திருமுறை 12 · 12.039 · 6

சோமாசிமாற நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

சூதம் பயிலும் பொழில் அம்பரில் தூய வாய்மைவேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர்ஏதம் புரியும் எயில் செற்றவர்க்கு அன்பர் வந்தால்பாதம் பணிந்தார் அமுது ஊட்டு(ம்) நற் பண்பின் மிக்கார்.
சொற்பிரிப்பு
சூதம் பயிலும் பொழில் அம்பரில் தூய வாய்மைவேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர்ஏதம் புரியும் எயில் செற்றவர்க்கு அன்பர் வந்தால்பாதம் பணிந்து ஆர் அமுது ஊட்டு நல் பண்பின் மிக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

யாழின் மொழியாள் தனிப் பாகரைப் போற்றும் யாகம்ஊழின் முறைமை வழுவாது உலகங்கள் ஆனஏழும் உவப்பப் புரிந்து இன்புறச் செய்த பேற்றால்வாழும் திறம் ஈசர் மலர்க் கழல் வாழ்த்தல் என்பார்.
சொற்பிரிப்பு
யாழின் மொழியாள் தனிப் பாகரைப் போற்றும் யாகம்ஊழின் முறைமை வழுவாது உலகங்கள் ஆனஏழும் உவப்பப் புரிந்து இன்புறச் செய்த பேற்றால்வாழும் திறம் ஈசர் மலர்க் கழல் வாழ்த்தல் என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர் என்றால்அத் தன்மையர் தாம் நமை ஆள்பவர் என்று கொள்வார்சித்தம் தெளியச் சிவன் அஞ்செழுத்து ஓதும் வாய்மைநித்தம் நியமம் எனப் போற்றும் நெறியில் நின்றார்.
சொற்பிரிப்பு
எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர் என்றால்அத்தன்மையர் தாம் நமை ஆள்பவர் என்று கொள்வார்சித்தம் தெளியச் சிவன் அஞ்செழுத்து ஓதும் வாய்மைநித்தம் நியமம் எனப் போற்றும் நெறியில் நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

சீரும் திருவும் பொலியும் திருவாரூர் எய்திஆரம் திகழ் மார்பின் அணுக்கவன் தொண்டர்க்கு அன்பால்சாரும் பெரு நண்பு சிறப்ப அடைந்து தங்கிப்பாரும் விசும்பும் பணியும் பதம் பற்றி உள்ளார்.
சொற்பிரிப்பு
சீரும் திருவும் பொழியும் திருஆரூர் எய்திஆரம் திகழ் மார்பின் அணுக்க வன்தொண்டர்க்கு அன்பால்சாரும் பெருநண்பு சிறப்ப அடைந்து தங்கிப்பாரும் விசும்பும் பணியும் பதம் பற்றி உள்ளார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

துன்றும் புலன் ஐந்துடன் ஆறு தொகுத்த குற்றம்வென்று இங்கு இது நல்நெறி சேரும் விளக்கம் என்றேவன் தொண்டர் பாதம் தொழுதான சிறப்பு வாய்ப்பஎன்றும் நிலவும் சிவலோ கத்தில் இன்பம் உற்றார்.
சொற்பிரிப்பு
துன்றும் புலன் ஐந்துடன் ஆறு தொகுத்த குற்றம்வென்று இங்கு இது நன் நெறி சேரும் விளக்கம்” என்றேவன்றொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்பஎன்றும் நிலவும் சிவ லோகத்தில் இன்பம் உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பணையும் தடமும் புடை சூழும் ஒற்றியூரில் பாகத்தோர்துணையும் தாமும் பிரியாதார் தோழத்தம் பிரானாரைஇணையும் கொங்கைச் சங்கிலியார் எழில் மென்பணை தோள் எய்துவிக்கஅணையும் ஒருவர் சரணமே அரணமாக அடைந்தோமேவம்பறா வரிவண்டு சருக்கம் முற்றிற்று.
சொற்பிரிப்பு
பணையும் தடமும் புடை சூழும் ஒற்றியூரில் பாகத்து ஓர்துணையும் தாமும் பிரியாதார் தோழத் தம்பிரானாரைஇணையும் கொங்கைச் சங்கிலியார் எழில் மென் பணைத்தோள் எய்துவிக்கஅணையும் ஒருவர் சரணமே அரணம் ஆக அடைந்தோமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.