்ன ஆங்கு அவரும் விரைந்து வணங்கி வெருவுறலும்நீண்ட தடக்கை பிடித்தருளி மீண்டும் நேரே குறை கொள்ளஈண்ட அமுது செய்வதனுக்கு இசைந்தார் பொறையர்க்கு இறையவனார்.
சொற்பிரிப்பு
ஆண்ட நம்பி பெருமாளை “உடனே அமுது செய்தருளவேண்டும்” என்ன ஆங்கு அவரும் விரைந்து வணங்கி வெருவுறலும்நீண்ட தடக்கை பிடித்தருளி மீண்டும் நேரே குறைகொள்ளஈண்ட அமுது செய்வதனுக்கு இசைந்தார் பொறையர்க்கு இறையவனார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
76
ஒக்க அமுது செய்தருள உயர்ந்த தவத்துப் பரவையார்மிக்க விருப்பால் அமுது செய்வித்தருளி மேவும் பரிசனங்கள்தக்க வகையால் அறுசுவையும் தாம் வேண்டியவாறு இனிது அருந்தத்தொக்க மகிழ்ச்சி களி சிறப்பத் தூய விருந்தின் கடன் முடித்தார்.
சொற்பிரிப்பு
ஒக்க அமுது செய்தருள உயர்ந்த தவத்துப் பரவையார்மிக்க விருப்பால் அமுது செய்வித்தருளி மேவும் பரிசனங்கள்தக்க வகையால் அறுசுவையும் தாம் வேண்டியவாறு இனிது அருந்தத்தொக்க மகிழ்ச்சி களிசிறப்பத் தூய விருந்தின் கடன் முடித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
77
பனிநீர் விரவு சந்தனத்தின் பசுங்கர்ப்பூர விரைக் கலவைவனிதையவர்கள் சமைத்து எடுப்பக் கொடுத்து மகிழ்மான் மதச் சாந்தும்புனித நறும் பூ மாலைகளும் போற்றிக் கொடுத்துப் பொற்கொடியார்இனிய பஞ்ச வாசமுடன் அடைக்காய் அமுதும் ஏந்தினார்.
சொற்பிரிப்பு
பனிநீர் விரவு சந்தனத்தின் பசுங்கர்ப்பூர விரைக் கலவைவனிதை அவர்கள் சமைத்து எடுப்பக் கொடுத்து மகிழ்மான் மதச்சாந்தும்புனித நறும் பூமாலைகளும் போற்றிக் கொடுத்துப் பொன்கொடியார்இனிய பஞ்ச வாசம் உடன் அடைக்காய் அமுதும் ஏந்தினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
78
ஆய சிறப்பில் பூசனைகள் அளித்த எல்லாம் அமர்ந்து அருளித்தூய நீறு தங்கள் திருமுடியில் வாங்கித் தொழுது அணிந்துமேய விருப்பினுடன் இருப்பக் கழறிற்றறிவார் மெய்த்தொண்டின்சேய நீர்மை அடைந்தாராய் நம்பி செம்பொற் கழல் பணிந்தார்.
சொற்பிரிப்பு
ஆய சிறப்பில் பூசனைகள் அளித்த எல்லாம் அமர்ந்தருளித்தூய நீறு தங்கள் திருமுடியில் வாங்கித் தொழுது அணிந்துமேய விருப்பின் உடன் இருப்பக் கழறிற்று அறிவார் மெய்த்தொண்டின்சேய நீர்மை அடைந்தாராய் நம்பி செம்பொன் கழல் பணிந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
79
மலை நாட்டு அரசர் பெருமானார் வணங்க வணங்கி எதிர் தழுவிக்கலை நாள் பெருகு மதி முகத்துப் பரவையார் தம் கணவனார்சிலை நாட்டிய வெல் கொடியாரைச் சேரத் தந்தார் எனக் கங்கைஅலை நாள் கொன்றை முடிச் சடையார் அருளே போற்றி உடன் அமர்ந்தார்.
சொற்பிரிப்பு
மலைநாட்டு அரசர் பெருமானார் வணங்க வணங்கி எதிர் தழுவிக்கலைநாள் பெருகு மதி முகத்துப் பரவையார் தம் கணவனார்சிலை நாட்டிய வெல் கொடியாரைச் சேரத் தந்தார் எனக் கங்கைஅலைநாள் கொன்றை முடிச் சடையார் அருளே போற்றி உடன் அமர்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
80
செல்வத் திருவாரூர் மேவும் செம்பொற் புற்றில் இனிது அமர்ந்தவில் வெற்பு உடையார் கழல் வணங்கி வீதி விடங்கப் பெருமானைமல்லல் பவனி சேவித்து வாழ்ந்து நாளும் மனம் மகிழ்ந்துசொல் வித்தகர் தாம் இருவர்களும் தொடர்ந்த காதலுடன் சிறந்தார்.
சொற்பிரிப்பு
செல்வத் திருஆரூர் மேவும் செம்பொன் புற்றில் இனிது அமர்ந்தவில்வெற்பு உடையார் கழல் வணங்கி வீதி விடங்கப் பெருமானைமல்லல் பவனி சேவித்து, வாழ்ந்து, நாளும், மனம் மகிழ்ந்துசொல் வித்தகர் தாம் இருவர்களும் தொடர்ந்த காதலுடன் சிறந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
81
இவ்வாறு ஒழுகும் நாளின் கண் இலங்கு மணிப்பூண் வன்தொண்டர்மைவாழ் களத்து மறையவனார் மருவும் இடங்கள் பல வணங்கிச்செய்வார் கன்னித் தமிழ் நாட்டுத் திருமா மதுரை முதலானமொய்வார் சடையார் மூதூர்கள் இறைஞ்ச முறைமையால் நினைந்தார்.
சொற்பிரிப்பு
இவ்வாறு ஒழுகும் நாளின்கண் இலங்கு மணிப்பூண் வன்தொண்டர்மைவாழ் களத்து மறையவனார் மருவும் இடங்கள் பல வணங்கிச்செய்வார் கன்னித் தமிழ்நாட்டுத் திருமா மதுரை முதலானமொய்வார் சடையார் மூதூர்கள் இறைஞ்ச முறைமையால் நினைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
82
சேரர் பிரானும் ஆரூரர் தம்மைப் பிரியாச் சிறப்பாலும்வாரம் பெருகத் தமக்கு அன்று மதுரை ஆலவாய் அமர்ந்தவீரர் அளித்த திருமுகத்தால் விரும்பும் அன்பின் வணங்குதற்குச்சார எழுந்த குறிப்பாலும் தாமும் உடனே செலத் துணிந்தார்.
சொற்பிரிப்பு
சேரர் பிரானும் ஆரூரர் தம்மைப் பிரியாச் சிறப்பாலும்வாரம் பெருகத் தமக்கு அன்று மதுரை ஆலவாய் அமர்ந்தவீரர் அளித்த திருமுகத்தால் விரும்பும் அன்பின் வணங்குதற்குச்சார எழுந்த குறிப்பாலும் தாமும் உடனே செலத் துணிந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
83
இருவர் திரு உள்ளமும் இசைந்த பொழுதில் எழுந்து திருவாரூர்ஒருவர் மலர்த்தாள் புக்கு இறைஞ்சி உடன்பாட்டு அருளால் போந்தருளிமருவும் உரிமைப் பெரும் சுற்றம் வரம்பில் பணிகள் வாகனங்கள்பொருவில் பண்டாரங் கொண்டு போதுவார்கள் உடன் போத.
சொற்பிரிப்பு
இருவர் திருஉள்ளமும் இசைந்த பொழுதில், எழுந்து, திருஆரூர்ஒருவர் மலர்த்தாள் புக்கு இறைஞ்சி உடன்பாட்டு அருளால் போந்தருளிமருவும் உரிமைப் பெரும் சுற்றம் வரம்பில் பணிகள் வாகனங்கள்பொரு இல் பண்டாரம் கொண்டு போதுவார்கள் உடன் போத.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
84
சேவித்து அணையும் பரிசனங்கள் சூழத் திருவாரூர் இறைஞ்சிக்காவில் பயிலும் புறம்பணையைக் கடந்து போந்து கீழ்வேளூர்மேவிப் பரமர் கழல் வணங்கிப் போந்து வேலைக் கழிக் கானல்பூவில் திகழும் பொழில் நாகை புகுந்து காரோணம் பணிந்தார்.
சொற்பிரிப்பு
சேவித்து அணையும் பரிசனங்கள் சூழத் திருஆரூர் இறைஞ்சிக்காவில் பயிலும் புறம்பணையைக் கடந்து போந்து கீழ்வேளூர்மேவிப், பரமர் கழல் வணங்கிப் போந்து, வேலைக் கழிக்கானல்பூவில் திகழும் பொழில் நாகை புகுந்து காரோணம் பணிந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
85
திருக்காரோணச் சிவக் கொழுந்தைச் சென்று பணிந்து சிந்தையினைஉருக்கார்வச் செம்தமிழ் மாலை சாத்திச் சில நாள் உறைந்து போய்பெருக்காறு உலவு சடைமுடியார் இடங்கள் பிறவும் பணிந்து ஏத்திஅருள் காரணர் தம் திருமறைக்காடு அணைந்தார் சேரர் ஆரூரர்.
சொற்பிரிப்பு
திருக்காரோணச் சிவக் கொழுந்தைச் சென்று பணிந்து சிந்தையினைஉருக்கு ஆர்வச் செந்தமிழ் மாலை சாத்திச் சிலநாள் உறைந்து போய்ப்பெருக்கு ஆறு உலவு சடை முடியார் இடங்கள் பிறவும் பணிந்து ஏத்திஅருள்காரணர் தம் திருமறைக்காடு அணைந்தார் சேரர் ஆரூரர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
86
முந்நீர் வலங்கொள் மறைக்காட்டு முதல்வர் கோயில் சென்று இறைஞ்சிச்செந்நீர் வாய்மைத் திருநாவுக்கரசும் புகலிச் சிவக் கன்றும்அந்நேர் திறக்க அடைக்க எனப்பாடும் திருவாயிலை அணைந்துநன்னீர் பொழியும் விழியினராய் நாயன் மாரை நினைந்து இறைஞ்சி.
சொற்பிரிப்பு
முந்நீர் வலம்கொள் மறைக்காட்டு முதல்வர் கோயில் சென்று இறைஞ்சிச்செந்நீர் வாய்மைத் திருநாவுக்கரசும் புகலிச் சிவக்கன்றும்அந்நேர் “திறக்க அடைக்க” எனப் பாடும் திருவாயிலை அணைந்துநன்னீர் பொழியும் விழியினராய் நாயன்மாரை நினைந்து இறைஞ்சி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
87
நிறைந்த மறைகள் அர்ச்சித்த நீடு மறைக்காட்டு அருமணியைஇறைஞ்சி வீழ்ந்து பணிந்து எழுந்து போற்றி யாழைப் பழித்து என்னும்அறைந்த பதிகத் தமிழ் மாலை நம்பி சாத்த அருட்சேரர்சிறந்த அந்தாதியில் சிறப்பித்தனவே ஓதித் திளைத்து எழுந்தார்.
சொற்பிரிப்பு
நிறைந்த மறைகள் அர்ச்சித்த நீடு மறைக்காட்டு அருமணியைஇறைஞ்சி, வீழ்ந்து, பணிந்து எழுந்து, போற்றி, “யாழைப் பழித்து” என்னும்அறைந்த பதிகத் தமிழ்மாலை நம்பி சாத்த அருள்சேரர்சிறந்த அந்தாதியில் சிறப்பித்தனவே ஓதித் திளைத்து எழுந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
88
எழுந்து பணிந்து புறத்து எய்தி இருவர் பெருந் தொண்டரும் சில நாள்செழுந்தண் பழனப் பதியதனுள் அமர்ந்து தென்பால் திரைக் கடல் நஞ்சுஅழுந்து மிடற்றார் அகத்தியான் பள்ளி இறைஞ்சி அவிர் மதியக்கொழுந்து வளர் செம் கடைக் குழகர் கோடிக் கோயில் குறுகினார்.
சொற்பிரிப்பு
எழுந்து பணிந்து புறத்து எய்தி இருவர் பெருந்தொண்டரும் சிலநாள்செழுந்தண் பழனப் பதி அதன் உள் அமர்ந்து தென்பால் திரைக்கடல் நஞ்சுஅழுந்து மிடற்றார் அகத்தியான் பள்ளி இறைஞ்சி, அவிர்மதியக்கொழுந்து வளர் செஞ்சடைக் குழகர் கோடிக் கோயில் குறுகினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
89
கோடிக் குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்து எங்கும்நாடிக் காணாது உள்புக்கு நம்பர் பாதம் தொழுது உள்ளம்வாடிக் கடிதாய்க் கடல் காற்று என்று எடுத்து மலர்க் கண்ணீர் வாரப்பாடிக் காடு காள் புணர்ந்த பரிசும் பதிகத்திடை வைத்தார்.
சொற்பிரிப்பு
கோடிக் குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்து எங்கும்நாடிக் காணாது உள் புக்கு நம்பர் பாதம் தொழுது உள்ளம்வாடிக் “கடிதாய்க் கடல் காற்று”என்று எடுத்து மலர்க்கண் நீர் வாரப்பாடிக் காடு காள் புணர்ந்த பரிசும் பதிகத்து இடை வைத்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
90
அங்கு வைகிப் பணிந்து அருளால் போவார் அகன் கோணாட்டு அரனார்தங்கும் இடங்கள் வணங்கிப் போய் பாண்டி நாடுதனைச் சார்ந்துதிங்கள் முடியார் திருப்புத்தூர் இறைஞ்சி போந்து சேண் விளங்கும்மங்குல் தவழும் மணிமாட மதுரை மூதூர் வந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
அங்கு வைகிப் பணிந்து அருளால் போவார் அகன் சோணாட்டு அரனார்தங்கும் இடங்கள் வணங்கிப்போய்ப் பாண்டி நாடுதனைச் சார்ந்துதிங்கள் முடியார் திருப்புத்தூர் இறைஞ்சிப் போந்து சேண் விளங்கும்மங்குல் தவழும் மணிமாட மதுரை மூதூர் வந்து அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
91
சேரமான் தோழரும் அச் சேரர் பிரானும் பணிப்பூண்ஆரமார்பரை மதுரை ஆலவாயினில் வணங்கவாரமா வந்து அணைய வழுதியார் மனக்காதல்கூர மாநகர் கோடித்து எதிர் கொண்டு கொடு புக்கார்.
சொற்பிரிப்பு
சேரமான் தோழரும் அச்சேரர் பிரானும் பணிப்பூண்ஆர மார்பரை மதுரைஆலவாயினில் வணங்கவாரமா வந்து அணைய வழுதியார் மனக்காதல்கூர மாநகர் கோடித்து எதிர்கொண்டு கொடுபுக்கார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
92
தென்னவர் கோன் மகளாரைத் திருவேட்டு முன்னரேதொன் மதுரை நகரின் கண் இனிது இருந்த சோழனார்அன்னவர்கள் உடன் கூட அணைய அவரும் கூடிமன்னு திரு ஆலவாய் மணிக் கோயில் வந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
தென்னவர் கோன் மகளாரைத் திருவேட்டு முன்னரேதொன் மதுரை நகரின்கண் இனிது இருந்த சோழனார்அன்னவர்கள் உடன்கூட அணைய அவரும் கூடிமன்னு திருஆலவாய் மணிக்கோயில் வந்தணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
93
திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சடையார் கோயில் வலம்வருவார் முன் வீழ்ந்து இறைஞ்சி வன்தொண்டர் வழித்தொண்டுதருவாரைப் போற்றி இசைத்துத் தாழ்ந்து எழுந்து வாழ்ந்த தமிழ்ப்பெரு வாய்மை மலர் புனைந்து பெரு மகிழ்ச்சி பிறங்கினார்.
சொற்பிரிப்பு
திருஆலவாய் அமர்ந்த செஞ்சடையார் கோயில் வலம்வருவார் முன் வீழ்ந்து இறைஞ்சி வன்தொண்டர் வழித்தொண்டுதருவாரைப் போற்றிசைத்துத் தாழ்ந்து எழுந்து வாழ்ந்த தமிழ்ப்பெருவாய்மை மலர் புனைந்து பெருமகிழ்ச்சி பிறங்கினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
94
படியேறு புகழ்ச் சேரர் பெருமானும் பார் மிசை வீழ்ந்துஅடியேனைப் பொருளாக அளித்த திருமுகக் கருணைமுடிவேது என்று அறிந்திலேன் என மொழிகள் தடுமாறக்கடியேறு கொன்றையார் முன் பரவிக் களி கூர்ந்தார்.
சொற்பிரிப்பு
படி ஏறு புகழ்ச்சேரர் பெருமானும் பார்மிசை வீழ்ந்து“அடியேனைப் பொருள் ஆக அளித்த திருமுகக் கருணைமுடிவு ஏது என்று அறிந்திலேன்” என மொழிகள் தடுமாறக்கடி ஏறு கொன்றையார் முன் பரவிக் களி கூர்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
95
செம்பியனார் உடன் செழியர் தாம் பணிந்து சேரர் உடன்நம்பியும் முன் புறத்து அணைய நண்ணிய பேர் உவகையால்உம்பர்பிரான் கோயிலின் இன்று உடன் கொண்டுபோய் இருவர்க்கும்பைம்பொன் மணி மாளிகையில் குறை அறுத்தார் பஞ்சவனார்.
சொற்பிரிப்பு
செம்பியனார் உடன் செழியர் தாம் பணிந்து சேரர் உடன்நம்பியும் முன் புறத்து அணைய நண்ணிய பேருவகையால்உம்பர் பிரான் கோயிலினின்று உடன் கொடுபோய் இருவர்க்கும்பைம்பொன்மணி மாளிகையில் குறைவு அறுத்தார் பஞ்சவனார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
96
உளம் மகிழக் கும்பிட்டு அங்கு உறையும் நாள் உதியர் உடன்கிளர் ஒளிப் பூண் வன் தொண்டர் தாம் இருந்த இடம் கெழுமிவளவனார் மீனவனார் வளம் பெருக மற்றவரோடுஅளவளாவிய விருப்பால் அமர்ந்து கலந்து இனிது இருந்தார்.
சொற்பிரிப்பு
உள மகிழக் கும்பிட்டு அங்கு உறையுநாள் உதியருடன்கிளர் ஒளிப்பூண் வன்தொண்டர் தாம் இருந்த இடம்கெழுமிவளவனார் மீனவனார் வளம் பெருக மற்றவரோடுஅளவளாவிய விருப்பால் அமர்ந்து கலந்து இனிது இருந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
97
அந் நாளில் மதுரை நகர் மருங்கரனார் அமர் பதிகள்பொன்னாரம் அணி மார்பில் புரவலர் மூவரும் போதச்செந்நாவின் முனைப்பாடித் திருநாடர் சென்று இறைஞ்சிச்சொன்மாலைகளும் சாத்தித் தொழத் திருப்பூவணத்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
அந்நாளில் மதுரை நகர் மருங்கு அரனார் அமர்பதிகள்பொன்ஆரம் அணிமார்பில் புரவலர் மூவரும் போதச்செந்நாவின் முனைப்பாடித் திருநாடர் சென்று இறைஞ்சிச்சொன்மாலைகளும் சாத்தித் தொழத் திருப்பூவணத்து அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
98
நீடு திருப் பூவணத்துக் அணித்தாக நேர் செல்லமாடு வரும் திருத்தொண்டர் மன்னிய அப் பதிகாட்டத்தேடு மறைக்கு அரியாரைத் திருவுடையார் என்று எடுத்துப்பாடி இசையில் பூவணம் மீதோ என்று பணிந்து அணைவார்.
சொற்பிரிப்பு
நீடு திருப்பூவணத்துக்கு அணித்து ஆக நேர் செல்லமாடுவரும் திருத்தொண்டர் மன்னிய அப்பதி காட்டத்தேடு மறைக்கு அரியாரைத் “திருஉடையார்” என்று எடுத்துப்பாடு இசையில் பூவணம் ஈதோ?” என்று பணிந்து அணைவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
99
சென்று திருப் பூவணத்துத் தேவர் பிரான் மகிழ் கோயில்முன்றில் வலம் கொண்டு இறைவர் முன் வீழ்ந்து பணிந்து எழுந்துநின்று பரவிப்பாடி நேர் நீங்கி உடன் பணிந்தவென்றி முடி வேந்தருடன் போந்து அங்கண் மேவினார்.
சொற்பிரிப்பு
சென்று திருப்பூவணத்துத் தேவர்பிரான் மகிழ் கோயில்முன்றில் வலம் கொண்டு இறைவர் முன் வீழ்ந்து பணிந்து எழுந்துநின்று பரவிப் பாடி நேர் நீங்கி உடன் பணிந்தவென்றி முடிவேந்தர் உடன் போந்து அங்கண் மேவினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
100
அப்பதியில் அமர்ந்து இறைஞ்சிச் சில நாளில் ஆரூரர்முப்பெரும் வேந்தர்களோடு முதன் மதுரை நகர் எய்திமெய்ப் பரிவில் திருவால வாயுடையார் விரை மலர்த்தாள்எப்பொழுதும் பணிந்து ஏத்தி இன்புற்று அங்கு அமர்கின்றார்.
சொற்பிரிப்பு
அப்பதியில் அமர்ந்து இறைஞ்சிச் சிலநாளில் ஆரூரர்முப்பெரு வேந்தர்களோடு முதல் மதுரை நகர் எய்திமெய்ப்பரிவில் திருஆலவாய் உடையார் விரைமலர்த்தாள்எப்பொழுதும் பணிந்து ஏத்தி இன்புற்று அங்கு அமர்கின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
101
செஞ்சடையார் திருவாப்பனூர் திருவேடகம் முதலாம்நஞ்சு அணியும் கண்டர் அவர் நயந்த பதி நண்ணியேஎஞ்சலிலாக் காதலினால் இனிது இறைஞ்சி மீண்டு அணைந்துமஞ்சணையும் மதில் மதுரை மாநகரில் மகிழ்ந்து இருந்தார்.
சொற்பிரிப்பு
செஞ்சடையார் திருஆப்பனூர் திருஏடகம் முதலாம்நஞ்சு அணியும் கண்டவர் அவர் நயந்த பதி நண்ணியேஎஞ்சல் இலாக் காதலினால் இனிது இறைஞ்சி மீண்டு அணைந்துமஞ்சு அணையும் மதில் மதுரை மாநகரில் மகிழ்ந்து இருந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
102
பரமர் திருப்பரம் குன்றில் சென்று பார்த்திபர் ஓடும்புரம் எரித்தார் கோயில் வலம் கொண்டு புகுந்து உள் இறைஞ்சிச்சிரமலிமாலைச் சடையார் திருவடிக்கீழ் ஆட்செய்யும்அருமை நினைந்து அஞ்சுதும் என்று ஆரூரர் பாடுவார்.
சொற்பிரிப்பு
பரமர் திருப்பரங்குன்றில் சென்று பார்த்திபரோடும்புரம் எரித்தார் கோயில் வலம் கொண்டு புகுந்து உள் இறைஞ்சிச்சிரமலி மாலைச்சடையார் திருவடிக் கீழ் ஆள்செய்யும்அருமை நினைந்து “அஞ்சுதும்” என்று ஆரூரர் பாடுவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
103
கோத்திட்டை என்று எடுத்துக் கோதில் திருப்பதிக இசைமூர்த்தியார் தமை வணங்கி முக்கோக்கள் உடன் முன்பேஏத்திய வண் தமிழ் மாலை இன் இசைப் பாடிப் பரவிசாத்தினார் சங்கரனார் தங்கு திருப்பரங்குன்றில்.
சொற்பிரிப்பு
“கோத்திட்டை” என்று எடுத்துக் கோதில் திருப்பதிக இசைமூர்த்தியார் தமை வணங்கி முக்கோக்கள் உடன்முன்பேஏத்திய வண் தமிழ்மாலை இன்னிசை பாடிப் பரவிச்சாத்தினார் சங்கரனார் தங்கும் திருப்பரங்குன்றில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
104
இறைவர் திருத்தொண்டு புரி அருமையினை இரு நிலத்துமுறை புரியும் முதல் வேந்தர் மூவர்களும் கேட்டு அஞ்சிமறை முந் நூல் மணி மார்பின் வன்தொண்டர் தமைப் பணிந்தார்நிறை தவத்தோர் அப்பாலும் நிருத்தர் பதி தொழ நினைந்தார்.
சொற்பிரிப்பு
இறைவர் திருத்தொண்டு புரி அருமையினை இருநிலத்துமுறைபுரியும் முதல்வேந்தர் மூவர்களும் கேட்டு அஞ்சிமறை முந்நூல் மணிமார்பின் வன்தொண்டர் தமைப் பணிந்தார்;நிறை தவத்தோர் அப்பாலும் நிருத்தர் பதி தொழ நினைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
105
அந் நாட்டுத் திருப்பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சமலைநன்னாட்டு வேந்தருடன் நம்பிதாம் எழுந்து அருளமின்னாட்டும் பல் மணிப்பூண் வேந்தர் இருவரும் மீள்வார்தென்னாட்டு வேண்டுவன செய்து அமைப்பார் தமை விடுத்தார்.
சொற்பிரிப்பு
அந்நாட்டுத் திருப்பதிகள் பலவும் அணைந்து இறைஞ்ச, மலைநன்நாட்டு வேந்தருடன் நம்பிதாம் எழுந்தருளமின் நாட்டும் பன்மணிப் பூண் வேந்தர் இருவரும் மீள்வார்தென்நாட்டு வேண்டுவன செய்து அமைப்பார் தமை விடுத்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
106
இரு பெரு வேந்தரும் இயல்பின் மீண்டதற் பின் எழுந்து அருளும்பொருவருஞ் சீர் வன்தொண்டர் புகழ்ச் சேரர் உடன் புனிதர்மருவிய தானம் பலவும் பணிந்து போய் மலைச்சாரல்குருமணிகள் வெயில் எறிக்கும் குற்றாலம் சென்று அடைந்தார்.
சொற்பிரிப்பு
இரு பெருவேந்தரும் இயல்பின் மீண்டதன் பின், எழுந்தருளும்பொருஅரும் சீர் வன்தொண்டர் புகழ்ச்சேரர் உடன், புனிதர்மருவிய தானம் பலவும் பணிந்து போய், மலைச்சாரல்குருமணிகள் வெயில் எறிக்கும் குற்றாலம் சென்று அடைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
107
குற்றாலத்து இனிது அமர்ந்த கூத்தர் குரை கழல் வணங்கிச்சொல்தாம மலர் புனைந்து குறும் பலாத் தொழுது இப்பால்முற்றா வெண்மதி முடியார் பதிபணிந்து மூவெயில்கள்செற்றார் மன்னிய செல்வத் திருநெல் வேலியை அணைந்தார்.
சொற்பிரிப்பு
குற்றாலத்து இனிது அமர்ந்த கூத்தர் குரைகழல் வணங்கிச்சொல் தாம மலர் புனைந்து குறும்பலாத் தொழுது இப்பால்முற்றா வெண்மதி முடியார் பதி பணிந்து மூஎயில்கள்செற்றார் மன்னிய செல்வத் திருநெல்வேலியை அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
108
நெல்வேலி நீற்று அழகர் தமைப் பணிந்து பாடி நிகழ்பல்வேறு பதி பிறவும் பணிந்து அன்பால் வந்து அணைந்தார்வில்வேடராய் வென்றி விசயன் எதிர் பன்றிப் பின்செல் வேத முதல்வரமர் திரு இராமேச்சரத்து.
சொற்பிரிப்பு
நெல்வேலி நீற்று அழகர் தமைப் பணிந்து பாடி, நிகழ்பல்வேறு பதி பிறவும் பணிந்து அன்பால் வந்து அணைந்தார்வில் வேடராய் வென்றி விசயன் எதிர் பன்றிப் பின்செல் வேத முதல்வர் அமர் திருஇராமேச்சரத்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
109
மன்னும் இராமேச்சரத்து மாமணியை முன் வணங்கிப்பன்னும் தமிழ்த் தொடைசாத்திப் பயில்கின்றார் பாம்பு அணிந்தசென்னியர் மாதோட்டத்துத் திருக்கேதீச்சரம் சார்ந்தசொல்மலர் மாலைகள் சாத்தித் தூரத்தே தொழுது அமர்ந்தார்.
சொற்பிரிப்பு
மன்னும் இராமேச்சரத்து மாமணியை முன் வணங்கிப்பன்னு தமிழ்த் தொடை சாத்திப் பயில்கின்றார் பாம்பு அணிந்தசென்னியர் மாதோட்டத்துத் திருக்கேதீச்சரம் சார்ந்தசொன்மலர் மாலைகள் சாத்தித் தூரத்தே தொழுது அமர்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
110
திரு இராமேச்சரத்துச் செழும் பவளச் சுடர்க் கொழுந்தைப்பரிவினால் தொழுது அகன்று பரமர் பிற பணிந்துபெருவிமானத்து இமையோர் வணங்கும் பெரும் திருச்சுழியல்மருவினார் வன்தொண்டர் மலை வேந்தருடன் கூட.
சொற்பிரிப்பு
திருஇராமேச்சரத்துச் செழும்பவளச் சுடர்க்கொழுந்தைப்பரிவினால் தொழுது அகன்று, பரமர் பதி பிற பணிந்துபெருவிமானத்து இமையோர் வணங்கு பெரும் திருச்சுழியல்மருவினார் வன்தொண்டர் மலைவேந்தர் உடன் கூட.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
111
திருச்சுழியல் இடம் கொண்ட செம்பொன் மலைச் சிலையாரைக்கருச்சுழியில் வீழாமைக் காப்பாரைக் கடல் விடத்தின்இருள் சுழியும் மிடற்றாரை இறைஞ்சி எதிர் இதழி மலர்ப்பருச் சுழியத்துடன் ஊனாய் உயிர் எனும் பா மலர் புனைந்தார்.
சொற்பிரிப்பு
திருச்சுழியல் இடம்கொண்ட செம்பொன் மலைச் சிலையாரைக்கருச்சுழியில் வீழாமைக் காப்பாரைக் கடல் விடத்தின்இருள்சுழியும் மிடற்றாரை இறைஞ்சி எதிர் இதழி மலர்ப்பருச்சுழியத்து உடன் ”ஊனாய் உயிர்” எனும் பாமலர் புனைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
112
அங்கணரைப் பணிந்து உறையும் ஆரூரர்க்கு அவ்வூரில்கங்குல் இடைக் கனவின் கண் காளையாந் திருவடிவால்செங்கையினில் பொன் செண்டும் திருமுடியில் சுழியம் உடன்எங்கும் இலாத் திருவேடம் என்புருக முன்காட்டி.
சொற்பிரிப்பு
அங்கணரைப் பணிந்து உறையும் ஆரூரர்க்கு அவ்ஊரில்கங்குல் இடைக் கனவின்கண் காளையாம் திருவடிவால்செங்கையினில் பொன்செண்டும் திருமுடியில் சுழியம் உடன்எங்கும் இலாத் திருவேடம் என்பு உருக முன்காட்டி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
113
கானப் பேர் யாம் இருப்பது எனக் கழறிக் கங்கை எனும்வானப் பேராறும் உலவும் மா முடியார் தாம் அகலஞானப் பேராளர் உணர்ந்து அதிசயித்து நாகம் உடன்ஏனப் பேரெயிறு அணிந்தார் அருள் இருந்த பரிசு என்பார்.
சொற்பிரிப்பு
“கானப்பேர் யாம் இருப்பது” எனக் கழறிக் கங்கை எனும்வானப்பேர் ஆறு உலவும் மாமுடியார் தாம் அகலஞானப் பேராளர் உணர்ந்து அதிசயித்து “நாகம் உடன்ஏனப் பேர் எயிறு அணிந்தார் அருள் இருந்த பரிசு” என்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
114
கண்டு அருளும் படி கழறிற்றறிவார்க்கு மொழிந்து அருளிப்புண்டரிகப் புனல் சுழியல் புனிதர் கழல் வணங்கிப் போய்அண்டர் பிரான் திருக்கானப்பேர் அணைவார் ஆரூரர்தொண்டர் அடித் தொழலும் எனும் சொல் பதிகத் தொடை புனைவார்.
சொற்பிரிப்பு
கண்டருளும் படி கழறிற்று அறிவார்க்கு மொழிந்தருளிப்புண்டரிகப் புனல் சுழியல் புனிதர் கழல் வணங்கிப் போய்அண்டர்பிரான் திருக்கானப்பேர் அணைவார் ஆரூரர்“தொண்டர் அடித் தொழலும்” எனும் சொல்பதிகத் தொடை புனைவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
115
காளையார் தமைக் கண்டு தொழப் பெறுவது என்று என்றுதாளை நாளும் பரவத் தருவார் பால் சார்கின்றார்ஆளை நீள் இடைக் காண அஞ்சிய நீர் நாய் அயலேவாளைபாய் நுழைப் பழன முனைப்பாடி வள நாடர்.
சொற்பிரிப்பு
“காளையார் தமைக்கண்டு தொழப் பெறுவது என்று” என்றுதாளை நாளும் பரவத் தருவார்பால் சார்கின்றார்;ஆளை நீள் இடைக் காண அஞ்சிய நீர் நாய் அயலேவாளைபாய் நுழைப் பழன முனைப்பாடி வளநாடர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
116
மன்னு திருக்கானப் பேர் வளம் பதியில் வந்து எய்திசென்னி வளர்மதி அணிந்தார் செழுங் கோயில் வலம் கொண்டுமுன்னிறைஞ்சி உள்ளணைந்து முதல்வர் சேவடி தாழ்ந்துபன்னு செழுந்தமிழ் மாலை பாடினார் பரவினார்.
சொற்பிரிப்பு
மன்னு திருக்கானப்பேர் வளம்பதியில் வந்து எய்திச்சென்னிவளர் மதி அணிந்தார் செழும்கோயில் வலம்கொண்டுமுன் இறைஞ்சி உள் அணைந்து முதல்வர் சேவடி தாழ்ந்துபன்னு செழும் தமிழ்மாலை பாடினார் பரவினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
117
ஆராத காதலுடன் அப்பதியில் பணிந்து ஏத்திச்சீராரும் திருத்தொண்டர் சில நாள் அங்கு அமர்ந்து அருளிக்காராரும் மலர்ச்சோலைக் கானப் பேர் கடந்து அணைந்தார்போரானேற்றார் கயிலைப் பொருப்பர் திருப்புனவாயில்.
சொற்பிரிப்பு
ஆராத காதலுடன் அப்பதியில் பணிந்து ஏத்திச்சீர்ஆரும் திருத்தொண்டர் சிலநாள் அங்கு அமர்ந்தருளிக்கார் ஆரும் மலர்ச்சோலைக் கானப்பேர் கடந்து அணைந்தார்போர் ஆன் ஏற்றார் கயிலைப் பொருப்பர் திருப்புனவாயில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
118
புனல் வாயில் பதி அமர்ந்த புனிதர் ஆலயம் புக்குமனம் ஆர்வம் உறச் சித்த நீ நினை என்னொடு என்றேவின வான தமிழ் பாடி வீழ்ந்து இறைஞ்சி அப்பதியில்சினயானை உரித்து அணிந்தார் திருப்பாதம் தொழுது இருந்தார்.
சொற்பிரிப்பு
புனவாயில் பதி அமர்ந்த புனிதர் ஆலயம் புக்குமனம் ஆர்வம் உறச் “சித்தம் நீ நினை என்னொடு” என்றேவினவான தமிழ்பாடி வீழ்ந்து இறைஞ்சி அப்பதியில்சினயானை உரித்து அணிந்தார் திருப்பாதம் தொழுது இருந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
119
திருப்புன வாயில் பதியில் அமர்ந்த சிவனார் மகிழும்விருப்புடைய கோயில் பல பணிந்து அருளால் மேவினார்பொருப்பினொடு கானகன்று புனல் பொன்னி நாடு அணைந்துபருப்பத வார் சிலையார் தம் பாம்பு அணிமா நகர் தன்னில்.
சொற்பிரிப்பு
திருப்புனவாயில் பதியில் அமர்ந்த சிவனார் மகிழும்விருப்புடைய கோயில் பல பணிந்து அருளால் மேவினார்பொருப்பினொடு கான் அகன்று புனல் பொன்னி நாடு அணைந்துபருப்பதவார் சிலையார் தம் பாம்பணி மாநகர் தன்னில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
120
பாதாள ஈச்சரம் இறைஞ்சி அதன் மருங்கு பல பதியும்வேதாதி நாதர் கழல் வணங்கி மிகு விரைவின் உடன்சூதாரும் துணை முலையார் மணிவாய்க்குத் தோற்று இரவுசேதாம்பல் வாய் திறக்கும் திருவாரூர் வந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
பாதாளீச்சரம் இறைஞ்சி அதன் மருங்கு பல பதியும்வேதாதி நாதர் கழல் வணங்கி மிகு விரைவின் உடன்சூது ஆரும் துணைமுலையார் மணிவாய்க்கத் தோற்று இரவுசேது ஆம்பல் வாய் திறக்கும் திருஆரூர் வந்து அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
121
திருநாவலூர் வேந்தர் சேரர் குல வேந்தர் உடன்வருவாரைத் திருவாரூர் வாழ்வார்கள் எதிர்கொள்ளத்தரும் காதலுடன் வணங்கித் தம் பெருமான் கோயிலினுள்பெருகு ஆர்வத்தொடு விரும்பும் பெரும் பேறு பெறப் புகுந்தார்.
சொற்பிரிப்பு
திருநாவலூர் வேந்தர் சேரர் குலவேந்தர் உடன்வருவாரைத் திருஆரூர் வாழ்வார்கள் எதிர்கொள்ளத்தரு காதலுடன் வணங்கித் தம்பெருமான் கோயிலின் உள்பெருகு ஆர்வத்தொடு விரும்பும் பெரும்பேறு பெறப் புகுந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
122
வாச மலர்க் கொன்றையார் மகிழ்கோயில் வலம் கொண்டுநேசமுற முன் இறைஞ்சி நெடும் பொழுது எலாம் பரவிஏசறவால் திருப்பதிகம் எடுத்து ஏத்தி எழுந்து அருளால்பாச வினைத் தொடக்கு அறுப்பார் பயில் கோயில் பணிந்து அணைவார்.
சொற்பிரிப்பு
வாசமலர்க் கொன்றையார் மகிழ்கோயில் வலம்கொண்டுநேசம் உற முன் இறைஞ்சி நெடும் பொழுதெலாம் பரவிஏசறவால் திருப்பதிகம் எடுத்து ஏத்தி எழுந்து அருளால்பாசவினைத் தொடக்கு அறுப்பார் பயில்கோயில் பணிந்து அணைவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
123
பரவையார் மாளிகையில் பரிசனங்கள் முன் எய்தவிரவு பேர் அலங்கார விழுச் செல்வம் மிகப் பெருகவரவு எதிர் கொண்டு அடிவணங்க வன் தொண்டர் மலைநாட்டுப்புரவலனாரையும் கொண்டு பொன் அணி மாளிகை புகுந்தார்.
சொற்பிரிப்பு
பரவையார் மாளிகையில் பரிசனங்கள் முன்எய்தவிரவு பேரலங்கார விழுச் செல்வம் மிகப்பெருகவரவு எதிர்கொண்டு அடி வணங்க வன்தொண்டர் மலைநாட்டுப்புரவலனாரையும் கொண்டு பொன்அணி மாளிகை புகுந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
124
பரவியே பரவையார் பரிவு உடனே பணிந்து ஏத்திவிரவிய போனகங்கறிகள் விதம் பலவாகச் சமைத்துப்பரிகலமும் பாவாடை பகல் விளக்கும் உடன் அமைத்துத்திரு அமுது செய்வித்தார் திருந்திய தேன் மொழியினார்.
சொற்பிரிப்பு
பரவியே பரவையார் பரிவு உடனே பணிந்து ஏத்திவிரவிய போனகம் கறிகள் விதம் பலவாகச் சமைத்துப்பரிகலமும் பாவாடை பகல் விளக்கும் உடன் அமைத்துத்திருஅமுது செய்வித்தார் திருந்திய தேன் மொழியினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
125
மங்கலமாம் பூசனைகள் பரவையார் செய மகிழ்ந்துதங்கி இனிது அமர் கின்றார் தம்பிரான் கோயிலினுள்பொங்கு பெரும் காலம் எலாம் புக்கு இறைஞ்சி புறத்து அணைந்துநங்கள் பிரான் அருள் மறவா நல் விளையாட்டினை நயந்தார்.
சொற்பிரிப்பு
மங்கலமாம் பூசனைகள் பரவையார் செய மகிழ்ந்துதங்கி இனிது அமர்கின்றார் தம்பிரான் கோயிலின் உள்பொங்கு பெரும் காலம் எலாம் புக்கு இறைஞ்சிப் புறத்து அணைந்துநங்கள் பிரான் அருள் மறவா நல் விளையாட்டினை நயந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
126
நிலைச் செண்டும் பரிச் செண்டும் வீசி மிக மகிழ்வு எய்திவிலக்கரும் போர்த் தகர்ப் பாய்ச் சல் கண்டு அருளி வென்றி பெறமலைக்கு நெடு முள் கணைக்கால் வாரணப் போர் மகிழ்ந்து அருளிஅலைக்கும் அறப் பல புள்ளின் அமர் விரும்பி அமர்கின்றார்.
சொற்பிரிப்பு
நிலைச்செண்டும் பரிச்செண்டும் வீசி மிக மகிழ்வு எய்திவிலக்கு அரும் போர்த் தகர்ப் பாய்ச்சல் கண்டருளி வென்றி பெறமலைக்கு நெடு முள் கணைக்கால் வாரணப் போர் மகிழ்ந்தருளிஅலைக்கு மறப் பல புள்ளின் அமர் விரும்பி அமர்கின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
127
விரவு காதல் மீக்கூர மேவும் நாள்கள் பல செல்லக்கரவில் ஈகைக் கேரளனார் தங்கள் கடல் சூழ் மலை நாட்டுப்பரவையார் தம் கொழுநனார் தம்மைப் பணிந்து கொண்டு அணைவான்இரவும் பகலும் தொழுது இரக்க இசைந்தார் அவரும் எழுந்து அருள.
சொற்பிரிப்பு
விரவு காதல் மீக்கூர மேவு நாள்கள் பல செல்லக்கரவில் ஈகைக் கேரளனார் தங்கள் கடல்சூழ் மலைநாட்டுப்பரவையார் தம் கொழுநனார் தம்மைப் பணிந்து கொண்டு அணைவான்இரவும் பகலும் தொழுது இரக்க இசைந்தார் அவரும் எழுந்தருள.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
128
நங்கை பரவையார் உள்ளத்து இசைவால் நம்பி எழுந்து அருளத்திங்கள் முடியார் திரு அருளைப் பரவிச் சேரமான் பெருமாள்எங்கும் உள்ள அடியாருக்கு ஏற்ற பூசை செய்து அருளிப்பொங்கும் முயற்சி இருவரும் போய்ப் புக்கார் புனிதர் பூங்கோயில்.
சொற்பிரிப்பு
நங்கை பரவையார் உள்ளத்து இசைவால் நம்பி எழுந்தருளத்திங்கள் முடியார் திருஅருளைப் பரவிச் சேரமான் பெருமாள்எங்கும் உள்ள அடியாருக்கு ஏற்ற பூசை செய்தருளிப்பொங்கு முயற்சி இருவரும்போய்ப் புக்கார் புனிதர் பூங்கோயில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
129
தம்பிரானைத் தொழுது அருளால் போந்து தொண்டர் சார்ந்து அணையநம்பி ஆருரரும் சேரர் நன்னாட்டு அரசனார் ஆயபைம் பொன் மணி நீள் முடிக் கழறிற்றறிவார் தாமும் பயணம் உடன்செம்பொன் நீடு மதில் ஆரூர் தொழுது மேல் பால் செல்கின்றார்.
சொற்பிரிப்பு
தம்பிரானைத் தொழுது அருளால் போந்து தொண்டர் சார்ந்து அணையநம்பி ஆரூரரும் சேரர் நன்நாட்டு அரசனார் ஆயபைம்பொன் மணிநீள் முடிக் கழறிற்று அறிவார் தாமும் பயணம் உடன்செம்பொன் நீடு மதில் ஆரூர் தொழுது மேல்பால் செல்கின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
130
பொன் பரப்பி மணிவரன்றிப் புனல் பரக்கும் காவேரித்தென் கரை போய்ச் சிவன் மகிழ்ந்த கோயில் பல சென்று இறைஞ்சிமின் பரப்பும் சடை அண்ணல் விரும்பும் திருக் கண்டியூர்அன்புருக்கும் சிந்தை உடன் பணிந்து புறத்து அணைந்தார்கள்.
சொற்பிரிப்பு
பொன்பரப்பி மணி வரன்றிப் புனல் பரக்கும் காவேரித்தென்கரை போய்ச் சிவன் மகிழ்ந்தகோயில் பல சென்று இறைஞ்சிமின் பரப்பும் சடை அண்ணல் விரும்பு திருக்கண்டியூர்அன்பு உருக்கும் சிந்தையுடன் பணிந்து புறத்து அணைந்தார்கள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
131
வட கரையில் திருவையாறு எதிர் தோன்ற மலர்க் கரங்கள்உடலுருக உள்ளுருக உச்சியின்மேல் குவித்து அருளிக்கடல் பரந்தது எனப் பெருகும் காவிரியைக் கடந்து ஏறித்தொடர்வு உடைய திருவடியை தொழுவதற்கு நினைவுற்றார்.
சொற்பிரிப்பு
வடகரையில் திருஐயாறு எதிர்தோன்ற மலர்க்கரங்கள்உடல் உருக உள் உருக உச்சியின் மேல் குவித்தருளிக்கடல் பரந்தது எனப் பெருகும் காவிரியைக் கடந்து ஏறித்தொடர்வுடைய திருவடியைத் தொழுவதற்கு நினைவுற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
132
ஐயாறு அதனைக் கண்டு தொழுது அருள ஆரூரர் தமை நோக்கிசெய்யாள் பிரியாச் சேரமான் பெருமாள் அருளிச் செய்கின்றார்மையார் கண்டர் மருவு திரு ஐயாறு இறைஞ்ச மனம் உருகிநையா நின்றது இவ்வாறு கடந்து பணிவோம் நாம் என்ன.
சொற்பிரிப்பு
ஐயாறு அதனைக் கண்டு தொழுது அருள் ஆரூரர் தமை நோக்கிச்செய்யாள் பிரியாச் சேரமான் பெருமாள் அருளிச் செய்கின்றார்“மையார் கண்டர் மருவு திருஐயாறு இறைஞ்ச மனம் உருகிநையா நின்றது இவ்ஆறு கடந்து பணிவோம் நாம்” என்ன.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
133
ஆறு பெருகி இரு கரையும் பொருது விசும்பில் எழுவது போல்வேறு நாவாய் ஓடங்கள் மீது செல்லா வகை மிகைப்பநீறு விளங்கும் திருமேனி நிறுத்தர் பாதம் பணிந்தன்பின்ஆறு நெறியாச் செலவுரியார் தரியாது அழைத்துப் பாடுவார்.
சொற்பிரிப்பு
ஆறு பெருகி இருகரையும் பொருது விசும்பில் எழுவதுபோல்வேறு நாவாய் ஓடங்கள் மீது செல்லா வகை மிகைப்பநீறு விளங்கும் திருமேனி நிருத்தர் பாதம் பணிந்து அன்பின்ஆறு நெறியாச் செல உரியார் தரியாது அழைத்துப் பாடுவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
134
பரவும் பரிசு ஒன்று எடுத்து அருளிப் பாடும் திருப்பாட்டின் முடிவில்அரவம் புனைவார் தமை ஐயாறு உடைய அடிகளோ என்றுவிரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமைத் திருப்பதிகம்நிரவும் இசையில் வன்தொண்டர் நின்று தொழுது பாடுதலும்.
சொற்பிரிப்பு
“பரவும் பரிசு என்று” எடுத்தருளிப் பாடும் திருப்பாட்டின் முடிவில்அரவம் புனைவார் தமை ‘ஐயாறு உடைய அடிகளோ’ என்றுவிரவும் வேட்கையுடன் அழைத்து விளங்கும் பெருமைத் திருப்பதிகம்நிரவும் இசையில் வன்தொண்டர் நின்று தொழுது பாடுதலும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
135
மன்றில் நிறைந்து நடமாட வல்லார் தொல்லை ஐயாற்றில்கன்று தடை உண்டு எதிர் அழைக்க கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல்ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்க ஓலம் எனநின்று மொழிந்தார் பொன்னி மா நதியும் நீங்கி நெறி காட்ட.
சொற்பிரிப்பு
மன்றில் நிறைந்து நடம் ஆடவல்லார் தொல்லை ஐயாற்றில்கன்று தடை உண்டு எதிர் அழைக்கக் கதறிக் கனைக்கும் புனிற்று ஆப்போல்ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்க “ஓலம்” எனநின்று மொழிந்தார்; பொன்னிமா நதியும் நீங்கி நெறிகாட்ட.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
136
விண்ணின் முட்டும் பெருக்காறு மேல்பால் பளிக்கு வெற்பு என்னநண்ணி நிற்கக் கீழ்பால் நீர் வடிந்த நடுவு நல்லவழிப்பண்ணிக் குளிர்ந்த மணல் பரப்பக் கண்டதொண்டர் பயில் மாரிகண்ணில் பொழிந்து மயிர்ப் புளகம் கலக்கக் கை அஞ்சலி குவித்தார்.
சொற்பிரிப்பு
விண்ணின் முட்டும் பெருக்கு ஆறு மேல்பால் பளிக்கு வெற்பு என்னநண்ணி நிற்கக் கீழ்பால் நீர் வடிந்த நடுவு நல்லவழிபண்ணிக் குளிர்ந்த மணல் பரப்பக் கண்ட தொண்டர் பயில்மாரிகண்ணில் பொழிந்து மயிர்ப்புளகம் கலக்கக் கை அஞ்சலி குவித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
137
நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய நாவலூர்செம்பொன் முந்நூல் மணிமார்பர் சேரர் பெருமான் எதிர் வணங்கிஉம்பர் நாதர் உமக்கு அளித்தது அன்றோ என்ன உடன் மகிழ்ந்துதம்பிரானைப் போற்றி இசைத்து தடம் காவேரி நடு அணைந்தார்.
சொற்பிரிப்பு
நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய, நாவலூர்ச்செம்பொன் முந்நூல் மணிமார்பர் சேரர் பெருமான் எதிர்வணங்கி“உம்பர் நாதர் உமக்களித்தது அன்றோ?” என்ன உடன் மகிழ்ந்துதம்பிரானைப் போற்றிசைத்துத் தடம் காவேரி நடுவு அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
138
செஞ்சொல் தமிழ் நாவலர் கோனும் சேரர் பிரானும் தம் பெருமான்எஞ்சல் இல்லா நிறை ஆற்றின் இடையே அளித்த மணல் வழியில்தஞ்சம் உடைய பரிசனமும் தாமும் ஏறித் தலைச்சென்றுபஞ்ச நதி வாணரைப் பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார்.
சொற்பிரிப்பு
செஞ்சொல் தமிழ் நாவலர் கோனும் சேரர் பிரானும் தம்பெருமான்எஞ்சல் இல்லா நிறை ஆற்றின் இடையே அளித்த மணல்வழியில்தஞ்சம் உடைய பரிசனமும் தாமும் ஏறித் தலைச்சென்றுபஞ்சநதி வாணரைப் பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
139
அங்கண் அரனார் கருணையினை ஆற்றாது ஆற்றித் திளைத்து இறைஞ்சித்தங்கள் பெருமான் திரு அருளால் தாழ்ந்து மீண்டும் தடம்பொன்னித்பொங்கு நதியின் முன் வந்த படியே நடுவு போந்து ஏறத்துங்க வரை போல் நின்ற நீர் துரந்து தொடரப் பெருகியதால்.
சொற்பிரிப்பு
அங்கண் அரனார் கருணையினை ஆற்றாது ஆற்றித் திளைத்து இறைஞ்சித்தங்கள் பெருமான் திருஅருளால் தாழ்ந்து, மீண்டும், தடம் பொன்னிப்பொங்கு நதியின் முன் வந்த படியே நடுவு போந்து ஏறத்துங்க வரைபோல் நின்ற நீர் துரந்து தொடரப் பெருகியதால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
140
ஆய செயலின் அதிசயத்தைக் கண்ட கரையில் ஐயாறுமேய பெருமான் அருள் போற்றி வீழ்ந்து தாழ்ந்து மேல்பால் போய்த்தூய மதிவாழ் சடையார் தம் பதிகள் பிறவும் தொழுது ஏத்திச்சேய கொங்க நாடு அணைந்தார் திருவாரூரர் சேரர் உடன்.
சொற்பிரிப்பு
ஆய செயலின் அதிசயத்தைக் கண்டு அக்கரையில் ஐயாறுமேய பெருமான் அருள்போற்றி வீழ்ந்து தாழ்ந்து மேல்பால் போய்த்தூய மதி வாழ் சடையார் தம் பதிகள் பிறவும் தொழுது ஏத்திச்சேய கொங்குநாடு அணைந்தார் திருஆரூரர் சேரர் உடன்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
141
கொங்கு நாடு கடந்து போய்க் குலவு மலைநாட்டு எல்லையுறநங்கள் பெருமான் தோழனார் நம்பி தம்பிரான் தோழர்அங்கண் உடனே அணை எழுந்து அருளா நின்றார் எனும் விருப்பால்எங்கும் அந் நாட்டு உள்ளவர்கள் எல்லாம் எதிர்கொண்டு இன்புறுவர்.
சொற்பிரிப்பு
கொங்கு நாடு கடந்து போய்க் குலவு மலைநாட்டு எல்லை உறநங்கள் பெருமான் தோழனார், நம்பி, தம்பிரான் தோழர்அங்கண் உடனே அணைய எழுந்து அருளா நின்றார் எனும் விருப்பால்எங்கும் அந்நாட்டு உள்ளவர்கள் எல்லாம் எதிர்கொண்டு இன்புறுவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
142
பதிகள் எங்கும் தோரணங்கள் பாங்கர் எங்கும் பூவனங்கள்வதிகள் எங்கும் குளிர் பந்தர் மனைகள் எங்கும் அகில் புகைக்கார்நதிகள் எங்கும் மலர்ப் பிறங்கல் ஞாங்கர் எங்கும் ஓங்குவனவீதிகள் எங்கும் முழவின் ஒலி நிலங்கள் எங்கும் பொலம் சுடர்ப்பூ.
சொற்பிரிப்பு
பதிகள் எங்கும் தோரணங்கள்; பாங்கர் எங்கும் பூவனங்கள்;வதிகள் எங்கும் குளிர்பந்தர்; மனைகள் எங்கும் அகில்புகைக் கார்;நதிகள் எங்கும் மலர்ப் பிறங்கல்; ஞாங்கர் எங்கும் ஓங்குவனநிதிகள் எங்கும் முழவின் ஒலி நிலங்கள் எங்கும் பொலம் சுடர்ப்பூ.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
143
திசைகள் தோறும் வரும் பெருமை அமைச்சர் சேனைப் பெருவெள்ளம்குசை கொள் வாசி நிரை வெள்ளம் கும்ப யானை அணி வெள்ளம்மிசை கொள் பண்ணும் பிடிவெள்ளம் மேவும் சோற்று வெள்ளம் கண்டுஅசைவில் இன்பப் பெருவெள்ளத்து அமர்ந்து கொடுங் கோளூர் அணைந்தார்.
சொற்பிரிப்பு
திசைகள் தோறும் வரும் பெருமை அமைச்சர் சேனைப் பெருவெள்ளம்குசைகொள் வாசி நிரை வெள்ளம் கும்ப யானை அணி வெள்ளம்மிசைகொள் பண்ணும் பிடி வெள்ளம் மேவும் சோற்று வெள்ளம் கண்டுஅசைவில் இன்பப் பெருவெள்ளத்து அமர்ந்து கொடுங்கோளூர் அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
144
கொடுங்கோ ளூரின் மதில் வாயில் அணி கோடித்து மருகில் உடுத்துதொடுங்கோபுரங்கள் மாளிகைகள் சூளி குளிர் சாலைகள் தெற்றிநெடுங்கோ நகர்கள் ஆடல் அரங்கு நிரந்த மணித் தாமம் கமுகுவிடுங்கோதைப் பூந் தாமங்கள் நிரைத்து வெவ்வேறு அலங்கரித்து.
சொற்பிரிப்பு
கொடுங்கோளூரின் மதில் வாயில் அணிகோடித்து மறுகில் உடுத்தொடும் கோபுரங்கள், மாளிகைகள், சூளி, குளிர்சாலைகள், தெற்றிநெடுங் கோநகர்கள் ஆடு அரங்கு நிரந்த மணித்தாமம், கமுகுவிடுங் கோதைப் பூந்தாமங்கள் நிரைத்து வெவ்வேறு அலங்கரித்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
145
நகர மாந்தர் எதிர் கொள்ள நண்ணி எண்ணில் அரங்கு தொறும்மகர குழை மாதர்கள் பாடி ஆட மணி வீதியில் அணைவார்சிகர நெடும் மாளிகை அணையார் சென்று திருவஞ்சைக் களத்துநிகரில் தொண்டர் தமைக் கொண்டு புகுந்தார் உதியர் நெடுந்தகையார்.
சொற்பிரிப்பு
நகர மாந்தர் எதிர்கொள்ள நண்ணி எண்ணில் அரங்குதொறும்மகரக் குழை மாதர்கள் பாடி ஆட மணிவீதியில் அணைவார்சிகர நெடுமாளிகை அணையார் சென்று திருஅஞ்சைக்களத்துநிகர் இல் தொண்டர் தமைக்கொண்டு புகுந்தார் உதியர் நெடும்தகையார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
146
இறைவர் கோயில் மணி முன்றில் வலம் கொண்டு இறைஞ்சி எதிர்புக்குநிறையும் காதல் உடன் வீழ்ந்து பணிந்து நேர் நின்று ஆரூரர்முறையில் விளம்பும் திருப்பதிகம் முடிப்பது கங்கை என்று எடுத்துப்பிறை கொள் முடியார் தமைப்பாடி பரவிப் பெருமாளுடன் தொழுதார்.
சொற்பிரிப்பு
இறைவர் கோயில் மணிமுன்றில் வலம்கொண்டு, இறைஞ்சி, எதிர்புக்குநிறையும் காதலுடன் வீழ்ந்து, பணிந்து, நேர் நின்று, ஆரூரர்முறையில் விளம்பும் திருப்பதிகம் ‘முடிப்பது கங்கை’ என்று எடுத்துப்பிறைகொள் முடியார் தமைப் பாடிப் பரவிப் பெருமாள் உடன்தொழுதார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
147
தொழுது திளைத்துப் புறம் போந்து தோன்றப் பண்ணும் பிடிமேற்பார்முழுதும் ஏத்த நம்பியை முன்பு ஏற்றிப் பின்பு தாம் ஏறிப்பழுதில் மணிச் சாமரை வீசிப் பைம்பொன் மணி மாளிகையில் வரும்பொழுது மறுகில் இருபுடையும் மிடைந்தார் வாழ்த்திப் புகல்கின்றார்.
சொற்பிரிப்பு
தொழுது திளைத்துப் புறம் போந்து, தோன்றப் பண்ணும் பிடிமேல், பார்முழுதும் ஏத்த, நம்பியை முன்பு ஏற்றிப் பின்பு தாம் ஏறிப்பழுதில் மணிச்சாமரை வீசிப் பைம்பொன் மணிமாளிகையில், வரும்பொழுது மறுகில் இருபுடையும் மிடைந்தார் வாழ்த்திப் புகல்கின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
148
நல்ல தோழர் நம் பெருமாள் தமக்கு நம்பி இவர் என்பார்எல்லை இல்லாத் தவம் முன்பு என் செய்தோம் இவரைத் தொழ என்பார்செல்வம் இனி என் பெறுவது நம் சிலம்பு நாட்டுக்கு என உரைப்பார்சொல்லும் தரமோ பெருமாள் செய் தொழிலைப் பாரீர் எனத் தொழுவார்.
சொற்பிரிப்பு
“நல்ல தோழர் நம்பெருமாள் தமக்கு நம்பி இவர்” என்பார்;“எல்லை இல்லாத் தவம் முன்பு என் செய்தோம்? இவரைத் தொழ” என்பார்;“செல்வம் இனி என் பெறுவது நம் சிலம்பு நாட்டுக்கு” என உரைப்பார்;“சொல்லும் தரமோ? பெருமாள் செய் தொழிலைப் பாரீர்” எனத் தொழுவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
149
பூவும் பொரியும் பொன் துகளும் பொழிந்து பணிவார் பொருவில் இவர்மேவும் பொன்னித் திருநாடே புவிக்குத் திலதம் என வியப்பார்பாவும் துதிகள் எம் மருங்கும் பயில வந்து மாளிகையின்மாவும் களிறும் நெருங்கும் மணி வாயில் புகுந்து மருங்கு இழிந்தார்.
சொற்பிரிப்பு
பூவும் பொரியும் பொன்துகளும் பொழிந்து பணிவார் “பொருஇல் இவர்மேவும் பொன்னித் திருநாடே புவிக்குத் திலதம்” என வியப்பார்பாவும் துதிகள் எம்மருங்கும் பயில வந்து மாளிகையின்மாவும் களிறும் நெருங்கு மணிவாயில் புகுந்து மருங்கு இழிந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
150
கழறிற்றறியுந் திருவடியும் கலை நாவலர் தம் பெருமானாம்முழவில் பொலியும் திரு நெடுந்தோள் முனைவர் தம்மை உடன் கொண்டுவிழவில் பொலியும் மாளிகையில் விளங்கு சிங்காசனத்தின் மிசைநிழல் திக்கு ஒளிரும் பூணாரை இருத்தித் தாமும் நேர் நின்று.
சொற்பிரிப்பு
கழறிற்று அறியும் திருவடியும் கலைநாவலர் தம் பெருமானாம்முழவில் பொலியும் திருநெடும்தோள் முனைவர் தம்மை உடன்கொண்டுவிழவில் பொலியும் மாளிகையில் விளங்கு சிங்காசனத்தின் மிசைநிழல் திக்கு ஒளிரும் பூணாரை இருத்தித் தாமும் நேர் நின்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
151
செம்பொன் கரக வாச நீர் தேவிமார்கள் எடுத்து ஏந்தஅம்பொன் பாதம் தாம் விளக்கி அருளப் புகலும் ஆரூரர்தம்பொன் தாளை வாங்கி இது தகாது என்று அருளத் தரணியில் வீழ்ந்துஎம் பெற்றிமையால் செய்தன இங்கு எல்லாம் இசைய வேண்டும் என.
சொற்பிரிப்பு
செம்பொன் கரக வாச நீர் தேவிமார்கள் எடுத்து ஏந்தஅம்பொன் பாதம் தாம் விளக்கி அருளப் புகலும் ஆரூரர்தம்பொன் தாளை வாங்கி ‘இது தகாது’ என்று அருளத் தரணியில் வீழ்ந்து“எம் பெற்றிமையால் செய்தன இங்கு எல்லாம் இசைய வேண்டும்” என.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
152
பெருமாள் வேண்ட எதிர் மறுக்க மாட்டார் அன்பில் பெரும் தகையார்திருமா நெடுந்தோள் உதியர் பிரான் செய்த எல்லாம் கண்டு இருந்தார்அருமானம் கொள் பூசனைகள் அடைவே எல்லாம் அளித்து அதன்பின்ஒருமா மதிவெண்குடை வேந்தர் உடனே அமுது செய்து வந்தார்.
சொற்பிரிப்பு
பெருமாள் வேண்ட எதிர் மறுக்க மாட்டார் அன்பில் பெருந்தகையார்;திரு மா நெடும் தோள் உதியர் பிரான் செய்த எல்லாம் கண்டு இருந்தார்;அருமானம் கொள் பூசனைகள் அடைவே எல்லாம் அளித்ததன் பின்ஒருமா மதி வெண்குடை வேந்தர் உடனே அமுது செய்து வந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
153
சேரர் உடனே திருவமுது செய்த பின்பு கை கோட்டிஆரம் நறுமென் கலவை மான் மதச் சாந்து ஆடை அணிமணிப் பூண்ஈர விரை மென்மலர்ப் பணிகள் இனைய முதலாயின வருக்கம்சார எடுத்து வன் தொண்டர் சாத்தி மிகத் தமக்கு ஆக்கி.
சொற்பிரிப்பு
சேரர் உடனே திருஅமுது செய்த பின்பு கைகோட்டிஆரம் நறுமென் கலவை மான்மதச் சாந்து ஆடை அணி மணிப்பூண்ஈர விரைமென் மலர்ப்பணிகள் இனைய முதல்ஆயின வருக்கம்சார எடுத்து வன்தொண்டர்ச் சாத்தி மிக்க தமக்கு ஆக்கி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
154
பாடல் ஆடல் இன்னியங்கள் பயில்தல் முதலாம் பண்ணையினில்நீடும் இனிய விநோதங்கள் நெருங்கு காலம் தொறும் நிகழமாடு விரைப்பூந்தருமணஞ்செய் ஆராமங்கள் வைகுவித்துக்கூட முனைப் பாடியார் கோவை கொண்டு மகிழ்ந்தார் கோதையார்.
சொற்பிரிப்பு
பாடல் ஆடல் இன்இயங்கள் பயில்தல் முதலாம் பண்ணையினில்நீடும் இனிய விநோதங்கள் நெருங்கு காலம் தொறும் நிகழமாடு விரைப் பூந்தரு, மணம் செய் ஆராமங்கள் வைகுவித்துக்கூட முனைப்பாடியர் கோவைக் கொண்டு மகிழ்ந்தார் கோதையார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
155
செண்டாடும் தொழில் மகிழ்வும் சிறு சோற்றுப் பெரும் சிறப்பும்வண்டாடும் மலர் வாவி மருவிய நீர் விளையாட்டும்தண்டாமும் மத கும்பத் தட மலைப்போர் சல மற்போர்கண்டாரா விருப்பு எய்தக் காவலனார் காதல் செய்நாள்.
சொற்பிரிப்பு
செண்டு ஆடும் தொழில் மகிழ்வும் சிறுசோற்றுப் பெருஞ்சிறப்பும்வண்டு ஆடு மலர் வாவி மருவிய நீர் விளையாட்டும்தண்டாமும் மதகும்பத் தடமலைப்போர் சலமற்போர்கண்டு ஆரா விருப்பு எய்தக் காவலனார் காதல் செய் நாள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
156
நாவலர் தம் பெருமானும் திருவாரூர் நகர் ஆளும்தேவர் பிரான் கழல் ஒரு நாள் மிக நினைந்த சிந்தையராய்ஆவியை ஆரூரானை மறக்கலுமாமே என்னும்மேவிய சொல் திருப்பதிகம் பாடியே வெருவுற்றார்.
சொற்பிரிப்பு
நாவலர் தம் பெருமானும் திருஆரூர் நகர் ஆளும்தேவர்பிரான் கழல் ஒருநாள் மிக நினைந்த சிந்தையராய்ஆவியை ”ஆரூரானை மறக்கலும் ஆமே” என்னும்மேவிய சொல் திருப்பதிகம் பாடியே வெருவு உற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
157
திருவாரூர் தனை நினைந்து சென்று தொழுவேன் என்றுமரு ஆர்வத் தொண்டர் உடன் வழி கொண்டு செல்பொழுதில்ஒருவா நண் புள்ளுருக உடன் எழுந்து கை தொழுதுபெருவான வரம்பனார் பிரிவு ஆற்றார் பின் செல்வார்.
சொற்பிரிப்பு
திருஆரூர் தனை நினைந்து “சென்று தொழுவேன்” என்றுமரு ஆர்வத் தொண்டருடன் வழிக்கொண்டு செல்பொழுதில்ஒருவா நண்பு உள் உருக உடன்எழுந்து கை தொழுதுபெருவான வரம்பனார் பிரிவு ஆற்றார் பின் செல்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
158
வன் தொண்டர் முன் எய்தி மனம் அழிந்த உணர்வினராய்இன்று உமது பிரிவு ஆற்றேன் என் செய்கேன் யான் என்னஒன்றுநீர் வருந்தாதே உமது பதியின் கண் இருந்துஅன்றினார் முனை முருக்கி அரசு ஆளும் என மொழிந்தார்.
சொற்பிரிப்பு
வன்றொண்டர் முன் எய்தி மனம் அழிந்த உணர்வினராய்“இன்று உமது பிரிவு ஆற்றேன்; என் செய்கேன் யான்” என்ன“ஒன்று நீர் வருந்தாதே உமது பதியின்கண் இருந்துஅன்றினார் முனை முருக்கி அரசு ஆளும்” என மொழிந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
159
ஆரூரர் மொழிந்து அருள அது கேட்ட அருள் சேரர்பாரோடு விசும்பு ஆட்சி எனக்கு உமது பாதமலர்தேரூரும் நெடும் வீதித் திருவாரூர்க்கு எழுந்து அருளநேரூரும் மனக் காதல் நீக்கவும் அஞ்சுவன் என்றார்.
சொற்பிரிப்பு
ஆரூரர் மொழிந்தருள அது கேட்ட அருள்சேரர்“பாரோடு விசும்பு ஆட்சி எனக்கு உமது பாதமலர்தேர் ஊரும் நெடுவீதித் திருஆரூர்க்கு எழுந்தருளநேர் ஊரும் மனக்காதல் நீக்கவும் அஞ்சுவன்” என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
160
மன்னவனார் அது மொழிய வன்தொண்டர் எதிர் மொழிவார்என்னுயிருக்கு இன் உயிராம் எழில் ஆரூர்ப் பெருமானைவன்னெஞ்சக் கள்வனேன் மறந்து இரேன் மதி அணிந்தார்இன்னருளால் அரசளிப்பீர் நீர் இருப்பீர் என இறைஞ்ச.
சொற்பிரிப்பு
மன்னவனார் அது மொழிய வன்தொண்டர் எதிர்மொழிவார்“என் உயிருக்கு இன் உயிராம் எழில் ஆரூர்ப் பெருமானைவன்நெஞ்சக் கள்வனேன் மறந்திரேன்; மதி அணிந்தார்இன் அருளால் அரசு அளிப்பீர் நீர் இருப்பீர்” என இறைஞ்ச.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
161
மற்றவரும் பணிந்து இசைந்தே மந்திரிகள் தமை அழைத்துபொற்பு நிறை தொல் நகரில் இற்றைக்கு முன்புகுந்தநற்பெரும் பண்டார நானா வருக்கம் ஆன வெலாம்பற்பலவாம் ஆளின் மிசை ஏற்றிவரப் பண்ணும் என.
சொற்பிரிப்பு
மற்றவரும் பணிந்து இசைந்தே, மந்திரிகள் தமைஅழைத்துப்“பொற்புநிறை தொல் நகரில் இற்றைக்கு முன் புகுந்தநற்பெரும் பண்டார நானா வருக்கமான எலாம்பற்பலவாம் ஆளின் மிசை ஏற்றி வரப் பண்ணும்” என.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
162
ஆங்கவரும் அன்று வரை ஆயம் ஆகிய தனங்கள்ஓங்கிய பொன் நவ மணிகள் ஒளிர் மணிப்பூண் துகில் வருக்கம்ஞாங்கர் நிறை விரையுறுப்பு வருக்கம் முதல் நலம் சிறப்பத்தாங்கு பொதி வினைஞர் மேல் தலம் மலியக் கொண்டு அணைந்தார்.
சொற்பிரிப்பு
ஆங்கு அவரும் அன்று வரை ஆயம் ஆகிய தனங்கள்ஓங்கிய பொன் நவமணிகள் ஒளிர்மணிப் பூண்துகில் வருக்கம்ஞாங்கர் நிறை விரை உறுப்பு வருக்கமுதல் நலம் சிறப்பத்தாங்கு பொதி வினைஞர் மேல் தலம் மலியக் கொண்டுஅணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
163
மற்றவற்றின் பரப்பு எல்லாம் வன் தொண்டர் பரிசனத்தின்முற்படவே செலவு இட்டு முனைப்பாடித் திருநாடர்பொற் பதங்கள் பணிந்து அவரைத் தொழுது எடுத்துப் புணை அலங்கல்வெற்புயர் தோள் உறத் தழுவி விடை அளித்தார் வன்தொண்டர்.
சொற்பிரிப்பு
மற்று அவற்றின் பரப்பு எல்லாம் வன்தொண்டர் பரிசனத்தின்முற்படவே செலவிட்டு முனைப்பாடித் திருநாடர்பொற்பதங்கள் பணிந்தவரைத்தொழுது எடுத்துப் புனை அலங்கல்வெற்புயர் தோள் உறத் தழுவி விடை அளித்தார் வன்தொண்டர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
164
ஆரூரர் அவர் தமக்கு விடை அருளி அங்கு அன்றுகாரூரும் மலைநாடு கடந்து அருளிக் கல் சுரமும்நீரூரும் கான் யாரும் நெடும் கானும் பலகழியசீரூரும் திருமுருகன் பூண்டி வழிச்செல்கின்றார்.
சொற்பிரிப்பு
ஆரூரர் அவர் தமக்கு விடைஅருளி அங்கு அகன்றுகார் ஊரும் மலைநாடு கடந்தருளிக் கல்சுரமும்நீர் ஊரும் கான் யாறும் நெடும் கானும் பல கழியச்சீர்ஊரும் திருமுருகன் பூண்டி வழிச் செல்கின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
165
திரு முருகன் பூண்டி அயல் செல்கின்ற போழ்தின் கண்பொருவிடையார் நம்பிக்குத் தாமே பொன் கொடுப்பதலால்ஒருவர் கொடுப்பக் கொள்ள ஒண்ணாமைக்கு அதுவாங்கிப்பெருகருளால் தாம் கொடுக்கப் பெறுவதற்கோ அது அறியோம்.
சொற்பிரிப்பு
திருமுருகன் பூண்டி அயல் செல்கின்ற போழ்தின்கண்பொருவிடையார் நம்பிக்குத் தாமே பொன் கொடுப்பது அலால்ஒருவர் கொடுப்பக் கொள்ள ஒண்ணாமைக்கு அது வாங்கிப்பெருகு அருளால் தாம் கொடுக்கப் பெறுவதற்கோ? அது அறியோம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
166
வென்றி மிகு பூதங்கள் வேடர் வடிவாய் சென்றுவன்தொண்டர் பண்டாரம் கவர அருள் வைத்து அருளஅன்றினார் புரம் எரித்தார் அருளால் வேட்டுவப் படையாய்ச்சென்று அவர் தாம் வரும் வழியில் இருபாலும் செயிர்த்து எழுந்து.
சொற்பிரிப்பு
வென்றி மிகு பூதங்கள் வேடர் வடிவாய்ச் சென்றுவன்றொண்டர் பண்டாரம் கவர அருள் வைத்தருளஅன்றினார் புரம் எரித்தார் அருளால் வேட்டுவப் படையாய்ச்சென்று அவர் தாம் வரும் வழியில் இருபாலும் செயிர்த்து எழுந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
167
வில் வாங்கி அலகம்பு விசை நாணில் சந்தித்துக்கொல்வோம் இங்கு இட்டுப்போம் எனக் கோபத்தால் குத்திஎல்லையில் பண்டாரம் எல்லாம் கவர்ந்து கொள இரிந்தோடிஅல்லலுடன் பறியுண்டார் ஆரூரர் மருங்கு அணைந்தார்.
சொற்பிரிப்பு
வில் வாங்கி அலகு அம்பு விசை நாணில் சந்தித்துக்“கொல்வோம் இங்கு இட்டுப்போம்” எனக் கோபத்தால் குத்திஎல்லையில் பண்டாரம் எலாம் கவர்ந்து கொள, இரிந்து ஓடிஅல்லலுடன் பறி உண்டார் ஆரூரர் மருங்கு அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
168
ஆரூரர் தம்பால் அவ்வேடுவர் சென்று அணையாதேநீரூருஞ் செஞ்சடையார் அருளினால் நீங்க அவர்சேரூராம் திருமுருகன் பூண்டியினில் சென்று எய்திப்போரூரு மழவிடையார் கோயிலை நாடிப் புக்கார்.
சொற்பிரிப்பு
ஆரூரர் தம்பால் அவ்வேடுவர் சென்று அணையாதேநீர் ஊரும் செஞ்சடையார் அருளினால் நீங்க, அவர்சேர் ஊராம் திருமுருகன் பூண்டியினில் சென்று எய்திப்போர் ஊரும் மழவிடையார் கோயிலை நாடிப் புக்கார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
169
அங்கணர் தம் கோயிலினை அஞ்சலி கூப்பித் தொழுதுமங்குலுற நீண்ட திருவாயிலினை வந்து இறைஞ்சிப்பொங்கு விருப்புடன் புக்கு வலம் கொண்டு புனித நதிதிங்கள் முடிக்கு அணிந்தவர் தம் திருமுன்பு சென்று அணைந்தார்.
சொற்பிரிப்பு
அங்கணர் தம் கோயிலினை அஞ்சலி கூப்பித் தொழுதுமங்குல் உற நீண்ட திருவாயிலினை வந்து இறைஞ்சிப்பொங்கு விருப்புடன் புக்கு, வலம் கொண்டு, புனித நதிதிங்கள்முடிக்கு அணிந்தவர் தம் திருமுன்பு சென்று அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
170
உருகிய அன்பொடு கைகள் குவித்து விழுந்து உமைபாகம்மருவிய தம் பெருமான் முன் வன்தொண்டர் பாடினார்வெருவுறவேடுவர் பறிக்கும் வெஞ்சுரத்தில் எத்துக்கு இங்குஅருகு இருந்தீர் எனக்கு கொடுகு வெஞ்சிலை அஞ்சொற்பதிகம்.
சொற்பிரிப்பு
உருகிய அன்பொடு கைகள் குவித்து விழுந்து உமைபாகம்மருவிய தம் பெருமான் முன் வன்தொண்டர் பாடினார்“வெருவுற வேடுவர் பறிக்கும் வெம்சுரத்தில் எத்துக்கு இங்குஅருகு இருந்தீர்?” எனக் ‘கொடுகு வெஞ்சிலை’ அஞ்சொல் பதிகம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
171
பாடியவர் பரவுதலும் பரம்பொருளாம் அவர் அருளால்வேடுவர் தாம் பறித்த பொருள் அவை எல்லாம் விண்ணெருங்கநீடு திரு வாயிலின் முன் குவித்திடலும் நேர் இறைஞ்சிஆடும் அவர் திருவருளால் அப்படியே கைக் கொண்டார்.
சொற்பிரிப்பு
பாடி, அவர் பரவுதலும் பரம்பொருளாம் அவர் அருளால்வேடுவர் தாம் பறித்த பொருள் அவை எல்லாம் விண் நெருங்கநீடு திருவாயிலின் முன் குவித்திடலும் நேர் இறைஞ்சிஆடும் அவர் திருஅருளால் அப்படியே கைக்கொண்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
172
கைக்கொண்டு கொடுபோம் அக் கைவினைஞர் தமை ஏவிமைக் கொண்ட மிடற்றாரை வணங்கிப்போய்க் கொங்கு அகன்றுமெய்க் கொண்ட காதலினால் விரைந்து ஏகி மென் கரும்பும்செய்க் கொண்ட சாலியுஞ்சூழ் திருவாரூர் சென்று அணைந்தார்.
சொற்பிரிப்பு
கைக்கொண்டு கொடுபோம் அக்கைவினைஞர் தமை ஏவிமைக்கொண்ட மிடற்றாரை வணங்கிப் போய்க், கொங்கு அகன்று,மெய்க்கொண்ட காதலினால் விரைந்து ஏகி, மென் கரும்பும்செய்க்,கொண்ட சாலியும் சூழ் திருஆரூர் சென்று அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
173
நாவலர் மன்னவர் அருளால் விடை கொண்ட நரபதியார்ஆவியின் ஒன்றா நண்பின் ஆரூரர் தமை நினைந்துமாவலரும் சோலை மா கோதையினில் மன்னிமலைப்பூவலயம் பொது நீக்கி அரசு உரிமை புரிந்து இருந்தார்.
சொற்பிரிப்பு
நாவலர் மன்னவர் அருளால் விடைகொண்ட நரபதியார்ஆவியின் ஒன்றா நண்பின் ஆரூரர் தமை நினைந்துமா அலரு மலர்ச்சோலை மகோதையினில் மன்னி மலைப்பூவலயம் பொது நீக்கி அரசு உரிமை புரிந்து இருந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
174
இந் நிலைமை உதியர் பிரான் எம்பிரான் வன்தொண்டர்பொன்னி வளநாடு அகன்று மாகோதையினில் மேல் புகுந்துமன்னு திருக் கயிலை யினில் மத வரைமேல் எழுந்து அருளமுன்னர் வயப்பரி உகைக்கும் திருத்தொழில் பின்மொழிகின்றாம்.
சொற்பிரிப்பு
இந்நிலைமை உதியர் பிரான், எம்பிரான் வன்தொண்டர்பொன்னி வளநாடு அகன்று, மகோதையினில் மேல் புகுந்து,மன்னு திருக்கயிலையினில் மதவரைமேல் எழுந்து அருள,முன்னர் வயப்பரி உகைக்கும் திருத்தொழில் பின் மொழிகின்றாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
175
மலை மலிந்த திருநாட்டு மன்னவனார் மா கடல் போல்சிலை மலிந்த கொடித் தானைச் சேரலனார் கழல் போற்றிநிலை மலிந்த மணிமாடம் நீள் மறுகு நான் மறை சூழ்கலை மலிந்த புகழ்க் காழிக் கணநாதர் திறம் உரைப்பாம்.
சொற்பிரிப்பு
மலை மலிந்த திருநாட்டு மன்னவனார் மாகடல் போல்சிலை மலிந்த கொடித்தானைச் சேரலனார் கழல் போற்றிநிலை மலிந்த மணிமாட நீள் மறுகு நான்மறை சூழ்கலை மலிந்த புகழ்க் காழிக் கணநாதர் திறம் உரைப்பாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.