திருமுறை 12 · 12.033 · 33

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

வையம் புரக்கும் தனிச் செங்கோல் வளவர் பொன்னித் திருநாட்டுச்செய்ய கமலத் தடம் பணையும் செழும் நீர்த் தடமும் புடை உடைத்தாய்ப்பொய்தீர் வாய்மை அருமறை நூல் புரிந்த சீலப் புகழ் அதனால்எய்தும் பெருமை எண் திசையும் ஏறூர் ஏமப் பேர் ஊரால்.
சொற்பிரிப்பு
வையம் புரக்கும் தனிச் செங்கோல் வளவர் பொன்னித் திருநாட்டுச்செய்ய கமலத் தடம்பணையும் செழு நீர்த் தடமும் புடை உடைத்தாய்ப்பொய்தீர் வாய்மை அருமறை நூல் புரிந்த சீலப் புகழ் அதனால்எய்தும் பெருமை எண்திசையும் ஏறூர் ஏமப் பேறூரால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மாலை பயிலும் தோரணங்கள் மருங்கு பயிலும் மணி மறுகுவேலை பயிலும் புனல் பருகு மேகம் பயிலும் மாடங்கள்சோலை பயிலும் குளிர்ந்த இருள் சுரும்பு பயிலும் அரும்பூகம்காலை பயிலும் வேத ஒலி கழுநீர் பயிலும் செழுநீர்ச் செய்.
சொற்பிரிப்பு
மாலை பயிலும் தோரணங்கள் மருங்கு பயிலும் மணிமறுகு;வேலை பயிலும் புனல் பருகு மேகம் பயிலும் மாடங்கள்;சோலை பயிலும் குளிர்ந்த இருள் சுரும்பு பயிலும் அரும் பூகம்;காலை பயிலும் வேத ஒலி கழுநீர் பயிலும் செழுநீர்ச் செய்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பணையில் விளைந்த வெண் நெல்லின் பரப்பின் மீது படச் செய்யதுணர் மென் கமலம் இடை இடையே சுடர் விட்டு எழுந்து தோன்றுவனபுணர் வெண் புரி நூலவர் வேள்விக் களத்தில் புனைந்த வேதிகை மேல்மணல் வெண் பரப்பின் இடை இடையே வளர்த்த செந்தீமானுமால்.
சொற்பிரிப்பு
பணையில் விளைந்த வெண்நெல்லின் பரப்பின் மீது படச்செய்யதுணர் மென் கமலம் இடைஇடையே சுடர்விட்டு எழுந்து தோன்றுவனபுணர் வெண் புரிநூலவர் வேள்விக் களத்தில் புனைந்த வேதிகை மேல்மணல் வெண் பரப்பின் இடை இடையே வளர்த்த செந்தீ மானுமால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பெருமை விளங்கும் அப்பதியில் பேணும் நீற்றுச் சைவ நெறிஒருமை நெறி வாழ் அந்தணர் தம் ஓங்கு குலத்தினுள் வந்தார்இருமை உலகும் ஈசர் கழல் இறைஞ்சி ஏத்தப் பெற்ற தவத்துஅருமை புரிவார் நமிநந்தி அடிகள் என்பார் ஆயினார்.
சொற்பிரிப்பு
பெருமை விளங்கும் அப்பதியில் பேணும் நீற்றுச் சைவநெறிஒருமை நெறி வாழ் அந்தணர் தம் ஓங்கு குலத்தின் உள் வந்தார்இருமை உலகும் ஈசர் கழல் இறைஞ்சி ஏத்தப் பெற்ற தவத்துஅருமை புரிவார் நமிநந்தி அடிகள் என்பார் ஆயினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வாய்மை மறை நூல் சீலத்தால் வளர்க்கும் செந்தீ எனத் தகுவார்தூய்மைத் திரு நீற்று அடைவே மெய்ப் பொருள் என்று அறியும் துணிவினார்சாம கண்டர் செய்ய கழல் வழிபட்டு ஒழுகும் தன்மை நிலையாம இரவும் பகலும் உணர்வொழியா இன்பம் எய்தினார்.
சொற்பிரிப்பு
வாய்மை மறைநூல் சீலத்தால் வளர்க்கும் செந்தீ எனத் தகுவார்தூய்மைத் திருநீற்று அடைவே மெய்ப் பொருள் என்று அறியும் துணிவினார்சாம கண்டர் செய்ய கழல் வழிபட்டு ஒழுகும் தலைமை நிலையாம இரவும் பகலும் உணர்வு ஒழியா இன்பம் எய்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

அவ்வூர் நின்றும் திருவாரூர் அதனை அடைவார் அடியார்மேல்வெவ்வூறு அகற்றும் பெருமான் தன் விரை சூழ் மலர்த்தாள் பணிவுறுதல்எவ்வூதியமும் எனக் கொள்ளும் எண்ணம் உடையார் பல நாளும்தெவ்வூர் எரித்த வரைச்சிலையார் திருப் பாதங்கள் வணங்கினார்.
சொற்பிரிப்பு
அவ்ஊர் நின்றும் திருஆரூர் அதனை அடைவார் அடியார் மேல்வெவ்ஊறு அகற்றும் பெருமான் தன் விரைசூழ் மலர்த்தாள் பணிவுறுதல்எவ்ஊதியமும் எனக்கொள்ளும் எண்ணம் உடையார் பல நாளும்தெவ்ஊர் எரித்த வரைச்சிலையார் திருப்பாதங்கள் வணங்கினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

செம் பொற்புற்றின் மாணிக்கச் செழுஞ்சோதியை நேர் தொழுஞ் சீலம்தம் பற்றாக நினைந்து அணைந்து தாழ்ந்து பணிந்து வாழ்ந்து போந்துஅம் பொற் புரிசைத் திருமுன்றில் அணைவார் பாங்கோர் அரநெறியில்நம்பர்க்கு இடமாம் கோயிலின் உட்புக்கு வணங்க நண்ணினார்.
சொற்பிரிப்பு
செம்பொன் புற்றின் மாணிக்கச் செழும் சோதியை நேர் தொழும் சீலம்தம் பற்று ஆக நினைந்து அணைந்து, தாழ்ந்து, பணிந்து வாழ்ந்து,போந்துஅம்பொன் புரிசைத் திருமுன்றில் அணைவார் பாங்கு ஓர் அரனெறியின்நம்பர்க்கு இடமாம் கோயிலின் உள் புக்கு வணங்க நண்ணினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நண்ணி இறைஞ்சி அன்பினால் நயப்புற்று எழுந்த காதல் உடன்அண்ணலாரைப் பணிந்து எழுவார் அடுத்த நிலைமைக் குறிப்பினால்பண்ணுந் தொண்டின் பாங்கு பல பயின்று பரவி விரவுவார்எண்ணில் தீபம் ஏற்றுவதற்கு எடுத்த கருத்தின் இசைந்து எழுவார்.
சொற்பிரிப்பு
நண்ணி இறைஞ்சி அன்பினால் நயப்புற்று எழுந்த காதல் உடன்அண்ணலாரைப் பணிந்து எழுவார் அடுத்த நிலைமைக் குறிப்பினால்பண்ணும் தொண்டின் பாங்கு பல பயின்று பரவி விரவுவார்எண்ணில் தீபம் ஏற்றுவதற்கு எடுத்த கருத்தின் இசைந்து எழுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

எழுந்த பொழுது பகல் பொழுது அங்கு இறங்கு மாலை எய்துதலும்செழுந்தண் பதியினிடை அப்பால் செல்லில் செல்லும் பொழுது என்னஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்குறு நெய் வேண்டி உள் புகலும்அழிந்த நிலைமை அமணர் மனை ஆயிற்று அங்கண் அவர் உரைப்பார்.
சொற்பிரிப்பு
எழுந்த பொழுது பகற்பொழுது அங்கு இறங்கு மாலை எய்துதலும்செழுந்தண் பதியின் இடை அப்பால் செல்லில் செல்லும் பொழுது என்னஒழிந்தங்கு அணைந்து ஓர் மனையில் விளக்கு உறு நெய் வேண்டி உள் புகலும்அழிந்த நிலைமை அமணர் மனை ஆயிற்று அங்கண் அவர் உரைப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கையில் விளங்கும் கனல் உடையார் தமக்கு விளக்கு மிகை காணும்நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீர் ஆகில் நீரை முகந்து எரித்தல்செய்யும் என்று திருத் தொண்டர்க்கு உரைத்தார் தெளியாது ஒரு பொருளைப்பொய்யும் மெய்யும் ஆம் என்னும் பொருள்மேற் கொள்ளும் புரை நெறியார்.
சொற்பிரிப்பு
கையில் விளங்கு கனல் உடையார் தமக்கு விளக்கு மிகை காணும்;நெய் இங்கு இல்லை; விளக்கு எரிப்பீர் ஆகில் நீரை முகந்து எரித்தல்செய்யும் என்று திருத்தொண்டர்க்கு உரைத்தார் தெளியாது ஒரு பொருளேபொய்யும் மெய்யும் ஆம் என்னும் பொருள்மேல் கொள்ளும் புரை நெறியார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

அருகர் மதியாது உரைத்த உரை ஆற்றார் ஆகி அப்பொழுதேபெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து போந்து பிறை அணிந்தமுருகு விரியும் மலர்க் கொன்றை முடியார் கோயில் முன் எய்திஉருகும் அன்பர் பணிந்து விழ ஒருவாக்கு எழுந்தது உயர் விசும்பில்.
சொற்பிரிப்பு
அருகர் மதியாது உரைத்த உரை ஆற்றார் ஆகி அப்பொழுதேபெருக மனத்தில் வருத்தம் உடன் பெயர்ந்து போந்து பிறை அணிந்தமுருகு விரியும் மலர்க்கொன்றை முடியார் கோயில் முன் எய்திஉருகும் அன்பர் பணிந்து விழ ஒருவாக்கு எழுந்தது உயர் விசும்பில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

வந்த கவலை மாற்றும் இனி மாறா விளக்குப் பணி மாறஇந்த மருங்கில் குளத்து நீர் முகந்து கொடுவந்து ஏற்றும் எனஅந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளாச்சிந்தை மகிழ்ந்து நமிநந்தி அடிகள் செய்வது அறிந்திலரால்.
சொற்பிரிப்பு
வந்த கவலை மாற்றும் இனி மாறா விளக்குப் பணிமாறஇந்த மருங்கில் குளத்து நீர் முகந்து கொடு வந்து ஏற்றும்” எனஅந்தி மதியம் அணிந்தபிரான் அருளால் எழுந்த மொழி கேளாச்சிந்தை மகிழ்ந்து நமிநந்தி அடிகள் செய்வது அறிந்திலரால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

சென்னி மிசை நீர் தரித்த பிரான் அருளே சிந்தை செய்து எழுவார்நன்னீர்ப் பொய்கை நடுப்புக்கு நாதர் நாமம் நவின்று ஏத்திஅந்நீர் முகந்து கொண்டு ஏறி அப்பர் கோயில் அடைந்து அகலுள்முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்கும் திரி மேல் நீர் வார்த்தார்.
சொற்பிரிப்பு
சென்னி மிசை நீர் தரித்த பிரான் அருளே சிந்தை செய்து எழுவார்நன்னீர்ப் பொய்கை நடப்புக்கு நாதர் நாமம் நவின்று ஏத்திஅந்நீர் முகந்து கொண்டு ஏறி அப்பர் கோயில் அடைந்து அகல் உள்முந்நீர் உலகம் அதிசயிப்ப, முறுக்கும் திரிமேல் நீர்வார்த்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு எழுந்தது அது நோக்கிஆதி முதல்வர் அரநெறியார் கோயில் அடைய விளக்கு ஏற்றிஏதம் நினைந்த அருகந்தர் எதிரே முதிரும் களிப்பினுடன்நாதர் அருளால் திரு விளக்கு நீரால் எரித்தார் நாடு அறிய.
சொற்பிரிப்பு
சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர்விட்டு எழுந்தது அது நோக்கிஆதி முதல்வர் அரனெறியார் கோயில் அடைய விளக்கு ஏற்றிஏதம் நினைந்த அருகந்தர் எதிரே முதிரும் களிப்பின் உடன்நாதர் அருளால் திருவிளக்கு நீரால் எரித்தார் நாடு அறிய.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

நிறையும் பரிசு திருவிளக்கு விடியும் அளவும் நின்று எரியக்குறையும் தகளிகளுக்கு எல்லாம் கொள்ள வேண்டும் நீர் வார்த்துமறையின் பொருளை அருச்சிக்கும் மனையின் நியதி வழுவாமல்உறையும் பதியின் அவ்விரவே அணைவார் பணிவுற்று ஒருப்பட்டார்.
சொற்பிரிப்பு
நிறையும் பரிசு திருவிளக்கு விடியும் அளவும் நின்று எரியக்குறையும் தகளிகளுக்கு எல்லாம் கொள்ள வேண்டும் நீர் வார்த்துமறையின் பொருளை அருச்சிக்கும் மனையின் நியதி வழுவாமல்உறையும் பதியின் அவ்இரவே அணைவார் பணிவுற்று ஒருப்பட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

இரவு சென்று தம் பதியில் எய்தி மனைப்புக்கு என்றும் போல்விரவி நியமத் தொழில் முறையே விமலர் தம்மை அருச்சித்துப்பரவி அமுது செய்து அருளிப் பள்ளி கொண்டு புலர் காலைஅரவம் அணிவார் பூசை அமைத்து ஆரூர் நகரின் மீண்டு அணைந்தார்.
சொற்பிரிப்பு
இரவு சென்று தம் பதியில் எய்தி மனைப்புக்கு என்றும் போல்விரவி நியமத் தொழில் முறையே விமலர் தம்மை அருச்சித்துப்,பரவி, அமுது செய்து அருளிப் பள்ளி கொண்டு, புலர்காலை,அரவம் அணிவார் பூசை அமைத்து ஆரூர் நகரின் மீண்டு அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

வந்து வணங்கி அரநெறியார் மகிழும் கோயில் வலம் கொண்டுசிந்தை மகிழப் பணிந்தெழுந்து புறம்பும் உள்ளும் திருப்பணிகள்முந்த முயன்று பகல் எல்லாம் முறையே செய்து மறையவனார்அந்தி அமையத்து அரிய விளக்கு எங்கும் ஏற்றி அடி பணிவார்.
சொற்பிரிப்பு
வந்து வணங்கி, அரநெறியார் மகிழும் கோயில் வலம்கொண்டு,சிந்தை மகிழப், பணிந்து எழுந்து புறம்பும், உள்ளும், திருப்பணிகள்முந்த முயன்று பகல் எல்லாம் முறையே செய்து, மறையவனார்அந்தி அமையத்து அரிய விளக்கு எங்கும் ஏற்றி அடி பணிவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

பண்டு போலப் பல நாளும் பயிலும் பணி செய்து அவர் ஒழுகத்தண்டி அடிகளால் அமணர் கலக்கம் விளைந்து சார்வில் அமண்குண்டர் அழிய ஏழ் உலகும் குலவும் பெருமை நிலவியதால்அண்டர் பெருமான் தொண்டர் கழல் அமரர் பணியும் மணி ஆரூர்.
சொற்பிரிப்பு
பண்டு போலப் பல நாளும் பயிலும் பணிசெய்து அவர் ஒழுகத்தண்டி அடிகளால் அமணர் கலக்கம் விளைந்து சார்வில் அமண்குண்டர் அழிய ஏழ் உலகும் குலவும் பெருமை நிலவியதால்அண்டர் பெருமான் தொண்டர் கழல் அமரர் பணியும் அணி ஆரூர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

நாத மறை தேர் நமிநந்தி அடிகளார் நல் தொண்டு ஆகப்பூத நாதர் புற்றிடங் கொள் புனிதர்க்கு அமுதுபடி முதலாம்நீதி வளவன் தான் வேண்டும் நிபந்தம் பலவும் அரியணையின்மீது திகழ இருந்து அமைத்தான் வேத ஆகம நூல் விதி விளங்க.
சொற்பிரிப்பு
நாத மறை தேர் நமிநந்தி அடிகளார் நல் தொண்டு ஆகப்பூத நாதர் புற்று இடம்கொள் புனிதர்க்கு அமுதுபடி முதலாம்நீதி வளவன் தான் வேண்டும் நிபந்தம் பலவும் அரி அணையின்மீது திகழ இருந்து அமைத்தான் வேதாகம நூல் விதி விளங்க.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

வென்றி விடையார் மதிச் சடையார் வீதி விடங்கப் பெருமாள் தாம்என்றும் திருவாரூர் ஆளும் இயல்பின் முறைமைத் திருவிளையாட்டுஒன்றும் செயலும் பங்குனி உத்திரமாம் திருநாள் உயர் சிறப்பும்நின்று விண்ணப்பம் செய்தபடி செய்தருளும் நிலைபெற்றார்.
சொற்பிரிப்பு
வென்றி விடையார் மதிச்சடையார் வீதி விடங்கப் பெருமாள் தாம்என்றும் திருஆரூர் ஆளும் இயல்பின் முறைமைத் திருவிளையாட்டுஒன்றும் செயலும் பங்குனி உத்திரமாம் திருநாள் உயர்சிறப்பும்நின்று விண்ணப்பம் செய்த படி செய்து அருளும் நிலைபெற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

இன்ன பரிசு திருப் பணிகள் பலவும் செய்தே ஏழ் உலகும்மன்னும் பெருமைத் திருவாரூர் மன்னர் அடியார் வழி நிற்பார்அன்ன வண்ணம் திருவிளையாட்டு ஆடி அருள எந்நாளும்நன்மை பெருக நமி நந்தி அடிகள் தொழுதார் நாம் உய்ய.
சொற்பிரிப்பு
இன்ன பரிசு திருப்பணிகள் பலவும் செய்தே. ஏழ்உலகும்மன்னும் பெருமைத் திருஆரூர் மன்னர் அடியார் வழி நிற்பார்,அன்ன வண்ணம் திருவிளையாட்டு ஆடி அருள எந்நாளும்நன்மை பெருக நமிநந்தி அடிகள் தொழுதார் நாம் உய்ய.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

தேவர் பெருமான் எழுச்சி திரு மணலிக்கு ஒரு நாள் எழுந்து அருளயாவர் என்னாது உடன் சேவித்து எல்லாக் குலத்தில் உள்ளோரும்மேவ அன்பர் தாமும் உடன் சேவித்து அணைந்து விண்ணவர்தம்காவலாளர் ஓலக்கம் அங்கே கண்டு களிப்புற்றார்.
சொற்பிரிப்பு
தேவர் பெருமான் எழுச்சி திரு மணலிக்கு ஒருநாள் எழுந்தருளயாவர் என்னாது உடன் சேவித்து எல்லாக் குலத்தில் உள்ளோரும்மேவ அன்பர் தாமும் உடன் சேவித்து அணைந்து விண்ணவர் தம்காவலாளர் ஓலக்கம் அங்கே கண்டு களிப்புற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

பொழுது வைகச் சேவித்துப் புனிதர் மீண்டும் கோயில் புகத்தொழுது தம் ஊர் மருங்கு அணைந்து தூய மனை உள் புகுதாதேஇழுதும் இருள் சேர் இரவு புறம் கடையில் துயில இல்லத்துமுழுதும் தருமம் புரி மனையார் வந்து உள் புகுத மொழிகின்றார்.
சொற்பிரிப்பு
பொழுது வைகச் சேவித்துப், புனிதர் மீண்டும் கோயில் புகத்தொழுது, தம் ஊர் மருங்கு அணைந்து தூய மனை உள் புகுதாதே,இழுதும் இருள் சேர் இரவு புறம் கடையில் துயில, இல்லத்துமுழுதும் தருமம் புரிமனையார் வந்து உள் புகுத மொழிகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

திங்கள் முடியார் பூசனைகள் முடித்துச் செய்யும் கடன் முறையால்அங்கி தனை வேட்டு அமுது செய்து பள்ளி கொள்வீர் என அவர்க்குத்தங்கள் பெருமான் திருமணலிக்கு எழுச்சி சேவித்து உடன் நண்ணஎங்கும் எல்லாரும் போத இழிவு தொடக்கிற்று எனை என்று.
சொற்பிரிப்பு
திங்கள் முடியார் பூசனைகள் முடித்துச் செய்யும் கடன்முறையால்அங்கி தனைவேட்டு அமுது செய்து பள்ளி கொள்வீர் என அவர்க்குத்தங்கள் பெருமான் திருமணலிக்கு எழுச்சி சேவித்து உடன் நண்ணஎங்கும் எல்லாரும் போத இழிவு தொடக்கிற்று எனை என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

ஆதலாலே குளித்து அடுத்த தூய்மை செய்தே அகம்புகுந்துவேத நாதர் பூசனையைத் தொடங்க வேண்டும் அதற்கு நீசீத நன்னீர் முதலான கொண்டு இங்கு அணைவாய் எனச் செப்பக்காதன் மனையார் தாமும் அவை கொணரும் அதற்குக் கடிது அணைந்தார்.
சொற்பிரிப்பு
ஆதலாலே குளித்து அடுத்த தூய்மை செய்தே அகம் புகுந்துவேத நாதர் பூசனையைத் தொடங்க வேண்டும் அதற்கு நீசீத நல்நீர் முதலான கொண்டி ங்கு அணைவாய் எனச் செப்பக்காதல் மனையார் தாமும் அவை கொணரும் அதற்குக் கடிது அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

ஆய பொழுது தம் பெருமான் அருளாலேயோ மேனியினில்ஏயும் அசைவின் அயர்வாலோ அறியோம் இறையும் தாழாதேமேய உறக்கம் வந்து அணைய விண்ணோர் பெருமான் கழல் நினைந்துதூய அன்பர் துயில் கொண்டார் துயிலும் பொழுது கனவின் கண்.
சொற்பிரிப்பு
ஆய பொழுது தம் பெருமான் அருளாலேயோ? மேனியினில்ஏயும் அசைவின் அயர்வாலோ அறியோம்; இறையும் தாழாதேமேய உறக்கம் வந்து அணைய விண்ணோர் பெருமான் கழல் நினைந்துதூய அன்பர் துயில் கொண்டார் துயிலும் பொழுது கனவின்கண்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

மேன்மை விளங்கும் திருவாரூர் வீதி விடங்கப் பெருமாள்தாம்மான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்து அருளிஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள்ஆன பரிசு காண்பாய் என்று அருளிச் செய்து அங்கு எதிர் அகன்றார்.
சொற்பிரிப்பு
மேன்மை விளங்கும் திருஆரூர் வீதி விடங்கப் பெருமாள்தாம்மான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்தருளிஞான மறையோய்! ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள்ஆன பரிசு காண்பாய் என்று அருளிச் செய்து அங்கு எதிர் அகன்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

ஆதி தேவர் எழுந்து அருள உணர்ந்தார் இரவு அர்ச்சனை செய்யாதுஏதம் நினைந்தேன் என அஞ்சி எழுந்த படியே வழிபட்டுமாதரார்க்கும் புகுந்தபடி மொழிந்து விடியல் விரைவோடுநாதனார் தம் திருவாரூர் புகுத எதிர் அந் நகர் காண்பார்.
சொற்பிரிப்பு
ஆதி தேவர் எழுந்தருள உணர்ந்தார் இரவு அர்ச்சனை செய்யாதுஏதம் நினைந்தேன் என அஞ்சி எழுந்த படியே வழிபட்டு,மாதரார்க்கும் புகுந்தபடி மொழிந்து விடியல் விரைவோடுநாதனார்தம் திருஆரூர் புகுத எதிர் அந்நகர் காண்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

தெய்வப் பெருமாள் திருவாரூர்ப் பிறந்து வாழ்வார் எல்லாரும்மைவைத்த னைய மணிகண்டர் வடிவே ஆகிப் பெருகு ஒளியாம்மொய் வைத்து அமர்ந்த மேனியராம் பரிசு கண்டு முடிகுவித்தகைவைத்து அஞ்சி அவனிமிசை விழுந்து பணிந்து களிசிறந்தார்.
சொற்பிரிப்பு
தெய்வப் பெருமாள் திருஆரூர்ப் பிறந்து வாழ்வார் எல்லாரும்மை வைத்து அனைய மணிகண்டர் வடிவே ஆகிப் பெருகு ஒளியால்மொய் வைத்து அமர்ந்த மேனியராம் பரிசு கண்டு முடிகுவித்தகைவைத்து அஞ்சி அவனிமிசை விழுந்து பணிந்து களி சிறந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

படிவம் மாற்றிப் பழம் படியே நிகழ்வும் கண்டு பரமர் பால்அடியேன் பிழையைப் பொறுத்து அருள வேண்டும் என்று பணிந்தருளால்குடியும் திருவாரூர் அகத்துப் புகுந்து வாழ்வார் குவலயத்துநெடிது பெருகும் திருத்தொண்டு நிகழச் செய்து நிலவுவார்.
சொற்பிரிப்பு
படிவம் மாற்றிப் பழம்படியே நிகழ்வும் கண்டு பரமர்பால்அடியேன் பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று பணிந்தருளால்குடியும் திருஆரூர் அகத்துப் புகுந்து வாழ்வார் குவலயத்துநெடிது பெருகும் திருத்தொண்டு நிகழச் செய்து நிலவுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

31

நீறு புனைவார் அடியார்க்கு நெடுநாள் நியதி ஆகவேவேறு வேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால்ஏறு சிறப்பின் மணிப் புற்றில் இருந்தார் தொண்டர்க்கு ஆணி எனும்பேறு திருநாவுக்கரசர் விளம்பப் பெற்ற பெருமையினார்.
சொற்பிரிப்பு
நீறு புனைவார் அடியார்க்கு நெடுநாள் நியதி ஆகவேவேறு வேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால்ஏறு சிறப்பின் மணிப்புற்றில் இருந்தார் தொண்டர்க்கு ஆணி எனும்பேறு திருநாவுக்கரசர் விளம்பப் பெற்ற பெருமையினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

32

இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா உலகும் தொழச் செய்துநன்மை பெருகும் நமிநந்தி அடிகள் நயமார் திருவீதிச்சென்னி மதியும் திருநதியும் அலைய வருவார் திருவாரூர்மன்னர் பாத நீழல் மிகும் வளர் பொற் சோதி மன்னினார்.
சொற்பிரிப்பு
இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா உலகும் தொழச்செய்துநன்மை பெருகும் நமிநந்தி அடிகள் நயமார் திருவீதிச்சென்னி மதியும் திருநதியும் அலைய வருவார் திருஆரூர்மன்னர் பாத நீழல் மிகும் வளர் பொன் சோதி மன்னினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

33

நாட்டார் அறிய முன்னாளில் நன்னாள் உலந்த ஐம் படையின்பூட்டார் மார்பில் சிறிய மறைப் புதல்வன் தன்னைப் புக்கொளியூர்த்தாட்டா மரையின் மடுவின் கண் தனி மா முதலை வாய் நின்றும்மீட்டார் கழல்கள் நினைவாரை மீளா வழியின் மீட்பனவே.
சொற்பிரிப்பு
நாட்டார் அறிய முன்நாளில் நல்நாள் உலந்த ஐம்படையின்பூட்டார் மார்பில் சிறிய மறைப் புதல்வன் தன்னைப் புக்கொளியூர்த்தாள் தாமரையின் மடுவின்கண் தனி மா முதலை வாய் நின்றும்மீட்டார் கழல்கள் நினைவாரை மீளா வழியின் மீட்பனவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.