திருமுறை 12 · 12.034 · 1256

திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப்பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்தழுதசீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர்பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்.
சொற்பிரிப்பு
வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப்பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்தழுதசீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர்பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

சென்னி வளர் மதி அணிந்த சிலம்பு அணி சேவடியார் தம்மன்னிய சைவத் துறையின் வழி வந்த குடி வளவர்பொன்னி வளம் தரு நாடு பொலிவு எய்த நிலவியதால்கன்னி மதில் மருங்கு முகில் நெருங்கும் கழுமல மூதூர்.
சொற்பிரிப்பு
சென்னி வளர் மதி அணிந்த சிலம்பு அணி சேவடியார் தம்மன்னிய சைவத்துறையின் வழி வந்த குடி வளவர்பொன்னி வளம் தருநாடு பொலிவு எய்த நிலவியதால்கன்னி மதில் மருங்கு முகில் நெருங்கு கழுமல மூதூர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அப் பதி தான் அந்தணர் தம் கிடைகள் அரு மறை முறையேசெப்பும் ஒலி வளர் பூகச் செழும் சோலை புறம் சூழஒப்பில் நகர் ஓங்குதலால் உகக் கடை நாள் அன்றியேஎப்பொழுதும் கடல் மேலே மிதப்பது என இசைந்து உளதால்.
சொற்பிரிப்பு
அப்பதிதான் அந்தணர் தம் கிடைகள் அருமறை முறையேசெப்பும் ஒலி வளர் பூகச் செழுஞ்சோலை புறஞ் சூழஒப்பில் நகர் ஓங்குதலால் உகக் கடைநாள் அன்றியேஎப்பொழுதும் கடல் மேலே மிதப்பது என இசைந்து உளதால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அரி அயனே முதல் அமரர் அடங்க எழும் வெள்ளங்கள்விரி சுடர் மா மணிப் பதணம் மீது எறிந்த திரை வரைகள்புரிசை முதல் புறம் சூழ்வ பொங்கு ஓதம் கடை நாளில்வரி அரவ மந்தரம் சூழ் வடம் போல வயங்குமால்.
சொற்பிரிப்பு
அரி அயனே முதல் அமரர் அடங்க எழும் வெள்ளங்கள்விரிசுடர் மாமணிப் பதணம் மீது எறிந்த திரைவரைகள்புரிசை முதல் புறம் சூழ்வ பொங்கு ஓதம் கடைநாளில்வரி அரவம் மந்தரம் சூழ் வடம் போல வயங்குமால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வளம் பயிலும் புறம் பணைப் பால் வாசப் பாசடை மிடைந்ததளம் பொலியும் புனல் செந்தாமரைச் செவ்வித் தட மலரால்களம் பயில் நீர்க் கடல் மலர்வது ஒரு பரிதி எனக் கருதிஇளம் பரிதி பல மலர்ந்தாற் போல்ப உள இலஞ்சி பல.
சொற்பிரிப்பு
வளம் பயிலும் புறம்பணைப் பால் வாசப் பாசடை மிடைந்ததளம் பொலியும் புனல் செந்தாமரைச் செவ்வித் தட மலரால்களம்பயில் நீர்க் கடல் மலர்வது ஒரு பரிதி எனக் கருதிஇளம்பரிதி பல மலர்ந்தால் போல்ப உள இலஞ்சி பல.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

உளம் கொள் மறை வேதியர் தம் ஓமத் தூமத்து இரவும்கிளர்ந்த திரு நீற்று ஒளியில் கெழுமிய நண் பகலும் அலர்ந்துஅளந்து அறியாப் பல்லூழி ஆற்றுதலால் அகல் இடத்துவிளங்கிய அம்மூதூர்க்கு வேறு இரவும் பகலும் மிகை.
சொற்பிரிப்பு
உளம்கொள் மறை வேதியர் தம் ஓம தூமத்து இரவும்கிளர்ந்த திருநீற்று ஒளியில் கெழுமிய நண்பகலும் மலர்ந்துஅளந்து அறியாப் பல்ஊழி ஆற்றுதலால் அகல் இடத்துவிளங்கிய அம் மூதூர்க்கு வேறு இரவும் பகலும் மிகை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பரந்த விளைவயல் செய்ய பங்கயமாம் பொங்கு எரியில்வரம்பில் வளர் தேமாவின் கனி கிழிந்த மது நறு நெய்நிரந்தரம் நீள் இலைக் கடையால் ஒழுகுதலால் நெடிது அவ்வூர்மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என மணந்து உளதால்.
சொற்பிரிப்பு
பரந்த விளைவயல் செய்ய பங்கயமாம் பொங்கு எரியில்வரம்பில் வளர் தேமாவின் கனி கிழிந்த மது நறுநெய்நிரந்தரம் நீள் இலைக் கடையால் ஒழுகுதலால் நெடிது அவ்ஊர்மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என மணந்து உளதால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வேலை அழல் கதிர் படிந்த வியன் கங்குல் வெண்மதியம்சோலை தொறும் நுழைந்து புறப்படும் பொழுது துதைந்த மலர்ப்பால் அணைந்து மதுத் தோய்ந்து தாது அளைந்து பயின்று அந்திமாலை எழும் செவ்வொளிய மதியம் போல் வதியுமால்.
சொற்பிரிப்பு
வேலை அழல் கதிர் படிந்த வியன் கங்குல் வெண்மதியம்சோலை தொறும் நுழைந்து புறப்படும் பொழுது துதைந்த மலர்ப்பால் அணைந்து மதுத் தோய்ந்து தாது அளைந்து பயின்று அந்திமாலை எழும் செவ்ஒளிய மதியம்போல் வதியுமால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

காமர் திருப்பதி அதன் கண் வேதியர் போல் கடி கமழும்தாமரையும் புல்லிதழும் தயங்கிய நூலும் தாங்கித்தூமரு நுண் துகள் அணிந்து துளி வருகண்ணீர் ததும்பித்தேமரு மென் சுரும்பு இசையால் செழும் சாமம் பாடுமால்.
சொற்பிரிப்பு
காமர் திருப்பதி அதன்கண் வேதியர்போல் கடிகமழும்தாமரையும் புல் இதழும் தயங்கிய நூலும் தாங்கித்தூமரு நுண் துகள் அணிந்து துளிவரு கண் நீர் ததும்பித்தேமரு மென் சுரும்பு இசையால் செழுஞ்சாமம் பாடுமால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

புனைவார் பொன் குழை அசையப் பூந்தானை பின் போக்கிவினை வாய்ந்த தழல் வேதி மெழுக்குற வெண் சுதை ஒழுக்கும்கனை வானமுகில் கூந்தல் கதிர் செய் வடமீன் கற்பின்மனை வாழ்க்கைக் குலமகளிர் வளம் பொலிவ மாடங்கள்.
சொற்பிரிப்பு
புனைவார் பொன் குழை அசையப் பூந்தானை பின் போக்கிவினைவாய்ந்த தழல் வேதி மெழுக்கு உற வெண் சுதை ஒழுக்கும்கனைவானம் முகில்கூந்தல் கதிர் செய் வடமீன் கற்பின்மனை வாழ்க்கைக் குலமகளிர் வளம் பொலிவ மாடங்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

வேள்வி புரி சடங்கு அதனை விளையாட்டுப் பண்ணை தொறும்பூழியுற வகுத்து அமைத்துப் பொன் புனை கிண்கிணி ஒலிப்பஆழி மணிச் சிறு தேர் ஊர்ந்த அவ்விரதப் பொடியாடும்வாழி வளர் மறைச் சிறார் நெருங்கியுள மணி மறுகு.
சொற்பிரிப்பு
வேள்வி புரி சடங்கு அதனை விளையாட்டுப் பண்ணைதொறும்பூழி உற வகுத்து அமைத்துப் பொன் புனை கிண்கிணி ஒலிப்பஆழி மணிச் சிறுதேர் ஊர்ந்து அவ்இரதப் பொடிஆடும்வாழி வளர் மறைச்சிறார் நெருங்கி உள மணிமறுகு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

விடு சுடர் நீள் மணி மறுகின் வெண் சுதை மாளிகை மேகம்தொடு குடுமி நாசி தொறும் தொடுத்த கொடி சூழ் கங்குல்உடுஎனு நாள் மலர் அலர உறு பகலில் பல நிறத்தால்நெடு விசும்பு தளிப்பது என நெருங்கியுள மருங்கு எல்லாம்.
சொற்பிரிப்பு
விடுசுடர் நீள் மணிமறுகின் வெண்சுதை மாளிகை மேகம்தொடு குடுமி நாசி தொறும் தொடுத்த கொடி சூழ் கங்குல்உடு எனும் நாண்மலர் அலர உறுபகலில் பல நிறத்தால்நெடுவிசும்பு தளிர்ப்பது என நெருங்கி உள மருங்கு எல்லாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

மடை எங்கும் மணிக்குப்பை வயல் எங்கும் கயல் வெள்ளம்புடை எங்கும் மலர்ப் பிறங்கல் புறம் எங்கும் மகப் பொலிவுகிடை எங்கும் கலைச் சூழல் கிளர் எங்கும் முரல் அளிகள்இடை எங்கும் முனிவர் குழாம் எயில் எங்கும் பயில் எழிலி.
சொற்பிரிப்பு
மடை எங்கும் மணிக்குப்பை வயல் எங்கும் கயல் வெள்ளம்புடை எங்கும் மலர்ப் பிறங்கல் புறம் எங்கும் மகப்பொலிவுகிடை எங்கும் கலைச்சூழல் கிளர்வு எங்கும் முரல்அளிகள்;இடை எங்கும் முனிவர் குழாம் எயில் எங்கும் பயில் எழிலி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

பிரமபுரம் வேணுபுரம் புகலிபெரு வெங்குரு நீர்ப்பொருவில் திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன்வருபுறவம் சண்பை நகர் வளர் காழி கொச்சை வயம்பரவு திருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப் பெயர்த்தால்.
சொற்பிரிப்பு
பிரமபுரம் வேணுபுரம் புகலி பெரு வெங்குரு நீர்ப்பொருவில் திருத்தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன்வரு புறவம் சண்பைநகர் வளர் காழி கொச்சைவயம்பரவு திருக்கழுமலமாம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

அப்பதியின் அந்தணர் தம் குடி முதல்வர் ஆசில் மறைகைப்படுத்த சீலத்துக் கவுணியர் கோத்திரம் விளங்கச்செப்பும் நெறி வழிவந்தார் சிவபாத இருதயர் என்றுஇப் புவி வாழத் தவம் செய் இயல்பினார் உளர் ஆனார்.
சொற்பிரிப்பு
அப்பதியின் அந்தணர் தம் குடி முதல்வர் ஆசில் மறைகைப்படுத்த சீலத்துக் கவுணியர் கோத்திரம் விளங்கச்செப்புநெறி வழி வந்தார் சிவபாத இருதயர் என்றுஇப்புவி வாழத் தவம் செய் இயல்பினார் உளர் ஆனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

மற்றவர் தம் திரு மனையார் வாய்ந்த மரபின் வருபெற்றியினார் எவ்வுலகும் பெறற்கு அரிய பெருமையினார்பொற்புடைய பகவதியார் எனப் போற்றும் பெயர் உடையார்கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்து அமைந்தார்.
சொற்பிரிப்பு
மற்றவர் தம் திருமனையார் வாய்ந்த மறை மரபின் வருபெற்றியினார் எவ்உலகும் பெறற்கு அரிய பெருமையினார்பொற்புடைய பகவதியார் எனப் போற்றும் பெயர் உடையார்;கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்து அமைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

மரபு இரண்டும் சைவ நெறி வழிவந்த கேண்மையராய்அரவு அணிந்த சடை முடியார் அடியலால் அறியாதுபரவு திருநீற்று அன்பு பாலிக்கும் தன்மையராய்விரவு மறை மனை வாழ்க்கை வியப்பு எய்த மேவு நாள்.
சொற்பிரிப்பு
மரபு இரண்டும் சைவநெறி வழிவந்த கேண்மையினார்அரவு அணிந்த சடை முடியார் அடி அலால் அறியாதுபரவு திருநீற்று அன்பு பாலிக்கும் தன்மையராய்விரவு மறை மனைவாழ்க்கை வியப்பு எய்த மேவுநாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

மேதினி மேல் சமண் கையர் சாக்கியர் தம் பொய்ம்மிகுத்தேஆதி அருமறை வழக்கம் அருகி அரன் அடியார் பால்பூதி சாதன விளக்கம் போற்றல் பெறாது ஒழியக் கண்டுஏதமில் சீர் சிவபாத இருதயர் தாம் இடர் உழந்தார்.
சொற்பிரிப்பு
மேதினி மேல் சமண் கையர் சாக்கியர் தம் பொய்ம் மிகுத்தேஆதி அருமறை வழக்கம் அருகி அரன் அடியார் பால்பூதி சாதன விளக்கம் போற்றல் பெறாது ஒழியக் கண்டுஏதமில் சீர்ச் சிவபாத இருதயர் தாம் இடர் உழந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

மனை அறத்தில் இன்பம் உறு மகப் பெறுவான் விரும்புவார்அனையநிலை தலை நின்றே ஆடிய சேவடிக் கமலம்நினைவுற முன் பர சமயம் நிராகரித்து நீறு ஆக்கும்புனை மணிப்பூண் காதலனைப் பெறப் போற்றும் தவம் புரிந்தார்.
சொற்பிரிப்பு
மனை அறத்தில் இன்பம் உறு மகப்பெறுவான் விரும்புவார்அனைய நிலை தலைநின்றே ஆடிய சேவடிக் கமலம்நினைவுற முன் பரசமயம் நிராகரித்து நீறு ஆக்கும்புனைமணிப் பூண் காதலனைப் பெறப் போற்றும் தவம் புரிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

பெருத்து எழும் அன்பால் பெரிய நாச்சியார் உடன் புகலித்திருத்தோணி வீற்றிருந்தார் சேவடிக் கீழ் வழிபட்டுக்கருத்து முடிந்திடப் பரவும் காதலியார் மணி வயிற்றில்உருத் தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளதாக.
சொற்பிரிப்பு
பெருத்தெழும் அன்பால் பெரிய நாச்சியார் உடன் புகலித்திருத்தோணி வீற்றிருந்தார் சேவடிக் கீழ் வழிபட்டுக்கருத்து முடிந்திடப் பரவும் காதலியார் மணிவயிற்றில்உருத்தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளதாக.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

ஆளுடையாளுடன் தோணி அமர்ந்த பிரான் அருள் போற்றிமூளும் மகிழ்ச்சியில் தங்கள் முதல் மறைநூல் முறைச் சடங்குநாள் உடைய ஈரைந்து திங்களினும் நலம் சிறப்பக்கேளிருடன் செயல் புரிந்து பெரிதின்பம் கிளர்வுறுநாள்.
சொற்பிரிப்பு
ஆள் உடையாள் உடன் தோணி அமர்ந்த பிரான் அருள் போற்றிமூளும் மகிழ்ச்சியில் தங்கள் முதல் மறைநூல் முறைச் சடங்குநாள் உடைய ஈர்ஐந்து திங்களினும் நலம் சிறப்பக்கேளிர் உடன் செயல் புரிந்து பேரின்பம் கிளர்வுறும் நாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

அருக்கன் முதல் கோன் அனைத்தும் அழகிய உச்சங்களிலேபெருக்க வலியுடன் நிற்கப் பேணிய நல்லோரை எழத்திருக்கிளரும் ஆதிரை நாள் திசை விளங்கப் பரசமயத்தருக்கொழியச் சைவம் முதல் வைதிகமும் தழைத்து ஓங்க.
சொற்பிரிப்பு
அருக்கன் முதல் கோள் அனைத்தும் அழகிய உச்சங்களிலேபெருக்க வலி உடன் நிற்கப் பேணிய நல் ஓரை எழத்திருக்கிளரும் ஆதிரை நாள் திசை விளங்கப் பரசமயத்தருக்கு ஒழியச் சைவ முதல் வைதிகமும் தழைத்து ஓங்க.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

தொண்டர் மனம் களி சிறப்பத் தூய திருநீற்று நெறிஎண் திசையும் தனி நடப்ப ஏழ் உலகும் குளிர் தூங்கஅண்டர் குலம் அதிசயிப்ப அந்தணர் ஆகுதி பெருகவண் தமிழ் செய்தவம் நிரம்ப மாதவத்தோர் செயல் வாய்ப்ப.
சொற்பிரிப்பு
தொண்டர் மனம் களி சிறப்பத் தூய திருநீற்று நெறிஎண்டிசையும் தனி நடப்ப ஏழ்உலகும் குளிர் தூங்கஅண்டர் குலம் அதிசயிப்ப அந்தணர் ஆகுதி பெருக,வண்தமிழ் செய் தவம் நிரம்ப மாதவத்தோர் செயல் வாய்ப்ப.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

திசை அனைத்தின் பெருமை எலாம் தென்திசையே வென்று ஏறமிசை உலகும் பிறவுலகும் மேதினியே தனி வெல்லஅசைவில் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறைவெல்லஇசை முழுதும் மெய் அறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக.
சொற்பிரிப்பு
திசை அனைத்தின் பெருமை எலாம் தென்திசையே வென்று ஏறமிசை உலகும் பிற உலகும் மேதினியே தனி வெல்லஅசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்லஇசை முழுதும் மெய்அறிவும் இடங்கொள்ளும் நிலை பெருக.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

தாளுடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெறநாளுடைய நிகழ்காலம் எதிர்காலம் நவை நீங்கவாளுடைய மணிவீதி வளர்காழிப் பதிவாழஆளுடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக.
சொற்பிரிப்பு
தாள் உடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெறநாள் உடைய நிகழ்காலம் எதிர்கால நவை நீங்கவாள் உடைய மணிவீதி வளர்காழிப் பதி வாழஆள்உடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

அவம் பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பரசமயப்பவம் பெருக்கும் புரை நெறிகள் பாழ்பட நல் ஊழி தொறும்தவம் பெருக்கும் சண்பையிலே தாவில் சராசரங்கள் எலாம்சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் செய்தார்.
சொற்பிரிப்பு
அவம் பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பரசமயப்பவம் பெருக்கும் புரை நெறிகள் பாழ்பட நல் ஊழி தொறும்தவம் பெருக்கும் சண்பையிலே தாவில் சர அசரங்கள் எலாம்சிவம் பெருக்கும் பிள்ளையார் திருஅவதாரஞ் செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

அப்பொழுது பொற்புறு திருக்கழு மலத்தோர்எப்பெயரினோரும் அயல் எய்தும் இடையின்றிமெய்ப்படு மயிர்ப் புளகம் மேவி அறியாமேஒப்பில் களி கூர்வதோர் உவப்புற உரைப்பார்.
சொற்பிரிப்பு
அப்பொழுது பொற்புறு திருக்கழுமலத்தோர்எப்பெயரினோரும் அயல் எய்தும் இடைஇன்றிமெய்ப்படு மயிர்ப்புளகம் மேவி அறியாமேஒப்பில் களி கூர்வதொர் உவப்புற உரைப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

சிவன் அருள் எனப் பெருகு சித்தம் மகிழ் தன்மைஇவண் இது நமக்கு வர எய்தியது என் என்பார்கவுணியர் குலத்தில் ஒரு காதலன் உதித்தான்அவன் வருநிமித்தம் இது என்று அதிசயித்தார்.
சொற்பிரிப்பு
சிவன் அருள் எனப் பெருகு சித்த மகிழ் தன்மைஇவண் இது நமக்கு வர எய்தியது என் என்பார்கவுணியர் குலத்தில் ஒரு காதலன் உதித்தான்அவன் வரு நிமித்தம் இது என்று அதிசயித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

பூ முகை அவிழ்ந்து மணம் மேவும் பொழில் எங்கும்தே மருவு தாதோடு துதைந்த திசை எல்லாம்தூ மருவு சோதி விரியத் துகள் அடக்கிமா மலய மாருதமும் வந்து அசையும் அன்றே.
சொற்பிரிப்பு
பூ முகை அவிழ்ந்து மணம் மேவு பொழில் எங்கும்தேமருவு தாதொடு துதைந்த திசைஎல்லாம்தூமருவு சோதி விரியத் துகள் அடக்கிமாமலய மாருதமும் வந்து அசையும் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

மேலை இமையோர்களும் விருப்பொடு கரப்பில்சோலை மலர் போல மலர் மா மழை சொரிந்தேஞாலம் மிசை வந்து வளர் காழி நகர் மேவும்சீல மறையோர்கள் உடன் ஓம வினை செய்தார்.
சொற்பிரிப்பு
மேலை இமையோர்களும் விருப்பொடு கரப்பு இல்சோலைமலர் போல மலர் மாமழை சொரிந்தேஞாலம் மிசை வந்து வளர் காழிநகர் மேவும்சீல மறையோர்கள் உடன் ஓமவினை செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

31

பூத கண நாதர் புவி வாழ அருள் செய்தநாதன் அருளின் பெருமை கண்டு நலம் உய்ப்பார்ஓதும் மறையோர் பிறிது உரைத்திடினும் ஓவாவேத மொழியால் ஒலி விளங்கி எழும் எங்கும்.
சொற்பிரிப்பு
பூத கணநாதர் புவி வாழ அருள் செய்தநாதன் அருளின் பெருமை கண்டு நலம் உய்ப்பார்;ஓது மறையோர் பிறிது உரைத்திடினும் ஓவாவேத மொழியால் ஒலி விளங்கி எழும் எங்கும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

32

பயன் தருவ பஃறருவும் வல்லிகளும் மல்கித்தயங்கு புனலும் தெளிவு தண்மையுடன் நண்ணும்வயங்கு ஒளி விசும்பு மலினம் கழியும் மாறாநயம் புரிவ புள் ஒலிகள் நல்ல திசை எல்லாம்.
சொற்பிரிப்பு
பயன் தருவ பல் தருவும் வல்லிகளும் மல்கித்தயங்கு புனலும் தெளிவ தண்மை உடன் நண்ணும்வயங்கு ஒளி விசும்பு மலினம் கழியும் மாறாநயம் புரிவ புள் ஒலிகள் நல்ல திசை எல்லாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

33

அங்கண் விழவில் பெருகு சண்பை அகல் மூதூர்ச்சங்கம் படகம் கருவி தாரை முதலானஎங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும்மங்கல முழக்கு ஒலி மலிந்த மறுகு எல்லாம்.
சொற்பிரிப்பு
அங்கண் விழவில் பெருகு சண்பை அகல் மூதூர்ச்சங்கம் படகம் கருவி தாரை முதலானஎங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும்மங்கல முழக்கு ஒலி மலிந்த மறுகு எல்லாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

34

இரும் புவனம் இத்தகைமை எய்த அவர் தம்மைத்தரும் குல மறைத் தலைவர் தம் பவன முன்றில்பெரும் களி வியப்பொடு பிரான் அருளினாலேஅரும் திரு மகப் பெற அணைந்த அணி செய்வார்.
சொற்பிரிப்பு
இரும் புவனம் இத்தகைமை எய்த அவர் தம்மைத்தருங்குல மறைத்தலைவர் தம் பவனம் முன்றில்பெருங்களி வியப்பொடு பிரான் அருளினாலேஅருந்திரு மகப்பெற அணைந்த அணி செய்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

35

காதல் புரி சிந்தை மகிழக் களி சிறப்பார்மீது அணியும் நெய் அணி விழாவொடு திளைப்பார்சூத நிகழ் மங்கல வினைத் துழனி பொங்கச்சாதக முறைப் பல சடங்கு வினை செய்வார்.
சொற்பிரிப்பு
காதல் புரி சிந்தை மகிழக் களி சிறப்பார்;மீதணியும் நெய் அணி விழாவொடு திளைப்பார்;சூதநிகழ் மங்கல வினைத் துழனி பொங்கச்சாதக முறைப் பல சடங்கு வினை செய்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

36

மா மறை விழுக்குல மடந்தையர்கள் தம்மில்தாம் உறு மகிழ்ச்சியொடு சாயல் மயில் என்னத்தூ மணி விளக்கொடு சுடர்க் குழைகள் மின்னக்காமர் திரு மாளிகை கவின் பொலிவு செய்வார்.
சொற்பிரிப்பு
மாமறை விழுக்குல மடந்தையர்கள் தம்மில்தாமுறு மகிழ்ச்சியொடு சாயல் மயில் என்னத்தூமணி விளக்கொடு சுடர்குழைகள் மின்னக்காமர் திருமாளிகை கவின் பொலிவு செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

37

சுண்ணமொடு தண் மலர் துதைந்த துகள் வீசிஉண்ணிறை விருப்பினுடன் ஓகை உரை செய்வார்வெண் முளைய பாலிகைகள் வேதி தொறும் வைப்பார்புண்ணிய நறும் புனல் கொள் பொன் குடம் நிரைப்பார்.
சொற்பிரிப்பு
சுண்ணமொடு தண்மலர் துதைந்த துகள் வீசிஉண்ணிறை விருப்பினுடன் ஓகை உரை செய்வார்வெண்முளைய பாலிகைகள் வேதி தொறும் வைப்பார்புண்ணிய நறும்புனல் கொள் பொற்குடம் நிரைப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

38

செம் பொன் முதலான பல தான வினை செய்வார்நம்பர் அடியார் அமுது செய்ய நலம் உய்ப்பார்வம்பலர் நறும் தொடையல் வண்டொடு தொடுப்பார்நிம்பம் முதலான கடி நீடு வினை செய்வார்.
சொற்பிரிப்பு
செம்பொன் முதலான பல தான வினை செய்வார்நம்பர் அடியார் அமுது செய்ய நலம் உய்ப்பார்வம்பலர் நறுந்தொடையல் வண்டொடு தொடுப்பார்நிம்பம் முதலான கடி நீடு வினை செய்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

39

ஐயவி உடன் பல அமைத்த புகையாலும்நெய் அகில் நறுங்குறை நிறைத்த புகையாலும்வெய்ய தழல் ஆகுதி விழுப் புகையினாலும்தெய்வ மணம் நாறவரு செய் தொழில் விளைப்பார்.
சொற்பிரிப்பு
ஐயவி உடன் பல அமைத்த புகையாலும்நெய் அகில் நறும் குறை நிறைத்த புகையாலும்வெய்ய தழல் ஆகுதி விழுப் புகையினாலும்தெய்வமணம் நாற வரு செய்தொழில் விளைப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

40

ஆய பல செய் தொழில்கள் அன்று முதல் விண்ணோர்நாயகன் அருள் பெருமை கூறும் நலம் எய்ததூய திரு மாமறை தொடர்ந்த நடை நூலின்மேய விதி ஐயிரு தினத்தினும் விளைத்தார்.
சொற்பிரிப்பு
ஆய பல செய்தொழில்கள் அன்று முதல் விண்ணோர்நாயகன் அருள் பெருமை கூறு நலம் எய்தத்தூய திரு மாமறை தொடர்ந்த நடை நூலின்மேய விதி ஐயிரு தினத்தினும் விளைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

41

நாம கரணத்து அழகு நாள் பெற நிறுத்திச்சேம உதயப் பரிதியில் திகழ் பிரானைத்தாமரை மிசைத் தனி முதல் குழவி என்னத்தூ மணி நிரைத்து அணிசெய் தொட்டில் அமர்வித்தார்
சொற்பிரிப்பு
நாமகரணத்து அழகு நாள் பெற நிறுத்திச்சேம உதயப்பரிதியில் திகழ் பிரானைத்தாமரை மிசைத் தனி முதல் குழவி என்னத்தூமணி நிரைத்து அணிசெய் தொட்டில் அமர்வித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

42

பெரு மலை பயந்த கொடி பேணும் முலையின் பால்அரு மறை குழைத்த அமுது செய்து அருளுவாரைத்தருமிறைவியார் பரமர் தாள் பரவும் அன்பேதிருமுலை சுரந்து அமுது செய்து அருளுவித்தார்.
சொற்பிரிப்பு
பெருமலை பயந்த கொடி பேணு முலையின்பால்அருமறை குழைத்து அமுது செய்தருளுவாரைத்தரும் இறைவியார் பரமர் தாள் பரவும் அன்பேதிருமுலை சுரந்து அமுது செய்து அருளுவித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

43

ஆறுலவு செய்ய சடை ஐயர் அருளாலேபேறு உலகினுக்கு என வரும் பெரியவர்க்குவேறு பல காப்பு மிகை என்று அவை விரும்பார்நீறு திரு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார்.
சொற்பிரிப்பு
ஆறு உலவு செய்ய சடை ஐயர் அருளாலேபேறு உலகினுக்கு என வரும் பெரியவர்க்குவேறு பல காப்பு மிகை என்று அவை விரும்பார்நீறு திரு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

44

தாயர் திரு மடித்தலத்தும் தயங்கு மணித் தவிசினிலும்தூய சுடர்த் தொட்டிலினும் தூங்கு மலர்ச் சயனத்தும்சேய பொருள் திருமறையும் தீம் தமிழும் சிறக்க வருநாயகனைத் தாலாட்டு நலம் பல பாராட்டினார்.
சொற்பிரிப்பு
தாயர் திருமடித் தலத்தும் தயங்கு மணித் தவிசினிலும்தூய சுடர்த் தொட்டிலினும் தூங்கு மலர்ச் சயனத்தும்சேய பொருள் திருமறையும் தீந்தமிழும் சிறக்க வருநாயகனைத் தாலாட்டு நலம் பல பாராட்டினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

45

வரும் முறைமைப் பருவத்தில் வளர் புகலிப் பிள்ளையார்அரு மறைகள் தலை எடுப்ப ஆண்ட திருமுடி எடுத்துப்பெரு மழுவர் தொண்டு அல்லால் பிறிது இசையோம் என்பார் போல்திருமுக மண்டலம் அசையச் செங்கீரை ஆடினார்.
சொற்பிரிப்பு
வரு முறைமைப் பருவத்தில் வளர் புகலிப் பிள்ளையார்அருமறைகள் தலை எடுப்ப ஆண்ட திருமுடி எடுத்துப்பெருமழுவர் தொண்டு அல்லால் பிறிது இசையோம் என்பார் போல்திருமுக மண்டலம் அசையச் செங்கீரை ஆடினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

46

நாம் அறியோம் பர சமயம் உலகிர் எதிர் நாடாதுபோம் அகல என்று அங்கை தட்டுவதும் புனிதன் பால்காமரு தாளம் பெறுதற்கு ஒத்துவதும் காட்டுவ போல்தாமரைச் செங்கை களினால் சப்பாணி கொட்டினார்.
சொற்பிரிப்பு
நாம் அறியோம் பரசமயம் உலகிர் எதிர் நாடாதுபோம் அகல என்று அங்கை தட்டுவதும் புனிதன்பால்காமரு தாளம் பெறுதற்கு ஒத்துவதும் காட்டுவபோல்தாமரைச் செங்கைகளினால் சப்பாணி கொட்டினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

47

விதி தவறுபடும் வேற்றுச் சமயங்கள் இடை விழுந்துகதி தவழ இரு விசும்பு நிறைந்த கடிவார் கங்கைநதி தவழும் சடை முடியார் ஞானம் அளித்திட உரியார்மதி தவழ் மாளிகை முன்றின் மருங்கு தவழ்ந்து அருளினார்.
சொற்பிரிப்பு
விதி தவறுபடும் வேற்றுச் சமயங்கள் இடைவிழுந்துகதி தவழ இருவிசும்பு நிறைந்த கடிவார் கங்கைநதி தவழும் சடைமுடியார் ஞானம் அளித்திட உரியார்மதிதவழ் மாளிகை முன்றில் மருங்கு தவழ்ந்தருளினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

48

சூழ வரும் பெருஞ்சுற்றத்துத் தோகையரும் தாதியரும்காழியர் தம் சீர் ஆட்டே கவுணியர் கற்பகமே என்றுஏழ் இசையும் பலகலையும் எவ் உலகும் தனித் தனியேவாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப.
சொற்பிரிப்பு
சூழவரும் பெரும் சுற்றத் தோகையரும் தாதியரும்காழியர் தம் சீராட்டே கவுணியர் கற்பகமே என்றுஏழிசையும் பலகலையும் எவ் உலகும் தனித்தனியேவாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

49

திரு நகையால் அழைத்து அவர் தம் செழு முகங்கள் மலர்வித்தும்வருமகிழ்வு தலை சிறப்ப மற்றவர் மேல் செலவுகைத்தும்உருகி மனம் கரைந்து அலைய உடன் அணைந்து தழுவியும் முன்பெருகிய இன்புற அளித்தார் பெரும் புகலிப் பிள்ளையார்.
சொற்பிரிப்பு
திருநகையால் அழைத்தவர் தம் செழுமுகங்கள் மலர்வித்தும்வருமகிழ்வு தலைசிறப்ப மற்றவர் மேல் செல உகைத்தும்உருகி மனம் கரைந்து அலைய உடன் அணைந்து தழுவியும் முன்பெருகிய இன்புற அளித்தார் பெரும்புகலிப் பிள்ளையார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

50

வளர் பருவ முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரிவண்டுஉளர் கரு மென் சுருள் குஞ்சியுடன் அலையச் செந்நின்றுகிளர் ஒலி கிண்கிணி எடுப்பக் கீழ்மை நெறிச் சமயங்கள்தளர் நடை இட்டு அறத் தாமும் தளர் நடை இட்டு அருளினார்.
சொற்பிரிப்பு
வளர் பருவம் முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரிவண்டுஉளர் கருமென் சுருள் குஞ்சி உடன் அலையச் செந்நின்றுகிளர்ஒலி கிண்கிணி எடுப்பக் கீழ்மை நெறிச் சமயங்கள்தளர் நடையிட்டு அறத் தாமும் தளர்நடையிட்டு அருளினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

51

தாதியர் தங்கைப் பற்றித் தளர் நடையின் அசைவு ஒழிந்துசோதி அணி மணிச் சதங்கை தொடுத்த வடம் புடை சூழ்ந்தபாத மலர் நிலம் பொருந்தப் பருவ முறை ஆண்டு ஒன்றின்மீது அணைய நடந்து அருளி விளையாடத் தொடங்கினார்.
சொற்பிரிப்பு
தாதியர் தம் கைப்பற்றித் தளர் நடையின் அசைவு ஒழிந்துசோதிஅணி மணிச்சதங்கை தொடுத்த வடம் புடை சூழ்ந்தபாதமலர் நிலம் பொருந்தப் பருவமுறை ஆண்டு ஒன்றின்மீது அணைய நடந்தருளி விளையாடத் தொடங்கினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

52

சிறு மணித்தேர் தொடர்ந்து உருட்டிச் செழுமணல் சிற்றில்கள் இழைநறு நுதல் பேதையார் மழுங்கு நடந்து ஓடி அடர்ந்து அழித்தும்குறு வியர்ப்புத் துளி அரும்பக் கொழும்பொடி ஆடிய கோலமறுகு இடைப் பேர் ஒளி பரப்ப வந்து வளர்ந்தருளினார்.
சொற்பிரிப்பு
சிறுமணித் தேர் தொடர்ந்து உருட்டிச் செழுமணல் சிற்றில்கள் இழைநறுநுதல் பேதையர் மருங்கே நடந்து ஓடி அடர்ந்து அழித்தும்குறு வியர்ப்புத் துளி அரும்பக் கொழும் பொடி ஆடிய கோலம்மறுகுஇடைப் பேரொளி பரப்ப வந்து வளர்ந்தருளினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

53

மங்கையோடு உடன் ஆகி வளர் தோணி வீற்று இருந்ததிங்கள் சேர் சடையார் தம் திரு அருட்குச் செய் தவத்தின்அங்குரம் போல் வளர்ந்து அருளி அரு மறையோடு உலகு உய்யஎங்கள் பிரான் ஈர் ஆண்டின் மேல் ஓர் ஆண்டு எய்து தலும்.
சொற்பிரிப்பு
மங்கையோடு உடன் ஆகி வளர் தோணி வீற்றிருந்ததிங்கள் சேர் சடையார் தம் திரு வருட்குச் செய்தவத்தின்அங்குரம் போல் வளர்ந்தருளி அருமறையோடு உலகு உய்யஎங்கள் பிரான் ஈர்ஆண்டின் மேல் ஓர் ஆண்டு எய்துதலும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

54

நாவாண்ட பல கலையும் நா மகளும் நலம் சிறப்பப்பூவாண்ட திருமகளும் புண்ணியமும் பொலிவு எய்தசேவாண்ட கொடியவர் தம் சிரபுரத்துச் சிறுவருக்குமூவாண்டில் உலகு உய்ய நிகழ்ந்தது அதனை மொழிகின்றேன்.
சொற்பிரிப்பு
நாவாண்ட பலகலையும் நா மகளும் நலஞ்சிறப்பப்பூவாண்ட திருமகளும் புண்ணியமும் பொலிவு எய்தச்சேவாண்ட கொடியவர் தம் சிரபுரத்துச் சிறுவருக்குமூவாண்டில் உலகு உய்ய நிகழ்ந்ததனை மொழிகின்றேன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

55

பண்டு திருவடி மறவாப் பான்மையோர் தமைப் பரமர்மண்டு தவ மறைக் குலத்தோர் வழிபாட்டின் அளித்து அருளத்தொண்டின் நிலை தர வருவார் தொடர்ந்த பிரிவு உணர்வு ஒருகால்கொண்டு எழலும் வெருக் கொண்டாற் போல் அழுவார் குறிப்பு அயலாய்.
சொற்பிரிப்பு
பண்டு திருவடி மறவாப் பான்மையோர் தமைப் பரமர்மண்டு தவ மறைக் குலத்தோர் வழிபாட்டின் அளித்து அருளத்தொண்டின் நிலை தர வருவார் தொடர்ந்த பிரிவு உணர்வு ஒருகால்கொண்டு எழலும் வெருக்கொண்டால் போல் அழுவார் குறிப்பு அயலாய்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

56

மேதகைய இந் நாளில் வேறு ஒரு நாள் வேத விதிநீதி முறைச் சடங்கு நெறி முடிப்பதற்கு நீர் ஆடத்தாதையார் போம் பொழுது தம் பெருமான் அருள் கூடச்சோதி மணி மனை முன்றில் தொடர்ந்து அழுது பின் சென்றார்.
சொற்பிரிப்பு
மேதகைய இந்நாளில் வேறு ஒருநாள் வேதவிதிநீதிமுறைச் சடங்கு நெறி முடிப்பதற்கு நீர் ஆடத்தாதையார் போம் பொழுது தம் பெருமான் அருள் கூடச்சோதிமணி மறை முன்றில் தொடர்ந்து அழுது பின் சென்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

57

பின் சென்ற பிள்ளையார் தமை நோக்கிப் பெருந்தவத்தோர்முன்செல்கை தனை ஒழிந்து முனிவார் போல் விலக்குதலும்மின் செய் பொலங் கிண் கிணிக் கால் கொட்டி அவர் மீளாமைஉன் செய்கை இது ஆகில் போ என்று அங்கு உடன் சென்றார்.
சொற்பிரிப்பு
பின் சென்ற பிள்ளையார் தமை நோக்கிப் பெருந்தவத்தோர்முன் செல்கை தனை ஒழிந்து முனிவார்போல் விலக்குதலும்மின்செய் பொலம் கிண்கிணிக் கால் கொட்டி அவர் மீளாமைஉன் செய்கை இதுவாகில் போது என்று அங்கு உடன் சென்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

58

கடை யுகத்தில் தனி வெள்ளம் பல விரிக்கும் கருப்பம் போலஇடை அறாப் பெரும் தீர்த்தம் எவற்றினுக்கும் பிறப்பு இடமாய்விடை உயர்த்தார் திருத் தோணிப் பற்று விடா மேன்மை அதாம்தடம் அதனில் துறை அணைந்தார் தருமத்தின் தலை நின்றார்.
சொற்பிரிப்பு
கடை உகத்தில் தனி வெள்ளம் பல விரிக்கும் கருப்பம் போலஇடை அறாப் பெருந்தீர்த்தம் எவற்றினுக்கும் பிறப்பிடமாய்விடை உயர்த்தார் திருத்தோணிப் பற்றுவிடா மேன்மையதாம்தடம் அதனில் துறை அணைந்தார் தருமத்தின் தலைநின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

59

பிள்ளையார்தமைக் கரையில் வைத்துத் தாம் பிரிவு அஞ்சித்தெள்ளு நீர்ப் புக மாட்டார் தேவியொடும் திருத்தோணிவள்ளலார் இருந்தாரை எதிர் வணங்கி மணி வாவிஉள்ளிழிந்து புனல் புக்கார் உலகு உய்ய மகப் பெற்றார்.
சொற்பிரிப்பு
பிள்ளையார் தமைக் கரையில் வைத்துத் தாம் பிரிவு அஞ்சித்தெள்ளுநீர்ப் புக மாட்டார் தேவியொடும் திருத்தோணிவள்ளலார் இருந்தாரை எதிர் வணங்கி மணி வாவிஉள் இழிந்து புனல் புக்கார் உலகு உய்ய மகப் பெற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

60

நீர் ஆடித் தருப் பித்து நியமங்கள் பல செய்வார்சீர் ஆடும் திரு மகனார் காண்பதன் முன் செய்து அதன்பின்ஆராத விருப்பினால் அகமருடம் படிய நீர்பேராது மூழ்கினார் பெரும் காவல் பெற்றாராய்.
சொற்பிரிப்பு
நீர் ஆடித் தருப்பித்து நியமங்கள் பல செய்வார்சீராடும் திருமகனார் காண்பதன் முன் செய்ததற் பின்ஆராத விருப்பினால் அகமருடம் படிய நீர்பேராது மூழ்கினார் பெரும் காவல் பெற்றாராய்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

61

மறை முனிவர் மூழ்குதலும் மற்றவர் தம்மைக் காணாதுஇறை தெரியார் எனும் நிலைமை தலைக்கீடா ஈசர் கழல்முறை புரிந்த முன் உணர்வு மூள அழத் தொடங்கினார்நிறை புனல் வாவிக் கரையில் நின்று அருளும் பிள்ளையார்.
சொற்பிரிப்பு
மறைமுனிவர் மூழ்குதலும் மற்றவர் தம்மைக் காணாதுஇறை தரியார் எனும் நிலைமை தலைக்கீடா ஈசர் கழல்முறைபுரிந்த முன் உணர்வு மூள அழத் தொடங்கினார்நிறை புனல் வாவிக் கரையில் நின்றருளும் பிள்ளையார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

62

கண் மலர்கள் நீர் ததும்பக் கைம் மலர்களால் பிசைந்துவண்ண மலர்ச் செங்கனிவாய் மணி அதரம் புடை துடிப்பஎண்ணில் மறை ஒலி பெருக எவ் உயிரும் குதூகலிப்பபுண்ணியக் கன்று அனையவர் தாம் பொருமி அழுதருளினார்.
சொற்பிரிப்பு
கண்மலர்கள் நீர் ததும்பக் கைம்மலர்களால் பிசைந்துவண்ணமலர்ச் செங்கனிவாய் மணி அதரம் புடை துடிப்பஎண்ணில் மறை ஒலி பெருக எவ்உயிரும் குதூகலிப்பப்புண்ணியக் கன்று அனையவர் தாம் பொருமி அழுதருளினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

63

மெய்ம் மேல் கண் துளி பனிப்ப வேறு எங்கும் பார்த்து அழுவார்தம் மேலைச் சார்பு உணர்ந்தோ சாரும் பிள்ளை மைதானோசெம் மேனி வெண் நீற்றார் திருத் தோணி சிகரம் பார்த்துஅம்மே அப்பா என்றென்று அழைத்தருளி அழுதருள.
சொற்பிரிப்பு
மெய்ம்மேல்கண் துளி பனிப்ப வேறு எங்கும் பார்த்து அழுவார்தம்மேலைச் சார்பு உணர்ந்தோ சாரும் பிள்ளைமை தானோசெம்மேனி வெண்நீற்றார் திருத்தோணிச் சிகரம் பார்த்துஅம்மே அப்பா என்று என்று அழைத்தருளி அழுதருள.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

64

அந்நிலையில் திருத்தோணி வீற்றிருந்தார் அருள் நோக்கால்முன் நிலைமைத் திருத் தொண்டு முன்னி அவர்க்கு அருள் புரிவான்பொன் மலை வல்லியும் தாமும் பொருவிடை மேல் எழுந்தருளிச்சென்னி இளம் பிறை திகழச் செழும் பொய்கை மருங்கு அணைந்தார்.
சொற்பிரிப்பு
அந்நிலையில் திருத்தோணி வீற்றிருந்தார் அருள்நோக்கால்முன்நிலைமைத் திருத்தொண்டு முன்னியவர்க்கு அருள்புரிவான்பொன்மலை வல்லியும் தாமும் பொருவிடை மேல் எழுந்தருளிச்சென்னி இளம் பிறை திகழச் செழும்பொய்கை மருங்கணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

65

திரு மறைநூல் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாம் கொடுத்தபெருகு வரம் நினைந்தோதான் தம் பெருமைக் கழல் பேணும்ஒரு நெறியில் வரு ஞானம் கொடுப்பதனுக்கு உடன் இருந்தஅரு மறையாள் உடையவளை அளித்து அருள அருள் செய்வார்.
சொற்பிரிப்பு
திருமறை நூல் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாம் கொடுத்தபெருகுவரம் நினைந்தோ தான் தம் பெருமைக் கழல்பேணும்ஒருநெறியில் வருஞானம் கொடுப்பதனுக்கு உடன் இருந்தஅருமறை ஆள் உடையவளை அளித்தருள அருள்செய்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

66

அழுகின்ற பிள்ளையார் தமை நோக்கி அருள் கருணைஎழுகின்ற திரு உள்ளத்து இறையவர் தாம் எவ்வுலகும்தொழுகின்ற மலைக் கொடியைப் பார்த்தருளித் துணை முலைகள்பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு என்ன.
சொற்பிரிப்பு
அழுகின்ற பிள்ளையார் தமை நோக்கி அருள்கருணைஎழுகின்ற திருஉள்ளத்து இறையவர் தாம் எவ்உலகும்தொழுகின்ற மலைக்கொடியைப் பார்த்தருளித் துணைமுலைகள்பொழிகின்ற பால்அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு என்ன.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

67

ஆரணமும் உலகு ஏழும் ஈன்று அருளி அனைத்தினுக்கும்காரணமாய் வளம் பெருகு கருணை திருவடிவானசீர் அணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்று அணைந்துவார் இணங்கு திருமுலைப்பால் வள்ளத்துக் கறந்து அருளி.
சொற்பிரிப்பு
ஆரணமும் உலகு ஏழும் ஈன்றருளி அனைத்தினுக்கும்காரணமாய் வளம்பெருகு கருணை திருவடிவானசீர்அணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்று அணைந்துவார் இணங்கு திருமுலைப்பால் வள்ளத்துக் கறந்தருளி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

68

எண்ணரிய சிவஞானத்து இன் அமுதம் குழைத்து அருளிஉண் அடிசில் என ஊட்ட உமை அம்மை எதிர் நோக்கும்கண் மலர் நீர் துடைத்து அருளிக் கையில் பொன் கிண்ணம் அளித்துஅண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணனார் அருள் புரிந்தார்.
சொற்பிரிப்பு
எண் அரிய சிவஞானத்து இன் அமுதம் குழைத்தருளிஉண் அடிசில் எனஊட்ட உமை அம்மை எதிர்நோக்கும்கண்மலர் நீர் துடைத்தருளிக் கையில் பொற் கிண்ணம் அளித்துஅண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணனார் அருள்புரிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

69

யாவர்க்கும் தந்தை தாய் எனும் இவர் இப்படி அளித்தார்ஆவதனால் ஆளுடைய பிள்ளையாராய் அகிலதேவருக்கும் முனிவர்க்கும் தெரிவரிய பொருளாகும்தாவில் தனிச் சிவ ஞான சம்பந்தர் ஆயினார்.
சொற்பிரிப்பு
யாவருக்கும் தந்தை தாய் எனும் இவர் இப்படி அளித்தார்ஆவதனால் ஆளுடைய பிள்ளையாராய் அகிலதேவருக்கும் முனிவருக்கும் தெரிவு அரிய பொருள் ஆகும்தாவில் தனிச் சிவ ஞான சம்பந்தர் ஆயினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

70

சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்உவமை இலாக் கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ் ஞானம்தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்.
சொற்பிரிப்பு
சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்பவம் அதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்உவமை இலாக் கலைஞானம் உணர்வு அரிய மெய்ஞ்ஞானம்தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

71

எப்பொருளும் ஆக்குவான் ஈசனே எனும் உணர்வும்அப்பொருள்தான் ஆளுடையார் அடியார்கள் எனும் அறிவும்இப்படியால் இது அன்றித் தம் இசைவு கொண்டு இயலும்துப்புரவில்லார் துணிவு துகளாகச் சூழ்ந்து எழுந்தார்.
சொற்பிரிப்பு
எப்பொருளும் ஆக்குவான் ஈசனே எனும் உணர்வும்அப்பொருள்தான் ஆள் உடையார் அடியார்கள் எனும் அறிவும்இப்படியால் இது அன்றித் தம் இசைவு கொண்டு இயலும்துப்புரவு இல்லார் துணிவு துகளாகச் சூழ்ந்து எழுந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

72

சீர் மறையோர் சிவபாத இருதயரும் சிறு பொழுதில்நீர் மருவித் தாம் செய்யும் நியமங்கள் முடித்து ஏறிபேர் உணர்வில் பொலிகின்ற பிள்ளையார்தமை நோக்கியார் அளித்த பால் அடிசில் உண்டது நீ என வெகுளா.
சொற்பிரிப்பு
சீர்மறையோர் சிவபாத இருதயரும் சிறுபொழுதில்நீர்மருவித் தாம் செய்யும் நியமங்கள் முடித்து ஏறிப்பேர்உணர்வில் பொலிகின்ற பிள்ளையார் தமை நோக்கியார் அளித்த பால் அடிசில் உண்டது நீ என வெகுளா.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

73

எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக் காட்டு என்றுகைச் சிறியது ஒருமாறு கொண்டோச்சக் கால் எடுத்தேஅச் சிறிய பெருந்தகையார் ஆனந்தக் கண் துளி பெய்துஉச்சியின் மேல் எடுத்தருளும் ஒரு திருக்கை விரல் சுட்டி.
சொற்பிரிப்பு
எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக் காட்டு என்றுகைச்சிறியது ஒருமாறு கொண்டு ஓச்சக் கால் எடுத்தேஅச்சிறிய பெருந்தகையார் ஆனந்தக் கண்துளி பெய்துஉச்சியினில் எடுத்தருளும் ஒரு திருக்கை விரல் சுட்டி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

74

விண் நிறைந்த பெருகு ஒளியால் விளங்கு மழ விடைமேல்பண் நிறைந்த அருமறைகள் பணிந்து ஏத்தப் பாவை உடன்எண் நிறைந்த கருணையினால் நின்றாரை எதிர் காட்டிஉள் நிறைந்து பொழிந்து எழுந்த உயர் ஞானத் திருமொழியால்.
சொற்பிரிப்பு
விண்நிறைந்த பெருகு ஒளியால் விளங்கு மழவிடை மேலேபண் நிறைந்த அருமறைகள் பணிந்து ஏத்தப் பாவைஉடன்எண்நிறைந்த கருணையினால் நின்றாரை எதிர்காட்டிஉண்நிறைந்து பொழிந்து எழுந்த உயர் ஞானத் திருமொழியால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

75

எல்லை இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறைமல்லல் நெடும் தமிழால் இம் மா நிலத்தோர்க்கு உரை சிறப்பபல் உயிரும் களிகூரத் தம் பாடல் பரமர் பால்செல்லு முறை பெறுவதற்குத் திருசெவியைச் சிறப்பித்து.
சொற்பிரிப்பு
எல்லை இலா மறைமுதல் மெய் உடன் எடுத்த எழுதுமறைமல்லல் நெடும் தமிழால் இம் மாநிலத்தோர்க்கு உரை சிறப்பப்பல்லுயிரும் களி கூரத் தம் பாடல் பரமர்பால்செல்லு முறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

76

செம்மை பெற எடுத்த திருத் தோடுடைய செவியன் எனும்மெய்ம்மை மொழித் திருப்பதிகம் பிரமபுரம் மேவினார்தம்மை அடையாளங்களுடன் சாற்றித் தாதையார்க்குஎம்மை இது செய்த பிரான் இவன் அன்றே என இசைத்தார்.
சொற்பிரிப்பு
செம்மை பெற எடுத்த திருத் தோடுடைய செவியன் எனும்மெய்ம்மை மொழித் திருப்பதிகம் பிரமபுரம் மேவினார்தம்மை அடையாளங்கள் உடன் சாற்றித் தாதையார்க்குஎம்மை இது செய்தபிரான் இவன் அன்றே என இசைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

77

மண் உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின்கண் நுதலான் பெரும் கருணை கைக் கொள்ளும் எனக்காட்டஎண்ணம் இலா வல் அரக்கன் எடுத்து முறிந்து இசைபாடஅண்ணல் அவற்கு அருள் புரிந்த ஆக்கப்பாடு அருள் செய்தார்.
சொற்பிரிப்பு
மண் உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்து அடையின்கண்நுதலான் பெருங்கருணை கைக்கொள்ளும் எனக்காட்டஎண்ணம் இலா வல்அரக்கன் எடுத்து முறிந்து இசைபாடஅண்ணல் அவற்கு அருள்புரிந்த ஆக்கப்பாடு அருள்செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

78

தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத் தொழார்வழுவான மனத்தாலே மாலாய மால் அயனும்இழிவாகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமைவிழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்து உய்ந்த படி விரித்தார்.
சொற்பிரிப்பு
தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத் தொழார்வழுவான மனத்தாலே மால் ஆய மால் அயனும்இழிவாகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமைவிழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்து உய்ந்த படி விரித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

79

வேத காரணராய வெண் பிறை சேர் செய்ய சடைநாதன் நெறி அறிந்து உய்யார் தம்மிலே நலம் கொள்ளும்போதம் இலாச் சமண் கையர் புத்தர் வழியாக்கும்ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர்.
சொற்பிரிப்பு
வேத காரணர் ஆய வெண்பிறை சேர் செய்ய சடைநாதன் நெறி அறிந்து உய்யார் தம்மிலே நலம் கொள்ளும்போதம் இலாச் சமண் கையர் புத்தர் வழி பழி ஆக்கும்ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

80

திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக் காப்புச் சாத்திஇருக்கு மொழிப் பிள்ளையார் எதிர் தொழுது நின்று அருளஅருள் கருணைத் திருவாளனார் அருள் கண்டு அமரர் எலாம்பெருக்க விசும்பினில் ஆர்த்துப் பிரசமலர் மழை பொழிந்தார்.
சொற்பிரிப்பு
திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக் காப்புச் சாத்திஇருக்கு மொழிப் பிள்ளையார் எதிர் தொழுது நின்றருளஅருட்கருணைத் திருவாளனார் அருள் கண்டு அமரர் எலாம்பெருக்க விசும்பினில் ஆர்த்துப் பிரசமலர் மழை பொழிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

81

வந்து எழும் மங்கலமான வான் அகத் துந்துபி முழக்கும்கந்தருவர் கின்னரர்கள் கான ஒலிக் கடல் முழக்கும்இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும் இசைமுழக்கும்அந்தம் இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க.
சொற்பிரிப்பு
வந்து எழு மங்கலம் ஆன வானக துந்துபி முழக்கும்கந்தருவர் கின்னரர்கள் கான ஒலிக் கடல் முழக்கும்இந்திரனே முதல்தேவர் எடுத்து ஏத்தும் இசை முழக்கும்அந்தமில் பல் கணநாதர் அர எனும் ஓசையின் அடங்க.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

82

மறைகள் கிளர்ந்து ஒலி வளர முழங்கிட வானோர் தம்நிறை முடி உந்திய நிரை மணி சிந்திட நீள் வானத்துஉறை என வந்து உலகு அடைய நிறைந்திட ஓவாமெய்ப்பொறை பெருகும் தவமுனிவர் எனும் கடல் புடை சூழ.
சொற்பிரிப்பு
மறைகள் கிளர்ந்து ஒலி வளர முழங்கிட வானோர் தம்நிறைமுடி உந்திய நிரைமணி சிந்திட நீள் வானத்துஉறை என வந்து உலகு அடைய நிறைந்திட ஓவா மெய்ப்பொறை பெருகும் தவ முனிவர் எனும் கடல் புடை சூழ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

83

அணைவுற வந்து எழும் அறிவு தொடங்கின அடியார் பால்இணை இல் பவம் கிளர் கடல்கள் இகந்திட இரு தாளின்புணை அருள் அங்கணர் பொருவிடை தங்கிய புணர் பாகத்துணையொடு அணைந்தனர் சுருதி தொடர்ந்த பெருந் தோணி.
சொற்பிரிப்பு
அணைவுற வந்து எழும் அறிவு தொடங்கின அடியார்பால்இணையில் பவம் கிளர் கடல்கள் இகந்திட இருதாளின்புணை அருள் அங்கணர் பொருவிடை தங்கிய புணர் பாகத்துணையொடு அணைந்தனர் சுருதி தொடர்ந்த பெரும் தோணி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

84

அண்ணல் அணைந்தமை கண்டு தொடர்ந்து எழும் அன்பாலேமண்மிசை நின்ற மறைச் சிறு போதகம் அன்னாரும்கண் வழி சென்ற கருத்து விடாது கலந்து ஏகப்புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலின் உள் புக்கார்.
சொற்பிரிப்பு
அண்ணல் அணைந்தமை கண்டு தொடர்ந்து எழும் அன்பாலேமண்மிசை நின்ற மறைச் சிறு போதகம் அன்னாரும்கண்வழி சென்ற கருத்து விடாது கலந்து ஏகப்புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலின் உட்புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

85

ஈறில் பெரும் தவம் முன் செய்து தாதை எனப் பெற்றார்மாறு விழுந்த மலர்க்கை குவித்து மகிழ்ந்து ஆடிவேறு விளைந்த வெருட்சி வியப்பு விருப்போடும்கூறும் அரும் தமிழின் பொருளான குறிப் போவார்.
சொற்பிரிப்பு
ஈறில் பெரும் தவம் முன் செய்து தாதை எனப் பெற்றார்மாறு விழுந்த மலர்க்கை குவித்து மகிழ்ந்து ஆடிவேறு விளைந்த வெருட்சி வியப்பு விருப்போடும்கூறும் அருந்தமிழின் பொருள் ஆன குறிப்பு ஓர்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

86

தாணுவினைத் தனிகண்டு தொடர்ந்தவர் தம்மைப் போல்காணுதல் பெற்றிலரேனும் நிகழ்ந்தன கண்டு உள்ளார்தோணி புரத்திறை தன் அருள் ஆதல் துணிந்து ஆர்வம்பேணும் மனத்தொடு முன்புகு காதலர் பின் சென்றார்.
சொற்பிரிப்பு
தாணுவினைத் தனி கண்டு தொடர்ந்தவர் தம்மைப் போல்காணுதல் பெற்றிலர் ஏனும் நிகழ்ந்தன கண்டு உள்ளார்தோணிபுரத்து இறை தன் அருள் ஆதல் துணிந்து, ஆர்வம்பேணும் மனத்தொடு முன் புகு காதலர் பின் சென்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

87

அப்பொழுது அங்கண் அணைந்தது கண்டவர் அல்லாதார்முப்புரிநூல் மறையோர்கள் உரோமம் முகிழ்ப்பு எய்திஇப்படி ஒப்பதோர் அற்புதம் எங்கு உளது என்று என்றேதுப்பு உறழ் வேணியர் கோயிலின் வாயில் புறம் சூழ.
சொற்பிரிப்பு
அப்பொழுது அங்கண் அணைந்தது கண்டவர் அல்லாதார்முப்புரிநூல் மறையோர்கள் உரோம முகிழ்ப்பு எய்திஇப்படி ஒப்பதொர் அற்புதம் எங்கு உளது என்று என்றேதுப்பு உறழ் வேணியர் கோயிலின் வாயில் புறம் சூழ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

88

பொங்கு ஒளி மால் விடை மீது புகுந்து அணி பொன் தோணிதங்கி இருந்த பெரும் திரு வாழ்வு தலைப்பட்டேஇங்கு எனை ஆளும் உடையான் உமையோடும் இருந்தான் என்றுஅங்கு எதிர் நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார்.
சொற்பிரிப்பு
பொங்கு ஒளி மால்விடை மீது புகுந்து அணி பொன்தோணிதங்கி இருந்த பெரும் திரு வாழ்வு தலைப்பட்டேஇங்கு எனை ஆள்உடையான் உமையோடும் இருந்தான் என்றுஅங்கு எதிர் நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

89

இன் இசை ஏழும் இசைந்த செழும் தமிழ் ஈசற்கேசொன்முறை பாடும் தொழும்பர் அருள் பெற்ற தொடக்கோடும்பல் மறை வேதியர் காண விருப்பொடு பால் நாறும்பொன்மணி வாயினர் கோயிலின் நின்று புறப்பட்டார்.
சொற்பிரிப்பு
இன்னிசை ஏழும் இசைந்த செழுந்தமிழ் ஈசற்கேசொன்முறை பாடு தொழும்பு அருள் பெற்ற தொடக்கோடும்பன்மறை வேதியர் காண விருப்பொடு பால் நாறும்பொன்மணி வாயினர் கோயிலின் நின்று புறப்பட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

90

பேணிய அற்புத நீடு அருள் பெற்ற பிரான் முன்னேநீண் நிலையில் திகழ் கோபுர வாயிலின் நேர் எய்திவாண் நிலவில் திகழ் வேணியர் தொண்டர்கள் வாழ்வு எய்தும்தோணி புரத்தவர் தாம் எதிர் கொண்டு துதிக்கின்றார்.
சொற்பிரிப்பு
பேணிய அற்புத நீடு அருள் பெற்றபிரான் முன்னேநீள்நிலையில் திகழ் கோபுர வாயிலின் நேர் எய்திவாள்நிலவில் திகழ் வேணியர் தொண்டர்கள் வாழ்வு எய்தும்தோணி புரத்தவர் தாம் எதிர் கொண்டு துதிக்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

91

காழியர் தவமே கவுணியர் தனமே கலை ஞானத்துஆழிய கடலே அதன் இடை அமுதே அடியார் முன்வாழிய வந்து இம்மண் மிசை வானோர் தனி நாதன்ஏழ் இசை மொழியாள் தன் திரு அருள் பெற்று அனை என்பார்.
சொற்பிரிப்பு
காழியர் தவமே கவுணியர் தனமே கலை ஞானத்துஆழிய கடலே அதனிடை அமுதே அடியார் முன்வாழிய வந்து இம் மண்மிசை வானோர் தனிநாதன்ஏழ்இசை மொழியாள் தன் திரு அருள் பெற்றனை என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

92

மறை வளர் திருவே வைதிக நிலையே வளர் ஞானப்பொறை அணி முகிலே புகலியர் புகலே பொருபொன்னித்துறை பெறு மணியே சுருதியின் ஒளியே வெளியே வந்துஇறையவன் உமையாள் உடன் அருள் தர எய்தினை என்பார்.
சொற்பிரிப்பு
மறைவளர் திருவே வைதிக நிலையே வளர்ஞானப்பொறை அணை முகிலே புகலியர் புகலே பொருபொன்னித்துறை பெறு மணியே சுருதியின் ஒளியே வெளியே வந்துஇறையவன் உமையாள் உடன் அருள் தர எய்தினை என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

93

புண்ணிய முதலே புனை மணி அரை ஞாணொடு போதும்கண் நிறை கதிரே கலை வளர் மதியே கவின் மேவும்பண் இயல் கதியே பருவமது ஒரு மூவருடத்தேஎண்ணிய பொருளாய் நின்றவர் அருள் பெற்றனை என்பார்.
சொற்பிரிப்பு
புண்ணிய முதலே புனைமணி அரைஞாணொடு போதும்கண்நிறை கதிரே கலை வளர் மதியே கவின் மேவும்பண்ணியல் கதியே பருவமது ஒரு மூவருடத்தேஎண்ணிய பொருளாய் நின்றவர் அருள் பெற்றனை என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

94

என்று இனைய பல கூறி இருக்கு மொழி அந்தணரும் ஏனையோரும்நின்று துதி செய்து அவர்தாள் நீள் முடிக்கண் மேல் ஏந்தி நிரந்த போதுசென்று அணைந்த தாதையர் சிவபாத இருதயர் தாம் தெய்வ ஞானக்கன்றினை முன் புக்கு எடுத்துப் பியலின் மேல் கொண்டு களி கூர்ந்து செல்ல.
சொற்பிரிப்பு
என்று இனைய பல கூறி இருக்கு மொழி அந்தணரும் ஏனையோரும்நின்று துதி செய்து அவர் தாள் நீள் முடிக்கண் மேல் ஏந்திநிரந்த போதுசென்று அணைந்த தாதையார் சிவபாத இருதயர் தாம்தெய்வ ஞானக்கன்றினை முன் புக்கு எடுத்துப் பியலின் மேல் கொண்டு களிகூர்ந்து செல்ல.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

95

மாமறையோர் குழாத்தின் உடன் மல்கு திருத்தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்துதாம் அறுவை உத்தரியம் தனி விசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலேபூ மறுகு சிவானந்தப் பெருக்காறு போத அதன் மீது பொங்கும்காமர் நுரைக் குமிழி எழுந்து இழிவன போல் விளங்கும் பெரும் காட்சித்தாக.
சொற்பிரிப்பு
மாமறையோர் குழாத்தின் உடன் மல்கு திருத்தொண்டர் குழாம்மருங்கு சூழ்ந்துதாம் அறுவை உத்தரியம் தனி விசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலேபூமறுகு சிவானந்தப் பெருக்கு ஆறு போத அதன் மீது பொங்கும்காமர்நுரைக் குமிழி எழுந்து இழிவன போல் விளங்கு பெரும்காட்சித்து ஆக.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

96

நீடு திருக் கழுமலத்து நிலத்தேவர் மாளிகை மேல் நெருங்கி அங்கண்மாடு நிறை மடவார்கள் மங்கலமாம் மொழிகளால் வாழ்த்தி வாசத்தோடு மலி நறுமலரும் சுண்ணமும் வெண் பொரியினொடும் தூவிநிற்பார்கோடு பயில் குல வரை மேல் மின் குலங்கள் புடை பெயரும் கொள்கைத்தாக.
சொற்பிரிப்பு
நீடு திருக்கழுமலத்து நிலத்தேவர் மாளிகை மேல்நெருங்கி அங்கண்மாடு நிறை மடவார்கள் மங்கலமா மொழிகளால் வாழ்த்தி வாசத்தோடுமலி நறுமலரும் சுண்ணமும் வெண் பொரியினொடும் தூவி நிற்பார்கோடுபயில் குலவரைமேல் மின் குலங்கள் புடைபெயரும்கொள்கைத் தாக.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

97

மங்கல தூர் இயந்து வைப்பார் மறைச் சாமம் பாடுவார் மருங்கு வேதிப்பொங்கு மணி விளக்கு எடுத்து பூரண கும்பமும் நிரைப்பார் போற்றி செய்வார்அங்கு அவர்கள் மனத்து எழுந்த அதிசயமும் பெருவிருப்பும் அன்பும் பொங்கத்தங்கு திரு மலி வீதிச் சண்பை நகர் வலம் செய்து சாரும் காலை.
சொற்பிரிப்பு
மங்கல தூரியம் துவைப்பார் மறைச் சாமம் பாடுவார் மருங்கு வேதிப்பொங்குமணி விளக்கு எடுத்துப் பூரண கும்பமும் நிரைப்பார்போற்றி செய்வார்அங்கு அவர்கள் மனத்து எழுந்த அதிசயமும் பெருவிருப்பும் அன்பும் பொங்கத்தங்கு திருமலி வீதிச் சண்பை நகர் வலம் செய்து சாரும் காலை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

98

தம் திரு மாளிகையின் கண் எழுந்து அருளிப் புகும் பொழுது சங்க நாதம்அந்தர துந்துபி முதலா அளவில் பெருகு ஒலி தழைப்ப அணைந்து புக்கார்சுந்தரப் பொற்றோணி மிசை இருந்த பிரானுடன் அமர்ந்த துணைவி ஆகும்பைந்தொடியாள் திரு முலையின் பால் அறா மதுர மொழிப் பவள வாயார்.
சொற்பிரிப்பு
தம் திருமாளிகையின்கண் எழுந் தருளிப் புகும் பொழுதுசங்க நாதம்அந்தர துந்துபி முதலா அளவில் பெருகு ஒலி தழைப்பஅணைந்து புக்கார்சுந்தரப் பொன் தோணிமிசை இருந்த பிரான் உடன் அமர்ந்த துணைவி ஆகும்பைந்தொடியாள் திருமுலையின் பால் அறா மதுரமொழிப் பவள வாயார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

99

தூ மணி மாளிகையின் கண் அமர்ந்து அருளி அன்று இரவு தொல்லை நாதமா மறைகள் திரண்ட பெரும் திருத் தோணி மன்னி வீற்று இருந்தார் செய்யகா மரு சேவடிக் கமலம் கருத்திலுற இடையறாக் காதல் கொண்டுநாம நெடும் கதிர் உதிப்ப நண்ணினார் திருத் தோணி நம்பர் கோயில்.
சொற்பிரிப்பு
தூமணி மாளிகையின்கண் அமர்ந் தருளி அன்று இரவு தொல்லை நாதமாமறைகள் திரண்டபெரும் திருத் தோணி மன்னி வீற்றுஇருந்தார் செய்யகாமரு சேவடிக் கமலம் கருத்தில் உற இடை அறாக்காதல் கொண்டுநாம நெடும் கதிர் உதிப்ப நண்ணினார் திருத்தோணி நம்பர் கோயில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

100

காதல் உடன் அணைந்து திருக் கழுமலத்துக் கலந்து வீற்று இருந்த தங்கள்தாதை யாரையும் வெளியே தாங்க அரிய மெய்ஞ்ஞானம் தம்பால் வந்துபோதம் முலை சுரந்து அளித்த புண்ணியத் தாயாரையும் முன் வணங்கிப் போற்றிமே தகைய அருள் பெற்றுத் திருக்கோலக் கா இறைஞ்ச விருப்பில் சென்றார்.
சொற்பிரிப்பு
காதலுடன் அணைந்து திருக் கழுமலத்துக் கலந்து வீற்று இருந்த தங்கள்தாதையாரையும் வெளியே தாங்கு அரிய மெய்ஞ்ஞானம் தம்பால் வந்துபோதமுலை சுரந்து அளித்த புண்ணியத் தாயாரையும் முன் வணங்கிப் போற்றிமேதகைய அருள் பெற்றுத் திருக்கோலக்கா இறைஞ்ச விருப்பில் சென்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

101

பெருக் கோல் இட்டு அலை பிறங்கும் காவிரி நீர் பிரச மலர் தரளம் சிந்தவரிக் கோல வண்டு ஆட மாதரார் குடைந்து ஆடும் மணி நீர் வாவிதிருக் கோலக்கா எய்தித் தேவர்பிரான் கோயில் வலம் செய்து முன் நின்றுஇருக்கோல் இட்டு அறிவு அரிய திருப்பாதம் ஏத்துவதற்கு எடுத்துக் கொள்வார்.
சொற்பிரிப்பு
பெருக்கோலிட்டு அலை பிறங்கும் காவிரி நீர் பிரசமலர் தரளம் சிந்தவரிக்கோல வண்டு ஆட மாதரார் குடைந்து ஆடு மணிநீர் வாவித்திருக் கோலக்கா எய்தித் தேவர்பிரான் கோயில் வலம் செய்து முன் நின்றுஇருக்கு ஓலிட்டு அறிவரிய திருப்பாதம் ஏத்துவதற்கு எடுத்துக் கொள்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

102

மெய்ந் நிறைந்த செம் பொருளாம் வேதத்தின் விழுப் பொருளை வேணி மீதுபைந் நிறைந்த அரவுடனே பசுங்குழவித் திங்கள் பரித்து அருளுவானைமைந் நிறைந்த மிடற்றானை மடையில் வாளைகள் பாய என்னும் வாக்கால்கைந் நிறைந்த ஒற்றறுத்துக் கலைப் பதிகம் கவுணியர் கோன் பாடும் காலை
சொற்பிரிப்பு
மெய்ந்நிறைந்த செம்பொருளாம் வேதத்தின் விழுப்பொருளை வேணி மீதுபைந்நிறைந்த அரவு உடனே பசும்குழவித் திங்கள் பரித்து அருளுவானைமைந்நிறைந்த மிடற்றானை மடையில் வாளைகள் பாய என்னும் வாக்கால்கைந்நிறைந்த ஒத்து அறுத்துக் கலைப் பதிகம் கவுணியர் கோன் பாடும் காலை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

103

கை அதனால் ஒத்து அறுத்துப் பாடுதலும் கண்டு அருளி கருணை கூர்ந்தசெய்ய சடை வானவர் தம் அஞ்செழுத்தும் எழுதிய நல் செம்பொன் தாளம்ஐயர் அவர் திரு அருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த அளவால் ஒற்றவையம் எல்லாம் உய்ய வரு மறைச் சிறுவர் கைத் தலத்து வந்தது அன்றே.
சொற்பிரிப்பு
கைஅதனால் ஒத்து அறுத்துப் பாடுதலும் கண்டருளிக் கருணை கூர்ந்தசெய்ய சடைவானவர் தம் அஞ்செழுத்தும் எழுதிய நல் செம்பொன் தாளம்ஐயர் அவர் திருவருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த அளவால் ஒத்தவையம் எலாம் உய்ய வரு மறைச் சிறுவர் கைத்தலத்து வந்தது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

104

காழி வரும் பெரும் தகையார் கையில் வரும் திருத் தாளக் கருவி கண்டுவாழிய தம் திருமுடி மேல் கொண்டு அருளி மனம் களிப்ப மதுர வாயில்ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன்னிசை வண் தமிழ்ப் பதிகம் எய்தப் பாடித்தாழும் மணிக் குழையார் முன் தக்க திருக் கடைக் காப்புச் சாத்தி நின்றார்.
சொற்பிரிப்பு
காழி வரும் பெரும்தகையார் கையில் வரும் திருத்தாளக் கருவி கண்டுவாழிய தம் திருமுடிமேல் கொண் டருளி மனம் களிப்ப மதுர வாயில்ஏழிசையும் தழைத்து ஓங்க இன்னிசை வண் தமிழ்ப்பதிகம் எய்தப் பாடித்தாழுமணிக் குழையார் முன் தக்க திருக் கடைக்காப்புச் சாத்தி நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

105

உம்பர் உலகம் அதிசயிப்ப ஓங்கிய நாதத்து அளவின் உண்மை நோக்கித்தும்புரு நாரதர் முதலாம் சுருதி இசைத் துறை உள்ளோர் துதித்து மண் மேல்வம்பலர் மா மழை பொழிந்தார் மறை வாழ வந்தருளும் மதலையாரும்தம் பெருமான் அருள் போற்றி மீண்டருளிச் சண்பை நகர் சாரச் செல்வார்.
சொற்பிரிப்பு
உம்பர் உலகு அதிசயிப்ப ஓங்கிய நாதத்து அளவின் உண்மை நோக்கித்தும்புரு நாரதர் முதலாம் சுருதி இசைத் துறை உள்ளோர் துதித்து மண்மேல்வம்பலர் மாமழை பொழிந்தார் மறை வாழ வந்தருளும் மதலை யாரும்தம்பெருமான் அருள் போற்றி மீண்டருளிச் சண்பைநகர் சாரச் செல்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

106

செங்கமல மலர்க் கரத்துத் திருத் தாளத்துடன் நடந்து செல்லும் போதுதங்கள் குலத் தாதையார் தரியாது தோளின் மேல் தரித்துக் கொள்ளஅங்கு அவர் தம் தோளின் மிசை எழுந்து அருளி அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும்திங்கள் அணிமணி மாடத் திருத் தோணி புரத் தோணிச் சிகரக் கோயில்.
சொற்பிரிப்பு
செங்கமல மலர்க்கரத்துத் திருத் தாளத்து உடன் நடந்து செல்லும் போதுதங்கள் குலத் தாதையார் தரியாது தோளின் மேல் தரித்துக் கொள்ளஅங்கு அவர் தம் தோளின் மிசை எழுந் தருளி அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும்திங்கள் அணி மணிமாடத் திருத்தோணி புரத்தோணிச் சிகரக் கோயில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

107

திருப் பெருகு பெருங் கோயில் சூழ வலம் கொண்டு அருளித் திருமுன் நின்றேஅருள் பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு கட்டளை ஆக்கி அவற்றுள் ஒன்றுவிருப்புறு பொன் திருத்தோணி வீற்று இருந்தார் தமைப் பாட மேவும் காதல்பொருத்தமுற அருள் பெற்றுப் போற்றி எடுத்து அருளினார் பூவார் கொன்றை.
சொற்பிரிப்பு
திருப்பெருகு பெரும் கோயில் சூழ வலம் கொண்டருளித் திருமுன் நின்றேஅருள்பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு கட்டளை ஆக்கி அவற்றுள் ஒன்றுவிருப்புறு பொன் திருத்தோணி வீற்றிருந்தார் தமைப் பாட மேவும் காதல்பொருத்தம் உற அருள்பெற்றுப் போற்றி எடுத்தருளினார் பூவார் கொன்றை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

108

எடுத்த திருப் பதிகத்தின் இசை திருத் தாளத்தினால் இசைய ஒற்றிஅடுத்த நடை பெறப் பாடி ஆர்வமுற வணங்கிப் போந்து அலைநீர்ப் பொன்னிமடுத்த வயல் பூந் தராய் அவர் வாழ மழ விளங் கோலத்துக் காட்சிகொடுத்தருளி வைகினார் குறைவு இலா நிறை ஞானக் கொண்டலார் தாம்.
சொற்பிரிப்பு
எடுத்த திருப்பதிகத்தின் இசை திருத்தாளத்தினால் இசைய ஒத்திஅடுத்த நடை பெறப் பாடி ஆர்வம் உற வணங்கிப் போந்து அலைநீர்ப் பொன்னிமடுத்த வயல் பூந்தராய் அவர் வாழ மழஇளம் கோலத்துக் காட்சிகொடுத்தருளி வைகினார் குறைவிலா நிறை ஞானக் கொண்டலார் தாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

109

அந் நிலையில் ஆளுடைய பிள்ளையார் தமை முன்னம் அளித்த தாயார்முன் உதிக்க முயன்ற தவத் திரு நன்னி பள்ளி முதல் மறையோர் எல்லாம்மன்னு பெரு மகிழ்ச்சியுடன் மங்கல தூரியம் துவைப்ப மறைகள் ஓதிக்கன்னி மதில் சண்பை நகர் வந்து அணைந்து கவுணியர் கோன் கழலில் தாழ்ந்தார்.
சொற்பிரிப்பு
அந்நிலையில் ஆளுடைய பிள்ளையார் தமை முன்னம் அளித்த தாயார்முன் உதிக்க முயன்ற தவத் திரு நன்னி பள்ளி முதல் மறையோர் எல்லாம்மன்னு பெருமகிழ்ச்சியுடன் மங்கல தூரியம் துவைப்ப மறைகள் ஓதிக்கன்னி மதில் சண்பைநகர் வந்து அணைந்து கவுணியர்கோன் கழலில் தாழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

110

மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண் களிப்பப் பெற்ற பெரு வார்த்தையாலேஎங்கணும் நீள் பதி மருங்கில் இரு பிறப்பாளரும் அல்லா ஏனையோரும்பொங்கு திருத் தொண்டர்களும் அதிசயித்துக் குழாங் கொண்டு புகலியார் தம்சிங்க இளஏற்றின் பால் வந்து அணைந்து கழல் பணியும் சிறப்பின் மிக்கார்.
சொற்பிரிப்பு
மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண்களிப்பப் பெற்ற பெரு வார்த்தையாலேஎங்கணும் நீள் பதி மருங்கில் இரு பிறப்பாளரும் அல்லா ஏனையோரும்பொங்கு திருத் தொண்டர்களும் அதிசயித்துக் குழாம் கொண்டு புகலியார் தம்சிங்க இள ஏற்றின்பால் வந்து அணைந்து கழல் பணியும் சிறப்பின் மிக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

111

வந்த திருத் தொண்டர்க்கும் மல்கு செழு மறையவர்க்கும் மற்று உளோர்க்கும்சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது முதல் ஆன சிறப்பின் செய்கைதம் தம் அளவினில் விரும்பும் தகைமையினால் கடன் ஆற்றும் சண்பை மூதூர்எந்தை பிரான் சிவலோகம் என விளங்கி எவ்வுலகும் ஏத்தும் நாளில்.
சொற்பிரிப்பு
வந்த திருத் தொண்டர்க்கும் மல்கு செழு மறையவர்க்கும் மற்று உ ளோர்க்கும்சிந்தை மகிழ்வு உற மலர்ந்து திரு அமுது முதலான சிறப்பின் செய்கைதந்தம் அளவினில் விரும்பும் தகைமையினால் கடன் ஆற்றும் சண்பை மூதூர்எந்தை பிரான் சிவலோகம் என விளங்கி எவ்உலகும் ஏத்தும் நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

112

செழும் தரளப் பொன்னி சூழ் திரு நன்னி பள்ளி உள்ளோர் தொழுது திங்கள்கொழுந்து அணியும் சடையாரை எங்கள் பதியினில் கும்பிட்டருள அங்கேஎழுந்தருள வேண்டும் என இசைந்து அருளித் தோணி வீற்றிருந்தார் பாதம்தொழும் தகைமையால் இறைஞ்சி அருள் பெற்றுப் பிறபதியும் தொழமுன் செல்வார்.
சொற்பிரிப்பு
செழும் தரளப் பொன்னிசூழ் திருநன்னி பள்ளி உள்ளோர் தொழுது திங்கள்கொழுந்து அணியும் சடையாரை எங்கள் பதியினில் கும்பிட்டு அருள அங்கேஎழுந்தருள வேண்டும் என இசைந் தருளித் தோணி வீற்று இருந்தார் பாதம்தொழும் தகைமையால் இறைஞ்சி அருள் பெற்றுப் பிறபதியும் தொழ முன் செல்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

113

தாது அவிழ் செந்தாமரையின் அக இதழ் போல் சீர் அடிகள் தரையின் மீதுபோதுவதும் பிறர் ஒருவர் பொறுப்பதுவும் பொறா அன்பு புரிந்த சிந்தைமாதவம் செய் தாதையார் வந்து எடுத்துத் தோளின்மேல் வைத்துக் கொள்ளநாதர் கழல் தம் முடிமேல் கொண்ட கருத்து உடன் போந்தார் ஞானம் உண்டார்.
சொற்பிரிப்பு
தாதவிழ் செந்தாமரையின் அக இதழ் போல் சீறடிகள் தரையின் மீதுபோதுவதும் பிறர் ஒருவர் பொறுப்பதுவும் பொறா அன்பு புரிந்த சிந்தைமாதவம் செய் தாதையார் வந்து எடுத்து தோளின் மேல் வைத்துக் கொள்ளநாதர் கழல் தம்முடிமேல் கொண்ட கருத்து உடன்போந்தார் ஞானம் உண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

114

தேன் அலரும் கொன்றையினார் திரு நன்னி பள்ளியினைச் சாரச் செல்வார்வான் அணையும் மலர்ச் சோலை தோன்றுவது எப் பதி என்ன மகிழ்ச்சி எய்திப்பானல் வயல் திரு நன்னி பள்ளி எனத் தாதையர் பணிப்பக் கேட்டுஞான போனகர் தொழுது நல் தமிழ்ச் சொல் தொடை மாலை நவிலல் உற்றார்.
சொற்பிரிப்பு
தேன் அலரும் கொன்றையினார் திருநன்னி பள்ளியினைச் சாரச் செல்வார்வான் அணையும் மலர்ச்சோலை தோன்றுவது எப்பதி என்ன மகிழ்ச்சி எய்திப்பானல் வயல் திருநன்னி பள்ளி எனத் தாதையார் பணிப்பக் கேட்டுஞான போனகர் தொழுது நற்றமிழ்ச் சொல் தொடைமாலை நவிலல் உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

115

காரைகள் கூகை முல்லை என நிகழ் கலை சேர் வாய்மைச்சீர் இயல் பதிகம் பாடித் திருக் கடைக் காப்புத்தன்னில்நாரியோர் பாகர் வைகும் நனி பள்ளி உள்குவார் தம்பேர் இடர் கெடுதற்கு ஆணை நமது எனும் பெருமை வைத்தார்.
சொற்பிரிப்பு
காரைகள் கூகை முல்லை என நிகழ் கலைசேர் வாய்மைச்சீர் இயல் பதிகம் பாடித் திருக்கடைக் காப்புத் தன்னில்நாரி ஓர் பாகர் வைகும் நனி பள்ளி உள்குவார் தம்பேர் இடர் கெடுதற்கு ஆணை நமது எனும் பெருமை வைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

116

ஆதியார் கோயில் வாயில் அணைந்து புக்கு அன்பு கூரும்நீதியால் பணிந்து போற்றி நீடிய அருள் முன் பெற்றுப்போதுவார் தம்மைச் சூழ்ந்து பூசுரர் குழாங்கள் போற்றும்காதல் கண்டு அங்கு அமர்ந்தார் கவுணியர் தலைவனார் தாம்.
சொற்பிரிப்பு
ஆதியார் கோயில் வாயில் அணைந்து புக்கு அன்பு கூரநீதியால் பணிந்து போற்றி நீடிய அருள் முன் பெற்றுப்போதுவார் தம்மைச் சூழ்ந்த பூசுரர் குழாங்கள் போற்றும்காதல் கண்டு அங்கு அமர்ந்தார் கவுணியர் தலைவனார் தாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

117

அம்பிகை அளித்த ஞானம் அகிலமும் உய்ய உண்டநம் பெரும் தகையார் தம்மை எதிர் கொண்டு நண்ண வேண்டிஉம்பரும் வணங்கும் மெய்ம்மை உயர் தவத் தொண்டரோடுதம் பெரும் விருப்பால் வந்தார் தலைசை அந்தணர்கள் எல்லாம்.
சொற்பிரிப்பு
அம்பிகை அளித்த ஞானம் அகிலமும் உய்ய உண்டநம் பெரும் தகையார் தம்மை எதிர் கொண்டு நண்ண வேண்டிஉம்பரும் வணங்கும் மெய்ம்மை உயர்தவத் தொண்டரோடுதம்பெரு விருப்பால் வந்தார் தலைசை அந்தணர்கள் எல்லாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

118

காவணம் எங்கும் இட்டுக் கமுகொடு கதலி நாட்டிப்பூவணத் தாமம் தூக்கிப் பூரண கும்பம் ஏந்திஆவண வீதி எல்லாம் அலங்கரித்து அண்ணலாரைமாவண மலர் மென் சோலை வளம் பதி கொண்டு புக்கார்.
சொற்பிரிப்பு
காவணம் எங்கும் இட்டுக் கமுகொடு கதலி நாட்டிப்பூவணை தாமம் தூக்கிப் பூரண கும்பம் ஏந்திஆவண வீதி எல்லாம் அலங்கரித்து அண்ணலாரைமாவணை மலர்மென் சோலை வளம் பதி கொண்டு புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

119

திரு மறையோர்கள் சூழ்ந்து சிந்தையின் மகிழ்ச்சி பொங்கப்பெரு மறை ஓசை மல்கப் பெருந் திருக் கோயில் எய்திஅரு மறைப் பொருள் ஆனாரைப் பணிந்து அணிநல் சங்கத்தின்தரு முறை நெறி அக் கோயில் சார்ந்தமை அருளிச் செய்தார்.
சொற்பிரிப்பு
திருமறையோர்கள் சூழ்ந்து சிந்தையின் மகிழ்ச்சி பொங்கப்பெருமறை ஓசை மல்கப் பெருந்திருக் கோயில் எய்திஅருமறைப் பொருள் ஆனாரைப் பணிந்து அணி நற் சங்கத்தின்தருமுறை நெறியக் கோயில் சார்ந்தமை அருளிச் செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

120

கறை அணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடிமறையவர் போற்ற வந்து திரு வலம் புரத்து மன்னும்இறைவரைத் தொழுது பாடும் கொடியுடை ஏத்திப் போந்துநிறைபுனல் திருச் சாய்க்காடு தொழுதற்கு நினைந்து செல்வார்.
சொற்பிரிப்பு
கறைஅணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடிமறையவர் போற்ற வந்து திருவலம் புரத்து மன்னும்இறைவரைத் தொழுது பாடும் கொடி உடை ஏத்திப் போந்துநிறைபுனல் திருச்சாய்க்காடு தொழுதற்கு நினைந்து செல்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

121

பன்னகப் பூணினாரைப் பல்லவ னீச்சரத்துச்சென்னியால் வணங்கி ஏத்தித் திருந்து இசைப்பதிகம் பாடிப்பொன்னி சூழ் புகாரில் நீடு புனிதர்தம் திருச்சாய்க் காட்டுமன்னுசீர்த் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து எதிர் கொள்ளப் புக்கார்.
சொற்பிரிப்பு
பன்னகப் பூணினாரைப் பல்லவன் ஈச்சரத்துச்சென்னியால் வணங்கி ஏத்தித் திருந்திசைப் பதிகம் பாடிப்பொன்னி சூழ் புகாரில் நீடு புனிதர் தம் திருச்சாய்க்காட்டுமன்னு சீர்த் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து எதிர் கொள்ளப் புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

122

வான் அளவு உயர்ந்த வாயில்லுள் வலம் கொண்டு புக்குத்தேன் அலர் கொன்றையார் தம் திருமுன்பு சென்று தாழ்ந்துமானிடம் தரித்தார் தம்மைப் போற்றுவார் மண்புகார் என்றுஊன் எலாம் உருக ஏத்தி உச்சி மேல் குவித்தார் செங்கை.
சொற்பிரிப்பு
வான் அளவு உயர்ந்த வாயில் உள் வலம் கொண்டு புக்குத்தேன் அலர் கொன்றையார் தம் திருமுன்பு சென்று தாழ்ந்துமான் இடம் தரித்தார் தம்மைப் போற்றுவார் மண் புகார் என்றுஊன் எலாம் உருக ஏத்தி உச்சி மேல் குவித்தார் செங்கை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

123

சீரினில் திகழ்ந்த பாட்டில் திருக் கடைக் காப்புப் போற்றிப்பாரினில் பொலிந்த தொண்டர் போற்றிடப் பயில்வார் பின்னும்ஏர் இசைப் பதிகம் பாடி ஏத்திப் போந்து இறைவர் வெண்காடுஆரு மெய்க் காதலோடும் பணிவதற்கு அணைந்தார் அன்றே.
சொற்பிரிப்பு
சீரினில் திகழ்ந்த பாட்டில் திருக் கடைக் காப்புப் போற்றிப்பாரினில் பொலிந்த தொண்டர் போற்றிடப் பயில்வார் பின்னும்ஏரிசைப் பதிகம் பாடி ஏத்திப் போந்து இறைவர் வெண்காடுஆரு மெய்க் காதலோடும் பணிவதற்கு அணைந்தார் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

124

பொன்னிதழ்க் கொன்றை வன்னி புனல் இள மதியம் நீடுசென்னியர் திருவெண் காட்டுத் திருத் தொண்டர் எதிரே சென்று அங்குஇன்ன தன்மையர்கள் ஆனார் என ஒணா மகிழ்ச்சி பொங்கமன்னுசீர்ச் சண்பை ஆளும் மன்னரைக் கொண்டு புக்கார்.
சொற்பிரிப்பு
பொன் இதழ்க் கொன்றை வன்னி புனல் இள மதியம் நீடுசென்னியர் திருவெண்காட்டுத் திருத்தொண்டர் எதிரே சென்று அங்குஇன்ன தன்மையர்கள் ஆனார் என ஒணா மகிழ்ச்சி பொங்கமன்னு சீர்ச் சண்பை ஆளும் மன்னரைக் கொண்டு புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

125

முத்தமிழ் விரகர் தாமும் முதல்வர் கோபுரத்து முன்னர்ச்சித்த நீடு உவகை யோடும் சென்று தாழ்ந்து எழுந்து புக்குப்பத்தராம் அடியார் சூழப் பரமர் கோயிலைச் சூழ் வந்துநித்தனார் தம் முன்பு எய்தி நிலம் உறத் தொழுது வீழ்ந்தார்.
சொற்பிரிப்பு
முத்தமிழ் விரகர் தாமும் முதல்வர் கோபுரத்து முன்னர்ச்சித்த நீடு உவகையோடும் சென்று தாழ்ந்து எழுந்து புக்குப்பத்தராம் அடியார் சூழப் பரமர் கோயிலைச் சூழ் வந்துநித்தனார் தம் முன்பு எய்தி நிலம் உறத் தொழுது வீழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

126

மெய்ப் பொருள் ஆயினாரை வெண்காடு மேவினாரைச்செப்பரும்பதிக மாலை கண் காட்டு நுதல் முன் சேர்த்திமுப்புரம் செற்றார் பாதம் சேரும் முக்குளமும் பாடிஒப்பரும் ஞானம் உண்டார் உளம் மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார்.
சொற்பிரிப்பு
மெய்ப்பொருள் ஆயினாரை வெண்காடு மேவினாரைச்செப்பரும் பதிக மாலை கண்காட்டு நுதல் முன் சேர்த்திமுப்புரம் செற்றார் பாதம் சேரு முக்குளமும் பாடிஒப்பரும் ஞானம் உண்டார் உளம் மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

127

அருமையால் புறம்பு போந்து வணங்கி அங்கு அமரும் நாளில்திருமுல்லை வாயில் எய்திச் செந்தமிழ் மாலை சேர்த்திமருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்தத்தருமலி புகலி வந்து ஞானசம் பந்தர் சார்ந்தார்.
சொற்பிரிப்பு
அருமையால் புறம்பு போந்து வணங்கி அங்கு அமரும் நாளில்திருமுல்லை வாயில் எய்திச் செந்தமிழ் மாலை சாத்திமருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்தத்தருமலி புகலி வந்து ஞானசம்பந்தர் சார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

128

தோணி வீற்றிருந்தார் தம்மைத் தொழுது முன் நின்று தூயஆணியாம் பதிகம் பாடி அருள் பெரு வாழ்வு கூரச்சேண் உயர் மாடம் ஓங்கும் திருப்பதி அதனில் செய்யவேணியார் தம்மை நாளும் போற்றிய விருப்பின் மிக்கார்.
சொற்பிரிப்பு
தோணி வீற்று இருந்தார் தம்மைத் தொழுது முன் நின்று தூயஆணியாம் பதிகம் பாடி அருள் பெருவாழ்வு கூரச்சேண் உயர் மாடம் ஓங்கும் திருப்பதி அதனில் செய்யவேணியார் தம்மை நாளும் போற்றிய விருப்பின் மிக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

129

வைகும் அந்நாளில் கீழ் பால் மயேந்திரப் பள்ளி வாசம்செய் பொழில் குருகா வூரும் திருமுல்லை வாயில் உள்ளிட்டுஎய்திய பதிகள் எல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தித்தையலாள் பாகர் தம்மைப் பாடினார் தமிழ்ச் சொல் மாலை.
சொற்பிரிப்பு
வைகும் அந்நாளில் கீழ்பால் மயேந்திரப் பள்ளி வாசம்செய்பொழில் குருகாவூரும் திருமுல்லை வாயில் உள்ளிட்டுஎய்திய பதிகள் எல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தித்தையலாள் பாகர் தம்மைப் பாடினார் தமிழ்ச்சொல் மாலை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

130

அவ்வகை மருங்கு சூழ்ந்த பதிகளில் அரனார் பொற்றாள்மெய் வகை ஞானம் உண்ட வேதியர் விரவிப் போற்றிஉய் வகை மண்உளோருக்கு உதவிய பதிகம் பாடிஎவ்வகையோரும் ஏத்த இறைவரை ஏத்து(ம்) நாளில்.
சொற்பிரிப்பு
அவ்வகை மருங்கு சூழ்ந்த பதிகளில் அரனார் பொன்தாள்மெய்வகை ஞானம் உண்ட வேதியர் விரவிப் போற்றிஉய்வகை மண் உளோருக்கு உதவிய பதிகம் பாடிஎவ்வகையோரும் ஏத்த இறைவரை ஏத்தும் நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

131

திரு நீல கண்டத்துப் பெரும் பாணர் தெள் அமுதின்வருநீர்மை இசைப்பாட்டு மதங்க சூளா மணியார்ஒரு நீர்மையுடன் உடைய பிள்ளையார் கழல் வணங்கத்தரு நீர்மை யாழ் கொண்டு சண்பையிலே வந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
திருநீலகண்டத்துப் பெரும் பாணர் தெள் அமுதின்வருநீர்மை இசைப்பாட்டு மதங்க சூளாமணியார்ஒருநீர்மை உடன் உடைய பிள்ளையார் கழல் வணங்கத்தருநீர்மை யாழ் கொண்டு சண்பையிலே வந்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

132

பெரும் பாணர் வரவு அறிந்து பிள்ளையார் எதிர் கொள்ளச்சுரும்பு ஆர் கமல மலர்த் துணைப் பாதம் தொழுது எழுந்துவிரும்பு ஆர்வத்தொடும் ஏத்தி மெய்ம் மொழிகளால் துதித்துவரும் பான்மை தரு வாழ்வு வந்து எய்த மகிழ் சிறந்தார்.
சொற்பிரிப்பு
பெரும்பாணர் வரவு அறிந்து பிள்ளையார் எதிர்கொள்ளச்சுரும்பு ஆர் செங்கமல மலர்த் துணைப்பாதம் தொழுது எழுந்து,விரும்பு ஆர்வத்தொடும் ஏத்தி மெய்ம் மொழிகளால் துதித்து,வரும்பான்மை தருவாழ்வு வந்து எய்த மகிழ் சிறந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

133

அளவு இலா மகிழ்ச்சியினார் தமை நோக்கி ஐயர் நீர்உளம் மகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம் என்றேஇள நிலா நகை முகிழ்ப்ப இசைத்த அவரை உடன் கொண்டுகள நிலவு நஞ்சு அணிந்தார் பால் அணையும் கவுணியனார்.
சொற்பிரிப்பு
அளவிலா மகிழ்ச்சியினார் தமைநோக்கி ஐயர் நீர்உளம் மகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம் என்றேஇளநிலா நகை முகிழ்ப்ப இசைத்து அவரை உடன்கொண்டுகளம் நிலவு நஞ்சு அணிந்தார் பால் அணையும் கவுணியனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

134

கோயிலினில் புற முன்றில் கொடு புக்குக் கும்பிடுவித்துஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும் எனஆய புகழ்ப் பிள்ளையார் அருள் பெற்ற அதற்கு இறைஞ்சிமேய தொடைத் தந்திரி யாழ் வீக்கி இசை விரிக்கின்றார்.
சொற்பிரிப்பு
கோயிலினில் புறமுன்றில் கொடுபுக்குக் கும்பிடுவித்துஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும் எனஆயபுகழ்ப் பிள்ளையார் அருள் பெற்ற அதற்கு இறைஞ்சிமேய தொடைத் தந்திரி யாழ் வீக்கி இசை விரிக்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

135

தான நிலைக் கோல் வடித்துப் படி முறைமைத் தகுதியினால்ஆன இசை ஆராய்வுற்று அங்கணர்தம் பாணியினைமான முறைப் பாடினியார் உடன் பாடி வாசிக்கஞான போனகர் மகிழ்ந்தார் நான் மறையோர் அதிசயித்தார்.
சொற்பிரிப்பு
தான நிலைக் கோல் வடித்துப் படிமுறைமைத் தகுதியினால்ஆன இசை ஆராய்வுற்று அங்கணர் தம் பாணியினைமான முறைப் பாடினி யாருடன் பாடி வாசிக்கஞான போனகர் மகிழ்ந்தார் நான்மறையோர் அதிசயித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

136

யாழில் எழும் ஓசையுடன் இருவர் மிடற்று இசை ஒன்றிவாழி திருத் தோணி உளார் மருங்கு அணையும் மாட்சியினைத்தாழும் இரு சிறைப் பறவை படிந்த தனி விசும்பு இடை நின்றுஏழ் இசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்து இசைத்தார்.
சொற்பிரிப்பு
யாழில் எழும் ஓசை உடன் இருவர் மிடற்று இசை ஒன்றிவாழி திருத்தோணி உளார் மருங்கு அணையும் மாட்சியினைத்தாழும் இரு சிறைப்பறவை படிந்த தனி விசும்பு இடை நின்றுஏழ்இசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்து இசைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

137

எண்ணரும் சீர் திருத்தோணி எம் பெருமான் கழல் பரவிப்பண் அமையாழ் இசை கூடப்பெரும் பாணர் பாடிய பின்கண் நுதலார் அருளினால் காழியர் கோன் கொடு போந்துநண்ணி உறைவிடம் சமைத்து நல் விருந்து சிறந்து அளிப்ப.
சொற்பிரிப்பு
எண் அருஞ்சீர்த் திருத்தோணி எம்பெருமான் கழல் பரவிப்பண் அமை யாழ் இசைகூடப் பெரும் பாணர் பாடிய பின்கண்நுதலார் அருளினால் காழியர் கோன் கொடு போந்துநண்ணி உறை இடம் சமைத்து நல்விருந்து சிறந்து அளிப்ப.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

138

பிள்ளையார் அருள் பெற்ற பெரும்பாணர் பிறை அணிந்தவெள்ள நீர்ச் சடையாரை அவர் மொழிந்த மெய்ப் பதிகம்உள்ளபடி கேட்டலுமே உருகு பெரு மகிழ்ச்சியராய்த்தெள் அமிர்தம் அருந்தினர் போல் சிந்தை களிப்புறத் தொழுதார்.
சொற்பிரிப்பு
பிள்ளையார் அருள்பெற்ற பெரும்பாணர் பிறை அணிந்தவெள்ளநீர்ச் சடையாரை அவர் மொழிந்த மெய்ப்பதிகம்உள்ளபடி கேட்டலுமே உருகு பெரு மகிழ்ச்சியராய்த்தெள்ளமிர்தம் அருந்தினர்போல் சிந்தை களிப்பு உறத் தொழுதார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

139

காழியார் தவப்பயனாம் கவுணியர் தம் தோன்றலார்ஆழி விடம் உண்டவர் தம் அடி போற்றும் பதிக இசையாழின் முறைமையின் இட்டே எவ் உயிரும் மகிழ்வித்தார்ஏழ் இசையும் பணி கொண்ட நீல கண்ட யாழ்ப்பாணர்.
சொற்பிரிப்பு
காழியார் தவப்பயனாம் கவுணியர் தம் தோன்றலார்ஆழி விடம் உண்டவர் தம் அடி போற்றும் பதிக இசையாழின் முறைமையின் இட்டே எவ்உயிரும் மகிழ்வித்தார்ஏழிசையும் பணிகொண்ட நீலகண்ட யாழ்ப்பாணர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

140

சிறிய மறைக் களிறு அளித்த திருப்பதிக இசை யாழின்நெறியில் இடும் பெரும் பாணர் பின்னும் நீர் அருள் செய்யும்அறிவரிய திருப்பதிக இசை யாழில் இட்டு அடியேன்பிறிவு இன்றிச் சேவிக்கப் பெற வேண்டும் எனத் தொழுதார்.
சொற்பிரிப்பு
சிறிய மறைக்களிறு அளித்த திருப்பதிக இசை யாழின்நெறியில் இடும் பெரும்பாணர் பின்னும் நீர் அருள்செய்யும்அறிவரிய திருப்பதிக இசை யாழில் இட்டு அடியேன்பிறிவு இன்றிச் சேவிக்கப் பெற வேண்டும் எனத் தொழுதார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

141

மற்றதற்குப் பிள்ளையார் மனம் மகிழ்வுற்று இசைந்து அருளப்பெற்றவர் தாம் தம்பிரான் அருள் இதுவே எனப் பேணிச்சொற்றமிழ் மாலையின் இசைகள் சுருதி யாழ் முறை தொடுத்தேஅற்றை நாள் போல் என்றும் அகலா நண்புடன் அமர்ந்தார்.
சொற்பிரிப்பு
மற்றதற்குப் பிள்ளையார் மன மகிழ்வுற்று இசைந்தருளப்பெற்றவர் தாம் தம்பிரான் அருள் இதுவே எனப் பேணிச்சொற்றமிழ் மாலையின் இசைகள் சுருதி யாழ் முறை தொடுத்தேஅற்றை நாள் போல் என்றும் அகலா நண்புடன் அமர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

142

சிரபுரத்தில் அமர்ந்தருளும் திருஞான சம்பந்தர்பரவு திருத் தில்லை நடம் பயில்வாரைப் பணிந்து ஏத்தவிரவி எழும் பெரும் காதல் வெள்ளத்தை உள்ளத்தில்தர இசையும் குறிப்பு அறியத் தவ முனிவர்க்கு அருள் செய்தார்.
சொற்பிரிப்பு
சிரபுரத்தில் அமர்ந்தருளும் திருஞான சம்பந்தர்பரவு திருத்தில்லை நடம் பயில்வாரைப் பணிந்து ஏத்தவிரவி எழும் பெரும் காதல் வெள்ளத்தை உள்ளத்தில்தரஇசையும் குறிப்பு அறியத் தவமுனிவர்க்கு அருள்செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

143

பிள்ளையார் அருள் செய்யப் பெரும் தவத்தால் பெற்று எடுத்தவள்ளலார் தாமும் உடன் செல்வதற்கு மனம் களிப்பவெள்ளி மால் வரை என்னத் திருத் தோணி வீற்றிருந்தபுள்ளி மான் உரியாரைத் தொழுது அருளால் புறப்பட்டார்.
சொற்பிரிப்பு
பிள்ளையார் அருள்செய்யப் பெருந் தவத்தால் பெற்று எடுத்தவள்ளலார் தாமும் உடன் செல்வதற்கு மனம் களிப்பவெள்ளிமால் வரை என்னத் திருத்தோணி வீற்றிருந்தபுள்ளிமான் உரியாரைத் தொழுதுஅருளால் புறப்பட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

144

தாழ்வில் யாழ்ப் பாணரொடும் தாதையார் தம்மோடும்மேவிய சீர் அடியார்கன் புடை வர வெம் குரு வேந்தர்பூவின் மேல் அயன் போற்றும் புகலியினைக் கடந்து போய்த்தேவர்கள் தம் பெரும் தேவர் திருத் தில்லை வழிச் செல்வார்.
சொற்பிரிப்பு
தாவில் யாழ்ப்பாணரொடும் தாதையார் தம்மோடும்மேவிய சீர் அடியார்கள் புடை வர வெங்குரு வேந்தர்பூவின்மேல் அயன் போற்றும் புகலியினைக் கடந்துபோய்த்தேவர்கள் தம் பெரும்தேவர் திருத்தில்லை வழிச் செல்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

145

நள்ளிருட்கண் நின்று ஆடுவார் உறை பதி நடுவு கண்டன போற்றிமுள்ளிடைப் புற வெள் இதழ்க் கேதகை முகிழ் விரி மணம் சூழப்புள்ளிடைத் தடம் பழனமும் படு கரும்புடை கழிந்திடப் போந்துகொள்ளிடத் திரு நதிக்கரை அடைந்தனர் கவுணியர் குல தீபர்.
சொற்பிரிப்பு
நள் இருள்கண் நின்று ஆடுவார் உறை பதி நடுவு கண்டன போற்றிமுள்இடைப் புற வெள் இதழ்க் கேதகை முகிழ் விரி மணம் சூழப்புள் உடைத் தடம் பழனமும் படு கரும்புடைகழிந்திடப் போந்துகொள்ளிடத் திருநதிக்கரை அணைந்தனர் கவுணியர் குலதீபர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

146

வண்டிரைத்து எழு செழு மலர்ப் பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தித்தண்டலைப் பல வளத்தொடும் வருபுனல் தாழ்ந்து சேவடிதாழத்தெண் திரைக் கடல் பவளமும் பணிலமும் செழு மணித் திரள் முத்தும்கொண்டிரட்டி வந்தோதமங்கெதிர் கொளக் கொள்ளிடம் கடந்து ஏறி.
சொற்பிரிப்பு
வண்டு இரைத்து எழு செழுமலர்ப் பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தித்தண்டலைப் பல வளத்தொடும் வருபுனல் தாழ்ந்து சேவடி தாழத்தெண்டிரைக்கடல் பவளமும் பணிலமும் செழுமணித் திரள் முத்தும்கொண்டு இரட்டி வந்து ஓதம் அங்கு எதிர்கொளக் கொள்ளிடம் கடந்து ஏறி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

147

பல்கு தொண்டர் தம் குழாத் தொடும் உடன் வரும் பயில் மறையவர் சூழச்செல் கதிப் பயன் காண்பவர் போல் களி சிந்தை கூர் தரக் கண்டுமல்கு தேவரே முதல் அணைத்து உயிர்களும் வணங்க வேண்டின எல்லாம்நல்கு தில்லை சூழ் திரு எல்லை பணிந்தனர் ஞான ஆரமுது உண்டார்.
சொற்பிரிப்பு
பல்கு தொண்டர்தம் குழாத்தொடும் உடன்வரும் பயில் மறையவர் சூழச்செல்கதிப் பயன் காண்பவர் போல் களி சிந்தை கூர்தரக் கண்டுமல்கு தேவரே முதல் அனைத்து உயிர்களும் வணங்க வேண்டின எல்லாம்நல்கு தில்லை சூழ் திருஎல்லை பணிந்தனர் ஞான ஆர்அமுது உண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

148

செங்கண் ஏற்றவர் தில்லையே நோக்கி இத் திருந்து உலகினிற்கு எல்லாம்மங்கலம் தரு மழவிளம் போதகம் வரும் இரு மருங்கு எங்கும்தங்கு புள்ளொலி வாழ்த்துரை எடுத்து முன் தாமரை மது வாசப்பொங்கு செம்முகை கரம் குவித்து அலர் முகம் காட்டின புனல் பொய்கை.
சொற்பிரிப்பு
செங்கண் ஏற்றவர் தில்லையே நோக்கி இத்திருந்து உலகினிற்கு எல்லாம்மங்கலம் தரு மழ இளம் போதகம் வரும் இருமருங்கு எங்கும்தங்கு புள்ஒலி வாழ்த்து உரை எடுத்து முன் தாமரை மதுவாசப்பொங்கு செம்முகைகரம் குவித்து அலர் முகம் காட்டின புனல் பொய்கை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

149

கலவ மென் மயில் இனம் களித்து அழைத்திடக் கடி மணக் குளிர் கால் வந்துஉலவி முன் பணிந்து எதிர் கொளக் கிளர்ந்து எழுந்து உடன் வரும் சுரும்பு ஆர்ப்பஇலகு செந்தளிர் ஒளி நிறம் திகழ்தர இரு குழை புடை ஆடமலர் முகம் பொலிந்து அசைய மென் கொம்பர் நின்று ஆடுவ மலர்ச் சோலை.
சொற்பிரிப்பு
கலவ மென்மயில் இனம் களித்து அழைத்திடக் கடிமணக் குளிர்கால்வந்துஉலவி முன்பணிந்து எதிர்கொளக் கிளர்ந்து எழுந்து உடன்வரும் சுரும்பு ஆர்ப்பஇலகு செந்தளிர் ஒளிநிறம் திகழ்தர இருகுழை புடை ஆடமலர்முகம் பொலிந்து அசைய மென் கொம்பர் நின்று ஆடுவ மலர்ச்சோலை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

150

இழைத் தடம் கொங்கை இமய மாமலைக் கொடி இன் அமுது என ஞானம்குழைத்து அளித்திட அமுது செய்து அருளிய குருளையார் வரக் கண்டுமழைத்த மந்த மாருதத்தினால் நறு மலர் வண்ண நுண் துகள் தூவித்தழைத்த பொங்கு எழில் முகம் செய்து வணங்கின தடம் பணை வயல் சாலி.
சொற்பிரிப்பு
இழைத்தடம் கொங்கை இமயமா மலைக் கொடிஇன்அமுது என ஞானம்குழைத்து அளித்திட அமுதுசெய் தருளிய குருளையார் வரக்கண்டுமழைத்த மந்த மாருதத்தினால் நறுமலர் வண்ண நுண்துகள் தூவித்தழைத்த பொங்கு எழில்முகம் செய்து வணங்கின தடம்பணை வயல் சாலி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

151

ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர் எழுந்தருளும் அந் நலம் கண்டுசேல் அலம்பும் தண் புனல் தடம் படிந்து அணை சீத மாருதம் வீசச்சாலவும் பல கண் பெறும் பயன் பெறும் தன்மையில் களி கூர்வபோல் அசைந்து இரு புடைமிடைந்து ஆடின புறம்பு அணை நறும் பூகம்.
சொற்பிரிப்பு
ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர் எழுந்து அருளும் அந்நலம் கண்டுசேல் அலம்பு தண் புனல்தடம் படிந்து அணை சீத மாருதம் வீசச்சாலவும் பல கண்பெறும் பயன் பெறும் தன்மையில் களி கூர்வபோல் அசைந்து இரு புடைமிடைந்து ஆடின புறம்பணை நறும்பூகம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

152

பவம் தவிர்ப்பவர் தில்லை சூழ் எல்லையில் மறையவர் பயில் வேள்விச்சிவம் தரும் பயன் உடைய ஆகுதிகளின் செழும் புகைப் பரப்பாலேதவம் தழைப்ப வந்தருளிய பிள்ளையார் தாம் அணைவுற முன்னேநிவந்த நீல நுண் துகில் விதானித்தது போன்றது நெடுவானம்.
சொற்பிரிப்பு
பவம் தவிர்ப்பவர் தில்லைசூழ் எல்லையில் மறையவர் பயில் வேள்விச்சிவம் தரும்பயன் உடைய ஆகுதிகளின் செழும்புகைப் பரப்பாலேதவம் தழைப்பவந்தருளிய பிள்ளையார் தாம் அணைவு உற முன்னேநிவந்த நீலநுண் துகில் விதானித்தது போன்றது நெடுவானம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

153

கரும்பு செந்நெல் பைம் கமுகொடு கலந்து உயர் கழனி அம் பணை நீங்கிஅரும்பு மென் மலர் தளிர் பல மூலம் என்று அனைத்தின் ஆகரம் ஆனமருங்கில் நந்தன வனம் பணிந்து அணைந்தனர் மாட மாளிகை ஓங்கிநெருங்கு தில்லை சூழ் நெடுமதில் தென் திரு வாயில் நேர் அணித்தாக.
சொற்பிரிப்பு
கரும்பு செந்நெல் பைங்கமுகொடு கலந்து உயர் கழனி அம்பணை நீங்கிஅரும்பு மென்மலர் தளிர்பலம் மூலம் என்றுஅனைத்தின் ஆகரம்ஆனமருங்கில் நந்தன வனம் பணிந்து அணைந்தனர் மாட மாளிகை ஒங்கிநெருங்கு தில்லைசூழ் நெடுமதில் தென் திருவாயில் நேர் அணித்தாக.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

154

பொங்கு கொங்கையில் கறந்த மெய்ஞ் ஞானமாம் போனகம் பொன் குன்றமங்கை செங்கையால் ஊட்ட உண்டருளிய மதலையார் வந்தார் என்றுஅங்கண் வாழ் பெரும் திருத்தில்லை அந்தணர் அன்பர்களுடன் ஈண்டிஎங்கும் மங்கல அணிமிக அலங்கரித்து எதிர் கொள அணைவார்கள்.
சொற்பிரிப்பு
பொங்கு கொங்கையில் கறந்த மெய்ஞ் ஞானம் ஆம்போனகம் பொன்குன்றமங்கை செங்கையால் ஊட்டஉண்டு அருளிய மதலையார் வந்தார் என்றுஅங்கண் வாழ்பெரும் திருத்தில்லை அந்தணர் அன்பர்கள் உடன் ஈண்டிஎங்கும் மங்கல அணிமிக அலங்கரித்து எதிர்கொள அணைவார்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

155

வேத நாதமும் மங்கல முழக்கமும் விசும்பிடை நிறைந்து ஓங்கசீத வாச நீர் நிறை குடம் தீபங்கள் திசை எலாம் நிறைந்து ஆரச்சோதி மா மணி வாயிலின் புறம் சென்று சோபன ஆக்கமும் சொல்லிக்கோதிலாதவர் ஞானசம்பந்தரை எதிர் கொண்டு புக்கார்.
சொற்பிரிப்பு
வேத நாதமும் மங்கல முழக்கமும் விசும்பு இடை நிறைந்து ஓங்கச்சீத வாசநீர் நிறைகுடம் தீபங்கள் திசை எலாம் நிறைந்து ஆரச்சோதி மாமணி வாயிலின் புறம் சென்று சோபன ஆக்கமும் சொல்லிக்கோது இலாதவர் ஞான சம்பந்தரைஎதிர் கொண்டு கொடுபுக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

156

செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் தென் திசைத் திருவாயில்எல்லை நீங்கி உள் புகும் திருமருங்கு நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழமல்லல் ஆவண மறுகிடைக் கழிந்து போய் மறையவர் நிறை வாழ்க்கைத்தொல்லை மாளிகை நிரைத் திரு வீதியைத் தொழுது அணைந்தனர் தூயோர்.
சொற்பிரிப்பு
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் தென்றிசைத் திருவாயில்எல்லை நீங்கி உள் புகுந்து இருமருங்கு நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழமல்லல் ஆவண மறுகிடைக் கழிந்துபோய் மறையவர் நிறைவாழ்க்கைத்தொல்லை மாளிகை நிரைத் திருவீதியைத் தொழுது அணைந்தனர் தூயோர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

157

மலர்ந்த பேரொளி குளிர் தரச் சிவமணம் கமழ்ந்து வான் துகள் மாறிச்சிலம்பு அலம்பு சேவடியவர் பயில்வுறும் செம்மையால் திருத்தொண்டுகலந்த அன்பர் தம் சிந்தையில் திகழ் திருவீதி கண் களி செய்யப்புலம் கொள் மைந்தனார் எழுநிலைக் கோபுரம் பணிந்து எழுந்தனர் போற்றி.
சொற்பிரிப்பு
மலர்ந்த பேரொளி குளிர்தரச் சிவமணம் கமழ்ந்து வான் துகள் மாறிச்சிலம்பு அலம்பு சேவடியவர் பயில்வுறும் செம்மையால் திருத்தொண்டுகலந்த அன்பர் தம் சிந்தையில் திகழ் திருவீதி கண்களி செய்யப்பலன்கொள் மைந்தனார் எழுநிலைக் கோபுரம் பணிந்து எழுந்தனர் போற்றி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

158

நீடுநீள் நிலைக் கோபுரத்துள் புக்கு நிலவிய திரு முன்றின்மாடு செம் பொனின் மாளிகை வலம் கொண்டு வானுற வளர் திங்கள்சூடுகின்ற பேரம்பலம் தொழுது போந்து அருமறை தொடர்ந்து ஏத்தஆடுகின்றவர் முன்புற அணைந்தனர் அணிகிளர் மணிவாயில்.
சொற்பிரிப்பு
நீடு நீள்நிலைக் கோபுரத்து உள்புக்கு நிலவிய திருமுன்றில்மாடு செம்பொனின் மாளிகை வலம் கொண்டு வான் உற வளர்திங்கள்சூடுகின்ற பேரம்பலம் தொழுது போந்து அருமறை தொடர்ந்து ஏத்தஆடுகின்றவர் முன்புற அணைந்தனர் அணிகிளர் மணிவாயில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

159

நந்தி எம்பிரான் முதல் கண நாதர்கள் நலம் கொள்பன் முறை கூடஅந்தம் இல்லவர் அணுகி முன் தொழுதிரு அணுக்கனாம் திருவாயில்சிந்தை ஆர்வமும் பெருகிடச் சென்னியில் சிறிய செங்கை யேறஉய்ந்து வாழ் திரு நயனங்கள் களி கொள்ள உருகும் அன்பொடு புக்கார்.
சொற்பிரிப்பு
நந்தி எம்பிரான் முதல்கண நாதர்கள் நலங்கொள் பன்முறை கூடஅந்தம் இல்லவர் அணுகி முன் தொழு திருஅணுக்கனாம் திருவாயில்சிந்தை ஆர்வமும் பெருகிடச் சென்னியில் சிறிய செங்கை ஏறஉய்ந்து வாழ் திருநயனங்கள் களிகொள்ளஉருகும் அன்பொடு புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

160

அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ் ஞானமே ஆன அம்பல முந்தம்உள் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒரு பெரும் தனிக் கூத்தும்கண்ணின் முன்புறக் கண்டு கும்பிட்டு எழும் களிப்பொடும் கடல் காழிப்புண்ணியக் கொழுந்து அனையவர் போற்றுவார் புனிதர் ஆடிய பொற்பு.
சொற்பிரிப்பு
அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ் ஞானமே ஆன அம்பலமும் தம்உண் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒருபெரும் தனிக்கூத்தும்கண்ணின் முன்புறக் கண்டு கும்பிட்டு எழும்களிப்பொடும் கடல்காழிப்புண்ணியக் கொழுந்து அனையவர் போற்றுவார் புனிதர் ஆடிய பொற்பு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

161

உணர்வின் நேர் பெற வரும் சிவ போகத்தை ஒழிவு இன்றி உருவின் கண்அணையும் ஐம் பொறி அளவினும் எளிவர அருளினை எனப் போற்றிஇணை இல் வண் பெருங் கருணையே ஏத்தி முன் எடுத்த சொற் பதிகத்தில்புணரும் இன் இசை பாடினர் ஆடினர் பொழிந்தனர் விழி மாரி.
சொற்பிரிப்பு
உணர்வின் நேர் பெற வரும் சிவ போகத்தை ஒழிவின்றி உருவின்கண்அணையும் ஐம்பொறி அளவினும் எளி வரஅருளினை எனப் போற்றிஇணையில் வண் பெருங்கருணையே ஏத்தி முன்எடுத்த சொல் பதிகத்தில்புணரும் இன்னிசை பாடினர் ஆடினர் பொழிந்தனர் விழிமாரி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

162

ஊழி முதல்வர்க்கு உரிமைத் தொழில் சிறப்பால்வாழி திருத் தில்லை வாழ் அந்தணரை முன் வைத்தேஏழ் இசையும் ஓங்க எடுத்தார் எமை ஆளும்காழியர் தம் காவலனார் கற்றாங் கெரியோம்பி.
சொற்பிரிப்பு
ஊழி முதல்வர்க்கு உரிமைத் தொழில் சிறப்பால்வாழி திருத்தில்லை வாழ் அந்தணரை முன் வைத்தேஏழ்இசையும் ஓங்க எடுத்தார் எமை ஆளும்காழியர் தம் காவலனார் கற்றாங்கு எரி ஓம்பி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

163

பண்ணார் பதிகத் திருக் கடைக் காப்புப் பரவிஉள் நாடும் என்பும் உயிரும் கரைந்து உருக்கும்விண் நாயகன் கூத்து வெட்ட வெளியே திளைத்துக்கண்ணார் அமுது உண்டார் காலம் பெற அழுதார்.
சொற்பிரிப்பு
பண்ணார் பதிகத் திருக் கடைக்காப்புப் பரவிஉண்ணாடும் என்பும் உயிரும் கரைந்து உருக்கும்விண் நாயகன் கூத்து வெட்ட வெளியே திளைத்துக்கண் ஆர் அமுது உண்டார் காலம் பெற அழுதார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

164

முன் மால் அயன் அறியா மூர்த்தியார் முன் நின்றுசொல் மாலையால் காலம் எல்லாம் துதித்து இறைஞ்சிப்பல் மா மறை வெள்ளம் சூழ்ந்து பரவுகின்றபொன் மாளிகையை வலம் கொண்டு புறம் போந்தார்.
சொற்பிரிப்பு
முன் மால் அயன் அறியா மூர்த்தியார் முன் நின்றுசொன்மாலையால் காலம் எல்லாம் துதித்து இறைஞ்சிப்பன்மா மறை வெள்ளம் சூழ்ந்து பரவுகின்றபொன்மாளிகையை வலம் கொண்டு புறம் போந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

165

செல்வத் திருமுன்றில் தாழ்ந்து எழுந்து தேவர் குழாம்மல்கும் திருவாயில் வந்து இறைஞ்சி மா தவங்கள்நல்கும் திரு வீதி நான்கும் தொழுது அங்கண்அல்கும் திறம் அஞ்சுவார் சண்பை ஆண்டகையார்.
சொற்பிரிப்பு
செல்வத் திருமுன்றில் தாழ்ந்து எழுந்து தேவர் குழாம்மல்கும் திருவாயில் வந்து இறைஞ்சி மாதவங்கள்நல்கும் திருவீதி நான்கும் தொழுது அங்கண்அல்கும் திறம் அஞ்சுவார் சண்பை ஆண்டகையார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

166

செய்ய சடையார் திருவேட்களம் சென்றுகை தொழுது சொல் பதிகம் பாடிக் கழுமலக் கோன்வைகி அருளும் இடம் அங்கு ஆக மன்றாடும்ஐயன் திருக் கூத்துக் கும்பிட்டு அணைவுறும் நாள்.
சொற்பிரிப்பு
செய்ய சடையார் திருவேட்களம் சென்றுகைதொழுது சொல்பதிகம் பாடிக் கழுமலக்கோன்வைகி அருளும் இடம் அங்காக மன்று ஆடும்ஐயன் திருக்கூத்துக் கும்பிட்டு அணைவுறு நாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

167

கைம் மான் மறியார் கழிப்பாலை உள் அணைந்துமெய்ம் மாலைச் சொற் பதிகம் பாடி விரைக் கொன்றைச்செம்மாலை வேணித் திரு உச்சி மேவியுறைஅம்மானைக் கும்பிட்டு அருந் தமிழும் பாடினார்.
சொற்பிரிப்பு
கைம்மான் மறியார் கழிப்பாலை உள் அணைந்துமெய்ம்மாலைச் சொல் பதிகம் பாடி விரைக்கொன்றைச்செம்மாலை வேணித் திரு உச்சி மேவி உறைஅம்மானைக் கும்பிட்டு அருந் தமிழும் பாடினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

168

பாடும் பதிக இசை யாழ்ப்பாணரும் பயிற்றிநாடும் சிறப்பு எய்த நாளும் நடம் போற்றுவார்நீடும் திருத்தில்லை அந்தணர்கள் நீள் மன்றுள்ஆடும் கழற்கு அணுக்கராம் பேறு அதிசயிப்பார்.
சொற்பிரிப்பு
பாடும் பதிக இசை யாழ்ப்பாணரும் பயிற்றிநாடும் சிறப்பு எய்த நாளும் நடம் போற்றுவார்நீடும் திருத்தில்லை அந்தணர்கள் நீள் மன்றுள்ஆடும் கழற்கு அணுக்கராம் பேறு அதிசயிப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

169

ஆங்கு அவர் தம் சீலத்து அளவு இன்மையும் நினைந்தேஓங்கி எழும் காதல் ஒழியாத உள்ளத்தார்தேன் கமழும் சோலைத் திருவேட்களம் கடந்துபூங்கிடங்கு சூழ் புலியூர் புக்கு அணையும் போழ்தின்கண்.
சொற்பிரிப்பு
ஆங்கவர் தம் சீலத்து அளவு இன்மையும் நினைந்தேஓங்கி எழும் காதல் ஒழியாத உள்ளத்தார்தேன் கமழும் சோலைத் திருவேட்களம் கடந்துபூங்கிடங்கு சூழ் புலியூர்ப் புக்கு அணையும் போழ்தின்கண்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

170

அண்டத்து இறைவர் அருளால் அணி தில்லைமுண்டத் திருநீற்று மூவாயிரவர்களும்தொண்டத் தகைமைக் கண நாதராய்த் தோன்றக்கண்ட அப் பரிசு பெரும் பாணர்க்கும் காட்டினார்.
சொற்பிரிப்பு
அண்டத்து இறைவர் அருளால் அணிதில்லைமுண்டத் திருநீற்று மூவாயிரவர்களும்தொண்டத் தகைமைக் கணநாதராய்த் தோன்றக்கண்டு அப்பரிசு பெரும் பாணர்க்கும் காட்டினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

171

செல்வம் பிரிவு அறியாத் தில்லை வாழ் அந்தணரும்எல்லையில் சீர்ச் சண்பை இளவேறு எழுந்து அருளிஒல்லை இறைஞ்சா முன் தாமும் உடன் இறைஞ்சிமல்லல் அணி வீதி மருங்கு அணைய வந்தார்கள்.
சொற்பிரிப்பு
செல்வம் பிரிவு அறியாத் தில்லைவாழ் அந்தணரும்எல்லையில் சீர்ச் சண்பை இள ஏறு எழுந்தருளிஒல்லை இறைஞ்சா முன் தாமும் உடன் இறைஞ்சிமல்லல் அணிவீதி மருங்கு அணைய வந்தார்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

172

பொங்கி எழும் காதல் புலன் ஆகப் பூசுரர் தம்சிங்கம் அனையார் திரு முடியின் மேல் குவித்தபங்கயத்தின் செவ்வி பழித்து வனப்பு ஓங்கும்செங்கையொடும் சென்று திருவாயில் உட்புக்கார்.
சொற்பிரிப்பு
பொங்கி எழும் காதல் புலன் ஆகப் பூசுரர் தம்சிங்கம் அனையார் திருமுடியின் மேல் குவித்தபங்கயத்தின் செவ்வி பழித்து வனப்பு ஓங்கும்செங்கையொடும் சென்று திருவாயில் உள்புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

173

ஒன்றிய சிந்தை உருக உயர் மேருக்குன்று அனைய பேரம்பலம் மருங்கு கும்பிட்டுமன்றுள் நிறைந்து ஆடும் மாணிக்கக் கூத்தர் எதிர்சென்று அணைந்து தாழ்ந்தார் திருக்களிற்றுப் படிக் கீழ்.
சொற்பிரிப்பு
ஒன்றிய சிந்தை உருக உயர் மேருக்குன்று அனைய பேரம்பலம் மருங்கு கும்பிட்டுமன்றுள் நிறைந்து ஆடும் மாணிக்கக் கூத்தர் எதிர்சென்றணைந்து தாழ்ந்தார் திருக்களிற்றுப் படிக்கீழ்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

174

ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் என்று எடுத்து ஆர்வத்தால்பாடினார் பின்னும் அப்பதிகத்தினில் பரவிய பாட்டு ஒன்றில்நீடு வாழ் தில்லை நான் மறையோர் தமைக் கண்ட அந் நிலை எல்லாம்கூறுமாறு கோத்து அவர் தொழுது ஏத்து சிற்றம் பலம் எனக் கூறி.
சொற்பிரிப்பு
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் என்று எடுத்து ஆர்வத்தால்பாடினார் பின்னும் அப்பதிகத்தினில் பரவிய பாட்டு ஒன்றில்நீடு வாழ் தில்லை நான்மறையோர் தமைக் கண்ட அந்நிலை எல்லாம்கூடுமாறு கோத்து அவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் எனக் கூறி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

175

இன்ன தன்மையில் இன்னிசைப் பதிகமும் திருக்கடைக் காப்பு ஏற்றிமன்னும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்து எதிர் வந்து முன் நின்று ஆடும்பின்னுவார் சடைக் கூத்தர் பேரருள் பெறப் பிரியாத விடைபெற்றுப்பொன்னின் அம்பலம் சூழ்ந்து தாழ்ந்து எழுந்து போந்து அணைந்தனர் புறமுன்றில்.
சொற்பிரிப்பு
இன்ன தன்மையில் இன்னிசைப் பதிகமும் திருக்கடைக் காப்பும் ஏத்திமன்னும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்து எதிர்வந்துமுன் நின்று ஆடும்பின்னு வார்சடைக் கூத்தர் பேரருள் பெறப் பிரியாத விடைபெற்றுப்பொன்னின் அம்பலம் சூழ்ந்து தாழ்ந்து எழுந்து போந்துஅணைந்தனர் புறமுன்றில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

176

அப் புறத்திடை வணங்கி அங்கு அருளுடன் அணிமணித் திருவாயில்பொற்புறத் தொழுது எழுந்து உடன் போதரப் போற்றிய புகழ்ப் பாணர்நற்பதம் தொழுது அடியனேன் பதி முதல் நதி நிவாக்கரை மேயஒப்பில் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று உரை செய அது நேர்வார்.
சொற்பிரிப்பு
அப்புறத்திடை வணங்கி அங்கு அருளுடன் அணிமணித் திருவாயில்பொற்பு உறத் தொழுது எழுந்து உடன் போதரப் போற்றிய புகழ்ப்பாணர்நற்பதம் தொழுது அடியனேன் பதி முதல்நதி நிவாக்கரை மேயஒப்பில் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று உரை செய அது நேர்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

177

பொங்கு தெண்திரைப் புனித நீர் நிவாக்கரைக் குடதிசை மிசைப் போந்துதங்கு தந்தையாருடன் பரிசனங்களும் தவ முனிவரும் செல்லச்செங்கை யாழ்த் திரு நீலக் கண்டப் பெரும் பாணருடன் சேரமங்கையார் புகழ் மதங்க சூளாமணியாருடன் வரவந்தார்.
சொற்பிரிப்பு
பொங்கு தெண்திரைப் புனித நீர் நிவாக்கரைக் குடதிசை மிசைப் போந்து,தங்கு தந்தையாருடன் பரிசனங்களும் தவ முனிவரும் செல்லச்செங்கை யாழ் திருநீல கண்டப் பெரும்பாணனார் உடன் சேரமங்கையார் புகழ் மதங்க சூளாமணியார் உடன் வர வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

178

இரும் தடங்களும் பழனமும் கடந்து போய் எருக்கத்தம் புலியூரின்மருங்கு சென்றுற நீல கண்டப் பெரும்பாணனார் வணங்கிக் கார்நெருங்கு சோலை சூழ் இப்பதி அடியனேன்பதி என நெடிது இன்புற்றுஅருங்கலைச் சிறு மழ இளங்களிறனார் அங்கணைந்து அருள் செய்வார்.
சொற்பிரிப்பு
இருந்தடங்களும் பழனமும் கடந்து போய் எருக்கத்தம் புலியூரின்மருங்கு சென்றுற, நீலகண்டப் பெரும்பாணனார் வணங்கிக் கார்நெருங்கு சோலைசூழ் இப்பதி அடியனேன் பதிஎன நெடிது இன்புற்றுஅருங்கலைச் சிறு மழ இளங்களிறு அனார் அங்கு அணைந்து அருள்செய்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

179

ஐயர் நீர் அவதரித்திட இப்பதி அளவில் மாதவம் முன்புசெய்தவாறு எனச் சிறப்பு உரைத்து அருளி அச் செழும்பதி இடம் கொண்டமை கொள் கண்டர் தம் கோயிலினுட் புக்கு வலம் கொண்டு வணங்கி பார்உய்ய வந்தவர் செழும் தமிழ்ப் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார்.
சொற்பிரிப்பு
ஐயர் நீர் அவதரித்திட இப்பதி அளவில் மாதவம் முன்புசெய்தவாறு எனச் சிறப்பு உரைத் தருளி அச்செழும்பதி இடம் கொண்டமைகொள் கண்டர் தம் கோயில் உள் புக்கு வலங்கொண்டு வணங்கிப் பார்உய்ய வந்தவர் செழுந்தமிழ்ப் பதிகம் அங்கு இசையுடன் உரைசெய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

180

அங்கு நின்று எழுந்து அருளி மற்றவருடன் அம்பொன்மா மலை வல்லிபங்கர் தாம் இனிது உறையும் நற் பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தித்துங்க வண்தமிழ்த் தொடை மலர் பாடிப் போய்த் தொல்லை வெங்குரு வேந்தர்செங்கண் ஏற்றவர் திரு முது குன்றினைத் தொழுது சென்று அணைகின்றார்.
சொற்பிரிப்பு
அங்கு நின்று எழுந்தருளி மற்று அவருடன் அம்பொன் மாமலை வல்லிபங்கர் தாம் இனிது உறையும் நல்பதிபல பரிவொடும் பணிந்து ஏத்தித்துங்க வண்தமிழ்த் தொடைமலர் பாடிப் போய்த் தொல்லை வெங்குரு வேந்தர்செங்கண் ஏற்றவர் திருமுது குன்றினைத் தொழுது சென்று அணைகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

181

மொய் கொள் மாமணிக் கொழித்து முத்தாறு சூழ் முது குன்றை அடைவோம் என்றுஎய்து சொல்மலர் மாலை வண் பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்திசெய் தவத் திரு முனிவரும் தேவரும் திசையெலாம் நெருங்கப் புக்குஐயர் சேவடி பணியும் அப் பொருப்பினில் ஆதரவுடன் சென்றார்.
சொற்பிரிப்பு
மொய்கொள் மாமணி கொழித்து முத்தாறு சூழ்முதுகுன்றை அடைவோம் என்றுஎய்து சொன்மலர் மாலை வண் பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்திச்செய்தவத் திரு முனிவரும் தேவரும் திசை எலாம் நெருங்கப் புக்குஐயர் சேவடி பணியும் அப்பொருப்பினில் ஆதரவுடன் சென்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

182

வான நாயகர் திருமுது குன்றினை வழிபட வலம் கொள்வார்தூ நறும் தமிழ்ச் சொல் இருக்குக் குறள் துணை மலர் மொழிந்து ஏத்திஞான போனகர் நம்பர் தம் கோயிலை நண்ணி அங்கு உள்புக்குதேன் அலம்பு தண் கொன்றை யார் சேவடி திளைத்த அன்பொடு தாழ்ந்தார்.
சொற்பிரிப்பு
வான நாயகர் திருமுது குன்றினை வழிபட வலம்கொள்வார்.தூ நறும் தமிழ்ச் சொல் இருக்குக் குறள் துணைமலர் மொழிந்து ஏத்திஞான போனகர் நம்பர் தம் கோயிலை நண்ணி அங்கு உள் புக்குத்தேன் அலம்பு தண் கொன்றையார் சேவடி திளைத்த அன்பொடு தாழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

183

தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும் எனும் தண் தமிழ்த் தொடை சாத்திவாழ்ந்து போந்து அங்கண் வளம்பதி அதனிடை வைகுவார் மணி வெற்புச்சூழ்ந்த தண் புனல் சுலவு முத்தாறொடு தொடுத்த சொல் தொடை மாலைவீழ்ந்த காதலால் பல முறை விளம்பியே மேவினார் சில நாள்கள்
சொற்பிரிப்பு
தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும் எனும்தண்தமிழ்த் தொடை சாத்திவாழ்ந்து போந்து அங்கண் வளம்பதி அதனிடை வைகுவார் மணிவெற்புச்சூழ்ந்த தண்புனல் சுலவு முத்தாறொடு தொடுத்த சொல் தொடைமாலைவீழ்ந்த காதலால் பலமுறை விளம்பியே மேவினார் சிலநாள்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

184

ஆங்கு நாதரைப் பணிந்து பெண்ணாகடம் அணைந்து அருமறை ஓசைஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற ஒரு தனிப் பரஞ்சோதிப்பாங்கு அணைந்து முன் வலம் கொண்டு பணிவுற்றுப் பரவு சொல் தமிழ் மாலைதீங்கு நீங்குவீர் தொழுமின்கள் எனும் இசைப் பதிகமும் தெரிவித்தார்.
சொற்பிரிப்பு
ஆங்கு நாதரைப் பணிந்து பெண்ணாகடம் அணைந்து அருமறை ஓசைஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற ஒருதனிப் பரஞ்சோதிப்பாங்கு அணைந்து முன் வலங்கொண்டு பணிவுற்றுப் பரவுசொல் தமிழ்மாலைதீங்கு நீங்குவீர் தொழுமின்கள் எனும் இசைப் பதிகமும் தெரிவித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

185

கருவரைப்பில் புகாதவர் கை தொழும்ஒருவரைத் தொழுது உள்ளம் உவந்து போய்ப்பெருவரத்தினில் பெற்றவர் தம்முடன்திரு அரத்துறை சேர்தும் என்று ஏகுவார்.
சொற்பிரிப்பு
கரு வரைப்பில் புகாதவர் கைதொழும்ஒருவரைத் தொழுது உள்ளம் உவந்து போய்ப்பெருவரத்தினில் பெற்றவர் தம்முடன்திரு அரத்துறை சேர்தும் என்று ஏகுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

186

முந்தை நாள்கள் ஒரோ ஒரு கால் முதுதந்தையார்பியல் மேல் இருப்பார் தவிர்ந்துஅந்தணாளர் அவர் அருகே செலச்சிந்தை செய் விருப்போடு முன் சென்றனர்.
சொற்பிரிப்பு
முந்தை நாள்கள் ஒரோ ஒருகால் முதுதந்தையார் பியல் மேல் இருப்பார் தவிர்ந்துஅந்தணாளர் அவர் அருகே செலச்சிந்தை செய் விருப்போடு முன் சென்றனர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

187

ஆதியார் தம் அரத்துறை நோக்கியேகாதலால் அணைவார் கடிது ஏகிடதாதையாரும் பரிவுறச் சம்பந்தர்பாத தாமரை நொந்தன பைப்பய.
சொற்பிரிப்பு
ஆதியார் தம் அரத்துறை நோக்கியேகாதலால் அணைவார் கடிது ஏகிடத்தாதையாரும் பரிவுறச் சம்பந்தர்பாத தாமரை நொந்தன பைப்பய.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

188

மறை அனைத்தும் ஒரு வடிவாம் எனநிறை மதிப் பிள்ளை நீள் நிலம் சேர்ந்து எனத்துறை அலைக் கங்கை சூடும் அரத்துறைஇறைவரைத் தொழுவான் விரைந்து ஏகினார்.
சொற்பிரிப்பு
மறை அனைத்தும் ஒருவடிவாம் எனநிறைமதிப் பிள்ளை நீள்நிலம் சேர்ந்து எனத்துறை அலைக்கங்கை சூடும் அரத்துறைஇறைவரைத் தொழுவான் விரைந்து ஏகினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

189

பாசம் மற்றிலர் ஆயினும் பார் மிசைஆசை சங்கரற்கு ஆயின தன்மையால்தேசு மிக்க திருவுரு ஆனவர்ஈசனைத் தொழுதே தொழுது ஏகினார்.
சொற்பிரிப்பு
பாசம் மற்று இலர் ஆயினும் பார்மிசைஆசை சங்கரற்கு ஆயின தன்மையால்தேசு மிக்க திருஉருவானவர்ஈசனைத் தொழுதே தொழுது ஏகினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

190

இந்த மாநிலத்தின் இருள் நீங்கிடவந்த வைதிக மாமணி ஆனவர்சிந்தை ஆரமுதாகிய செம் சடைத்தந்தையார் கழல் தாழ்ந்து எழுந்து ஏகினார்.
சொற்பிரிப்பு
இந்த மாநிலத்தின் இருள் நீங்கிடவந்த வைதிக மாமணி ஆனவர்சிந்தை ஆர் அமுது ஆகிய செஞ்சடைத்தந்தையார் கழல் தாழ்ந்து எழுந்து ஏகினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

191

மாறன் பாடி எனும் பதி வந்துறஆறு செல் வருத்தத்தின் அசைவினால்வேறு செல்பவர் வெய்துறப் பிள்ளையார்ஏறும் அஞ்செழுத்து ஓதி அங்கு எய்திட.
சொற்பிரிப்பு
மாறன் பாடி எனும் பதி வந்துறஆறு செல் வருத்தத்தின் அசைவினால்வேறு செல்பவர் வெய்துறப் பிள்ளையார்ஏறும் அஞ்செழுத்து ஓதி அங்கு எய்திட.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

192

உய்ய வந்த சம்பந்தர் உடன் வந்தார்க்குஎய்து வெம்மை இளைப்பு அஞ்சினான் போலக்கைகள் ஆயிரம் வாங்கிக் கரந்து போய்வெய்யவன் சென்று மேல் கடல் வீழ்ந்தனன்.
சொற்பிரிப்பு
உய்ய வந்த சம்பந்தர் உடன் வந்தார்க்குஎய்து வெம்மை இளைப்பு அஞ்சினான் போலக்கைகள் ஆயிரம் வாங்கிக் கரந்து போய்வெய்யவன் சென்று மேல்கடல் வீழ்ந்தனன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

193

அற்றை நாள் இரவு அப்பதியின் இடைச்சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிடப்பெற்றம் ஊர்ந்த பிரான் கழல் பேணுவார்வெற்றி மாதவத்தோருடன் மேவினார்.
சொற்பிரிப்பு
அற்றை நாள் இரவு அப்பதியின் இடைச்சுற்றும் நீடிய தொண்டர்கள் போற்றிடப்பெற்றம் ஊர்ந்த பிரான் கழல் பேணுவார்வெற்றி மாதவத்தோர் உடன் மேவினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

194

இந்நிலைக் கண் எழில் வளர் பூந்தராய்மன்னனார் தம் வழி வருத்தத் தினைஅன்னம் ஆடும் துறை நீர் அரத்துறைச்சென்னியாற்றர் திருவுளம் செய்தனர்.
சொற்பிரிப்பு
இந்நிலைக்கண் எழில் வளர் பூந்தராய்மன்னனார் தம் வழி வருத்தத்தினைஅன்னம் ஆடும் துறை நீர் அரத்துறைச்சென்னி ஆற்றர் திருஉளம் செய்தனர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

195

ஏறுதற்குச் சிவிகை இடக்குடைகூறி ஊதக் குலவு பொற் சின்னங்கள்மாறில் முத்தின் படியினால் மன்னியநீறு வந்த நிமலர் அருளுவார்.
சொற்பிரிப்பு
ஏறுதற்குச் சிவிகை இடக்குடைகூறி ஊதக் குலவு பொன் சின்னங்கள்மாறில் முத்தின் படியினால் மன்னியநீறு உவந்த நிமலர் அருளுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

196

நீடு வாழ் பதி யாகு(ம்) நெல் வாயிலின்மாட மாமனை தோறு(ம்) மறையோர்க்குக்கூடு கங்குல் கனவில் குலமறைதேடு சேவடி தோன்ற முன் சென்று பின்.
சொற்பிரிப்பு
நீடு வாழ்பதி ஆகும் நெல் வாயிலின்மாட மாமனை தோறும் மறையோர்க்குக்கூடு கங்குல் கனவில் குலமறைதேடு சேவடி தோன்ற முன் சென்று பின்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

197

ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான்மான முத்தின் சிவிகை மணிக் குடைஆன சின்ன(ம்) நம் பால் கொண்டு அருங்கலைக்கோன் அவன் பால் அணைந்து கொடும் என.
சொற்பிரிப்பு
ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான்மான முத்தின் சிவிகை மணிக்குடைஆன சின்னம் நம்பால் கொண்டு அருங்கலைக்கோன் அவன்பால் அணைந்து கொடும் என.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

198

அந்தணாளர் உரைத்த அப்போழ்தினில்வந்து கூடி மகிழ்ந்து அற்புதம் உறும்சிந்தையோடும் செழுநீர் அரத்துறைஇந்து சேகரர் கோயில் வந்து எய்தினர்.
சொற்பிரிப்பு
அந்தணாளர் உரைத்த அப்போழ்தினில்வந்து கூடி மகிழ்ந்து அற்புதம் உறும்சிந்தையோடும் செழுநீர் அரத்துறைஇந்து சேகரர் கோயில் வந்து எய்தினர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

199

ஆங்கு மற்ற அருள் அடியாருடன்ஓங்கு கோயில் உள்ளார்க்கும் உண்டாயிடஈங்கு இது என்ன அதிசயம் என்பவர்தாங்கள் அம்மறையோர்கள் முன் சாற்றினார்.
சொற்பிரிப்பு
ஆங்கு மற்ற அருளடியாருடன்ஓங்கு கோயில் உள்ளார்க்கும் உண்டாயிடஈங்கு இது என்ன அதிசயம் என்பவர்தாங்கள் அம்மறையோர்கள் முன் சாற்றினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

200

சால மிக்க வியப்புறு தன்மையின்பாலர் ஆதலும் பள்ளி எழுச்சியின்காலம் எய்திடக் காதல் வழிப்படும்சீல மிக்கார் திருக்காப்பு நீக்கினார்.
சொற்பிரிப்பு
சால மிக்க வியப்புறு தன்மையின்பாலர் ஆதலும் பள்ளி எழுச்சியின்காலம் எய்திடக் காதல் வழிப்படும்சீலம் மிக்கார் திருக்காப்பு நீக்கினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

201

திங்கள் நீர்மைச் செழுந் திரள் முத்தினால்துங்க வெண் குடை தூய சிவிகையும்பொங்க ஊதும் பொருவரும் சின்னமும்அங்கண் நாதர் அருளினால் கண்டனர்.
சொற்பிரிப்பு
திங்கள் நீர்மைச் செழுந்திரள் முத்தினால்துங்க வெண்குடை தூய சிவிகையும்பொங்க ஊதும் பொரு அரும் சின்னமும்அங்கண் நாதர் அருளினால் கண்டனர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

202

கண்டபின் அவர் கை தலை மேல் குவித்துஎண்திசைக்கும் விளக்கி இவையாம் எனத்தொண்ட ரோடு மறையவர் சூழ்ந்து எழுந்துஅண்டர் நாடும் அறிவுற ஆர்த்தனர்.
சொற்பிரிப்பு
கண்ட பின் அவர் கை தலைமேல் குவித்துஎண் திசைக்கும் விளக்கு இவையாம்எனத்தொண்டரோடும் மறையவர் சூழ்ந்து எழுந்துஅண்டர் நாடும் அறிவுற ஆர்த்தனர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

203

சங்கு துந்துபி தாரை பேரி இம்முதல்பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழஅங்கணன் அருளால் அவை கொண்டு உடன்பொங்கு காதல் எதிர் கொளப் போதுவார்.
சொற்பிரிப்பு
சங்கு துந்துபி தாரை பேரிம் முதல்பொங்கு பல்இய நாதம் பொலிந்து எழஅங்கணன் அருளால் அவை கொண்டு உடன்பொங்கு காதல் எதிர்கொளப் போதுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

204

மாசில் வாய்மை நெல் வாயின் மறையவர்ஆசில் சீர்ச் சண்பை ஆண் தகையார்க்கு எதிர்தேசுடைச் சிவிகை முதலாயினஈசர் இன் அருளால் தாங்கி ஏகினார்.
சொற்பிரிப்பு
மாசில் வாய்மை நெல்வாயில் மறையவர்ஆசில் சீர்ச் சண்பை ஆண்டகையார்க்கு எதிர்தேசு உடைச் சிவிகை முதல் ஆயினஈசர் இன் அருளால் தாங்கி ஏகினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

205

இத்தலை இவர் இன்னணம் ஏகினார்அத்தலைச் சண்பை நாதர்க்கும் அவ் இராமுத்த நற் சிவிகை முதல் ஆயினஉய்த்து அளிக்கும் படி முன் உணர்த்துவார்.
சொற்பிரிப்பு
இத்தலை இவர் இன்னணம் ஏகினார்அத்தலைச் சண்பை நாதர்க்கும் அவ் இராமுத்த நல் சிவிகை முதல் ஆயினஉய்த்து அளிக்கும் படி முன் உணர்த்துவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

206

அள்ளல் நீர் வயல் சூழும் அரத்துறைவள்ளலார் நாம் மகிழ்ந்து அளிக்கும் அவைகொள்ளல் ஆகும் கொண்டு உய்த்தல் செய்வாய் எனஉள்ளவாறு அருள் செய்ய உணர்ந்த பின்.
சொற்பிரிப்பு
அள்ளல் நீர் வயல் சூழும் அரத்துறைவள்ளலார் நாம் மகிழ்ந்து அளிக்கும் அவைகொள்ளல் ஆகும் கொண்டு உய்த்தல் செய்வாய்எனஉள்ளவாறு அருள் செய்ய உணர்ந்த பின்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

207

சண்பை ஆளியார் தாம் கண்ட மெய்யருள்பண்பு தந்தையார் தம்முடன் பாங்கமர்தொண்டருக்கு அருள் செய்து தொழா முனம்விண் புலப்பட வீங்கு இருள் நீங்கலும்.
சொற்பிரிப்பு
சண்பை ஆளியார் தாம் கண்ட மெய் அருள்பண்பு தந்தையார் தம்முடன் பாங்கு அமர்தொண்டருக்கு அருள் செய்து தொழாமுனம்விண் புலப்பட வீங்கு இருள் நீங்கலும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

208

மாலை யாமம் புலர் உறும் வைகறைவேலை செய்வினை முற்றி வெண் நீறு அணிகோல மேனியராய்க் கைம் மலர் குவித்துஏல அஞ்செழுத்து ஓதி எழுந்தனர்.
சொற்பிரிப்பு
மாலை யாமம் புலர்வுறும் வைகறைவேலை செய்வினை முற்றி வெண் நீறு அணிகோல மேனியராய்க் கைம்மலர் குவித்துஏல அஞ்செழுத்து ஓதி எழுந்தனர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

209

போத ஞானப் புகலிப் புனிதரைச்சீத முத்தின் சிவிகை மேல் ஏற்றிடக்காதல் செய்பவன் போலக் கருங்கடல்மீது தேரின் வந்து எய்தினன் வெய்யவன்.
சொற்பிரிப்பு
போத ஞானப் புகலிப் புனிதரைச்சீத முத்தின் சிவிகைமேல் ஏற்றிடக்காதல் செய்பவன் போலக் கருங்கடல்மீது தேரின் வந்து எய்தினன் வெய்யவன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

210

ஆய போழ்தின் அர எனும் ஆர்ப்புடன்தூய முத்தின் சிவிகை சுடர்க் குடைமேய சின்னங்கள் கொண்டு மெய் அன்ப ரோடுஏய அந்தணர் தாம் எதிர் தோன்றினார்.
சொற்பிரிப்பு
ஆய போழ்தின் அர எனும் ஆர்ப்புடன்தூய முத்தின் சிவிகை சுடர்க்குடைமேய சின்னங்கள் கொண்டு மெய் அன்பரோடுஏய அந்தணர் தாம் எதிர் தோன்றினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

211

வந்து தோன்றிய அந்தணர் மாதவர்கந்த வார் பொழில் காழி நன்னாடர் முன்அந்தமில் சீர் அரத்துறை ஆதியார்தந்த பேரருள் தாங்குவீர் என்றனர்.
சொற்பிரிப்பு
வந்து தோன்றிய அந்தணர் மாதவர்கந்த வார் பொழில் காழி நன்நாடர் முன்அந்தம் இல் சீர் அரத்துறை ஆதியார்தந்த பேரருள் தாங்குவீர் என்றனர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

212

என்று தங்களுக்கு ஈசர் அருள் செய்ததுஒன்றும் அங்கு ஒழியாமை உரைத்து முன்நின்று போற்றித் தொழுதிட நேர்ந்ததுமன்றுளார் அருள் என்று வணங்கினார்.
சொற்பிரிப்பு
என்று தங்களுக்கு ஈசர் அருள் செய்ததுஒன்றும் அங்கு ஒழியாமை உரைத்து முன்நின்று போற்றித் தொழுதிட நேர்ந்ததுமன்று உளார் அருள் என்று வணங்கினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

213

மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால்தம்மை உன்னும் பரிசு தந்து ஆள்பவர்செம்மை நித்தில ஆனச் சிறப்பு அருள்எம்மை ஆளுவிப்பான் இன்று அளித்ததே.
சொற்பிரிப்பு
மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால்தம்மை உன்னும் பரிசு தந்து ஆள்பவர்செம்மை நித்தில யானச் சிறப்பு அருள்எம்மை ஆள் உவப்பான் இன்று அளித்ததே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

214

எந்தை ஈசன் என எடுத்து இவ்வருள்வந்தவாறு மற்று எவ் வணமோ என்றுசிந்தை செய்யும் திருப் பதிகத்து இசைபுந்தியார் அப் புகன்று எதிர் போற்றுவார்.
சொற்பிரிப்பு
எந்தை ஈசன் என எடுத்து இவ்அருள்வந்தவாறு மற்று எவ்வணமோ என்றுசிந்தை செய்யும் திருப்பதிகத்து இசைபுந்தி ஆரப் புகன்று எதிர் போற்றுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

215

பொடி அணிந்த புராணன் அரத்துறைஅடிகள் தம் அருளே இதுவாம் எனப்படி இலாத சொல் மாலைகள் பாடியேநெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார்.
சொற்பிரிப்பு
பொடி அணிந்த புராணன் அரத்துறைஅடிகள் தம் அருளே இதுவாம் எனப்படி இலாத சொன் மாலைகள் பாடியேநெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

216

சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து பார்மீது தாழ்ந்து வெண் நீற்று ஒளி போற்றி நின்றுஆதியார் அருள் ஆதலின் அஞ்செழுத்துஓதி ஏறினார் உய்ய உலகெலாம்.
சொற்பிரிப்பு
சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து பார்மீது தாழ்ந்து வெண் நீற்று ஒளி போற்றி நின்றுஆதியார் அருள் ஆதலின் அஞ்செழுத்துஓதி ஏறினார் உய்ய உலகெலாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

217

தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள் ஆர்த்தன தொல்லைஅண்டர் ஆர்த்தனர் அகிலமும் ஆர்ப்புடன் எய்தக்கொண்டல் ஆர்த்தன முழவமும் ஆர்த்தன குழுமிவண்டு அறாப் பொலி மலர் மழை ஆர்த்தது வானம்.
சொற்பிரிப்பு
தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள் ஆர்த்தன தொல்லைஅண்டர் ஆர்த்தனர் அகிலமும் ஆர்ப்புடன் எய்தக்கொண்டல் ஆர்த்தன முழவமும் ஆர்த்தன குழுமிவண்டு அறாப்பொலி மலர் மழை ஆர்த்தது வானம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

218

வளையும் ஆர்த்தன வயிர்களும் ஆர்த்தன மறையின்கிளையும் ஆர்த்தன கிளைஞரும் ஆர்த்தனர் கெழுவும்களைகண் ஆர்த்ததொர் கருணையினார் கவின் முத்தின்விளையும் மாக் கதிர் வெண்குடை ஆர்த்தது மிசையே.
சொற்பிரிப்பு
வளையும் ஆர்த்தன வயிர்களும் ஆர்த்தன மறையின்கிளையும் ஆர்த்தன கிளைஞரும் ஆர்த்தனர் கெழுவுங்களைகண் ஆர்த்ததொர் கருணையின் ஆர்த்தன முத்துவிளையு மாக் கதிர் வெண்குடை ஆர்த்தது மிசையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

219

பல்கு வெண்கதிர்ப் பத்திசேர் நித்திலச் சிவிகைப்புல்கு நீற்று ஒளியுடன் பொலி புகலி காவலனார்அல்கு வெள் வளை அலைத்து எழு மணி நிரைத் தரங்கம்மல்கு பாற்கடல் வளர்மதி உதித்தது என வந்தார்.
சொற்பிரிப்பு
பல்கு வெண்கதிர்ப் பத்தி சேர் நித்திலச் சிவிகைப்புல்கு நீற்று ஒளி உடன் பொலி புகலி காவலனார்அல்கு வெள்வளை அலைத்து எழு மணி நிறைத் தரங்கம்மல்கு பாற்கடல் வளர்மதி உதித்து என வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

220

நீடு தொண்டர்கள் மறையவர் ஏனையோர் நெருங்கிமாடு கொண்டு எழு மகிழ்ச்சியின் மலர்க்கை மேல் குவித்தேஆடு கின்றனர் அயர்ந்தனர் அளவில் ஆனந்தம்கூடுகின்ற கண் பொழி புனல் வெள்ளத்தில் குளித்தார்.
சொற்பிரிப்பு
நீடு தொண்டர்கள் மறையவர் ஏனையோர் நெருங்கிமாடு கொண்டு எழு மகிழ்ச்சியின் மலர்க்கை மேல் குவித்தேஆடுகின்றனர் அயர்ந்தனர் அளவில் ஆனந்தம்கூடுகின்ற கண் பொழி புனல் வெள்ளத்தில் குளித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

221

செய்ய பொன் புனை வெண்டரளத்து அணிசிறக்கச்சைவ மாமறைத் தலைவர்பால் பெறும் தனிக் காளம்வையம் ஏழுடன் மறைகளும் நிறை தவத்தோரும்உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என ஊத.
சொற்பிரிப்பு
செய்ய பொன்புனை வெண்தரளத்து அணி சிறக்கச்சைவ மாமறைத் தலைவர்பால் பெறும் தனிக் காளம்வையம் ஏழுடன் மறைகளும் நிறை தவத்தோரும்உய்ய ஞான சம்பந்தன் வந்தான் என ஊத.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

222

சுற்று மாமறைச் சுருதியின் பெருகு ஒலி நடுவேதெற்றினார் புரம் எரித்தவர் தரு திருச்சின்னம்முற்றும் ஆனவண் ஞானமே முலை சுரந்து ஊட்டப்பெற்ற பாலறா வாயன் வந்தான் எனப் பிடிக்க.
சொற்பிரிப்பு
சுற்று மாமறைச் சுருதியின் பெருகு ஒலி நடுவேதெற்றினார் புரம் எரித்தவர் தரு திருச் சின்னம்முற்றும் ஆனவள் ஞானமே முலைசுரந்து ஊட்டப்பெற்ற பாலறா வாயன் வந்தான் எனப் பிடிக்க.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

223

புணர்ந்த மெய்த்தவக் குழாத்தொடும் போதுவார் முன்னேஇணைந்த நித்திலத்து இலங்கு ஒளி நலங்கிளர் தாரைஅணைந்த மாமறை முதல் கலை அகிலமும் ஓதாதுஉணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத.
சொற்பிரிப்பு
புணர்ந்த மெய்த்தவக் குழாத்தொடும் போதுவார் முன்னேஇணைந்த நித்திலத்து இலங்கு ஒளி நலம் கிளர் தாரைஅணைந்த மாமறை முதல் கலை அகிலமும் ஓதாதுஉணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

224

தெருளும் மெய்க்கலை விளங்கவும் பார் உளோர் சிந்தைஇருளும் நீங்கவும் எழுது சொன் மறை அளிப்பவர் தாம்பொருளும் ஞானமும் போகமும் போற்றி என்பாருக்குஅருளும் அங்கணர் திரு அரத் துறையை வந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
தெருளும் மெய்க்கலை விளங்கவும் பார் உளோர் சிந்தைஇருளும் நீங்கவும் எழுதுசொல் மறை அளிப்பவர் தாம்பொருளும் ஞானமும் போகமும் போற்றி என்பாருக்குஅருளும் அங்கணர் திருஅரத் துறையை வந்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

225

வந்து கோபுர மணி நெடு வாயில் சேய்த்து ஆகச்சந்த நித்திலச் சிவிகை நின்று இழிந்து தாழ்ந்து எழுந்துசிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கி முன் செல்லஅந்தி நாண்மதி அணிந்தவர் கோயிலுள் அடைந்தார்.
சொற்பிரிப்பு
வந்து கோபுர மணி நெடு வாயில் சேய்த்து ஆகச்சந்த நித்திலச் சிவிகை நின்று இழிந்து தாழ்ந்து எழுந்துசிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கி முன் செல்லஅந்தி நாள்மதி அணிந்தவர் கோயில் உள் அடைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

226

மன்னு கோயிலை வலம் கொண்டு திரு முன்பு வந்துசென்னியில் கரம் குவித்து வீழ்ந்து அன்பொடு திளைப்பார்என்னையும் பொருளாக இன் அருள் புரிந்து அருளும்பொன் அடித்தலத் தாமரை போற்றி என்று எழுந்தார்.
சொற்பிரிப்பு
மன்னு கோயிலை வலம்கொண்டு திருமுன்பு வந்துசென்னியில் கரம் குவித்து வீழ்ந்து அன்பொடு திளைப்பார்என்னையும் பொருள் ஆக இன் அருள் புரிந்து அருளும்பொன் அடித்தலத் தாமரை போற்றி என்று எழுந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

227

சூடினார் கர கமலங்கள் சொரிந்து இழி கண்ணீர்ஆடினார் திரு மேனியில் அரத்துறை விரும்பிநீடினார் திருவருட் பெருங் கருணையே நிகழப்பாடினார் திருப் பதிகம் ஏழ் இசையொடும் பயில
சொற்பிரிப்பு
சூடினார் கர கமலங்கள் சொரிந்து இழி கண்ணீர்ஆடினார் திருமேனியில் அரத்துறை விரும்பிநீடினார் திரு அருள்பெரும் கருணையே நிகழப்பாடினார் திருப்பதிகம் ஏழ் இசையொடும் பயில.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

228

இசை விளங்கிட இயல்பினில் பாடி நின்று ஏத்திமிசை விளங்கு நீர் வேணியார் அருளினால் மீண்டுதிசை விளங்கிடத் திருவருள் பெற்றவர் சில நாள்அசைவில் சீர்த் தொண்டர் தம்முடன் அப்பதி அமர்ந்தார்.
சொற்பிரிப்பு
இசை விளங்கிட இயல்பினில் பாடி நின்று ஏத்திமிசை விளங்கு நீர் வேணியார் அருளினால் மீண்டு,திசை விளங்கிடத் திருஅருள் பெற்றவர் சிலநாள்அசைவில் சீர்த்தொண்டர் தம்முடன் அப்பதி அமர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

229

தேவர் தம்பிரான் திரு அரத் துறையினில் இறைஞ்சிமேவு நாள்களில் விமலனார் நெல் வெண்ணெய் முதலாத்தாவில் அன்பர்கள் தம்முடன் தொழுது பின் சண்பைக்காவலர் அருள் பெற்று உடன் கலந்து மீண்டு அணைந்தார்.
சொற்பிரிப்பு
தேவர் தம்பிரான் திருஅரத் துறையினில் இறைஞ்சிமேவு நாள்களில் விமலனார் நெல்வெண்ணெய் முதலாத்தாவில் அன்பர்கள் தம்முடன் தொழுது பின் சண்பைக்காவலார் அருள் பெற்று உடன் கலந்து மீண்டு அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

230

விளங்கு வேணு புரத் திருத் தோணி வீற்றிருந்தகளம் கொள் கண்டர் தம் காதலியார் உடன் கூடஉளம் கொளப் புகுந்து உணர்வினில் வெளிப்பட உருகிவளம் கொள் பூம்புனல் புகலிமேல் செல மனம் வைத்தார்.
சொற்பிரிப்பு
விளங்கு வேணுபுரத் திருத்தோணி வீற்று இருந்தகளங்கொள் கண்டர் தம் காதலியாருடன்கூடஉளங்கொளப் புகுந்து உணர்வினில் வெளிப்பட உருகிவளங்கொள் பூம்புனல் புகலி மேல் செல மனம் வைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

231

அண்ணலார் திரு அரத்துறை அடிகளை வணங்கிநண்ணு பேரருளால் விடை கொண்டு போய் நடம் கொண்டுஉள் நிறைந்த பூங்கழலிணை உச்சி மேல் கொண்டேவெண்ணிலா மலர் நித்திலச் சிவிகை மேற் கொண்டார்.
சொற்பிரிப்பு
அண்ணலார் திரு அரத்துறை அடிகளை வணங்கிநண்ணு பேரருளால் விடைகொண்டு போய் நடங்கொண்டுஉள் நிறைந்த பூங்கழல் இணை உச்சிமேல் கொண்டேவெண் நிலா மலர் நித்திலச் சிவிகைமேல் கொண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

232

சிவிகை முத்தினில் பெருகு ஒளி திசை எலாம் விளக்ககவிகை வெண்மதிக் குளிர் ஒளி கதிர் செய்வான் கலப்பக்குவிகை மேல் கொண்டு மறையவர் குணலை இட்டு ஆடப்புவிகைம்மாறு இன்றிப் போற்ற வந்து அருளினார் போந்தார்.
சொற்பிரிப்பு
சிவிகை முத்தினில் பெருகு ஒளி திசைஎலாம் விளக்கக்கவிகை வெண்மதிக் குளிர் ஒளி கதிர் செய்வான் கலப்பக்குவி கைமேல் கொண்டு மறையவர் குணலை இட்டு ஆடப்புவி கைம்மாறு இன்றிப் போற்ற வந்தருளினார் போந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

233

மறை முழங்கின தழங்கின வண்தமிழ் வயிரின்குறை நரன்றன முரன்றன வளைக்குலம் காளம்முறை இயம்பின இயம்பல ஒலித்தன முரசப்பொறை கறங்கின பிறங்கின போற்றிசை அரவம்.
சொற்பிரிப்பு
மறை முழங்கின தழங்கின வண்தமிழ் வயிரின்குறை நரன்றன முரன்றன வளைக்குலம் காளம்முறை இயம்பின இயம்பல ஒலித்தன முரசப்பொறை கறங்கின பிறங்கின போற்றிசை அரவம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

234

உடைய பிள்ளையார் வரும் எல்லை உள்ள அப்பதியோர்புடை இரண்டினும் கொடியொடு பூந்துகில் விதானம்நடை செய் காவணம் தோரணம் பூகம் நல் கதலிமிடையும் மாலைகள் நிறை குடம் விளக்கொடு நிரைத்தார்.
சொற்பிரிப்பு
உடைய பிள்ளையார் வரும் எல்லை உள்ள அப்பதியோர்புடை இரண்டினும் கொடியொடு பூந்துகில் விதானம்நடைசெய் காவணம் தோரணம் பூகம் நல் கதலிமிடையும் மாலைகள் நிறை குடம் விளக்கொடு நிரைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

235

அனைய செய்கையால் எதிர் கொளும் பதிகள் ஆனவற்றின்வினை தரும் பவம் தீர்ப்பவர் கோயில்கள் மேவிப்புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார்பனை நெடும் கை மா உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர்.
சொற்பிரிப்பு
அனைய செய்கையால் எதிர் கொளும் பதிகள் ஆனவற்றின்வினைதரும் பவம் தீர்ப்பவர் கோயில்கள் மேவிப்புனையும் வண்தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார்பனை நெடுங்கை மா உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

236

அங்கு அணைந்து இளம்பிறை அணிந்த சென்னியார்பொங்கு எழில் கோபுரம் தொழுது புக்க பின்துங்க நீள் விமானத்தைச் சூழ்ந்து வந்துமுன்பங்கயச் சேவடி பணிந்து பாடுவார்.
சொற்பிரிப்பு
அங்கு அணைந்து இளம்பிறை அணிந்த சென்னியார்பொங்கு எழில் கோபுரம் தொழுது புக்கபின்துங்க நீள் விமானத்தைச் சூழ்ந்து வந்து முன்பங்கயச் சேவடி பணிந்து பாடுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

237

மண்ணினில் பொலிகுல மலையர் தாம் தொழுதுஎண்ணில் சீர்ப் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில்நண்ணிய வகை சிறப்பித்து நாதரைப்பண்ணினில் திகழ் திருப்பதிகம் பாடினார்.
சொற்பிரிப்பு
மண்ணினில் பொலி குலமலையர் தாம் தொழுதுஎண்ணில் சீர்ப் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில்நண்ணிய வகை சிறப்பித்து நாதரைப்பண்ணினில் திகழ் திருப்பதிகம் பாடினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

238

பாவினது இசை வழிபாடி அங்கு அகன்றியாவரும் தொழுது உடன் ஏத்த எய்தினார்மூவுலகு உய்ய நஞ்சு உண்ட மூர்த்தியார்மேவிய பெரும் திரு விசய மங்கையில்.
சொற்பிரிப்பு
பாவினது இசைவழி பாடி அங்கு அகன்றுயாவரும் தொழுது உடன் ஏத்த எய்தினார்மூஉலகு உய்ய நஞ்சு உண்ட மூர்த்தியார்மேவிய பெருந் திருவிசய மங்கையில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

239

அந்தணர் விசய மங்கையினில் அங்கணர்தம் தனி ஆலயம் சூழ்ந்து தாழ்ந்து முன்வந்தனை செய்து கோ தனத்தை மன்னியசெந்தமிழ் மாலையில் சிறப்பித்து ஏத்தினார்.
சொற்பிரிப்பு
அந்தணர் விசய மங்கையினில் அங்கணர்தம் தனி ஆலயம் சூழ்ந்து தாழ்ந்து முன்வந்தனை செய்து கோதனத்தை மன்னியசெந்தமிழ் மாலையில் சிறப்பித்து ஏத்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

240

விசய மங்கையின் இடம் அகன்று மெய்யர் தாள்அசைவில் வைகாவினில் அணைந்து பாடிப் போந்துஇசை வளர் ஞான சம்பந்தர் எய்தினார்திசை உடை ஆடையர் திருப்புறம் பயம்.
சொற்பிரிப்பு
விசயமங்கையின் இடம் அகன்று மெய்யர் தாள்அசைவில் வைகாவினில் அணைந்து பாடிப் போந்துஇசைவளர் ஞானசம்பந்தர் எய்தினார்திசை உடை ஆடையர் திருப்புறம்பயம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

241

புறம் பயத்து இறைவரை வணங்கிப் போற்றி செய்திறம் புரி நீர்மையில் பதிகச் செந்தமிழ்நிறம் பயில் இசையுடன் பாடி நீடியஅறம் தரு கொள்கையர் அமர்ந்து மேவினார்.
சொற்பிரிப்பு
புறம்பயத்து இறைவரை வணங்கிப் போற்றி செய்திறம் புரி நீர்மையில் பதிகச் செந்தமிழ்நிறம் பயில் இசை உடன் பாடி நீடியஅறந்தரு கொள்கையார் அமர்ந்து மேவினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

242

அத் திருப்பதி பணிந்து அகன்று போய் அனல்கைத் தலத்தவர் பதி பிறவும் கை தொழும்முத் தமிழ் விரகராம் முதல்வர் நண்ணினார்செய்த் தலைப் பணிலம் முத்து ஈனும் சேய்ஞலூர்.
சொற்பிரிப்பு
அத்திருப்பதி பணிந்து அகன்று போய் அனல்கைத்தலத்தவர் பதி பிறவும் கைதொழுமுத்தமிழ் விரகராம் முதல்வர் நண்ணினார்செய்த்தலைப் பணிலம் முத்து ஈனும் சேய்ஞலூர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

243

திரு மலி புகலிமன் சேரச் சேய் ஞலூர்அரு மறையவர் பதி அலங்கரித்து முன்பெரு மறையொடு முழவு ஒலி பிறங்கவேவருமுறை எதிர் கொள வந்து முந்தினார்.
சொற்பிரிப்பு
திருமலி புகலி மன் சேரச் சேய்ஞலூர்அருமறையவர் பதி அலங்கரித்து முன்பெருமறையொடு முழவு ஒலி பிறங்கவேவருமுறை எதிர்கொள வந்து முந்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

244

ஞான சம்பந்தரும் நாயனார் சடைத்தூ நறும் தொடையல் முன் சூட்டும் பிள்ளையார்பான்மையில் வரும் பதி என்று நித்திலயானமுன் இழிந்து எதிர் இறைஞ்சி எய்தினார்.
சொற்பிரிப்பு
ஞான சம்பந்தரும் நாயனார் சடைத்தூநறும் தொடையல் முன் சூட்டும் பிள்ளையார்பான்மையில் வரும் பதி என்று நித்திலயானம் முன் இழிந்து எதிர் இறைஞ்சி எய்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

245

மா மறையாளர் வண் புகலிப் பிள்ளையார்தாம் எழுந்தருளிடத் தங்கள் பிள்ளையார்காமரும் பதியில் வந்து அருளக் கண்டனர்ஆமகிழ்வுடன் பணிந்து ஆடி ஆர்த்தனர்.
சொற்பிரிப்பு
மாமறையாளர் வண் புகலிப் பிள்ளையார்தாம் எழுந்தருளிடத் தங்கள் பிள்ளையார்காமரும் பதியில் வந்தருளக் கண்டனர்ஆம் மகிழ்வு உடன் பணிந்து ஆடி ஆர்த்தனர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

246

களித்தனர் புண்ணியக் கரக வாசநீர்தெளித்தனர் பொரிகளும் மலரும் சிந்தினர்துளித்தனர் கண் மழை சுருதி ஆயிரம்அளித்தவர் கோயிலுள் அவர் முன்பு எய்தினார்.
சொற்பிரிப்பு
களித்தனர் புண்ணியக் கரக வாச நீர்தெளித்தனர் பொரிகளும் மலரும் சிந்தினர்துளித்தனர் கண்மழை சுருதி ஆயிரம்அளித்தவர் கோயில் உள் அவர் முன்பு எய்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

247

வெங்குரு வேந்தரும் விளங்கு கோயிலைப்பொங்கிய விருப்பினால் புடை வலம் கொடுசெங்கைகள் சென்னிமேல் குவித்துச் சென்று புக்குஅங்கணர் முன்புற அணைந்து தாழ்ந்தனர்.
சொற்பிரிப்பு
வெங்குரு வேந்தரும் விளங்கும் கோயிலைப்பொங்கிய விருப்பினால் புடைவலங்கொடு,செங்கைகள் சென்னிமேல் குவித்துச் சென்று புக்குஅங்கணர் முன்புற அணைந்து தாழ்ந்தனர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

248

வேதியர் சேய்ஞலூர் விமலர் தம் கழல்காதலில் பணிந்தவர் கருணை போற்றுவார்தாதை தாள் தடிந்த சண்டீசப் பிள்ளையார்பாதகப் பயன் பெறும் பரிசு பாடினார்.
சொற்பிரிப்பு
வேதியர் சேய்ஞலூர் விமலர் தம் கழல்காதலில் பணிந்து அவர் கருணை போற்றுவார்தாதை தாள் தடிந்த சண்டீசப் பிள்ளையார்பாதகப் பயன் பெறும் பரிசு பாடினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

249

இன்னிசை வண் தமிழ் பாடி ஏத்தியேநன்னெடும் பதி உளோர் நயக்க வைகியபின்னர் வெண்பிறை அணி வேணிப் பிஞ்ஞகர்மன்னிய திருப்பனந்தாள் வணங்கினார்.
சொற்பிரிப்பு
இன்னிசை வண்தமிழ் பாடி ஏத்தியேநன்நெடும் பதி உளோர் நயக்க வைகியபின்னர் வெண்பிறை அணி வேணிப் பிஞ்ஞகர்மன்னிய திருப்பனந்தாள் வணங்கினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

250

ஆங்கணி சொன் மலர் மாலை சாத்தி அப்பாங்கு பந்தணை நலூர் பணிந்து பாடிப் போய்த்தீங்கு தீர் மா மறைச் செம்மை அந்தணர்ஓங்கும் ஓமாம் புலியூர் வந்து உற்றனர்.
சொற்பிரிப்பு
ஆங்கு அணி சொன்மலர் மாலை சாத்தி அப்பாங்கு பந்தணைநலூர் பணிந்து பாடிப் போய்த்தீங்கு தீர் மாமறைச் செம்மை அந்தணர்ஓங்கும் ஓமாம் புலியூர் வந்து உற்றனர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

251

மற்ற நற்பதி வட தளியின் மேவியஅற்புதர் அடி பணிந்து அலர்ந்த செந்தமிழ்ச்சொல் தொடைபாடி அங்கு அகன்று சூழ் மதில்பொன் பதி வாழ் கொளி புத்தூர் புக்கனர்.
சொற்பிரிப்பு
மற்ற நல் பதி வட தளியின் மேவியஅற்புதர் அடி பணிந்து அலர்ந்த செந்தமிழ்ச்சொற்றொடை பாடி அங்கு அகன்று சூழ்மதில்பொற்பதி வாழ்கொளி புத்தூர் புக்கனர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

252

சீர் வளர் கோயிலை அணைந்து தேமலர்க்கார் வளர் கண்டர் தாள் பணிந்து காண்பவர்பார் புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்வார் பொழில் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்.
சொற்பிரிப்பு
சீர்வளர் கோயிலை அணைந்து தேன்மலர்க்கார்வளர் கண்டர் தாள் பணிந்து காண்பவர்பார்புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்வார்பொழில் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

253

நம்பரை நலம் திகழ் நாரையூரினில்கும்பிடும் விருப்பொடு குறுகிக் கூடியவம்பலர் செந்தமிழ் மாலை பாடி நின்றுஎம்பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார்.
சொற்பிரிப்பு
நம்பரை நலம் திகழ் நாரையூரினில்கும்பிடும் விருப்பொடு குறுகிக் கூடியவம்பலர் செந்தமிழ் மாலை பாடி நின்றுஎம்பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

254

அப்பதி பணிந்து அரும் தமிழ் புனைந்து தம்மெய்ப்படு விருப்பொடு மேவு நாள் அரன்பொன் பதி பலவும் முன் பணிந்து போந்தனர்பைப் பணியவர் கருப் பறியலூரினில்.
சொற்பிரிப்பு
அப்பதி பணிந்து அரும் தமிழ் புனைந்து தம்மெய்ப்படு விருப்பொடு மேவும் நாள் அரன்பொற்பதி பலவும் முன் பணிந்து போந்தனர்பைப் பணியவர் கருப்பறியலூரினில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

255

பரமர் தம் திருக் கருப் பறியலூரினைச்சிரபுரச் சிறுவர் கை தொழுது செந்தமிழ்உரை இசை பாடி அம் மருங்கின் உள்ளவாம்சுரர் தொழும் பதிகளும் தொழுது பாடினார்.
சொற்பிரிப்பு
பரமர் தம் திருக்கருப் பறியல் ஊரினைச்சிரபுரச் சிறுவர் கை தொழுது செந்தமிழ்உரை இசை பாடி அம் மருங்கின் உள்ளவாம்சுரர் தொழும் பதிகளும் தொழுது பாடினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

256

மண் உலகு செய்த தவப் பயனாய் உள்ள வள்ளலார் அப்பதிகள் வணங்கி ஏகிஎண்ணில் முரசு இரங்கி எழப் பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊதக்கண் வளர் மென் கரும்பு மிடை கதிர்ச் செஞ்சாலி கதலி கமுகுடன் ஓங்கும் கழனி நாட்டுத்தெண் நிலவு சூடிய தம் பெருமான் வைகும் திருப் பிரம புரம் சாரச் செல்லும்போது.
சொற்பிரிப்பு
மண் உலகு செய்த தவப் பயனாய் உள்ள வள்ளலார் அப்பதிகள் வணங்கி ஏகிஎண்ணில் முரசு இரங்கி எழப் பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊதக்கண்வளர் மென் கரும்பு மிடை கதிர்ச் செஞ்சாலிகதலி கமுகு உடன் ஓங்கும் கழனி நாட்டுத்தெண்நிலவு சூடிய தம் பெருமான் வைகும் திருப்பிரமபுரம் சாரச் செல்லும் போது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

257

பிள்ளையார் எழுந்தருளக் கேட்ட செல்வப் பிரமபுரத்து அருமறையோர் பெருகு காதல்உள்ளம் மகிழ் சிறந்து ஓங்கத் தோணி மேவும் உமைப் பாகர் கழல் வணங்கி உவகை கூரவெள்ள மறை ஒலிபெருக மறுகு தோறும் மிடை மகர தோரணங்கள் கதலி பூகம்தெள்ளுபுனல் நிறை குடங்கள் தீப தூபம் செழுங் கொடிகள் நிரைத்து எதிர்கொள் சிறப்பில் செய்வார்.
சொற்பிரிப்பு
பிள்ளையார் எழுந்தருளக் கேட்ட செல்வப் பிரமபுரத்து அருமறையோர் பெருகு காதல்உள்ளம் மகிழ் சிறந்து ஓங்கத் தோணி மேவும் உமைபாகர் கழல் வணங்கி உவகை கூரவெள்ளமறை ஒலி பெருகு மறுகு தோறும் மிடை மகர தோரணங்கள் கதலி பூகம்தெள்ளு புனல் நிறைகுடங்கள் தீப தூபம்செழும் கொடிகள் நிரைத்து எதிர்கொள் சிறப்பில் செல்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

258

ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து பொங்க அரசிலையும் தருப்பையும் பெய்து அணிந்த வாசப்பூரண கும்பங்கள் நிறை கரகம் ஏந்திப் புது மலரும் நறும் துகளும் பொரியும் தூவிவாரணங்கு முலை உமையாள் குழைத்த செம்பொன் வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரைச்சீர் அணங்கு மணி முத்தின் சிவிகை மீது செழுந்தரளக் குடை நிழல் கீழ்ச் சென்று கண்டார்.
சொற்பிரிப்பு
ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து பொங்க அரசிலையும் தருப்பையும் பெய்து அணிந்த வாசப்பூரண கும்பங்கள் நிறை கரகம் ஏந்திப் புதுமலரும் நறுந்துகளும் பொரியும் தூவிவார் அணங்கு முலை உமையாள் குழைத்த செம்பொன் வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரைச்சீர் அணங்கு மணிமுத்தின் சிவிகை மீது செழும்தரளக் குடைநிழல் கீழ்ச் சென்று கண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

259

கண்ட பொழுதே கைகள் தலைமேல் கொண்டு கண் களிப்ப மனம் களிப்பக் காதல் பொங்கித்தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து சொல் இறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசைஎண் திசையும் நிறைவித்தார் ஆடை வீசி இரு விசும்பின் வெளி தூர்த்தார் ஏறு சீர்த்திவண்டமிழ் நாயகரும் இழிந்து எதிரே சென்று வணங்கி அவருடன் கூடி மகிழ்ந்து புக்கார்.
சொற்பிரிப்பு
கண்ட பொழுதே கைகள் தலைமேல் கொண்டு கண் களிப்ப மனம் களிப்பக் காதல் பொங்கித்தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து சொல் இறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசைஎண்டிசையும் நிறைவித்தார் ஆடை வீசி இரு விசும்பின் வெளி தூர்த்தார் ஏறு சீர்த்திவண்டமிழ் நாயகரும் இழிந்து எதிரே சென்று வணங்கி அவருடன் கூடி மகிழ்ந்து புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

260

திங்கள் அணி மணிமாடம் மிடைந்த வீதி சென்று அணைந்து தெய்வ மறைக் கற்பின் மாதர்மங்கல வாழ்த்திசை இரண்டு மருங்கு மல்க வானவர் நாயகர் கோயில் மருங்கு சார்ந்துதுங்க நிலைக் கோபுரத்தை இறைஞ்சிப் புக்குச் சூழ்ந்து திருத்தோணி மிசை மேவினார்கள்தங்கள் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நின்று தமிழ் வேதம் பாடினார் தாளம் பெற்றார்.
சொற்பிரிப்பு
திங்கள் அணி மணிமாடம் மிடைந்த வீதி சென்று அணைந்து தெய்வமறைக் கற்பின் மாதர்மங்கல வாழ்த்து இசை இரண்டு மருங்கு மல்க வானவர் நாயகர் கோயில் மருங்கு சார்ந்துதுங்க நிலைக் கோபுரத்தை இறைஞ்சிப் புக்குச் சூழ்ந்து திருத்தோணிமிசை மேவினார்கள்தங்கள் திருமுன்பு தாழ்ந்து எழுந்து நின்று தமிழ்வேதம் பாடினார் தாளம் பெற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

261

பரவு திருப்பதிக இசை பாடி நீடும் பரங் கருணைத் திருவருளின் பரிசு போற்றிவிரவு மலர்க் கண் பனிப்பக் கைகள் கூப்பி விழுந்து எழுந்து புறம் போந்து வேத வாய்மைச்சிரபுரத்துப் பிள்ளையார் செல்லும் போது திருநீல கண்ட யாழ்ப்பாணர் பின்னேவர அவரை வளம் பெருகு மனையில் போக அருள் செய்து தம் திரு மாளிகையின் வந்தார்.
சொற்பிரிப்பு
பரவு திருப்பதிக இசை பாடி நீடும் பரங் கருணைத் திருஅருளின் பரிசு போற்றிவிரவுமலர்க் கண்பனிப்பக் கைகள் கூப்பி வீழ்ந்து எழுந்து புறம்போந்து வேத வாய்மைச்சிரபுரத்துப் பிள்ளையார் செல்லும் போது திருநீலகண்ட யாழ்ப்பாணர் பின்னேவர அவரை வளம் பெருகு மனையில்போக அருள் செய்து தம் திருமாளிகையின் வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

262

மறையவர்கள் அடி போற்றத் தந்தையாரும் மருங்கு அணைய மாளிகையில் அணையும்போதில்நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் உள்ள நீதி மறைக் குல மகளிர் நெருங்கி ஏந்தஇறைவர் திரு நீற்றுக் காப்பு ஏந்தி முன் சென்று ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்தமுறைமை அவர்க்கு அருள் செய்து மடத்துப் புக்கார் முதல்வர் பால் மணி முத்தின் சிவிகை பெற்றார்.
சொற்பிரிப்பு
மறையவர்கள் அடி போற்றத் தந்தையாரும் மருங்கு அணைய மாளிகையில் அணையும் போதில்நிறைகுடமும் மணிவிளக்கும் முதலாய் உள்ளநீதிமறைக் குலமகளிர் நெருங்கி ஏந்தஇறைவர் திருநீற்றுக் காப்பு ஏந்தி முன்சென்று ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்தமுறைமை அவர்க்கு அருள்செய்து மடத்தில் புக்கார் முதல்வர்பால் மணிமுத்தின் சிவிகை பெற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

263

செல்வ நெடு மாளிகையில் அமர்ந்து நாளும் திருத் தோணி மிசையாரைச் சென்று தாழ்ந்துமல்கு திருப் பதிகங்கள் பலவும் பாடி மனம் மகிழ்ந்து போற்றி இசைத்து வைகுநாளில்ஒல்லை முறை உபநயனப் பருவம் எய்த உலகிறந்த சிவஞானம் உணரப் பெற்றார்தொல்லை மறை விதிச் சடங்கு மறையோர் செய்யத் தோலொடு நூல் தாங்கினார் சுரர்கள் போற்ற.
சொற்பிரிப்பு
செல்வ நெடு மாளிகையில் அமர்ந்து நாளும் திருத்தோணி மிசையாரைச் சென்று தாழ்ந்துமல்கு திருப்பதிகங்கள் பலவும் பாடி மன மகிழ்ந்து போற்றிசைத்து வைகும் நாளில்ஒல்லை முறை உபநயனப் பருவம் எய்த உலகு இறந்த சிவஞானம் உணரப் பெற்றார்தொல்லை மறை விதிச் சடங்கு மறையோர் செய்யத் தோலொடு நூல் தாங்கினார் சுரர்கள் போற்ற.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

264

ஒரு பிறப்பும் எய்தாமை உடையார்தம்மை உலகு இயல்பின் உபநயன முறைமையாகும்இருபிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி எய்துவிக்கும் மறை முனிவர் எதிரே நின்றுவரு திறத்தின் மறை நான்கும் தந்தோம் என்று மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்பொருவு இறப்ப ஓதினார் புகலி வந்த புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம்.
சொற்பிரிப்பு
ஒரு பிறப்பும் எய்தாமை உடையார் தம்மை உலகு இயல்பின் உபநயன முறைமை ஆகும்இரு பிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி எய்துவிக்கும் மறைமுனிவர் எதிரே நின்றுவருதிறத்தின் மறைநான்கும் தந்தோம் என்று மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்பொரு இறப்ப ஓதினார் புகலி வந்த புண்ணியனார் எண் இறந்த புனித வேதம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

265

சுருதி ஆயிரம் ஓதி அங்கம் ஆன தொல் கலைகள் எடுத்து இயம்பும் தோன்றலாரைப்பரிதி ஆயிரம் கோடி விரிந்தால் என்னப் பரஞ்சோதி அருள் பெற்ற பான்மை மேன்மைகருதி ஆதரவோடும் வியப்புற்று ஏத்தும் கலை மறையோர் கவுணியனார் தம்மைக் கண்முன்வரும் தியானப் பொருள் என்று இறைஞ்சி தாம் முன் வல்ல மறை கேட்டு ஐயம் தீர்ந்து வாழ்ந்தார்.
சொற்பிரிப்பு
சுருதி ஆயிரம் ஓதி அங்கம் ஆனதொல் கலைகள் எடுத்து இயம்பும் தோன்றலாரைப்பரிதி ஆயிரம் கோடி விரிந்தால் என்னப் பரஞ்சோதி அருள்பெற்ற பான்மை மேன்மைகருதி ஆதரவோடும் வியப்புற்று ஏத்தும் கலை மறையோர் கவுணியனார் தம்மைக் கண்முன்வரு தியானப்பொருள் என்று இறைஞ்சித் தாம் முன்வல்லமறை கேட்டு ஐயம் தீர்ந்து வாழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

266

மந்திரங்கள் ஆன எல்லாம் அருளிச் செய்து மற்று அவற்றின் வைதிக நூல் சடங்கின் வந்தசிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம் செழு மறையோர்க்கு அருளி அவர் தெருளும் ஆற்றால்முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதல் ஆகும் முதல்வனார் எழுத்தஞ்சு என்பார்அந்தியினுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே என்று அஞ்சு எழுத்தின் திருப்பதிகம் அருளிச்செய்தார்.
சொற்பிரிப்பு
மந்திரங்கள் ஆன எலாம் அருளிச் செய்து மற்றவற்றின் வைதிக நூல் சடங்கின் வந்தசிந்தை மயக்கு உறும் ஐயம் தெளிய எல்லாம் செழுமறையோர்க்கு அருளி அவர் தெருளும் ஆற்றால்முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதல் ஆகும் முதல்வனார் எழுத்து அஞ்சு என்பார்அந்தியின் உள் மந்திரம் அஞ்செழுத்துமே என்று அஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

267

அத்தகைமை பிள்ளையார் அருளிச் செய்ய அந்தணர்கள் அருள் தலைமேல் கொண்டு தாழ்ந்துசித்தம்மகிழ்வொடு சிறப்பத் தாமும் தெய்வத் திருத்தோணி அமர்ந்தாரைச் சென்று தாழ்ந்துமெய்த்த இசைப் பதிகங்கள் கொண்டு போற்றி விரை மலர்த்தாள் மனம் கொண்டு மீண்டு போந்துபத்தருடன் இனிது அமரும் பண்பு கூடப் பரமர் தாள் பணிந்து ஏத்திப் பயிலும் நாளில்.
சொற்பிரிப்பு
அத்தகைமை பிள்ளையார் அருளிச் செய்ய அந்தணர்கள் அருள் தலைமேல் கொண்டு தாழ்ந்துசித்தமகிழ் வொடுசிறப்பத், தாமும் தெய்வத் திருத்தோணி அமர்ந்தாரைச் சென்று தாழ்ந்துமெய்த்த இசைப் பதிகங்கள் கொண்டு போற்றி விரைமலர்த்தாள் மனம் கொண்டு மீண்டு போந்துபத்தர்உடன் இனிது அமரும் பண்பு கூடப் பரமர்தாள் பணிந்து ஏத்திப் பயிலும் நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

268

பந்து அணை மெல் விரலாளும் பரமரும் பாய் விடை மீதுவந்து பொன் வள்ளத்து அளித்த வரம்பில் ஞானத்து அமுது உண்டசெந்தமிழ் ஞான சம்பந்தர் திறம் கேட்டு இறைஞ்சு தற்காகஅந்தணர் பூந்தராய் தன்னில் அணைந்தனர் நாவுக் கரையர்.
சொற்பிரிப்பு
பந்து அணை மெல்விரலாளும் பரமரும் பாய்விடை மீதுவந்து பொன் வள்ளத்து அளித்த வரம்பில் ஞானத்து அமுது உண்டசெந்தமிழ் ஞானசம்பந்தர் திறம் கேட்டு இறைஞ்சுதற்கு ஆகஅந்தணர் பூந்தராய் தன்னில் அணைந்தனர் நாவுக்கு அரையர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

269

வாக்கின் பெருவிறல் மன்னர் வந்து அணைந்தார் எனக் கேட்டுப்பூக்கமழ் வாசத் தடம் சூழ் புகலிப் பெருந்தகையாரும்ஆக்கிய நல் வினைப் பேறு என்று அன்பர் குழாத் தொடும் எய்திஏற்கும் பெரு விருப்போடும் எதிர் கொள எய்தும் பொழுதில்.
சொற்பிரிப்பு
வாக்கின் பெருவிறல் மன்னர் வந்து அணைந்தார் எனக் கேட்டுப்பூக்கமழ் வாசத் தடம் சூழ் புகலிப் பெருந்தகையாரும்ஆக்கிய நல்வினைப் பேறு என்று அன்பர் குழாத்தொடும் எய்திஏற்கும் பெரு விருப்போடும் எதிர் கொள எய்தும் பொழுதில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

270

சிந்தையிடை அறா அன்பும் திருமேனி தன்னில் அசைவும்கந்தம் மிகையாம் கருத்தும் கை உழவாரப் படையும்வந்திழி கண்ணீர் மழையும் வடிவில் பொலி திரு நீறும்அந்தம் இலாத் திரு வேடத்து அரசும் எதிர் வந்து அணைய.
சொற்பிரிப்பு
சிந்தை இடை அறா அன்பும் திருமேனி தன்னில் அசைவும்கந்தை மிகையாம் கருத்தும் கை உழவாரப் படையும்வந்திழி கண்ணீர் மழையும் வடிவில் பொலி திருநீறும்அந்தமிலாத் திருவேடத்து அரசும் எதிர்வந்து அணைய.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

271

கண்ட கவுணியர்க் கன்றும் கருத்தில் பரவு மெய்க் காதல்தொண்டர் திருவேடம் நேரே தோன்றியது என்று தொழுதேஅண்டரும் போற்ற அணைந்து அங்கு அரசும் எதிர் வந்து இறைஞ்சமண்டிய ஆர்வம் பெருக மதுர மொழி அருள் செய்தார்.
சொற்பிரிப்பு
கண்ட கவுணியக் கன்றும் கருத்தில் பரவு மெய்க் காதல்தொண்டர் திருவேடம் நேரே தோன்றியது என்று தொழுதேஅண்டரும் போற்ற அணைந்து அங்கு அரசும் எதிர் வந்து இறைஞ்சமண்டிய ஆர்வம் பெருக மதுர மொழி அருள் செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

272

பேரிசை நாவுக்கரசைப் பிள்ளையார் கொண்டு உடன் போந்துபோர் விடையார் திருத்தோணிப் பொற் கோயில் உட்புகும் போதில்ஆர்வம் பெருக அணையும் அவருடன் கும்பிட்டு அருளால்சீர்வளர் தொண்டரைக் கொண்டு திருமாளிகையினில் சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
பேர் இசை நாவுக்கு அரசைப் பிள்ளையார் கொண்டு உடன் போந்துபோர் விடையார் திருத்தோணிப் பொற் கோயில் உட்புகும் போதில்ஆர்வம் பெருக அணையும் அவருடன் கும்பிட்டு அருளால்சீர்வளர் தொண்டரைக் கொண்டு திருமாளிகையினில் சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

273

அணையும் திருத்தொண்டர் தம்மோடு ஆண்ட அரசுக்கும் அன்பால்இணையில் திரு அமுது ஆக்கி இயல்பால் அமுது செய்வித்துப்புணரும் பெருகு அன்பு நண்பும் பொங்கிய காதலில் கும்பிட்டுஉணரும் சொல் மாலைகள் சாத்தி உடன் மகிழ்வு எய்தி உறைந்தார்.
சொற்பிரிப்பு
அணையும் திருத்தொண்டர் தம்மோடு ஆண்ட அரசுக்கும் அன்பால்இணையில் திருஅமுது ஆக்கி இயல்பால் அமுது செய்வித்துப்புணரும் பெருகு அன்பு நண்பும் பொங்கிய காதலில் கும்பிட்டுஉணரும் சொல் மாலைகள் சாத்தி உடன் மகிழ்வு எய்தி உறைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

274

அந்நாள் சில நாள்கள் செல்ல அருள் திருநாவுக்கரசர்மின்னார் சடை அண்ணல் எங்கும் மேவிடம் கும்பிட வேண்டிபொன் மார்பில் முந்நூல் புனைந்த புகலிப் பிரான் இசைவோடும்பின்னாக எய்த இறைஞ்சிப் பிரியாத நண்பொடும் போந்தார்.
சொற்பிரிப்பு
அந்நாள் சில நாள்கள் செல்ல அருள் திருநாவுக்கரசர்மின்ஆர் சடை அண்ணல் எங்கும் மேவிடம் கும்பிட வேண்டிப்பொன்மார்பின் முந்நூல் புனைந்த புகலிப் பிரான் இசைவோடும்பின்னாக எய்த இறைஞ்சிப் பிரியாத நண்பொடும் போந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

275

வாக்கின் தனி மன்னர் ஏக மாறாத் திரு உளத்தோடும்பூக்கமழ் பண்ணைகள் சூழ்ந்த புகலியின் மீண்டும் புகுந்துதேக்கிய மாமறை வெள்ளத் திருத்தோணி வீற்று இருந்தாரைத்தூக்கின் தமிழ் மாலை பாடித் தொழுது அங்கு உறைகின்ற நாளில்.
சொற்பிரிப்பு
வாக்கின் தனிமன்னர் ஏக மாறாத் திரு உள்ளத்தோடும்பூக்கமழ் பண்ணைகள் சூழ்ந்த புகலியின் மீண்டும் புகுந்துதேக்கிய மாமறை வெள்ளத் திருத்தோணி வீற்றிருந்தாரைத்தூக்கின் தமிழ்மாலை பாடித் தொழுது அங்கு உறைகின்ற நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

276

செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுள்களால் மொழி மாற்றும்வந்த சொல் சீர் மாலை மாற்றும் வழி மொழி எல்லா மடக்குச்சந்த வியமகம் ஏகபாதம் தமிழ் இருக்குக் குறள் சாத்திஎந்தைக்கு எழு கூற்றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு.
சொற்பிரிப்பு
செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுள்களால் மொழிமாற்றுவந்தசொல் சீர் மாலைமாற்று வழிமொழி எல்லா மடக்குச்சந்த இயமகம் ஏக பாதம் தமிழ் இருக்குக்குறள் சாத்திஎந்தைக்கு எழுகூற்று இருக்கை ஈரடி ஈரடி வைப்பு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

277

நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம்சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிகமூல இலக்கியமாக எல்லாப் பொருள்களும் முற்றஞாலத்து உயர் காழியாரைப் பாடினார் ஞான சம்பந்தர்.
சொற்பிரிப்பு
நாலடி மேல்வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம்சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிகம்மூல இலக்கியம் ஆக எல்லாப் பொருள்களும் முற்றஞாலத்து உயர் காழியாரைப் பாடினார் ஞான சம்பந்தர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

278

இன்னிசை பாடின எல்லாம் யாழ்ப் பெரும் பாணனார் தாமும்மன்னும் இசை வடிவான மதங்க சூளா மணியாரும்பன்னிய ஏழ் இசை பற்றிப் பாடப் பதிகங்கள் பாடிப்பொன்னின் திருத்தாளம் பெற்றார் புகலியில் போற்றி இருந்தார்.
சொற்பிரிப்பு
இன்னிசை பாடின எல்லாம் யாழ்ப் பெரும் பாணனார் தாமும்மன்னும் இசை வடிவான மதங்க சூளாமணியாரும்பன்னிய ஏழ் இசை பற்றிப் பாடப் பதிகங்கள் பாடிப்பொன்னின் திருத்தாளம் பெற்றார் புகலியில் போற்றி இருந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

279

அங்கண் அமர் கின்ற நாளில் அரும் தமிழ் நாடு எத்தினுள்ளும்திங்கள் சடை அண்ணலார்தம் திருப்பதி யாவையும் கும்பிட்டுஎங்கும் தமிழ் மாலை பாடி ஏத்தி இங்கு எய்துவன் என்றுதம் குலத் தாதையா ரோடும் தவ முனிவர்க்கு அருள் செய்தார்.
சொற்பிரிப்பு
அங்கண் அமர்கின்ற நாளில் அருந்தமிழ் நாடு எத்தின் உள்ளும்திங்கள் சடை அண்ணலார் தம் திருப்பதி யாவையும் கும்பிட்டுஎங்கும் தமிழ்மாலை பாடி ஏத்தி இங்கு எய்துவன் என்றுதம் குலத் தாதையாரோடும் தவமுனிவர்க்கு அருள் செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

280

பெருகு விருப்புடன் நோக்கிப் பெற்ற குலத் தாதையாரும்அருமையால் உம்மைப் பயந்த அதனால் பிரிந்து உறைவு ஆற்றேன்இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செய வேண்டும்ஒருமையால் இன்னம் சிலநாள் உடன் எய்துவேன் என்று உரைத்தார்.
சொற்பிரிப்பு
பெருகு விருப்புடன் நோக்கிப் பெற்ற குலத் தாதையாரும்அருமையால் உம்மைப் பயந்த அதனால் பிரிந்து உறைவு ஆற்றேன்இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செய வேண்டும்ஒருமையால் இன்னம் சிலநாள் உடன் எய்துவேன் என்று உரைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

281

ஆண்டகையாரும் இசைந்து அங்கு அம்பொன் திருத்தோணி மேவும்நீண்ட சடையார் அடிக்கீழ் பணிவுற்று நீடு அருள் பெற்றேஈண்டு புகழ்த் தாதையார் பின் எய்திட யாழ்ப்பாணரோடும்காண் தகு காழி தொழுது காதலினால் புறம் போந்தார்.
சொற்பிரிப்பு
ஆண்டகையாரும் இசைந்து அங்கு அம்பொன் திருத்தோணி மேவும்நீண்ட சடையார் அடிக் கீழ்ப் பணிவுற்று நீடு அருள் பெற்றேஈண்டு புகழ்த் தாதையார் பின் எய்திட யாழ்ப் பாணரோடும்காண் தகு காழி தொழுது காதலினால் புறம் போந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

282

அத்திரு மூதூரின் உள்ளார் அமர்ந்து உடன்போதுவார் போதமெய்த்தவர் அந்தணர் நீங்கா விடை கொண்டு மீள்வார்கள் மீளமுத்தின் சிவிகை மேல் கொண்டு மொய் ஒளித் தாமம் நிரைத்தநித்தில வெண்குடை மீது நிறை மதி போல நிழற்ற.
சொற்பிரிப்பு
அத்திரு மூதூரின் உள்ளார் அமர்ந்து உடன் போதுவார் போதமெய்த்தவர் அந்தணர் நீங்கா விடை கொண்டு மீள்வார்கள் மீளமுத்தின் சிவிகை மேல் கொண்டு மொய் ஒளித் தாமம் நிரைத்தநித்தில வெண்குடை மீது நிறை மதி போல நிழற்ற.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

283

சின்னம் தனிக் காளம் தாரை சிரபுரத்து ஆண்டகை வந்தார்என்னும் தகைமை விளங்க ஏற்ற திருப் பெயர் சாற்றமுன் எம்மருங்கும் நிரத்த முரசு உடைப் பல்லியம் ஆர்ப்பமன்னும் திருத்தொண்டரானார் வந்து எதிர் கொண்டு வணங்க.
சொற்பிரிப்பு
சின்னம் தனிக்காளம் தாரை சிரபுரத்து ஆண்டகை வந்தார்என்னும் தகைமை விளங்க ஏற்ற திருப்பெயர் சாற்றமுன் எம் மருங்கு நிரந்த முரசு உடைப் பல்இயம் ஆர்ப்பமன்னும் திருத்தொண்டர் ஆனார் வந்து எதிர் கொண்டு வணங்க.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

284

சங்க நாதங்கள் ஒலிப்பத் தழங்கு பொற் கோடு முழங்கமங்கல வாழ்த்துரை எங்கும் மல்க மறை முன் இயம்பத்திங்களும் பாம்பும் அணிந்தார் திருப்பதி எங்கும் முன் சென்றுபொங்கிய காதலில் போற்றப் புகலிக் கவுணியர் போந்தார்.
சொற்பிரிப்பு
சங்க நாதங்கள் ஒலிப்பத் தழங்கு பொன் கோடு முழங்கமங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்பத்திங்களும் பாம்பும் அணிந்தார் திருப்பதி எங்கும் முன்சென்றுபொங்கிய காதலில் போற்றப் புகலிக் கவுணியர் போந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

285

திருமறைச் சண்பையர் ஆளி சிவனார் திருக்கண்ணார் கோயில்பெரு விருப்பால் அணைந்து ஏத்திப் பிஞ்ஞகர் கோயில் பிறவும்உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ் மாலை கொண்டு ஏத்திவரு புனல் பொன்னி வடபால் குட திசை நோக்கி வருவார்.
சொற்பிரிப்பு
திருமறைச் சண்பையர் ஆளி சிவனார் திருக்கண்ணார் கோயில்பெரு விருப்பால் அணைந்து ஏத்திப் பிஞ்ஞகர் கோயில் பிறவும்உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ் மாலை கொண்டு ஏத்திவருபுனல் பொன்னி வடபால் குடதிசை நோக்கி வருவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

286

போற்றிய காதல் பெருக புள்ளிருக்கும் திருவேளூர்நால் தடம் தோளுடை மூன்று நயனப் பிரான் கோயில் நண்ணிஏற்ற அன்பு எய்த வணங்கி இருவர் புள் வேந்தர் இறைஞ்சிஆற்றிய பூசனை சாற்றி அஞ்சொற் பதிகம் அணிந்தார்.
சொற்பிரிப்பு
போற்றிய காதல் பெருகப் புள் இருக்குத் திருவேளூர்நால் தடம்தோள் உடை மூன்று நயனப் பிரான் கோயில் நண்ணிஏற்ற அன்பு எய்த வணங்கி இருவர் புள் வேந்தர் இறைஞ்சிஆற்றிய பூசனை சாற்றி அஞ்சொல் பதிகம் அணிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

287

நீடு திரு நின்றியூரின் நிமலனார் நீள் கழல் ஏத்திக்கூடிய காதலில் போற்றிக் கும்பிட்டு வண் தமிழ் கூறிநாடு சீர் நீடூர் வணங்கி நம்பர் திருப் புன்கூர் நண்ணிஆடிய பாதம் இறைஞ்சி அருந் தமிழ் பாடி அமர்ந்தார்.
சொற்பிரிப்பு
நீடு திருநின்றியூரின் நிமலனார் நீள்கழல் ஏத்திக்கூடிய காதலில் போற்றிக் கும்பிட்டு வண்டமிழ் கூறிநாடு சீர் நீடூர் வணங்கி நம்பர் திருப்புன்கூர் நண்ணிஆடிய பாதம் இறைஞ்சி அருந்தமிழ் பாடி அமர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

288

அங்கு நின்று ஏகி அப்பாங்கில் அரனார் மகிழ் கோயிலானஎங்கணும் சென்று பணிந்தே ஏத்தி இமவான் மடந்தைபங்கர் உறை பழ மண்ணிப் படிக்கரைக் கோயில் வணங்கித்தங்கு தமிழ் மாலை சாத்தித் திருக்குறுக்கைப் பதி சார்ந்தார்.
சொற்பிரிப்பு
அங்கு நின்று ஏகி அப்பாங்கில் அரனார் மகிழ் கோயில் ஆனஎங்கணும் சென்று பணிந்தே ஏத்தி இமவான் மடந்தைபங்கர் உறை பழ மண்ணிப் படிக்கரைக் கோயில் வணங்கித்தங்கு தமிழ் மாலை சாத்தித் திருக்குறுக்கைப் பதி சார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

289

திருக்குறுக்கைப் பதி மன்னித் திரு வீரட்டானத்து அமர்ந்தபொருப்புவில்லாளரை ஏத்திப் போந்து அன்னியூர் சென்று போற்றிப்பருக்கை வரை உரித்தார் தம் பந்தணை நல்லூர் பணிந்துவிருப்புடன் பாடல் இசைந்தார் வேதம் தமிழால் விரித்தார்.
சொற்பிரிப்பு
திருக்குறுக்கைப் பதி மன்னித் திருவீரட்டானத்து அமர்ந்தபொருப்பு வில்லாளரை ஏத்திப் போந்து அன்னியூர் சென்று போற்றிப்பருக்கை வரை உரித்தார் தம்பந்தணை நல்லூர் பணிந்துவிருப்புடன் பாடல் இசைத்தார் வேதம் தமிழால் விரித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

290

அப்பதி போற்றி அகல்வார் அரனார் திருமணஞ் சேரிசெப்பரும் சீர்த் தொண்டரோடும் சென்று தொழுது இசை பாடிஎப்பொருளும் தரும் ஈசர் எதிர் கொள் பாடிப் பதி எய்திஒப்பில் பதிகங்கள் பாடி ஓங்கு வேள்விக் குடி உற்றார்.
சொற்பிரிப்பு
அப்பதி போற்றி அகல்வார் அரனார் திருமணஞ்சேரிசெப்பரும்சீர் தொண்டரோடும் சென்று தொழுது இசை பாடிஎப்பொருளும் தரும் ஈசர் எதிர்கொள்பாடிப் பதி எய்திஒப்பில் பதிகங்கள் பாடி ஓங்கு வேள்விக்குடி உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

291

செழுந்திரு வேள்விக் குடியில் திகழ் மணவாள நற்கோலம்பொழிந்த புனல் பொன்னி மேவும் புனிதத் துருத்தி இரவில்தழும்பிய தன்மையும் கூடத் தண் தமிழ் மாலையில் பாடிக்கொழுந்து வெண் திங்கள் அணிந்தார் கோடிகாவிற் சென்றடைந்தார்.
சொற்பிரிப்பு
செழுந் திருவேள்விக் குடியில் திகழ் மணவாள நல்கோலம்பொழிந்த புனல் பொன்னி மேவும் புனிதத் துருத்தி இரவில்தழும்பிய தன்மையும் கூடத் தண்டமிழ் மாலையில் பாடிக்கொழுந்து வெண் திங்கள் அணிந்தார் கோடிகாவில் சென்று அடைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

292

திருக்கோடி காவில் அமர்ந்த தேவர் சிகாமணி தன்னைஎருக்கோடு இதழியும் பாம்பும் இசைந்து அணிந்தானை வெள்ளேனப்பருக்கோடு பூண்ட பிரானைப் பணிந்து சொல் மாலைகள் பாடிக்கருக்கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர் கை தொழச் சென்றார்.
சொற்பிரிப்பு
திருக்கோடிகாவில் அமர்ந்த தேவர் சிகாமணி தன்னைஎருக்கோடு இதழியும் பாம்பும் இசைந்து அணிந்தானை வெள் ஏனப்பருக்கோடு பூண்ட பிரானைப் பணிந்து சொன் மாலைகள் பாடிக்கருக்கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர் கைதொழச் சென்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

293

கஞ்சனூர் ஆண்ட தம் கோவைக் கண்ணுற்று இறைஞ்சி முன் போந்துமஞ்சணி மாமதில் சூழும் மாந்துறை வந்து வணங்கிஅஞ்சொல் தமிழ் மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன்னாகச்செஞ்சடை வேதியர் மன்னும் திருமங்கலக் குடி சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
கஞ்சனூர் ஆண்ட தம் கோவைக் கண் உற்று இறைஞ்சி முன் போந்துமஞ்சு அணி மாமதில் சூழும் மாந்துறை வந்து வணங்கிஅஞ்சொல் தமிழ்மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன் ஆகச்செஞ்சடை வேதியர் மன்னும் திருமங்கலக்குடி சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

294

வெங் கண் விடை மேல் வருவார் வியலூர் அடிகளைப் போற்றித்தங்கிய இன்னிசை கூடும் தமிழ்ப் பதிகத் தொடை சாத்திஅங்கண் அமர்வார் தம் முன்னே அருள் வேடம் காட்டத் தொழுதுசெங்கண் மாலுக்கு அரியார் தந்திருந்து தேவன் குடி சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
வெங்கண் விடைமேல் வருவார் வியலூர் அடிகளைப் போற்றித்தங்கிய இன்னிசை கூடும் தமிழ்ப் பதிகத் தொடை சாத்திஅங்கண் அமர்வார் தம் முன்னே அருள்வேடம் காட்டத் தொழுதுசெங்கண் மாலுக்கு அரியார் தம் திருந்து தேவன்குடி சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

295

திருந்து தேவன் குடி மன்னும் சிவ பெருமான் கோயில் எய்திப்பொருந்திய காதலில் புக்குப் போற்றி வணங்கிப் புரிவார்மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும் இவர் வேடமாம் என்றுஅருந்தமிழ் மாலை புனைந்தார் அளவில் ஞானத்து அமுது உண்டார்.
சொற்பிரிப்பு
திருந்து தேவன்குடி மன்னும் சிவபெருமான் கோயில் எய்திப்பொருந்திய காதலில் புக்குப் போற்றி வணங்கிப் புரிவார்மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும் இவர் வேட மாம் என்றுஅருந்தமிழ் மாலை புனைந்தார் அளவில் ஞானத்து அமுது உண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

296

மொய் திகழ் சோலை அம் மூதூர் முன் அகன்று அந் நெறி செல்வார்செய் தரு சாலி கரும்பு தெங்கு பைம் பூகத்து இடை போய்மை திகழ் கண்டர் தம் கோயில் மருங்கு உள்ள எல்லாம் வணங்கிஎய்தினர் ஞானசம்பந்தர் இன்னம்பர் ஈசர்தம் கோயில்.
சொற்பிரிப்பு
மொய் திகழ் சோலை அம் மூதூர் முன்அகன்று அந்நெறி செல்வார்செய்தரு சாலி கரும்பு தெங்கு பைம் பூகத்து இடை போய்மைதிகழ் கண்டர் தம் கோயில் மருங்கு உள்ள எல்லாம் வணங்கிஎய்தினர் ஞான சம்பந்தர் இன்னம்பர் ஈசர் தம் கோயில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

297

இன்னம்பர் மன்னும் பிரானை இறைஞ்சி இடை மடக்கானபன்னும் தமிழ்த் தொடை மாலைப் பாடல் புனைந்து பரவிப்பொன்னங் கழல் இணை போற்றிப் புறம் போந்து அணைந்து புகுந்தார்மன்னும் தடம் கரைப் பொன்னி வட குரங்காடுதுறையில்.
சொற்பிரிப்பு
இன்னம்பர் மன்னும் பிரானை இறைஞ்சி இடை மடக்கு ஆனபன்னும் தமிழ்த்தொடை மாலைப் பாடல் புனைந்து பரவிப்பொன்னம் கழலிணை போற்றிப் புறம் போந்து அணைந்து புகுந்தார்மன்னும் தடங்கரைப் பொன்னி வட குரங்காடு துறையில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

298

வட குரங்காடுதுறையில் வாலியார் தாம் வழிபட்டஅடைவும் திருப்பதிகத்தில் அறிய சிறப்பித்து அருளிப்புடை கொண்டு இறைஞ்சினர் போந்து புறத்துள்ள தானங்கள் போற்றிபடை கொண்ட மூவிலை வேலர் பழனத் திருப்பதி சார்ந்தார்.
சொற்பிரிப்பு
வட குரங்காடு துறையில் வாலியார் தாம் வழிபட்டஅடைவும் திருப்பதிகத்தில் அறியச் சிறப்பித்தருளிப்புடைகொண்டு இறைஞ்சினர் போந்து புறத்து உள்ள தானங்கள் போற்றிப்படைகொண்ட மூஇலை வேலார் பழனத் திருப்பதி சார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

299

பழனத்து மேவிய முக்கண் பரமேட்டியார் பயில் கோயில்உழைபுக்கு இறைஞ்சி நின்று ஏத்தி உருகிய சிந்தையர் ஆகிவிழை சொல் பதிகம் விளம்பி விருப்புடன் மேவி அகல்வார்அழனக்க பங்கய வாவி ஐயாறு சென்று அடைகின்றார்.
சொற்பிரிப்பு
பழனத்து மேவிய முக்கண் பரமேட்டியார் பயில் கோயில்உழை புக்கு இறைஞ்சி நின்று ஏத்தி உருகிய சிந்தையர் ஆகிவிழை சொல் பதிகம் விளம்பி விருப்புடன் மேவி அகல்வார்அழல் நக்க பங்கய வாவி ஐயாறு சென்று அடைகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

300

மாட நிரை மணி வீதித் திருவையாற்றினில் வாழும் மல்கு தொண்டர்நாடு உய்யப் புகலிவரு ஞான போனகர் வந்து நண்ணினார் என்றுஆடலொடு பாடல் அறா அணி மூதூர் அடைய அலங்காரம் செய்துநீடு மனக் களிப்பினொடும் எதிர் கொள்ள நித்தில யானத்து நீங்கி.
சொற்பிரிப்பு
மாட நிரை மணிவீதித் திருஐயாற்றினில் வாழும்மல்கு தொண்டர்நாடு உய்யப் புகலி வரு ஞான போனகர் வந்து நண்ணினார் என்றுஆடலொடு பாடல் அறா அணி மூதூர் அடைய அலங்காரம் செய்துநீடு மனக் களிப்பினொடும் எதிர்கொள்ள நித்தில யானத்து நீங்கி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

301

வந்து அணைந்து திருத்தொண்டர் மருங்கு வர மான் ஏந்து கையர் தம்பால்நந்தி திருவருள் பெற்ற நன்னகரை முன் இறைஞ்சி நண்ணும் போதில்ஐந்து புலன் நிலை கலங்கும் இடத்து அஞ்சல் என்பார் தம் ஐயாறு என்றுபுந்தி நிறை செந்தமிழின் சந்த இசை போற்றி இசைத்தார் புகலி வேந்தர்.
சொற்பிரிப்பு
வந்து அணைந்த திருத்தொண்டர் மருங்கு வர மான் ஏந்து கையர் தம்பால்நந்தி திரு அருள் பெற்ற நன்நகரை முன் இறைஞ்சி நண்ணும் போதில்ஐந்து புலன் நிலை கலங்கும் இடத்து அஞ்சல் என்பார் தம் ஐயாறு என்றுபுந்தி நிறை செந்தமிழின் சந்த இசை போற்றிசைத்தார் புகலி வேந்தர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

302

மணி வீதி இடம் கடந்து மால் அயனுக்கு அரிய பிரான் மன்னும் கோயில்அணி நீடு கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் எய்தி அளவில் காதல்தணியாத கருத்தினோடும் தம்பெருமான் கோயில் வலம் கொண்டு தாழ்ந்துபணி சூடும் அவர் முன்பு பணிந்து வீழ்ந்து எழுந்து அன்பால் பரவுகின்றார்.
சொற்பிரிப்பு
மணிவீதி இடம் கடந்து மால் அயனுக்கு அரியபிரான் மன்னும் கோயில்அணி நீடு கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் எய்தி அளவில் காதல்தணியாத கருத்தினொடும் தம்பெருமான் கோயில் வலம் கொண்டு தாழ்ந்துபணி சூடும் அவர் முன்பு பணிந்து வீழ்ந்து எழுந்து அன்பால் பரவுகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

303

கோடல் கோங்கம் குளிர் கூவிளம் என்னும் திருப்பதிகக் குலவு மாலைநீடு பெரும் திருக்கூத்து நிறைந்த திரு உள்ளத்து நிலைமை தோன்றஆடுமாறு அது வல்லான் ஐயாற்று எம் ஐயனே என்று நின்றுபாடினார் ஆடினார் பண்பினொடும் கண் பொழி நீர் பரந்து பாய.
சொற்பிரிப்பு
கோடல் கோங்கம் குளிர் கூவிளம் என்னும் திருப்பதிகக் குலவு மாலைநீடு பெரும் திருக்கூத்து நிறைந்த திருஉள்ளத்து நிலைமை தோன்றஆடுமாறு அது வல்லான் ஐயாற்று எம் ஐயனே என்று நின்றுபாடினார் ஆடினார் பண்பினொடும் கண்பொழி நீர் பரந்து பாய.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

304

பல முறையும் பணிந்து எழுந்து புறம் போந்து பரவு திருத் தொண்டரோடுநிலவு திருப்பதி அதன் கண் நிகழும் நாள் நிகர் இலா நெடுநீர்க் கங்கைஅலையும் மதி முடியார் தம் பெரும்புலியூர் முதலான அணைந்து போற்றிக்குலவு தமிழ்த் தொடை புனைந்து மீண்டு அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில்.
சொற்பிரிப்பு
பலமுறையும் பணிந்து எழுந்து புறம் போந்து பரவு திருத்தொண்டரோடுநிலவும் திருப்பதி அதன்கண் நிகழு நாள் நிகர் இலாநெடுநீர்க் கங்கைஅலையும் மதி முடியார் தம்பெரும்புலியூர் முதலான அணைந்து போற்றிக்குலவு தமிழ்த் தொடை புனைந்து மீண்டு அணைந்துபெருகு ஆர்வம் கூரு நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

305

குடதிசை மேல் போவதற்குக் கும்பிட்டு அங்கு அருள் பெற்றுக் குறிப்பின்னோடும்படரும் நெறி மேல் அணைவார் பரமர் திருநெய்த்தானப் பதியில் நண்ணிஅடையும் மனம் உற வணங்கி அரும் தமிழ் மாலைகள் பாடி அங்கு நின்றும்புடைவளர் மென் கரும்பினொடு பூகமிடை மழபாடி போற்றச் சென்றார்.
சொற்பிரிப்பு
குடதிசைமேல் போவதற்குக் கும்பிட்டு அங்குஅருள்பெற்றுக் குறிப்பினோடும்படரு நெறி மேல் அணைவார் பரமர் திருநெய்த்தானப் பதியில் நண்ணிஅடைவு மனம் உற வணங்கி அருந் தமிழ் மாலைகள் பாடிஅங்கு நின்றும்புடைவளர் மென் கரும்பினொடு பூகம் மிடை மழபாடிபோற்றச் சென்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

306

செங்கை மான்மறியார் தம் திருமழபாடிப் புறத்துச் சேரச் செல்வார்அங்கையார் அழல் என்னும் திருப்பதிகம் எடுத்து அருளி அணைந்த போழ்தில்மங்கை வாழ் பாகத்தார் மழபாடி தலையினால் வணங்குவார்கள்பொங்கு மா தவம் உடையார் எனத் தொழுது போற்றி இசைத்தே கோயில் புக்கார்.
சொற்பிரிப்பு
செங்கை மான் மறியார் தம் திருமழபாடிப் புறத்துச் சேரச் செல்வார்அங்கையார் அழல் என்னும் திருப்பதிகம் எடுத்தருளி அணைந்த போழ்தில்மங்கை வாழ் பாகத்தார் மழபாடி தலையினால் வணங்குவார்கள்பொங்கு மாதவம் உடையார் எனத் தொழுது போற்றிசைத்தே கோயில் புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

307

மழபாடி வயிர மணித் தூண் அமர்ந்து மகிழ் கோயில் வலம் கொண்டு எய்திசெழுவாச மலர்க் கமலச் சேவடிக் கீழ்ச் சென்று தாழ்ந்து எழுந்து நின்றுதொழுது ஆடிப் பாடி நறும் சொல் மாலைத் தொடை அணிந்து துதித்துப் போந்தேஒழியாத நேசமுடன் உடையவரைக் கும்பிட்டு அங்கு உறைந்தார் சின்னாள்.
சொற்பிரிப்பு
மழபாடி வயிரமணித் தூண் அமர்ந்து மகிழ்கோயில் வலம்கொண்டு எய்திச்செழு வாச மலர்க்கமலச் சேவடிக் கீழ்ச் சென்று தாழ்ந்து எழுந்து நின்றுதொழுது ஆடிப் பாடி நறும் சொன் மாலைத் தொடை அணிந்துதுதித்துப் போந்தேஒழியாத நேசமுடன் உடையவரைக் கும்பிட்டு அங்கு உறைந்தார் சில்நாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

308

அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர் பணிந்து ஏத்தி ஆன்ற சைவமுதன் மறையோர் அன்பிலாலந் துறையின் முன்னவனைத் தொழுது போற்றிப்பதம் நிறை செந்தமிழ் பாடிச் சடைமுடியார் பயில் பதியும் பணிந்து பாடிமத கரட வரை உரித்தார் வட கரை மாந்துறை அணைந்தார் மணி நூல் மார்பர்.
சொற்பிரிப்பு
அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர் பணிந்து ஏத்தி ஆன்ற சைவமுதன்மறையோர் அன்பில் ஆலந்துறையின் முன்னவனைத் தொழுது போற்றிப்பதம்நிறை செந்தமிழ் பாடிச் சடைமுடியார் பயில் பதியும் பணிந்து பாடிமத கரட வரை உரித்தார் வடகரை மாந்துறை அணைந்தார் மணிநூல் மார்பர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

309

சென்று திரு மாந்துறையில் திகழ்ந்து உறையும் திருநதி வாழ் சென்னியார் தம்முன்றில் பணிந்து அணி நெடு மாளிகை வலம் செய்து உள்புக்கு முன்பு தாழ்ந்துதுன்று கதிர்ப் பரிதிமதி மருந்துக்கள் தொழுது வழிபாடு செய்யநின்ற நிலை சிறப்பித்து நிறை தமிழில் சொல் மாலை நிகழப் பாடி.
சொற்பிரிப்பு
சென்று திருமாந்துறையில் திகழ்ந்து உறையும் திருநதி வாழ் சென்னியார் தம்முன்றில் பணிந்து அணிநெடு மாளிகை வலம்செய்து உள் புக்குமுன்பு தாழ்ந்துதுன்று கதிர்ப் பரிதி மதி மருத்துக்கள் தொழுது வழிபாடு செய்யநின்ற நிலை சிறப்பித்து நிறை தமிழின் சொன்மாலை நிகழப் பாடி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

310

அங்கண் அகன்று அம் மருங்கில் அங்கணர் தம் பதி பிறவும் அணைந்து போற்றிச்செங்கமலப் பொதி அவிழச் சேல் பாயும் வயல் மதுவால் சேறு மாறாப்பொங்கு ஒலி நீர் மழ நாட்டுப் பொன்னி வட கரை மிசைப் போய்ப் புகலி வேந்தர்நங்கள் பிரான் திருப்பாச்சிலாச்சிராமம் பணிய நண்ணும் போதில்.
சொற்பிரிப்பு
அங்கண் அகன்று அம்மருங்கில் அங்கணர் தம் பதி பிறவும் அணைந்து போற்றிச்செங்கமலப் பொதி அவிழச் சேல்பாயும் வயல் மதுவால் சேறு மாறாப்பொங்கு ஒலிநீர் மழநாட்டுப் பொன்னி வடகரை மிசைப்போய்ப் புகலி வேந்தர்நங்கள் பிரான் திருப்பாச்சில் ஆச்சிராமம் பணிய நண்ணும் போதில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

311

அந் நகரில் கொல்லி மழவன் பயந்த அரும் பெறல் ஆர் அமுத மென் சொல்கன்னி இள மடப்பிணையாம் காமரு கோமளக் கொழுந்தின் கதிர் செய் மேனிமன்னு பெரும் பிணியாகும் முயலகன் வந்து அணைவுற மெய் வருத்தம் எய்தித்தன்னுடைய பெரும் சுற்றம் புலம்பு எய்தத் தானும் மனம் தளர்வு கொள்வான்.
சொற்பிரிப்பு
அந்நகரில் கொல்லி மழவன் பயந்த அரும்பெறல் ஆர்அமுத மென்சொல்கன்னி இள மடப்பிணையாம் காமரு கோமளக் கொழுந்தின் கதிர்செய் மேனிமன்னு பெரும் பிணி ஆகும் முயலகன் வந்து அணைவுற மெய்வருத்தம் எய்தித்தன்னுடைய பெரும்சுற்றம் புலம்பு எய்தத் தானும் மனம் தளர்வு கொள்வான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

312

மற்று வேறு ஒருபரிசால் தவிராமை மறி வளரும் கையார் பாதம்பற்றியே வரும் குலத்துப் பான்மையினான் ஆதலினால் பரிவு தீரப்பொற்றொடியைக் கொடு வந்து போர்க் கோலச் சேவகராய்ப் புரங்கள் மூன்றும்செற்றவர் தம் கோயிலினுட் கொடு புகுந்து திரு முன்பே இட்டு வைத்தான்.
சொற்பிரிப்பு
மற்று வேறு ஒருபரிசால் தவிராமை மறி வளரும்கையார் பாதம்பற்றியே வரும் குலத்துப் பான்மையினான் ஆதலினால் பரிவு தீரப்பொற்றொடியைக் கொடு வந்து போர்க் கோலச் சேவகராய்ப் புரங்கள் மூன்றும்செற்றவர் தம் கோயிலின் உள் கொடு புகுந்து திருமுன்பே இட்டு வைத்தான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

313

அவ்வளவில் ஆளுடைய பிள்ளையார் எழுந்தருளி அணுக எய்தச்செவ்விய மெய்ஞ் ஞானம் உணர் திருஞான சம்பந்தன் வந்தான் என்றேஎவ்வுலகும் துயர் நீங்கப் பணி மாறும் தனிக் காளத்து எழுந்த ஓசைஎவ் உயிர்க்கும் அவன் கேளா மெல்லியலை விட்டு எதிரே விரைந்து செல்வான்.
சொற்பிரிப்பு
அவ்அளவில் ஆளுடைய பிள்ளையார் எழுந்தருளி அணுக எய்தச்செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் திருஞான சம்பந்தன் வந்தான் என்றேஎவ்உலகும் துயர் நீங்கப் பணிமாறும் தனிக்காளத்து எழுந்த ஓசைவெவ்உயிர்க்கும் அவன் கேளா மெல்லியலை விட்டு எதிரே விரைந்து செல்வான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

314

மா நகரம் அலங்கரிமின் மகர தோரணம் நாட்டும் மணி நீர் வாசத்தூ நறும் பூரண கும்பம் சோதி மணி விளக்கினொடு தூபம் ஏந்தும்ஏனை அணி பிறவும் எலாம் எழில் பெருக இயற்றும் என ஏவித் தானும்வானவர் நாயகர் மகனார் வருமுன்பு தொழுது அணைந்தான் மழவர் கோமான்.
சொற்பிரிப்பு
மாநகரம் அலங்கரிமின் மகர தோரணம் நாட்டும் மணிநீர் வாசத்தூநறும் பூரண கும்பம் சோதி மணி விளக்கினொடு தூபம் ஏந்தும்ஏனை அணி பிறவும் எலாம் எழில் பெருக இயற்றும் எனஏவித் தானும்வானவர் நாயகர் மகனார் வருமுன்பு தொழுது அணைந்தான் மழவர் கோமான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

315

பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேன் என்று ஆனந்தம் பெருகு காதல்வெள்ள நீர் கண் பொழியத் திருமுத்தின் சிவிகையின் முன் வீழ்ந்த போதுவள்ளலார் எழுக என மலர்வித்த திருவாக்கால் மலர்க்கை சென்னிகொள்ள மகிழ்ந்து உடன் சென்று குலப்பதியின் மணிவீதி கொண்டு புக்கான்.
சொற்பிரிப்பு
பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேன் என்று ஆனந்தம் பெருகு காதல்வெள்ள நீர் கண்பொழியத் திருமுத்தின் சிவிகையின் முன்வீழ்ந்த போதுவள்ளலார் எழுக என மலர்வித்த திருவாக்கால் மலர்க்கை சென்னிகொள்ள மகிழ்ந்து உடன் சென்று குலப்பதியின் மணிவீதி கொண்டு புக்கான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

316

மங்கல தூரியம் முழங்கும் மணி வீதி கடந்து மதிச் சடையார் கோயில்பொங்கு சுடர்க் கோபுரத்துக்கு அணித்து ஆகப் புனை முத்தின் சிவிகை நின்றும்அங்கண் இழிந்து அருளும் முறை இழிந்தருளி அணிவாயில் பணிந்து புக்குத்தங்கள் பிரான் கோயில் வலம் கொண்டு திருமுன் வணங்கச் சாரும் காலை.
சொற்பிரிப்பு
மங்கல தூரியம் முழங்கு மணிவீதி கடந்து மதிச் சடையார் கோயில்பொங்கு சுடர்க் கோபுரத்துக்கு அணித்தாகப் புனைமுத்தின் சிவிகை நின்றும்அங்கண் இழிந்து அருளுமுறை இழிந்தருளி அணிவாயில் பணிந்து புக்குத்தங்கள் பிரான் கோயில் வலம் கொண்டு திருமுன் வணங்கச் சாரும் காலை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

317

கன்னி இளம் கொடி உணர்வு கழிந்து நிலம் சேர்ந்து அதனைக் கண்டு நோக்கிஎன் இது என்று அருள் செய்ய மழவன்தான் எதிர் இறைஞ்சி அடியேன் பெற்றபொன் இவளை முயலகனாம் பொருவில் அரும்பிணி பொருந்தப் புனிதர் கோயில்முன் அணையக் கொணர்வித்தேன் இது புகுந்தபடி என்று மொழிந்து நின்றான்.
சொற்பிரிப்பு
கன்னி இளம் கொடி உணர்வு கழிந்து நிலன் சேர்ந்ததனைக் கண்டு நோக்கிஎன் இது என்று அருள்செய்ய மழவன் தான் எதிர் இறைஞ்சி அடியேன் பெற்றபொன் இவளை முயலகனாம் பொருவில் அரும்பிணி பொருந்தப் புனிதர் கோயில்முன் அணையக் கொணர்வித்தேன் இது புகுந்த படி என்று மொழிந்து நின்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

318

அணிகிளர் தாரவன் சொன்ன மாற்றம் அருளொடும் கேட்டு அந் நிலையின் நின்றேபணி வளர் செஞ்சடைப் பாச்சின் மேய பரம் பொருள் ஆயினாரைப் பணிந்துமணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பது என்றுதணிவில் பிணி தவிர்க்கும் பதிகத் தண்தமிழ் பாடினார் சண்பை நாதர்.
சொற்பிரிப்பு
அணிகிளர் தார் அவன் சொன்ன மாற்றம் அருளொடும் கேட்டு அந்நிலையின் நின்றேபணிவளர் செஞ்சடைப் பாச்சில் மேய பரம்பொருள் ஆயினாரைப் பணிந்துமணிவளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பது என்றுதணிவில் பிணி தவிர்க்கும் பதிகத் தண்டமிழ் பாடினார் சண்பை நாதர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

319

பன்னு தமிழ் மறையாம் பதிகம் பாடி திருக்கடைக் காப்புச் சாத்திமன்னும் கவுணியர் போற்றி நிற்க மழவன் பயந்த மழலை மென் சொல்கன்னி உறு பிணி விட்டு நீங்கக் கதும் எனப் பார் மிசை நின்று எழுந்துபொன்னின் கொடி என ஒல்கிவந்து பெருவலித் தாதை புடை அணைந்தாள்.
சொற்பிரிப்பு
பன்னு தமிழ் மறையாம் பதிகம் பாடித் திருக்கடைக் காப்புச் சாத்திமன்னும் கவுணியர் போற்றி நிற்க மழவன் பயந்த மழலை மென் சொல்கன்னி உறு பிணி விட்டு நீங்கக்கதும் எனப் பார்மிசை நின்று எழுந்துபொன்னின் கொடி என ஒல்கி வந்து பொருவலித் தாதை புடை அணைந்தாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

320

வன்பிணி நீங்கு மகளைக் கண்ட மழவன் பெரு மகிழ்ச்சி பொங்கத்தன்தனிப் பாவையும் தானும் கூடச் சண்பையர் காவலர் தாளில் வீழநின்ற அருமறைப் பிள்ளையாரும் நீர்அணி வேணி நிமலர் பாதம்ஒன்றிய சிந்தையுடன் பணிந்தார் உம்பர் பிரான் திருத்தொண்டர் ஆர்த்தார்.
சொற்பிரிப்பு
வன்பிணி நீங்கு மகளைக் கண்ட மழவன் பெருகு மகிழ்ச்சி பொங்கத்தன் தனிப் பாவையும் தானும் கூடச் சண்பையர் காவலர் தாளில் வீழநின்ற அருமறைப் பிள்ளை யாரும் நீர் அணி வேணி நிமலர் பாதம்ஒன்றிய சிந்தை உடன் பணிந்தார்உம்பர் பிரான் திருத் தொண்டர் ஆர்த்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

321

நீடு திரு வாச்சிராமம் மன்னும் நேரிழை பாகத்தர் தாள் வணங்கிக்கூடும் அருளுடன் அங்கு அமர்ந்து கும்பிடும் கொள்கை மேற்கொண்டு போந்தேஆடல் பயின்றார் பதிபிறவும் அணைந்து பணிந்து அடிபோற்றி ஏகிச்சேடர்கள் வாழும் திருப்பைஞ்ஞீலிச் சிவபெருமானை இறைஞ்சச் சென்றார்.
சொற்பிரிப்பு
நீடு திரு ஆச்சிராமம் மன்னும் நேர்இழை பாகத்தர் தாள் வணங்கிக்கூடும் அருளுடன் அங்கு அமர்ந்து கும்பிடும் கொள்கைமேல் கொண்டு போந்தேஆடல் பயின்றார் பதி பிறவும் அணைந்து பணிந்து அடி போற்றி ஏகிச்சேடர்கள் வாழும் திருப்பைஞ்ஞீலிச் சிவபெருமானை இறைஞ்சச் சென்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

322

பண்பயில் வண்டு இனம்பாடும் சோலைப் பைஞ்ஞீலி வாணர் கழல் பணிந்துமண் பரவும் தமிழ் மாலை பாடி வைகி வணங்கி மகிழ்ந்து போந்துதிண்பெரும் தெய்வக் கயிலையில் வாழ் சிவனார் பதி பல சென்று இறைஞ்சிச்சண்பை வளம் தரும் நாடர் வந்து தடம் திரு ஈங்கோய் மலையைச் சார்ந்தார்.
சொற்பிரிப்பு
பண்பயில் வண்டினம் பாடும் சோலைப் பைஞ்ஞீலி வாணர் கழல் பணிந்துமண்பரவும் தமிழ் மாலை பாடி வைகி வணங்கி மகிழ்ந்து போந்துதிண் பெரும் தெய்வக் கயிலையில் வாழ் சிவனார் பதி பல சென்று இறைஞ்சிச்சண்பை வளம் தரு நாடர் வந்து தடந்திரு ஈங்கோய் மலையைச் சார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

323

செங்கண் குறவரைத் தேவர் போற்றும் திகழ் திரு ஈங்கோய் மலையில் மேவும்கங்கைச் சடையார் கழல் பணிந்து கலந்த இசைப் பதிகம் புனைந்துபொங்கர்ப் பொழில் சூழ் மலையும் மற்றும் புறத்துள்ள தானங்கள் எல்லாம் போற்றிக்கொங்கில் குட புலம் சென்று அணைந்தார் கோதில் மெய்ஞ்ஞானக் கொழுந்து அனையார்.
சொற்பிரிப்பு
செங்கண் குறவரைத் தேவர் போற்றும்திகழ் திரு ஈங்கோய் மலையில் மேவும்கங்கைச் சடையார் கழல் பணிந்து கலந்த இசைப்பதிகம் புனைந்துபொங்கர்ப் பொழில் சூழ் மலையும் மற்றும் புறத்து உள்ள தானங்கள் எல்லாம் போற்றிக்கொங்கில் குடபுலம் சென்று அணைந்தார் கோதில் மெய்ஞ்ஞானக் கொழுந்து அனையார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

324

அண்டர் பிரான் ஆலயங்கள் அம்மருங்கு உள்ளன பணிந்துதெண்திரை நீர்த் தடம் பொன்னித் தென் கரையாம் கொங்கின் இடைவண்டு அலையும் புனல் சடையார் மகிழ் இடங்கள் தொழுது அணைந்தார்கொண்டல் பயில் நெடும் புரிசைக் கொடி மாடச் செங்குன்றூர்.
சொற்பிரிப்பு
அண்டர் பிரான் ஆலயங்கள் அம்மருங்கு உள்ளன பணிந்துதெண்டிரை நீர்த் தடம் பொன்னித் தென்கரையாம் கொங்கின் இடைவண்டு அலையும் புனல்சடையார் மகிழ்விடங்கள் தொழுது அணைந்தார்கொண்டல் பயில் நெடும்புரிசைக் கொடிமாடச் செங்குன்றூர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

325

அந் நகரில் வாழ்வாரும் அடியவரும் மனம் மகிழ்ந்துபன்னெடுந்தோரணமுதலாப் பயில் அணிகள் பல அமைத்துமுன் உறவந்து எதிர் கொண்டு பணிந்து ஏத்திமொய் கரங்கள்சென்னியுறக் கொண்டு அணைந்தார் சினவிடையார் செழுங்கோயில்.
சொற்பிரிப்பு
அந்நகரில் வாழ்வாரும் அடியவரும் மனம் மகிழ்ந்துபன்நெடும் தோரண முதலாப் பயில் அணிகள் பல அமைத்துமுன் உற வந்து எதிர்கொண்டு பணிந்து ஏத்தி மொய்கரங்கள்சென்னி உறக் கொண்டு அணைந்தார் சினவிடையார் செழும்கோயில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

326

தம் பெருமான் கோயிலினுள் எழுந்தருளித் தமிழ் விரகர்நம்பரவர் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நலம் சிறக்கஇம்பரும் உம்பரும் ஏத்த இன்னிசை வண் தமிழ் பாடிக்கும்பிடும் ஆதரவு உடன் அக் கோ நகரில் இனிது அமர்ந்தார்.
சொற்பிரிப்பு
தம்பெருமான் கோயிலின் உள் எழுந்தருளித் தமிழ்விரகர்நம்பர் அவர் திருமுன்பு தாழ்ந்து எழுந்து நலம் சிறக்கஇம்பரும் உம்பரும் ஏத்த இன்னிசை வண் தமிழ் பாடிக்கும்பிடும் ஆதரவுடன் அக்கோ நகரில் இனிது அமர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

327

அப்பாலைக் குட புலத்தில் ஆறணிந்தார் அமர் கோயில்எப்பாலும் சென்று ஏத்தித் திரு நணாவினை இறைஞ்சிப்பைப் பாந்தள் புணைந்த வரைப் பரவிப் பண்டு அமர்கின்றவைப்பான செங்குன்றூர் வந்து அணைந்து வைகினார்.
சொற்பிரிப்பு
அப்பாலைக் குடபுலத்தில் ஆறு அணிந்தார் அமர் கோயில்எப்பாலும் சென்று ஏத்தித் திருநணாவினை இறைஞ்சிப்பைப்பாந்தள் புனைந்தவரைப் பரவிப் பண்டு அமர்கின்றவைப்பான செங்குன்றூர் வந்து அணைந்து வைகினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

328

ஆங்கு உடைய பிள்ளையார் அமர்ந்து உறையும் நாளின்கண்தூங்கு துளி முகில் குலங்கள் சுரந்து பெயல் ஒழிகாலைவீங்கு ஒலி நீர் வைப்பு எல்லாம் வெயில் பெறா விருப்பு வரப்பாங்கர் வரையும் குளிரும் பனிப் பருவம் எய்தியதால்.
சொற்பிரிப்பு
ஆங்கு உடைய பிள்ளையார் அமர்ந்து உறையும் நாளின்கண்தூங்கு துளி முகில் குலங்கள் சுரந்து பெயல் ஒழிகாலைவீங்கு ஒலிநீர் வைப்பு எல்லாம் வெயில் பெறா விருப்புவரப்பாங்கர் வரையும் குளிரும் பனிப்பருவம் எய்தியதால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

329

அளிக்குலங்கள் சுளித்து அகல அரவிந்தம் முகம் புலரப்பளிக்கு மணி மரகத வல்லியில் கோத்த பான்மை எனத்துளித் தலைமெல் அறுகு பனி தொடுத்து அசையச் சூழ் பனியால்குளிர்க் குடைந்து வெண் படாம் போர்த்து அனைய குன்றுகளும்.
சொற்பிரிப்பு
அளிக்குலங்கள் சுளித்து அகல அரவிந்தம் முகம் புலரப்பளிக்குமணி மரகதவல்லியில் கோத்த பான்மை எனத்துளித்தலை மெல் அறுகு பனி தொடுத்து அசையச் சூழ் பனியால்குளிர்க்கு உடைந்து வெண்படாம் போர்த்து அனைய குன்றுகளும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

330

மொய் பனி கூர் குளிர் வாடை முழுது உலவும் பொழுதேயாய்க்கொய் தளிர் மென் சோலைகளும் குலைந்து அசைய குளிர்க்கு ஒதுங்கிவெய்யவனும் கரம் நிமிர்க்க மாட்டான் போல் விசும்பின் இடைஐது வெயில் விரிப்பதுவும் அடங்குவதும் ஆகுமால்.
சொற்பிரிப்பு
மொய்பனி கூர் குளிர்வாடை முழுது உலவும் பொழுதேயாய்க்கொய்தளிர் மென் சோலைகளும் குலைந்து அசையக் குளிர்க்கு ஒதுங்கிவெய்யவனும் கர நிமிர்க்க மாட்டான் போல் விசும்பின் இடைஐதுவெயில் விரிப்பதுவும் அடங்குவதும் ஆகுமால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

331

நீடிய அப் பதிகள் எலாம் நிறை மாடத்து உறையுள் தொறும்பேடையுடன் பவளக்கால் புறவு ஒடுங்கப் பித்திகையின்தோடு அலர் மென் குழல் மடவார் துணைக் கலச வெம் முலையுள்ஆடவர் தம் பணைத்தோளும் அணி மார்பும் அடங்குவன.
சொற்பிரிப்பு
நீடிய அப்பதிகள் எலாம் நிறை மாடத்து இறைகள் தொறும்பேடை உடன் பவளக்கால் புறவு ஒடுங்கப் பித்திகையின்தோடு அலர் மென்குழல் மடவார் துணைக்கலச வெம்முலை உள்ஆடவர் தம் பணைத்தோளும் அணிமார்பும் அடங்குவன.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

332

அரிசனமும் குங்குமமும் அரைத்து அமைப்பார் அயல் எல்லாம்பரிய அகில் குறை பிளந்து புகைப்பார்கள் பாங்கு எல்லாம்எரி உமிழ் பேழ் வாய்த் தோணி இரும்பு ஈர்ப்பார் இடை எல்லாம்விரி மலர் மென் புறவு அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம்.
சொற்பிரிப்பு
அரிசனமும் குங்குமமும் அரைத்து அமைப்பார் அயல் எல்லாம்பரிய அகில் குறை பிளந்து புகைப்பார்கள் பாங்கு எல்லாம்எரிஉமிழ் பேழ்வாய்த் தோணி இரும்பு ஈர்ப்பார் இடை எல்லாம்விரிமலர் மென் புறவு அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

333

அந்நாளில் கொடி மாடச் செங் குன்றூர் அமர்ந்து இருந்தமெய்ஞ்ஞானப் பிள்ளையாருடன் மேவும் பரிசனங்கள்பன்னாளும் அந்நாட்டில் பயின்ற அதனால் பனித்த குளிர்முன் ஆன பிணி வந்து மூள்வது போல் முடுகுதலும்.
சொற்பிரிப்பு
அந்நாளில் கொடிமாடச் செங்குன்றூர் அமர்ந்திருந்தமெய்ஞ்ஞானப் பிள்ளையாருடன் மேவும் பரிசனங்கள்பன்நாளும் அந்நாட்டில் பயின்ற அதனால் பனித்த குளிர்முன்னான பிணி வந்து மூள்வதுபோல் முடுகுதலும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

334

அந்நிலைமை ஆளுடைய பிள்ளையார்க்கு அவர்கள் எல்லாம்முன் அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார் அருள் தொழுதேஇந்நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு எய்தப் பெறா என்றுசென்னி மதி அணிந்தாரைத் திருப்பதிகம் பாடுவார்.
சொற்பிரிப்பு
அந்நிலைமை ஆளுடைய பிள்ளையார்க்கு அவர்கள் எலாம்முன் அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார் அருள் தொழுதேஇந்நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு எய்தப் பெறா என்றுசென்னி மதி அணிந்தாரைத் திருப்பதிகம் பாடுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

335

அவ்வினைக்கு இவ்வினை என்று எடுத்து ஐயர் அமுது செய்தவெவ்விடம் முன் தடுத்து எம் இடர் நீக்கிய வெற்றியினால்எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது கண்டம் என்றேசெய்வினை தீண்டா திரு நீல கண்டம் எனச் செப்பினார்.
சொற்பிரிப்பு
அவ்வினைக்கு இவ்வினை என்று எடுத்து ஐயர் அமுது செய்தவெவ்விடம் முன் தடுத்து எம் இடர் நீக்கிய வெற்றியினால்எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது கண்டம் என்றேசெய்வினை தீண்டா திருநீலகண்டம் எனச் செப்பினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

336

ஆய குறிப்பினில் ஆணை நிகழ அருளிச் செய்துதூய பதிகத் திருக் கடைக் காப்புத் தொடுத்து அணியமேய அப்பொற்பதி வாழ்பவர்க்கே அன்றி மேவும் அந்நாள்தீய பனிப் பிணி அந்நாடு அடங்கவும் தீர்ந்தது அன்றே.
சொற்பிரிப்பு
ஆய குறிப்பினில் ஆணை நிகழ அருளிச் செய்துதூய பதிகத் திருக்கடைக் காப்புத் தொடுத்து அணியமேய அப்பொற்பதி வாழ்பவர்க்கே அன்றி மேவும் அந்நாள்தீய பனிப் பிணி அந்நாடு அடங்கவும் தீர்ந்தது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

337

அப்பதியின் கண் அமர்ந்து சில நாளில் அங்கு அகன்றுதுப்புறழ் வேணியர் தானம் பலவும் தொழுது அருளிமுப்புரி நூலுடன் தோல் அணி மார்பர் முனிவரொடும்செப்பரும் சீர்த் திருப்பாண்டிக் கொடுமுடி சென்று அணைந்தார்.
சொற்பிரிப்பு
அப்பதியின்கண் அமர்ந்து சில நாளில் அங்கு அகன்றுதுப்புறழ் வேணியர் தானம் பலவும் தொழுதருளிமுப்புரி நூலுடன் தோல் அணி மார்பர் முனிவரொடும்செப்பரும் சீர்த் திருப்பாண்டிக் கொடுமுடி சென்று அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

338

பருவம் அறாப் பொன்னிப் பாண்டிக் கொடு முடியார் தம்பாதம்மருவி வணங்கி வளத் தமிழ் மாலை மகிழ்ந்து சாத்திவிரி சுடர் மாளிகை வெஞ்ச மாக் கூடல் விடையவர் தம்பொருவில் தானம் பல போற்றிக் குணதிசைப் போதுகின்றார்.
சொற்பிரிப்பு
பருவம் அறாப் பொன்னிப் பாண்டிக் கொடுமுடியார் தம் பாதம்மருவி வணங்கி வளத்தமிழ் மாலை மகிழ்ந்து சாத்தி,விரிசுடர் மாளிகை வெஞ்சமாக் கூடல் விடையவர் தம்பொருவில் தானம் பல போற்றிக் குணதிசைப் போதுகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

339

செல்வக் கருவூர்த் திருவானிலைக் கோயில் சென்று இறைஞ்சிநல்லிசை வண் தமிழ்ச் சொல் தொடை பாடி அந்நாடு அகன்றுமல்கிய மாணிக்க வெற்பு முதலா வணங்கி வந்துமல்கு திரைப் பொன்னித் தென் கரைத் தானம் பல பணிவார்.
சொற்பிரிப்பு
செல்வக் கருவூர்த் திரு ஆனிலைக் கோயில் சென்று இறைஞ்சிநல்இசை வண்தமிழ்ச் சொல்தொடை பாடி அந்நாடு அகன்றுமல்கிய மாணிக்க வெற்பு முதலா வணங்கி வந்துபல்கு திரைப்பொன்னித் தென்கரைத் தானம் பல பணிவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

340

பன்னெடும் குன்றும் படர் பெரும் கானும் பல பதியும்அந் நிலைத் தானங்கள் ஆயின எல்லாம் அமர்ந்து இறைஞ்சிமன்னு புகலியில் வைதிக வாய்மை மறையவனார்பொன் இயல் வேணிப் புனிதர் பராய்த் துறையுள் புகுந்தார்.
சொற்பிரிப்பு
பன்நெடும் குன்றும் படர்பெரும் கானும் பலபதியும்அந்நிலைத் தானங்கள் ஆயின எல்லாம் அமர்ந்து இறைஞ்சிமன்னு புகலியில் வைதிக வாய்மை மறையவனார்பொன் இயல் வேணிப் புனிதர் பராய்த்துறை உள் புகுந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

341

நீடும் பராய்த் துறை நெற்றித் தனிக் கண்ணர் கோயில் நண்ணிக்கூடும் கருத்தொடு கும்பிட்டுக் கோதில் தமிழ்ச் சொல் மாலைபாடும் கவுணியர் கண்பனி மாரி பரந்து இழியச்சூடும் கரதலத்து அஞ்சலி கோலித் தொழுது நின்றார்.
சொற்பிரிப்பு
நீடும் பராய்த்துறை நெற்றித் தனிக் கண்ணர் கோயில் நண்ணிக்கூடும் கருத்தொடு கும்பிட்டுக் கோதில் தமிழ்ச் சொல்மாலைபாடும் கவுணியர் கண் பனி மாரி பரந்து இழியச்சூடும் கரதலத்து அஞ்சலி கோலித் தொழுது நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

342

தொழுது புறம்பு அணைந்து அங்கு நின்று ஏகிச் சுரர் பணிவுற்றுஎழு திரு ஆலந்துறை திருச்செந்துறையே முதலாவழுவில் பல் கோயில்கள் சென்று வணங்கி மகிழ்ந்து அணைவார்செழு மலர்ச் சோலைத் திருக் கற்குடி மலை சேர வந்தார்.
சொற்பிரிப்பு
தொழுது புறம்பணைந்து அங்கு நின்று ஏகிச் சுரர் பணிவுற்றுஎழுதிரு ஆலந்துறை திருச்செந்துறையே முதலாவழுவில் பல் கோயில்கள் சென்று வணங்கி மகிழ்ந்து அணைவார்செழுமலர்ச் சோலைத் திருக்கற்குடி மலை சேர வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

343

கற்குடி மாமலை மேல் எழுந்த கனகக் கொழுந்தினைக் கால் வளையப்பொன் திரள் மேருச் சிலை வளைத்த போர் விடையாளியைப் போற்றி இசைத்துநற்றமிழ் மாலை புனைந்தருளி ஞான சம்பந்தர் புலன்கள் ஐந்தும்செற்றவர் மூக்கீச்சரம் பணிந்து திருச்சிராப் பள்ளிச் சிலம்பு அணைந்தார்.
சொற்பிரிப்பு
கற்குடி மாமலை மேல் எழுந்த கனகக் கொழுந்தினைக் கால்வளையப்பொற்றிரள் மேருச் சிலை வளைத்த போர்விடை ஆளியைப் போற்றி இசைத்துநற்றமிழ் மாலை புனைந்தருளி ஞான சம்பந்தர் புலன்கள் ஐந்தும்செற்றவர் முக்கீச்சரம் பணிந்து திருச்சிராப்பள்ளிச் சிலம்பு அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

344

செம்மணி வாரி அருவி தூங்கும் சிராப் பள்ளி மேய செழுஞ்சுடரைக்கைம் மலை ஈருரி போர்வை சாத்தும் கண் நுதலாரைக் கழல் பணிந்துமெய்ம் மகிழ்வு எய்தி உளம் குளிர விளங்கிய சொல் தமிழ் மாலை வேய்ந்துமைம் மலர் கண்டர் தம் ஆனைக் காவை வணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
செம்மணி வாரி அருவி தூங்கும் சிராப்பள்ளி மேய செழும் சுடரைக்கைம்மலை ஈர்உரி போர்வை சாத்தும் கண்நுதலாரைக் கழல் பணிந்துமெய்ம்மகிழ்வு எய்தி உளம் குளிர விளங்கிய சொற்றமிழ் மாலை வேய்ந்துமைம்மலர் கண்டர் தம் ஆனைக்காவை வணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

345

விண்ணவர் போற்றி செய் ஆனைக் காவில் வெண் நாவல் மேவிய மெய்ப் பொருளைநண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து எழுந்து நாற்கோட்டு நாகம் பணிந்ததுவும்அண்ணல் கோச் செங்கண் அரசன்செய்த அடிமையும் அஞ்சொல் தொடையில் வைத்துப்பண்ணுறு செந்தமிழ் மாலை பாடிப் பரவி நின்று ஏத்தினர் பான்மையினால்.
சொற்பிரிப்பு
விண்ணவர் போற்றிசெய் ஆனைக்காவில் வெண்நாவல் மேவிய மெய்ப்பொருளைநண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து எழுந்து நாற்கோட்டு நாகம் பணிந்ததுவும்அண்ணல் கோச்செங்கண் அரசன் செய்த அடிமையும் அஞ்சொல் தொடையில் வைத்துப்பண் உறு செந்தமிழ் மாலை பாடிப் பரவி நின்று ஏத்தினர் பான்மையினால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

346

நாரணன் நான்முகன் காணா உண்மை வெண் நாவல் உண்மை மயேந்திரமும்சீரணி நீடு திருக்கயிலை செல்வத் திருவாரூர் மேய பண்பும்ஆரணத்து உட் பொருள் ஆயினாரை ஆனைக் காவின் கண் புகழ்ந்து பாடிஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை ஏந்தலார் எல்லை இல் இன்பம் உற்றார்.
சொற்பிரிப்பு
நாரணன் நான்முகன் காணா உண்மை வெண்நாவல் உண்மை மயேந்திரமும்சீர் அணி நீடு திருக்கயிலை செல்வத் திருஆரூர் மேய பண்பும்ஆரணத்து உட்பொருள் ஆயினாரை ஆனைக்காவின்கண் புகழ்ந்து பாடிஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை ஏந்தலார் எல்லையில் இன்பம் உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

347

கை தொழுது ஏத்திப் புறத்து அணைந்து காமர் பதி அதன் கண் சில நாள்வைகி வணங்கி மகிழ்ந்து அணைவார் மன்னும் தவத்துறை வானவர் தாள்எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன் தமிழ் மாலை கொண்டு ஏத்திப் போந்துவைதிக மாமணி அம்மருங்கு மற்று உள்ள தானம் வழுத்திச் செல்வார்.
சொற்பிரிப்பு
கைதொழுது ஏத்திப் புறத்து அணைந்து காமர் பதி அதன்கண் சிலநாள்வைகி வணங்கி மகிழ்ந்து அணைவார் மன்னும் தவத்துறை வானவர் தாள்எய்தி இறைஞ்சி எழுந்து நின்றேஇன் தமிழ் மாலைகொண்டு ஏத்திப் போந்துவைதிக மாமணி அம்மருங்கு மற்று உள்ள தானம் வழுத்திச் செல்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

348

ஏறு உயர்த்தார் திருப்பாற்றுறையும் எறும்பியூர் மாமலையே முதலாவேறு பதிகள் பலவும் போற்றி விரவும் திருத்தொண்டர் வந்து சூழஈறில் புகழ்ச் சண்பை ஆளியார் தாம் எண் திசையோரும் தொழுது இறைஞ்சநீறணி செம்பவளப் பொருப்பின் நெடுங்கள மா நகர் சென்று சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
ஏறு உயர்த்தார் திருப்பாற்றுறையும் எறும்பியூர் மாமலையே முதலாவேறு பதிகள் பலவும் போற்றி விரவும் திருத்தொண்டர் வந்து சூழஈறில் புகழ்ச்சண்பை ஆளியார் தாம் எண் திசையோரும் தொழுது இறைஞ்சநீறு அணி செம்பவளப் பொருப்பின் நெடுங்கள மாநகர் சென்று சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

349

நெடுங்களத்து ஆதியை அன்பால் நின்பால் நெஞ்சம் செலாவகை நேர் விலக்கும்இடும்பைகள் தீர்த்து அருள் செய்வாய் என்றும் இன் இசை மாலை கொண்டு ஏத்தி ஏகிஅடும் பணிச் செஞ்சடையார் பதிகள் அணைந்து பணிந்து நியமம் போற்றிக்கடும் கைவரை உரித்தார் மகிழ்ந்த காட்டுப் பள்ளிப்பதி கை தொழுவார்.
சொற்பிரிப்பு
நெடுங்களத்து ஆதியை அன்பால் நின்பால் நெஞ்சம் செலாவகை நேர் விலக்கும்இடும்பைகள் தீர்த்து அருள் செய்வாய் என்னும் இன்னிசை மாலைகொண்டு ஏத்தி ஏகிஅடும்பணிச் செஞ்சடையார் பதிகள் அணைந்து பணிந்து நியமம் போற்றிக்கடுங்கை வரை உரித்தார் மகிழ்ந்த காட்டுப்பள்ளிப் பதி கை தொழுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

350

சென்று திகழ் திருக்காட்டு பள்ளிச் செஞ்சடை நம்பர் தம் கோயில் எய்திமுன்றில் வலம் கொண்டு இறைஞ்சி வீழ்ந்து மொய் கழல் சேவடி கை தொழுவார்கன்று அணை ஆவின் கருத்து வாய்ப்பக் கண் நுதலாரை முன் போற்றி செய்துமன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார் வாரு மன்னும் முலை பாடி வாழ்ந்தார்.
சொற்பிரிப்பு
சென்று திகழ் திருக்காட்டுப் பள்ளிச் செஞ்சடை நம்பர் தம் கோயில் எய்திமுன்றில் வலம்கொண்டு இறைஞ்சி வீழ்ந்து மொய்கழல் சேவடி கைதொழுவார்கன்று அணை ஆவின் கருத்து வாய்ப்பக் கண்நுதலாரை முன் போற்றி செய்துமன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார் வாரு மன்னும் முலை பாடி வாழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

351

அங்கு அப்பதி நின்று எழுந்தருளி அணிந்திரு வாலம் பொழில் வணங்கிபொங்கு புனல் பொன்னிப் பூந்துருத்தி பொய்யிலியாரைப் பணிந்து போற்றிஎங்கும் நிகழ் திருத் தொண்டர் குழாம் எதிர் கொள்ள எப்பதியும் தொழுதுசெங்கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த திருக் கண்டியூர் தொழச் சென்று அணைந்தார்.
சொற்பிரிப்பு
அங்கு அப்பதி நின்று எழுந்தருளி அணிதிரு ஆலம் பொழில் வணங்கிப்பொங்கு புனல் பொன்னிப் பூந்துருத்திப் பொய் இலியாரைப் பணிந்து போற்றிஎங்கும் நிகழ் திருத்தொண்டர் குழாம் எதிர்கொள்ள எப்பதியும் தொழுதுசெங்கயல் பாய்வயல் ஓடை சூழ்ந்த திருக்கண்டியூர் தொழச் சென்று அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

352

கண்டியூர் வீரட்டர் கோயில் எய்திக் கலந்து அடியாருடன் காதல் பொங்கக்கொண்ட விருப்புடன் தாழ்ந்து இறைஞ்சிக் குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால்தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று தொடுத்த இசைத்தமிழ் மாலை தன்னில்அண்டர் பிரான் தன் அருளின் வண்ணம் அடியார் பெருமையில் கேட்டருளி.
சொற்பிரிப்பு
கண்டியூர் வீரட்டர் கோயில் எய்திக் கலந்து அடியாருடன் காதல் பொங்கக்கொண்ட விருப்புடன் தாழ்ந்து இறைஞ்சிக் குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால்தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று தொடுத்த இசைத்தமிழ் மாலை தன்னில்அண்டர் பிரான் தன் அருளின் வண்ணம் அடியார் பெருமையில் கேட்டருளி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

353

வினவி எடுத்த திருப் பதிகம் மேவு திருக்கடைக் காப்பு தன்னில்அனைய நினைவு அரியோன் செயலை அடியாரைக் கேட்டு மகிழ்ந்த தன்மைபுனைவுறு பாடலில் போற்றி செய்து போந்து புகலிக் கவுணியனார்துனை புனல் பொன்னித் திரை வலம் கொள் சோற்றுத் துறை தொழச் சென்று அடைவார்.
சொற்பிரிப்பு
வினவி எடுத்த திருப்பதிகம் மேவு திருக்கடைக் காப்புத் தன்னில்அனைய நினைவு அரியோன் செயலை அடியாரைக் கேட்டு மகிழ்ந்த தன்மைபுனைவுறு பாடலில் போற்றி செய்து போந்து புகலிக் கவுணியனார்துனைபுனல் பொன்னித் திரைவலம்கொள் சோற்றுத் துறை தொழச் சென்று அடைவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

354

அப்பர் சோற்றுத் துறை சென்று அடைவோம் என்றுஒப்பில் வண் தமிழ் மாலை ஒருமையால்செப்பியே சென்று சேர்ந்தனர் சேர்விலார்முப்புரம் செற்ற முன்னவர் கோயில் முன்.
சொற்பிரிப்பு
அப்பர் சோற்றுத் துறை சென்று அடைவோம் என்றுஒப்பில் வண்டமிழ் மாலை ஒருமையால்செப்பியே சென்று சேர்ந்தனர் சேர்விலார்முப்புரம் செற்ற முன்னவர் கோயில் முன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

355

தொல்லை நீள் திருச் சோற்றுத் துறை உறைசெல்வர் கோயில் வலம் கொண்டு தேவர்கள்அல்லல் தீர்க்க நஞ்சு உண்ட பிரான் அடிஎல்லையில் அன்பு கூர இறைஞ்சினார்.
சொற்பிரிப்பு
தொல்லை நீள் திருச்சோற்றுத் துறை உறைசெல்வர் கோயில் வலம் கொண்டு தேவர்கள்அல்லல் தீர்க்க நஞ்சு உண்ட பிரான் அடிஎல்லையில் அன்பு கூர இறைஞ்சினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

356

இறைஞ்சி ஏத்தி எழுந்து நின்று இன்னிசைநிறைந்த செந்தமிழ் பாடி நிலாவி அங்குஉறைந்து வந்து அடியாருடன் எய்தினார்சிறந்த சீர்த் திரு வேதிக் குடியினில்.
சொற்பிரிப்பு
இறைஞ்சி ஏத்தி எழுந்து நின்று இன்னிசைநிறைந்த செந்தமிழ் பாடி நிலாவி அங்குஉறைந்து வந்து அடியாருடன் எய்தினார்சிறந்த சீர்த் திருவேதி குடியினில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

357

வேத வேதியர் வேதி குடியினில்நாதர் கோயில் அணைந்து நலம் திகழ்பாத பங்கயம் போற்றிப் பணிந்து எழுந்துஓதினார் தமிழ் வேதத்தின் ஓங்கு இசை.
சொற்பிரிப்பு
வேத வேதியர் வேதி குடியினில்நாதர் கோயில் அணைந்து நலந்திகழ்பாத பங்கயம் போற்றிப் பணிந்து எழுந்துஓதினார் தமிழ் வேதத்தின் ஓங்கு இசை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

358

எழுது மா மறையாம் பதிகத்து இசைமுழுதும் பாடி முதல்வரைப் போற்றி முன்தொழுது போந்து வந்து எய்தினார் சோலை சூழ்பழுதில் சீர்த்திரு வெண்ணிப் பதியினில்.
சொற்பிரிப்பு
எழுது மாமறையாம் பதிகத்து இசைமுழுதும் பாடி முதல்வரைப் போற்றி முன்தொழுது போந்து வந்து எய்தினார் சோலை சூழ்பழுதில் சீர்த் திரு வெண்ணிப் பதியினில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

359

வெண்ணி மேய விடையவர் கோயிலைநண்ணி நாடிய காதலின் நாண் மதிக்கண்ணியார் தம் கழல் இணை போற்றியேபண்ணில் நீடும் பதிக முன் பாடினார்.
சொற்பிரிப்பு
வெண்ணி மேய விடையவர் கோயிலைநண்ணி நாடிய காதலின் நாள்மதிக்கண்ணியார் தம் கழல் இணை போற்றியேபண்ணில் நீடும் பதிகம் முன் பாடினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

360

பாடி நின்று பரவிப் பணிந்து போய்ஆடும் அங்கணர் கோயில் அங்கு உள்ளனமாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர்நீடு சண்பை நிறை புகழ் வேதியர்.
சொற்பிரிப்பு
பாடி நின்று பரவிப் பணிந்துபோய்ஆடும் அங்கணர் கோயில் அங்கு உள்ளனமாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர்நீடு சண்பை நிறை புகழ் வேதியர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

361

மொய் தரும் சோலை சூழ் முளரி முள்ளடவி போய்மெய் தரும் பரிவிலான் வேள்வியைப் பாழ்படச்செய்த சங்கரர் திருச்சக்கரப் பள்ளி முன்புஎய்த வந்தருளினார் இயல் இசைத் தலைவனார்.
சொற்பிரிப்பு
மொய்தரும் சோலை சூழ் முளரி முள் அடவி போய்மெய்தரும் பரிவிலான் வேள்வியைப் பாழ்படச்செய்த சங்கரர் திருச் சக்கரப் பள்ளி முன்புஎய்த வந்து அருளினார் இயல் இசைத் தலைவனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

362

சக்கரப் பள்ளியார் தம் தனிக் கோயில் உள்புக்கு அருத்தியின் உடன் புனை மலர்த் தாள் பணிந்துஅக்கரைப் பரமர்பால் அன்பு உறும் பரிவு கூர்மிக்க சொல் தமிழினால் வேதமும் பாடினார்.
சொற்பிரிப்பு
சக்கரப் பள்ளியார் தம் தனிக்கோயில் உள்புக்கு அருத்தியினுடன் புனை மலர்த் தாள் பணிந்துஅக்கு அரைப் பரமர்பால் அன்புறும் பரிவு கூர்மிக்க சொல் தமிழினால் வேதமும் பாடினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

363

தலைவர் தம் சக்கரப் பள்ளி தன்னிடை அகன்றுஅலைபுனல் பணைகளின் அருகு போய் அருமறைப்புலன் உறும் சிந்தையார் புள்ள மங்கைப் பதிகுலவும் ஆலந்துறைக் கோயிலைக் குறுகினார்.
சொற்பிரிப்பு
தலைவர் தம் சக்கரப் பள்ளி தன் இடை அகன்றுஅலை புனல் பணைகளின் அருகு போய் அருமறைப்புலனுறும் சிந்தையார் புள்ள மங்கைப் பதிகுலவும் ஆலந்துறைக் கோயிலைக் குறுகினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

364

மன்னும் அக் கோயில் சேர் மான் மறிக் கையர்தம்பொன் அடித்தலம் உறப் புரிவொடும் தொழுது எழுந்துஇன்னிசைத் தமிழ் புனைந்து இறைவர் சேலூருடன்பன்னு பாலைத் துறைப் பதி பணிந்து ஏகினார்.
சொற்பிரிப்பு
மன்னும் அக்கோயில் சேர் மான்மறிக் கையர் தம்பொன் அடித்தலம் உறப் புரிவொடும் தொழுது எழுந்துஇன்னிசைத் தமிழ் புனைந்து இறைவர் சேலூர் உடன்பன்னும் பாலைத்துறைப் பதி பணிந்து ஏகினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

365

காவின் மேல் முகில் எழும் கமழ் நறும் புறவு போய்வாவி நீடு அலவன் வாழ் பெடையுடன் மலர் நறும்பூவின் மேல் விழைவுறும் புகலியார் தலைவனார்சேவின் மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார்.
சொற்பிரிப்பு
காவின்மேல் முகில் எழும் கமழ் நறும் புறவு போய்வாவி நீடு அலவன் வாழ் பெடை உடன் மலர் நறும்பூவின் மேல் விழைவுறும் புகலியார் தலைவனார்சேவின் மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

366

மன்றலங் கழனி சூழ் திரு நலூர் மறைவலோர்துன்று மங்கல வினைத் துழனியால் எதிர் கொளப்பொன் தயங்கு ஒளி மணிச் சிவிகையில் பொலிவுறச்சென்று அணைந்தருளினார் சிரபுரச் செம்மலார்.
சொற்பிரிப்பு
மன்றலங் கழனி சூழ் திருநலூர் மறைவலோர்துன்று மங்கல வினைத் துழனியால் எதிர்கொளப்பொன் தயங்கு ஒளிமணிச் சிவிகையில் பொலிவுறச்சென்று அணைந்தருளினார் சிரபுரச் செம்மலார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

367

நித்திலச் சிவிகை மேல் நின்று இழிந்து அருளியேமொய்த்த அந்தணர் குழாம் முன் செலப் பின் செலும்பத்தரும் பரிசனங்களும் உடன் பரவவேஅத்தர் தம் கோபுரம் தொழுது அணைந்து அருளினார்.
சொற்பிரிப்பு
நித்திலச் சிவிகைமேல் நின்று இழிந்தருளியேமொய்த்த அந்தணர் குழாம் முன்செலப் பின்செலும்பத்தரும் பரிசனங்களும் உடன் பரவவேஅத்தர் தம் கோபுரம் தொழுது அணைந்தருளினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

368

வெள்ளி மால் வரையை நேர் விரிசுடர்க் கோயிலைப்பிள்ளையார் வலம் வரும் பொழுதினில் பெருகுசீர்வெள்ள ஆனந்தம் மெய் பொழிய மேல் ஏறி நீர்துள்ளுவார் சடையரைத் தொழுது முன் பரவுவார்.
சொற்பிரிப்பு
வெள்ளி மால்வரையை நேர் விரிசுடர்க் கோயிலைப்பிள்ளையார் வலம் வரும் பொழுதினில் பெருகு நீர்வெள்ளம் ஆனந்த மெய் பொழிய மேல் ஏறி நீர்துள்ளு வார் சடையரைத் தொழுது முன் பரவுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

369

பரவு சொல் பதிகம் முன் பாடினார் பரிவுதான்வர அயர்த்து உருகு நேர் மனனுடன் புறம் அணைந்துஅரவுடைச் சடையர் பேரருள் பெறும் பெருமையால்விரவும் அப்பதி அமர்ந்து அருளியே மேவினார்.
சொற்பிரிப்பு
பரவு சொல் பதிகம் முன் பாடினார் பரிவு தான்வரவு அயர்த்து உருகு நேர் மனனுடன் புறம் அணைந்துஅரவுடைச் சடையர் பேரருள் பெறும் பெருமையால்விரவும் அப்பதி அமர்ந் தருளியே மேவினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

370

அன்ன தன்மையில் அப்பதியினில் அமர்ந்து அருளிமின் நெடும் சடை விமலர் தாள் விருப்பொடு வணங்கிப்பன்னும் இன்னிசைப் பதிகமும் பல முறை பாடிநன்னெடும் குல நான் மறையவர் தொழ நயந்தார்.
சொற்பிரிப்பு
அன்ன தன்மையில் அப்பதியினில் அமர்ந்தருளிமின்நெடுஞ் சடை விமலர் தாள் விருப்பொடு வணங்கிப்பன்னும் இன்னிசைப் பதிகமும் பலமுறை பாடிநன் நெடுங்குல நான்மறையவர் தொழ நயந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

371

நீடும் அப்பதி நீங்குவார் நிகழ் திருநல்லூர்ஆடுவார் திருவருள் பெற அகன்று போந்து அங்கண்மாடும் உள்ளன வணங்கியே பரவி வந்து அணைந்தார்தேடும் மால் அயற்கு அரியவர் திருக்கருகாவூர்.
சொற்பிரிப்பு
நீடும் அப்பதி நீங்குவார் நிகழ் திருநல்லூர்ஆடுவார் திருஅருள் பெற அகன்று போந்து அங்கண்மாடும் உள்ளன வணங்கியே பரவி வந்து அணைந்தார்தேடும் மால் அயற்கு அரியவர் திருக்கருகாவூர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

372

வந்து பந்தர் மாதவி மணம் கமழ் கருகாவூர்ச்சந்த மாமறை தந்தவர் கழல் இணை தாழ்ந்தேஅந்தம் இல்லவர் வண்ணமாம் அழல் வண்ணம் என்றுசிந்தை இன்புறப் பாடினார் செழுந் தமிழ்ப் பதிகம்.
சொற்பிரிப்பு
வந்து பந்தர் மாதவி மணம் கமழ் கருகாவூர்ச்சந்த மாமறை தந்தவர் கழல் இணை தாழ்ந்தேஅந்தம் இல்லவர் வண்ணம் ஆர் அழல் வண்ணம் என்றுசிந்தை இன்புறப் பாடினார் செழுந்தமிழ்ப் பதிகம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

373

பதிக இன்னிசை பாடிப் போய்ப் பிறப்பதி பலவும்நதி அணிந்தவர் கோயில்கள் நண்ணியே வணங்கிமதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்றுள்அதிர் சிலம்பு அடியார் மகிழ் அவள் இவள் நல்லூர்.
சொற்பிரிப்பு
பதிக இன்னிசை பாடிப் போய்ப் பிறபதி பலவும்நதி அணிந்தவர் கோயில்கள் நண்ணியே வணங்கிமதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்றுள்அதிர் சிலம்படியார் மகிழ் அவள்இவள் நல்லூர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

374

மன்னும் அப்பதி வானவர் போற்றவும் மகிழ்ந்ததன்மையார் பயில் கோயில் உள் தம்பரிசு உடையார்என்னும் நாமமும் நிகழ்ந்திட ஏத்தி முன் இறைஞ்சிப்பன்னு சீர்ப் பதி பலவும் அப்பால் சென்று பணிவார்.
சொற்பிரிப்பு
மன்னும் அப்பதி வானவர் போற்றவும் மகிழ்ந்ததன்மையார் பயில் கோயில் உள் தம்பரிசு உடையார்என்னும் நாமமும் நிகழ்ந்திட ஏத்தி முன் இறைஞ்சிப்பன்னு சீர்ப் பதி பலவும் அப்பால் சென்று பணிவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

375

பழுதில் சீர்த் திருப் பரிதி நல் நியமும் பணிந்து அங்குஎழுது மாமறையாம் பதிகத்து இசை போற்றிமுழுதும் ஆனவர் கோயில்கள் வணங்கியே முறைமைவழுவிலார் திருப்பூவனூர் வணங்கி வந்து அணைந்து.
சொற்பிரிப்பு
பழுதில் சீர்த் திருப்பரிதி நன் நியமமும் பணிந்து அங்குஎழுது மாமறையாம் பதிகத்து இசை போற்றிமுழுதும் ஆனவர் கோயில்கள் வணங்கியே முறைமைவழுவிலார் திருப்பூவனூர் வணங்கி வந்து அணைந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

376

பொங்கு காதலில் போற்றி அங்கருளுடன் போந்துபங்கயத் தடம் பணைப் பதி பலவும் முன் பணிந்தேஎங்கும் அன்பர்கள் ஏத்து ஒலி எடுக்க வந்து அணைந்தார்அங்கணர்க்கு இடம் ஆகிய பழம்பதி ஆவூர்.
சொற்பிரிப்பு
பொங்கு காதலில் போற்றி அங்கு அருளுடன் போந்துபங்கயத் தடம் பணைப்பதி பலவும் முன் பணிந்தேஎங்கும் அன்பர்கள் ஏத்து ஒலி எடுக்க வந்து அணைந்தார்அங்கணர்க்கு இடம் ஆகிய பழம்பதி ஆவூர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

377

பணியும் அப்பதிப் பசுபதி ஈச்சரத்தின் இனிது இருந்தமணியை உள் புக்கு வழிபடும் விருப்பினால் வணங்கித்தணிவு இல் காதலினால் தண் தமிழ் மாலைகள் சாத்திஅணி விளங்கிய திருநலூர் மீண்டும் வந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
பணியும் அப்பதிப் பசுப தீச்சரத்து இனிது இருந்தமணியை உள்புக்கு வழிபடும் விருப்பினால் வணங்கித்தணிவில் காதலில் தண்டமிழ் மாலைகள் சாத்திஅணி விளங்கிய திருநல்லூர் மீண்டும் வந்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

378

மறை விளங்கும் அப்பதியினில் மணிகண்டர் பொற்றாள்நிறையும் அன்பொடு வணங்கியே நிகழ்பவர் நிலவும்பிறை அணிந்தவர் அருள் பெறப் பிரச மென் மலர் வண்டுஅறை நறும் பொழில் திரு வலஞ் சுழியில் வந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
மறை விளங்கும் அப்பதியினில் மணிகண்டர் பொன் தாள்நிறையும் அன்பொடு வணங்கியே நிகழ்பவர் நிலவும்பிறை அணிந்தவர் அருள்பெறப் பிரச மென் மலர் வண்டுஅறை நறும்பொழில் திருவலஞ் சுழியில் வந்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

379

மதி புனைந்தவர் வலஞ்சுழி மருவு மாதவத்துமுதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர் தம் முன் வந்துஎதிர் கொள் போழ்தினில் இழிந்தவர் எதிர் செல மதியைக்கதிர் செய் வெண் முகில் குழாம் புடை சூழ்ந்தெனக் கலந்தார்.
சொற்பிரிப்பு
மதி புனைந்தவர் வலஞ்சுழி மருவு மாதவத்துமுதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர் தம் முன் வந்துஎதிர்கொள் போழ்தினில் இழிந்து அவர் எதிர் செல மதியைக்கதிர் செய் வெண்முகில் குழாம் புடை சூழ்ந்து எனக் கலந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

380

கலந்த அன்பர்கள் தொழுது எழக் கவுணியர் தலைவர்அலர்ந்த செங்கமலக் கரம் குவித்து உடன் அணைவார்வலஞ்சுழிப் பெருமான் மகிழ் கோயில் வந்து எய்திப்பொலம் கொள் நீள் சுடர்க் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்தார்.
சொற்பிரிப்பு
கலந்த அன்பர்கள் தொழுது எழக் கவுணியர் தலைவர்அலர்ந்த செங்கமலக் கரம் குவித்து உடன் அணைவார்வலஞ்சுழிப் பெருமான் மகிழ் கோயில் வந்து எய்திப்பொலங்கொள் நீள்சுடர்க் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

381

மருவலார் புரம் முனிந்தவர் திரு முன்றில் வலம் கொண்டுஉருகும் அன்புடன் உச்சி மேல் அஞ்சலியினராய்த்திருவலஞ்சுழி உடையவர் சேவடித் தலத்தில்பெருகும் ஆதரவுடன் பணிந்து எழுந்தனர் பெரியோர்.
சொற்பிரிப்பு
மருவலார் புரம் முனிந்தவர் திருமுன்றில் வலங்கொண்டுஉருகும் அன்புடன் உச்சி மேல் அஞ்சலியினராய்த்திருவலஞ்சுழி உடையவர் சேவடித் தலத்தில்பெருகும் ஆதரவுடன் பணிந்து எழுந்தனர் பெரியோர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

382

ஞான போனகர் நம்பர் முன் தொழுது எழும் விருப்பால்ஆன காதலில் அங்கணவர் தமை வினவும்ஊனமில் இசையுடன் விளங்கிய திருப்பதிகம்பானலார் மணிகண்டரைப் பாடினார் பரவி.
சொற்பிரிப்பு
ஞான போனகர் நம்பர் முன் தொழுது எழும் விருப்பால்ஆன காதலில் அங்கணர் அவர் தமை வினவும்ஊனம் இல்இசையுடன் விளங்கிய திருப்பதிகம்பானல் ஆர் மணிகண்டரைப் பாடினார் பரவி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

383

புலன் கொள் இன் தமிழ் போற்றினர் புறத்தினில் அணைந்தேஇலங்கு நீர்ப் பொன்னி சூழ் திருப்பதியினில் இருந்துநலம் கொள் காதலின் நாதர்தாள் நாள்தொறும் பரவிவலஞ்சுழிப் பெருமான் தொண்டர் தம்முடன் மகிழ்ந்தார்.
சொற்பிரிப்பு
புலன்கொள் இன்தமிழ் போற்றினர் புறத்தினில் அணைந்தேஇலங்கு நீர்ப் பொன்னி சூழ் திருப்பதியினில் இருந்துநலங்கொள் காதலின் நாதர் தாள் நாள்தொறும் பரவிவலஞ்சுழிப் பெருமான் தொண்டர் தம்முடன் மகிழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

384

மகிழ்ந்த தன்தலை வாழும் அந் நாளிடை வானில்திகழ்ந்த ஞாயிறு துணைப் புணர் ஓரை உள் சேர்ந்துநிகழ்ந்த தன்மையில் நிலவும் ஏழ் கடல் நீர்மை குன்றவெகுண்டு வெம் கதிர் பரப்பலின் முதிர்ந்தது வேனில்.
சொற்பிரிப்பு
மகிழ்ந்து அதன்தலை வாழும் அந்நாளிடை வானில்திகழ்ந்த ஞாயிறு துணைப் புணர் ஓரையுள் சேர்ந்துநிகழ்ந்த தன்மையில் நிலவும் ஏழ் கடல் நீர்மை குன்றவெகுண்டு வெங்கதிர் பரப்பலின் முதிர்ந்தது வேனில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

385

தண் புனல் குளிர் கால் நறும் சந்தனத் தேய்வைபண்பு நீடிய வாச மென் மலர் பொதி பனி நீர்நண்புடைத் துணை நகை மணி முத்தணி நாளும்உண்ப மாதுரியச் சுவை உலகு உளோர் விரும்ப.
சொற்பிரிப்பு
தண்புனல் குளிர் கால் நறும் சந்தனத் தேய்வைபண்பு நீடிய வாச மென் மலர்பொதி பனி நீர்நண்புடைத் துணை நகைமணி முத்துஅணி நாளும்உண்ப மாதுரியச் சுவை உலகு உளோர் விரும்ப.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

386

அறல் மலியும் கான் ஆற்றின் நீர் நசையால் அணையுமான்பெறல் அரிய புனல் என்று பேய்த்தேரின் பின் தொடரும்உறை உணவு கொள்ளும் புள் தேம்பிஅயல் இரை தேரும்பறவை சிறை விரித்து ஒடுங்கப் பனிப் புறத்து வதியுமால்.
சொற்பிரிப்பு
அறல் மலியும் கான் யாற்றின் நீர் நசையால் அணையு மான்பெறல் அரிய புனல் என்று பேய்த்தேரின் பின்தொடரும்உறை உணவு கொள்ளும் புள் தேம்பி அயல் இரை தேரும்பறவை சிறை விரித்து ஒடுங்கப் பனிப்புறத்து வதியுமால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

387

நீண் நிலை மாளிகை மேலும் நிலா முன்றின் மருங்கினும்வாண் நிழல் நல் சோலையிலும் மலர் வாவிக் கரை மாடும்பூண் நிலவு முத்து அணிந்த பூங்குழலார் முலைத் தடத்தும்காணும் மகிழ்ச்சியின் மலர்ந்து மாந்தர் கலந்து உறைவாரால்.
சொற்பிரிப்பு
நீள் நிலை மாளிகை மேலும் நிலா முன்றில் மருங்கினிலும்வாள்நிழல் நல்சோலையிலும் மலர் வாவிக் கரை மாடும்பூண்நிலவு முத்து அணிந்த பூங்குழலார் முலைத் தடத்தும்காணும் மகிழ்ச்சியின் மலர்ந்து மாந்தர் கலந்து உறைவரால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

388

மயில் ஒடுங்க வண்டு ஆட மலர்க் கமல முகை விரியக்குயில் ஒடுங்காச் சோலையின் மென் தளிர் கோதிக் கூவி எழத்துயில் ஒடுங்கா உயிர் அனைத்தும் துயில் பயிலச் சுடர் வானில்வெயில் ஒடுங்கா வெம்மை தரும் வேனில் விரி தரு நாளில்.
சொற்பிரிப்பு
மயில் ஒடுங்க வண்டு ஆட மலர்க் கமலமுகை விரியக்குயில் ஒடுங்காச் சோலையின் மென் தளிர் கோதிக் கூவி எழத்துயில் ஒடுங்கா உயிர் அனைத்தும் துயில் பயிலச் சுடர்வானில்வெயில் ஒடுங்கா வெம்மை தரும் வேனில் விரிதரு நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

389

சண்பை வரும் பிள்ளையார் சடா மகுடர் வலஞ்சுழியைஎண் பெருகத் தொழுது ஏத்திப் பழையாறை எய்துதற்குநண்பு உடைய அடியார்களுடன் போத நடந்தருளிவிண் பொரு நீள் மதிள் ஆறை மேல் தளி சென்று எய்தினார்.
சொற்பிரிப்பு
சண்பை வரும் பிள்ளையார் சடாமகுடர் வலஞ்சுழியைஎண் பெருகத் தொழுது ஏத்திப் பழையாறை எய்துதற்குநண்புடைய அடியார்கள் உடன் போத நடந்தருளிவிண்பொரு நீள் மதிள் ஆறை மேற்றளி சென்று எய்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

390

திருவாறை மேற்றளியில் திகழ்ந்து இருந்த செந்தீயின்உருவாளன் அடிவணங்கி உருகிய அன்பொடு போற்றிமருவாரும் குழல் மலையாள் வழிபாடு செய்ய அருள்தருவார் தம் திரு சத்தி முற்றத்தின் புறம் சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
திருஆறை மேற்றளியில் திகழ்ந்து இருந்த செந்தீயின்உருவாளன் அடிவணங்கி உருகிய அன்பொடு போற்றிமருவாரும் குழல்மலையாள் வழிபாடு செய்ய அருள்தருவார் தம் திருச்சத்தி முற்றத்தின் புறஞ் சார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

391

திருச் சத்தி முற்றத்தில் சென்று எய்தித் திருமலையாள்அருச்சித்த சேவடிகள் ஆர்வம் உறப் பணிந்து ஏத்திக்கருச் சுற்றில் அடையாமல் கை தருவார் கழல் பாடிவிருப்புற்றுத் திருப் பட்டீச்சரம் பணிய மேவுங்கால்.
சொற்பிரிப்பு
திருச்சத்தி முற்றத்தில் சென்று எய்தித் திருமலையாள்அருச்சித்த சேவடிகள் ஆர்வம் உறப் பணிந்து ஏத்திக்கருச்சுற்றில் அடையாமல் கை தருவார் கழல் பாடிவிருப்புற்றுத் திருப்பட்டீச் சரம் பணிய மேவும் கால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

392

வெம்மை தரு வேனிலிடை வெயில் வெப்பம் தணிப்பதற்குமும்மை நிலைத் தமிழ் விரகர் முடிமீதே சிவபூதம்தம்மை அறியாதபடி தண் தரளப் பந்தர் எடுத்துஎம்மை விடுத்து அருள் புரிந்தார் பட்டீசர் என்று இயம்ப.
சொற்பிரிப்பு
வெம்மை தருவேனில் இடை வெயில் வெப்பம் தணிப்பதற்குமும்மை நிலைத் தமிழ்விரகர் முடி மீதே சிவ பூதம்தம்மை அறியாதபடி தண் தரளப் பந்தர் எடுத்துஎம்மை விடுத்து அருள்புரிந்தார் பட்டீசர் என்று இயம்ப.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

393

அவ்வுரையும் மணி முத்தின் பந்தரும் ஆகாயம் எழச்செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் சிரபுரத்துப் பிள்ளையார்இவ் வினைதான் ஈசர் திரு அருளால் ஆகில் இசைவது எனமெய் விரவு புளகம் உடன் மேதினியின் மிசைத் தாழ்ந்தார்.
சொற்பிரிப்பு
அவ்உரையும் மணிமுத்தின் பந்தரும் ஆகாயம் எழச்செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் சிரபுரத்துப் பிள்ளையார்இவ்வினை தான் ஈசர் திருஅருள் ஆகில் இசைவது எனமெய் விரவு புளகம் உடன் மேதினியின் மிசைத் தாழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

394

அது பொழுதே அணி முத்தின் பந்தரினை அருள் சிறக்கக்கதிர் ஒளிய மணிக் காம்பு பரிசனங்கள் கைக் கொண்டார்மதுர மொழி மறைத் தலைவர் மருங்கு இமையோர் பொழிவாசப்புது மலரால் அப்பந்தர் பூம் பந்தரும் போலும்.
சொற்பிரிப்பு
அது பொழுதே அணிமுத்தின் பந்தரினை அருள் சிறக்கக்கதிர் ஒளிய மணிக்காம்பு பரிசனங்கள் கைக்கொண்டார்மதுர மொழி மறைத்தலைவர் மருங்கு இமையோர் பொழிவாசப்புது மலரால் அப்பந்தர் பூம்பந்தரும் போலும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

395

தொண்டர் குழாம் ஆர்ப்பு எடுப்பச் சுருதிகளின் பெருந்துழனிஎண் திசையும் நிறைந்து ஓங்க எழுந்தருளும் பிள்ளையார்வெண் தரளப் பந்தர் நிழல் மீது அணையத் திருமன்றில்அண்டர்பிரான் எடுத்த திருவடி நீழல் என அமர்ந்தார்.
சொற்பிரிப்பு
தொண்டர் குழாம் ஆர்ப்பு எடுப்பச் சுருதிகளின் பெரும் துழனிஎண்டிசையும் நிறைந்து ஓங்க எழுந்தருளும் பிள்ளையார்வெண்டரளப் பந்தர் நிழல் மீது அணையத் திருமன்றில்அண்டர் பிரான் எடுத்த திருவடி நீழல் என அமர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

396

பாரின் மிசை அன்பர் உடன் வருகின்றார் பன்னகத்தின்ஆரம் அணிந்தவர் தந்த அருள் கருணைத் திறம் போற்றிஈர மனம் களி தழைப்ப எதிர் கொள்ள முகம் மலர்ந்துசேர வரும் தொண்டர் உடன் திருப்பட்டீச்சரம் அணைந்தார்.
சொற்பிரிப்பு
பாரின் மிசை அன்பருடன் வருகின்றார் பன்னகத்தின்ஆரம் அணிந்தவர் தந்த அருள் கருணைத் திறம் போற்றிஈர மனம் களி தழைப்ப எதிர் கொள்ள முகம் மலர்ந்துசேர வரும் தொண்டருடன் திருப்பட்டீச்சரம் அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

397

சென்று அணைந்து திருவாயில் புறத்து இறைஞ்சி உள்புக்குவென்றி விடையவர் கோயில் வலம் கொண்டு வெண் கோட்டுப்பன்றி கிளைத்து அறியாத பாத தாமரை கண்டுமுன் தொழுது விழுந்து எழுந்து மொழி மாலை போற்றி இசைத்தார்.
சொற்பிரிப்பு
சென்று அணைந்து திருவாயில் புறத்து இறைஞ்சி உள் புக்குவென்றி விடையவர் கோயில் வலம் கொண்டு வெண்கோட்டுப்பன்றி கிளைத்து அறியாத பாத தாமரை கண்டுமுன்தொழுது விழுந்து எழுந்து மொழிமாலை போற்றிசைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

398

அருள் வெள்ளத் திறம் பரவி அளப்பரிய ஆனந்தப்பெரு வெள்ளத்திடை மூழ்கிப் பேராத பெருங்காதல்திருவுள்ளப் பரிவுடனே செம்பொன் மலை வல்லியார்தரு வள்ளத்து அமுது உண்ட சம்பந்தர் புறத்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
அருள்வெள்ளத் திறம் பரவி அளப்பு அரிய ஆனந்தப்பெருவெள்ளத்து இடைமூழ்கிப் பேராத பெருங்காதல்திருஉள்ளப் பரிவு உடனே செம் பொன்மலை வல்லியார்தருவள்ளத்து அமுது உண்ட சம்பந்தர் புறத்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

399

அப்பதியில் அமர்கின்ற ஆளுடைய பிள்ளையார்செப்பரும் சீர் திருவாறை வட தளியில் சென்று இறைஞ்சிஒப்பரிய தமிழ் பாடி உடன் அமரும் தொண்டரொடுஎப்பொருளுமாய் நின்றார் இரும் பூளை எய்தினார்.
சொற்பிரிப்பு
அப்பதியில் அமர்கின்ற ஆளுடைய பிள்ளையார்செப்பரும் சீர்த் திருஆறை வட தளியில் சென்று இறைஞ்சிஒப்பரிய தமிழ்பாடி உடன் அமரும் தொண்டரொடுஎப்பொருளுமாய் நின்றார் இரும்பூளை எய்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

400

தேவர் பிரான் அமர்ந்த திரு இரும் பூளை சென்று எய்தக்காவண நீள் தோரணங்கள் நாட்டி உடன் களி சிறப்பப்பூவண மாலைகள் நாற்றிப் பூரண பொற்குடம் நிரைத்து அங்குயாவர்களும் போற்றி இசைப்பத் திருத் தொண்டர் எதிர் கொண்டார்.
சொற்பிரிப்பு
தேவர்பிரான் அமர்ந்த திரு இரும்பூளை சென்று எய்தக்காவணம் நீள் தோரணங்கள் நாட்டி உடன் களி சிறப்பப்பூவண மாலைகள் நாற்றிப் பூரண பொன் குடம் நிரைத்து அங்குயாவர்களும் போற்றிசைப்பத் திருத்தொண்டர் எதிர்கொண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

401

வண் தமிழின் மொழி விரகர் மணிமுத்தின் சிவிகையினைத்தொண்டர் குழாத்து எதிர் இழிந்து அங்கு அவர் தொழத் தாமும் தொழுதேஅண்டர்பிரான் கோயிலினை அணைந்து இறைஞ்சி முன் நின்றுபண்டரும் இன்னிசைப் பதிகம் பரம் பொருளைப் பாடுவார்.
சொற்பிரிப்பு
வண்டமிழின் மொழி விரகர் மணிமுத்தின் சிவிகையினைத்தொண்டர் குழாத்து எதிரிழிந்து அங்கு அவர்தொழத் தாமும் தொழுதேஅண்டர்பிரான் கோயிலினை அணைந்து இறைஞ்சி முன் நின்றுபண்தரும் இன் இசைப்பதிகம் பரம்பொருளைப் பாடுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

402

நிகர் இலா மேருவரை அணுவாக நீண்டானைநுகர்கின்ற தொண்டர் தமக்கு அமுதாகி நொய்யானைதகவு ஒன்ற அடியார்கள் தமை வினவித் தமிழ் விரகர்பகர்கின்ற அருமறையின் பொருள் விரியப் பாடினார்.
சொற்பிரிப்பு
நிகர் இலா மேருவரை அணுவாக நீண்டானைநுகர்கின்ற தொண்டர் தமக்கு அமுதாகி நொய்யானைத்தகவு ஒன்ற அடியார்கள் தமை வினவித் தமிழ்விரகர்பகர்கின்ற அருமறையின் பொருள் விரியப் பாடினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

403

பாடும் அரதைப் பெரும் பாழியே முதலாகச்சேடர் பயில் திருச்சேறை திருநாலூர் குட வாயில்நாடிய சீர் நறையூர் தென் திருப்புத்தூர் நயந்து இறைஞ்சிநீடு தமிழ்த் தொடை புனைந்து அந்நெடு நகரில் இனிது அமர்ந்தார்.
சொற்பிரிப்பு
பாடும் அரதைப் பெரும் பாழியே முதலாகச்சேடர் பயில் திருச்சேறை திருநாலூர் குடவாயில்நாடிய சீர் நறையூர் தென் திருப்புத்தூர் நயந்து இறைஞ்சிநீடு தமிழ்த் தொடை புனைந்து அந்நெடு நகரில் இனிது அமர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

404

அங்கண் இனிது அமரு நாள் அடல் வெள் ஏனத்து உருவாய்ச்செங்கண் நெடுமால் பணியும் சிவபுரத்துச் சென்று அடைந்துகங்கைச் சடை கரந்தவர் தம் கழல் வணங்கிக் காதலினால்பொங்குமிசைத் திருப்பதிகம் முன் நின்று போற்றி இசைத்தார்.
சொற்பிரிப்பு
அங்கண் இனிது அமருநாள் அடல்வெள் ஏனத்து உருவாய்ச்செங்கண் நெடுமால் பணியும் சிவபுரத்துச் சென்று அடைந்துகங்கைசடைக் கரந்தவர் தம் கழல் வணங்கிக் காதலினால்பொங்குமிசைத் திருப்பதிகம் முன் நின்று போற்றிசைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

405

போற்றி இசைத்துப் புனிதர் அருள் பெற்றுப் போந்து எவ் உயிரும்தோற்றுவித்த அயன் போற்றும் தோணிபுரத்து அந்தணனார்ஏற்றும் இசை ஏற்று உகந்த இறைவர் தமை ஏத்துதற்குநாற்றிசை யோர் பரவும் திருக் குடமூக்கு நண்ணினார்.
சொற்பிரிப்பு
போற்றிசைத்துப் புனிதர் அருள் பெற்றுப் போந்து எவ்உருவும்தோற்றுவித்த அயன் போற்றும் தோணிபுரத்து அந்தணனார்ஏற்றுமிசை ஏற்று உகந்த இறைவர் தமை ஏத்துதற்குநாற்றிசை யோர் பரவு திருக்குடமூக்கு நண்ணினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

406

தேமருவு மலர்ச் சோலைத்திரு குடமூக்கினில் செல்வமாமறையோர் பூந்தராய் வள்ளலார் வந்தருளத்தூமறையின் ஒலி பெருகத் தூரிய மங்கலம் முழங்ககோ முறைமை எதிர் கொண்டு தம்பதி உள் கொடு புக்கார்.
சொற்பிரிப்பு
தேமருவு மலர்ச்சோலைத் திருக்குட மூக்கினில் செல்வமாமறையோர் பூந்தராய் வள்ளலார் வந்தருளத்தூமறையின் ஒலி பெருகத் தூரிய மங்கலம் முழங்கக்கோமுறைமை எதிர்கொண்டு தம் பதி உள் கொடுபுக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

407

திருஞான சம்பந்தர் திருக்குட மூக்கினைச் சேரவருவார் தம் பெருமானை வண் தமிழின் திருப்பதிகம்உருகா நின்று உளம் மகிழ்க் குட மூக்கை உகந்து இருந்தபெருமான் எம் இறை என்று பெருகு இசையால் பரவினார்.
சொற்பிரிப்பு
திருஞான சம்பந்தர் திருக்குட மூக்கினைச் சேரவருவார் தம் பெருமானை வண்டமிழின் திருப்பதிகம்உருகா நின்று உளம் மகிழக் குடமூக்கை உவந்து இருந்தபெருமான் எம் இறை என்று பெருகு இசையால் பரவினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

408

வந்து அணைந்து திருக்கீழ்க் கோட்டத்து இருந்த வான் பொருளைச்சிந்தை மகிழ்வுற வணங்கித் திருத்தொண்டருடன் செல்வார்அந்தணர்கள் புடை சூழ்ந்து போற்றி இசைப்ப அவரொடும்கந்த மலர் பொழில் சூழ்ந்த காரோணம் சென்று அடைந்தார்.
சொற்பிரிப்பு
வந்து அணைந்து திருக்கீழ்க் கோட்டத்து இருந்த வான்பொருளைச்சிந்தை மகிழ்வு உற வணங்கித் திருத்தொண்டர் உடன்செல்வார்அந்தணர்கள் புடைசூழ்ந்து போற்றிசைப்ப அவரோடும்கந்தமலர்ப் பொழில் சூழ்ந்த காரோணம் சென்று அடைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

409

பூ மருவும் கங்கை முதல் புனிதமாம் பெரும் தீர்த்தம்மா மகம் தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில்தூ மருவும் மலர்க் கையால் தொழுது வலம் கொண்டு அணைந்துகாமர் கெட நுதல் விழித்தார் கழல் பணிந்து கண் களித்தார்.
சொற்பிரிப்பு
பூமருவும் கங்கைமுதல் புனிதமாம் பெருந்தீர்த்தம்மாமகம் தான் ஆடுதற்கு வந்து வழிபடுங் கோயில்தூமருவு மலர்க்கையால் தொழுது வலம் கொண்டு அணைந்துகாமர் கெட நுதல் விழித்தார் கழல் பணிந்து கண் களித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

410

கண்ணாரும் அருமணியைக் காரோணத்து ஆர் அமுதைநண்ணாதார் புரம் எரித்த நான் மறையின் பொருளானைப்பண் ஆர்ந்த திருப்பதிகம் பணிந்து ஏத்திப் பிறபதியும்எண் ஆர்ந்த சீர் அடியாருடன் பணிவுற்று எழுந்தருளி.
சொற்பிரிப்பு
கண் ஆரும் அருமணியைக் காரோணத்து ஆர் அமுதைநண்ணாதார் புரம் எரித்த நான் மறையின் பொருளானைப்பண் ஆர்ந்த திருப்பதிகம் பணிந்து ஏத்திப் பிறபதியும்எண் ஆர்ந்த சீர் அடியாருடன் பணிவுற்று எழுந்தருளி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

411

திரு நாசேச் சரத்து அமர்ந்த செங்கனகத் தனிக் குன்றைக்கரு நாகத்து உரி புனைந்த கண் நுதலைச் சென்று இறைஞ்சிஅருஞானச் செந்தமிழின் திருப்பதிகம் அருள் செய்துபெரு ஞான சம்பந்தர் பெருகு ஆர்வத்தின்புற்றார்.
சொற்பிரிப்பு
திருநாகேச்சரத்து அமர்ந்த செங்கனகத் தனிக்குன்றைக்கருநாகத்து உரி புனைந்த கண் நுதலைச் சென்று இறைஞ்சிஅருஞானச் செந்தமிழின் திருப்பதிகம் அருள்செய்துபெருஞான சம்பந்தர் பெருகு ஆர்வத்து இன்புற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

412

மா நாகம் அர்ச்சித்த மலர்க் கமலத் தாள் வணங்கிநாள் நாளும் பரவுவார் பிணி தீர்க்கும் நலம் போற்றிப்பால் நாறும் மணி வாயர் பரமர் திருவிடை மருதில்பூ நாறும் புனல் பொன்னித் தடங்கரை போய்ப் புகுகின்றார்.
சொற்பிரிப்பு
மாநாகம் அருச்சித்த மலர்க் கமலத் தாள் வணங்கிநாள்நாளும் பரவுவார் பிணி தீர்க்கும் நலம் போற்றிப்பால்நாறும் மணிவாயர் பரமர் திரு இடைமருதில்பூநாறும் புனல் பொன்னித் தடங்கரை போய்ப் புகுகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

413

ஓங்கு திருப்பதிகம் ஓடேகலன் என்று எடுத்தருளித்தாங்க அரிய பெருமகிழ்ச்சி தலை சிறக்கும் தன்மையினால்ஈங்கு எனை ஆளுடைய பிரான் இடை மருது ஈதோ என்றுபாங்கு உடைய இன் இசையால் பாடி எழுந்தருளினார்.
சொற்பிரிப்பு
ஓங்கு திருப்பதிகம் ஓடே கலன் என்று எடுத்தருளித்தாங்கரிய பெருமகிழ்ச்சி தலை சிறக்கும் தன்மையினால்ஈங்கு எனை ஆள் உடையபிரான் இடைமருது ஈதோ என்றுபாங்குடைய இன்னிசையால் பாடி எழுந்தருளினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

414

அடியவர்கள் எதிர் கொள்ள எழுந்தருளி அங்கு அணைந்துமுடிவில் பரம் பொருள் ஆனார் முதற் கோயில் முன் இறைஞ்சிப்படியில் வலம் கொண்டு திரு முன்பு எய்திப் பார் மீதுநெடிது பணிந்தெழுந்து அன்பு நிறை கண்ணீர் நிரந்து இழிய.
சொற்பிரிப்பு
அடியவர்கள் எதிர்கொள்ள எழுந்தருளி அங்கு அணைந்துமுடிவில் பரம்பொருள் ஆனார் முதல்கோயில் முன் இறைஞ்சிப்படியில் வலம் கொண்டு திருமுன்பு எய்திப் பார் மீதுநெடிது பணிந்து எழுந்து அன்பு நிறைகண்ணீர் நிரந்து இழிய.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

415

பரவுறு செந்தமிழ்ப் பதிகம் பாடி அமர்ந்த அப்பதியில்விரவுவார் திருப்பதிகம் பல பாடி வெண் மதியோடுஅரவு சடைக்கு அணிந்தவர் தம் தாள் போற்றி ஆர்வத்தால்உரவு திருத் தொண்டருடன் பணிந்து ஏத்தி உறையும் நாள்.
சொற்பிரிப்பு
பரவுறு செந்தமிழ்ப் பதிகம் பாடி அமர்ந்து அப்பதியில்விரவுவார் திருப்பதிகம் பல பாடி வெண் மதியோடுஅரவுசடைக்கு அணிந்தவர் தம் தாள் போற்றி ஆர்வத்தால்உரவு திருத்தொண்டருடன் பணிந்து ஏத்தி உறையு நாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

416

மருங்கு உள நற் பதிகள் பல பணிந்து மா நதிக்கரை போய்க்குரங்காடு துறை அணைந்து குழகனார் குரை கழல்கள்பெரும் காதலில் பணிந்து பேணிய இன்னிசை பெருகஅரும் கலை நூல் திருப்பதிகம் அருள் செய்து பரவினார்.
சொற்பிரிப்பு
மருங்கு உள நல் பதிகள் பல பணிந்து மாநதிக் கரைபோய்க்குரங்காடு துறை அணைந்து குழகனார் குரைகழல்கள்பெருங்காதலில் பணிந்து பேணிய இன்இசை பெருகஅருங்கலை நூல் திருப்பதிகம் அருள் செய்து பரவினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

417

அம் மலர்த் தடம் பதிபணிந்து அகன்று போந்து அருகுமைம்மலர்க் களத்து இறைவர் தம் கோயில்கள் வணங்கிநம் மலத்துயர் தீர்க்க வந்தருளிய ஞானச்செம்மலார் திருவாவடு துறையினைச் சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
அம்மலர்த் தடம் பதி பணிந்து அகன்று போந்து அருகுமைம்மலர்க் களத்து இறைவர் தம் கோயில்கள் வணங்கிநம் மலத்துயர் தீர்க்க வந்தருளிய ஞானச்செம்மலார் திரு ஆவடு துறையினைச் சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

418

மூவர்க்கு அறிவரும் பொருள் ஆகிய மூலத்தேவர் தம் திருவாவடு துறைத் திருத் தொண்டர்பூ அலம்பு தண் பொரு புனல் தடம் பணைப் புகலிக்காவலர்க்கு எதிர் கொள்ளும் ஆதரவுடன் கலந்தார்.
சொற்பிரிப்பு
மூவருக்கு அறிவரும் பொருள் ஆகிய மூலத்தேவர் தம் திரு ஆவடு துறைத் திருத் தொண்டர்பூவலம்பு தண் பொருபுனல் தடம்பணைப் புகலிக்காவலர்க்கு எதிர் கொள்ளும் ஆதரவுடன் கலந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

419

வந்து அணைவார் தொழா முனம் மலர் புகழ்ச் சண்பைஅந்தணர்க்கு எலாம் அருமறைப் பொருள் என வந்தார்சந்த நித்திலச் சிவிகை நின்று இழிந்து எதிர் தாழ்ந்தேசிந்தை இன்புற இறைவர் தம் கோயில் முன் சென்றார்.
சொற்பிரிப்பு
வந்து அணைந்தவர் தொழாமுனம் மலர்புகழ்ச் சண்பைஅந்தணர்க்கு எலாம் அருமறைப் பொருள் என வந்தார்சந்த நித்திலச் சிவிகை நின்று இழிந்து எதிர் தாழ்ந்தேசிந்தை இன்புற இறைவர் தம் கோயில் முன் சென்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

420

நீடு கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நீள் நிலையான்மாடு சூழ் திரு மாளிகை வலம் கொண்டு வணங்கிஆடும் ஆதியை ஆவடு துறையுள் ஆரமுதைநாடு காதலில் பணிந்தெழுந்து அருந் தமிழ் நவின்றார்.
சொற்பிரிப்பு
நீடு கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நீள் நிலையால்மாடு சூழ் திரு மாளிகை வலம் கொண்டு வணங்கிஆடும் ஆதியை ஆவடு துறையுள் ஆர் அமுதைநாடு காதலில் பணிந்து எழுந்து அரும்தமிழ் நவின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

421

அன்பு நீடிய அருவி கண் பொழியும் ஆர்வத்தால்முன்பு போற்றியே புறம்பு அணை முத்தமிழ் விரகர்துன்பு போம் மனத் திருத்தொண்டர் தம்முடன் தொழுதேஇன்பம் மேவி அப்பதியினில் இனிது அமர்ந்திருந்தார்.
சொற்பிரிப்பு
அன்பு நீடிய அருவி கண் பொழியும் ஆர்வத்தால்முன்பு போற்றியே புறம்பணை முத்தமிழ் விரகர்துன்பு போம் மனத் திருத்தொண்டர் தம்முடன் தொழுதேஇன்பம் மேவி அப் பதியினில் இனிது அமர்ந்து இருந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

422

மேவி அங்கு உறை நாளினில் வேள்வி செய்வதனுக்குஆவது ஆகிய காலம் வந்து அணைவுற அணைந்துதாவில் சண்பையர் தலைவர்க்குத் தாதையார் தாமும்போவதற்கு அரும் பொருள் பெற எதிர் நின்று புகன்றார்.
சொற்பிரிப்பு
மேவி அங்கு உறை நாளினில் வேள்வி செய்வதனுக்குஆவது ஆகிய காலம் வந்து அணைவுற அணைந்துதாவில் சண்பையர் தலைவர்க்குத் தாதையார் தாமும்போவதற்கு அரும் பொருள் பெற எதிர் நின்று புகன்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

423

தந்தையார் மொழி கேட்டலும் புகலியார் தலைவர்முந்தை நாளிலே மொழிந்தமை நினைந்து அருள் முன்னிஅந்தமில் பொருள் ஆவன ஆவடு துறையுள்எந்தையார் அடித் தலங்கள் அன்றோ என எழுந்தார்.
சொற்பிரிப்பு
தந்தையார் மொழி கேட்டலும் புகலியார் தலைவர்முந்தை நாளிலே மொழிந்தமை நினைந்து அருள் முன்னிஅந்தம் இல் பொருள் ஆவன ஆவடு துறையுள்எந்தையார் அடித் தலங்கள் அன்றோ என எழுந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

424

சென்று தேவர் தம்பிரான் மகிழ் கோயில் முன்பு எய்திநின்று போற்றுவார் நீள் நிதி வேண்டினார்க்கு ஈவதுஒன்றும் மற்றிலேன் உன்னடி அல்லது ஒன்று அறியேன்என்று பேரருள் வினவிய செந்தமிழ் எடுத்தார்.
சொற்பிரிப்பு
சென்று தேவர் தம் பிரான் மகிழ் கோயில் முன்பு எய்திநின்று போற்றுவார் நீள் நிதி வேண்டினார்க்கு ஈவதுஒன்றும் மற்று இலேன் உன் அடி அல்லது ஒன்று அறியேன்என்று பேரருள் வினவிய செந்தமிழ் எடுத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

425

எடுத்த வண் தமிழ்ப் பதிக நாலடியின் மேல் இரு சீர்தொடுத்த வைப்பொடு தொடர்ந்த இன்னிசையினால் துதிப்பார்மடுத்த காதலில் வள்ளலார் அடி இணை வழுத்திஅடுத்த சிந்தையால் ஆதரித்து அஞ்சலி அளித்தார்.
சொற்பிரிப்பு
எடுத்த வண்டமிழ்ப் பதிகம் நால் அடியின் மேல் இருசீர்தொடுத்த வைப்பொடு தொடர்ந்த இன் இசையினால் துதிப்பார்மடுத்த காதலில் வள்ளலார் அடி இணை வழுத்திஅடுத்த சிந்தையால் ஆதரித்து அஞ்சலி அளித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

426

நச்சி இன் தமிழ் பாடிய ஞான சம்பந்தர்இச்சையே புரிந்து அருளிய இறைவர் இன் அருளால்அச் சிறப்பு அருள் பூதம் முன் விரைந்தகன் பீடத்துஉச்சி வைத்தது பசும் பொன் ஆயிரக் கிழி ஒன்று.
சொற்பிரிப்பு
நச்சி இன் தமிழ் பாடிய ஞான சம்பந்தர்இச்சையே புரிந்தருளிய இறைவர் இன் அருளால்அச்சிறப்பு அருள் பூதம் முன் விரைந்து அகல் பீடத்துஉச்சி வைத்தது பசும்பொன் ஆயிரக்கிழி ஒன்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

427

வைத்த பூதம் அங்கு அணைந்து முன் நின்று நல் வாக்கால்உய்ந்த இக்கிழி பொன் உலவாக் கிழி உமக்குநித்தனார் அருள் செய்தது என்று உரைக்க நேர் தொழுதேஅத்தனார் திருவருள் நினைந்து தவ மேனி மேல் பணிந்தார்.
சொற்பிரிப்பு
வைத்த பூதம் அங்கு அணைந்து முன் நின்று நல்வாக்கால்உய்த்த இக்கிழி பொன் உலவாக் கிழி உமக்குநித்தனார் அருள் செய்தது என்று உரைக்க நேர் தொழுதேஅத்தனார் திரு அருள் நினைந்து அவனி மேல் பணிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

428

பணிந்து எழுந்து கை தொழுது முன் பனி மலர்ப் பீடத்துஅணைந்த ஆடகக் கிழிதலைக் கொண்டு அருமறைகள்துணிந்த வான் பொருள் தரும் பொருள் தூய வாய்மையினால்தணிந்த சிந்தை அத் தந்தையார்க்கு அளித்து உரைசெய்வார்.
சொற்பிரிப்பு
பணிந்து எழுந்து கை தொழுது முன் பனிமலர்ப் பீடத்துஅணைந்த ஆடகக் கிழிதலைக் கொண்டு அருமறைகள்துணிந்த வான்பொருள் தரும் பொருள் தூய வாய்மையினால்தணிந்த சிந்தை அத் தந்தையார்க்கு அளித்து உரை செய்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

429

ஆதி மாமறை விதியினால் ஆறு சூழ் வேணிநாதனாரை முன்னாகவே புரியும் நல் வேள்விதீது நீங்க நீர் செய்யவும் திருக் கழுமலத்துவேத வேதியர் அனைவரும் செய்யவும் மிகுமால்.
சொற்பிரிப்பு
ஆதி மாமறை விதியினால் ஆறு சூழ் வேணிநாதனாரை முன்னாகவே புரியு நல்வேள்விதீது நீங்க நீர் செய்யவும் திருக்கழுமலத்துவேத வேதியர் அனைவரும் செய்யவும் மிகுமால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

430

என்று கூறி அங்கு அவர்தமை விடுத்த பின் அவரும்நன்றும் இன்புறும் மனத்தொடும் புகலி மேல் நண்ணவென்றி ஞான சம்பந்தரும் விருப்பொடு வணங்கிமன்றல் ஆவடு துறையினில் மகிழ்ந்து இனிது இருந்தார்.
சொற்பிரிப்பு
என்று கூறி அங்கு அவர் தமை விடுத்த பின் அவரும்நன்றும் இன்புறு மனத்தொடும் புகலி மேல் நண்ணவென்றி ஞான சம்பந்தரும் விருப்பொடு வணங்கிமன்றல் ஆவடு துறையினில் மகிழ்ந்து இனிது இருந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

431

அண்ணலார் திருவாவடுதுறை அமர்ந்தாரைஉள் நிலாவிய காதலினால் பணிந்து உறைந்துமண் எலாம் உய வந்தவர் போந்து வார் சடைமேல்தெள் நிலா அணிவார் திருக் கோழம்பம் சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
அண்ணலார் திருஆவடு துறை அமர்ந்தாரைஉள் நிலாவிய காதலினால் பணிந்து உறைந்துமண் எலாம் உய வந்தவர் போந்து வார் சடைமேல்தெண் நிலா அணிவார் திருக்கோழம்பம் சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

432

கொன்றைவார் சடைமுடியரைக் கோழம்பத்து இறைஞ்சிஎன்றும் நீடிய இன்னிசைப் பதிகம் முன் இயம்பிமன்று உளார் மகிழ் வைகல் மாடக் கோயில் மருங்குசென்று சார்ந்தனர் திருவளர் சிரபுரச் செல்வர்.
சொற்பிரிப்பு
கொன்றை வார் சடைமுடியரைக் கோழம்பத்து இறைஞ்சிஎன்றும் நீடிய இன்னிசைப் பதிகம் முன் இயம்பிமன்றுளார் மகிழ் வைகல் மாடக்கோயில் மருங்குசென்று சார்ந்தனர் திருவளர் சிரபுரச் செல்வர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

433

வைகல் நீடு மாடக் கோயில் மன்னிய மருந்தைக்கைகள் அஞ்சலி கொண்டு தாழ்ந்தெழுந்து கண் அருவிசெய்ய இன்னிசைச் செந்தமிழ் மாலைகள் மொழிந்துநையும் உள்ளத்தராய்த்திரு நல்லத்தில் நண்ணி.
சொற்பிரிப்பு
வைகல் நீடு மாடக்கோயில் மன்னிய மருந்தைக்கைகள் அஞ்சலி கொண்டு தாழ்ந்து எழுந்து கண் அருவிசெய்ய இன்னிசைச் செந்தமிழ் மாலைகள் மொழிந்துநையும் உள்ளத்தராய்த் திருநல்லத்தில் நண்ணி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

434

நிலவு மாளிகைத் திரு நல்ல நீடு மாமணியைஇலகு சேவடி இறைஞ்சி இன் தமிழ் கொடு துதித்துப்பலவும் ஈசர் தம் திருப்பதி பணிந்து செல்பவர் தாம்அலை புனல் திருவழுந்தூர் மாடக் கோயில் அடைந்தார்.
சொற்பிரிப்பு
நிலவு மாளிகைத் திருநல்லம் நீடு மாமணியைஇலகு சேவடி இறைஞ்சி இன் தமிழ் கொடு துதித்துப்பலவும் ஈசர் தம் திருப்பதி பணிந்து செல்பவர் தாம்அலைபுனல் திரு அழுந்தூர் மாடக்கோயில் அடைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

435

மன்னுமாடம் மகிழ்ந்த வான் பொருளினை வணங்கிப்பன்னு பாடலில் பதிக இன்னிசை கொடு பரவிப்பொன்னி மா நதிக் கரையினில் மீண்டு போந்து அணைந்துசொன்னவாறு அறிவார் தமைத் துருத்தியில் தொழுதார்.
சொற்பிரிப்பு
மன்னு மாமடம் மகிழ்ந்த வான் பொருளினை வணங்கிப்பன்னு பாடலில் பதிக இன் இசை கொடு பரவிப்பொன்னி மாநதிக் கரையினில் மீண்டு போந்து அணைந்துசொன்னவாறு அறிவார் தமைத் துருத்தியில் தொழுதார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

436

திரைத் தடம் புனல் பொன்னி சூழ் திருத்துருத்தியினில்வரைத்தலைப் பசும் பொன் எனும் வண் தமிழ்ப்பதிகம்உரைத்து மெய்யுறப் பணிந்து போந்து உலவும் அந்நதியின்கரைக் கண் மூவலூர்க் கண் நுதலார் கழல் பணிந்தார்.
சொற்பிரிப்பு
திரைத் தடம்புனல் பொன்னி சூழ் திருத்துருத்தியினில்வரைத்தலைப் பசும் பொன் எனும் வண்தமிழ்ப் பதிகம்உரைத்து மெய் உறப் பணிந்து போந்து உலவும் அந்நதியின்கரைக்கண் மூவலூர்க் கண் நுதலார் கழல் பணிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

437

மூவலூர் உறை முதல்வரைப் பரவிய மொழியால்மேவு காதலில் ஏத்தியே விருப்பொடும் போந்துபூ அலம்பு தண் புனல் பணைப் புகலியார் தலைவர்வாவி சூழ் திரு மயிலாடு துறையினில் வந்தார்.
சொற்பிரிப்பு
மூவலூர் உறை முதல்வரைப் பரவிய மொழியால்மேவு காதலில் ஏத்தியே விருப்பொடும் போந்துபூ அலம்பு தண் புனல் பணைப் புகலியர் தலைவர்வாவி சூழ் திருமயிலாடு துறையினில் வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

438

மல்கு தண்டலை மயிலாடு துறையினில் மருவும்செல்வ வேதியர் தொண்டரொடு எதிர் கொளச் சென்றுகொல்லை மான்மறிக் கையரைக் கோயில் புக்கு இறைஞ்சிஎல்லை இல்லதோர் இன்பம் முன் பெருகிட எழுந்தார்.
சொற்பிரிப்பு
மல்கு தண்டலை மயிலாடு துறையினில் மருவும்செல்வ வேதியர் தொண்டரோடு எதிர்கொளச் சென்றுகொல்லை மான் மறிக் கையரைக் கோயில் புக்கு இறைஞ்சிஎல்லை இல்லது ஓர் இன்பம் முன் பெருகிட எழுந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

439

உள்ளம் இன்புற உணர்வுறும் பரிவு கொண்டு உருகிவெள்ளம் தாங்கிய சடையரை விளங்கு சொல் பதிகத்தெள்ளும் இன்னிசைத் திளைப்பொடும் புறத்து அணைந்தருளிவள்ளலார் மற்ற வளம் பதி மருவுதல் மகிழ்ந்தார்.
சொற்பிரிப்பு
உள்ளம் இன்புற உணர்வுறும் பரிவுகொண்டு உருகிவெள்ளம் தாங்கிய சடையரை விளங்கு சொல் பதிகத்தெள்ளும் இன்னிசைத் திளைப் பொடும் புறத்தணைந் தருளிவள்ளலார் மற்ற வளம்பதி மருவுதல் மகிழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

440

அத்திருப்பதி அகன்று போய் அணிகிளர் சூலக்கைத்தலப் படை வீரர் செம் பொன் பள்ளி கருதிமெய்த்த காதலில் விள நகர் விடையவர் பாதம்பத்தர் தம்முடன் பணிந்து இசைப் பதிகம் முன் பகர்ந்தார்.
சொற்பிரிப்பு
அத்திருப்பதி அகன்று போய் அணிகிளர் சூலம்கைத் தலப்படை வீரர் செம்பொன்பள்ளி கருதிமெய்த்த காதலில் விளநகர் விடையவர் பாதம்பத்தர் தம்முடன் பணிந்து இசைப் பதிகம் முன் பகர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

441

பாடும் அப்பதி பணிந்து போய்ப் பறியலூர் மேவும்தோடுலா மலர் இதழியும் தும்பையும் அடம்பும்காடு கொண்ட செஞ்சடைமுடிக் கடவுளர் கருதுநீடு வீரட்டம் பணிந்தனர் நிறை மறை வேந்தர்.
சொற்பிரிப்பு
பாடும் அப்பதி பணிந்து போய்ப் பறியலூர் மேவும்தோடுலா மலர் இதழியும் தும்பையும் அடம்பும்காடு கொண்ட செஞ்சடை முடிக் கடவுளர் கருதுநீடு வீரட்டம் பணிந்தனர் நிறைமறை வேந்தர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

442

பரமர் தம் திருப் பறியலூர் வீரட்டம் பரவிவிரவு காதலின் வேலையின் கரையினை மேவிஅரவு அணிந்தவர் பதி பல அணைந்து முன் வணங்கிச்சிரபுரத்தவர் திருத்தொண்டர் எதிர் கொளச் செல்வார்.
சொற்பிரிப்பு
பரமர் தம் திருப்பறியலூர் வீரட்டம் பரவிவிரவு காதலின் வேலையின் கரையினை மேவிஅரவு அணிந்தவர் பதிபல அணைந்து முன் வணங்கிச்சிரபுரத்தவர் திருத்தொண்டர் எதிர்கொளச் செல்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

443

அடியவர்கள் களி சிறப்பத் திருவேட்டக்குடி பணிந்து அங்கு அலைவாய்ப் போகிக்கடி கமழும் மலர்ப்பழனக் கழிநாட்டு அகன் பதிகள் கலந்து நீங்கிக்கொடி மதில் சூழ் தரும புரம் குறுகினார் குண்டர் சாக்கியர் தம் கொள்கைபடி அறியப் பழுது என்றே மொழிந்து உய்யும் நெறி காட்டும் பவள வாயர்.
சொற்பிரிப்பு
அடியவர்கள் களிசிறப்பத் திருவேட்டக்குடி பணிந்து அங்கு அலைவாய்ப் போகிக்கடி கமழும் மலர்ப் பழனக் கழனி நாட்டு அகன்பதிகள் கலந்து நீங்கிக்கொடிமதில் சூழ் தருமபுரம் குறுகினார் குண்டர் சாக்கியர் தம் கொள்கைபடி அறியப் பழுது என்றே மொழிந்து உய்யும் நெறிகா ட்டும் பவள வாயார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

444

தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர் பிறப்பிடமாம் அதனால் சாரவரும் அவர் தம் சுற்றத்தார் வந்து எதிர் கொண்டு அடி வணங்கி வாழ்த்தக் கண்டுபெருமை உடைப் பெரும்பாணர் அவர்க்கு உரைப்பார் பிள்ளையார் அருளிச் செய்தஅருமை உடைப் பதிகம் தாம் யாழினால் பயிற்றும் பேறு அருளிச் செய்தார்.
சொற்பிரிப்பு
தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயார் பிறப்பு இடமாம் அதனால் சாரவரும் அவர் தம் சுற்றத்தார் வந்து எதிர் கொண்டு அடி வணங்கி வாழ்த்தக் கண்டுபெருமை உடைப் பெரும்பாணர் அவர்க்கு உரைப்பார் பிள்ளையார் அருளிச் செய்தஅருமை உடைப் பதிகம் தாம் யாழினால் பயிற்றும் பேறு அருளிச் செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

445

கிளைஞரும் மற்று அது கேட்டுக் கெழுவு திரு பதிகத்திற் கிளர்ந்த ஓசைஅளவு பெறக் கருவியில் நீர் அமைத்து இயற்றும் அதனாலே அகிலம் எல்லாம்வளர இசை நிகழ்வது என விளம்புதலும் வளம் புகலி மன்னர் பாதம்உளம் நடுங்கிப் பணிந்து திருநீல கண்டப் பெரும்பாணர் உணர்த்து கின்றார்.
சொற்பிரிப்பு
கிளைஞரும் மற்று அது கேட்டுக் கெழுவு திருப்பதிகத்தில் கிளர்ந்த ஓசைஅளவு பெறக் கருவிகள் நீர் அமைத்து இயற்றும் அதனாலே அகிலம் எல்லாம்வளர இசை நிகழ்வது என விளம்புதலும் வளம்புகலி மன்னர் பாதம்உளம் நடுங்கிப் பணிந்து திருநீல கண்டப் பெரும்பாணர் உணர்த்துகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

446

அலகில் திருப்பதிக இசை அளவு படா வகை இவர்கள் அன்றி ஏயும்உலகில் உளோரும் தெரிந்து அங்கு உண்மையினை அறிந்து உய்ய உணர்த்தும் பண்பால்பலர் புகழும் திருப்பதிகம் பாடி அருளப் பெற்றால் பண்பு நீடிஇலகும் இசை யாழின்கண் அடங்காமையான் காட்டப் பெறுவன் என்றார்.
சொற்பிரிப்பு
அலகில் திருப்பதிக இசை அளவுபடா வகை இவர்கள் அன்றியேயும்உலகில் உளோரும் தெரிந்தங்கு உண்மையினை அறிந்துய்ய உணர்த்தும் பண்பால்பலர் புகழும் திருப்பதிகம் பாடி அருளப் பெற்றால் பண்பு நீடிஇலகும் இசை யாழின் கண் அடங்காமை யான் காட்டப் பெறுவன் என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

447

வேத நெறி வளர்ப்பவரும் விடையவர் முன் தொழுது திருப்பதிகத்து உண்மைபூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும் நிலத்த நூல் புகன்ற பேதநாத இசை முயற்சிகளால் அடங்காத வகை காட்ட நாட்டுகின்றார்மாதர் மடப்பிடி பாடி வணங்கினார் வானவரும் வணங்கி ஏத்த.
சொற்பிரிப்பு
வேதநெறி வளர்ப்பவரும் விடையவர் முன் தொழுது திருப்பதிகத்து உண்மைபூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும் நிலத்து நூல் புகன்ற வேதநாத இசை முயற்சிகளால் அடங்காத வகை காட்ட நாட்டுகின்றார்மாதர் மடப் பிடி பாடி வணங்கினார் வானவரும் வணங்கி ஏத்த.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

448

வண் புகலி வேதியனார் மாதர் மடப்பிடி எடுத்து வனப்பில் பாடிப்பண் பயிலும் திருக்கடைக் காப்பு சாத்த அணைந்து பெரும் பாணனார் தாம்நண்புடை யாழ்க் கருவியினில் முன்பு போல் கைக்கொண்டு நடத்தப்புக்கார்க்குஎண் பெருகும் அப் பதிகத்து இசை நரம்பில் இட அடங்கிற்று இல்லை அன்றே.
சொற்பிரிப்பு
வண் புகலி வேதியனார் மாதர் மடப் பிடி எடுத்து வனப்பில் பாடிபண் பயிலும் திருக்கடைக்காப்புச் சாத்த அணைந்து பெரும் பாணனார் தாம்நண்புடை யாழ்க் கருவியினில் முன்பு போல் கைக்கொண்டு நடத்தப் புக்கார்க்குஎண் பெருகும் அப்பதிகத்து இசை நரம்பில் இட அடங்கிற்று இல்லை அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

449

அப்பொழுது திருநீல கண்ட இசைப் பெரும்பாணர் அதனை விட்டுமெய்ப் பயமும் பரிவும் உறப் பிள்ளையார் கழல் இணை வீழ்ந்தெழுந்து நோக்கிஇப்பெரியோர் அருள் செய்த திருப்பதிகத்து இசை யாழில் ஏற்பன் என்னச்செப்பியது இக் கருவியை நான் தொடுதலின் நன்றோ என்று தெளிந்து செய்வார்.
சொற்பிரிப்பு
அப்பொழுது திருநீல கண்ட இசைப் பெரும்பாணர் அதனை விட்டுமெய்ப்பயமும் பரிவும் உறப் பிள்ளையார் கழல் இணை வீழ்ந்து எழுந்து நோக்கிஇப்பெரியோர் அருள் செய்த திருப்பதிகத்து இசை யாழில் ஏற்பன் என்னச்செப்பியது இக்கருவியை நான் தொடுதலின் அன்றோ என்று தெளிந்து செய்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

450

வீக்கு நரம்பு உடையாழினால் விளைந்தது இது என்று அங்கு அதனைப் போக்கஓக்குதலும் தடுத்து அருளி ஐயரே உற்ற இசை அளவினால் நீர்ஆக்கிய இக்கருவியினைத் தாரும் என வாங்கிக் கொண்டு அவனி செய்தபாக்கியத்தின் மெய் வடிவாம் பால் அறா வாயர் பணித்து அருளுகின்றார்.
சொற்பிரிப்பு
வீக்கு நரம்பு உடை யாழினால் விளைந்தது இது என்றங்கு அதனைப் போக்கஓக்குதலும் தடுத்தருளி ஐயரே உற்ற இசை அளவினால் நீர்ஆக்கிய இக்கருவியினைத் தாரும் என வாங்கிக் கொண்டு அவனி செய்தபாக்கியத்தின் மெய் வடிவாம் பாலறா வாயர் பணித்து அருளுகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

451

ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும் அதென் ஆள் உடையாள் உடனே கூடச்செய்ய சடையார் அளித்த திருவருளின் பெருமை எலாம் தெரிய நம்பால்எய்திய இக் கருவியினில் அளவு படுமோ நம் தம் இயல்புக்கு ஏற்பவையகத்தோர் அறிவுற இக்கருவி அளவையின் இயற்றல் வழக்கே என்றார்.
சொற்பிரிப்பு
ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும் அது என் ஆள்உடையாள் உடனே கூடச்செய்ய சடையார் அளித்த திருஅருளின் பெருமை எலாம் தெரிய நம்பால்எய்திய இக்கருவியினில் அளவு படுமோ நந்தம் இயல்புக்கு ஏற்பவையகத்தோர் அறிவுற இக் கருவி அளவையின் இயற்றல் வழக்கே என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

452

சிந்தையால் அளவு படா இசைப் பெருமை செயல் அளவில் எய்துமோ நீர்இந்த யாழினைக் கொண்டே இறைவர் திருப் பதிக இசை இதனில் எய்தவந்தவாறே பாடி வாசிப்பீர் எனக் கொடுப்பப் புகலி மன்னர்தந்த யாழினைத் தொழுது கைக் கொண்டு பெரும் பாணர் தலை மேல் கொண்டார்.
சொற்பிரிப்பு
சிந்தையால் அளவுபடா இசைப்பெருமை செயல் அளவில் எய்துமோ நீர்இந்த யாழினைக் கொண்டே இறைவர் திருப்பதிக இசை இதனில் எய்தவந்தவாறே பாடி வாசிப்பீர் எனக் கொடுப்பப் புகலி மன்னர்தந்த யாழினைத் தொழுது கைக்கொண்டு பெரும்பாணர் தலைமேல் கொண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

453

அணைவுறும் அக் கிளைஞருடன் பெரும் பாணர் ஆளுடைய பிள்ளையார் தம்துணை மலர்ச் சேவடி பணிந்து துதித்தருளத் தோணிபுரத் தோன்றலாரும்இணையில் பெருஞ் சிறப்பருளித் தொண்டருடன் அப்பதியில் இனிது மேவிப்பணை நெடும் கை மதயானை உரித்தவர் தம் பதி பிறவும் பணியச் செல்வார்.
சொற்பிரிப்பு
அணைவுறும் அக்கிளைஞர் உடன் பெரும்பாணர் ஆளுடைய பிள்ளையார் தம்துணைமலர்ச் சேவடி பணிந்து துதித்தருளத் தோணிபுரத் தோன்றலாரும்இணையில் பெரும் சிறப்பருளித் தொண்டருடன் அப்பதியில் இனிது மேவிப்பணைநெடும் கை மதயானை உரித்தவர் தம் பதி பிறவும் பணியச் செல்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

454

பங்கயப் பாசடைத் தடம் சூழ் பழன நாட்டு அகன் பதிகள் பலவும் நண்ணிமங்கை ஒரு பாகத்தார் மகிழ் கோயில் எனைப் பலவும் வணங்கிப் போற்றித்தங்கிசை யாழ்ப் பெரும் பாணருடன் மறையோர் தலைவனார் சென்று சார்ந்தார்செங்கை மான் மழு ஏந்தும் சின விடையார் அமர்ந்து அருளும் திரு நள்ளாறு.
சொற்பிரிப்பு
பங்கயப் பாசடைத் தடம் சூழ் பழன நாட்டு அகன் பதிகள் பலவும் நண்ணிமங்கையொரு பாகத்தார் மகிழ் கோயில் எனைப் பலவும் வணங்கிப் போற்றித்தங்கிசை யாழ்ப் பெரும்பாணர் உடன் மறையோர் தலைவனார் சென்று சார்ந்தார்செங்கை மான் மழு ஏந்தும் சினவிடையார் அமர்ந்து அருளும் திருநள்ளாறு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

455

நள்ளாற்றில் எழுந்தருள நம்பர் திருத்தொண்டர் குழாம் நயந்து சென்றுகொள்ளாற்றில் எதிர் கொண்டு குலவி உடன் சூழ்ந்து அணையக் குறுகிக் கங்கைத்தெள்ளாற்று வேணியர் தம் திருவளர் கோபுரம் இறைஞ்சிச் செல்வக் கோயில்உள்ளாற்ற வலம் கொண்டு திருமுன்பு தாழ்ந்து எழுந்தார் உணர்வின் மிக்கார்.
சொற்பிரிப்பு
நள்ளாற்றில் எழுந்தருள நம்பர் திருத்தொண்டர் குழாம் நயந்து சென்றுகொள்ளாற்றில் எதிர்கொண்டு குலவி உடன் சூழ்ந்து அணையக் குறுகிக் கங்கைத்தெள்ளாற்று வேணியர் தம் திருவளர் கோபுரம் இறைஞ்சிச் செல்வக் கோயில்உள்ளாற்ற வலம்கொண்டு திருமுன்பு தாழ்ந்து எழுந்தார் உணர்வின் மிக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

456

உருகிய அன்புறு காதல் உள் உருகி நனை ஈரம் பெற்றால் போலமருவு திருமேனி எலாம் முகிழ்த்து எழுந்த மயிர்ப் புளகம் வளர்க்கும் நீரால்அருவி சொரி திரு நயனத்து ஆனந்த வெள்ளம் இழிந்து அலைய நின்றுபொருவில் பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள் என்று எடுத்துப் போற்றி.
சொற்பிரிப்பு
உருகிய அன்பு உறு காதல் உள் உருகி நனை ஈரம் பெற்றால் போலமருவு திருமேனி எலாம் முகிழ்த்து எழுந்த மயிர்ப்புளகம் வளர்க்கு நீராய்அருவிசொரி திருநயனத்து ஆனந்த வெள்ளம் இழிந்து அலைய நின்றுபொருவில் பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள் என்று எடுத்துப் போற்றி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

457

யாழ்நரம்பில் ஆர இயல் இசை கூடப் பாடியே எண்ணில் கற்பச்சேணளவு பட ஓங்கும் திருக் கடைக் காப்புச் சாத்திச் செங்கண் நாகப்பூண் அகலத்தவர் பாதம் போற்றி இசைத்துப் புறத்து அணைந்து புவனம் ஏத்தும்பாணனார் யாழில் இடப் பாலறா வாயர் அருள் பணித்த போது.
சொற்பிரிப்பு
யாழ்நரம்பில் ஆர இயல் இசை கூடப் பாடியே எண்ணில் கற்பச்சேண் அளவுபட ஓங்கும் திருக்கடைக் காப்புச் சாத்திச் செங்கண் நாகப்பூண் அகலத்தவர் பாதம் போற்றிசைத்துப் புறத்து அணைந்து புவனம் ஏத்தும்பாணனார் யாழில் இடப் பாலறாவாயர் அருள் பணித்த போது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

458

பிள்ளையார் திருத்தாளம் கொடு பாடப் பின்பு பெரும் பாணனார் தாம்தெள் அமுத இன்னிசையின் தேம் பொழி தந்திரி யாழைச் சிறக்க வீக்கிக்கொள்ள இடும் பொழுதின் கண் குவலயத்தோர் களிகூரக் குலவு சண்பைவள்ளலார் திரு உள்ளம் மகிழ்ந்து திருத் தொண்டருடன் மருவும் காலை.
சொற்பிரிப்பு
பிள்ளையார் திருத்தாளம் கொடு பாடப் பின்பு பெரும் பாணணார் தாம்தெள் அமுத இன்னிசையின் தேம்பொழி தந்திரி யாழைச் சிறக்க வீக்கிக்கொள்ள இடும் பொழுதின்கண் குவலயத் தோர் களி கூரக் குலவு சண்பைவள்ளலார் திருஉள்ளம் மகிழ்ந்து திருத் தொண்டருடன் மருவும் காலை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

459

மன்னு திரு நள்ளாற்று மருந்தை வணங்கிப் போந்து வாச நன்னீர்ப்பொன்னி வளம் தரு நாட்டுப் புறம்பு அணை சூழ் திருப்பதிகள் பலவும் போற்றிச்செந் நெல் வயல் செங்கமல முகம் மலரும் திருச் சாத்த மங்கை மூதூர்தன்னில் எழுந்தருளினார் சைவ சிகா மணியார் மெய்த் தவத்தோர் சூழ.
சொற்பிரிப்பு
மன்னு திருநள்ளாற்று மருந்தை வணங்கிப் போந்து வாச நன் நீர்ப்பொன்னிவளம் தருநாட்டுப் புறம்பணை சூழ் திருப்பதிகள் பலவும் போற்றிச்செந்நெல்வயல் செங்கமலம் முகம் மலரும் திருச்சாத்த மங்கை மூதூர்தன்னில் எழுந்தருளினார் சைவ சிகா மணியார் மெய்த் தவத்தோர் சூழ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

460

நிறை செல்வத் திருச்சாத்த மங்கையினில் நீல நக்கர் தாமும் சைவமறையவனார் எழுந்தருளும் படி கேட்டு வாழ்ந்து வழி விளக்கி எங்கும்துறை மலி தோரணம் கதலி கமுகு நிறை குடம் தூப தீபம் ஆக்கிமுறைமையில் வந்து எதிர் கொள்ள உடன் அணைந்து முதல்வனார் கோயில் சார்ந்தார்.
சொற்பிரிப்பு
நிறை செல்வத் திருச்சாத்த மங்கையினில் நீலநக்கர் தாமும் சைவமறையவனார் எழுந்தருளும் படிகேட்டு வாழ்ந்து வழி விளக்கி எங்கும்துறைமலி தோரணம் கதலி கமுகு நிறை குடம் தூபம் தீபம் ஆக்கிமுறைமையில் வந்து எதிர்கொள்ள உடன் அணைந்து முதல்வனார் கோயில் சார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

461

அயவந்தி அமர்ந்து அருளும் அங்கணர் தம் கோயில் மருங்கு அணைந்து வானோர்உயவந்தித்து எழு முன்றில் புடை வலம் கொண்டு உள்புக்கு ஆறு ஒழுகும் செக்கர்மய வந்தி மதிச் சடையார் முன் தாழ்ந்து மாதவம் இவ் வையம் எல்லாம்செய வந்த அந்தணனார் செங்கைமேல் குவித்து எழுந்து திருமுன் நின்றார்.
சொற்பிரிப்பு
அயவந்தி அமர்ந்தருளும் அங்கணர் தம் கோயில் மருங்கு அணைந்து வானோர்உய வந்தித்து எழு முன்றில் புடை வலம் கொண்டு உள் புக்கு ஆறு ஒழுகும் செக்கர்மய அந்தி மதிச்சடையார் முன் தாழ்ந்து மாதவம் இவவையம் எல்லாம்செய வந்த அந்தணனார் செங்கைமேல் குவித்து எழுந்து திருமுன் நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

462

போற்றி இசைக்கும் பாடலினால் பொங்கி எழும் ஆதரவு பொழிந்து விம்மஏற்றின் மிசை இருப்பவர் தம் எதிர் நின்று துதித்துப் போந்து எல்லை இல்லாநீற்று நெறி மறையவனார் நீல நக்கர் மனையில் எழுந்தருளி அன்பால்ஆற்றும் விருந்தவர் அமைப்ப அன்பருடன் இன்புற்று அங்கு அமுது செய்தார்.
சொற்பிரிப்பு
போற்றிசைக்கும் பாடலினால் பொங்கி எழும் ஆதரவு பொழிந்து விம்மஏற்றின்மிசை இருப்பவர் தம் எதிர்நின்று துதித்துப் போந்து எல்லை இல்லாநீற்று நெறி மறையவனார் நீலநக்கர் மனையில் எழுந்து அருளி அன்பால்ஆற்றும் விருந்து அவர் அமைப்ப அன்பருடன் இன்புற்று அங்கு அமுது செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

463

நீடு திரு நீல நக்கர் நெடு மனையில் விருந்து அமுது செய்து நீர்மைப்பாடும் யாழ்ப் பெரும் பாணரும் தங்க அங்கு இரவு பள்ளி மேவிஆடும் அவர் அயவந்தி பணிவதனுக்கு அன்பருடன் அணைந்து சென்றுநாடிய நண்புடை நீல நக்க அடிகளுடன் நாதர் கழலில் தாழ்ந்து.
சொற்பிரிப்பு
நீடு திருநீலநக்கர் நெடுமனையில் விருந்து அமுது செய்து நீர்மைப்பாடும் யாழ்ப் பெரும்பாணரும் தங்க அங்கு இரவு பள்ளி மேவிஆடும் அவர் அயவந்தி பணிவதனுக்கு அன்பருடன் அணைந்து சென்றுநாடிய நண்பு உடை நீல நக்கடிகள் உடன் நாதர் கழலில் தாழ்ந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

464

கோதிலா ஆரமுதைக் கோமளக் கொம்புடன் கூடக் கும்பிட்டு ஏத்திஆதியாம் மறைப் பொருளால் அரும் தமிழின் திருப்பதிகம் அருளிச் செய்வார்நீதியால் நிகழ்கின்ற நீல நக்கர் தம் பெரும் சீர் நிகழ வைத்துப்பூதி சாதனர் பரவும் புனித இயல் இசைப் பதிகம் போற்றி செய்தார்.
சொற்பிரிப்பு
கோதிலா ஆர்அமுதைக் கோமளக் கொம்பு உடன் கூடக் கும்பிட்டு ஏத்திஆதியாம் மறைப்பொருளால் அருந்தமிழின் திருப்பதிகம் அருளிச் செய்வார்நீதியால் நிகழ்கின்ற நீலநக்கர் தம் பெருஞ்சீர் நிகழ வைத்துப்பூதி சாதனர் பரவும் புனித இயல் இசைப்பதிகம் போற்றி செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

465

பரவிய காதலில் பணிந்து பாலறா வாயர் புறத்து அணைந்து பண்புவிரவிய நண்பு உடை அடிகள் விருப்பு உறு காதலில் தங்கி மேவும் நாளில்அரவு அணிந்தார் பதி பிறவும் பணிய எழும் ஆதரவால் அணைந்து செல்வார்உரவு மனக் கருத்து ஒன்றாம் உள்ளம் உடையவர்க்கு விடை உவந்து நல்கி.
சொற்பிரிப்பு
பரவிய காதலில் பணிந்து பாலறா வாயர் புறத்து அணைந்து பண்புவிரவிய நண்புடை அடிகள் விருப்புறு காதலில் தங்கி மேவும் நாளில்அரவு அணிந்தார் பதி பிறவும் பணிய எழும் ஆதரவால் அணைந்து செல்வார்உரவு மனக் கருத்து ஒன்றாம் உள்ளம் உடை அவர்க்கு விடை உவந்து நல்கி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

466

மற்றவர்தம் பெரும் கேண்மை மகிழ்ந்து கொண்டு மால் அயனுக்கு அரிய பிரான் மருவு தானம்பற்பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப் பரமர் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தக்கற்றவர் வாழ் கடல் நாகைக் காரோணத்துக் கண் நுதலைக் கைதொழுது கலந்த ஓசைச்சொற்றமிழ் மாலைகள் பாடிச் சிலநாள் வைகித் தொழுதகன்றார் தோணிபுரத் தோன்றலார் தாம்.
சொற்பிரிப்பு
மற்றவர் தம் பெரும்கேண்மை மகிழ்ந்து கொண்டு மால் அயனுக்கு அரியபிரான் மருவும் தானம்பற்பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப் பரமர் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தக்கற்றவர் வாழ் கடல்நாகைக் காரோணத்துக் கண்நுதலைக் கைதொழுது கலந்த ஓசைச்சொற்றமிழ் மாலைகள் பாடிச் சிலநாள் வைகித் தொழுது அகன்றார் தோணிபுரத் தோன்றலார் தாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

467

கழிக் கானல் மருங்கு அணையும் கடல் நாகை அது நீங்கிக் கங்கையாற்றுச்சுழிக் கானல் வேணியர் தம் பதிபலவும் பரவிப் போய்த் தோகைமார் தம்விழிக் காவி மலர் பழனக் கீழ் வேளூர் விமலர் கழல் வணங்கி ஏத்திமொழிக் காதல் தமிழ் மாலை புனைந்தருளி அங்கு அகன்றார் மூதூர் நின்றும்.
சொற்பிரிப்பு
கழிக்கானல் மருங்கு அணையும் கடல் நாகை அது நீங்கிக் கங்கை ஆற்றுச்சுழிக்கானல் வேணியர் தம் பதி பலவும் பரவிப் போய்த் தோகைமார் தம்விழிக்காவி மலர் பழனக் கீழ்வேளூர் விமலர் கழல் வணங்கி ஏத்திமொழிக் காதல் தமிழ்மாலை புனைந்தருளி அங்கு அகன்றார் மூதூர் நின்றும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

468

அருகு அணையும் திருப்பதிகள் ஆனவெலாம் அங்கணரைப் பணிந்து போற்றிப்பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார் எழுந்தருளும் பெருமை கேட்டுத்திரு மருவு செங் காட்டங் குடி நின்றும் சிறுத் தொண்டரோடிச் சென்று அங்குஉருகு மனம் களி சிறப்ப எதிர் கொண்டு தம் பதியுள் கொண்டு புக்கார்.
சொற்பிரிப்பு
அருகு அணையும் திருப்பதிகள் ஆன எலாம் அங்கணரைப் பணிந்து போற்றிப்பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார் எழுந்தருளும் பெருமை கேட்டுத்திருமருவு செங்காட்டங் குடி நின்றும் சிறுத்தொண்டர் ஓடிச் சென்று அங்குஉருகுமனம் களி சிறப்ப எதிர்கொண்டு தம் பதி உள் கொண்டு புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

469

சிறுத் தொண்டருடன் கூடச் செங்காட்டங் குடியில் எழுந்தருளிச் சீர்த்திநிறுத்த எண் திக்கிலும் நிலவும் தொண்டர் அவர் நண்பு அமர்ந்து நீல கண்டம்பொறுத்து அண்டர் உயக் கொண்டார் கணபதீச் சரத்தின் கண் போகம் எல்லாம்வெறுத்து உண்டிப் பிச்சை நுகர் மெய்த் தொண்டருடன் அணைந்தார் வேதகீதர்.
சொற்பிரிப்பு
சிறுத்தொண்டர் உடன் கூடச் செங்காட்டங் குடியில் எழுந்தருளிச் சீர்த்திநிறுத்து எண் திக்கிலும் நிகழும் தொண்டர் அவர் நண்பு அமர்ந்து நீல கண்டம்பொறுத்து அண்டர் உயக்கொண்டார் கணபதீச் சரத்தின்கண் போகம் எல்லாம்வெறுத்து உண்டிப் பிச்சை நுகர் மெய்த் தொண்டர் உடன்அணைந்தார் வேத கீதர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

470

அங்கு அணைந்து கோயில் வலம் கொண்டருளி அரவு அணிந்தார் அடிக் கீழ் வீழ்ந்துசெங்கண் அருவிகள் பொழியத் திருமுன்பு பணிந்து எழுந்து செங்கை கூப்பித்தங்கள் பெரும் தகையாரைச் சிறுத் தொண்டர் தொழ இருந்த தன்மை போற்றிப்பொங்கி எழும் இசைபாடிப் போற்றி இசைத்து அங்கு ஒரு பரிசு புறம்பு போந்தார்.
சொற்பிரிப்பு
அங்கு அணைந்து கோயில் வலம் கொண்டருளி அரவு அணிந்தார் அடிக்கீழ் வீழ்ந்துசெங்கண் அருவிகள் பொழியத் திருமுன்பு பணிந்து எழுந்து செங்கை கூப்பித்தங்கள் பெருந்தகையாரைச் சிறுத்தொண்டர் தொழ இருந்த தன்மை போற்றிப்பொங்கி எழும் இசைபாடிப் போற்றிசைத்து அங்கு ஒருபரிசு புறம்பு போந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

471

போந்து மா மாத்தியர் தம் போர் ஏற்றின் திருமனையில் புகுந்து சிந்தைவாய்ந்த மாதவர் அவர் தாம் மகிழ்ந்தருள அமர்ந்தருளி மதில்கள் மூன்றும்காய்ந்த மால் விடையார் தம் கணபதீச் சரம் பரவு காதல் கூரஏந்து நூல் அணி மார்பர் இன்புற்று அங்கு அன்பருடன் இருந்த நாளில்.
சொற்பிரிப்பு
போந்து மாமாத்திரர் தம் போர் ஏற்றின் திருமனையில் புகுந்து சிந்தைவாய்ந்த மாதவர் அவர் தாம் மகிழ்ந்தருள அமர்ந்தருளி மதில்கள் மூன்றும்காய்ந்த மால் விடையார் தம் கணபதீச் சரம் பரவு காதல் கூரஏந்து நூல் அணிமார்பர் இன்புற்று அங்கு அன்பருடன் இருந்த நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

472

திருமருகல் நகரின் கண் எழுந்தருளித் திங்களுடன் செங்கட் பாம்புமருவு நெடும் சடைமவுலி மாணிக்க வண்ணர் கழல் வணங்கிப் போற்றிஉருகிய அன்புறு காதல் உள் அலைப்பத் தெள்ளும் இசையுடனே கூடப்பெருகு தமிழ்த் தொடை சாத்தி அங்கு இருந்தார் பெரும் புகலிப் பிள்ளையார்தாம்.
சொற்பிரிப்பு
திருமருகல் நகரின்கண் எழுந்தருளித் திங்கள் உடன் செங்கண் பாம்புமருவு நெடும் சடை மவுலி மாணிக்க வண்ணர் கழல் வணங்கிப் போற்றிஉருகிய அன்பு உறுகாதல் உள் அலைப்பத் தெள்ளும் இசை உடனே கூடப்பெருகுதமிழ்த் தொடைசாத்தி அங்கு இருந்தார் பெரும்புகலிப் பிள்ளையார் தாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

473

அந் நாளில் ஒரு வணிகன் பதிகன் ஆகி அணைவான் ஓர் கன்னியையும் உடனே கொண்டுபொன்னார் மேருச் சிலையார் கோயில் மாடு புறத்தில் ஒரு மடத்து இரவு துயிலும் போதுமின்னார் வெள் எயிற்று அரவு கவ்வுதலும் கிளர்ந்த விட வேகம் கடிது தலை மீக் கொண்டு ஏறத்தன் ஆவி நீங்கும் அவன் தன்மை கண்டு சாயல் இளம் கன்னி நிலை தளர்ந்து சோர்வாள்.
சொற்பிரிப்பு
அந்நாளில் ஒரு வணிகன் பதிகன் ஆகி அணைவான் ஓர் கன்னியையும் உடனே கொண்டுபொன்னார் மேருச்சிலையார் கோயில் மாடு புறத்தில் ஒரு மடத்து இரவு துயிலும் போதுமின்னார் வெள்எயிற்று அரவு கவ்வுதலும் கிளர்ந்த விடவேகம் கடிது தலை மீக்கொண்டு ஏறத்தன் ஆவி நீங்கும் அவன் தன்மை கண்டு சாயல் இளம் கன்னி நிலை தளர்ந்து சோர்வாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

474

வாள் அரவு தீண்டவும் தான் தீண்ட கில்லாள் மறு மாற்றம் மற்று ஒருவர் கொடுப்பார் இன்றிஆளரியேறு அனையானை அணுக வீழ்ந்தே அசைந்த மலர்க்கொடி போல்வாள் அரற்றும் போதுகோள் உருமும் புள் அரசும் அனையார் எல்லாக் கொள்கையினாலும் தீர்க்கக் குறையாதாகநீள் இரவு புலர் காலை மாலை வாச நெறி குழலாள் நெடிது அயர்ந்து புலம்புகின்றாள்.
சொற்பிரிப்பு
வாளரவு தீண்டவும் தான் தீண்ட கில்லாள் மறுமாற்றம் மற்று ஒருவர் கொடுப்பார் இன்றிஆளரி ஏறு அனையானை அணுக வீழ்ந்தே அசைந்த மலர்க்கொடி போல்வாள் அரற்றும் போதுகோள் உருமும் புள் அரசும் அனையார் எல்லாக் கொள்கையினாலும் தீர்க்கக் குறையாதாகநீள் இரவு புலர் காலை மாலை வாச நெறி குழலாள் நெடிது அயர்ந்து புலம்புகின்றாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

475

அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை அடைவாக உடன் போந்தேன் அரவால் வீடிஎன்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என் செய்கேன் இவ்விடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லைமன்னிய சீர் வணிகர் குல மணியே யானும் வாழேன் என்று என்று அயர்வாள் மதியினாலேசென்னி இளம் பிறை அணிவார் கோயில் வாயில் திசைநோக்கித் தொழுது அழுதாள் செயல் ஒன்று இல்லாள்.
சொற்பிரிப்பு
அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை அடைவாக உடன் போந்தேன் அரவால் வீடிஎன்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என் செய்கேன் இவ் இடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லைமன்னிய சீர் வணிகர் குல மணியே யானும் வாழேன் என்று என்று அயர்வாள் மதியினாலேசென்னி இளம்பிறை அணிவார் கோயில் வாயில் திசை நோக்கித் தொழுது அழுதாள் செயல் ஒன்று இல்லாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

476

அடியாராம் இமையவர் தம் கூட்டம் உய்ய அலை கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே செங்கண்நெடியானும் நான்முகனும் காணாக் கோல நீலவிட அரவு அணிந்த நிமலா வெந்துபொடியான காமன் உயிர் இரதி வேண்டப் புரிந்து அளித்த புண்ணியனே பொங்கர் வாசக்கடியாரும் மலர்ச் சோலை மருங்கு சூழும் கவின் மருகற் பெருமானே காவாய் என்றும்.
சொற்பிரிப்பு
அடியாராம் இமையவர் தம் கூட்டம் உய்ய அலை கடல்வாய் நஞ்சுண்ட அமுதே செங்கண்நெடியானும் நான்முகனும் காணாக் கோல நீல விட அரவு அணிந்த நிமலா வெந்துபொடியான காமன் உயிர் இரதி வேண்டப் புரிந்து அளித்த புண்ணியனே பொங்கர் வாசக்கடியாரும் மலர்ச்சோலை மருங்கு சூழும் கவின் மருகல் பெருமானே காவாய் என்றும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

477

வந்து அடைந்த சிறு மறையோன் உயிர் மேல் சீறி வரும் காலன் பெருங்கால வலயம் போலும்செந்தறு கண் வெள் எயிற்றுக் கரிய கோலம் சிதைந்து உருள உதைத்து அருளும் செய்யதாளாஇந்த விடக் கொடு வேகம் நீங்குமாறும் யான் இடுக்கண் குழி நின்றும் ஏறு மாறும்அந்தி மதிக் குழவி வளர் செய்ய வேணி அணி மருகற் பெருமானே அருளாய் என்றும்.
சொற்பிரிப்பு
வந்து அடைந்த சிறுமறையோன் உயிர்மேல் சீறி வருங்காலன் பெரும் கால வலயம் போலும்செந்தறுகண் வெள்எயிற்றுக் கரிய கோலம் சிதைந்து உருள உதைத்து அருளும் செய்ய தாளாஇந்தவிடக் கொடுவேகம் நீங்கும் ஆறும்யான் இடுக்கண் குழி நின்றும் ஏறும் ஆறும்அந்திமதிக் குழவி வளர் செய்ய வேணி அணிமருகல் பெருமானே அருளாய் என்றும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

478

இத் தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும் இளங்கொடி போல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும்அத் தன்மை ஓசை எழுந்து எங்கள் சண்பை ஆண்டகையார் கும்பிட வந்து அணைகின்றார் தம்மெய்த் தன்மை விளங்கு திருச் செவியில் சார மேவுதலும் திரு உள்ளக் கருணை மேல் மேல்வைத் தன்னம் என அயர்வாள் மாடு நீடு மா தவத்தோர் சூழ எழுந்தருளி வந்தார்.
சொற்பிரிப்பு
இத்தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும் இளங்கொடிபோல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும்அத்தன்மை ஓசை எழுந்து எங்கள் சண்பை ஆண்டகையார் கும்பிடவந்து அணைகின்றார் தம்மெய்த்தன்மை விளங்கு திருச்செவியில் சார மேவுதலும் திருஉள்ளக் கருணை மேன்மேல்வைத்து அன்னம் என அயர்வாள் மாடு நீடு மாதவத்தோர் சூழ எழுந்தருளி வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

479

சிரபுரத்து மறையவனார் சென்று நின்று சிவபெருமான் அருள் போற்றிச் சிந்தை நைந்துபரிவுறுவாள் தனை நோக்கிப் பயப்படேல் நீ பருவரலும் நும் பரிசும் பகர்வாய் என்னக்கரமலர்கள் உச்சியின் மேல் குவித்துக் கொண்டு கண் அருவி சொரிந்து இழியக் காழி வேதப்புரவலனார் சேவடிக் கீழ் வீழ்ந்து தாங்கள் போந்ததுவும் புகுந்ததுவும் புகலல் உற்றாள்.
சொற்பிரிப்பு
சிரபுரத்து மறையவனார் சென்று நின்று சிவபெருமான் அருள்போற்றிச் சிந்தை நைந்துபரிவு உறுவாள் தனை நோக்கிப் பயப்படேல் நீ பருவரலும் நும்பரிசும் பகர்வாய் என்னக்கரமலர்கள் உச்சியின் மேல் குவித்துக் கொண்டு கண்அருவி சொரிந்து இழியக் காழி வேதப்புரவலனார் சேவடிக் கீழ் வீழ்ந்து தாங்கள் போந்ததுவும் புகுந்ததுவும் புகலல் உற்றாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

480

வளம் பொழில் சூழ் வைப்பூர்க்கோன் தாமன் எந்தை மருமகன் மற்று இவன் அவற்கு மகளிர்நல்லஇளம் பிடியார் ஓர் எழுவர் இவரில் மூத்தாள் இவனுக்கு என்றே உரை செய்தே ஏதிலானுக்குக்குளம் பெருகத் தனம் பெற்றுக் கொடுத்த பின்னும் ஓர் ஒருவராக எனை ஒழிய ஈந்தான்தளர்ந்து அழியும் இவனுக்காத் தகவு செய்து அங்கு அவரை மறைத்து இவன் தனையே சார்ந்துபோந்தேன்.
சொற்பிரிப்பு
வளம்பொழில் சூழ் வைப்பூர்க்கோன் தாமன் எந்தை மருமகன் மற்றுஇவன் அவற்கு மகளிர் நல்லஇளம்பிடியார் ஓர் எழுவர் இவரில் மூத்தாள் இவனுக்கு என்று உரைசெய்தே ஏதிலானுக்குஉளம் பெருகத் தனம் பெற்றுக் கொடுத்த பின்னும் ஓர் ஒருவர் ஆக எனை ஒழிய ஈந்தான்தளர்ந்து அழியும் இவனுக்காகத் தகவு செய்து அங்கு அவரை மறைத்து இவன் தனையே சார்ந்து போந்தேன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

481

மற்று இவனும் வாள் அரவு தீண்ட மாண்டான் மறி கடலில் கலம் கவிழ்த்தால் போலநின்றேன்சுற்றத்தார் என வந்து தோன்றி என்பால் துயரம் எலாம் நீங்க அருள் செய்தீர் என்னக்கற்றவர்கள் தொழுது ஏத்தும் காழி வேந்தர் கருணையினால் காரிகையாள் தனக்கு நல்கப்பற்றியவாள் அரவு விடம் தீரு மாறு பணைமருகற் பெருமானைப் பாடலுற்றார்.
சொற்பிரிப்பு
மற்று இவனும் வாள் அரவு தீண்ட மாண்டான் மறிகடலில் கலம் கவிழ்த்தார் போல நின்றேன்சுற்றத்தார் என வந்து தோன்றி என் பால்துயரம் எலாம் நீங்க அருள் செய்தீர்” என்னக்கற்றவர்கள் தொழுது ஏத்தும் காழி வேந்தர் கருணையினால் காரிகையாள் தனக்கு நல்கப்பற்றியவாள் அரவு விடம் தீருமாறு பணைமருகல் பெருமானைப் பாடல் உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

482

சடையானை எவ்வுயிர்க்கும் தாயானானை சங்கரனை சசி கண்ட மவுலியானைவிடையானை வேதியனை வெண் நீற்றானை விரவாதார் புரம் மூன்றும் எரியச் செற்றபடையானைப் பங்கயத்து மேவினானும் பாம்பு அணையில் துயின்றானும் பரவும் கோலம்உடையானை உடையானே தகுமோ இந்த ஒள்ளிழையாள் உள் மெலிவு என்று எடுத்துப் பாட.
சொற்பிரிப்பு
சடையானை எவ்உயிர்க்கும் தாய் ஆனானைச் சங்கரனைச் சசிகண்ட மவுலியானைவிடையானை வேதியனை வெண் நீற்றானை விரவாதார் புரம் மூன்றும் எரியச் செற்றபடையானைப் பங்கயத்து மேவினானும்பாம்பு அணையில் துயின்றானும் பரவும் கோலம்உடையானை உடையானே தகுமோ இந்த ஒள்இழையாள் உள்மெலிவு என்று எடுத்துப் பாட.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

483

பொங்கு விடம் தீர்ந்து எழுந்து நின்றான் சூழ்ந்த பொருவில் திருத் தொண்டர் குழாம் பொலிய ஆர்ப்பஅங்கையினை உச்சியின் மேல் குவித்துக் கொண்டு அங்கு அருள் காழிப் பிள்ளையார் அடியில்வீழ்ந்தநங்கை அவள் தனை நயந்த நம்பியோடு நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்மங்குல் தவழ் சோலை மலி புகலி வேந்தர் மணம் புணரும் பெருவாழ்வு வகுத்து விட்டார்.
சொற்பிரிப்பு
பொங்கு விடம் தீர்ந்து எழுந்து நின்றான் சூழ்ந்த பொருவில் திருத்தொண்டர் குழாம் பொலிய ஆர்ப்பஅங்கையினை உச்சியின்மேல் குவித்துக் கொண்டு அங்கு அருள்காழிப் பிள்ளையார் அடியில் வீழ்ந்தநங்கை அவள் தனை நயந்த நம்பியோடு நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்மங்குல் தவழ் சோலை மலி புகலி வேந்தர் மணம் புணரும் பெருவாழ்வு வகுத்து விட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

484

மற்றவர்க்கு விடை கொடுத்து அங்கு அமரும் நாளில் மருகல் நகரினில் வந்து வலியபாசம்செற்ற புகழ்ச் சிறுத் தொண்டர் வேண்ட மீண்டும் செங்காட்டங் குடியில் எழுந்து அருள வேண்டிப்பற்றி எழும் காதல் மிக மேல் மேல் சென்று பரமனார் திறத்து உன்னிப் பாங்கர் எங்கும்சுற்றும் அருந்தவரோடும் கோயில் எய்திச் சுடர் மழு ஆண்டவர் பாதம் தொழுவான் புக்கார்.
சொற்பிரிப்பு
மற்றவர்க்கு விடைகொடுத்து அங்கு அமரும் நாளில் மருகல் நகரினில் வந்து வலிய பாசம்செற்ற புகழ்ச் சிறுத்தொண்டர் வேண்ட மீண்டும் செங்காட்டங்குடியில் எழுந்தருள வேண்டிப்பற்றி எழும் காதல் மிக மேன்மேல் சென்று பரமனார் திறத்து உன்னிப் பாங்கர் எங்கும்சுற்றும் அருந்தவரோடும் கோயில் எய்திச் சுடர் மழு ஆண்டவர் பாதம் தொழுவான் புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

485

புக்கு இறைஞ்சி எதிர் நின்று போற்றுகின்றார் பொங்கு திரை நதிப்புனலும் பிறையும்சேர்ந்தசெக்கர் முடிச் சடை மவுலி வெண்ணீற்றார் தம் திருமேனி ஒரு பாகம் பசுமை ஆகமைக் குலவு கண்டத்தார் மருகற் கோயில் மன்னு நிலை மனம் கொண்டு வணங்குவார் முன்கைக் கனலார் கணபதீச் சரத்தின் மேவும் காட்சி கொடுத்து அருளுவான் காட்டக் கண்டார்.
சொற்பிரிப்பு
புக்கு இறைஞ்சி எதிர் நின்று போற்றுகின்றார் பொங்குதிரை நதிப்புனலும் பிறையும் சேர்ந்தசெக்கர் முடிச் சடைமவுலி வெண்நீற்றார் தம் திருமேனி ஒருபாகம் பசுமை ஆகமைக்குலவு கண்டத்தார் மருகல் கோயில் மன்னு நிலை மனம் கொண்டு வணங்குவார் முன்கைக்கனலார் கணபதீச்சரத்தின் மேவும் காட்சி கொடுத்து அருளுவான் காட்டக் கண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

486

மருகல் அமர்ந்து நிறைந்த கோலம் மல்கு செங் காட்டங் குடியின் மன்னிப்பெருகு கணபதி ஈச்சரத்தார் பீடு உடைக் கோலமே ஆகித் தோன்றஉருகிய காதலும் மீது பொங்க உலகர் முன் கொள்ளும் உணர்வு நீடஅருவி கண் வார்வுறப் பாடலுற்றார் அங்கமும் வேதமும் என்று எடுத்து.
சொற்பிரிப்பு
மருகல் அமர்ந்து நிறைந்த கோலம் மல்கு செங்காட்டங் குடியின் மன்னிப்பெருகு கணபதி ஈச்சரத்தார் பீடு உடைக் கோலமே ஆகித் தோன்றஉருகிய காதலும் மீது பொங்க உலகர் முன் கொள்ளும் உணர்வு நீடஅருவி கண் வார் உறப் பாடல் உற்றார் அங்கமும் வேதமும் என்று எடுத்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

487

கண்டு எதிர் போற்றி வினவிப் பாடிக் கணபதி ஈச்சரம் காதலித்தஅண்டர் பிரானை வணங்கி வைகும் அப்பதியில் சில நாள்கள் போற்றித்தொண்டருடன் அருள் பெற்று மற்றத் தொல்லைத் திருப்பதி எல்லை நீங்கிப்புண்டரிகத் தடம் சூழ் பழனப் பூம் புகலூர் தொழப் போதுகின்றார்.
சொற்பிரிப்பு
கண்டு எதிர் போற்றி வினவிப் பாடிக் கணபதி ஈச்சரம் காதலித்தஅண்டர் பிரானை வணங்கி வைகும் அப்பதியில் சில நாள்கள் போற்றித்தொண்டருடன் அருள் பெற்று மற்று அத் தொல்லைத் திருப்பதி எல்லை நீங்கிப்புண்டரிகத் தடம் சூழ் பழனப் பூம்புகலூர் தொழப் போதுகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

488

சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத் தொண்டர் நண்புடன் செல்ல நல்லவேரி நறும் தொங்கல் மற்றவரும் விடை அருளப் பெற்று மீண்ட பின்புநீரின் மலிந்த சடையர் மேவி நிகழும் பதிகள் பல பணிந்துபாரின் மலிந்து நிறைந்த செல்வம் பயில் புகலூர் நகர்ப் பாங்கு அணைந்தார்.
சொற்பிரிப்பு
சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத் தொண்டர் நண்புடன் செல்ல நல்லவேரி நறும் தொங்கல் மற்றவரும் விடைஅருளப் பெற்று மீண்ட பின்புநீரின் மலிந்த சடையர் மேவி நிகழும் பதிகள் பல பணிந்துபாரின் மலிந்து நிறைந்த செல்வம் பயில் புகலூர் நகர்ப் பாங்கு அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

489

திருப்புகலூர்த் திருத் தொண்டரோடும் செம்மை முருகனார் மெய்ம் மகிழ்ந்தவிருப்பொடு சென்று எதிர் கொள்ள வந்து வேத முதல்வர் தம் கோயில் எய்திப்பொருப்பு உறழ் கோபுரத்து உட் புகுந்து பூமலி முன்றில் புடை வலம் கொண்டுஒருப் படு சிந்தையொடு உள் அணைந்தார் ஓதாது ஞானம் எலாம் உணர்ந்தார்.
சொற்பிரிப்பு
திருப்புகலூர்த் திருத்தொண்டரோடும் செம்மை முருகனார் மெய்ம் மகிழ்ந்தவிருப்பொடு சென்று எதிர் கொள்ள வந்து வேத முதல்வர் தம் கோயில் எய்திப்பொருப்பு உறழ் கோபுரத்து உள் புகுந்து பூமலி முன்றில் புடை வலம்கொண்டுஒருப்படு சிந்தையொடு உள் அணைந்தார் ஓதாது ஞானம் எலாம் உணர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

490

புக்கு எதிர் தாழ்ந்து விழுந்தெழுந்து பூம் புகலூர் மன்னு புண்ணியரைநெக்கு உருகும் சிந்தை அன்பு பொங்க நிறை மலர் கண்ணீர் அருவி செய்யமிக்க தமிழ்த் தொடை மாலை சாத்தி மேவிய ஏழ் இசை பாடிப் போந்துதிக்கு நிறை சீர் முருகர் முன்பு செல்ல அவர் மடம் சென்று புக்கார்.
சொற்பிரிப்பு
புக்கு எதிர் தாழ்ந்து விழுந்து எழுந்து பூம்புகலூர் மன்னு புண்ணியரைநெக்கு உருகும் சிந்தை அன்பு பொங்க நிறைமலர்க் கண்ணீர் அருவி செய்யமிக்க தமிழ்த்தொடை மாலை சாத்தி மேவிய ஏழ்இசை பாடிப் போந்துதிக்கு நிறை சீர் முருகர் முன்பு செல்ல அவர் மடம் சென்று புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

491

ஆங்கு அவர் போற்றும் சிறப்பின் மேவி அப் பதி தன்னில் அமரு நாளில்வாங்கு மலைச் சிலையார் மகிழ்ந்த வர்த்த மானீச்சரம் தான் வணங்கிஓங்கிய அன்பின் முருகனார் தம் உயர் திருத்தொண்டு சிறப்பித்து ஓங்கும்பாங்கு உடை வண்தமிழ் பாடி நாளும் பரமர் தம் பாதம் பணிந்து இருந்தார்.
சொற்பிரிப்பு
ஆங்கு அவர் போற்றும் சிறப்பின் மேவி அப்பதி தன்னில் அமரும் நாளில்வாங்கு மலைச்சிலையார் மகிழ்ந்த வர்த்தமானீச்சரம் தான் வணங்கிஓங்கிய அன்பின் முருகனார் தம் உயர் திருத்தொண்டு சிறப்பித்து, ஓங்கும்பாங்கு உடை வண் தமிழ் பாடி நாளும் பரமர் தம் பாதம் பணிந்து இருந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

492

மற்றத் திருப்பதி வைகு நாளில் வாக்கின் பெரு விறல் மன்னனார் தாம்புற்றிடம் கொண்டாரை வந்து இறைஞ்சிப் பொன் மதில் ஆரூர் புகழ்ந்து போற்றிச்சிற்றிடைப் பொற்றொடிப் பங்கர் தங்கும் திருப்புகலூர் தொழச் சிந்தை செய்துகொற்றவனார் அருள் பெற்ற தொண்டர் குழாத்துடன் அவ்வூர் குறுக வந்தார்.
சொற்பிரிப்பு
மற்று அத் திருப்பதி வைகும் நாளில் வாக்கின் பெருவிறல் மன்னனார் தாம்புற்றிடம் கொண்டாரை வந்து இறைஞ்சிப் பொன்மதில் ஆரூர் புகழ்ந்து போற்றிச்சிற்றிடைப் பொற்றொடி பங்கர் தங்கும் திருப்புகலூர் தொழச் சிந்தை செய்துகொற்றவனார் அருள் பெற்ற தொண்டர் குழாத்துடன் அவ்ஊர் குறுக வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

493

நாவுக்கு அரசர் எழுந்தருளும் நல்ல திருவார்த்தை கேட்ட போதேசேவில் திகழ்ந்தவர் மைந்தர் ஆன திருஞான சம்பந்தர் சிந்தை அன்புமேவுற்ற காதல் மிகப் பெருக விரைந்து எதிர் கொள்ள மெய் அன்பரோடும்பூவில் பொலி பொய்கை சூழ் புகலூர்ப் புறம்பு அணை எல்லை கடந்து போந்தார்.
சொற்பிரிப்பு
நாவுக்கரசர் எழுந்தருளும்நல்ல திருவார்த்தை கேட்ட போதேசேவில் திகழ்ந்தவர் மைந்தர் ஆன திருஞான சம்பந்தர் சிந்தை அன்புமேவுற்ற காதல் மிகப் பெருக விரைந்து எதிர் கொள்ள மெய் அன்பரோடும்பூவில் பொலி பொய்கை சூழ் புகலூர்ப் புறம்பணை எல்லை கடந்து போந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

494

அங்கணர் ஆரூர் வணங்கிப் போந்த அரசும் எதிர் வந்து அணைய வாசப்பொங்கு புனல்தண் புகலி வந்த பூசுரர் சிங்கமும் பொற்பின் எய்தித்தங்களின் அன்பின் முறைமை யாலே தாழ்ந்து வணங்கித் தனித் தனியேமங்கலம் ஆகிய நல் வரவின் வாய்மை விளம்பி மகிழும் போது.
சொற்பிரிப்பு
அங்கணர் ஆரூர் வணங்கிப் போந்த அரசும் எதிர்வந்து அணைய, வாசப்பொங்கு புனல் தண் புகலி வந்த பூசுரர் சிங்கமும் பொற்பின் எய்தித்தங்களின் அன்பின் முறைமையாலே தாழ்ந்து வணங்கித் தனித்தனியேமங்கலம் ஆகிய நல்வரவின் வாய்மை வினவி மகிழும் போது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

495

மெய்த்திரு ஞான சம்பந்தர் வாக்கின் வேந்தரை நோக்கி விருப்பினாலேஅப்பரை இங்கு அணையப் பெறும் பேரருள் உடையோம்யாம் அந்தண் ஆரூர்எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று வினவிட ஈறில் பெரும் தவத்தோர்செப்பிய வண் தமிழ் மாலையாலே திருவாதிரை நிகழ் செல்வம் சொன்னார்.
சொற்பிரிப்பு
மெய்த் திருஞான சம்பந்தர் வாக்கின் வேந்தரை நோக்கி விருப்பினாலேஅப்பரை இங்கு அணையப் பெறும் பேர் அருள் உடையோம் யாம் அந்தண் ஆரூர்எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று வினவிட ஈறில் பெருந்தவத்தோர்செப்பிய வண்டமிழ் மாலையாலே திருஆதிரை நிகழ் செல்வம் சொன்னார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

496

அரசு அருளிச் செய்த வாய்மை கேட்ட அப்பொழுதே அருள் ஞானம் உண்டசிரபுர வேந்தரும் சிந்தையின் கண் தென் திருவாரூர் வணங்குதற்குவிரவிய காதலில் சென்று போற்றி மீண்டும் வந்து உம்முடன் மேவுவன் என்றுஉரவு கடல் கல் மிதப்பின் வந்தார்க்கு உரைத்து உடன்பாடு கொண்டு ஒல்லை போந்தார்.
சொற்பிரிப்பு
அரசு அருளிச் செய்த வாய்மை கேட்ட அப்பொழுதே அருள் ஞானம் உண்டசிரபுர வேந்தரும் சிந்தையின்கண் தென்திரு ஆரூர் வணங்குதற்குவிரவிய காதலில் சென்று போற்றி மீண்டும் வந்து உம் உடன் மேவுவன்” என்றுஉரவு கடல் கல் மிதப்பில் வந்தார்க்கு உரைத்து உடன்பாடு கொண்டு ஒல்லை போந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

497

சொற் பெரு வேந்தரும் தோணி மூதூர்த் தோன்றல் பின் காதல் தொடரத் தாமும்பொற் புகலூர் தொழச் சென்று அணைந்தார் புகலிப் பிரானும் புரிந்த சிந்தைவிற்குடி வீரட்டம் சென்று மேவி விடையவர் பாதம் பணிந்து போற்றிப்பற்பல ஆயிரம் தொண்டரோடும் பாடலன் நான் மறைப் பாடிப் போந்தார்.
சொற்பிரிப்பு
சொற் பெருவேந்தரும் தோணி மூதூர்த் தோன்றல் பின் காதல் தொடரத்தாமும்பொற்புகலூர் தொழச் சென்று அணைந்தார் புகலிப் பிரானும் புரிந்த சிந்தைவிற்குடி வீரட்டம் சென்று மேவி விடையவர் பாதம் பணிந்து போற்றிப்பற்பல ஆயிரம் தொண்டரோடும் பாடலன் நான்மறை பாடிப் போந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

498

துணர் இணர்ச் சோலையும் சாலி வேலித் துறை நீர்ப் பழனமும் சூழ் கரும்பின்மண மலி கானமும் ஞானமும் உண்டார் மருங்கு உற நோக்கி மகிழ்ந்தருளிஅணைபவர் அள்ளல் கழனி ஆரூர் அடைவோம் என மொழிந்து அன்பு பொங்கப்புணர் இசைச் செந்தமிழ் கொண்டு போற்றிப் பொன் மதில் ஆரூர்ப் புறத்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
துணர் இணர்ச் சோலையும் சாலி வேலித் துறைநீர்ப் பழனமும் சூழ் கரும்பின்மணமலி கானமும் ஞானம் உண்டார் மருங்குற நோக்கி மகிழ்ந்தருளிஅணைபவர் அள்ளல் கழனி ஆரூர்அடைவோம் என மொழிந்து அன்பு பொங்கப்புணர் இசைச் செந்தமிழ் கொண்டு போற்றிப் பொன்மதில் ஆரூர்ப் புறத்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

499

வான் உயர் செங்கதிர் மண்டலத்து மருங்கு அணையும் கொடி மன்னும் ஆரூர்தான் ஒரு பொன் உலகு என்னத் தோன்றும் தயங்கு ஒளி முன் கண்டு சண்பை வந்தபால் நிற நீற்றர் பருக்கையானைப் பதிகத் தமிழ் இசைபாடி ஆடித்தேனொடு வண்டுமுரலும் சோலைத் திருப்பதி மற்றதன் எல்லை சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
வான் உயர் செங்கதிர் மண்டலத்து மருங்கு அணையும் கொடி மன்னும் ஆரூர்தான் ஒரு பொன்உலகு என்னத் தோன்றும் தயங்கு ஒளி முன் கண்டு சண்பை வந்தபால்நிற நீற்றர் பருக்கை யானைப் பதிகத் தமிழ் இசை பாடி ஆடித்தேனொடு வண்டு முரலும் சோலைத் திருப்பதி மற்று அதன் எல்லை சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

500

பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம் பொழிந்து புவிமேல் பொலிவது என்னஎங்கும் குளிர் ஒளி வீசு முத்தின் இலங்கு சிவிகை இழிந்தருளிச்செங்கை நிறை மலர் கொண்டு தூவித் திரு இருக் குறள் பாடி ஏத்தித்தங்கள் பிரான் அரசாளும் ஆரூர் தனைப் பணிவுற்றார் தமிழ் விரகர்.
சொற்பிரிப்பு
பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம் பொழிந்து புவிமேல் பொலிவது என்னஎங்கும் குளிர் ஒளி வீசு முத்தின் இலங்கு சிவிகை இழிந்தருளிச்செங்கை நிறைமலர் கொண்டு தூவித் திருஇருக்குக் குறள் பாடி ஏத்தித்தங்கள்பிரான் அரசு ஆளும் ஆரூர் தனைப் பணிவு உற்றார் தமிழ் விரகர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

501

படியில் ஞானம் உண்டருளிய பிள்ளையைப் பணிதற்குஅடியர் சென்று எதிர் கொள எழுந்தருளும் அஞ்ஞான்றுவடி கொள் சூலத்தர் மன்னிய பொன்மதில் ஆரூர்க்கடி கொள் பேரணிப் பொலிவையார் முடிவுறக் காண்பார்.
சொற்பிரிப்பு
படியில் ஞானம் உண்டு அருளிய பிள்ளையைப் பணிதற்குஅடியர் சென்று எதிர் கொள எழுந்து அருளும் அஞ்ஞான்றுவடிகொள் சூலத்தர் மன்னிய பொன்மதில் ஆரூர்க்கடிகொள் பேர் அணிப் பொலிவை யார் முடிவு உறக் காண்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

502

நான மான் மத நளிர் பெரும் சேற்றிடை நறும் பொன்தூ நறுந்துகள் சொரிதலில் சுடர் ஒளிப் படலையான வீதிகள் அடி வலித்து அவை கரைந்தலையவான மாரியில் பொழிந்தது மலர் மது மாரி.
சொற்பிரிப்பு
நானம் மான்மதம் நளிர்பெரும் சேற்றிடை நறும்பொன்தூ நறுந்துகள் சொரிதலில் சுடர் ஒளிப் படலைஆன வீதிகள் அடி வலித்து அவை கரைந்து அலையவான மாரியில் பொழிந்தது மலர் மது மாரி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

503

ஆடல் நீடுவ துகில் கொடி அணி குழல் கொடிகள்தோடு சூழ்வன சுரும்பொடு தமனியத் தசும்புகாடு கொண்டன கதலி தோரணம் நிரைக் கமுகுமாட மாளிகை மண்டபங்களின் மருங்கு எல்லாம்.
சொற்பிரிப்பு
ஆடல் நீடுவ துகில்கொடி அணிகுழல் கொடிகள்தோடு சூழ்வன சுரும்பொடு தமனியத் தசும்புகாடு கொண்டன கதலி தோரணம் நிரைக் கமுகுமாடம் மாளிகை மண்டபங்களின் மருங்கு எல்லாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

504

மாலை சூழ் புறம் கடைகளின் மணி நிரை விளக்கின்கோல நீள் சுடர் ஒளியுடன் கோத்திடை தூக்கும்நீல மா மணி நிழல் பொர நிறம்புகர் படுக்கும்பால வாயின பவள வேதிகை மலர்ப் பந்தர்.
சொற்பிரிப்பு
மாலை சூழ் புறம் கடைகளின் மணிநிரை விளக்கின்கோல நீள்சுடர் ஒளி உடன் கோத்து இடை தூக்கும்நீல மாமணி நிழல் பொர நிறம்பு கர் படுக்கும்பால ஆயின பவள வேதிகை மலர்ப் பந்தர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

505

தழை மலர்த்தடஞ் சாலைகள் தெற்றிகள் சதுக்கம்குழை முகத்தவர் ஆடரங்கு இமையவர் குழாமும்விழை சிறப்பின வியல் இடம் யாவையும் மிடைந்துமழை முழக்கு என இயம்பின மங்கல இயங்கள்.
சொற்பிரிப்பு
தழைமலர்த் தடம் சாலைகள் தெற்றிகள் சதுக்கம்குழைமுகத்தவர் ஆடரங்கு இமையவர் குழாமும்விழை சிறப்பின வியல் இடம் யாவையும் மிடைந்துமழை முழக்கு என இயம்பின மங்கல இயங்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

506

விரவு பேரணி வேறு வேறு இன்னன விளங்கும்பிரசமென்மலர்ச் சோலை சூழ் பெருந் திருவாரூர்அரசளிப்பவர் அருளினால் அடியவர் குழுவும்புரிசனங்களும் புறத்து அணைந்து எதிர் கொள்ளும் பொழுது.
சொற்பிரிப்பு
விரவு பேரணி வேறுவேறு இன்னன விளங்கும்பிரச மென்மலர்ச் சோலை சூழ் பெரும் திரு ஆரூர்அரசு அளிப்பவர் அருளினால் அடியவர் குழுவும்புரிசனங்களும் புறத்து அணைந்து எதிர்கொள்ளும் பொழுது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

507

வந்து இறைஞ்சும் மெய்த் தொண்டர் தம் குழாத்து எதிர் வணங்கிச்சந்த முத்தமிழ் விரகராம் சண்பையர் தலைவர்அந்தமாய் உலகு ஆதியாம் பதிகம் அங்கு எடுத்தேஎந்தை தான் எனை ஏன்று கொள்ளும் கொல் என்று இசைத்தார்.
சொற்பிரிப்பு
வந்து இறைஞ்சு மெய்த் தொண்டர் தம் குழாத்து எதிர் வணங்கிச்சந்த முத்தமிழ் விரகராம் சண்பையர் தலைவர்அந்தமாய் உலகு ஆதியாம் பதிகம் அங்கு எடுத்தேஎந்தை தான் எனை ஏன்று கொளும்கொல் என்று இசைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

508

ஆன அத்திருப் பதிகம் முன் பாடிவந்து அணையும்ஞான வித்தகர் மெய்த்தவர் சூழ அந் நகரார்தூ நறும் சுண்ண மலர் பொரி தூஉய்த் தொழுது ஏத்தவான நாயகர் கோயில் வாயிலின் மருங்கு அணைந்தார்.
சொற்பிரிப்பு
ஆன அத்திருப்பதிகம் முன் பாடி வந்து அணையும்ஞான வித்தகர் மெய்த்தவர் சூழ அந்நகரார்தூ நறுஞ் சுண்ணம் மலர்பொரி தூஉய்த் தொழுது ஏத்தவான நாயகர் கோயில் வாயிலின் மருங்கு அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

509

மன்னு தோரண வாயில் முன் வணங்கி உள் புகுவார்தன்னுள் எவ்வகைப் பெருமையும் தாங்கிய தகைத்தாம்பன் நெடும் சுடர்ப் படலையின் பரப்பினைப் பார்த்துச்சென்னி தாழ்ந்து தேவாசிரியன் தொழுது எழுந்தார்.
சொற்பிரிப்பு
மன்னு தோரண வாயில் முன் வணங்கி உள் புகுவார்தன் உள் எவ்வகைப் பெருமையும் தாங்கிய தகைத்தாம்பன்நெடும் சுடர்ப் படலையின் பரப்பினைப் பார்த்துச்சென்னி தாழ்ந்து தேவாசிரியன் தொழுது எழுந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

510

மாடு சூழ் திரு மாளிகை வலம் கொண்டு வணங்கிக்கூடு காதலில் கோபுரம் பணிந்து கை குவித்துத்தேடு மால் அயற்கு அரியராய்ச் செழுமணிப் புற்றில்நீடு வாழ் முன்பு நிலமுறப் பல முறை பணிந்தார்.
சொற்பிரிப்பு
மாடு சூழ் திருமாளிகை வலம் கொண்டு வணங்கிக்கூடு காதலில் கோபுரம் பணிந்து கை குவித்துத்தேடு மால் அயர்க்கு அரியராய்ச் செழுமணிப் புற்றில்நீடுவார் முன்பு நிலம் உறப் பலமுறை பணிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

511

பணிந்து வீழ்ந்தனர் பதைத்தனர் பரப்பிய புளகம்அணிந்த மேனியோடு ஆடினர் பாடினர் அறிவில்துணிந்த மெய்ப் பொருள் ஆனவர் தமைக் கண்டு துதிப்பார்தணிந்த சிந்தையின் விரைந்து எழு வேட்கையில் தாழ்ந்தார்.
சொற்பிரிப்பு
பணிந்து வீழ்ந்தனர் பதைத்தனர் பரவிய புளகம்அணிந்த மேனியோடு ஆடினர் பாடினர் அறிவில்துணிந்த மெய்ப்பொருள் ஆனவர் தமைக்கண்டு துதிப்பார்தணிந்த சிந்தையின் விரைந்து எழு வேட்கையில் தாழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

512

செஞ் சொல் வண் தமிழ்த் திருப்பதிகத்து இசை எடுத்துநஞ்சு போனகம் ஆக்கிய நம்பர் முன் பாடிமஞ்சு சூழ் திரு மாளிகை வாயிலின் புறம் போந்துஅஞ்சு எழுத்து மெய் உணர்ந்தவர் திருமடத்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
செஞ்சொல் வண்தமிழ்த் திருப்பதிகத்து இசை எடுத்துநஞ்சு போனகம் ஆக்கிய நம்பர் முன் பாடிமஞ்சு சூழ் திருமாளிகை வாயிலின் புறம்போந்துஅஞ்செழுத்தின் மெய் உணர்ந்தவர் திருமடத்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

513

அங்கு அணைந்து அமர்ந்து அருளுவார் அரநெறி அமர்ந்தசெங்கண் ஏற்றவர் சேவடி வணங்கி முன் திளைத்துப்பொங்கு பேரொளிப் புற்று இடம் கொண்டவர் புனிதப்பங்கயப் பதம் தொழுது காலம் தொறும் பணிந்தார்.
சொற்பிரிப்பு
அங்கு அணைந்து அமர்ந்து அருளுவார் அரனெறி அமர்ந்தசெங்கண் ஏற்றவர் சேவடி வணங்கி முன் திளைத்துப்பொங்கு பேரொளிப் புற்றிடம் கொண்டவர் புனிதப்பங்கயப் பதம் தொழுது காலம்தொறும் பணிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

514

புற்றிடம் கொளும் புனிதரைப் போற்றி இசை பெருகப்பற்றும் அன்பொடு பணிந்து இசைப் பதிகங்கள் பாடிநற்றவத் திருத்தொண்டர்களோடு நலம் சிறப்பமற்ற வண்பதி தன்னிடை வைகும் அந் நாளில்.
சொற்பிரிப்பு
புற்றிடம் கொளும் புனிதரைப் போற்றி இசை பெருகப்பற்றும் அன்பொடு பணிந்து இசைப் பதிகங்கள் பாடிநற்றவத் திருத்தொண்டர் களொடு நலம் சிறப்பமற்று அவ்வண்பதி தன்னிடை வைகும் அந் நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

515

மல்லல் நீடிய வலி வலம் கோளிலி முதலாத்தொல்லை நான் மறை முதல்வர் தம் பதி பல தொழுதேஎல்லையில் திருப்பதிகங்களால் பணிந்து ஏத்திஅல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர் தொழ அணைந்தார்.
சொற்பிரிப்பு
மல்லல் நீடிய வலிவலம் கோளிலி முதலாத்தொல்லை நான்மறை முதல்வர் தம் பதி பல தொழுதேஎல்லையில் திருப்பதிகங்களால் பணிந்து ஏத்திஅல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர் தொழ அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

516

ஊறு காதலில் ஒளி வளர் புற்றிடம் கொண்டஆறு உலாவிய சடை முடி ஐயரைப் பணிந்துநீறு வாழ்வு என நிகழ் திருத் தொண்டர் களோடும்ஈறிலாத் திரு ஞான சம்பந்தர் அங்கு இருந்தார்.
சொற்பிரிப்பு
ஊறு காதலில் ஒளிவளர் புற்றிடங் கொண்டஆறு உலாவிய சடைமுடி ஐயரைப் பணிந்துநீறு வாழ்வு என நிகழ் திருத்தொண்டர் களோடும்ஈறு இலாத் திருஞான சம்பந்தர் அங்கு இருந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

517

அங்கு நன்மையில் வைகும் அந்நாள் சில அகலநங்கள் தம் திரு நாவினுக்கு அரசரை நயந்துபொங்கு சீர்ப் புகலூர் தொழ அருளினால் போவார்தங்கும் அப்பதிப் புறம்பணை சார்ந்தருள் செய்வார்.
சொற்பிரிப்பு
அங்கு நன்மையில் வைகும் அந்நாள் சில அகலநங்கள் தம் திருநாவினுக்கு அரசரை நயந்துபொங்கு சீர்ப் புகலூர் தொழ அருளினால் போவார்தங்கும் அப்பதிப் புறம்பணை சார்ந்தருள் செய்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

518

புவன ஆரூரினிற் புறம் போந்து அதனையே நோக்கி நின்றேஅவம் இலா நெஞ்சமே அஞ்சல் நீ உய்யுமாறு அறிதி அன்றேசிவனது ஆரூர் தொழாய் நீ மறவாது என்று செங்கை கூப்பிப்பவனமாய்ச் சோடையாய் எனும் திருப்பதிகம் முன் பாடினாரே.
சொற்பிரிப்பு
புவன ஆரூரினில் புறம்பு போந்து அதனையே நோக்கி நின்றேஅவம் இலா நெஞ்சமே அஞ்சல் நீ உய்யுமாறு அறிதி அன்றேசிவனது ஆரூர் தொழாய் நீ மறவாது என்று செங்கை கூப்பிப்பவனமாய்ச் சோடையாய் எனும் திருப்பதிகம் முன் பாடினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

519

காழியார் வாழ வந்து அருள் செயும் கவுணியப் பிள்ளையார் தாம்ஆழியான் அறியொணா அண்ணல் ஆரூர் பணிந்து அரிது செல்வார்பாழி மால் யானையின் உரி புணைந்தார் பனையூர் பணிந்துவாழி மாமறை இசைப் பதிகமும் பாடி அப் பதியில் வைகி.
சொற்பிரிப்பு
காழியார் வாழ வந்து அருள்செயும் கவுணியப் பிள்ளையார் தாம்ஆழியான் அறி ஒணா அண்ணல் ஆரூர் பணிந்து அரிது செல்வார்பாழி மால் யானையின் உரி புனைந்தார் பனையூர் பணிந்துவாழி மாமறை இசைப் பதிகமும் பாடி அப்பதியில் வைகி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

520

அங்கு நின்று அரிது எழுந்தருளுவார் அகில காரணமும் ஆனார்தங்கு நற் பதிகளும் பிற பணிந்தருளி வண் தமிழ் புனைந்தேஎங்கும் மெய்த்தவர் குழாம் எதிர் கொளத் தொழுதெழுந்து அருளி வந்தார்பொங்கு தண் பாசடைப் பங்கயப் புனல் வயல் புகலூர் சார.
சொற்பிரிப்பு
அங்கு நின்று அரிது எழுந்து அருளுவார் அகில காரணமும் ஆனார்தங்கு நல் பதிகளும் பிற பணிந்தருளி வண் தமிழ் புனைந்தேஎங்கும் மெய்த்தவர் குழாம் எதிர்கொளத் தொழுது எழுந்தருளி வந்தார்பொங்கு தண் பாசடைப் பங்கயப் புனல் வயல் புகலூர் சார.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

521

நாவினுக்கு அரசரும் நம்பி சீர் முருகரும் மற்று நாமச்சேவுகைத்தவர் திருத் தொண்டர் ஆனவர்கள் முன் சென்று சீதப்பூவினில் பொலி புனல் புகலியார் போதகத்து எதிர் பணிந்தேமேவ மற்று அவருடன் கூடவே விமலர் கோயிலை அடைந்தார்.
சொற்பிரிப்பு
நாவினுக்கு அரசரும் நம்பி சீர் முருகரும் மற்று நாமச்சே உகைத்தவர் திருத்தொண்டர் ஆனவர்கள் முன் சென்று சீதப்பூவினில் பொலி புனல் புகலியார் போதகத்து எதிர் பணிந்தேமேவ மற்றவருடன் கூடவே விமலர் கோயிலை அடைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

522

தேவர் தம் தலைவனார் கோயில் புக்கு அனைவரும் சீர் நிலத்து உற வணங்கிபாவரும் தமிழ் இசைப் பதிகமும் பாடி முன் பரவுவார் புறம்பு அணைந்தேதாவில் சீர் முருகனார் திருமனைக்கு எய்தி அத் தனி முதற் தொண்டர் தாமேயாவையும் குறைவறுத்திட அமர்ந்து அருளுவார் இனிதின் அங்கு உறையும் நாளில்.
சொற்பிரிப்பு
தேவர் தம் தலைவனார் கோயில் புக்கு அனைவரும் சீர் நிலத்து உற வணங்கிப்பாவரும் தமிழ் இசைப் பதிகமும் பாடி முன்பரவுவார் புறம்பு அணைந்தேதாவில் சீர் முருகனார் திருமனைக்கு எய்திஅத் தனி முதல் தொண்டர் தாமேயாவையும் குறைவுஅறுத்திட அமர்ந்து அருளுவார்இனிதின் அங்கு உறையும் நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

523

நீல நக்க அடிகளும் நிகழ் சிறுத் தொண்டரும் உடன் அணைந்து எய்தும் நீர்மைச்சீல மெய்த்தவர்களும் கூடவே கும்பிடும் செய்கை நேர் நின்று வாய்மைச்சால்பின் மிக்கு உயர் திருத் தொண்டின் உண்மை திறம் தன்னையே தெளிய நாடிக்காலம் உய்த்தவர்களோடு அளவளாவிக் கலந்து அருளினார் காழி நாடர்.
சொற்பிரிப்பு
நீலநக்கடிகளும் நிகழ் சிறுத்தொண்டரும் உடன் அணைந்து எய்து நீர்மைச்சீல மெய்த்தவர்களும் கூடவே கும்பிடும் செய்கை நேர் நின்று வாய்மைசாலமிக்கு உயர் திருத்தொண்டின் உண்மைத் திறம்தன்னையே தெளிய நாடிக்காலம் உய்த்து அவர்களோடு அளவளாவிக் கலந்து அருளினார் காழி நாடர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

524

கும்பிடும் கொள்கையில் குறி கலந்திசை எனும் பதிக முன் ஆன பாடல்தம் பெரும் தலைமையால் நிலைமை சால் பதியதன் பெருமை சால்புற விளம்பிஉம்பரும் பரவுதற்கு உரிய சொல் பிள்ளையார் உள்ளம் மெய்க் காதல் கூரநம்பர் தம் பதிகள் ஆயின ஏனைப் பலவும் முன் நண்ணியே தொழ நயந்தார்.
சொற்பிரிப்பு
கும்பிடும் கொள்கையில் குறி கலந்த இசை எனும் பதிக முன் ஆன பாடல்தம்பெரும் தலைமையால் நிலைமை சால் பதி அதன் பெருமை சால்பு உற விளம்பிஉம்பரும் பரவுதற்கு உரிய சொல் பிள்ளையார் உள்ள மெய்க் காதல் கூரநம்பர் தம் பதிகள் ஆயின எனைப் பலவு முன் நண்ணியே தொழ நயந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

525

புள்ளலம்பு தண்புனல் புகலூர் உறை புனிதனார் அருள் பெற்றுப்பிள்ளையார் உடன் நாவினுக்கு அரசரும் பிற பதி தொழச் செல்வார்வள்ளலார் சிறுத் தொண்டரும் நீல நக்கரும் வளம் பதிக்கு ஏகஉள்ளம் அன்புறும் முருகர் அங்கு ஒழியவும் உடன்பட இசைவித்தார்.
சொற்பிரிப்பு
புள் அலம்பு தண் புனல் புகலூர் உறை புனிதனார் அருள்பெற்றுப்பிள்ளையாருடன் நாவினுக்கு அரசரும் பிறபதி தொழச் செல்வார்வள்ளலார் சிறுத்தொண்டரும் நீல நக்கரும் வளம் பதிக்கு ஏகஉள்ளம் அன்புறும் முருகர் அங்கு ஒழியவும் உடன்பட இசைவித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

526

கண்ணகன் புகலூரினைத் தொழுது போம் பொழுதினில் கடல் காழிஅண்ணலார் திரு நாவினுக்கு அரசர் தம் அருகு விட்டு அகலாதேவண்ண நித்திலச் சிவிகையும் பின் வர வழிக்கொள உறும் காலைஎண்ணில் சீர்த்திரு நாவினுக்கரசரும் மற்று அவர்க்கு இசைக்கின்றார்.
சொற்பிரிப்பு
கண் அகல் புகலூரினைத் தொழுது போம் பொழுதினில் கடல்காழிஅண்ணலார் திருநாவினுக்கு அரசர் தம்அருகு விட்டு அகலாதேவண்ண நித்திலச் சிவிகையும் பின்வர வழிக்கொள உறும் காலைஎண்ணில் சீர்த் திருநாவினுக்கு அரசரும் மற்றவர்க்கு இசைக்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

527

நாயனார் உமக்கு அளித்து அருள் செய்த இந் நலம் கிளர் ஒளி முத்தின்தூய யானத்தின் மிசை எழுந்து அருளுவீர் என்றலும் சுடர்த் திங்கள்மேய வேணியர் அருளும் இவ்வாறு எனில் விரும்பு தொண்டர்களோடும்போய தெங்குநீர் அங்கு யான் பின் வரப் போவது என்று அருள் செய்தார்.
சொற்பிரிப்பு
நாயனார் உமக்கு அளித்து அருள் செய்த இந்நலம் கிளர் ஒளி முத்தின்தூய யானத்தின் மிசை எழுந்து அருளுவீர் என்றலும் சுடர்த் திங்கள்மேய வேணியார் அருளும் இவ்வாறு எனில் விரும்பு தொண்டர்களோடும்போயது எங்கு நீர் அங்கு யான் பின் வரப் போவது என்று அருள் செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

528

என்று பிள்ளையார் மொழிந்து அருள் செய்திட இரும் தவத்து இறையோரும்நன்று நீர் அருள் செய்ததே செய்வன் என்று அருள் செய்து நயப்பு உற்றஅன்றை நாள் முதல் உடன் செல்லும் நாள் எலாம் அவ் இயல்பினில் செல்வார்சென்று முன்னுறத் திருவம்பர் அணைந்தனர் செய்தவக் குழாத்தோடும்.
சொற்பிரிப்பு
என்று பிள்ளையார் மொழிந்தருள் செய்திட இருந்தவத்து இறையோரும்நன்று நீர் அருள் செய்ததே செய்வன் என்று அருள்செய்து நயப்புற்றஅன்றை நாள் முதல் உடன் செலும் நாள் எலாம் அவ்இயல்பினில் செல்வார்சென்று முன் உறத் திருஅம்பர் அணைந்தனர் செய்தவக் குழாத்தோடும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

529

சண்பை மன்னரும் தம்பிரான் அருள் வழி நிற்பது தலைச் செல்வார்பண்பு மேம் படு பனிக்கதிர் நித்திலச் சிவிகையில் பணிந்து ஏறிவண் பெரும் புகலூரினைக் கடந்து போய் வரும் பரிசனத்தோடும்திண் பெரும் தவர் அணைந்தது எங்கு என்று போய்த் திருவம்பர் நகர் புக்கார்.
சொற்பிரிப்பு
சண்பை மன்னரும் தம்பிரான் அருள் வழி நிற்பது தலைச்செல்வார்பண்பு மேம்படு பனிக்கதிர் நித்திலச் சிவிகையில் பணிந்து ஏறிவண்பெரும் புகலூரினைக் கடந்து போய் வரும் பரிசனத்தோடும்திண் பெருந்தவர் அணைந்தது எங்கு என்று போய்த் திருஅம்பர் நகர் புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

530

அம்பர்மா நகர் அணைந்து மாகாளத்தில் அண்ணலார் அமர்கின்றசெம் பொன் மாமதிற் கோயிலை வலம் கொண்டு திருமுன்பு பணிந்து ஏத்திவம்புலா மலர் தூவி முன் பரவிய வண் தமிழ் இசை மாலைஉம்பர் வாழ நஞ்சு உண்டவர் தமைப் பணிந்து உருகும் அன்பொடு தாழ்ந்தார்.
சொற்பிரிப்பு
அம்பர் மாநகர் அணைந்து மாகாளத்தில் அண்ணலார் அமர்கின்றசெம்பொன் மாமதில் கோயிலை வலம் கொண்டு திருமுன்பு பணிந்து ஏத்திவம்புலா மலர் தூவி முன் பரவியே வண்தமிழ் இசைமாலைஉம்பர் வாழ நஞ்சு உண்டவர் தமைப் பணிந்து உருகும் அன்பொடு தாழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

531

தாழ்ந்து நாவினுக்கரசுடன் தம்பிரான் கோயில் முன்புறம் எய்திச்சூழ்ந்த தொண்டரோடு அப்பதி அமர்பவர் சுரநதி முடிமீதுவீழ்ந்த வேணியர் தமைப் பெறும் காலங்கள் விருப்பினால் கும்பிட்டுவாழ்ந்து இருந்தனர் காழியர் வாழ வந்தருளிய மறை வேந்தர்.
சொற்பிரிப்பு
தாழ்ந்து நாவினுக்கு அரசுடன் தம்பிரான் கோயில் முன்புறம் எய்திச்சூழ்ந்த தொண்டரோடு அப்பதி அமர்பவர் சுரநதி முடி மீதுவீழ்ந்த வேணியர் தமைப் பெரும் காலங்கள் விருப்பினால் கும்பிட்டுவாழ்ந்திருந்தனர் காழியார் வாழ வந்து அருளிய மறைவேந்தர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

532

பொருவு இலாத சொல் புல்கு பொன் நிற முதற் பதிகங்களால் போற்றித்திருவின் ஆர்ந்த கோச் செங்கணான் அந்நகர்ச் செய்த கோயிலைச் சேர்ந்துமருவு வாய்மை வண் தமிழ் மலர் மாலை அவ்வளவனைச் சிறப்பித்துப்பெருகு காதலில் பணிந்து முன் பரவினார் பேணிய உணர்வோடும்.
சொற்பிரிப்பு
பொரு இலாத சொல் புல்கு பொன் நிறம் முதல் பதிகங்களால் போற்றித்திருவின் ஆர்ந்த கோச்செங்கணான் அந்நகர்ச் செய்த கோயிலைச் சேர்ந்துமருவு வாய்மை வண்தமிழ் மலர் மாலை அவ்வளவனைச் சிறப்பித்துப்பெருகு காதலில் பணிந்து முன் பரவினார் பேணிய உணர்வோடும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

533

இன்ன வாறு சொல் மாலைகளால் துதித்து இறைஞ்சி அங்கு அமர் நாளில்கன்னி மாமதில் திருக்கடவூர் தொழக் காதல் செய்து அருளிப்போய்மன்னு கோயில்கள் பிறபதி வணங்கியே வாக்கின் மன்னவ ரோடும்அந்நெடும்பதி அணைவுறக் கலையரோடு அடியவர் எதிர்கொண்டார்.
சொற்பிரிப்பு
இன்னவாறு சொல் மாலைகளால் துதித்துஇறைஞ்சி அங்கு அமர்நாளில்கன்னி மாமதில் திருக்கடவூர் தொழக் காதல் செய்தருளிப்போய்மன்னு கோயில்கள் பிறபதி வணங்கியே வாக்கின் மன்னவரோடும்அந்நெடும்பதி அணைவுறக் கலயரோடு அடியவர் எதிர்கொண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

534

மற்ற வண் பதி அணைந்து வீரட்டத்து மழவிடையார் கோயில்சுற்று மாளிகை வலம் கொண்டு காலனை உதைத்து உருட்டிய செய்யபொன் சிலம்பு அணி தாமரை வணங்கிமுன் போற்றி உய்ந்து எதிர் நின்றுபற்று அறுப்பவர் சடை உடையான் எனும் பதிக இன்னிசை பாடி.
சொற்பிரிப்பு
மற்ற வண்பதி அணைந்து வீரட்டத்து மழவிடையார் கோயில்சுற்று மாளிகை வலங்கொண்டு காலனைத் தொலைத்து உருட்டிய செய்யபொற்சிலம்பு அணி தாமரை வணங்கி முன்போற்றி உய்ந்து எதிர் நின்றுபற்று அறுப்பவர் சடை உடையான் எனும்பதிக இன் இசை பாடி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

535

பரவி ஏத்தி அங்கு அரிதினில் போந்து பார் பரவு சீர் அரசோடுவிரவு நண்பு உடை குங்கிலியப் பெருங் கலயர் தம் மனை மேவிக்கரையில் காதல் மற்று அவர் அமைத்தருளிய விருந்து இனிதமர்ந்து அங்குச்சிரபுரத்தவர் திரு மயானமும் பணிந்து இருந்தனர் சிறப்பு எய்தி.
சொற்பிரிப்பு
பரவி ஏத்தி அங்கு அரிதினில் போந்து பார்பரவு சீர் அரசோடுவிரவு நண்புடைக் குங்குலியப் பெருங்கலயர் தம் மனை மேவிக்கரையில் காதல் மற்றவர் அமைத்தருளிய விருந்து இனிது அமர்ந்து அங்குச்சிரபுரத்தவர் திருமயானமும் பணிந்து இருந்தனர் சிறப்பு எய்தி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

536

சிறப்பு உடைத் திருப்பதி அதனிடைச் சில நாள் அமர்ந்து அருளோடும்விறல் பெரும் கரி உரித்தவர் கோயில்கள் விருப்போடும் தொழச் செல்வார்மறைப் பெரும் திருக் கலயரும் உடன்பட வணங்கிய மகிழ்வோடும்அறப் பெரும் பயன் அனைய அத் தொண்டரோடு அணைந்தனர் திருவாக்கூர்.
சொற்பிரிப்பு
சிறப்பு உடைத் திருப்பதி அதனிடைச் சிலநாள் அமர்ந்து அருளோடும்விறல் பெருங்கரி உரித்தவர் கோயில்கள் விருப்பொடும் தொழச்செல்வார்மறைப் பெருந்திருக் கலயரும் உடன் பட வணங்கிய மகிழ்வோடும்அறப் பெரும்பயன் அனைய அத் தொண்டரோடு அணைந்தனர் திருஆக்கூர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

537

தக்க அந்தணர் மேவும் அப் பதியினில் தான் தோன்றி மாடத்துச்செக்கர் வார் சடை அண்ணலைப் பணிந்து இசைச் செந்தமிழ்த் தொடைபாடிமிக்க கோயில்கள் பிறவுடன் தொழுது போய் மீயச்சூர் பணிந்து ஏத்திப்பக்கம் பாரிடம் பரவ நின்று ஆடுவார் பாம்புர நகர் சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
தக்க அந்தணர் மேவும் அப்பதியினில் தான் தோன்றி மாடத்துச்செக்கர் வார்சடை அண்ணலைப் பணிந்து இசைச் செந்தமிழ்த் தொடைபாடிமிக்க கோயில்கள் பிறவுடன் தொழுது போய் மீயச்சூர் பணிந்து ஏத்திப்பக்கம் பாரிடம் பரவ நின்று ஆடுவார் பாம்புரநகர் சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

538

பாம்புரத் துறை பரமரைப் பணிந்து நற் பதிக இன்னிசை பாடிவாம்புனல் சடை முடியினார் மகிழ்விடம் மற்றும் உள்ளன போற்றிக்காம்பினில் திகழ் கரும்பொடு செந்நெலின் கழனியம்பணை நீங்கித்தேம் பொழில் திரு வீழி நன் மிழலையின் மருங்குறச் செல்கின்றார்.
சொற்பிரிப்பு
பாம்புரத்துறை பரமரைப் பணிந்து நல்பதிக இன் இசை பாடிவாம்பு னல்சடை முடியினார் மகிழ்வு இடம் மற்றும் உள்ளன போற்றிக்காம்பினில் திகழ் கரும்பொடு செந்நெலின் கழனி அம்பணை நீங்கித்தேம்பொழில் திருவீழி நன் மிழலையின் மருங்குறச் செல்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

539

அப்பொழுதின் ஆண்ட அரசை எதிர் கொண்டமெய்ப் பெருமை அந்தணர்கள் வெங்குரு வாழ் வேந்தனார்பிற்பட வந்து எய்தும் பெரும் பேறு கேட்டு உவப்பார்எப் பரிசினால் வந்து அணைந்து அங்கு எதிர் கொண்டார்.
சொற்பிரிப்பு
அப்பொழுதின் ஆண்ட அரசை எதிர் கொண்டமெய்ப்பெருமை அந்தணர்கள் வெங்குரு வாழ் வேந்தனார்பிற்பட வந்து எய்தும் பெரும் பேறு கேட்டு உவப்பார்எப்பரிசினால் வந்து அணைந்து அங்கு எதிர்கொண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

540

நிறை குடம் தூபம் தீபம் நீட நிரைத்து ஏந்திநறை மலர்ப் பொற் சுண்ணம் நறும் பொரியும் தூவிமறை ஒலி போய் வான் அளப்ப மா முரசம் ஆர்ப்பஇறைவர் திரு மைந்தர் தமை எதிர் கொள் வரவேற்றார்.
சொற்பிரிப்பு
நிறைகுடம் தூபம் தீபம் நீட நிரைத்து ஏந்திநறைமலர்ப் பொற்சுண்ணம் நறும் பொரியும் தூவிமறைஒலி போய் வான் அளப்ப மாமுரசம் ஆர்ப்பஇறைவர் திருமைந்தர் தமை எதிர்கொள் வரவேற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

541

வந்து திரு வீழி மிழலை மறை வல்லஅந்தணர்கள் போற்றிசைப்பத் தாமும் மணி முத்தின்சந்த மணிச் சிவிகை நின்று இழிந்து தாழ்ந்து அருளிஉய்ந்த மறையோருடன் அணைந்து அங்கு உள் புகுவார்.
சொற்பிரிப்பு
வந்து திருவீழி மிழலை மறை வல்லஅந்தணர்கள் போற்றிசைப்பத் தாமும் அணிமுத்தின்சந்த மணிச்சிவிகை நின்றிழிந்து தாழ்ந்தருளிஉய்ந்த மறையோர் உடன் அணைந்து அங்கு உள்புகுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

542

அப்போது அரையார் விரிகோவண ஆடைஒப்பு ஓதரும் பதிகத்து ஓங்கும் இசைபாடிமெய்ப் போதப் போது அமர்ந்தார் தம் கோயில் மேவினார்கைப் போது சென்னியின் மேல் கொண்டு கவுணியனார்.
சொற்பிரிப்பு
அப்போது அரையார் விரி கோவண ஆடைஒப்போத அரும்பதிகத்து ஓங்கும் இசை பாடிமெய்ப்போதப் போது அமர்ந்தார் தம்கோயில் மேவினார்கைப்போது சென்னியின் மேல் கொண்டு கவுணியனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

543

நாவின் தனி மன்னர் தாமும் உடன் நண்ணமேவிய விண் இழிந்த கோயில் வலம் கொள்வார்பூவியலும் உந்தியான் போற்றப் புவிக் கிழிந்ததேவியலும் மெய் கண்டு சிந்தை வியப்பு எய்தினார்.
சொற்பிரிப்பு
நாவின் தனி மன்னர் தாமும் உடன் நண்ணமேவிய விண் இழிந்த கோயில் வலம் கொள்வார்பூவியலும் உந்தியான் போற்றப் புவிக்கு இழிந்ததேவியலும் மெய் கண்டு சிந்தை வியப்பு எய்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

544

வலம் கொண்டு புக்கு எதிரே வந்து வர நதியின்சலம் கொண்ட வேணித் தனி முதலைத் தாழ்ந்துநிலம் கொண்ட மேனியராய் நீடு பெரும் காதல்புலம் கொண்ட சிந்தையினால் பொங்கி இசை மீப்பொழிந்தார்.
சொற்பிரிப்பு
வலங்கொண்டு புக்கு எதிரே வந்து வரநதியின்சலங்கொண்ட வேணித் தனி முதலைத் தாழ்ந்துநிலங்கொண்ட மேனியராய் நீடு பெரும் காதல்புலம்கொண்ட சிந்தையினார் பொங்கி இசை மீப்பொழிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

545

போற்றிச் சடையார் புனல் உடையான் என்று எடுத்துசாற்றிப் பதிகத் தமிழ் மாலைச் சந்த இசைஆற்ற மிகப் பாடி ஆனந்த வெள்ளத்தில்நீற்றழகர் சேவடிக் கீழ் நின்று அலைந்து நீடினார்.
சொற்பிரிப்பு
போற்றிச் சடையார் புனல் உடையான் என்று எடுத்துச்சாற்றிப் பதிகத் தமிழ்மாலை சந்த இசைஆற்ற மிகப்பாடி ஆனந்த வெள்ளத்தில்நீற்றழகர் சேவடிக்கீழ் நின்று அலைந்து நீடினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

546

நீடிய பேரன்பு உருகி உள்ளலைப்ப நேர் நின்றுபாடி எதிர் ஆடிப் பரவிப் பணிந்து எழுந்தேஆடிய சேவடிகள் ஆர்வம் உற உட்கொண்டுமாடுயர் கோயில் புறத்து அரிது வந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
நீடிய பேரன்பு உருகி உள் அலைப்ப நேர் நின்றுபாடி எதிர் ஆடிப் பரவிப் பணிந்து எழுந்தேஆடிய சேவடிகள் ஆர்வம் உற உட்கொண்டுமாடு உயர் கோயில் புறத்து அரிது வந்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

547

வந்து அணைந்து வாழ்ந்து மதில்புறத்து ஓர் மா மடத்துச்செந் தமிழ்ச் சொல் வேந்தரும் செய்தவரும் சேர்ந்தருளச்சந்த மணிக் கோபுரத்துச் சார்ந்த வடபால் சண்பைஅந்தணர் சூளா மணியார் அங்கு ஓர் மடத்து அமர்ந்தார்.
சொற்பிரிப்பு
வந்து அணைந்து வாழ்ந்து மதில் புறத்து ஓர் மாமடத்துச்செந்தமிழ்ச்சொல் வேந்தரும் செய்தவரும் சேர்ந்தருளச்சந்தமணிக் கோபுரத்துச் சார்ந்த வடபால் சண்பைஅந்தணர் சூளாமணியார் ஆங்கு ஓர் மடத்து அமர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

548

அங்கண் அமர்வார் அரனார் அடி இணைக் கீழ்த்தங்கிய காதலினால் காலங்கள் தப்பாமேபொங்கு புகழ் வாகீசரும் கூடப் போற்றி இசைத்தேஎங்கும் இடர் தீர்ப்பார் இன்புற்று அமர்கின்றார்.
சொற்பிரிப்பு
அங்கண் அமர்வார் அரனார் அடி இணைக் கீழ்த்தங்கிய காதலினால் காலங்கள் தப்பாமேபொங்கு புகழ் வாகீசரும் கூடப் போற்றிசைத்தேஎங்கும் இடர் தீர்ப்பார் இன்புற்று அமர்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

549

ஓங்கு புனல் பேணு பெருந்துறையும் உள்ளிட்டபாங்கர் திலதைப் பதிமுற்றமும் பணிந்துவீங்கு ஒலி நீர் வீழி மிழலையினில் மீண்டும் அணைந்துஆங்கு இனிது கும்பிட்டு அமர்ந்து ஒழுகும் அந்நாளில்.
சொற்பிரிப்பு
ஓங்கு புனல் பேணு பெருந்துறையும் உள்ளிட்டபாங்கார் திலதைப் பதி முற்றமும் பணிந்துவீங்கு ஒலி நீர் வீழி மிழலையினில் மீண்டும் அணைந்துஆங்கு இனிது கும்பிட்டு அமர்ந்து ஒழுகும் அந்நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

550

சேண் உயர் மாடப் புகலி உள்ளார் திரு ஞான சம்பந்தப் பிள்ளையாரைக்காணும் விருப்பில் பெருகும் ஆசை கைம் மிகு காதல் கரை இகப்பப்பூணும் மனத்தொடு தோணி மேவும் பொருவிடை யார் மலர்ப் பாதம் போற்றிவேணு புரத்தை அகன்று போந்து வீழி மிழலையில் வந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
சேண் உயர் மாடப் புகலி உள்ளார் திருஞான சம்பந்தப் பிள்ளையாரைக்காணும் விருப்பில் பெருகும் ஆசை கைம்மிகு காதல் கரை இகப்பப்பூணு மனத்தொடு தோணி மேவும் பொருவிடையார் மலர்ப்பாதம் போற்றிவேணுபுரத்தை அகன்று போந்து வீழி மிழலையில் வந்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

551

ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்து ஓங்கிய காழி உயர் பதியில்வாழி மறையவர் தாங்கள் எல்லாம் வந்து மருங்கு அணைந்தார்கள் என்னவீழி மிழலையின் வேதியர்கள் கேட்டு மெய்ஞ்ஞானம் உண்டாரை முன்னாஏழ் இசை சூழ்மறை எய்த ஓதி எதிர் கொள் முறைமையில் கொண்டு புக்கார்.
சொற்பிரிப்பு
ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்து ஓங்கிய காழி உயர் பதியில்வாழி மறையவர் தாங்கள் எல்லாம் வந்து மருங்கு அணைந்தார்கள் என்னவீழி மிழலையின் வேதியர்கள் கேட்டு மெய்ஞ் ஞானம் உண்டாரை முன்னாஏழிசை சூழ்மறை எய்த ஓதி எதிர்கொள் முறைமையில் கொண்டு புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

552

சண்பைத் திருமறையோர்கள் எல்லாம் தம் பிரானாரைப் பணிந்து போந்துநண்பில் பெருகிய காதல் கூர்ந்து ஞான சம்பந்தர் மடத்தில் எய்திப்பண்பில் பெருகும் கழுமலத்தார் பிள்ளையார் பாதம் பணிந்து பூண்டேஎண் பெற்ற தோணிபுரத்தில் எம்மோடு எழுந்தருளப் பெற வேண்டும் என்றார்.
சொற்பிரிப்பு
சண்பைத் திருமறையோர்கள் எல்லாம் தம்பிரானாரைப் பணிந்து போந்துநண்பில் பெருகிய காதல் கூர்ந்து ஞான சம்பந்தர் மடத்தில் எய்திப்பண்பில் பெருகும் கழுமலத்தார் பிள்ளையார் பாதம் பணிந்து பூண்டேஎண் பெற்ற தோணிபுரத்தில் எம்மோடு எழுந்தருளப் பெற வேண்டும் என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

553

என்று அவர் விண்ணப்பம் செய்த போதில் ஈறு இல் சிவ ஞானப் பிள்ளை யாரும்நன்று இது சாலவும் தோணி மேவும் நாதர் கழல் இணை நாம் இறைஞ்சஇன்று கழித்து மிழலை மேவும் இறைவர் அருள் பெற்றுப் போவது என்றேஅன்று புகலி அருமறையோர்க்கு அருள் செய்து அவர்க்கு முகம் அளித்தார்.
சொற்பிரிப்பு
என்றவர் விண்ணப்பம் செய்த போதில் ஈறில் சிவஞானப் பிள்ளையாரும்நன்று இது சாலவும் தோணி மேவும் நாதர் கழல் இணை நாம் இறைஞ்சஇன்று கழித்து மிழலை மேவும் இறைவர் அருள்பெற்றுப் போவது என்றேஅன்று புகலி அருமறையோர்க்கு அருள் செய்து அவர்க்கு முகம் அளித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

554

மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும் வேதியர்க்கு ஆய விருந்து அளிப்பப்பாற் பட்ட சிந்தையராய் மகிழ்ந்து பரம் பொருள் ஆனார் தமைப் பரவும்சீர்ப் பட்ட எல்லை இனிது செல்லத் திருத் தோணி மேவிய செல்வர் தாமேகார்ப் பட்ட வண்கைக் கவுணியர்க்குக் கனவிடை முன் நின்று அருள் செய்கின்றார்.
சொற்பிரிப்பு
மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும் வேதியர்க்கு ஆய விருந்து அளிப்பப்பாற்பட்ட சிந்தையராய் மகிழ்ந்து பரம்பொருள் ஆனார் தமைப் பரவும்சீர்ப்பட்ட எல்லை இனிது செல்லத் திருத்தோணி மேவிய செல்வர் தாமேகார்ப்பட்ட வண்கைக் கவுணியர்க்குக் கனவிடை முன்நின்று அருள் செய்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

555

தோணியில் நாம் அங்கு இருந்த வண்ணம் தூமறை வீழி மிழலை தன்னுள்சேண் உயர் விண்ணினின்று இழிந்த இந்தச் சீர் கொள் விமானத்துக் காட்டுகின்றோம்பேணும் படியால் அறிதி என்று பெயர்ந்து அருள் செய்யப் பெரும் தவங்கள்வேணு புரத்தவர் செய்ய வந்தார் விரவும் புளகத் தொடும் உணர்ந்தார்.
சொற்பிரிப்பு
தோணியில் நாம் அங்கு இருந்த வண்ணம் தூமறை வீழி மிழலை தன்னுள்சேண்உயர் விண்ணின்று இழிந்த இந்தச் சீர்கொள் விமானத்துக் காட்டு கின்றோம்பேணும் படியால் அறிதி என்று பெயர்ந்தருள் செய்யப் பெருந்தவங்கள்வேணு புரத்தவர் செய்ய வந்தார் விரவும் புளகத்தொடும் உணர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

556

அறிவுற்ற சிந்தையராய் எழுந்தே அதிசயித்து உச்சிமேல் அங்கை கூப்பிவெறிவுற்ற கொன்றையினார் மகிழ்ந்த விண்ணிழி கோயிலில் சென்று புக்குமறி உற்ற கையரைத் தோணி மேல் முன் வணங்கும்படி அங்குக் கண்டு வாழ்ந்துகுறியில் பெருகும் திருப்பதிகம் குலவிய கொள்கையில் பாடுகின்றார்.
சொற்பிரிப்பு
அறிவுற்ற சிந்தையராய் எழுந்தே அதிசயித்து உச்சிமேல் அங்கை கூப்பிவெறி உற்ற கொன்றையினார் மகிழ்ந்த விண்இழி கோயிலில் சென்று புக்குமறி உற்ற கையரைத் தோணி மேல்முன் வணங்கும் படி அங்குக் கண்டு வாழ்ந்துகுறியில் பெருகும் திருப்பதிகம் குலவிய கொள்கையில் பாடுகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

557

மைம் மரு பூங்குழல் என்று எடுத்து மாறில் பெரும் திருத்தோணி தன் மேல்கொம்மை முலையினாள் கூட நீடு கோலம் குலாவு மிழலை தன்னில்செம்மை தரு விண்ணிழிந்த கோயில் திகழ்ந்தபடி இது என் கொல் என்றுமெய்ம்மை விளங்கும் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தனர் வேதவாயர்.
சொற்பிரிப்பு
மைம்மரு பூங்குழல் என்று எடுத்து மாறில் பெரும் திருத்தோணி தன்மேல்கொம்மை முலையினாள் கூட நீடு கோலம் குலாவு மிழலை தன்னில்செம்மை தரு விண் இழிந்த கோயில் திகழ்ந்த படி இது என்கொல் என்றுமெய்ம்மை விளங்கும் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தனர் வேத வாயர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

558

செஞ்சொல் மலர்ந்த திருப்பதிகம் பாடித் திருக் கடைக் காப்புச் சாத்திஅஞ்சலி கூப்பி விழுந்தெழுவார் ஆனந்த வெள்ளம் அலைப்பப் போந்துமஞ்சிவர் சோலைப் புகலி மேவும் மா மறையோர் தமை நோக்கி வாய்மைநெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த நீர்மைத் திறத்தை அருள் செய்கின்றார்.
சொற்பிரிப்பு
செஞ்சொல் மலர்ந்த திருப்பதிகம் பாடித் திருக்கடைக் காப்புச் சாத்திஅஞ்சலி கூப்பி விழுந்து எழுவார் ஆனந்த வெள்ளம் அலைப்பப் போந்துமஞ்சிவர் சோலைப் புகலி மேவும் மாமறையோர் தமை நோக்கி வாய்மைநெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த நீர்மைத் திறத்தை அருள் செய்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

559

பிரம புரத்தில் அமர்ந்த முக்கட் பெரிய பிரான் பெருமாட்டி யோடும்விரவிய தானங்கள் எங்கும் சென்று விரும்பிய கோலம் பணிந்து போற்றிவருவது மேற் கொண்ட காதல் கண்டு அங்கு அமர்ந்த வகை இங்கு அளித்தது என்றுதெரிய உரைத் தருள் செய்து நீங்கள் சிரபுர மாநகர் செல்லும் என்றார்.
சொற்பிரிப்பு
பிரம புரத்தில் அமர்ந்த முக்கண் பெரிய பிரான் பெருமாட்டியோடும்விரவிய தானங்கள் எங்கும் சென்று விரும்பிய கோலம் பணிந்து போற்றிவருவது மேல்கொண்ட காதல் கண்டு அங்கு அமர்ந்த வகை இங்கு அளித்தது என்றுதெரிய உரைத்து அருள் செய்து நீங்கள் சிரபுர மாநகர் செல்லும் என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

560

என்று கவுணியப் பிள்ளையார் தாம் இயம்பப் பணிந்தருள் ஏற்றுக் கொண்டேஒன்றிய காதலின் உள்ளம் அங்கண் ஒழிய ஒருவாறு அகன்று போந்துமன்றுள் நடம் புரிந்தார் மகிழ்ந்த தானம் பலவும் வணங்கிச் சென்றுநின்ற புகழ்த் தோணி நீடுவாரைப் பணியும் நியதியராய் உறைந்தார்.
சொற்பிரிப்பு
என்று கவுணியப் பிள்ளையார் தாம் இயம்பப் பணிந்து அருள் ஏற்றுக் கொண்டேஒன்றிய காதலின் உள்ளம் அங்கண் ஒழிய ஒருவாறு அகன்று போந்துமன்றுள் நடம்புரிந்தார் மகிழ்ந்த தானம் பலவும் வணங்கிச் சென்றுநின்ற புகழ்த்தோணி நீடுவாரைப் பணியும் நியதியராய் உறைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

561

சிரபுரத்து அந்தணர் சென்ற பின்னைத் திருவீழி மேவிய செல்வர் பாதம்பரவுதல் செய்து பணிந்து நாளும் பண்பின் வழாத் திருத் தொண்டர் சூழஉரவுத் தமிழ்த் தொடை மாலை சாத்தி ஓங்கிய நாவுக்கரசரோடும்விரவிப் பெருகிய நண்பு கூர மேவி இனிது அங்கு உறையும் நாளில்.
சொற்பிரிப்பு
சிரபுரத்து அந்தணர் சென்ற பின்னைத் திருவீழி மேவிய செல்வர் பாதம்பரவுதல் செய்து பணிந்து நாளும் பண்பின் வழாத் திருத்தொண்டர் சூழஉரவுத் தமிழ்த்தொடை மாலை சாத்தி ஓங்கிய நாவுக்கரசரோடும்விரவிப் பெருகிய நண்பு கூரமேவி இனிது அங்கு உறையும் நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

562

மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி மன் உயிர்கள் கண் சாம்பி உணவு மாறிவிண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை ஆற்றா மிக்க பெரும் பசி உலகில் விரவக் கண்டுபண் அமரும் மொழி உமையாள் முலையின் ஞானப் பாலறா வாயருடன் அரசும் பார் மேல்கண் நுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ என்று கருத்தில் கொண்டார்.
சொற்பிரிப்பு
மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி மன்உயிர்கள் கண் சாம்பி உணவு மாறிவிண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை ஆற்றா மிக்கபெரும் பசி உலகில் விரவக் கண்டுபண் அமரும் மொழி உமையாள் முலையின் ஞானப் பாலறாவாயருடன் அரசும் பார்மேல்கண் நுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ என்று கருத்தில் கொண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

563

வானாகி நிலனாகி அனலுமாகி மாருதமாய் இரு சுடராய் நீரும் ஆகிஊனாகி உயிராகி உணர்வுமாகி உலகங்கள் அனைத்துமாய் உலகுக்கு அப்பால்ஆனாத வடிவாகி நின்றார் செய்ய அடி பரவி அன்று இரவு துயிலும் போதுகான் ஆடு கங்காளர் மிழலை மூதூர் காதலித்தார் கனவில் அணைந்து அருளிச் செய்வார்.
சொற்பிரிப்பு
வான்ஆகி நிலன்ஆகி அனலும் ஆகி மாருதமாய் இருசுடராய் நீரும் ஆகிஊன்ஆகி உயிர்ஆகி உணர்வும் ஆகி உலகங்கள் அனைத்துமாய் உலகுக்கு அப்பால்ஆனாத வடிவுஆகி நின்றார் செய்ய அடி பரவி அன்று இரவு துயிலும் போதுகானாடு கங்காளர் மிழலை மூதூர் காதலித்தார் கனவில் அணைந்தருளிச் செய்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

564

உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய உறுபசி நோய் உமை அடையாது எனினும் உம்பால்நிலவு சிவ நெறி சார்ந்தோர் தம்மை வாட்டம் நீங்குதற்கு நித்தம் ஓர் ஓர் காசு நீடும்இலகு மணிப் பீடத்துக் குணக்கும் மேற்கும் யாமளித்தோம் உமக்கு இந்தக் காலம் தீர்ந்தால்அலகில் புகழீர் தவிர்வ தாகும் என்றே அருள் புரிந்தார் திருவீழி மிழலை ஐயர்.
சொற்பிரிப்பு
உலகு இயல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீயஉறு பசிநோய் உமை அடையாது எனினும் உம்பால்நிலவு சிவநெறி சார்ந்தோர் தம்மை வாட்டம் நீக்குதற்கு நித்தம் ஒர்ஓர் காசு நீடும்இலகுமணிப் பீடத்துக் குணக்கும் மேற்கும்யாம் அளித்தோம் உமக்கு இந்தக் காலம் தீர்ந்தால்அலகில் புகழீர் தவிர்வது ஆகும் என்றே அருள்புரிந்தார் திருவீழி மிழலை ஐயர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

565

தம்பிரான் அருள் புரிந்து கனவின் நீங்கச் சண்பையர் இள ஏறு தாமும் உணர்ந்துநம்பிரான் அருள் இருந்த வண்ணம் என்றே நாவின் இசை அரசரொடும் கூட நண்ணிவம்புலா மலர் இதழி வீழிநாதர் மணிக் கோயில் வலம் செய்யப் புகுந்த வேலைஅம்பிகா பதி அருளால் பிள்ளையார் தாம் அபிமுகத்துப் பீடிகை மேல் காசு கண்டார்.
சொற்பிரிப்பு
தம்பிரான் அருள்புரிந்து கனவின் நீங்கச் சண்பையார் இள ஏறு தாம் உணர்ந்துநம்பிரான் அருள் இருந்த வண்ணம் என்றே நாவின் இசை அரசரொடும் கூட நண்ணிவம்புலா மலர் இதழி வீழி நாதர் மணிக் கோயில் வலம்செய்யப் புகுந்த வேலைஅம்பிகாபதி அருளால் பிள்ளையார் தாம் அபிமுகத்துப் பீடிகைமேல் காசு கண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

566

காதலொடும் தொழுது எடுத்துக் கொண்டு நின்று கை குவித்துப் பெரு மகிழ்ச்சி கலந்துபொங்கநாதர் விரும்பு அடியார்கள் நாளும் நாளும் நல் விருந்தாய் உண்பதற்கு வருக என்றுதீது இல் பறை நிகழ்வித்துச் சென்ற தொண்டர் திருவமுது கறி நெய்பால் தயிர் என்று இன்னஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண் இருதிறத்துப் பெரும் தவரும் இருந்த நாளில்.
சொற்பிரிப்பு
காதலொடும் தொழுது எடுத்துக் கொண்டு நின்று கைகுவித்துப் பெருமகிழ்ச்சி கலந்து பொங்கநாதர் விரும்பு அடியார்கள் நாளும் நாளும் நல்விருந்தாய் உண்பதற்கு வருக என்றுதீதில் பறை நிகழ்வித்துச் சென்ற தொண்டர் திருஅமுது கறி நெய் பால் தயிர் என்று இன்னஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண் இருதிறத்துப் பெருந்தவரும் இருந்த நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

567

நாவினுக்கு வேந்தர் திரு மடத்தில் தொண்டர் நாட் கூறு திரு அமுது செய்யக் கண்டுசே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம் திருமடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கித்தீவினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர் திரு அமுது காலத்தால் ஆக்கி இங்குமேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம் விளைந்தவாறு என் கொலோ விளம்பும் என்றார்.
சொற்பிரிப்பு
நாவினுக்கு வேந்தர் திருமடத்தில் தொண்டர் நாட்கூறு திருஅமுது செய்யக் கண்டுசே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம் திருமடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கித்தீவினைக்கு நீர் என்றும் அடைவு இலாதீர் திருஅமுது காலத்தால் ஆக்கி இங்குமேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம் விளைந்தவாறு என்கொலோ விளம்பும் என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

568

திருமறையோர் தலைவர் தாம் அருளிச் செய்யத் திருமடத்தில் அமுது அமைப்போர் செப்புவார்கள்ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை உடையவர் பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டுகருதிய எல்லாம் கொள்ள வேண்டிச் சென்றால் காசு தனை வாசி பட வேண்டும் என்பார்பெரு முனிவர் வாகீசர் பெற்ற காசு பேணியே கொள்வர் இது பிற்பாடு என்றார்.
சொற்பிரிப்பு
திருமறையோர் தலைவர் தாம் அருளிச் செய்யத் திருமடத்தில் அமுது அமைப்போர் செப்புவார்கள்ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை உடையவர்பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டுகருதிய எல்லாம் கொள்ள வேண்டிச் சென்றால் காசு தனை வாசிபட வேண்டும் என்பார்பெருமுனிவர் வாகீசர் பெற்ற காசு பேணியே கொள்வர் இது பிற்பாடு என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

569

திரு ஞான சம்பந்தர் அதனைக் கேட்டுச் சிந்திப்பார் சிவபெருமான் நமக்குத் தந்தஒரு காசு வாசிபட மற்றக் காசு நன்று ஆகி வாசி படாது ஒழிவான் அந்தப்பெரு வாய்மைத் திருநாவுக்கரசர் தொண்டால் பெறும் காசாம் ஆதலினால் பெரியோன் தன்னைவருநாள்கள் தரும் காசு வாசி தீரப் பாடுவன் என்று எண்ணியது மனத்துள் கொண்டார்.
சொற்பிரிப்பு
திருஞான சம்பந்தர் அதனைக் கேட்டுச் சிந்திப்பார் சிவபெருமான் நமக்குத் தந்தஒரு காசு வாசிபட மற்றக் காசு நன்று ஆகி வாசிபடாது ஒழிவான் அந்தப்பெருவாய்மைத் திருநாவுக்கரசர் தொண்டால் பெறும் காசாம் ஆதலினால் பெரியோன் தன்னைவருநாள்கள் தரும் காசு வாசி தீரப் பாடுவன் என்று எண்ணி அது மனத்துள் கொண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

570

மற்றை நாள் தம்பிரான் கோயில் புக்கு வாசி தீர்த்து அருளும் எனப் பதிகம் பாடிப்பெற்றபடி நல் காசு கொண்டு மாந்தர் பெயர்ந்து போய் ஆவண வீதியினில் காட்டநல் தவத்தீர் இக் காசு சால நன்று வேண்டுவன நாம் தருவோம் என்று நல்கஅற்றை நாள் தொடங்கி நாள் கூறு தன்னில் அடியவரை அமுது செய்வித்து ஆர்வம் மிக்கார்.
சொற்பிரிப்பு
மற்றை நாள் தம்பிரான் கோயில் புக்கு வாசி தீர்த்து அருளும் எனப் பதிகம் பாடிப்பெற்ற படி நற்காசு கொண்டு மாந்தர் பெயர்ந்து போய் ஆவண வீதியினில் காட்டநற்றவத்தீர் இக்காசு சால நன்று வேண்டுவன நாம் தருவோம்” என்று நல்கஅற்றை நாள் தொடங்கி நாள் கூறு தன்னில் அடியவரை அமுது செய்வித்து ஆர்வம் மிக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

571

அருவிலையில் பெரும் காசும் அவையே ஆகி அமுது செய்யத் தொண்டர் அளவிறந்துபொங்கிவரும் அவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும் மகிழ்ந்து உண்ண இன் அடிசில் மாளாது ஆகத்திருமுடி மேல் திங்களொடு கங்கை சூடும் சிவ பெருமான் அருள் செய்ய சிறப்பின் மிக்கபெருமை தரு சண்பை நகர் வேந்தர் நாவுக்கரசர் இவர் பெரும் சோற்றுப் பிறங்கல் ஈந்தார்.
சொற்பிரிப்பு
அருவிலையில் பெரும்காசும் அவையே ஆகி அமுது செய்யத் தொண்டர் அளவு இறந்து பொங்கிவரும் அவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும் மகிழ்ந்து உண்ண இன்அடிசில் மாளாதாகத்திருமுடிமேல் திங்களொடு கங்கை சூடும் சிவபெருமான் அருள்செய்யச் சிறப்பின் மிக்கபெருமை தரு சண்பை நகர் வேந்தர் நாவுக்கரசர் இவர் பெரும் சோற்றுப் பிறங்கல் ஈந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

572

அவனி மிசை மழை பொழிய உணவு மல்கி அனைத்து உயிரும் துயர் நீங்கி அருளினாலேபுவனம் எலாம் பொலிவு எய்தும் காலம் எய்தப் புரிசடையார் கழல் பலநாள் போற்றி வைகித்தவ முனிவர் சொல் வேந்தரோடும் கூடத் தம்பிரான் அருள் பெற்றுத் தலத்தின் மீதுசிவன் மகிழும் தானங்கள் வணங்கப் போவார் தென் திருவாஞ்சிய மூதூர் சென்று சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
அவனிமிசை மழை பொழிய உணவு மல்கி அனைத்து உயிரும் துயர் நீங்கி அருளினாலேபுவனம் எலாம் பொலிவு எய்தும் காலம் எய்தப் புரிசடையார் கழல் பலநாள் போற்றி வைகித்தவமுனிவர் சொல் வேந்தரோடும் கூடத் தம்பிரான் அருள்பெற்றுத் தலத்தின் மீதுசிவன் மகிழும் தானங்கள் வணங்கப் போவார் தென் திருவாஞ்சிய மூதூர் சென்று சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

573

நீடு திரு வாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண் நீல மிடற்று அருமணியை வணங்கிப் போற்றிப்பாடொலி நீர்த் தலையாலங்காடு மாடு பரமர் பெருவேளூரும் பணிந்து பாடிநாடு புகழ்த் தனிச் சாத்தங் குடியில் நண்ணி நம்பர் திருக்கரவீரம் நயந்து பாடித்தேடு மறைக்கு அரியார் தம் விளமர் போற்றித் திருவாரூர் தொழ நினைந்து சென்று புக்கார்.
சொற்பிரிப்பு
நீடு திருவாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண் நீலமிடற்று அருமணியை வணங்கிப் போற்றிப்பாடு ஒலி நீர்த் தலை ஆலங்காடு மாடு பரமர் பெருவேளூரும் பணிந்து பாடிநாடு புகழ்த் தனிச் சாத்தங்குடியில் நண்ணி நம்பர் திருக்கரவீரம் நயந்து பாடித்தேடும் மறைக்கு அரியார் தம் விளமர் போற்றித் திருஆரூர் தொழ நினைந்து சென்று புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

574

நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து நலம் கொள் திருக் காறாயில் நண்ணி ஏத்திப்பைம் புனல் மென் பணைத்தேவூர் அணைந்து போற்றிப் பரமர் திருநெல்லிக்காப் பணிந்து பாடிஉம்பர் பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர் ஓங்கு புகழ்த் திருக் கொள்ளிக்காடும் போற்றிசெம் பொன் மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தித் திருமலி வெண்துறை தொழுவான் சென்று சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
நம்பர் மகிழ் திருஆரூர் வணங்கிப் போந்து நலம்கொள் திருக்காறாயில் நண்ணி ஏத்திப்பைம்புனல் மென் பணைத் தேவூர் அணைந்து போற்றிப் பரமர் திருநெல்லிக்காப் பணிந்து பாடிஉம்பர்பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர் ஓங்கு புகழ்த் திருக்கொள்ளிக்காடும் போற்றிச்செம்பொன் மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தித் திருமலி வெண்டுறை தொழுவான் சென்று சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

575

மற்றவ்வூர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி மால் அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம்பற்பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப் பரவும் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தக்கற்றவர் வாழ் தண்தலை நீள் நெறி உள்ளிட்ட கனக மதில் திருக்களரும் கருதார் வேள்விசெற்றவர் சேர் பதி பிறவும் சென்று போற்றித் திருமறைக் காட்டு அதன் மருங்கு சேர்ந்தார் அன்றே.
சொற்பிரிப்பு
மற்று அவ்வூர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி மால் அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம்பற்பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப்பரவு திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தக்கற்றவர் வாழ் தண்டலை நீள்நெறி உள்ளிட்ட கனக மதில் திருக்களரும் கருதார் வேள்விசெற்றவர் சேர் பதி பிறவும் சென்று போற்றித் திருமறைக்காட்டு அதன் மருங்கு சேர்ந்தார் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

576

காரமண் வெஞ்சுரம் அருளால் கடந்தார் தாமும் கடற்காழிக் கவுணியர் தம் தலைவர் தாமும்சேர எழுந்தருளிய அப் பேறு கேட்டுத் திருமறைக்காட்டு அகன்பதியோர் சிறப்பில் பொங்கிஊர் அடைய அலங்கரித்து விழவு கொள்ள உயர் கமுகு கதலி நிறை குடம் தீபங்கள்வார் முரச மங்கள நாதங்கள் மல்க எதிர் கொள்ள அடியருடன் மகிழ்ந்து வந்தார்.
சொற்பிரிப்பு
கார் அமண் வெஞ்சுரம் அருளால் கடந்தார் தாமும் கடல் காழிக் கவுணியர் தம் தலைவர் தாமும்சேர எழுந்தருளிய அப்பேறு கேட்டுத் திருமறைக்காட்டு அகன்பதியோர் சிறப்பில் பொங்கிஊர் அடைய அலங்கரித்து விழவு கொள்ள உயர்கமுகு கதலி நிறை குடம் தீபங்கள்வார்முரசம் மங்கல நாதங்கள் மல்க எதிர்கொள்ள அடியருடன் மகிழ்ந்து வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

577

முன் அணைந்த திருநாவுக்கரசர் தம்மை முறைமையால் எதிர் கொண்டு களிப்பின் மூழ்கிப்பின் அணைய எழுந்து அருளும் பிள்ளையார் தம் பெருகிய பொற்காளத்தின் ஓசை கேட்டுச்சென்னி மிசைக் கரம் குவித்து முன்பு சென்று சேண் நிலத்து வணங்குதலும் திருந்து சண்பைமன்னவரும் மணிமுத்தின் சிவிகை நின்று வந்திழிந்து வணங்கி உடன் மகிழ்ந்து போந்தார்.
சொற்பிரிப்பு
முன் அணைந்த திருநாவுக்கரசர் தம்மை முறைமையால் எதிர்கொண்டு களிப்பின் மூழ்கிப்பின் அணைய எழுந்தருளும் பிள்ளையார் தம் பெருகிய பொன் காளத்தின் ஓசை கேட்டுச்சென்னி மிசைக் கரம் குவித்து முன்பு சென்று சேண் நிலத்து வணங்குதலும் திருந்து சண்பைமன்னவரும் மணிமுத்தின் சிவிகை நின்று வந்து இழிந்து வணங்கிஉடன் மகிழ்ந்து போந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

578

சொல்லரசர் உடன் கூடப் பிள்ளையாரும் தூமணி நீர் மறைக் காட்டுத் தொல்லை மூதூர்மல்கு திரு மறுகின்கண் புகுந்த போது மாதவர்கள் மறையவர்கள் மற்றும் உள்ளோர்எல்லை இல்லா வகை அர என்று எடுத்த ஓசை இரு விசும்பும் திசை எட்டும் நிறைந்து பொங்கிஒல் ஒலி நீர் வேலை ஒலி அடக்கி விண்மேல் உம்பர் நாட்டு அப்புறத்தும் உற்றது அன்றே.
சொற்பிரிப்பு
சொல் அரசர் உடன்கூடப் பிள்ளையாரும் தூமணி நீர் மறைக்காட்டுத் தொல்லை மூதூர்மல்கு திருமறுகின்கண் புகுந்த போது மாதவர்கள் மறையவர்கள் மற்றும் உள்ளோர்எல்லை இல்லா வகை அர என்று எடுத்த ஓசை இருவிசும்பும் திசை எட்டும் நிறைந்து பொங்கிஒல்ஒலி நீர் வேலை ஒலி அடக்கி விண்மேல் உம்பர்நாட்டு அப்புறத்தும் உற்றது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

579

அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற அணி மறுகினூடு எய்தி அருகு சூழ்ந்தகொடி நுடங்கு செழுந்திரு மாளிகையின் முன்னர்க் கோபுரத்தைத் தாழ்ந்து இறைஞ்சிக்குறுகிப் புக்குமுடிவில் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ முன்றில் வலம் கொண்டு நேர் சென்று முன்னாள்படியின் மறை அருச்சித்துக் காப்புச் செய்த பைம் பொன் மணித் திருவாயில் பாங்கு வந்தார்.
சொற்பிரிப்பு
அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற அணி மறுகின் ஊடு எய்தி அருகு சூழ்ந்தகொடி நுடங்கு செழுந்திரு மாளிகையின் முன்னர்க் கோபுரத்தைத் தாழ்ந்து இறைஞ்சிக் குறுகிப் புக்குமுடிவில் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ முன்றில் வலம் கொண்டு நேர் சென்று முன்னாள்படியில் மறை அருச்சித்துக் காப்புச் செய்த பைம்பொன்மணித் திருவாயில் பாங்கு வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

580

அரு மறைகள் திருக்காப்புச் செய்து வைத்த அக்கதவம் திறந்திட அம் மறைகள் ஓதும்பெருகிய அன்புடை அடியார் அணைந்து நீக்கப் பெறாமையினால் அன்று முதலாகப் பின்னைஒரு புடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும் தன்மை உள்ளபடி கேட்டருளி உயர்ந்த சண்பைத்திருமறையோர் தலைவர் வியப்பு எய்தி நின்று திருநாவுக்கரசருக்குச் செப்புகின்றார்.
சொற்பிரிப்பு
அருமறைகள் திருக்காப்புச் செய்து வைத்த அக்கதவம் திறந்திட அம் மறைகள் ஓதும்பெருகிய அன்பு உடை அடியார் அணைந்து நீக்கப் பெறாமையினால் அன்று முதல் ஆகப் பின்னைஒருபுடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும் தன்மை உள்ளபடி கேட்டருளி உயர்ந்த சண்பைத்திருமறையோர் தலைவர் வியப்பு எய்தி நின்று திருநாவுக் கரசருக்குச் செப்புகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

581

அப்பரே வேத வனத்து ஐயர் தம்மை அபிமுகத்துத் திருவாயில் திறந்து புக்கேஎப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும் நீரே இவ்வாயில் திருக்காப்பு நீங்கு மாறுமெய்ப் பொருள் வண் தமிழ் பாடி அருளும் என்ன விளங்கு மொழி வேந்தர் அது மேற்கொண்டு என்னைஇப்பரிசு நீர் அருளிச் செய்தீர் ஆகில் இது செய்வேன் எனப் பதிகம் எடுத்துப் பாட.
சொற்பிரிப்பு
அப்பரே வேத வனத்து ஐயர் தம்மை அபிமுகத்துத் திருவாயில் திறந்து புக்கேஎப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும் நீரே இவ்வாயில் திருக்காப்பு நீங்குமாறுமெய்ப்பொருள் வண் தமிழ் பாடி அருளும் என்ன விளங்கு மொழி வேந்தர் அது மேற்கொண்டு என்னைஇப்பரிசு நீர் அருளிச் செய்தீர் ஆகில்இது செய்வேன் எனப்பதிகம் எடுத்துப் பாட.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

582

பாடிய அப் பதிகப் பாட்டான பத்தும் பாடல் நிரம்பிய பின்னும் பைம் பொன் வாயில்சேடு உயர் பொற்கதவு திருக் காப்பு நீங்காச் செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்துநீடு திருக் கடைக் காப்பில் அரிது வேண்டி நின்று எடுக்கத் திருக்காப்பு நீக்கம் காட்டஆடிய சேவடியார் தம் அடியார் விண்ணோர் ஆர்ப்பு எழுந்த அகிலாண்டம் அனைத்தும் மூழ்க.
சொற்பிரிப்பு
பாடிய அப்பதிகப் பாட்டு ஆன பத்தும்பாடல் நிரம்பிய பின்னும் பைம்பொன் வாயில்சேடுஉயர் பொன்கதவு திருக்காப்பு நீங்காச் செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்துநீடுதிருக் கடைக்காப்பில் அரிது வேண்டி நின்று எடுக்கத் திருக்காப்பு நீக்கம் காட்டஆடிய சேவடியார் தம் அடியார் விண்ணோர் ஆர்ப்பு எழுந்தது அகில அண்டம் அனைத்தும் மூழ்க.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

583

மற்றது கண்ட போதே வாக்கின் மன்னவரை நோக்கிப்பொற்புறு புகலி மன்னர் போற்றிட அவரும் போற்றிஅற்புத நிலையினார்கள் அணி திரு மறைக்காடு ஆளும்கொற்றவர் கோயில் வாயில் நேர்வழி குறுகிப் புக்கார்.
சொற்பிரிப்பு
மற்றது கண்ட போதே வாக்கின் மன்னவரை நோக்கிப்பொற்புறு புகலி மன்னர் போற்றிட அவரும் போற்றிஅற்புத நிலையினார்கள் அணி திருமறைக்காடு ஆளும்கொற்றவர் கோயில் வாயில் நேர்வழி குறுகிப் புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

584

கோயில் உட்புகுவார் உச்சி குவித்த செங்கைகளோடும்தாயிலும் இனிய தங்கள் தம்பிரானாரைக் கண்டார்பாயும் நீர் அருவி கண்கள் தூங்கிடப் படியின் மீதுமேயின மெய்யர் ஆகி விதிர்ப்புற்று விரைவின் வீழ்ந்தார்.
சொற்பிரிப்பு
கோயினுள் புகுவார் உச்சி குவித்த செங்கைகளோடும்தாயினும் இனிய தங்கள் தம்பிரானாரைக் கண்டார்பாயுநீர் அருவி கண்கள் தூங்கிடப் படியின் மீதுமேயின மெய்யர் ஆகி விதிர்ப்பு உற்று விரைவின் வீழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

585

அன்பினுக்கு அளவு காணார் ஆனந்த வெள்ளம் மூழ்கிஎன்பு நெக்கு உருக நோக்கி இறைஞ்சி நேர் விழுந்து நம்பர்முன்பு நிற்பதுவும் ஆற்றார் மொழி தடுமாற ஏத்திமின்புரை சடையார் தம்மைப் பதிகங்கள் விளம்பிப் போந்தார்.
சொற்பிரிப்பு
அன்பினுக்கு அளவு காணார் ஆனந்த வெள்ளம் மூழ்கிஎன்பு நெக்கு உருக நோக்கி இறைஞ்சி நேர் விழுந்து நம்பர்முன்பு நிற்பதுவும் ஆற்றார் மொழி தடுமாற ஏத்திமின் புரை சடையார் தம்மைப் பதிகங்கள் விளம்பிப் போந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

586

புறம்பு வந்து அணைந்த போது புகலி காவலரை நோக்கிநிறம் கிளர் மணிக் கபாடம் நீக்கமும் அடைப்பும் நிற்கத்திறிந்தவாறு அடைக்கப்பாடி அருளும் நீர் என்றார் தீயமறம் புரி அமணர் செய்த வஞ்சனை கடக்க வல்லார்.
சொற்பிரிப்பு
புறம்பு வந்து அணைந்த போது புகலி காவலரை நோக்கிநிறம் கிளர் மணிக் கபாடம் நீக்கமும் அடைப்பும் நிற்கத்திறந்தவாறு அடைக்கப் பாடி அருளும் நீர் என்றார் தீயமறம் புரி அமணர் செய்த வஞ்சனை கடக்க வல்லார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

587

அன்று அரசு அருளிச் செய்ய அருமறைப் பிள்ளையாரும்வென்றி வெள் விடையார் தம்மை விருப்பினால் சதுரம் என்னும்இன் தமிழ்ப் பதிகப் பாடல் இசைத்திட இரண்டு பாலும்நின்ற அக் கதவு காப்பு நிரம்பிட அடைத்ததன்றே.
சொற்பிரிப்பு
அன்று அரசு அருளிச் செய்ய அருமறைப் பிள்ளையாரும்வென்றி வெள்விடையார் தம்மை விருப்பினால் சதுரம் என்னும்இன்றமிழ்ப் பதிகப் பாடல் இசைத்திட இரண்டு பாலும்நின்ற அக்கதவு காப்பு நிரம்பிட அடைத்தது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

588

அடைத்திடக் கண்டு சண்பை ஆண்டகையாரும் அஞ்சொல்தொடைத் தமிழாளி யாரும் தொழுது எழத் தொண்டர் ஆர்த்தார்புடைப்பு ஒழிந்து இழிந்தது எங்கும் பூமழை புகலி வேந்தர்நடைத் தமிழ்ப் பதிக மாலை நிரம்பிட நவின்று போற்றி.
சொற்பிரிப்பு
அடைத்திடக் கண்டு சண்பை ஆண்டகையாரும் அஞ்சொல்தொடைத் தமிழ் ஆளியாரும் தொழுது எழத் தொண்டர் ஆர்த்தார்புடைப் பொழிந்து இழிந்தது எங்கும் பூமழை புகலி வேந்தர்நடைத்தமிழ்ப் பதிக மாலை நிரம்பிட நவின்று போற்ற.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

589

அத்திரு வாயில் தன்னில் அற்றை நாள் தொடங்கி நேரேமெய்த்திரு மறைகள் போல மேதினி புக்குப் போற்றவைத்து எதிர் வழக்கம் செய்த வரம்பு இலாப் பெருமையோரைகைத்தலம் குவித்துத் தாழ்ந்து வாழ்ந்தது கடல் சூழ் வையம்.
சொற்பிரிப்பு
அத்திருவாயில் தன்னில் அற்றை நாள் தொடங்கி நேரேமெய்த் திருமறைகள் போல மேதினி புக்குப் போற்றவைத்து எதிர் வழக்கம் செய்த வரம்பிலாப் பெருமையோரைக்கைத்தலம் குவித்துத் தாழ்ந்து வாழ்ந்தது கடல் சூழ் வையம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

590

அருமறை ஆன எல்லாம் அகல் இரு விசும்பில் ஆர்த்துப்பெருமையின் முழங்கப் பஞ்ச நாதமும் பிறங்கி ஓங்கஇரு பெரும் தகையோர் தாமும் எதிர் எதிர் இறைஞ்சிப் போந்துதிரு மடங்களின் முன் புக்கார் செழும்பதி விழவு கொள்ள.
சொற்பிரிப்பு
அருமறை ஆன எல்லாம் அகல் இரு விசும்பில் ஆர்த்துப்பெருமையின் முழங்கப் பஞ்ச நாதமும் பிறங்கி ஓங்கஇருபெரும் தகையோர் தாமும் எதிர்எதிர் இறைஞ்சிப் போந்துதிருமடங்களின் முன் புக்கார் செழும் பதி விழவு கொள்ள.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

591

வேதங்கள் எண்ணில் கோடி மிடைந்து செய் பணியை மிக்கஏதங்கள் நம்பால் நீப்பார் இருவரும் செய்து வைத்தார்நாதம் கொள் வடிவாய் நின்ற நதி பொதி சடையார் செய்யபாதங்கள் போற்றும் மேலோர் பெருமையார் பகரும் நீரார்.
சொற்பிரிப்பு
வேதங்கள் எண்ணில் கோடி மிடைந்து செய் பணியை மிக்கஏதங்கள் நம்பால் நீப்பார் இருவரும் செய்து வைத்தார்நாதங்கொள் வடிவாய் நின்ற நதி பொதி சடையார் செய்யபாதங்கள் போற்றும் மேலோர் பெருமையார் பகரும் நீரார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

592

திருமறை நம்பர் தாம் முன்பு அருள் செய்த அதனைச் செப்பும்ஒருமையில் நின்ற தொண்டர் தம்பிரானார் பால் ஒக்கவரும் அருள் செய்கை தாமே வகுத்திட வல்லோர் என்றால்பெரு மறையுடன் மெய்த் தொண்டர்க்கு இடையீடு பெரிதாம் அன்றே.
சொற்பிரிப்பு
திருமறை நம்பர் தாம் முன்பு அருள் செய்த அதனைச் செப்பும்ஒருமையில் நின்ற தொண்டர் தம்பிரானார் பால் ஒக்கவரும்அருள் செய்கை தாமே வகுத்திட வல்லோர் என்றால்பெருமறை உடன் மெய்த்தொண்டர்க்கு இடையீடு பெரிதாம் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

593

இவ்வகை திருமறைக் காட்டு இறையவர் அருளை உன்னிமெய் வகை தெரிந்த வாக்கின் வேந்தர் தாம் துயிலும் போதில்மை வளர் கண்டர் சைவ வேடத்தால் வந்து வாய்மூர்அவ்விடை இருத்தும் அங்கே வா என்று அங்கு அருளிப் போக.
சொற்பிரிப்பு
இவ்வகை திருமறைக்காட்டு இறையவர் அருளை உன்னிமெய்வகை தெரிந்த வாக்கின் வேந்தர் தாம் துயிலும் போதில்மைவளர் கண்டர் சைவ வேடத்தால் வந்து வாய்மூர்அவ்இடை இருத்தும் அங்கே வா என்று அங்கு அருளிப் போக.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

594

கண்ட அப்போதே கைகள் குவித்து உடன் கடிது செல்வார்மண்டிய காதலோடு மருவுவார் போன்றும் காணார்எண்திசை நோக்குவாருக்கு எய்துவார் போல எய்தாஅண்டர் தம்பிரானார் தம் பின் போயினார் ஆர்வத் தோடும்.
சொற்பிரிப்பு
கண்ட அப்போதே கைகள் குவித்து உடன் கடிது செல்வார்மண்டிய காதலோடு மருவுவார் போன்றும் காணார்எண்டிசை நோக்குவாருக்கு எய்துவார் போல எய்தாஅண்டர் தம் பிரானார் தம்பின் போயினார் ஆர்வத்தோடும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

595

அங்கு அவர் ஏகச் சண்பை ஆண்டகையாரும் அப்பர்எங்கு உற்றது என்று கேட்ப எய்தினார் திருவாய்மூரில்பொங்கிய காதலால் என்று உரைத்திடப் போன தன்மைசங்கை உற்று என்கொல் என்று தாமும் அங்கு அணையப் போந்தார்.
சொற்பிரிப்பு
அங்கவர் ஏகச் சண்பை ஆண்டகையாரும் அப்பர்எங்கு உற்றது என்று கேட்ப எய்தினார் திருவாய்மூரில்பொங்கிய காதலால் என்று உரைத்திடப் போன தன்மைசங்கை உற்று என்கொல் என்று தாமும்அங்கு அணையப் போந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

596

அந்நிலை அணைந்த போதில் அம்பிகை உடனே கூடமன்னிய ஆடல் காட்டத் தளர் இளவள ரும் பாடிச்சென்னியால் வணங்கி வாய்மூர் அரசொடும் சென்று புக்கு அங்குஇன் இயல்பு உற முன் கூடி இருவரும் போற்றி செய்தார்.
சொற்பிரிப்பு
அந்நிலை அணைந்த போதில் அம்பிகை உடனே கூடமன்னிய ஆடல் காட்டத் தளிர் இள வளரும் பாடிச்சென்னியால் வணங்கி வாய்மூர் அரசொடும் சென்று புக்கு அங்குஇன் இயல்பு உற முன் கூடி இருவரும் போற்றி செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

597

நீடு சீர்த் திருவாய் மூரில் நிலவிய சிவனார் தம்மைப்பாடு சொற் பதிகம் தன்னால் பரவி அப் பதியில் வைகிக்கூடு மெய் அன்பு பொங்க இருவரும் கூடி மீண்டுதேடு மா மறைகள் கண்டார் திரு மறைக்காடு சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
நீடு சீர்த் திருவாய்மூரில் நிலவிய சிவனார் தம்மைப்பாடு சொல் பதிகம் தன்னால் பரவி அப்பதியில் வைகிக்கூடு மெய் அன்பு பொங்க இருவரும் கூடி மீண்டுதேடு மாமறைகள் கண்டார் திருமறைக்காடு சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

598

சண்பை நாடு உடைய பிள்ளை தமிழ் மொழித் தலைவரோடுமண் பயில் சீர்த்திச் செல்வ மா மறைக் காட்டு வைகிக்கண் பயில் நெற்றியார் தம் கழல் இணை பணிந்து போற்றிப்பண் பயில் பதிகம் பாடிப் பரவி அங்கு இருந்தார் அன்றே.
சொற்பிரிப்பு
சண்பை நாடு உடைய பிள்ளை தமிழ்மொழித் தலைவரோடுமண் பயில் சீர்த்தி செல்வ மாமறைக் காட்டு வைகிக்கண் பயில் நெற்றியார் தம் கழல் இணை பணிந்து போற்றிப்பண் பயில் பதிகம் பாடிப் பரவி அங்கு இருந்தார் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

599

இவ் வகை இவர்கள் அங்கண் இருந்தனர் ஆக இப்பால்செய் வகை இடையே தப்பும் தென்னவன் பாண்டி நாட்டுமெய் வகை நெறியில் நில்லா வினை அமண் சமயம் மிக்குக்கை வகை முறைமைத் தன்மை கழிய முன் கலங்கும் காலை.
சொற்பிரிப்பு
இவ்வகை இவர்கள் அங்கண் இருந்தனர் ஆக இப்பால்செய்வகை இடையே தப்பும் தென்னவன் பாண்டி நாட்டுமெய்வகை நெறியில் நில்லா வினை அமண் சமயம் மிக்குக்கைவகை முறைமைத் தன்மை கழிய முன் கலங்கும் காலை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

600

தென்னவன் தானும் முன் செய் தீவினைப் பயத்தினாலேஅந் நெறிச் சார்வு தன்னை அறம் என நினைந்து நிற்பமன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கம் ஆகும்நன் நெறி திரிந்து மாறி நவை நெறி நடந்தது அன்றே.
சொற்பிரிப்பு
தென்னவன் தானும் முன் செய் தீவினைப் பயத்தினாலேஅந்நெறிச் சார்வு தன்னை அறம்என நினைந்து நிற்பமன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கம் ஆகும்நன்னெறி திரிந்து மாறி நவை நெறி நடந்தது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

601

பூழியர் தமிழ் நாட்டு உள்ள பொருவில் சீர்ப் பதிகள் எல்லாம்பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச்சூழ் இருள் குழுக்கள் போலத் தொடை மயில் பீலி யோடுமூழி நீர் கையில் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப.
சொற்பிரிப்பு
பூழியர் தமிழ்நாட்டு உள்ளபொருவில் சீர்ப் பதிகள் எல்லாம்பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச்சூழ் இருள் குழுக்கள் போலத் தொடைமயில் பீலியோடுமூழி நீர் கையில் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

602

பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கு மேனிச்செறியுமுக் குடையும் ஆகித் திரிபவர் எங்கும் ஆகிஅறியும் அச் சமய நூலின் அளவினில் அடங்கிச் சைவநெறியினில் சித்தம் செல்லா நிலைமையில் நிகழும் காலை.
சொற்பிரிப்பு
பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச்செறியு முக்குடையும் ஆகித் திரிபவர் எங்கும் ஆகிஅறியும் அச்சமய நூலின் அளவினில் அடங்கிச் சைவநெறியினில் சித்தம் செல்லா நிலைமையில் நிகழும் காலை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

603

வரிச் சிலைத் தென்னவன் தான் உய்வதற்கு வளவர் கோமான்திரு உயிர்த்து அருளும் செல்வப் பாண்டிமா தேவியாரும்குரை கழல் அமைச்சனாராங் குலச் சிறையாரும் என்னும்இருவர் தம் பாங்கும் அன்றிச் சைவம் அங்கு எய்தாதாக.
சொற்பிரிப்பு
வரிசிலைத் தென்னவன் தான் உய்தற்கு வளவர் கோமான்திருஉயிர்த்து அருளும் செல்வப் பாண்டிமா தேவியாரும்குரைகழல் அமைச்சனாராம் குலச்சிறையாரும் என்னும்இருவர் தம் பாங்கும் அன்றிச் சைவம் அங்கு எய்தாதாக.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

604

ஆங்கு அவர் தாங்கள் அங்கண் அரும் பெறல் தமிழ் நாடு உற்றதீங்கினுக்கு அளவு தேற்றாச் சிந்தையில் பரிவு கொண்டேஓங்கிய சைவ வாய்மை ஒழுக்கத்தில் நின்ற தன்மைபூங்கழல் செழியன் முன்பு புலப்படா வகை கொண்டு உய்த்தார்.
சொற்பிரிப்பு
ஆங்கு அவர் தாங்கள் அங்கண் அரும்பெறல் தமிழ்நாடு உற்றதீங்கினுக்கு அளவு தேற்றாச் சிந்தையில் பரிவு கொண்டேஓங்கிய சைவ வாய்மை ஒழுக்கத்தில் நின்ற தன்மைபூங்கழல் செழியன் முன்பு புலப்படா வகைகொண்டு உய்த்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

605

இந் நெறி ஒழுகு கின்றார் ஏழ் உலகு உய்ய வந்தமன்னிய புகலி வேந்தர் வைதிக வாய்மைச் சைவச்செந்நெறி விளக்கு கின்றார் திரு மறைக்காடு சேர்ந்தநல்நிலை கன்னி நாட்டு நல்வினைப் பயத்தால் கேட்டார்.
சொற்பிரிப்பு
இந்நெறி ஒழுகுகின்றார் ஏழ் உலகு உய்ய வந்தமன்னிய புகலி வேந்தர் வைதிக வாய்மைச் சைவச்செந்நெறி விளக்குகின்றார் திருமறைக்காடு சேர்ந்தநன்நிலை கன்னி நாட்டு நல்வினைப் பயத்தால் கேட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

606

கேட்ட அப்பொழுதே சிந்தை கிளர்ந்து எழு மகிழ்ச்சி பொங்கநாள் பொழுது அலர்ந்த செந்தாமரை நகை முகத்தர் ஆகிவாள் படை அமைச்சனாரும் மங்கையர்க்கரசியாரும்சேட் படு புலத்தாரேனும் சென்று அடி பணிந்தார் ஒத்தார்.
சொற்பிரிப்பு
கேட்ட அப்பொழுதே சிந்தை கிளர்ந்து எழு மகிழ்ச்சி பொங்கநாட்பொழுது அலர்ந்த செந்தாமரை நகை முகத்தர் ஆகிவாட்படை அமைச்சனாரும் மங்கையர்க்கு அரசியாரும்சேட்படு புலத்தாரேனும் சென்று அடி பணிந்தார் ஒத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

607

காதலால் மிக்கோர் தாங்கள் கை தொழும் கருத்தினாலேபோது அவிழ் சோலை வேலிப் புகலி காவலனார் செய்யபாதங்கள் பணிமின் என்று பரிசன மாக்கள் தன்மைமா தவம் சுருதி செய்த மா மறைக் காட்டில் விட்டார்.
சொற்பிரிப்பு
காதலால் மிக்கோர் தாங்கள் கைதொழும் கருத்தினாலேபோது அவிழ் சோலை வேலிப் புகலி காவலனார் செய்யபாதங்கள் பணிமின் என்று பரிசன மாக்கள் தம்மைமாதவம் சுருதி செய்த மாமறைக் காட்டில் விட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

608

ஆங்கவர் விட முன் போந்த அறிவுடைமாந்தர் அங்கண்நீங்கி வண்தமிழ் நாட்டு எல்லை பிற்பட நெறியின் ஏகிஞாங்கர் நீர் நாடும் காடும் நதிகளும் கடந்து வந்துதேன் கமழ் கைதை நெய்தல் திருமறைக் காடு சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
ஆங்கு அவர் விட முன் போந்த அறிவுடை மாந்தர் அங்கண்நீங்கி வண் தமிழ்நாட்டு எல்லை பிற்பட நெறியின் ஏகிஞாங்கர் நீர் நாடும் காடும் நதிகளும் கடந்து வந்துதேங்கமழ் கைதை நெய்தல் திருமறைக்காடு சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

609

திருமறைக்காடு நண்ணிச் சிரபுர நகரில் வந்தஅருமறைப் பிள்ளையார் தாம் அமர்ந்து இனிதருளும் செல்வப்பெருமடத்து அணைய வந்து பெருகிய விருப்பில் தாங்கள்வரு முறைத் தன்மை எல்லாம் வாயில் காவலர்க்குச் சொன்னார்.
சொற்பிரிப்பு
திருமறைக்காடு நண்ணிச் சிரபுர நகரில் வந்தஅருமறைப் பிள்ளையார் தாம் அமர்ந்தினிது அருளும் செல்வப்பெருமடத்து அணைய வந்து பெருகிய விருப்பில் தாங்கள்வருமுறைத் தன்மை எல்லாம் வாயில் காவலர்க்குச் சொன்னார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

610

மற்றவர் சென்று புக்கு வளவர் கோன் மகளார் தென்னர்கொற்றவன் தேவி யாரும் குலச்சிறையாரும் ஏவப்பொற்கழல் பணிய வந்தோம் எனச் சிலர் புறத்து வந்துசொற்றனர் என்று போற்றித் தொழுது விண்ணப்பம் செய்தார்.
சொற்பிரிப்பு
மற்றவர் சென்று புக்கு வளவர் கோன் மகளார் தென்னர்கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் ஏவப்பொற்கழல் பணிய வந்தோம் எனச் சிலர் புறத்து வந்துசொற்றனர் என்று போற்றித் தொழுது விண்ணப்பம் செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

611

புகலி காவலர் தாம் கேட்டுப் பொருவிலா அருள் முன் கூரஅகம் மலர்ந்து அவர்கள் தம்மை அழையும் என்று அருளிச் செய்யநகை முகச் செவ்வி நோக்கி நல்தவ மாந்தர் கூவத்தகவுடை மாந்தர் புக்குத் தலையினால் வணங்கி நின்றார்.
சொற்பிரிப்பு
புகலி காவலர் தாம் கேட்டுப் பொருவிலா அருள் முன் கூரஅகமலர்ந்து அவர்கள் தம்மை அழையும் என்றுஅருளிச் செய்யநகை முகச் செவ்வி நோக்கி நல்தவ மாந்தர் கூவத்தகவு உடை மாந்தர் புக்குத் தலையினால் வணங்கி நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

612

நின்றவர் தம்மை நோக்கி நிகரில் சீர்ச் சண்பை மன்னர்மன்றல் அங்குழலியாராம் மானியார் தமக்கும் மானக்குன்று என நின்ற மெய்ம்மை குலச் சிறையார் தமக்கும்நன்று தான் வினவக் கூறி நல் பதம் போற்றுவார்கள்.
சொற்பிரிப்பு
நின்றவர் தம்மை நோக்கி நிகரில் சீர்ச் சண்பை மன்னர்மன்றல் அம் குழலியாராம் மானியார் தமக்கும் மானக்குன்று என நின்ற மெய்ம்மைக் குலச்சிறையார் தமக்கும்நன்று தான் வினவக் கூறி நற்பதம் போற்றுவார்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

613

கன்னி நாடு அமணர் தம்பால் கட்டு அழிந்து இழிந்து தங்கள்மன்னனும் அவர்கள் மாயத்து அழுந்த மா தேவியாரும்கொன்னவில் அயில் வேல் வென்றிக் குலச்சிறையாரும் கூடிஇந்நிலை புகலி வேந்தர்க்கு இயம்பும் என்று இறைஞ்சி விட்டார்.
சொற்பிரிப்பு
கன்னி நாடு அமணர் தம்மால் கட்டு அழிந்து இழிந்து தங்கள்மன்னனும் அவர்கள் மாயத்து அழுந்த மாதேவியாரும்கொன்நவில் அயில் வேல் வென்றிக் குலச்சிறையாரும் கூடிஇந்நிலை புகலி வேந்தர்க்கு இயம்பும் என்று இறைஞ்சி விட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

614

என்று அவர்கள் விண்ணப்பம் செய்த பின்னர் ஏறு உயர்த்த சிவபெருமான் தொண்டர்எல்லாம்நன்று நமை ஆள் உடைய நாதன் பாதம் நண்ணாத எண்ணில் அமண் குண்டர் தம்மைவென்றருளி வேதநூல் நெறியே ஆக்கி வெண்ணீறு வேந்தனையும் இடுவித்து அங்குநின்ற செயல் சிவனடியார் செயலே ஆக நினைந்து அருள வேண்டும் என நின்று போற்ற.
சொற்பிரிப்பு
என்று அவர்கள் விண்ணப்பம் செய்த பின்னர் ஏறு உயர்த்த சிவபெருமான் தொண்டர் எல்லாம்நன்று நமை ஆளுடைய நாதன் பாதம் நண்ணாத எண்ணில் அமண் குண்டர் தம்மைவென்று அருளி வேதநூல் நெறியே ஆக்கி வெண்நீறு வேந்தனையும் இடுவித்து அங்குநின்ற செயல் சிவன் அடியார் செயலே ஆக நினைந்து அருள வேண்டும் என நின்று போற்ற.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

615

மற்று அவர்கட்கு அருள் புரிந்து பிள்ளையாரும் வாகீச முனிவருடன் கூடச் சென்றுபெற்றம் உயர்த்தவர் பாதம் பணிந்து போந்து பெரிய திருக் கோபுரத்துள் இருந்து தென் நாடுஉற்ற செயல் பாண்டிமா தேவியாரும் உரிமை அமைச்சரும் உரைத்து விட்ட வார்த்தைசொற்றனி மன்னவருக்குப் புகலி மன்னர் சொல்லி எழுந்தருளுதற்குத் துணிந்தபோது.
சொற்பிரிப்பு
மற்றவர்கட்கு அருள்புரிந்து பிள்ளையாரும் வாகீச முனிவருடன் கூடச் சென்றுபெற்றம் உயர்த்தவர் பாதம் பணிந்து போந்து பெரிய திருக்கோபுரத்துள் இருந்து தென்நாடுஉற்ற செயல் பாண்டிமா தேவியாரும் உரிமை அமைச்சரும் உரைத்து விட்ட வார்த்தைசொல் தனி மன்னவருக்குப் புகலி மன்னர் சொல்லி எழுந்து அருளுதற்குத் துணிந்த போது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

616

அரசு அருளிச் செய்கிறார் பிள்ளாய் அந்த அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லைஉரை செய்வது உளது உறு கோள் தானும் தீய எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது என்னபரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது எனப் பகர்ந்து பரமர் செய்யவிரை செய் மலர்த்தாள் போற்றிப் புகலி வேந்தர் வேயுறு தோளியை எடுத்து விளம்பினாரே.
சொற்பிரிப்பு
அரசு அருளிச் செய்கின்றார் பிள்ளாய் அந்த அமண்கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லைஉரை செய்வது உளது உறுகோள் தானும் தீய எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது என்னப்பரசுவது நம்பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது எனப் பகர்ந்து பரமர் செய்யவிரைசெய் மலர்த்தாள் போற்றிப் புகலி வேந்தர் வேய்உறு தோளியை எடுத்து விளம்பினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

617

சிரபுரத்துப் பிள்ளையார் அருளிச் செய்த திருப்பதிகம் கேட்டதற்பின் திருந்து நாவுக்குஅரசும் அதற்கு உடன்பாடு செய்து தாமும் அவர் முன்னே எழுந்தருள அமைந்த போதுபுரம் எரித்தார் திருமகனார் அப்பர் இந்தப் புனல் நாட்டில் எழுந்தருளி இருப்பீர் என்றுகரகமலம் குவித்து இறைஞ்சித் தவிர்ப்ப வாக்கின் காவலரும் தொழுது அரிதாம் கருத்தில் நேர்ந்தார்.
சொற்பிரிப்பு
சிரபுரத்துப் பிள்ளையார் அருளிச் செய்த திருப்பதிகம் கேட்டதற் பின் திருந்து நாவுக்குஅரசும் அதற்கு உடன்பாடு செய்து தாமும் அவர் முன்னே எழுந்தருளி அமைந்த போதுபுரம் எரித்தார் திருமகனார் அப்பர் இந்தப் புனல்நாட்டில் எழுந்தருளி இருப்பீர் என்றுகரகமலம் குவித்து இறைஞ்சித் தவிர்ப்ப வாக்கின் காவலரும் தொழுது அரிதாம் கருத்தில் நேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

618

வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும் வேதவனத்து அருமணியை மீண்டும் புக்குப்பாதம் உறப் பணிந்து எழுந்து பாடிப் போற்றிப் பரசி அருள் பெற்று விடை கொண்டு போந்துமாதவத்து வாகீசர் மறாத வண்ணம் வணங்கி அருள் செய்து விடை கொடுத்து மன்னும்காதலினால் அருமையுறக் கலந்து நீங்கிக் கதிர்ச் சிவிகை மருங்கு அணைந்தார் காழி நாதர்.
சொற்பிரிப்பு
வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும் வேத வனத்து அருமணியை மீண்டும் புக்குப்பாதம் உறப் பணிந்து எழுந்து பாடிப் போற்றிப் பரசி அருள் பெற்று விடை கொண்டு போந்துமாதவத்து வாகீசர் மறாத வண்ணம் வணங்கி அருள் செய்து விடை கொடுத்து மன்னும்காதலினால் அருமை உறக் கலந்து நீங்கிக் கதிர்ச் சிவிகை மருங்கு அணைந்தார் காழி நாதர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

619

திருநாவுக் கரசரும் அங்கு இருந்தார் இப்பால் திருஞான சம்பந்தர் செழுநீர் முத்தின்பெருநாமச் சிவிகையின் மீது ஏறிப் பெற்றம் உயர்த்தவர் தாள் சென்னியின் மேல் பேணும் உள்ளத்துஒரு நாமத்து அஞ்சு எழுத்தும் ஓதி வெண்ணீற்று ஒளி விளங்கும் திருமேனி தொழுதார் நெஞ்சில்வருநாமத்து அன்பு உருகும் கடலாம் என்ன மாதவர் ஆர்ப்பு ஒலி வையம் நிறைந்தது அன்றே.
சொற்பிரிப்பு
திருநாவுக் கரசரும் அங்கு இருந்தார் இப்பால் திருஞான சம்பந்தர் செழுநீர் முத்தின்பெருநாமச் சிவிகையின் மீது ஏறிப் பெற்றம் உயர்த்தவர் தாள் சென்னியின் மேல் பேணும் உள்ளத்துஒருநாமத்து அஞ்செழுத்தும் ஓதி வெண் நீற்று ஒளி விளங்கும் திருமேனி தொழுதார் நெஞ்சில்வருநாமத்து அன்பு உருகும் கடலாம் என்ன மாதவர் ஆர்ப்பு ஒலி வையம் நிறைந்தது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

620

பொங்கி எழும் திருத்தொண்டர் போற்று எடுப்பார் நால் திசையும்மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும்சங்க படகம் பேரி தாரை காளம் தாளம்எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப.
சொற்பிரிப்பு
பொங்கி எழும் திருத்தொண்டர் போற்று எடுப்பார் நாற்றிசையும்மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும்சங்கம் படகம் பேரி தாரை காளம் தாளம்எங்கும் எழுந்து எதிர் இயம்ப இருவிசும்பு கொடிதூர்ப்ப.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

621

மலர் மாரி பொழிந்து இழிய மங்கல வாழ்த்து இனிது இசைப்பஅலர் வாசப் புனல் குடங்கள் அணி விளக்குத் தூபமுடன்நிலை நீடு தோரணங்கள் நிரைத்து அடியார் எதிர் கொள்ளக்கலை மாலை மதிச் சடையார் இடம் பலவும் கை தொழுவார்.
சொற்பிரிப்பு
மலர்மாரி பொழிந்து இழிய மங்கல வாழ்த்து இனிது இசைப்பஅலர்வாசப் புனல் குடங்கள் அணி விளக்குத் தூபம் உடன்நிலைநீடு தோரணங்கள் நிரைத்து அடியார் எதிர்கொள்ளக்கலைமாலை மதிச்சடையார் இடம் பலவும் கை தொழுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

622

தெண் திரை சூழ் கடல் கானல் திரு அகத்தியான் பள்ளிஅண்டர் பிரான் கழல் வணங்கி அருந்தமிழ் மா மறை பாடிக்கொண்டல் பயில் மணல் கோடு சூழ் கோடிக் குழகர் தமைத்தொண்டருடன் தொழுது அணைந்தார் தோணிபுரத் தோன்றலார்.
சொற்பிரிப்பு
தெண்திரை சூழ் கடல்கானல் திருஅகத்தியான் பள்ளிஅண்டர் பிரான் கழல்வணங்கி அரும்தமிழ் மாமறைபாடிக்கொண்டல் பயில் மணல்கோடு சூழ் கோடிக் குழகர் தமைத்தொண்டருடன் தொழுது அணைந்தார் தோணிபுரத் தோன்றலார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

623

கண் ஆர்ந்த திரு நுதலார் மகிழ்ந்த கடிக்குளம் இறைஞ்சிஎண் ஆர்ந்த திரு இடும்பா வனம் ஏத்தி எழுந்தருளிமண் ஆர்ந்த பதி பிறவும் மகிழ் தரும் அன்பால் வணங்கிப்பண் ஆர்ந்த தமிழ் பாடிப் பரவியே செல்கின்றார்.
சொற்பிரிப்பு
கண் ஆர்ந்த திருநுதலார் மகிழ்ந்த கடிக்குளம் இறைஞ்சிஎண் ஆர்ந்த திரு இடும்பாவனம் ஏத்தி எழுந்தருளிமண் ஆர்ந்த பதி பிறவும் மகிழ்தரும் அன்பால் வணங்கிப்பண் ஆர்ந்த தமிழ் பாடிப் பரவியே செல்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

624

திரு உசாத் தானத்துத் தேவர் பிரான் கழல் பணிந்துமருவிய செந்தமிழ்ப் பதிகமால் போற்றும் படி பாடிஇரு வினையும் பற்று அறுப்பார் எண்ணிறந்த தொண்டருடன்பெருகு விருப்பினர் ஆகிப் பிற பதியும் பணிந்தணைவார்.
சொற்பிரிப்பு
திரு உசாத்தானத்துத் தேவர் பிரான் கழல் பணிந்துமருவிய செந்தமிழ்ப் பதிகம் மால் போற்றும் படி பாடிஇருவினையும் பற்று அறுப்பார் எண் இறந்த தொண்டருடன்பெருகு விருப்பினர் ஆகிப் பிற பதியும் பணிந்து அணைவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

625

கருங்கழி வேலைப் பாலைக் கழிநெய்தல் கடந்தருளித்திருந்திய சீர்ப் புனல் நாட்டுத் தென் மேற்பால் திசை நோக்கிமருங்கு மிடை தடஞ் சாலி மாடு செறி குலத்தெங்குநெருங்கி வளர் கமுகு உடுத்த நிறை மருத வழிச் சென்றார்.
சொற்பிரிப்பு
கருங்கழி வேலைப் பாலைக் கழி நெய்தல் கடந்தருளித்திருந்திய சீர்ப் புனல் நாட்டுத் தென்மேற்பால் திசை நோக்கிமருங்கு மிடை தடம் சாலி மாடு செறி குலைத்தெங்குநெருங்கு வளர் கமுகு உடுத்த நிறைமருதம் வழிச்சென்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

626

சங்கங்கள் வயல் எங்கும் சாலி கழைக் கரும்பு எங்கும்கொங்கு எங்கும் நிறை கமலக் குளிர் வாசத் தடம் எங்கும்அங்கங்கே உழவர் குழாம் ஆர்க்கின்ற ஒலி எங்கும்எங்கெங்கும் மலர்ப் படுகர் இவை கழிய எழுந்தருளி.
சொற்பிரிப்பு
சங்கங்கள் வயல் எங்கும் சாலி கழைக் கரும்பு எங்கும்கொங்கு எங்கும் நிறை கமலக் குளிர்வாசத் தடம் எங்கும்அங்கு அங்கே உழவர் குழாம் ஆர்க்கின்ற ஒலி எங்கும்எங்கு எங்கும் மலர்ப்படுகர் இவை கழிய எழுந்தருளி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

627

தடம் எங்கும் புனல் குடையும் தையலார் தொய்யில் நிறம்இடம் எங்கும் அந்தணர்கள் ஓதுகிடையாக நிலைமடம் எங்கும் தொண்டர் குழாம் மனை எங்கும் புனைவதுவைநடம் எங்கும் ஒலி ஓவா நற்பதிகள் அவை கடந்து.
சொற்பிரிப்பு
தடம் எங்கும் புனல் குடையும் தையலார் தொய்யில் நிறம்இடம் எங்கும் அந்தணர்கள் ஓதுகிடை யாக நிலைமடம் எங்கும் தொண்டர் குழாம் மனை எங்கும் புனை வதுவைநடம் எங்கும் ஒலி ஓவா நற்பதிகள் அவை கடந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

628

நீர் நாடு கடந்து அருளி நெடும் புறவில் குறும்புதல்கள்கார் நாடு முகை முல்லைக் கடிநாறு நிலம் கடந்துபோர் நாடுஞ் சிலை மறவர் புன் புலவைப் பிடை போக்கிச்சீர் நாடு தென் பாண்டி நன்னாடு சென்று அணைவார்.
சொற்பிரிப்பு
நீர்நாடு கடந்தருளி நெடும் புறவில் குறும்புதல்கள்கார்நாடும் முகை முல்லைக் கடிநாறு நிலம் கடந்துபோர்நாடும் சிலைமறவர் புன்புல வைப்பு இடை போகிச்சீர்நாடும் தென்பாண்டி நன்நாடு சென்று அணைவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

629

மன்றல் மலர்ப் பிறங்கல் மருங்கு எறிந்து வரும் நதிகள் பலசென்று அணைந்து கடந்து ஏறித் திரி மருப்பின் கலை புணர்மான்கன்று தெறித்தன உகைக்கும் கான அதர் கடந்து அணைந்தார்கொன்றை நறும் சடை முடியார் மகிழ்ந்த திருக்கொடுங் குன்றம்.
சொற்பிரிப்பு
மன்றல் மலர்ப் பிறங்கல் மருங்கு எறிந்து வரு நதிகள் பலசென்று அணைந்து கடந்து ஏறித் திரி மருப்பின் கலைபுணர் மான்கன்று தெறித்தன உகைக்கும் கான அதர் கடந்து அணைந்தார்கொன்றை நறும் சடைமுடியார் மகிழ்ந்த திருக்கொடுங் குன்றம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

630

கொடுங் குன்றத்து இனிது அமர்ந்த கொழும்பவளச் செழுங் குன்றைஅடும் குன்றம் உரித்தாரை வணங்கி அரும் தமிழ் பாடிநெடும் குன்றும் படர் காணும் நிறை நாடும் கடந்து மதிதொடும் குன்ற மதில் மதுரைத் தொன் நகர் வந்து அணைகின்றார்.
சொற்பிரிப்பு
கொடுங்குன்றத்து இனிது அமர்ந்த கொழும்பவளச் செழும் குன்றைஅடுங்குன்றம் உரித்தானை வணங்கி அருந்தமிழ் பாடிநெடுங்குன்றும் படர்கானும் நிறை நாடும் கடந்து மதிதொடுங்குன்றம் மதில் மதுரைத் தொல்நகர் வந்து அணைகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

631

இந்நிலை இவர் வந்து எய்த எண் பெரும் குன்றம் மேவும்அந்நிலை அமணர் தங்கட்கழிவு முன் சாற்றல் உற்றுப்பல்முறை வெருக் கொண்டு உள்ளம் பதைப்பத்தீக் கனாக்களோடும்துன் நிமித்தங்கள் அங்கு நிகழ்ந்தன சொல்லல் உற்றாம்.
சொற்பிரிப்பு
இந்நிலை இவர் வந்து எய்த எண்பெரும் குன்றம் மேவும்அந்நிலை அமணர் தங்கட்கு அழிவு முன் சாற்றல் உற்றுப்பன்முறை வெருக்கொண்டு உள்ளம் பதைப்பத் தீக் கனாக்களோடும்துன் நிமித்தங்கள் அங்கு நிகழ்ந்தன சொல்லல் உற்றாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

632

பள்ளிகள் மேலும் மாடு பயில் அமண் பாழி மேலும்ஓள்ளிதழ் அசோகின் மேலும் உணவு செய் கவளம் கையில்கொள்ளு மண்டபங்கள் மேலும் கூகையோடு ஆந்தை தீயபுள் இனம் ஆன தம்மில் பூசல் இட்டு அழிவு சாற்றும்.
சொற்பிரிப்பு
பள்ளிகள் மேலும் மாடு பயில் அமண் பாழி மேலும்ஒள் இதழ் அசோகின் மேலும் உணவுசெய் கவளம் கையில்கொள்ளு மண்டபங்கள் மேலும் கூகையொடு ஆந்தை தீயபுள் இனம் ஆன தம்மில் பூசல் இட்டு அழிவு சாற்றும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

633

பீலியும் தடுக்கும் பாயும் பிடித்தகை வழுவி வீழக்கால்களும் தடுமாறாடிக் கண்களும் இடமே ஆடிமேல் வரும் அழிவுக்கு ஆக வேறு காரணமும் காணார்மால் உழந்து அறிவு கெட்டு மயங்கினர் அமணர் எல்லாம்.
சொற்பிரிப்பு
பீலியும் தடுக்கும் பாயும் பிடித்த கை வழுவி வீழக்கால்களும் தடுமாறு ஆடிக் கண்களும் இடமே ஆடிமேல் வரும் அழிவுக்கு ஆக வேறு காரணமும் காணார்மால் உழந்து அறிவு கெட்டு மயங்கினர் அமணர் எல்லாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

634

கந்தியர் தம்மில் தாமே கனன்று எழு கலாங்கள் கொள்ளவந்தவாறு அமணர் தம்மில் மாறு கொண்டு ஊறு செய்யமுந்தைய உரையில் கொண்ட பொறை முதல் வைப்பும் விட்டுச்சிந்தையில் செற்ற முன்னாத் தீக் குணம் தலை நின்றார்கள்.
சொற்பிரிப்பு
கந்தியர் தம்மில் தாமே கனன்று எழு கலாங்கள் கொள்ளவந்தவாறு அமணர் தம்மில் மாறு கொண்டு ஊறு செய்யமுந்தைய உரையில் கொண்டபொறை முதல் வைப்பும் விட்டுச்சிந்தையில் செற்றம் முன்னாம் தீக்குணம் தலை நின்றார்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

635

இப்படி அமணர் வைகும் எப் பெயர்ப் பதியும் எய்தும்ஒப்பில் உற்பாதம் எல்லாம் ஒருவரின் ஒருவர் கூறிமெய்ப்படு தீக்கனாவும் வேறு வேறு ஆகக் கண்டுசெப்புவான் புறத்து உளோரும் தென்னவன் மதுரை சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
இப்படி அமணர் வைகும் எப்பெயர்ப் பதியும் எய்தும்ஒப்பில் உற்பாதம் எல்லாம் ஒருவரின் ஒருவர் கூறிமெய்ப்படு தீக்கனாவும் வேறு வேறு ஆகக் கண்டுசெப்புவான் புறத்து உளோரும் தென்னவன் மதுரை சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

636

அந்நகர் தன்னில் வாழ்வார் புறம்பு நின்று அணைவார் கூடிமன்னவன் தனக்கும் கூறி மருண்ட உள்ளத்தர் ஆகித்துன்னிய அழுக்கு மெய்யில் தூசிலார் பலரும் ஈண்டிஇன்னன கனவு கண்டோம் என எடுத்து இயம்பல் உற்றார்.
சொற்பிரிப்பு
அந்நகர் தன்னில் வாழ்வார் புறம்பு நின்று அணைவார் கூடிமன்னவன் தனக்கும் கூறி மருண்ட உள்ளத்தர் ஆகித்துன்னிய அழுக்கு மெய்யில் தூசு இலார் பலரும் ஈண்டிஇன்னன கனவு கண்டோம் என எடுத்து இயம்பல் உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

637

சீர் மலி அசோகு தன் கீழ் இருந்த நம் தேவர் மேலேவேரொடு சாய்ந்து வீழக் கண்டனம் அதன் பின் ஆகஏர் கொள் முக்குடையும் தாமும் எழுந்து கை நாற்றிப் போகஊர் உளோர் ஓடிக் காணக் கண்டனம் என்று உரைப்பார்.
சொற்பிரிப்பு
சீர் மலி அசோகு தன் கீழ் இருந்த நம் தேவர் மேலேவேரொடு சாய்ந்து வீழக் கண்டனம் அதன் பின் ஆகஏர்கொள் முக்குடையும் தாமும் எழுந்து கை நாற்றிப் போகஊர் உளோர் ஓடிக் காணக் கண்டனம் என்று உரைப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

638

குண்டிகை தகர்த்துப் பாயும் பீறியோர் குரத்தி ஓடப்பண்டிதர் பாழி நின்றும் கழுதை மேல் படர்வார் தம்பின்ஒண்தொடி இயக்கி யாரும் உளை இட்டுப் புலம்பி ஓடக்கண்டனம் என்று சொன்னார் கையறு கவலை உற்றார்.
சொற்பிரிப்பு
குண்டிகை தகர்த்துப் பாயும் பீறி ஓர் குரத்தி ஓடப்பண்டிதர் பாழி நின்றும் கழுதை மேல் படர்வார் தம் பின்ஒண்டொடி இயக்கி யாரும் உளையிட்டுப் புலம்பி ஓடக்கண்டனம் என்று சொன்னார் கை அறு கவலை உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

639

கானிடை நட்டம் ஆடும் கண் நுதல் தொண்டர் எல்லாம்மீனவன் மதுரை தன்னில் விரவிடக் கண்டோம் என்பார்கோன் அவன் தானும் வெய்ய கொடும் தழல் முழுகக் கண்டோம்ஆனபின் எழவும் கண்டோம் அதிசயம் இதுவாம் என்பார்.
சொற்பிரிப்பு
கான் இடை நட்டம் ஆடும் கண் நுதல் தொண்டர் எல்லாம்மீனவன் மதுரை தன்னில் விரவிடக் கண்டோம் என்பார்கோன் அவன் தானும் வெய்ய கொழுந்தழல் முழுகக் கண்டோம்ஆனபின் எழவும் கண்டோம் அதிசயம் இதுவாம் என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

640

மழவிடை இளம் கன்று ஒன்று வந்து நம் கழகம் தன்னைஉழறிடச் சிதறி ஓடி ஒருவரும் தடுக்க அஞ்சிவிழ ஒரு புகலும் இன்றி மேதினி தன்னை விட்டுநிழல் இலா மரங்கள் ஏறி நின்றிடக் கண்டோம் என்பர்.
சொற்பிரிப்பு
மழவிடை இளம் கன்று ஒன்று வந்து நம் கழகம் தன்னைஉழறிடச் சிதறி ஓடி ஒருவரும் தடுக்க அஞ்சிவிழவொரு புகலும் இன்றி மேதினி தன்னை விட்டுநிழல் இலா மரங்கள் ஏறி நின்றிடக் கண்டோம் என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

641

ஆவது என் பாவிகாள் இக் கனாத்திறம் அடிகள் மார்க்குமேவிய தீங்கு தன்னை விளைப்பது திடமே என்றுநோவுறு மனத்தர் ஆகி நுகர் பெரும் பதமும் கொள்ளார்யாவது செயல் என்று எண்ணி இடர் உழன்று அழுங்கினார்கள்.
சொற்பிரிப்பு
ஆவது என் பாவிகாள் இக் கனாத்திறம் அடிகள்மார்க்குமேவிய தீங்கு தன்னை விளைப்பது திடமே என்றுநோ உறு மனத்தர் ஆகி நுகர் பெரும் பதமும் கொள்ளார்யாவது செயல் என்று எண்ணி இடர் உழன்று அழுங்கினார்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

642

அவ்வகை அவர்கள் எல்லாம் அந்நிலைமையர்கள் ஆகச்சைவ நன் மரபில் வந்த தட மயில் மட மென் சாயல்பை வளர் அரவேர் அல்குல் பாண்டி மா தேவியார்க்கும்மெய் வகை அமைச்சனார்க்கும் விளங்கும் நன் நிமித்தம் மேன் மேல்.
சொற்பிரிப்பு
அவ்வகை அவர்கள் எல்லாம் அந்நிலைமையர்கள் ஆகச்சைவ நன் மரபில் வந்த தட மயில் மடமென் சாயல்பைவளர் அரவு ஏர் அல்குல் பாண்டிமா தேவியார்க்கும்மெய்வகை அமைச்சனார்க்கும் விளங்கு நன் நிமித்தம் மேன்மேல்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

643

அளவு இலா மகிழ்ச்சி காட்டும் அரும் பெரும் நிமித்தம் எய்தஉள மகிழ் உணரும் காலை உலகெலாம் உய்ய வந்தவளர் ஒளி ஞானம் உண்டார் வந்து அணைந்தருளும் வார்த்தைகிளர்வுறும் ஓகை கூறி வந்தவர் மொழியக் கேட்டார்.
சொற்பிரிப்பு
அளவு இலா மகிழ்ச்சி காட்டும் அரும் பெரு நிமித்தம் எய்தஉள மகிழ்வு உணரும் காலை உலகெலாம் உய்ய வந்தவளர் ஒளி ஞானம் உண்டார் வந்தணைந்து அருளும் வார்த்தைகிளர்வு உறும் ஓகை கூறி வந்தவர் மொழியக் கேட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

644

அம்மொழி விளம்பினோர்க்கு வேண்டுவ அடைய நல்கிமெய்ம்மையில் விளங்கு காதல் விருப்புறு வெள்ளம் ஓங்கத்தம்மையும் அறியா வண்ணம் கை மிக்குத் தழைத்துப் பொங்கிவிம்மிய மகிழ்ச்சி கூர மேவிய சிறப்பின் மிக்கார்.
சொற்பிரிப்பு
அம்மொழி விளம்பினோர்க்கு வேண்டுவ அடைய நல்கிமெய்ம்மையில் விளங்கு காதல் விருப்புறு வெள்ளம் ஓங்கத்தம்மையும் அறியா வண்ணம் கைமிக்குத் தழைத்துப் பொங்கிவிம்மிய மகிழ்ச்சி கூர மேவிய சிறப்பின் மிக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

645

மங்கையர்க் கரசியார் பால் வந்து அடி வணங்கி நின்றகொங்கலர் தெரியலாராம் குலச்சிறை யாரை நோக்கிநங்கள் தம்பிரானாராய ஞான போனகர் முன்பு எய்திஇங்கு எழுந்தருள உய்ந்தோம் என எதிர் கொள்ளும் என்றார்.
சொற்பிரிப்பு
மங்கையர்க்கு அரசியார்பால் வந்து அடி வணங்கி நின்றகொங்கு அலர் தெரியலாராம் குலச்சிறையாரை நோக்கிநங்கள் தம் பிரானார் ஆய ஞான போனகர் முன்பு எய்திஇங்கு எழுந்து அருள உய்ந்தோம் என எதிர் கொள்ளும்” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

646

மன்றலங் குழலினாரை வணங்கிப் போந்த அமைச்சனாரும்வென்றிவேல் அரசனுக்கும் உறுதியே என விரைந்துபொன் திகழ் மாட வீதி மதுரையின் புறத்துப் போகிஇன் தமிழ் மறை தந்தாரை எதிர்கொள எய்தும் காலை.
சொற்பிரிப்பு
மன்றல் அம் குழலினாரை வணங்கிப் போந்து அமைச்சனாரும்வென்றிவேல் அரசனுக்கும் உறுதியே என விரைந்துபொன்திகழ் மாட வீதி மதுரையின் புறத்துப் போகிஇன் தமிழ் மறைதந்தாரை எதிர்கொள எய்தும் காலை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

647

அம்புய மலராள் போல்வார் ஆலவாய் அமர்ந்தார் தம்மைக்கும்பிட வேண்டும் என்று கொற்றவன் தனக்கும் கூறித்தம் பரிசனங்கள் சூழத் தனித் தடையோடும் சென்றுநம்பரை வணங்கித் தாமும் நல் வரவேற்று நின்றார்.
சொற்பிரிப்பு
அம்புய மலராள் போல்வார் ஆலவாய் அமர்ந்தார் தம்மைக்கும்பிட வேண்டும் என்று கொற்றவன் தனக்கும் கூறித்தம் பரிசனங்கள் சூழத் தனித்தடையோடும் சென்றுநம்பரை வணங்கித் தாமும் நல்வரவு ஏற்று நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

648

திரு நிலவு மணி முத்தின் சிவிகையின் மேல் சேவித்துவரு நிலவு தரு மதி போல் வளர் ஒளி வெண் குடை நிழற்றப்பெருகு ஒளிய திரு நீற்றுத் தொண்டர் குழாம் பெருகிவரஅருள் பெருக வரு(ம்) ஞானத்து அமுது உண்டார் அணைகின்றார்.
சொற்பிரிப்பு
திருநிலவு மணிமுத்தின் சிவிகையின் மேல் சேவித்துவருநிலவு தருமதி போல் வளர்ஒளி வெண்குடை நிழற்றப்பெருகு ஒளிய திருநீற்றுத் தொண்டர் குழாம் பெருகி வரஅருள் பெருக வருஞானத்து அமுது உண்டார் அணைகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

649

துந்துபிகள் முதலாய தூரியங்கள் கிளராமேஅந்தணராம் மாதவர்கள் ஆயிரம் மா மறை எடுப்பவந்து எழும் மங்கல நாத மாதிரம் உட்பட முழங்கச்செந்தமிழ் மாருதம் எதிர் கொண்டு எம்மருங்கும் சேவிப்ப.
சொற்பிரிப்பு
துந்துபிகள் முதல் ஆய தூரியங்கள் கிளராமேஅந்தணராம் மாதவர்கள் ஆயிர மாமறைஎடுப்பவந்து எழு மங்கல நாதம் மாதிரம் உட்பட முழங்கச்செந்தமிழ் மாருதம் எதிர் கொண்டு எம்மருங்கும் சேவிப்ப.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

650

பண்ணிய வஞ்சனைத் தவத்தால் பஞ்சவன் நாட்டிடைப் பரந்தஎண்ணில் அமண் எனும் பாவ இருஞ்சேனை இரிந்து ஓடமண் உலகமே அன்றி வான் உலகம் செய்த பெரும்புண்ணியத்தின் படை எழுச்சி போல் எய்தும் பொலிவு எய்த.
சொற்பிரிப்பு
பண்ணிய வஞ்சனைத் தவத்தால் பஞ்சவன் நாட்டிடைப் பரந்தஎண்இல் அமண் எனும் பாவ இருஞ்சேனை இரிந்து ஓடமண் உலகமே அன்றி வான் உலகம் செய்த பெரும்புண்ணியத்தின் படை எழுச்சி போல்எய்தும் பொலிவு எய்த.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

651

துன்னும் முழு உடற்றுகளால் சூழும் உணர்வின் இற்றுகளால்அன்னெறியில் செறிந்து அடைந்த அமண் மாசு கழுவுதற்குமன்னி ஒளிர் வெண்மையினால் தூய்மையினால் வழுதியர் தம்கன்னி நாட்டிடைக் கங்கை அணைந்தது எனும் கவின் காட்ட.
சொற்பிரிப்பு
துன்னு முழு உடல் துகளால் சூழும் உணர்வினில் துகளால்அல்நெறியில் செறிந்து அடைந்த அமண் மாசு கழுவுதற்குமன்னி ஒளிர் வெண்மையினால் தூய்மையினால் வழுதியர் தம்கன்னி நாட்டு இடைக்கங்கை அணைந்தது எனும் கவின் காட்ட.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

652

பானல் வயல் தமிழ் நாடு பழி நாடும்படி பரந்தமானம் இலா அமண் என்னும் வல் இருள் போய் மாய்வதனுக்குஆன பெருகு ஒளிப்பரப்பால் அண்டம் எலாம் கொண்டதொருஞான மணி விளக்கு எழுந்து வருவது என நலம் படைப்ப.
சொற்பிரிப்பு
பானல் வயல் தமிழ்நாடு பழி நாடும்படி பரந்தமானம் இலா அமண் என்னும் வல் இருள்போய் மாய்வதனுக்குஆன பெருகு ஒளிப்பரப்பால் அண்டம் எலாம் கொண்டது ஒருஞான மணி விளக்கு எழுந்து வருவது என நலம் படைப்ப.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

653

புரசை வயக் கடக்களிற்றுப் பூழியர் வண் தமிழ் நாட்டுத்தரை செய் தவப் பயன் விளங்கச் சைவ நெறி தழைத்து ஓங்கஉரை செய்திருப்பேர் பலவும் ஊது மணிச் சின்னம் எலாம்பரசமய கோளரி வந்தான் என்று பணிமாற.
சொற்பிரிப்பு
புரசை வயக் கட களிற்றுப் பூழியர் வண் தமிழ்நாட்டுத்தரை செய்தவப் பயன் விளங்கச் சைவநெறி தழைத்து ஓங்கஉரைசெய் திருப்பேர் பலவும் ஊது மணிச் சின்னம் எலாம்பரசமயக் கோள் அரி வந்தான் என்று பணி மாற.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

654

இப்பரிசு அணையும் சண்பையர் பெருமான் எழுந்தருளும் பொழுது இசைக்கும்ஒப்பில் நித்திலப் பொன் தனிப் பெரும் காளம் உலகு உய்ய ஒலித்து எழும் ஓசைசெப்பரும் பெருமைக் குலச் சிறையார் தம் செவி நிறை அமுது எனத் தேக்கஅப்பொழுது அறிந்து தலத்தின் மேல் பணிந்தே அளப்பு அரும் களிப்பினர் ஆனார்.
சொற்பிரிப்பு
இப்பரிசு அணையும் சண்பையர் பெருமான் எழுந்தருளும் பொழுது இசைக்கும்ஒப்பில் நித்திலப் பொன் தனிப் பெரும் காளம் உலகு உய்ய ஒலித்து எழும் ஓசைசெப்பரும் பெருமைக் குலச்சிறையார் தம் செவிநிறை அமுது எனத் தேக்கஅப்பொழுது அறிந்து தலத்தின் மேல் பணிந்தே அளப்பரும் களிப்பினர் ஆனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

655

அஞ்சலி குவித்த கரங்களும் தலைமேல் அணைந்திடக் கடிது சென்று அணைவார்நஞ்சு அணி கண்டர் தம் திருமகனார் உடன் வரும் நல்தவக் கடலைநெஞ்சினில் நிறைந்த ஆர்வம் முன் செல்லக் கண்டு நீள் நிலத்திடைத் தாழ்ந்துபஞ்சவர் பெருமான் மந்திரித் தலைவர் பாங்குற அணைந்து முன் பணிந்தார்.
சொற்பிரிப்பு
அஞ்சலி குவித்த கரங்களும் தலை மேல் அணைந்திடக் கடிது சென்று அணைவார்நஞ்சு அணி கண்டர் தம் திருமகனார் உடன் வரு நற்றவக் கடலைநெஞ்சினில் நிறைந்த ஆர்வம் முன் செல்லக் கண்டு நீள் நிலத்து இடைத் தாழ்ந்துபஞ்சவர் பெருமான் மந்திரித் தலைவர் பாங்கு உற அணைந்து முன் பணிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

656

நிலமிசைப் பணிந்த குலச் சிறையாரை நீடிய பெரும் தவத் தொண்டர்பலரும் முன் அணைந்து வணங்கி மற்று அவர்தாம் படியின் நின்று எழாவகை கண்டுமலர் மிசைப் புத்தேள் வழிபடும் புகலி வைதிக சேகரர் பாதம்குலவி இங்கு அணைந்தார் தென்னவன் அமைச்சர் குலச்சிறையார் எனக் கூற.
சொற்பிரிப்பு
நிலமிசைப் பணிந்த குலச்சிறையாரை நீடிய பெருந்தவத் தொண்டர்பலரும் முன் அணைந்து வணங்கி மற்று அவர் தாம்படியின் நின்று எழாவகை கண்டுமலர்மிசைப் புத்தேள் வழிபடு புகலி வைதிகச் சேகரர் பாதம்குலவி அங்கு அணைந்தார் தென்னவன் அமைச்சர் குலச்சிறையார் எனக் கூற.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

657

சிரபுரச் செல்வர் அவர் உரை கேட்டுத் திருமுகத் தாமரை மலர்ந்துவிரவு ஒளி முத்தின் சிவிகை நின்று இழிந்து விரைந்து சென்றவர் தமை அணைந்துகரகமலங்கள் பற்றியே எடுப்பக் கை தொழுது அவரும் முன் நிற்பவரமிகு தவத்தால் அவரையே நோக்கி வள்ளலார் மதுர வாக்கு அளிப்பார்.
சொற்பிரிப்பு
சிரபுரச் செல்வர் அவர் உரை கேட்டுத் திருமுகத் தாமரை மலர்ந்துவிரவு ஒளி முத்தின் சிவிகை நின்று இழிந்து விரைந்து சென்று அவர் தமை அணைந்துகரகமலங்கள் பற்றியே எடுப்பக் கைதொழுது அவரும் முன் நிற்பவரமிகு தவத்தால் அவரையே நோக்கி வள்ளலார் மதுர வாக்கு அளிப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

658

செம்பியர் பெருமான் குல மகளார்க்கும் திருந்திய சிந்தையீர் உமக்கும்நம் பெருமான் தன் திருவருள் பெருகும் நன்மை தான் வாலிதே என்னவம்பு அலர் அலங்கல் மந்திரி யாரும் மண் மிசைத் தாழ்ந்து அடி வணங்கித்தம் பெரும் தவத்தின் பயன் அனையார்க்குத் தன்மையாம் நிலை உரைக்கின்றார்.
சொற்பிரிப்பு
செம்பியர் பெருமான் குலமகளார்க்கும் திருந்திய சிந்தையீர் உமக்கும்நம்பெருமான் தன் திருஅருள் பெருகும் நன்மை தான் வாலிதே என்னவம்பு அலர் அலங்கல் மந்திரியாரும் மண்மிசைத் தாழ்ந்து அடி வணங்கித்தம் பெரும் தவத்தின் பயன் அனையார்க்குத் தன்மையாம் நிலை உரைக்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

659

சென்ற காலத்தின் பழுது இலாத் திறமும் இனி எதிர் காலத்தின் சிறப்பும்இன்று எழுந்தருளப் பெற்ற பேறு இதனால் எற்றைக்கும் திருவருள் உடையேம்நன்றியில் நெறியில் அழுந்திய நாடும் நற்றமிழ் வேந்தனும் உய்ந்துவென்றி கொள் திருநீற்று ஒளியினில் விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார்.
சொற்பிரிப்பு
சென்ற காலத்தின் பழுது இலாத் திறமும் இனி எதிர் காலத்தின் சிறப்பும்இன்று எழுந்து அருளப் பெற்ற பேறு இதனால் எற்றைக்கும் திருஅருள் உடையேம்நன்றியில் நெறியில் அழுந்திய நாடும் நற்றமிழ் வேந்தனும் உய்ந்துவென்றி கொள் திருநீற்று ஒளியினில் விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

660

இங்கு எழுந்தருளும் பெருமை கேட்டருளி எய்துதற்கு அரிய பேறு எய்திமங்கையர்க் கரசியாரும் நம்முடைய வாழ்வு எழுந்தருளியது என்றேஅங்கு நீர் எதிர்சென்று அடிபணிவீர் என்றருள் செய்தார் எனத் தொழுதார்வம்பொங்கிய களிப்பால் மீளவும் பணிந்து போற்றினார் புரவலன் அமைச்சர்.
சொற்பிரிப்பு
இங்கு எழுந்து அருளும் பெருமை கேட்டு அருளி எய்துவதற்கு அரிய பேறு எய்திமங்கையர்க்கு அரசியாரும் நம் உடைய வாழ்வு எழுந்தருளியது என்றேஅங்கு நீர் எதிர் சென்று அடி பணிவீர் என்று அருள் செய்தார் எனத் தொழுது ஆர்வம்பொங்கிய களிப்பால் மீளவும் பணிந்து போற்றினார் புரவலன் அமைச்சர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

661

ஆங்ஙனம் போற்றி அடி பணிந்தவர் மேல் அளவுஇலா அருள்புரி கருணைதாங்கிய மொழியால் தகுவன விளம்பித் தலை அளித்து அருளும் அப்பொழுதில்ஓங்கு எயில் புடைசூழ் மதுரை தோன்றுதலும் உயர் தவத் தொண்டரை நோக்கிஈங்கு நம் பெருமான் திரு ஆலவாய் மற்று எம்மருங்கினது என வினவ.
சொற்பிரிப்பு
ஆங்கனம் போற்றி அடிபணிந்தவர் மேல் அளவு இலா அருள் புரி கருணைதாங்கிய மொழியால் தகுவன விளம்பித் தலை அளித்து அருளும் அப்பொழுதில்ஓங்கு எயில் புடை சூழ் மதுரை தோன்றுதலும் உயர் தவத் தொண்டரை நோக்கிஈங்கு நம் பெருமான் திருஆலவாய் மற்று எம்மருங்கினது என வினவ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

662

அன்பராய் அவர் முன் பணிந்த சீர் அடியார் அண்ணலார் அடி இணை வணங்கிமுன்பு நின்று எடுத்த கைகளால் காட்டி முருகு அலர் சோலைகள் சூழ்ந்துமின் பொலி விசும்பை அளக்கும் நீள் கொடி சூழ் வியன் நெடும் கோபுரம் தோன்றும்என்பு அணி அணிவார் இனிது அமர்ந்து அருளும் திருவாலவாய் இது என்றார்.
சொற்பிரிப்பு
அன்பராய் அவர் முன் பணிந்த சீர் அடியார் அண்ணலார் அடி இணை வணங்கிமுன்பு நின்று எடுத்த கைகளால் காட்டி முருகு அலர் சோலைகள் சூழ்ந்துமின் பொலி விசும்பை அளக்கு நீள் கொடி சூழ்வியன் நெடும் கோபுரம் தோன்றும்என்பணி அணிவார் இனிது அமர்ந்து அருளும் திருஆலவாய் இது என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

663

தொண்டர்தாம் போற்றிக் காட்டிடக் கண்டு துணைமலர்க் கரம் குவித்தருளிமண்டு பேரன்பால் மண்மிசைப் பணிந்து மங்கையர்க்கரசி என்று எடுத்தேஎண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது இதுவே என்று இருவர் தம் பணியும்கொண்டமை சிறப்பித்தருளி நற் பதிகம் பாடினார் குவலயம் போற்ற.
சொற்பிரிப்பு
தொண்டர் தாம் போற்றிக் காட்டிடக் கண்டு துணைமலர்க் கரம் குவித்தருளிமண்டு பேரன்பால் மண் மிசைப் பணிந்து மங்கையர்க்கு அரசி என்று எடுத்தேஎண்டிசை பரவும் ஆலவாய் ஆவது இதுவே என்று இருவர் தம் பணியும்கொண்டமை சிறப்பித்தருளி நல் பதிகம் பாடினார் குவலயம் போற்ற.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

664

பாடிய பதிகம் பரவியே வந்து பண்புடை அடியவரோடும்தேடுமால் அயனுக்கு அரியவர் மகிழ்ந்த திரு ஆலவாய் மருங்கு அணைந்துநீடுயர் செல்வக் கோபுரம் இறைஞ்சி நிறை பெரு விருப்புடன் புக்குமாடு சூழ் வலம் கொண்டு உடையவர் கோயில் மந்திரியாருடன் புகுந்தார்.
சொற்பிரிப்பு
பாடிய பதிகம் பரவியே வந்து பண்புடை அடியவரோடும்தேடுமால் அயனுக்கு அரியவர் மகிழ்ந்த திருஆலவாய் மருங்கு அணைந்துநீடுயர் செல்வக் கோபுரம் இறைஞ்சி நிறை பெரு விருப்புடன் புக்குமாடு சூழ் வலம் கொண்டு உடையவர் கோயில் மந்திரியாருடன் புகுந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

665

ஆளும் அங்கணர் ஆலவாய் அமர்ந்து இனிது இருந்தகாள கண்டரைக் கண்களின் பயன் பெறக் கண்டுநீள வந்து எழும் அன்பினால் பணிந்து எழ நிறையார்மீளவும் பல முறை நிலம் உற விழுந்து எழுவார்.
சொற்பிரிப்பு
ஆளும் அங்கணர் ஆலவாய் அமர்ந்து இனிது இருந்தகாள கண்டரைக் கண்களின் பயன் பெறக் கண்டுநீள வந்து எழும் அன்பினால் பணிந்து எழ நிறையார்மீளவும் பலமுறை நிலம் உற விழுந்து எழுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

666

அங்கம் எட்டினும் ஐந்தினும் அளவு இன்றி வணங்கிப்பொங்கு காதலின் மெய்ம் மயிர் புளகமும் பொழியும்செங்கண் நீர் தரும் அருவியும் திகழ் திரு மேனிஎங்கும் ஆகி நின்று ஏத்தினார் புகலியர் இறைவர்.
சொற்பிரிப்பு
அங்கம் எட்டினும் ஐந்தினும் அளவு இன்றி வணங்கிப்பொங்கு காதலின் மெய்ம் மயிர்ப் புளகமும் பொழியும்செங்கண் நீர் தரும் அருவியும் திகழ் திருமேனிஎங்கும் ஆகி நின்று ஏத்தினார் புகலியர் இறைவர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

667

நீல மா மிடற்று ஆலவாயான் என நிலவும்மூலம் ஆகிய திரு இருக்குக் குறள் மொழிந்துசீல மாதவத் திருத் தொண்டர் தம்மொடும் திளைத்தார்சாலும் மேன்மையில் தலைச்சங்கப் புலவனார் தம்முன்.
சொற்பிரிப்பு
நீல மாமிடற்று ஆலவாயான் என நிலவும்மூலம் ஆகிய திருஇருக்குக் குறள் மொழிந்துசீல மாதவத் திருத்தொண்டர் தம்மொடும் திளைத்தார்சாலு மேன்மையில் தலைச்சங்கப் புலவனார் தம் முன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

668

சேர்த்தும் இன்னிசைப் பதிகமும் திருக்கடைக் காப்புச்சாத்தி நல்லிசைத் தண் தமிழ்ச் சொல் மலர் மாலைபேர்த்தும் இன்புறப் பாடி வெண் பிறை அணி சென்னிமூர்த்தியார் கழல் பரவியே திருமுன்றில் அணைய.
சொற்பிரிப்பு
சேர்த்தும் இன்னிசைப் பதிகமும் திருக்கடைக் காப்புச்சாத்தி நல் இசை தண் தமிழ்ச் சொன்மலர் மாலைபேர்த்தும் இன்புறப் பாடி வெண் பிறை அணி சென்னிமூர்த்தியார் கழல் பரவியே திருமுன்றில் அணைய.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

669

பிள்ளையார் எழுந்தருளி முன் புகுதும் அப்பொழுதுவெள்ள நீர் பொதி வேணியார் தமைத் தொழும் விருப்பால்உள் அணைந்திட எதிர் செலாது ஒரு மருங்கு ஒதுங்கும்தெள்ளு நீர் விழித் தெரிவையார் சென்று முன்பு எய்த.
சொற்பிரிப்பு
பிள்ளையார் எழுந்தருளி முன் புகுதும் அப்பொழுதுவெள்ள நீர் பொதி வேணியார் தமைத்தொழும் விருப்பால்உள் அணைந்திட எதிர் செலாது ஒருமருங்கு ஒதுங்கும்தெள்ளு நீர் விழித் தெரிவையார் சென்று முன்பு எய்த.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

670

மருங்கின் மந்திரியார் பிள்ளையார் கழல் வணங்கிக்கருங்குழல் கற்றை மேல் குவி கைத்தளிர் உடையார்பருங்கை யானை வாழ் வளவர் கோன் பாவையார் என்னப்பெருங் களிப்புடன் விரைந்து எதிர் பிள்ளையார் அணைந்தார்.
சொற்பிரிப்பு
மருங்கின் மந்திரியார் பிள்ளையார் கழல் வணங்கிக்கருங்குழல் கற்றை மேல் குவி கைத்தளிர் உடையார்பருங்கை யானை வாழ் வளவர் கோன் பாவையார் என்னப்பெருங்களிப்புடன் விரைந்து எதிர் பிள்ளையார் அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

671

தென்னவன் பெருந் தேவியார் சிவக் கன்றின் செய்யபொன்னடிக் கமலங்களில் பொருந்த முன் விழுந்தார்மன்னு சண்பையர் வள்ளலார் மகிழ் சிறந்து அளிக்கும்இன்னருட் பெரும் சிறப் பொடும் திருக்கையால் எடுத்தார்.
சொற்பிரிப்பு
தென்னவன் பெரும் தேவியார் சிவக்கன்றின் செய்யபொன் அடிக் கமலங்களில் பொருந்த முன் விழுந்தார்மன்னு சண்பையர் வள்ளலார் மகிழ் சிறந்து அளிக்கும்இன்அருள் பெரும் சிறப்பொடும் திருக்கையால் எடுத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

672

ஞான போனகர் எதிர் தொழுது எழுந்த நல்தவத்துமானியார் மனக் கருத்து முற்றியது என மதித்தேபானலங் கண்கள் நீர் மல்கப் பவளவாய் குழறியானும் என் பதியும் செய்த தவம் என் கொல் என்றார்.
சொற்பிரிப்பு
ஞான போனகர் எதிர் தொழுது எழுந்த நல் தவத்துமானியார் மனக் கருத்து முற்றியது என மதித்தேபானல் அம் கண்கள் நீர் மல்கப் பவளவாய் குழறியானும் என் பதியும் செய்த தவம் என்கொல் என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

673

யாழின் மென் மொழியார் மொழிந்து எதிர் கழல் வணங்கக்காழி வாழ வந்தருளிய கவுணியர் பிரானும்சூழும் ஆகிய பர சமயத்திடைத் தொண்டுவாழும் நீர்மையீர் உமைக் காண வந்தனம் என்றார்.
சொற்பிரிப்பு
யாழின் மென்மொழியார் மொழிந்து எதிர் கழல் வணங்கக்காழி வாழ வந்தருளிய கவுணியர் பிரானும்சூழும் ஆகிய பரசமயத்து இடைத் தொண்டுவாழு நீர்மையீர் உமைக் காண வந்தனம் என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

674

இன்னவாறு அருள் செய்திடத் தொழுது அடி வீழ்ந்தார்மன்னும் மந்திரியார் வரும் திறம் எலாம் மொழியஅன்ன மென் நடையார் தமக்கு அருள் செய்து போக்கித்துன்னு மெய்த் தொண்டர் சூழ வந்தருளும் அப் பொழுது.
சொற்பிரிப்பு
இன்னவாறு அருள் செய்திடத் தொழுது அடி வீழ்ந்தார்மன்னு மந்திரியார் வரு திறம் எலாம் மொழியஅன்ன மென்நடையார் தமக்கு அருள்செய்து போக்கித்துன்னு மெய்த்தொண்டர் சூழ வந்து அருளும் அப்பொழுது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

675

செல்வம் மல்கிய திரு ஆல வாயினில் பணி செய்துஅல்கு தொண்டர்கள் பிள்ளையார் மருங்கு அணைந்து இறைஞ்சிமல்குகார்அமண் இருள் கெட ஈங்கு வந்து அருளஎல்லையில் தவம் செய்தனம் என எடுத்து இசைத்தார்.
சொற்பிரிப்பு
செல்வம் மல்கிய திரு ஆல வாயினில் பணி செய்துஅல்கு தொண்டர்கள் பிள்ளையார் மருங்கு அணைந்து இறைஞ்சிமல்கு கார் அமண் இருள் கெட ஈங்கு வந்து அருளஎல்லையில் தவம் செய்தனம் என எடுத்து இசைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

676

அத் திருத் தொண்டர் தங்களுக்கு அருள் முகம் அளித்துமெய்த்த காதலின் அவரொடும் புறத்தினில் மேவிச்சித்தம் இன்புறும் அமைச்சனார் திரு மடம் காட்டப்பத்தர் போற்றிடப் பரிசனத்தொடும் இனிது அமர்ந்தார்.
சொற்பிரிப்பு
அத்திருத்தொண்டர் தங்களுக்கு அருள்முகம் அளித்துமெய்த்த காதலின் அவரொடும் புறத்தினில் மேவிச்சித்தம் இன்புறும் அமைச்சனார் திருமடம் காட்டப்பத்தர் போற்றிடப் பரிசனத் தொடும் இனிது அமர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

677

பரவு காதலில் பாண்டிமா தேவியார் அருளால்விரவு நண்பொடு குலச் சிறையார் விருந்து அளிப்பக்சிரபுரத்து வந்தருளிய செல்வர் அங்கு இருந்தார்இரவி மேல்கடல் அணைந்தனன் எல்லி வந்து அணைய.
சொற்பிரிப்பு
பரவு காதலில் பாண்டிமா தேவியார் அருளால்விரவு நண்பொடு குலச்சிறையார் விருந்து அளிப்பச்சிரபுரத்து வந்தருளிய செல்வர் அங்கு இருந்தார்இரவி மேல் கடல் அணைந்தனன் எல்லி வந்து அணைய.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

678

வழுதி மாநகர் அதனிடை மாமறைத் தலைவர்பழுதில் சீர் அடியாருடன் பகல் வரக் கண்டகழுது போல் வரும் கார் அமண் குண்டர்கள் கலங்கிஇழுது மைஇருட்கு இருள் என ஈண்டினர் ஒரு பால்.
சொற்பிரிப்பு
வழுதி மாநகர் அதனிடை மாமறைத் தலைவர்பழுதில் சீர் அடியாருடன் பகல் வரக் கண்டகழுது போல் வரும் கார் அமண் குண்டர்கள் கலங்கிஇழுது மை இருட்கு இருள் என ஈண்டினர் ஒருபால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

679

அங்கண் மேவிய சமணர்கள் பிள்ளையார் அமர்ந்ததுங்க மா மடம் தன்னிடைத் தொண்டர் தம் குழாங்கள்எங்கும் ஓதிய திருப்பதிகத்து இசை எடுத்தபொங்கு பேர் ஒலி செவிப்புலம் புக்கிடப் பொறாராய்.
சொற்பிரிப்பு
அங்கண் மேவிய சமணர்கள் பிள்ளையார் அமர்ந்ததுங்க மாமடம் தன் இடைத் தொண்டர் தம் குழாங்கள்எங்கும் ஓதிய திருப்பதிகத்து இசை எடுத்தபொங்கு பேர் ஒலி செவிப்புலம் புக்கிடப் பொறாராய்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

680

மற்றிவ் வான்பழி மன்னவன் மாறனை எய்திச்சொற்றும் என்று தம் சூழ்ச்சியும் ஒரு படி துணிவார்கொற்றவன் கடைக் காவலர் முன் சென்று குறுகிவெற்றி வேலவர்க்கு எங்களை விளம்புவீர் என்றார்.
சொற்பிரிப்பு
மற்று இவ் வான்பழி மன்னவன் மாறனை எய்திச்சொற்றும் என்று தம் சூழ்ச்சியும் ஒரு படி துணிவார்கொற்றவன் கடைக் காவலர் முன் சென்று குறுகிவெற்றி வேலவர்க்கு எங்களை விளம்புவீர் என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

681

வாயில் காவலர் மன்னவன் தனை எதிர் வணங்கிஆய மாகி வந்து அடிகள் மார் அணைந்தனர் என்னஏயினான் அணைவாரென அவரும் சென்று இசைத்தார்பாயினால் உடல் மூடுவார் பதைப்புடன் புக்கார்.
சொற்பிரிப்பு
வாயில் காவலர் மன்னவன் தனை எதிர் வணங்கிஆயம் ஆகி வந்து அடிகள்மார் அணைந்தனர் என்னஏயினான் அணைவார் என அவரும் சென்று இசைத்தார்பாயினால் உடல் மூடுவார் பதைப்புடன் புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

682

புக்க போது அவர் அழிவுறு மனத்திடைப் புலர்ச்சிமிக்க தன்மையை வேந்தனும் கண்டு எதிர் வினவிஒக்க நீர் திரண்டு அணைவதற்கு உற்றது என் என்னத்தக்கது அல்ல தீங்கு அடுத்தது சாற்றுதற்கு என்றார்.
சொற்பிரிப்பு
புக்க போது அவர் அழிவுறு மனத்து இடைப் புலர்ச்சிமிக்க தன்மையை வேந்தனும் கண்டு எதிர் வினவிஒக்க நீர் திரண்டு அணைவதற்கு உற்றது என் என்னத்தக்கது அல்லது ஈங்கு அடுத்தது சாற்றுதற்கு என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

683

ஆவதேல் நுமக்கு அடுத்தது கூறுவீர் என்றுகாவலன் பரிந்து உரைத்தலும் கார் அமண் கையர்மாவலாய் உன்தன் மதுரையில் சைவ வேதியர் தாம்மேவலால் இன்று கண்டுமுட்டியாம் என்று விளம்ப.
சொற்பிரிப்பு
ஆவதேல் நுமக்கு அடுத்தது கூறுவீர் என்றுகாவலன் பரிந்து உரைத்தலும் கார் அமண் கையர்மாவலாய் உன் தன் மதுரையில் சைவ வேதியர் தாம்மேவலால் இன்று கண்டு முட்டு யாம் என்று விளம்ப.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

684

என்று கூறலும் கேட்டு முட்டி யானும் என்று இயம்பிநன்று நல் அறம் புரிந்தவா நான் என்று நகுவான்கன்றும் உள்ளத்தன் ஆகி அக் கண்நுதல் அடியார்இன்று இம்மாநகர் அணைந்தது என் அவர்கள் யார் என்றான்.
சொற்பிரிப்பு
என்று கூறலும் கேட்டு முட்டு யானும் என்று இயம்பிநன்று நல் அறம் புரிந்தவா நான் என்று நகுவான்கன்றும் உள்ளத்தன் ஆகி அக் கண்நுதல் அடியார்இன்று இம் மாநகர் அணைந்தது என் அவர்கள் யார் என்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

685

மாலை வெண் குடை வளவர் சோணாட்டு வண்புகலிச்சூல பாணிபால் ஞானம் பெற்றான் என்று சுருதிப்பாலன் அன்பர்தம் குழாத்தொடும் பனி முத்தின் சிவிகைமேல் அணைந்தனன் எங்களை வாதினில் வெல்ல.
சொற்பிரிப்பு
மாலை வெண்குடை வளவர் சோணாட்டு வண் புகலிச்சூல பாணிபால் ஞானம் பெற்றான் என்று சுருதிப்பாலன் அன்பர் தம் குழாத் தொடும்பனி முத்தின் சிவிகைமேல் அணைந்தனன் எங்களை வாதினில் வெல்ல.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

686

என்று கூறுவார் இத்திறம் முன்பு தாம் அறிந்ததுஒன்றும் அங்கு ஒழியா வகை உரைத்தலும் தென்னன்மன்றலம் பொழில் சண்பையார் வள்ளலார் நாமம்சென்று தன் செவி நிறைத்தலும் செயிர்த்து முன் சொல்வான்.
சொற்பிரிப்பு
என்று கூறுவார் இத்திறம் முன்பு தாம் அறிந்ததுஒன்றும் அங்கு ஒழியாவகை உரைத்தலும் தென்னன்மன்றல் அம்பொழில் சண்பையார் வள்ளலார் நாமம்சென்று தன் செவி நிறைத்தலும் செயிர்த்து முன் சொல்வான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

687

மற்ற மா மறை மைந்தன் இம் மருங்கு அணைந்தானேல்உற்ற செய் தொழில் யாது செய்கோம் என உரைப்பச்செற்றம் மீக் கொண்ட சிந்தையும் செய்கையும் உடையோர்கொற்ற மன்னவன் மொழிக்கு எதிர் குறித்து உரை செய்வார்.
சொற்பிரிப்பு
மற்ற மாமறை மைந்தன் இம் மருங்கு அணைந்தானேல்உற்ற செய்தொழில் யாது செய்கோம் என உரைப்பச்செற்றம் மீக்கொண்ட சிந்தையும் செய்கையும் உடையோர்கொற்ற மன்னவன் மொழிக்கு எதிர்குறித்து உரை செய்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

688

வந்த அந்தணன் தன்னை நாம் வலிது செய்து போக்கும்சிந்தை அன்றி அச் சிறுமறையோன் உறை மடத்தில்வெந்தழல் பட விஞ்சை மந்திரத் தொழில் விளைத்தால்இந்த நன்னகர் இடத்திரான் ஏகும் என்று இசைத்தார்.
சொற்பிரிப்பு
வந்த அந்தணன் தன்னை நாம் வலி செய்து போக்கும்சிந்தை அன்றி அச்சிறு மறையோன் உறை மடத்தில்வெந்தழல் பட விஞ்சை மந்திரத் தொழில் விளைத்தால்இந்த நன்நகர் இடத்து இரான் ஏகும் என்று இசைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

689

ஆவது ஒன்று இதுவே ஆகில் அதனையே விரைந்து செய்யப்போவது என்று அவரைப் போக்கிப் பொய் பொருளாகக் கொண்டான்யாவதும் உரையாடாதே எண்ணத்தில் கவலையோடும்பூவணை அமளி புக்கான் பொங்கு எழில் தேவி சேர்ந்தாள்.
சொற்பிரிப்பு
ஆவது ஒன்று இதுவே ஆகில் அதனையே விரைந்து செய்யப்போவது என்று அவரைப் போக்கிப் பொய் பொருள் ஆகக் கொண்டான்யாவதும் உரையாடாதே எண்ணத்தில் கவலை யோடும்பூ அணை அமளி புக்கான் பொங்கு எழில் தேவி சேர்ந்தாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

690

மன்னவன் உரைப்பது இன்றி இருக்க மா தேவியார்தாம்என் உயிருக்கு உயிராய் உள்ள இறைவ நீ உற்றது என்னோமுன் உள மகிழ்ச்சி இன்றி முகம் புலர்ந்து இருந்தாய் இன்றுபன்னிய உள்ளத்து எய்தும் பருவரல் அருள் செய் என்றார்.
சொற்பிரிப்பு
மன்னவன் உரைப்பது இன்றி இருக்க மாதேவியார் தாம்என் உயிர்க்கு உயிராய் உள்ள இறைவ நீ உற்றது என்னோமுன் உள மகிழ்ச்சி இன்றி முகம் புலர்ந்து இருந்தாய் இன்றுபன்னிய உள்ளத்து எய்தும் பருவரல் அருள் செய் என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

691

தேவியார் தம்மை நோக்கித் தென்னவன் கூறுகின்றான்காவிநீள் கண்ணினாய் கேள் காவிரி நாட்டில் மன்னும்தாவில் சீர்க் கழுமலத்தான் சங்கரன் அருள் பெற்று இங்குமேவினான் அடிகள் மாரை வாதினில் வெல்ல என்று.
சொற்பிரிப்பு
தேவியார் தம்மை நோக்கித் தென்னவன் கூறுகின்றான்காவி நீள் கண்ணினாய் கேள் காவிரி நாட்டில் மன்னும்தாவில் சீர்க் கழுமலத்தான் சங்கரன் அருள் பெற்று இங்குமேவினான் அடிகள் மாரை வாதினில் வெல்ல என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

692

வெண் பொடி பூசும் தொண்டர் விரவினார் அவரை எல்லாம்கண்டு முட்டு அடிகள் மார்கள் கேட்டு முட்டியானும் காதல்வண்டுணத் துதைந்த கோதை மானியே இங்கு வந்தபண்பு மற்று இதுவேயாகும் பரிசு வேறு இல்லை என்றான்.
சொற்பிரிப்பு
வெண்பொடி பூசும் தொண்டர் விரவினார் அவரை எல்லாம்கண்டு முட்டு அடிகள்மார்கள் கேட்டு முட்டு யானும் காதல்வண்டு உணத் துதைந்த கோதை மானியே இங்கு வந்தபண்பு மற்று இதுவே ஆகும் பரிசு வேறு இல்லை என்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

693

மன்னவன் உரைப்பக் கேட்டு மங்கையர்க்கரசியார் தாம்நின்னிலை இதுவே யாகில் நீடிய தெய்வத் தன்மைஅன்னவர் வாது செய்தால் வென்றவர் பக்கம் சேர்ந்துதுன்னுவது உறுதியாகும் சுழிவுறேல் மன்ன என்றார்.
சொற்பிரிப்பு
மன்னவன் உரைப்பக் கேட்டு மங்கையர்க்கு அரசியார் தாம்நின் நிலை இதுவே ஆகில் நீடிய தெய்வத் தன்மைஅன்னவர் வாது செய்தால் வென்றவர் பக்கம் சேர்ந்துதுன்னுவது உறுதி ஆகும் சுழிவுறேல் மன்ன என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

694

சிந்தையில் களிப்பு மிக்குத் திருக் கழுமலத்தார் வேந்தன்வந்தவாறு எம்மை ஆள என வரு மகிழ்ச்சி யோடும்கொந்தலர் குழலார் போதக் குலச் சிறையார் அங்கு எய்தஇந்த நன் மாற்றம் எல்லாம் அவர்க்கு உரைத்து இருந்த பின்னர்.
சொற்பிரிப்பு
சிந்தையில் களிப்பு மிக்குத் திருக் கழுமலத்தார் வேந்தன்வந்தவாறு எம்மை ஆள என வரு மகிழ்ச்சியோடும்கொந்து அலர் குழலார் போதக் குலச்சிறையார் அங்கு எய்த,இந்நன் மாற்றம் எல்லாம் அவர்க்கு உரைத்து இருந்த பின்னர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

695

கொற்றவன் அமைச்சனாரும் கைதலை குவித்து நின்றுபெற்றனம் பிள்ளையார் இங்கு அணைந்திடப் பெறும் பேறு என்பார்இற்றை நாள் ஈசன் அன்பர் தம்மை நாம் இறைஞ்சப் பெற்றோம்மற்று இனிச் சமணர் செய்யும் வஞ்சனை அறியோம் என்றார்.
சொற்பிரிப்பு
கொற்றவன் அமைச்ச னாரும் கைதலைக் குவித்து நின்றுபெற்றனம் பிள்ளையார் இங்கு அணைந்திடப் பெறும் பேறு என்பார்இற்றை நாள் ஈசன் அன்பர் தம்மை நாம் இறைஞ்சப் பெற்றோம்மற்று இனிச் சமணர் செய்யும் வஞ்சனை அறியோம் என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

696

மானியார் தாமும் அஞ்சி வஞ்சகப் புலையர் தாங்கள்ஈனமே புரிய வல்லார் செய்வது என்னாம் என்று எண்ணிஞான சம்பந்தர் தம்பால் நன்மை அல்லாது செய்யஊனம் வந்து அடையில் யாமும் உயிர் துறந்து ஒழிவது என்றார்.
சொற்பிரிப்பு
மானியார் தாமும் அஞ்சி வஞ்சகப் புலையர் தாங்கள்ஈனமே புரிய வல்லார் செய்வது என் நாம் என்று எண்ணிஞான சம்பந்தர் தம் பால் நன்மை அல்லாது செய்யும்ஊனம் வந்து அடையில் யாமும் உயிர் துறந்து ஒழிவது என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

697

இவர் நிலை இதுவே ஆக இலங்குவேல் தென்னவன் ஆனஅவன் நிலை அதுவாம் அந்நாள் அருகர் தம் நிலை யாது என்னில்தவம் மறைந்து அல்ல செய்வார் தங்கள் மந்திரத்தால் செந்தீசிவ நெறி வளர்க்க வந்தார் திருமடம் சேரச் செய்தார்.
சொற்பிரிப்பு
இவர் நிலை இதுவே ஆக இலங்கு வேல் தென்னன் ஆனஅவன் நிலை அதுவாம் அந்நாள் அருகர் தம் நிலையாது என்னில்தவம் மறைந்து அல்ல செய்வார் தங்கள் மந்திரத்தால் செந்தீசிவநெறி வளர்க்க வந்தார் திருமடம் சேரச் செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

698

ஆதி மந்திரம் அஞ்சு எழுத்து ஓதுவார் நோக்கும்மாதிரத்தினும் மற்றை மந்திர விதி வருமேபூதி சாதனர் மடத்தில் தாம் புனைந்த சாதனைகள்சாதியா வகை கண்ட அமண் குண்டர்கள் தளர்ந்தார்.
சொற்பிரிப்பு
ஆதி மந்திரம் அஞ்செழுத்து ஓதுவார் நோக்கும்மாதிரத்தினும் மற்றை மந்திர விதி வருமேபூதி சாதனர் மடத்தில் தாம் புனைந்த சாதனைகள்சாதியா வகை கண்டு அமண் குண்டர்கள் தளர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

699

தளர்ந்து மற்று அவர் தாம் செய்த தீத்தொழில் சரியக்கிளர்ந்த அச்சம் முன் கெழுமிய கீழ்மையோர் கூடிவிளங்கு நீள் முடி வேந்தன் ஈது அறியின் நம் மேன்மைஉளம் கொள்ளான் நமர் விருத்தியும் ஒழிக்கும் என்று உணர்வார்.
சொற்பிரிப்பு
தளர்ந்து மற்றவர் தாம் செய்த தீத்தொழில் சரியக்கிளர்ந்த அச்ச முன்கெழுமிய கீழ்மையோர் கூடிவிளங்கு நீள் முடி வேந்தன் ஈது அறியின் நம் மேன்மைஉளம் கொளான் நமர் விருத்தியும் ஒழிக்கும் என்று உணர்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

700

மந்திரச் செயல் வாய்த்தில மற்று இனிச் செய்யும்புந்தியாவது இங்கு இது எனப் பொதி தழல் கொடு புக்குஅந்தண் மாதவர் திரு மடப் புறத்து அயல் இருள் போல்வந்து தம் தொழில் புரிந்தனர் வஞ்சனை மனத்தோர்.
சொற்பிரிப்பு
மந்திரச் செயல் வாய்த்தில மற்று இனிச் செய்யும்புந்தி ஆவது இங்கு இது எனப் பொதி தழல் கொடு புக்குஅந்தண் மாதவர் திருமடப் புறத்து அயல் இருள் போல்வந்துதம் தொழில் புரிந்தனர் வஞ்சனை மனத்தோர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

701

திரு மடப் புறச் சுற்றினில் தீய பாதகத்தோர்மருவுவித்த அத்தொழில் வெளிப்படுதலும் மறுகிப்பரிசனத்தவர் பதைப்பொடும் சிதைத்தது நீக்கிஅருகர் இத்திறம் புரிந்தமை தெளிந்து சென்று அணைவார்.
சொற்பிரிப்பு
திரு மடப்புறச் சுற்றினில் தீய பாதகத்தோர்மருவுவித்த அத்தொழில் வெளிப்படுதலும் மறுகிப்பரிசனத்தவர் பதைப்பொடும் சிதைத்து அது நீக்கிஅருகர் இத்திறம் புரிந்தமை தெளிந்து சென்று அணைவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

702

கழுமலப் பதிக் கவுணியர் கற்பகக் கன்றைத்தொழுது நின்று அமண் குண்டர் செய் தீங்கினைச் சொன்னபொழுது மாதவர் துயிலும் இத்திரு மடப் புறம்புபழுது செய்வதோ பாவிகள் எனப் பரிந்து அருளி.
சொற்பிரிப்பு
கழுமலப்பதிக் கவுணியர் கற்பகக் கன்றைத்தொழுது நின்று அமண் குண்டர் செய் தீங்கினைச் சொன்னபொழுது மாதவர் துயிலும் இத் திருமடப் புறம்புபழுது செய்வதோ பாவிகாள் எனப் பரிந்தருளி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

703

என் பொருட்டு அவர் செய்த தீங்கு ஆயினும் இறையோன்அன்பருக்கு எய்துமோ என்று பின்னையும் அச்சம்முன்புற பின்பு முனிவுற முத்தமிழ் விரகர்மன் புரக்கும் மெய்ம்முறை வழு என மனம் கொண்டார்.
சொற்பிரிப்பு
என் பொருட்டு அவர் செய்த தீங்கு ஆயினும் இறையோன்அன்பருக்கு எய்துமோ என்று பின்னையும் அச்சம்முன்புறப் பின்பு முனிவுற முத்தமிழ் விரகர்மன் புரக்கும் மெய்ம் முறை வழு என மனம் கொண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

704

வெய்ய தீங்கு இது வேந்தன் மேற்று எனும் விதி முறையால்செய்யனே திரு ஆலவாய் எனும் திருப்பதிகம்சைவர் வாழ் மடத்து அமணர்கள் இட்ட தீத் தழல் போய்ப்பையவே சென்று பாண்டியற்கு ஆக எனப் பணித்தார்.
சொற்பிரிப்பு
வெய்ய தீங்கு இது வேந்தன் மேற்று எனும் விதிமுறையால்செய்யனே திரு ஆலவாய் எனும் திருப்பதிகம்சைவர் வாழ் மடத்து அமணர்கள் இட்ட தீத் தழல்போய்ப்பையவே சென்று பாண்டியற்கு ஆக எனப் பணித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

705

பாண்டிமா தேவியார் தமது பொற்பில் பயிலும் நெடு மங்கல நாண் பாதுகாத்தும்ஆண் தகையார் குலச் சிறையார் அன்பினாலும் அரசன்பால் அபராதம் உறுதலாலும்மீண்டும் சிவ நெறி அடையும் விதியினாலும் வெண்ணீறு வெப்பு அகலப் புகலி வேந்தர்தீண்டியிடப் பேறு உடையன் ஆதலாலும் தீப்பிணியைப் பையவே செல்க என்றார்.
சொற்பிரிப்பு
பாண்டிமா தேவியார் தமது பொற்பில் பயிலு நெடு மங்கல நாண் பாதுகாத்தும்ஆண்டகையார் குலச்சிறையார் அன்பினாலும் அரசன்பால் அபராதம் உறுதலாலும்மீண்டு சிவ நெறி அடையும் விதியினாலும் வெண்நீறு வெப்பு அகலப் புகலி வேந்தர்தீண்டி இடப் பேறுஉடையன் ஆதலாலும் தீப்பிணியைப் பையவே செல்க என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

706

திருந்திசைப் பதிகத் தொடை திரு ஆல வாயின்மருந்தினைச் சண்பை மன்னவர் புனைந்திட அருளால்விரிந்த வெந்தழல் வெம்மை போய்த் தென்னனை மேவிப்பெருந்தழல் பொதி வெதுப்பு எனப் பெயர் பெற்றதன்றே.
சொற்பிரிப்பு
திருந்து இசைப் பதிகத்தொடை திருஆலவாயின்மருந்தினைச் சண்பை மன்னவர் புனைந்திட அருளால்விரிந்த வெந்தழல் வெம்மை போய்த் தென்னனை மேவிப்பெருந்தழல் பொதி வெதுப்பு எனப் பெயர் பெற்றது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

707

செய்ய மேனியர் திருமகனார் உறை மடத்தில்நையும் உள்ளத்தராய் அமண் கையர் தாம் நணுகிக்கையினால் எரி இட உடன் படும் எல்லி கரப்பவெய்யவன் குண கடலிடை எழுந்தனன் மீது.
சொற்பிரிப்பு
செய்ய மேனியர் திருமகனார் உறை மடத்தில்நையும் உள்ளத்தராய் அமண் கையர் தாம் நணுகிக்கையினால் எரி இட உடன்படும் எல்லி கரப்பவெய்யவன் குணகடல் இடை எழுந்தனன் மீது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

708

இரவு பாதகர் செய்த தீங்கு இரவி தன் மரபில்குரவ ஓதியார் குலச் சிறை யாருடன் கேட்டுச்சிவபுரப் பிள்ளை யாரை இத் தீயவர் நாட்டுவரவழைத்த நாம் மாய்வதே என மன(ம்) மயங்கி.
சொற்பிரிப்பு
இரவு பாதகர் செய்த தீங்கு இரவி தன் மரபில்குரவ ஓதியர் குலச்சிறை யாருடன் கேட்டுச்சிரபுரப் பிள்ளையாரை இத்தீயவர் நாட்டுவரவு அழைத்த நாம் மாய்வதே என மனம் மயங்கி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

709

பெருகும் அச்சமோடும் ஆருயிர் பதைப்பவர் பின்புதிரு மடப்புறம் மருங்கு தீது இன்மையில் தெளிந்துகரும் உருட்ட மண்கையர் செய்தீங்கு இது கடைக்கால்வருவது எப்படியாம் என மனம் கொளும் பொழுது.
சொற்பிரிப்பு
பெருகும் அச்சமோடு ஆர் உயிர் பதைப்பவர் பின்புதிருமடப்புறம் மருங்கு தீது இன்மையில் தெளிந்துகருமுருட்டு அமண் கையர் செய் தீங்கு இது கடைக்கால்வருவது எப்படியாம் என மனம்கொளும் பொழுது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

710

அரசனுக்கு வெப்பு அடுத்தது என்று அருகு கஞ்சுகிகள்உரை செயப் பதைத்து ஒரு தனித் தேவியார் புகுதவிரைவும் அச்சமும் மேற்கொளக் குலச்சிறையாரும்வரை செய் பொன்புய மன்னவன் மருங்கு வந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
அரசனுக்கு வெப்பு அடுத்தது என்று அருகு கஞ்சுகிகள்உரைசெயப் பதைத்து ஒரு தனித் தேவியார் புகுத,விரைவும் அச்சமும் மேற் கொளக் குலச்சிறை யாரும்வரை செய் பொற்புய மன்னவன் மருங்கு வந்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

711

வேந்தனுக்கு மெய் விதிர்ப்புற வெதுப்புறும் வெம்மைகாந்து வெந்தழல் கதும் என மெய் எலாம் கவர்ந்துபோந்து மாளிகைப் புறத்து நின்றார்களும் புலர்ந்துதீந்து போம்படி எழுந்தது விழுந்துடல் திரங்க.
சொற்பிரிப்பு
வேந்தனுக்கு மெய் விதிர்ப்புற வெதுப்புற வெம்மைகாந்து வெந்தழல் கதும் என மெய் எலாம் கவர்ந்துபோந்து மாளிகைப் புறத்து நின்றார்களும் புலர்ந்துதீந்து போம்படி எழுந்தது விழுந்து உடல் திரங்க.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

712

உணர்வும் ஆவியும் ஒழிவதற்கு ஒரு புடை ஒதுங்கஅணையல் உற்றவர் அருகு தூரத்திடை அகலப்புணர் இளம் கதலிக் குருத்தொடு தளிர் புடையேகொணரினும் சுருக்கொண்டு அவை நுண்துகள் ஆக.
சொற்பிரிப்பு
உணர்வும் ஆவியும் ஒழிவதற்கு ஒருபுடை ஒதுங்கஅணையல் உற்றவர் அருகு தூரத்து இடை அகலப்புணர் இளம் கதலிக் குருத்தொடு தளிர் புடையேகொணரினும் சுருக்கொண்டு அவை நுண்துகள் ஆக.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

713

மருத்து நூலவர் தங்கள் பல் கலைகளில் வகுத்ததிருத்தகும் தொழில் யாவையும் செய்யவும் மேல் மேல்உருத்து எழுந்த வெப்பு உயிரையும் உருக்குவது ஆகக்கருத்து ஒழிந்து உரை மறந்தனன் கௌரியர் தலைவன்.
சொற்பிரிப்பு
மருத்து நூலவர் தங்கள் பல்கலைகளில் வகுத்ததிருத்தகும் தொழில் யாவையும் செய்யவும் மேன்மேல்உருத்து எழுந்த வெப்பு உயிரையும் உருக்குவது ஆகக்கருத்து ஒழிந்து உரை மறந்தனன் கௌரியர் தலைவன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

714

ஆனவன் பிணி நிகழ்வுழி அமணர்கள் எல்லாம்மீனவன் செயல் கேட்டலும் வெய்து உயிர்த்து அழிந்துபோன கங்குலில் புகுந்ததின் விளைவு கொல் என்பார்மான முன் தெரியா வகை மன்னன் மாட்டு அணைந்தார்.
சொற்பிரிப்பு
ஆனவன் பிணி நிகழ்வுழி அமணர்கள் எல்லாம்மீனவன் செயல் கேட்டலும் வெய்து உயிர்த்து அழிந்துபோன கங்குலில் புகுந்ததின் விளைவு கொல் என்பார்மானம் முன் தெரியாவகை மன்னன் மாட்டு அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

715

மால் பெருக்கும் சமண்கையர் மருங்கு சூழ்ந்து வழுதி நிலை கண்டு அழிந்து வந்த நோயின்மூல நெறி அறியாதே தங்கள் தெய்வ மொழி நவில் மந்திரம் கொண்டு முன்னும் பின்னும்பீலிகொடு தைவருதற்கு எடுத்த போது பிடித்த பீலிகள் பிரம்பினோடும் தீந்துமேல் எரியும் பொறி சிதறி வீழக் கண்டு வெப்பின் அதிசயம் நோக்கி வெருவல் மிக்கார்.
சொற்பிரிப்பு
மால் பெருக்கும் சமண் கையர் மருங்கு சூழ்ந்து வழுதி நிலை கண்டு அழிந்து வந்த நோயின்மூல நெறி அறியாதே தங்கள் தெய்வமொழி நவில் மந்திரம் கொண்டு முன்னும் பின்னும்பீலிகொடு தை வருதற்கு எடுத்தபோது பிடித்த பீலிகள் பிரம்பினோடும் தீந்துமேல் எரியும் பொறி சிதறி வீழக் கண்டு வெப்பின் அதிசயம் நோக்கி வெருவல் மிக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

716

கருகிய மாசு உடை யாக்கைத் தீயோர் தங்கள் கைத்தூங்கு குண்டிகை நீர் தெளித்துக் காவாய்அருகனே அருகனே என்றென்று ஓதி அடல் வழுதி மேல் தெளிக்க அந்நீர்ப் பொங்கிப்பெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகிப் பேர்த்தும் ஒரு தழல் அதன் மேல் பெய்தாற் போலஒருவரும் இங்கு இருமருங்கும் இராது போம் என்று அமணரைப் பார்த்து உரைத்து அரசன் உணர்வு சோர்ந்தான்.
சொற்பிரிப்பு
கருகிய மாசு உடை ஆக்கைத் தீயோர் தங்கள் கைத் தூங்கு குண்டிகை நீர் தெளித்துக் காவாய்அருகனே அருகனே என்று என்று ஓதிஅடல் வழுதி மேல் தெளிக்க அந்நீர் பொங்கிப்பெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகிப் பேர்த்தும் ஒரு தழல் அதன்மேல் பெய்தால் போலஒருவரும் இங்கு இருமருங்கும் இராது போம் என்று அமணரைப் பார்த்து உரைத்து அரசன் உணர்வு சோர்ந்தான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

717

பாண்டி மாதேவியாரும் பயம் எய்தி அமைச்சர் பாரம்பூண்டவர் தம்மை நோக்கிப் புகலியில் வந்து நம்மைஆண்டு கொண்டவர் பால் கங்குல் அமணர் தாம் செய்த தீங்குமூண்டவாறு இனையது ஆகி முடிந்ததோ என்று கூற.
சொற்பிரிப்பு
பாண்டிமா தேவியாரும் பயம் எய்தி அமைச்சர் பாரம்பூண்டவர் தம்மை நோக்கிப் புகலியில் வந்து நம்மைஆண்டு கொண்டவர்பால் கங்குல் அமணர் தாம் செய்த தீங்குமூண்டவாறு இனையது ஆகி முடிந்ததோ என்று கூற.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

718

கொற்றவன் அமைச்சராம் குலச்சிறையாரும் தாழ்ந்துமற்று இதன் கொடுமை இந்த வஞ்சகர் மதில்கள் மூன்றும்செற்றவர் அன்பர் தம்பால் செய்தது ஈங்கு அரசன் பாங்குமுற்றியது இவர்கள் தீர்க்கின் முதிர்வதே ஆவது என்பார்.
சொற்பிரிப்பு
கொற்றவன் அமைச்சனாராம் குலச்சிறையாரும் தாழ்ந்துமற்று இதன் கொடுமை இந்த வஞ்சகர் மதில்கள் மூன்றும்செற்றவர் அன்பர் தம்பால் செய்த தீங்கு அரசன் பாங்குமுற்றியது இவர்கள் தீர்க்கின் முதிர்வதே ஆவது என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

719

இரு திறத்தவரும் மன்னன் எதிர் பணிந்து இந்த வெப்புவரு திறம் புகலி வந்த வள்ளலார் மதுரை நண்ணஅருகர்கள் செய்த தீய அனுசிதம் அதனால் வந்துபெருகியது இதற்குத் தீர்வு பிள்ளையார் அருளே என்று.
சொற்பிரிப்பு
இரு திறத்தவரும் மன்னன் எதிர் பணிந்து இந்த வெப்புவருதிறம் புகலி வந்த வள்ளலார் மதுரை நண்ணஅருகர்கள் செய்த தீய அனுசிதம் அதனால் வந்துபெருகியது இதற்குத் தீர்வு பிள்ளையார் அருளே என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

720

காயமும் மனமும் மாசு கழுவுதல் செய்யார் செய்யும்மாயமும் இந்த நோயை வளர்ப்பதே வளர் வெண் திங்கள்மேய வேணியர்பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கில்தீய இப்பிணியே அன்றி இப் பிறவியும் தீரும் என்றார்.
சொற்பிரிப்பு
காயமும் மனமும் மாசு கழுவுதல் செய்யார் செய்யும்மாயமும் இந்த நோயை வளர்ப்பதே வளர்வெண் திங்கள்மேய வேணியர்பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கில்தீய இப் பிணியே அன்றிப் பிறவியும் தீரும் என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

721

மீனவன் செவியின் ஊடு மெய் உணர்வளிப்போர் கூறஞான சம்பந்தர் என்னும் நாம மந்திரமும் செல்லஆன போது அயர்வு தன்னை அகன்றிட அமணர் ஆகும்மானம் இல்லவரைப் பார்த்து மாற்றம் ஒன்று உரைக்கல் உற்றான்.
சொற்பிரிப்பு
மீனவன் செவியின் ஊடுமெய் உணர்வு அளிப்போர் கூறஞான சம்பந்தர் என்னும் நாம மந்திரமும் செல்லஆன போது அயர்வு தன்னை அகன்றிட அமணர் ஆகும்மானம் இல்லவரைப் பார்த்து மாற்றம்ஒன்று உரைக்கல் உற்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

722

மன்னவன் அவரை நோக்கி மற்று இவர் செய்கை எல்லாம்இன்னவாறு எய்து நோய்க்கே ஏது ஆயின என்று எண்ணிமன்னிய சைவ நீதி மா மறைச் சிறுவர் வந்தால்அன்னவர் அருளால் இந்நோய் அகலுமேல் அறிவேன் என்றான்.
சொற்பிரிப்பு
மன்னவன் அவரை நோக்கி மற்றுஇவர் செய்கை எல்லாம்இன்னவாறு எய்து நோய்க்கே ஏதுஆயின என்று எண்ணிமன்னிய சைவ நீதி மாமறைச் சிறுவர் வந்தால்அன்னவர் அருளால் இந்நோய் அகலுமேல் அறிவேன் என்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

723

என்று முன் கூறிப் பின்னும் யான் உற்ற பிணியைத் தீர்த்துவென்றவர் பக்கம் சேர்வன் விரகு உண்டேல் அழையும் என்னஅன்று அவர் உவகை பொங்கி ஆர்வத்தால் அணையை நூக்கிச்சென்ற நீர் வெள்ளம் போலும் காதல் வெள்ளத்தில் செல்வார்.
சொற்பிரிப்பு
என்று முன் கூறிப் பின்னும் யான்உற்ற பிணியைத் தீர்த்துவென்றவர் பக்கம் சேர்வன் விரகு உண்டேல் அழையும் என்னஅன்று அவர் உவகை பொங்கி ஆர்வத்தால் அணையை நூக்கிச்சென்ற நீர் வெள்ளம் போலும் காதல் வெள்ளத்தில் செல்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

724

பாய் உடைப் பாதகத்தோர் திரு மடப் பாங்கு செய்ததீவினைத் தொழிலை நோக்கி உள்ளழி திரு உள்ளத்தான்மேய அத்துயரம் நீங்க விருப்புறு விரைவினோடுநாயகப் பிள்ளையார் தம் நற்பதம் பணிவார் ஆகி.
சொற்பிரிப்பு
பாய் உடைப் பாதகத்தோர் திருமடப் பாங்கு செய்ததீவினைத் தொழிலை நோக்கி உள் அழி திரு உள்ளத்தால்மேய அத்துயரம் நீங்க விருப்புறும் விரைவினோடுநாயகப் பிள்ளையார் தம் நல்பதம் பணிவார் ஆகி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

725

மன்னவன் இடும்பை தீர மற்று அவன் பணி மேல் கொண்டேஅன்னமென் நடையினாரும் அணிமணிச் சிவிகை ஏறிமின் இடை மடவார் சூழ வேற்படை அமைச்சனாரும்முன் அணைந்து ஏகச் சைவ முதல்வனார் மடத்தைச் சார்ந்தார்.
சொற்பிரிப்பு
மன்னவன் இடும்பை தீர மற்றவன் பணிமேல் கொண்டேஅன்னம் மென் நடையினாரும் அணிமணிச் சிவிகை ஏறிமின்இடை மடவார் சூழ வேல்படை அமைச்சனாரும்முன் அணைந்து ஏகச் சைவ முதல்வனார் மடத்தைச் சார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

726

திருமடம் சாரச் சென்று சேயரிக் கண்ணினார் முன்வருபரி இழிந்து நின்ற அமைச்சனார் வந்த பான்மைசிரபுர பிள்ளையார்க்கு விண்ணப்பம் செய்வீர் என்னப்பரிசனத்தவரும் புக்குப் பதம் அறிந்து உணர்த்து கின்றார்.
சொற்பிரிப்பு
திருமடம் சாரச் சென்று சேய் அரிக் கண்ணினார் முன்வரு பரி இழிந்து நின்ற அமைச்சனார் வந்த பான்மைசிரபுரப் பிள்ளையார்க்கு விண்ணப்பம் செய்வீர் என்னப்பரிசனத்தவரும் புக்குப் பதம் அறிந்து உணர்த்துகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

727

பாண்டி மாதேவியாரும் பரிவுடை அமைச்சனாரும்ஈண்டும் வந்து அணைந்தார் என்று விண்ணப்பம் செய்யச் சண்பைஆண் தகையாரும் ஈண்ட அழையும் என்று அருளிச் செய்யமீண்டு போந்து அழைக்கப் புக்கார் விரைவுறும் விருப்பின் மிக்கார்.
சொற்பிரிப்பு
பாண்டிமா தேவியாரும் பரிவுடை அமைச்சனாரும்ஈண்டு வந்து அணைந்தார் என்று விண்ணப்பம் செய்யச் சண்பைஆண்டகையாரும் ஈண்ட அழையும் என்று அருளிச் செய்யமீண்டு போந்து அழைக்கப் புக்கார் விரைவுறும் விருப்பின் மிக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

728

ஞானத்தின் திரு உருவை நான் மறையின் தனித் துணையைவானத்தின் மிசை அன்றி மண்ணில் வளர் மதிக் கொழுந்தைத்தேன் நக்க மலர்க் கொன்றைச் செஞ் சடையார் சீர் தொடுக்கும்கானத்தின் எழுபிறப்பைக் கண் களிப்பக் கண்டார்கள்.
சொற்பிரிப்பு
ஞானத்தின் திருஉருவை நான்மறையின் தனித்துணையைவானத்தின் மிசை அன்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தைத்தேன் நக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர் தொடுக்கும்கானத்தின் எழு பிறப்பைக் கண் களிப்பக் கண்டார்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

729

கண்ட பொழுது அமண் கொடியோர் செய்த கடும் தொழில் நினைந்தேமண்டிய கண் அருவி நீர் பாய மலர்க் கை குவித்துப்புண்டரிகச் சேவடிக் கீழ்ப் பொருந்த நில முற விழுந்தார்கொண்ட குறிப் போடு நெடிது உயிர்த்த கொள்கையராய்.
சொற்பிரிப்பு
கண்டபொழுது அமண் கொடியோர் செய்த கடும் தொழில் நினைந்தேமண்டிய கண் அருவிநீ ர் பாய மலர்க் கை குவித்துப்புண்டரிகச் சேவடிக் கீழ்ப் பொருந்த நிலம் உற விழுந்தார்கொண்ட குறிப்போடு நெடிது உயிர்த்து அழிந்த கொள்கையராய்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

730

உரை குழறி மெய்ந் நடுங்கி ஒன்றும் அறிந்திலர் ஆகித்தரையின் மிசைப் புரண்டு அயர்ந்து சரண கமலம் பற்றிக்கரையில் கவலைக் கடலுக்கு ஓர் கரை பற்றினால் போன்றுவிரைவுறு மெய் அன்பினால் விடாது ஒழிவார் தமைக்கண்டு.
சொற்பிரிப்பு
உரை குழறி மெய்ந் நடுங்கி ஒன்றும் அறிந்திலர் ஆகித்தரையின் மிசைப் புரண்டு அயர்ந்து சரண கமலம் பற்றிக்கரையில் கவலைக் கடற்கு ஓர் கரை பற்றினார் போன்றுவிரைவுறு மெய் அன்பினால் விடாது ஒழிவார் தமைக்கண்டு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

731

அருமறை வாழ் பூம்புகலி அண்ணலார் அடி பூண்டஇருவரையும் திருக்கையால் எடுத்து அருளித் தேற்றிடவும்தெரு மந்து தெளியாதார் தமை நோக்கிச் சிறப்பு அருளிச்திருவுடையீர் உங்கள் பால் தீங்கு உளதோ என வினவ.
சொற்பிரிப்பு
அருமறை வாழ் பூம்புகலி அண்ணலார் அடி பூண்டஇருவரையும் திருக்கையால் எடுத்தருளித் தேற்றிடவும்தெருமந்து தெளியாதார் தமை நோக்கிச் சிறப்பருளித்திருஉடையீர் உங்கள் பால் தீங்கு உளதோ என வினவ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

732

வெஞ்சமணர் முன் செய்த வஞ்சனைக்கு மிக அழிந்தேஅஞ்சினோம் திருமேனிக்கு அடாது என்றே அது தீர்ந்தோம்வஞ்சகர் மற்று அவர் செய்த தீத்தொழில் போய் மன்னவன் பால்எஞ்சல் இலாக் கொடுவெதுப்பாய் எழா நின்றது எனத் தொழுது.
சொற்பிரிப்பு
வெஞ்சமணர் முன்செய்த வஞ்சனைக்கு மிக அழிந்தேஅஞ்சினோம் திருமேனிக்கு அடாது என்றே அது தீர்ந்தோம்வஞ்சகர் மற்று அவர் செய்த தீத்தொழில்போய் மன்னவன்பால்எஞ்சல் இலாக் கொடு வெதுப்பாய் எழாநின்றது எனத் தொழுது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

733

வெய்ய தொழில் அமண் குண்டர் விளைக்க வரும் வெதுப்பவர் தாம்செய்யும் மதி மாயைகளால் தீராமைத் தீப்பிணியால்மையல் உறு மன்னவன் முன் மற்று அவரை வென்று அருளில்உய்யும் எமது உயிரும் அவன் உயிரும் என உரைத்தார்கள்.
சொற்பிரிப்பு
வெய்ய தொழில் அமண் குண்டர் விளைக்க வரும் வெதுப்பு அவர் தாம்செய்யும் மதி மாயைகளால் தீராமைத் தீப்பிணியால்மையல் உறும் மன்னவன் முன் மற்றவரை வென்று அருளில்உய்யும் எமது உயிரும் அவன் உயிரும் என உரைத்தார்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

734

என்று அவர் உரைத்த போதில் எழில் கொள் பூம் புகலி வேந்தர்ஒன்றும் நீர் அஞ்ச வேண்டா உணர்வு இலா அமணர் தம்மைஇன்று நீர் உவகை எய்த யாவரும் காண வாதில்வென்று மீனவனை வெண்ணீறு அணிவிப்பன் விதியால் என்றார்.
சொற்பிரிப்பு
என்றவர் உரைத்த போதில் எழில் கொள் பூம்புகலி வேந்தர்ஒன்று நீர் அஞ்ச வேண்டா உணர்வு இலா அமணர் தம்மைஇன்று நீர் உவகை எய்த யாவரும் காண வாதில்வென்று மீனவனை வெண்நீறு அணிவிப்பன் விதியால் என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

735

மொழிந்தருள அது கேட்டு முன் இறைஞ்சி முகம் மலர்வார்அழுந்தும் இடர்க் கடல் இடை நின்று அடியோமை எடுத்து அருளச்செழும் தரளச் சிவிகையின் மேல் தென்னாடு செய்தவத்தால்எழுந்து அருளப் பேறு உடையோம் என் பெறோம் எனத் தொழலும்.
சொற்பிரிப்பு
மொழிந்தருள அது கேட்டு முன் இறைஞ்சி முக மலர்வார்அழுந்தும் இடர்க் கடல் இடை நின்று அடியோமை எடுத்தருளச்செழுந்தரளச் சிவிகையின் மேல் தென்நாடு செய் தவத்தால்எழுந்தருளப் பேறு உடையோம் என்பெறோம் எனத் தொழலும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

736

ஆவதும் அழிவும் எல்லாம் அவர் செயல் அமணர் ஆகும்பாவ காரிகளை நோக்கும் பழுது உடன் நீங்கி வெல்லச்சேவுயர் கொடியினார் தம் திரு உள்ளம் அறிவேன் என்றுபூவலர் பொழில் சூழ் சண்பைப் புரவலர் போதுகின்றார்.
சொற்பிரிப்பு
ஆவதும் அழிவும் எல்லாம் அவர் செயல் அமணர் ஆகும்பாவ காரிகளை நோக்கும் பழுது உடன் நீங்க வெல்லச்சே உயர் கொடியினார் தம் திருஉள்ளம் அறிவேன் என்றுபூஅலர் பொழில் சூழ் சண்பைப் புரவலர் போதுகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

737

வையகம் உய்ய வந்த வள்ளலார் மடத்தினின்றுமெய்யணி நீற்றுத் தொண்டர் வெள்ளமும் தாமும் போந்துகை இணை தலையின் மீது குவியக் கண் மலர்ச்சி காட்டச்செய்யவார் சடையார் மன்னும் திரு ஆல வாயுள் புக்கார்.
சொற்பிரிப்பு
வையகம் உய்ய வந்த வள்ளலார் மடத்தின் நின்றுமெய் அணி நீற்றுத் தொண்டர் வெள்ளமும் தாமும் போந்துகை இணை தலையின்மீது குவியக் கண் மலர்ச்சி காட்டச்செய்ய வார் சடையார் மன்னும் திருஆலவாய் உள் புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

738

நோக்கிட விதி இலாரை நோக்கி யான் வாது செய்யத்தீக் கனல் மேனியானே திருவுளமே என்று எண்ணில்பாக்கியப் பயனாய் உள்ள பாலறா வாயர் மெய்ம்மைநோக்கி வண் தமிழ் செய் மாலைப் பதிகந்தான் நுவலல் உற்றார்.
சொற்பிரிப்பு
நோக்கிட விதி இலாரை நோக்கி யான் வாது செய்யத்தீக்கனல் மேனியானே திரு உளமே என்று எண்ணில்பாக்கியப் பயனாய் உள்ள பாலறா வாயர் மெய்ம்மைநோக்கி வண் தமிழ் செய் மாலைப் பதிகம் தான் நுவலல் உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

739

கானிடை ஆடுவாரைக் காட்டுமா உரி முன் பாடித்தேன் அலர் கொன்றையார் தம் திருவுளம் நோக்கிப் பின்னும்ஊனமில் வேத வேள்வி என்று எடுத்துத்து உரையின் மாலைமானமில் அமணர் தம்மை வாதில் வென்று அழிக்கப்பாடி.
சொற்பிரிப்பு
கான் இடை ஆடுவாரைக் காட்டுமா உரி முன் பாடித்தேன்அலர் கொன்றையார் தம் திருஉளம் நோக்கிப் பின்னும்ஊனம் இல் வேத வேள்வி என்று எடுத்து உரையின் மாலைமானம் இல் அமணர் தம்மை வாதில் வென்று அழிக்கப் பாடி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

740

ஆலமே அமுதம் ஆக உண்டு வானவர்க்கு அளித்துக்காலனை மார்க் கண்டர்க்காக் காய்ந்தனை அடியேற்கு இன்றுஞாலம் நின் புகழே ஆக வேண்டும் நான் மறைகள் ஏத்தும்சீலமே ஆலவாயில் சிவ பெருமானே என்றார்.
சொற்பிரிப்பு
ஆலமே அமுதம் ஆக உண்டு வானவர்க்கு அளித்துக்காலனை மார்க்கண்டர்க்காக் காய்ந்தனை அடியேற்கு இன்றுஞாலம் நின் புகழே ஆக வேண்டும் நான்மறைகள் ஏத்தும்சீலமே ஆலவாயில் சிவபெருமானே என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

741

நாதர் தம் அருள் முன்பெற்று நாடிய மகிழ்ச்சி பொங்கப்போதுவார் பணிந்து போற்றி விடை கொண்டு புனித நீற்றுமேதகு கோலத்தோடும் விருப்புறு தொண்டர் சூழமூது எயில் கபாடம் நீடு முதல் திரு வாயில் சார்ந்தார்.
சொற்பிரிப்பு
நாதர் தம் அருள் முன் பெற்று நாடிய மகிழ்ச்சி பொங்கப்போதுவார் பணிந்து போற்றி விடைகொண்டு புனித நீற்றுமேதகு கோலத்தோடும் விருப்புறு தொண்டர் சூழமூது எயில் கபாடம் நீடு முதல் திருவாயில் சார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

742

அம் மலர்க் குழலினார்க்கும் அமைச்சர்க்கும் அருள வேண்டிச்செம் மணிப் பலகை முத்தின் சிவிகை மேல் கொண்ட போதில்எம் மருங்கிலும் தொண்டர் எடுத்த ஆர்ப்பு எல்லை இன்றிமும்மை நீடு உலகம் எல்லாம் முழுதுடன் நிறைந்தது அன்றே.
சொற்பிரிப்பு
அம்மலர்க் குழலினார்க்கும் அமைச்சர்க்கும் அருள வேண்டிச்செம்மணிப் பலகை முத்தின் சிவிகை மேல் கொண்டபோதில்எம்மருங்கினிலும் தொண்டர் எடுத்த ஆர்ப்பு எல்லை இன்றிமும்மை நீடு உலகம் எல்லாம் முழுது உடன் நிறைந்தது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

743

பல்லிய நாதம் பொங்கப் படர் திருநீற்றின் சோதிநல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்னவில் வளர் தரளக் கோவை வெண்குடை நிழற்றி வெவ்வேறுஎல்லையில் முத்தின் காளம் தாரை சங்கு எங்கும் ஓத.
சொற்பிரிப்பு
பல்லிய நாதம் பொங்கப் படர் திருநீற்றின் சோதிநல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்னவில் வளர் தரளக் கோவை வெண்குடை நிழற்ற வெவ்வேறுஎல்லையில் முத்தின காளம் தாரை சங்கு எங்கும் ஓத.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

744

கண்ணினுக்கு அணியாய் உள்ளார் எழுச்சியில் காட்சி பெற்றார்நண்ணிய சமயம் வேறு நம்பினர் எனினும் முன்புபண்ணிய தவங்கள் என் கொல் பஞ்சவன் தஞ்சம் மேவிப்புண்ணிய மூர்த்தி வந்து மதுரையில் புகுத என்றார்.
சொற்பிரிப்பு
கண்ணினுக்கு அணியாய் உள்ளார் எழுச்சியில் காட்சி பெற்றார்நண்ணிய சமயம் வேறு நம்பினர் எனினும் முன்புபண்ணிய தவங்கள் என் கொல் பஞ்சவன் தஞ்சம் மேவிப்புண்ணிய மூர்த்தி வந்து மதுரையில் புகுத என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

745

தென்னவர் தேவி யாரும் திருமணிச் சிவிகை மீதுபின் வர அமைச்சர் முன்பு பெரும் தொண்டர் குழாத்துச் செல்லப்பொன் அணி மாட வீதியூடு எழுந்தருளிப் புக்கார்கன்னி நாடு உடையான் கோயில் காழி நாடு உடைய பிள்ளை.
சொற்பிரிப்பு
தென்னவன் தேவியாரும் திருமணிச் சிவிகை மீதுபின் வர அமைச்சர் முன்பு பெருந்தொண்டர் குழாத்துச் செல்லப்பொன் அணி மாட வீதி ஊடு எழுந்தருளிப் புக்கார்கன்னி நாடு உடையான் கோயில் காழி நாடு உடைய பிள்ளை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

746

கொற்றவன் தன் பால் முன்பு குலச்சிறையார் வந்து எய்திப்பொற்றட மதில் சூழ் சண்பைப் புரவலர் வரவு கூறமுன் துயர் சிறிது நீங்கி முழுமணி அணிப் பொற் பீடம்மற்றவன் முடியின் பக்கத்து இடுக என வல்லன் ஆனான்.
சொற்பிரிப்பு
கொற்றவன் தன்பால் முன்பு குலச்சிறையார் வந்து எய்திப்பொற்றடம் மதில் சூழ் சண்பைப் புரவலர் வரவு கூறமுன் துயர் சிறிது நீங்கி முழுமணி அணிப்பொன் பீடம்மற்றவன் முடியின் பக்கத்து இடுக என வல்லன் ஆனான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

747

மந்திரி யாரைப் பின்னும் எதிர் செல மன்னன் ஏவச்சிந்தையுள் மகிழ்ந்து போந்தார் செயலை யான் சமயத்து உள்ளோர்பைந்துணர் அலங்கல் மன்னன் பரிசு கண்டு இதுவோ பண்பால்நம் தனிச் சமயம் தன்னை நாட்டு மாறு என்று பின்னும்.
சொற்பிரிப்பு
மந்திரியாரைப் பின்னும் எதிர் செல மன்னன் ஏவச்சிந்தை உள் மகிழ்ந்து போந்தார் செயலையான் சமயத்து உள்ளோர்பைந்துணர் அலங்கல் மன்னன் பரிசு கண்டு இதுவோ பண்பால்நம் தனிச் சமயம் தன்னை நாட்டுமாறு என்று பின்னும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

748

நின் அற நெறியை நீயே காத்து அருள் செய்தி ஆகில்அன்னவர் தம்மை இங்கே அழைத்தனை அவரும் யாமும்முன் உற ஒக்கத் தீர்க்க மொழிந்து மற்று அவரால் தீர்ந்ததுஎன்னினும் யாமும் தீர்த்தோம் ஆகவும் இசைவாய் என்றார்.
சொற்பிரிப்பு
நின் அறநெறியை நீயே காத்து அருள் செய்தி ஆகில்அன்னவர் தம்மை இங்கே அழைத்தனை அவரும் யாமும்முன் உற ஒக்கத் தீர்க்க மொழிந்து மற்று அவரால் தீர்ந்ததுஎன்னினும் யாமும் தீர்த்தோம் ஆகவும் இசைவாய் என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

749

பொய் தவம் ஆகக் கொண்ட புன் தலைச் சமணர் கூறச்செய்தவப் பயன் வந்து எய்தும் செவ்வி முன் உறுதலாலேஎய்திய தெய்வச் சார்வால் இரு திறத்தீரும் தீரும்கைதவம் பேசமாட்டேன் என்று கைதவனும் சொன்னான்.
சொற்பிரிப்பு
பொய் தவம் ஆகக் கொண்ட புன்தலைச் சமணர் கூறச்செய்தவப் பயன் வந்து எய்தும் செவ்வி முன் உறுதலாலேஎய்திய தெய்வச் சார்வால் இருதிறத்தீரும் தீரும்கைதவம் பேச மாட்டேன் என்று கைதவனும் சொன்னான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

750

என்று அவன் உரைப்பக் குண்டர் எண்ணம் கெட்டு இருந்த எல்லைத்தென் தமிழ் நாடு செய்த செய்தவக் கொழுந்து போல்வார்வன் தனிப் பவன முன்னர் வாயிலுள் அணைந்து மாடுபொன் திகழ் தரளப் பத்திச் சிவிகை நின்று இழிந்து புக்கார்.
சொற்பிரிப்பு
என்று அவன் உரைப்பக் குண்டர் எண்ணம் கெட்டு இருந்த எல்லைத்தென் தமிழ்நாடு செய்த செய்தவக் கொழுந்து போல்வார்வன் தனிப் பவன முன்னர் வாயில் உள் அணைந்து மாடுபொன்திகழ் தரளப் பத்திச் சிவிகை நின்று இழிந்து புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

751

குலச்சிறையார் முன்பு எய்த கொற்றவன் தேவியாரும்தலத்திடை இழிந்து சென்றார் தண் தமிழ் நாட்டு மன்னன்நிலத்து இடை வானின் நின்று நீள் இருள் நீங்க வந்தகலைச் செழும் திங்கள் போலும் கவுணியர் தம்மைக் கண்டார்.
சொற்பிரிப்பு
குலச்சிறையார் முன்பு எய்தக், கொற்றவன் தேவியாரும்தலத்து இடை இழிந்து சென்றார்; தண்தமிழ் நாட்டு மன்னன்நிலத்து இடை, வானின் நின்று, நீள் இருள் நீங்க வந்தகலைச்செழும் திங்கள் போலும் கவுணியர் தம்மைக் கண்டான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

752

கண்ட அப்பொழுதே வேந்தன் கை எடுத்து எய்த நோக்கித்தண்டுணர் முடியின் பாங்கர்த் தமனியப் பீடம் காட்டவண் தமிழ் விரகர் மேவி அதன் மிசை இருந்தார் மாயைகொண்டவல் அமணர் எல்லாம் குறிப்பினுள் அச்சம் கொண்டார்.
சொற்பிரிப்பு
கண்ட அப்பொழுதே, வேந்தன், கை எடுத்து எய்த நோக்கித்தண்துணர் முடியின் பாங்கர்த், தமனியப் பீடம் காட்டவண் தமிழ் விரகர் மேவி அதன் மிசை இருந்தார்; மாயைகொண்ட வல் அமணர் எல்லாம் குறிப்பினுள் அச்சம் கொண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

753

செழியனும் பிள்ளையார் தம் திருமேனி காணப் பெற்றுவிழி உற நோக்கலாலே வெம்மை நோய் சிறிது நீங்கிஅழிவுறு மன்னோர் நிற்க அந்தணர் வாழ்வை நோக்கிக்கெழுவுறு பதியாது என்று விருப்புடன் கேட்ட போது.
சொற்பிரிப்பு
செழியனும் பிள்ளையார் தம் திருமேனி காணப் பெற்றுவிழி உற நோக்கலாலே வெம்மை நோய் சிறிது நீங்கி,அழிவுறும் மனம் நேர் நிற்க, அந்தணர் வாழ்வை நோக்கிக்“கெழுவுறு பதி யாது” என்று விருப்புடன் கேட்டபோது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

754

பொன்னி வளம் திருநாட்டுப் புனல் பழனப் புறம் பணை சூழ்கன்னி மதில் கழுமலம் நாம் கருதும் ஊர் எனச் சிறந்தபன்னிரண்டு பெயர் பெற்றுப் பரவிய சொல் திருப்பதிகம்தென்னவன் முன்பு அருள் செய்தார் திருஞான சம்பந்தர்.
சொற்பிரிப்பு
“பொன்னி வளம் தருநாட்டுப் புனல் பழனப் புறம்பணை சூழ்கன்னிமதில் கழுமல நாம் கருதும் ஊர்” எனச் சிறந்தபன்னிரண்டு பெயர் பற்றும் பரவிய சொல் திருப்பதிகம்தென்னவன் முன்பு அருள்செய்தார் திருஞான சம்பந்தர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

755

பிள்ளையார் செம் பொன் மணிப் பீடத்தில் இருந்த பொழுதுஉள்ள நிறை பொறாமையினால் உழை இருந்த கார் அமணர்கொள்ளும் மனத்திடை அச்சம் மறைத்து முகம் கோபத்தீத்துள்ளி எழும் எனக் கண்கள் சிவந்து பல சொல்லுவார்.
சொற்பிரிப்பு
பிள்ளையார் செம்பொன் மணிப்பீடத்தில் இருந்த பொழுதுஉள்ளம் நிறை பொறாமையினால் உழை இருந்த கார் அமணர்கொள்ளு மனத்து இடை அச்சம் மறைத்து, முகம் கோபத் தீத்,துள்ளி எழும் எனக், கண்கள் சிவந்து, பல சொல்லுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

756

காலை எழும் கதிரவனைப் புடை சூழும் கருமுகில் போல்பீலி சேர் சமண் கையர் பிள்ளையார் தமைச் சூழ்வார்ஏலவே வாதினால் வெல்வதனுக்கு எண்ணித் தாங்குகோலுநூல் எடுத்து ஓதித் தலை திமிர்ப்பக் குரைத்தார்கள்.
சொற்பிரிப்பு
காலை எழும் கதிரவனைப் புடை சூழும் கருமுகில் போல்பீலிசேர் சமண் கையர் பிள்ளையார் தமைச் சூழ்வார்ஏலவே வாதினால் வெல்வதனுக்கு எண்ணித், தாம்கோலு நூல் எடுத்து ஓதித் தலை திமிர்ப்பக் குரைத்தார்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

757

பிள்ளையார் அது கேளாப் பேசுக நும் பொருள் எல்லைஉள்ளவாறு என்றருள ஊத்தைவாய்ப் பறி தலையர்துள்ளி எழும் அநேகராய்ச் சூழ்ந்து பதறிக் கதறஒள்ளிழையார் அது கண்டு பொறார் ஆகி உள் நடுங்கி.
சொற்பிரிப்பு
பிள்ளையார் அது கேளாப் “பேசுக நும் பொருள் எல்லைஉள்ளவாறு” என்று அருள, ஊத்தை வாய்ப் பறி தலையர்துள்ளி எழுந்து அநேகராய்ச் சூழ்ந்து பதறிக் கதற,ஒள் இழையார் அது கண்டு பொறார் ஆகி உள் நடுங்கி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

758

தென்னவன் தன்னை நோக்கித் திருமேனி எளியர் போலும்இன் அருள் பிள்ளையார் மற்று இவர் உவர் எண்ணிலார்கள்மன்ன நின் மயக்கம் எங்கள் வள்ளலார் தீர நல்கும்பின்னை இவ்வமணர் மூள்வார் வல்லரேல் பேச என்றார்.
சொற்பிரிப்பு
தென்னவன் தன்னை நோக்கித் “திருமேனி எளியர் போலும்இன் அருள் பிள்ளையார் மற்று இவர்; உவர் எண் இலார்கள்;மன்ன! நின் மயக்கம் எங்கள் வள்ளலார் தீர நல்கும்;பின்னை இவ் அமணர் மூள்வார் வல்லரேல் பேச” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

759

மாறனும் அவரை நோக்கி வருந்தநீ என்று மற்றும்வேறு ஆவது என் கொல் என்மேல் வெப்பு ஒழித்து அருகர் நீரும்ஆறு அணி சடையினார்க்கு அன்பராம் இருவரும் நீங்கள்தேறிய தெய்வத்தன்மை என்னிடைத் தெரிப்பீர் என்றான்.
சொற்பிரிப்பு
மாறனும் அவரை நோக்கி “வருந்தல் நீ!” என்று “மற்றுவேறு வாது என்கொல்? என் மேல் வெப்பு ஒழித்து அருகர் நீரும்ஆறு அணி சடையினாருக்கு அன்பராம் இவரும் நீங்கள்தேறிய தெய்வத் தன்மை என் இடைத் தெரிப்பீர்” என்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

760

ஞான ஆரமுதம் உண்டார் நல்தவத் திருவை நோக்கிமானினேர் விழியினாய் கேள் மற்று எனைப் பாலன் என்றுநீ நனி அஞ்ச வேண்டா நிலையிலா அமணர்க்கு என்றும்யான் எளியேன் அலேன் என்று எழும் திருப்பதிகம்பாடி.
சொற்பிரிப்பு
ஞான ஆர் அமுதம் உண்டார் நல் தவத் திருவை நோக்கி“மானின் நேர் விழியினாய்! கேள்; மற்று எனைப் பாலன் என்றுநீ நனி அஞ்ச வேண்டாம்; நிலை இலா அமணர்க்கு என்றும்யான் எளியேன் அலேன்” என்று எழும் திருப்பதிகம் பாடி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

761

பெற்றியால் அருளிச் செய்த பிள்ளையார் தமக்கு முன்னம்சுற்று நின்று அழைத்தல் ஓவா அருகர்க்கும் தென்னர் கோமான்இற்றைநாள் என்னை உற்ற பிணியை நீர் இகலித் தீரும்தெற்று எனத் தீர்த்தார் வாதில் வென்றவர் என்று செப்ப.
சொற்பிரிப்பு
பெற்றியால் அருளிச் செய்த பிள்ளையார் தமக்கும் முன்னம்சுற்று நின்று அழைத்தல் ஓவா அருகர்க்கும் தென்னர் கோமான்“இற்றை நாள் என்னை உற்ற பிணியை நீர் இகலித் தீரும்;தெற்றெனத் தீர்த்தார் வாதில் வென்றவர்” என்று செப்ப.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

762

மன்னவன் மாற்றம் கேட்டு வடிவு போல் மனத்து மாசுதுன்னிய அமணர் தென்னர் தோன்றலை நோக்கி நாங்கள்உன் உடம்பு அதனில் வெப்பை ஒருபுடை வாம பாகம்முன்ன மந்திரித்துத் தெய்வ முயற்சியால் தீர்த்தும் என்றார்.
சொற்பிரிப்பு
மன்னவன் மாற்றம் கேட்டு, வடிவு போல் மனத்து மாசுதுன்னிய அமணர் தென்னர் தோன்றலை நோக்கி, “நாங்கள்உன் உடம்பு அதனில், வெப்பை, ஒருபுடை வாமபாகம்முன்னம் மந்திரித்துத் தெய்வ முயற்சியால் தீர்த்தும்” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

763

யாதும் ஒன்று அறிவு இலாதார் இருள் என அணையச் சென்றுவாதினில் மன்னவன் தன் வாம பாகத்தைத் தீர்ப்பார்மீது தம் பீலி கொண்டு தடவிட மேன்மேல் வெப்புத்தீதுறப் பொறாது தென்னன் சிரபுரத்தவரைப் பார்த்தான்.
சொற்பிரிப்பு
யாதும் ஒன்று அறிவிலாதார், இருள் என அணையச் சென்றுவாதினில் மன்னவன் தன் வாம பாகத்தைத் தீர்ப்பார்மீது தம் பீலி கொண்டு தடவிட மேன்மேல் வெப்புத்தீது உறப் பொறாது, தென்னன், சிரபுரத்தவரைப் பார்த்தான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

764

தென்னவன் நோக்கம் கண்டு திருக்கழு மலத்தார் செல்வர்அன்னவன் வலப்பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறேமன்னும் மந்திரமும் ஆகி மருந்துமாய்த் தீர்ப்பது என்றுபன்னிய மறைகள் ஏத்திப் பகர் திருப்பதிகம் பாடி.
சொற்பிரிப்பு
தென்னவன் நோக்கம் கண்டு திருக்கழுமலத்தார் செல்வர்“அன்னவன் வலப்பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறேமன்னும் மந்திரமும் ஆகி மருந்துமாய்த் தீர்ப்பது” என்றுபன்னிய மறைகள் ஏத்திப் பகர் திருப்பதிகம் பாடி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

765

திருவளர் நீறு கொண்டு திருக்கையால் தடவத் தென்னன்பொருவரு வெப்பு நீங்கிப் பொய்கையில் குளிர்ந்தது அப்பால்மருவிய இடப்பால் மிக்க அழல் என மண்டு தீப்போல்இருபுடை வெப்பும் கூடி இடம் கொளாதுஎன்னப் பொங்க.
சொற்பிரிப்பு
திருவளர் நீறு கொண்டு திருக்கையால் தடவத் தென்னன்பொரு அரு வெப்பு நீங்கிப் பொய்கையில் குளிர்ந்தது அப்பால்;மருவிய இடப்பால் மிக்க அழல் எழ, மண்டு தீப்போல்இருபுடை வெப்பும் கூடி இடம் கொளாது என்னப் பொங்க.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

766

உறி உடைக் கையர் பாயின் உடுக்கையர் நடுக்கம் எய்திசெறி மயில் பீலி தீய தென்னவன் வெப்பு உறு தீத்தம்மைஏறிய மாகடலும் கன்றி அருகு விட்டு ஏற நிற்பார்அறிவுடையாரை ஒத்தார் அறிவு இலா நெறியில் நின்றார்.
சொற்பிரிப்பு
உறி உடைக் கையர் பாயின் உடுக்கையர் நடுக்கம் எய்திச்செறி மயில் பீலி தீயத், தென்னன் வெப்பு உறு தீத் தம்மைஎறிய, மாசு உடலும் கன்றி, அருகு விட்டு ஏற நிற்பார்அறிவுடையாரை ஒத்தார் அறிவு இலா நெறியில் நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

767

பலர் தொழும் புகலி மன்னர் ஒரு புடை வெப்பைப் பாற்றமலர்தலை உலகின்மிக்கார் வந்து அதிசயத்துச் சூழஇலகு வேல் தென்னன் மேனி வலம் இடம் எய்தி நீடும்உலகினில் தண்மை வெம்மை ஒதுங்கினால் ஒத்தது அன்றே.
சொற்பிரிப்பு
பலர் தொழும் புகலி மன்னர் ஒருபுடை வெப்பைப் பாற்றமலர் தலை உலகின் மிக்கார் வந்து அதிசயித்துச் சூழஇலகு வேல் தென்னன் மேனி வலம் இடம் எய்தி நீடும்உலகினில் தண்மை வெம்மை ஒதுங்கினால் ஒத்தது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

768

மன்னவன் மொழிவான் என்னே மதித்த இக் காலம் ஒன்றில்வெம் நரகு ஒரு பால் ஆகும் வீட்டு இன்பம் ஒரு பால் ஆகும்துன்னு நஞ்சு ஒரு பால் ஆகும் சுவை அமுது ஒரு பால் ஆகும்என் வடிவு ஒன்றில் உற்றேன் இரு திறத்து இயல்பும் என்பான்.
சொற்பிரிப்பு
மன்னவன் மொழிவான் “என்னே! மதித்த இக்காலம் ஒன்றில்வெந்நரகு ஒருபால் ஆகும்; வீட்டு இன்பம் ஒருபால் ஆகும்;துன்னு நஞ்சு ஒருபால் ஆகும்; சுவை அமுது ஒருபால் ஆகும்;என் வடிவு ஒன்றில் உற்றேன் இருதிறத்து இயல்பும்” என்பான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

769

வெந்தொழில் அருகர் தோற்றீர் என்னை விட்டு அகல நீங்கும்வந்து எனை உய்யக் கொண்ட மறைக்குல வள்ளலாரேஇந்த வெப்பு அடைய நீங்க எனக்கு அருள் புரிவீர் என்றுசிந்தையால் தொழுது சொன்னான் செல் கதிக்கு அணியன் ஆனான்.
சொற்பிரிப்பு
“வெந்தொழில் அருகர்! தோற்றீர்; என்னை விட்டு அகல நீங்கும்;வந்து எனை உய்யக் கொண்ட மறைக்குல வள்ளலாரே!இந்த வெப்பு அடைய நீங்க எனக்கு அருள் புரிவீர்” என்றுசிந்தையால் தொழுது சொன்னான் செல்கதிக்கு அணியன் ஆனான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

770

திருமுகம் கருணை காட்டத் திருக்கையால் நீறு காட்டிப்பெருமறை துதிக்கும் ஆற்றால் பிள்ளையார் போற்றிப் பின்னும்ஒருமுறை தடவ அங்கண் ஒழிந்து வெப்பு அகன்று பாகம்மருவு தீப் பிணியும் நீங்கி வழுதியும் முழுதும் உய்ந்தான்.
சொற்பிரிப்பு
திருமுகம் கருணை காட்டத் திருக்கையால் நீறு காட்டிப்பெருமறை துதிக்கும் ஆற்றால் பிள்ளையார் போற்றிப் பின்னும்ஒருமுறை தடவ அங்கண் ஒழிந்து வெப்பு அகன்று பாகம்மருவு தீப்பிணியும் நீங்கி வழுதியும் முழுதும் உய்ந்தான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

771

கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் தீங்குசெற்றவர் செய்ய பாத தாமரை சென்னி சேர்த்துப்பெற்றனம் பெருமை இன்று பிறந்தனம் பிறவா மேன்மைஉற்றனன் மன்னன் என்றே உளம் களித்து உவகை மிக்கார்.
சொற்பிரிப்பு
கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும், தீங்குசெற்றவர் செய்ய பாத தாமரை சென்னி சேர்த்துப்“பெற்றனம் பெருமை; இன்று பிறந்தனம்; பிறவா மேன்மைஉற்றனன் மன்னன்” என்றே உளம் களித்து உவகை மிக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

772

மீனவன் தன் மேல் உள்ள வெப்பு எலாம் உடனே மாறஆன பேரின்பம் எய்தி உச்சி மேல் அங்கை கூப்பிமானம் ஒன்று இல்லார் முன்பு வன் பிணி நீக்க வந்தஞான சம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன் என்றான்.
சொற்பிரிப்பு
மீனவன் தன் மேல் உள்ள வெப்பு எலாம் உடனே மாறஆன பேர் இன்பம் எய்தி, உச்சி மேல் அங்கை கூப்பி,“மானம் ஒன்று இல்லார் முன்பு வன் பிணி நீக்க வந்தஞான சம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன்” என்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

773

கந்து சீறும் மால் யானை மீனவன் கருத்து நேர்வந்து வாய்மை கூற மற்று மாசுமேனி நீசர் தாம்முந்தை மந்திரத்து விஞ்சை முற்றும் எஞ்ச அஞ்சியேசிந்தை செய்து கைவரும் திறம் தெரிந்து தேடுவார்.
சொற்பிரிப்பு
கந்து சீறு மாலி யானை மீனவன் கருத்து நேர்வந்து வாய்மை கூற மற்று மாசு மேனி நீசர் தாம்முந்தை மந்திரத்து விஞ்சை முற்றும் எஞ்ச அஞ்சியேசிந்தை செய்து கைவரும் திறம் தெரிந்து தேடுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

774

சைவமைந்தர் சொல்லின் வென்றி சந்த இன் சொல் மாலையால்கைதவன் தன் வெப்பு ஒழிந்த தன்மை கண்டு அறிந்தனம்மெய் தெரிந்த தர்க்க வாதம் வெல்லலால் ஆவது அன்று வேறுஎய்து தீயின் நீரில் வெல்வது என்று தம்மில் எண்ணினார்.
சொற்பிரிப்பு
“சைவ மைந்தர் சொல்லின் வென்றி சந்த இன்சொல் மாலையால்கைதவன் தன் வெப்பு ஒழிந்த தன்மை கண்டு அறிந்தனம்மெய் தெரிந்த தர்க்க வாதம் வெல்லல் ஆவது அன்று; வேறுஎய்து தீயின் நீரில் வெல்வது என்று தம்மில் எண்ணினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

775

பிள்ளையாரும் உங்கள் வாய்மை பேசுமின்கள் என்றலும்தள்ளு நீர்மை யார்கள் வேறு தர்க்கவாதின் உத்தரம்கொள்ளும் வென்றி அன்றியே குறித்த கொள்கை உண்மைதான்உள்ளவாறு கண் புலத்தில் உய்ப்பது என்ன ஒட்டினார்.
சொற்பிரிப்பு
பிள்ளையாரும் “உங்கள் வாய்மை பேசுமின்கள்” என்றலும்தள்ளு நீர்மையார்கள் “வேறு தர்க்க வாதின் உத்தரம்கொள்ளும் வென்றி அன்றியே குறித்த கொள்கை உண்மை தான்உள்ளவாறு கட்புலத்தில் உய்ப்பது” என்ன ஒட்டினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

776

என்று வாது கூறலும் இருந்த தென்னர் மன்னனும்கன்றி என் உடம்பு ஒடுங்க வெப்புநோய் கவர்ந்த போதுஒன்றும் அங்கு ஒழித்திலீர்கள் என்னவாது உமக்கு எனச்சென்று பின்னும் முன்னும் நின்று சில்லி வாயர் சொல்லுவார்.
சொற்பிரிப்பு
என்று வாது கூறலும் இருந்த தென்னர் மன்னனும்“கன்றி என் உடம்பு ஒடுங்க வெப்பு நோய் கவர்ந்தபோதுஒன்றும் அங்கு ஒழித்திலீர்கள்; என்ன வாது உமக்கு?” எனாச்சென்று பின்னும் முன்னும் நின்று சில்லி வாயர் சொல்லுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

777

என்ன வாது செய்வது என்று உரைத்ததே வினா எனச்சொன்னவாசகம் தொடங்கி ஏடு கொண்டு சூழ்ச்சியால்மன்னு தம் பொருட் கருத்தின் வாய்மை தீட்டி மாட்டினால்வெம் நெருப்பின் வேவுறாமை வெற்றி ஆவது என்றனர்.
சொற்பிரிப்பு
“என்ன வாது செய்வது” என்று உரைத்ததே வினா எனாச்சொன்ன வாசகம் தொடங்கி “ஏடு கொண்டு சூழ்ச்சியால்மன்னு தம் பொருள் கருத்தின் வாய்மை தீட்டி மாட்டினால்வெந்நெருப்பின் வேவு உறாமை வெற்றி ஆவது” என்றனர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

778

என்ற போது மன்னன் ஒன்று இயம்பும் முன்பு பிள்ளையார்நன்று நீர் உரைத்தவாறு நாடு தீயில் ஏடுதான்வென்றிடில் பொருள் கருத்து மெய்ம்மை ஆவது என்றிரேல்வன் தனிக்கை யானைமன்னன் முன்பு வம்மின் என்றனர்.
சொற்பிரிப்பு
என்ற போது மன்னன் ஒன்று இயம்பு முன்பு பிள்ளையார்“நன்று நீர் உரைத்தவாறு; நாடு தீயில் ஏடு தான்வென்றிடில் பொருள் கருத்து மெய்ம்மை ஆவது என்றிரேல்வன் தனிக்கை யானை மன்னன் முன்பு வம்மின்” என்றனர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

779

அப்படிக்கு எதிர் அமணரும் அணைந்துறும் அளவில்ஒப்பில் வண்புகழ்ச் சண்பையர் காவலர் உரையால்செப்பரும் திறல் மன்னனும் திருந்து அவை முன்னர்வெப்புறும் தழல் அமைக்க என வினைஞரை விடுத்தான்.
சொற்பிரிப்பு
அப்படிக்கு எதிர் அமணரும் அணைந்துறும் அளவில்ஒப்பில் வண் புகழ்ச் சண்பையர் காவலர் உரையால்செப்பு அரும்திறல் மன்னனும் “திருந்து அவை முன்னர்வெப்பு உறும் தழல் அமைக்க” என வினைஞரை விடுத்தான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

780

ஏய மாந்தரும் இந்தனம் குறைத்து உடன் அடுக்கித்தீ அமைத்தலும் சிகை விடு புகை ஒழிந்து எழுந்துகாயும் வெவ்வழல் கடவுளும் படர் ஒளி காட்டஆயும் முத்தமிழ் விரகரும் அணைய வந்து அருளி.
சொற்பிரிப்பு
ஏய மாந்தரும் இந்தனம் குறைத்துடன் அடுக்கித்தீ அமைத்தலும், சிகைவிடு புகை ஒழிந்து எழுந்துகாயும் வெவ்அழல் கடவுளும் படர் ஒளி காட்டஆயும் முத்தமிழ் விரகரும் அணைய வந்தருளி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

781

செங்கண் ஏற்றவரே பொருள் என்று தாம் தெரித்தபொங்கு இசைத் திருப்பதிக நன்முறையினைப் போற்றிஎங்கள் நாதனே பரம் பொருள் எனத் தொழுது எடுத்தேஅங்கையால் முடி மிசைக் கொண்டு காப்பு நாண் அவிழ்த்தார்.
சொற்பிரிப்பு
“செங்கண் ஏற்றவரே பொருள்” என்று தாம் தெரித்தபொங்கு இசைத் திருப்பதிக நன் முறையினைப் போற்றி“எங்கள் நாதனே பரம்பொருள்” எனத் தொழுது எடுத்தேஅங்கையால் முடி மிசைக் கொண்டு காப்பு நாண் அவிழ்த்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

782

சாற்றும் மெய்ப் பொருள் தரும் திருமுறையினைத் தாமேநீற்று வண்கையால் மறித்தலும் வந்து நேர்ந்து உளதால்நால்தடம் புயத்து அண்ணலார் மருவு நள்ளாறுபோற்றும் அப்பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள்.
சொற்பிரிப்பு
சாற்றும் மெய்ப்பொருள் தரும் திருமுறையினைத் தாமேநீற்று வண்கையால் மறித்தலும் வந்து நேர்ந்து உளதால்நால் தடம் புயத்து அண்ணலார் மருவும் நள்ளாறுபோற்றும் அப்பதிகம் ”போகம் ஆர்த்த பூண் முலையாள்.”
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

783

அத் திருப் பதிகத்தினை அமர்ந்து கொண்டு அருளிமைத்த வெங்கடு மிடற்று நள்ளாறரை வணங்கிமெய்த்த நல் திரு ஏட்டினைக் கழற்றி மெய்ம் மகிழ்ந்துகைத் தலத்திடைக் கொண்டனர் கவுணியர் தலைவர்.
சொற்பிரிப்பு
அத்திருப்பதிகத்தினை அமர்ந்து கொண்டு அருளிமைத்த வெங்கடு மிடற்று நள்ளாறரை வணங்கிமெய்த்த நல் திரு ஏட்டினைக் கழற்றி, மெய்ம் மகிழ்ந்து,கைத்தலத்து இடைக் கொண்டனர் கவுணியர் தலைவர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

784

நன்மை உய்க்கும் மெய்ப் பதிகத்தின் நாதன் என்று எடுத்தும்என்னை ஆள் உடை ஈசன் தன் நாமமே என்றும்மன்னும் மெய்ப் பொருளாம் எனக் காட்டிட வன்னிதன்னில் ஆக எனத் தளிர் இள வளர் ஒளி பாடி.
சொற்பிரிப்பு
“நன்மை உய்க்கும் மெய்ப் பதிகத்தின் நாதன்” என்று எடுத்தேஎன்னை ஆளுடைய ஈசன் தன் நாமமே என்றும்மன்னும் மெய்ப்பொருள் ஆம் எனக் காட்டிட வன்னிதன்னில் ஆக எனத் “தளிர் இள வளர் ஒளி” பாடி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

785

செய்ய தாமரை அக இதழினும் மிகச் சிவந்தகையில் ஏட்டினைக் கைதவன் பேர் அவை காணவெய்ய தீயினில் வெற்று அரையவர் சிந்தை வேவவையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்து முன் இட்டார்.
சொற்பிரிப்பு
செய்ய தாமரை அக இதழினும் மிகச் சிவந்தகையில் ஏட்டினைக் கைதவன் பேரவை காணவெய்ய தீயினில் வெற்று அரையவர் சிந்தை வேவவையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்து முன் இட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

786

இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ்ப் பதிகம்மட்டுலாங்குழல் வனமுலை மலைமகள் பாகத்துஅட்ட மூர்த்தியைப் பொருள் என உடைமையால் அமர்ந்துபட்ட தீயிடைப் பச்சையாய் விளங்கியது அன்றே.
சொற்பிரிப்பு
இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ்ப் பதிகம்மட்டு உலாம் குழல் வனமுலை மலைமகள் பாகத்துஅட்டமூர்த்தியைப் பொருள் என உடைமையால் அமர்ந்துபட்ட தீ இடைப் பச்சையாய் விளங்கியது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

787

மையல் நெஞ்சு உடை அமணரும் தம் பொருள் வரைந்தகையில் ஏட்டினைக் கதுவு செந்தீயினில் இடுவார்உய்யுமோ இது என உறும் கவலையாம் உணர்வால்நையும் நெஞ்சினர் ஆகியே நடுங்கி நின்றிட்டார்.
சொற்பிரிப்பு
மையல் நெஞ்சு உடை அமணரும் தம் பொருள் வரைந்தகையில் ஏட்டினைக் கதுவு செந்தீயினில் இடுவார்“உய்யுமோ இது?” என உறும் கவலையாம் உணர்வால்நையும் நெஞ்சினர் ஆகியே நடுங்கி நின்று இட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

788

அஞ்சும் உள்ளத்தர் ஆகியும் அறிவிலா அமணர்வெம் சுடர்ப் பெரும் தீயினில் விழுத்திய ஏடுபஞ்சு தீயிடைப் பட்டது படக் கண்டு பயத்தால்நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்திலர் நின்றார்.
சொற்பிரிப்பு
அஞ்சும் உள்ளத்தர் ஆகியும் அறிவிலா அமணர்வெஞ்சுடர்ப் பெரும் தீயினில் விழுத்திய ஏடுபஞ்சு தீ இடைப் பட்டது படக்கண்டு பயத்தால்நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்திலர் நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

789

மான மன்னவன் அவையின் முன் வளர்த்த செந்தீயின்ஞானம் உண்டவர் இட்ட ஏடு இசைத்த நாழிகையில்ஈனம் இன்மை கண்டு யாவரும் வியப்பு உற எடுத்தார்பான்மை முன்னையில் பசுமையும் புதுமையும் பயப்ப.
சொற்பிரிப்பு
மான மன்னவன் அவையின் முன் வளர்த்த செந்தீயின்ஞானம் உண்டவர் இட்ட ஏடு இசைத்த நாழிகையில்ஈனம் இன்மை கண்டு யாவரும் வியப்புற எடுத்தார்பான்மை முன்னையில் பசுமையும் புதுமையும் பயப்ப.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

790

எடுத்த ஏட்டினை அவையின் முன் காட்டி அம் முறையில்அடுத்த வண்ணமே கோத்தலும் அதிசயித்து அரசன்தொடுத்த பீலி முன் தூக்கிய கையரை நோக்கிக்அடுத்த நீர் இட்ட ஏட்டினைக் காட்டுமின் என்றான்.
சொற்பிரிப்பு
எடுத்த ஏட்டினை அவையின் முன் காட்டி அம்முறையில்அடுத்த வண்ணமே கோத்தலும் அதிசயித்து அரசன்தொடுத்த பீலி முன் தூக்கிய கையரை நோக்கிக்“கடுத்து நீர் இட்ட ஏட்டினைக் காட்டுமின்” என்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

791

அருகர் தாம் இட்ட ஏடு வாங்கச் சென்று அணையும் போதில்பெருகு தீக் கதுவ வெந்து பேர்ந்தமை கண்ட மன்னன்தருபுனல் கொண்டு செந்தீத் தணிப்பித்தான் சமணர் அங்குக்கருகிய சாம்ப ரோடும் கரி அலால் மற்று என் காண்பார்.
சொற்பிரிப்பு
அருகர் தாம் இட்ட ஏடு வாங்கச் சென்று அணையும் போதில்பெருகு தீக் கதுவ, வெந்து, பேர்ந்தமை கண்ட மன்னன்,தருபுனல் கொண்டு செந்தீத் தணிப்பித்தான்; சமணர் அங்குக்கருகிய சாம்பரோடும் கரி அலால் மற்று என் காண்பார்?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

792

செய்வது ஒன்று அறிகிலாதார் திகைப்பினால் திரண்ட சாம்பல்கையினால் பிசைந்து தூற்றிப் பார்ப்பது கண்ட மன்னன்எய்திய நகையினோடும் ஏடு இன்னம் அரித்துக் காணும்பொய்யினால் மெய்யை ஆக்கப் புகுந்த நீர் போமின் என்றான்.
சொற்பிரிப்பு
செய்வது ஒன்று அறிகிலாதார் திகைப்பினால் திரண்ட சாம்பல்கையினால் பிசைந்து தூற்றிப் பார்ப்பது கண்ட மன்னன்எய்திய நகையினோடும் “ஏடு இன்னம் அரித்துக் காணும்பொய்யினால் மெய்யை ஆக்கப் புகுந்த நீர் போமின்” என்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

793

வெப்பு எனும் தீயில் யான் முன் வீடு பெற்று உய்ய நீங்கள்அப்பொழுது அழிந்து தோற்றீர் ஆதலால் அதுவாறு ஆகஇப்பொழுது எரியில் இட்ட ஏடு உய்ந்தது இல்லை என்றால்துப்புர உடையீர் நீங்கள் தோற்றிலீர் போலும் என்றான்.
சொற்பிரிப்பு
“வெப்பு எனும் தீயில் யான் முன் வீடு பெற்று உய்ய நீங்கள்அப்பொழுது அழிந்து தோற்றீர்; ஆதலால் அதுவாறு ஆகஇப்பொழுது எரியில் இட்ட ஏடு உய்ந்தது இல்லை என்றால்துப்புரவு உடையீர்! நீங்கள் தோற்றிலீர் போலும்” என்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

794

தென்னவன் நகை உட்கொண்டு செப்பிய மாற்றம் தேரார்சொன்னது பயனாகக் கொண்டு சொல்லுவார் தொடர்ந்த வாதுமுன்னுற இருகால் செய்தோம் முக்காலில் ஒரு கால் வெற்றிஎன்னினும் உடையோம் மெய்ம்மை இனி ஒன்று காண்பது என்றார்.
சொற்பிரிப்பு
தென்னவன் நகை உள் கொண்டு செப்பிய மாற்றம் தேரார்;சொன்னது பயனாக் கொண்டு சொல்லுவார்; “தொடர்ந்த வாதுமுன் உற இருகால் செய்தோம்; முக்காலில் ஒருகால் வெற்றிஎன்னினும் உடையோம்; மெய்ம்மை இனி ஒன்று காண்பது” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

795

தோற்கவும் ஆசை நீங்காத் துணிவிலார் சொல்லக் கேட்டு இம்மாற்றம் என் ஆவது என்று மன்னவன் மறுத்த பின்னும்நீற்று அணி விளங்கு மேனி நிறை புகழ்ச் சண்பை மன்னர்வேற்று வாது இனி என் செய்வது என்றலும் மேற்கோள் ஏற்பார்.
சொற்பிரிப்பு
தோற்கவும் ஆசை நீங்காத் துணிவு இலார் சொல்லக் கேட்டு ”இம்மாற்றம் என் ஆவது” என்று மன்னவன் மறுத்த பின்னும்,நீற்று அணி விளங்கு மேனி நிறைபுகழ்ச் சண்பை மன்னர்வேற்று வாது இனி என் செய்வது?” என்றலும் மேற்கோள் ஏற்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

796

நீடு மெய்ப் பொருளின் உண்மை நிலை பெறும் தன்மை எல்லாம்ஏடுற எழுதி மற்றவ் வேட்டினை யாமும் நீரும்ஓடு நீர் ஆற்றில் இட்டால் ஒழுகுதல் செய்யாது அங்குநாடி முன் தங்கும் ஏடு நற்பொருள் பரிப்பது என்றார்.
சொற்பிரிப்பு
“நீடு மெய்ப் பொருளின் உண்மை நிலைபெறும் தன்மை எல்லாம்ஏடு உற எழுதி மற்று அவ் ஏட்டினை, யாமும், நீரும்ஓடு நீர் ஆற்றில் இட்டால் ஒழுகுதல் செய்யாது அங்குநாடி முன் தங்கும் ஏடு நற்பொருள் பரிப்பது” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

797

என்று அமண் கையர் கூற ஏறு சீர் புகலி வேந்தர்நன்று அது செய்வோம் என்று அங்கு அருள் செய நணுக வந்துவென்றிவேல் அமைச்சனார் தாம் வேறு இனிச் செய்யும் இவ்வாதுஒன்றினும் தோற்றார் செய்வது ஒட்டியே செய்வது என்றார்.
சொற்பிரிப்பு
என்று அமண் கையர் கூற ஏறு சீர்ப் புகலி வேந்தர்“நன்று அது செய்வோம்” என்று அங்கு அருள் செய, நணுக வந்துவென்றி வேல் அமைச்சனார் தம் “வேறு இனிச் செய்யும் இவ்வாதுஒன்றினும் தோற்றார் செய்வது ஒட்டியே செய்வது” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

798

அங்கது கேட்டு நின்ற அமணரும் அவர் மேல் சென்றுபொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமே ஆகத்தங்கள் வாய் சோர்ந்து தாமே தனிவாதில் அழிந்தோம் ஆகில்வெங்கழு ஏற்றுவான் இவ் வேந்தனே என்று சொன்னார்.
சொற்பிரிப்பு
அங்கு அது கேட்டு நின்ற அமணரும் அவர்மேல் சென்றுபொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமே ஆகத்தங்கள் வாய் சோர்ந்து, தாமே, “தனி வாதில் அழிந்தோம் ஆகில்வெங்கழு ஏற்றுவான் இவ் வேந்தனே” என்று சொன்னார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

799

மற்றவர் சொன்ன வார்த்தை கேட்டலும் மலய மன்னன்செற்றத்தால் உரைத்தீர் உங்கள் செய்கையும் மறந்தீர் என்றுபற்றிய பொருளின் ஏடு படர் புனல் வைகை ஆற்றில்பொற்புற விடுவதற்குப் போதுவது என்று கூற.
சொற்பிரிப்பு
மற்றவர் சொன்ன வார்த்தை கேட்டலும் மலய மன்னன்“செற்றத்தால் உரைத்தீர்; உங்கள் செய்கையும் மறந்தீர்; என்றுபற்றிய பொருளின் ஏடு படர்புனல் வைகை ஆற்றில்பொற்புற விடுவதற்குப் போதுவது” என்று கூற.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

800

பிள்ளையார் முன்னம் பைம் பொன் பீடத்தில் இழிந்து போந்துதெள்ளு நீர்த் தரளப் பத்திச் சிவிகை மேல் ஏறிச் சென்றார்வள்ளலார் அவர் தம் பின்பு மன்னன் மா ஏறிச் சென்றான்உள்ளவாறு அறிகிலாதார் உணர்வு மால் ஏறிச் சென்றார்.
சொற்பிரிப்பு
பிள்ளையார் முன்னம் பைம்பொன் பீடத்தில் இழிந்து போந்துதெள்ளு நீர்த் தரளப் பத்திச் சிவிகைமேல் ஏறிச் சென்றார்;வள்ளலார் அவர் தம் பின்பு மன்னன் மா ஏறிச் சென்றான்;உள்ளவாறு அறிகிலாதார் உணர்வு மால் ஏறிச் சென்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

801

தென்னவன் வெப்புத் தீர்ந்து செழுமணிக் கோயில் நீங்கிப்பின்னுற அணைந்த போது பிள்ளையார் பெருகும் செல்வம்மன்னிய மதுரை மூதூர் மறுகில் வந்தருளக் கண்டுதுன்னிய மாதர் மைந்தர் தொழுது வேறு இனைய சொன்னார்.
சொற்பிரிப்பு
தென்னவன் வெப்புத் தீர்ந்து, செழுமணிக் கோயில் நீங்கிப்.பின் உற அணைந்த போது, பிள்ளையார், பெருகும் செல்வம்மன்னிய மதுரை மூதூர் மறுகில் வந்து அருளக் கண்டுதுன்னிய மாதர், மைந்தர் தொழுது வேறு இனைய சொன்னார்;
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

802

மீனவன் கொண்ட வெப்பை நீக்கி நம் விழுமம் தீர்த்தஞான சம்பந்தர் இந்த நாயனார் காணும் என்பார்பால் நறும் குதலைச் செய்ய பவளவாய் பிள்ளையார் தாம்மான சீர்த் தென்னன் நாடு வாழ வந்து அணைந்தார் என்பார்.
சொற்பிரிப்பு
“மீனவன் கொண்ட வெப்பை நீக்கி நம் விழுமம் தீர்த்தஞான சம்பந்தர் இந்த நாயனார் காணும்” என்பார்“பால் நறும் குதலைச் செய்ய பவள வாய்ப் பிள்ளையார் தாம்மான சீர்த் தென்னன் நாடு வாழ வந்து அணைந்தார்” என்பார்;
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

803

எரியிடை வாதில் தோற்றது இவர்க்கு நம் அருகர் என்பார்புரிசடை அண்ணல் நீறே பொருள் எனக் கண்டோம் என்பார்பெருகு ஒளி முத்தின் பைம் பொன் சிவிகை மேல் பிள்ளையார் தாம்வரும் அழகு என்னே என்பார் வாழ்ந்தன கண்கள் என்பார்.
சொற்பிரிப்பு
“எரி இடை வாதில் தோற்றது இவர்க்கு நம் அருகர்” என்பார்;“புரிசடை அண்ணல் நீறே பொருள் எனக் கண்டோம்” என்பார்;“பெருகு ஒளி முத்தின் பைம்பொன் சிவிகை மேல் பிள்ளையார் தாம்வரும் அழகு என்னே” என்பார்; “வாழ்ந்தன கண்கள்” என்பார்;
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

804

ஏதமே விளைந்த இந்த அடிகள் மார் இயல்பால் என்பார்நாதனும் ஆல வாயில் நம்பனே காணும் என்பார்போதம் ஆவதுவும் முக்கண் புராணனை அறிவது என்பார்வேதமும் நீறும் ஆகி விரவிடும் எங்கும் என்பார்.
சொற்பிரிப்பு
“ஏதமே விளைந்தது இந்த அடிகள்மார் இயல்பால்” என்பார்;“நாதனும் ஆல வாயில் நம்பனே காணும்” என்பார்;“போதம் ஆவதுவும் முக்கண் புராணனை அறிவது” என்பார்;“வேதமும் நீறும் ஆகி விரவிடும் எங்கும்” என்பார்;
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

805

அடிகள்மார் முகங்கள் எல்லாம் அழிந்தன பாரீர் என்பார்கொடிய வஞ்சனைகள் எல்லாம் குலைந்தன போலும் என்பார்வடிகொள் வேல் மாறன் காதல் மாறின வண்ணம் என்பார்விடிவதாய் முடிந்தது இந்த வெஞ்சமண் இருளும் என்பார்.
சொற்பிரிப்பு
“அடிகள்மார் முகங்கள் எல்லாம் அழிந்தன பாரீர்” என்பார்;“கொடிய வஞ்சனைகள் எல்லாம் குலைந்தன போலும்” என்பார்;“வடிகொள் வேல் மாறன் காதல் மாறின வண்ணம்” என்பார்;“விடிவதாய் முடிந்தது இந்த வெஞ்சமண் இருளும்” என்பார்;
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

806

நெருப் பினில் தோற்றார் தாங்கள் நீரில் வெல்வர்களோ என்பார்இருப்பு நெஞ்சு உடையரேனும் பிள்ளையார்க்கு எதிரோ என்பார்பருப் பொருள் உணர்ந்தார் தாங்கள் படுவன் பாரீர் என்பார்மருப்புடைக் கழுக்கோல் செய்தார் மந்திரியார் தாம் என்பார்.
சொற்பிரிப்பு
“நெருப்பினில் தோற்றார் தாங்கள் நீரில் வெல்வர்களோ” என்பார்;“இருப்பு நெஞ்சு உடையர் ஏனும் பிள்ளையார்க்கு எதிரோ?” என்பார்;“பருப்பொருள் உணர்ந்தார் தாங்கள் படுவன பாரீர்” என்பார்;“மருப்புடைக் கழுக்கோல் செய்தார் மந்திரியார் தாம்” என்பார்;
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

807

ஏடுகள் வைகை தன்னில் இடுவதற்கு அணைந்தார் என்பார்ஓடும் நீருடன் செலாது நிற்குமோ ஓலை என்பார்நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்லர் என்பார்நாடெலாம் காண இங்கு நண்ணுமா காணீர் என்பார்.
சொற்பிரிப்பு
“ஏடுகள் வைகை தன்னில் இடுவதற்கு அணைந்தார்” என்பார்;“ஓடு நீர் உடன் செலாது நிற்குமோ ஓலை” என்பார்;“நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்லர்” என்பார்;“நாடு எலாம் காண இங்கு நண்ணுமா காணீர்” என்பார்;
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

808

தோற்றவர் கழுவில் ஏறத் துணிவதே அருகர் என்பார்ஆற்றிய அருளின் மேன்மைப் பிள்ளையார்க்கு அழகு இது என்பார்நீற்றினால் தென்னன் தீங்கு நீங்கிய வண்ணம் கண்டார்போற்றுவார் எல்லாம் சைவ நெறியினைப் போற்றும் என்பார்.
சொற்பிரிப்பு
“தோற்றவர் கழுவில் ஏறத் துணிவதே அருகர்?” என்பார்;“ஆற்றிய அருளின் மேன்மைப் பிள்ளையார்க்கு அழகு இது” என்பார்;“நீற்றினால் தென்னன் தீங்கு நீங்கிய வண்ணம் கண்டார்போற்றுவார் எல்லாம் சைவ நெறியினைப் போற்றும்” என்பார்;
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

809

இன்னன இரண்டு பாலும் ஈண்டினர் எடுத்துச் சொல்லமின் ஒளி மணிப் பொற்காம்பின் வெண் குடை மீது போதப்பன் மணிச் சிவிகை தன் மேல் பஞ்சவன் நாட்டு உளோர்க்குநன்நெறி காட்ட வந்தார் நான் மறை வாழ வந்தார்.
சொற்பிரிப்பு
இன்னன இரண்டு பாலும் ஈண்டினர் எடுத்துச் சொல்ல,மின் ஒளி மணிப்பொன் காம்பின் வெண்குடை மீது போதப்,பன்மணிச் சிவிகை தன்மேல், பஞ்சவன் நாட்டு உளோர்க்குநன்னெறி காட்ட வந்தார், நான்மறை வாழ வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

810

தென் தமிழ் விளங்க வந்த திருக்கழு மலத்தான் வந்தான்மன்றுளார் அளித்த ஞான வட்டில் வண்கையன் வந்தான்வென்றுலகு உய்ய மீள வைகையில் வெல்வான் வந்தான்என்றுபன் மணிச் சின்னங்கள் எண் திசை நெருங்கி ஏங்க.
சொற்பிரிப்பு
“தென் தமிழ் விளங்க வந்த திருக்கழுமலத்தான் வந்தான்;மன்று உளார் அளித்த ஞான வட்டில் வண் கையன் வந்தான்;வென்றுலகு உய்ய, மீள, வைகையில் வெல்வான் வந்தான்”என்று பன் மணிச் சின்னங்கள் எண்டிசை நெருங்கி ஏங்க.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

811

பன் மணி முரசம் சூழ்ந்த பல்லியம் இயம்பப் பின்னேதென்னனும் தேவியாரும் உடன் செலத் திரண்டு செல்லும்புன் நெறி அமணர் வேறு ஓர் புடைவரப் புகலி வேந்தர்மன்னிய வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார்.
சொற்பிரிப்பு
பன்மணி முரசம் சூழ்ந்த பல்இயம் இயம்பப், பின்னேதென்னனும் தேவியாரும் உடன் செலத், திரண்டு செல்லும்புன்னெறி அமணர் வேறு ஓர் புடைவரப், புகலி வேந்தர்மன்னிய வைகை ஆற்றின் கரைமிசை மருவ வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

812

கார் கெழு பருவம் வாய்ப்பக் காமுறும் மகளிர் உள்ளம்சீர் கெழு கணவன் தன்பால் விரைவு உறச் செல்லுமா போல்நீர் கெழு பௌவம் நோக்கி நிரை திரை இரைத்துச் செல்லும்பார் கெழு புகழின் மிக்க பண்புடை வைகை ஆறு.
சொற்பிரிப்பு
கார் கெழு பருவம் வாய்ப்பக் காமுறு மகளிர் உள்ளம்சீர் கெழு கணவன் தன்பால் விரைவு உறச் செல்லுமா போல்நீர் கெழு பௌவம் நோக்கி நிரை திரை இரைத்துச் செல்லும்பார் கெழு புகழின் மிக்க பண்புடை வைகை ஆறு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

813

ஆற்றில் நீர் கடுக ஓடும் மருங்கு உற அரசன் நோக்கிநீற்று அணி திகழ்ந்த மேனி நிறை மதிப் பிள்ளையாரும்வேற்றுரு அருகர் நீரும் விதித்த ஏடு இடுக என்றான்தோற்றவர் தோலார் என்று முன்னுறத் துணிந்து இட்டார்கள்.
சொற்பிரிப்பு
ஆற்றில் நீர் கடுக ஓடும் மருங்கு உற அரசன் நோக்கி“நீற்று அணி திகழ்ந்த மேனி நிறைமதிப் பிள்ளையாரும்வேற்று உரு அருகர் நீரும் விதித்த ஏடு இடுக” என்றான்“தோற்றவர் தோலார்” என்று முன் உறத் துணிந்திட்டார்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

814

படு பொருள் இன்றி நெல்லில் பதடி போல் உள் இலார் மெய்அடுபவர் பொருளை அத்தி நாத்தி என்று எழுதி ஆற்றில்கடுகிய புனலைக் கண்டும் அவாவினால் கையில் ஏடுவிடுதலும் விரைந்து கொண்டு வேலை மேல் படர்ந்ததன்றே.
சொற்பிரிப்பு
படுபொருள் இன்றி, நெல்லில் பதடி போல், உள் இலார், மெய்அடுபவர், பொருளை “அத்தி நாத்தி” என்று எழுதி, ஆற்றில்கடுகிய புனலைக் கண்டும் அவாவினால் கையில் ஏடுவிடுதலும், விரைந்து கொண்டு வேலைமேல் படர்ந்தது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

815

ஆறு கொண்டு ஓடும் ஏட்டைத் தொடர்ந்து எதிர் அணைப்பார் போலத்தேறு மெய் உணர்வு இலாதார் கரைமிசை ஓடிச் சென்றார்பாறும் அப்பொருள் மேல் கொண்ட பட்டிகை எட்டாது அங்குநூறுவில் கிடைக்கு முன்னே போனது நோக்கிக் காணார்.
சொற்பிரிப்பு
ஆறு கொண்டு ஓடும் ஏட்டைத் தொடர்ந்து எதிர் அணைப்பார் போலத்தேறும் மெய் உணர்வு இலாதார் கரைமிசை ஓடிச் சென்றார்;பாறும் அப்பொருள்மேல் கொண்ட பட்டிகை எட்டாது அங்குநூறு வில் கிடைக்கு முன்னே போனது நோக்கிக் காணார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

816

காணவும் எய்தா வண்ணம் கடலின் மேல் செல்லும் ஏடுநாணிலா அமணர் தம்மை நட்டாற்றில் விட்டுப் போகச்சேணிடைச் சென்று நின்றார் சிதறினார் திகைத்தார் மன்னன்ஆணையில் வழுவ மாட்டாது அஞ்சுவார் அணைய மீண்டார்.
சொற்பிரிப்பு
காணவும் எய்தா வண்ணம் கடலின் மேல் செல்லும் ஏடுநாண் இலா அமணர் தம்மை நட்டு ஆற்றில் விட்டுப் போகச்சேண் இடைச் சென்று நின்றார்; சிதறினார் திகைத்தார்; மன்னன்ஆணையில் வழுவ மாட்டாது அஞ்சுவார் அணைய மீண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

817

வேறு ஒரு செயல் இலாதார் வெருவுற்று நடுங்கித் தம்பால்ஈறு வந்து எய்திற்று என்றே மன்னவன் எதிர் வந்து எய்திஊறுடை நெஞ்சில் அச்சம் வெளிப்பட ஒளிப்பார் போன்றுமாறு கொண்டீரும் இட்டால் வந்தது காண்டும் என்றார்.
சொற்பிரிப்பு
வேறு ஒரு செயல் இலாதார், வெருவுற்று, நடுங்கித் தம்பால்ஈறுவந்து எய்திற்று என்றே மன்னவன் எதிர்வந்து எய்தி,ஊறு உடை நெஞ்சில் அச்சம் வெளிப்பட ஒளிப்பார் போன்று“மாறு கொண்டீரும் இட்டால் வந்தது காண்கும்” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

818

மாசு சேர் அமணர் எல்லாம் மதியினில் மயங்கிக் கூறஆசிலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டுத்தேசு உடைப் பிள்ளையார் தம் திருக்குறிப்பு அதனை நோக்கப்பாசுரம் பாடல் உற்றார் பர சமயங்கள் பாற.
சொற்பிரிப்பு
மாசு சேர் அமணர் எல்லாம் மதியினில் மயங்கிக் கூறஆசிலா நெறியில் சேர்ந்த அரசனும், அவரை விட்டு,தேசுடைப் பிள்ளையார் தம் திருக்குறிப்பு அதனை நோக்கப்பாசுரம் பாடல் உற்றார் பர சமயங்கள் பாற.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

819

தென்னவன் மாறன் தானும் சிரபுரத்துத் தலைவர் தீண்டிப்பொன் நவில் கொன்றையார் தம் திருநீறு பூசப் பெற்றுமுன்னை வல் வினையும் நீங்கி முதல்வனை அறியும் தன்மைதுன்னினான் வினைகள் ஒத்துத் துலை என நிற்றலாலே.
சொற்பிரிப்பு
தென்னவன் மாறன் தானும் சிரபுரத் தலைவர் தீண்டிப்பொன் நவில் கொன்றையார் தம் திருநீறு பூசப் பெற்றுமுன்னைவல் வினையும் நீங்கி முதல்வனை அறியும் தன்மைதுன்னினான் வினைகள் ஒத்துத் துலை என நிற்றலாலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

820

உலகியல் வேத நூல் ஒழுக்கம் என்பதுநிலவு மெய்ந் நெறி சிவ நெறியது என்பதும்கலதி வாய் அமணர் காண்கிலார்கள் ஆயினும்பலர் புகழ் தென்னவன் அறியும் பான்மையால்.
சொற்பிரிப்பு
உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும்நிலவு மெய்ந் நெறி சிவ நெறியது என்பதும்கலதி வாய் அமணர் காண்கிலார்கள் ஆயினும்,பலர் புகழ் தென்னவன் அறியும் பான்மையால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

821

அந்தணர் தேவர் ஆன் இனங்கள் வாழ்க என்றுஇந்த மெய்ம் மொழிப் பயன் உலகம் இன்புறச்சந்த வேள்விகள் முதல் சங்கரர்க்கு முன்வந்த அர்ச்சனை வழிபாடும் அன்னவாம்.
சொற்பிரிப்பு
“அந்தணர் தேவர் ஆன் இனங்கள் வாழ்க” என்றுஇந்த மெய்ம் மொழிப் பயன் உலகம் இன்பு உறசந்த வேள்விகள் முதல் சங்கரர்க்கு முன்வந்த அர்ச்சனை வழிபாடு மன்னவாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

822

வேள்வி நற்பயன் வீழ் புனல் ஆவதுநாளும் அர்ச்சனை நல் உறுப்பு ஆதலால்ஆளும் மன்னனை வாழ்த்தியது அர்ச்சனைமூளும் மற்று இவை காக்கும் முறைமையால்.
சொற்பிரிப்பு
வேள்வி நற்பயன் “வீழ்புனல்” ஆவதுநாளும் அர்ச்சனை நல் உறுப்பு ஆதலால்;ஆளும் “மன்னனை வாழ்த்தியது” அர்ச்சனைமூளும் மற்று இவை காக்கும் முறைமையால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

823

ஆழ்க தீயது என்று ஓதிற்று அயல் நெறிவீழ்க என்றது வேறு எல்லாம் அரன் பெயர்சூழ்க என்றது தொல் உயிர் யாவையும்வாழி அஞ்சு எழுத்து ஓதி வளர்கவே.
சொற்பிரிப்பு
“ஆழ்க தீயது” என்று ஓதிற்று அயல்நெறிவீழ்க என்றது வேறு” எல்லாம் அரன்பெயர்சூழ்க” என்றது தொல் உயிர் யாவையும்வாழி அஞ்செழுத்து ஓதி வளர்கவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

824

சொன்ன வையகமும் துயர் தீர்கவேஎன்னும் நீர்மை இக பரத்தில் துயர்மன்னி வாழும் உலகத்தவர் மாற்றிடமுன்னர் ஞான சம்பந்தர் மொழிந்தனர்.
சொற்பிரிப்பு
சொன்ன “வையகமும் துயர் தீர்கவே”என்னும் நீர்மை இக, பரத்தில் துயர்மன்னி வாழ் உலகத்தவர் மாற்றிடமுன்னர் ஞான சம்பந்தர் மொழிந்தனர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

825

அரிய காட்சியர் என்பது அவ் வாதியைத்தெரியலாம் நிலையால் தெரியார் எனஉரிய அன்பினில் காண்பவர்க்கு உண்மையாம்பெரிய நல் அடையாளங்கள் பேசினார்.
சொற்பிரிப்பு
“அரிய காட்சியர்” என்பது அவ் ஆதியைத்“தெரியலா நிலையால்” தெரியார் எனஉரிய அன்பினில் காண்பவர்க்கு உண்மையாம்பெரிய நல் அடையாளங்கள் பேசினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

826

ஆயினும் பெரியார் அவர் என்பதுமேய இவ் இயல்பே அன்றி விண் முதல்பாய பூதங்கள் பல் உயிர் அண்டங்கள்ஏயும் யாவும் இவர் வடிவு என்றதாம்.
சொற்பிரிப்பு
“ஆயினும் பெரியார் அவர்” என்பதுமேய இவ்இயல்பே அன்றி, விண்முதல்பாய பூதங்கள், பல்உயிர், அண்டங்கள்ஏயும் யாவும் இவர் வடிவு என்றதாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

827

பின்பும் ஆர் அறிவார் அவர் பெற்றியேஎன்பது யார் உணர்வான் எனும் சென்று எட்ட ஒணாமன்பெரும் தன்மையார் என வாழ்த்தினார்அன்பு சூழ் சண்பை ஆண்தகையாரவர்.
சொற்பிரிப்பு
பின்பும் “ஆர் அறிவார் அவர் பெற்றியே”என்பது யார் உணர்வானும் சென்று எட்ட ஒணாமன் பெருந்தன்மையார் என வாழ்த்தினார்அன்பு சூழ் சண்பை ஆண்டகையார் அவர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

828

வெந்த சாம்பல் விரை என்பது தமதுஅந்தம் இல் ஒளியல்லா ஒளி எலாம்வந்து வெந்தற மற்றப் பொடி அணிசந்த மாக் கொண்ட வண்ணமும் சாற்றினார்.
சொற்பிரிப்பு
“வெந்த சாம்பல் விரை” என்பது தமதுஅந்தம் இல் ஒளி அல்லா ஒளி எலாம்வந்து வெந்து அற மற்றப் பொடி அணிசந்தமாக் கொண்ட வண்ணமும் சாற்றினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

829

தமக்குத் தந்தையர் தாய் இலர் என்பதும்அமைத்து இங்கு யாவையும் ஆங்கு அவை வீந்த போதுஇமைத்த சோதி அடக்கிப் பின் ஈதலால்எமக்கு நாதர் பிறப்பு இலர் என்றதாம்.
சொற்பிரிப்பு
தமக்குத் “தந்தையர் தாய் இலர்” என்பதும்அமைத்து இங்கு யாவையும் ஆங்கு அவை வீந்த போதுஇமைத்த சோதி அடக்கிப் பின் ஈதலால்எமக்கு நாதர் பிறப்பிலர் என்றதாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

830

தம்மையே சிந்தியார் எனும் தம்மை தான்மெய்ம்மை ஆகி விளங்கு ஒளி தாம் எனஇம்மையே நினைவார் தம் இருவினைப்பொய்ம்மை வல் இருள் போக்குவர் என்றதாம்.
சொற்பிரிப்பு
“தம்மையே சிந்தியா” எனும் தன்மைதான்மெய்ம்மை ஆகி விளங்கு ஒளி தாம் எனஇம்மையே நினைவார் தம் இருவினைப்பொய்ம்மை வல்இருள் போக்குவர் என்றதாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

831

எந்தையார் அவர் எவ்வகையார் கொல் என்றுஇந்த வாய்மை மற்ற எப்பொருள் கூற்றினும்முந்தையோரை எக் கூற்றின் மொழிவது என்றுஅந்தண் பூந்தராய் வேந்தர் அருளினார்.
சொற்பிரிப்பு
“எந்தையார் அவர் எவ்வகையார் கொல்” என்றுஇந்த வாய்மை மற்று எப்பொருள் கூற்றினும்முந்தையோரை எக் கூற்றின் மொழிவது என்றுஅந்தண் பூந்தராய் வேந்தர் அருளினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

832

ஆதி ஆட்பாலவர்க்கு அருளும் திறம்நாதன் மாட்சிமை கேட்க நவிலுங்கால்ஓதும் எல்லை உலப்பில ஆதலின்யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்பதாம்.
சொற்பிரிப்பு
ஆதி ”ஆட்பாலவர்க்கு அருளுந்திறம்”நாதன் மாட்சிமை கேட்க நவிலுங்கால்ஓதும் எல்லை உலப்பில ஆதலின்யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றதாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

833

அன்ன ஆதலில் ஆதியார் தாள் அடைந்துஇன்ன கேட்கவே ஏற்ற கோள் பலவும்முன்னை வல் வினையும் முடிவு எய்தும் அத்தன்மையார்க்கு என்றனர் சண்பை காவலர்.
சொற்பிரிப்பு
அன்ன ஆதலில் “ஆதியார் தாள் அடைந்துஇன்ன கேட்கவே ஏற்றகோள் பாலவும்முன்னை வல்வினையும் முடிவு எய்தும் அத்தன்மை யார்க்கு” என்றனர் சண்பை காவலர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

834

மன்னும் ஏதுக்களால் எனும் வாய்மைதான்தன்னது ஒப்பு வேறு இன்மையில் சங்கரன்இன்ன தன்மையை ஏது எடுத்துக் காட்டுஅன்ன ஆற்றால் அளப்பு இலன் என்றதாம்.
சொற்பிரிப்பு
மன்னும் “ஏதுக்களால் எனும்” வாய்மை தான்தன்னது ஒப்பு வேறு இன்மையில் சங்கரன்இன்ன தன்மையை ஏது, எடுத்துக்காட்டுஅன்னவாற்றால் அளப்பு இலன் என்றதாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

835

தோன்று காட்சி சுடர் விட்டு உளன் என்பதுஆன்ற அங்கிப் புறத்து ஒளியாய் அன்பில்ஊன்ற உள் எழும் சோதியாய் நின்றனன்ஏன்று காண்பார்க்கு இது பொருள் என்ற தாம்.
சொற்பிரிப்பு
தோன்று காட்சி “சுடர் விட்டு உளன்” என்பதுஆன்ற அங்கிப் புறத்து ஒளியாய் அன்பில்ஊன்ற உள் எழும் சோதியாய் நின்றனன்;ஏன்று காண்பார்க்கு இது பொருள் என்றதாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

836

மாதுக்கம் நீங்கல் உறுவீர் மனம் பற்றும் என்பதுஆதிச் சுடர்ச் சோதியை அன்பின் அகத்துள் ஆக்கிப்போதித்த நோக்கு உற்று ஒழியாமல் பொருந்தி வாழ்ந்துபேதித்த பந்தப் பிறப்பின் நெறி பேர்மின் என்றாம்.
சொற்பிரிப்பு
“மாதுக்கம் நீங்கல் உறுவீர் மனம் பற்றும்” என்பதுஆதிச் சுடர்ச்சோதியை அன்பின் அகத்து உள் ஆக்கிப்போதித்த நோக்கு உற்று ஒழியாமல் பொருந்தி வாழ்ந்துபேதித்த பந்தப் பிறப்பின் நெறி பேர்மின் என்றாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

837

ஈண்டு சாதுக்கள் என்று எடுத்து ஓதிற்றுவேண்டும் வேட்கைய எல்லாம் விமலர்தாள்பூண்ட அன்பினில் போற்றுவீர் சார்மின் என்றுஆண்ட சண்பை அரசர் அருளினார்.
சொற்பிரிப்பு
ஈண்டுச் “சாதுக்கள்” என்று எடுத்து ஓதிற்றுவேண்டும் வேட்கைய எல்லாம் விமலர் தாள்பூண்ட அன்பினில் போற்றுவீர்! “சார்மின்” என்றுஆண்ட சண்பை அரசர் அருளினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

838

ஆடும் எனவாம் திருப்பாட்டின் அமைத்த மூன்றும்நீடும் புகழோ பிறர் துன்பம் நீத்தற்கோ என்றுதேடும் உணர்வீர் உலகுக்கு இவை செய்த ஈசர்கூடும் கருணைத் திறம் என்றனர் கொள்கை மேலோர்.
சொற்பிரிப்பு
“ஆடும்” எனவாம் திருப்பாட்டின் அமைத்த மூன்றும்நீடும் புகழோ? பிறர் துன்பம் நீத்தற்கோ? என்றுதேடும் உணர்வீர் உலகுக்கு இவை செய்தது ஈசர்கூடும் கருணைத் திறம் என்றனர் கொள்கை மேலோர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

839

கருதும் கடிசேர்ந்த என்னும் திருப் பாட்டில் ஈசர்மருவும் பெரும் பூசை மறுத்தவர்க் கோறல் முத்திதரு தன்மையது ஆதல் சண்டீசர் தம் செய்கை தக்கோர்பெரிதும் சொலக் கேட்டனம் என்றனர் பிள்ளையார் தாம்.
சொற்பிரிப்பு
கருதும் “கடிசேர்ந்த” எனும் திருப்பாட்டில் ஈசர்மருவும் பெரும் பூசை மறுத்தவர்க் கோறல் முத்திதரு தன்மையது ஆதல் சண்டீசர் தம் செய்கை, தக்கோர்பெரிதும் சொலக் கேட்டனம் என்றனர் பிள்ளையார் தாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

840

வேத முதல்வன் எனும் மெய்த் திருப்பாட்டினினேர்ஆதி உலகோர் இடர் நீங்கிட ஏத்த ஆடும்பாத முதலாம் பதிணெண் புராணங்கள் என்றேஓது என்று உரை செய்தனர் யாவும் ஓதாது உணர்ந்தோர்.
சொற்பிரிப்பு
“வேத முதல்வன்” எனும் மெய்த் திருப்பாட்டினில் நேர்ஆதி உலகோர் இடர் நீங்கிட ஏத்த “ஆடும்”பாத முதலாம் பதினெண் புராணங்கள் என்றேஓது என்று உரைசெய்தனர் யாவும் ஓதாது உணர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

841

பாவுற்ற பார் ஆழி வட்டத் திருப்பாட்டின் உண்மைகாவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல் பெற்றதுயாவர்க்கும் மேலாய ஈசன் அருள் ஆழி பெற்றுமேவுற்ற சீர் உற்றது என்றனர் வேத வாயர்.
சொற்பிரிப்பு
“பா உற்ற பார் ஆழி வட்டத்” திருப்பாட்டின் உண்மைகாவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல் பெற்றதுயாவர்க்கும் மேலாய ஈசன் அருள் ஆழி பெற்றுமேவுற்ற சீர் உற்றது என்றனர் வேத வாயர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

842

மாலா யவன் என்ன வரும் திருப்பாட்டில் மாலும்தோலா மறை நான்முகனும் தொடர்வாம் அமரர்ஏலா வகை சுட்ட நஞ்சு உண்டு இறவாமை காத்தமேலாம் கருணைத் திறம் வெங்குருவேந்தர் வைத்தார்.
சொற்பிரிப்பு
“மாலாயவன்” என்ன வரும் திருப்பாட்டில் மாலும்தோலா மறை நான்முகனும் தொடர்வாம் அமரர்ஏலா வகை சுட்ட நஞ்சு உண்டு, இறவாமை காத்தமேலாம் கருணைத் திறம் வெங்குரு வேந்தர் வைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

843

ஆன அற்று அன்றி என்ற அத்திருப் பாட்டில் கூடல்மா நகரத்துச் சங்கம் வைத்தவன் தேற்றத் தேறாஈனர்கள் எல்லைக் கிட்ட ஏடு நீர் எதிர்ந்து செல்லில்ஞானம் ஈசன் பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார்.
சொற்பிரிப்பு
ஆன” அற்றன்றி அந்தண்” எனும் திருப்பாட்டில் கூடல்மாநகர்ச் சங்கம் வைத்தவன் தேறத், தேறாஈனர்கள் எல்லைக்கு இட்ட ஏடு எதிர்ந்து செல்லில்ஞானம் ஈசன் பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

844

வெறியார் பொழில் சண்பையர் வேந்தர் மெய்ப் பாசுரத்தைக்குறி ஏறிய எல்லை அறிந்து கும்பிட்டேன் அல்லேன்சிறியேன் அறிவுக்கு அவர்தம் திருப்பாதம் தந்தநெறியே சிறிது யான் அறி நீர்மை கும்பிட்டேன் அன்பால்.
சொற்பிரிப்பு
வெறியார் பொழில் சண்பையர் வேந்தர் மெய்ப்பாசுரத்தைக்குறி ஏறிய எல்லை அறிந்து கும்பிட்டேன் அல்லேன்சிறியேன் அறிவுக்கு அவர் தம் திருப்பாதம் தந்தநெறியே சிறிது யான் அறிநீர்மை கும்பிட்டேன் அன்பால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

845

அலரும் விரை சூழ் பொழில் காழியுள் ஆதி ஞானம்மலரும் திருவாக்கு உடை வள்ளலார் உள்ள வண்ணம்பலரும் உணர்ந்து உய்யப் பகர்ந்து வரைந்து ஆற்றில்நிலவும் திரு ஏடு திருக்கையால் நீட்டி இட்டார்.
சொற்பிரிப்பு
அலரும் விரை சூழ் பொழில் காழியுள் ஆதி ஞானம்மலரும் திருவாக்கு உடை வள்ளலார் உள்ள வண்ணம்பலரும் உணர்ந்து உய்யப் பகர்ந்து, வரைந்து, ஆற்றில்நிலவும் திரு ஏடு திருக்கையால் நீட்டி இட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

846

திருவுடைப் பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடுமருவிய பிறவி ஆற்றில் மாதவர் மனம் சென்றால் போல்பொரு புனல் வைகை ஆற்றில் எதிர்ந்து நீர் கிழித்துப் போகும்இரு நிலத்தோர் கட்கு எல்லாம் இது பொருள் என்று காட்டி.
சொற்பிரிப்பு
திருஉடைப் பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடுமருவுறும் பிறவி ஆற்றில் மாதவர் மனம் சென்றால்போல்பொருபுனல் வைகை ஆற்றில் எதிர்ந்து நீர் கிழித்துப் போகும்இருநிலத்தோர்கட்கு எல்லாம் ‘இது பொருள்’ என்று காட்டி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

847

எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும் என்று எழுதும் ஏட்டில்தம்பிரான் அருளால் வேந்தன் தன்னை முன் ஓங்கப் பாடஅம்புய மலராள் மார்பன் அனபாயன் என்னும் சீர்த்திச்செம்பியன் செங்கோல் என்னத் தென்னன் கூன் நிமிர்ந்தது அன்றே.
சொற்பிரிப்பு
“எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும்” என்று எழுதும் ஏட்டில்தம்பிரான் அருளால் வேந்தன் தன்னை முன் ஓங்கப் பாடஅம்புய மலராள் மார்பன் “அநபாயன்” என்னும் சீர்த்திச்செம்பியன் செங்கோல் என்னத் தென்னன் கூன் நிமிர்ந்தது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

848

ஏடு நீர் எதிர்ந்து செல்லும் பொழுது இமையோர்கள் எல்லாம்நீடிய வாழ்த்தில் போற்றி நிமிர்ந்த பூமாரி தூர்த்தார்ஆடியல் யானை மன்னன் அற்புதம் எய்தி நின்றான்பாடு சேர் அமணர் அஞ்சி பதைப்புடன் பணிந்து நின்றார்.
சொற்பிரிப்பு
ஏடு நீர் எதிர்ந்து செல்லும் பொழுது இமையோர்கள் எல்லாம்நீடிய வாழ்த்தில் போற்றி நிமிர்ந்த பூமாரி தூர்த்தார்;ஆடியல் யானை மன்னன் அற்புதம் எய்தி நின்றான்;பாடுசேர் அமணர் அஞ்சிப் பதைப்புடன் பணிந்து நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

849

ஆற்றின் மேல் செல்லும் ஏடு தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டிக்காற்றென விசையில் செல்லும் கடும் பரி ஏறிக் கொண்டுகோல் தொழில் திருத்த வல்ல குலச்சிறையார் பின் சென்றார்ஏற்று உயர் கொடியினாரைப் பாடினார் ஏடு தங்க.
சொற்பிரிப்பு
ஆற்றின் மேல் செல்லும் ஏடு தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டிக்காற்று என விசையில் செல்லும் கடும்பரி ஏறிக் கொண்டுகோல் தொழில் திருத்த வல்ல குலச்சிறையார் பின் சென்றார்ஏற்று உயர் கொடியினாரைப் பாடினார் ஏடு தங்க.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

850

ஏடகம் பிள்ளையார் தாம் வன்னி என்று எடுத்துப் பாடக்கூடிய நீரில் ஏடு குலச்சிறை யாரும் கூடிக்காடு இடமாக ஆடுங்கண்ணுதல் கோயில்மாடுநீடுநீர் நடுவுட் புக்கு நின்ற ஏடு எடுத்துக் கொண்டார்.
சொற்பிரிப்பு
ஏடகம் பிள்ளையார் தாம் “வன்னி” என்று எடுத்துப் பாடக்கூடிய நீரில் ஏடு குலச்சிறையாரும் கூடிக்காடு இடம் ஆக ஆடும் கண்நுதல் கோயில் மாடுநீடு நீர் நடுவுள் புக்கு நின்ற ஏடு எடுத்துக் கொண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

851

தலை மிசை வைத்துக்கொண்டு தாங்கரும் மகிழ்ச்சி பொங்கஅலைபுனல் கரையில் ஏறி அங்கு இனிது அமர்ந்த மேருச்சிலை உடையவர் தாள் போற்றி மீண்டு சென்று அணைவார் தெய்வமலை மகள் குழைத்த ஞானம் உண்டவர் தம்பால் வந்தார்.
சொற்பிரிப்பு
தலைமிசை வைத்துக் கொண்டு தாங்கரும் மகிழ்ச்சி பொங்கஅலை புனல் கரையில் ஏறி அங்கு இனிது அமர்ந்த மேருச்சிலை உடையவர் தாள் போற்றி மீண்டும் சென்று அணைவார் தெய்வமலைமகள் குழைத்த ஞானம் உண்டவர் தம்பால் வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

852

மற்றவர் பிள்ளையார் தம் மலர் அடி வணங்கிப் போற்றிக்கொற்றவன் முதலாய் உள்ளோர் காண முன் கொணர்ந்த ஏடுபற்றிய கையில் ஏந்திப் பண்பினால் யார்க்கும் காட்டஅற்றருள் பெற்ற தொண்டர் அர ஒலி எழுந்ததன்றே.
சொற்பிரிப்பு
மற்றவர் பிள்ளையார் தம் மலர்அடி வணங்கிப் போற்றிக்கொற்றவன் முதலாய் உள்ளோர் காண முன் கொணர்ந்த ஏடுபற்றிய கையில் ஏந்திப் பண்பினால் யார்க்கும் காட்டஅற்றருள் பெற்ற தொண்டர் “அர” ஒலி எழுந்தது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

853

மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கிதுன்னிய வாதில் ஒட்டித் தோற்ற இச் சமணர் தாங்கள்முன்னமே பிள்ளையார் பால் அனுசிதம் முற்றச் செய் தார்கொல் நுனைக் கழுவில் ஏற முறை செய்க என்று கூற.
சொற்பிரிப்பு
மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கித்“துன்னிய வாதில் ஒட்டித் தோற்ற இச் சமணர் தாங்கள்முன்னமே பிள்ளையார் பால் அநுசிதம் முற்றச் செய்தார்கொன் நுனைக் கழுவில் ஏற முறை செய்க” என்று கூற.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

854

புகலியில் வந்த ஞானப் புங்கவர் அதனைக் கேட்டும்இகல் இலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்குதகவு இலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றேமிகை இலா வேந்தன் செய்கை விலக்கிடாது இருந்த வேலை.
சொற்பிரிப்பு
புகலியில் வந்த ஞானப் புங்கவர் அதனைக் கேட்டும்இகல் இலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்குதகவு இலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றேமிகை இலா வேந்தன் செய்கை விலக்கிடாது இருந்த வேலை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

855

பண்பு உடை அமைச்சனாரும் பார் உளோர் அறியும் ஆற்றால்கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்றநண்பு உடை ஞானம் உண்டார் மடத்துத் தீ நாடி இட்டஎண் பெரும் குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள்.
சொற்பிரிப்பு
பண்புடை அமைச்சனாரும் பார் உளோர் அறியும் ஆற்றால்கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்றநண்புடை ஞானம் உண்டார் மடத்துத் தீ நாடி இட்டஎண்பெரும் குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

856

தோற்றவர் கழுவில் ஏறித் தோற்றிடத் தோற்றும் தம்பம்ஆற்று இடை அமணர் ஓலை அழிவினால் ஆர்த்த தம்பம்வேற்று ஒரு தெய்வம் இன்மை விளக்கிய பதாகைத் தம்பம்போற்று சீர்ப் பிள்ளையார் தம் புகழ்ச் சயத் தம்பம் ஆகும்.
சொற்பிரிப்பு
தோற்றவர் கழுவில் ஏறித் தோற்றிடத் தோற்றும் தம்பம்ஆற்றிடை அமணர் ஓலை அழிவினால் ஆர்ந்த தம்பம்வேற்று ஒரு தெய்வம் இன்மை விளக்கிய பதாகைத் தம்பம்போற்று சீர்ப் பிள்ளையார் தம் புகழ்ச் சயத் தம்பம் ஆகும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

857

தென்னவன் தனக்கு நீறு சிரபுரச் செல்வர் ஈந்தார்முன்னவன் பணிந்து கொண்டு முழுவதும் அணிந்து நின்றான்மன்னன் நீறு அணிந்தான் என்று மற்றவன் மதுரை வாழ்வார்துன்னி நின்றார்கள் எல்லாம் தூய நீறு அணிந்து கொண்டார்.
சொற்பிரிப்பு
தென்னவன் தனக்கு நீறு சிரபுரச் செல்வர் ஈந்தார்;முன்னவன் பணிந்து கொண்டு முழுவதும் அணிந்து நின்றான்;“மன்னன் நீறு அணிந்தான்” என்று மற்றவன் மதுரை வாழ்வார்துன்னி நின்றார்கள் எல்லாம் தூய நீறு அணிந்து கொண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

858

பூதி மெய்க்கு அணிந்து வேந்தன் புனிதனாய் உய்ந்த போதுநீதியும் வேதநீதி ஆகியே நிகழ்ந்தது எங்கும்மேதினி புனிதம் ஆக வெண்ணீற்றின் விரிந்த சோதிமாதிரம் தூய்மை செய்ய அமண் இருள் மாய்ந்தது அன்றே.
சொற்பிரிப்பு
பூதி மெய்க்கு அணிந்து வேந்தன் புனிதனாய் உய்ந்த போதுநீதியும் வேத நீதி ஆகியே நிகழ்ந்தது எங்கும்மேதினி புனிதம் ஆக வெண்நீற்றின் விரிந்த சோதிமாதிரம் தூய்மை செய்ய அமண் இருள் மாய்ந்தது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

859

மீனவற்கு உயிரை நல்கி மெய்ந் நெறி காட்டி மிக்கஊனமாம் சமணை நீக்கி உலகு எலாம் உய்யக் கொண்டஞான சம்பந்தர் வாய்மை ஞாலத்தில் பெருகி ஓங்கத்தேனலர் கொன்றையார் தம் திருநெறி நடந்தது அன்றே.
சொற்பிரிப்பு
மீனவற்கு உயிரை நல்கி, மெய்ந்நெறி காட்டி, மிக்கஊனமாம் சமணை நீக்கி, உலகெலாம் உய்யக் கொண்டஞான சம்பந்தர் வாய்மை ஞாலத்தில் பெருகி ஓங்கத்தேன் அலர் கொன்றையார் தம் திருநெறி நடந்தது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

860

மறையவர் வேள்வி செய்ய வானவர் மாரி நல்கஇறைவன் நல் நெறியின் ஓங்க இகத்தினில் அவனி இன்பம்குறைவிலது எனினுங் கூற்றை உதைத்தவர் நாமம் கூறிநிறை கடல் பிறவித் துன்பம் நீங்கிடப் பெற்றது அன்றே.
சொற்பிரிப்பு
மறையவர் வேள்வி செய்ய வானவர் மாரி நல்கஇறைவன் நன் நெறியின் ஓங்க இகத்தினில் அவனி இன்பம்குறைவு இலது எனினும், கூற்றை உதைத்தவர் நாமம் கூறிநிறைகடல் பிறவித் துன்பம் நீங்கிடப் பெற்றது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

861

அங்கயற்கண்ணி தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல்பங்கயச் செய்ய பாதம் பணிவன் என்று எழுந்து சென்றுபொங்கு ஒளிச் சிவிகை ஏறிப் புகலியர் வேந்தர் போந்தார்மங்கையர்க்கு அரசியாரும் மன்னனும் போற்றி வந்தார்.
சொற்பிரிப்பு
“அங்கயல் கண்ணி தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல்பங்கயச் செய்ய பாதம் பணிவன்” என்று எழுந்து சென்றுபொங்கு ஒளிச் சிவிகை ஏறிப் புகலியர் வேந்தர் போந்தார்மங்கையர்க்கு அரசியாரும் மன்னனும் போற்றி வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

862

எண்ணரும் பெருமைத் தொண்டர் யாவரும் மகிழ்ச்சி எய்திப்புண்ணியப் பிள்ளையாரைப் புகழ்ந்துடன் போற்றிப் போதமண் எலாம் உய்ய வந்த வள்ளலார் தம்மைக் கண்டுகண்ணினால் பயன் கொண்டார்கள் கன்னி நாட்டவர்கள் எல்லாம்.
சொற்பிரிப்பு
எண் அரும் பெருமைத் தொண்டர் யாவரும் மகிழ்ச்சி எய்திப்புண்ணியப் பிள்ளையாரைப் புகழ்ந்து அடி போற்றிப் போத,மண் எலாம் உய்ய வந்த வள்ளலார் தம்மைக் கண்டுகண்ணினால் பயன் கொண் டார்கள் கன்னி நாட்டவர்கள் எல்லாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

863

ஆலவாய் அண்ணல் கோயில் அம் கண் முன் தோன்றக் கண்டுபால் அறாவாயர் மிக்க பண்பினால் தொழுது சென்றுமாலும் நான்முகனும் போற்ற மன்னினார் கோயில் வாயில்சீல மாதவத்தோர் முன்பு சிவிகை நின்று இழிந்து புக்கார்.
சொற்பிரிப்பு
ஆலவாய் அண்ணல் கோயில் அங்கண் முன் தோன்றக் கண்டுபாலறாவாயர் மிக்க பண்பினால் தொழுது சென்றுமாலும் நான்முகனும் போற்ற மன்னினார் கோயில் வாயில்சீல மாதவத்தோர் முன்பு சிவிகை நின்று இழிந்து புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

864

தென்னவன் தானும் எங்கள் செம்பியன் மகளார் தாமும்நன்னெறி அமைச்சனாரும் ஞான சம்பந்தர் செய்யபொன்னடிக் கமலம் போற்றி உடன் புகப் புனிதர் கோயில்தன்னை முன் வலம் கொண்டுள்ளால் சண்பையர் தலைவர் புக்கார்.
சொற்பிரிப்பு
தென்னவன் தானும் எங்கள் செம்பியன் மகளார் தாமும்நன்நெறி அமைச்சனாரும் ஞான சம்பந்தர் செய்யபொன் அடிக் கமலம் போற்றி உடன் புகப் புனிதர் கோயில்தன்னை முன் வலங்கொண்டு உள்ளால் சண்பையர் தலைவர் புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

865

கைகளும் தலை மீது ஏறக் கண்ணில் ஆனந்த வெள்ளம்மெய் எலாம் பொழிய வேத முதல்வரைப் பணிந்து போற்றிஐயனே அடியனேனை அஞ்சல் என்று அருள வல்லமெய்யனே என்று வீடல் ஆலவாய் விளம்பல் உற்றார்.
சொற்பிரிப்பு
கைகளும் தலை மீது ஏறக், கண்ணில் ஆனந்த வெள்ளம்மெய் எலாம் பொழிய, வேத முதல்வரைப் பணிந்து போற்றி,“ஐயனே! அடியனேனை அஞ்சல் என்று அருள வல்லமெய்யனே!” என்று “வீடல் ஆலவாய்” விளம்பல் உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

866

ஒன்று வேறு உணர்வும் இல்லேன் ஒழிவற நிறைந்த கோலம்மன்றில் நான் மறைகள் ஏத்த மானுடர் உய்ய வேண்டிநின்று நீ ஆடல் செய்கை நினைப்பதே நியமம் ஆகும்என்று பூம் புகலி மன்னர் இன் தமிழ்ப் பதிகம் பாட.
சொற்பிரிப்பு
“ஒன்றும் வேறு உணர்வும் இல்லேன்; ஒழிவு அற நிறைந்த கோலம்மன்றில் நான்மறைகள் ஏத்த மானுடர் உய்ய வேண்டிநின்று நீ ஆடல் செய்கை நினைப்பதே நியமம் ஆகும்”என்று பூம் புகலி மன்னர் இன்தமிழ்ப் பதிகம் பாட.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

867

தென்னவன் பணிந்து நின்று திரு ஆல வாயில் மேவும்மன்னனே அமணர் தங்கள் மாயையால் மயங்கி யாதும்உன்னை யான் அறிந்திலேனை உறு பிணி தீர்த்து ஆட் கொள்ளஇன் அருள் பிள்ளையாரைத் தந்தனை இறைவ என்றான்.
சொற்பிரிப்பு
தென்னவன் பணிந்து நின்று, “திருஆல வாயில் மேவும்மன்னனே! அமணர் தங்கள் மாய்கையால் மயங்கி யாதும்உன்னை யான் அறிந்திலேனை உறுபிணி தீர்த்து ஆள் கொள்ளஇன் அருள் பிள்ளையாரைத் தந்தனை இறைவ!” என்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

868

சீர் உடைப் பிள்ளையாரும் சிறப்பு உடை அடியாரோடும்காரினில் பொலிந்த கண்டத்து இறைவர் தாள் வணங்கிக் காதல்ஆரருள் பெற்றுப் போற்றி அங்கு நின்று அரிது நீங்கிஏர் இயல் மடத்தில் உள்ளால் இனிது எழுந்து அருளிப் புக்கார்.
சொற்பிரிப்பு
சீர்உடைப் பிள்ளையாரும் சிறப்புடை அடியாரோடும்காரினில் பொலிந்த கண்டத்து இறைவர் தாள் வணங்கிக் காதல்ஆர் அருள் பெற்றுப் போற்றி அங்கு நின்று அரிது நீங்கிஏர் இயல் மடத்தில் உள்ளால் இனிது எழுந்தருளிப் புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

869

நீடு சீர்த் தென்னர் கோனும் நேரியன் பாவையாரும்மாடு சென்று இறைஞ்சி நோக்கி மாளிகை தன்னில் போக்கிக்கூடிய மகிழ்ச்சி பொங்கக் கும்பிடும் விருப்பினாலேநாடி அங்கு இருந்து தங்கள் நாதரைப் பாடல் உற்றார்.
சொற்பிரிப்பு
நீடு சீர்த் தென்னன் கோனும் நேரியன் பாவையாரும்மாடு சென்று இறைஞ்சி நோக்கி மாளிகை தன்னில் போகக்கூடிய மகிழ்ச்சி பொங்கக் கும்பிடும் விருப்பினாலேநாடி அங்கு இருந்து தங்கள் நாதரைப் பாடல் உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

870

திருவியமகத்தின் உள்ளும் திரு நீல கண்டப் பாணர்க்குஅருளிய திறமும் போற்றி அவரோடும் அளவளாவித்தெருள் உடைத் தொண்டர் சூழத் திருத் தொண்டின் உண்மை நோக்கிஇருள் கெட மண்ணில் வந்தார் இனிது அமர்ந்து இருந்தார் அன்றே.
சொற்பிரிப்பு
திருஇயமகத்தின் உள்ளும் திருநீல கண்டப் பாணர்க்குஅருளிய திறமும் போற்றி அவரொடும் அளவளாவித்தெருள் உடைத் தொண்டர் சூழத் திருத்தொண்டின் உண்மை நோக்கிஇருள் கெட மண்ணில் வந்தார் இனிதமர்ந்து இருந்தார் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

871

பூழியன் மதுரை உள்ளார் புறத்து உளார் அமணர் சேரும்பாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆன எல்லாம்கீழ் உறப் பறித்துப் போக்கிக் கிளர் ஒளித் தூய்மை செய்தேவாழி அப் பதிகள் எல்லாம் மங்கலம் பொலியச் செய்தார்.
சொற்பிரிப்பு
பூழியன் மதுரை உள்ளார் புறத்துளார் அமணர் சேரும்பாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆன எல்லாம்கீழ் உறப் பறித்துப் போக்கிக், கிளர் ஒளித் தூய்மை செய்தேவாழி அப்பதிகள் எல்லாம் மங்கலம் பொலியச் செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

872

மீனவன் தேவி யாரும் குலச் சிறையாரும் மிக்கஞான சம்பந்தர் பாதம் நாள் தொறும் பணிந்து போற்றஆன சண்பையர் கோனாரும் ஆலவாய் அமர்ந்தார் பாதம்ஊன் அமர்ந்து உருக ஏத்தி உளம் களித்து உறையும் நாளில்.
சொற்பிரிப்பு
மீனவன் தேவியாரும் குலச்சிறையாரும் மிக்கஞான சம்பந்தர் பாதம் நாள்தொறும் பணிந்து போற்றஆன சண்பையர் கோனாரும் ஆலவாய் அமர்ந்தார் பாதம்ஊன் அமர்ந்து உருக ஏத்தி உளம் களித்து உறையும் நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

873

செய் தவத்தால் சிவ பாத இருதயர் தாம் பெற்றெடுத்தவைதிக சூளா மணியை மா தவத்தோர் பெரு வாழ்வைமை திகழும் திரு மிடற்றார் அருள் பெற்ற வான் பொருளைஎய்திய பூம் புகலியிலே இருந்த நாள் மிக நினைந்தார்.
சொற்பிரிப்பு
செய்தவத்தால் சிவபாத இருதயர் தாம் பெற்று எடுத்தவைதிக சூளாமணியை, மாதவத்தோர் பெருவாழ்வை,மைதிகழும் திருமிடற்றார் அருள் பெற்ற வான் பொருளை,எய்திய பூம்புகலியிலே இருந்த நாள் மிக நினைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

874

ஆன புகழ்த் திருநாவுக்கரசர் பால் அவம் செய்தமானம் இலா அமணர் உடன் வாது செய்து வெல்வதற்கும்மீனவன் தன் நாடு உய்ய வெண் நீறு பெருக்குதற்கும்போனவர் பால் புகுந்தபடி அறிவன் எனப் புறப்படுவார்.
சொற்பிரிப்பு
“ஆன புகழ் திருநாவுக்கரசர்பால் அவம் செய்தமானம் இலா அமணர் உடன் வாது செய்து வெல்வதற்கும்,மீனவன் நன் நாடு உய்ய வெண்நீறு பெருக்குதற்கும்போனவர்பால் புகுந்தபடி அறிவன்” எனப் புறப்படுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

875

துடி இடையாள் தன்னோடும் தோணியில் வீற்றிருந்த பிரான்அடி வணங்கி அலர் சண்பை அதனின்றும் வழிக் கொண்டுபடியின் மிசை மிக்கு உளவாம் பரன் கோயில் பணிந்து ஏத்திவடி நெடு வேல் மீனவன் தன் வள நாடு வந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
துடி இடையாள் தன்னோடும் தோணியில் வீற்றிருந்த பிரான்அடி வணங்கி அலர் சண்பை அதன் நின்றும் வழிக்கொண்டுபடியின் மிசை மிக்கு உளவாம் பரன் கோயில் பணிந்து ஏத்திவடி நெடுவேல் மீனவன் தன் வளநாடு வந்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

876

மா மறையோர் வளம் பதிகளிடைத் தங்கி வழிச் செல்வார்தே மருவு நறும் பைந்தார்த் தென்னவன் தன் திரு மதுரைதாம் அணைந்து திரு ஆலவாய் அமர்ந்த தனி நாதன்பூ மருவும் சேவடிக் கீழ் புக்கு ஆர்வத்தோடும் பணிந்தார்.
சொற்பிரிப்பு
மாமறையோர் வளம்பதிகள் இடைத்தங்கி வழிச்செல்வார்தேன் மருவு நறும் பைந்தார்த் தென்னவன் தன் திருமதுரைதாம் அணைந்து திருஆலவாய் அமர்ந்த தனி நாதன்பூமருவும் சேவடிக் கீழ்ப் புக்கு ஆர்வத்தொடும் பணிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

877

அங்கணரைப் பணிந்து போந்து அருகு அணைந்தார் தமை வினவஇங்கு எம்மைக் கண் விடுத்த காழியார் இள ஏறுதங்கும் இடம் திரு நீற்றுத் தொண்டர் குழாம் சாரும் இடம்செங்கமலத் திருமடம் மற்று இது என்றே தெரிந்து உரைத்தார்.
சொற்பிரிப்பு
அங்கணரைப் பணிந்து போந்து அருகு அணைந்தார் தமை வினவ,“இங்கு எம்மைக் கண் விடுத்த காழியார் இள ஏறுதங்கும் இடம், திருநீற்றுத் தொண்டர்குழாம் சாரும் இடம்,செங்கமலத் திருமடம் ,மற்று இது” என்றே தெரிந்து உரைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

878

செப்புதலும் அது கேட்டுத் திரு மடத்தைச் சென்று எய்தஅப்பர் எழுந்து அருளினார் எனக் கண்டோர் அடி வணங்கிஒப்பில் புகழ்ப் பிள்ளையார் தமக்கு ஓகை உரை செய்யஎப்பொழுது வந்து அருளிற்று என்று எதிரே எழுந்தருள.
சொற்பிரிப்பு
செப்புதலும் அதுகேட்டுத் திருமடத்தைச் சென்று எய்த“அப்பர் எழுந்தருளினார்” எனக், கண்டோர், அடி வணங்கி,ஒப்பில் புகழ்ப் பிள்ளையார் தமக்கு ஓகை உரை செய்ய“எப்பொழுது வந்தருளிற்று?”, என்று எதிரே எழுந்தருள.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

879

சிவ பாத இருதயர் தாம் முன் தொழுது சென்று அணையத்தவம் ஆன நெறி அணையும் தாதையார் எதிர் தொழுவார்அவர் சார்வு கண்டு அருளித் திருத் தோணி அமர்ந்து அருளிப்பவ பாசம் அறுத்தவர் தம் பாதங்கள் நினைவுற்றார்.
சொற்பிரிப்பு
சிவபாத இருதயர் தாம் முன் தொழுது சென்று அணையத்தவம் ஆன நெறி அணையும் தாதையார் எதிர்தொழுவார்அவர் சார்வு கண்டருளித் திருத்தோணி அமர்ந்தருளிப்பவ பாசம் அறுத்தவர் தம் பாதங்கள் நினைவு உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

880

இருந்தவத்தோர் அவர் முன்னே இணை மலர்க்கை குவித்தருளிஅரும் தவத்தீர் எனை அறியாப் பருவத்தே எடுத்து ஆண்டபெருந் தகை எம் பெருமாட்டி உடன் இருந்ததே என்றுபொருந்து புகழ்ப் புகலியின் மேல் திருப் பதிகம் போற்றி இசைத்தார்.
சொற்பிரிப்பு
இருந்தவத்தோர் அவர் முன்னே இணைமலர்க்கை குவித்தருளி“அருந்தவத்தீர்! எனை அறியாப் பருவத்தே எடுத்து ஆண்டபெருந்தகை எம் பெருமாட்டி உடன் இருந்ததே?” என்றுபொருந்து புகழ்ப் புகலியின் மேல் திருப்பதிகம் போற்றிசைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

881

மண்ணின் நல்ல என்று எடுத்து மனத்து எழுந்த பெரு மகிழ்ச்சிஉள் நிறைந்த காதலினால் கண் அருவி பாய்ந்து ஒழுகஅண்ணலார் தமைவினவித் திருப்பதிகம் அருள் செய்தார்தண் நறும்பூஞ் செங்கமலத்தார் அணிந்த தமிழ் விரகர்.
சொற்பிரிப்பு
“மண்ணில் நல்ல” என்று எடுத்து மனத்து எழுந்த பெருமகிழ்ச்சிஉண்ணிறைந்த காதலினால் கண் அருவி பாய்ந்து ஒழுகஅண்ணலார் தமை வினவித் திருப்பதிகம் அருள்செய்தார்தண்நறும் பூஞ் செங்கமலத் தார் அணிந்த தமிழ் விரகர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

882

திருப் பதிகம் திருக்கடைக் காப்புச் சாத்திச் சிறப்பின் மிகுவிருப்பினால் அவர் தமக்கு விருந்து அளித்து மேவும் நாள்அருப்புறு மெய்க் காதல் புரி அடியவர்கள் தம்மோடும்பொருப்புறு கைச் சிலையார் சேர் பதி பிறவும் தொழப் போவார்.
சொற்பிரிப்பு
திருப்பதிகம் திருக்கடைக்காப்புச் சாத்திச் சிறப்பின் மிகுவிருப்பினால் அவர் தமக்கு விருந்து அளித்து மேவும் நாள்அருப்புறு மெய்க் காதல் புரி அடியவர்கள் தம்மோடும்பொருப்புறு கைச்சிலையார் சேர் பதி பிறவும் தொழப்போவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

883

ஆலின் கீழ் நால்வர்க்கு அன்று அறம் உரைத்த அங்கணனைநூலின் கண் பொருள்பாடி நூல் அறிவார்க்கு ஈந்தானைக்காலம் பெற்று இனிது இறைஞ்சிக் கை தொழுது புறம் போந்தார்சீலம் கொள் தென்னவனும் தேவியரும் உடன் போத.
சொற்பிரிப்பு
ஆலின் கீழ் நால்வர்க்கு அன்று அறம் உரைத்த அங்கணனைநூலின் கண் பொருள்பாடி நூல் அறிவார்க்கு ஈந்தானைக்காலம் பெற்று இனிது இறைஞ்சிக் கைதொழுது புறம்போந்தார்சீலம் கொள் தென்னவனும் தேவியரும் உடன் போத.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

884

தேன் நிலவு பொழில் மதுரைப் புறத்துப் போந்த தென்னவனார் தேவியார் அமைச்சர்சிந்தைஊன் நெகிழும் படி அழிந்து அங்கு ஒழுகு கண்ணீர் பாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழக் கண்டேயான் உம்மைப் பிரியாத வண்ணம் இந் நாட்டு இறைவர் பதி எனைப்பலவும் பணீவீர் என்றுஞானம் உணர்வார் அருள அவரும் போத நம்பர் திருப்பரங்குன்றை நண்ணினாரே.
சொற்பிரிப்பு
தேன் நிலவு பொழில் மதுரைப் புறத்துப் போந்த தென்னவனார், தேவியார், அமைச்சர் சிந்தைஊன் நெகிழும் படி அழிந்து அங்கு ஒழுகு கண்ணீர் பாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழக் கண்டே“யான் உம்மைப் பிரியாத வண்ணம் இந்நாட்டு இறைவர் பதி எனைப் பலவும் பணிவீர்” என்றுஞானம் உணர்வார் அருள, அவரும் போத, நம்பர் திருப்பரங்குன்றை நண்ணினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

885

ஆறு அணிந்தார் தமை வணங்கி அங்குப் போற்றி அணி ஆப்பனூரை அணைந்து பணிந்துபாடிநீறு அணிந்த செல்வர் பதி பிறவும் சேர்ந்து நிலவு திருப் பதிகங்கள் நிகழப் பாடிச்சேறு அணிந்த வயற் பழனக் கழனி சூழ்ந்த சிரபுரத்து வந்தருளும் செல்வர் செங்கண்ஏறு அணிந்த வெல் கொடியார் திருப்புத்தூரை எய்தி இறைஞ்சிச் சில நாள் இருந்தார் அன்றே.
சொற்பிரிப்பு
ஆறு அணிந்தார் தமை வணங்கி, அங்குப் போற்றி, அணி ஆப்பனூர் அணைந்து, பணிந்து பாடிநீறு அணிந்த செல்வர் பதி பிறவும் சேர்ந்து நிலவு திருப்பதிகங்கள் நிகழப் பாடிச்சேறு அணிந்த வயல் பழனக் கழனி சூழ்ந்த சிரபுரத்து வந்தருளும் செல்வர் செங்கண்ஏறு அணிந்த வெல்கொடியார் திருப்புத்தூரை எய்தி இறைஞ்சிச் சிலநாள் இருந்தார் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

886

பற்றார் தம் புரங்கள் மலைச் சிலையால் செற்ற பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்துபுற்று ஆரும் பணி பூண்ட புனிதனார் தம் பூவணத்தைப் புக்கு இறைஞ்சிப் புகழ்ந்து பாடிக்கற்றார்கள் தொழுது ஏத்தும் கானப் பேரும் கைதொழுது தமிழ் பாடிச் சுழியல் போற்றிக்குற்றாலம் குறும்பலாக் கும்பிட்டு ஏத்திக் கூற்று உகைத்தார் நெல்வேலி குறுகினாரே.
சொற்பிரிப்பு
பற்றார் தம் புரங்கள் மலைச் சிலையால் செற்ற பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்துபுற்றாரும் பணி பூண்ட புனிதனார் தம் பூவணத்தைப் புக்கு இறைஞ்சிப் புகழ்ந்து பாடிக்கற்றார்கள் தொழுது ஏத்தும் கானப்பேரும் கை தொழுது, தமிழ் பாடிச், சுழியல் போற்றிக்குற்றாலம் குறும்பலாக் கும்பிட்டு ஏத்திக் கூற்று உதைத்தார் நெல்வேலி குறுகினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

887

புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றிப் புரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்றுநண்ணி இனிது அமர்ந்து அங்கு நயந்து பாடி நல்தொண்டருடன் நாளும் போற்றிச் செல்வார்விண்ணவரைச் செற்று உகந்தான் இலங்கை செற்ற மிக்க பெரும் பாதகத்தை நீக்க வேண்டித்திண்ணிய பொற் சிலைத் தடக்கை இராமன் செய்த திரு இராமேச் சுரத்தைச் சென்று சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றிப் புரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்றுநண்ணி இனிது அமர்ந்து அங்கு நயந்து பாடி, நற்றொண்டருடன் நாளும் போற்றிச் செல்வார்விண்ணவரைச் செற்று உகந்தான் இலங்கை செற்ற மிக்க பெரும் பாதகத்தை நீக்க வேண்டித்திண்ணிய பொன் சிலைத் தடக்கை இராமன் செய்த திரு இராமேச்சுரத்தைச் சென்று சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

888

செங்கண் மால் வழிபட்ட கோயில் நண்ணித் திருமுன்பு தாழ்ந்து எழுந்து தென்ன னோடுமங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை மந்திரியாரும் சூழ் மணி நீள் வாயில்பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்குப் புடைவலம் கொண்டு உள் அணைவார் போற்றி செய்துபங்கயச் செங்கை குவித்துப் பணிந்து நின்று பாடினார் மன்னவனும் பரவி ஏத்த.
சொற்பிரிப்பு
செங்கண் மால் வழிபட்ட கோயில் நண்ணித் திருமுன்பு தாழ்ந்து எழுந்து, தென்னனோடும்மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை மந்திரியாரும் சூழ மணிநீள் வாயில்பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்குப் புடைவலம் கொண்டு உள் அணைவார் போற்றி செய்துபங்கயச் செங்கை குவித்துப் பணிந்து நின்று பாடினார் மன்னவனும் பரவி ஏத்த.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

889

சேதுவின்கட் செங்கண் மால் பூசை செய்த சிவபெருமான் தனைப்பாடிப் பணிந்து போந்துகாதலுடன் அந் நகரில் இனிது மேவிக் கண் நுதலான் திருத் தொண்டனார்க் கெல்லாம்கோதில் புகழ்ப் பாண்டிமா தேவி யார் மெய்க் குலச்சிறையார் குறைவு அறுத்துப் போற்றிச் செல்லநாதர் தமை நாள் தோறும் வணங்கி ஏத்தி நளிர் வேலைக் கரையில் நயந்து இருந்தார் அன்றே.
சொற்பிரிப்பு
சேதுவின் கண் செங்கண் மால் பூசை செய்த சிவபெருமான் தனைப் பாடிப் பணிந்து போந்து,காதலுடன் அந்நகரில் இனிது மேவிக், கண்நுதலான் திருத்தொண்டர் ஆனார்க்கு எல்லாம்கோதில் புகழ்ப் பாண்டிமா தேவியார், மெய்க் குலச்சிறையார் குறைவு அறுத்துப் போற்றிச் செல்லநாதர் தமை நாள்தோறும் வணங்கி ஏத்தி நளிர் வேலைக் கரையில் நயந்து இருந்தார் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

890

அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி ஆழிபுடை சூழ்ந்து ஒலிக்கும் ஈழம் தன்னில்மன்னு திருக்கோண மலை மகிழ்ந்த செங்கண் மழ விடையார் தமைப் போற்றி வணங்கிப்பாடிச்சென்னி மதி புனை மாட மாதோட்டத்தில் திருக் கேதீச் சரத்து அண்ணல் செய்ய பாதம்உன்னி மிகப் பணிந்து ஏத்தி அன்பரோடும் உலவாத கிழி பெற்றார் உவகை உற்றார்.
சொற்பிரிப்பு
அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி ஆழிபுடை சூழ்ந்து ஒலிக்கும் ஈழம் தன்னில்மன்னு திருக் கோணமலை மகிழ்ந்த செங்கண் மழவிடையார் தமைப் போற்றி வணங்கிப் பாடிச்சென்னி மதி புனை மாட மாதோட்டத்தில் திருக்கேதீச்சரத்து அண்ணல் செய்ய பாதம்உன்னி மிகப் பணிந்து ஏத்தி அன்பரோடும் உலவாத கிழி பெற்றார் உவகை உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

891

அப் பதியைத் தொழுது வடதிசை மேல் செல்வார் அங்கை அனல் தரித்த பிரான் அமரும் கோயில்புக்கு இறைஞ்சிப் பல பதியும் தொழுது போற்றிப் புணரி பொரு தலை கரைவாய் ஒழியப் போந்தேசெப்பரிய புகழ்த் திருவாடானை சேர்ந்து செந்தமிழ் மாலைகள் சாத்திச் சிவனார் மன்னும்ஒப்பரிய புனவாயில் போற்றி செய்து வணங்கினார் உலகு உய்ய ஞானம் உண்டார்.
சொற்பிரிப்பு
அப்பதியைத் தொழுது வட திசைமேல் செல்வார் அங்கை அனல் தரித்த பிரான் அமரும் கோயில்புக்கு இறைஞ்சிப் பலபதியும் தொழுது போற்றிப் புணரி பொருது அலைகரைவாய் ஒழியப் போந்தேசெப்பு அரிய புகழ்த்திரு ஆடானை சேர்ந்து செந்தமிழ் மாலைகள் சாத்திச், சிவனார் மன்னும்ஒப்பு அரிய புனவாயில் போற்றி செய்து வணங்கினார் உலகு உய்ய ஞானம் உண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

892

பதி நிலவு பாண்டி நாடு அதனில் முக்கண் பரமனார் மகிழ்விடங்கள் பலவும் போற்றிவிதி நிலவு வேத நூல் நெறியே ஆக்கி வெண்ணீற்றின் சார்வினால் மிக்கு உயர்ந்தகதி அருளிக் காழிநகர் வாழ வந்தார் கண் நுதலான் திருத்தொண்டர் பலரும் சூழமதி நிலவு குலவேந்தன் போற்றிச் செல்ல மந்திரியார் பதி மண மேற்குடியில் வந்தார்.
சொற்பிரிப்பு
பதி நிலவு பாண்டிநாடு அதனில் முக்கண் பரமனார் மகிழ்விடங்கள் பலவும் போற்றி,விதி நிலவு வேதநூல் நெறியே ஆக்கி வெண்நீற்றின் சார்வினால் மிக்கு உயர்ந்தகதி அருளிக், காழிநகர் வாழ வந்தார் கண்நுதலான் திருத்தொண்டர் பலரும் சூழமதிநிலவு குலவேந்தன் போற்றிச் செல்ல மந்திரியார் பதி மணமேற் குடியில் வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

893

அந் நகரில் இனிது அமர்வார் அருகு சூழ்ந்த பதிகளில் நீடு அங்கணர் தம் கோயில் தாழ்ந்துமன்னு திருத் தொண்டருடன் மீண்டு சேர்ந்து மன்னவனும் மங்கையருக்கு அரசியாரும்கொன்னவில் வேல் குலச்சிறையார் தாமும் கூடிக் குரைகழல்கள் பணிந்து குறை கொண்டு போற்றச்சென்னி வளர் மதி அணிந்தார் பாதம் போற்றிச் சிரபுரத்துச் செல்வர் இனிது இருந்த நாளில்.
சொற்பிரிப்பு
அந்நகரில் இனிது அமர்வார் அருகு சூழ்ந்த பதிகளில் நீடு அங்கணர் தம் கோயில் தாழ்ந்துமன்னு திருத் தொண்டருடன் மீண்டு சேர்ந்து மன்னவனும் மங்கையருக்கு அரசியாரும்கொன்நவில் வேல் குலச்சிறையார் தாமும் கூடிக் குரைகழல்கள் பணிந்து குறை கொண்டு போற்றச்சென்னி வளர்மதி அணிந்தார் பாதம் போற்றிச் சிரபுரத்துச் செல்வர் இனிது இருந்த நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

894

பொங்கு புனல் காவிரி நாடு அதனின் மீண்டு போதுதற்குத் திருவுள்ளம் ஆகப் பெற்றுமங்கையருக்கு அரசியார் தாமும் தென்னர் மன்னவனும் மந்திரியார் தாமும் கூடஅங்கு அவர் தம் திருப்பாதம் பிரியல் ஆற்றாது உடன் போக ஒருப்படும் அவ்வளவு நோக்கிஇங்கு நான் மொழிந்ததனுக்கு இசைந்தீர் ஆகில் ஈசர் சிவநெறி போற்றி இருப்பீர் என்று.
சொற்பிரிப்பு
பொங்கு புனல் காவிரி நாடு அதனின் மீண்டு போதுதற்குத் திருஉள்ளம் ஆகப் போற்றும்மங்கையருக்கு அரசியார் தாமும் தென்னர் மன்னவனும் மந்திரியார் தாமும் கூடஅங்கு அவர் தம் திருப்பாதம் பிரியல் ஆற்றாது உடன் போக ஒருப்படும் அவ் அளவு நோக்கி“இங்கு நான் மொழிந்ததனுக்கு இசைந்தீர் ஆகில் ஈசர் சிவ நெறி போற்றி இருப்பீர்” என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

895

சால மிகத் தளர் வாரைத் தளரா வண்ணம் தகுவன மற்று அவர்க்கு அருளிச் செய்த பின்புமேலவர் தம் பணி மறுக்க அவரும் அஞ்சி மீள்வதனுக்கு இசைந்து திருவடியில் வீழ்ந்துஞாலம் உய்ய வந்து அருளும் பிள்ளையாரைப் பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார்ஆல விடம் உண்டவரை அடிகள் போற்ற அந் நாட்டை அகன்று மீண்டு அணையச் செல்வார்.
சொற்பிரிப்பு
சால மிகத் தளர்வாரைத் தளரா வண்ணம் தகுவன மற்று அவர்க்கு அருளிச் செய்த பின்புமேலவர் தம் பணி மறுக்க அவரும் அஞ்சி மீள்வதனுக்கு இசைந்து, திருவடியில் வீழ்ந்துஞாலம் உய்ய வந்து அருளும் பிள்ளையாரைப் பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார்ஆலவிடம் உண்டவரை அடிகள் போற்ற அந்நாட்டை அகன்று மீண்டு அணையச் செல்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

896

பொன்னி வளம் தரு நாடு புகுந்து மிக்க பொருவில் சீர்த் திருத் தொண்டர் குழாத்தினோடும்பன்னகப் பூண் அணிந்தவர் தம் கோயில் தோறும் பத்தருடன் பதி உள்ளோர் போற்றச் சென்றுகன்னி மதில் திருக்களரும் போற்றிக் கண்டம் கறை அணிந்தார் பாதாளீச்சுரமும் பாடிமுன் அணைந்த பதி பிறவும் பணிந்து போற்றி முள்ளிவாய்க் கரை அணைந்தார் முந்நூல் மார்பர்.
சொற்பிரிப்பு
பொன்னிவளம் தரு நாடு புகுந்து மிக்க பொருவில் சீர்த் திருத்தொண்டர் குழாத்தினோடும்பன்னகப் பூண் அணிந்தவர் தம் கோயில் தோறும் பத்தர் உடன் பதி உள்ளோர் போற்றச் சென்றுகன்னி மதில் திருக்களரும் போற்றிக் கண்டம் கறை அணிந்தார் பாதாளீச்சுரமும் பாடிமுன் அணைந்த பதி பிறவும் பணிந்து போற்றி முள்ளி வாய்க் கரை அணந்தார் முந்நூல் மார்பர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

897

மலைவளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி மலர்ப் பிறங்கல் வண்டு இரைப்பச் சுமந்து பொங்கிஅலை பெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆறு பெருகுதலால் அத்துறையில் அணையும் ஓடம்நிலை புரியும் ஓடக் கோல் நிலை இலாமை நீர் வாழ்நர் கரையின் கண் நிறுத்திப் போகக்கலை பயிலும் கவுணியர் கோன் அதனைக் கண்டு அக் கரையின் கண் எழுந்தருளி நின்ற காலை.
சொற்பிரிப்பு
மலைவளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி மலர்ப்பிறங்கல் வண்டு இரைப்பச் சுமந்து பொங்கிஅலைபெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆறு பெருகுதலால் அத்துறையில் அணையும் ஓடம்நிலைபுரியும் ஓடக்கோல் நிலையிலாமை நீர் வாழ்நர் கரையின்கண் நிறுத்திப் போகக்கலை பயிலும் கவுணியர்கோன் அதனைக் கண்டு அக் கரையின்கண் எழுந்தருளி நின்ற காலை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

898

தேவர் பிரான் அமர்ந்த திருக்கொள்ளம் பூதூர் எதிர் தோன்றத் திரு உள்ளம் பணியச் சென்றுமேவுதலால் ஓடங்கள் விடுவார் இன்றி ஒழிந்திடவும் மிக்கதோர் விரைவால் சண்பைக்காவலனார் ஓடத்தின் கட்டு அவிழ்த்துக் கண் நுதலான் திருத்தொண்டர் தம்மை ஏற்றிநாவலமே கோலாக அதன் மேல் நின்று நம்பர் தமைக் கொட்டம் என நவின்று பாட.
சொற்பிரிப்பு
தேவர்பிரான் அமர்ந்த திருக்கொள்ளம் பூதூர் எதிர்தோன்றத் திருஉள்ளம் பணியச் சென்றுமேவுதலால் ஓடங்கள் விடுவார் இன்றி ஒழிந்திடவும் மிக்கது ஓர் விரைவால் சண்பைக்காவலனார் ஓடத்தின் கட்டு அவிழ்த்துக் கண்நுதலான் திருத்தொண்டர் தம்மை ஏற்றிநாவலமே கோலாக அதன் மேல் நின்று நம்பர் தமைக் “கொட்டம்” என நவின்று பாட.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

899

உம்பர் உய்ய நஞ்சு உண்டார் அருளால் ஓடம் செலச் செல்ல உந்து தலால் ஊடு சென்றுசெம் பொன் நேர் சடையார் தம் கொள்ளம் பூதூர் தனைச் சேர அக்கரையில் சேர்ந்த பின்புநம்பர் அவர் தமை வணங்க ஞானம் உண்ட பிள்ளையார் நல் தொண்டருடன் இழிந்துவம்பலரும் நறும் கொன்றை நயந்தார் கோயில் வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார்.
சொற்பிரிப்பு
உம்பர் உய்ய நஞ்சு உண்டார் அருளால் ஓடம் “செலச் செல்ல உந்து”தலால் ஊடு சென்றுசெம்பொன் நேர் சடையார் தம் கொள்ளம் பூதூர் தனைச் சேர அக்கரையில் சேர்ந்த பின்புநம்பர் அவர் தமை வணங்க ஞானம் உண்ட பிள்ளையார் நல்தொண்டருடன் இழிந்துவம்பு அலரும் நறும்கொன்றை நயந்தார் கோயில் வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

900

நீண் நிலைக் கோபுரம் அதனை இறைஞ்சி புக்கு நிகர் இலாத் தொண்டருடன் நெருங்கச் சென்றுவாணிலவு கோயிலினை வலம் கொண்டு எய்தி மதிச் சடையார் திரு முன்பு வணங்கி நின்றுதாணுவே ஆற்றின் கண் ஓடம் உய்க்கும் தன்மையால் அருள் தந்த தலைவா நாகப்பூணினாய் களிற்றுரிவை போர்த்த முக்கண் புனிதனே எனப் பணிந்து போற்றிச் செய்தார்.
சொற்பிரிப்பு
நீள்நி லைக் கோபுரம் அதனை இறைஞ்சிப் புக்கு நிகர் இலாத் தொண்டருடன் நெருங்கச் சென்றுவாள் நிலவு கோயிலினை வலங்கொண்டு எய்தி மதிச்சடையார் திருமுன்பு வணங்கி நின்று“தாணுவே! ஆற்றின்கண் ஓடம் உய்க்கும் தன்மையால் அருள் தந்த தலைவா! நாகப்பூணினாய்! களிற்று உரிவை போர்த்த முக்கண் புனிதனே!” எனப் பணிந்து போற்றி செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

901

போற்றி இசைத்துப் புறம் போந்து அங்கு உறையும் நாளில் பூழியன் முன் புன்சமயத்து அமணர் தம்மோடுஏற்ற பெரு வாதின் கண் எரியின் வேவாப் பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டிஆற்றவும் அங்கு அருள் பெற்றுப் போந்து முன்னம் அணைந்த பதிகளும் இறைஞ்சி அன்பர் சூழநாற்றிசையும் பரவும் திரு நள்ளாறு எய்தி நாடு உடை நாயகர் கோயில் நண்ணினாரே.
சொற்பிரிப்பு
போற்றிசைத்துப் புறம்போந்து அங்கு உறையும் நாளில் பூழியன் முன் புன்சமயத்து அமணர் தம்மோடுஏற்ற பெருவாதின்கண் எரியின் வேவாப் பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டிஆற்றவும் அங்கு அருள்பெற்றுப் போந்து முன்னம் அணைந்த பதிகளும் இறைஞ்சி அன்பர் சூழநால்திசையும் பரவு திருநள்ளாறு எய்தி நாடுஉடை நாயகர் கோயில் நண்ணினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

902

நீடு திருத் தொண்டர் புடை சூழ அங்கண் நித்தில யானத்திடை நின்று இழிந்து சென்றுபீடு உடைய திருவாயில் பணிந்து புக்குப் பிறை அணிந்த சென்னியார் மன்னும் கோயில்மாடு வலம் கொண்டு உள்ளால் மகிழ்ந்து புக்கு மலர்க் கரங்கள் குவித்து இறைஞ்சி வள்ளலாரைப்பாடக மெல் அடி எடுத்துப் பாடி நின்று பரவினார் கண் அருவி பரந்து பாய.
சொற்பிரிப்பு
நீடு திருத்தொண்டர் புடை சூழ அங்கண் நித்தில யானத்து இடைநின்று இழிந்து சென்றுபீடு உடைய திருவாயில் பணிந்து புக்குப் பிறை அணிந்த சென்னியார் மன்னும் கோயில்மாடு வலங் கொண்டு உள்ளால் மகிழ்ந்து புக்கு மலர்க்கரங்கள் குவித்து இறைஞ்சி வள்ளலாரைப்“பாடக மெல் அடி” எடுத்துப் பாடி நின்று பரவினார் கண் அருவி பரந்து பாய.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

903

தென்னவர் கோன் முன் அமணர் செய்த வாதில் தீயின் கண் இடும் ஏடு பச்சையாக்கிஎன் உள்ளத் துணையாகி ஆலவாயில் அமர்ந்து இருந்தவாறு என் கொல் எந்தாய் என்றுபன்னு தமிழ்த் தொடை சாத்திப் பரவிப்போந்து பண்பினிய தொண்டருடன் அங்குவைகிமன்னுப்புகழ்ப் பதி பிறவும் வணங்கச் சண்பை வள்ளலார் நள்ளாறு வணங்கிச் செல்வார்.
சொற்பிரிப்பு
தென்னவர்கோன் முன் அமணர் செய்த வாதில் தீயின் கண் இடும் ஏடு பச்சை ஆக்கிஎன் உள்ளத் துணை ஆகி ஆல வாயில் அமர்ந்து இருந்தவாறு என்கொல் எந்தாய்! என்றுபன்னு தமிழ்த் தொடை சாத்திப் பரவிப் போந்து பண்பு இனிய தொண்டருடன் அங்கு வைகிமன்னு புகழ்ப் பதி பிறவும் வணங்கச், சண்பை வள்ளலார், நள்ளாறு வணங்கிச் செல்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

904

சீர் நிலவு திருத்தெளிச் சேரியினைச் சேர்ந்து சிவபெருமான் தனைப் பரவிச் செல்லும் போதுசார்வு அறியாச் சாக்கியர்தம் போதி மங்கை சார்தலும் மற்று அது அறிந்த சைவர் எல்லாம்ஆர் கலியின் கிளர்ச்சி எனச் சங்கு தாரை அளவிறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்துப்பார் குலவு தனிக் காளம் சின்னம் எல்லாம் பரசமய கோளரி வந்தான் என்று ஊத.
சொற்பிரிப்பு
சீர்நிலவு திருத்தெளிச்சேரியினைச் சேர்ந்து சிவபெருமான் தனைப் பரவிச் செல்லும் போதுசார்வு அறியாச் சாக்கியர் தம் போதி மங்கை சார்தலும் மற்று அது அறிந்த சைவர் எல்லாம்ஆர்கலியின் கிளர்ச்சி எனச் சங்கு தாரை அளவு இறந்த பல்இயங்கள் முழக்கி ஆர்த்துப்பார் குலவு தனிக்காளம் சின்னம் எல்லாம் “பரசமய கோள் அரி வந்தான்” என்று ஊத.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

905

புல் அறிவில் சாக்கியர்கள் அறிந்தார் கூடிப் புகலியர் தம் புரவலனார் புகுந்து தங்கள்எல்லையினில் எழுந்து அருளும் பொழுது தொண்டர் எடுத்த ஆர்ப்பு ஒலியாலும் எதிர் முன் சென்றுமல்கி எழும் திருச்சின்ன ஒலிகளாலும் மனம் கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள்கல்வியினில் மேம்பட்ட புத்த நந்தி முதலான தேரர்க்கும் கனன்று சொன்னார்.
சொற்பிரிப்பு
புல் அறிவில் சாக்கியர்கள் அறிந்தார் கூடிப் புகலியர் தம் புரவலனார் புகுந்து தங்கள்எல்லையினில் எழுந்தருளும் பொழுது தொண்டர் எடுத்த ஆர்ப்பு ஒலியாலும் எதிர் முன் சென்றுமல்கி எழும் திருச்சின்ன ஒலிகளாலும் மனம் கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள்கல்வியினில் மேம்பட்ட புத்த நந்தி முதலான தேரர்க்கும் கனன்று சொன்னார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

906

மற்றவர்கள் வெவ்வுரையும் பிள்ளையார் முன் வருசின்னப் பெருகு ஒலியும் மன்னும் தொண்டர்பொற்பு உடைய ஆர்ப்பு ஒலியும் செவியின் ஊடு புடைத்த நாராசம் எனப் புக்க போதுசெற்றமிகு உள்ளத்துப் புத்த நந்தி செயிர்த்து எழுந்து தேரர் குழாம் சூழச் சென்றுவெற்றிபுனை சின்னங்கள் வாதில் எமை வென்றன்றோ பிடிப்பது என வெகுண்டு சொன்னான்.
சொற்பிரிப்பு
மற்றவர்கள் வெவ்உரையும், பிள்ளையார் முன் வரு சின்னப் பெருகு ஒலியும், மன்னும் தொண்டர்பொற்பு உடைய ஆர்ப்பு ஒலியும் செவியின் ஊடு புடைத்த நாராசம் எனப் புக்க போதுசெற்றமிகும் உள்ளத்துப் புத்த நந்தி செயிர்த்து எழுந்து தேரர் குழாம் சூழச் சென்று“வெற்றி புனை சின்னங்கள் வாதில் எம்மை வென்று அன்றோ பிடிப்பது” என வெகுண்டு சொன்னான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

907

புத்தர் இனம் புடை சூழப் புத்த நந்தி பொருவில் ஞானப் புனிதர் திருமுன்பு ஊதும்மெய்த்த விறல் சின்னங்கள் விலக்கும் காலை வெகுண்டு எழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கிஇத்தகைய செயற்கு இவரைத் தடிதல் செய்யாது இது பொறுக்கில் தங்கள் நிலை ஏற்பர் என்றுமுத்து நிரைச் சிவிகையின் மேல் மணியை வந்து முறை பணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார்.
சொற்பிரிப்பு
புத்தர் இனம் புடை சூழப் புத்த நந்தி பொருவில் ஞானப் புனிதர் திருமுன்பு ஊதும்மெய்த்த விறல் சின்னங்கள் விலக்கும் காலை வெகுண்டு எழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி“இத்தகைய செயற்கு இவரைத் தடிதல் செய்யாது இது பொறுக்கில் தங்கள் நிலை ஏற்பர்” என்றுமுத்து நிரைச் சிவிகையின் மேல் மணியை வந்து முறை பணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

908

வரும் இடத்தில் அழகு இதாம் நமக்கு வாதில் மற்று இவர் தம் பொருள் நிலைமை மறாத வண்ணம்பொரும் இடத்தில் அறிகின்றோம் புத்த நந்தி பொய்ம் மேற் கோள் எனப் புகலி வேந்தர் கூறஅருமறை சொல் திருப்பதிகம் எழுதும் அன்பர் ஆளுடைய பிள்ளையார் திருவாக்காலேஉரும் இடித்து விழப் புத்தன் உத்த மாங்கம் உருண்டு வீழ்க எனப் பொறா உரை முன் விட்டார்.
சொற்பிரிப்பு
வரும் இடத்தில் அழகிதாம் நமக்கு, வாதில் மற்று இவர் தம் பொருள் நிலைமை மறாத வண்ணம்பொரும் இடத்தில் அறிகின்றோம் புத்த நந்தி பொய்ம் மேற்கொள் எனப்புகலி வேந்தர் கூறஅருமறை சொல் திருப்பதிகம் எழுதும் அன்பர் ஆளுடைய பிள்ளையார் திருவாக்காலேஉரும் இடித்து விழப் புத்தன் உத்தமாங்கம் உருண்டு வீழ்க” எனப் பொறா உரை முன் விட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

909

ஏறு உயர்த்தார் சைவ நெறி ஆணை உய்க்க எதிர் விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும்மாறில் வலி மந்திரமாம் அசனி போல வாய்மை உரைத் திருத் தொண்டர் வாக்கினாலேவேறு மொழிப் போர் ஏற்பான் வந்த புத்தன் மேனியையும் தலையினையும் வெவ்வேறாகக்கூறுபட நூறி இடப் புத்தர் கூட்டம் குலைந்து ஓடி விழுந்து வெருக் கொண்டது அன்றே.
சொற்பிரிப்பு
ஏறு உயர்த்தார் சைவநெறி ஆணை உய்க்க, எதிர் விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும்மாறில் வலி மந்திரமாம் அசனி போல வாய்மை உரைத் திருத்தொண்டர் வாக்கினாலேவேறுமொழிப் போர் ஏற்பான் வந்த புத்தன் மேனியையும் தலையினையும் வெவ்வேறு ஆகக்கூறு பட நூறி இடப் புத்தர் கூட்டம் குலைந்து ஓடி விழுந்து வெருக் கொண்டது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

910

மற்றவர்கள் நிலைமையையும் புத்த நந்தி வாக்கின் போர் ஏற்றவன் தன் தலையும் மெய்யும்அற்று விழ அத்திர வாக்கு அதனால் அன்பர் அறுத்ததுவும் கண்ட அரன் அடியார் எல்லாம்வெற்றி தரும்பிள்ளையார் தமக்குச் சென்று விண்ணப்பம் செய எதிர்ந்த விலக்கு நீங்கஉற்ற விதி அதுவே யாம் அர என்று எல்லாம் ஓதுக என அவ்வொலி வான் உற்றது அன்றே.
சொற்பிரிப்பு
மற்றவர்கள் நிலைமையையும் புத்த நந்தி வாக்கின் போர் ஏற்றவன் தன் தலையும் மெய்யும்அற்று விழ அத்திர வாக்கு அதனால் அன்பர் அறுத்ததுவும் கண்ட அரன் அடியார் எல்லாம்வெற்றி தரும் பிள்ளையார் தமக்குச் சென்று விண்ணப்பம் செய ”எதிர்ந்த விலக்கு நீங்கஉற்றவிதி அதுவே ஆம்; அர! என்று எல்லாம் ஓதுக” என அவ்ஒலி, வான் உற்றது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

911

அஞ்சி அகன்று ஓடிய அப்புத்தர் எல்லாம் அதிசயித்து மீண்டும் உடன் அணைந்து கூடிவஞ்சனையோ இதுதான் மற்றவர்தம் சைவ வாய்மையோ என மருண்டு மனத்தில் கொள்வார்எஞ்சலின் மந்திர வாதம் அன்றி எம்மோடு பொருள் பேசுவற்கு இசைவது என்றுதம் செயலின் மிக்கு உள்ள சாரி புத்தன் தன்னையே முன் கொண்டு பின்னும் சார்ந்தார்.
சொற்பிரிப்பு
அஞ்சி அகன்று ஓடிய அப் புத்தர் எல்லாம் அதிசயித்து மீண்டும் உடன் அணைந்து கூடி“வஞ்சனையோ? இதுதான் மற்று அவர் தம் சைவ வாய்மையோ?” என மருண்டு மனத்தில் கொள்வார்எஞ்சல் இல் மந்திர வாதம் அன்றி எம்மோடு எதிர்ந்து பொருள் பேசுவதற்கு இசைவது” என்றுதம்செயலின் மிக்கு உள்ள சாரி புத்தன் தன்னையே முன்கொண்டு பின்னும் சார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

912

அத்தன்மை கேட்டருளிச் சண்பை வந்த அடல் ஏறு திரு உள்ளத்து அழகு இது என்றுமெத்த மகிழ்ச்சியினோடும் விரைந்து சென்று வெண் தரளச் சிவிகையினின்று இழிந்து வேறு ஓர்சத்திரமண்டபத்தின் மிசை ஏறி நீடு சைவருடன் எழுந்தருளி இருந்து சாரும்புத்தர்களை அழைக்க எனத் திரு முன் நின்றார் புகலி காவலர் ஏவல் போற்றிச் சென்றார்.
சொற்பிரிப்பு
அத்தகைமை கேட்டருளிச் சண்பை வந்த அடல் ஏறு திருஉள்ளத்து “அழகிது” என்றுமெத்த மகிழ்ச்சியினோடும் விரைந்து சென்று, வெண்தரளச் சிவிகையின் நின்று இழிந்து, வேறு ஓர்சத்திர மண்டபத்தின் மிசை ஏறி, நீடு சைவருடன் எழுந்தருளி இருந்து, “சாரும்புத்தர்களை அழைக்க” எனத், திருமுன் நின்றார் புகலிகாவலர் ஏவல் போற்றிச் சென்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

913

சென்றவர்கள் தேரர் குழாம் அணைந்து நீங்கள் செப்பிவரும் பொருள் நிலைமை தெரிக்க எங்கள்வென்றி மழ இளம் களிறு சண்பை யாளி வேத பாரகன் மும்மைத் தமிழின் வேந்தன்நன்று மகிழ்ந்து அழைக்கின்றான் ஈண்டநீரும் நண்ணும் எனக் கூறுதலும் நன்மை சாராத்தன் தகைமைப் புத்தருடன் சாரி புத்தன் சத்திர மண்டபம் முன்பு சார வந்தான்.
சொற்பிரிப்பு
சென்றவர்கள் தேரர் குழாம் அணைந்து “நீங்கள் செப்பிவரும் பொருள் நிலைமை தெரிக்க, எங்கள்வென்றி மழ இளங்களிறு, சண்பை ஆளி, வேத பாரகன், மும்மைத் தமிழின் வேந்தன்நன்று மகிழ்ந்து அழைக்கின்றான்; ஈண்ட நீரும் நண்ணும்” எனக் கூறுதலும் நன்மை சாராத்தன் தகைமைப் புத்தர் உடன் சாரி புத்தன் சத்திர மண்டபம் முன்பு சார வந்தான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

914

அங்கு அணைந்து மண்டபத்துப் புத்தரோடும் பிள்ளையார் அருகு அணைய நின்ற போதில்எங்கும் நிகழ் திருச்சின்னம் தடுத்த புத்தன் இரும் சிரத்தைப் பொடி ஆக்கும் எதிரில் அன்பர்பொங்கு புகழ்ப் புகலி காவலர் தம் பாதம் போற்றி அருளால் சாரிபுத்தன் தன்னைஉங்கள் தலைவனும் பொருளும் உரைக்க என்ன உற்ற வாதினை மேற்கொண்டு உரை செய்கின்றான்.
சொற்பிரிப்பு
அங்கு அணைந்து மண்டபத்துப் புத்தரோடும் பிள்ளையார் அருகு அணைய நின்ற போதில்எங்கும் நிகழ் திருச்சின்னம் தடுத்த புத்தன் இரும்சிரத்தைப் பொடி ஆக்கும் எதிர் இல் அன்பர்பொங்கு புகழ்ப் புகலி காவலர் தம் பாதம் போற்றி, அருளால்,சாரி புத்தன் தன்னை“உங்கள் தலைவனும் பொருளும் உரைக்க!” என்ன உற்ற வாதினை மேற்கொண்டு உரை செய்கின்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

915

கற்பங்கள் அனைத்தினிலும் பிறந்து வீந்து கதிமாறும் கணபங்க இயல்பு தன்னில்பொற்புடைய தானமே தவமே தன்மை புரிந்த நிலை யோகமே பொருந்தச் செய்யஉற்பவிக்கும் ஒழிவு இன்றி உரைத்த ஞானத்து ஒழியாத பேரின்ப முத்தி பெற்றான்பற்பலரும் பிழைத்து உய்ய அறமுன் சொன்ன பான்மை யான் யாங்கள் தொழும் பரமன் என்றான்.
சொற்பிரிப்பு
“கற்பங்கள் அனைத்தினிலும் பிறந்து வீந்து கதிமாறும் கணபங்க இயல்பு தன்னில்பொற்புஉடைய தானமே தவமே தன்மை புரிந்த நிலை யோகமே பொருந்தச் செய்யஉற்பவிக்கும் ஒழிவு இன்றி உரைத்த ஞானத்து ஒழியாத பேர் இன்ப முத்தி பெற்றான்பற்பலரும் பிழைத்து உய்ய அறம் முன் சொன்ன பான்மையான் யாங்கள் தொழும் பரமன்” என்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

916

என்று உரைத்த சாரி புத்தன் எதிர் வந்து ஏற்ற இரும் தவத்துப் பெரும் தன்மை அன்பர்தாமும்நன்று உமது தலைவன் தான் பெற்றான் என்று நாட்டுகின்ற முத்தி தான் யாவது என்றார்நின்றவுரு வேதனையே குறிப்புச் செய்கை நேர் நின்ற ஞானம் என நிகழ்ந்த ஐந்தும்ஒன்றிய அகந்தத்த விவேமுத்தி என்ன உரை செய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான்.
சொற்பிரிப்பு
என்று உரைத்த சாரிபுத்தன் எதிர் வந்து ஏற்ற இருந்தவத்துப் பெருந்தன்மை அன்பர் தாமும்“நன்று;உமது தலைவன் தான் பெற்றான் என்று நாட்டுகின்ற முத்தி தான் யாவது” என்றார்;“நின்ற உரு, வேதனையே, குறிப்புச், செய்கை, நேர்கின்ற ஞானம் என நிகழ்ந்த ஐந்தும்ஒன்றிய கந்தத்து அவிவே முத்தி” என்ன உரை செய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

917

ஆங்கு அவன்தான் உரைத்த மொழி கேட்ட அன்பர் அதனை அனுவாதம் செய்தவனை நோக்கித்தாங்கிய ஞானத்துடனாங்கு அந்தம் ஐந்தும் தாம் வீந்து கெட்டன வேல் தலைவன் தானும்ஈங்கு உளன் என்ற அவனுக்கு விடயம் ஆக யாவையும் முன் இயற்றுதற்கு விகாரமே செய்துஓங்கு வடிவு அமைத்து விழ எடுக்கும் பூசை கொள்வார் ஆர் உரைக்க என உரைக்கல் உற்றான்.
சொற்பிரிப்பு
“ஆங்கு அவன்தான் உரைத்த மொழி கேட்ட அன்பர் அதனை அனுவாதம் செய்து அவனை நோக்கித்,“தாங்கிய ஞானத்து உடனாம் கந்தம் ஐந்தும் தாம் வீந்து கெட்டனவேல் தலைவன் தானும்ஈங்கு உளன்?” என்றவனுக்கு விடயம் ஆக “யாவையும் முன் இயற்றுதற்கு விகாரமே செய்துஓங்கு வடிவு அமைத்து விழவு எடுக்கும் பூசை கொள்வார் ஆர்? உரைக்க! என உரைக்கல் உற்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

918

கந்தமாம் வினை உடம்பு நீங்கி எம் கோன் கலந்து உளன் முத்தியில் என்றான் என்னக் காணும்இந்திரியம் கண் முதல் ஆம் கரணம் தானும் இல்லையேல் அவர் உணர்ச்சி இல்லை என்றார்முந்தை அறிவிலன் ஆகி உறங்கினானை நிந்தித்து மொழிந்து உடல் மீது ஆடினார்க்குவந்த வினைப் பயன் போல வழிபட்டார்க்கும் வரும் அன்றோ நன்மை என மறுத்துச் சொன்னான்.
சொற்பிரிப்பு
“கந்தம் ஆம் வினை உடம்பு நீங்கி எங்கோன் கலந்து உளன் முத்தியில்” என்றான்; என்னக் “காணும்இந்திரியம் கண் முதலாம் கரணம் தானும் இல்லையேல் அவன் உணர்ச்சி இல்லை” என்றார்,“முந்தை அறிவு இலன் ஆகி உறங்கினானை நிந்தித்து மொழிந்து உடல் மீது ஆடினார்க்குவந்த வினைப் பயன் போல வழிபட்டார்க்கும் வரும் அன்றோ நன்மை?” என மறுத்துச் சொன்னான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

919

சொன்ன உரை கேட்டு அருளி அன்பர் தாமும் தொடர்ந்த வழிபாடு பல கொள்கின்றானுக்குஅன்னவற்றின் உடன்பாடும் எதிர்வும் இல்லை ஆன போது அவன் பெறுதல் இல்லை என்றார்முன் அவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்றி முறுகு துயில் உற்றானை முனிந்து கொன்றால்இன் உயிர் போய்க் கொலை ஆகி முடிந்தது அன்றோ இப்படியால் எம் இறைவற்கு எய்தும் என்றான்.
சொற்பிரிப்பு
சொன்ன உரை கேட்டருளி அன்பர் தாமும் “தொடர்ந்த வழிபாடு பல கொள்கின்றானுக்குஅன்னவற்றின் உடன்பாடும் எதிர்வும் இல்லை ஆனபோது அவன் பெறுதல் இல்லை” என்றார்;“முன் அவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்றி முறுகு துயில் உற்றானை முனிந்து கொன்றால்இன்உயிர் போய்க் கொலைஆகி முடிந்தது அன்றோ! இப்படியால் எம்இறைவற்கு எய்தும்” என்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

920

இப்படியால் எய்தும் என இசைத்து நீ இங்கு எடுத்துக் காட்டிய துயிலும் இயல்பினான் போல்மெய்ப் படிய கரணங்கள் உயிர் தாம் இங்கு வேண்டுதியால் நும் இறைவற்கு ஆன போதுசெப்பிய அக் கந்தத்தின் விளைவு இன்றாகித் திரிவு இல்லா முத்தியில் சென்று இலனும் ஆனான்அப்படி அக் கந்தத்துள் அறிவும் கெட்டால் அம்முத்தியுடன் இன்பம் அணையாது என்றார்.
சொற்பிரிப்பு
“இப்படியால் எய்தும்”; என இசைந்து “நீ இங்கு எடுத்துக்காட்டிய துயிலும் இயல்பினான் போல்மெய்ப்படிய கரணங்கள் உயிர் தாம் இங்கு வேண்டுதியால் நும் இறைவற்கு ஆன போதுசெப்பிய அக்கந்தத்தின் விளைவின்று ஆகித் திரிவு இல்லா முத்தியில் சென்று இலனும் ஆனான்;அப்படி அக்கந்தத்துள் அறிவும் கெட்டால் அம்முத்தி உடன் இன்பம் அணையாது” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

921

அவ் உரை கேட்டு எதிர் மாற்றம் அறைவது இன்றி அணைந்துடன் அம்முத்தி எனும் அதுவும் பாழாம்கவ்வையில் நின்றவனை எதிர் நோக்கி ஞானக் கடல் அமுதம் அனையவர் தம் காதல் அன்பர்பொய்வகையே முத்தியினில் போனான் முன்பே பொருள் எல்லாம் உணர்ந்து உரைத்துப் போனான் என்றாய்எவ்வகையால் அவன் எல்லாம் உணர்ந்த தீதும் இல்லது உரைப்பாய் எனினும் ஏற்போம் என்றார்.
சொற்பிரிப்பு
அவ் உரைகேட்டு எதிர்மாற்றம் அறைவது இன்றி “அணைந்து உளன் அம் முத்தி எனும் அதுவும் பாழாம்”கவ்வையில் நின்றவனை எதிர் நோக்கி ஞானக் கடல் அமுதம் அனையவர் தம் காதல் அன்பர்“பொய்வகையே முத்தியினில் போனான் முன்பே பொருள் எல்லாம் உணர்ந்து உரைத்துப் போனான் என்றாய்;எவ்வகையால் அவன் எல்லாம் உணர்ந்தது ஈதும் இல்லது உரைப்பாய் எனினும் ஏற்போம்” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

922

உணர்வு பொதுச் சிறப்பு என்ன இரண்டின் முன் உளவான மரப் பொதுமை உணர்த்தல் ஏனைப்புணர் சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல் இப்படியால் வரம்பு இல்லா பொருள்கள் எல்லாம்கொணரும் விறகினைக் குவை செய்திடினும் வேறு குறைத்து அவற்றை தனித்தனியே இடினும் வெந்தீத்துஉணர் கதுவிச் சுடவல்ல வாறு போலத் தொகுத்தும் விரித்தும் தெரிக்கும் தொல்லோன் என்றான்.
சொற்பிரிப்பு
“உணர்வு பொதுச் சிறப்பு என்ன இரண்டின் முன்னது உளவான மரப்பொதுமை உணர்த்தல்; ஏனைப்புணர் சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல்; இப்படியால் வரம்பு இல்லாப் பொருள்கள் எல்லாம்கொணரும் விறகினைக் குவை செய்து இடினும், வேறு குறைத்து அவற்றைத் தனித்தனியே இடினும், வெந்தீத்துணர் கதுவிச் சுட வல்லவாறு போலத் தொகுத்தும் விரித்தும் தெரிக்கும் தொல்லோன்” என்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

923

எடுத்து உரைத்த புத்தன் எதிர் இயம்பும் அன்பர் எரி உணர்வுக்கு எடுத்துக் காட்டாகச் சொன்னாய்அடுத்த உணர்வு உரு உடையது அன்று சொன்ன அனல் வடிவிற்றாம் அதுவும் அறிதி நுங்கோன்தொடுத்த நிகழ்காலமே அன்றி ஏனைத் தொடர்ந்த இரு காலமும் தொக்கு அறியும் ஆகில்கடுத்த எரி நிகழ் காலத்து இட்டது அல்லால் காணாத காலத்துக் கதுவாது என்றார்.
சொற்பிரிப்பு
எடுத்து உரைத்த புத்தன் எதிர் இயம்பும் அன்பர் “எரி உணர்வுக்கு எடுத்துக்காட்டாகச் சொன்னாய்;அடுத்த உணர்வு உரு உடையது அன்று; சொன்ன அனல்வடிவில் தாம் அதுவும் அறிதி; நுங்கோன்தொடுத்த நிகழ்காலமே அன்றி ஏனைத் தொடர்ந்த இருகாலமும் தொக்கு அறியும் ஆகில்கடுத்த எரி நிகழ்காலத்து இட்டது அல்லால் காணாத காலத்துக் கதுவாது” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

924

ஆதலினால் உன் இறைவன் பொருள்கள் எல்லாம் அறிந்த நும் முத்தி போல் ஆயிற்று அன்றேஏதமாம் இவ் அறிவால் உரைத்த நூலும் என்றவனுக்கு ஏற்குமாறு அருளிச் செய்யவாதம் மாறு ஒன்று இன்றித் தோற்றான் புத்தன் மற்று அவனை வென்று அருளிப் புகலி மன்னர்பாத தாமரை பணிந்தார் அன்பர் தங்கள் பான்மையழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார்.
சொற்பிரிப்பு
“ஆதலினால் உன் இறைவன் பொருள்கள் எல்லாம் அறிந்தது, நும் முத்திபோல் ஆயிற்று அன்றே;ஏதமாம் இவ்அறிவால் உரைத்த நூலும்” என்றவனுக்கு ஏற்குமாறு அருளிச் செய்யவாதம் மாறு ஒன்று இன்றித் தோற்றான் புத்தன்; மற்றவனை வென்று அருளிப் புகலி மன்னர்பாத தாமரை பணிந்தார் அன்பர்; தங்கள் பான்மை அழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

925

புந்தியினால் அவர் உரைத்த பொருளின் தன்மை பொருள் அன்றாம் படி அன்பர் பொருந்தக் கூறமந்தவுணர்வு உடையவரை நோக்கிச் சைவம் அல்லாது மற்று ஒன்றும் இல்லை என்றேஅந்தமில் சீர் மறைகள் ஆகமங்கள் ஏனை அகில கலைப் பொருள் உணர்ந்தார் அருளிச் செய்யச்சிந்தையினில் அது தெளிந்து புத்தர் சண்பைத் திரு மறையோர் சேவடிக்கீழ்ச் சென்று தாழ்ந்தார்.
சொற்பிரிப்பு
புந்தியினால் அவர் உரைத்த பொருளின் தன்மை பொருள் அன்றாம் படி அன்பர் பொருந்தக் கூறமந் தஉணர்வு உடையவரை நோக்கிச் “சைவம் அல்லாது மற்று ஒன்றும் இல்லை” என்றேஅந்தம் இல் சீர் மறைகள், ஆகமங்கள், ஏனை அகில கலைப் பொருள் உணர்ந்தார் அருளிச் செய்யச்சிந்தையினில் அது தெளிந்து, புத்தர் சண்பைத் திருமறையோர் சேவடிக் கீழ்ச் சென்று தாழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

926

அன்று அவர்க்குக் கவுணியர் கோன் கருணை நோக்கம் அணைதலினால் அறிவின்மைஅகன்று நீங்கிமுன் தொழுது விழுந்து எழுந்து சைவர் ஆனார் முகைமலர் மாரியின் வெள்ளம் பொழிந்தது எங்கும்நின்றனவும் சரிப்பனவும் சைவமேயாம் நிலைமை அவர்க்கு அருள் செய்து சண்பை வேந்தர்சென்று சிவனார் பதிகள் பணிய வேண்டித் திருக்கடவூர் அதன் மருங்கு சேர வந்தார்.
சொற்பிரிப்பு
அன்று அவர்க்குக் கவுணியர்கோன் கருணை நோக்கம் அணைதலினால், அறிவு இன்மை அகன்று, நீங்கிமுன் தொழுது விழுந்து எழுந்து சைவர் ஆனார் முகைமலர் மாரியின் வெள்ளம் பொழிந்தது எங்கும்;நின்றனவும் சரிப்பனவும் சைவமே ஆம் நிலைமை அவர்க்கு அருள்செய்து, சண்பை வேந்தர்சென்று சிவனார் பதிகள் பணிய வேண்டித் திருக்கடவூர் அதன் மருங்கு சேர வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

927

அந்நகரில் அடியார்கள் எதிர் கொள்ளப் புக்கு அருளிகொன்னவிலும் கூற்று உதைத்தார் குரை கழல்கள் பணிந்து ஏத்திமன்னி அமர்ந்து உறையும் நாள் வாகீசமா முனிவர்எந்நகரில் எழுந்து அருளிற்று என்று அடியார் தமை வினவ.
சொற்பிரிப்பு
அந்நகரில் அடியார்கள் எதிர்கொள்ளப் புக்கு அருளிக்கொன்நவிலும் கூற்று உதைத்தார் குரைகழல்கள் பணிந்து ஏத்திமன்னி அமர்ந்து உறையும் நாள் “வாகீச மாமுனிவர்எந்நகரில் எழுந்தருளிற்று” என்று, அடியார் தமை வினவ,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

928

அங்கு அவரும் அடி போற்றி ஆண்ட அரசு எழுந்து அருளிப்பொங்கு புனல் பூந்துருத்தி நகரின் கண் போற்றி இசைத்துதங்கு திருத்தொண்டு செயும் மகிழ்ச்சியினால் சார்ந்து அருளிஎங்கும் நிகழ்ந்திட இருந்தபடி எல்லாம் இயம்பினார்.
சொற்பிரிப்பு
அங்கு அவரும் அடி போற்றி, ஆண்டஅரசு எழுந்தருளிப்பொங்கு புனல் பூந்துருத்தி நகரின் கண் போற்றிசைத்துத்தங்கு திருத்தொண்டு செயும் மகிழ்ச்சியினால் சார்ந்தருளிஎங்கும் நிகழ்ந்திட இருந்த படிஎல்லாம் இயம்பினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

929

அப்பரிசு அங்கு அவர் மொழிய ஆண்ட அரசினைக் காணும்ஒப்பரிய பெருவிருப்பு மிக்கு ஓங்க ஒளிபெருகுமைப் பொருவு கறைக் கண்டர் கழல் வணங்கி அருள் பெற்றுச்செப்பரிய புகழ்ப் புகலிப் பிள்ளையார் செல்கின்றார்.
சொற்பிரிப்பு
அப்பரிசு அங்கு அவர் மொழிய, ஆண்டஅரசினைக் காணும்ஒப்பரிய பெருவிருப்பு மிக்கு ஓங்க, ஒளி பெருகுமைப்பொருவு கறைக்கண்டர் கழல் வணங்கி அருள்பெற்றுச்செப்பரிய புகழ்ப்புகலிப் பிள்ளையார் செல்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

930

பூ விரியும் தடம் சோலை புடை பரப்பப் புனல் பரக்கும்காவிரியின் தென்கரை போய்க்கண் நுதலார் மகிழ்ந்த இடம்மேவி இனிது அமர்ந்து இறைஞ்சி விருப்பு உறுமெய்த் தொண்டரோடுநாவரசர் உழைச் சண்பை நகர் அரசர் நண்ணுவார்.
சொற்பிரிப்பு
பூவிரியும் தடம்சோலை புடைபரப்பப், புனல் பரக்கும்காவிரியின் தென்கரை போய்க் கண்நுதலார் மகிழ்ந்த இடம்மேவி இனிது அமர்ந்து இறைஞ்சி விருப்புறு மெய்த் தொண்டரொடுநாவரசர் உழைச் சண்பை நகர் அரசர் நண்ணுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

931

அந்தணர் சூளா மணியார் பூந்துருத்திக்கு அணித்தாகவந்தருளும் பெருவார்த்தை வாகீசர் கேட்டருளிநம் தமையாளுடையவரை நாம் எதிர் சென்று இறைஞ்சுவதுமுந்தை வினைப்பயன் என்று முகம் மலர அகம் மலர்வார்.
சொற்பிரிப்பு
அந்தணர் சூளாமணியார் பூந்துருத்திக்கு அணித்தாகவந்தருளும் பெருவார்த்தை வாகீசர் கேட்டருளி“நந்தமை ஆள் உடையவரை நாம் எதிர் சென்று இறைஞ்சுவதுமுந்தை வினைப் பயன்” என்று முகமலர அக மலர்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

932

எதிர் சென்று பணிவன் என எழுகின்ற பெருவிருப்பால்நதி தங்கு சடை முடியார் நற்பதங்கள் தொழுது அந்தப்பதி நின்றும் புறப்பட்டு பர சமயம் சிதைத்தவர் பால்முதிர்கின்ற பெரும் தவத்தோர் முன் எய்த வந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
“எதிர் சென்று பணிவன்” என எழுகின்ற பெருவிருப்பால்நதி தங்கு சடைமுடியார் நற்பதங்கள் தொழுது அந்தப்பதி நின்றும் புறப்பட்டுப் பரசமயம் சிதைத்தவர்பால்முதிர்கின்ற பெருந்தவத்தோர் முன் எய்த வந்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

933

திருச்சின்னம் பணிமாறக் கேட்ட நால்திசை உள்ளோர்பெருக்கின்ற ஆர்வத்தால் பிள்ளையார் தமைச் சூழ்ந்தநெருக்கினிடை யவர் காணா வகை நிலத்துப் பணிந்து உள்ளம்உருக்கி எழும் மனம் பொங்கத் தொண்டர் குழாத்துடன் அணைந்தார்.
சொற்பிரிப்பு
திருச்சின்னம் பணிமாறக் கேட்ட நால் திசை உள்ளோர்பெருக்கின்ற ஆர்வத்தால் பிள்ளையார் தமைச் சூழ்ந்தநெருக்கின் இடை அவர் காணா வகை நிலத்துப் பணிந்து உள்ளம்உருக்கி எழும் மனம் பொங்கத் தொண்டர் குழாத்து உடன் அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

934

வந்து அணைந்த வாகீசர் வண் புகலி வாழ் வேந்தர்சந்த மணித் திருமுத்தின் சிவிகையினைத் தாங்கியேசிந்தை களிப்பு உற வந்தார் திருஞான சம்பந்தர்புந்தியில் வேறு ஒன்று நிகழ்ந்திட முன் புகல்கின்றார்.
சொற்பிரிப்பு
வந்து அணைந்த வாகீசர் வண்புகலி வாழ்வேந்தர்சந்தமணிச் சிவிகையினைத் தாங்குவார் உடன் தாங்கிச்சிந்தை களிப்பு உற வந்தார்; திருஞான சம்பந்தர்புந்தியினில் வேறு ஒன்று நிகழ்ந்திட முன் புகல்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

935

அப்பர் தாம் எங்கு உற்றார் இப்பொழுது என்று அருள் செய்யக்செப்பரிய புகழ்த் திருநாவுக் கரசர் செப்புவார்ஒப்பரிய தவம் செய்தேன் ஆதலினால் உம் அடிகள்இப்பொழுது தாங்கிவரப் பெற்று உய்ந்தேன் யான் என்றார்.
சொற்பிரிப்பு
“அப்பர் தாம் எங்கு உற்றார் இப்பொழுது” என்று அருள்செய்யச்செப்பு அரிய புகழ்த் திருநாவுக்கரசர் செப்புவார்“ஒப்பு அரிய தவம் செய்தேன் ஆதலினால் உம் அடிகள்இப்பொழுது தாங்கி வரப் பெற்று உய்ந்தேன் யான்” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

936

அவ் வார்த்தை கேட்டு அஞ்சி அவனியின் மேல் இழிந்தருளிஇவ்வாறு செய்தருளிற்று என்னாம் என்று இறைஞ்சுதலும்செவ்வாறு மொழி நாவலர் திருஞான சம்பந்தர்க்குஎவ்வாறு செயத் தகுவது என்று எதிரே இறைஞ்சினார்.
சொற்பிரிப்பு
அவ்வார்த்தை கேட்டு அஞ்சி அவனியின் மேல் இழிந்தருளி“இவ்வாறு செய்தருளிற்று என்னாம்?” என்று இறைஞ்சுதலும்செவ்வாறு மொழிநாவர் “திருஞான சம்பந்தர்க்குஎவ்வாறு செயத்தகுவது” என்று எதிரே இறைஞ்சினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

937

சூழ்ந்து மிடைந்தருகணையும் தொண்டர் எல்லாம் அது கண்டுதாழ்ந்து நிலம் உற வணங்கி எழுந்து தலை கை குவித்துவாழ்ந்து மனக் களிப்பினராய் மற்று இவரை வணங்கப் பெற்றுஆழ்ந்த பிறப்பு உய்ந்தோம் என்று அண்டமெலாம் உற ஆர்த்தார்.
சொற்பிரிப்பு
சூழ்ந்து மிடைந்து அருகு அணையும் தொண்டர் எல்லாம் அது கண்டுதாழ்ந்து நிலம் உற வணங்கி எழுந்து தலைக் கை குவித்துவாழ்ந்து மனக் களிப்பினராய் “மற்று இவரை வணங்கப் பெற்றுஆழ்ந்த பிறப்பு உய்ந்தோம்” என்று அண்டம் எலாம் உற ஆர்த்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

938

திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் தமைப்பெருகு ஆர்வத் தொடும் அணைந்து தழீஇக் கொள்ளப் பிள்ளையார்மருவாரும் மலர் அடிகள் வணங்கி உடன் வந்து அணைந்தார்பொருவாரும் புனல் சடையார் மகிழ்ந்த திருப்பூந் துருத்தி.
சொற்பிரிப்பு
திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் தமைப்பெருகு ஆர்வத்தொடும் அணைந்து தழீஇக் கொள்ளப் பிள்ளையார்மருவாரும் மலர்அடிகள் வணங்கி உடன் வந்து அணைந்தார்பொருவாரும் புனல் சடையார் மகிழ்ந்த திருப் பூந்துருத்தி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

939

அன்பர் குழாத்தொடும் செல்வார் ஆன் ஏற்றார் மகிழ் கோயில்முன் பணித்து ஆகச் சென்று கோபுரத்தை முன் இறைஞ்சித்துன்பம் இலாத் திருத் தொண்டருடன் தொழுது புக்கருளிஎன்பு உருக வலம் கொண்டு பணிந்து ஏத்தி இறைஞ்சினார்.
சொற்பிரிப்பு
அன்பர் குழாத்தொடும் செல்வார் ஆன் ஏற்றார் மகிழ்கோயில்முன்பு அணித்தாகச் சென்று, கோபுரத்தை முன் இறைஞ்சித்,துன்பம் இலாத் திருத்தொண்டருடன் தொழுது புக்கு அருளிஎன்பு உருக வலங்கொண்டு பணிந்து ஏத்தி இறைஞ்சினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

940

பொய்யிலியாரைப் பணிந்து போற்றியே புறத்து அணைவார்செய்ய சடையார் கோயில் திருவாயில் முன்னாகமையறு சீர்த் தொண்டர் குழாம் வந்து புடை சூழ உலகுஉய்யவருவார் தங்களுடன் மகிழ்ந்து அங்கு இனிது இருந்தார்.
சொற்பிரிப்பு
பொய்யிலியாரைப் பணிந்து போற்றியே புறத்து அணைவார்செய்ய சடையார் கோயில் திருவாயில் முன் ஆகமை அறுசீர்த் தொண்டர்கு ழாம் வந்துபு டை சூழ, உலகுஉய்ய வருவார் தங்கள் உடன்மகிழ்ந்து அங்கு இனிது இருந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

941

வாக்கின் தனி மன்னர் வண்புகலி வேந்தர் தமைபோக்கும் வரவும் வினவப் புகுந்தது எல்லாம்தூக்கின் தமிழ் விரகர் சொல்லிறந்த ஞான மறைதேக்கும் திருவாயால் செப்பி அருள் செய்தார்.
சொற்பிரிப்பு
வாக்கின் தனிமன்னர் வண்புகலி வேந்தர் தமைப்போக்கும் வரவும் வினவப், புகுந்தது எல்லாம்தூக்கின் தமிழ் விரகர் சொல் இறந்த ஞானமறைதேக்கும் திருவாயால் செப்பி அருள் செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

942

காழியினில் வந்த கவுணியர் தம் போர் ஏற்றைஆழி மிசைக் கல் மிதப்பில் வந்தார் அடிவணங்கிவாழி திருத்தொண்டு என்னும் வான் பயிர்தான் ஒங்குதற்குச்சூழும் பெரு வேலி ஆனீர் எனத் தொழுதார்.
சொற்பிரிப்பு
காழியினில் வந்த கவுணியர் தம் போர் ஏற்றைஆழிமிசைக் கல் மிதப்பில் வந்தார் அடி வணங்கி“வாழி திருத் தொண்டு என்னும் வான்பயிர் தான் ஓங்குதற்குச்சூழும் பெருவேலி ஆனீர்” எனத் தொழுதார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

943

பிள்ளையார் தாமும் அவர் முன் தொழுது பேரன்பின்வெள்ளம் அனைய புகழ் மானியர் மேன்மையையும்கொள்ளும் பெருமைக் குலச் சிறையார் தொண்டினையும்உள்ள பரிசு எல்லாம் மொழிந்து அங்கு உவந்து இருந்தார்.
சொற்பிரிப்பு
பிள்ளையார் தாமும் அவர் முன் தொழுது பேரன்பின்வெள்ளம் அனைய புகழ் மானியார் மேன்மையையும்கொள்ளும் பெருமைக் குலச்சிறையார் தொண்டினையும்உள்ள பரிசு எல்லாம் மொழிந்து அங்கு உவந்து இருந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

944

தென்னற்கு உயிரோடு நீறு அளித்துச் செங்கமலத்துஅன்னம் அனையார்க்கும் அமைச்சர்க்கும் அன்பு அருளித்துன்னும் நெறி வைதிகத்தின் தூ நெறியே ஆக்குதலால்மன்னு புகழ் வாகீசர் கேட்டு மனம் மகிழ்ந்தார்.
சொற்பிரிப்பு
தென்னற்கு உயிரோடு நீறு அளித்துச், செங்கமலத்துஅன்னம் அனையார்க்கும் அமைச்சர்க்கும் அன்பு அருளித்துன்னு நெறி வைதிகத்தின் தூநெறியே ஆக்குதலால்மன்னு புகழ் வாகீசர் கேட்டு மனம் மகிழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

945

சொல்லின் பெரு வேந்தர் தொண்டை வள நாடு எய்திமல்கு புகழ்க் காஞ்சி ஏகாம்பரம் மன்னும்செல்வர் கழல் பணிந்து சென்றது எல்லாம் செப்புதலும்புல்கு நூல் மார்பரும் போய்ப் போற்றும் திறம் புரிந்தார்.
சொற்பிரிப்பு
சொல்லின் பெருவேந்தர் தொண்டை வளநாடு எய்திமல்கு புகழ்க் காஞ்சி ஏகாம்பரம் மன்னும்செல்வர் கழல் பணிந்து சென்றது எல்லாம் செப்புதலும்புல்கு நூல் மார்பரும்போய்ப் போற்ற மனம் புரிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

946

அங்கணரைப் போற்றி எழுந்து ஆண்ட அரசு அமர்ந்தபொங்கு திரு மடத்தில் புக்கு அங்கு இனிது அமர்ந்துதிங்கள் பகவணியும் சென்னியார் சேவடிக்கீழ்த்தங்கு மனத்தோடு தாள் பரவிச் செல்லும் நாள்.
சொற்பிரிப்பு
அங்கணரைப் போற்றி எழுந்து ஆண்ட அரசு அமர்ந்தபொங்கு திருமடத்தில் புக்கு அங்கு இனிது அமர்ந்து,திங்கள் பகவு அணியும் சென்னியர் சேவடிக் கீழ்த்தங்கு மனத்தோடு தாள் பரவிச் செல்லும் நாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

947

வாகீச மாமுனிவர் மன்னும் திரு ஆலவாய்நாகம் அரைக்கு அசைத்த நம்பர் கழல் வணங்கப்போகும் பெரு விருப்புப் பொங்கப் புகலியின்மேல்ஏகும் பெரும் காதல் பிள்ளையார் ஏற்று எழுவார்.
சொற்பிரிப்பு
வாகீச மாமுனிவர் மன்னு திரு ஆலவாய்நாகம் அரைக்கு அசைத்த நம்பர் கழல் வணங்கப்போகும் பெரு விருப்புப் பொங்கப் புகலியின் மேல்ஏகும் பெருங்காதல் பிள்ளையார் ஏற்று எழுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

948

பூந்துருத்தி மேவும் புனிதர் தமைப் புக்கு இறைஞ்சிப்போந்து திருவாயில் புறத்து அணைந்து நாவினுக்குவேந்தர் திரு உள்ளம் மேவ விடை கொண்டருளிஏந்தலார் எண்ணிறந்த தொண்டருடன் ஏகினார்.
சொற்பிரிப்பு
பூந்துருத்தி மேவும் புனிதர் தமைப் புக்கு இறைஞ்சிப்,போந்து, திரு வாயில் புறத்து அணைந்து, நாவினுக்குவேந்தர் திருஉள்ளம் மேவ விடை கொண்டருளிஏந்தலார் எண் இறந்த தொண்டருடன் ஏகினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

949

மாடு புனல் பொன்னி இழிந்து வட கரையில்நீடு திரு நெய்த்தானம் ஐயாறு நேர்ந்து இறைஞ்சிப்பாடு தமிழ் மாலைகளும் சாத்திப் பரவிப் போய்ஆடல் புரிந்தார் திருப் பழனம் சென்று அணைந்தார்.
சொற்பிரிப்பு
மாடு, புனல் பொன்னி இழிந்து, வடகரையில்நீடு திரு நெய்த்தானம், ஐயாறு நேர்ந்து இறைஞ்சிப்பாடு தமிழ் மாலைகளும் சாத்திப், பரவிப்போய்,ஆடல் புரிந்தார் திருப்பழனம் சென்று அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

950

செங்கண் விடையார் திருப் பழனம் சேர்ந்து இறைஞ்சிப்பொங்கிய காதலின் முன் போற்றும் பதி பிறவும்தங்கிப்போய்ச் சண்பை நகர் சார்ந்தார் தனிப் பொருப்பின்மங்கை திருமுலைப்பால் உண்டு அருளும் வள்ளலார்.
சொற்பிரிப்பு
செங்கண் விடையார் திருப்பழனம் சேர்ந்து இறைஞ்சிப்பொங்கிய காதலின் முன் போற்றும் பதி பிறவும்தங்கிப் போய்ச் சண்பைநகர் சார்ந்தார், தனிப்பொருப்பின்மங்கை திருமுலைப்பால் உண்டருளும் வள்ளலார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

951

தென்னாட்டு அமண் மாசு அறுத்துத் திரு நீறேஅந்நாடு போற்று வித்தார் வந்து அணையும் வார்த்தை கேட்டுஎந் நாள் பணிவது என ஏற்று எழுந்த மா மறையோர்முன்னாக வேதம் முழங்க எதிர் கொண்டார்.
சொற்பிரிப்பு
தென்நாட்டு அமண் மாசு அறுத்துத், திருநீறேஅந்நாடு போற்றுவித்தார் வந்து அணையும் வார்த்தை கேட்டு“எந்நாள் பணிவது?” என ஏற்று எழுந்த மாமறையோர்முன் ஆக வேதம் முழங்க எதிர்கொண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

952

போத நீடு மா மறையவர் எதிர் கொளப் புகலி காவலரும் தம்சீத முத்து அணிச் சிவிகை நின்று இழிந்து எதிர் செல்பவர் திருத் தோணிநாதர் கோயில் முன் தோன்றிட நகை மலர்க் கரம் குவித்து இறைஞ்சிப் போய்ஓத நீரின் மேல் ஓங்கு கோயிலின் மணிக் கோபுரம் சென்று உற்றார்.
சொற்பிரிப்பு
போதம் நீடு மா மறையவர் எதிர்கொளப் புகலி காவலரும் தம்சீத முத்து அணிச் சிவிகை நின்று இழிந்து எதிர் செல்பவர் திருத்தோணிநாதர் கோயில் முன் தோன்றிட நகை மலர்க் கரம் குவித்து இறைஞ்சிப் போய்ஓத நீரின் மேல் ஓங்கு கோயிலின் மணிக் கோபுரம் சென்றுஉற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

953

அங்கம் மாநிலத் தெட்டுற வணங்கிப் புக்கு அஞ்சலி முடி ஏறப்பொங்கு காதலில் புடைவலம் கொண்டு முன் பணிந்து போற்றி எடுத்து ஓதித்துங்க நீள் பெரும் தோணியாம் கோயிலை அருளினால் தொழுது ஏறிமங்கையோடு உடன் வீற்றிருந்து அருளினார் மலர்க் கழல் பணிவுற்றார்.
சொற்பிரிப்பு
அங்கம் மாநிலத்து எட்டு உற வணங்கிப் புக்கு அஞ்சலி முடி ஏறப்பொங்கு காதலில் புடை வலம் கொண்டு முன் பணிந்து போற்று எடுத்து ஓதித்துங்க நீள் பெருந் தோணியாம் கோயிலை அருளினால் தொழுது ஏறிமங்கையோடு உடன் வீற்றிருந்தருளினார் மலர்க்கழல் பணிவுற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

954

முற்றும் மெய் எலாம் புளகங்கள் முகிழ்த்து எழ முகந்து கண் களிகூரப்பற்றும் உள்ளம் உள் அலைத்து எழும் ஆனந்தம் பொழிதரப் பணிந்து ஏத்திஉற்றுமை சேர்வது எனும் திருவியமகம் உவகையால் எடுத்து ஓதிவெற்றியாக மீனவன் அவை எதிர் நதி மிசைவரு கரன் என்பார்.
சொற்பிரிப்பு
முற்றும் மெய் எலாம் புளகங்கள் முகிழ்த்து எழ முகந்து கண் களி கூரப்பற்றும் உள்ளம் உள் அலைத்து எழும் ஆனந்தம் பொழிதரப் பணிந்து ஏத்தி“உற்றுமை சேர்வது” எனும் திரு இயமகம் உவகையால் எடுத்து ஓதி“வெற்றி ஆக மீனவன் அவை எதிர் நதி மிசை வரு கரன்” என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

955

சீரின் மல்கிய திருப்பதிகத்தினில் திருக் கடைக் காப்பு ஏற்றிவாரின் மல்கிய வன முலையாளுடன் மன்னினார் தமைப் போற்றிஆரும் இன்னருள் பெற்று மீண்டு அணைபவர் அங்கையால் தொழுது ஏத்திஏரின் மல்கிய கோயில் முன் பணிந்து போந்து இறைஞ்சினர் மணிவாயில்.
சொற்பிரிப்பு
சீரின் மல்கிய திருப்பதிகத்தினில் திருக்கடைக் காப்பு ஏற்றிவாரின் மல்கிய வனமுலையாள் உடன் மன்னினார் தமைப் போற்றிஆரும் இன்அருள் பெற்று மீண்டு அணைபவர் அங்கையால் தொழுது ஏத்திஏரின் மல்கிய கோயில் முன் பணிந்து போந்து இறைஞ்சினர் மணிவாயில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

956

தாதையாரும் அங்கு உடன் பணிந்து அணைந்திடச் சண்பையார் தனி ஏறுமூது எயில் திருவாயிலைத் தொழுது போய் முகை மலர்க் குழலார்கள்ஆதரித்து வாழ்த்துரை இரு மருங்கு எழ அணி மறுகிடைச் சென்றுகாதலித்தவர்க்கு அருள் செய்து தம் திருமாளிகைக் கடை சார்ந்தார்.
சொற்பிரிப்பு
தாதையாரும் அங்கு உடன் பணிந்து அணைந்திடச் சண்பையர் தனி ஏறுமூது எயில் திருவாயிலைத் தொழுதுபோய் முகைமலர்க் குழலார்கள்ஆதரித்து வாழ்த்து உரை இருமருங்கு எழ அணிமறுகு இடைச்சென்றுகாதலித்தவர்க்கு அருள்செய்து தம் திரு மாளிகைக் கடைசார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

957

நறவம் ஆர் பொழில் புகலியில் நண்ணிய திருஞான சம்பந்தர்விறலியாருடன் நீலகண்டப் பெரும் பாணர்க்கு மிக நல்கிஉறையுளாம் அவர் மாளிகை செல விடுத்து உள் அணைதரும் போதில்அறலின் நேர் குழலார் மணி விளக்கு எடுத்து எதிர்கொள அணைவுற்றார்.
சொற்பிரிப்பு
நறவம் ஆர் பொழில் புகலியில் நண்ணிய திருஞான சம்பந்தர்விறலியாருடன் நீலகண்டப் பெரும் பாணர்க்கு மிக நல்கிஉறையுளாம் அவர் மாளிகை செல விடுத்து, உள் அணைதரும் போதில்,அறலின் நேர் குழலார் மணி விளக்கு எடுத்து எதிர்கொள அணைவு உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

958

அங்கு அணைந்து அருமறைக் குலத் தாயர் வந்து அடி வணங்கிடத் தாமும்துங்க நீள் பெரும் தோணியில் தாயர் தாள் மனம் கொளத் தொழுவாராய்த்தங்கு காதலின் அங்கு அமர்ந்து அருளும் நாள் தம்பிரான் கழல் போற்றிப்பொங்கும் இன்னிசைத் திருப்பதிகம் பல பாடினார் புகழ்ந்து ஏத்தி.
சொற்பிரிப்பு
அங்கு அணைந்து அருமறைக் குலத்தாயர் வந்து அடி வணங்கிடத் தாமும்துங்க நீள் பெருந்தோணியில் தாயர் தாள் மனம்கொளத் தொழுவாராய்த்தங்கு காதலின் அங்கு அமர்ந்து அருளுநாள் தம்பிரான் கழல் போற்றிப்பொங்கும் இன்னிசைத் திருப்பதிகம் பல பாடினார் புகழ்ந்து ஏத்தி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

959

நீல மா விடம் திரு மிடற்று அடக்கிய நிமலரை நேர் எய்தும்காலம் ஆனவை அனைத்தினும் பணிந்து உடன் கலந்த அன்பர்களோடும்சால நாள்கள் அங்கு உறைபவர் தையலாள் தழுவிடக் குழை கம்பர்கோலம் ஆர்தரக் கும்பிடும் ஆசை கொண்டு எழும் குறிப்பினர் ஆனார்.
சொற்பிரிப்பு
நீல மா விடம் திருமிடற்று அடக்கிய நிமலரை நேர் எய்தும்காலம் ஆனவை அனைத்தினும் பணிந்து உடன் கலந்த அன்பர்களோடும்சால நாள்கள் அங்கு உறைபவர் தையலாள் தழுவிடக் குழை கம்பர்கோலம் ஆர்தரக் கும்பிடும் ஆசைகொண்டு எழும் குறிப்பினர் ஆனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

960

தண்டகத் திரு நாட்டினைச் சார்ந்து வந்து எம்பிரான் மகிழ் கோயில்கண்டு போற்றி நாம் பணிவது என்று அன்பருக்கு அருள் செய்வார் காலம் பெற்றுஅண்டருக்கு அறிவரும் பெரும் தோணியில் இருந்தவர் அருள் பெற்றுத்தொண்டர் சூழ்ந்து உடன் புறப்படத் தொடர்ந்து எழும் தாதையார்க்கு உரை செய்வார்.
சொற்பிரிப்பு
“தண்டகத் திருநாட்டினைச் சார்ந்து வந்து எம்பிரான் மகிழ்கோயில்கண்டு போற்றி நாம் பணிவது” என்று அன்பருக்கு அருள்செய்வார் காலம் பெற்றுஅண்டருக்கு அறிவரும் பெருந் தோணியில் இருந்தவர் அருள்பெற்றுத்தொண்டர் சூழ்ந்துடன் புறப்படத் தொடர்ந்து எழும் தாதையார்க்கு உரைசெய்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

961

அப்பர் நீர் இனி இங்கு ஒழிந்து அருமறை அங்கி வேட்டு அன்போடும்துப்பு நேர் சடையார் தமைப் பரவியே தொழுது இரும் எனச் சொல்லிமெய்ப் பெரும் தொண்டர் மீள்பவர் தமக்கு எலாம் விடை கொடுத்து அருளிப்போய்ஒப்பு இலாதவர் தமை வழியிடைப் பணிந்து உருகும் அன்பொடு செல்வார்.
சொற்பிரிப்பு
“அப்பர்! நீர் இனி இங்கு ஒழிந்து அருமறை அங்கி வேட்டு அன்போடும்துப்பு நேர் சடையார் தமைப் பரவியே தொழுது இரும்” எனச் சொல்லிமெய்ப் பெருந்தொண்டர் மீள்பவர் தமக்கு எலாம் விடை கொடுத்தருளிப்போய்ஒப்பு இலாதவர் தமை வழி இடைப் பணிந்து உருகும் அன்பொடு செல்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

962

செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் திரு நடம் பணிந்து ஏத்திப்பல் பெரும் தொண்டர் எதிர் கொளப் பரமர் தம் திருத்தினை நகர் பாடிஅல்கு தொண்டர்கள் தம்முடன் திருமாணிக் குழியினை அணைந்து ஏத்திமல்கு வார் சடையார் திருப் பாதிரிப் புலியூரை வந்து உற்றார்.
சொற்பிரிப்பு
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் திருநடம் பணிந்து ஏத்திப்பல் பெருந்தொண்டர் எதிர்கொளப் பரமர் தம் திருத்தினை நகர் பாடிஅல்கு தொண்டர்கள் தம்முடன் திருமாணி குழியினை அணைந்து ஏத்திமல்கு வார் சடையார் திருப் பாதிரிப் புலியூரை வந்து உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

963

கன்னி மாவனம் காப்பு என இருந்தவர் கழல் இணை பணிந்து அங்குமுன்ன மா முடக்கான் முயற்கு அருள் செய்த வண்ணமும் மொழிந்து ஏத்திமன்னுவார் பொழில் திரு வடுகூரினை வந்து எய்தி வணங்கிப்போய்பின்னுவார் சடையார் திருவக்கரை பிள்ளையார் அணைவுற்றார்.
சொற்பிரிப்பு
கன்னி மாவனம் காப்பு என இருந்தவர் கழல்இணை பணிந்து அங்கு“முன்ன மாமுடக்கால் முயற்கு அருள் செய்த வண்ணமும்” மொழிந்து ஏத்திமன்னு வார்பொழில் திருவடுகூரினை வந்து எய்தி வணங்கிப் போய்ப்பின்னு வார் சடையார் திருவக்கரை பிள்ளையார் அணைவுற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

964

வக்கரைப் பெருமான் தனை வணங்கி அங்கு அமரும் நாள் அருகாலேசெக்கர் வேணியர் இரும்பை மாகாளமும் சென்று தாழ்ந்து உடன் மீண்டுமிக்க சீர் வளர் அதிகை வீரட்டமும் மேவுவார் தம் முன்புதொக்க மெய்த் திருத்தொண்டர் வந்து எதிர் கொளத் தொழுது எழுந்து அணைவுற்றார்.
சொற்பிரிப்பு
வக்கரைப் பெருமான் தனை வணங்கி அங்கு அமருநாள் அருளாலேசெக்கர் வேணியார் இரும்பை மாகாளமும் சென்று தாழ்ந்து உடன் மீண்டுமிக்க சீர் வளர் அதிகை வீரட்டமும் மேவுவார் தம் முன்புதொக்க மெய்த்திருத் தொண்டர் வந்து எதிர்கொளத் தொழுது எழுந்து அணைவுற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

965

ஆதி தேவர் அங்கு அமர்ந்த வீரட்டானம் சென்று அணைபவர் முன்னேபூதம் பாட நின்று ஆடுவார் திரு நடம் புலப்படும் படி காட்டவேத பாலகர் பணிந்து மெய் உணர்வுடன் உருகிய விருப்போடும்கோதிலா இசை குலவு குண்டைக்குறள் பூதம் என்று எடுத்து ஏத்தி.
சொற்பிரிப்பு
ஆதி தேவர் அங்கு அமர்ந்த வீரட்டானம் சென்று அணைபவர் முன்னேபூதம் பாட நின்று ஆடுவார் திருநடம் புலப்படும்படி காட்டவேத பாரகர் பணிந்து, மெய் உணர்வுடன் உருகிய விருப்போடும்கோதிலா இசை குலவு “குண்டைக் குறள் பூதம்” என்று எடுத்து ஏத்தி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

966

பரவி ஏத்திய திருப் பதிகத்து இசை பாடினார் பணிந்து அங்குவிரவும் அன்பொடு மகிழ்ந்து இனிது உறைபவர் விமலரை வணங்கிப் போய்அரவ நீள் சடை அங்கணர் தாம் மகிழ்ந்துறை திரு வாமாத்தூர்சிர புரத்து வந்தருளிய திருமறைச் சிறுவர் சென்று அணைவுற்றார்.
சொற்பிரிப்பு
பரவி ஏத்திய திருப்பதிகத்து இசை பாடினார், பணிந்து அங்குவிரவும் அன்பொடு மகிழ்ந்து இனிது உறைபவர், விமலரை வணங்கிப்போய்,அரவ நீர்ச்சடை அங்கணர் தாம் மகிழ்ந்து உறை திருஆமாத்தூர்சிரபுரத்து வந்தருளிய திருமறைச் சிறுவர் சென்று அணைவுற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

967

சென்று அணைந்து சிந்தையின் மகிழ் விருப்பொடு திகழ் திருவாமாத்தூர்ப்பொன்ற அங்கு பூங்கொன்றையும் வன்னியும் புனைந்தவர் அடி போற்றிக்குன்ற வார் சிலை எனும் திருப்பதிகம் மெய் குலவிய இசை பாடிநன்றும் இன்புறப் பணிந்து செல்வார் திருக்கோவலூர் நகர் சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
சென்று அணைந்து சிந்தையின் மகிழ் விருப்பொடு திகழ்திரு ஆமாத்தூர்ப்பொன் தயங்கு பூங்கொன்றையும் வன்னியும் புனைந்தவர் அடி போற்றிக்“குன்ற வார் சிலை!” எனும் திருப்பதிகம் மெய் குலவிய இசை பாடிநன்றும் இன்புறப் பணிந்து செல்வார் திருக் கோவலூர் நகர் சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

968

கோவல் நீடிய வீரட்டம் அமர்ந்தவர் குரை கழல் பணிந்து ஏத்திஆவின் ஐந்து உகந்து ஆடுவார் அறையணி நல்லூரை அணைந்து ஏத்திப்பாவலர்ந்த செந்தமிழ் கொடு பரவுவார் பரவு சீர் அடியார்கள்மேவும் அன்புறு மேன்மையாம் தன்மையை விளங்கிட அருள் செய்தார்.
சொற்பிரிப்பு
கோவல் நீடிய வீரட்டம் அமர்ந்தவர் குரைகழல் பணிந்து ஏத்திஆவின் ஐந்து உகந்து ஆடுவார் அறையணி நல்லூரை அணைந்து ஏத்திப்பா அலர்ந்த செந்தமிழ்கொடு பரவுவார் பரவு சீர் அடியார்கள்மேவும் அன்புறு மேன்மையாம் தன்மையை விளங்கிட அருள்செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

969

சீரின் மன்னிய பதிகம் முன் பாடி அத் திரு அறையணி நல்லூர்வாரின் மல்கிய கொங்கையாள் பங்கர் தம் மலை மிசை வலம் கொள்வார்பாரின் மல்கிய தொண்டர்கள் இமையவர் நாள்தொறும் பணிந்து ஏத்தும்காரின் மல்கிய சோலை அண்ணாமலை அன்பர் காட்டிடக் கண்டார்.
சொற்பிரிப்பு
சீரின் மன்னிய பதிக முன் பாடி அத் திருஅறையணி நல்லூர்வாரின் மல்கிய கொங்கையாள் பங்கர் தம் மலைமிசை வலங்கொள்வார்பாரின் மல்கிய தொண்டர்கள் இமையவர் நாடொறும் பணிந்து ஏத்தும்காரின் மல்கிய சோலை அண்ணாமலை அன்பர் காட்டிடக் கண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

970

அண்ணாமலை அங்கு அமரர்பிரான் வடிவு போன்று தோன்றுதலும்கண்ணால் பருகிக் கை தொழுது கலந்து போற்றும் காதலினால்உண்ணா முலையாள் எனும் பதிகம் பாடி தொண்டருடன் போந்துதெண்ணீர் முடியார் திருவண்ணாமலைச் சென்று சேர்வுற்றார்.
சொற்பிரிப்பு
அண்ணாமலை அங்கு அமரர் பிரான் வடிவு போன்று தோன்றுதலும்கண்ணால் பருகிக், கைதொழுது, கலந்து போற்றும் காதலினால்“உண்ணாமுலை”யாள் எனும் பதிகம் பாடித் தொண்டருடன் போந்துதெண்ணீர் முடியார் திருஅண்ணா மலையைச் சென்று சேர்வுற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

971

அங்கண் அணைவார் பணிந்து எழுந்து போற்றி செய்து அம்மலை மீதுதங்கு விருப்பில் வீற்றிருந்தார் தாள்தாமரைகள் தம் முடி மேல்பொங்கும் ஆர்வத் தொடும் புனைந்து புளகம் அலர்ந்த திருமேனிஎங்கும் ஆகிக் கண் பொழியும் இன்ப அருவி பெருக்கினார்.
சொற்பிரிப்பு
அங்கண் அணைவார் பணிந்து எழுந்து போற்றி செய்து அம்மலை மீதுதங்கு விருப்பில் வீற்றிருந்தார் தாள் தாமரைகள் தம் முடிமேல்பொங்கும் ஆர்வத்தொடும் புனைந்து புளகம் மலர்ந்த திருமேனிஎங்கும் ஆகிக் கண்பொழியும் இன்ப அருவி பெருக்கினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

972

ஆதி மூர்த்தி கழல் வணங்கி அங்கண் இனிதின் அமரும் நாள்பூத நாதர் அவர் தம்மைப் பூவார் மலரால் போற்றி இசைத்துக்காதலால் அத் திருமலையில் சில நாள் வைகிக் கமழ் கொன்றைவேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார்.
சொற்பிரிப்பு
ஆதி மூர்த்தி கழல் வணங்கி அங்கண் இனிதின் அமரும் நாள்பூத நாதர் அவர் தம்மைப் “பூவார் மல”ரால் போற்றிசைத்துக்காதலால் அத் திருமலையில் சிலநாள் வைகிக் கமழ்கொன்றைவேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

973

மங்கை பாகர் திருவருளால் வணங்கிப் போந்து வட திசையில்செங்கண் விடையார் பதி பலவும் பணிந்து புகலிச் செம்மலார்துங்க வரைகள் கான் பலவும் கடந்து தொண்டைத் திருநாட்டில்திங்கள் முடியார் இனிது அமரும் திருவோத்தூரைச் சேர்வுற்றார்.
சொற்பிரிப்பு
மங்கை பாகர் திருஅருளால் வணங்கிப் போந்து வடதிசையில்செங்கண் விடையார் பதி பலவும் பணிந்து, புகலிச் செம்மலார்துங்க வரைகள், கான் பலவும் கடந்து, தொண்டைத் திருநாட்டில்திங்கள் முடியார் இனிது அமரும் திருஓத்தூரைச் சேர்வுற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

974

தேவர் முனிவர்க்கு ஓத்து அளித்த திருவோத்தூரில் திருத் தொண்டர்தாவில் சண்பைத் தமிழ் விரகர் தாம் அங்கு அணையக் களி சிறந்துமேவும் கதலி தோரணங்கள் விளக்கு நிரைத்து நிறை குடமும்பூவும் பொரியும் சுண்ணமும் முன் கொண்டு போற்றி எதிர் கொண்டார்.
சொற்பிரிப்பு
தேவர் முனிவர்க்கு ஓத்து அளித்தார் திருஓத்தூரில் திருத்தொண்டர்தாவில் சண்பைத் தமிழ் விரகர் தாம் அங்கு அணையக் களிசிறந்துமேவும் கதலி தோரணங்கள் விளக்கு நிரைத்து நிறைகுடமும்பூவும் பொரியும் சுண்ணமும் முன் கொண்டு போற்றி எதிர்கொண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

975

சண்பை வேந்தர் தண் தரளச் சிவிகை நின்றும் இழிந்து அருளிநண்பின் மிக்க சீர் அடியார் சூழ நம்பர் கோபுரம் சூழ்விண் பின் ஆக முன் ஓங்கும் வியன் பொற்புரிசை வலம் கொண்டுபண்பு நீடிப் பணிந்து எழுந்து பரமர் கோயிலுள் அடைந்தார்.
சொற்பிரிப்பு
சண்பை வேந்தர் தண்தரளச் சிவிகை நின்றும் இழிந்தருளிநண்பின் மிக்க சீர் அடியார் சூழ நம்பர் கோபுரம் சூழ்விண், பின் ஆக முன் ஓங்கும் வியன்பொன் புரிசை வலங்கொண்டுபண்பின் நீடிப் பணிந்து எழுந்து பரமர் கோயில் உள் அடைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

976

வாரணத்தின் உரி போர்த்த மைந்தர் உமையாள் மணவாளர்ஆரணத்தின் உள் பொருளாய் நின்றார் தன்முன் அணைந்து இறைஞ்சிநாரணற்கும் பிரமற்கும் நண்ணற்கு அரிய கழல் போற்றும்காரணத்தின் வரும் இன்பக் கண்ணீர் பொழியக் கைதொழுதார்.
சொற்பிரிப்பு
வாரணத்தின் உரி போர்த்த மைந்தர், உமையாள் மணவாளர்ஆரணத்தின் உட்பொருளாய் நின்றார் தம்முன் அணைந்து இறைஞ்சிநாரணற்கும் பிரமற்கும் நண்ணற்கு அரிய கழல் போற்றும்காரணத்தின் வரும் இன்பக் கண்ணீர் பொழியக் கை தொழுதார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

977

தொழுது விழுந்து பணிந்து எழுந்து சொல் மாலைகளால் துதி செய்துமுழுதும் ஆனார் அருள் பெற்றுப் போந்து வைகி முதல்வர் தம்மைப்பொழுது தோறும் புக்கு இறைஞ்சிப் போற்றி செய்து அங்கு அமர்வார் முன்அமுது வணங்கி ஒரு தொண்டர் அமணர் திறத்து ஒன்று அறிவிப்பார்.
சொற்பிரிப்பு
தொழுது, விழுந்து, பணிந்து எழுந்து, சொன்மாலைகளால் துதி செய்து,முழுதும் ஆனார் அருள்பெற்றுப் போந்து, வைகி, முதல்வர் தமைப்பொழுது தோறும் புக்கிறைஞ்சிப் போற்றி செய்து அங்கு அமர்வார் முன்அழுது வணங்கி ஒருதொண்டர் அமணர் திறத்து ஒன்று அறிவிப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

978

அங்கை அனல் ஏற்றவர்க்கு அடியேன் ஆக்கும் பனைகள் ஆன எலாம்மங்குலுற நீள் ஆண் பனையாய்க் காயா வாகக் கண்ட அமணர்இங்கு நீர் இட்டு ஆக்குவன காய்த்தற்கு அடைவுண்டோ என்றுபொங்கு நகை செய்து இழித்து உரைத்தார் அருள வேண்டும் எனப் புகல.
சொற்பிரிப்பு
அங்கை அனல் ஏற்றவர்க்கு அடியேன் ஆக்கும் பனைகள் ஆன எலாம்மல்குல் உற நீண்டு ஆண் பனையாய்க் காயாவாகக் கண்டு அமணர்“இங்கு நீர் இட்டு ஆக்குவன காய்த்தற்கு அடைவு உண்டோ?” என்றுபொங்கு நகைசெய்து இழித்துரைத்தார், ”அருள வேண்டும்” எனப் புகல.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

979

பரமனார் திருத் தொண்டர் பண்பு நோக்கிப் பரிவு எய்தவிரவு காதலொடும் விரைந்து விமலர் கோயில் புக்கருளிஅரவும் மதியும் பகை தீர அணிந்தார் தம்மை அடி வணங்கிஇரவு போற்றித் திருப்பதிகம் இசையில் பெருக எடுத்தருளி.
சொற்பிரிப்பு
பரமனார் தம் திருத்தொண்டர் பண்பு நோக்கிப் பரிவுஎய்திவிரவு காதலொடும் விரைந்து, விமலர் கோயில் புக்கருளி,அரவும் மதியும் பகை தீர அணிந்தார் தம்மை அடி வணங்கிஇரவு போற்றித் திருப்பதிகம் இசையில் பெருக எடுத்தருளி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

980

விரும்பு மேன்மைத் திருக் கடைக் காப்பு அதனில் விமலர் அருளாலேகுரும்பை ஆண்பனை ஈனும் என்னும் வாய்மை குலவு தலால்நெருங்கும் ஏற்றுப் பனை எல்லாம் நிறைந்த குலைகளாய்க் குரும்பைஅரும்பு பெண்ணை ஆகியிடக் கண்டோர் எல்லாம் அதிசயித்தார்.
சொற்பிரிப்பு
விரும்பு மேன்மைத் திருக்கடைக்காப்பு அதனில் விமலர் அருளாலே“குரும்பை ஆண் பனை ஈனும்” என்னும் வாய்மை குலவுதலால்நெருங்கும் ஏற்றுப் பனை எல்லாம் நிறைந்த குலைகளாய்க் குரும்பைஅரும்பு பெண்ணை ஆகி இடக் கண்டோர் எல்லாம் அதிசயித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

981

சீரின் மன்னும் திருக்கடைக் காப்பு ஏற்றிச் சிவனார் அருள் பெற்றுப்பாரில் நீடும் ஆண் பனை முன் காய்த்துப் பழுக்கும் பண்பினால்நேரும் அன்பர் தம் கருத்து நேரே முடித்துக் கொடுத்து அருளிஆரும் உவகைத் திருத் தொண்டர் போற்ற அங்கண் இனிது அமர்ந்தார்.
சொற்பிரிப்பு
சீரின் மன்னும் திருக்கடைக்காப்பு ஏற்றிச், சிவனார் அருள்பெற்றுப்பாரில் நீடும் ஆண்பனை முன் காய்த்துப் பழுக்கும் பண்பினால்நேரும் அன்பர் தம் கருத்து நேரே முடித்துக் கொடுத்தருளிஆரும் உவகைத் திருத்தொண்டர் போற்ற அங்கண் இனிது அமர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

982

தென் நாட்டு அமண் மாசு அறுத்தார் தம் செய்கை கண்டு திகைத்த அமணர்அந்நாடு அதனை விட்டு அகல்வார் சிலர் தம் கையில் குண்டிகைகள்என்ன ஆவன மற்று இவை என்று தகர்ப்பார் இறைவன் ஏறு உயர்த்தபொன்னார் மேனிப் புரிசடையான் அன்றே என்று போற்றினார்.
சொற்பிரிப்பு
தென் நாட்டு அமண் மாசு அறுத்தார் தம் செய்கை கண்டு, திகைத்து,அமணர்அந்நாட்டு அதனை விட்டு அகல்வார் சிலர் தம் கையில் குண்டிகைகள்“என் ஆவன மற்று இவை?” என்று தகர்ப்பார்; “இறைவன், ஏறு உயர்த்தபொன் ஆர் மேனிப் புரிசடையான் அன்றே!” என்று போற்றினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

983

பிள்ளையார் தம் திருவாக்கில் பிறத்தலால் அத் தாலமும் முன்புஉள்ள பாசம் விட்டு அகல ஒழியாப் பிறவி தனை ஒழித்துக்கொள்ளும் நீர்மைக் காலங்கள் கழித்துச் சிவமே கூடினவால்வள்ளலார் மற்று அவர் அருளின் வாய்மை கூறின் வரம்பு என்னாம்.
சொற்பிரிப்பு
பிள்ளையார் தம் திருவாக்கில் பிறத்தலால் அத்தாலமும் முன்புஉள்ள பாசம் விட்டு அகல ஒழியாப் பிறவி தனை ஒழித்துக்கொள்ளும் நீர்மைக் காலங்கள் கழித்துச், சிவமே கூடினவால்வள்ளலார் மற்று அவர் அருளின் வாய்மை கூறின் வரம்பு என்னாம்?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

984

அங்கண் அமரர் பெருமானைப் பணிந்து போந்து ஆடு அரவினுடன்பொங்கு கங்கை முடிக்கு அணிந்தார் மகிழும் பதிகள் பல போற்றிமங்கை பாகர் அமர்ந்து அருளும் வயல் மாகறலை வழுத்திப் போய்க்கொங்கு மலர் நீர்க் குரங்கணி முட்டத்தைச் சென்று குறுகினார்.
சொற்பிரிப்பு
அங்கண் அமரர் பெருமானைப் பணிந்து போந்து ஆடு அரவின் உடன்பொங்கு கங்கை முடிக்கு அணிந்தார் மகிழும் பதிகள் பல போற்றிமங்கை பாகர் அமர்ந்து அருளும் வயல் மாகறலை வழுத்திப் போய்க்கொங்கு மலர் நீர்க் குரங்கணில் முட்டத்தைச் சென்று குறுகினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

985

ஆதி முதல்வர் குரங்கணின் முட்டத்தை அணைந்து பணிந்து ஏத்திநீதி வாழும் திருத்தொண்டர் போற்ற நிகரில் சண்பையினில்வேதமோடு சைவ நெறி விளங்க வந்த கவுணியனார்மாதோர் பாகர் தாம் மன்னும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார்.
சொற்பிரிப்பு
ஆதி முதல்வர் குரங்கணில் முட்டத்தை அணைந்து பணிந்து ஏத்திநீதி வாழும் திருத்தொண்டர் போற்ற நிகரில் சண்பையினில்வேதமோடு சைவநெறி விளக்க வந்த கவுணியனார்மாதொர் பாகர் தாம் மன்னும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

986

நீடு காஞ்சி வாழ்நரும் நிலாவு மெய்ம்மை அன்பரும்மாடு சண்பை வள்ளலார் வந்து அணைந்த ஓகையால்கூடுகின்ற இன்ப நேர் குலாவு வீதி கோலினார்காடு கொண்ட பூகம் வாழை காமர் தோரணங்களால்.
சொற்பிரிப்பு
நீடு காஞ்சி வாணரும் நிலவு மெய்ம்மை அன்பரும்மாடு சண்பை வள்ளலார் வந்து அணைந்த ஓகையால்கூடுகின்ற இன்ப நேர் குலாவு வீதி கோலினார்காடுகொண்ட பூகம் வாழை காமர் தோரணங்களால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

987

கொடி நிரைத்த வீதியில் கோலவே திகைப்புறம்கடி கொள் மாலை மொய்த்த பந்தர் கந்த நீர்த் தசும்புடன்மடிவில் பொன் விளக்கு எடுத்து மாதர் மைந்தர் மல்குவார்படி விளக்கும் அன்பரும் பரந்த பண்பில் ஈண்டுவார்.
சொற்பிரிப்பு
கொடி நிரைத்த வீதியில் கோல வேதிகைப் புறம்கடிகொள் மாலை மொய்த்த பந்தர் கந்த நீர்த் தசும்புடன்மடிவில் பொன் விளக்கு எடுத்து மாதர் மைந்தர் மல்குவார்படி விளக்கும் அன்பரும் பரந்த பண்பில் ஈண்டுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

988

கோதைமார் ஆடலும் குலாவும் தொண்டர் பாடலும்வேத கீத நாதமும் மிக்கு எழுந்து விம்மவேகாதல் நீடு காஞ்சி வாணர் கம்பலைத்து எழுந்து போய்மூது எயில் புறம்பு சென்று அணைந்து முன் வணங்கினார்.
சொற்பிரிப்பு
கோதை மாதர் ஆடலும் குலாவு தொண்டர் பாடலும்வேத கீத நாதமும் மிக்கு எழுந்து விம்மவேகாதல் நீடு கஞ்சிவாணர் கம்பலைத்து எழுந்து போய்மூது எயில் புறம்பு சென்று அணைந்து முன் வணங்கினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

989

சண்பை ஆளும் மன்னர் முன்பு தொண்டர் வந்து சார்தலும்பண்பு நீடியான முன்பு இழிந்து இறைஞ்சு பான்மை கண்டுஎண் பெருக்கும் மிக்க தொண்டர் அஞ்சலித்து எடுத்த சொல்மண் பரக்க வீழ்ந்து எழுந்து வானமுட்ட ஆர்த்தனர்.
சொற்பிரிப்பு
சண்பை ஆளும் மன்னர் முன்பு தொண்டர் வந்து சார்தலும்பண்பு நீடி யானம் முன்பு இழிந்து இறைஞ்சு பான்மை கண்டுஎண் பெருக்கு மிக்க தொண்டர் அஞ்சலித்து எடுத்த சொல்மண் பரக்க வீழ்ந்து எழுந்து வான முட்ட ஆர்த்தனர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

990

சேண் உயர்ந்த வாயில்நீடு சீர்கொள் சண்பை மன்னனார்வாண் நிலாவும் நீற்று அணி விளங்கிட மனத்தினில்பூணும் அன்பர் தம்முடன் புகுந்திடப் புறத்து உளோர்காணும் ஆசையில் குவித்த கைந்நிரை எடுத்தனர்.
சொற்பிரிப்பு
சேண் உயர்ந்த வாயில் நீடு சீ“ர்கொள் சண்பை மன்னனார்வாள் நிலாவு நீற்று அணி விளங்கிட, மனத்தினில்பூணும் அன்பர் தம்முடன் புகுந்திடப், புறத்து உள்ளோர்காணும் ஆசையில் குவித்த கைந்நிரை எடுத்தனர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

991

வியன் நெடுந் தெருவின் ஊடு மிக்க தொண்டர் ஆர்ப்பு எழக்கயல் நெடும் கண் மாதரும் காதல் நீடு மாந்தரும்புயல் பொழிந்ததாம் எனப் பூவினோடு பொற்சு(ண்)ணம்இயலுமாறு வாழ்த்து எடுத்து இரு மருங்கும் வீசினார்.
சொற்பிரிப்பு
வியன் நெடும் தெருவின் ஊடு மிக்க தொண்டர் ஆர்ப்பு எழக்கயல் நெடுங்கண் மாதரும் காதல் நீடு மாந்தரும்புயல் பொழிந்ததாம் எனப் பூவினோடு பொற்சுண்ணம்இயலுமாறு வாழ்த்து எடுத்து இருமருங்கும் வீசினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

992

இன்ன வண்ணம் யாவரும் இன்பம் எய்த எய்துவார்பின்னுவார் சடை முடிப் பிரான் மகிழ்ந்த கோயில்கள்முன் உறப் பணிந்து போய் மொய் வரைத் திருமகள்மன்னு பூசனை மகிழ்ந்த மன்னர் கோயில் முன்னினார்.
சொற்பிரிப்பு
இன்ன வண்ணம் யாவரும் இன்பம் எய்த எய்துவார்பின்னுவார் சடைமுடிப் பிரான் மகிழ்ந்த கோயில்கள்முன்னுறப் பணிந்துபோய் மொய்வரைத் திருமகள்மன்னு பூசனை மகிழ்ந்த மன்னர் கோயில் முன்னினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

993

கம்பவாணர் கோயில் வாயில் கண்டுகை குவித்து எடுத்துஉம்பர் ஓங்கு கோபுரத்தின் முன் இறைஞ்சி உள் அணைந்துஅம் பொன் மாளிகைப் புறத்தில் அன்பரோடு சூழ வந்துஇம்பர் ஞாலம் உய்ய வந்த பிள்ளையார் இறைஞ்சுவார்.
சொற்பிரிப்பு
கம்பவாணர் கோயில் வாயில் கண்டு கை குவித்து எடுத்துஉம்பர் ஓங்கு கோபுரத்தின் முன் இறைஞ்சி உள் அணைந்துஅம்பொன் மாளிகைப்புறத்தின் அன்பரோடு சூழ வந்துஇம்பர் ஞாலம் உய்ய வந்த பிள்ளையார் இறைஞ்சுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

994

செம் பொன் மலைக் கொடி தழுவக் குழைந்து அருளும் திருமேனிக்கம்பவரை வந்து எதிர் வணங்கும் கவுணியர்தம் காவலனார்பம்பு துளிக் கண்அருவி பாய்ந்து மயிர்ப் புளகம் வரத்தம்பெருகு மனக் காதல் தள்ள நிலமிசைத் தாழ்ந்தார்.
சொற்பிரிப்பு
செம்பொன்மலைக் கொடி தழுவக் குழைந்து அருளும் திருமேனிக்கம்பரை வந்து எதிர்வணங்கும் கவுணியர் தம் காவலனார்பம்புதுளிக் கண்அருவி பாய்ந்து மயிர்ப் புளகம் வரத்தம்பெருகு மனக்காதல் தள்ள நிலமிசைத் தாழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

995

பல முறையும் பணிந்தெழுந்து பங்கயச் செங்கைம் முகிழ்ப்பமலரு முகம் அளித்த திரு மணிவாயால் மறையான் என்றுஉலகுய்ய எடுத்தருளி உருகிய அன்பு என்பு உருக்கநிலவுமிசை முதற்றாளம் நிரம்பிய நீர்மையில் நிகழ.
சொற்பிரிப்பு
பல முறையும் பணிந்து எழுந்து பங்கயச் செங்கை முகிழ்ப்பமலருமுகம் அளித்த திரு மணிவாயால் “மறையான் ”என்றுஉலகு உய்ய எடுத்தருளி உருகிய அன்பு என்பு உருக்கநிலவுமிசை முதல் தாளம் நிரம்பிய நீர்மையில் நிகழ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

996

பாடினார் பணிவுற்றார் பரிவுறும் ஆனந்தக் கூத்துஆடினார் அகம் குழைந்தார் அஞ்சலி தம் சென்னியின் மேல்சூடினார் மெய்ம் முகிழ்த்தார் சூகரமும் அன்னமுமாய்த்தேடினார் இருவருக்கும் தெரிவரியார் திருமகனார்.
சொற்பிரிப்பு
பாடினார்; பணிவுற்றார்; பரிவுறும் ஆனந்தக் கூத்துஆடினார்; அகம் குழைந்தார்; அஞ்சலி தம் சென்னியின் மேல்சூடினார்; மெய்ம் முகிழ்த்தார்; சூகரமும் அன்னமுமாய்த்தேடினார் இருவருக்கும் தெரிவு அரியார் திருமகனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

997

மருவிய ஏழ் இசை பொழிய மனம் பொழியும் பேரன்பால்பெருகிய கண் மழை பொழியப் பெரும் புகலிப் பெருந்தகையார்உருகிய அன்புள் அலைப்ப உமை தழுவக் குழைந்தவரைப்பருகிய மெய் உணர்வினொடும் பரவியே புறத்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
மருவிய ஏழ் இசை பொழிய மனம்பொழியும் பேரன்பால்பெருகிய கண்மழை பொழியப் பெரும்புகலிப் பெருந்தகையார்உருகிய அன்பு உள் அலைப்ப உமை தழுவக் குழைந்தவரைப்பருகிய மெய் உணர்வினொடும் பரவியே புறத்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

998

புறத்து அணைந்த தொண்டருடன் போந்து அமைந்த திருமடத்தில்பெறற்கு அரும் பேறு உலகு உய்யப் பெற்றருளும் பிள்ளையார்மறப்பரிய காதலுடன் வந்து எய்தி மகிழ்ந்து உறைவார்அறப்பெரும் செல்வக் காமக் கோட்டம் அணைந்து இறைஞ்சினார்.
சொற்பிரிப்பு
புறத்து அணைந்த தொண்டருடன் போந்து அமைந்த திருமடத்தில்பெறற்கு அரும்பேறு உலகுய்யப் பெற்று அருளும் பிள்ளையார்மறப்பு அரிய காதலுடன் வந்து எய்தி மகிழ்ந்து உறைவார்அறப்பெருஞ் செல்வக் காமக் கோட்டம் அணைந்து இறைஞ்சினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

999

திரு ஏகம்பத்து அமர்ந்த செழுஞ்சுடரைச் சேவடியில்ஒரு போதும் தப்பாதே உள் உருகிப் பணிகின்றார்மருவு திரு இயமகமும் வளர் இருக்குக்குறள் மற்றும்பெருகும் இசைத் திருப்பதிகத் தொடை புனைந்தார் பிள்ளையார்.
சொற்பிரிப்பு
திருஏகம்பத்து அமர்ந்த செழுஞ்சுடரைச் சேவடியில்ஒருபோதும் தப்பாதே உள் உருகிப் பணிகின்றார்மருவு திரு இயமகமும் வளர் இருக்குக் குறள் மற்றும்பெருகும் இசைத் திருப்பதிகத் தொடை புனைந்தார் பிள்ளையார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1000

நீடு திருப் பொலிகாஞ்சி நெறிக்காரைக் காடு இறைஞ்சிச்சூடு மதிக் கண்ணியார் துணை மலர்ச் சேவடி பாடிஆடும் அவர் இனிது அமரும் அனேகதங்கா வதம் பரவிமாடு திருத் தானங்கள் பணிந்து ஏத்தி வைகும் நாள்.
சொற்பிரிப்பு
நீடு திருப்பொழில் காஞ்சி நெறிக்காரைக்காடு இறைஞ்சிச்சூடு மதிக் கண்ணியார் துணைமலர்ச் சேவடி பாடிஆடும் அவர் இனிது அமரும் அனேகதங்காவதம் பரவிமாடு திருத்தானங்கள் பணிந்து ஏத்தி வைகும் நாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1001

எண் திசையும் போற்றி இசைக்கும் திருப்பதி மற்று அதன் புறத்துத்தொண்டருடன் இனிது ஏகித் தொல்லை விடம் உண்டு இருண்டகண்டர் மகிழ் மேற்றளியும் முதலான கலந்து ஏத்திமண்டு பெரும் காதலினால் வணங்கி மீண்டு இனிது இருந்தார்.
சொற்பிரிப்பு
எண் திசையும் போற்றிசைக்கும் திருப்பதி மற்று அதன் புறத்துத்தொண்டருடன் இனிது ஏகித் தொல்லை விடம் உண்டு இருண்டகண்டர் மகிழ் மேற்றளியும் முதல் ஆன கலந்து ஏத்திமண்டுபெரும் காதலினால் வணங்கி மீண்டு இனிது இருந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1002

அப்பதியில் விருப்பினோடும் அங்கணரைப் பணிந்து அமர்வார்செப்பரிய புகழ்ப் பாலித் திரு நதியின் தென் கரை போய்மைப் பொலியும் கண்டர் திருமாற் பேறு மகிழ்ந்து இறைஞ்சிமுப்புரம் செற்றவர் தம்மை மொழி மாலை சாத்தினார்.
சொற்பிரிப்பு
அப்பதியில் விருப்பினொடும் அங்கணரைப் பணிந்து அமர்வார்செப்பரிய புகழ்ப் பாலித் திரு நதியின் தென்கரைபோய்மைப்பொலியும் கண்டர் திருமாற்பேறு மகிழ்ந்து இறைஞ்சிமுப்புரம் செற்றவர் தம்மை மொழிமாலை சாத்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1003

திருமாற் பேறு உடையவர் தம் திருவருள் பெற்று எழுந்தருளிக்கருமாலும் கருமாவாய்க் காண்பரிய கழல் தாங்கிமருவாற்றல் மழவிடையார் திருவல்லம் வணங்கித் தம்பெருமாற்குத் திருப்பதிகப் பெரும் பிணையல் அணிவித்தார்.
சொற்பிரிப்பு
திருமாற்பேறு உடையவர் தம் திருஅருள் பெற்று எழுந்தருளிக்கருமாலும் கருமாவாய்க் காண்பு அரிய கழல் தாங்கிமருஆற்றல் மழவிடையார் திருவல்லம் வணங்கித் தம்பெருமாற்குத் திருப்பதிகப் பெரும் பிணையல் அணிவித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1004

அங்கு உள்ள பிற பதியில் அரிக்கு அரியார் கழல் வணங்கிபொங்கு புனல் பால் ஆற்றின் புடையில் வடபால் இறைவர்எங்கும் உறை பதி பணிவார் இலம்பை அம் கோட்டூர் இறைஞ்சிச்செங்கண் விடை உகைத்தவரைத் திருப்பதிகம் பாடினார்.
சொற்பிரிப்பு
அங்கு உள்ள பிற பதியில் அரிக்கு அரியார் கழல் வணங்கிப்பொங்கு புனல் பால் யாற்றின் புடையில் வட பால் இறைவர்எங்கும் உறை பதி பணிவார் இலம்பையங்கோட்டூர் இறைஞ்சிச்செங்கண் விடை உகைத்தவரைத் திருப்பதிகம் பாடினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1005

திருத்தொண்டர் பலர் சூழத் திரு விற் கோலமும் பணிந்துபொருட் பதிகத் தொடை மாலை புரம் எரித்த படி பாடிஅருட்புகலி ஆண் தகையார் தக்கோலம் அணைந்தருளிவிருப்பினொடும் திருவூறல் மேவினார் தமைப் பணிந்தார்.
சொற்பிரிப்பு
திருத்தொண்டர் பலர் சூழத் திருவிற்கோலமும் பணிந்துபொருட் பதிகத் தொடைமாலை புரம் எரித்தபடி பாடிஅருட்புகலி ஆண்டகையார் தக்கோலம் அணைந்தருளிவிருப்பினொடும் திருஊறல் மேவினார் தமைப் பணிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1006

தொழுது பல முறை போற்றிச் சுரர் குருவுக்கு இளைய முனிவழுவில் தவம் புரிந்து ஏத்த மன்னினார் தமை மலர்ந்தபழுதில் செழும் தமிழ் மாலைப் பதிக இசை புனைந்தருளிமுழுதும் அளித்தவர் அருளால் போந்தனர் முத்தமிழ் விரகர்.
சொற்பிரிப்பு
தொழுது பலமுறை போற்றிச் சுரர் குருவுக்கு இளைய முனிவழுவில் தவம் புரிந்து ஏத்த மன்னினார் தமை மலர்ந்தபழுதில் செழும் தமிழ்மாலைப் பதிக இசை புனைந்தருளிமுழுதும் அளித்தவர் அருளால் போந்தனர் முத்தமிழ் விரகர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1007

குன்ற நெடும் சிலையாளர் குலவிய பல் பதி பிறவும்நின்ற விருப்புடன் இறைஞ்சி நீடு திருத் தொண்டருடன்பொன் தயங்கு மணி மாடப் பூந்தராய்ப் புரவலனார்சென்று அணைந்தார் பழையனூர்த் திருவாலங் காட்டு அருகு.
சொற்பிரிப்பு
குன்ற நெடும் சிலையாளர் குலவிய பல்பதி பிறவும்நின்ற விருப்புடன் இறைஞ்சி நீடு திருத் தொண்டருடன்பொன் தயங்கு மணிமாடப் பூந்தராய்ப் புரவலனார்சென்று அணைந்தார் பழையனூர்த் திருஆலங்காட்டு அருகு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1008

இம்மையிலே புவி உள்ளோர் யாரும் காண ஏழ் உலகும் போற்றி இசைப்ப எம்மை ஆளும்அம்மை திருத் தலையாலே நடந்து போற்றும் அம்மையப்பர் திருவாலங் காடாம் என்றுதம்மை உடையவர் மூதூர் மிதிக்க அஞ்சிச் சண்பை வரும் சிகாமணியார் சாரச் சென்றார்செம்மை நெறி வழுவாத பதியின் மாடோர் செழும் பதியில் அன்று இரவு பள்ளி சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
இம்மையிலே புவி உள்ளோர் யாரும் காண, ஏழ் உலகும் போற்றிசைப்ப எம்மை ஆளும் அம்மையப்பர் திருஆலங்காடாம் என்றுதம்மை உடையவர் மூதூர் மிதிக்க அஞ்சிச் சண்பை வரும் சிகாமணியார் சாரச் சென்றுசெம்மை நெறி வழுவாத பதியின் மாடு ஓர் செழும்பதியில் அன்று இரவு பள்ளி சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1009

மாலை இடை யாமத்துப் பள்ளி கொள்ளும் மறையவனார் தம் முன்பு கனவிலே வந்துஆல வனத்து அமர்ந்து அருளும் அப்பர் நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு என்று அருளிச் செய்யஞாலம் இருள் நீங்க வரும் புகலி வேந்தர் நடு இடை யாமத்தினிடைத் தொழுது உணர்ந்துவேலை விடம் உண்டவர் தம் கருணை போற்றி மெய் உருகித் திருப்பதிகம் விளம்பல் உற்றார்.
சொற்பிரிப்பு
மாலை இடை யாமத்துப் பள்ளி கொள்ளும் மறையவனார் தம் முன்பு கனவிலே வந்துஆலவனத்து அமர்ந்து அருளும் அப்பர் “நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு?” என்று அருளிச் செய்யஞாலம் இருள் நீங்க வரும் புகலி வேந்தர் நடு இடை யாமத்தின் இடைத் தொழுது உணர்ந்து,வேலை விடம் உண்டவர் தம் கருணை போற்றி, மெய் உருகித், திருப்பதிகம் விளம்பல் உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1010

துஞ்ச வருவார் என்றே எடுத்த ஓசைச் சுருதி முறை வழுவாமல் தொடுத்த பாடல்எஞ்சல் இலா வகை முறையே பழையனூரார் இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்திஅஞ்சன மாகரி உரித்தார் அருளாம் என்றே அருளும் வகை திருக்கடைக் காப்பு அமையச்சாத்திப்பஞ்சுரமாம் பழைய திறம் கிழமை கொள்ளப் பாடினார் பார் எல்லாம் உய்ய வந்தார்.
சொற்பிரிப்பு
“துஞ்ச வருவார்” என்றே எடுத்த ஓசைச் சுருதிமுறை வழுவாமல் தொடுத்த பாடல்எஞ்சல் இலா வகை முறையே பழையனூரார் இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்திஅஞ்சன மாகரி உரித்தார் அருளாம்” என்றே அருளும் வகை திருக்கடைக்காப்பு அமையச் சாத்திப்பஞ்சுரமாம் பழைய திறம் கிழமை கொள்ளப் பாடினார் பார் எல்லாம் உய்ய வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1011

நீடும் இசைத் திருப்பதிகம் பாடிப் போற்றி நெடும் கங்குல் இருள் நீங்கி நிகழ்ந்த காலைமாடு திருத் தொண்டர் குழாம் அணைந்த போது மாலையினில் திரு ஆல வனத்து மன்னிஆடும் அவர் அருள் செய்த படியை எல்லாம் அருளிச் செய்து அகம்மலரப் பாடி ஏத்திச்சேடர் பயில் திருப்பதியைத் தொழுது போந்து திருப்பாசூர் அதன் மருங்கு செல்லல் உற்றார்.
சொற்பிரிப்பு
நீடும் இசைத் திருப்பதிகம் பாடிப் போற்றி நெடுங்கங்குல் இருள் நீங்கி நிகழ்ந்த காலைமாடு திருத்தொண்டர் குழாம் அணைந்த போது மாலையினில் திருஆலவனத்து மன்னி,ஆடும் அவர் அருள்செய்த படியை எல்லாம் அருளிச் செய்து, அகமலரப் பாடி ஏத்திச்சேடர் பயில் திருப்பதியைத் தொழுது போந்து திருப்பாசூர் அதன் மருங்கு செல்லல் உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1012

திருப்பாசூர் அணைந்தருளி அங்கு மற்றச் செழும் பதியோர் எதிர் கொள்ளச் சென்று புக்குப்பொருப்பு அரையன் மடப்பாவை இடப் பாகத்துப் புராதனர் வேய் இடம் கொண்ட புனிதர் கோயில்விருப்பினுடன் வலம் கொண்டு புக்குத் தாழ்ந்து வீழ்ந்தெழுந்து மேனி எல்லாம் முகிழ்ப்ப நின்றேஅருள் கருணைத் திருவாளன் நாமம் சிந்தை இடையார் என்று இசைப் பதிகம் அருளிச் செய்தார்.
சொற்பிரிப்பு
திருப்பாசூர் அணைந்தருளி அங்கு மற்றச் செழும்பதியோர் எதிர்கொள்ளச் சென்று புக்குப்பொருப்பு அரையன் மடப்பாவை இடப்பாகத்துப் புராதனர் வேய் இடம் கொண்ட புனிதர் கோயில்விருப்பின் உடன் வலங்கொண்டு புக்குத் தாழ்ந்து வீழ்ந்து எழுந்து மேனி எலாம் முகிழ்ப்ப நின்றேஅருட்கருணைத் திருவாளன் நாமம் “சிந்தை இடையார்” என்று இசைப்பதிகம் அருளிச் செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1013

மன்னு திருப்பதிக இசைப் பாடிப் போற்றி வணங்கிப் போந்து அப்பதியில் வைகி மாடுபிஞ்ஞகர் தம் வெண் பாக்கம் முதலாய் உள்ள பிறபதிகள் பணிந்து அணைவார் பெருகும் அன்பால்முன் நிறைந்த திருவாய் மஞ்சன நீர் ஆட்டும் முதல் வேடர் கண்ணப்ப நாயனாரைஉன்னி ஒளிர் காளத்தி மலை வணங்க உற்ற பெரு வேட்கையுடன் உவந்து சென்றார்.
சொற்பிரிப்பு
மன்னு திருப்பதிக இசை பாடிப் போற்றி வணங்கிப் போந்து, அப்பதியில் வைகி, மாடுபிஞ்ஞகர் தம் வெண்பாக்கம் முதலாய் உள்ள பிறபதிகள் பணிந்து அணைவார், பெருகும் அன்பால்முன் நிறைந்த திருவாய் மஞ்சன நீர் ஆட்டும் முதல் வேடர் கண்ணப்ப நாயனாரைஉன்னி, ஒளிர் காளத்தி மலை வணங்க உற்ற பெரு வேட்கை உடன் உவந்து சென்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1014

மிக்க பெரும் காதலுடன் தொண்டர் சூழ மென்புனல் நாட்டினை அகன்று வெற்பும் கானும்தொக்க பெருவன் புலக்கான் அடைந்து போகிச் சூல கபாலக் கரத்துச் சுடரும் மேனிமுக்கண் முதல் தலைவன் இடம் ஆகி உள்ள முகில் நெருங்கும் காரி கரை முன்னர் சென்றுபுக்கு இறைஞ்சி போற்றி இசைத்து அப் பதியில் வைகிப் பூதியரோடு உடன் மகிழ்ந்தார் புகலி வேந்தர்.
சொற்பிரிப்பு
மிக்க பெரும் காதலுடன் தொண்டர் சூழ மென்புனல் நாட்டினை அகன்று, வெற்பும் கானும்தொக்க பெரு வன்புலக் கான் அடைந்து போகிச் சூல கபாலக் கரத்துச் சுடரு மேனிமுக்கண் முதல் தலைவன் இடம் ஆகி உள்ள முகில் நெருங்கு காரிகரை முன்னர்ச் சென்றுபுக்கு இறைஞ்சிப் போற்றிசைத்து அப்பதியில் வைகிப் பூதியரோடு உடன் மகிழ்ந்தார் புகலி வேந்தர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1015

இறைவர் திருக்காரிகரை இறைஞ்சி அப்பால் எண்ணில் பெருவரைகள் இருமருங்கும் எங்கும்நிறை அருவி நிரைபலவாய் மணியும் பொன்னும் நிறை துவலை புடை சிதறி நிகழ் பவாகிஅறை கழல் வானவர்க்கு இறைவன் குலிச ஏற்றால் அற்ற சிறை பெற்றவன் மேல் எழுவதற்குச்சிறகு அடித்துப் பறக்க முயன்று உயர்ந்த போலும் சிலை நிலத்தில் எழுந்தருளிச் செல்லா நின்றார்.
சொற்பிரிப்பு
இறைவர் திருக்காரிகரை இறைஞ்சி, அப்பால், எண்ணில் பெருவரைகள் இருமருங்கும் எங்கும்நிறை அருவி நிரை பலவாய் மணியும் பொன்னும் நிறை துவலை புடை சிதறி நிகழ்ப ஆகிஅறைகழல் வானவர்க்கு இறைவன் குலிச ஏற்றால் அற்ற சிறை பெற்று அவன்மேல் எழுவதற்குச்சிறகு அடித்துப் பறக்க முயன்று உயர்ந்த போலும் சிலை நிலத்தில் எழுந்தருளிச் செல்லா நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1016

மாதவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல மணி முத்தின் பரிச்சின்னம் வரம்பு இன்று ஆகப்பூதி நிறை கடல் அணைவது என்னச் சண்பைப் புரவலனார் எழுந்தருளும் பொழுது சின்னத்தீதில் ஒலி பல முறையும் பொங்கி எங்கும் திருஞான சம்பந்தன் வந்தான் என்னும்நாதம் நிறை செவியினவாய் மாக்கள் எல்லாம் நலம் மருவு நினைவு ஒன்றாய் மருங்கு நண்ண.
சொற்பிரிப்பு
மாதவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல மணிமுத்தின் பரிச்சின்னம் வரம்பு இன்று ஆகப்பூதி நிறை கடல் அணைவது என்னச், சண்பைப் புரவலனார் எழுந்தருளும் பொழுது, சின்னத்தீதில் ஒலி பலமுறையும் பொங்கி எங்கும் “திருஞான சம்பந்தன் வந்தான்” என்னும்நாதம் நிறை செவியினவாய் மாக்கள் எல்லாம் நலமருவு நினைவு ஒன்றாய் மருங்கு நண்ண.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1017

கானவர் தம் குலம் உலகு போற்ற வந்த கண்ணப்பர் திருப் பாதச் செருப்பு தோயமான வரிச் சிலை வேட்டை ஆடும் கானும் வான மறை நிலை பெரிய மரமும் தூறும்ஏனை இமையோர் தாமும் இறைஞ்சி ஏத்தி எய்தவரும் பெருமையவாம் எண் இலாததானமும் மற்றவை கடந்து திருக் காளத்தி சார எழுந்தருளினார் சண்பை வேந்தர்.
சொற்பிரிப்பு
கானவர் தம் குலம் உலகு போற்ற வந்த கண்ணப்பர் திருப்பாதச் செருப்புத் தோயமான வரிச் சிலை வேட்டை ஆடும் கானும், வானம் மறை நிலை பெரிய மரமும் தூறும்ஏனை இமையோர் தாமும் இறைஞ்சி ஏத்தி எய்த வரும் பெருமையவாம் எண் இலாததானமும் மற்று அவை கடந்து திருக்காளத்தி சார எழுந்தருளினார் சண்பை வேந்தர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1018

அம்பொன் மலைக் கொடி முலையாள் குழைத்த ஞானத்து அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார் என்றுசெம்பொன் மலை வில்லியார் திருக்காளத்தி சேர்ந்த திருத் தொண்டர் குழாம் அடைய ஈண்டிப்பம்பு சடைத் திரு முனிவர் கபாலக் கையர் பல வேடச் சைவர் குல வேடர் மற்றும்உம்பர் தவம் புரிவார் அப்பதியில் உள்ளோற் உடன் விரும்பி எதிர்கொள்ள உழைச் சென்று உற்றார்.
சொற்பிரிப்பு
“அம்பொன்மலைக் கொடி,முலைப்பால் குழைத்த ஞானத்து அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார்” என்றுசெம்பொன் மலை வில்லியார் திருக்காளத்த சேர்ந்த திருத்தொண்டர் குழாம் அடைய ஈண்டிப்பம்பு சடைத் திருமுனிவர், கபாலக் கையர், பலவேடச் சைவர்,குல வேடர், மற்றும் உடன் விரும்பி எதிர்கொள்ள உழைச்சென்று உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1019

திசை அனைத்தும் நீற்றின் ஒளி தழைப்ப மண் மேல் சிவலோகம் அணைந்தது எனச் சென்றபோதுமிசை விளங்கும் மணி முத்தின் சிவிகை நின்றும் வேத பாரகர் இழிந்து வணங்கி மிக்கஅசைவில் பெருந் தொண்டர் குழாம் தொழுது போற்றி அர எனும் ஓசையின் அண்டம் நிறைப்ப அன்பால்இசை விளங்கும் தமிழ் விரகர் திருக்காளத்தித் திருமலை இம் மலைகளில் யாது என்று கேட்டார்.
சொற்பிரிப்பு
திசை அனைத்தும் நீற்றின் ஒளி தழைப்ப, மண்மேல் சிவலோகம் அணைந்தது எனச் சென்ற போதுமிசை விளங்கும் மணிமுத்தின் சிவிகை நின்றும் வேத பாரகர் இழிந்து வணங்கி மிக்கஅசைவில் பெரும் தொண்டர் குழாம் தொழுது போற்றி “அர” எனும் ஓசையின் அண்டம் நிறைப்ப, அன்பால்,இசை விளங்கும் தமிழ் விரகர் “திருக்காளத்தித் திருமலை இம் மலைகளில் யாது?” என்று கேட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1020

வந்து அணைந்த மாதவத்தோர் வணங்கித் தாழ்ந்து மறைவாழ்வே சைவ சிகாமணியேதோன்றும்இந்த மலை காளனோடு அத்தி தம்மில் இகலி வழிபாடு செய இறைவர் மேவும்அந்தமில் சீர்க் காளத்தி மலையாம் என்ன அவனிமேல் பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டுசிந்தை களி மகிழ்ச்சி வரத் திரு விராகம் வானவர்கள் தானவர் என்று எடுத்துச் செல்வார்.
சொற்பிரிப்பு
வந்து அணைந்த மாதவத்தோர் வணங்கித் தாழ்ந்து “மறை வாழ்வே! சைவ சிகாமணியே!, தோன்றும்இந்த மலை காளனோடு அத்தி தம்மில் இகலி, வழிபாடுசெய, இறைவர் மேவும்அந்தம் இல் சீர்க் காளத்தி மலையாம்” என்ன அவனி மேல் பணிந்து எழுந்து, அஞ்சலி மேல் கொண்டுசிந்தை களி மகிழ்ச்சி வரத், திருவிராகம் “வானவர்கள் தானவர்” என்று எடுத்துச் செல்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1021

திருந்திய இன்னிசை வகுப்பு திருக் கண்ணப்பர் திருத் தொண்டு சிறப்பித்துத் திகழப் பாடிப்பொருந்து பெரும் தவர் கூட்டம் போற்ற வந்து பொன் முகலிக் கரை அணைந்து தொழுது போகிஅருந்தவர்கள் எம் மருங்கு மிடைந்து செல்ல ஆளுடைப் பிள்ளையார் அயன் மால் தேடும்மருந்து வெளியே இருந்த திருக்காளத்தி மலை அடிவாரம் சார வந்து தாழ்ந்தார்.
சொற்பிரிப்பு
திருந்திய இன் இசை வகுப்புத் திருக்கண்ணப்பர் திருத்தொண்டு சிறப்பித்துத் திகழப் பாடிப்பொருந்து பெருந்தவர் கூட்டம் போற்ற வந்து பொன்முகலிக் கரை அணைந்து, தொழுது, போகி,அருந்தவர்கள் எம்மருங்கும் மிடைந்து செல்ல ஆளுடைய பிள்ளையார், அயன் மால் தேடும்மருந்து வெளியே இருந்த திருக்காளத்தி மலை அடிவாரம் சார வந்து தாழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1022

தாழ்ந்து எழுந்து திருமலையைத் தொழுது கொண்டே தடம் சிலாதல சோபானத்தால் ஏறிவாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில் மருங்கு இறைஞ்சி உட்புகுந்து வளர் பொற் கோயில்சூழ்ந்து வலம் கொண்டு இறைவர் திருமுன்பு எய்தித் தொழுது தலை மேல் கொண்ட செங்கை போற்றிவீழ்ந்து எழுவார் கும்பிட்ட பயன் காண்பார் போல் மெய் வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்.
சொற்பிரிப்பு
தாழ்ந்து எழுந்து, திருமலையைத் தொழுது கொண்டே தடஞ் சிலாதல சோபானத்தால் ஏறிவாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில் மருங்கு இறைஞ்சி உள் புகுந்து, வளர்பொன் கோயில்சூழ்ந்து வலம் கொண்டு, இறைவர் திருமுன்பு எய்தித் தொழுது, தலை மேற்கொண்ட செங்கை போற்றி,வீழ்ந்து எழுவார் கும்பிட்ட பயன் காண்பார்போல் மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1023

உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை உருவினையும் அவ் அன்பின் உள்ளே மன்னும்வெள்ளச் செஞ்சடைக் கற்றை நெற்றிச் செங்கண் விமலரையும் உடன் கண்ட விருப்பும் பொங்கிப்பள்ளத்தில் இழி புனல் போல் பரந்து செல்லப் பைம் பொன் மலைவல்லி பரிந்து அளித்த செம்பொன்வள்ளத்தில் ஞான ஆரமுதம் உண்டார் மகிழ்ந்து எழுந்து பல முறையும் வணங்குகின்றார்.
சொற்பிரிப்பு
உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை உருவினையும் அவ்அன்பின் உள்ளே மன்னும்வெள்ளச் செஞ்சடைக் கற்றை நெற்றிச் செங்கண் விமலரையும் உடன் கண்ட விருப்பும் பொங்கிப்பள்ளத்தில் இழிபுனல்போல் பரந்து செல்லப் பைம்பொன்மலை வல்லி பரிந்து அளித்த செம்பொன்வள்ளத்தில் ஞான ஆர் அமுதம் உண்டார் மகிழ்ந்து எழுந்து பலமுறையும் வணங்குகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1024

பங்கயக்கண் அருவி நீர் பாய நின்று பரவும் இசைத் திருப்பதிகம் பாடி ஆடிதங்கு பெரும் களி காதல் தகைந்து தட்பத் தம் பெருமான் கழல் போற்றும் தன்மை நீடஅங்கு அரிதில் புறம் போந்து அங்கு அயன் மால் போற்ற அரியார் தம் திருமலைக் கீழ் அணைந்து இறைஞ்சிப்பொங்கு திருத்தொண்டர் மடம் காட்ட அங்குப் புக்கருளி இனிது அமர்ந்தார் புகலி வேந்தர்.
சொற்பிரிப்பு
பங்கயக்கண் அருவி நீர் பாய நின்று பரவும் இசைத் திருப்பதிகம் பாடி ஆடித்தங்கு பெரும் களிகாதல் தகைந்து தட்பத் தம்பெருமான் கழல் போற்றும் தன்மை நீடஅங்கு அரிதில் புறம்போந்து அங்கு அயன் மால் போற்ற அரியார் தம் திருமலைக் கீழ் அணைந்து இறைஞ்சிப்பொங்கு திருத்தொண்டர் மடம் காட்ட அங்குப் புக்கு அருளி இனிது அமர்ந்தார் புகலி வேந்தர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1025

யாவர்களும் அறிவரிய இறைவன் தன்னை ஏழ் உலகும் உடையானை எண் இலாததேவர்கள் தம் பெருமானைத் திருக்காளத்தி மலையின் மிசை வீற்றிருந்த செய்ய தேனைப்பூவலரும் பொழில் புடைசூழ் சண்பை ஆளும் புரவலனார் காலங்கள் தோறும் புக்குப்பாமலர் கொண்டு அடி போற்றிப் பருகி ஆர்ந்து பண்பு இனிய திருப்பதியில் பயிலும் நாளில்.
சொற்பிரிப்பு
யாவர்களும் அறிவு அரிய இறைவன் தன்னை, ஏழ் உலகும் உடையானை, எண் இலாததேவர்கள் தம் பெருமானைத், திருக்காளத்தி மலையின் மிசை வீற்றிருந்த செய்ய தேனைப்பூ அலரும் பொழில்புடை சூழ் சண்பை ஆளும் புரவலனார் காலங்கள் தோறும் புக்குப்பாமலர் கொண்டு அடி போற்றிப் பருகி ஆர்ந்து பண்பு இனிய திருப்பதியில் பயிலும் நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1026

அங்கண் வடதிசை மேலும் குடக்கின் மேலும் அரும் தமிழின் வழக்கு அங்கு நிகழாது ஆகதிங்கள் புனை முடியார் தம் தானம் தோறும் சென்று தமிழ் இசை பாடும் செய்கை போலமங்கை உடன் வானவர்கள் போற்றி இசைப்ப வீற்று இருந்தார் வட கயிலை வணங்கிப் பாடிசெம் கமல மலர் வாவித் திருக்கேதாரம் தொழுது திருப்பதிக இசை திருந்த பாடி.
சொற்பிரிப்பு
அங்கண் வட திசை மேலும் குடக்கின் மேலும் அருந்தமிழின் வழக்கு அங்கு நிகழாது ஆகத்திங்கள் புனை முடியார் தம் தானம் தோறும், சென்று, தமிழ் இசை பாடும் செய்கை போலமங்கை உடன் வானவர்கள் போற்றி இசைப்ப வீற்றிருந்தார் வடகயிலை வணங்கிப் பாடிச்செங்கமல மலர் வாவித் திருக்கேதாரம் தொழுது திருப்பதிக இசை திருந்தப் பாடி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1027

கூற்றுதைத்தார் மகிழ்ந்த கோ கரணம் பாடி குலவு திருப் பருப்பதத்தின் கொள்கைபாடிஏற்றின் மிசை வருவார் இந்திரன் தன் நீல பருப்பதமும் பாடி மகிழ்ந்து இறைவர் தானம்போற்றிய சொல் மலர் மாலை பிறவும் பாடிப் புகலியார் தம் பெருந் தகையார் புனிதம் ஆகும்நீற்றின் அணி கோலத்துத் தொண்டர் சூழ நெடிது மகிழ்ந்து அப்பதியில் நிலவுகின்றார்.
சொற்பிரிப்பு
கூற்று உதைத்தார் மகிழ்ந்த கோகரணம் பாடிக் குலவு திருப்பருப்பதத்தின் கொள்கை பாடிஏற்றின்மிசை வருவார் இந்திரன் தன் நீல பருப்பதமும் பாடி மற்று இறைவர் தானம்போற்றிய சொன்மலர் மாலை பிறவும் பாடிப் புகலியர் தம் பெருந்தகையார் புனிதம் ஆகும்நீற்றின் அணி கோலத்துத் தொண்டர் சூழ நெடிது மகிழ்ந்து அப்பதியில் நிலவுகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1028

தென் திசையில் கயிலை எனும் திருக்காளத்தி போற்றி இனிது அமர்கின்றார் திரை சூழ் வேலைஒன்று திரு ஒற்றியூர் உறைவார் தம்மை இறைஞ்சுவது திரு உள்ளத்து உன்னி அங்கண்இன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார் எந்தையார் இணை அடி என் மனத்த என்றுபொன் தரளம் கொழித்து இழி பொன் முகலி கூடப் புனைந்த திருப்பதிக இசை போற்றிப் போந்தார்.
சொற்பிரிப்பு
தென்திசையில் கயிலை எனும் திருக்காளத்தி போற்றி இனிது அமர்கின்றார் திரை சூழ் வேலைஒன்று திரு ஒற்றியூர் உறைவார் தம்மை இறைஞ்சுவது திருஉள்ளத்து உன்னி அங்கண்இன்தமிழின் விரகர், அருள் பெற்று மீள்வார் “எந்தையார் இணை அடி என் மனத்த” என்றுபொன்தரளம் கொழித்து இழி பொன் முகலி கூடப் புனைந்த திருப்பதிக இசை போற்றிப் போந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1029

மன்னு புகழ்த் திருத் தொண்டர் குழாத்தினொடும் மறைவாழ வந்தவர் தாம் மலையும் கானும்முன் அணைந்த பதி பிறவும் கடந்து போந்து முதல்வனார் உறைபதிகள் பலவும் போற்றிப்பன் மணிகள் பொன்வர் அன்றி அகிலும் சந்தும் பொருது அலைக்கும் பாலி வடகரையில் நீடுசென்னி மதி அணிந்தவர்தம் திருவேற்காடு சென்று அணைந்தார் திருஞானம் உண்ட செல்வர்.
சொற்பிரிப்பு
மன்னு புகழ்த் திருத்தொண்டர் குழாத்தினோடும் மறை வாழ வந்தவர் தாம் மலையும், கானும்,முன்அணைந்த பதி பிறவும் கடந்து போந்து, முதல்வனார் உறைபதிகள் பலவும் போற்றிப்பன்மணிகள் பொன்வரன்றி அகிலும் சந்தும் பொருது அலைக்கும் பாலி வட கரையில் நீடுசென்னிமதி அணிந்தவர் தம் திருவேற்காடு சென்று அணைந்தார் திருஞானம் உண்ட செல்வர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1030

திருவேற்காடு அமர்ந்த செழுஞ் சுடர் பொற் கோயில் சென்று அணைந்து பணிந்து திருப்பதிகம் பாடிவரு வேற்று மனத்து அவுணர் புரங்கள் செற்றார் வலிதாயம் வந்து எய்தி வணங்கிப் போற்றிஉரு வேற்றார் அமர்ந்து உறையும் ஓத வேலை ஒற்றியூர் கை தொழச் சென்று உற்ற போதுபெரு வேட்கை தருவாழ்வு பெற்ற தொண்டர் பெரும் பதியோர் எதிர் கொள்ளப் பேணி வந்தார்.
சொற்பிரிப்பு
திருவேற்காடு அமர்ந்த செழும் சுடர் பொன் கோயில் சென்று அணைந்து பணிந்து திருப்பதிகம் பாடிவருவேற்று மனத்து அவுணர் புரங்கள் செற்றார் வலிதாயம் வந்து எய்தி, வணங்கிப் போற்றிஉரு ஏற்றார் அமர்ந்து உறையும் ஓத வேலை ஒற்றியூர் கைதொழச் சென்று உற்ற போதுபெருவேட்கை தருவாழ்வு பெற்ற தொண்டர், பெரும்பதியோர் எதிர்கொள்ளப் பேணிவந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1031

மிக்க திருத் தொண்டர் தொழுது அணையத் தாமும் தொழுது இழிந்து விடையவன் என்று எடுத்துப் பாடிமைக் குலவு கண்டத்தார் மகிழும் கோயில் மன்னு திருக் கோபுரத்து வந்து தாழ்ந்துதக்க திருக் கடைக் காப்புச் சாற்றித் தேவர் தம் பெருமான் திருவாயில் ஊடு சென்றுபுக்கருளி வலம் கொண்டு புனிதர் முன்பு போற்று எடுத்துப் படியின் மேல் பொருந்த வீழ்ந்தார்.
சொற்பிரிப்பு
மிக்க திருத்தொண்டர் தொழுது அணையத், தாமும் தொழுது இழிந்து, “விடையவன்” என்று எடுத்துப் பாடிமைக்குலவு கண்டத்தார் மகிழும் கோயில் மன்னு திருக்கோபுரத்து வந்து தாழ்ந்துதக்க திருக்கடைக் காப்புச் சாற்றித் தேவர் தம்பெருமான் திருவாயில் ஊடு சென்றுபுக்கு அருளி வலங்கொண்டு புனிதர் முன்பு போற்றெடுத்துப் படியின் மேல் பொருந்த வீழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1032

பொன் திரள்கள் போல் புரிந்த சடையார் தம்பால் பொங்கி எழும் காதல் மிகப் பொழிந்து விம்மிப்பற்றி எழும் மயிர்ப் புளகம் எங்கும் ஆகிப் பரந்து இழியும் கண் அருவி பாய நின்றுசொல் திகழும் திருப்பதிகம் பாடி ஏத்தித் தொழுது புறத்து அணைந்தருளித் தொண்டரோடும்ஒற்றி நகர் காதலித்து அங்கு இனிது உறைந்தார் உலகுய்ய உலவாத ஞானம் உண்டார்.
சொற்பிரிப்பு
பொன்திரள்கள் போல் புரிந்த சடையார் தம்பால் பொங்கி எழும் காதல் மிகப் பொழிந்து விம்மிப்பற்றி எழும் மயிர்ப்புளகம் எங்கும் ஆகிப் பரந்து இழியும் கண்அருவி பாய நின்றுசொல் திகழும் திருப்பதிகம் பாடி ஏத்தித் தொழுது புறத்து அணைந்தருளித் தொண்டரோடும்ஒற்றிநகர் காதலித்து அங்கு இனிது உறைந்தார் உலகு உய்ய உலவாத ஞானம் உண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1033

இன்ன தன்மையில் பிள்ளையார் இருந்தனர் இப்பால்பன்னு தொல் புகழ்த் திரு மயிலாப்புரிப் பதியில்மன்னு சீர்ப் பெரும் வணிகர் தம் தோன்றலார் திறத்துமுன்னம் எய்தியது ஒன்றினை நிகழ்ந்தவா மொழிவாம்.
சொற்பிரிப்பு
இன்ன தன்மையில் பிள்ளையார் இருந்தனர்; இப்பால்பன்னு தொல் புகழ் திருமயிலாபுரிப் பதியில்மன்னு சீர்ப் பெருவணிகர் தம் தோன்றலார் திறத்துமுன்னம் எய்தியது ஒன்றினை நிகழ்ந்தவா மொழிவாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1034

அரு நிதித் திறம் பெருக்குதற்கு அரும்கலம் பலவும்பொரு கடல் செலப் போக்கி அப் பொருள் குவை நிரம்பவரும் மரக்கலம் மனைப் படப்பு அணைக்கரை நிரைக்கும்இரு நிதிப் பெரும் செல்வத்தின் எல்லையில் வளத்தார்.
சொற்பிரிப்பு
அருநிதித் திறம் பெருக்குதற்கு அருங்கலம் பலவும்பொருகடல் செலப் போக்கி அப்பொருட்குவை நிரம்பவரு மரக்கலம் மனைப்படப் பணைக்கரை நிரைக்கும்இருநிதிப் பெரும் செல்வத்தின் எல்லையில் வளத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1035

தம்மை உள்ளவாறு அறிந்த பின் சங்கரற்கு அடிமைமெய்ம்மையே செயும் விருப்புடன் மிக்கதோர் அன்பால்பொய்ம்மை நீக்கிமெய்ப் பொருள் இது எனக் கொளும் உள்ளச்செம்மையே புரி மனத்தினார் சிவநேசர் என்பார்.
சொற்பிரிப்பு
தம்மை உள்ளவாறு அறிந்த பின் சங்கரற்கு அடிமைமெய்ம்மையே செயும் விருப்புடன் மிக்கது ஓர் அன்பால்பொய்ம்மை நீக்கி மெய்ப்பொருள் இது எனக்கொளும் உள்ளச்செம்மையே புரி மனத்தினார் சிவநேசர் என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1036

கற்றை வார் சடை முடியினார் அடியவர் கலப்பில்உற்ற செய்கையில் ஒழிவு இன்றி உருகிய மனமும்பற்று இலா நெறிப் பர சமயங்களைப் பாற்றும்செற்ற(ம்) மேவிய சீலமும் உடையராய்த் திகழ்வார்.
சொற்பிரிப்பு
கற்றை வார் சடை முடியினார் அடியவர் கலப்பில்உற்ற செய்கையில் ஒழிவு இன்றி உருகிய மனமும்பற்று இலாநெறிப் பரசமயங்களைப் பாற்றும்செற்றம் மேவிய சீலமும் உடையராய்த் திகழ்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1037

ஆன நாள் செல அருமறைக் கவுணியர் பெருமான்ஞான போனகம் நுகர்ந்ததும் நானிலம் உய்யஏனை வெம் சமண் சாக்கியம் இழித்து அழித்ததுவும்ஊனம் இல் புகழ் அடியர் பால் கேட்டு உவந்து உளராய்.
சொற்பிரிப்பு
ஆன நாள் செல அருமறைக் கவுணியர் பெருமான்ஞான போனகம் நுகர்ந்ததும் நானிலம் உய்யஏனை வெஞ்சமண் சாக்கியம் இழித்து அழித்ததுவும்ஊனம் இல் புகழ் அடியர் பால் கேட்டு உவந்து உளராய்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1038

செல்வம் மல்கிய சிரபுரத் தலைவர் சேவடிக் கீழ்எல்லை இல்லதோர் காதலின் இடையறா உணர்வால்அல்லும் நண் பகலும் புரிந்தவர் அருள் திறமேசொல்லவும் செயல் கேட்கவும் தொழிலினர் ஆனார்.
சொற்பிரிப்பு
செல்வம் மல்கிய சிரபுரத் தலைவர் சேவடிக் கீழ்எல்லை இல்லதோர் காதலின் இடை அறா உணர்வால்அல்லும் நண்பகலும் புரிந்து அவர் அருள் திறமேசொல்லவும் செயல் கேட்கவும் தொழிலினர் ஆனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1039

நிகழும் ஆங்கு அவர் நிதிப் பெரும் கிழவனின் மேலாய்த்திகழும் நீடிய திருவினில் சிறந்து உளர் ஆகிப்புகழும் மேன்மையில் உலகினில் பொலிந்து உளார் எனினும்மகவு இலாமையின் மகிழ் மனை வாழ்க்கையின் மருண்டு.
சொற்பிரிப்பு
நிகழும் ஆங்கு அவர் நிதிப்பெரும் கிழவனின் மேலாய்த்திகழும் நீடிய திருவினில் சிறந்துளர் ஆகிப்புகழும் மேன்மையின் உலகினில் பொலிந்துளார் எனினும்மகவு இலாமையின் மகிழ் மனை வாழ்க்கையின் மருண்டு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1040

அரிய நீர்மையில் அரும் தவம் புரிந்து அரன் அடியார்க்குஉரிய அர்ச்சனை உலப்பில செய்த அந் நலத்தால்கரியவாங்குழல் மனைவியார் வயிறு எனும் கமலத்துரிய பூமகள் என ஒரு பெண் கொடி உதித்தாள்.
சொற்பிரிப்பு
அரிய நீர்மையில் அருந்தவம் புரிந்து அரன் அடியார்க்குஉரிய அர்ச்சனை உலப்பு இல செய்த அந் நலத்தால்கரிய வாம்குழல் மனைவியார் வயிறு எனும் கமலத்துஉரிய பூமகள் என ஒரு பெண்கொடி உதித்தாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1041

நல்ல நாள் பெற ஓரையின் நலம் மிக உதிப்பப்பல் பெரும் கிளையுடன் பெரு வணிகர் பார் முழுதும்எல்லையில் தனம் முகந்து கொண்டு யாவரும் உவப்பமல்லல் ஆவண மறுகிடைப் பொழிந்து உளம் மகிழ்ந்தார்.
சொற்பிரிப்பு
நல்ல நாள் பெற ஓரையின் நலம் மிக உதிப்பப்பல்பெருங்கிளை உடன் பெரு வணிகர் பார் முழுதும்எல்லையில் தனம் முகந்து கொண்டு யாவரும் உவப்பமல்லல் ஆவண மறுகு இடைப் பொழிந்து உளம் மகிழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1042

ஆறு சூடிய முடியினார் அடியவர்க்கு அன்பால்ஈறு இலாத பூசனைகள் யாவையும் மிகச் செய்துமாறு இலா மறையவர்க்கு வேண்டின எல்லாம் அளித்துப்பேறு மற்று இதுவே எனும் பெருங் களி சிறந்தார்.
சொற்பிரிப்பு
ஆறு சூடிய முடியினார் அடியவர்க்கு அன்பால்ஈறு இலாத பூசனைகள் யாவையும் மிகச் செய்துமாறு இலா மறையவர்க்கு வேண்டின எலாம் அளித்துப்பேறு மற்று இதுவே எனும் பெருங்களி சிறந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1043

சூத நல் வினை மங்கலத் தொழில் முறை தொடங்கிவேத நீதியின் விதியுளி வழா வகை விரித்தசாதகத் தொழிற் சடங்குகள் தச தினம் செல்லக்காதல் மேவிய சிறப்பினில் கடி விழா அயர்ந்தார்.
சொற்பிரிப்பு
சூத நல்வினை மங்கலத் தொழில்முறை தொடங்கிவேத நீதியின் விதி உளி வழாவகை விரித்தசாதகத்தொடு சடங்குகள் தசதினம் செல்லக்காதல் மேவிய சிறப்பினில் கடிவிழா அயர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1044

யாவரும் பெரு மகிழ்ச்சியால் இன்புறப் பயந்தபாவை நல் உறுப்பு அணி கிளர் பண்பு எலாம் நோக்கிபூவினாள் என வருதலில் பூம்பாவை என்றேமேவும் நாமமும் விளம்பினர் புவியின் மேல் விளங்க.
சொற்பிரிப்பு
யாவரும் பெரு மகிழ்ச்சியால் இன்புறப் பயந்தபாவை நல்உறுப்பு அணி கிளர் பண்பு எலாம் நோக்கிப்பூவினாள் என வருதலில் பூம்பாவை என்றேமேவும் நாமமும் விளம்பினர் புவியின் மேல் விளங்க.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1045

திங்கள் தோறும் முன் செய்யும் அத் திருவளர் சிறப்பின்மங்கலம் புரி நல்வினை மாட்சியில் பெருகஅங்கண் மாநகர் அமைத்திட ஆண்டு எதிர் அணைந்துதங்கு பேர் ஒளிச் சீறடி தளிர் நடை பயில.
சொற்பிரிப்பு
திங்கள் தோறும் முன் செய்யும் அத் திருவளர் சிறப்பின்மங்கலம் புரி நல்வினை மாட்சியில் பெருகஅங்கண் மாநகர் அமைத்திட ஆண்டு எதிர் அணைந்துதங்கு பேரொளிச் சீறடி தளர்நடை பயில.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1046

தளரும் மின்னின் அங்குரம் எனத் தமனியக் கொடியின்வளர் இளம் தளிர்க் கிளை என மணி கிளர் ஒளியின்அளவில் அஞ்சுடர்க் கொழுந்து என அணைவுறும் பருவத்துஇள வனப்பிணை அனையவர்க்கு ஏழி ஆண்டு எய்த.
சொற்பிரிப்பு
தளரும் மின்னின் அங்குரம் எனத், தமனியக் கொடியின்வளர் இளந்தளிர்க் கிளை என, மணிகிளர் ஒளியின்அளவில் அஞ்சுடர்க் கொழுந்து என, அணைவுறும் பருவத்துஇள அனப்பிணை அனையவர்க்கு ஏழியாண்டு எய்த.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1047

அழகின் முன் இளம் பதம் என அணிவிளக்கு என்னவிழவு கொண்டு எழும் பேதையர் உடன் விளையாட்டில்கழலொடு அம்மனை கந்துகம் என்று மற்று இனையமழலை மென்கிளிக் குலம் என மனையிடை ஆடி.
சொற்பிரிப்பு
அழகின் முன் இளம் பதம் என, அணிவிளக்கு என்ன,விழவு கொண்டு எழும் பேதையருடன் விளையாட்டில்கழலொடு அம்மனை, கந்துகம் என்று மற்று இனையமழலை மென்கிளிக் குலம் என மனை இடை ஆடி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1048

பொற்றொடிச் சிறு மகளிர் ஆயத்தொடும் புணர்ந்துசிற்றில் முற்றவும் இழைத்து உடன் அடும் தொழில் சிறு சோறுஉற்ற உண்டிகள் பயின்று ஒளி மணி ஊசல் ஆடிமற்றும் இன்புறு வண்டல் ஆட்டு அயர்வுடன் வளர.
சொற்பிரிப்பு
பொன்தொடிச் சிறு மகளிர் ஆயத்தொடும் புணர்ந்துசிற்றில் முற்றவும் இழைத்து, உடன் அடுந்தொழில் சிறுசோறுஉற்ற உண்டிகள் பயின்று ஒளி மணி ஊசல் ஆடிமற்றும் இன்புறு வண்டல் ஆட்டு அயர்வுடன் வளர.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1049

தந்தையாரும் அத் தளிர் இளம் கொம்பு அனாள் தகைமைஇந்த வையகத்து இன்மையால் இன்புறு களிப்புவந்த சிந்தையின் மகிழ்ந்து மற்று இவள் மணம் பெறுவான்அந்தமில் எனது அருநிதிக்கு உரியன் என்று அறைந்தார்.
சொற்பிரிப்பு
தந்தையாரும் அத்தளிர் இளம் கொம்பு அனாள் தகைமைஇந்த வையகத்து இன்மையால் இன்புறு களிப்புவந்த சிந்தையின் மகிழ்ந்து, மற்று இவள் மணம் பெறுவான்அந்தம் இல் எனது அருநிதிக்கு உரியன் என்று அறைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1050

ஆய நாள்களில் அமண் பயில் பாண்டி நாடு அதனைத்தூய ஞானம் உண்டு அருளிய தோன்றலார் அணைந்துமாய(ம்) வல்ல அமண் கையரை வாதில் வென்றதுவும்மேய வெப்பு இடர் மீனவன் மேல் ஒழித்ததுவும்.
சொற்பிரிப்பு
ஆய நாள்களில் அமண் பயில் பாண்டிநாடு அதனைத்தூய ஞானம் உண்டு அருளிய தோன்றலார் அணைந்துமாயம் வல்ல அமண் கையரை வாதில் வென்றதுவும்மேய வெப்பு இடர் மீனவன் மேல் ஒழித்ததுவும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1051

நெருப்பில் அஞ்சினார் தங்களை நீரில் ஒட்டிய பின்மருப்பு நீள் கழுக்கோலில் மற்று அவர்கள் ஏறியதும்விருப்பினால் திருநீறு மீனவற்கு அளித்து அருளிப்பொருப்பு வில்லியார் சாதனம் போற்று வித்ததுவும்.
சொற்பிரிப்பு
நெருப்பில் அஞ்சினார் தங்களை நீரில் ஒட்டியபின்மருப்பு நீள் கழுக்கோலில் மற்றவர்கள் ஏறியதும்விருப்பினால் திருநீறு மீனவற்கு அளித்து அருளிப்பொருப்பு வில்லியார் சாதனம் போற்றுவித்ததுவும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1052

இன்னவாறு எலாம் அறிந்துளார் எய்தி அங்கு இசைப்பச்சொன்னவர்க்கு எலாம் இருநிதி தூசு உடன் அளித்துமன்னு பூந்தராய் வள்ளலார் தமைத் திசை நோக்கிச்சென்னி மேல் கரம் குவித்து வீழ்ந்து எழுந்து செந்நின்று.
சொற்பிரிப்பு
இன்னவாறு எலாம் அறிந்துளார் எய்திஅங்கு இசைப்பச்சொன்னவர்க்கு எலாம் இருநிதி தூசுடன் அளித்துமன்னு பூந்தராய் வள்ளலார் தமைத் திசை நோக்கிச்சென்னி மேல் கரம் குவித்து வீழ்ந்து எழுந்து செந்நின்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1053

சுற்றம் நீடிய கிளை எலாம் சூழ்ந்து உடன் கேட்பக்கற்ற மாந்தர் வாழ் காழி நாடு உடையவர்க்கு அடியேன்பெற்று எடுத்த பூம் பாவையையும் பிறங்கிய நிதியும்முற்றும் என்னையும் கொடுத்தனன் யான் என்று மொழிந்தார்.
சொற்பிரிப்பு
சுற்றம் நீடிய கிளை எலாம் சூழ்ந்து உடன் கேட்பக்“கற்ற மாந்தர் வாழ் காழி நாடு உடையவர்க்கு, அடியேன்பெற்று எடுத்த பூம்பாவையும் பிறங்கிய நிதியும்முற்றும் என்னையும் கொடுத்தனன் யான்” என்று மொழிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1054

எல்லையில் பெரும் களிப்பினால் இப்பரிசு இயம்பிமுல்லை வெண் நகை முகிழ் முலையாருடன் முடியாமல்கு செல்வத்தின் வளமையும் மறை வளர் புகலிச்செல்வரே உடையார் எனும் சிந்தையால் மகிழ்ந்தார்.
சொற்பிரிப்பு
எல்லையில் பெரும் களிப்பினால் இப்பரிசு இயம்பிமுல்லை வெண்நகை முகிழ் முலையாருடன் முடியாமல்கு செல்வத்தின் வளமையும் மறைவளர் புகலிச்செல்வரே உடையார் எனும் சிந்தையால் மகிழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1055

ஆற்று நாள்களில் அணங்கு அனார் கன்னி மாடத்தின்பால் தடம்பொழில் மருங்கினில் பனி மலர் கொய்வான்போற்றுவார் குழல் சேடியருடன் புறம் போந்துகோல் தொடித் தளிர்க் கையினால் முகை மலர் கொய்ய.
சொற்பிரிப்பு
ஆற்று நாட்களில் அணங்கு அனார் கன்னி மாடத்தின்பால் தடம்பொழில் மருங்கினில் பனிமலர் கொய்வான்போற்றுவார் குழல் சேடியருடன் புறம் போந்துகோல் தொடித் தளிர்க் கையினால் முகைமலர் கொய்ய.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1056

அன்பர் இன்புறும் ஆர்வத்தின் அளித்த பாங்கு அல்லால்பொன் பிறங்கு நீர்ப் புகலி காவலர்க்கு இது புணராதுஎன்பது உள் கொண்ட பான்மை ஓர் எயிற்று இளம் பணியாய்முன்பு அணைந்தது போல ஓர் முள் எயிற்று அரவம்.
சொற்பிரிப்பு
“அன்பர் இன்புறும் ஆர்வத்தின் அளித்த பாங்கு அல்லால்பொன் பிறங்கு நீர்ப் புகலி காவலர்க்கு இது புணராது”என்பது உட்கொண்ட பான்மை ஓர் எயிற்று இளம் பணியாய்முன்பு அணைந்தது போல ஓர் முள் எயிற்று அரவம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1057

மௌவல் மாதவிப் பந்தரில் மறைந்து வந்து எய்திச்செவ்வி நாண்முகை கவர் பொழுதினில் மலர்ச் செங்கைநவ்வி வாள் விழி நறு நுதல் செறி நெறி கூந்தல்கொவ்வை வாயவள் முகிழ் விரல் கவர்ந்தது குறித்து.
சொற்பிரிப்பு
மௌவல் மாதவிப் பந்தரில் மறைந்து வந்து எய்திச்செவ்வி நாள் முகை கவர் பொழுதினில் மலர்ச் செங்கைநவ்வி வாள் விழி, நறு நுதல், செறிநெறி கூந்தல்கொவ்வை வாய் அவள் முகிழ் விரல் கவர்ந்தது குறித்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1058

நாலு தந்தமும் என்பு உறக் கவர்ந்து நஞ்சு உகுத்துமேல் எழும் பணம் விரித்து நின்று ஆடி வேறு அடங்கநீல வல் விடம் தொடர்ந்து எழ நேரிழை மென்பூமாலை தீயிடைப் பட்டது போன்று உளம் மயங்கி.
சொற்பிரிப்பு
நாலு தந்தமும் என்பு உறக் கவர்ந்து நஞ்சு உகுத்துமேல் எழும் பணம் விரித்து நின்று ஆடி வேறு அடங்கநீல வல்விடம் தொடர்ந்து எழ, நேர்இழை மென் பூமாலை தீ இடைப் பட்டது போன்று உளம் மயங்கி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1059

தரையில் வீழ் தரச் சேடியர் வெருக்கொண்டு தாங்கிவிரை செய் மாடத்தின் உள் கொடு புகுந்திட வணிகர்உரையும் உள்ளமும் நிலை அழிந்து உறு துயர் பெருகக்கரையில் சுற்றமும் தாமும் முன் கலங்கினார் கலுழ்ந்தார்.
சொற்பிரிப்பு
தரையில் வீழ் தரச் சேடியர் வெருக்கொடு தாங்கிவரை செய் மாடத்தின் உட் கொடு புகுந்திட வணிகர்உரையும் உள்ளமும் நிலை அழிந்து உறுதுயர் பெருகக்கரையில் சுற்றமும் தாமும் முன் கலங்கினார்; கலுழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1060

விடம் தொலைத் திடும் விஞ்சையில் பெரியராம் மேலோர்அடர்ந்த தீ விடம் அகற்றுதற்கு அணைந்துளார் அனேகர்திடம் கொள் மந்திரம் தியானம் பாவக நிலை முட்டிதொடர்ந்த செய்வினைத் தனித் தனித் தொழிலராய்ச் சூழ்வார்.
சொற்பிரிப்பு
விடம் தொலைத்திடும் விஞ்சையில் பெரியராம் மேலோர்அடர்ந்த தீ விடம் அகற்றுதற்கு அணைந்துளார் அனேகர்திடங்கொள் மந்திரம், தியானம் பாவகநிலை, முட்டிதொடர்ந்த செய்வினைத் தனித் தனித் தொழிலராய்ச் சூழ்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1061

மருந்தும் எண்ணில மாறில செய்யவும் வலிந்துபொருந்து வல் விடம் ஏழு வேகமும் முறை பொங்கிப்பெரும் தடங்கண் மெல் கொடியனாள் தலை மிசைப் பிறங்கித்திருந்து செய் வினை யாவையும் கடந்து தீர்ந்திலதால்.
சொற்பிரிப்பு
மருந்தும் எண் இல மாறில் செய்யவும் வலிந்துபொருந்து வல்விடம் ஏழு வேகமும் முறை பொங்கிப்பெருந்தடங்கண் மென் கொடி அனாள் தலைமிசைப் பிறங்கித்திருந்து செய்வினை யாவையும் கடந்து தீர்ந்து இலதால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1062

ஆவி தங்கு பல் குறிகளும் அடைவில ஆகமேவு காருட விஞ்சை வித்தகர் இது விதி என்றுஓவும் வேலையில் உறு பெரும் சுற்றமும் அலறிப்பாவை மேல் விழுந்து அழுதனர் படர் ஒலிக் கடல் போல்.
சொற்பிரிப்பு
ஆவி தங்கு பல் குறிகளும் அடைவு இலவாகமேவு காருட விஞ்சை வித்தகர் ”இது விதி” என்றுஓவும் வேலையில் உறு பெரும் சுற்றமும் அலறிப்பாவை மேல் விழுந்து அழுதனர் படர் ஒலிக் கடல் போல்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1063

சிந்தை வெம் துயர் உறும் சிவநேசரும் தெளிந்துவந்த செய்வினை இன்மையில் வையகத்து உள்ளோர்இந்த வெவ்விடம் ஒழிப்பவர்க்கு ஈகுவன் என்னுடையஅந்தமில் நிதிக் குவை எனப் பறை அறைவித்தார்.
சொற்பிரிப்பு
சிந்தை வெந்துயர் உறு சிவநேசரும் தெளிந்துவந்த செய்வினை இன்மையில், “வையகத்து உள்ளோர்இந்த வெவ்விடம் ஒழிப்பவர்க்கு ஈகுவன், கண்டஅந்தமில் நிதிக் குவை” எனப் பறை அறைவித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1064

முரசு இயம்பலும் மூன்று நாள் அகவையின் முற்றஅரசர் பாங்கு உளோர் உள்பட அவனி மேல் உள்ளகரையில் கல்வியோர் யாவரும் அணைந்து தம் காட்சிப்புரையில் செய்கையில் தீர்ந்திடாது ஒழிந்திடப் போனார்.
சொற்பிரிப்பு
முரசு இயம்பிய மூன்று நாள் அகவையின் முற்றஅரசர் பாங்குளோர் உட்பட, அவனி மேல் உள்ளகரையில் கல்வியோர் யாவரும் அணைந்து தம் காட்சிப்புரையில் செய்கையில் தீர்ந்திடாது ஒழிந்திடப் போனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1065

சீரின் மன்னிய சிவநேசர் கண்டு உளம் மயங்கிக்காரின் மல்கிய சோலை சூழ் கழுமலத் தலைவர்சாரும் அவ்வளவும் உடல் தழல் இடை அடக்கிச்சேர என்பொடு சாம்பல் சேமிப்பது தெளிவார்.
சொற்பிரிப்பு
சீரின் மன்னிய சிவநேசர் கண்டு உளம் மயங்கிக்காரின் மல்கிய சோலை சூழ் கழுமலத் தலைவர்சாரும் அவ்வளவும் உடல் தழல் இடை அடக்கிச்சேர என்பொடு சாம்பல் சேமிப்பது தெளிவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1066

உடைய பிள்ளையார்க்கு என இவள் தனை உரைத்த அதனால்அடைவு துன்புறுவதற்கு இலையாம் நமக்கு என்றேஇடர் ஒழிந்த பின் அடக்கிய என்பொடு சாம்பல்புடை பெருத்த கும்பத்தினில் புகப் பெய்து வைப்பார்.
சொற்பிரிப்பு
“உடைய பிள்ளையார்க்கு என இவள் தனை உரைத்ததனால்அடைவு துன்பு உறுவதற்கு இலையாம் நமக்கு” என்றேஇடர் ஒழிந்த பின் அடக்கிய என்பொடு சாம்பல்புடை பெருத்தகும் பத்தினில் புகப்பெய்து வைப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1067

கன்னி மாடத்தில் முன்பு போல் காப்புற அமைத்துப்பொன்னும் முத்தும் மேல் அணிகலன் பூந்துகில் சூழ்ந்துபன்னு தூவியின் பஞ்சணை விரைப் பள்ளி அதன் மேல்மன்னும் பொன்னரி மாலைகள் அணிந்து வைத்தனரால்.
சொற்பிரிப்பு
கன்னி மாடத்தில் முன்பு போல் காப்புற அமைத்துப்பொன்னும், முத்து,மேல் அணிகலன், பூந்துகில் சூழ்ந்துபன்னு தூவியின் பஞ்சு அணை விரைப் பள்ளி அதன்மேல்மன்னு பொன் அரி மாலைகள் அணிந்து வைத்தனரால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1068

மாலை சாந்தொடும் மஞ்சனம் நாள் தொறும் வழாமைப்பாலின் நேர் தரும் போனகம் பகல் விளக்கினையசாலும் நன்மையில் தகுவன நாள்தொறும் சமைத்தேஏலுமா செய யாவரும் வியப்பு எய்தும் நாளில்.
சொற்பிரிப்பு
மாலை சாந்தொடும் மஞ்சனம் நாள்தொறும் வழாமைப்பாலின் நேர் தரும் போனகம், பகல் விளக்கு, இனையசாலு நன்மையில் தகுவன, நாள்தொறும் சமைத்தேஏலுமா செய யாவரும் வியப்பு எய்தும் நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1069

சண்பை மன்னவர் திரு ஒற்றியூர் நகர் சார்ந்துபண்பு பெற்ற நல் தொண்டர் களுடன் பணிந்து இருந்தநண்பு மிக்க நல் வார்த்தை அந் நற் பதி உள்ளோர்வண் புகழ்ப் பெரு வணிகர்க்கு வந்து உரை செய்தார்.
சொற்பிரிப்பு
சண்பை மன்னவர் திருஒற்றியூர் நகர் சார்ந்துபண்பு பெற்ற நல் தொண்டர்கள் உடன் பணிந்து இருந்தநண்பு மிக்க நல் வார்த்தை அந்நற்பதி உள்ளோர்வண் புகழ்ப் பெரு வணிகர்க்கு வந்து உரை செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1070

சொன்னவர்க்கு எலாம் தூசொடு காசு பொன் அளித்தேஇன்ன தன்மையர் என ஒணா மகிழ் சிறந்து எய்தச்சென்னி வாழ் மதியார் திரு ஒற்றியூர் அளவும்துன்னு நீள் நடைக் காவணம் துகில் விதானித்து.
சொற்பிரிப்பு
சொன்னவர்க்கு எலாம் தூசொடுகாசு பொன் அளித்தேஇன்ன தன்மையர் என ஒணா மகிழ்சிறந்து எய்தச்சென்னி வாழ் மதியார் திரு ஒற்றியூர் அளவும்துன்னு நீள் நடைக் காவணம் துகில் விதானித்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1071

மகர தோரணம் வண் குலைக் கமுகொடு கதலிநிகரில் பல் கொடித் தாமங்கள் அணிபெற நிரைத்துநகர நீள் மறுகு யாவையும் நலம் புனைந்து அணியால்புகரில் பொன் உலகம் இழிந்ததாம் எனப் பொலிவித்தார்.
சொற்பிரிப்பு
மகர தோரணம் வண் குலைக் கமுகொடு கதலிநிகர் இல் பல்கொடித் தாமங்கள் அணிபெற நிரைத்துநகர நீள் மறுகு யாவையும் நலம் புனை அணியால்புகர்இல் பொன்உலகு இழிந்ததாம் எனப் பொலிவித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1072

இன்னவாறு அணி செய்து பல் குறை அறுப்பு ஏவிமுன்னம் ஒற்றியூர் நகர் இடை முத்தமிழ் விரகர்பொன் அடித் தலம் தலைமிசை புனைவான் என்று எழுவார்அந்நகர்ப் பெருந் தொண்டரும் உடன் செல அணைந்தார்.
சொற்பிரிப்பு
இன்னவாறு அணி செய்து பல் குறைவு அறுப்பு ஏவி“முன்னம் ஒற்றியூர் நகர் இடை முத்தமிழ் விரகர்பொன் அடித்தலம் தலைமிசை புனைவன்” என்று எழுவார்அந்நகர்ப் பெருந்தொண்டரும் உடன் செல அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1073

ஆய வேலையில் அருமறைப் புகலியர் பிரானும்மேய ஒற்றியூர் பணிபவர் வியன் நகர் அகன்றுகாயல் சூழ் கரைக் கடல் மயிலாபுரி நோக்கித்தூய தொண்டர்தம் குழாத்தொடும் எதிர் வந்து தோன்ற.
சொற்பிரிப்பு
ஆய வேலையில் அருமறைப் புகலியர் பிரானும்மேய ஒற்றியூர் பணிபவர், வியன்நகர் அகன்றுகாயல் சூழ் கரைக் கடல் மயிலாபுரி நோக்கித்தூய தொண்டர் தம் குழாத்தொடும் எதிர்வந்து தோன்ற.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1074

மாறில் வண் பெரு வணிகரும் தொண்டரு மலர்ந்தநீறு சேர் தவக் குழாத்தினை நீளிடைக் கண்டேஆறு சூடினார் திருமகனார் அணைந்தார் என்றுஈறிலாததோர் மகிழ்ச்சியினால் விழுந்து இறைஞ்ச.
சொற்பிரிப்பு
மாறில் வண் பெரு வணிகரும் தொண்டரும் மலர்ந்தநீறு சேர் தவக் குழாத்தினை நீள் இடைக் கண்டே“ஆறு சூடினார் திருமகனார் அணைந்தார்” என்றுஈறு இலாததோர் மகிழ்ச்சியினால் விழுந்து இறைஞ்ச.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1075

காழி நாடரும் கதிர் மணிச் சிவிகை நின்று இழிந்துசூழிரும் பெருந் தொண்டர் முன் தொழுது எழுந்தருளிவாழி மாதவர் வணிகர் செய் திறம் சொலக் கேட்டேஆழி சூழ் மயிலா புரித் திருநகர் அணைந்தார்.
சொற்பிரிப்பு
காழி நாடரும் கதிர்மணிச் சிவிகை நின்று இழிந்துசூழ் இரும்பெரும் தொண்டர் முன் தொழுது எழுந்து அருளிவாழி மாதவர் வணிகர் செய் திறம் சொலக் கேட்டேஆழி சூழ் மயிலாபரித் திருநகர் அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1076

அத் திறத்து முன் நிகழ்ந்தது திரு உள்ளத்து அமைத்துச்சித்தம் இன்புறும் சிவநேசர் தம் செயல் வாய்ப்பப்பொய்த்த அச் சமண் சாக்கியர் புறத்துறை அழியவைத்த அப்பெருங் கருணை நோக்கால் மகிழ்ந்து அருளி.
சொற்பிரிப்பு
அத்திறத்து முன் நிகழ்ந்தது திருஉள்ளத்து அமைத்துச்சித்தம் இன்புறும் சிவநேசர் தம் செயல் வாய்ப்பப்பொய்த்தவச் சமண் சாக்கியர் புறத்துறை அழியவைத்த அப்பெரும் கருணை நோக்கால் மகிழ்ந்தருளி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1077

கங்கை வார் சடையார் கபாலீச்சரத்து அணைந்துதுங்க நீள் சுடர்க் கோபுரம் தொழுது புக்கருளிமங்கை பங்கர்தம் கோயிலை வலம் கொண்டு வணங்கிச்செங்கை சென்னி மேல் குவிந்திடத் திருமுன்பு சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
கங்கை வார்சடையார் கபாலீச்சரத்து அணைந்துதுங்க நீள்சுடர்க் கோபுரம் தொழுது புக்கு அருளிமங்கை பங்கர் தம் கோயிலை வலங்கொண்டு வணங்கிச்செங்கை சென்னி மேல் குவிந்திடத் திருமுன்பு சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1078

தேவ தேவனைத் திருக் கபாலீச்சரத்து அமுதைப்பாவை பாகனைப் பரிவுறு பண்பினால் பரவிமேவு காதலின் விரும்பிய விரைவினால் விழுந்துநாவின் வாய்மையில் போற்றினார் ஞான சம்பந்தர்.
சொற்பிரிப்பு
தேவ தேவனைத், திருக் கபா லீச்சரத்து அமுதைப்,பாவை பாகனைப் பரிவுறு பண்பினால் பரவிமேவு காதலின் விரும்பிய விரைவினால் விழுந்துநாவின் வாய்மையில் போற்றினார் ஞான சம்பந்தர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1079

போற்றி மெய் அருள் திறம் பெறு பரிவுடன் வணங்கிநீற்றின் மேனியில் நிறை மயிர்ப் புளகங்கள் நெருங்கக்கூற்று அடர்த்தவர் கோயிலின் புறம் போந்து அருளிஆற்றும் இன்னருள் வணிகர் மேற் செல அருள் செய்வார்.
சொற்பிரிப்பு
போற்றி மெய்அருள் திறம் பெறு புரிவுடன் வணங்கிநீற்றின் மேனியில் நிறை மயிர்ப் புளகங்கள் நெருங்கக்கூற்று அடர்த்தவர் கோயிலின் புறம்பு போந்தருளிஆற்றும் இன் அருள் வணிகர் மேற் செல அருள் செய்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1080

ஒருமை உய்த்த நல் உணர்வினீர் உலகவர் அறியஅருமையால் பெறு மகள் என்பு நிறைத்த அக் குடத்தைப்பெரு மயானத்து நடம் புரிவார் பெருங் கோயில்திருமதில் புறவாய்தலிற் கொணர்க என்று செப்ப.
சொற்பிரிப்பு
ஒருமை உய்த்த நல் உணர்வினீர்! உலகவர் அறியஅருமையால் பெறு மகள் என்பு நிறைத்த அக் குடத்தைப்பெருமயானத்து நடம் புரிவார் பெருங்கோயில்திருமதில் புற வாய்தலில் கொணர்க என்று செப்ப.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1081

அந்தமில் பெரு மகிழ்ச்சியால் அவனி மேல் பணிந்துவந்து தம் திரு மனையினில் மேவி அம்மருங்குகந்த வார் பொழில் கன்னி மாடத்தினில் புக்குவெந்த சாம்பலோடு என்பு சேர் குடத்தை வேறு எடுத்து.
சொற்பிரிப்பு
அந்தம் இல் பெருமகிழ்ச்சியால் அவனி மேல் பணிந்துவந்து தம் திரு மனையினில் மேவி, அம் மருங்குகந்த வார்பொழில் கன்னிமாடத்தினில் புக்குவெந்த சாம்பலோடு என்பு சேர் குடத்தை வேறு எடுத்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1082

மூடு பன் மணிச் சிவிகை உள்பெய்து முன்போதமாடு சேடியர் இனம் புடை சூழ்ந்து வந்து அணையஆடல் மேவினார் திருக் கபாலீச்சரம் அணைந்துநீடு கோபுரத்து எதிர் மணிச் சிவிகையை நீக்கி.
சொற்பிரிப்பு
மூடு பன்மணிச் சிவிகையுள் பெய்து முன் போத,மாடு சேடியர் இனம் புடை சூழ்ந்து வந்து அணைய,ஆடல் மேவினார் திருக் கபாலீச்சரம் அணைந்துநீடு கோபுரத்து எதிர்மணிச் சிவிகையை நீக்கி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1083

அங்கணாளர் தம் அபிமுகத்தினில் அடி உறைப்பால்மங்கை என்பு சேர் குடத்தினை வைத்து முன் வணங்கப்பொங்கு நீள் புனல் புகலி காவலர் புவனத்துத்தங்கி வாழ்பவர்க்கு உறுதியாம் நிலைமை சாதிப்பார்.
சொற்பிரிப்பு
அங்கணாளர் தம் அபிமுகத்தினில்அடி உறைப்பால்மங்கை என்பு சேர் குடத்தினை வைத்து முன் வணங்கப்பொங்கு நீள் புனல் புகலிகாவலர், புவனத்துத்தங்கி வாழ்பவர்க்கு உறுதியாம் நிலைமை சாதிப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1084

மாடம் ஓங்கிய மயிலை மா நகர் உளார் மற்றும்நாடு வாழ்பவர் நன்றியில் சமயத்தின் உள்ளோர்மாடு சூழ்ந்து காண்பதற்கு வந்து எய்தியே மலியநீடு தேவர்கள் ஏனையோர் விசும்பிடை நெருங்க.
சொற்பிரிப்பு
மாடம் ஓங்கிய மயிலை மாநகர் உளார், மற்றும்நாடு வாழ்பவர், நன்றியில் சமயத்தின் உள்ளோர்மாடு சூழ்ந்து காண்பதற்கு வந்து எய்தியே மலியநீடு தேவர்கள் ஏனையோர் விசும்பு இடை நெருங்க.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1085

தொண்டர் தம் பெருங் குழாம் புடை சூழ்தரத் தொல்லைஅண்டர் நாயகர் கோபுர வாயில் நேர் அணைந்துவண்டு வார் குழலாள் என்பு நிறைந்த மண் குடத்தைக்கண்டு தம்பிரான் கருணையின் பெருமையே கருதி.
சொற்பிரிப்பு
தொண்டர் தம் பெரும் குழாம் புடை சூழ் தரத், தொல்லைஅண்டர் நாயகர் கோபுர வாயில் நேர் அணைந்துவண்டு வார் குழலாள் என்பு நிறைந்த மண் குடத்தைக்கண்டு, தம்பிரான் கருணையின் பெருமையே கருதி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1086

இந்த மாநிலத்து இறந்துளோர் என்பினைப் பின்னும்நந்து நன்னெறிப் படுத்திட நன்மையாம் தன்மைஅந்த என்பொடு தொடர்ச்சியாம் என அருள் நோக்கால்சிந்தும் அங்கம் அங்குடைய பூம்பாவை பேர் செப்பி.
சொற்பிரிப்பு
இந்த மாநிலத்து இறந்துளோர் என்பினைப் பின்னும்நந்து நன்னெறிப் படுத்திட நன்மையாம் தன்மைஅந்த என்பொடு தொடர்ச்சியாம் என அருள் நோக்கால்சிந்தும் அங்கம் அங்கு உடைய பூம்பாவைபேர் செப்பி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1087

மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதி சூடும்அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல்கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டார்தல்உண்மையாம் எனில் உலகர் முன் வருக என உரைப்பார்.
சொற்பிரிப்பு
மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதி சூடும்அண்ணலார் அடியார் தமை அமுதுசெய்வித்தல்கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தல்உண்மையாம் எனில் உலகர் முன் வருக என உரைப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1088

மன்னுவார் சடையாரை முன் தொழுது மட்டிட்டஎன்னும் நற் பதிகத்தினில் போதியோ என்னும்அன்ன மெய்த் திருவாக்கு எனும் அமுதம் அவ்வங்கம்துன்ன வந்து வந்து உருவமாய்த் தொக்கது அக்குடத்துள்.
சொற்பிரிப்பு
மன்னு வார் சடையாரை முன் தொழுது “மட்டிட்ட”என்னும் நற்பதிகத்தினில்“போதியோ” என்னும்அன்ன மெய்த் திருவாக்கு எனும் அமுதம், அவ் அங்கம்துன்ன வந்துவந்துஉருவமாய்த் தொக்கது அக்குடத்துள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1089

ஆன தன்மையின் அத்திரு பாட்டினில் அடைவேபோன வாயுவும் வடிவமும் பொலிவொடு நிரம்பிஏனை அக்குடத்து அடங்கி முன் இருந்து எழுவதன் முன்ஞான போனகர் பின் சமண்பாட்டினை நவில்வார்.
சொற்பிரிப்பு
ஆன தன்மையின் அத்திருப் பாட்டினில் அடைவேபோன வாயுவும் வடிவமும் பொலிவொடு நிரம்பிஏனை அக்குடத்து அடங்கி முன் இருந்து எழுவதன் முன்ஞான போனகர் பின் சமண் பாட்டினை நவில்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1090

தேற்றமில் சமண் சாக்கியத் திண்ணரிச் செய்கைஏற்றது அன்று என எடுத்து உரைப்பார் என்ற போதுகோல் தொடிச் செங்கை தோற்றிடக் குடம் உடைந்து எழுவாள்போற்று தாமரைப் போது அவிழ்ந்து எழுந்தனள் போன்றாள்.
சொற்பிரிப்பு
தேற்றம் இல் சமண் சாக்கியத் திண்ணர் இச் செய்கைஏற்றது அன்று என எடுத்து உரைப்பார் என்ற போதுகோற்றொடிச் செங்கை தோற்றிடக் குடம் உடைந்து எழுவாள்போற்று தாமரைப் போத விழ்ந்து எழுந்தனள் போன்றாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1091

எடுத்த பாட்டினில் வடிவு பெற்று இரு நான்கு திருப்பாட்டுஅடுத்த அம்முறைப் பன்னிரண்டு ஆண்டு அளவு அணைந்துதொடுத்த வெஞ்சமண் பாட்டினில் தோன்றிடக் கண்டுவிடுத்த வேட்கையர் திருக் கடைக் காப்பு மேல் விதித்தார்.
சொற்பிரிப்பு
எடுத்த பாட்டினில் வடிவு பெற்று, இரு நான்கு திருப்பாட்டுஅடுத்த அம்முறைப் பன்னிரண்டு ஆண்டளவு அணைந்துதொடுத்த வெஞ்சமண் பாட்டினில் தோன்றிடக் கண்டுவிடுத்த வேட்கையர் திருக்கடைக் காப்பு மேல் விரித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1092

ஆங்கனம் எழுந்து நின்ற அணங்கினை நோக்குவார்கள்ஈங்கு இது காணீர் என்னா அற்புதம் எய்தும் வேலைப்பாங்கு சூழ் தொண்டர் ஆனோர் அரகர என்னப் பார்மேல்ஓங்கிய ஓசை உம்பர் நாட்டினை உற்றது அன்றே.
சொற்பிரிப்பு
ஆங்கனம் எழுந்து நின்ற அணங்கினை நோக்குவார்கள்“ஈங்கு இது காணீர்” என்னா அற்புதம் எய்தும் வேலைப்பாங்கு சூழ் தொண்டர் ஆனோர் “அரகர” என்னப் பார் மேல்ஓங்கிய ஓசை உம்பர் நாட்டினை உற்றது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1093

தேவரும் முனிவர் தாமும் திருவருள் சிறப்பு நோக்கிபூவரு விரை கொள் மாரி பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர்யாவரும் இருந்த வண்ணம் எம்பிரான் கருணை என்றேமேவிய கைகள் உச்சி மேல் குவித்து இறைஞ்சி வீழ்ந்தார்.
சொற்பிரிப்பு
தேவரும் முனிவர் தாமும் திருஅருள் சிறப்பு நோக்கிப்பூவரு விரை கொள் மாரி பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர்யாவரும் இருந்த வண்ணம் எம்பிரான் கருணை என்றேமேவிய கைகள் உச்சி மேல்குவித்து இறைஞ்சி வீழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1094

அங்கு அவள் உருவம் காண்பார் அதிசயம் மிகவும் எய்திப்பங்கம் உற்றாரே போன்றார் பர சமயத்தின் உள்ளோர்எங்குள செய்கை தான் மற்று என் செய்தவாறு இது என்றுசங்கையாம் உணர்வு கொள்ளும் சமணர் தள்ளாடி வீழ்ந்தார்.
சொற்பிரிப்பு
அங்கு அவள் உருவம் காண்பார் அதிசயம் மிகவும் எய்திப்பங்கம் உற்றாரே போன்றார் பரசமயத்தின் உள்ளோர்எங்கு உள செய்கை தான் மற்று என் செய்தவாறு இது என்றுசங்கையாம் உணர்வு கொள்ளும்சமணர் தள்ளாடி வீழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1095

கன்னி தன் வனப்புத் தன்னைக் கண்களால் முடியக் காணார்முன்னுறக் கண்டார்க்கு எல்லாம் மொய் கருங் குழலின் பாரம்மன்னிய வதனம் செந் தாமரையின் மேல் கரிய வண்டுதுன்னிய ஒழுங்கு துற்ற சூழல் போல் இருண்டு தோன்ற.
சொற்பிரிப்பு
கன்னி தன் வனப்புத் தன்னைக் கண்களால் முடியக் காணார்முன் உறக் கண்டார்க்கு எல்லாம் மொய் கரும் குழலின் பாரம்மன்னிய வதன செந்தாமரையினில் கரிய வண்டுதுன்னிய ஒழுங்கு துற்ற சூழல் போல் இருண்டு தோன்ற.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1096

பாங்கு அணி சுரும்பு மொய்த்த பனிமலர் அளகப் பந்திதேங்கமழ் ஆரம் சேரும் திருநுதல் விளக்க(ம்) நோக்கில்பூங்கொடிக்கு அழகின் மாரி பொழிந்திடப் புயல் கீழ் இட்டவாங்கிய வான வில்லின் வளர் ஒளி வனப்பு வாய்ப்ப.
சொற்பிரிப்பு
பாங்கு அணி சுரும்பு மொய்த்த பனிமலர் அளகப் பந்திதேங்கமழ் ஆரம் சேரும் திருநுதல் விளக்கம் நோக்கில்பூங்கொடிக்கு அழகின் மாரி பொழிந்திடப் புயற்கீழ் இட்டவாங்கிய வான வில்லின் வளர் ஒளி வனப்பு வாய்ப்ப.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1097

புருவ மென் கொடிகள் பண்டு புரம் எரித்தவர் தம் நெற்றிஒரு விழி எரியின் நீறாய் அருள் பெற உளனாம் காமன்செரு எழும் தனு அது ஒன்றும் சேம வில் ஒன்றும் ஆகஇரு பெரும் சிலைகள் முன் கொண்டு எழுந்தன போல ஏற்ப.
சொற்பிரிப்பு
புருவமென் கொடிகள் பண்டு புரம் எரித்தவர் தம் நெற்றிஒருவிழி எரியின் நீறாய் அருள்பெற உளனாம் காமன்செரு எழும் தனு அது ஒன்றும் சேம வில் ஒன்றும் ஆகஇருபெரும் சிலைகள் முன் கொண்டு எழுந்தன போல ஏற்ப.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1098

மண்ணிய மணியின் செய்ய வளர் ஒளி மேனியாள் தன்கண்ணிணை வனப்புக் காணில் காமரு வதனத் திங்கள்தண்ணளி விரிந்த சோதி வெள்ளத்தில் தகைவின் நீளஒண் நிறக் கரிய செய்ய கயல் இரண்டு ஒத்து உலாவ.
சொற்பிரிப்பு
மண்ணிய மணியின் செய்ய வளர் ஒளி மேனியாள் தன்கண்இணை வனப்புக் காணில் காமரு வதனத் திங்கள்தண் அளி விரிந்த சோதி வெள்ளத்தில் தகைவின் நீளஒண் நிறக் கரிய செய்ய கயல் இரண்டு ஒத்து உலாவ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1099

பணி வளர் அல்குல் பாவை நாசியும் பவள வாயும்நணிய பேரொளியில் தோன்றும் நலத்தினை நாடுவார்க்குமணி நிறக் கோபம் கண்டு மற்றது வவ்வத் தாழும்அணி நிறக் காம ரூபி அனையதாம் அழகு காட்ட.
சொற்பிரிப்பு
பணிவளர் அல்குல் பாவ நாசியும் பவள வாயும்நணிய பேரொளியில் தோன்றும் நலத்தினை நாடுவார்க்குமணி நிறக் கோபம் கண்டு மற்றது வவ்வத் தாமும்அணி நிறக் காம ரூபி அணைவதாம் அழகு காட்ட.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1100

இளமயில் அனைய சாயல் ஏந்திழை குழை கொள் காதுவளமிகு வனப்பினாலும் வடிந்த தாள் உடைமையாலும்கிளர் ஒளி மகரம் வேறு கெழுமிய தன்மையாலும்அளவில் சீர் அனங்கன் வென்றிக் கொடி இரண்டு அனையவாக.
சொற்பிரிப்பு
இளமயில் அனைய சாயல் ஏந்திழை குழைகொள் காதுவளமிகு வனப்பினாலும் வடிந்த தாள் உடைமையாலும்கிளர் ஒளி மகர வேறு கெழுமிய தன்மையாலும்அளவில் சீர் அனங்கன் வென்றிக் கொடி இரண்டு அனைய வாக.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1101

வில் பொலி தரளக் கோவை விளங்கிய கழுத்து மீதுபொற்பமை வதனமாகும் பதும நல் நிதியம் பூத்தநற்பெரும் பணிலம் என்னும் நன்னிதி போன்று தோன்றிஅல்பொலி கண்டர் தந்த அருட்கு அடையாளம் காட்ட.
சொற்பிரிப்பு
விற்பொலி தரளக் கோவை விளங்கிய கழுத்து மீதுபொற்பு அமை வதனம் ஆகும் பதும நன் நிதியம் பூத்தநற்பெரும் பணிலம் என்னும் நன் நிதி போன்று தோன்றிஅற்பொலி கண்டர் தந்த அருட்கு அடையாளம் காட்ட.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1102

எரியவிழ் காந்தள் மென்பூத் தலை தொடுத்து இசைய வைத்துத்திரள் பெறச் சுருக்கும் செச்சை மாலையோ தெரியின் வேறுகரு நெடுங் கயற்கண் மங்கை கைகளால் காந்தி வெள்ளம்அருகு இழிந்தனவோ என்னும் அதிசயம் வடிவில் தோன்ற.
சொற்பிரிப்பு
எரி அவிழ் காந்தள் மென் பூத் தலை தொடுத்து இசைய வைத்துத்திரள் பெறச் சுருக்கம் செச்சை மாலையோ, தெரியின் வேறுகருநெடும் கயல் கண் மங்கை கைகளால் காந்தி வெள்ளம்அருகு இழிந்தனவோ என்னும் அதிசயம் வடிவில் தோன்ற.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1103

ஏர் கெழு மார்பில் பொங்கும் ஏந்து இளம் கொங்கை நாகக்கார் கெழு விடத்தை நீக்கும் கவுணியர் தலைவர் நோக்கால்ஆர் திருவருளில் பூரித்து அடங்கிய அமுதக் கும்பச்சீர் கெழு முகிழைக் காட்டும் செவ்வியில் திகழ்ந்து தோன்ற.
சொற்பிரிப்பு
ஏர்கெழு மார்பில் பொங்கும் ஏந்து இளம் கொங்கை நாகக்கார்கெழு விடத்தை நீக்கும் கவுணியர் கருணை நோக்கால்ஆர்திரு அருளில் பூரித்து அடங்கிய அமுத கும்பச்சீர்கெழு முகிழைக் காட்டும் செவ்வியில் திகழ்ந்து தோன்ற.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1104

காம வேள் என்னும் வேடன் உந்தியில் கரந்து கொங்கைநேமி அம் புட்கள் தம்மை அகப்பட நேரிது ஆயதாம நீள் கண்ணி சேர்ந்த சலாகை தூக்கியதே போலும்வாமமே கலை சூழ் வல்லி மருங்கின் மேல் உரோம வல்லி.
சொற்பிரிப்பு
காமவேள் என்னும் வேடன் உந்தியில் கரந்து கொங்கைநேமியம் புட்கள் தம்மை அகப்பட நேரிதாயதாம நீள் கண்ணி சேர்த்த சலாகை தூக்கியதே போலும்வாம மேகலை சூழ் வல்லி மருங்கின்மேல் உரோம வல்லி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1105

பிணி அவிழ் மலர் மென் கூந்தல் பெண் அமுது அனையாள் செம்பொன்அணி வளர் அல்குல் தங்கள் அரவு செய் பிழையால் அஞ்சிமணி கிளர் காஞ்சி சூழ்ந்து வனப்புடை அல்குல் ஆகிப்பணி உலகு ஆளும் சேடன் பணம் விரித்து அடைதல் காட்ட.
சொற்பிரிப்பு
பிணி அவிழ் மலர் மென் கூந்தல் பெண் அமுது அனையாள் செம்பொன்அணிவளர் அல்குல் தங்கள் அரவு செய் பிழையால் அஞ்சிமணிகிளர் காஞ்சி சூழ்ந்து வனப்பு உடை அல்குல் ஆகிப்பணி உலகு ஆளும் சேடன் பணம் விரித்து அடைதல் காட்ட.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1106

வரிமயில் அனைய சாயல் மங்கை பொன் குறங்கின் மாமைகரி இளம் பிடிக்கை வென்று கதலி மென் தண்டு காட்டத்தெரிவுறும் அவர்க்கு மென்மைச் செழு முழந்தாளின் செவ்விபுரிவுறு பொற் பந்து என்னப் பொலிந்து ஒளி விளங்கிப் பொங்க.
சொற்பிரிப்பு
வரிமயில் அனைய சாயல் மங்கை பொன் குறங்கின் மாமைகரி இளம் பிடிக்கை வென்று கதலி மென் தண்டு காட்டத்தெரிவுறும் அவர்க்கு மென்மைச் செழு முழந்தாளின் செவ்விபுரிவுறு பொற்பந்து என்னப் பொலிந்து ஒளி விளங்கிப் பொங்க.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1107

பூவலர் நறுமென் கூந்தல் பொன் கொடி கணைக்கால் காமன்ஆவ நாழிகையே போலும் அழகினில் மேன்மை எய்தமேவிய செம்பொன் தட்டின் வனப்பினை மீதிட்டு என்றும்ஓவியர்க்கு எழுத ஒண்ணாப் பரட்டு ஒளி ஒளிர்வுற்று ஓங்க.
சொற்பிரிப்பு
பூ அலர் நறுமென் கூந்தல் பொற் கொடி கணைக்கால் காமன்ஆவ நாழிகையே போலும் அழகினில் மேன்மை எய்தமேவிய செம்பொன் தட்டின் வனப்பினை மீது இட்டு என்றும்ஓவியர்க்கு எழுத ஒண்ணாப் பரட்டு ஒளி ஒளிர்வுற்று ஓங்க.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1108

கற்பகம் ஈன்ற செவ்விக் காமரு பவளச் சோதிப்பொன் திரள் வயிரப் பத்திப் பூந்துணர் மலர்ந்த போலும்நற்பதம் பொலிவு காட்ட ஞாலமும் விசும்பும் எல்லாம்அற்புதம் எய்தத் தோன்றி அழகினுக்கு அணியாய் நின்றாள்.
சொற்பிரிப்பு
கற்பகம் ஈன்ற செவ்விக் காமரு பவளச் சோதிப்பொற்றிரள் வயிரப் பத்திப் பூந்துணர் மலர்ந்த போலும்நற்பதம் பொலிவு காட்ட ஞாலமும் விசும்பும் எல்லாம்அற்புதம் எய்தத் தோன்றிஅழகினுக்கு அணியாய் நின்றாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1109

எண்ணில் ஆண்டு எய்தும் வேதாப் படைத்தவள் எழிலின் வெள்ளம்நண்ணும் நான் முகத்தால் கண்டான் அவளினும் நல்லாள் தன்பால்புண்ணியப் பதினாறு ஆண்டு பேர் பெறும் புகலி வேந்தர்கண் நுதல் கருணை வெள்ளம் ஆயிரம் முகத்தால் கண்டார்.
சொற்பிரிப்பு
எண்ணில் ஆண்டு எய்தும் வேதாப் படைத்தவள் எழிலின் வெள்ளம்நண்ணும் நான்முகத்தால் கண்டான் அவளினும் நல்லாள் தன்பால்புண்ணியப் பதினாறு ஆண்டு பேர்பெறும் புகலி வேந்தர்கண்நுதல் கருணை வெள்ளம்ஆயிர முகத்தால் கண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1110

இன்னணம் விளங்கிய ஏர் கொள் சாயலாள்தன்னை முன் கண் உறக் கண்ட தாதையார்பொன் அணி மாளிகைப் புகலி வேந்தர் தாள்சென்னியில் பொருந்த முன் சென்று வீழ்ந்தனர்.
சொற்பிரிப்பு
இன்னணம் விளங்கிய ஏர்கொள் சாயலாள்தன்னை முன் கண் உறக் கண்ட தாதையார்பொன் அணி மாளிகைப் புகலி வேந்தர் தாள்சென்னியில் பொருந்த முன் சென்று வீழ்ந்தனர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1111

அணங்கினும் மேம்படும் அன்னம் அன்னவள்பணம் புரி அரவரைப் பரமர் முன் பணிந்துஇணங்கிய முகில் மதில் சண்பை ஏந்தலைவணங்கியே நின்றனள் மண்ணுளோர் தொழ.
சொற்பிரிப்பு
அணங்கினும் மேம்படும் அன்னம் அன்னவள்பணம் புரி அரவு அரைப் பரமர் முன் பணிந்துஇணங்கிய முகில்மதில் சண்பை ஏந்தலைவணங்கியே நின்றனள்மண் உளோர் தொழ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1112

சீர் கெழு சிவ நேசர் தம்மை முன்னமேகார் கெழு சோலை சூழ் காழி மன்னவர்ஏர் கெழு சிறப்பில் நும் மகளைக் கொண்டு இனிப்பார் கெழு மனையில் படர்மின் என்றலும்.
சொற்பிரிப்பு
சீர்கெழு சிவநேசர் தம்மை முன்னமேகார்கெழு சோலை சூழ் காழி மன்னவர்ஏர்கெழு சிறப்பில் நும்மகளைக் கொண்டு இனிப்பார்கெழு மனையினில்படர்மின் என்றலும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1113

பெருகிய அருள் பெறும் வணிகர் பிள்ளையார்மருவு தாமரை அடி வணங்கிப் போற்றி நின்றுஅருமையால் அடியனேன் பெற்ற பாவையைத்திருமணம் புணர்ந்து அருள் செய்யும் என்றலும்.
சொற்பிரிப்பு
பெருகிய அருள்பெறும் வணிகர், பிள்ளையார்மருவு தாமரை அடிவணங்கிப் போற்றி நின்றுஅருமையால் அடியனேன்பெற்ற பாவையைத்திருமணம் புணர்ந்து அருள் செய்யும் என்றலும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1114

மற்றவர் தமக்கு வண் புகலி வாணர் நீர்பெற்ற பெண் விடத்தினால் வீந்த பின்னையான்கற்றைவார் சடையவர் கருணை காண்வரஉற்பவிப் பித்தலால் உரை தகாது என.
சொற்பிரிப்பு
மற்றவர் தமக்கு வண் புகலி வாணர் நீர்பெற்ற பெண் விடத்தினால் வீந்த பின்னை, யான்கற்றைவார் சடையர் கருணை காண் வரஉற்பவிப் பித்தலால் உரை தகாது என.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1115

வணிகரும் சுற்றமும் மயங்கிப் பிள்ளையார்அணிமலர் அடியில் வீழ்ந்து அரற்ற ஆங்கு அவர்தணிவில் நீள் பெருந்துயர் தணிய வேத நூல்துணிவினை அருள் செய்தார் தூய வாய்மையார்.
சொற்பிரிப்பு
வணிகரும் சுற்றமும் மயங்கிப் பிள்ளையார்அணிமலர் அடியில் வீழ்ந்து அரற்ற, ஆங்கு அவர்தணிவில் நீள் பெருந்துயர் தணிய, வேதநூல்துணிவினை அருள்செய்தார் தூய வாய்மையார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1116

தெள்ளு நீதியின் முறை கேட்ட சீர்க்கிளைவெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திடப்பள்ள நீர்ச் செலவு எனப் பரமர் கோயிலின்உள் எழுந்தருளினார் உடைய பிள்ளையார்.
சொற்பிரிப்பு
தெள்ளு நீதியின் முறை கேட்ட சீர்க்கிளைவெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திடப்பள்ள நீர்ச் செலவு எனப் பரமர் கோயிலின்உள் எழுந்தருளினார் உடைய பிள்ளையார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1117

பான்மையால் வணிகரும் பாவை தன் மணம்ஏனையோர்க்கு இசைகிலேன் என்று கொண்டு போய்வானுயர் கன்னி மாடத்து வைத்தனர்தேனமர் கோதையும் சிவத்தை மேவினாள்.
சொற்பிரிப்பு
பான்மையால் வணிகரும் பாவை தன் மணம்ஏனையோர்க்கு இசைகிலேன் என்று கொண்டுபோய்வான் உயர் கன்னி மாடத்து வைத்தனர்தேன் அமர் கோதையும் சிவத்தை மேவினாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1118

தேவர் பிரான் அமர்ந்து அருளும் திருக் கபாலீச்சரத்துமேவிய ஞானத் தலைவர் விரிஞ்சன் முதல் எவ்வுயிர்க்கும்காவலனார் பெருங்கருணை கை தந்த படி போற்றிப்பாவலர் செந்தமிழ் பாடிப் பன் முறையும் பணிந்து எழுவார்.
சொற்பிரிப்பு
தேவர் பிரான் அமர்ந்து அருளும் திருக் கபாலீச்சரத்துமேவிய ஞானத்தலைவர் விரிஞ்சன் முதல் எவ்உயிர்க்கும்காவலனார் பெருங்கருணை கைதந்த படி போற்றிப்பா அலர் செந்தமிழ் பாடிப் பன் முறையும் பணிந்து எழுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1119

தொழுது புறம் போந்தருளித் தொண்டர் குழாம் புடை சூழப்பழுதில் புகழ் திருமயிலைப் பதியில் அமர்ந்து அருளும் நாள்முழுதுலகும் தரும் இறைவர் முதல் தானம் பல இறைஞ்சஅழுதுலகை வாழ்வித்தார் அப்பதியின் மருங்கு அகல்வார்.
சொற்பிரிப்பு
தொழுது புறம் போந்தருளித் தொண்டர் குழாம் புடை சூழப்பழுதில் புகழ்த் திருமயிலைப் பதியில் அமர்ந்து அருளுநாள்முழுது உலகும் தரும் இறைவர் முதல் தானம் பல இறைஞ்சஅழுது உலகை வாழ்வித்தார் அப்பதியின் மருங்கு அகல்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1120

திருத்தொண்டர் அங்கு உள்ளார் விடை கொள்ளச் சிவநேசர்வருத்தம் அகன்றிட மதுர மொழி அருளி விடை கொடுத்துநிருத்தர் உறை பிற பதிகள் வணங்கிப் போய் நிறை காதல்அருத்தியொடும் திருவான்மியூர் பணிய அணைவுற்றார்.
சொற்பிரிப்பு
திருத்தொண்டர் அங்கு உள்ளார் விடைகொள்ளச், சிவநேசர்வருத்தம் அகன்றிட, மதுர மொழி அருளி, விடைகொடுத்து,நிருத்தர் உறை பிறபதிகள் வணங்கிப் போய், நிறைகாதல்அருத்தியொடும் திருவான்மியூர் பணிய அணைவு உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1121

திருவான்மியூர் மன்னும் திருத்தொண்டர் சிறப்பு எதிரவருவார் மங்கல அணிகள் மறுகு நிரைத்து எதிர்கொள்ளஅருகாக இழிந்தருளி அவர் வணங்கத் தொழுது அன்புதருவார் தம் கோயில் மணித்தடம் நெடுங்கோபுரம் சார்ந்தார்.
சொற்பிரிப்பு
திருவான்மியூர் மன்னும் திருத்தொண்டர் சிறப்பு எதிரவருவார் மங்கல அணிகள் மறுகு நிரைத்து எதிர்கொள்ள,அருகு ஆக இழிந்தருளி அவர் வணங்கத் தொழுது அன்புதருவார் தம் கோயில் மணித் தட நெடுங்கோபுரம் சார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1122

மிக்குயர்ந்த கோபுரத்தை வணங்கி வியன் திருமுன்றில்புக்கருளிக் கோயிலினைப் புடைவலம் கொண்டு உள் அணைந்துகொக்கு இறகு(ம்) மதிக் கொழுந்தும் குளிர் புனலும் ஒளிர்கின்றசெக்கர் நிகர் சடை முடியார் சேவடியின் கீழ்த் தாழ்ந்தார்.
சொற்பிரிப்பு
மிக்கு உயர்ந்த கோபுரத்தை வணங்கி வியன் திருமுன்றில்புக்கு அருளிக், கோயிலினைப் புடை வலங் கொண்டு உள் அணைந்துகொக்கு இறகும் மதிக்கொழுந்தும் குளிர்புனலும் ஒளிர்கின்றசெக்கர் நிகர் சடைமுடியார் சேவடியின் கீழ்த் தாழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1123

தாழ்ந்து பல முறை பணிந்து தம்பிரான் முன் நின்றுவாழ்ந்து களிவரப் பிறவி மருந்தான பெருந்தகையைச்சூழ்ந்த இசைத் திருப்பதிகச் சொல் மாலை வினா உரையால்வீழ்ந்த பெரும் காதலுடன் சாத்தி மிக இன்புற்றார்.
சொற்பிரிப்பு
தாழ்ந்து பல முறை பணிந்து தம்பிரான் முன் நின்றுவாழ்ந்து களி வரப் பிறவி மருந்து ஆன பெருந்தகையைச்சூழ்ந்த இசைத் திருப்பதிகச் சொன் மாலை வினா உரையால்வீழ்ந்த பெருங் காதலுடன் சாத்தி மிக இன்புற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1124

பரவி வரும் ஆனந்த(ம்) நிறைந்த துளி கண் பனிப்பவிரவு மயிர்ப் புளகங்கள் மிசை விளங்கப் புறத்து அணைவுற்றுஅரவ நெடும் திரை வேலை அணிவான்மியூர் அதனுள்சிரபுரத்துப் புரவலனார் சில நாள் அங்கு இனிது அமர்ந்தார்.
சொற்பிரிப்பு
பரவி வரும் ஆனந்தம் நிறைந்த துளி கண் பனிப்பவிரவு மயிர்ப் புளகங்கள் மிசை விளங்கப் புறத்து அணைவு உற்றுஅரவ நெடும் திரை வேலை அணி வான்மியூர் அதன் உள்சிரபுரத்துப் புரவலனார் சிலநாள் அங்கு இனிது அமர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1125

அங்கண் அமர்வார் உலகு ஆளுடையாரை அரும் தமிழின்பொங்கும் இசைப் பதிகங்கள் பல போற்றிப் போந்தருளிக்கங்கை அணி மணி முடியார் பதி பலவும் கலந்து இறைஞ்சிச்செங்கண் விடைக் கொடியார் தம் இடைச் சுரத்தைச் சேர்வுற்றார்.
சொற்பிரிப்பு
அங்கண் அமர்வார் உலகு ஆள் உடையாரை அருந்தமிழின்பொங்கும் இசைப் பதிகங்கள் பல போற்றிப் போந்தருளிக்கங்கை அணி மணி முடியார் பதி பலவும் கலந்து இறைஞ்சிச்செங்கண் விடைக் கொடியார் தம் இடைச்சுரத்தைச் சேர்வுற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1126

சென்னி இள மதி அணிந்தார் மருவு திரு இடைச் சுரத்துமன்னும் திருத் தொண்டர் குழாம் எதிர் கொள்ள வந்தருளிநல் நெடும் கோபுரம் இறைஞ்சி உள்புகுந்து நற்கோயில்தன்னை வலம் கொண்டு அணைந்தார் தம்பிரான் திரு முன்பு.
சொற்பிரிப்பு
சென்னி இளமதி அணிந்தார் மருவு திரு இடைச்சுரத்துமன்னு திருத்தொண்டர் குழாம் எதிர் கொள்ள வந்தருளிநன்நெடும் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நற்கோயில்தன்னை வலம் கொண்டு அணைந்தார் தம்பிரான் திருமுன்பு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1127

கண்ட பொழுதே கலந்த காதலால் கை தலை மேல்கொண்டு தலம் உற விழுந்து குலவு பெரு மகிழ்ச்சியுடன்மண்டிய பேரன்பு உருகி மயிர் முகிழ்ப்ப வணங்கி எழுந்துஅண்டர் பிரான் திருமேனி வண்ணம் கண்டு அதிசயித்தார்.
சொற்பிரிப்பு
கண்ட பொழுதே கலந்த காதலால் கைதலை மேல்கொண்டு தலம் உற விழுந்து குலவு பெருமகிழ்ச்சி உடன்மண்டிய பேரன்பு உருகி மயிர் முகிழ்ப்ப வணங்கி எழுந்துஅண்டர்பிரான் திருமேனி வண்ணம் கண்டு அதிசயித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1128

இருந்த இடைச் சுரம் மேவும் இவர் வண்ணம் என்னே என்றுஅருந்தமிழின் திருப்பதிகத்து அலர் மாலை கொடு பரவித்திருந்து மனம் கரைந்து உருகத் திருக்கடைக் காப்புச் சாத்திப்பெரும் தனி வாழ்வினைப் பெற்றார் பேர் உலகின் பேறு ஆனார்.
சொற்பிரிப்பு
இருந்த இடைச்சுரம் மேவும் இவர் வண்ணம் என்னே! என்றுஅருந்தமிழின் திருப்பதிகத்து அலர் மாலை கொடு பரவித்திருந்து மனம் கரைந்து உருகத் திருக்கடைக் காப்புச் சாத்திப்பெருந்தனி வாழ்வினைப் பெற்றார் பேர் உலகின் பேறு ஆனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1129

நிறைந்து ஆரா வேட்கையினால் நின்று இறைஞ்சி புறம் போந்து அங்குஉறைந்து அருளிப் பணிகின்றார் உமைபாகர் அருள் பெற்றுச்சிறந்த திருத் தொண்டருடன் எழுந்தருளிச் செந்துருத்திஅறைந்து அளிகள் பயில் சாரல் திருக்கழுக் குன்றினை அணைந்தார்.
சொற்பிரிப்பு
நிறைந்து ஆரா வேட்கையினால் நின்று இறைஞ்சிப் புறம்போந்து அங்குஉறைந்தருளிப் பணிகின்றார் உமைபாகர் அருள் பெற்றுச்சிறந்த திருத்தொண்டருடன் எழுந்தருளிச் செந்துருத்திஅறைந்து அளிகள் பயில் சாரல் திருக்கழுக் குன்றினை அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1130

சென்று அணையும் பொழுதின் கண் திருத்தொண்டர் எதிர் கொள்ளப்பொன் திகழும் மணிச் சிவிகை இழிந்தருளி உடன் போந்துமன்றல் விரி நறும் சோலைத் திருமலையை வலம் கொண்டுமின் தயங்கும் சடையாரை விருப்பினுடன் பணிகின்றார்.
சொற்பிரிப்பு
சென்று அணையும் பொழுதின் கண் திருத்தொண்டர் எதிர்கொள்ளப்பொன்திகழும் மணிச்சிவிகை இழிந்தருளி உடன் போந்துமன்றல் விரி நறுஞ்சோலைத் திருமலையை வலங்கொண்டுமின்தயங்கும் சடையாரை விருப்பின்உடன் பணிகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1131

திருக்கழுக் குன்றத்து அமர்ந்த செங்கனகத் தனிக் குன்றைப்பெருக்க வளர் காதலினால் பணிந்து எழுந்து பேராதகருத்தினுடன் காதல் செயும் கோயில் கழுக்குன்று என்றுதிருப்பதிகம் புனைந்தருளிச் சிந்தை நிறை மகிழ் உற்றார்.
சொற்பிரிப்பு
திருக்கழுக் குன்றத்து அமர்ந்த செங்கனகத் தனிக்குன்றைப்பெருக்க வளர் காதலினால் பணிந்து எழுந்து, பேராதகருத்தினுடன் ”காதல் செயும் கோயில் கழுக்குன்று” என்றுதிருப்பதிகம் புனைந்தருளிச் சிந்தை நிறை மகிழ்வுற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1132

இன்புற்று அங்கு அமர்ந்தருளி ஈறில் பெரும் தொண்டருடன்மின் பெற்ற வேணியினார் அருள் பெற்றுப் போந்தருளிஎன்புற்ற மணிமார்பர் எல்லை இலா ஆட்சி புரிந்துஅன்புற்று மகிழ்ந்த திரு அச்சிறு பாக்கம் அணைந்தார்.
சொற்பிரிப்பு
இன்புற்று அங்கு அமர்ந்தருளி ஈறில் பெருந்தொண்டருடன்மின்பெற்ற வேணியார் அருள்பெற்றுப் போந்தருளிஎன்புற்ற மணிமார்பர் எல்லை இலா ஆட்சி புரிந்துஅன்புற்று மகிழ்ந்த திரு அச்சிறு பாக்கத்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1133

ஆதி முதல் வரை வணங்கி ஆட்சி கொண்டார் என மொழியும்கோதில் திருப்பதிக இசை குலாவிய பாடலில் போற்றிமாதவத்து முனிவருடன் வணங்கி மகிழ்ந்து இன்புற்றுத்தீது அகற்றும் செய்கையினார் சின்னாள் அங்கு அமர்ந்தருளி.
சொற்பிரிப்பு
ஆதி முதல்வரை வணங்கி “ஆட்சி கொண்டார்” என மொழியும்கோதில் திருப்பதிக இசை குலாவிய பாடலில் போற்றிமாதவத்து முனிவருடன் வணங்கி மகிழ்ந்து இன்புற்றுத்தீது அகற்றும் செய்கையினார் சின்னாள் அங்கு அமர்ந்தருளி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1134

ஏறணிந்த வெல் கொடியார் இனிது அமர்ந்த பதி பிறவும்நீறணிந்த திருத்தொண்டர் எதிர் கொள்ள நேர்ந்து இறைஞ்சிவேறு பல நதி கானம் கடந்து அருளி விரிசடையில்ஆறணிந்தார் மகிழ்ந்த திரு அரசிலியை வந்து அடைந்தார்.
சொற்பிரிப்பு
ஏறு அணிந்த வெல்கொடியார் இனிது அமர்ந்த பதி பிறவும்நீறு அணிந்த திருத்தொண்டர் எதிர் கொள்ள நேர்ந்து இறைஞ்சிவேறு பல நதி கானம் கடந்தருளி விரிசடையில்ஆறு அணிந்தார் மகிழ்ந்த திரு அரசிலியை வந்து அடைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1135

அரசிலியை அமர்ந்து அருளும் அங்கண் அரசைப் பணிந்துபரசி எழு திருப் புறவார் பனங்காட்டூர் முதலாயவிரை செய் மலர்க் கொன்றையினார் மேவு பதி பல வணங்கித்திரை செய் நெடுங் கடல் உடுத்த திருத்தில்லை நகர் அணைந்தார்.
சொற்பிரிப்பு
அரசிலியை அமர்ந்து அருளும் அங்கண் அரசைப் பணிந்துபரசி எழு திருப் புறவார் பனங்காட்டூர் முதல் ஆயவிரைசெய் மலர்க் கொன்றையினார் மேவுபதி பல வணங்கித்திரைசெய் நெடும் கடல் உடுத்த திருத்தில்லைநகர் அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1136

எல்லையில் ஞானத் தலைவர் எழுந்தருள எதிர் கொள்வார்தில்லையில் வாழ் அந்தணர் மெய்த் திருத்தொண்டர் சிறப்பினொடுமல்கி எதிர் பணிந்து இறைஞ்ச மணிமுத்தின் சிவிகை இழிந்துஅல்கு பெருங் காதலுடன் அஞ்சலி கொண்டு அணைகின்றார்.
சொற்பிரிப்பு
எல்லையில் ஞானத் தலைவர் எழுந்தருள எதிர்கொள்வார்தில்லையில் வாழ் அந்தணர் மெய்த் திருத்தொண்டர் சிறப்பினொடுமல்கி எதிர் பணிந்து இறைஞ்ச மணிமுத்தின் சிவிகை இழிந்துஅல்கு பெரும் காதலுடன் அஞ்சலி கொண்டு அணைகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1137

திரு எல்லையிற் பணிந்து சென்று அணைவார் சேண் விசும்பைமருவி விளங்குஒளி தழைக்கும் வடதிசை வாயிலை வணங்கிஉருகு பெருங் காதலுடன் உள் புகுந்து மறையின் ஒலிபெருகி வளர் மணிமாடப் பெருந் திரு வீதியை அணைந்தார்.
சொற்பிரிப்பு
திருஎல்லையினைப் பணிந்து சென்று அணைவார் சேண் விசும்பைமருவி விளங்கு ஒளி தழைக்கும் வடதிசை வாயிலை வணங்கிஉருகுபெரும் காதலுடன் உட் புகுந்து, மறையின் ஒலிபெருகி வளர் மணிமாடப் பெருந் திரு வீதியை அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1138

நலம் மலியும் திருவீதி பணிந்தெழுந்து நற்றவர்தம்குல(ம்) நிறைந்த திருவாயில் குவித்த மலர்ச் செங்கையொடுதலமுற முன் தாழ்ந்து எய்தித் தமனிய மாளிகை மருங்குவலமுற வந்து ஓங்கிய பேரம்பலத்தை வணங்கினார்.
சொற்பிரிப்பு
நலமலியும் திருவீதி பணிந்து எழுந்து நற்றவர் தம்குல நிறைந்த திருவாயில் குவிந்த மலர்ச் செங்கையொடுதலம்உற முன் தாழ்ந்து எய்தித் தமனிய மாளிகை மருங்குவலம் உற வந்து ஓங்கிய பேரம்பலத்தை வணங்கினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1139

வணங்கி மிக மனம் மகிழ்ந்து மால் அயனும் தொழும் பூதகணங்கள் மிடை திருவாயில் பணிந்து எழுந்து கண் களிப்பஅணங்கு தனி கண்டருள அம்பலத்தே ஆடுகின்றகுணம் கடந்த தனிக் கூத்தர் பெருங் கூத்துக் கும்பிடுவார்.
சொற்பிரிப்பு
வணங்கி, மிக மன மகிழ்ந்து மால் அயனும் தொழும் பூதகணங்கள் மிடை திருவாயில் பணிந்து எழுந்து கண் களிப்பஅணங்கு தனி கண்டருள அம்பலத்தே ஆடுகின்றகுணங்கடந்த தனிக் கூத்தர் பெருங்கூத்துக் கும்பிடுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1140

தொண்டர் மனம் பிரியாத திருப்படியைத் தொழுது இறைஞ்சிமண்டுபெருங் காதலினால் நோக்கி முக(ம்) மலர்ந்து எழுவார்அண்டம் எலாம் நிறைந்து எழுந்த ஆனந்தத்துள் அலைந்துகண்ட பேரின் பத்தின் கரையில்லா நிலை அணைந்தார்.
சொற்பிரிப்பு
தொண்டர் மனம் பிரியாத திருப்படியைத் தொழுது இறைஞ்சிமண்டு பெருங் காதலினால் நோக்கி முகம் மலர்ந்து எழுவார்அண்டம் எலாம் நிறைந்து எழுந்த ஆனந்தத்து உள் அலைந்துகண்ட பேர் இன்பத்தின் கரையில்லா நிலை அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1141

அந்நிலைமை அடைந்து திளைத்து ஆங்கு எய்தாக் காலத்தில்மன்னு திரு அம்பலத்தை வலம் கொண்டு போந்தருளிப்பொன் அணி மாளிகை வீதிப் புறத்து அணைந்து போது தொறும்இன்னிசை வண்தமிழ் பாடிக் கும்பிட்டு அங்கு இனிது இருந்தார்.
சொற்பிரிப்பு
அந்நிலைமை அடைந்து திளைத்து ஆங்கு எய்தாக் காலத்தில்மன்னு திருஅம்பலத்தை வலங்கொண்டு போந்தருளிப்பொன் அணி மாளிகை வீதிப் புறத்து அணைந்து போதுதொறும்இன்னிசை வண்தமிழ் பாடிக் கும்பிட்டு அங்கு இனிது இருந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1142

திருந்திய சீர்த் தாதையார் சிவ பாத இருதயரும்பொருந்து திருவளர் புகலிப் பூசுரரும் மாதவரும்பெருந் திருமால் அயன் போற்றும் பெரும்பற்றப் புலியூரில்இருந் தமிழாகரர் அணைந்தார் எனக் கேட்டு வந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
திருந்திய சீர்த் தாதையார் சிவபாத இருதயரும்பொருந்து திருவளர் புகலிப் பூசுரரும் மாதவரும்பெருந் திருமால் அயன் போற்றும் பெரும்பற்றப் புலியூரில்இருந்தமிழாகரர் அணைந்தார் எனக் கேட்டு வந்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1143

ஆங்கு அவரைக் கண்டு சிறப்பு அளித்து அருளி அவரோடும்தாங்கரிய காதலினால் தம் பெருமான் கழல் வணங்கஓங்கு திருத் தில்லை வாழ் அந்தணரும் உடன் ஆகத்தேன் கமழ் கொன்றைச் சடையார் திருச்சிற்றம்பலம் பணிந்தார்.
சொற்பிரிப்பு
ஆங்கு அவரைக் கண்டு சிறப்பு அளித்தருளி அவரோடும்தாங்கு அரிய காதலினால் தம் பெருமான் கழல் வணங்கஓங்கு திருத்தில்லை வாழ் அந்தணரும் உடன் ஆகத்தேங்கமழ் கொன்றைச் சடையார் திருச்சிற்றம்பலம் பணிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1144

தென் புகலி அந்தணரும் தில்லை வாழ் அந்தணர் முன்அன்பு நெறி பெருக்குவித்த ஆண்டகையார் அடி போற்றிப்பொன் புரி செஞ்சடைக் கூத்தர் அருள் பெற்றுப் போந்தருளிஇன்புறு தோணியில் அமர்ந்தார் தமை வணங்க எழுந்தருள.
சொற்பிரிப்பு
தென் புகலி அந்தணரும் தில்லை வாழ் அந்தணர் முன்அன்பு நெறி பெருக்குவித்த ஆண்டகையார் அடி போற்றிப்பொன்புரி செஞ்சடைக் கூத்தர் அருள்பெற்றுப் போந்தருளிஇன்புறு தோணியில் அமர்ந்தார் தமை வணங்க எழுந்தருள.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1145

நற்றவர் தம் குழாத்தோடு நம்பர் திரு நடம் செய்யும்பொற்பதியின் திரு எல்லை பணிந்தருளிப் புறம் போந்துபெற்றம் உயர்த்தவர் அமர்ந்த பிறபதியும் புக்கு இறைஞ்சிக்கற்றவர்கள் பரவு திருக் கழுமலமே சென்று அடைவார்.
சொற்பிரிப்பு
நற்றவர் தம் குழாத்தோடும் நம்பர் திருநடம் செய்யும்பொற்பதியின் திருஎல்லை பணிந்தருளி புறம் போந்துபெற்றம் உயர்த்தவர் அமர்ந்த பிற பதியும் புக்கு இறைஞ்சிக்கற்றவர்கள் பரவு திருக்கழுமலமே சென்று அடைவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1146

பல் பதிகள் கடந்தருளிப் பன்னிரண்டு பேர் படைத்ததொல்லை வளப் பூந்தராய் தூரத்தே தோன்றுதலும்மல்கு திரு மணிமுத்தின் சிவிகை இழிந்து எதிர் வணங்கிச்செல்வமிகு பதி அதன் மேல் திருப்பதிகம் அருள் செய்வார்.
சொற்பிரிப்பு
பல் பதிகள் கடந்தருளிப் பன்னிரண்டு பேர் படைத்ததொல்லை வளப் பூந்தராய் தூரத்தே தோற்றுதலும்மல்கு திருமணிமுத்தின் சிவிகை இழிந்து எதிர் வணங்கிச்செல்வ மிகு பதி அதன்மேல் திருப்பதிகம் அருள்செய்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1147

மன்னும் இசை மொழி வண்டார் குழல் அரிவை என்று எடுத்துமின்னு சுடர் மாளிகை விண் தாங்குவ போல் வேணுபுரம்என்னும் இசைச் சொல் மாலை எடுத்து இயம்பி எழுந்தருளிப்புன்னை மணம் கமழ் புறவப் புறம்பு அணையில் வந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
மன்னும் இசை மொழி வண்டார் குழல் அரிவை என்று எடுத்துமின்னு சுடர் மாளிகை விண் தாங்குவ போல் வேணுபுரம்என்னும் இசைச் சொல் மாலை எடுத்து இயம்பி எழுந்தருளிப்புன்னை மணம் கமழ் புறவப் புறம்பணையில் வந்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1148

வாழி வளர் புறம்பு அணையின் மருங்கு அணைந்து வரி வண்டுசூழும் மலர் நறும் தீப தூபங்களுடன் தொழுதுகாழி நகர் சேர்மின் எனக் கடை முடிந்த திருப்பதிகம்ஏழிசையினுடன் பாடி எயின் மூதூர் உள் புகுந்தார்.
சொற்பிரிப்பு
வாழி வளர் புறம்பணையின் மருங்கு அணைந்து வரிவண்டுசூழும் மலர் நறும் தீப தூபங்கள் உடன்தொழுதுகாழி நகர் சேர்மின் எனக் கடைமுடிந்த திருப்பதிகம்ஏழ் இசையின் உடன் பாடி எயின் மூதூர் உள் புகுந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1149

சேண் உயர்ந்த திருத்தோணி வீற்றிருந்த சிவபெருமான்தாள் நினைந்த ஆதரவின் தலைப்பாடு தனை உன்னிநீள் நிலைக் கோபுரம் அணைந்து நேர் இறைஞ்சிப் புக்கருளிவாள் நிலவு பெருங் கோயில் வலம் கொண்டு முன் பணிந்தார்.
சொற்பிரிப்பு
சேண் உயர்ந்த திருத்தோணி வீற்றிருந்த சிவபெருமான்தாள் நினைந்த ஆதரவின் தலைப்பாடு தனை உன்னிநீள் நிலைக் கோபுரம் அணைந்து நேர் இறைஞ்சிப் புக்கு அருளிவாள் நிலவு பெருங் கோயில் வலங்கொண்டு முன் பணிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1150

முன் இறைஞ்சித் திருவருளின் முழு நோக்கம் பெற்றேறிப்பொன் இமயப் பாவையுடன் புணர்ந்து இருந்த புராதனரைச்சென்னி மிசைக் குவித்த கரம் கொடு விழுந்து திளைத்தெழுந்துமன்னு பெரு வாழ்வு எய்தி மனம் களிப்ப வணங்குவார்.
சொற்பிரிப்பு
முன் இறைஞ்சித் திருஅருளின் முழு நோக்கம் பெற்று ஏறிப்பொன் இமயப்பாவை உடன் புணர்ந்து இருந்த புராதனரைச்சென்னி மிசைக் குவித்த கரம் கொடு விழுந்து திளைத்து எழுந்துமன்னு பெருவாழ்வு எய்தி மனங்களிப்ப வணங்குவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1151

பரவு திருப் பதிகங்கள் பலவும் இசையினில் பாடிவிரவிய கண் அருவி நீர் வெள்ளத்தில் குளித்தருளிஅரவு அணிந்தார் அருள் பெருக புறம்பு எய்தி அன்பருடன்சிரபுரத்துப் பெருந்தகையார் தம் திருமாளிகை சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
பரவு திருப்பதிகங்கள் பலவும் இசையினில் பாடிவிரவிய கண் அருவி நீர் வெள்ளத்தில் குளித்தருளிஅரவு அணிந்தார் அருள் பெருகப் புறம்பு எய்தி அன்பருடன்சிர புரத்துப் பெருந்தகையார் தம் திருமாளிகை சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1152

மாளிகையின் உள் அணைந்து மறையவர்கட்கு அருள் புரிந்துதாள் பணியும் பெருங்கிளைக்குத் தகுதியினால் தலை அளிசெய்துஆளுடைய தம் பெருமான் அடியவர் களுடன் அமர்ந்துநீளவரும் பேரின்பம் மிகப் பெருக நிகழு நாள்.
சொற்பிரிப்பு
மாளிகையின் உள் அணைந்து மறையவர்கட்கு அருள்புரிந்துதாள் பணியும் பெருங்கிளைக்குத் தகுதியினால் தலையளி செய்துஆளுடைய தம்பெருமான் அடியவர்கள் உடன் அமர்ந்துநீளவரும் பேர் இன்பம் மிகப் பெருக நிகழும் நாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1153

காழி நாடு உடைய பிரான் கழல் வணங்கி மகிழ்வு எய்தஆழியினும் மிகப் பெருகும் ஆசையுடன் திருமுருகர்வாழி திரு நீல நக்கர் முதல் தொண்டர் மற்று எனையோர்சூழும் நெடும் சுற்றமுடன் தோணிபுரம் தொழுது அணைந்தார்.
சொற்பிரிப்பு
காழி நாடு உடைய பிரான் கழல் வணங்கி, மகிழ்வு எய்த,ஆழியினும் மிகப்பெருகும் ஆசை உடன் திருமுருகர்வாழி திரு நீலநக்கர், முதல் தொண்டர் மற்று எனையோர்சூழு நெடும் சுற்றமுடன் தோணிபுரம் தொழுது அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1154

வந்தவரை எதிர் கொண்டு மனம் மகிழ்ந்து சண்பையர்கோன்அந்தமில் சீர் அடியார்கள் அவரோடும் இனிது அமர்ந்துசுந்தர ஆரணங்கினுடன் தோணியில் வீற்றிருந்தாரைச்செந்தமிழின் பந்தத்தால் திருப்பதிகம் பல பாடி.
சொற்பிரிப்பு
வந்தவரை எதிர்கொண்டு மனமகிழ்ந்து சண்பையர் கோன்அந்தமில் சீர் அடியார்கள் அவரோடும் இனிது அமர்ந்துசுந்தர வாரணங்கின் உடன் தோணியில் வீற்றிருந்தாரைச்செந்தமிழின் பந்தத்தால் திருப்பதிகம் பல பாடி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1155

பெரு மகிழ்ச்சியுடன் செல்லப் பெரும் தவத்தால் பெற்றவரும்மருவு பெரும் கிளையான மறையவரும் உடன் கூடித்திருவளர் ஞானத்தலைவர் திருமணம் செய்து அருளுதற்குப்பருவம் இது என்று எண்ணி அறிவிக்கப் பாங்கு அணைந்தார்.
சொற்பிரிப்பு
பெருமகிழ்ச்சி உடன்செல்லப் பெருந்தவத்தால் பெற்றவரும்மருவு பெருங்கிளை ஆன மறையவரும் உடன்கூடித்திருவளர் ஞானத்தலைவர் திருமணம் செய்து அருளுதற்குப்பருவம் இது என்று எண்ணி அறிவிக்கப் பாங்கு அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1156

நாட்டு மறை முறை ஒழுக்கம் ஞான போனகருக்கும்கூட்டுவது மனம் கொள்வார் கோதில் மறை நெறிச் சடங்குகாட்டவரும் வேள்வி பல புரிவதற்கு ஓர் கன்னிதனைவேட்டருள வேண்டும் என விண்ணப்பம் செய்தார்கள்.
சொற்பிரிப்பு
நாட்டு மறைமுறை ஒழுக்கம் ஞான போனகருக்கும்கூட்டுவது மனம்கொள்வார் கோதில் மறை நெறிச்சடங்குகாட்டவரும் வேள்வி பல புரிவதற்கு ஓர் கன்னி தனைவேட்டருள வேண்டும் எனவிண்ணப்பம் செய்தார்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1157

மற்றவர் தம் மொழி கேட்டு மாதவத்தின் கொழுந்து அனையார்சுற்றம் உறும் பெரும் பாசத் தொடர்ச்சி விடும் நிலைமையராய்பெற்றம் உயர்த்தவர் அருள் முன் பெற்றதினால் இசையாதுமுற்றியது ஆயினும் கூடாது என்று அவர் முன் மொழிந்து அருள.
சொற்பிரிப்பு
மற்றவர் தம் மொழிகேட்டு மாதவத்தின் கொழுந்து அனையார்சுற்றம் உறு பெரும் பாசத் தொடர்ச்சி விடு நிலைமையராய்ப்பெற்றம் உயர்த்தவர் அருள் முன் பெற்றதினால் இசையாதுமுற்றியதாயினும் கூடாது என்று அவர் முன் மொழிந்தருள.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1158

அருமறையோரவர் பின்னும் கை தொழுது அங்கு அறிவிப்பார்இருநிலத்து மறை வழக்கம் எடுத்தீர் நீர் ஆதலினால்வருமுறையால் அறுதொழிலின் வைதிகமாம் நெறி ஒழுகும்திருமணம் செய்து அருளுதற்குத் திரு உள்ளம் செய்யும் என.
சொற்பிரிப்பு
அருமறையோர் அவர் பின்னும் கை தொழுது அங்கு அறிவிப்பார்இருநிலத்து மறைவழக்கம் எடுத்தீர் நீர் ஆதலினால்வருமுறையால் அறுதொழிலின் வைதிக மா நெறி ஒழுகும்திருமணம் செய்து அருளுதற்குத் திருஉள்ளம் செய்யும் என.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1159

மறை வாழ அந்தணர்தம் வாய்மை ஒழுக்கம் பெருகும்துறை வாழச் சுற்றத்தார் தமக்கு அருளி உடன் படலும்பிறை வாழும் திருமுடியில் பெரும் புனலோடு அரவு அணிந்தகறை வாழும் கண்டத்தார் தமைத் தொழுது மனம் களித்தார்.
சொற்பிரிப்பு
மறை வாழ அந்தணர் தம் வாய்மை ஒழுக்கம்பெருகும்துறை வாழச் சுற்றத்தார் தமக்கு அருளி உடன்படலும்பிறைவாழும் திருமுடியில் பெரும் புனலோடு அரவு அணிந்தகறைவாழும் கண்டத்தார் தமைத் தொழுது மனங்களித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1160

திரு ஞான சம்பந்தர் திரு உள்ளம் செய்ததற்குத்தருவாய்மை மறையவரும் தாதையரும் தாங்கரியபெருவாழ்வு பெற்றாராய்ப் பிஞ்ஞகனார் அருள் என்றேஉருகா நின்று இன்பம் உறும் உள மகிழ்ச்சி எய்துவார்.
சொற்பிரிப்பு
திருஞான சம்பந்தர் திருஉள்ளம் செய்ததற்குத்தருவாய்மை மறையவரும் தாதையரும் தாங்கு அரியபெருவாழ்வு பெற்றாராய்ப் பிஞ்ஞகனார் அருள் என்றேஉருகா நின்று இன்பம் உறும் உள மகிழ்ச்சி எய்துவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1161

ஏதமில் சீர் மறையவரில் ஏற்ற குலத்தோடு இசைவால்நாதர் திருப் பெருமணத்து நம்பாண்டார் நம்பி பெறும்காதலியைக் காழி நாடு உடையபிரான் கைப்பிடிக்கபோதும் அவர் பெரும் தன்மை எனப் பொருந்த எண்ணினார்.
சொற்பிரிப்பு
ஏதம் இல் சீர் மறையவரில் ஏற்ற குலத்தோடு இசைவால்நாதர் திருப் பெருமணத்து நம்பாண்டார் நம்பி பெறும்காதலியைக் காழி நாடு உடைய பிரான் கைப்பிடிக்கப்போதும் அவர் பெருந்தன்மை எனப் பொருந்த எண்ணினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1162

திருஞான சம்பந்தர் சீர் பெருக மணம் புணரும்பெருவாழ்வு திருத்தொண்டர் மறையவர்கள் மிகப்பேணவருவாரும் பெரும் சுற்றம் மகிழ் சிறப்ப மகள் பேசத்தருவார் தண் பணை நல்லூர் சார்கின்றார் தாதையார்.
சொற்பிரிப்பு
திருஞான சம்பந்தர் சீர் பெருக மணம் புணரும்பெருவாழ்வு திருத்தொண்டர் மறையவர்கள், மிகப்பேணி,வருவாரும் பெருஞ்சுற்றம் மகிழ் சிறப்ப, மகள் பேசத்தருவார் தண் பணை நல்லூர் சார்கின்றார் தாதையார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1163

மிக்க திருத்தொண்டர்களும் வேதியரும் உடன் ஏகத்திக்கு நிகழ் திருநல்லூர் பெருமணத்தைச் சென்று எய்தத்தக்க புகழ் நம்பாண்டார் நம்பிதாம் அது கேட்டுச்செக்கர் முடிச்சடையார் தம் திருப்பாதம் தொழுதெழுவார்.
சொற்பிரிப்பு
மிக்க திருத்தொண்டர்களும் வேதியரும் உடன் ஏகத்திக்கு நிகழ் திருநல்லூர்ப் பெருமணத்தைச் சென்று எய்தத்தக்க புகழ் நம்பாண்டார் நம்பி தாம் அது கேட்டுச்செக்கர் முடிச் சடையார் தம் திருப்பாதம் தொழுது எழுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1164

ஒப்பரிய பேர் உவகை ஓங்கி எழும் உள்ளத்தால்அப்பு நிறை குடம் விளக்கு மறுகு எல்லாம் அணி பெருக்கிச்செப்பரிய ஆர்வம் மிகு பெரும் சுற்றத்தொடும் சென்றேஎப்பொருளும் எய்தினேன் எனத் தொழுது அங்கு எதிர் கொண்டார்.
சொற்பிரிப்பு
ஒப்பு அரிய பேர் உவகை ஓங்கி எழும் உள்ளத்தால்அப்பு நிறை குடம், விளக்கு மறுகு எல்லாம் அணி பெருக்கிச்செப்பரிய ஆர்வம் மிகு பெருஞ் சுற்றத்தொடும் சென்றே“எப்பொருளும் எய்தினேன்” எனத் தொழுது அங்கு எதிர்கொண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1165

எதிர் கொண்டு மணி மாடத்தினில் எய்தி இன்பமுறுமதுர மொழி பல மொழிந்து வரன் முறையால் சிறப்பு அளிப்பசதுர் முகனின் மேலாய சண்பை வரு மறையவரும்முதிர் உணர்வின் மாதவரும் அணைந்த திறம் மொழிகின்றார்.
சொற்பிரிப்பு
எதிர்கொண்டு மணி மாடத்தினில் எய்தி இன்பம் உறுமதுரமொழி பல மொழிந்து வரன்முறையால் சிறப்பு அளிப்பச்சதுர்முகனின் மேல் ஆய சண்பை வரு மறையவரும்முதிர் உணர்வின் மாதவரும் அணைந்த திறம் மொழிகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1166

ஞான போனகருக்கு நற்றவத்தின் ஒழுக்கத்தால்ஊனமில் சீலத்து உம்பால் மகள் பேச வந்தது எனஆன பேர் அந்தணர் பால் அருள் உடைமை யாம் என்றுவான் அளவு நிறைந்த பெரு மன மகிழ்ச்சியொடு மொழிவார்.
சொற்பிரிப்பு
ஞான போனகருக்கு நற்றவத்தின் ஒழுக்கத்தால்ஊனம் இல் சீலத்து உம்பால் மகள் பேச வந்தது என“ஆன பேறு அந்தணர்பால் அருள் உடைமையாம்” என்றுவான் அளவு நிறைந்த பெரு மன மகிழ்ச்சியொடு மொழிவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1167

உம்முடைய பெரும் தவத்தால் உலகு அனைத்தும் ஈன்று அளித்தஅம்மை திருமுலைப் பாலில் குழைத்த ஆரமுது உண்டார்க்குஎம்முடைய குலக் கொழுந்தை யாம் உய்யத் தருகின்றோம்வம்மின் என உரைசெய்து மனமகிழ்ந்து செலவிடுத்தார்.
சொற்பிரிப்பு
உம்முடைய பெருந்தவத்தால் உலகு அனைத்தும் ஈன்று அளித்தஅம்மை திருமுலைப் பாலில் குழைத்த ஆர் அமுது உண்டார்க்குஎம்முடைய குலக்கொழுந்தை யாம் உய்யத் தருகின்றோம்;வம்மின் என உரை செய்து மனமகிழ்ந்து செலவிடுத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1168

பேர் உவகையால் இசைவு பெற்றவர் தாம் மீண்டு அணைந்துகார் உலவு மலர்ச் சோலைக் கழுமலத்தை வந்து எய்திச்சீர் உடைய பிள்ளையார்க்கு அவர் நேர்ந்தபடி செப்பிப்பார் குலவும் திருமணத்தின் பான்மையினைத் தொடங்குவார்.
சொற்பிரிப்பு
பேர் உவகையால் இசைவு பெற்றவர் தாம் மீண்டு அணைந்துகார் உலவு மலர்ச்சோலைக் கழுமலத்தை வந்து எய்திச்சீர் உடைய பிள்ளையார்க்கு அவர் நேர்ந்தபடி செப்பிப்பார் குலவும் திருமணத்தின் பான்மையினைத் தொடங்குவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1169

திருமணம் செய் கலியாணத் திருநாளும் திகழ் சிறப்பின்மருவிய ஓரையும் கணித மங்கல நூலவர் வகுப்பப்பெருகு மண நாள் ஓலை பெரும் சிறப்பினுடன் போக்கிஅருள் புரிந்த நன்னாளில் அணிமுளைப் பாலிகை விதைத்தார்.
சொற்பிரிப்பு
திருமணம் செய் கலியாணத் திருநாளும் திகழ் சிறப்பின்மருவிய ஓரையும் கணித மங்கல நூலவர் வகுப்பப்பெருகு மணநாள் ஓலை பெருஞ்சிறப்பின் உடன்போக்கிஅருள்புரிந்த நன்நாளில் அணி முளைப்பாலிகை விதைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1170

செல்வம் மலி திருப்புகலி செழும் திரு வீதிகள் எல்லாம்மல்கு நிறை குடம் விளக்கு மகர தோரணம் நிரைத்தேஎல்லையிலா ஒளி முத்து மாலைகள் எங்கணும் நாற்றிஅல்கு பெரும் திரு ஓங்க அணி சிறக்க அலங்கரித்தார்.
சொற்பிரிப்பு
செல்வமலி திருப்புகலிச் செழுந்திரு வீதிகள் எல்லாம்மல்கு நிறை குடம், விளக்கு, மகர தோரணம் நிரைத்தேஎல்லை இலா ஒளி முத்து மாலைகள் எங்கணும் நாற்றிஅல்கு பெரும் திரு ஓங்க அணிசிறக்க அலங்கரித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1171

அருந்தவத்தோர் அந்தணர்கள் அயல் உள்ளோர் தாம் உய்யப்பொருந்து திரு நாள் ஓலை பொருவிறந்தார் கொண்டு அணையத்திருந்து புகழ் நம்பாண்டார் நம்பி சிறப்பு எதிர் கொண்டுவருந்தவத்தான் மகள் கொடுப்பார் வதுவை வினை தொடங்குவார்.
சொற்பிரிப்பு
அருந்தவத்தோர், அந்தணர்கள், அயல் உள்ளோர் தாம் உய்யப்பொருந்து திருநாள் ஓலை பொருஇறந்தார் கொண்டு அணையத்திருந்து புகழ் நம்பாண்டார் நம்பி சிறப்பு எதிர்கொண்டுவருந்தவத்தால் மகள் கொடுப்பார் வதுவை வினை தொடங்குவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1172

மன்னும் பெரும் சுற்றத்தார் எல்லாரும் வந்து ஈண்டிநன்னிலைமைத் திருநாளுக்கெழுநாளாம் நன்னாளில்பன்மணி மங்கல முரசம் பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்பப்பொன் மணிப் பாலிகை மீது புனித முளை பூரித்தார்.
சொற்பிரிப்பு
மன்னு பெரும் சுற்றத்தார் எல்லாரும் வந்து ஈண்டிநன் நிலைமைத் திருநாளுக்கு எழுநாளாம் நன்நாளில்பன்மணி மங்கல முரசம் பல்இயங்கள் நிறைந்து ஆர்ப்பப்பொன்மணிப் பாலிகை மீது புனிதமுளை பூரித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1173

சேண் உயரும் மாடங்கள் திருப் பெருகு மண்டபங்கள்நீணிலைய மாளிகைகள் நிகரில் அணி பெற விளக்கிக்காண வரும் கை வண்ணம் கவின் ஓங்கும் படி எழுதிவாண் நிலவு மணிக் கடைக்கண் மங்கலக் கோலம் புனைந்து.
சொற்பிரிப்பு
சேண்உயரும் மாடங்கள் திருப்பெருகு மண்டபங்கள்நீள்நிலைய மாளிகைகள் நிகர்இல் அணி பெற விளக்கிக்காணவரும் கைவண்ணம் கவின் ஓங்கும் படி எழுதிவாள்நிலவு மணிக்கடைக்கண் மங்கலக் கோலம் புனைந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1174

நீடு நிலைத் தோரணங்கள் நீள் மருகு தொறும் நிரைத்துமாடுயரும் கொடி மாலை மணி மாலையிடைப் போக்கிச்சேடுயரும் வேதிகைகள் செழுஞ்சாந்து கொடு நீவிப்பீடு கெழு மணி முத்தின் பெரும் பந்தர் பல புனைந்தார்.
சொற்பிரிப்பு
நீடுநிலைத் தோரணங்கள் நீள் மறுகு தொறும் நிரைத்துமாடு உயரும் கொடிமாலை மணிமாலை இடைப் போக்கிச்சேடு உயரும் வேதிகைகள் செழுஞ்சாந்து கொடு நீவிப்பீடு கெழு மணிமுத்தின் பெரும்பந்தர் பல புனைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1175

மன்றல் வினைத் திரு முளை நாள் தொடங்கி வரும் நாள் எல்லாம்முன்றில் தொறும் வீதி தொறும் முக நெடுவாயிகள் தோறும்நின்று ஒளிரும் மணி விளக்கு நிறைவாசப் பொற்குடங்கள்துன்று சுடர்த் தாமங்கள் தூபங்கள் துதைவித்தார்.
சொற்பிரிப்பு
மன்றல்வினைத் திருமுளை நாள் தொடங்கி வருநாள் எல்லாம்முன்றில் தொறும், வீதி தொறும் முகநெடு வாயில்கள் தொறும்,நின்று ஒளிரும் மணி விளக்கு, நிறை வாசப் பொற்குடங்கள்துன்று சுடர்த் தாமங்கள், தூபங்கள் துதைவித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1176

எங்கணும் மெய்த் திருத்தொண்டர் மறையவர்கள் ஏனையோர்மங்கல நீள் மணவினை நாள் கேட்டு மிக மகிழ்வு எய்திப்பொங்கு திருப்புகலிதனில் நாள்தோறும் புகுந்து ஈண்டஅங்கண் அணைந்தவர்க்கு எல்லாம் பெரும் சிறப்பு மிக அளித்தார்.
சொற்பிரிப்பு
எங்கணும் மெய்த் திருத்தொண்டர், மறையவர்கள், ஏனையோர்மங்கல நீள் மணவினை நாள் கேட்டு மிக மகிழ்வு எய்திப்பொங்கு திருப்புகலி தனில் நாள்தோறும் புகுந்து ஈண்டஅங்கண் அணைந்தவர்க்கு எல்லாம் பெருஞ் சிறப்பு மிக அளித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1177

மங்கல தூரிய நாதம் மறுகு தொறும் நின்று இயம்பப்பொங்கிய நான்மறை ஓசை கடல் ஓசை மிசைப் பொலியத்தங்கு நறும் குறை அகிலின் தழைத்த செழும் புகையினுடன்செங்கனல் ஆகுதிப் புகையும் தெய்வ விரை மணம் பெருக.
சொற்பிரிப்பு
மங்கல தூரிய நாதம் மறுகு தொறும் நின்று இயம்பப்பொங்கிய நான்மறை ஓசை கடல் ஓசை மிசைப் பொலியத்தங்கு நறும் குறை அகலின் தழைத்த செழும் புகையின் உடன்செங்கனல் ஆகுதிப் புகையும் தெய்வ விரை மணம் பெருக.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1178

எண் திசையில் உள்ளோரும் ஈண்டு வளத்தொடு நெருங்கப்பண்ட நிறை சாலைகளும் பல வேறு விதம் பயிலமண்டு பெரு நிதிக் குவைகள் மலைப் பிறங்கல் என மலியஉண்டி வினைப் பெருந்துழனி ஓவாத ஒலி ஓங்க.
சொற்பிரிப்பு
எண்திசையின் உள்ளோரும் ஈண்டு வளத்தொடு நெருங்கப்பண்ட நிறை சாலைகளும் பல வேறு விதம் பயிலமண்டு பெரு நிதிக்குவைகள் மலைப் பிறங்கல் என மலியஉண்டி வினைப் பெருந்துழனி ஓவாத ஒலி ஓங்க.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1179

மா மறை நூல் விதிச் சடங்கின் வகுத்த முறை நெறி மரபின்தூ மணம் நல் உபகரணம் சமைப்பவர் தம் தொழில் துவன்றத்தாமரையோன் அனைய பெரும் தவ மறையோர் தாம் எடுத்தபூமருவு பொற்கலசப் புண்ணிய நீர் பொலிவு எய்த.
சொற்பிரிப்பு
மாமறை நூல் விதிச் சடங்கில் வகுத்த முறை நெறி மரபின்தூமண நல் உபகரணம் சமைப்பவர் தம் தொழில் துவன்றத்தாமரையோன் அனைய பெரும் தவ மறையோர் தாம் எடுத்தபூமருவு பொற்கலசப் புண்ணிய நீர் பொலிவு எய்த.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1180

குங்குமத்தின் செழும் சேற்றின் கூட்டு அமைப்போர் இனம் குழுமப்பொங்குவிரைப் புதுக் கலவைப் புகை எடுப்போர் தொகை விரவத்துங்க நறும் கர்ப்பூரச் சுண்ணம் இடிப்போர் நெருங்கஎங்கும் மலர்ப் பிணை புனைவோர் ஈட்டங்கள் மிகப் பெருக.
சொற்பிரிப்பு
குங்குமத்தின் செழுஞ்சேற்றின் கூட்டு அமைப்போர் இனம் குழுமப்பொங்கு விரைப் புதுக்கலவைப் புகை எடுப்போர் தொகை விரவத்துங்க நறும் கர்ப்பூரச் சுண்ணம் இடிப்போர் நெருங்கஎங்கும் மலர்ப்பிணை புனைவோர் ஈட்டங்கள் மிகப் பெருக.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1181

இனைய பல வேறு தொழில் எம்மருங்கும் நிரைத்து இயற்றும்மனை வளரும் மறுகு எல்லாம் மண அணி செய் மறை மூதூர்நினைவு அரிய பெருவளங்கள் நெருங்குதலால் நிதிக் கோமான்தனை இறைவர் தாம் ஏவச் சமைத்தது போல் அமைந்து உளதால்.
சொற்பிரிப்பு
இனைய பல வேறு தொழில் எம்மருங்கும் நிரைத்து இயற்றும்மனை வளரும் மறுகு எல்லாம் மண அணிசெய் மறை மூதூர்நினைவு அரிய பெருவளங்கள் நெருங்குதலால் நிதிக்கோமான்தனை இறைவர் தாம் ஏவச் சமைத்ததுபோல் அமைந்து உளதால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1182

மாறிலா நிறை வளம் தரும் புகலியின் மணம் மீக்கூறு நாளின் முன் நாளினில் வேதியர் குழாமும்நீறு சேர் திருத்தொண்டரும் நிகர் இலாதவருக்குஆறு சூடினார் அருள் திருக்காப்பு நாண் அணிவார்.
சொற்பிரிப்பு
மாறிலா நிறை வளம் தரு புகலியின் மண மீக்கூறு நாளின் முன் நாளினில் வேதியர் குழாமும்நீறு சேர் திருத்தொண்டரும் நிகர் இலாதவருக்குஆறு சூடினார் அருள்திருக்காப்பு நாண் அணிவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1183

வேத வாய்மையின் விதி உளி வினையினால் விளங்கஓத நீர் உலகில் இயன் முறை ஒழுக்கமும் பெருகக்காதல் நீள் திருத்தொண்டர்கள் மறையவர் கவினார்மாதர் மைந்தர் பொன் காப்பு நாண் நகர்வலம் செய்தார்.
சொற்பிரிப்பு
வேத வாய்மையின் விதி உளி வினையினால் விளங்கஓத நீர் உலகியல் முறை ஒழுக்கமும் பெருகக்,காதல் நீள் திருத்தொண்டர்கள், மறையவர், கவின் ஆர்மாதர், மைந்தர் பொன் காப்பு நாண் நகர்வலம் செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1184

நகர் வலம் செய்து புகுந்த பின் நவமணி அணைந்தபுகரில் சித்திரவிதான மண்டபத்தினில் பொலியப்பகரும் வைதிக விதிச் சமாவர்த்தனப் பான்மைதிகழ முற்றிய செம்மலார் திரு முன்பு சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
நகர்வலம் செய்து புகுந்த பின் நவமணி அணிந்தபுகர் இல் சித்திர விதான மண்டபத்தினில் பொலியப்பகரும் வைதிக விதிச் சமாவர்த்தனப் பான்மைதிகழ முற்றிய செம்மலார் திருமுன்பு சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1185

செம் பொனின் பரிகலத்தினில் செந்நெல் வெண்பரப்பின்வம்பு அணிந்த நீள் மாலை சூழ் மருங்குற அமைத்தஅம் பொன் வாச நீர்ப் பொற் குடம் அரசு இலை தருப்பைபம்பு நீள்சுடர் மணி விளக்கு ஒளிர் தரும் பரப்பில்.
சொற்பிரிப்பு
செம்பொனின் பரிகலத்தினில் செந்நெல் வெண் பரப்பின்வம்பு அணிந்த நீள் மாலை சூழ் மருங்குற அமைத்தஅம்பொன் வாச நீர்ப் பொன் குடம் அரசிலை தருப்பைபம்பு நீள்சுடர் மணி விளக்கு ஒளிர்தரும் பரப்பில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1186

நாத மங்கல முழக்கொடு நல் தவ முனிவர்வேத கீதமும் விம்மிட விரை கமழ் வாசப்போது சாந்தணி பூந்துகில் புனைந்த புண்ணியம் போல்மீது பூஞ்சயனத்து இருந்தவர் முன்பு மேவி.
சொற்பிரிப்பு
நாத மங்கல முழக்கொடு நற்றவ முனிவர்வேத கீதமும் விம்மிட விரைகமழ் வாசப்போது, சாந்து அணி பூந்துகில் புனைந்த புண்ணியம் போல்மீது பூஞ்சயனத்து இருந்தவர் முன்பு மேவி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1187

ஆர்வம் மிக்கு எழும் அன்பினால் மலர் அயன் அனையசீர்மறைத் தொழில் சடங்கு செய் திருந்து நூல் முனிவர்பார் வழிப்பட வரும் இரு வினைகளின் பந்தச்சார்பு ஒழிப்பவர் திருக்கையில் காப்பு நாண் சாத்த.
சொற்பிரிப்பு
ஆர்வம் மிக்கு எழும் அன்பினால் மலர் அயன் அனையசீர் மறைத்தொழில் சடங்கு செய் திருந்து நூல் முனிவர்பார் வழிப்பட வரும் இரு வினைகளின் பந்தச்சார்பு ஒழிப்பவர் திருக்கையில் காப்பு நாண் சாத்த.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1188

கண்ட மாந்தர்கள் கடி மணம் காண வந்து அணைவார்கொண்ட வல்வினையாப்பு அவிழ் கொள்கைய ஆனதொண்டர் சிந்தையும் வதனமும் மலர்ந்தன சுருதிமண்டு மாமறைக் குலம் எழுந்து ஆர்த்தன மகிழ்ந்தே
சொற்பிரிப்பு
கண்ட மாந்தர்கள் கடிமணம் காண வந்து அணைவார்கொண்ட வல்வினை யாப்பு அவிழ் கொள்கையவானதொண்டர் சிந்தையும் வதனமும் மலர்ந்தன; சுருதிமண்டு மாமறைக் குலம் எழுந்து ஆர்த்தன மகிழ்ந்தே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1189

நிறைந்த கங்குலின் நிதிமழை விதி முறை எவர்க்கும்புரந்த ஞான சம்பந்தர் தாம் புன் நெறிச் சமயஅரந்தை வல்லிருள் அகல வந்து அவதரித்தால் போல்பரந்த பேர் இருள் துரந்து வந்து எழுந்தனன் பகலோன்.
சொற்பிரிப்பு
நிரந்த கங்குலின் நிதிமழை விதிமுறை எவர்க்கும்புரந்த ஞான சம்பந்தர் தாம் புன்நெறிச் சமயஅரந்தை வல்இருள் அகல வந்து அவதரித்தால் போல்பரந்த பேர்இருள் துரந்து வந்து எழுந்தனன் பகலோன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1190

அஞ்சிறைச் சுரும்பு அறை பொழில் சண்பை ஆண்தகையார்தஞ்சிவத் திருமணம் செயத் தவம் செய் நாள் என்றுமஞ்சனத் தொழில் புரிந்து என மாசு இருள் கழுவிச்செஞ்சுடர்க் கதிர் பேரணி அணிந்தன திசைகள்.
சொற்பிரிப்பு
அஞ்சிறைச் சுரும்பு அறை பொழில் சண்பை ஆண்டகையார்தம் சிவத் திருமணம் செயத் தவம் செய் நாள் என்றுமஞ்சனத் தொழில் புரிந்து என மாசு இருள் கழுவிச்செஞ்சுடர்க் கதிர்ப் பேரணி அணிந்தன திசைகள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1191

பரம்பு தம் வயின் எங்கணும் உள்ள பல் வளங்கள்நிரம்ப முன் கொணர்ந்து எண் திசையவர் நெருங்குதலால்தரம் கடந்தவர் தம் திருக் கல்லி யாணத்தின்வரம்பில் தன் பயன் காட்டுவது ஒத்தது வையம்.
சொற்பிரிப்பு
பரம்பு தம் வயின் எங்கணும் உள்ள பல் வளங்கள்நிரம்ப முன் கொணர்ந்து எண் திசையவர் நெருங்குதலால்தரம் கடந்தவர் தம் திருக்கல்லியாணத்தின்வரம்பில் தன் பயன் காட்டுவது ஒத்தது வையம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1192

நங்கள் வாழ்வு என வரும் திருஞான சம்பந்தர்மங்கலத் திருமண எழுச்சியின் முழக்கு என்னத்துங்க வெண்திரைச் சுரிவளை ஆர்ப்பொடு சூழ்ந்துபொங்கு பேரொலி முழக்குடன் எழுந்தது புணரி.
சொற்பிரிப்பு
நங்கள் வாழ்வு என வரும் திருஞான சம்பந்தர்மங்கலத் திருமண எழுச்சியின்முழக்கு என்னத்துங்க வெண்திரைச் சுரிவளை ஆர்ப்பொடு சூழ்ந்துபொங்கு பேர்ஒலி முழக்குடன் எழுந்தது புணரி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1193

அளக்கர் ஏழும் ஒன்றாம் எனும் பெருமை எவ்வுலகும்விளக்கு மாமண விழாவுடன் விரைந்து செல்வன போல்துளக்கில் வேதியர் ஆகுதி தொடங்கிடா முன்னம்வளர்க்கும் வேதியில் வலம் சுழித்து எழுந்தது வன்னி.
சொற்பிரிப்பு
அளக்கர் ஏழும் ஒன்றாம் எனும் பெருமை எவ்உலகும்விளக்கு மாமண விழாவுடன் விரைந்து செல்வனபோல்துளக்கு இல் வேதியர் ஆகுதி தொடங்கிடா முன்னம்வளர்க்கும் வேதியில் வலஞ் சுழித்து எழுந்தது வன்னி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1194

சந்த மென் மலர்த் தாது அணி நீறு மெய் தரித்துக்கந்தம் மேவும் வண்டு ஒழுங்கு எனும் கண்டிகை பூண்டுசிந்தை தூய அன்பர்களுடன் திருமணம் போதமந்த சாரியின் மணம் கொணர்ந்து எழுந்தது மருத்து.
சொற்பிரிப்பு
சந்த மென்மலர்த் தாது அணி நீறு மெய் தரித்துக்கந்தம் மேவு வண்டு ஒழுங்கு எனும் கண்டிகை பூண்டுசிந்தை தூய அன்பர்கள் உடன் திருமணம் போதமந்த சாரியின் மணம் கொணர்ந்து எழுந்தது மருத்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1195

எண் திசை திறத்து யாவரும் புகலி வந்து எய்திமண்டும் அத்திருமண எழுச்சியின் அணிவாய்ப்பக்கொண்ட வெண் நிறக் குரூஉச் சுடர்க் கொண்டல்கள் என்னவெண் துகில் கொடி நிரைத்தது போன்றது விசும்பு.
சொற்பிரிப்பு
எண் திசைத் திறத்து யாவரும் புகலி வந்து எய்திமண்டும் அத்திருமண எழுச்சியின் அணி வாய்ப்பக்கொண்ட வெண்நிறக் குரூஉச் சுடர்க் கொண்டல்கள் என்னவெண் துகில் கொடி நிரைத்தது போன்றது விசும்பு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1196

ஏல இந்நலம் யாவையும் எழுச்சி முன் காட்டும்காலை செய்வினை முற்றிய கவுணியர் பெருமான்மூலமாகிய தோணி மேல் முதல்வரை வணங்கிச்சீலமார் திருவருளினால் மணத்தின் மேல் செல்வார்.
சொற்பிரிப்பு
ஏல இந்நலம் யாவையும் எழுச்சி முன் காட்டும்காலை, செய்வினை முற்றிய கவுணியர் பெருமான்மூலம் ஆகிய தோணி மேல் முதல்வரை வணங்கிச்சீலம் ஆர் திருவருளினால் மணத்தின் மேல் செல்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1197

காழி மாநகர் வேதியர் குழாத்தொடும் கலந்துசூழும் அன்பர்கள் ஏனையோர் துதைந்து முன் செல்லவாழி மாமறை முழங்கிட வளம்பதி வணங்கிநீழல் வெண்சுடர் நித்திலச் சிவிகை மேற்கொண்டார்.
சொற்பிரிப்பு
காழி மாநகர் வேதியர் குழாத்தொடும் கலந்துசூழும் அன்பர்கள் ஏனையோர் துதைந்து முன் செல்லவாழி மாமறை முழங்கிட வளம் பதி வணங்கி,நீழல் வெண்சுடர் நித்திலச் சிவிகை மேற் கொண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1198

யான வாகனம் ஏறுவார் யாரும் மேற் கொள்ளக்கானம் ஆகிய தொங்கல் பிச்சம் குடை கவரிமேல் நெருங்கிட விசும்பினும் நிலத்தினும் எழுந்தவான துந்துபி முழக்குடன் மங்கல இயங்கள்.
சொற்பிரிப்பு
ஆன வாகனம் ஏறுவார் யாரும் மேற்கொள்ளக்கானம் ஆகிய தொங்கல், பிச்சம், குடை, கவரிமேல் நெருங்கிட விசும்பினும் நிலத்தினும் எழுந்தவான துந்துபி முழக்குடன் மங்கல இயங்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1199

சங்கொடு தாரை சின்னம் தனிப் பெரும் காளம் தாளம்வங்கியம் ஏனை மற்று மலர் துளைக் கருவி எல்லாம்பொங்கிய ஒலியின் ஓங்கிப் பூசுரர் வேத கீதம்எங்கணும் எழுந்து மல்கத் திருமணம் எழுந்தது அன்றே.
சொற்பிரிப்பு
சங்கொடு தாரை, சின்னம், தனிப்பெரும் காளம், தாளம்வங்கியம், ஏனை மற்று மலர் துளைக் கருவி, எல்லாம்பொங்கிய ஒலியின் ஓங்கிப் பூசுரர் வேத கீதம்எங்கணும் எழுந்து மல்கத் திருமணம் எழுந்தது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1200

கோதையர் குழல் சூழ் வண்டின் குழாத்து ஒலி ஒரு பால் கோலவேதியர் வேத வாய்மை மிகும் ஒலி ஒரு பால் மிக்கஏதம் இல் விபஞ்சி வீணை யாழ் ஒலி ஒரு பால் ஏத்தும்நாத மங்கலங்கள் கீத நயப்பு ஒலி ஒரு பாலாக.
சொற்பிரிப்பு
கோதையர் குழல் சூழ் வண்டின் குழாத்து ஒலி ஒருபால், கோலவேதியர் வேத வாய்மை மிகும் ஒலி ஒருபால், மிக்கஏதம் இல் விபஞ்சி வீணை யாழ் ஒலி ஒருபால், ஏத்தும்நாத மங்கலங்கள் கீத நயப்பு ஒலி ஒருபால் ஆக.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1201

விண்ணினை விழுங்க மிக்க வெண் துகில் பதாகை வெள்ளம்கண் வெறி படைப்ப மிக்க கதிர் விரி கவரிக் கானம்மண்ணிய மணிப் பூண் நீடும் அரிசனம் மலிந்த பொற்பின்எண்ணிலா வண்ணத்தூசின் பொதி பரப்பு எங்கும் நண்ண.
சொற்பிரிப்பு
விண்ணினை விழுங்க மிக்க வெண் துகில் பதாகை வெள்ளம்கண்வெறி படைப்ப மிக்க கதிர் விரி கவரிக் கானம்மண்ணிய மணிப்பூண் நீடும் அரிசனம் மலிந்த பொற்பின்எண்இலா வண்ணத் தூசின் பொதிப் பரப்பு எங்கும் நண்ண.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1202

சிகையொடு மான் தோல் தாங்கும் இடையும் ஆசானும் செல்வார்புகை விடும் வேள்விச் செந்தீ இல்லுடன் கொண்டு போவார்தகையிலா விருப்பின் மிக்க பதிகங்கள் விளம்பிச் சார்வார்வகையறு பகையும் செற்ற மாதவர் இயல்பின் மல்க.
சொற்பிரிப்பு
சிகையொடு மான்தோல் தாங்கும் கிடையும் ஆசானும் செல்வார்புகைவிடும் வேள்விச் செந்தீ இல் உடன் கொண்டு போவார்தகைவு இலா விருப்பின் மிக்க பதிகங்கள் விளம்பிச் சார்வார்வகை அறு பகையும் செற்ற மாதவர் இயல்பின் மல்க.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1203

அறுவகை விளங்கும் சைவத்து அளவிலா விரதம் சாரும்நெறி வழி நின்ற வேடம் நீடிய தவத்தின் உள்ளோர்மறுவறு மனத்தில் அன்பின் வழியினால் வந்த யோகக்குறி நிலை பெற்ற தொண்டர் குழாமாகி ஏக.
சொற்பிரிப்பு
அறுவகை விளங்கும் சைவத்து அளவு இலா விரதம் சாரும்நெறிவழி நின்ற வேடம் நீடிய தவத்தின் உள்ளோர்மறுவு அறு மனத்தில் அன்பின் வழியினால் வந்த யோகக்குறி நிலை பெற்ற தொண்டர் குழாம்குழாம் ஆகி ஏக.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1204

விஞ்சையர் இயக்கர் சித்தர் கின்னரர் மிடைந்த தேவர்அஞ்சனம் நாட்ட ஈட்டத்து அரம்பையர் உடனாய் உள்ளோர்தஞ்சுடர் விமானம் ஏறித் தழைத்த ஆதரவினோடுமஞ்சுறை விசும்பின் மீது மணஅணி காணச் சென்றார்.
சொற்பிரிப்பு
விஞ்சையர், இயக்கர், சித்தர், கின்னரர், மிடைந்த தேவர்அஞ்சன நாட்ட ஈட்டத்து அரம்பையர் உடனாய் உள்ளோர்தஞ்சுடர் விமானம் ஏறித் தழைத்த ஆதரவினோடுமஞ்சு உறை விசும்பின் மீது மண அணி காணச் சென்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1205

மற்றிவர் மிடைந்து செல்லும் மங்கல வனப்பின் காட்சிமுற்ற இத் தலத்தில் உள்ளோர் மொய்த்து உடன் படரும் போதில்அற்புத நிகழ்ச்சி எய்த அணைதலால் மணம் மேல் செல்லும்பொற்பு அமை மணத்தின் சாயை போன்று முன் பொலியச் செல்ல.
சொற்பிரிப்பு
மற்று இவர் மிடைந்து செல்லும் மங்கல வனப்பின் காட்சிமுற்ற இத்தலத்தின் உள்ளோர் மொய்த்து உடன் படரும் போதில்அற்புத நிகழ்ச்சி எய்த அணைதலால் மணமேல் செல்லும்பொற்பு அமை மணத்தின் சாயை போன்று முன் பொலியச் செல்ல.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1206

தவ அரசு ஆள உய்க்கும் தனிக்குடை நிழற்றச் சாரும்பவம் அறுத்து ஆளவல்லார் பாதம் உள்ளத்துக் கொண்டுபுவனங்கள் வாழ வந்த பூந்தராய் வேந்தர் போந்துசிவன் அமர்ந்து உறையும் நல்லூர் திருப் பெருமணத்தைச் சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
தவ அரசு ஆள உய்க்கும் தனிக்குடை நிழற்றச் சாரும்பவம் அறுத்து ஆள வல்லார் பாதம் உள்ளத்துக் கொண்டுபுவனங்கள் வாழ வந்த பூந்தராய் வேந்தர் போந்துசிவனமர்ந்து உறையும் நல்லூர்த் திருப்பெருமணத்தைச் சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1207

பெருமணக் கோயில் உள்ளார் மங்கலம் பெருகும் ஆற்றால்வருமணத் திறத்தின் முன்னர் வழி எதிர் கொள்ளச் சென்றுதிருமணம் புணர எய்தும் சிரபுரச் செம்மலார் தாம்இருள் மணந்து இலங்கும் கண்டத்து இறைவர் தம் கோயில் புக்கார்.
சொற்பிரிப்பு
பெருமணக் கோயில் உள்ளார் மங்கலம் பெருகும் ஆற்றால்வருமணத் திறத்தின் முன்னர் வழி எதிர் கொள்ளச் சென்றுதிருமணம் புணர எய்தும் சிரபுரச் செம்மலார் தாம்இருள் மணந்து இலங்கு கண்டத்து இறைவர் தம் கோயில் புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1208

நாதரைப் பணிந்து போற்றி நற்பொருள் பதிகம் பாடிகாதல் மெய்யருள் முன் பெற்றுக் கவுணியர் தலைவர் போந்துவேதியர் வதுவைக் கோலம் புனைந்திடவேண்டும் என்னப்பூத நாயகர் தம் கோயில் புறத்து ஒரு மடத்தில் புக்கார்.
சொற்பிரிப்பு
நாதரைப் பணிந்து போற்றி நற்பொருள் பதிகம் பாடிக்காதல் மெய் அருள் முன் பெற்றுக், கவுணியர் தலைவர் போந்து,வேதியர் “வதுவைக் கோலம் புனைந்திட வேண்டும்” என்னப்பூத நாயகர் தம் கோயில் புறத்து ஒரு மடத்தில் புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1209

பொற்குட(ம்) நிறைந்த வாசப் புனிதமஞ்சன நீராட்டிவிற்பொலி வெண்பட்டாடை மேதக விளங்கச் சாத்திநற்றிரு உத்தரீய நறும் துகில் சாத்தி நானப்பற்பல கலவைச் சாந்தம் பான்மையின் அணிந்த பின்னர்.
சொற்பிரிப்பு
பொற்குடம் நிறைந்த வாசப்புனித மஞ்சன நீர் ஆட்டிவிற்பொலி வெண்பட்டு ஆடை மேதக விளங்கச் சாத்திநல் திருஉத்தரீய நறுந் துகில் சாத்தி நானப்பற்பல கலவைச் சாந்தம் பான்மையின் அணிந்த பின்னர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1210

திருவடி மலர் மேல் பூத்த செழுந்தகைச் சோதி என்னமருவிய தரளக் கோவை மணிச்சரி அணையச் சாத்திவிரிசுடர்ப் பரட்டின் மீது விளங்கு பொற் சரட்டில் கோத்தபெருகு ஒளி முத்தின் தாமம் பிறங்கிய தொங்கல் சாத்தி.
சொற்பிரிப்பு
திருவடி மலர் மேல் பூத்த செழுநகைச் சோதி என்னமருவிய தரளக் கோவை மணிச்சரி அணையச் சாத்திவிரிசுடர்ப் பரட்டின் மீது விளங்கு பொன் சரட்டில் கோத்தபெருகு ஒளி முத்தின் தாமம் பிறங்கிய தொங்கல் சாத்தி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1211

தண் சுடர் பரிய முத்துத் தமனிய நாணில் கோத்தகண் கவர் கோவைப் பத்திக் கதிர்க் கடி சூத்திரத்தைவெண் சுடர்த் தரள மாலை விரிசுடர்க் கொடுக்கின் மீதுவண் திரு அரையின் நீடு வனப்பு ஒளிவளரச் சாத்தி.
சொற்பிரிப்பு
தண்சுடர்ப் பரிய முத்துத் தமனிய நாணில் கோத்தகண்கவர் கோவைப் பத்திக் கதிர்க் கடி சூத்திரத்தைவெண்சுடர்த் தரள மாலை விரிசுடர்க் கொடுக்கின் மீதுவண் திருஅரையின் நீடு வனப்பு ஒளி வளரச் சாத்தி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1212

ஒளி கதிர்த் தரளக் கோவை உதர பந்தனத்தின் மீதுதளிர் ஒளி துளும்பு முத்தின் சன்ன வீரத்தைச் சாத்திக்குளிர் நிலவு எறிக்கும் முத்தின் பூண நூல் கோவை சாத்திநளிர் கதிர் முத்து மாலை நகு சுடர் ஆரம்சாத்தி.
சொற்பிரிப்பு
ஒளிகதிர்த் தரளக் கோவை உதர பந்தனத்தின் மீதுதளிர் ஒளி துளும்பு முத்தின் சன்னவீரத்தைச் சாத்திக்குளிர்நிலவு எறிக்கும் முத்தின் பூணநூல் கோவை சாத்திநளிர்கதிர் முத்து மாலை நகுசுடர் ஆரம் சாத்தி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1213

வாள் விடு வயிரக் கட்டு மணிவிரல் ஆழி சாத்தித்தாளுறு தடக்கை முத்தின் தண்டையும் சரியும் சாத்திநீளொளி முழங்கைப் பொட்டு நிரை சுடர் வடமும் சாத்தித்தோள் வளைத் தரளப் பைம் பூண் சுந்தரத் தோள் மேல் சாத்தி.
சொற்பிரிப்பு
வாள் விடு வயிரக் கட்டு மணிவிரல் ஆழி சாத்தித்தாள் உறு தடக்கை முத்தின் தண்டையும் சரியும் சாத்தி,நீள் ஒளி முழங்கைப் பொட்டு நிரை சுடர் வடமும் சாத்தித்,தோள் வளைத் தரளப் பைம்பூண் சுந்தரத் தோள் மேல் சாத்தி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1214

திருக் கழுத்து ஆரம் தெய்வக் கண்டிகை மாலை சேரப்பருத்த முத்து ஒழுங்கு கோத்த படர் ஒளி வடமும் சாத்திபெருக்கிய வனப்பின் செவ்விபிறங்கிய திருவார் காதில்வருக்க வெண் தரளக் கொத்தின் வடிக் குழை விளங்கச் சாத்தி.
சொற்பிரிப்பு
திருக்கழுத்து ஆரம் தெய்வக் கண்டிகை மாலை சேரப்பருத்த முத்து ஒழுங்கு கோத்த படர் ஒளி வடமும் சாத்திப்பெருக்கிய வனப்பின் செவ்வி பிறங்கிய திருவார் காதில்வருக்க வெண் தரளக் கொத்தின் வடிக்குழை விளங்கச் சாத்தி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1215

நீற்று ஒளி தழைத்துப் பொங்கி நிறை திரு நெற்றிமீதுமேற் பட விரிந்த சோதி வெண் சுடர் எழுந்தது என்னப்பாற்படுமுத்தின் பாரப் பனிச்சுடர்த் திரணை சாத்திஏற்பவைத்து அணிந்த முத்தின் எழில் வளர் மகுடம் சேர்த்தார்.
சொற்பிரிப்பு
நீற்று ஒளி தழைத்துப் பொங்கி நிறை திரு நெற்றி மீதுமேற்பட விரித்த சோதி வெண்சுடர் எழுந்தது என்னப்பாற்படு முத்தின் பாரப் பனிச்சுடர்த் திரணை சாத்திஏற்ப வைத்து அணிந்த முத்தின் எழில் வளர் மகுடம் சேர்த்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1216

இவ்வகை நம்மை ஆளும் ஏர்வளர் தெய்வக் கோலம்கைவினை மறையோர் செய்யக் கடிகொள் செங்கமலத் தாதின்செவ்வி நீள் தாம மார்பர் திரு அடையாள மாலைஎவ்வுலகோரும் ஏத்தத் தொழுது தாம் எடுத்துப் பூண்டார்.
சொற்பிரிப்பு
இவ்வகை நம்மை ஆளும் ஏர் வளர் தெய்வக் கோலம்கைவ்வினை மறையோர் செய்யக் கடிகொள் செங்கமலத் தாதின்செவ்வி நீள் தாம மார்பர் திருஅடையாள மாலைஎவ் உலகோரும் ஏத்தத் தொழுது தாம் எடுத்துப் பூண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1217

அழகினுக்கு அணியாம் வெண்ணீறு அஞ்சு எழுத்து ஓதிச்சாத்திப்பழகிய அன்பர் சூழப் படர் ஒளி மறுகில் எய்திமழ விடை மேலோர் தம்மை மனம் கொள வணங்கி வந்துமுழவொலி எடுப்ப முத்தின் சிவிகை மேல் கொண்டபோது.
சொற்பிரிப்பு
அழகினுக்கு அணியாம் வெண்நீறு அஞ்செழுத்து ஓதிச் சாத்திப்பழகிய அன்பர் சூழப் படர் ஒளி மறுகில் எய்திமழவிடை மேலோர் தம்மை மனம் கொள வணங்கி வந்துமுழவு ஒலி எடுப்ப முத்தின் சிவிகை மேல் கொண்ட போது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1218

எழுந்தன சங்க நாதம் இயம்பின இயங்கள் எங்கும்பொழிந்தன விசும்பில் விண்ணேர் கற்பகப் புதுப்பூ மாரிதொழுந்தகை முனிவர் தொண்டர் சுருதியின் வாழ்த்துப் பொங்கிவழிந்தன திசைகள் மீது மலர்ந்தன உலகம் எல்லாம்.
சொற்பிரிப்பு
எழுந்தன சங்க நாதம்இயம்பின இயங்கள் எங்கும்பொழிந்தன விசும்பில் விண்ணோர் கற்பகப் புதுப் பூ மாரி;தொழுந்தகை முனிவர் தொண்டர் சுருதியின் வாழ்த்துப் பொங்கிவழிந்தன திசைகள் மீது மலர்ந்தன உலகம் எல்லாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1219

படர் பெரும் தொங்கல் பிச்சம் பைம் கதிர்ப் பீலிப் பந்தர்அடர் புனை செம் பொன் பாண்டில் அணிதுகில் சதுக்கம் மல்கக்கடலின் மீது எழுந்து நிற்கும் கதிர் நிறை மதியம் போலவடநிரை அணிந்த முத்தின் மணிக்குடை நிழற்ற வந்தார்.
சொற்பிரிப்பு
படர்பெரும் தொங்கல், பிச்சம், பைங்கதிர்ப் பீலிப் பந்தர்அடர்புனை செம்பொன் பாண்டில் அணி துகில் சதுக்கம் மல்கக்கடலின் மீது எழுந்து நிற்கும் கதிர் நிறை மதியம் போலவடநிரை அணிந்த முத்தின் மணிக்குடை நிழற்ற வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1220

சீரணி தெருவினூடு திருமணம் செல்ல முத்தின்ஏரணி காளம் சின்னம் இலங்கு ஒளித் தாரை எல்லாம்பேரொலி பெருக முன்னே பிடித்தன மறைகளோடுதாரணி உய்ய ஞான சம்பந்தர் வந்தார் என்று.
சொற்பிரிப்பு
சீர் அணி தெருவின் ஊடு திருமணம் செல்ல முத்தின்ஏர் அணி காளம், சின்னம், இலங்கு ஒளித் தாரை எல்லாம்பேர் ஒலி பெருக முன்னே பிடித்தன மறைகளோடுதாரணி உய்ய ஞான சம்பந்தன் வந்தான் என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1221

மண்ணினுக்கு இடுக்கண் தீர வந்தவர் திரு நாமங்கள்எண்ணில பலவும் ஏத்திச் சின்னங்கள் எழுந்த போது அவ்அண்ணலார் வதுவை செய்ய அலங்கரித்து அணையப் பெற்றபுண்ணிய மறையோர் மாட மங்கலம் பொழிந்து பொங்க.
சொற்பிரிப்பு
மண்ணினுக்கு இடுக்கண் தீர வந்தவர் திருநாமங்கள்எண்ணில பலவும் ஏத்திச் சின்னங்கள் எழுந்த போது, அவ்அண்ணலார் வதுவை செய்ய அலங்கரித்து அணையப் பெற்றபுண்ணிய மறையோர் மாடம் மங்கலம் பொழிந்து பொங்க.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1222

முற்று மெய்ஞ்ஞானம் பெற்ற மூர்த்தியார் செங்கை பற்றநற்பெரும் தவத்தின் நீர்மை நலம் படைத்து எழுந்த தெய்வக்கற்பகப் பூங்கொம்பு அன்னார் தம்மையும் காப்புச் சேர்த்துப்பொற்புறும் சடங்கு முன்னர்ப் பரிவுடன் செய்தவேலை.
சொற்பிரிப்பு
முற்று மெய்ஞ் ஞானம் பெற்ற மூர்த்தியார் செங்கை பற்றநற்பெரும் தவத்தின் நீர்மை நலம் படைத்து எழுந்த தெய்வக்கற்பகப் பூங்கொம்பு அன்னார் தம்மையும் காப்புச் சேர்த்துப்பொற்புறு சடங்கு முன்னர்ப் புரிவுடன் செய்த வேலை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1223

செம் பொன் செய் வாசிச் சூட்டுத் திருமணிப் புனை பூண் செல்வப்பைம் பொனின் மாலை வேய்ந்த பவள மென் கொடி ஒப்பாரைநம்பன் தன் அருளே வாழ்த்தி நல் எழில் விளங்கச் சூட்டிஅம் பொன் செய் தீபம் என்ன அழகு அலங்கரித்து வைத்தார்.
சொற்பிரிப்பு
செம்பொன் செய் வாசிச் சூட்டுத் திருமணிப் புனை பூண் செல்வப்பைம்பொனின் மாலை வேய்ந்த பவள மென் கொடி ஒப்பாரைநம்பன் தன் அருளே வாழ்த்தி நல் எழில் விளங்கச் சூட்டிஅம்பொன் செய் தீபம் என்ன அழகு அலங்கரித்து வைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1224

மா மறை மைந்தர் எல்லாம் மணத்து எதிர் சென்று மன்னும்தூமலர்ச் செம் பொன் சுண்ணம் தொகு நவமணியும் வீசத்தாமரை மலரோன் போல்வார் அரசிலை தருப்பை தோய்ந்தகாமர் பொற் கலச நன்னீர் இருக்குடன் கலந்து வீச.
சொற்பிரிப்பு
மாமறை மைந்தர் எல்லாம் மணத்து எதிர் சென்று, மன்னும்தூமலர்ச் செம்பொன் சுண்ணம் தொகு நவ மணியும் வீசத்தாமரை மலரோன் போல்வார் அரசிலை, தருப்பை தோய்ந்தகாமர் பொன் கலச நன்னீர் இருக்குடன் கலந்து வீச.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1225

விண்ணவர் மலரின் மாரி விசும்பு ஒளி தழைப்ப வீசமண்ணகம் நிறைந்த கந்த மந்த மாருதமும் வீசக்கண் ஒளி விளக்கம் மிக்கார் காமர் தோரணங்களூடுபுண்ணிய விளைவு போல்வார் பூம் பந்தர் முன்பு சார்ந்தார்.
சொற்பிரிப்பு
விண்ணவர் மலரின் மாரி விசும்பு ஒளி தழைப்ப வீசமண் அகம் நிறைந்த கந்த மந்த மாருதமும் வீசக்,கண் ஒளி விளக்கம் மிக்கார் காமர் தோரணங்கள் ஊடுபுண்ணிய விளைவு போல்வார் பூம்பந்தர் முன்பு சார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1226

பொன் அணி சங்கின் வெள்ளம் பொலிவுடன் முழங்கி ஆர்ப்பமன்னிய தரளப் பத்தி வளர் மணிச் சிவிகை நின்றும்பன் மலர் நறும் பொற் சுண்ணம் பரந்த பாவாடை மீதுமுன் இழிந்து அருளி வந்தார் மூவுலகு உய்ய வந்தார்.
சொற்பிரிப்பு
பொன் அணி சங்கின் வெள்ளம் பொலிவுடன் முழங்கி ஆர்ப்பமன்னிய தரளப் பத்தி வளர் மணிச் சிவிகை நின்றும்பன்மலர் நறும்பொன் சுண்ணம் பரந்த பாவாடை மீதுமுன் இழிந்து அருளி வந்தார் மூஉலகு உய்ய வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1227

மறைக்குல மனையின் வாழ்க்கை மங்கல மகளிர் எல்லாம்நிரைத்த நீர்ப் பொற் குடங்கள் நிரை மணி விளக்குத் தூபம்நறைக் குல மலர் சூழ் மாலை நறுஞ் சுடர் முளைப் பொற் பாண்டில்உறைப் பொலி கலவை ஏந்தி உடன் எதிர் ஏற்று நின்றார்.
சொற்பிரிப்பு
மறைக்குல மனையின் வாழ்க்கை மங்கல மகளிர் எல்லாம்நிறைத்த நீர்ப் பொன் குடங்கள் நிரைமணி விளக்குத். தூபம்,நறைக்குல மலர்சூழ் மாலை, நறுஞ்சுடர் முளைப்பொன் பாண்டில்,உறைப்பொலி கலவை ஏந்தி உடன் எதிர் ஏற்று நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1228

ஆங்கு முன் இட்ட செம் பொன் அணி மணிப் பீடம் தன்னில்ஓங்கிய ஞான வெள்ளம் உள் நிறைந்து எழுவது என்னத்தாங்கிய முத்தின் பைம் பூண் தண் நிலா எறிப்ப ஏறிப்பாங்கு ஒளி பரப்பி நின்றார் பர சமயங்கள் வீழ்த்தார்.
சொற்பிரிப்பு
ஆங்கு முன் இட்ட செம்பொன் அணிமணிப் பீடம் தன்னில்ஓங்கிய ஞான வெள்ளம் உள் நிறைந்து எழுவது என்னத்தாங்கிய முத்தின் பைம்பூண் தண் நிலா எறிப்ப ஏறிப்பாங்கு ஒளி பரப்பி நின்றார் பரசமயங்கள் வீழ்த்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1229

எதிர் வரவேற்ற சாயல் இளமயில் அனைய மாதர்மதுரமங்கல முன் ஆன வாழ்த்து ஒலி எடுப்ப வந்துகதிர் மணிக் கரக வாசக் கமழ் புனல் ஒழுக்கிக் காதல்விதி முறை வலம் கொண்டு எய்திமேவு நல் வினைகள் செய்தார்
சொற்பிரிப்பு
எதிர் வரவு ஏற்ற சாயல் இளமயில் அனைய மாதர்மதுர மங்கல முன் ஆன வாழ்த்து ஒலி எடுப்ப வந்துகதிர்மணிக் கரக வாசக் கமழ் புனல் ஒழுக்கிக் காதல்விதிமுறை வலங்கொண்டு எய்தி மேவு நல் வினைகள் செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1230

மங்கலம் பொலிய ஏந்தி மாதரார் முன்பு செல்லக்கங்கையின் கொழுந்து செம் பொன் இமவரை கலந்தது என்னஅங்கு அவர் செம்பொன் மாடத்து ஆதி பூமியின் உட்புக்கார்எங்களை வாழ முன்னாள் ஏடு வைகையினுள் இட்டார்.
சொற்பிரிப்பு
மங்கலம் பொலிய ஏந்தி மாதரார் முன்பு செல்லக்கங்கையின் கொழுந்து செம்பொன் இமவரை கலந்தது என்னஅங்கு அவர் செம்பொன் மாடத்து ஆதி பூமியின் உள் புக்கார்எங்களை வாழ முன்நாள் ஏடு வைகையினில் இட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1231

அகில் நறும் தூபம் விம்மி அணிகிளர் மணியால் வேய்ந்ததுகில் புனை விதான நீழல் தூமலர்த் தவிசின் மீதுநகில் அணி முத்த மாலை நகை முக மடவார் வாழ்த்தஇகலில் சீர் மறையோர் சூழ இனிதின் அங்கு இருந்த வேலை.
சொற்பிரிப்பு
அகில் நறும் தூபம் விம்மி அணிகிளர் மணியால் வேய்ந்ததுகில் புனை விதான நீழல் தூமலர்த் தவிசின் மீதுநகில் அணி முத்த மாலை நகை முக மடவார் வாழ்த்தஇகல் இல் சீர் மறையோர் சூழ இனிதின் அங்கு இருந்த வேலை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1232

திருமகள் கொடுக்கப் பெற்ற செழு மறை முனிவர் தாமும்அருமையான் முன் செய் மெய்ம்மை அருந்தவ மனைவியாரும்பெருமகிழ்ச்சியினால் பாதம் விளக்குவார் பிள்ளையார் முன்உரிமையால் வெண்பால் தூ நீர் உடன் எடுத்து ஏத்திவந்தார்.
சொற்பிரிப்பு
திருமகள் கொடுக்கப் பெற்ற செழு மறை முனிவர் தாமும்அருமையால் முன் செய் மெய்ம்மை அருந்தவ மனைவியாரும்பெரு மகிழ்ச்சியினால் பாதம் விளக்குவார் பிள்ளையார் முன்உரிமையால் வெண்பால் தூ நீர் உடன் எடுத்து ஏந்தி வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1233

வந்து முன் எய்தித் தான் முன் செய் மா தவத்தின் நன்மைநந்து நம்பாண்டார் நம்பி ஞான போனகர் பொற் பாதம்கந்தவார் குழலினார் பொற் கரக நீர் எடுத்து வார்ப்பபுந்தியால் நினை தியானம் புரி சடையான் என்றுன்னி.
சொற்பிரிப்பு
வந்து முன் எய்தித் தாம் முன் செய்த மாதவத்தின் நன்மைநந்து நம்பாண்டார் நம்பி ஞான போனகர் பொன் பாதம்கந்தவார் குழலினார் பொன் கரக நீர் எடுத்து வார்ப்பப்புந்தியால் நினை தியானம் புரிசடையான் என்று உன்னி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1234

விருப்பினால் விளக்கி மிக்க புனித நீர் தலைமேல் கொண்டுபொருப்புறு மாடத்து உள்ளும் புறத்துளும் தெளித்த பின்னர்உருப்பொலி உதரத் துள்ளும் பூரித்தார் உவகை பொங்கிஅருப்புறு கிளைஞர் மேலும் தெளித்தனர் ஆர்வத்தோடும்.
சொற்பிரிப்பு
விருப்பினால் விளக்கி மிக்க புனித நீர் தலைமேல் கொண்டுபொருப்புறு மாடத்து உள்ளும் புறத்துளும் தெளித்த பின்னர்உருப்பு ஒலி உதரத்து உள்ளும் பூரித்தார் உவகை பொங்கிஅருப்புறு கிளைஞர் மேலும் தெளித்தனர் ஆர்வத்தோடும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1235

பெருகொளி ஞானம் உண்ட பிள்ளையார் மலர்க்கை தன்னில்மருவும் மங்கல நீர் வாசக் கரகம் முன் ஏந்தி வார்ப்பார்தரு முறைக் கோத்திரத்தின் தம் குலம் செப்பி என்றன்அருநிதிப் பாவை யாரைப் பிள்ளையார்க்கு அளித்தேன் என்றார்.
சொற்பிரிப்பு
பெருகு ஒளி ஞானம் உண்ட பிள்ளையார் மலர்க்கை தன்னில்மருவும் மங்கல நீர் வாசக் கரகம் முன் ஏந்தி வார்ப்பார்தருமுறைக் கோத்திரத்தின் தம் குலம் செப்பி என் தன்அருநிதிப் பாவையாரைப் பிள்ளையார்க்கு அளித்தேன் என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1236

நல் தவக் கன்னியார் கை ஞான சம்பந்தர் செங்கைபற்றுதற்கு உரிய பண்பில் பழுது இல் நற் பொழுது நண்ணபெற்றவர் உடன் பிறந்தார் பெரு மணப் பிணை அ(ன்)னாரைச்சுற்ற(ம்)முன் சூழ்ந்து போற்றக் கொண்டு முன் துன்னினார்கள்.
சொற்பிரிப்பு
நற்றவக் கன்னியார் கை ஞான சம்பந்தர் செங்கைபற்றுதற்கு உரிய பண்பில் பழுது இல் நல் பொழுது நண்ணப்பெற்றவர் உடன்பிறந்தார் பெருமணப் பிணை அன்னாரைச்சுற்றம் முன் சூழ்ந்து போற்றக் கொண்டு முன் துன்னினார்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1237

ஏகமாம் சிவ மெய்ஞ் ஞானம் இசைந்தவர் வலப்பால் எய்திநாகமார் பணப்பேர் அல்குல் நல்தவக் கொழுந்து அன்னாரைமாகமார் சோதி மல்க மன்னி வீற்றிருந்த வெள்ளைமேகமொடு இசையும் மின்னுக் கொடி என விளங்க வைத்தார்.
சொற்பிரிப்பு
ஏகமாம் சிவ மெய்ஞ்ஞானம் இசைந்தவர் வலப்பால் எய்திநாகம் ஆர் பணப்பேர் அல்குல் நற்றவக் கொழுந்து அன்னாரைமாகம் ஆர் சோதி மல்கி ன்னி வீற்றிருந்த வெள்ளைமேகமோடு இசையும் மின்னுக் கொடி என விளங்க வைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1238

புனித மெய்க் கோல நீடு புகலியார் வேந்தர் தம்மைக்குனி சிலை புருவ மென் பூங்கொம்பனார் உடனே கூடநனி மிகக் கண்ட போதின் நல்ல மங்கலங்கள் கூறிமனிதரும் தேவர் ஆனார் கண்இமையாது வாழ்த்தி.
சொற்பிரிப்பு
புனித மெய்க்கோலம் நீடு புகலியார் வேந்தர் தம்மைக்குனிசிலைப் புருவ மென் பூங்கொம்பு அனார் உடனே கூடநனி மிகக் கண்ட போதில்நல்ல மங்கலங்கள் கூறிமனிதரும் தேவர் ஆனார் கண் இமையாது வாழ்த்தி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1239

பத்தியில் குயிற்றும் பைம் பொன் பவளக்கால் பந்தர் நாப்பண்சித்திர விதானத்தின் கீழ்ச் செழும் திரு நீல நக்கர்முத் தமிழ் விரகர் முன்பு முதன் மறை முறையினோடுமெய்த்த நம் பெருமான் பாதம் மேவும் உள்ளத்தால் செய்ய.
சொற்பிரிப்பு
பத்தியில் குயிற்றும் பைம்பொன் பவளக்கால் பந்தர் நாப்பண்சித்திர விதானத்தின் கீழ்ச் செழுந் திருநீலநக்கர்முத்தமிழ் விரகர் முன்பு முதன் மறை முறையினோடுமெய்த்த நம் பெருமான் பாதம் மேவும் உள்ளத்தால் செய்ய.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1240

மறையொலி பொங்கி ஓங்க மங்கல வாழ்த்து மல்கநிறை வளைச் செங்கை பற்ற நேரிழை அவர் முன் அந்தப்பொறை அணி முந்நூல் மார்பர் புகரில் வெண் பொரிகை அட்டிஇறைவரை ஏத்தும் வேலை எரிவலம் கொள்ள வேண்டி.
சொற்பிரிப்பு
மறை ஒலி பொங்க ஓங்க மங்கல வாழ்த்து மல்க,நிறைவளைச் செங்கை பற்ற நேர் இழையவர் முன் அந்தப்பொறை அணி முந்நூல் மார்பர் புகர் இல் வெண் பொரிகை அட்டிஇறைவரை ஏத்தும் வேலை எரிவலம் கொள்ள வேண்டி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1241

அருப்பு மென் முலையினார் தம் அணிமலர்க் கைப் பிடித்து அங்குஒருப் படும் உடைய பிள்ளையார் திரு உள்ளம் தன்னில்விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே என்றுதிருப் பெரு மணத்தை மேவும் சிந்தையில் தெளிந்து செல்வார்.
சொற்பிரிப்பு
அருப்பு மென் முலையினார் தம் அணிமலர்க் கைப்பிடித்து அங்குஒருப்படும் உடைய பிள்ளையார் திருஉள்ளம் தன்னில்விருப்புறும் அங்கி ஆவர் விடை உயர்த்தவரே என்றுதிருப்பெருமணத்தை மேவும் சிந்தையில் தெளிந்து செல்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1242

மந்திர முறையால் உய்த்த எரிவலம் ஆக மாதர்தம் திருக் கையைப் பற்றும் தாமரைச் செங்கையாளர்இந்த இல் ஒழுக்கம் வந்து சூழ்ந்ததே இவள் தன்னோடும்அந்தமில் சிவன் தாள் சேர்வன் என்னும் ஆதரவு பொங்க.
சொற்பிரிப்பு
மந்திர முறையால் உய்த்த எரி வலம் ஆக மாதர்தம் திருக்கையைப் பற்றும் தாமரைச் செங்கையாளர்இந்த இல் ஒழுக்கம் வந்து சூழ்ந்ததே! இவள் தன்னோடும்அந்தமில் சிவன் தாள் சேர்வன் என்னும் ஆதரவு பொங்க.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1243

மலர் பெரும் கிளையும் தொண்டர் கூட்டமும் மல்கிச் சூழஅலகில் மெய்ஞ்ஞானத் தெல்லை அடைவுறும் குறிப்பால் அங்கண்உலகின் எம்மருங்கும் நீங்க உடன் அணைந்து அருள வேண்டிக்குல மணம் புரிவித்தார் தம் கோயிலை நோக்கி வந்தார்.
சொற்பிரிப்பு
மலர் பெரும் கிளையும் தொண்டர் கூட்டமும் மல்கிச் சூழஅலகில் மெய்ஞ்ஞானத்து எல்லை அடைவுறும் குறிப்பால் அங்கண்உலகின் எம் மருங்கும் நீங்க, உடன் அணைந்து அருள வேண்டிக்குலமணம் புரிவித்தார் தம் கோயிலை நோக்கி வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1244

சிவன் அமர்ந்து அருளும் செல்வத் திருப் பெரு மணத்துள் எய்தித்தவ நெறி வளர்க்க வந்தார் தலைப்படும் சார்பு நோக்கிப்பவம் அற என்னை முன்னாள் ஆண்ட அப்பண்பு கூடநவமலர்ப் பாதம் கூட்டும் என்னும் நல் உணர்வு நல்க.
சொற்பிரிப்பு
சிவன் அமர்ந்து அருளும் செல்வத் திருப்பெருமணத்துள் எய்தித்தவநெறி வளர்க்க வந்தார் தலைப்படும் சார்பு நோக்கிப்பவம் அற என்னை முன் நாள் ண்ட அப்பண்பு கூடநவ மலர்ப் பாதம் கூட்டும் என்னும் நல் உணர்வு நல்க.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1245

காதல் மெய்ப் பதிகம் நல்லூர்ப் பெருமணம் எடுத்துக் கண்டோர்தீதுறு பிறவிப் பாசம் தீர்த்தல் செம் பொருளாக் கொண்டுநாதனே நல்லூர் மேவும் பெரு மண நம்பனே உன்பாத மெய்ந் நீழல் சேரும் பருவம் ஈது என்று பாட.
சொற்பிரிப்பு
காதல் மெய்ப் பதிகம் நல்லூர்ப் பெருமணம் எடுத்துக் கண்டோர்தீதுறு பிறவிப் பாசம் தீர்த்தல் செம்பொருளாக் கொண்டுநாதனே! நல்லூர் மேவும் பெருமண நம்பனே உன்பாதமெய்ந் நீழல் சேரும் பருவம் ஈது என்று பாட.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1246

தேவர்கள் தேவர் தாமும் திருவருள் புரிந்து நீயும்பூவை அன்னாளும் இங்கு உன் புண்ணிய மணத்தின் வந்தார்யாவரும் எம்பால் சோதி இதனுள் வந்து எய்தும் என்றுமூவுலகு ஒளியால் விம்ம முழுச் சுடர்த் தாணுவாகி.
சொற்பிரிப்பு
தேவர்கள் தேவர் தாமும் திருஅருள் புரிந்து நீயும்பூவை அன்னாளும் இங்கு உன் புண்ணிய மணத்தில் வந்தார்யாவரும் என் பால் சோதி இதன் உள் வந்து எய்தும் என்றுமூ உலகு ஒளியால் விம்ம முழுச்சுடர்த் தாணு ஆகி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1247

கோயில் உட் பட மேல் ஓங்கும் கொள்கையால் பெருகும் சோதிவாயிலை வகுத்துக் காட்ட மன்னு சீர்ப் புகலி மன்னர்பாயின ஒளியால் நீடு பரம் சுடர்த் தொழுது போற்றிமாயிரு ஞாலம் உய்ய வழியினை அருளிச் செய்வார்.
சொற்பிரிப்பு
கோயில் உள்பட மேல் ஓங்கும் கொள்கையால் பெருகும் சோதிவாயிலை வகுத்துக் காட்ட மன்னுசீர்ப் புகலி மன்னர்பாயின ஒளியால் நீடு பரஞ் சுடர்த் தொழுது போற்றிமாயிரு ஞாலம் உய்ய வழியினை அருளிச் செய்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1248

ஞான மெய்ந் நெறி தான் யார்க்கும் நமச்சிவாய அச் சொலாம் என்றுஆன சீர் நமச்சிவாயத் திருப்பதிகத்தை அங்கண்வானமும் நிலமும் கேட்க அருள் செய்து இம் மணத்தில் வந்தோர்ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக என்ன.
சொற்பிரிப்பு
ஞான மெய்ந்நெறி தான் யார்க்கும் நமச்சிவாயச் சொலாம் என்றுஆன சீர் நமச்சிவாயத் திருப்பதிகத்தை அங்கண்வானமும் நிலனும் கேட்க அருள் செய்து இம் மணத்தில் வந்தோர்ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக என்ன.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1249

வரு முறைப் பிறவி வெள்ளம் வரம்பு காணாது அழுந்திஉரு எனும் துயரக் கூட்டில் உணர்வு இன்றி மயங்குவார்கள்திருமணத்துடன் சேவித்து முன் செலும் சிறப்பினாலேமருவிய பிறவி நீங்க மன்னு சோதியினுள் புக்கார்.
சொற்பிரிப்பு
வருமுறைப் பிறவி வெள்ளம் வரம்பு காணாது அழுந்திஉரு எனும் துயரக் கூட்டில் உணர்வு இன்றி மயங்குவார்கள்திருமணத்து உடன் சேவித்து முன் செலும் சிறப்பினாலேமருவிய பிறவி நீங்க மன்னு சோதியின் உள் புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1250

சீர் பெருகு நீல நக்கர் திரு முருகர் முதல் தொண்டர்ஏர் கெழுவு சிவபாத இருதயர் நம்பாண்டார் சீர்ஆர் திரு மெய்ப் பெரும்பாணர் மற்று எனையோர் அணைந்துளோர்பார் நிலவு கிளை சூழப் பன்னிகளோடு உடன் புக்கார்.
சொற்பிரிப்பு
சீர் பெருகு நீலநக்கர் திருமுருகர் முதல் தொண்டர்ஏர் கெழுவு சிவபாத இருதயர் நம்பாண்டார் சீர்ஆர் திருமெய்ப் பெரும்பாணர் மற்று எனையோர் அணைந்து உளோர்பார் நிலவு கிளை சூழப் பன்னிகளோடு உடன் புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1251

அணி முத்தின் சிவிகை முதல் அணி தாங்கிச் சென்றேர்கள்மணி முத்த மாலை புனை மடவார் மங்கலம் பெருகும்பணி முற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள் வினைப்பாசம்துணிவித்த உணர்வினராய்த் தொழுது உடன் புக்கு ஒடுங்கினார்.
சொற்பிரிப்பு
அணிமுத்தின் சிவிகை முதல் அணி தாங்கிச் சென்றோர்கள்மணி முத்த மாலை புனைமடவார் மங்கலம் பெருகும்பணிமுற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள், வினைப்பாசம்துணிவித்த உணர்வினராய்த் தொழுது உடன் புக்கு ஒடுங்கினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1252

ஆறு வகைச் சமயத்தில் அருந் தவரும் அடியவரும்கூறு மறை முனிவர்களும் கும்பிட வந்து அணைந்தாரும்வேறு திருவருளினால் வீடு பெற வந்தாரும்ஈறில் பெரும் சோதியினுள் எல்லாரும் புக்கதற்பின்.
சொற்பிரிப்பு
ஆறுவகைச் சமயத்தில் அருந்தவரும் அடியவரும்கூறுமறை முனிவர்களும் கும்பிட வந்து அணைந்தாரும்வேறு திருவருளினால் வீடு பெற வந்தாரும்ஈறில் பெரும் சோதியின் உள் எல்லாரும் புக்கதன் பின்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1253

காதலியைக் கைப்பற்றிக் கொண்டு வலம் செய்தருளித்தீது அகற்ற வந்து அருளும் திருஞான சம்பந்தர்நாதன் எழில் வளர் சோதி நண்ணி அதன் உள்புகுவார்போத நிலை முடிந்த வழிப் புக்கு ஒன்றி உடன் ஆனார்.
சொற்பிரிப்பு
காதலியைக் கைப்பற்றிக் கொண்டு வலம் செய்தருளித்தீது அகற்ற வந்து அருளும் திருஞான சம்பந்தர்நாதன் எழில் வளர் சோதி நண்ணி அதன் உள் புகுவார்போத நிலை முடிந்த வழிப் புக்கு ஒன்றி உடன் ஆனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1254

பிள்ளையார் எழுந்து அருளிப் புக்கதன்பின் பெரும் கூத்தர்கொள்ள நீடிய சோதிக் குறி நிலை அவ்வழி கரப்பவள்ளலார் தம் பழைய மணக் கோயில் தோன்றுதலும்தெள்ளு நீர் உலகத்துப் பேறுஇல்லார் தெருமந்தார்.
சொற்பிரிப்பு
பிள்ளையார் எழுந்தருளிப் புக்கதன் பின் பெருங்கூத்தர்கொள்ள நீடிய சோதிக் குறி நிலை அவ்வழி கரப்பவள்ளலார் தம் பழைய மணக்கோயில் தோன்றுதலும்தெள்ளு நீர் உலகத்துப் பேறு இல்லார் தெருமந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1255

கண் நுதலார் திருமேனியுடன் கூடக் கவுணியனார்நண்ணியது தூரத்தே கண்டு நணுகப் பெறாவிண்ணவரு(ம்) முனிவர்களும் விரிஞ்சனே முதலானோர்எண்ணிலவர் ஏசறவு தீர எடுத்து ஏத்தினார்.
சொற்பிரிப்பு
கண்நுதலார் திருமேனி உடன் கூடக் கவுணியனார்நண்ணியது தூரத்தே கண்டு நணுகப் பெறாவிண்ணவரும் முனிவர்களும் விரிஞ்சனே முதல் ஆனார்எண்ணில் அவர் ஏசறவு தீர எடுத்து ஏத்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

1256

அரும் தமிழா கரர் சரிதை அடியேனுக்கு அவர் பாதம்தரும் பரிசால் அறிந்தபடி துதி செய்தேன் தாரணிமேல்பெருங்கொடையும் திண்ணனவும் பேர் உணர்வும் திருத்தொண்டால்வரும் தகைமைக் கலிக் காமனார் செய்கை வழுத்து வேன்.வம்பறா வரிவண்டு சருக்கத்தில் திருஞான சம்பந்த நாயனார் புராணம் முற்றிற்று.
சொற்பிரிப்பு
அருந்தமிழாகரர் சரிதை அடியேனுக்கு அவர் பாதம்தரும் பரிசால் அறிந்த படி துதி செய்தேன் தாரணி மேல்பெருங்கொடையும் திண்ணனவும் பேருணர்வும் திருத்தொண்டால்வருந்தகைமைக் கலிக்காமனார் செய்கை வழுத்துவேன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.