திருமுறை 12 · 12.040 · 18

சாக்கிய நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

அறு சமயத் தலைவராய் நின்றவருக்கு அன்பராய்மறு சமயச் சாக்கியர்தம் வடிவினால் வரும் தொண்டர்உறுதிவரச் சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்துமறுவில் சரண் பெற்ற திறம் அறிந்தபடி வழுத்துவாம்.
சொற்பிரிப்பு
அறுசமயத் தலைவராய் நின்றவருக்கு அன்பராய்மறு சமயச் சாக்கியர் தம் வடிவினால் வரும் தொண்டர்உறுதி வரச் சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்துமறுவில் சரண் பெற்ற திறம் அறிந்தபடி வழுத்துவாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

தாளாளர் திருச்சங்க மங்கையினில் தகவுடையவேளாளர் குலத்து உதித்தார் மிக்க பொருள் தெரிந்து உணர்ந்துகேளாகிப் பல் உயிர்க்கும் அருள் உடையராய்க் கெழுமிநீளாது பிறந்து இறக்கும் நிலை ஒழிவேன் என நிற்பார்.
சொற்பிரிப்பு
தாளாளர் திருச்சங்க மங்கையினில் தகவு உடையவேளாளர் குலத்து உதித்தார் மிக்க பொருள் தெரிந்து உணர்ந்துகேள் ஆகிப் பல் உயிர்க்கும் அருள் உடையராய்க் கெழுமி“நீளாது பிறந்து இறக்கும் நிலை ஒழிவேன்” என நிற்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அந் நாளில் எயில் காஞ்சி அணிநகரம் சென்று அடைந்துநல்ஞானம் அடைவதற்குப் பலவழியும் நாடுவார்முன்னாகச் சாக்கியர் தாம் மொழி அறத்தின் வழிச்சார்ந்துமன்னாத பிறப்பு அறுக்கும் தத்துவத்தின் வழி உணர்வார்.
சொற்பிரிப்பு
அந்நாளில் எயில் காஞ்சி அணிநகரம் சென்று அடைந்துநன் ஞானம் அடைவதற்குப் பல வழியும் நாடுவார்,முன் ஆகச் சாக்கியர் தாம் மொழி அறத்தின் வழிச் சார்ந்துமன்னாத பிறப்பு அறுக்கும் தத்துவத்தின் வழி உணர்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அந் நிலைமைச் சாக்கியர்தம் அரும் கலை நூல் ஓதி அதுதன்னிலையும் புறச் சமயச் சார்வுகளும் பொருள் அல்லஎன்னும் அது தெளிந்து ஈசர் அருள் கூட ஈறில் சிவநன்னெறியே பொருள் ஆவது என உணர்வு நாட்டுவார்.
சொற்பிரிப்பு
அந்நிலைமைச் சாக்கியர் தம் அருங்கலை நூல் ஓதி, அதுதன்நிலையும் புறச்சமயச் சார்வுகளும் பொருள் அல்லஎன்னும் அது தெளிந்து, ஈசர் அருள் கூட “ஈறில் சிவ”நன்நெறியே பொருள் ஆவது” என உணர்வு நாட்டுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

செய்வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும்மெய் வகையால் நான்காகும் விதித்த பொருள் எனக் கொண்டேஇவ்வியல்பு சைவநெறி அல்ல வற்றுக்கு இல்லை எனஉய்வகையால் பொருள் சிவன் என்று அருளாலே உணர்ந்து அறிந்தார்.
சொற்பிரிப்பு
“செய்வினையும் செய்வானும் அதன் பயனும் சேர்ப்பானும்மெய்வகையால் நான்கு ஆகும் விதித்த பொருள்” எனக் கொண்டே“இவ்இயல்பு சைவநெறி அல்லவற்றுக்கு இல்லை” எனஉய்வகையால் “பொருள் சிவன்” என்று அருளாலே உணர்ந்து அறிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும்மன்னிய சீர்ச் சங்கரன் தாள் மறவாமை பொருள் என்றேதுன்னிய வேடம் தன்னைத் துறவாதே தூய சிவம்தன்னை மிகும் அன்பினால் மறவாமை தலை நிற்பார்.
சொற்பிரிப்பு
“எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும்மன்னிய சீர்ச் சங்கரன் தாள் மறவாமை பொருள்” என்றேதுன்னிய வேடம் தன்னைத் துறவாதே தூய சிவம்தன்னை மிகும் அன்பினால் மறவாமை தலை நிற்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

எல்லாம் உடைய ஈசனே இறைவன் என்ன அறியாதார்பொல்லா வேடச் சாக்கியரே ஆகிப் புல்லர் ஆகுவார்அல்லார் கண்டர் தமக்கு இந்த அகிலம் எல்லாம் ஆள் என்னவல்லார் இவர் அவ் வேடத்தை மாற்றாது அன்பின் வழிநிற்பார்.
சொற்பிரிப்பு
‘எல்லாம் உடைய ஈசனே இறைவன்’ என்ன அறியாதார்பொல்லா வேடச் சாக்கியரே ஆகிப் புல்லர் ஆகுவார்;அல்லார் கண்டர் தமக்கு இந்த அகிலம் எல்லாம் ஆள் என்னவல்லார் இவர் அவ்வேடத்தை மாற்றாது அன்பின் வழி நிற்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்நீள் நாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்நாணாது நேடியமால் நான் முகனும் காண நடுச்சேணாரும் தழல் பிழம்பாய்த் தோன்றிது தெளிந்தாராய்.
சொற்பிரிப்பு
காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்நீணாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்நாணாது நேடியமால் நான்முகனும் காண நடுச்சேண் ஆரும் தழல் பிழம்பாய்த் தோன்றிய அது தெளிந்தாராய்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நாள் தோறும் சிவலிங்கம் கண்டு உண்ணும் அது நயந்துமாடோர் வெள்ளிடை மன்னும் சிவலிங்கம் கண்டு மனம்நீடோடு களியுவகை நிலைமை வரச் செயல் அறியார்பாடோர் கல் கண்டு அதனைப் பதைப்போடும் எடுத்து எறிந்தார்.
சொற்பிரிப்பு
நாடோறும் சிவலிங்கம் கண்டு உண்ணும் அது நயந்துமாடு ஓர் வெள்ளிடை மன்னும் சிவலிங்கம் கண்டு மனம்நீடு ஓடு களி உவகை நிலைமை வரச் செயல் அறியார்பாடு ஓர் கல் கண்டு அதனைப் பதைப்போடும் எடுத்து எறிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

அகம் நிறைந்த பேர் உவகை அடங்காத ஆதரவால்மகவு மகிழ்ந்து உவப்பார்கள் வன்மை புரிசெயலினால்இகழ்வனவே செய்தாலும் இளம் புதல்வர்க்கு இன்பமேநிகழும் அது போல் அதற்கு நீள் சடையார் தாம் மகிழ்வார்.
சொற்பிரிப்பு
அகம் நிறைந்த பேர் உவகை அடங்காத ஆதரவால்மகவு மகிழ்ந்து உவப்பார்கள் வன்மை புரி செயலினால்இகழ்வனவே செய்தாலும் இளம் புதல்வர்க்கு இன்பமேநிகழும் அது போல் அதற்கு நீள்சடையார் தாம் மகிழ்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

அன்றுபோய் பிற்றைநாள் அந்நியதிக்கு அணையுங்கால்கொன்றை முடியார் மேல் தாம் கல் எறிந்த குறிப்புஅதனைநின்றுணர்வார் எனக்கு அப்போது இது நிகழ்ந்தது அவர் அருளேஎன்று அதுவே தொண்டு ஆக என்றும் அது செய நினைந்தார்.
சொற்பிரிப்பு
அன்று போய்ப் பிற்றை நாள் அந்நியதிக்கு அணையும்கால்கொன்றை முடியார் மேல் தாம் கல் எறிந்த குறிப்பு அதனைநின்று உணர்வார் “எனக்கு அப்போது இது நிகழ்ந்தது அவர் அருளே”என்று அதுவே தொண்டு ஆக என்றும் அது செய நினைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

தொடங்கிய நாள் அருளிய அத்தொழில் ஒழியா வழிதொடரும்கடன் புரிவார் அது கண்டு கல் எறிவார் துவராடைப்படம் புனை வேடம் தவிரார் பசுபதியார் தம் செயலேஅடங்கலும் என்பது தெளிந்தார் ஆதலினால் மாதவர்தாம்.
சொற்பிரிப்பு
தொடங்கிய நாள் அருளிய அத்தொழில் ஒழியா வழி தொடரும்கடன்புரிவார் அதுகண்டு கல் எறிவார் துவர் ஆடைப்படம்புனை வேடம் தவிரார்; பசுபதியார் தம் செயலேஅடங்கலும் என்பது தெளிந்தார் ஆதலினால் மாதவர் தாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

இந் நியதி பரிவோடும் வழுவாமல் இவர் செய்யமுன்னும் திருத்தொண்டர் நிலை முடிந்தபடி தான் மொழியில்துன்னிய மெய்யன்புடனே எழுந்தவினை தூயவர்க்குமன்னு மிகு பூசனையாம் அன்பு நெறி வழக்கினால்.
சொற்பிரிப்பு
இந்நியதி பரிவோடும் வழுவாமல் இவர் செய்யமுன்னு திருத்தொண்டர் நிலை முடிந்தபடி தான் மொழியில்துன்னிய மெய் அன்புடனே எழுந்த வினை தூயவர்க்குமன்னு மிகு பூசனையாம் அன்பு நெறி வழக்கினால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

கல்லாலே எறிந்ததுவும் அன்பான படி காணில்வில்வேடர் செருப்பு அடியும் திருமுடியில் மேவிற்றால்நல்லார் மற்று அவர் செய்கை அன்பாலே நயந்து அதனைஅல்லாதார் கல் என்பார் அரனார்க்கு அஃது அலராமால்.
சொற்பிரிப்பு
கல்லாலே எறிந்ததுவும் அன்பு ஆன படிகாணில்வில்வேடர் செருப்படியும் திருமுடியின் மேவிற்றால்நல்லார் மற்று அவர் செய்கை அன்பாலே நயந்த அதனைஅல்லாதார் கல் என்பார் அரனார்க்கு அஃது அலர் ஆமால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

அங்கு ஒரு நாள் அருளாலே அயர்ந்து உண்ணப் புகுகின்றார்எங்கள் பிரான் தனை எறியாது அயர்ந்தேன் யான் என எழுந்துபொங்கியதோர் காதலுடன் மிகவிரைந்து புறப்பட்டுவெங்கரியின் உரி புனைந்தார் திருமுன்பு மேவினார்.
சொற்பிரிப்பு
அங்கு ஒருநாள் அருளாலே அயர்ந்து உண்ணப் புகுகின்றார்“எங்கள் பிரான் தனை எறியாது அயர்ந்தேன் யான்” என எழுந்துபொங்கியதோர் காதலுடன் மிக விரைந்து புறப்பட்டுவெங்கரியின் உரி புனைந்தார் திருமுன்பு மேவினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

கொண்டதொரு கல்எடுத்துக் குறிகூடும் வகை எறியஉண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடி வரும் வேட்கையோடும்கண்டருளும் கண்நுதலார் கருணை பொழிதிருநோக்கால்தொண்டர் எதிர் நெடும் விசும்பில் துணைவியோடும் தோன்றினார்.
சொற்பிரிப்பு
கொண்டது ஒரு கல் எடுத்துக் குறி கூடும் வகை எறியஉண்டிவினை ஒழித்து அஞ்சி ஓடிவரும் வேட்கையொடும்கண்டு அருளும் கண்நுதலார் கருணைபொழி திருநோக்கால்தொண்டர் எதிர் நெடுவிசும்பில் துணைவியொடும் தோன்றினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

மழ விடைமேல் எழுந்தருளி வந்த ஒரு செயலாலேகழல் அடைந்த திருத்தொண்டர் கண்டு கரம் குவித்து இறைஞ்சிவிழ அருள் நோக்கு அளித்து அருளி மிக்க சிவலோகத்தில்பழ அடிமைப் பாங்கு அருளிப் பரமர் எழுந்து அருளினார்.
சொற்பிரிப்பு
மழவிடைமேல் எழுந்தருளி வந்தது ஒரு செயலாலேகழல் அடைந்த திருத்தொண்டர் கண்டு கரம் குவித்து இறைஞ்சிவிழ அருள்நோக்கு அளித்தருளி மிக்க சிவலோகத்தில்பழ அடிமைப் பாங்கு அருளிப் பரமர் எழுந்தருளினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

ஆதியார் தம்மை நாளும் கல் எறிந்து அணுகப் பெற்றகோதில் சீர்த் தொண்டர் கொண்ட குறிப்பினை அவர்க்கு நல்கும்சோதியார் அறிதல் அன்றித் துணிவது என் அவர்தாள் சூடித்தீதினை நீக்கல் உற்றேன் சிறப்புலியாரைச் செப்பி.
சொற்பிரிப்பு
ஆதியார் தம்மை நாளும் கல் எறிந்து அணுகப் பெற்றகோதில் சீர்த் தொண்டர் கொண்ட குறிப்பினை அவர்க்கு நல்கும்சோதியார் அறிதல் அன்றித் துணிவது என்? அவர் தாள் சூடித்தீதினை நீக்கல் உற்றேன் சிறப்புலியாரைச் செப்பி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.