1
பொன்னி நீர் நாட்டின் நீடும் பொற்பதி புவனத்து உள்ளோர்இன்மையால் இரந்து சென்றோர்க்கு இல்லை என்னாதே ஈயும்தன்மையார் என்று நன்மை சார்ந்த வேதியரைச் சண்பைமன்னனார் அருளிச்செய்த மறைத் திருவாக்கூர் ஆக்கூர்.
சொற்பிரிப்பு
பொன்னி நீர் நாட்டின் நீடும் பொற்பதி “புவனத்து உள்ளோர்இன்மையால் இரந்து சென்றோர்க்கு இல்லை என்னாதே ஈயும்தன்மையார்” என்று நன்மை சார்ந்த வேதியரைச் சண்பைமன்னனார் அருளிச் செய்த மறைத் திருவாக்கூர் ஆக்கூர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.