திருமுறை 12 · 12.035 · 409

ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

நீடு வண் புகழ்ச்சோழர் நீர்நாட்டு இடை நிலவும்மாடு பொன் கொழி காவிரி வடகரைக் கீழ்பால்ஆடு பூங்கொடி மாடம் நீடிய அணி நகர் தான்பீடு தங்கிய திருப் பெரு மங்கலப் பெயர்த்தால்.
சொற்பிரிப்பு
நீடு வண்புகழ்ச் சோழர் நீர்நாட்டு இடை நிலவும்மாடு பொன் கொழி காவிரி வடகரைக் கீழ்பால்ஆடு பூங்கொடி மாடம் நீடிய அணி நகர்தான்பீடு தங்கிய திருப் பெருமங்கலப் பெயர்த்தால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

இஞ்சி சூழ்வன எந்திரப் பந்தி சூழ் ஞாயில்மஞ்சு சூழ்வன வரை எனஉயர் மணி மாடம்நஞ்சு சூழ்வன நயனியர் நளின மெல்லடிச் செம்பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு.
சொற்பிரிப்பு
இஞ்சி சூழ்வன எந்திரப் பந்தி சூழ் ஞாயில்;மஞ்சு சூழ்வன வரை என உயர் மணிமாடம்;நஞ்சு சூழ்வன நயனியர் நளின மெல் அடிச் செம்பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

விழவு அறாதன விளங்கு ஒளி மணி நெடுவீதிமுழவு அறாதன மொய் குழலியர் நட அரங்கம்மழவு அறாதன மங்கலம் பொலி மணி முன்றில்உழவு அறாத நல் வளத்தன ஓங்கிருங் குடிகள்.
சொற்பிரிப்பு
விழவு அறாதன விளங்கு ஒளி மணிநெடு வீதி;முழவு அறாதன மொய் குழலியர் நட அரங்கம்;மழவு அறாதன மங்கலம் பொலி மணி முன்றில்;உழவு அறாத நல் வளத்தன ஓங்கு இருங்குடிகள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நீரினில் பொலி சடை முடி நெற்றி நாட்டத்துக்காரினில் திகழ் கண்டர் தம் காதலோர் குழுமிபாரின் மிக்க தோர் பெருமையால் பரமர்தாள் பரவும்சீரின் மிக்கது சிவபுரி எனத் தகும் சிறப்பால்.
சொற்பிரிப்பு
நீரினில் பொலி சடை முடி நெற்றி நாட்டத்துக்காரினில் திகழ் கண்டர் தம் காதலோர் குழுமிப்பாரின் மிக்கது ஓர் பெருமையால் பரமர் தாள் பரவும்சீரின் மிக்கது சிவபுரி எனத்தகும் சிறப்பால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

இன்ன வாழ்பதி அதன்இடை ஏயர் கோக் குடிதான்மன்னிய நீடிய வளவர் சேனாபதிக் குடியாம்தொன்மை மேவிய தொடர்ச்சியால் நிகழ்வது தூயபொன்னி நாட்டு வேளாண்மையில் உயர்ந்த பொற்பினதால்.
சொற்பிரிப்பு
இன்ன வாழ்பதி அதன் இடை ஏயர் கோக்குடி தான்மன்னி நீடிய வளவர் சேனாபதிக் குடியாம்தொன்மை மேவிய தொடர்ச்சியால் நிகழ்வது; தூயபொன்னி நாட்டு வேளாண்மையில் உயர்ந்த பொற்பினதால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

அங்கண் மிக்க அக்குடியினில் அவதரித்து உள்ளார்கங்கை வாழ்முடியார் தொண்டர் கலிக்காமர் என்பார்தங்கள் நாயகர் அடி பணிவார் அடிச்சாந்துபொங்கு காதலின் அவர்பணி போற்றுதல் புரிந்தார்.
சொற்பிரிப்பு
அங்கண் மிக்க அக்குடியினில் அவதரித்து உள்ளார்கங்கை வாழ் முடியார் தொண்டர் கலிக்காமர் என்பார்;தங்கள் நாயகர் அடி பணிவார் அடிச் சார்ந்துபொங்கு காதலின் அவர் பணி போற்றுதல் புரிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

புதிய நாள் மதிச்சடை முடியார் திருப்புன்கூர்க்குஅதிகம் ஆயின திருப்பணி அநேகமும் செய்துநிதியம் ஆவனநீறு உகந்தார் கழல் என்றுதுதியினால் பரவித் தொழுது இன்புறு கின்றார்.
சொற்பிரிப்பு
புதிய நாள் மதிச் சடை முடியார் திருப்புன்கூர்க்குஅதிகம் ஆயின திருப்பணி அனேகமும் செய்து"நிதியம் ஆவன நீறு உகந்தார் கழல்" என்று துதியினால் பரவித்தொழுது இன்புறுகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நாவலூர் மன்னர் நாதனைத் தூதுவிட்டு அதனுக்குஇயாவர் இச்செயல் புரிந்தனர் என்று அவர் இழிப்பத்தேவர் தம்பிரான் அவர்திறம் திருத்திய அதற்குமேவ வந்த அச்செயலினை விளம்புவான் உற்றேன்.
சொற்பிரிப்பு
நாவலூர் மன்னர் நாதனைத் தூது விட்டதனுக்கு"யாவர் இச்செயல் புரிந்தனர்" என்று அவர் இழிப்பத்தேவர் தம்பிரான் அவர் திறம் திருத்திய அதற்குமேவ வந்த அச்செயலினை விளம்புவான் உற்றேன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

திருத் தொண்டத் தொகை அருளித் திருநாவலூர் ஆளிகருத்து ஒன்று காதலினால் கனக மதில் திருவாரூர்ஒருத்தர் கழல் முப்பொழுதும் உருகிய அன்பொடு பணிந்துபெருத்து எழும்மெய் அன்பினால் பிரியாது அங்கு உறையும் நாள்.
சொற்பிரிப்பு
திருத்தொண்டத்தொகை அருளித் திருநாவலூர் ஆளிகருத்து ஒன்று காதலினால் கனகமதில் திருஆரூர்ஒருத்தர் கழல் முப்பொழுதும் உருகிய அன்பொடு பணிந்துபெருத்து எழு மெய் அன்பினால் பிரியாது அங்கு உறையும் நாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

தாள் ஆண்மை உழவுதொழில் தன்மை வளம் தலை சிறந்தவேளாளர் குண்டை யூரக் கிழார் எனும் மே தக்கோர்வாளார் வெண் மதி அணிந்தார் மறையவராய் வழக்கினில் வென்றுஆளாகக் கொண்ட வர்தாள் அடைந்து அன்பால் ஒழுகுவார்.
சொற்பிரிப்பு
தாளாண்மை உழவுதொழில் தன்மை வளம் தலைசிறந்தவேளாளர் குண்டையூர்க் கிழவர் எனும் மேதக்கோர்வாளார் வெண்மதி அணிந்தார் மறையவராய் வழக்கினில் வென்றுஆளாகக் கொண்டவர் தாள் அடைந்து அன்பால் ஒழுகுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

செந் நெல்லும் பொன்னன்ன செழும் பருப்பும் தீம்கரும் பின்இன் னல்ல அமுதும் முதல் எண்ணில் பெரும் பலவளங்கள்மன்னிய சீர் வன் தொண்டர்க்கு அமுதாக வழு வாமல்பன் னெடு நாள் பரவையார் மாளிகைக்குப் படி சமைத்தார்.
சொற்பிரிப்பு
செந்நெல்லும் பொன் அன்ன செழும்பருப்பும் தீங்கரும்பின்இன் அல்ல அமுதும் முதல் எண்ணில் பெரும் பல வளங்கள்மன்னிய சீர் வன்தொண்டர்க்கு அமுது ஆக வழுவாமல்பன்நெடு நாள் பரவையார் மாளிகைக்குப் படி சமைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

ஆன செயல் அன்பின் வரும் ஆர்வத்தால் மகிழ்ந்து ஆற்றவான முறை வழங்காமல் மா நிலத்து வளம் சுருங்கப்போனக நெல் படி நிரம்ப எடுப்பதற்குப் போ தாமைமானம் அழி கொள்கை யினால் மனம் மயங்கி வருந்துவார்.
சொற்பிரிப்பு
ஆனசெயல் அன்பின் வரும் ஆர்வத்தால் மகிழ்ந்து ஆற்றவானம் முறை வழங்காமல் மாநிலத்து வளம் சுருங்கப்போனக நெல் படி நிரம்ப எடுப்பதற்குப் போதாமைமானம் அழி கொள்கையினால் மனம் மயங்கி வருந்துவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

வன் தொண்டர் திருவாரூர் மாளி கைக்கு நெல் எடுக்கஇன்று குறை ஆகின்றது என் செய்கேன் என நினைந்துதுன்று பெரும் கவலை யினால் துயர் எய்தி உண்ணாதேஅன்று இரவு துயில் கொள்ள அங்கணர் வந்துஅருள் புரிவார்.
சொற்பிரிப்பு
வன்றொண்டர் திருஆரூர் மாளிகைக்கு நெல் எடுக்கஇன்று குறை ஆகின்றது என் செய்கேன் என நினைந்துதுன்று பெரும் கவலையினால் துயர் எய்தி உண்ணாதேஅன்று இரவு துயில் கொள்ள அங்கணர் வந்து அருள்புரிவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

ஆரூரன் தனக்கு உன்பால் நெல் தந்தோம் என்று அருளிநீரூரும் சடை முடியார் நிதிக் கோமான் தனை ஏவப்பேரூர் மற்று அதன் எல்லை அடங்கவும் நெல்மலைப் பிறங்கல்காரூரும் நெடும் விசும்பும் கரக்க நிறைந்து ஓங்கியது ஆல்.
சொற்பிரிப்பு
ஆரூரன் தனக்கு உன்பால் நெல் தந்தோம் என்று அருளிநீர் ஊரும் சடைமுடியார் நிதிக்கோமான் தனை ஏவப்பேரூர் மற்று அதன் எல்லை அடங்கவும் நெல் மலைப் பிறங்கல்கார் ஊரும் நெடுவிசும்பும் கரக்க நிறைந்து ஓங்கியதால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

அவ்விரவு புலர் காலை உணர்ந்து எழுவார் அது கண்டேஎவ் வுலகின் நெல் மலைதான் இது என்றே அதிசயித்துசெவ்விய பொன் மலை வளைத்தார் திரு அருளின் செயல் போற்றிக்கொவ்வை வாய்ப் பரவையார் கொழுநரையே தொழுது எழுவார்.
சொற்பிரிப்பு
அவ்இரவு புலர்காலை உணர்ந்து எழுவார் அது கண்டேஎவ்உலகின் நெல்மலை தான் இது என்றே அதிசயித்துச்செவ்விய பொன்மலை வளைத்தார் திருஅருளின் செயல் போற்றிக்கொவ்வை வாய்ப் பரவையார் கொழுநரையே தொழுது எழுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

நாவலூர் மன்னனார்க்கு நாயனார் அளித்த நெல் இங்குயாவரால் எடுக்கல் ஆகும் இச் செயல் அவர்க்குச் சொல்லப்போவன் யான் என்று போந்தார் புகுந்தவாறு அருளிச் செய்துதேவர் தம் பெருமான் ஏவ நம்பியும் எதிரே சென்றார்.
சொற்பிரிப்பு
நாவலூர் மன்னனார்க்கு நாயனார் அளித்த நெல் இங்குயாவரால் எடுக்கல் ஆகும் இச்செயல் அவர்க்குச் சொல்லப்போவன் யான் என்று போந்தார்; புகுந்தவாறு அருளிச் செய்துதேவர் தம் பெருமான் ஏவ நம்பியும் எதிரே சென்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

குண்டையூர்க் கிழவர் தாமும் எதிர் கொண்டு கோதில் வாய்மைத்தொண்டனார் பாதம் தன்னில் தொழுது வீழ்ந்து எழுந்து நின்றுபண்டெலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று முட்டஅண்டர் தம் பிரானார் தாமே நெல்மலை அளித்தார் என்று.
சொற்பிரிப்பு
குண்டையூர்க் கிழவர் தாமும் எதிர்கொண்டு கோதில் வாய்மைத்தொண்டனார் பாதம் தன்னில் தொழுது வீழ்ந்து எழுந்து நின்றுபண்டு எலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று முட்டஅண்டர் தம் பிரானார் தாமே நெல்மலை அளித்தார் என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்றுநெல் மலையின் ஆக்கம்இனி எனால் செய்யல்ஆகும் பணி அன்று இது என்னக் கேட்டுபனிமதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல்என்றுஇனியன மொழிந்து தாமும் குண்டை யூர் எய்த வந்தார்.
சொற்பிரிப்பு
மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்று நெல் மலையின் ஆக்கம்;இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்று இது என்னக் கேட்டுப்பனிமதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல் என்றுஇனியன மொழிந்து தாமும் குண்டையூர் எய்த வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

விண் ணினை அளக்கும் நெல்லின் வெற்பினை நம்பி நோக்கிஅண்ணலைத் தொழுது போற்றி அதிசயம் மிகவும் எய்திஎண்ணில் சீர்ப் பரவை இல்லத்து இந்நெல்லை எடுக்க ஆளும்தண்ணிலவு அணிந்தார் தாமே தரில் அன்றி ஒண்ணாது என்று.
சொற்பிரிப்பு
விண்ணினை அளக்கும் நெல்லின் வெற்பினை நம்பி நோக்கிஅண்ணலைத் தொழுது போற்றி அதிசயம் மிகவும் எய்திஎண்ணில் சீர்ப் பரவை இல்லத்து இந்நெல்லை எடுக்க ஆளும்தண்நிலவு அணிந்தார் தாமே தரில் அன்றி ஒண்ணாது என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

ஆளிட வேண்டிக் கொள் வார் அருகு திருப் பதியானகோளி லியில் தம் பெருமான் கோயிலினை வந்து எய்திவான் அளவு கண் மடவாள் வருந்தாமே எனும் பதிகம்மூள வரும் காதல் உடன் முன் தொழுது பாடுதலும்.
சொற்பிரிப்பு
ஆளிட வேண்டிக்கொள்வார் அருகு திருப்பதி ஆனகோளிலியில் தம்பெருமான் கோயிலினை வந்து எய்திவாளன கண்மடவாள் வருந்தாமே எனும் பதிகம்மூளவரும் காதல் உடன் முன்தொழுது பாடுதலும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

பகல்பொழுது கழிந்து அதன்பின் பரவை மனை அளவு அன்றிமிகப் பெருகும் நெல் உலகில் விளங்கிய ஆரூர் நிறையப்புகப் பெய்து தருவன நம் பூதங்கள் என விசும்பில்நிகர்ப்பு அரியது ஒருவாக்கு நிகழ்ந்தது நின் மலன் அருளால்.
சொற்பிரிப்பு
பகல் பொழுது கழிந்ததன் பின் பரவை மனை அளவு அன்றிமிகப் பெருகு நெல் உலகில் விளங்கிய ஆரூர் நிறையப்புகப்பெய்து தருவன நம் பூதங்கள் என விசும்பில்நிகர்ப்பு அரியது ஒருவாக்கு நிகழ்ந்தது, நின்மலன் அருளால்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

தம்பிரான் அருள் போற்றித் தரையின் மிசை விழுந்து எழுந்தேஉம்பரால் உணர்வு அரிய திருப் பாதம் தொழுது ஏத்திச்செம் பொன் நேர் சடையாரைப் பிறபதியும் தொழுது போய்நம்பர் ஆரூர் அணைந் தார் நாவலூர் நாவலன் ஆர்.
சொற்பிரிப்பு
தம்பிரான் அருள் போற்றித் தரையின் மிசை விழுந்து எழுந்தேஉம்பரால் உணர்வு அரிய திருப்பாதம் தொழுது ஏத்திச்செம்பொன் நேர் சடையாரைப் பிற பதியும் தொழுது போய்நம்பர் ஆரூர் அணைந்தார் நாவலூர் நாவலனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

பூங்கோயில் மகிழ்ந்து அருளும் புரா தனரைப் புக்கு இறைஞ்சிநீங்காத பெரும் மகிழ்ச்சி உடன் ஏத்திப் புறம் போந்துபாங்கு ஆனார் புடை சூழ்ந்து போற்றி இசைக்க பரவையார்ஓங்கு திரு மாளிகை யினுள் அணைந் தார் ஆரூரர்.
சொற்பிரிப்பு
பூங்கோயில் மகிழ்ந்து அருளும் புராதனரைப் புக்கு இறைஞ்சிநீங்காத பெருமகிழ்ச்சி உடன் ஏத்திப் புறம் போந்துபாங்கு ஆனார் புடைசூழ்ந்து போற்றிசைக்கப் பரவையார்ஓங்கு திரு மாளிகையின் உள் அணைந்தார் ஆரூரர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

கோவை வாய்ப் பரவையார் தாம் மகிழும் படி கூறிமேவி அவர் தம் மோடு மிகஇன்புற்று இருந்து அதன்பின்சேவின் மேல் உமையோடும் வருவார் தம் திரு அருளின்ஏவலி னால் அவ் விரவு பூதங்கள் மிக்கு எழுந்து.
சொற்பிரிப்பு
கோவை வாய்ப் பரவையார் தாம் மகிழும் படி கூறிமேவி அவர் தம்மோடும் மிக இன்புற்று இருந்ததன் பின்சேவின் மேல் உமையோடும் வருவார் தம் திருஅருளின்ஏவலினால் அவ்இரவு பூதங்கள் மிக்கு எழுந்தது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

குண்டையூர் நெல் மலையைக் குறள் பூதப் படை கவர்ந்துவண்டு லாம் குழல் பரவை மாளிகையை நிறைவித்தேஅண்டர்பிரான் திரு ஆரூர் அடங்கவும் நெல் மலை ஆக்கிகண்டவர் அற்புதம் எய்தும் காட்சி பெற அமைத்தனவால்.
சொற்பிரிப்பு
குண்டையூர் நெல்மலையைக் குறள் பூதப் படை கவர்ந்துவண்டு உலாம் குழல் பரவை மாளிகையை நிறைவித்தேஅண்டர்பிரான் திருஆரூர் அடங்கவும் நெல் மலை ஆக்கிக்கண்டவர் அற்புதம் எய்தும் காட்சி பெற அமைத்தனவால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

அவ்விரவு புலர் காலை ஆரூரில் வாழ் வார் கண்டுஎவ்வுலகில் விளைந்தன நெல் மலை இவை என்று அதிசயித்துநவ்வி மதர்த் திரு நோக்கின் நங்கை புகழ்ப் பரவையார்க்குஇவ் உலகு வாழ வரும் நம்பி அளித்தன என்பார்.
சொற்பிரிப்பு
அவ்இரவு புலர்காலை ஆரூரில் வாழ்வார் கண்டுஎவ்உலகில் விளைந்தன நெல்மலை இவை என்று அதிசயித்துநவ்வி மதர்த் திருநோக்கின் நங்கை புகழ்ப் பரவையார்க்குஇவ்உலகு வாழவரும் நம்பி அளித்தன என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

நீக்க அரிய நெல் குன்று தனை நோக்கி நெறி பலவும்போக்க அரிது ஆயிடக் கண்டு மீண்டும் தம்இல் புகுவார்பாக்கி யத்தின் திரு வடிவாம் பரவையார்க்கு இந் நெல்லுப்போக்கும் இடம் அரி தாகும் எனப் பலவும் புகல்கின்றார்.
சொற்பிரிப்பு
நீக்கரிய நெல்குன்று தனை நோக்கி நெறி பலவும்போக்கு அரிதாயிடக் கண்டு மீண்டும் தம் இல் புகுவார்பாக்கியத்தின் திருவடிவாம் பரவையார்க்கு இந்நெல்லும்போக்கும் இடம் அரிது ஆகும் எனப் பலவும் புகல்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

வன்தொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ் சிறப்பார்இன்று உங்கள் மனை எல்லைக்கு உள்படும் நெல்குன்று எல்லாம்பொன் தங்கு மாளிகையில் புகப் பெய்து கொள்க எனவென்றி முரசு அறை வித்தார் மிக்க புகழ் பரவையார்.
சொற்பிரிப்பு
வன்றொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ்சிறப்பார்இன்று உங்கள் மனை எல்லைக்கு உட்படு நெல்குன்று எல்லாம்பொன்தங்கு மாளிகையில் புகப்பெய்து கொள்க எனவென்றிமுரசு அறைவித்தார் மிக்கபுகழ்ப் பரவையார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

அணி ஆரூர் மருகு அதனில் ஆளிஅங்குப் பறை அறைந்தபணியாலே மனை நிறைத்துப் பாங்கு எங்கும் நெல் கூடுஅணி யாமல் கட்டி நகர் களி கூரப் பரவையார்மணியாரம் புனை மார்பின் வன் தொண்டர் தமைப் பணிந்தார்.
சொற்பிரிப்பு
அணி ஆரூர் மறுகு அதனில் ஆள் இயங்கப் பறை அறைந்தபணியாலே மனை நிறைத்துப் பாங்கு எங்கும் நெல் கூடுகணியாமல் கட்டி நகர் களிகூரப் பரவையார்மணி ஆரம் புனைமார்பின் வன்தொண்டர் தமைப் பணிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

நம்பி ஆரூர் திருவா ரூரில் நயந்து உறை நாள்செம்பொன் புற்றுஇடம் கொண்டு வீற்று இருந்த செழும் தேனைக்தம் பெரிய விருப்பி னொடும் தாழ்ந்து உணர்வினால் பருகிஇம் பருடன் உம்பர் களும் அதிச யிப்ப ஏத்தினார்.
சொற்பிரிப்பு
நம்பி ஆரூரர் திருஆரூரில் நயந்து உறைநாள்செம்பொன் புற்றிடம் கொண்டு வீற்றிருந்த செழுந்தேனைத்தம்பெரிய விருப்பினொடும் தாழ்ந்து உணர்வினால் பருகிஇம்பருடன் உம்பர்களும் அதிசயிப்ப ஏத்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

31

குலவு புகழ்க் கோட்புலியார் குறை யிரந்து தம் பதிக்கண்அலகில் புகழ் ஆரூரர் எழுந்து அருள அடி வணங்கிநிலவிய வன்தொண்டர் அஃது இசைந்து அதன்பின் நேர் இறைஞ்சிபலர் புகழும் பண்பினார் மீண்டும் தம் பதி அணைந்தார்.
சொற்பிரிப்பு
குலவு புகழ்க் கோட்புலியார் குறை இரந்து தம் பதிக்கண்அலகில் புகழ் ஆரூரர் எழுந்தருள அடி வணங்கிநிலவிய வன்தொண்டர் அஃது இசைந்ததன் பின் நேர் இறைஞ்சிப்பலர் புகழும் பண்பினார் மீண்டும் தம் பதி அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

32

தேவர் ஒதுங்க திருத் தொண்டர் மிடையும் செல்வத் திருவாரூர்காவல் கொண்டு தனியாளும் கடவுள் பெருமான் கழல் வணங்கிநாவலூரர் அருள் பெற்று நம்பர் பதிகள் பிற நண்ணிப்பாவை பாகர்தமைப் பணிந்து பாடும் விருப்பில் சென்று அணைவார்.
சொற்பிரிப்பு
தேவர் ஒதுங்கத் திருத்தொண்டர் மிடையும் செல்வத் திருஆரூர்காவல் கொண்டு தனி ஆளும் கடவுள் பெருமான் கழல் வணங்கிநாவலூரர் அருள்பெற்று, நம்பர் பதிகள் பிற நண்ணிப்,பாவை பாகர் தமைப் பணிந்து பாடும் விருப்பில் சென்று அணைவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

33

மாலும் அயனும் உணர்வு அரியார் மகிழும் பதிகள்பல வணங்கிஞாலம் நிகழ் கோட்புலியார் தம் நாட்டியத்தான் குடி நண்ணஏலும் வகையால் அலங்கரித்து அங்கு அவரும் எதிர்கொண்டு இனிதுஇறைஞ்சிக்கோல மணி மாளிகையின் கண் ஆர்வம் பெருகக்கொடு புக்கார்.
சொற்பிரிப்பு
மாலும் அயனும் உணர்வு அரியார் மகிழும் பதிகள் பல வணங்கிஞாலம் நிகழ் கோட்புலியார் தம் நாட்டியத்தான் குடி நண்ணஏலும் வகையால் அலங்கரித்து அங்கு அவரும் எதிர்கொண்டு இனிது இறைஞ்சிக்கோல மணி மாளிகையின்கண் ஆர்வம் பெருகக் கொடுபுக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

34

தூய மணிப்பொன் தவிசில் எழுந்து அருளி இருக்கத்தூ நீரால்சேய மலர்ச்சேவடி விளக்கித் தெளித்துக் கொண்ட செழும் புனலால்மேய சுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களிப்பஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார்.
சொற்பிரிப்பு
தூய மணிப்பொன் தவிசில் எழுந்தருளி இருக்கத் தூநீரால்சேய மலர்ச்சேவடி விளக்கித் தெளித்துக் கொண்டச் செழும்புனலால்மேய சுடர்மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களிப்பஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறைபுரிவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

35

பூந்தண் பனிநீர் கொடு சமைத்த பொருவுஇல் விரைச்சந்தனக் கலவைவாய்ந்த அகிலின் நறும் சாந்து வாசம் நிறைமான் மதச் சேறுதோய்ந்த புகை நாவியின் நறுநெய் தூயபசும் கர்ப்பூரம் உடன்ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய எண்ணில் மணிப்பாசனத்து ஏந்தி.
சொற்பிரிப்பு
பூந்தண் பனிநீர் கொடு சமைத்த பொருவில் விரைச் சந்தனக் கலவைவாய்ந்த அகிலின் நறுஞ்சாந்து வாசம் நிறை மான்மதச் சேறுதோய்ந்த புகை நாவியின் நறுநெய் தூய பசுங்கர்ப்பூரம் உடன்ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய எண்ணில் மணிப்பாசனத்து ஏந்தி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

36

வேறு வேறு திருப்பள்ளித் தாமப் பணிகள் மிக எடுத்துமாறிலாத மணித் திரு ஆபரண வருக்கம் பல தாங்கிஈறில் விதத்துப் பரிவட்டம் ஊழின் நிரைத்தே எதிர் இறைஞ்சிஆறு புணைந்தார் அடித்தொண்டர் அளவுஇல் பூசை கொள அளித்தார்.
சொற்பிரிப்பு
வேறு வேறு திருப்பள்ளித் தாமப் பணிகள் மிக எடுத்துமாறிலாத மணித்திரு ஆபரண வருக்கம் பல தாங்கிஈறில் விதத்துப் பரிவட்டம் ஊழின் நிரைத்தே எதிர் இறைஞ்சிஆறு புனைந்தார் அடித்தொண்டர் அளவில் பூசை கொள அளித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

37

செங்கோல் அரசன் அருள் உரிமைச் சேனாபதி ஆம் கோட்புலியார்நங் கோமானை நாவலூர் நகரார் வேந்தை நண் பினால்தங்கோ மனையில் திருஅமுது செய்வித்து இறைஞ் சித்தலை சிறந்தபொங்கு ஓதம்போல் பெரும் காதல் புரிந்தார் பின்னும் போற்றுவா.
சொற்பிரிப்பு
செங்கோல் அரசன் அருள் உரிமைச் சேனாபதியாம் கோட்புலியார்நங்கோமானை நாவலூர் நகரார் வேந்தை நண்பினால்தம் கோமனையில் திருஅமுது செய்வித்து இறைஞ்சித் தலைசிறந்தபொங்கு ஓதம்போல் பெருங்காதல் புரிந்தார் பின்னும் போற்றுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

38

ஆன விருப்பின் மற்று அவர்தாம் அருமையால் முன் பெற்று எடுத்ததேனார் கோதைச் சிங்கடியார் தமையும் அவர்பின் திரு உயிர்த்தமானார் நோக்கின் வனப்பகையார் தமையும் கொணர்ந்து வன் தொண்டர்தூ நாண் மலர்த்தாள் பணிவித்துத் தாமும் தொழுது சொல்லுவார்.
சொற்பிரிப்பு
ஆனா விருப்பின் மற்றவர் தாம் அருமையால் முன் பெற்று எடுத்ததேனார் கோதைச் சிங்கடியார் தமையும் அவர் பின் திருஉயிர்த்தமானார் நோக்கின் வனப்பகையார் தமையும் கொணர்ந்து வன்தொண்டர்தூ நாண் மலர்த்தாள் பணிவித்துத் தாமும் தொழுது சொல்லுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

39

அடியேன் பெற்ற மக்கள் இவர் அடிமைஆகக் கொண்டு அருளிக்கடிசேர் மலர்த்தாள் தொழுது உய்யக்கருணை அளிக்க வேண்டும் எனத்தொடிசேர் தளிக்கை இவர் எனக்குத் தூய மக்கள் எனக்கொண்டப்படியே மகண்மையாக் கொண்டார் பரவையார் தம் கொழு நனார்.
சொற்பிரிப்பு
அடியேன் பெற்ற மக்கள் இவர் அடிமை ஆகக் கொண்டு அருளிக்கடிசேர் மலர்த்தாள் தொழுதுய்யக் கருணை அளிக்க வேண்டும் எனத்தொடிசேர் தளிர்க்கை இவர் எனக்குத் தூய மக்கள் எனக் கொண்டு அப்படியே மகண்மையாக் கொண்டார் பரவையார் தம் கொழுநனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

40

கோதை சூழ்ந்த குழலாரைக் குறங்கின் வைத்து கொண்டு இருந்துகாதல் நிறைந்த புதல்வியராம் கருத்து உட்கசிவால் அணைத்து உச்சிமீது கண்ணீர் விழ மோந்து வேண்டுவனவும் கொடுத்து அருளிநாதர் கோயில் சென்று அடைந்தார் நம்பி தம்பிரான் தோழர்.
சொற்பிரிப்பு
கோதை சூழ்ந்த குழலாரைக் குறங்கின் வைத்துக் கொண்டு இருந்துகாதல் நிறைந்த புதல்வியராம் கருத்து உள் கசிவால் அணைத்து உச்சிமீது கண்ணீர் விழ மோந்து வேண்டுவனவும் கொடுத்தருளிநாதர் கோயில் சென்று அடைந்தார் நம்பி தம்பிரான் தோழர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

41

வென்றி வெள்ளேறு உயர்த்து அருளும் விமலர் திருக்கோபுரம் இறைஞ்சிஒன்றும் உள்ளத் தொடும் அன்பால் உச்சி குவித்த கரத்தொடும்சென்று புக்குப் பணிந்து திருப்பதிகம் பூணாண் என்று எடுத்துக்கொன்றை முடியார் அருள் உரிமை சிறப்பித்தார் கோட்புலியாரை.
சொற்பிரிப்பு
வென்றி வெள் ஏறு உயர்த்து அருளும் விமலர் திருக்கோபுரம் இறைஞ்சிஒன்றும் உள்ளத்தொடும் அன்பால் உச்சி குவித்த கரத்தோடும்சென்று புக்குப் பணிந்து திருப்பதிகம் பூண்நாண் என்று எடுத்துக்கொன்றை முடியார் அருள் உரிமை சிறப்பித்தார் கோட்புலியாரை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

42

சிறப்பித்து அருளும் திருக்கடைக் காப்பு அதன் இடைச் சிங்கடியாரைப்பிறப்பித்து எடுத்த பிதாவாகத் தம்மை நினைத்த பெற்றி யினால்மறப்பில் வகைச் சிங்கடிஅப்பன் என்றே தம்மை வைத்து அருளிநிறப்பொற்பு உடைய இசைபாடி நிறைந்த அருள் பெற்று இறைஞ்சுவார்.
சொற்பிரிப்பு
சிறப்பித்து அருளும் திருக்கடைக்காப்பு அதனின் இடைச்சிங்கடியாரைப்பிறப்பித்து எடுத்த பிதாவாகத் தம்மை நினைந்த பெற்றியினால் மறப்பில் வகைச் சிங்கடி அப்பன்என்றே தம்மை வைத்தருளி நிறப்பொற்பு உடைய இசைபாடிநிறைந்த அருள்பெற்று இறைஞ்சுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

43

அங்கு நின்றும் எழுந்து அருளி அளவில் அன்பின் உள்மகிழச்செங்கண் நுதலார் மேவு திருவலி வலத்தைச் சேர்ந்து இறைஞ்சிமங்கை பாகர் தமைப் பதிகம் வலிவலத்துக் கண்டேன் என்றுஎங்கும் நிகழ்ந்த தமிழ் மாலை எடுத்துத் தொடுத்த இசைபுனைவார்.
சொற்பிரிப்பு
அங்கு நின்றும் எழுந்தருளி அளவில் அன்பின் உள்மகிழச்செங்கண் நுதலார் மேவு திருவலிவலத்தைச் சேர்ந்து இறைஞ்சிமங்கை பாகர் தமைப் பதிகம் வலிவலத்துக் கண்டேன் என்றுஎங்கும் நிகழ்ந்த தமிழ்மாலை எடுத்துத் தொடுத்த இசை புனைவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

44

நன்று மகிழும் சம்பந்தர் நாவுக் கரசர் பாட்டு உகந்தீர்என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்திஅருள் பெற்று எழுந்துஅருளிமன்றின் இடையே நடம் புரிவார் மருவு பெருமைத் திருவாரூர்சென்று குறுகிப் பூங்கோயில் பெருமான் செம்பொன் கழல் பணிந்து.
சொற்பிரிப்பு
நன்று மகிழும் சம்பந்தர் நாவுக்கு அரசர் பாட்டு உகந்தீர்என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்தி அருள்பெற்று எழுந்தருளிமன்றின் இடையே நடம்புரிவார் மருவும் பெருமைத் திருஆரூர்சென்று குறுகிப் பூங்கோயில் பெருமான் செம்பொன் கழல் பணிந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

45

இறைஞ்சிப் போந்து பரவையார் திரு மாளிகையில் எழுந்து அருளிநிறைந்த விருப்பின் மேவும் நாள் நீடு செல்வத் திருவாரூர்ப்புறம்பு நணிய கோயில்களும் பணிந்து போற்றிப் புற்று இடமாய்உறைந்த பெருமான் கழல் பிரியாது ஓவாஇன்பம் உற்று இருந்தார்.
சொற்பிரிப்பு
இறைஞ்சிப் போந்து பரவையார் திருமாளிகையில் எழுந்தருளிநிறைந்த விருப்பின் மேவுநாள் நீடு செல்வத் திருஆரூர்ப்புறம்பு நணிய கோயில்களும் பணிந்து போற்றிப் புற்றிடமாய்உறைந்த பெருமான் கழல்பிரியாது ஓவா இன்பம் உற்று இருந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

46

செறிபுன் சடையார் திருவாரூர்ப் திருப் பங்குனி உத்திரத் திருநாள்குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவில் குறைவறுக்கநிறையும் பொன் கொண்டு அணைவதற்கு நினைந்து நம்பி திருப்புகலூர்இறைவர் பாதம் பணிய எழுந்து அருளிச்சென்று அங்கு எய்தினார்.
சொற்பிரிப்பு
செறிபுன் சடையார் திருஆரூர்த் திருப்பங்குனி உத்திரத் திருநாள்குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவில் குறைவறுக்கநிறையும் பொன்கொண்டு அணைவதற்கு நினைந்து நம்பி திருப்புகலூர்இறைவர் பாதம் பணிய எழுந்தருளிச் சென்று அங்கு எய்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

47

சென்று விரும்பித் திருப்புகலூர் தேவர் பெருமான் கோயில் மணிமுன்றில் பணிந்து வலம்கொண்டு முதல்வர் முன்பு வீழ்ந்து இறைஞ்சித்தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த அன்பில் துதித்து எழுந்துநின்று பதிக இசைபாடி நினைந்த கருத்து நிகழ் விப்பார்.
சொற்பிரிப்பு
சென்று விரும்பித் திருப்புகலூர்த் தேவர் பெருமான் கோயில் மணிமுன்றில் பணிந்து வலங்கொண்டு முதல்வர் முன்பு வீழ்ந்து இறைஞ்சித்தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த அன்பில் துதித்து எழுந்துநின்று பதிக இசைபாடி நினைந்த கருத்து நிகழ்விப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

48

சிறிது பொழுது கும்பிட்டுச் சிந்தை முன்னம் அங்கு ஒழியவறிது புறம்போந்து அருளி அயல் மடத்தில் அணையார் வன்தொண்டர்அறிவுகூர்ந்த அன்பர் உடன் அணி முன்றிலின் ஓர்அருகு இருப்பமறி வண்கையார் அருளேயோ மலர்கண் துயில் வந்து எய்தியதால்.
சொற்பிரிப்பு
சிறிது பொழுது கும்பிட்டுச் சிந்தை முன்னம் அங்கு ஒழியவறிது புறம் போந்தருளி அயல் மடத்தில் அணையார் வன்தொண்டர்அறிவு கூர்ந்த அன்பருடன் அணி முன்றிலின் ஓர் அருகு இருப்பமறிவண் கையார் அருளேயோ! மலர்க்கண் துயில் வந்து எய்தியதால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

49

துயில் வந்து எய்தத் தம்பிரான் தோழர் அங்குத் திருப்பணிக்குப்பயிலும் சுடுமண் பலகை பல கொணர்வித்து உயரம் பண்ணித்தேன்அயிலும் சுரும்பார் மலர்ச் சிகழி முடிமேல் அணியா உத்தரியவெயில் உந்திய வெண்பட்டு அதன்மேல் விரித்துப் பள்ளி மேவினார்.
சொற்பிரிப்பு
துயில் வந்து எய்தத் தம்பிரான் தோழர் அங்குத் திருப்பணிக்குப்பயிலும் சுடுமண் பலகை பல கொணர்வித்து உயரம் பண்ணித், தேன்அயிலும் சுரும்பு ஆர் மலர்ச் சிகழி முடிமேல் அணையா உத்தரியவெயில் உந்திய வெண் பட்டு அதன்மேல் விரித்துப் பள்ளி மேவினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

50

சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணைமலர்க் கண்பற்றும் துயில் நீங்கிடப் பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார்வெற்றி விடையார் அருளாலே வேமண் கல்லே விரிசுடர்ச் செம்பொற்றிண் கல்லாயின கண்டு புகலூர் இறைவர் அருள் போற்றி.
சொற்பிரிப்பு
சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணைமலர்க்கண்பற்றும் துயில் நீங்கிடப் பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார்வெற்றி விடையார் அருளாலே வேமண் கல்லே விரிசுடர்ச் செம்பொன் திண் கல் ஆயின கண்டு புகலூர் இறைவர் அருள் போற்றி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

51

தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணைக்கைக் கமல முகைதலைமேல்கொண்டு கோயில் உள் புக்குக் குறிப்பில் அடங்காப் பேர்அன்புமண்டு காதல் உற வணங்கி வாய்த்த மதுர மொழிமாலைபண்டு அங்கு இசையில் தம்மையேபுகழ்ந்து என்று எடுத்துப் பாடினார்.
சொற்பிரிப்பு
தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணைக்கைக் கமல முகை தலைமேல்கொண்டு கோயில் உள்புக்குக் குறிப்பில் அடங்காப் பேரன்புமண்டு காதல் உற வணங்கி வாய்த்த மதுர மொழிமாலைபண்டங்கு இசையில் தம்மையே புகழ்ந்து என்று எடுத்துப் பாடினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

52

பதிகம் பாடித் திருக்கடைக்காப் பணிந்து பரவிப் புறம் போந்தே எதிரில்இன்பம் இம்மையே தருவார் அருள் பெற்று எழுந்து அருளி நிதியின்குவையும் உடன் கொண்டு நிறையும் நதியும் குறை மதியும் பொதியும்சடை யார் திருப் பனையூர் புகுவார் புரிநூல் மணி மார்பர்.
சொற்பிரிப்பு
பதிகம் பாடித் திருக்கடைக்காப்பு அணிந்து பரவிப் புறம் போந்தேஎதிர் இல் இன்பம் இம்மையே தருவார் அருள்பெற்று எழுந்தருளிநிதியின் குவையும் உடன்கொண்டு நிறையும் நதியும் குறைமதியும்பொதியும் சடையார் திருப்பனையூர் புகுவார் புரிநூல் மணிமார்பர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

53

செய்ய சடையார் திருப் பனையூர்ப் புறத்துத் திருக் கூத்தொடும் காட்சிஎய்த அருள் எதிர்சென்று அங்கு எழுந்த விருப்பால் விழுந்து இறைஞ்சிஐயர் தம்மை அரங்கு ஆட வல்லார் அவரே அழகியர் என்றுஉய்ய உலகு பெறும் பதிகம் பாடி அருள் பெற்று உடன்போந்தார்.
சொற்பிரிப்பு
செய்ய சடையார் திருப்பனையூர்ப் புறத்துத் திருக்கூத்தொடும் காட்சிஎய்த அருள எதிர்சென்று அங்கு எழுந்த விருப்பால் விழுந்து இறைஞ்சிஐயர் தம்மை அரங்கு ஆட வல்லார் அவரே அழகியர் என்றுஉய்ய உலகு பெறும் பதிகம் பாடி அருள்பெற்று உடன்போந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

54

வளம் மல்கியசீர்ப் திருப்பனையூர் வாழ்வார் ஏத்த எழுந்து அருளி அளவில்செம் பொன் இட்டி கைகள் ஆள்மேல் நெருங்கி அணி ஆரூர்த்தளவ முறுவல் பரவையார் தம் மாளி கையில் புகத் தாமும்உளமன்னிய தம் பெரு மானார் தம்மை வணங்கி உவந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
வளம் மல்கிய சீர்த் திருப்பனையூர் வாழ்வார் ஏத்த எழுந்தருளிஅளவில் செம்பொன் இட்டிகைகள் ஆள்மேல் நெருங்கி அணி ஆரூர்த்தளவ முறுவல் பரவையார் தம் மாளிகையில் புகத் தாமும்உளம் மன்னிய தம் பெருமானார் தம்மை வணங்கி உவந்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

55

வந்து பரவைப் பிராட் டியார் மகிழ வைகி மருவும் நாள்அந்தண் ஆரூர் மருங்கு அணிய கோயில் பலவும் அணைந்து இறைஞ்சிச்சிந்தை மகிழ விருப் பினொடும் தெய்வப் பெருமாள் திருவாரூர்முந்தி வணங்கி இனிது இருந்தார் முனைப் பாடியார் தம் காவலனார்.
சொற்பிரிப்பு
வந்து பரவைப் பிராட்டியார் மகிழ வைகி மருவும் நாள்அந்தண் ஆரூர் மருங்கு அணிய கோயில் பலவும் அணைந்து இறைஞ்சிச்சிந்தை மகிழ விருப்பினொடும் தெய்வப் பெருமாள் திருஆரூர்முந்தி வணங்கி இனிது இருந்தார் முனைப்பாடியர் தம் காவலனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

56

பல நாள் அமர்வார் பரமர் திரு அருளால் அங்கு நின்றும் போய்ச்சிலை மா மேரு வீரனார் திரு நன்னிலத்துச் சென்று எய்திவலமாக வந்து கோயிலின் உள் வணங்கி மகிழ்ந்து பாடினார்தலமார்கின்ற தண் இயல் வெம்மை யினான் என்னும் தமிழ் மாலை.
சொற்பிரிப்பு
பலநாள் அமர்வார் பரமர் திரு அருளால் அங்கு நின்றும் போய்ச்சிலைமா மேரு வீரனார் திருநன்னிலத்துச் சென்று எய்திவலமா வந்து கோயிலின் உள் வணங்கி மகிழ்ந்து பாடினார்தலமார்கின்ற தண்ணியல் வெம்மையினான் என்னும் தமிழ்மாலை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

57

பாடி அங்கு வைகிய பின் பரமர் வீழி மிழலையினில்நீடு மறையால் மேம்பட்ட அந்தண் ஆளர் நிறைந்து ஈண்டிநாடு மகிழ அவ்அளவு நடைக் காவணம் பாவாடை உடன்மாடு கதலி பூகம் நிரை மல்க மணித்தோரணம் நிரைத்து.
சொற்பிரிப்பு
பாடி அங்கு வைகிய பின் பரமர் வீழி மிழலையினில்நீடு மறையால் மேம்பட்ட அந்தணாளர் நிறைந்து ஈண்டிநாடு மகிழ அவ்வளவு நடைக் காவணம் பாவாடை உடன்மாடு கதலி பூகம் நிரை மல்க மணித்தோரணம் நிரைத்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

58

வந்து நம்பி தம்மை எதிர் கொண்டு புக்கார் மற்றவரும்சிந்தை மலர்ந்து திரு வீழிமிழலை இறைஞ்சிச் சேண் விசும்பின்முந்தை இழிந்த மொய் ஒளிசேர் கோயில் தன்னை முன்வணங்கிபந்தம் அறுக்கும் தம் பெருமான் பாதம் பரவிப் பணிகின்றார்.
சொற்பிரிப்பு
வந்து நம்பி தம்மை எதிர் கொண்டு புக்கார்; மற்றவரும்சிந்தை மலர்ந்து திருவீழி மிழலை இறைஞ்சிச் சேண் விசும்பின்முந்தை இழிந்த மொய்ஒளி சேர் கோயில் தன்னை முன் வணங்கிப்பந்தம் அறுக்கும் தம்பெருமான் பாதம் பரவிப் பணிகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

59

படங்கொள் அரவில் துயில் வோனும் பதுமத் தோனும் பரவியவிடங்கன் விண்ணேர் பெருமானை விரவும் புளகம் உடன் பரவிஅடங்கல் வீழி கொண்டு இருந்தீர் அடியேனுக்கும் அருளும் எனத்தடம்கொள் செஞ்சொல் தமிழ் மாலைசாத்தி அங்குச் சாரும்நாள்.
சொற்பிரிப்பு
படங்கொள் அரவில் துயில்வோனும் பதுமத்தோனும் பரவு அரியவிடங்கன் விண்ணோர் பெருமானை விரவும் புளகம் உடன் பரவி“அடங்கல் வீழி கொண்டு இருந்தீர் அடியேனுக்கும் அருளும்” எனத்தடங்கொள் செஞ்சொல் தமிழ்மாலை சாத்தி அங்குச் சாரும் நாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

60

வாசி அறிந்து காசு அளிக்க வல்ல மிழலை வாணர்பால்தேசு மிக்க திருஅருள் முன் பெற்று திருவாஞ்சியத்து அடிகள்பாசம் அறுத்து ஆட்கொள்ளும் தாள்பணிந்து பொருவனார் என்னும்மாசில் பதிகம் பாடி அமர்ந்து அரிசில்கரைப் புத்தூர் அணைந்தார்.
சொற்பிரிப்பு
வாசி அறிந்து காசு அளிக்க வல்ல மிழலை வாணர்பால்தேசு மிக்க திருஅருள் முன் பெற்றுத் திருவாஞ்சியத்து அடிகள்பாசம் அறுத்து ஆட்கொள்ளும் தாள் பணிந்து “பொருவனார்” என்னும்ஆசில் பதிகம் பாடி அமர்ந்து அரிசில் கரைப்புத்தூர் அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

61

செழுநீர் நறையூர் நிலவு திருச் சித்தீச்சரமும் பணிந்து ஏத்திவிழுநீர் மையினில் பெரும் தொண்டர் விருப்பின் ஓடும் எதிர்கொள்ளமழுவோடு இளமான் கரதலத்தில் உடையார் திருப் புத்தூர் வணங்கிதொழுநீர் மையினில் துதித்து ஏத்தித் தொண்டர்சூழ உறையும் நாள்.
சொற்பிரிப்பு
செழுநீர் நறையூர் நிலவு திருச்சித்தீச்சரமும் பணிந்து ஏத்திவிழு நீர்மையினில் பெருந்தொண்டர் விருப்பினோடும் எதிர்கொள்ளமழுவோடு இளமான் கரதலத்தில் உடையார் திருப்புத்தூர் வணங்கித்தொழு நீர்மையினில் துதித்து ஏத்தித் தொண்டர் சூழ உறையும் நாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

62

புனிதனார் முன் புகழ்த் துணையார்க்கு அருளும் திறமும் போற்றிசைத்துமுனிவர் போற்ற எழுந்து அருளிமூரி வெள்ளக் கங்கையினில்பனிவெண் திங்கள்அணி சடையார் பதிகள் பலவும் பணிந்து போந்துஇனிய நினைவில் எய்தினார் இறைவர் திருவா வடு துறையில்.
சொற்பிரிப்பு
புனிதனார் முன் புகழ்த்துணையார்க்கு அருளும் திறமும் போற்றிசைத்துமுனிவர் போற்ற எழுந்தருளி மூரி வெள்ளக் கங்கையினில்பனிவெண் திங்கள் அணிசடையார் பதிகள் பலவும் பணிந்து போந்துஇனிய நினைவில் எய்தினார் இறைவர் திருஆவடுதுறையில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

63

விளங்கும் திருவாவடு துறையில் மேயார் கோயில் புடைவலம் கொண்டுஉளம் கொண்டு உருகும் அன்பினுடன் உள்புக்கு இறைஞ்சி ஏத்துவார்வளம் கொள் பதிகம் மறையவன் என்று எடுத்து வளவன் செங்கணான்தளம் கொள் பிறப்பும் சிறப்பித்துத் தமிழ்சொல் மாலை சாத்தினார்.
சொற்பிரிப்பு
விளங்கும் திருஆவடுதுறையில் மேயார் கோயில் புடை வலங்கொண்டுஉளங்கொண்டு உருகும் அன்பின் உடன் உள்புக்கு இறைஞ்சி ஏத்துவார்வளங்கொள் பதிகம் மறையவன் என்று எடுத்து வளவன் செங்கணான்தளங்கொள் பிறப்பும் சிறப்பித்துத் தமிழ்ச்சொல் மாலை சாத்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

64

சாத்தி அங்கு வைகு நாள் தயங்கும் அன்பருடன் கூடப்பேர்த்தும் இறைஞ்சி அருள் பெற்றுப் பெண்ணோர் பாகத்து அண்ணலார்தீர்த்தப் பொன்னித் தென் கரைமேல் திகழும் பதிகள் பல பணிந்துமூர்த்தியார் தம்இடை மருதை அடைந்தார் முனைப் பாடித் தலைவர்.
சொற்பிரிப்பு
சாத்தி அங்கு வைகும்நாள் தயங்கும் அன்பர் உடன்கூடப்பேர்த்தும் இறைஞ்சி அருள்பெற்றுப் பெண் ஓர் பாகத்து அண்ணலார்தீர்த்தப் பொன்னித் தென்கரை மேல் திகழும் பதிகள் பல பணிந்துமூர்த்தியார் தம் இடைமருதை அடைந்தார் முனைப்பாடித் தலைவர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

65

மன்னு மருதின் அமர்ந்த வரை வணங்கி மதுரச்சொல் மலர்கள்பன்னிப் புனைந்து பணிந்து ஏத்திப் பரவிப்போந்து தொண்டர் உடன்அந்நல் பதியில் இருந்து அகல்வார் அரனார் திருநாகேச்சரத்தைமுன்னி புக்கு வலம் கொண்டு முதல்வர் திருத்தாள் வணங்கினார்.
சொற்பிரிப்பு
மன்னு மருதின் அமர்ந்தவரை வணங்கி மதுரச் சொல்மலர்கள்பன்னிப் புனைந்து பணிந்து ஏத்திப் பரவிப் போந்து தொண்டருடன்அந்நல் பதியில் இருந்து அகல்வார் அரனார் திருநாகேச்சரத்தைமுன்னிப் புக்கு வலங்கொண்டு முதல்வர் திருத்தாள் வணங்கினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

66

பெருகும் பதிகம் பிறைஅணி வாள் நுதலாள் பாடிப்பெயர்ந்து நிறைதிருவின் மலியும் சிவபுரத்துத் தேவர் பெருமான் கழல் வணங்கிஉருகும் சிந்தை உடன் போந்தே உமையோர் பாகர் தாம்மகிழ்ந்துமருவும் பதிகள் பிறபணிந்து கலைய நல்லூர் மருங்கு அணைந்தார்.
சொற்பிரிப்பு
பெருகும் பதிகம் பிறைஅணி வாள் நுதலாள் பாடிப் பெயர்ந்து, நிறைதிருவின் மலியும் சிவபுரத்துத் தேவர் பெருமான் கழல் வணங்கிஉருகும் சிந்தை உடன் போந்தே, உமையோர் பாகர் தாம் மகிழ்ந்துமருவும் பதிகள் பிறபணிந்து கலய நல்லூர் மருங்கு அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

67

செம்மை மறையோர் திருக்கலைய நல்லூர் இறைவர் சேவடிக் கீழ்மும்மை வணக்கம் பெற இறைஞ்சி முன்பு பரவித்தொழுது எழுவார்கொம்மை மருவு குரும்பை முலை உமையாள் என்னும் திருப்பதிகம்மெய்ம்மைப் புராணம் பலவும் மிகச் சிறப்பித்து இசையின் விளம்பினார்.
சொற்பிரிப்பு
செம்மை மறையோர் திருக்கலய நல்லூர் இறைவர் சேவடிக் கீழ்மும்மை வணக்கம் பெற இறைஞ்சி முன்பு பரவித் தொழுது எழுவார்கொம்மை மருவு குரும்பைமுலை உமையாள் என்னும் திருப்பதிகம்மெய்ம்மைப் புராணம் பலவும் மிகச் சிறப்பித்து இசையின் விளம்பினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

68

அங்கு நின்று திருக்குட மூக்கு அணைந்து பணிந்து பாடிப்போய்மங்கைப்பாகர் வலம் சுழியை மருவிப் பெருகும் அன்பு உருகத்தங்கு காதல் உடன் வணங்கித் தமிழால் பரசி அரசினுக்குத்திங்கள் முடியார் அடி அளித்த திருநல்லூரைச் சென்று அணைந்தார்.
சொற்பிரிப்பு
அங்கு நின்று திருக்குடமூக்கு அணைந்து பணிந்து பாடிப்போய்மங்கை பாகர் வலஞ்சுழியை மருவிப் பெருகும் அன்பு உருகத்தங்கு காதலுடன் வணங்கித் தமிழால் பரசி, அரசினுக்குத்திங்கள் முடியார் அடிஅளித்த திருநல்லூரைச் சென்று அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

69

நல்லூர் இறைவர் கழல் போற்றி நவின்று நடுவர் நம்பர்பதிஎல்லாம் இறைஞ்சி ஏத்திப் போந்து இசையால் பரவும் தம்உடையசொல்லூ தியமா அணிந்தவர் தம் சோற்றுத்துறையின் மருங்கு எய்திஅல்லூர் கண்டர் கோயிலின் உள்அடைந்து வலம் கொண்டு அடிபணிவார்.
சொற்பிரிப்பு
நல்லூர் இறைவர் கழல் போற்றி நவின்று, நடுவு, நம்பர் பதிஎல்லாம் இறைஞ்சி ஏத்திப் போந்து, இசையால் பரவும் தம்முடையசொல் ஊதியமா அணிந்தவர் தம் சோற்றுத் துறையின் மருங்கு எய்திஅல்ஊர் கண்டர் கோயிலின் உள் அடைந்து வலங்கொண்டு அடிபணிவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

70

அழல்நீர் ஒழுகி அனைய எனும் அம்சொல் பதிகம் எடுத்துஅருளிக்கழல் நீடிய அன்பினில் போற்றும் காதல் கூரப் பரவியபின்கெழு நீர்மையினில் அருள் பெற்றுப் போந்து பரவையார் கேள்வர்முழுநீறு அணிவார் அமர்ந்த பதி பலவும் பணிந்து முன்னுவார்.
சொற்பிரிப்பு
அழல் நீர் ஒழுகி அனைய எனும் அஞ்சொல் பதிகம் எடுத்தருளிக்கழல் நீடிய அன்பினில் போற்றும் காதல் கூரப் பரவியபின்கெழு நீர்மையினில் அருள்பெற்றுப் போந்து பரவையார் கேள்வர்முழுநீறு அணிவார் அமர்ந்த பதி பலவும் பணிந்து முன்னுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

71

தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திரு ஐயாறு அதனைமேவி வணங்கிப் பூந்துருத்தி விமலர் பாதம் தொழுது இறைஞ்சிச்சேவில் வருவார் திருஆலம் பொழிலில் சேர்ந்து தாழ்ந்து இரவுபாவு சயனத்து அமர்ந்தருளிப் பள்ளி கொள்ளக் கனவின்கண்.
சொற்பிரிப்பு
தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திருஐயாறு அதனைமேவி வணங்கிப் பூந்துருத்திவிமலர் பாதம் தொழுது இறைஞ்சிச்சேவில் வருவார் திருஆலம் பொழிலில் சேர்ந்து தாழ்ந்து இரவுபாவு சயனத்து அமர்ந்தருளிப் பள்ளி கொள்ளக் கனவின்கண்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

72

மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந் தாயோ என்றுகுழகு ஆகியதம் கோலம் எதிர்காட்டி அருளக் குறித்து உணர்ந்துநிழலார் சோலைக் கரைப் பொன்னி வடபால் ஏறி நெடுமாடம்அழ கார் வீதி மழபாடி அணைந்தார் நம்பி ஆரூரர்.
சொற்பிரிப்பு
மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ என்றுகுழகு ஆகிய தம் கோலம் எதிர் காட்டி அருளக், குறித்து உணர்ந்துநிழல் ஆர் சோலைக் கரைப் பொன்னி வடபால் ஏறி நெடுமாடம்அழகுஆர் வீதி மழபாடி அணைந்தார் நம்பி ஆரூரர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

73

அணைந்து திருக்கோபுரம் இறைஞ்சி அன்பர் சூழ உடன் புகுந்துபணம்கொள் அரவம் அணிந்தார் முன்பணிந்து வீழ்ந்து பரம் கருணைக்குணம்கொள் அருளின் திறம் போற்றிக் கொண்ட புளகத்துடன் உருகிப்புணர்ந்த இசையால் திருப்பதிகம் பொன்னார் மேனி என்று எடுத்து.
சொற்பிரிப்பு
அணைந்து திருக்கோபுரம் இறைஞ்சி அன்பர் சூழ உடன்புகுந்துபணங்கொள் அரவம் அணிந்தார் முன் பணிந்து வீழ்ந்து பரங்கருணைக்குணங்கொள் அருளின் திறம்போற்றிக் கொண்ட புளகத்து உடனுருகிப்புணர்ந்த இசையால் திருப்பதிகம் பொன்ஆர் மேனி என்று எடுத்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

74

அன்னே உன்னை அல்லல் யான் ஆரை நினைக்கேன் என ஏத்திதன்னேர் இல்லாப் பதிக மலர் சாத்தித் தொழுது புறம்பு அணைந்துமன்னும் பதியில் சில நாள்கள் வைகித் தொண்டர் உடன் மகிழ்ந்துபொன்னிக் கரையின் இரு மருங்கும் பணிந்து மேல் பால் போதுவார்.
சொற்பிரிப்பு
அன்னே உன்னை அல்லால் யான் ஆரை நினைக்கேன் என ஏத்தித்தன் நேர் இல்லாப் பதிகமலர் சாத்தித் தொழுது புறம்பு அணைந்துமன்னும் பதியில் சிலநாட்கள் வைகித் தொண்டருடன் மகிழ்ந்துபொன்னிக் கரையின் இருமருங்கும் பணிந்து மேல்பால் போதுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

75

செய்ய சடையார் திரு ஆனைக் காவில் அணைந்து திருத் தொண்டர்எய்த முன் வந்து எதிர் கொள்ள இறைஞ்சிக் கோயில் உள் புகுந்தேஐயர் கமலச் சேவடிக் கீழ் ஆர்வம் பெருக விழுந்து எழுந்துமெய்யும் முகிழ்ப்பக் கண் பொழி நீர் வெள்ளம் பரப்ப விம்முவார்.
சொற்பிரிப்பு
செய்ய சடையார் திருஆனைக்காவில் அணைந்து திருத்தொண்டர்எய்த முன் வந்து எதிர்கொள்ள இறைஞ்சிக் கோயில் உள் புகுந்தேஐயர் கமலச் சேவடிக்கீழ் ஆர்வம் பெருக விழுந்து எழுந்துமெய்யும் முகிழ்ப்பக் கண்பொழி நீர் வெள்ளம் பரப்ப விம்முவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

76

மறைகளாய நான்கும் என மலர்ந்த செம் சொல் தமிழ் பதிகம்நிறையும் காதல் உடன் எடுத்து நிலவும் அன்பர் தமை நோக்கிஇறையும் பணி வார் எம்மையும் ஆள் உடையார் என்று ஏத்துவார்உறையூர்ச் சோழன் மணி யாரம் சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி.
சொற்பிரிப்பு
மறைகள் ஆய நான்கும் என மலர்ந்த செஞ்சொல் தமிழ்ப்பதிகம்நிறையும் காதலுடன் எடுத்து நிலவும் அன்பர் தமைநோக்கிஇறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று என்று ஏத்துவார்உறையூர்ச் சோழன் மணி ஆரம் சாத்தும் திறத்தை உணர்ந்தருளி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

77

வளவர் பெருமான் மணி யாரம் சாத்திக் கொண்டு வரும் பொன்னிக்கிளரும் திரை நீர் மூழ் குதலும் வழுவிப் போகக் கேதமுறஅளவில் திருமஞ்சனக் குடத்துள் அது புக்கு ஆட்ட அணிந்து அருளித்தளரும் அவனுக்கு அருள் புரிந்த தன்மை சிறக்கச் சாற் றினார்.
சொற்பிரிப்பு
வளவர் பெருமான் மணிஆரம் சாத்திக் கொண்டு வரும் பொன்னிக்கிளரும் திரைநீர் மூழ்குதலும் வழுவிப் போகக் கேதம் உறஅளவில் திருமஞ்சனக் குடத்துள் அது புக்கு ஆட்ட அணிந்தருளித்தளரும் அவனுக்கு அருள்புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

78

சாற்றி அங்குத் தங்கு நாள் தயங்கும் பவளத் திரு மேனிநீற்றர் கோயில் எம் மருங்கும் சென்று தாழ்ந்து நிறை விருப்பால்போற்றி அங்கு நின்றும் போய்ப் பொருவில் அன்பர் மருவிய தொண்டுஆற்றும் பெருமை திருப்பாச்சில் ஆச்சிராமம் சென்று அடைந்தார்.
சொற்பிரிப்பு
சாற்றி அங்குத் தங்கும் நாள் தயங்கும் பவளத் திருமேனிநீற்றர் கோயில் எம்மருங்கும் சென்று தாழ்ந்து நிறைவிருப்பால்போற்றி அங்கு நின்றும்போய்ப் பொருவில் அன்பர் மருவிய தொண்டுஆற்றும் பெருமைத் திருப்பாச்சில் ஆச்சிராமம் சென்று அடைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

79

சென்று திருக் கோபுரம் இறைஞ்சித் தேவர் மலிந்த திருந்து மணிமுன்றில் வலம் கொண்டு உள்அணைந்து முதல்வர் முன்னம் வீழ்ந்து இறைஞ்சிநன்று பெருகும் பொருள் காதல் நயப்புப் பெருக நாதர் எதிர்நின்று பரவி நினைந்த பொருள் அருளாது ஒழிய நேர் நின்று.
சொற்பிரிப்பு
சென்று திருக்கோபுரம் இறைஞ்சித் தேவர் மலிந்த திருந்து மணிமுன்றில் வலங்கொண்டு உள் அணைந்து முதல்வர் முன்னர் வீழ்ந்திறைஞ்சிநன்று பெருகும் பொருள் காதல் நயப்புப் பெருக நாதர் எதிர்நின்று பரவி நினைந்தபொருள் அருளாது ஒழிய நேர் நின்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

80

அன்பு நீங்கா அச்சம் உடன் அடுத்த திருத்தோழமைப் பணியால்பொன் பெறாத திருஉள்ளம் புழுங்க அழுங்கிப் புறம்பு ஒருபால்முன்பு நின்ற திருத்தொண்டர் முகப்பே முறைப்பாடு உடையார்போல்என்பு கரைந்து பிரானார் மற்று இலையோ என்ன எடுக்கின்றார்.
சொற்பிரிப்பு
அன்பு நீங்கா அச்சம் உடன் அடுத்த திருத்தோழமைப் பணியால்பொன் பெறாத திருஉள்ளம் புழுங்க அழுங்கிப் புறம்பு ஒருபால்முன்பு நின்ற திருத்தொண்டர் முகப்பே முறைப்பாடு உடையார் போல்என்பு கரைந்து பிரானார் மற்று இலையோ என்ன எடுக்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

81

நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி நிலத்து இடைப்புலம் கெழும் பிறப்பால்உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்திஎத்தனை அருளாது ஒழியினும் பிரானார் இவர் அலாது இல்லையோ என்பார்வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என வழுத்தினார் வழித்தொண்டர்.
சொற்பிரிப்பு
நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி நிலத்து இடைப் புலங்கெழும் பிறப்பால்உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி“எத்தனை அருளாது ஒழியினும் பிரானார் இவர் அலாது இல்லையோ” என்பார்“வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும்” என வழுத்தினார் வழித் தொண்டர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

82

இவ்வகை பரவித் திருக்கடைக் காப்பும் ஏசின வல்ல என்று இசைப்பமெய்வகை விரும்பு தம் பெருமானார் விழுநிதிக் குவை அளித்து அருளமைவளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அப்பதி இடை வைகிஎவ்வகை மருங்கும் இறைவர் தம்பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சிலநாள்.
சொற்பிரிப்பு
இவ்வகை பரவித் திருக்கடைக் காப்பும் “ஏசின அல்ல” என்று இசைப்பமெய்வகை விரும்பு தம் பெருமானார் விழுநிதிக் குவை அளித்து அருளமைவளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அப்பதி இடை வைகிஎவ்வகை மருங்கும் இறைவர் தம் பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சிலநாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

83

அப்பதி நீங்கி அருளினால் போகி ஆவின் அஞ்சு ஆடுவார் நீடும்எப்பெயர்ப் பதியும் இருமருங்கு இறைஞ்சி இறைவர் பைஞ் ஞீலியை எய்திப்பைப்பணி அணிவார் கோபுரம் இறைஞ்சிப் பாங்கு அமர் புடை வலம்கொண்டுதுப்புஉறழ் வேணியார் கழல் தொழுவார் தோன்றும் கங் காளரைக் கண்டார்.
சொற்பிரிப்பு
அப்பதி நீங்கி அருளினால் போகி ஆவின் அஞ்சு ஆடுவார் நீடும்எப்பெயர்ப் பதியும் இருமருங்கு இறைஞ்சி இறைவர் பைஞ்ஞீலியை எய்திப்பைப்பணி அணிவார் கோபுரம் இறைஞ்சிப் பாங்கு அமர் புடைவலம் கொண்டுதுப்பு உறழ் வேணியார் கழல் தொழுவார் தோன்று கங்காளரைக் கண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

84

கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம் பொழிதரக்கை குவித்து இறைஞ்சிவண்டறை குழலார் மனம் கவர் பலிக்கு வரும் திருவடிவு கண்டவர்கள்கொண்டதுஓர் மயலால் வினவு கூற்று ஆகக் குலவுசொல் கார்உலாவிய என்றுஅண்டர் நாயகரைப் பரவி ஆரணிய விடங்கராம் அருந் தமிழ் புனைந்தார்.
சொற்பிரிப்பு
கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம் பொழிதரக் கைகுவித்து இறைஞ்சிவண்டு அறை குழலார் மனங்கவர் பலிக்கு வரும் திருவடிவு கண்டவர்கள்கொண்டது ஓர் மயலால் வினவு கூற்று ஆகக் குலவுசொல் “கார் உலாவிய” என்றுஅண்டர் நாயகரைப் பரவி, “ஆரணிய விடங்கராம்” அருந்தமிழ் புனைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

85

பரவி அப்பதிகத் திருக்கடைக் காப்புச் சாத்தி முன்பணிந்து அருள் பெற்றுக்கரவில் அன்பர்கள் தம்கூட்டமும் தொழுது கலந்துஇனிது இருந்து போந்து அருளிவிரவிய ஈங்கோய் மலை முதல் ஆக விமலர் தம் பதி பல வணங்கிக்குரவலர் சோலை அணி திருப் பாண்டிக் கொடு முடி அணைந்தனர் கொங்கில்.
சொற்பிரிப்பு
பரவி அப் பதிகத் திருக்கடைக் காப்புச் சாத்தி முன் பணிந்து அருள் பெற்றுக்கரவில் அன்பர்கள் தம் கூட்டமும் தொழுது கலந்து இனிது இருந்து போந்தருளிவிரவிய ஈங்கோய் மலைமுதல் ஆக விமலர் தம் பதி பல வணங்கிக்குரவு அலர் சோலை அணி திருப்பாண்டிக் கொடுமுடி அணைந்தனர் கொங்கில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

86

கொங்கினில் பொன்னித் தென் கரைக்கறையூர்க் கொடுமுடிக் கோயில் முன் குறுகிச்சங்கவெண் குழையார் உழை வலம் செய்து சார்ந்துஅடி அன்பினில் தாழ்ந்துபொங்கிய வேட்கை பெருகிடத் தொழுது புனிதர் பொன் மேனியை நோக்கிஇங்கு இவர்தம்மை மறக்க ஒண்ணாது என்று எழுந்த மெய்க்குறிப்பினில் எடுப்ப.
சொற்பிரிப்பு
கொங்கினில் பொன்னித் தென்கரைக் கறையூர்க் கொடுமுடிக் கோயில் முன் குறுகிச்சங்க வெண் குழையார் உழை வலம் செய்து சார்ந்து அடி அன்பினில் தாழ்ந்துபொங்கிய வேட்கை பெருகிடத் தொழுது புனிதர் பொன் மேனியை நோக்கி“இங்கு இவர் தம்மை மறக்க ஒண்ணாது என்று” எழுந்தமெய்க் குறிப்பினில் எடுப்ப.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

87

அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம அஞ்சு எழுத்து அறியஎப் பொழுதும்எண்ணிய நாவே இன்சுவை பெருக இடைஅறாது இயம்பும் என்றும் இதனைத்திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்றுப் பற்றுஇலேன் எனச் செழும் தமிழால்நண்ணிய அன்பில் பிணிப்பு உற நவின்றார் நமச்சிவாயத் திருப் பதிகம்.
சொற்பிரிப்பு
“அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம அஞ்செழுத்து அறிய எப்பொழுதும்எண்ணிய நாவே இன்சுவை பெருக இடை அறாது இயம்பும்” என்று இதனைத்திண்ணிய உணர்வில் கொள்பவர் “மற்றுப் பற்று இலேன்” எனச் செழுந்தமிழால்நண்ணிய அன்பில் பிணிப்புற நவின்றார் நமச்சிவாயத் திருப்பதிகம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

88

உலகுஎலாம் உய்ய உறுதியாம் பதிகம் உரைத்து மெய் உணர்வு அறாஒருமைநிலவிய சிந்தை உடன் திருஅருளால் நீங்குவார் பாங்கு நல் பதிகள்பலவும் முன் பணிந்து பரமர்தாள் போற்றிப் போந்து தண்பனி மலர்ப்படப்பைக்குலவும் அக்கொங்கில் காஞ்சிவாய்ப் பேரூர் குறு கினார் முறுகும் ஆதரவால்.
சொற்பிரிப்பு
உலகெலாம் உய்ய உறுதியாம் பதிகம் உரைத்து மெய் உணர்வு அறா ஒருமைநிலவிய சிந்தை உடன் திருவருளால் நீங்குவார் பாங்குநல் பதிகள்பலவும் முன் பணிந்து பரமர் தாள் போற்றிப் போந்து தண் பனிமலர்ப் படப்பைக்குலவும் மீ கொங்கில் காஞ்சிவாய்ப் பேரூர் குறுகினார் முறுகும் ஆதரவால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

89

அத் திருப்பதியை அணைந்து முன் ஆண்டவர் கோயில் உள் புகுந்துமெய்த்தவர் சூழ வலம் கொண்டு முன்பு மேவுவார் தம்எதிர் விளங்கநித்தனார் தில்லை மன்றுள் நின்று ஆடல் நீடிய கோலம் நேர்காட்டக்கைத்தலம் குவித்துக் கண்கள் ஆனந்தக் கலுழி நீர் பொழிதரக் கண்டார்.
சொற்பிரிப்பு
அத்திருப்பதியை அணைந்து முன் தம்மை ஆண்டவர் கோயில் உள் புகுந்துமெய்த்தவர் சூழ வலங்கொண்டு முன்பு மேவுவார் தம் எதிர் விளங்கநித்தனார் தில்லை மன்றுள் நின்று ஆடல் நீடிய கோலம் நேர் காட்டக்கைத்தலம் குவித்துக் கண்கள் ஆனந்தக் கலுழி நீர் பொழிதரக் கண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

90

காண்டலும் தொழுது வீழ்ந்து உடன் எழுந்து கரைஇல் அன்பு என்பினை உருக்கப்பூண்ட ஐம்புலனில் புலப்படா இன்பம் புணர்ந்து மெய் உணர்வினில் பொங்கத்தாண்டவம் புரியும் தம் பிரானாரைத் தலைப்படக் கிடைத்த பின் சைவஆண்தகையாருக்கு அடுத்த அந்நிலைமை விளைவை யார்அளவு அறிந்து உரைப்பார்.
சொற்பிரிப்பு
காண்டலும் தொழுது வீழ்ந்து உடன் எழுந்து கரையில் அன்பு என்பினை உருக்கப்பூண்ட ஐம்புலனில் புலப்படா இன்பம் புணர்ந்துமெய் உணர்வினில் பொங்கத்தாண்டவம் புரியும் தம்பிரானாரைத் தலைப்படக் கிடைத்த பின் சைவஆண்டகையாருக்கு அடுத்த அந்நிலைமை விளைவையார் அளவு அறிந்து உரைப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

91

அந் நிலை நிகழ்ந்த ஆரருள் பெற்ற அன்பனார் இன்ப வெள்ளத்துமன்னிய பாடல் மகிழ்ந்து உடன் பரவி வளம்பதி அதன் இடை மருவிபொன் மணி மன்றுள் எடுத்த சேவடியார் புரி நடம் கும்பிடப் பெற்றால்என் இனிப்புறம் போய் எய்துவது என்று மீண்டு எழுந்து அருளுவதற்கு எழுவார்.
சொற்பிரிப்பு
அந்நிலை நிகழ்ந்த ஆர் அருள் பெற்ற அன்பனார் இன்ப வெள்ளத்துமன்னிய பாடல் மகிழ்ந்துடன் பரவி வளம்பதி அதனிடை மருவி“பொன் மணி மன்றுள் எடுத்த சேவடியார் புரிநடம் கும்பிடப் பெற்றால்என் இனிப் புறம் போய் எய்துவது” என்று மீண்டு எழுந்து அருளுதற்கு எழுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

92

ஆயிடை நீங்கி அருளினால் செல் வார் அரு வரைச் சுரங்களும் பிறவும்பாயும் நீர் நதியும் பலபல கடந்து பரமர் தம் பதிபல பணிந்துமேய வண் தமிழால் விருப் பொடும் பரவி வெஞ்சமாக் கூடலும் பணிந்துசேயிடை கழியப் போந்து வந்து அடைந்தார் தென் திசை கற்குடி மலையில்.
சொற்பிரிப்பு
ஆயிடை நீங்கி அருளினால் செல்வார் அருவரைச் சுரங்களும் பிறவும்பாயு நீர் நதியும் பலபல கடந்து பரமர் தம் பதி பல பணிந்துமேய வண் தமிழால் விருப்பொடும் பரவி வெஞ்சமாக் கூடலும் பணிந்துசேயிடை கழியப் போந்து வந்து அடைந்தார் தென்திசைக் கற்குடி மலையில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

93

வீடு தரும் இக் கல் குடியில் விழுமி யாரைப் பணிந்து இறைஞ்சிநீடு விருப் பில் திருப் பதிகம் நிறைந்த சிந்தை உடன் பாடிப்பாடும் விருப்பில் தொண்ட ருடன் பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சிதேடும் இருவர் காண்ப அரியார் திரு வாறை மேல் சென்று அணைந்தார்.
சொற்பிரிப்பு
வீடு தரும் இக்கற்குடியில் விழுமியாரைப் பணிந்து இறைஞ்சிநீடு விருப்பில் திருப்பதிகம் நிறைந்த சிந்தையுடன் பாடிப்பாடும் விருப்பில் தொண்டருடன் பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சித்தேடும் இருவர் காண்பு அரியார் திருஆறை மேல்தளி சென்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

94

செம்பொன் மேரு சிலை வளைத்த சிவனார் ஆறைமேல் தளியில்நம்பர்பாதம் பணிந்து இறைஞ்சி நாளும் மகிழ்வார்க்கு அருள் கூடஉம்பர் போற்றும் தானங்கள் பலவும் பணிந்து போந்து அணைவார்இம்பர் வாழ இன் னம்பர் நகரைச் சேர எய்தினார்.
சொற்பிரிப்பு
செம்பொன் மேருச் சிலை வளைத்த சிவனார் ஆறை மேற்றளியில்நம்பர் பாதம் பணிந்து இறைஞ்சி நாளும் மகிழ்வார்க்கு அருள் கூடஉம்பர் போற்றும் தானங்கள் பலவும் பணிந்து போந்து அணைவார்இம்பர் வாழ இன்னம்பர் நகரைச் சேர எய்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

95

ஏரின் மருவும் இன்னம்பர் மகிழ்ந்த ஈசர் கழல் வணங்கிஆரும் அன்பில் பணிந்து ஏத்தி ஆராஅருளால் அங்கு அமர்வார்போரின் மலியும் கரிஉரித்தார் மருவும் புறம் பயம் போற்றச்சேரும் உள்ளம் மிக்குஎழ மெய்ப் பதிகம் பாடிச் செல்கின்றார்.
சொற்பிரிப்பு
ஏரின் மருவும் இன்னம்பர் மகிழ்ந்த ஈசர் கழல் வணங்கிஆரும் அன்பில் பணிந்து ஏத்தி ஆரா அருளால் அங்கு அமர்வார்போரின் மலியும் கரி உரித்தார் மருவும் புறம்பயம் போற்றச்சேரும் உள்ளம் மிக்கு எழ மெய்ப் பதிகம் பாடிச் செல்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

96

அங்கம் ஓதி ஓர் ஆறை மேல்தளி என்று எடுத்து அமர் காதலில்பொங்கு செந் தமிழால் விரும்பு புறம் பயந் தொழப் போதும் என்றுஎங்கும் மன்னிய இன் இசை பதிகம் புணைந்து உடன் எய் தினார்திங்கள் சூடிய செல் வர் மேவும்திருப் புறம் பயம் சேரவே.
சொற்பிரிப்பு
“அங்கம் ஓதி ஓர் ஆறை மேற்றளி” என்று எடுத்து அமர் காதலில்பொங்கு செந்தமிழால் விரும்பு “புறம்பயம் தொழப் போதும்” என்றுஎங்கும் மன்னிய இன்இசைப் பதிகம் புனைந்து உடன் எய்தினார்திங்கள் சூடிய செல்வர் மேவும் திருப்புறம்பயம் சேரவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

97

அப் பதிக் கண் அமர்ந்த தொண்டரும் அன்று வெண்ணெய் நல் ஊரினில்ஒப் பரும் தனி வேதியன் பழ ஓலை காட்டி நின்று ஆண்டவர்இப்பதிக் கண் வந்து எய்த என்ன தவங்கள் என்று எதிர் கொள்ளவேமுப் புரங்கள் எரித்த சேவகர் கோயில்வாயி லின் முன் னினார்.
சொற்பிரிப்பு
அப்பதிக்கண் அமர்ந்த தொண்டரும் “அன்று வெண்ணெய் நல்லூரினில்ஒப்பரும் தனி வேதியன் பழ ஓலை காட்டி நின்று ஆண்டவர்இப்பதிக்கண் வந்து எய்த என்ன தவங்கள்” என்று எதிர் கொள்ளவேமுப்புரங்கள் எரித்த சேவகர் கோயில் வாயிலின் முன்னினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

98

நீடு கோபுரம் முன்பு இறைஞ்சி நிலாவு தொண்ட ரொடுள்ளணைந்துஆடல் மேவிய அண்ணலார் அடி போற்றி அஞ்சலி கோலிநின்றுஏடுஉலாம் மலர்தூவி எட்டினொடு ஐந்தும் ஆகும் உறுப்பினால்பீடு நீடு நிலத்தின் மேல் பெருகப் பணிந்து வணங்கினார்.
சொற்பிரிப்பு
நீடு கோபுரம் முன்பு இறைஞ்சி நிலாவு தொண்டரொடு உள் அணைந்துஆடல் மேவிய அண்ணலார் அடி போற்றி, அஞ்சலி கோலிநின்றுஏடுலா மலர் தூவி எட்டினொடு ஐந்தும் ஆகும் உறுப்பினால்பீடு நீடு நிலத்தின் மேல் பெருகப் பணிந்து வணங்கினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

99

அங்கு நீடு அருள்பெற்று உள் ஆர்வம் மிகப்பொழிந்து எழும் அன்பினால்பொங்கு நாள் மலர் பாதம் முன்பணிந்து ஏத்தி மீண்டும் புறத்து அணைந்துஎங்கும் ஆகி நிறைந்து நின் றவர் தாம் மகிழ்ந்த இடங் களில்தங்கு கோலம் இறைஞ் சுவார் அருள் தாவில் அன்பரோடு எய்தினார்.
சொற்பிரிப்பு
அங்கு நீடு அருள் பெற்று உள் ஆர்வம் மிகப் பொழிந்து எழும் அன்பினால்பொங்கு நாள்மலர்ப் பாதம் முன் பணிந்து ஏத்தி மீண்டும் புறத்து அணைந்துஎங்கும் ஆகி நிறைந்து நின்றவர் தாம் மகிழ்ந்த இடங்களில்தங்கு கோலம் இறைஞ்சுவார் அருள் தாவில் அன்பரோடு எய்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

100

வம்பு நீடு அலங்கல் மார்பின் வன்தொண்டர் வன்னி கொன்றைதும்பை வெள் அடம்பு திங்கள் தூயநீறு அணிந்த சென்னித்தம்பிரான் அமர்ந்த தானம் பல பல சார்ந்து தாழ்ந்துகொம் பனார் ஆடல் நீடு கூடலை யாற்றூர் சார.
சொற்பிரிப்பு
வம்பு நீடு அலங்கல் மார்பின் வன்தொண்டர் வன்னி கொன்றைதும்பை வெள் அடம்பு திங்கள் தூயநீர் அணிந்த சென்னித்தம்பிரான் அமர்ந்த தானம் பலபல சார்ந்து தாழ்ந்துகொம்பனார் ஆடல் நீடு கூடலை ஆற்றூர் சார.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

101

செப்பரும் பதியில் சேரார்திருமுது குன்றை நோக்கிஒப்பரும் புகழார் சொல்லும் ஒரு வழி உமையாளோடுமெய்ப்பரம் பொருளாய் உள்ளார் வேதியர் ஆகி நின்றார்முப்புரி நூலும் தாங்கி நம்பி ஆரூரர் முன்பு.
சொற்பிரிப்பு
செப்பரும் பதியில் சேரார் திருமுது குன்றை நோக்கிஒப்பரும் புகழார் செல்லும் ஒருவழி உமையாளோடுமெய்ப் பரம்பொருளாய் உள்ளார் வேதியர் ஆகி நின்றார்முப்புரி நூலும் தாங்கி நம்பி ஆரூரர் முன்பு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

102

நின்றவர் தம்மை நோக்கி நெகிழ்ந்த சிந்தை யராய்த் தாழ்வார்இன்றி யாம் முதுகுன்று எய்த வழி எமக்கு இயம்பும்என்னகுன்ற வில் லாளி யாரும் கூடலை யாற்றூர் ஏறச்சென்றது இவ் வழிதான் என்று செல்வழித் துணையாய்ச் செல்ல.
சொற்பிரிப்பு
நின்றவர் தம்மை நோக்கி நெகிழ்ந்த சிந்தையராய்த் தாழ்வார்இன்று யாம் முதுகுன்று எய்த வழி எமக்கு இயம்பும் என்னக்குன்றவில் ஆளி யாரும் கூடலை ஆற்றூர் ஏறச்சென்றது இவ் வழிதான் என்று செல்வழித் துணையாய்ச் செல்ல.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

103

கண்டவர் கைகள் கூப்பித் தொழுது பின் தொடர்வார்க் காணார்வண்டலர் கொன் றையாரை வடிவுடை மழு என்று ஏத்திஅண்டர் தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன் என்றுகொண்டு எழும் விருப் பினோடும் கூடலை யாற்றூர் புக்கார்.
சொற்பிரிப்பு
கண்டவர் கைகள் கூப்பித் தொழுது பின் தொடர்வார்க் காணார்வண்டுஅலர் கொன்றை யாரை வடிவு உடை மழு என்று ஏத்திஅண்டர் தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன் என்றுகொண்டு எழும் விருப்பினோடும் கூடலை ஆற்றூர் புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

104

கூடலை ஆற்றூர் மேவும் கொன்றை வார் சடை யினார்தம்பீடு யர் கோயில் புக்குப் பெருகிய ஆர்வம் பொங்கஆடகப் பொது வில் ஆடும் அறைகழல் வணங்கிப் போற்றிநீடு அருள் பெற்றுப் போந்து திருமுது குன்றில் நேர்ந்தார்.
சொற்பிரிப்பு
கூடலை ஆற்றூர் மேவும் கொன்றை வார் சடையினார் தம்பீடுயர் கோயில் புக்குப் பெருகிய ஆர்வம் பொங்கஆடகப் பொதுவில் ஆடும் அறைகழல் வணங்கிப் போற்றிநீடு அருள் பெற்றுப் போந்து திருமுதுகுன்றில் நேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

105

தட நிலைக் கோபுரத்தைத் தாழ்ந்து முன் இறைஞ்சிக் கோயில்புடை வலம் கொண்டு புக்குப் போற்றினர் தொழுது வீழ்ந்துநடம் நவில்வாரை நஞ்சி இடை எனும் செஞ்சொல்மாலைத்தொடை நிகழ் பதிகம் பாடித் தொழுதுகை சுமந்து நின்று.
சொற்பிரிப்பு
தடநிலைக் கோபுரத்தைத் தாழ்ந்து முன் இறைஞ்சிக் கோயில்புடைவலம் கொண்டு புக்குப் போற்றினர் தொழுது வீழ்ந்துநடம் நவில்வாரை நஞ்சி இடை எனும் செஞ்சொல் மாலைத்தொடை நிகழ் பதிகம் பாடித் தொழுது கை சுமந்து நின்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

106

நாதர்பால் பொருள் தாம் வேண்டி நண்ணிய வண்ணம் எல்லாம்கோதறு மனத்துள் கொண்ட குறிப் பொடும் பரவும் போதுதாது அவிழ் கொன்றை வேய்ந்தார் தரஅருள் பெறுவார் சைவவேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் வெண் பொடியும் பாட.
சொற்பிரிப்பு
நாதர்பால் பொருள் தாம் வேண்டி நண்ணிய வண்ணம் எல்லாம்கோதறு மனத்துள் கொண்ட குறிப்பொடும் பரவும் போதுதாதவிழ் கொன்றை வேய்ந்தார் தர அருள் பெறுவார் சைவவேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் வெண் பொடி யும் பாட.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

107

பனி மதிச் சடையார் தாமும் பன்னிரண் டாயிரம் பொன்நனி அருள் கொடுக்கும் ஆற்றால் நல்கிட உடைய நம்பிதனி வரும் மகிழ்ச்சி பொங்கத் தாழ்ந்து எழுந்து அருகுசென்றுகனி விடம் மிடற்றினார் முன் பின்ஒன்று கழறல் உற்றார்.
சொற்பிரிப்பு
பனிமதிச் சடையார் தாமும் பன்னிரண்டு ஆயிரம் பொன்நனிஅருள் கொடுக்கும் ஆற்றால் நல்கிட, உடைய நம்பி,தனிவரும் மகிழ்ச்சி பொங்கத் தாழ்ந்து எழுந்து அருகு சென்றுகனிவிடம் மிடற்றினார் முன் பின் ஒன்று கழறல் உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

108

அருளும் இக் கனகம் எல்லாம் அடியனேற்கு ஆரூர் உள்ளோர்மருளுற வியப்ப அங்கே வரப் பெற வேண்டும் என்னத்தெருளுற எழுந்த வாக்கால் செழு மணி முத்தாற்றில் இட்டிப்பொருளினை முழுதும் ஆரூர்க் குளத்தில் போய்க் கொள்க என்றார்.
சொற்பிரிப்பு
அருளும் இக்கனகம் எல்லாம் அடியனேற்கு ஆரூர் உள்ளோர்மருளுற வியப்ப அங்கே வரப் பெற வேண்டும் என்னத்தெருளுற எழுந்த வாக்கால் செழு மணி முத்தாற்று இட்டு இப்பொருளினை முழுதும் ஆரூர்க் குளத்தில் போய்க் கொள்க என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

109

என்று தம்பிரானார் நல்கும் இன் அருள் பெற்ற பின்னர்வன்தொண்டர் மச்சம் வெட்டிக்கைக் கொண்டு மணி முத்து ஆற்றில்பொன் திரள் எடுத்து நீருள் புகவிட்டுப் போது கின்றார்அன்று எனை வலிந்து ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன்என்று.
சொற்பிரிப்பு
என்று தம் பிரானார் நல்கும்இன்அருள் பெற்ற பின்னர்வன்தொண்டர் மச்சம் வெட்டிக்கைக்கொண்டு மணிமுத்தாற்றில்பொன்திரள் எடுத்து நீர்உள் புகவிட்டுப் போதுகின்றார்அன்று எனை வலிந்து ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன் என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

110

மேவிய காதல் தொண்டு விரவு மெய் விருத்தி பெற்றார்ஆவி யின் விருத்தி ஆன அந்தணர் புலியூர் மன்றில்காவியங் கண்டர் கூத்து கண்டு கும்பி டுவது என்றுவாவி சூழ்தில்லை மூதூர் வழிக் கொள்வான் வணங்கிப் போந்தார்.
சொற்பிரிப்பு
மேவிய காதல் தொண்டு விரவு மெய் விருத்தி பெற்றார்ஆவியின் விருத்தி ஆன அந்தணர் புலியூர் மன்றில்காவியங் கண்டர் கூத்துக் கண்டு கும்பிடுவது என்றுவாவி சூழ் தில்லை மூதூர் வழிக் கொள்வான் வணங்கிப் போந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

111

மாடுள பதிகள் சென்று வணங்கிப் போய் மங்கை பாகர்நீடிய கடம்பூர் போற்றி நிறைந்த ஆனந் தக் கூத்தர்ஆடிய தில்லை மூதூர் அணைந்து அணி வாயில் புக்குச்சேடுயர் மாடம் மன்னும் செழும் திரு வீதி சார்ந்தார்.
சொற்பிரிப்பு
மாடுள பதிகள் சென்று வணங்கிப் போய், மங்கை பாகர்நீடிய கடம்பூர் போற்றி, நிறைந்த ஆனந்தக் கூத்தர்ஆடிய தில்லை மூதூர் அணைந்து அணி வாயில் புக்குச்சேடு உயர் மாடம் நீடும் செழுந் திருவீதி சார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

112

பொன் திரு வீதி தாழ்ந்து புண்ணிய விளைவாய் ஓங்கும்நல்திரு வாயில் நண்ணி நறை மலி அலங்கல் மார்பர்மற்றதன் முன்பு மண்மேல் வணங்கி உள்புகுந்து பைம் பொன்சுற்று மாளிகை சூழ்வந்து தொழுது கை தலைமேல் கொள்வார்.
சொற்பிரிப்பு
பொற்றிரு வீதி தாழ்ந்து புண்ணிய விளைவாய் ஓங்கும்நற்றிரு வாயில் நண்ணி நறைமலி அலங்கல் மார்பர்மற்று அதன் முன்பு மண்மேல் வணங்கி உள் புகுந்து பைம்பொன்சுற்று மாளிகை சூழ் வந்து தொழுது, கை தலைமேல் கொள்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

113

ஆடிய திரு முன்பான அம் பொனின் கோபுரத்தின்ஊடுபுக்கு இறைஞ்சி ஓங்கும் ஒளிவளர் கனக மன்றில்நாடகச் செய்ய தாளை நண் ணுற உள் நிறைந்துநீடும் ஆனந்த வெள்ளக் கண்கள் நீர் நிறைந்து பாய.
சொற்பிரிப்பு
ஆடிய திருமுன்பு ஆன அம்பொனின் கோபுரத்தின்ஊடு புக்கு இறைஞ்சி, ஓங்கும் ஒளி வளர் கனக மன்றில்நாடகச் செய்ய தாளை நண் உற உள் நிறைந்துநீடும் ஆனந்த வெள்ளக் கண்கள் நீர் நிரந்து பாய.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

114

பரவுவாய் குளறிக் காதில் படி திருப் படியைத் தாழ்ந்துவிரவு மெய் அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி வேட்கைஉர னுறு திருக்கூத்து உள்ளம் ஆர்தரப் பெருகி நெஞ்சில்கரவு இலாத அவரைக் கண்ட நிறைவு தம்கருத்தில் கொள்ள.
சொற்பிரிப்பு
பரவு வாய் குளறிக், காதல் படி திருப்படியைத் தாழ்ந்துவிரவு மெய் அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி, வேட்கைஉரனுறு திருக்கூத்து உள்ளம் ஆர்தரப் பெருகி நெஞ்சில்கரவு இலாதவரைக் கண்ட நிறைவு தம் கருத்தில் கொள்ள.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

115

மடித்து ஆடும் அடிமைக்கண் என்று எடுத்து மன்உயிர் கட்கு அருளும் ஆற்றல்அடுத்து ஆற்று நல் நெறிக்கண் நின்றார்கள் வழுவி நரகு அணையா வண்ணம்தடுப் பானைப் பேரூரில் கண்ட நிலை சிறப்பித்துத் தனிக்கூத்து என்றும்நடிப் பானை நாம் மனமே பெற்றவாறு எனும் களிப்பால் நயந்து பாடி.
சொற்பிரிப்பு
“மடித்து ஆடும் அடிமைக்கண்” என்று எடுத்து மன் உயிர்கட்கு அருளும் ஆற்றால்அடுத்து ஆற்று நன்நெறிக்கண் நின்றார்கள் வழுவி நரகு அணையா வண்ணம்தடுப்பானைப் பேரூரில் கண்டநிலை சிறப்பித்துத் தனிக்கூத்து என்றும்நடிப்பானை நாம் மனமே பெற்றவாறு எனும் களிப்பால் நயந்து பாடி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

116

மீளாத அருள் பெற்றுப் புறம் போந்து திரு வீதி மேவித் தாழ்ந்தேஆளான வன் தொண்டர் அந்த ணர்கள் தாம் போற்ற அமர்ந்து வைகிமாளாத பேர் அன்பால் பொன் பதியை வணங்கிப் போய் மறலி வீழத்தாள் ஆண்மை கொண்டவர் தம் கருப் பறியலூர் வணங்கிச் சென்று சார்ந்தார்.
சொற்பிரிப்பு
மீளாத அருள் பெற்றுப் புறம் போந்து திருவீதி மேவித் தாழ்ந்தேஆளான வன்தொண்டர் அந்தணர்கள் தாம் போற்ற அமர்ந்து வைகிமாளாத பேரன்பால் பொன்பதியை வணங்கிப் போய் மறலி வீழத்தாளாண்மை கொண்டவர் தம் கருப்பறியலூர் வணங்கிச் சென்று சார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

117

கூற்று உதைத்தார் திருக் கொகுடிக் கோயில் நண்ணிக் கோபுரத்தைத் தொழுதுபுகுந்து அன்பர்சூழஏற்ற பெருங் காதலினால் இறைஞ்சி ஏத்திஎல்லை இலாப் பெருமகிழ்ச்சி மனத்தில் எய்தப்போற்றி சைத்துப் புறத்து அணைந்தப் பதியில் வைகிப்புனிதர் அவர்தமை நினையும் இன்பம்கூறிசாற்றிய மெய்த்திருப் பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ்மாலை புனைந்து அங்குச்சாரும் நாளில்.
சொற்பிரிப்பு
கூற்றுதைத்தார் திருக்கொகுடிக் கோயில் நண்ணிக் கோபுரத்தைத் தொழுது புகுந்து அன்பர் சூழஏற்ற பெரும் காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை இலாப் பெருமகிழ்ச்சி மனத்தில் எய்தப்போற்றிசைத்துப் புறத்து அணைந்து அப்பதியில் வைகிப் புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறிச்சாற்றிய மெய்த் திருப்பதிகம் “சிம்மாந்து” என்னும் தமிழ்மாலை புனைந்து அங்குச் சாரும் நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

118

கண் நுதலார் விரும்பு கருப்பறியலூரைக் கை தொழுது நீங்கிப் போய்க் கயல்கள் பாயும்மண்ணி வளம்படிக் கரையை நண்ணி அங்கு மாதுஒரு பாகத்தவர்தாள் வணங்கிப் போற்றிஎண்ணில் புகழ்ப் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி ஏகுவார் வாழ்கொளிபுத்தூர் எய்தாதுபுண்ணி யனார் போம் பொழுது நினைந்து மீண்டுபுகுகின்றார் தலைக்கலன் என்று எடுத்துப்போற்றி.
சொற்பிரிப்பு
கண்நுதலார் விரும்பு கருப்பறியலூரைக் கைதொழுது நீங்கிப் போய்க் கயல்கள் பாயும்மண்ணிவளம் படிக்கரையை நண்ணி அங்கு மாதொரு பாகத்தவர் தாள் வணங்கிப் போற்றிஎண்ணில் புகழ்ப் பதிகமும் ”முன்னவன்” என்று ஏத்தி ஏகுவார் வாழ்கொளி புத்தூர் எய்தாதுபுண்ணியனார் போம்பொழுது நினைந்து மீண்டு புகுகின்றார் “தலைக்கலன்” என்று எடுத்துப் போற்றி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

119

திருப்பதிகம் பாடியே சென்று அங்கு எய்தித் தேவர் பெருமானார் தம்கோயில் வாயில்உருப் பொலியும் மயிர்ப்புளகம் விரவத் தாழ்ந்தே உள்அணைந்து பணிந்து ஏத்திஉருகும் அன்பால்பொருப்பரையன் மடப்பாவை இடப் பாலானைப் போற்றி இசைத்துப் புறம்போந்து தங்கிப்பூ மென்கருப்பு வயல் வாழ்கொளி புத்தூரை நீங்கிக்கான் நாட்டு முள்ளூரில் கலந்த போது.
சொற்பிரிப்பு
திருப்பதிகம் பாடியே சென்று அங்கு எய்தித் தேவர் பெருமானார் தம் கோயில் வாயில்உருப்பொலியும் மயிர்ப்புளகம் விரவித் தாழ்ந்தே உள் அணைந்து பணிந்து ஏத்தி உருகும் அன்பால்பொருப்பு அரையன் மடப்பாவை இடப்பாலானைப் போற்றிசைத்துப் புறம் போந்து தங்கிப் பூமென்கருப்பு வயல் வாழ்கொளி புத்தூரை நீங்கிக் கானாட்டு முள்ளூரில் கலந்த போது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

120

கான் நாட்டு முள்ளூரைச் சாரும் போது கண்நுதலார் எதிர்காட்சி கொடுப்பக் கண்டுதூநாண் மென்மலர்க் கொன்றைச் சடையார் செய்ய துணைப் பாதமலர் கண்டு தொழுதேன்என்றுவான்ஆளும் திருப் பதிகம் வள்வாய் என்னும் வன்தமிழின் தொடைமாலை மலரச் சாத்தித்தேன்ஆரும் மலர்ச்சோலை மருங்கு சூழ்ந்த திரு எதிர்கொள் பாடியினை எய்தச் செல்வார்.
சொற்பிரிப்பு
கானாட்டு முள்ளூரைச் சாரும் போது கண்நுதலார் எதிர்காட்சி கொடுப்பக் கண்டு“தூநாள் மென் மலர்க் கொன்றைச் சடையார் செய்ய துணைப் பாத மலர் கண்டு தொழுதேன்” என்றுவான்ஆளும் திருப்பதிகம் “வள்வாய்” என்னும் வண்தமிழின் தொடைமாலை மலரச் சாத்தித்தேன்ஆரும் மலர்ச்சோலை மருங்கு சூழ்ந்த திருஎதிர்கொள் பாடியினை எய்தச் செல்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

121

எத்திசையும் தொழுது ஏத்த மத்தயானை எடுத்து எதிர்கொள் பாடியினை அடைவோம் என்னும்சித்தநிலைத் திருப்பதிகம் பாடி வந்து செல்வம்மிகு செழும் கோயில் இறைஞ்சி நண்ணிஅத்தர்தமை அடிவணங்கி அங்கு வைகி அருள் பெற்றுத் திரு வேள்விக்குடியில் எய்திமுத்திதரும் பெருமானைத் துருத்தி கூட மூப்பதிலை எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார்.
சொற்பிரிப்பு
எத்திசையும் தொழுது ஏத்த “மத்த யானை” எடுத்து ”எதிர்கொள் பாடியினை அடைவோம்” என்னும்சித்தநிலைத் திருப்பதிகம் பாடி வந்து செல்வமிகு செழுங்கோயில் இறைஞ்சி நண்ணிஅத்தர் தமை அடி வணங்கி அங்கு வைகி அருள்பெற்றுத் திருவேள்விக் குடியில் எய்திமுத்தி தரும் பெருமானைத் துருத்தி கூட “மூப்பதுஇலை” எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

122

காட்டு நல் வேள்விக் கோலம் கருத்துற வணங்கிக் காதல்நாட்டிய உள்ளத் தோடு நம்பிஆரூ ரர் போற்றிஈட்டிய தவத்தோர் சூழ அங்கு நின்று ஏகி அன்புபூட்டி ஆட் கொண்டார் மன்னும் தானங்கள் இறைஞ்சிப் போந்து.
சொற்பிரிப்பு
காட்டு நல் வேள்விக் கோலம் கருத்துற வணங்கிக் காதல்நாட்டிய உள்ளத்தோடு நம்பி ஆரூரர் போற்றிஈட்டிய தவத்தோர் சூழ அங்கு நின்று ஏகி அன்புபூட்டி ஆட்கொண்டார் மன்னும் தானங்கள் இறைஞ்சிப் போந்து
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

123

எஞ்சாத பேர் அன்பில் திருத் தொண்டர் உடன் எய்திநஞ்சாரும் கறை மிடற்றார் இடம் பலவும் நயந்து ஏத்திமஞ்சாரும் பொழில் உடுத்த மலர்த் தடங்கள் புடை சூழும்செஞ்சாலி வயல் மருதத் திருவா ரூர் சென்று அடைந்தார்.
சொற்பிரிப்பு
எஞ்சாத பேரன்பில் திருத்தொண்டருடன் எய்திநஞ்சாரும் கறைமிடற்றார் இடம் பலவும் நயந்து ஏத்திமஞ்சாரும் பொழில் உடுத்த மலர்த்தடங்கள் புடைசூழும்செஞ்சாலி வயல் மருதத் திருஆரூர் சென்றடைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

124

செல்வ மலி திருவாரூர்த் தேவரொடு முனிவர்களும்மல்கு திருக் கோபுரத்து வந்து இறைஞ்சி உள்புக்கு அங்குஎல்லை இலாக்காதல் மிக எடுத்த மலர்க் கை குவித்துப்பல்கு திருத் தொண்டர் உடன் பரமர் திருமுன் அணைந்தார்.
சொற்பிரிப்பு
செல்வ மலி திருஆரூர்த் தேவரொடு முனிவர்களும்மல்கு திருக்கோபுரத்து வந்து இறைஞ்சி உள்புக்கு அங்குஎல்லை இலாக் காதல் மிக எடுத்தமலர்க் கைகுவித்துப்பல்கு திருத் தொண்டருடன் பரமர் திருமுன் அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

125

மூவாத முதல் ஆகி நடு வாகி முடி யாதசே வாரும் கொடி யாரைத் திரு மூலட் டானத்துள்ஓவாத பெரும் காதல் உடன் இறைஞ்சிப் புறம் போந்துதாவாத புகழ்ப் பரவையார் திரு மாளிகை சார்ந் தார்.
சொற்பிரிப்பு
மூவாத முதல் ஆகி நடுவு ஆகி முடியாதசேவாரும் கொடியாரைத் திருமூலட்டானத்துள்ஓவாத பெருங்காதலுடன் இறைஞ்சிப் புறம் போந்துதாவாத புகழ்ப் பரவையார் திருமாளிகை சார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

126

பொங்கு பெரு விருப்பினொடு புரி குழலார் பலர் போற்றப்பங்கயக் கண் செங் கனிவாய்ப் பரவையார் அடி வணங்கிஎங்களையும் நினைந்து அருளிற்று என இயம்ப இனிது அளித்துமங்கை நல்லார் அவரோடு மகிழ்ந்து உறைந்து வைகும் நாள்.
சொற்பிரிப்பு
பொங்கு பெருவிருப்பினொடு புரிகுழலார் பலர் போற்றப்பங்கயக்கண் செங்கனிவாய்ப் பரவையார் அடி வணங்கி“எங்களையும் நினைந்தருளிற்று” என இயம்ப இனிது அளித்துமங்கை நல்லார் அவரோடு மகிழ்ந்து உறைந்து வைகும் நாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

127

நாயனார் முது குன்றர் நமக்கு அளித்த நல் நிதியம்தூய மணி முத்தாற்றில் புக விட்டேம் துணைவர் அவர்கோயிலின் மாளிகை மேல் பாற் குளத்தில் அவர் அருளாலேபோய் எடுத்துக் கொடு போதப் போதுவாய் எனப்புகல.
சொற்பிரிப்பு
“நாயனார் முதுகுன்றர் நமக்கு அளித்த நன்நிதியம்தூயமணி முத்தாற்றில் புகவிட்டேம்; துணைவர் அவர்கோயிலின் மாளிகை மேல்பால் குளத்தில் அவர் அருளாலேபோய் எடுத்துக் கொடு போதப் போதுவாய்” எனப் புகல.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

128

என்ன அதிசயம் இது தான் என் சொன்னவாறு என்றுமின்இடையார் சிறு முறுவல் உடன் விளம்ப மெய் உணர்ந்தார்நன் நுதலாய் என்னு டைய நாதன் அருளால் குளத்தில்பொன் அடைய எடுத்து உனக்குத் தருவது பொய்யாது என்று.
சொற்பிரிப்பு
“என்ன அதிசயம் இதுதான்? என் சொன்னவாறு” என்றுமின் இடையார் சிறுமுறுவலுடன் விளம்ப, மெய்உணர்ந்தார்“நந்நுதலாய்! என்னுடைய நாதன் அருளால் குளத்தில்பொன் அடைய எடுத்து உனக்குத் தருவது பொய் யாது” என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

129

ஆங்கு அவரும் உடன்போத அளவு இறந்த விருப்பின் உடன்பூங் கோயில் உள் மகிழ்ந்த புராதனரைப் புக்கு இறைஞ்சிஓங்கு திருமாளிகையை வலம் வந்து அங்கு உடன் மேலைப்பாங்கு திருக் குளத்து அணைந்தார் பரவையார் தனித் துணைவர்.
சொற்பிரிப்பு
ஆங்கு அவரும் உடன்போத அளவு இறந்த விருப்பினுடன்பூங்கோயில் உள்மகிழ்ந்த புராதனரைப் புக்கு இறைஞ்சிஓங்குதி ரு மாளிகையை வலம்வந்து அங்கு உடன் மேலைப்பாங்கு திருக்குளத்து அணைந்தார் பரவையார் தனித்துணைவர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

130

மற்றதனில் வட கீழ்பால் கரை மீது வந்து அருளிமுற்று இழையார் தமை நிறுத்தி முனைப் பாடித் திருநாடர்கற்றை வார் சடையாரைக் கை தொழுது குளத்தில் இழிந்துஅற்றை நாள் இட்டு எடுப்பார் போல் அங்குத் தடவுதலும்.
சொற்பிரிப்பு
மற்று அதனில் வடகீழ்பால் கரை மீது வந்தருளிமுற்றிழையார் தமை நிறுத்தி முனைப்பாடித் திருநாடர்கற்றைவார் சடையாரைக் கைதொழுது குளத்தில் இழிந்துஅற்றை நாள் இட்டு எடுப்பார் போல் அங்குத் தடவுதலும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

131

நீற்றழகர் பாட்டு உவந்து திரு விளை யாட்டினில் நின்றுமாற்றுறு செம் பொன் குளத்து வருவியாது ஒழிந்து அருளஆற்றினில் இட்டுக் குளத்தில் தேடு வீர் அருள் இதுவோசாற்றும் எனக்கோல் தொடியார் மொழிந்து அருளத் தனித் தொண்டர்.
சொற்பிரிப்பு
நீற்று அழகர் பாட்டு உவந்து திருவிளையாட்டினில் நின்றுமாற்றுறு செம்பொன் குளத்து வருவியாது ஒழிந்தருள“ஆற்றினில் இட்டுக் குளத்தில் தேடுவீர்! அருள் இதுவோசாற்றும்?”எனக் கோல்தொடியார் மொழிந்தருளத் தனித்தொண்டர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

132

முன்செய்த அருள் வழியே முருகு அலர் பூங்குழல் பரவைதன் செய்ய வாயில் நகை தாராமே தாரும் எனமின்செய்த நூல் மார்பின் வேதியர் தாம் முது குன்றில்பொன் செய்த மேனி இனீர் எனப் பதிகம் போற்றிசைத்து.
சொற்பிரிப்பு
“முன் செய்த அருள்வழியே முருகுஅலர் பூங்குழல் பரவைதன் செய்ய வாயில் நகை தாராமே தாரும்” எனமின் செய்த நூல் மார்பின் வேதியர் தாம் முதுகுன்றில்“பொன்செய்த மேனியினீர்” எனப் பதிகம் போற்றிசைத்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

133

முட்ட இமை யோர் அறிய முது குன்றில் தந்த பொருள்சட்ட நான் பெறாது ஒழிந்த தளர்வினால் கையறவாம்இட்டளத்தை இவள் எதிரே கொடுத்து அருளும் எனும் திருப்பாட்டுஎட்டளவும் பொன் காட்டாது ஒழிந்து அருள ஏத்துவார்.
சொற்பிரிப்பு
“முட்ட இமையோர் அறிய முதுகுன்றில் தந்த பொருள்சட்ட நான் பெறாது ஒழிந்த தளர்வினால் கையறவாம்இட்டளத்தை இவள் எதிரே கெடுத்து அருளும்” எனும் திருப்பாட்டுஎட்டளவும் பொன் காட்டாது ஒழிந்தருள ஏத்துவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

134

ஏத்தாதே இருந்து அறியேன் எனும் திருப்பாட்டு எவ்வுலகும்காத்தாடும் அம்பலத்துக் கண்ணு ளனாம் கண் நுதலைக்கூத்தாதந்து அருள்வாய் இக் கோமளத்தின் முன் என்றுநீத்தாரும் தொடர் அரியநெறி நின்றார் பரவுதலும்.
சொற்பிரிப்பு
“ஏத்தாதே இருந்து அறியேன்” எனும் திருப்பாட்டு எவ்உலகும்காத்து ஆடும் அம்பலத்துக் கண்உளனாம் கண்நுதலைக்“கூத்தா! தந்து அருளாய் இக்கோமளத்தின் முன்” என்றுநீத்தாரும் தொடர்வரிய நெறி நின்றார் பரவுதலும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

135

கொந்து அவிழ் பூங்கொன்றை முடிக் கூத்தனார் திரு அருளால்வந்து எழும் பொன்திரள் எடுத்து வரன்முறையால் கரை ஏற்றஅந்தரத்து மலர் மாரிபொழிந்து இழிந்தது அவனியுளோர்இந்த அதிசயம் என்னேயார் பெறுவார் எனத் தொழுவார்.
சொற்பிரிப்பு
கொந்து அவிழ் பூங்கொன்றை முடிக் கூத்தனார் திருஅருளால்வந்து எழு பொன் திரள் எடுத்து வரன்முறையால் கரை ஏற்றஅந்தரத்து மலர்மாரி பொழிந்து இழிந்தது அவனி உளோர்“இந்த அதிசயம் என்னே! யார் பெறுவார்?” எனத் தொழுதார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

136

ஞாலம் வியப்பு எய்த வரும் நல் கனக மிடை எடுத்துமூலம் எனக் கொடு போந்த ஆணியின் முன் உரைப்பிக்கநீல மிடற்றவர் அருளால் உரை தாழப் பின்னும் நெடுமால் அயனுக்கு அரிய கழல் வழுத் தினார் வன் தொண்டர்.
சொற்பிரிப்பு
ஞாலம்வியப்பு எய்த வரு நல்கனகம் மிடை எடுத்துமூலம் எனக் கொடு போந்த ஆணியின் முன் உரைப்பிக்கநீல மிடற்றவர் அருளால் உரை தாழப் பின்னும் நெடுமால் அயனுக்கு அரிய கழல் வழுத்தினார் வன்தொண்டர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

137

மீட்டும் அவர் பரவுதலும் மெய் அன்பர் அன்பில் வரும்பாட்டு வந்து கூத்து உவந்தார் படுவாசி முடிவு எய்தும்ஓட்டறு செம்பொன் ஒக்க ஒரு மாவும் குறையாமல்காட் டுதலும் மகிழ்ந்து எடுத்துக் கொண்டு கரை ஏறினார்.
சொற்பிரிப்பு
மீட்டும் அவர் பரவுதலும் மெய்அன்பர் அன்பில் வரும்பாட்டு உவந்து கூத்து உவந்தார் படுவாசி முடிவு எய்தும்ஓட்டறு செம்பொன் ஒக்க ஒரு மாவும் குறையாமல்காட்டுதலும் மகிழ்ந்து எடுத்துக் கொண்டு கரை ஏறினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

138

கரை ஏறிப் பரவையார் உடன்கனகம் ஆனது எலாம்நிரையே ஆளில் சுமத்தி நெடுநிலை மாளிகை போக்கித்திரை யேறும் புனல் சடிலத் திரு மூலத் தானத்தார்விரை யேறு மலர் பாதம் தொழுது அணைந்தார் வீதியினில்.
சொற்பிரிப்பு
கரை ஏறிப் பரவையாருடன் கனகம் ஆனது எலாம்நிரையே ஆளில் சுமத்தி நெடுநிலை மாளிகை போக்கித்திரை ஏறும் புனல் சடிலத் திருமூலட்டானத்தார்விரை ஏறு மலர்ப்பாதம் தொழுது அணைந்தார் வீதியினில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

139

வந்து திரு மாளிகையின் உள் புகுந்து மங்கல வாழ்த்துஅந்தமிலா வகை ஏத்தும் அளவு இறந்தார் ஒலி சிறப்பச்சிந்தை நிறை மகிழ்ச்சி உடன் சேயிழை யாருடன் அமர்ந்தார்கந்த மலி மலர்ச் சோலை நாவலர் தம் காவலனார்.
சொற்பிரிப்பு
வந்துதிரு மாளிகையின் உள் புகுந்து மங்கல வாழ்த்துஅந்தம்இலா வகை ஏத்தும் அளவுஇறந்தார் ஒலி சிறப்பச்சிந்தை நிறை மகிழ்ச்சியுடன் சேயிழையாருடன் அமர்ந்தார்கந்த மலி மலர்ச்சோலை நாவலர் தம் காவலனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

140

அணி ஆரூர் மணி புற்றின் அமர்ந்தருளும் பரம் பொருளைப்பணிவார் அங்கு ஒரு நாளில் பாராட்டும் திருப் பதிகம்தணி யாத ஆனந்தம் தலை சிறப்பத் தொண்டர் உடன்துணிவு ஆய பொருள் வினவித் தொழுது ஆடிப் பாடுவார்.
சொற்பிரிப்பு
அணி ஆரூர் மணிப்புற்றின் அமர்ந்தருளும் பரம்பொருளைப்பணிவார் அங்கு ஒருநாளில் பாராட்டும் திருப்பதிகம்தணியாத ஆனந்தம் தலைசிறப்பத் தொண்டருடன்துணிவாய பொருள் வினவித் தொழுது ஆடிப் பாடுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

141

பண்ணி றையும் வகை பாறு தாங்கி என எடுத்து அருளிஉண்ணி றையும் மனக் களிப்பால் உறு புளகம் மயிர் முகிழ்ப்பகண்ணி றையும் புனல் பொழி யக் கரை இகந்த ஆனந்தம்எண்ணி றைந்த படி தோன்ற ஏத்தி மகிழ்ந்து இன் புற்றார்.
சொற்பிரிப்பு
பண்நிறையும் வகை ”பாறு தாங்கி” என எடுத்தருளிஉண் நிறையும் மனக்களிப்பால் உறுபுளகம் மயிர் முகிழ்ப்பக்கண் நிறையும் புனல் பொழியக் கரை இகந்த ஆனந்தம்எண் நிறைந்த படிதோன்ற ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

142

இன் புற்று அங்கு அமர்நாளில் ஈறில் அரு மறை பரவும்வன் புற்றின் அரவு அணிந்தமன்ன வனார் அருள் பெற்றேஅன் புற்ற காதல் உடன் அளவு இறந்த பிற பதியும்பொன் புற்கு என்றிட ஒளிரும் சடை யாரைத் தொழப் போவார்.
சொற்பிரிப்பு
இன்புற்று அங்கு அமர்நாளில் ஈறில் அருமறை பரவும்வன்புற்றின் அரவு அணிந்த மன்னவனார் அருள்பெற்றேஅன்புற்ற காதலுடன் அளவு இறந்த பிறபதியும்பொன்புற்கு என்றிட ஒளிரும் சடையாரைத் தொழப்போவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

143

பரிசன மும் உடன் போதப் பாங்கு அமைந்த பதிகள் தொறும்கரி யுரிவை புனைந்தார் தம் கழல் தொழுது மகிழ்ந்து ஏத்தித்துரிசறு நல் பெரும் தொண்டர் நள் ளாறு தொழு வதற்குப்புரிவுறு மெய்த் திருத்தொண்டர் எதிர் கொள்ளப் புக்கு அணைந்தார்.
சொற்பிரிப்பு
பரிசனமும் உடன்போதப் பாங்கு அமைந்த பதிகள் தொறும்கரி உரிவை புனைந்தார் தம் கழல் தொழுது மகிழ்ந்து ஏத்தித்துரிசறு நல் பெருந்தொண்டர் நள்ளாறு தொழுவதற்குப்புரிவுறு மெய்த் திருத்தொண்டர் எதிர்கொள்ளப் புக்கு அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

144

விண் தடவு கோபுரத்தைப் பணிந்து கரம் மேல் குவித்துக்கொண்டு புகும் தண் ணலார் கோயிலினை வலம் செய்துமண்டிய பேர் அன்பி னொடுமன்னும் திரு நள்ளாறர்புண்டரிகச் சேவடிக் கீழ் பொருந்த நிலம் மிசைப் பணிந்தார்.
சொற்பிரிப்பு
விண்தடவு கோபுரத்தைப் பணிந்து கரம் மேல் குவித்துக்கொண்டு புகுந்து அண்ணலார் கோயிலினை வலஞ்செய்துமண்டிய பேரன்பினொடு மன்னு திருநள்ளாறர்புண்டரிகச் சேவடிக் கீழ்ப் பொருந்த நிலம் மிசைப்பணிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

145

அங்கண் ணரைப் பணிந்து ஏத்தி அருளினால் தொழுது போய்மங்குல் அணி மணி மாடத் திருக்கடவூர் வந்து எய்தித்திங்கள் வளர் முடியார் தம் திரு மயானமும் பணிந்துபொங்கும் இசைப் பதிகம் மருவார் கொன்றை எனப் போற்றி.
சொற்பிரிப்பு
அங்கணரைப் பணிந்து ஏத்தி அருளினால் தொழுது போய்மங்குல்அணி மணிமாடத் திருக்கடவூர் வந்து எய்தித்திங்கள் வளர் முடியார் தம் திருமயானமும் பணிந்துபொங்கும் இசைப் பதிகம் ”மருவார் கொன்றை” எனப் போற்றி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

146

திரு வீரட் டானத்துத் தேவர்பிரான் சினக் கூற்றின்பொரு வீரந் தொலைத்த கழல் பணிந்து பொடியார் மேனிமருஈரத் தமிழ் மாலை புனைந்து ஏத்தி மலை வளைத்தபெருவீரர் வலம் புரத்துப் பெருகு ஆர்வத் தொடும் சென்றார்.
சொற்பிரிப்பு
திருவீரட்டானத்துத் தேவர் பிரான் சினக்கூற்றின்பொருவீரம் தொலைத்த கழல் பணிந்து ”பொடியார் மேனி”மரு ஈரத் தமிழ்மாலை புனைந்து ஏத்தி மலை வளைத்தபெருவீரர் வலம்புரத்துப் பெருகு ஆர்வத்தொடும் சென்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

147

வரையோடு நிகர் புரிசை வலம் புரத்தார் கழல் வணங்கிஉரை ஓசைப் பதிகம் எனக்கு இனிஓதிப் போய்ச் சங்கம்நிரையோடு துமித் தூப மணித் தீபம் நித்திலப் பூம்திரை ஓதம் கொண்டு இறைஞ்சும் திருச் சாய்க்காடு எய்தினார்.
சொற்பிரிப்பு
வரையோடு நிகர் புரிசை வலம்புரத்தார் கழல்வணங்கிஉரை ஓசைப் பதிகம் ”எனக்கு இனி” ஓதிப் போய்ச் சங்கம்நிரையோடு துமித் தூபம் மணித்தீபம் நித்திலப்பூந்திரை ஓதம் கொண்டு இறைஞ்சும் திருச்சாய்க்காடு எய்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

148

தேவர் பெருமான் தன்னைத் திருச் சாய்க் காட்டினில் பணிந்துபாவலர் செம் தமிழ் மாலைத் திருப் பதிகம் பாடிப்போய்மேவலர் தம் புரம் எரித்தார் வெண்காடு பணிந்து ஏத்திநாவலர் காவலர் அடைந்தார் நனி பள்ளித் திரு நகரில்.
சொற்பிரிப்பு
தேவர் பெருமான் தன்னைத் திருச்சாய்க்காட்டினில் பணிந்துபாவலர் செந்தமிழ் மாலைத் திருப்பதிகம் பாடிப்போய்மேவலர் தம் புரம் எரித்தார் வெண்காடு பணிந்து ஏத்திநாவலர் காவலர் அடைந்தார் நனிபள்ளித் திருநகரில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

149

நனிபள்ளி அமர்ந்த பிரான் கழல் வணங்கி நல் தமிழின்புனித நறும் தொடை புணைந்து திருச்செம்பொன் பள்ளி முதல்பனி மதிசேர் சடையார் தம் பதிபலவும் பணிந்து போய்த்தனி விடை மேல் வருவார் தம் திருநின்றியூர் சார்ந்தார்.
சொற்பிரிப்பு
நனிபள்ளி அமர்ந்தபிரான் கழல் வணங்கி நல்தமிழின்புனிதநறுந் தொடைபுனைந்து திருச்செம்பொன் பள்ளி முதல்பனிமதி சேர் சடையார் தம் பதிபலவும் பணிந்து போய்த்தனிவிடை மேல் வருவார் தம் திருநின்றியூர் சார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

150

நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கு இறைஞ்சிஒன்றிய அன்பு உள்உருகப் பாடுவார் உடையஅரசுஎன்றும் உலகு இடர் நீங்கப்பாடிய ஏழ்எழுநூறும்அன்று சிறப்பித்து அம்சொல் திருப்பதிகம் அருள் செய்தார்.
சொற்பிரிப்பு
நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கு இறைஞ்சிஒன்றிய அன்பு உள் உருகப் பாடுவார் உடைய அரசுஎன்றும் உலகு இடர் நீங்கப் பாடிய ஏழ் எழுநூறும்அன்று சிறப்பித்து அஞ்சொல் திருப்பதிகம் அருள்செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

151

அப்ப தியில் அன்பருடன் அமர்ந்து அகல்வார் அகல் இடத்தில்செப்ப அரிய புகழ் நீடூர் பணியாது செல் பொழுதில்ஒப்பஅரிய உணர்வினால் நினைந்து அருளி தொழல் உறுவார்மெய்ப்பொருள் வண் தமிழ் மலை விளம்பியே மீண்டு அணைந்தார்.
சொற்பிரிப்பு
அப்பதியில் அன்பருடன் அமர்ந்து அகல்வார் அகல்இடத்தில்செப்பரிய புகழ் நீடூர் பணியாது செல்பொழுதில்ஒப்பரிய உணர்வினால் நினைந்தருளித் தொழல் உறுவார்மெய்ப்பொருள் வண் தமிழ்மாலை விளம்பியே மீண்டு அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

152

மடல் ஆரும் புனல் நீடூர் மருவினர் தாள் வணங்காதுவிடலாமே எனும் காதல் விருப்பு உறும் அத்திருப்பதிகம்அடல் ஆர் சூலப் படையார் தமைப் பாடி அடிவணங்கிஉடல்ஆரும் மயிர்ப் புளகம் மிகப் பணிந்து அங்கு உறைகின்றார்.
சொற்பிரிப்பு
“மடலாரும் புனல் நீடூர் மருவினர்தாள் வணங்காதுவிடலாமே” எனும் காதல் விருப்புறும் அத்திருப்பதிகம்அடலார் சூலப்படையார் தமைப் பாடி அடி வணங்கிஉடலாரும் மயிர்ப் புளகம் மிகப் பணிந்து அங்கு உறைகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

153

அம்கண் இனிது அமர்ந்து அருளால் திருப்புன் கூர் அணைந்து இறைஞ்சிக்கொங்கு அலரும் மலர்ச் சோலைத் திருக் கோலக்கா அணையக்கங்கை சடைக் கரந்தவர் தாம் எதிர் காட்சி கொடுத்து அருளப்பொங்கு விருப்பால் தொழுது திருப்பதிகம் போற்றி இசைப்பார்.
சொற்பிரிப்பு
அங்கண் இனிது அமர்ந்து அருளால் திருப்புன்கூர் அணைந்து இறைஞ்சிக்கொங்கு அலரும் மலர்ச்சோலைத் திருக்கோலக்கா அணையக்கங்கைசடைக் கரந்தவர் தாம் எதிர் காட்சி கொடுத்தருளப்பொங்கு விருப்பால் தொழுது திருப்பதிகம் போற்றிசைப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

154

திருஞான சம்பந்தர் திருக் கைகளால் ஒற்றிப்பெருகுஆர்வத்துடன் பாட பிஞ்ஞ கனார் கண்டுஇரங்கிஅருளாலே திருத்தாளம் அளித் தபடி சிறப்பித்துப்பொருள் மாலைத் திருப்பதிகம் பாடியே போற்றிஇசைத்தார்.
சொற்பிரிப்பு
திருஞான சம்பந்தர் திருக் கைகளால் ஒற்றிப்பெருகு ஆர்வத்துடன் பாடப் பிஞ்ஞகனார் கண்டு இரங்கிஅருளாலே திருத்தாளம் அளித்தபடி சிறப்பித்துப்பொருள் மாலைத் திருப்பதிகம் பாடியே போற்றிசைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

155

மூவாத முழு முதலார் முதல் கோலக்கா அகன்றுதாவாதபுகழ் சண்பை வலம் கொண்டு தாழ்ந்து இறைஞ்சிநாவார் முத்தமிழ் விரகர் நற்பதங்கள் பரவிப் போய்மேவார் தம் புரம் செற்றார் குருகாவூர் மேவுவார்.
சொற்பிரிப்பு
மூவாத முழுமுதலார் முதல் கோலக்கா அகன்றுதாவாத புகழ்ச் சண்பை வலங்கொண்டு தாழ்ந்து இறைஞ்சிநாவார் முத்தமிழ் விரகர் நற்பதங்கள் பரவிப்போய்மேவார் தம் புரம் செற்றார் குருகாவூர் மேவுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

156

உண் நீரின் வேட்கை உடன் உறுபசியால் மிக வருந்திபண்நீர்மை மொழிப் பரவையார் கொழுநர் வரும் பாங்கர்க்கண் நீடுதிரு நுதலார் காதல் வரக் கருத்து அறிந்துதண்ணீரும் பொதி சோறும் கொண்டு வழிச் சார்கின்றார்.
சொற்பிரிப்பு
உண் நீரின் வேட்கையுடன் உறுபசியால் மிக வருந்திப்பண் நீர்மை மொழிப் பரவையார் கொழுநர் வரும் பாங்கர்க்கண் நீடு திருநுதலார் காதல் வரக் கருத்து அறிந்துதண்நீரும் பொதிசோறும் கொண்டு வழிச் சார்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

157

வேனில் உறுவெயில் வெம்மை தணிப் பதற்கு விரைக் குளிர் மென்பான் நல் மலர்த்தடம் போலும் பந்தர் ஒருபால் அமைத்தேஆன மறை வேதியராய் அருள் வேடம் கொண்டி ருந்தார்மான் அமரும் திருக் கரத்தார் வன்தொண்டர் தமைப் பார்த்து.
சொற்பிரிப்பு
வேனில் உறு வெயில் வெம்மை தணிப்பதற்கு விரைக்குளிர்மென்பானல் மலர்த்தடம் போலும் பந்தர் ஒருபால் அமைத்தேஆன மறை வேதியராய் அருள்வேடம் கொண்டு இருந்தார்மான் அமரும் திருக்கரத்தார் வன்தொண்டர் தமைப் பார்த்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

158

குருகாவூர் அமர்ந்து அருளும் குழகர் வழி பார்த் திருப்பத்திருவா ரூர்த் தம்பிரான் தோழர் திருத் தொண்டர் உடன்வருவார் அப்பந்தர் இடைப் புகுந்து திரு மறைவர் பால்பெருகு ஆர்வம் செல இருந்தார் சிவாயநம எனப் பேசி.
சொற்பிரிப்பு
குருகாவூர் அமர்ந்தருளும் குழகர் வழி பார்த்து இருப்பத்திருஆரூர்த் தம்பிரான் தோழர் திருத்தொண்டருடன்வருவார் அப்பந்தரிடைப் புகுந்து திருமறையவர்பால்பெருகு ஆர்வம் செல இருந்தார் “சிவாயநம” எனப் பேசி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

159

ஆலநிழல் கீழ் இருந்தார் அவர் தம்மை எதிர் நோக்கிச்சால மிகப் பசித்தீர் இப் பொதி சோறு தருகின்றேன்காலம் இனித்தாழாமே கைக் கொண்டு இங்கு இனிது அருந்திஏல நறும்குளிர் தண்ணீர் குடித்து இளைப்பு தீரும் என.
சொற்பிரிப்பு
ஆல நிழல் கீழ் இருந்தார் அவர் தம்மை எதிர் நோக்கிச்“சாலமிகப் பசித்தீர்; இப்பொதி சோறு தருகின்றேன்;காலம் இனித் தாழாமே கைக்கொண்டு இங்கு இனிது அருந்திஏல நறும் குளிர் தண்ணீர் குடித்து இளைப்புத் தீரும்” என.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

160

வன்தொண்டர் அது கேட்டு மறை முனிவர் தரும் பொதி சோறுஇன்று நமக்கு எதிர் விலக்கல் ஆகாது என்று இசைந்து அருளிப்பொன் தயங்கு நூல் மார்பர் தரும் பொதிசோறு அது வாங்கிச்சென்று திருத் தொண்ட ருடன் திரு அமுது செய்து அருளி.
சொற்பிரிப்பு
வன்தொண்டர் அதுகேட்டு “மறைமுனிவர் தரும் பொதிசோறுஇன்று நமக்கு எதிர் விலக்கல் ஆகாது” என்று இசைந்தருளிப்பொன்தயங்கு நூல் மார்பர் தரும் பொதிசோறு அது வாங்கிச்சென்று திருத்தொண்டருடன் திருஅமுது செய்தருளி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

161

எண் நிறைந்த பரிசனங்கள் எல் லாரும் இனிது அருந்தப்பண்ணியபின் அம் மருங்கு பசித்து அணைந் தார்களும் அருந்தஉண்ணி றைந்த ஆர முதாய் ஒரு காலும் உலவாதேபுண்ணி யனார் தாம் அளித்த பொதி சோறு பொலிந்ததால்.
சொற்பிரிப்பு
எண் இறந்த பரிசனங்கள் எல்லாரும் இனிது அருந்தப்பண்ணியபின் அம்மருங்கு பசித்து அணைந்தார்களும் அருந்தஉள்நிறைந்த ஆர் அமுதாய் ஒருகாலும் உலவாதேபுண்ணியனார் தாம் அளித்த பொதிசோறு பொலிந்ததால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

162

சங்கரனார் திரு அருள் போல் தண்ணீரின் சுவை ஆர்ந்துபொங்கி வரும் ஆதரவால் அவர் நாமம் புகழ்ந்து ஏத்திஅங்கு அயர்வால் பள்ளி அமர்ந்துஅருகு அணைந்தார் களும் துயிலக்கங்கை சடைக் கரந்தார் அப் பந்தரொடும் தாம் கரந்தார்.
சொற்பிரிப்பு
சங்கரனார் திருஅருள்போல் தண்நீரின் சுவை ஆர்ந்துபொங்கிவரும் ஆதரவால் அவர் நாமம் புகழ்ந்து ஏத்திஅங்கு அயர்வால் பள்ளி அமர்ந்து அருகு அணைந்தார்களும் துயிலக்கங்கைசடைக் கரந்தார் அப்பந்தரொடும் தாம் கரந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

163

சித்த நிலை திரியாத திரு நாவ லூர் மன்னர்அத் தகுதி யினில் பள்ளி உணர்ந் தவரை காணாமைஇத்த னையா மாற்றம் அறிந் திலேன் என எடுத்துமெய்த் தகைய திருப் பதிகம் விளம்பியே சென்று அடைந்தார்.
சொற்பிரிப்பு
சித்தநிலை திரியாத திருநாவலூர் மன்னர்அத்தகுதியினில் பள்ளி உணர்ந்து அவரைக் காணாமை“இத்தனையா மாற்றம் அறிந்திலேன்” என எடுத்துமெய்த்தகைய திருப்பதிகம் விளம்பியே சென்று அடைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

164

குரு காவூர் அமர்ந்து அருளும் குழகனார் கோயி லினுக்குஅருகார் பொன் கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் புக்குவருகாதல் கூர வலம் கொண்டு திரு முன் வணங்கிப்பருகா இன் அமு தத்தைக் கண் களால் பருகினார்.
சொற்பிரிப்பு
குருகாவூர் அமர்ந்தருளும் குழகனார் கோயிலினுக்குஅருகார் பொன் கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள்புக்குவருகாதல் கூரவலம் கொண்டுதிருமுன் வணங்கிப்பருகா இன் அமுதத்தைக் கண்களால் பருகினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

165

கண்ணார்ந்த இன் அமுதை கை ஆரத் தொழுது இறைஞ்சிப்பண் ணார்ந்த திருப் பதிகம் பாடியே பணிந்து ஏத்திஉண் ணாடும் பெரும் காதல் உடையவர்தாம் புறத்து எய்திநண்ணும் ஆர்வத் தொண்டருடன் அங்கு இனிது நயந்து இருந்தார்.
சொற்பிரிப்பு
கண் ஆர்ந்த இன்அமுதைக் கைஆரத் தொழுது இறைஞ்சிப்பண் ஆர்ந்த திருப்பதிகம் பாடியே பணிந்து ஏத்திஉள்நாடும் பெருங்காதல் உடையவர் தாம் புறத்து எய்திநண் ஆர்வத் தொண்டருடன் அங்கு இனிது நயந்து இருந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

166

அந் நாளில் தம் பெருமான்அருள் கூடப் பணிந்து அகன்றுமின் னார் செஞ்சடை முடியார் விரும்பும் இடம் பல வணங்கிக்கன் னாடும் எயில் புடை சூழ் கழிப்பாலை தொழுது ஏத்திதென் னாவலூர் மன்னர் திருத் தில்லை வந்து அடைந்தார்.
சொற்பிரிப்பு
அந்நாளில் தம்பெருமான் அருள்கூடப் பணிந்து அகன்றுமின்ஆர்செஞ் சடைமுடியார் விரும்பும்இடம் பலவணங்கிக்கல்நாடும் எயில் புடைசூழ் கழிப்பாலை தொழுது ஏத்தித்தென் நாவலூர் மன்னர் திருத்தில்லை வந்தடைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

167

சீர்வளரும் திருத்தில்லைத் திரு வீதி பணிந்து புகுந்துஏர்வலர் பொன் திரு மன்றுள் எடுத்த சேவடி இறைஞ்சிப்பார்வளர மறை வளர்க்கும் பதி அதனில் பணிந்து உறைவார்போர் வளர் மேருச்சிலையார் திருத்தினை மா நகர் புகுந்தார்.
சொற்பிரிப்பு
சீர்வளரும் திருத்தில்லைத் திருவீதி பணிந்து புகுந்துஏர்வளர்பொன் திருமன்றுள் எடுத்த சேவடி இறைஞ்சிப்பார் வளர மறைவளர்க்கும் பதி அதனில் பணிந்து உறைவார்போர்வளர் மேருச்சிலையார் திருத்தினைமா நகர் புகுந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

168

திருத்தினை மாநகர் மேவும் சிவக் கொழுந்தைப் பணிந்து போய்நிருத்தனார் அமர்ந்து அருளும் நிறை பதிகள் பல வணங்கிப்பொருத்த மிகும் திருத் தொண்டர் போற்று திரு நாவலூர்கருத்தில் வரும் ஆதரவால் கை தொழச் சென்று எய்தினார்.
சொற்பிரிப்பு
திருத்தினை மாநகர் மேவும் சிவக்கொழுந்தைப் பணிந்து போய்நிருத்தனார் அமர்ந்தருளும் நிறைபதிகள் பல வணங்கிப்பொருத்த மிகும் திருத்தொண்டர் போற்று திருநாவலூர்கருத்தில் வரும் ஆதரவால் கைதொழச் சென்று எய்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

169

திருநாவலூர் மன்னர் சேர்கின்றார் எனக் கேட்டுப்பெரு நாமப் பதியோரும் தொண்டர்களும் பெருவாழ்வுவருநாள்என்று அலங்கரித்து வந்து எதிர்கொண்டு உள்அணையச்செருநாகத்து உரிபுனைந்தார் செழுங்கோயில் உள் அணைந்தார்.
சொற்பிரிப்பு
“திருநாவலூர் மன்னர் சேர்கின்றார்” எனக் கேட்டுப்பெருநாமப் பதியோரும் தொண்டர்களும் “பெருவாழ்வுவருநாள்” என்று அலங்கரித்து வந்து எதிர்கொண்டு உள் அணையச்செருநாகத்து உரி புனைந்தார் செழுங்கோயில் உள் அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

170

மேவிய அத் தொண்டர் குழாம் மிடைந்து அர என்று எழும் ஓசைமூவு லகும் போய் ஒலிப்ப முதல் வனார் முன்பு எய்திஆவி யினும் அடைவு டையார் அடிக் கமலத்து அருள் போற்றிக்கோவலன் நான் முகன் எடுத்துப் பாடியே கும் பிட்டார்.
சொற்பிரிப்பு
மேவிய அத்தொண்டர் குழாம் மிடைந்து ”அர” என்று எழும் ஓசைமூஉலகும் போய் ஒலிப்ப முதல்வனார் முன்பு எய்திஆவியினும் அடைவு உடையார் அடிக்கமலத்து அருள்போற்றிக்“கோவலன் நான்முகன்” எடுத்துப் பாடியே கும்பிட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

171

நலம் பெருகும் அப்பதியில் நாடி அன்பொடு நயந்துகுலம் பெருகும் திருத்தொண்டர் குழாத்தோடும் இனிது அமர்ந்துசலம் பெருகும் சடைமுடியார் தாள் வணங்கி அருள்பெற்றுப்பொலம் புரிநூல் மணிமார்பர் பிறபதியும் தொழப் போவார்.
சொற்பிரிப்பு
நலம் பெருகும் அப்பதியில் நாடிய அன்பொடு நயந்துகுலம் பெருகும் திருத்தொண்டர் குழாத்தோடும் இனிது அமர்ந்துசலம் பெருகும் சடைமுடியார் தாள் வணங்கி அருள் பெற்றுப்பொலம் புரிநூல் மணிமார்பர் பிறபதியும் தொழப்போவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

172

தண்டகமாந் திருநாட்டுத் தனி விடையார் மகிழ்விடங்கள்தொண்டர் எதிர்கொண்டு அணையத் தொழுது போய்த்தூய நதிவண்டறை பூம்புறவு மலை வளமருதம் பலகடந்தேஎண்திசை யோர் பரவு திருக்கழுக் குன்றை எய்தினார்.
சொற்பிரிப்பு
தண்டகமாம் திருநாட்டுத் தனி விடையார் மகிழ்விடங்கள்தொண்டர் எதிர் கொண்டு அணையத் தொழுது போய்த் தூய நதிவண்டு அறை பூம்புறவு, மலை, வளமருதம் பல கடந்தேஎண்திசையோர் பரவு திருக்கழுக்குன்றை எய்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

173

தேன் ஆர்ந்த மலர்ச் சோலை திருக்கழுக் குன்றத்து அடியார்ஆனாத விருப் பினொடும் எதிர் கொள்ள அடைந்து அருளித்தூநாள் வெண்மதி அணிந்த சுடர்க் கொழுந் தைத் தொழுது இறைஞ்சிபா நாடும் இன் இசை யின் திருப் பதிகம் பாடினார்.
சொற்பிரிப்பு
தேன் ஆர்ந்த மலர்ச்சோலைத் திருக்கழுக்குன்றத்து அடியார்ஆனாத விருப்பினொடும் எதிர்கொள்ள அடைந்தருளித்தூநாள் வெண்மதி அணிந்த சுடர்க்கொழுந்தைத் தொழுது இறைஞ்சிப்பாநாடும் இன்னிசையின் திருப்பதிகம் பாடினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

174

பாடிய அப்பதியின் கண் இனிது அமர்ந்து பணிந்து போய்நாடிய நல்லுணர்வின் ஒடும் திருக் கச்சூர் தனை நண்ணிஆடக மாமதில் புடை சூழ் ஆலக் கோயிலின் அமுதைக்கூடிய மெய்அன்பு உருகக் கும் பிட்டுப் புறத்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
பாடிய அப்பதியின்கண் இனிது அமர்ந்து பணிந்து போய்நாடிய நல் உணர்வினொடும் திருக்கச்சூர்தனை நண்ணிஆடக மாமதில் புடைசூழ் ஆலக்கோயில் இன்அமுதைக்கூடிய மெய் அன்பு உருகக் கும்பிட்டுப் புறத்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

175

அணைந்து அருளும் அவ்வேலை அமுது செயும் பொழுதாகக்கொணர்ந்த அமுது சமைத்து அளிக்கும் பரிசனமும் குறுகாமைதணந்த பசி வருத் தத்தால் தம்பிரான் திருவாயில்புணர்ந்த மதில் புறத்து இருந்தார் முனைப்பாடி புரவலனார்.
சொற்பிரிப்பு
அணைந்தருளும் அவ்வேலை அமுது செயும் பொழுது ஆகக்கொணர்ந்து அமுது சமைத்து அளிக்கும் பரிசனமும் குறுகாமைத்தணந்த பசி வருத்தத்தால் தம்பிரான் திருவாயில்புணர்ந்த மதில் புறத்திருந்தார் முனைப்பாடிப் புரவலனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

176

வன்தொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்து ஆனார்மின்தங்கு வெண் தலையோடு ஒழிந்து ஒரு வெற்றோடு ஏந்திஅன்று அங்கு வாழ்வார் ஓர் அந்த ணராய்ப் புறப்பட்டுச்சென்று அன்பர் முகம் நோக்கி அருள் கூறச் செப்புவார்.
சொற்பிரிப்பு
வன்தொண்டர் பசிதீர்க்க மலையின் மேல் மருந்து ஆனார்மின் தங்கு வெண்தலையோடு ஒழிந்து ஒரு வெற்று ஓடு ஏந்திஅன்று அங்கு வாழ்வார் ஓர் அந்தணராய்ப் புறப்பட்டுச்சென்று அன்பர் முக நோக்கி அருள்கூரச் செப்புவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

177

மெய்ப் பசியால் மிகவருந்தி இளைத்து இருந்தீர் வேட் கைவிடஇப் பொழுதே சோறிரந்து இங்கு யான் உமக்குக் கொணர்கின்றேன்அப்புறம் நீர் அகலாதே சிறிது பொழுது அமரும் எனச்செப்பி அவர் கச்சூர் மனை தோறும் சென்றிரப்பார்.
சொற்பிரிப்பு
“மெய்ப்பசியால் மிக வருந்தி இளைத்து இருந்தீர்; வேட்கை விடஇப்பொழுதே சோறு இரந்து இங்கு யான் உமக்குக் கொணர்கின்றேன்;அப்புறம் நீர் அகலாதே சிறிது பொழுது அமரும்” எனச்செப்பி அவர் திருக்கச்சூர் மனைதோறும் சென்று இரப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

178

வெண் திரு நீறு அணி திகழ விளங்குநூல் ஒளி துளங்கக்கண்டவர்கள் மனம் உருகக் கடும் பகல்போது இடும் பலிக்குப்புண்டரிகக் கழல் புவிமேல் பொருந்த மனை தொறும் புக்குக்கொண் டுதாம் விரும்பி ஆட் கொண்டவர் முன் கொடுவந்தார்.
சொற்பிரிப்பு
வெண் திருநீற்று அணிதிகழ விளங்கு நூல் ஒளி துளங்கக்கண்டவர்கள் மனம் உருகக் கடும்பகல்போது இடும்பலிக்குப்புண்டரிகக் கழல் புவிமேல் பொருந்த, மனைதொறும் புக்குக்கொண்டு தாம் விரும்பி ஆட்கொண்டவர் முன் கொடுவந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

179

இரந்து தாம் கொடு வந்த இன் அடிசிலும் கறியும்அரந்தை தரும் பசி தீர அருந்துவீர் என அளிப்பபெருந்தகையார் மறையவர் தம் பேர் அருளின் திறம் பேணிநிரந்த பெரும் காத லினால் நேர் தொழுது வாங்கினார்.
சொற்பிரிப்பு
இரந்து தாம் கொடு வந்த இன் அடிசிலும் கறியும்“அரந்தை தரும் பசி தீர அருந்துவீர்” என அளிப்பப்பெருந்தகையார், மறையவர் தம் பேரருளின் திறம் பேணிநிரந்த பெருங்காதலினால் நேர் தொழுது வாங்கினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

180

வாங்கிய அத்திரு அமுது வன் தொண்டர் மருங்கு அணைந்தஓங்கு தவத் தொண்டருடன் உண்டு அருளி உவந்து இருப்பஆங்கு அருகு நின்றார் போல் அவர் தம்மை அறி யாமேநீங் கினார் எப் பொருளும் நீங்காத நிலைமை யினார்.
சொற்பிரிப்பு
வாங்கி அத்திருஅமுது வன்தொண்டர் மருங்கு அணைந்தஓங்கு தவத் தொண்டருடன் உண்டருளி உவந்து இருப்பஆங்கு அருகு நின்றார்போல் அவர் தம்மை அறியாமேநீங்கினார் எப்பொருளும் நீங்காத நிலைமையினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

181

திரு நாவலூ ராளி சிவ யோகியார் நீங்கவரு நாம மறைய வனார் இறையவனார் என மதித்தேபெரு நாதச்சிலம்பு அணி சேவடி வருந்த பெரும்பகல் கண்உருநாடி எழுந்து அருளிற்று என் பொருட்டாம் என உருகி.
சொற்பிரிப்பு
திருநாவலூர் ஆளி சிவயோகியார் நீங்கவருநாம மறையவனார் இறையவனார் என மதித்தே“பெருநாதச் சிலம்பு அணி சேவடி வருந்தப் பெரும்பகல்கண்உருநாடி எழுந்தருளிற்று என் பொருட்டாம்” என உருகி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

182

முதுவாயோரி என்று எடுத்து முதல் வனார் தம் பெரும் கருணைஅதுவாம் இது என்று அதிசயம் வந்து எய்தக் கண்ணீர் மழை அருவிபுதுவார் புனலின் மயிர்ப் புளகம் புதையப் பதிகம் போற்றி இசைத்துமதுவார் இதழி முடி யாரைப் பாடி மகிழ்ந்து வணங் கினார்.
சொற்பிரிப்பு
“முதுவாய் ஓரி” என்று எடுத்து முதல்வனார் தம் பெருங்கருணைஅதுவாம் இது என்று அதிசயம் வந்து எய்தக் கண்ணீர் மழை அருவிப்புதுவார் புனலின் மயிர்ப்புளகம் புதையப் பதிகம் போற்றிசைத்துமதுவார் இதழி முடியாரைப் பாடி மகிழ்ந்து வணங்கினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

183

வந்தித்து இறைவர் அருளால் போய்மங்கை பாகர் மகிழ்ந்த இடம்முந்தித் தொண்டர் எதிர் கொள்ளப் புக்கு முக் கண் பெருமானைச்சிந்தித்திட வந்து அருள் செய் கழல் பணிந்து செஞ்சொல் தொடைபுனைந்தேஅந்திச் செக்கர்ப் பெருகு ஒளியார் அமரும் காஞ்சி மருங்கு அணைந்தார்.
சொற்பிரிப்பு
வந்தித்து இறைவர் அருளால்போய் மங்கை பாகர் மகிழ்ந்த இடம்முந்தித் தொண்டர் எதிர்கொள்ளப் புக்கு முக்கண் பெருமானைச்சிந்தித்திட வந்து அருள்செய் கழல் பணிந்து செஞ்சொல் தொடை புனைந்தேஅந்திச் செக்கர்ப் பெருகு ஒளியார் அமரும் காஞ்சி மருங்கணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

184

அன்று வெண் ணெய் நல்லூரில் அரியும் அயனும் தொடர் அரியவென்றி மழ வெள் விடை உயர்த்தார் வேத முதல்வராய் வந்துநின்று சபைமுன் வழக்கு உரைத்து நேரே தொடர்ந்து ஆட்கொண்டவர் தாம்இன்று இங்கு எய்தப் பெற்றோம்என்று எயில்சூழ்காஞ்சி நகர் வாழ்வார்.
சொற்பிரிப்பு
அன்று வெண்ணெய் நல்லூரில் அரியும் அயனும் தொடர்வரியவென்றி மழ வெள்விடை உயர்த்தார் வேத முதல்வராய் வந்துநின்று சபை முன் வழக்குரைத்து நேரே தொடர்ந்து ஆட்கொண்டவர் தாம்இன்று இங்கு எய்தப் பெற்றோம் என்று எயில் சூழ் காஞ்சி நகர் வாழ்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

185

மல்கு மகிழ்ச்சி மிகப் பெருக மறுகு மணித் தோரணம் நாட்டிஅல்கு தீபம் நிறை குடங்கள் அகிலின் தூபம் கொடி எடுத்துச்செல்வ மனைகள் அலங் கரித்து தெற்றி ஆடல் முழவு அதிரப்பல்கு தொண்டருடன் கூடிப் பதியின்புறம் போய் எதிர் கொண்டார்.
சொற்பிரிப்பு
மல்கு மகிழ்ச்சி மிகப்பெருக, மறுகு மணித்தோரணம் நாட்டி,அல்கு தீபம், நிறைகுடங்கள், அகிலின் தூபம், கொடி எடுத்துச்செல்வ மனைகள் அலங்கரித்துத் தெற்றி ஆடல் முழவு அதிரப்பல்கு தொண்டருடன் கூடிப் பதியின் புறம்போய் எதிர்கொண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

186

ஆண்ட நம்பி எதிர் கொண்ட அடி யார் வணங்க எதிர்வணங்கிநீண்ட மதில் கோபுரம் கடந்து நிறை மாளிகை வீதியில் போந்துபூண்ட காதல் வாழ்த் தினுடன்புனை மங்கல தூரியம் ஒலிப்பஈண்டு தொண்டர் பெருகு திருஏகாம் பரம் சென்று எய்தினார்.
சொற்பிரிப்பு
ஆண்ட நம்பி எதிர்கொண்ட அடியார் வணங்க எதிர்வணங்கிநீண்ட மதில் கோபுரம் கடந்து நிரை மாளிகை வீதியில் போந்துபூண்ட காதல் வாழ்த்தினுடன் புனை மங்கல தூரியம் ஒலிப்பஈண்டு தொண்டர் பெருகு திருஏகாம்பரம் சென்று எய்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

187

ஆழி நெடுமால் அயன் முதலாம் அமரர் நெருங்கு கோபுரம் முன்பூழியுற மண் மிசை மேனி பொருந்த வணங்கிப் புகுந்து அருளிச்சூழு மணி மாளிகை பலவும் தொழுது வணங்கி வலம் கொண்டுவாழி மணிப் பொன் கோயிலினுள் வந்தார் அணுக்க வன் தொண்டர்.
சொற்பிரிப்பு
ஆழி நெடுமால் அயன் முதலாம் அமரர் நெருங்கு கோபுரம் முன்பூழி உற மண்மிசை மேனி பொருந்த வணங்கிப் புகுந்தருளிச்சூழு மணி மாளிகை பலவும் தொழுது வணங்கி வலங்கொண்டுவாழி மணிப்பொன் கோயிலின் உள் வந்தார் அணுக்க வன்தொண்டர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

188

கைகள் கூப்பி முன் அணை வார் கம்பை ஆறு பெருகிவரஐயர் தமக்கு மிக அஞ்சி ஆரத் தழுவிக் கொண்டு இருந்தமைஉலாவும் கரும் நெடும் கண் மலை யாள் என்றும் வழிபடுபூஞ்செய்ய கமலச் சேவடிக் கீழ்த் திருந்து காத லுடன் வீழ்ந்தார்.
சொற்பிரிப்பு
கைகள் கூப்பி முன் அணைவார் கம்பை ஆறு பெருகி வரஐயர் தமக்கு மிக அஞ்சி ஆரத் தழுவிக் கொண்டு இருந்தமை உலாவும் கருநெடுங்கண் மலையாள் என்றும் வழிபடு பூஞ்செய்ய கமலச் சேவடிக் கீழ்த் திருந்து காதலுடன் வீழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

189

வீழ்ந்து போற்றிப் பரவ சமாய்விம்மி எழுந்து மெய்யன்பா ல்வாழ்ந்த சிந்தை உடன் பாடிமாறா விருப்பில் புறம் போந்துசூழ்ந்த தொண்டருடன் மருவும்நாளில் தொல்லைக் கச்சி நகர்த்தாழ்ந்த சடை யார் ஆலயங்கள் பலவும் சார்ந்து வணங்குவார்.
சொற்பிரிப்பு
வீழ்ந்து போற்றிப் பரவசமாய் விம்மி எழுந்து மெய் அன்பால்வாழ்ந்த சிந்தை உடன்பாடி, மாறா விருப்பில் புறம் போந்துசூழ்ந்த தொண்டருடன் மருவும் நாளில் தொல்லைக் கச்சி நகர்த்தாழ்ந்த சடையார் ஆலயங்கள் பலவும் சார்ந்து வணங்குவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

190

சீரார் காஞ்சி மன்னும் திருக் காமக் கோட்டம் சென்று இறைஞ்சிநீரார் சடையார் அமர்ந்து அருளும் நீடு திரு மேற்றளி மேவிஆரா அன்பில் பணிந்து ஏத்தும் அளவில் நுந்தா ஒண் சுடராம்பாரார் பெருமைத் திருப் பதிகம் பாடி மகிழ்ந்து பர வினார்.
சொற்பிரிப்பு
சீரார் காஞ்சி மன்னு திருக்காமக் கோட்டம் சென்று இறைஞ்சிநீரார் சடையார் அமர்ந்தருளும் நீடு திருமேற்றளி மேவிஆரா அன்பில் பணிந்து ஏத்தும் அளவில் “நுந்தா ஒண்சுடராம்”பாரார் பெருமைத் திருப்பதிகம் பாடி மகிழ்ந்து பரவினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

191

ஓண காந்தன் தளி மேவும் ஒருவர் தம்மை உரிமையுடன்பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமைத் திறம் பேசிக்காண மோடு பொன்வேண்டி நெய்யும் பாலும் கலை விளங்கும்யாணர்ப்பதிகம் எடுத்து ஏத்தி எண்ணில் நிதிபெற்று இனிது இருந்தார்.
சொற்பிரிப்பு
ஓண காந்தன்தளி மேவும் ஒருவர் தம்மை உரிமையுடன்பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமைத் திறம் பேசிக்காணமோடு பொன் வேண்டி “நெய்யும் பாலும்” கலை விளங்கும்யாணர்ப் பதிகம் எடுத்து ஏத்தி எண்ணில் நிதி பெற்று இனிது இருந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

192

அங்கண் அமர்வார் அனே கதங்கா வதத்தை எய்தி உள்ள ணைந்துசெங்கண் விடையார் தமைப் பணிந்து தேன் நெய்புரிந்து என்று எடுத்ததமிழ்தங்கும் இடமாம் எனப் பாடித் தாழ்ந்து பிறவும் தானங்கள்பொங்கு காத லுடன் போற்றிப் புரிந்தபதியில் பொருந்து நாள்.
சொற்பிரிப்பு
அங்கண் அமர்வார் அநேகதங்காபதத்தை எய்தி உள் அணைந்துசெங்கண் விடையார் தமைப் பணிந்து “தேன் நெய் புரிந்து” என்று எடுத்த தமிழ்“தங்கும் இடமாம்” எனப்பாடித் தாழ்ந்து பிறவும் தானங்கள்பொங்கு காதலுடன் போற்றிப் புரிந்து அப்பதியில் பொருந்தும் நாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

193

பாடல் இசையும் பாணியினால் பாவைத் தழுவக் குழைக் கம்பர்ஆடல் மருவும் சேவடிகள் பரவிப் பிரியாது அமர்கின்றார்நீட மூதூர்ப் புறத்து இறைவர் நிலவும் பதிகள் தொழவிருப்பால்மாடம் நெருங்கு வன் பார்த்தான் பனம்காட்டூரில் வந்து அடைந்தார்.
சொற்பிரிப்பு
பாடல் இசையும் பாணியினால் பாவை தழுவக் குழைகம்பர்ஆடல் மருவும் சேவடிகள் பரவிப் பிரியாது அமர்கின்றார்நீட மூதூர்ப்புறத்து இறைவர் நிலவும் பதிகள் தொழ விருப்பால்மாடம் நெருங்கு வன்பார்த்தான் பனங்காட்டூரில் வந்து அடைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

194

செல்வம் மல்கு திருப்பனங் காட்டூரில் செம் பொன் செழும் சுடரைஅல்லல் அறுக்கும் அரு மருந்தை வணங்கி அன்பு பொழி கண்ணீர்மல்க நின்று விடையின் மேல் வருவான் எனும் வண்தமிழப் பதிகம்நல்ல இசையின் உடன் பாடிப் போந்து புறம்பு நண் ணுவார்.
சொற்பிரிப்பு
செல்வம் மல்கு திருப்பனங்காட்டூரில் செம்பொன் செழுஞ்சுடரைஅல்லல் அறுக்கும் அருமருந்தை வணங்கி, அன்பு பொழி கண்ணீர்மல்க நின்று “விடையின் மேல் வருவான்” எனும் வண் தமிழ்ப்பதிகம்நல்ல இசையின் உடன்பாடிப் போந்து புறம்பு நண்ணுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

195

மன்னும் திருமால் பேறு அணைந்து வணங்கிப் பரவித் திரு வல்லம்தன்னுள் எய்தி இறைஞ்சிப் போய்ச் சாரும் மேல் பால் சடைக்கற்றைப்பின்னல் முடியார் இடம் பலவும் பேணி வணங்கிப் பெரும் தொண்டர்சென்னி முகில் தோய் தடம் குவட்டுத் திருக் திருக்காளத்தி மலைசேர்ந்தார்.
சொற்பிரிப்பு
மன்னு திருமாற்பேறு அணைந்து வணங்கிப் பரவித் திருவல்லம்தன் உள் எய்தி இறைஞ்சிப் போய்ச், சாரும் மேல் பால், சடைக்கற்றைப்பின்னல் முடியார் இடம்பலவும் பேணி வணங்கிப் பெருந்தொண்டர்சென்னி முகில் தோய் தடங் குவட்டுத் திருக்காளத்தி மலை சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

196

தடுக்கலாகாப் பெருங் காதல் தலை நின்று அருளும் கண்ணப்பர்இடுக்கண் களைந்து ஆட் கொண்டு அருளும் இறைவர் மகிழ்ந்த காளத்திஅடுக் கல் சேர அணைந்து பணிந்து அருளால் ஏறி அன்பாறும்அடுப்பத் திருமுன் சென்று எய்தி மலை மேல் மருந்தை வணங்கினார்.
சொற்பிரிப்பு
தடுக்கல் ஆகாப் பெருங்காதல் தலை நின்று அருளும் கண்ணப்பர்இடுக்கண் களைந்து ஆட்கொண்டருளும் இறைவர் மகிழ்ந்த காளத்திஅடுக்கல் சேர அணைந்து பணிந்து அருளால் ஏறி அன்பு ஆறுமடுப்பத் திருமுன் சென்று எய்தி மலைமேல் மருந்தை வணங்கினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

197

வணங்கி உள்ளம் களி கூர மகிழ்ந்து போற்றி மதுர இசைஅணங்கு செண் டாடு எனும் பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர்மணம் கொள் மலர்ச்சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னும் பதிஇணங்கு தொண்ட ருடன் கெழுமி இன்புற்று இருக்கும் அந் நாளில்.
சொற்பிரிப்பு
வணங்கி உள்ளம் களிகூர மகிழ்ந்து போற்றி மதுரஇசைஅணங்கு “செண்டு ஆடு” எனும் பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர்மணங்கொள் மலர்ச் சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னுபதிஇணங்கு தொண்டருடன் கெழுமி இன்புற்று இருக்கும் அந்நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

198

வட மாதிரத்துப் பருப் பதம் திருக் கேதார மலையும் முதல்இடமா அரனார் தாம் உவந்த எல்லாம் இங்கே இருந்து இறைஞ்சிநடம் ஆடிய சேவடி யாரைநண்ணி னார் போல் உள் நிறைந்துதிடமாம் கருத்தில் திருப் பதிகம் பாடிக் காதல் சிறந்து இருந்தார்.
சொற்பிரிப்பு
வடமாதிரத்துப் பருப்பதமும் திருக்கேதார மலையும் முதல்இடமா அரனார் தாம் உவந்த எல்லாம் இங்கே இருந்து இறைஞ்சிநடம் ஆடிய சேவடியாரை நண்ணினார் போல் உள் நிறைந்துதிடமாம் கருத்தில் திருப்பதிகம் பாடிக் காதல் சிறந்து இருந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

199

அங்கு சிலநாள் வைகிய பின் அருளால் போந்து பொரு விடையார்தங்கும் இடங்கள் எனைப் பலவும் சார்ந்து தாழ்ந்து தமிழ் பாடிப்பொங்கு புணரிக் கரை மருங்கு புவியுள் சிவ லோகம் போலத்திங்கள் முடியார் அமர்ந்த திரு ஒற்றி யூரைச் சென்று அடைந்தார்.
சொற்பிரிப்பு
அங்குச் சிலநாள் வைகியபின் அருளால் போந்து பொருவிடையார்தங்கும் இடங்கள் எனைப் பலவும் சார்ந்து தாழ்ந்து தமிழ்பாடிப்பொங்கு புணரிக் கரை மருங்கும் புவியுள் சிவலோகம் போலத்திங்கள் முடியார் அமர்ந்த திருஒற்றியூரைச் சென்று அடைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

200

அண்ணல் தொடர்ந்து ஆவணம் காட்டி ஆண்ட நம்பி எழுந்து அருளஎண்ணில் பெருமை ஆதி புரி இறைவர் அடியார் எதிர் கொள்வார்வண்ண வீதி வாயில் தொறும் வாழை கமுகு தோர ணங்கள்சுண்ண நிறை பொன் குடம் தூப தீபம் எடுத்துத் தொழ எழுங்கால்.
சொற்பிரிப்பு
அண்ணல் தொடர்ந்து ஆவணம் காட்டி ஆண்ட நம்பி எழுந்தருளஎண்ணில் பெருமை ஆதிபுரி இறைவர் அடியார் எதிர்கொள்வார்வண்ண வீதி வாயில்தொறும் வாழை கமுகு தோரணங்கள்சுண்ணம் நிறை பொன்குடம் தூப தீபம் எடுத்துத் தொழ எழுங்கால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

201

வர மங்கல நல்லியம் முழங்க வாச மாலை அணி அரங்கில்புர மங்கையர்கள் நடம் ஆடப் பொழியும் வெள்ளப் பூ மாரிஅர மங்கையரும் அமரர் களும் வீச அன்பர் உடன் புகுந்தார்பிரமன் தலையில் பலியு கந்த பிரா னார் விரும்பும் தொண்டர்.
சொற்பிரிப்பு
வரமங்கலம் நல் இயம் முழங்க வாச மாலை அணி அரங்கில்புர மங்கையர்கள் நடம் ஆடப் பொழியும் வெள்ளப் பூமாரிஅரமங்கையரும் அமரர்களும் வீச அன்பருடன் புகுந்தார்பிரமன் தலையில் பலி உவந்த பிரானார் விரும்பு பெருந்தொண்டர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

202

ஒற்றி ஊரின் உமை யோடும் கூட நின்றார் உயர் தவத்தின்பற்று மிக்க திருத்தொண்டர் பரந்த கடல் போல் வந்து ஈண்டிச்சுற்றம் அணைந்து துதி செய்யத் தொழுது தம் பிரான் அன்பர்கொற்ற மழ வேறு உடையவர்தம் கோயில் வாயில் எய்தினார்.
சொற்பிரிப்பு
ஒற்றியூரின் உமையோடும் கூட நின்றார் உயர்தவத்தின்பற்று மிக்க திருத்தொண்டர் பரந்த கடல்போல் வந்து ஈண்டிச்சுற்றும் அணைந்து துதிசெய்யத் தொழுது தம்பிரான் அன்பர்கொற்ற மழ ஏறு உடையவர் தம் கோயில் வாயில் எய்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

203

வானை அளக்கும் கோபு ரத்தை மகிழ்ந்து பணிந்து புகுந்து வளர்கூனல் இளம் வெண்பிறைச் சடையார் கோயில் வலம் கொண்டு எதிர்குறுகிஊனும் உயிரும் கரைந்து உருக உச்சி குவித்த கையின் உடன்ஆன காதல் உடன் வீழ்ந் தார் ஆரா அன்பின் ஆரூரர்.
சொற்பிரிப்பு
வானை அளக்கும் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து புகுந்து, வளர்கூனல் இளவெண் பிறைச்சடையார் கோயில் வலங்கொண்டு எதிர் குறுகிஊனும் உயிரும் கரைந்து உருக உச்சி குவித்த கையினுடன்ஆன காதலுடன் வீழ்ந்தார் ஆரா அன்பின் ஆரூரர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

204

ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்து அறியும்நாட்ட மலரும் திருநுதலார் நறும் பொன் கமலச் சேவடியில்கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோதில் அமுத இசை கூடப்பாட்டும் பாடி பரவி எனும் பதிகம் எடுத்துப் பாடினார்.
சொற்பிரிப்பு
ஏட்டு வரியில் “ஒற்றியூர் நீங்கல்” என்ன எழுத்து அறியும்நாட்டம் மலரும் திருநுதலார் நறும்பொன் கமலச் சேவடியில்கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோதில் அமுத இசைகூடப்“பாட்டும் பாடிப் பரவி” எனும் பதிகம் எடுத்துப் பாடினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

205

பாடி அறிவு பரவசமாம் பரிவு பற்றப் புறம் போந்துநீடுவிருப்பில் பெரும் காதல் நிறைந்தஅன்பர் பலர் போற்றத்தேடும் அயனும் திரு மாலும் அறிதற்கு அரிய திருப்பாதம்கூடும் காலங்களில் அணைந்து பரவிக் கும்பிட்டு இனிது இருந்தார்.
சொற்பிரிப்பு
பாடி அறிவு பரவசமாம் பரிவு பற்றப் புறம் போந்துநீடு விருப்பில் பெருங்காதல் நிறைந்த அன்பர் பலர் போற்றத்தேடும் அயனும் திருமாலும் அறிதற்கு அரிய திருப்பாதம்கூடும் காலங்களில் அணைந்து பரவிக் கும்பிட்டு இனிதிருந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

206

இந்த நிலமையார் இவர் இங்கு இருந்தார் முன்பே இவர்க்காகஅந்தண் கயிலைமலை நீங்கி அருளால் போந்த அநிந் திதையார்வந்து புவி மேல் அவதரித்து வளர்ந்து பின்பு வன்தொண்டர்சந்தவிரை சூழ் புயம் சேர்ந்த பரிசு தெரியச் சாற்றுவாம்.
சொற்பிரிப்பு
இந்த நிலைமையார் இவர் இங்கு இருந்தார்; முன்பே இவர்க்காகஅந்தண் கயிலை மலை நீங்கி அருளால் போந்த அநிந்திதையார்வந்து புவிமேல் அவதரித்து வளர்ந்து பின்பு வன்தொண்டர்சந்த விரை சூழ் புயம் சேர்ந்த பரிசு தெரியச் சாற்றுவாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

207

நாலாம் குலத்தில் பெருகு நலம் உடையார் வாழும் ஞாயிற்றின்மேலாங் கொள்கை வேளாண்மை மிக்க திரு ஞாயிறு கிழவர்பாலாதரவு தரும் மகளர் ஆகிப் பார் மேல் அவதரித்தார்ஆலாலஞ் சேர் கறை மிடற்றார் அருளால் முன்னை அநிந்திதையார்.
சொற்பிரிப்பு
நாலாம் குலத்தில் பெருகு நலம் உடையார் வாழும் ஞாயிற்றின்மேலாம் கொள்கை வேளாண்மை மிக்க திருஞாயிறு கிழவர்பால் ஆதரவு தரு மகளார் ஆகிப் பார்மேல் அவதரித்தார்ஆலாலம்சேர் கறைமிடற்றார் அருளால் முன்னை அநிந்திதையார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

208

மலையான் மடந்தை மலர்ப் பாதம் மறவா அன்பால் வந்த நெறிதலையாம் உணர்வு வந்து அணையத் தாமே அரிந்த சங்கி லியார்அலையார் வேல் கண் சிறு மகளிர் ஆயத் தோடும் விளையாட்டுநிலை யாயின அப் பருவங்கள்தோறும் நிகழ நிரம் புவார்.
சொற்பிரிப்பு
மலையான் மடந்தை மலர்ப்பாதம் மறவா அன்பால் வந்தநெறிதலையாம் உணர்வு வந்து அணையத் தாமே அறிந்த சங்கிலியார்அலையார் வேல்கண் சிறுமகளிர் ஆயத் தோடும் விளையாட்டுநிலை ஆயின அப்பருவங்கள் தோறும் நிகழ நிரம்புவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

209

சீர்கொள் மரபில் வரும் செயலே அன்றித் தெய்வ நிகழ் தன்மைபாரில் எவரும் அதி சயிக்கும் பண்பில் வளரும் பைந் தொடியார்வாரும் அணிய அணியவாம் வளர் மென் முலைகள் இடை வருத்தச்சாரும் பதத்தில் தந்தையார் தம்கண் மனைவி யார்க்கு உரைப்பார்.
சொற்பிரிப்பு
சீர்கொள் மரபில் வருஞ்செயலே அன்றித் தெய்வ நிகழ்தன்மைபாரில் எவரும் அதிசயிக்கும் பண்பில் வளரும் பைந்தொடியார்வாரும் அணிய அணியவாம் வளர்மென் முலைகள் இடைவருத்தச்சாரும் பதத்தில் தந்தையார் தங்கண் மனைவியார்க்கு உரைப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

210

வடிவும் குணமும் நம்முடைய மகட்கு மண் உள் ளோர்க்கு இசையும்படிவம் அன்றி மேல் பட்ட பரி சாம் பான்மை அறிகிலோம்கடிசேர் மணமும் இனி நிகழும் காலம் என் னக் கற்புவளர்கொடியே அனைய மனை வியார் ஏற்கும் ஆற்றாக் கொடும் என்றார்.
சொற்பிரிப்பு
“வடிவும் குணமும் நம்முடைய மகட்கு மண் உளோர்க்கு இசையும்படிவம் அன்றி மேற்பட்ட பரிசாம் பான்மை அறிகிலோம்;கடிசேர் மணமும் இனி நிகழும் காலம்” என்னக் கற்பு வளர்கொடியே அனைய மனைவியார் “ஏற்கும் ஆற்றால் கொடும்” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

211

தாய ரோடு தந்தையார் பேசக் கேட்ட சங்கி லியார்ஏயு மாற்றம் அன்றி எம் பெருமான் ஈசன் திரு அருளேமேய ஒருவர்க்கு உரியது யான்வேறு என் விளையும் என வெருவுற்(று)ஆயஉணர்வு மயங்கி மிக அயர்ந்தே அவனி மேல் விழுந்தார்.
சொற்பிரிப்பு
தாயரோடு தந்தையார் பேசக் கேட்ட சங்கிலியார்“ஏயும் மாற்றம் அன்று இது; எம் பெருமான் ஈசன் திருஅருளேமேய ஒருவர்க்கு உரியது யான் வேறு என் விளையும்” என வெருவுற்றுஆய உணர்வு மயங்கி மிக அயர்ந்தே அவனி மேல் விழுந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

212

பாங்கு நின்ற தந்தையார் தாயார் பதைத்துப் பரிந்து எடுத்தேஏங்கும் உள்ளத்தினர் ஆகி இவளுக்கு என்னே உற்றது எனத்தாங்கிச் சீத விரைப் பனி நீர் தெளித்து தைவந்தது நீங்கவாங்குசிலை நன்னுதலாரை வந்தது உனக்கு இங்கு என்? என்றார்.
சொற்பிரிப்பு
பாங்கு நின்ற தந்தையார் தாயார் பதைத்துப் பரிந்து எடுத்தேஏங்கும் உள்ளத்தினர் ஆகி “இவளுக்கு என்னோ உற்றது” எனத்தாங்கிச் சீத விரைப் பனிநீர் தெளித்துத் தைவந்து அது நீங்கவாங்கு சிலை நன்நுதலாரை “வந்தது உனக்கு இங்கு என்?” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

213

என்று தம்மை ஈன்று எடுத்தார் வினவ மறை விட்டு இயம்புவார்இன்று என்திறத்து நீர் மொழிந்த இது என் பரிசுக்கு இசையாதுவென்றி விடையார் அருள் செய்தார் ஒருவர்க்கு உரியேன் யான் இனிமேல்சென்று திரு ஒற்றியூர் அணைந்து சிவனார் அருளில் செல்வன் என.
சொற்பிரிப்பு
என்று தம்மை ஈன்று எடுத்தார் வினவ மறைவிட்டு இயம்புவார்“இன்று என் திறத்து நீர் மொழிந்த இது என் பரிசுக்கு இசையாதுவென்றி விடையார் அருள்செய்தார் ஒருவர்க்கு உரியேன் யான் இனிமேல்சென்று திருஒற்றியூர் அணைந்து சிவனார் அருளில் செல்வன்” என.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

214

அந்த மாற்றம் கேட்டவர் தாம் அயர்வும் பயமும் அதிசயமும்வந்த உள்ளத்தினர் ஆகி மற்ற மாற்றம் மறைத்து ஒழுகப்பந்தம்நீடும் இவர் குலத்து நிகர்ஆம் ஒருவன் பரிசு அறியான்சிந்தை விரும்பி மகள்பேச விடுத் தான் சிலரும் சென்று இசைத்தார்.
சொற்பிரிப்பு
அந்த மாற்றம் கேட்டவர் தாம் அயர்வும் பயமும் அதிசயமும்வந்த உள்ளத்தினர் ஆகி மற்று அம்மாற்றம் மறைத்து ஒழுகப்பந்தம் நீடும் இவர்குலத்து நிகராம் ஒருவன் பரிசு அறியான்சிந்தை விரும்பி மகள் பேச விடுத்தான்; சிலரும் சென்று இசைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

215

தாதை யாரும் அது கேட்டுத் தன்மை விளம்பத் தகாமை யினால்ஏதம் எய்தாவகை மொழிந்து போக்க அவர் ஆங்கு எய்தாமுன்தீதுஅங்கு இழைத்தே இறந்தான் போல் செல்ல விடுத்தார் உடன்சென்றான்மாதராரைப் பெற்றார் மற்று அதனைக் கேட்டு மனம் மருண்டார்.
சொற்பிரிப்பு
தாதையாரும் அது கேட்டுத் தன்மை விளம்பத் தகாமையினால்ஏதம் எய்தா வகை மொழிந்து போக்க, அவர் ஆங்கு எய்தா முன்தீது அங்கு இழைத்தே இறந்தான் போல் செல்ல விடுத்தார் உடன்சென்றான்மாதராரைப் பெற்றார் மற்று அதனைக் கேட்டு மனம் மருண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

216

தையலார் சங்கிலியார் தம் திறத்துப் பேசத் தகா வார்த்தைஉய்ய வேண்டும் நினைவு உடையார்உரையார் என்றுஅங்கு உலகுஅறியச்செய்த விதிபோல் இது நிகழச் சிறந்தார்க்கு உள்ளபடி செப்பிநையும் உள்ளத்துடன் அஞ்சி நங்கை செயலே உடன் படுவார்.
சொற்பிரிப்பு
“தையலார் சங்கிலியார் தம் திறத்துப் பேசத் தகாவார்த்தைஉய்யவேண்டும் நினைவுடையார் உரையார்” என்றங்கு உலகறியச்செய்த விதிபோல் இது நிகழச், சிறந்தார்க்கு உள்ளபடி செப்பிநையும் உள்ளத்துடன் அஞ்சி நங்கை செயலே உடன்படுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

217

அணங்கே ஆகும் இவள் செய்கை அறிந்தோர் பேச அஞ்சுவரால்வணங்கும் ஈசர் திறம் அன்றி வார்த்தைஅறியாள் மற்று ஒன்றும்குணங்கள் இவையாம் இனி இவள்தான் குறித்த படியே ஒற்றிநகர்ப்பணம் கொள் அரவச் சடை யார் சடை யார்தம்பால் கொண்டு அணை வோம் எனப் பக ர்வார்.
சொற்பிரிப்பு
“அணங்கே ஆகும் இவள் செய்கை அறிந்தோர் பேச அஞ்சுவரால்வணங்கும் ஈசர் திறம் அன்றி வார்த்தை அறியாள் மற்று ஒன்றும்குணங்கள் இவையாம் இனி இவள் தான் குறித்த படியே ஒற்றி நகர்ப்பணங்கொள் அரவச் சடையார் தம்பால் கொண்டு அணைவோம்” எனப் பகர்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

218

பண்ணார் மொழிச் சங்கிலியாரை நோக்கிப் பயந்தா ரொடும் கிளைஞர்தெண்ணீர் முடியார் திரு வொற்றியூரில் சேர்ந்து செல் கதியும்கண்ணார் நுதலார் திரு அருளால் ஆகிக் கன்னி மாடத்துத்தண்ணார் தடம்சூழ் அந்நகரில் தங்கிப் புரிவீர் தவம் என்று.
சொற்பிரிப்பு
பண் ஆர் மொழிச் சங்கிலியாரை நோக்கிப் பயந்தாரொடும் கிளைஞர்“தெண் நீர் முடியார் திருஒற்றியூரில் சேர்ந்து செல்கதியும்கண்ஆர் நுதலார் திருஅருளால் ஆகிக் கன்னி மாடத்துத்தண்ஆர் தடஞ்சூழ் அந்நகரில் தங்கிப் புரிவீர் தவம்” என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

219

பெற்ற தாதை சுற்றத்தார் பிறை சேர் முடியார் விதியாலேமற்றுச் செயல் ஒன்று அறியாது மங்கையார் சங்கிலியார் தாம்சொற்ற வண்ணம் செயத் துணிந்து துதைந்த செல்வத்தொடும் புரங்கள்செற்ற சிலையார் திருவொற்றியூரில் கொண்டு சென்று அணைந்தார்.
சொற்பிரிப்பு
பெற்ற தாதை சுற்றத்தார் பிறைசேர் முடியார் விதியாலேமற்றுச் செயல் ஒன்று அறியாது மங்கையார் சங்கிலியார் தாம்சொற்ற வண்ணம் செயத்துணிந்து, துதைந்த செல்வத் தொடும்புரங்கள்செற்ற சிலையார் திருஒற்றியூரில் கொண்டு சென்று அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

220

சென்னி வளர் வெண்பிறை அணிந்த சிவனார் கோயிலுள் புகுந்துதுன்னும் சுற்றத் தொடும் பணிந்து தொல்லைப் பதியோர் இசைவினால்கன்னிமாடம் மருங்கு அமைத்துக் கடிசேர் முறைமை காப்பு இயற்றிமன்னும் செல்வம் தக வகுத்துத்தந்தையார் வந்து அடிவணங்கி.
சொற்பிரிப்பு
சென்னி வளர் வெண்பிறை அணிந்த சிவனார் கோயில் உள்புகுந்துதுன்னும் சுற்றத்தொடும் பணிந்து தொல்லைப் பதியோர் இசைவினால்கன்னி மாடம் மருங்கு அமைத்துக், கடிசேர் முறைமைக் காப்பு இயற்றிமன்னும் செல்வம் தக வகுத்துத் தந்தையார் வந்து அடிவணங்கி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

221

யாங்கள் உமக்குப் பணி செய்ய ஈசற்கு ஏற்ற பணி விரும்பிஓங்கு கன்னி மாடத்தில் உறை கின்றீர் என்று உரைக் கின்றார்தாங் கற்கு அரிய கண்கள் நீர்த் தாரை ஒழுகத் தரியாதேஏங்கு சுற்றத் தொடும் இறைஞ் சிப் போனார் எயில் சூழ்தம்பதியில்.
சொற்பிரிப்பு
“யாங்கள் உமக்குப் பணி செய்ய ஈசற்கு ஏற்ற பணி விரும்பிஓங்கு கன்னி மாடத்தில் உறைகின்றீர்” என்று உரைக்கின்றார்தாங்கற்கு அரிய கண்கள் நீர்த் தாரை ஒழுகத் தரியாதேஏங்கு சுற்றத்தொடும் இறைஞ்சிப் போனார் எயில் சூழ் தம் பதியில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

222

காதல் புரிந்து தவம் புரியும் கன்னியார் அங்கு அமர்கின்றார்பூத நாதர் கோயிலினில் காலம் தோறும் புக்கு இறைஞ்சிநீதி முறைமை வழுவாது தமக்கு நேர்ந்த பணி செய்யச்சீதமலர்ப் பூ மண்டபத்து திரைசூழ் ஒருபால் சென்று இருந்து.
சொற்பிரிப்பு
காதல் புரிந்து தவம்புரியும் கன்னியார் அங்கு அமர்கின்றார்பூத நாதர் கோயிலினில் காலம் தோறும் புக்கு இறைஞ்சிநீதி முறைமை வழுவாது தமக்கு நேர்ந்த பணி செய்யச்சீத மலர்ப் பூமண்டபத்துத் திரை சூழ் ஒருபால் சென்று இருந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

223

பண்டு கயிலைத் திருமலையில் செய்யும் பணியின் பான்மை மனம்கொண்ட உணர்வு தலை நிற்பக் குலவு மலர்மென் கொடிஅனையார்வண்டு மருவும் திரு மலர் மெல் மாலை காலங்களுக்கு ஏற்பஅண்டர் பெருமான் முடிச் சாத்த அமைத்து வணங்கி அமரும்நாள்.
சொற்பிரிப்பு
பண்டு கயிலைத் திருமலையில் செய்யும் பணியின் பான்மை, மனம்கொண்ட உணர்வு தலைநிற்பக் குலவு மலர் மென்கொடி அனையார்வண்டு மருவும் திருமலர் மென்மாலை காலங்களுக்கு ஏற்பஅண்டர் பெருமான் முடிச்சாத்த அமைத்து வணங்கி அமரும் நாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

224

அந்தி வண்ணத்து ஒருவர் திரு அருளால் வந்த ஆரூரர்கந்த மாலைச் சங்கிலியார் தம்மைக் காதல் மணம் புணரவந்த பருவம் ஆதலால் வகுத்த தன்மை வழு வாதமுந்தை விதியால் வந்து ஒருநாள் முதல்வர் கோயிலுள் புகுந்தார்.
சொற்பிரிப்பு
அந்தி வண்ணத்து ஒருவர் திருவருளால் வந்த ஆரூரர்கந்த மாலைச் சங்கிலியார் தம்மைக் காதல் மணம் புணரவந்த பருவம் ஆதலால் வகுத்த தன்மை வழுவாதமுந்தை விதியால் வந்து ஒருநாள் முதல்வர் கோயில் உள்புகுந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

225

அண்டர் பெருமான் அந்த ணராய் ஆண்ட நம்பி அங்கணரைப்பண்டை முறைமை யால் பணிந்து பாடிப் பரவிப் புறம்போந்துதொண்டு செய்வார் திருத் தொழில்கள் கண்டு தொழுது செல்கின்றார்புண்டரீகத் தடம் நிகழ் பூந்திரு மண்டபத் தின் உள்புகுந்தார்.
சொற்பிரிப்பு
அண்டர் பெருமான் அந்தணராய் ஆண்ட நம்பி அங்கணரைப்பண்டை முறைமையால் பணிந்து பாடிப் பரவிப் புறம்போந்துதொண்டு செய்வார் திருத்தொழில்கள் கண்டு தொழுது செல்கின்றார்புண்டரீகத் தடம்நிகர் பூந் திருமண்டபத்தின் உள் புகுந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

226

அன்புநாரா அஞ்சு எழுத்து நெஞ்சு தொடுக்க அலர் தொடுத்தேஎன்பு உள் உருக்கும் அடியாரைத் தொழுது நீங்கி வேறுஇடத்துமுன்பு போல திரைநீக்கி முதல்வர் சாத்தும் பணி கொடுத்துமின்போல் மறையும் சங்கிலியார் தம்மை விதியால் கண் உற்றார்.
சொற்பிரிப்பு
அன்பு நாரா அஞ்செழுத்து நெஞ்சு தொடுக்க அலர் தொடுத்தேஎன்புஉள் உருக்கும் அடியாரைத் தொழுது நீங்கி வேறு இடத்துமுன்பு போலத் திரை நீக்கி முதல்வர் சாத்தும் பணி கொடுத்துமின்போல் மறையும் சங்கிலியார் தம்மை விதியால் கண்ணுற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

227

கோவா முத்தும் சுரும்பு ஏறாக்கொழு மென் முகையும் அனையாரைச்சேவார் கொடியார் திருத் தொண்டர் கண்டபோது சிந்தை நிறைகாவாதவர் பால் போய் விழத் தம்பால் காமனார் துரந்தபூ வாளிகள் வந்துற வீழத் தரியார் புறமே போந்து உரைப்பார்.
சொற்பிரிப்பு
கோவா முத்தும் சுரும்பு ஏறாக் கொழுமென் முகையும் அனையாரைச்சேவார் கொடியார் திருத்தொண்டர் கண்ட போது, சிந்தை நிறைகாவாது அவர்பால் போய் வீழத் தம்பால் காமனார் துரந்தபூவாளிகள் வந்து உற வீழத் தரியார் புறமே போந்து உரைப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

228

இன்னபரிசு என்று அறி அரிதால் ஈங்கு ஓர் மருங்கு திரைக்கு உள்ளால்பொன்னும் மணியும் மலர்ந்த ஒளி அமுதில் அளா விப்பு தியமதிதன்னுள் நீர் மையால் குழைத்துச் சமைத்த மின்னுக் கொடி போல்வாள்என்னை உள்ளம் திரிவித்தாள் யார் கொல் என்று அங்கு இயம்புதலும்.
சொற்பிரிப்பு
இன்ன பரிசு என்று அறிவு அரிதால்; ஈங்கு ஓர் மருங்கு திரைக்கு உள்ளால்பொன்னும் மணியும் மலர்ந்த ஒளி அமுதில் அளாவிப் புதிய மதிதன்உள் நீர்மையால் குழைத்துச் சமைத்த மின்னுக் கொடி போல்வாள்என்னை உள்ளம் திரிவித்தாள்; யார்கொல்?” என்றங்கு இயம்புதலும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

229

அருகு நின்றார் விளம்புவார் அவர் தாம் நங்கை சங்கிலியார்பெருகும் தவத்தால் ஈசர் பணி பேணும் கன்னியார் என்னஇருவரால் இப்பிறவியை எம் பெருமான் அருளால் எய்து வித்தார்மருவும் பரவை ஒருத்தி இவள் மற்றையவளாம் என மருண்டார்.
சொற்பிரிப்பு
அருகு நின்றார் விளம்புவார்: “அவர் தாம் நங்கை சங்கிலியார்;பெருகும் தவத்தால் ஈசர்பணி பேணும் கன்னியார்” என்ன“இருவரால் இப்பிறவியை எம் பெருமான் அருளால் எய்துவித்தார்மருவும் பரவை ஒருத்தி இவள் மற்றை அவளாம்” என மருண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

230

மின்னார் சடையார் தமக்காளாம் விதியால் வாழும் எனை வருத்தித்தன்னார் அருளால் வரும்பேறு தவத்தால் அணையா வகை தடுத்தேஎன்னாருயிரும் எழில் மலரும் கூடப் பிணைக்கும் இவள் தன்னைப்பொன்னார் இதழி முடியார் முடியார்பால் பெறுவேன் என்று போய்ப்புக்கார்.
சொற்பிரிப்பு
“மின் ஆர் சடையார் தமக்கு ஆளாம் விதியால் வாழும் எனை வருத்தித்தன் ஆர் அருளால் வரும் பேறு தவத்தால் அணையா வகை தடுத்தேஎன் ஆர் உயிரும் எழில் மலரும் கூடப் பிணைக்கும் இவள் தன்னைப்பொன்ஆர் இதழி முடியார்பால் பெறுவேன்” என்று போய்ப் புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

231

மலர்மேல் அயனும் நெடுமாலும் வானும் நிலனும் கிளைத்து அறியாநிலவு மலரும் திரு முடியும் நீடும் கழலும் உடையாரைஉலகம் எலாம் தாம் உடையா ராயும் ஓற்றியூர் அமர்ந்தஇலகு சோதி பரம்பொருளை இறைஞ்சி முன் நின்று ஏத்துவார்.
சொற்பிரிப்பு
மலர்மேல் அயனும் நெடுமாலும் வானும் நிலனும் கிளைத்து அறியாநிலவு மலரும் திருமுடியும் நீடும் கழலும் உடையாரைஉலகம் எல்லாம் தாம்உடையார் ஆயும் ஒற்றியூர் அமர்ந்தஇலகு சோதிப் பரம்பொருளை இறைஞ்சி முன் நின்று ஏத்துவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

232

மங்கை ஒருபால் மகிழ்ந்ததுவும் அன்றி மணிநீள் முடியின் கண்கங்கை தன்னைக் கரந்து அருளும் காதல் உடையீர் அடியேனுக்(கு)இங்கு நுமக்குத் திருமாலை தொடுத்து என்உள்ளத்து தொடை அவிழ்த்ததிங்கள் வதனச் சங்கிலியைத் தந்து என்வருத்தம் தீரும் என.
சொற்பிரிப்பு
மங்கை ஒருபால் மகிழ்ந்ததுவும் அன்றி மணி நீள் முடியின்கண்கங்கை தன்னைக் கரந்து அருளும் காதல் உடையீர்! அடியேனுக்குஇங்கு நுமக்குத் திருமாலை தொடுத்து என் உள்ளத் தொடை அவிழ்த்ததிங்கள் வதனச் சங்கிலியைத் தந்து என் வருத்தம் தீரும்” என.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

233

அண்ணலார் முன் பலவும் அவர் அறிய உணர்த்திப்புறத்து அணைந்தேஎண்ணம் எல்லாம் உமக்கு அடிமை யாமாறு எண்ணும் என்நெஞ்சில்திண்ணம் எல்லாம் உடை வித்தாள் செய்வது ஒன்றும் அறியேன்யான்தண்ணிலா மின் ஒளிர் பவளச் சடையீர் அருளும் எனத்தளர்வார்.
சொற்பிரிப்பு
அண்ணலார் முன் பலவும் அவர் அறிய உணர்த்திப் புறத்து அணைந்தே“எண்ணம் எல்லாம் உமக்கு அடிமை ஆமாறு எண்ணும் என் நெஞ்சில்திண்ணம் எல்லாம் உடைவித்தாள் செய்வது ஒன்றும் அறியேன் யான்தண்நிலா மின் ஒளிர் பவளச்சடையீர்! அருளும்” எனத் தளர்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

234

மதிவாண் முடியார் மகிழ் கோயில் புறத்தோர் மருங்கு வந்து இருப்பக்கதிரோன் மேலைக் கடல் காண மாலைக் கடலைக் கண்டு அயர்வார்முதிரா முலையார் தம்மை மணம் புணர்க்க வேண்டி முளரி வளைநிதியான் நண்பர் தமக்கு அருளும் நண்பால் நினைந்து நினைந்து அழிய.
சொற்பிரிப்பு
மதிவாள் முடியார் மகிழ்கோயில் புறத்து ஓர் மருங்கு வந்து இருப்பக்கதிரோன் மேலைக் கடல்காண மாலைக் கடலைக் கண்டு அயர்வார்முதிரா முலையார் தம்மை மணம் புணர்க்க வேண்டி முளரி வளைநிதியான் நண்பர் தமக்கருளும் நண்பால் நினைந்து நினைந்து அழிய.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

235

உம்பர் உய்ய உலகு உய்ய ஓலவேலை விடம் உண்டதம்பிரான் ஆனார் வன் தொண்டர் தம்பால் எய்திச் சங்கிலியைஇம்பர் உலகில் யாவருக்கும் எய்த ஒண்ணா இரும் தவத்துக்கொம்பை உனக்குத் தருகின்றோம் கொண்ட கவலை ஒழிகஎன்ன.
சொற்பிரிப்பு
உம்பர் உய்ய, உலகு உய்ய, ஓல வேலை விடம் உண்டதம்பிரானார் வன்தொண்டர் தம்பால் எய்திச் “சங்கிலியை,இம்பர் உலகில் யாவருக்கும் எய்த ஒண்ணா இருந்தவத்துக்கொம்பை உனக்குத் தருகின்றோம்; கொண்ட கவலை ஒழிக” என்ன.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

236

அன்று வெண்ணெய் நல்லூரில் வலிய ஆண்டு கொண்டு அருளிஒன்றும் அறியா நாயேனுக்குக் உறுதி அளித்தீர் உயிர் காக்கஇன்றும் இவளை மணம் புணர்க்க ஏன்று நின்றீர் எனப் போற்றிமன்றல் மலர்ச்சேவடி இணைக்கீழ் வணங்கி மகிழ்ந்தார் வன் தொண்டர்.
சொற்பிரிப்பு
“அன்று வெண்ணெய் நல்லூரில் வலிய ஆண்டு கொண்டருளிஒன்றும் அறியா நாயேனுக்கு உறுதி அளித்தீர்; உயிர் காக்கஇன்றும் இவளை மணம்புணர்க்க ஏன்று நின்றீர்” எனப் போற்றிமன்றல் மலர்ச்சேவடி இணைக்கீழ் வணங்கி மகிழ்ந்தார் வன்தொண்டர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

237

ஆண்டு கொண்ட அந்தணனார் அவருக்கு அருளிக் கருணை யினால்நீண்ட கங்குல் யாமத்து நீங்கி வானில் நிறை மதியம்தீண்டு கன்னி மாடத்துச் சென்று திகழ் சங்கிலி யாராம்தூண்டு சோதி விளக்கு அனையார் தம்பால் கனவில் தோன்றினார்.
சொற்பிரிப்பு
ஆண்டு கொண்ட அந்தணனார் அவருக்கு அருளிக் கருணையினால்நீண்ட கங்குல் யாமத்து நீங்கி வானில் நிறைமதியம்தீண்டு கன்னி மாடத்துச் சென்று, திகழ் சங்கிலியாராம்தூண்டு சோதி விளக்கு அனையார் தம்பால் கனவில் தோன்றினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

238

தோன்றும் பொழுதில் சங்கிலி யார் தொழுது விழுந்து பரவசமாய்ஆற்ற அன்பு பொங்கி எழுந்(து)அடியேன் உய்ய எழுந்து அருளும்பேற்றுக்கு என்யான் செய்வது எனப்பெரிய கருணை பொழிந்து அனையநீற்றுக் கோல வேதியரும் நேர் நின்று அருளிச் செய்கின்றார்.
சொற்பிரிப்பு
தோற்றும் பொழுதில் சங்கிலியார் தொழுது விழுந்து பரவசமாய்ஆற்ற அன்பு பொங்கி எழுந்து “அடியேன் உய்ய எழுந்தருளும்பேற்றுக்கு என் யான் செய்வது” எனப் பெரிய கருணை பொழிந்தனையநீற்றுக் கோல வேதியரும் நேர் நின்று அருளிச் செய்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

239

சாரும் தவத்துச் சங்கிலி! கேள்;சால என்பால் அன்பு டையான்மேரு வரையின் மேம் பட்ட தவத்தான் வெண்ணெய் நல்லூரில்யாரும் அறிய யான் ஆள உரியான் உன்னை எனை இரந்தான்வார்கொள் முலையாய்! நீஅவனை மனத்தால் அணைவாய் மகிழ்ந்து என்றார்.
சொற்பிரிப்பு
“சாரும் தவத்துச் சங்கிலி! கேள்; சால என்பால் அன்புடையான்;மேரு வரையின் மேம்பட்ட தவத்தான்; வெண்ணெய் நல்லூரில்யாரும் அறிய யான் ஆள உரியான்; உன்னை எனை இரந்தான்;வார்கொள் முலையாய்! நீ அவனை மணத்தால் அணைவாய் மகிழ்ந்து” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

240

ஆதிதேவர் முன் நின்று அங்கு அருளிச்செய்த பொழுதின் கண்மாதரார் சங்கிலியாரும் மாலும் அயனும் அறிவு அரியசீத மலர் தாமரை அடிக்கீழ் சேர்ந்து வீழ்ந்து செந்நின்றுவேத முதல்வர் முன் நடுக்கம் எய்தித் தொழுது விளம்புவார்.
சொற்பிரிப்பு
ஆதி தேவர் முன் நின்று அங்கு அருளிச் செய்த பொழுதின்கண்மாதரார் சங்கிலியாரும் மாலும் அயனும் அறிவுஅரியசீத மலர்த்தாமரை அடிக்கீழ்ச் சேர்ந்து வீழ்ந்து செந்நின்றுவேத முதல்வர் முன் நடுக்கம் எய்தித் தொழுது விளம்புவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

241

எம்பிரானே! நீர் அருளிச் செய் தார்க்கு உரியேன் யான் இமையோர்தம் பிரானே அருள் தலைமேல் கொண்டேன் தக்க விதி மணத்தால்நம்பி ஆரூர ருக்கு என்னை நல்கி அருளும் பொழுது இமயக்கொம்பின் ஆகங் கொண்டீர்க்குக் கூறும் திறம் ஒன்று உளது என்பார்.
சொற்பிரிப்பு
“எம்பிரானே! நீர் அருளிச் செய்தார்க்கு உரியேன் யான்; இமையோர்தம்பிரானே! அருள் தலைமேல் கொண்டேன்; தக்க விதிமணத்தால்நம்பி ஆரூரருக்கு என்னை நல்கி அருளும் பொழுது இமயக்கொம்பின் ஆகம் கொண்டீர்க்குக் கூறும் திறம் ஒன்றுளது” என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

242

பின்னும் பின்னல் முடியார் முன் பெருக நாணித் தொழுது உரைப்பார்மன்னும் திருவா ரூரின் கண் அவர் தாம் மிகவும் மகிழ்ந்து உறைவதுஎன்னும் தன்மை அரிந்து அருளும் எம் பிராட்டி திருமுலை தோய்மின்னும் புரிநூல் அணி மார்பீர் என்றார் குன்றா விளக்கு அனையார்.
சொற்பிரிப்பு
பின்னும் பின்னல் முடியார் முன் பெருக நாணித் தொழுது உரைப்பார்;“மன்னும் திருஆரூரின்கண் அவர் தாம் மிகவும் மகிழ்ந்து உறைவதுஎன்னும் தன்மை அறிந்து அருளும் எம்பிராட்டி திருமுலை தோய்மின்னும் புரிநூல் அணிமார்பீர்!” என்றார் குன்றா விளக்கு அனையார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

243

மற்றவர் தம் உரைகொண்டு வன் தொண்டர் நிலை மையினைஒற்றி நகர் அமர்ந்த பிரான் உணர்ந்து அருளி உரைசெய்வார்பொன் தொடியாய்! உனை இகந்து போகா மைக்கு ஒரு சபதம்அற்ற முறு நிலைமை யினால் அவன் செய்வான் எனஅருளி.
சொற்பிரிப்பு
மற்றவர் தம் உரைகொண்டு வன்தொண்டர் நிலைமையினைஒற்றி நகர் அமர்ந்தபிரான் உணர்ந்தருளி உரைசெய்வார்;“பொற்றொடியாய்! உனை இகந்து போகாமைக்கு ஒரு சபதம்அற்றம் உறு நிலைமையினால் அவன் செய்வான்” என அருளி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

244

வேய்அனைய தோளியார் பால் நின்று மீண்டு அருளித்தூயமனம் மகிழ்ந்து இருந்த தோழனார் பால் அணைந்துநீஅவளை மணம் புணரும் நிலை உரைத்தோம் அதற்கு அவள்பால்ஆயதொரு குறை உன்னால் அமைப் பதுள என்று அருள.
சொற்பிரிப்பு
வேயனைய தோளியார் பால்நின்று மீண்டருளித்தூய மனம் மகிழ்ந்து இருந்த தோழனார் பால்அணைந்து“நீயவளை மணம் புணரும் நிலை உரைத்தோம்; அதற்கு அவள்பால்ஆயது ஒரு குறை உன்னால் அமைப்பது உளது” என்று அருள.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

245

வன் தொண்டர் மனம் களித்து வணங்கி அடியேன் செய்யநின்ற குறையாது என்ன நீ அவளை மணம் புணர்தற்(கு)ஒன்றி உடனே நிகழ்வது ஒரு சபதம் அவள் முன்புசென்று கிடைத்து இவ்விரவே செய்க என அருள் செய்தார்.
சொற்பிரிப்பு
வன்தொண்டர் மனம்களித்து வணங்கி ”அடியேன் செய்யநின்ற குறை யாது” என்ன “நீ அவளை மணம் புணர்தற்குஒன்றி உடனே நிகழ்வது ஒரு சபதம் அவள் முன்புசென்றுகிடைத்து இவ்இரவே செய்க” என அருள் செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

246

என் செய்தால் இது முடியும் அது செய்வன் யான் அதற்குமின்செய்த புரி சடையீர் அருள் பெறுதல் வேண்டும் எனமுன் செய்த முறுவலுடன் முதல்வர் அவர் முகம் நோக்கிஉன்செய்கை தனக்கு இனிஎன் வேண்டுவது என்று உரைத்து அருள.
சொற்பிரிப்பு
“என் செய்தால் இது முடியும் அது செய்வன் யான் அதற்குமின் செய்த புரிசடையீர் அருள்பெறுதல் வேண்டும்” எனமுன்செய்த முறுவலுடன் முதல்வர் அவர் முகம் நோக்கி“உன் செய்கை தனக்கு இனி என் வேண்டுவது” என்று உரைத்தருள.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

247

வம்புஅணி மென் முலை அவர்க்கு மனம் கொடுத்த வன்தொண்டர்நம்பர் இவர் பிற பதியும் நயந்த கோலம் சென்றுகும் பிடவே கடவேனுக்கு இது விலக்காம் எனக் குறிப்பால்தம் பெருமான் திருமுன்பு தாம் வேண்டும் குறை இரப்பார்.
சொற்பிரிப்பு
வம்பு அணி மென் முலையவர்க்கு மனம் கொடுத்த வன்தொண்டர்“நம்பர் இவர் பிறபதியும் நயந்த கோலம் சென்றுகும்பிடவே கடவேனுக்கு இது விலக்காம்” எனும் குறிப்பால்தம்பெருமான் திருமுன்பு தாம் வேண்டும் குறை இரப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

248

சங்கரர் தாள் பணிந்து இருந்து தமிழ் வேந்தர் மொழிகின்றார்மங்கை அவள் தனைப் பிரியா வகை சபதம் செய்வதனுக்(கு)அங்கு அவளோடு யான் வந்தால் அப்பொழுது கோயில் விடத்தங்கும் இடம் திரு மகிழ்க் கீழ்க் கொள வேண்டும் எனத்தாழ்ந்தார்.
சொற்பிரிப்பு
சங்கரர் தாள் பணிந்து இருந்து தமிழ்வேந்தர் மொழிகின்றார்“மங்கை அவள்தனைப் பிரியா வகை சபதம் செய்வதனுக்குஅங்கு அவளோடு யான் வந்தால் அப்பொழுது கோயில் விடத்தங்கும் இடம் திருமகிழ்க் கீழ்க் கொளவேண்டும்” எனத் தாழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

249

தம்பிரான் தோழர் அவர் தாம் வேண்டிக் கொண்டு அருளஉம்பர் நாய கரும் அதற்கு உடன் பாடு செய்வாராய்நம்பி! நீ சொன்னபடி நாம் செய்தும் என்று அருளஎம்பி ரானே! அரியது இனிஎனக்கு என்? எனஏத்தி.
சொற்பிரிப்பு
தம்பிரான் தோழர் அவர் தாம் வேண்டிக் கொண்டருளஉம்பர் நாயகரும் அதற்கு உடன்பாடு செய்வாராய்“நம்பி! நீ சொன்னபடி நாம் செய்தும்” என்று அருள“எம்பிரானே! அரியது இனி எனக்கு என்?” என ஏத்தி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

250

அஞ்சலி சென்னியில் மன்ன அருள் பெற்றுப் புறம் போதச்செஞ்சடையார் அவர் மாட்டுத் திரு விளையாட் டினை மகிழ்ந்தோவஞ்சி இடைச் சங்கிலியார் வழி அடிமைப் பெரு மையோ?துஞ்சிருள் மீளவும் அணைந் தார் அவர்க்கு உறுதி சொல்லுவார்.
சொற்பிரிப்பு
அஞ்சலி சென்னியில் மன்ன அருள்பெற்றுப் புறம்போதச்செஞ்சடையார் அவர் மாட்டுத் திருவிளையாட்டினை மகிழ்ந்தோ?வஞ்சி இடைச் சங்கிலியார் வழி அடிமைப் பெருமையோ?துஞ்சிருள் மீளவும் அணைந்தார் அவர்க்கு உறுதி சொல்லுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

251

சங்கிலியார் தம் மருங்கு முன்பு போல் சார்ந்து அருளிநங்கை உனக்கு ஆரூரன் நயந்து சூள் உறக் கடவன்அங்கு நமக்கு எதிர் செய்யும் அதற்கு நீ இசையாதேகொங்கலர் பூ மகிழின் கீழ்க் கொள்க எனக் குறித்து அருள.
சொற்பிரிப்பு
சங்கிலியார் தம் மருங்கு முன் போலச் சாந்தருளி“நங்கை! உனக்கு ஆரூரன் நயந்து சூள் உறக் கடவன்!அங்கு நமக்கு எதிர்செய்யும் அதற்கு நீ இசையாதேகொங்கு அலர்பூ மகிழின் கீழ்க் கொள்க” எனக் குறித்தருள.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

252

மற்றவரும் கை குவித்து மால் அயனுக்கு அறிவரியீர்அற்றம் எனக்கு அருள் புரிந்த அதனில் அடியேன் ஆகப்பெற்றது யான்எனக் கண்கள் பெரும் தாரை பொழிந்து இழியவெற்றி மழ விடையார் தம் சேவடிக்கீழ் வீழ்ந்து எழுந்தார்.
சொற்பிரிப்பு
மற்றவரும் கைகுவித்து “மால் அயனுக்கு அறிவு அரியீர்!அற்றம் எனக்கு அருள் புரிந்த அதனில் அடியேன் ஆகப்பெற்றது யான்” எனக் கண்கள் பெருந்தாரை பொழிந்து இழியவெற்றி மழவிடையார் தம் சேவடிக் கீழ் வீழ்ந்து எழுந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

253

தையலார் தமக்கு அருளிச் சடா மகுடர் எழுந்து அருளஎய்திய போது அதிசயத்தால் உணர்ந்து எழுந்த அவ்விரவின் கண்செய்ய சடையார் அருளின் திறம் நினைந்தே கண் துயிலார்ஐயம் உடன் அருகு துயில் சேடியரை அணைந்து எழுப்பி.
சொற்பிரிப்பு
தையலார் தமக்கு அருளிச் சடாமகுடர் எழுந்தருளஎய்தியபோது அதிசயத்தால் உணர்ந்து எழுந்து அவ் இரவின்கண்செய்யசடையார் அருளின் திறம் நினைந்தே கண்துயிலார்ஐயமுடன் அருகுதுயில் சேடியரை அணைந்து எழுப்பி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

254

நீங்கு துயில் பாங்கியர்க்கு நீங்கல் எழுத்து அறியும் அவர்தாம் கனவில் எழுந்து அருளித் தமக்கு அருளிச்செய்தது எலாம்பாங்கு அறிய மொழிய அவர் பயத்தின் உடன் அதிசயமும்தாங்கு மகிழ்ச் சியும் எய்தச் சங்கிலியார் தமைப் பணிந்தார்.
சொற்பிரிப்பு
நீங்கு துயில் பாங்கியர்க்கு நீங்கல் எழுத்து அறியும் அவர்தாம் கனவில் எழுந்தருளித் தமக்கருளிச் செய்தது எலாம்பாங்கு அறிய மொழிய அவர் பயத்தினுடன் அதிசயமும்தாங்கு மகிழ்ச்சியும் எய்தச் சங்கிலியார் தமைப் பணிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

255

சேயிழையார் திருப் பள்ளி எழுச் சிக்கு மலர் தொடுக்கும்தூய பணிப் பொழுது ஆகத்தொழில் புரிவார் உடன் போதக்கோயிலின் முன் காலம் அது ஆகவே குரித்து அணைந்தார்ஆய சபதம் செய்ய வரவு பார்த்து ஆரூ ரர்.
சொற்பிரிப்பு
சேயிழையார் திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும்தூய பணிப் பொழுது ஆகத் தொழில்புரிவார் உடன்போதக்கோயிலின் முன் காலம் அதுவாகவே குறித்து அணைந்தார்ஆய சபதம் செய்ய வரவு பார்த்து ஆரூரர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

256

நின்றவர் அங்கு எதிர் வந்த நேர்இழையார் தம் மருங்குசென்று அணைந்து தம் பெருமான் திருஅருளின் திறம் கூறமின்தயங்கு நுண் இடையார் விதி உடன்பட்டு எதிர் விளம்பார்ஒன்றிய நாண் ஒடு மடவாருடன் ஒதுங்கி உட் புகுந்தார்.
சொற்பிரிப்பு
நின்றவர் அங்கு எதிர் வந்த நேர் இழையார் தம்மருங்குசென்று அணைந்து தம்பெருமான் திருஅருளின் திறம்கூறமின்தயங்கு நுண்இடையார் விதி உடன்பட்டு எதிர் விளம்பார்ஒன்றிய நாணொடு மடவாருடன் ஒதுங்கி உள் புகுந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

257

அங்கு அவர் தம் பின்சென்ற ஆரூ ரர் ஆயிழையீர்!இங்கு நான் பிரியாமை உமக்கு இசையும் படி இயம்பத்திங்கள் முடியார் திரு முன் போதுவீர் எனச் செப்பச்சங்கி லியார் கனவு உரைப்பக் கேட்ட தாதியர் மொழிவார்.
சொற்பிரிப்பு
அங்கு அவர்தம் பின்சென்ற ஆரூரர் “ஆய் இழையீர்!இங்கு நான் பிரியாமை உமக்கு இசையும் படி இயம்பத்திங்கள் முடியார் திருமுன் போதுவீர்” எனச் செப்பச்சங்கிலியார் கனவு உரைப்பக் கேட்ட தாதியர் மொழிவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

258

எம் பெரு மான் இதற்காக எழுந்து அருளி இமயவர்கள்தம் பெருமான் திருமுன்பு சாற்றுவது தகாது என்னநம் பெருமான் வன் தொண்டர் நாதர் செயல் அறியாதேகொம்பு அனையீர் யான் செய்வது எங்கு என்று கூறுதலும்.
சொற்பிரிப்பு
“எம்பெருமான்! இதற்காக எழுந்தருளி இமையவர்கள்தம்பெருமான் திருமுன்பு சாற்றுவது தகாது” என்னநம்பெருமான் வன்தொண்டர் நாதர் செயல் அறியாதே“கொம்பு அனையீர்! யான் செய்வது எங்கு!” என்று கூறுதலும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

259

மாதர் அவர் மகிழ்க் கீழே அமையும் என மனமருள்வார்ஈதலர் ஆகிலும் ஆகும் இவர் சொன்ன படி மறுக்கில்ஆதலினால் உடன் படவே அமையும் எனத் துணிந்து ஆகில்போதுவீர் என மகிழ்க்கீழ் அவர் போதப் போய் அணைந்தார்.
சொற்பிரிப்பு
மாதர் அவர் ”மகிழ்க் கீழே அமையும்” என மனம் மருள்வார்ஈதலர் ஆகிலும் ஆகும் இவர் சொன்னபடி மறுக்கில்;ஆதலினால் உடன்படலே அமையும்” எனத் துணிந்து ”ஆகில்போதுவீர்” என மகிழ்க்கீழ் அவர் போதப் போய் அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

260

தாவாத பெருந் தவத்துச் சங்கிலி யாரும் காணமூவாத திரு மகிழை முக்காலும் வலம் வந்துமேவாது இங்குயான் அகலேன் என நின்று விளம்பினார்பூவார் தண் புனல் பொய்கை முனைப் பாடிப் புரவலனார்.
சொற்பிரிப்பு
தாவாத பெருந்தவத்துச் சங்கிலியாரும் காணமூவாத திருமகிழை முக்காலும் வலம் வந்து“மேவாது இங்கு யான் அகலேன்” என நின்று விளம்பினார்;பூவார் தண் புனல் பொய்கை முனைப்பாடிப் புரவலனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

261

மேவிய சீர் ஆரூரர் மெய்ச் சபதம் வினை முடிப்பக்காவியினேர் கண்ணாரும் கண்டு மிக மனம் கலங்கிப்பாவியேன் இது கண்டேன்தம் பிரான் பணியால் என்றுஆவிசோர்ந்து அழிவார் அங்குஒரு மருங்கு மறைந்து அயர்ந்தார்.
சொற்பிரிப்பு
மேவிய சீர் ஆரூரர் மெய்ச் சபத வினை முடிக்கக்காவியின் நேர் கண்ணாரும் கண்டு மிக மனம் கலங்கிப்“பாவியேன் இது கண்டேன் தம்பிரான் பணியால்” என்றுஆவி சோர்ந்து அழிவார் அங்கு ஒருமருங்கு மறைந்து அயர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

262

திருநா வலூ ராளி தம் உடைய செயல் முற்றிப்பொரு நாகத்து உரி புனைந்தார் கோயிலின் உள்புகுந்து இறைஞ்சிஅருள் நாளும் தர இருந்தீர் செய்தவாறு அழகு இதுஎனப்பெருநாமம் எடுத்து ஏத்திப் பெரு மகிழ்ச்சி உடன் போந்தார்.
சொற்பிரிப்பு
திருநாவலூர் ஆளி தம்முடைய செயல் முற்றிப்பொருநாகத்து உரிபுனைந்தார் கோயிலின் உள் புகுந்து இறைஞ்சி“அருள் நாளும் தர இருந்தீர் செய்தவாறு அழகிது!” எனப்பெருநாமம் எடுத்து ஏத்திப் பெருமகிழ்ச்சியுடன் போந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

263

வார் புனையும் வன முலையார் வன் தொண்டர் போனதன் பின்தார் புனையும் மண்ட பத்துத் தம் உடைய பணி செய்துகார் புனையும் மணி கண்டர் செயல் கருத்தில் கொண்டு இறைஞ்சிஏர் புனையும் கன்னி மாடம் புகுந் தார் இருள் புலர.
சொற்பிரிப்பு
வார்புனையும் வனமுலையார் வன்தொண்டர் போனதன் பின்தார்புனையும் மண்டபத்துத் தம்முடைய பணி செய்துகார்புனையும் மணிகண்டர் செயல்கருத்தில் கொண்டு இறைஞ்சிஏர் புனையும் கன்னிமாடம் புகுந்தார் இருள் புலர.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

264

அன்று இரவே ஆதிபுரி ஒற்றி கொண்டார் ஆட் கொண்டபொன் திகழ் பூண் வன்தொண்டர் புரிந்த வினை முடித்துஅருளநின்ற புகழ்த் திரு ஒற்றியூர் நிலவு தொண் டர்க்குமன்றல் வினை செய்வதற்கு மனம் கொள்ள உணர்த்துவார்.
சொற்பிரிப்பு
அன்று இரவே ஆதிபுரி ஒற்றிகொண்டார் ஆட்கொண்டபொன்திகழ் பூண் வன்தொண்டர் புரிந்த வினை முடித்தருளநின்ற புகழ்த் திருஒற்றியூர் நிலவு தொண்டர்க்குமன்றல் வினை செய்வதற்கு மனம் கொள்ள உணர்த்துவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

265

நம்பி யாரூர னுக்கு நங்கை சங்கிலி தன்னைஇம்பர் ஞாலத்து இடை நம் ஏவலினால் மணவினை செய்துஉம்பர்வாழ் உலகு அறிய அளிப்பீர் என்று உணர்த்துதலும்தம்பிரான் திருத்தொண்டர் அருள் தலைமேல் கொண்டு எழுவார்.
சொற்பிரிப்பு
“நம்பி ஆரூரனுக்கு நங்கை சங்கிலி தன்னைஇம்பர் ஞாலத்திடை நம் ஏவலினால் மணவினை செய்துஉம்பர் வாழ் உலகு அறிய அளிப்பீர்” என்று உணர்த்துதலும்தம்பிரான் திருத்தொண்டர் அருள்தலைமேல் கொண்டு எழுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

266

மண்ணிறைந்த பெரும் செல்வத்து திரு ஒற்றியூர் மன்னும்எண்ணிறைந்த திருத் தொண்டர் எழில்பதியோர் உடன் ஈண்டிஉண்ணி றைந்த மகிழ்ச்சியுடன் உம்பர் பூமழை பொழியக்கண்ணிறைந்த பெரும் சிறப்பில் கலியாணம் செய்து அளித்தார்.
சொற்பிரிப்பு
மண்நிறைந்த பெருஞ்செல்வத் திருஒற்றியூர் மன்னும்எண்நிறைந்த திருத்தொண்டர் எழில் பதியோர் உடன் ஈண்டிஉள் நிறைந்த மகிழ்ச்சியுடன் உம்பர் பூமழை பொழியக்கண்நிறைந்த பெருஞ்சிறப்பில் கலியாணம் செய்து அளித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

267

பண்டு நிகழ் பான்மையினால் பசுபதி தன் அருளாலேவண்டமர் பூங்குழலாரை மணம் புணர்ந்த வன் தொண்டர்புண்டரிகத்து அவள் வனப்பைப் புறம் கண்ட தூநலத்தைக்கண்டுகேட்டு உண்டு உயிர்த்துஉற்று அமர்ந்து இருந்தார் காதலினால்.
சொற்பிரிப்பு
பண்டு நிகழ் பான்மையினால் பசுபதி தன் அருளாலேவண்டு அமர் பூங்குழலாரை மணம் புணர்ந்த வன்தொண்டர்புண்டரிகத்தவள் வனப்பைப் புறங்கண்ட தூநலத்தைக்கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அமர்ந்திருந்தார் காதலினால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

268

யாழின் மொழி எழில் முறுவல்இரு குழை மேல் கடைபிறழும்மாழை விழிவன முலையார் மணி அல்குல் துறை படிந்துவீழும் அவர்க்கு இடைதோன்றி மிகும் புலவி புணர்ச்சிக் கண்ஊழியாம் ஒரு கணம் தான் அவ்வூழி ஒருகணம் ஆம்.
சொற்பிரிப்பு
யாழின் மொழி எழில் முறுவல் இருகுழைமேல் கடைபிறழும்மாலை விழி வனமுலையார் மணி அல்குல் துறைபடிந்துவீழும் அவர்க்கு இடைதோன்றி மிகும் புலவிப் புணர்ச்சிக்கண்ஊழியாம் ஒருகணந்தான் அவ்வூழி ஒருகணமாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

269

இந்நிலையில் பேர் இன்பம் இனிது அமர்வார் இறை உறையும்மன்னு புகழ் ஒற்றியூர் அதனில் மகிழ் சிறப் பினால்சென்னி மதிபுனைவார் தம் திருப் பாதம் தொழுது இருந்தார்முன்னிய காலங்கள் பல முறை மையினால் வந்து அகல.
சொற்பிரிப்பு
இந்நிலையில் பேர்இன்பம் இனிது அமர்வார் இறை உறையும்மன்னு புகழ் ஒற்றியூர் அதனில் மகிழ் சிறப்பினால்சென்னிமதி புனைவார் தம் திருப்பாதம் தொழுது இருந்தார்முன்னிய காலங்கள் பல முறைமையினால் வந்து அகல.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

270

பொங்கு தமிழ்ப் பொதிய மலைப் பிறந்து பூஞ் சந்தனத்தின்கொங்கு அணைந்து குளிர்சாரல் இடை வளர்ந்த கொழும் தென்றல்அங்கு அணைய திருவாரூர் அணி வீதி அழகர் அவர்மங்கல நாள் வசந்தம் எதிர்கொண்டு அருளும் வகை நினைந்தார்.
சொற்பிரிப்பு
பொங்கு தமிழ்ப் பொதியமலைப் பிறந்து பூஞ்சந்தனத்தின்கொங்கு அணைந்து குளிர்ச்சாரல் இடைவளர்ந்த கொழுந்தென்றல்அங்கு அணையத் திருஆரூர் அணிவீதி அழகர் அவர்மங்கல நாள் வசந்தம் எதிர் கொண்டருளும் வகை நினைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

271

வெண் மதியின் கொழுந்து அணிந்த வீதி விடங்கப் பெருமான்ஒண்ணு தலார் புடை பரந்த ஓலக்கம் அதன் இடையேபண் ணமரும் மொழிப் பரவையார் பாடல் ஆடல் தனைக்கண்ணுற முன் கண்டு கேட் டார் போலக் கருதினார்.
சொற்பிரிப்பு
வெண்மதியின் கொழுந்து அணிந்த வீதி விடங்கப்பெருமான்ஒண் நுதலார் புடைபரந்த ஓலக்கம் அதனிடையேபண் அமரும் மொழிப் பரவையார் பாடல் ஆடல் தனைக்கண்உற முன் கண்டுகேட்டார் போலக் கருதினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

272

பூங்கோயில் அமர்ந் தாரை புற்றிடங் கொண்டு இருந்தாரைநீங்காத காதலினால் நினைந் தாரை நினை வாரைப்பாங்காகத் தாம்முன்பு பணிய வரும் பயன் உணர்வார்ஈங்குநான் மறந்தேன் என்று ஏசறவால் மிக அழிவார்.
சொற்பிரிப்பு
பூங்கோயில் அமர்ந்தாரைப், புற்றிடம்கொண்டு இருந்தாரை,நீங்காத காதலினால் நினைந்தாரை நினைவாரைப்பாங்கு ஆகத் தாம் முன்பு பணியவரும் பயன் உணர்வார்“ஈங்கு நான் மறந்தேன்” என்று ஏசறவால் மிக அழிவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

273

மின் னொளிர் செஞ்சடையானை வேத முதல் ஆனானைமன்னு புகழ்த் திருவாரூர் மகிழ்ந்தானை மிக நினைந்துபன்னிய சொல் பத்திமையும் அடிமையையும் கை விடுவான்என்னும் இசைத் திருப்பதிகம் எடுத்து இயம்பி இரங்கினார்.
சொற்பிரிப்பு
மின்ஒளிர் செஞ்சடையானை, வேத முதல் ஆனானை,மன்னு புகழ்த் திருஆரூர் மகிழ்ந்தானை மிக நினைந்துபன்னிய சொல் “பத்திமையும் அடிமையையும் கைவிடுவான்”என்னும் இசைத் திருப்பதிகம் எடுத்து இயம்பி இரங்கினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

274

பின்ஒரு நாள் திருவாரூர் தனைப் பெருக நினைந்து அருளிஉன்ன இனியார் கோயில் புகுந்து இறைஞ்சி ஒற்றி நகர்தன்னை அகலப் புக்கார் தாம் செய்த சபதத் தால்முன் அடிகள் தோன் றாது கண் மறைய மூர்ச்சித்தார்.
சொற்பிரிப்பு
பின் ஒருநாள் திருஆரூர் தனைப் பெருக நினைந்தருளிஉன்ன இனியார் கோவில் புகுந்து இறைஞ்சி ஒற்றிநகர்தன்னை அகலப் புக்கார் தாம் செய்த சபதத்தால்முன் அடிகள் தோன்றாது கண் மறைய மூர்ச்சித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

275

செய் வதனை அறியாது திகைத்து அருளி நெடிது உயிர்ப்பார்மைவிரவு கண்ணார் பால் சூல் உறவு மறுத்த அதனால்இவ்வினை வந்து எய்தியது ஆம் என நினைந்து எம்பெருமானைஎய்திய இத் துயர் நீங்கப் பாடுவேன் என நினைந்து.
சொற்பிரிப்பு
செய்வதனை அறியாது திகைத்தருளி நெடிது உயிர்ப்பார்“மைவிரவு கண்ணார்பால் சூள் உறவு மறுத்ததனால்இவ்வினை வந்து எய்தியதாம்” என நினைந்து” எம் பெருமானைஎய்திய இத்துயர் நீங்கப் பாடுவேன்” என நினைந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

276

அழுக்கு மெய் கொடு என்று எடுத்தசொல் பதிகம் ஆதிநீள் புரி அண்ணலைஓதிவழுத்து நெஞ்சொடு தாழ்ந்து நின்று உரைப்பார் மாதோர் பாகனார் மலர்பதம் உன்னிஇழுக்கு நீக்கிட வேண்டும் என்று இரந்தே எய்து வெம்துயர்க் கையற வினுக்கும்பழிக்கும் வெள்கி நல்இசை கொடு பரவி பணிந்து சாலவும் பலபல நினைவார்.
சொற்பிரிப்பு
“அழுக்கு மெய்கொடு” என்று எடுத்த சொல் பதிகம் ஆதி நீள்புரி அண்ணலை ஓதிவழுத்து நெஞ்சொடு தாழ்ந்து நின்று உரைப்பார் மாதொர் பாகனார் மலர்ப்பதம் உன்னி‘இழுக்கு நீக்கிட வேண்டும்’ என்று இரந்தே எய்து வெந்துயர்க் கையறவினுக்கும்பழிக்கும் வெள்கி நல் இசைகொடு பரவிப் பணிந்து சாலவும் பலபல நினைவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

277

அங்கு நாதர் செய்அருளது ஆக அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தேபொங்கு காதல் மீளா நிலைமை யினால் போதுவார் வழிகாட்ட முன் போந்துதிங்கள் வேணி யார் திரு முல்லைவாயில் சென்று இறைஞ்சி நீடிய திருப்பதிகம்சங்கி லிக்காக என் கணை மறைத்தீர் என்று சாற்றிய தன்மையில் பாடி.
சொற்பிரிப்பு
அங்கு நாதர்செய் அருள் அதுவாக அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தேபொங்கு காதல் மீளா நிலைமையினால் போதுவார் வழிகாட்ட முன் போந்துதிங்கள் வேணியார் திருமுல்லை வாயில் சென்று இறைஞ்சி நீடிய திருப்பதிகம்“சங்கிலிக்காக என் கணை மறைத்தீர்” என்று சாற்றிய தன்மையில் பாடி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

278

தொண்டை மானுக்கு அன்று அருள்கொடுத்து அருளும் தொல்லை வண்புகழ் முல்லை நாயகரைக்கொண்ட வெந்துயர் களை எனப்பரவிக் குறித்த காதலின் நெறிக் கொள வருவார்வண்டுலா மலர்ச் சோலைகள் சூழ்ந்து மாட மாளிகை நீடு வெண் பாக்கம்கண்ட தொண்டர்கள் எதிர் கொள வணங்கிக் காயும் நாகத்தர் கோயிலை அடைந்தார்.
சொற்பிரிப்பு
தொண்டைமானுக்கு அன்று அருள்கொடுத்து அருளும் தொல்லை வண் புகழ் முல்லை நாயகரைக்“கொண்ட வெந்துயர் களைக” எனப் பரவிக் குறித்த காதலின் நெறிக்கொள வருவார்வண்டு உலாமலர்ச் சோலைகள் சூழ்ந்து மாட மாளிகை நீடு வெண் பாக்கம்கண்ட தொண்டர்கள் எதிர்கொள வணங்கிக் காயும் நாகத்தர் கோயிலை அடைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

279

அணைந்த தொண்டர்கள் உடன் வலமாக அங்கண் நாயகர் கோயில் முன் எய்திக்குணங்கள் ஏந்தியே பரவி அஞ்சலியால் குவித்த கைத்தலை மேற் கொண்டு நின்றுவணங்கி நீர்மகிழ் கோயில் உளீரே என்ற வன்தொண்டர்க்கு ஊன்று கோல் அருளிஇணங் கிலா மொழியால் உளோம் போகீர் என்று இயம்பினார் ஏதிலார் போல.
சொற்பிரிப்பு
அணைந்த தொண்டர்களுடன் வலம் ஆக அங்கண் நாயகர் கோயில் முன் எய்திக்குணங்கள் ஏத்தியே பரவி அஞ்சலியால் குவித்த கைதலை மேல்கொண்டு நின்றுவணங்கி “நீர் மகிழ் கோயில் உளீரே” என்ற வன்தொண்டர்க்கு ஊன்றுகோல் அருளிஇணங்கு இலா மொழியால் ”உளோம் போகீர்” என்று இயம்பினார் ஏதிலார் போல.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

280

பிழை உள்ளன பொறுத்திடுவர் என்று எடுத்துப் பெண் பாகம்விழைவடிவில் பெருமானை வெண் பாக்கம் மகிழ்ந் தானைஇழைஎன மாசுணம் அணிந்த இறை யானைப் பாடினார்மழை தவழும் நெடும் புரிசை நாவலூர் மன்னவனார்.
சொற்பிரிப்பு
“பிழை உளன பொறுத்திடுவர்” என்று எடுத்துப் பெண்பாகம்விழை வடிவில் பெருமானை, வெண்பாக்கம் மகிழ்ந்தானை,இழை என மாசுணம் அணிந்த இறையானைப் பாடினார்மழை தவழும் நெடும்புரிசை நாவலூர் மன்னவனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

281

முன் நின்று முறைப்பாடு போல் மொழிந்த மொழிமாலைப்பன்னும் இசைத் திருப் பதிகம் பாடியபின் பற்றாயஎன்னுடையபிரான் அருள் இங்கு இத்தனை கொலாம் என்றுமன்னுபெரும் தொண்டர் உடன் வணங்கியே வழிக் கொள்வார்.
சொற்பிரிப்பு
முன் நின்று முறைப்பாடு போல் மொழிந்த மொழிமாலைப்பன்னும் இசைத் திருப்பதிகம் பாடிய பின் “பற்று ஆயஎன்னுடைய பிரான் அருள் இங்கு இத்தனை கொலாம்” என்றுமன்னு பெருந்தொண்டருடன் வணங்கியே வழிக்கொள்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

282

அங்கணர் தம்பதி அதனை அகன்று போய் அன்பர் உடன்பங்கயப் பூந்தடம் பணை சூழ் பழையனூர் உழை எய்தித்தங்குவார் அம்மைத் திருத் தலை யாலே வலம் கொள்ளும்திங்கள் முடியார் ஆடும் திரு வாலங் காட்டின் அயல்.
சொற்பிரிப்பு
அங்கணர் தம் பதி அதனை அகன்று போய் அன்பருடன்பங்கயப் பூந்தடம் பணைசூழ் பழையனூர் உழை எய்தித்தங்குவார் அம்மை திருத்தலையாலே வலங்கொள்ளும்திங்கள் முடியார் ஆடும் திருஆலங்காட்டின் அயல்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

283

முன்நின்று தொழுது ஏத்தி முத்தா என்று எடுத்து அருளிப்பன்னும் இசைத் திருப்பதிகம் பாடி மகிழ்ந்து ஏத்து வார்அந் நின்று வணங்கிப் போய்த் திருவூறல் அமர்ந்து இறைஞ்சிக்கன்னிமதில் மணி மாடக் காஞ்சி மா நகர் அணைந்தார்.
சொற்பிரிப்பு
முன் நின்று தொழுது ஏத்தி “முத்தா” என்று எடுத்தருளிப்பன்னும் இசைத் திருப்பதிகம் பாடி மகிழ்ந்து ஏத்துவார்அந்நின்று வணங்கிப்போய்த் திருஊறல் அமர்ந்து இறைஞ்சிக்கன்னி மதில் மணிமாடக் காஞ்சிமா நகர் அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

284

தேன் நிலவு பொழில் கச்சித் திருக்காமக் கோட் டத்தில்ஊனில் வளர் உயிர்க்கு எல்லாம் ஒழியாத கருணை யினால்ஆனதிரு அறம் புரக்கும் அம்மை திருக் கோயிலின் முன்வானில் வளர் திருவாயில் வணங் கினார் வன் தொண்டர்.
சொற்பிரிப்பு
தேன் நிலவு பொழில் கச்சித் திருக்காமக் கோட்டத்தில்ஊனில் வளர் உயிர்க்கு எல்லாம் ஒழியாத கருணையினால்ஆன திரு அறம் புரக்கும் அம்மை திருக்கோயிலின் முன்வானில் வளர் திருவாயில் வணங்கினார் வன்தொண்டர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

285

தொழுது விழுந்து எழுந்து அருளால் துதித்துப்போய் தொல் உலகம்முழுதும் அளித்து அழித்து ஆக்கும் முதல் வர் திரு ஏகம்பம்பழுதில் அடியார் முன்பு புகப் புக்குப் பணி கின்றார்இழுதை யேன் திருமுன்பே என் மொழிவேன் என்று இறைஞ்சி.
சொற்பிரிப்பு
தொழுது விழுந்து எழுந்தருளால் துதித்துப்போய்த் தொல்உலகம்முழுதும் அளித்து அழித்து ஆக்கும் முதல்வர் திருஏகம்பம்பழுதில் அடியார் முன்பு புகப்புக்குப் பணிகின்றார்இழுதையேன் திருமுன்பே என் மொழிவேன்” என்று இறைஞ்சி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

286

விண் ஆள்வார் அமுது உண்ண மிக்கபெரும் விடம் உண்டகண் ணாளா கச்சி ஏகம் பனே கடை யானேன்எண்ணாத பிழை பொறுத்து இங்கு யான் காண எழில்பவளவண்ணா கண் அளித்து அருளாய் என வீழ்ந்து வணங்கினார்.
சொற்பிரிப்பு
“விண் ஆள்வார் அமுது உண்ண மிக்க பெருவிடம் உண்டகண்ணாளா! கச்சி ஏகம்பனே! கடையானேன்எண்ணாத பிழைபொறுத்து இங்கு யான் காண எழில் பவளவண்ணா! கண் அளித்து அருளாய்” என வீழ்ந்து வணங்கினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

287

பங்கயச் செங்கைத் தளிரால் பனி மலர் கொண்டு அருச்சித்துச்செங் கயற் கண் மலைவல்லி பணிந்த சேவடி நினைந்துபொங்கிய அன்பொடு பரவிப் போற்றிய ஆரூ ரருக்குமங்கைத் தழுவக் குழைந்தார் மறைந்த இடக் கண் கொடுத்தார்.
சொற்பிரிப்பு
பங்கயச் செங்கைத் தளிரால் பனிமலர்கொண்டு அருச்சித்துச்செங்கயல்கண் மலைவல்லி பணிந்த சேவடி நினைந்துபொங்கிய அன்பொடு பரவிப் போற்றி ஆரூரருக்குமங்கை தழுவக் குழைந்தார் மறைந்த இடக்கண் கொடுத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

288

ஞாலந் தான் இடந்தவனும் நளிர் விசும்பு கடந்தவனும்மூலந்தான் அறிவரியார் கண் அளித்து முலைச்சுவட்டுக்கோலந்தான் காட்டுதலும் குறுகி விழுந்து எழுந்து களித்துஆலந்தான் உகந்தவன் என்று எடுத்து ஆடிப் பாடினார்.
சொற்பிரிப்பு
ஞாலம் தான் இடந்தவனும் நளிர் விசும்பு கடந்தவனும்மூலம் தான் அறிவு அரியார் கண் அளித்து முலைச் சுவட்டுக்கோலம் தான் காட்டுதலும் குறுகி விழுந்து எழுந்து களித்து“ஆலம் தான் உகந்தவன்” என்று எடுத்து ஆடிப் பாடினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

289

பாடி மிகப் பரவசமாய்ப் பணி வார்க்குப் பாவை உடன்நீடிய கோலம் காட்ட நிறைந்த விருப் புடன் இறைஞ்சிச்சூடிய அஞ்சலி யினராய்த் தொழுது புறம் போந்து அன்புகூடிய மெய்த் தொண்டர் உடன் கும்பிட்டு அங்கு இனிது அமர்வார்.
சொற்பிரிப்பு
பாடி மிகப் பரவசமாய்ப் பணிவார்க்குப் பாவை உடன்நீடிய கோலம் காட்ட நிறைந்த விருப்புடன் இறைஞ்சிச்சூடிய அஞ்சலியினராய்த் தொழுது புறம் போந்து அன்புகூடிய மெய்த்தொண்டருடன் கும்பிட்டு அங்கு இனிது அமர்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

290

மா மலையாள் முலைச்சுவடும் வளைத் தழும்பும் அணிந்த மதிப்பூ மலிவார் சடை யாரைப் போற்றி அருளது ஆகத்தே மலர்வார் பொழில் காஞ்சித் திருநகரம் கடந்து அகல்வார்பா மலர் மாலைப் பதிகம் திருவாரூர் மேல் பரவி.
சொற்பிரிப்பு
மாமலையாள் முலைச்சுவடும் வளைத்தழும்பும் அணிந்த மதிப்பூமலி வார் சடையாரைப் போற்றி அருள் அதுவாகத்தேன்மலர் வார் பொழில் காஞ்சித் திருநகரம் கடந்து அகல்வார்பாமலர் மாலைப் பதிகம் திருஆரூர் மேல்பரவி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

291

அந்தியும் நண்பகலும் என எடுத்து ஆர்வத் துடன் நசையால்எந்தை பிரான் திருவாரூர் என்று கொல் எய்துவது என்றுசந்த இசை பாடிப் போய்த் தாங்க அரிய ஆதரவுவந்து அணைய அன்பர் உடன் மகிழ்ந்து வழி கொள்கின்றார்.
சொற்பிரிப்பு
“அந்தியும் நண்பகலும்” என எடுத்து ஆர்வத்துடன் நசையால்எந்தை பிரான் திருஆரூர்என்றுகொல் எய்துவது” என்றுசந்த இசை பாடிப்போய்த் தாங்கரிய ஆதரவுவந்து அணைய அன்பருடன் மகிழ்ந்து வழிக் கொள்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

292

மன்னு திருப் பதிகள் தொறும் வன்னி யொடு கூவிளமும்சென்னிமிசை வைத்து உவந்தார் கோயிலின் முன் சென்று இறைஞ்சிப்பன்னு தமிழ்த் தொடை சாத்திப் பரவியே போந்து அணைந்தார்அன்ன மலி வயல் தடங்கள் சூழ்ந்த திரு ஆமாத்தூர்.
சொற்பிரிப்பு
மன்னு திருப்பதிகள் தொறும் வன்னியொடு கூவிளமும்சென்னி மிசை வைத்து உவந்தார் கோயிலின் முன் சென்று இறைஞ்சிப்பன்னு தமிழ்த் தொடை சாத்திப் பரவியே போந்து அணைந்தார்அன்ன மலி வயல் தடங்கள் சூழ்ந்த திரு ஆமாத்தூர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

293

அங்கணரை ஆமாத்தூர் அழகர் தமை அடி வணங்கித்தங்கும் இசைத்திருப் பதிகம் பாடிப் போய்த் தாரணிக்குமங்கலமாம் பெரும் தொண்டை வளநாடு கடந்து அணைந்தார்செங்கண் வளவன் பிறந்த சீர்நாடு நீர் நாடு.
சொற்பிரிப்பு
அங்கணரை ஆமாத்தூர் அழகர் தமை அடி வணங்கித்தங்கும் இசைத் திருப்பதிகம் பாடிப் போய்த் தாரணிக்குமங்கலமாம் பெருந்தொண்டை வளநாடு கடந்து அணைந்தார்செங்கண் வளவன் பிறந்த சீர்நாடு நீர்நாடு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

294

அந்நாட்டின் மருங்கு திரு அரத் துறையைச் சென்று எய்திமின்னாரும் படை மழுவார் விரை மலர்த்தாள் பணிந்து எழுந்துசொன்மாலை மலர்க் கல்வாய் அகில் என்னும் தொடை சாத்திமன்னார் வத்து திருத் தொண்டர் உடன் மகிழ்ந்து வைகினார்.
சொற்பிரிப்பு
அந்நாட்டின் மருங்கு திரு அரத்துறையைச் சென்று எய்திமின் ஆரும் படைமழுவார் விரைமலர்த்தாள் பணிந்து எழுந்துசொன்மாலை மலர்க் ”கல்வாய் அகில்” என்னும் தொடை சாத்திமன் ஆர்வத் திருத்தொண்டருடன் மகிழ்ந்து வைகினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

295

பரமர் திரு அரத் துறையைப் பணிந்து போய்ப் பலபதிகள்விரவி மழ விடை உயர்த்தார் விரைமலர்த்தாள் தொழுது ஏத்திஉரவு நீர்த் தடம் பொன்னி அடைந்து அன்பருடன் ஆடிஅரவு அணிந்தார் அமர்ந்த திருவாவடு தண் துறை அணைந்தார்.
சொற்பிரிப்பு
பரமர் திரு அரத்துறையைப் பணிந்துபோய்ப் பலபதிகள்விரவி மழவிடை உயர்த்தார் விரை மலர்த்தாள் தொழுது ஏத்திஉரவு நீர்த் தடம்பொன்னி அடைந்து அன்பருடன் ஆடிஅரவு அணிந்தார் அமர்ந்த திரு ஆவடுதண் துறை அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

296

அங்கணைவார் தமை அடியார் எதிர் கொள்ளப் புக்கு அருளிப்பொங்கு திருக் கோயிலினைப் புடை வலம் கொண்டுள் ளணைந்துகங்கை வாழ் சடையாய் ஓர் கண்ணிலேன் எனக் கவல்வார்இங்கு எனக்கு ஆர்உறவு என்னும் திருப்பதிகம் எடுத்து இசைத்தார்.
சொற்பிரிப்பு
அங்கு அணைவார் தமை அடியார் எதிர்கொளளப் புக்கு அருளிப்பொங்கு திருக்கோயிலினைப் புடை வலங்கொண்டு உள் அணைந்து“கங்கை வாழ் சடையாய் ! ஓர் கண்இலேன்” எனக் கவல்வார்“இங்கு எனக்கு ஆர் உறவு” என்னும் திருப்பதிகம் எடுத்து இசைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

297

திருப்பதிகம் கொடு பரவிப் பணிந்து திரு அருளால் போய்விருப்பி னொடும் திருத்துருத்தி தனை மேவி விமலர் கழல்அருத்தியினால் புக்கு இறைஞ்சி அடியேன் மேல் உற்ற பிணிவருத்தம் எனை ஒழித்து அருள வேண்டும் என வணங்குவார்.
சொற்பிரிப்பு
திருப்பதிகம் கொடுபரவிப் பணிந்து திருவருளால் போய்விருப்பினொடும் திருத்துருத்தி தனை மேவி விமலர் கழல்அருத்தியினால் புக்கு இறைஞ்சி “அடியேன் மேல் உற்ற பிணிவருத்தம் எனை ஒழித்து அருள வேண்டும்” என வணங்குவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

298

பரவியே பணிந்த வர்க்குப் பரமர் திரு அருள் புரிவார்விரவிய இப் பிணி அடையத் தவிப் பதற்கு வேறு ஆகவரமலர் வண்டறை தீர்த்த வட குளித்துக் குளி என்னக்கரவில் திருத் தொண்டர் தாம் கை தொழுது புறப்பட்டார்.
சொற்பிரிப்பு
பரவியே பணிந்தவர்க்குப் பரமர் திருவருள் புரிவார்“விரவிய இப்பிணி அடையத் தவிர்ப்பதற்கு வேறு ஆகவரமலர் வண்டு அறை தீர்த்த வடகுளத்துக் குளி” என்னக்கரவில் திருத்தொண்டர் தாம் கைதொழுது புறப்பட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

299

மிக்க புனல் தீர்த்தத்தின் முன் அணைந்து வேதம் எலாம்தொக்க வடிவாய் இருந்த துருத் தியார் தமைத் தொழுதுபுக்கு அதனில் மூழ்குதலும் புதிய பிணி அது நீங்கிஅக்கணமே மணி ஒளிசேர் திரு மேனி ஆயினார்.
சொற்பிரிப்பு
மிக்க புனல் தீர்த்தத்தின் முன் அணைந்து வேதம் எலாம்தொக்க வடிவாய் இருந்த துருத்தியார் தமைத் தொழுதுபுக்கு அதனில் மூழ்குதலும் புதிய பிணி அது நீங்கிஅக்கணமே மணிஒளிசேர் திருமேனி ஆயினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

300

கண்ட வர்கள் அதிசயிப்பக் கரை யேறி உடைபுனைந்துமண்டு பெரும் காதலினால் கோயிலினை வந்து அடைந்துதொண்டர் எதிர் மின்னுமா மேகம் எனும் சொல்பதிகம்எண் திசையும் அறிந்துய்ய ஏழிசையால் எடுத்து இசைத்தார்.
சொற்பிரிப்பு
கண்டவர்கள் அதிசயிப்பக் கரை ஏறி உடை புனைந்துமண்டு பெருங்காதலினால் கோயிலினை வந்து அடைந்துதொண்டர் எதிர் “மின்னுமா மேகம்” எனும் சொல்பதிகம்எண் திசையும் அறிந்து உய்ய ஏழ் இசையால் எடுத்து இசைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

301

பண்ணிறைந்த தமிழ் பாடிப் பரமர் திரு அருள் மறவாதுஎண்ணிறைந்த தொண்டர் உடன் பணிந்து அங்கண் உறைந் தேகிஉண்ணிறைந்த பதி பிறவும் உடையவர் தாள் வணங்கிப் போய்கண்ணி றைந்த திரு வாரூர் முன் தோன்றக் காண் கின்றார்.
சொற்பிரிப்பு
பண் நிறைந்த தமிழ் பாடிப் பரமர் திருவருள் மறவாதுஎண்நிறைந்த தொண்டருடன் பணிந்து அங்கண் உறைந்து ஏகிஉண்நிறைந்த பதி பிறவும் உடையவர்தாள் வணங்கிப் போய்க்கண் நிறைந்த திருஆரூர் முன் தோன்றக் காண்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

302

அன்று திரு நோக்கு ஒன்றால் ஆரக்கண்டு இன்பு உறார்நின்று நிலமிசை வீழ்ந்து நெடிது உயிர்த்து நேர் இறைஞ்சிவன் தொண்டர் திருவா ரூர் மயங்கு மாலையில் புகுந்துதுன்று சடைத் தூவாயர் தமை முன்னம் தொழ அணைந்தார்.
சொற்பிரிப்பு
அன்று திருநோக்கு ஒன்றால் ஆரக்கண்டு இன்புறார்நின்று நிலமிசை வீழ்ந்து நெடிது உயிர்த்து நேர் இறைஞ்சிவன்றொண்டர் திருஆரூர் மயங்கு மாலையில் புகுந்துதுன்று சடைத் தூவாயர் தமை முன்னம் தொழ அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

303

பொங்கு திருத் தொண்டருடன் உள்ளணைந்து புக்கு இறைஞ்சிதுங்க இசைத் திருப்பதிகம் தூவாயா என்று எடுத்தேஇங்கு எமது துயர்களைந்து கண்காணக் காட்டாய் என்றுஅம்கணர் தம்முன் நின்றுபாடி அருந் தமிழ் புணைந்தார்.
சொற்பிரிப்பு
பொங்கு திருத்தொண்டருடன் உள் அணைந்து புக்கு இறைஞ்சித்துங்க இசைத் திருப்பதிகம் “தூவாயா” என்று எடுத்தே“இங்கு எமது துயர்களைந்து கண்காணக் காட்டாய்” என்றுஅங்கணர் தம் முன் நின்று பாடி அருந்தமிழ் புனைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

304

ஆற ணியுஞ் சடையாரைத் தொழுது புறம் போந்து அங்கண்வேறு இருந்து திருத் தொண்டர் விரவுவார் உடன் கூடிஏறுயர்த் தார் திருமூலட்டாத்து உள் இடை தெரிந்துமாறில் திரு அத்தயா மத்து இறைஞ்ச வந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
ஆறு அணியும் சடையாரைத் தொழுது புறம் போந்து அங்கண்வேறு இருந்து திருத்தொண்டர் விரவுவார் உடன் கூடிஏறு உயர்த்தார் திரு மூலட்டானத்துள் இடைதெரிந்துமாறில் திரு அத்தயாமத்து இறைஞ்ச வந்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

305

ஆதிதிரு அன்பர் எதிர் அணைய அவர் முகம் நோக்கிக்கோதில் இசை யால் குருகுபாய எனக் கோத்து எடுத்தேஏதி லார் போல் வினவி ஏசற வால் திருப்பதிகம்காதல் புரி கைக் கிளையால் பாடியே கலந்து அணைவார்.
சொற்பிரிப்பு
ஆதி திரு அன்பர் எதிர் அணைய அவர் முக நோக்கிக்கோதில் இசையால் ”குருகு பாய” எனக் கோத்து எடுத்தேஏதிலார் போல் வினவி ஏசறவால் திருப்பதிகம்காதல்புரி கைக்கிளையால் பாடியே கலந்து அணைவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

306

சீர் பெருகும் திருத் தேவாசிரியன் முன் சென்று இறைஞ்சிக்கார் விரவு கோபுரத்தைக் கை தொழுதே உள் புகுந்துதார் பெருகு பூங்கோயில் தனை வணங்கி சார்ந்து அணைவார்ஆர்வம் மிகு பெரும் காதலால் அவனி மேல் வீழ்ந்தார்.
சொற்பிரிப்பு
சீர் பெருகும் திருத்தேவாசிரியன் முன் சென்று இறைஞ்சிக்கார் விரவு கோபுரத்தைக் கைதொழுதே உள் புகுந்துதார் பெருகு பூங்கோயில் தனை வணங்கிச் சார்ந்து அணைவார்ஆர்வம் மிகு பெருங்காதலால் அவனி மேல் வீழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

307

வீழ்ந்து எழுந்து கை தொழுது முன் நின்று விம்மியேவாழ்ந்த மலர்க் கண் ஒன்றால் ஆராமல் மனம் அழிவார்ஆழ்ந்த துயர்க்கடல் இடை நின்று அடியேனை எடுத்து அருளித்தாழ்ந்த கருத் தினை நிரப்பிக் கண்தாரும் எனத் தாழ்ந்தார்.
சொற்பிரிப்பு
வீழ்ந்து எழுந்து கைதொழுது முன் நின்று விம்மியேவாழ்ந்த மலர்க் கண் ஒன்றால் ஆராமல் மனம் அழிவார்“ஆழ்ந்த துயர்க்கடல் இடைநின்று அடியேனை எடுத்தருளித்தாழ்ந்த கருத்தினை நிரப்பிக் கண்தாரும்” எனத் தாழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

308

திரு நாவலூர் மன்னர் திரு வாரூர் வீற்று இருந்தபெரு மானைத் திரு மூலட் டானம் சேர் பிஞ்ஞகனைப்பருகா இன் அமுதைக் கண் களால் பரு குதற்குமருவார் வத்துடன் மற் றைகண் தாரீர் என வணங்கி.
சொற்பிரிப்பு
திருநாவலூர் மன்னர் திருஆரூர் வீற்றிருந்தபெருமானைத், திருமூலட்டானம் சேர் பிஞ்ஞகனைப்,பருகா இன் அமுதத்தைக் கண்களால் பருகுதற்குமருவு ஆர்வத்து உடன் “மற்றைக் கண்தாரீர்”; என வணங்கி
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

309

மீளா அடிமைஎன எடுத்து மிக்க தேவர் குலம் எல்லாம்மாளமே நஞ்சு உண்டு அருளி மன்னி இருந்த பெருமானைத்தாளா தரிக்கும் மெய்அடியார் தமக்கு ஆம்இடர் நீர்தரியீர் என்றுஆளாம் திருத் தோழமைத் திறத்தால் அஞ்சொல் பதிகம் பாடினார்.
சொற்பிரிப்பு
“மீளா அடிமை” என எடுத்து மிக்க தேவர் குலம் எல்லாம்மாளாமே நஞ்சு உண்டருளி மன்னி இருந்த பெருமானைத்“தாள் ஆதரிக்கும் மெய் அடியார் தமக்காம் இடர் நீர் தரியீர்” என்றுஆளாம் திருத்தோழமைத் திறத்தால் அஞ்சொல் பதிகம் பாடினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

310

பூத முதல்வர் புற்றிடங் கொண்டு இருந்த புனிதர் வன் தொண்டர்காதல் புரிவேதனைக்கு இரங்கி கருணைத் திரு நோக்கு அளித்து அருளிச்சீதமலர்க் கண் கொடுத்து அருளச்செவ்வே விழித்து முகம் மலர்ந்துபாத மலர்கள் மேல் பணிந்து வீழ்ந் தார் உள்ளம் பரவசமாய்.
சொற்பிரிப்பு
பூத முதல்வர் புற்றிடம்கொண்டு இருந்த புனிதர் வன்தொண்டர்காதல் புரி வேதனைக்கு இரங்கிக் கருணைத் திருநோக்கு அளித்தருளிச்சீத மலர்க்கண் கொடுத்து அருளச் செவ்வே விழித்து முகமலர்ந்துபாத மலர்கள் மேல் பணிந்து வீழ்ந்தார் உள்ளம் பரவசமாய்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

311

விழுந்தும் எழுந்தும் பல முறையால் மேவிப் பணிந்து மிகப் பரவிஎழுந்த களிப் பினால் ஆடிப் பாடி இன்ப வெள் ளத்தில்அழுந்தி இரண்டு கண் ணாலும் அம்பொன் புற்றின் இடை எழுந்தசெந்தண் பவளச் சிவக் கொழுந்தின் அருளைப் பருகித் திளைக் கின்றார்.
சொற்பிரிப்பு
விழுந்தும் எழுந்தும் பல முறையால் மேவிப் பணிந்து மிகப்பரவிஎழுந்த களிப்பினால் ஆடிப் பாடி இன்ப வெள்ளத்தில்அழுந்தி இரண்டு கண்ணாலும் அம்பொன் புற்றின் இடைஎழுந்தசெழுந்தண் பவளச் சிவக்கொழுந்தின் அருளைப் பருகித் திளைக்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

312

காலம் நிரம்பத் தொழுது ஏத்திக் கனக மணி மாளிகை கோயில்ஞாலம் உய்யவரும் நம்பி நலம் கொள் விருப்பால் வலம் கொண்டுமாலும் அயனும் முறை இருக்கும் வாயில் கழியப் புறம் போந்துசீலம் உடைய அன்பர் உடன் தேவாசி ரியன் மருங்கு அணைந்தார்.
சொற்பிரிப்பு
காலம் நிரம்பத் தொழுது ஏத்திக் கனக மணி மாளிகைக்கோயில்ஞாலம் உய்ய வரும் நம்பி நலங்கொள் விருப்பால் வலங்கொண்டுமாலும் அயனும் முறை இருக்கும் வாயில் கழியப் புறம் போந்துசீலம் உடைய அன்பருடன் தேவாசிரியன் மருங்கு அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

313

நங்கை பரவையார் தம்மை நம்பி பிரிந்து போன அதன் பின்தங்கு மணி மாளிகையின் கண் தனிமை கூரத் தளர் வார்க்குக்கங்குல் பகலாய்ப் பகல் கங்கு லாகிக் கழியா நாள் எல்லாம்பொங்கு காதல் மீதூரப் புலர்வார் சில நாள் போன அதன்பின்.
சொற்பிரிப்பு
நங்கை பரவையார் தம்மை நம்பி பிரிந்து போனதன் பின்தங்கு மணி மாளிகையின்கண் தனிமை கூரத் தளர்வார்க்குக்கங்குல் பகலாய்ப் பகல் கங்குல் ஆகிக் கழியா நாள் எல்லாம்பொங்கு காதல் மீதூரப் புலர்வார் சிலநாள் போனதன் பின்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

314

செம்மை நெறி சேர் திரு நாவலூரர் ஒற்றியூர் சேர்ந்துகொம்மை முலையார் சங்கிலியார் தம்மைக் குலவு மணம் புணர்ந்தமெய்ம்மை வார்த்தை தாம் அவர்பால் விட்டார்வந்து கட்டு உரைப்பதம்மை அறியா வெகுளியினால் தரியா நெஞ்சி னொடும் தளர்வார்.
சொற்பிரிப்பு
செம்மை நெறிசேர் திருநாவலூரர் ஒற்றியூர் சேர்ந்துகொம்மை முலையார் சங்கிலியார் தம்மைக் குலவு மணம் புணர்ந்தமெய்ம்மை வார்த்தை தாம் அவர்பால் விட்டார் வந்து கட்டுரைப்பத்தம்மை அறியா வெகுளியினால் தரியா நெஞ்சினொடும் தளர்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

315

மென் பூஞ் சயனத்து இடைத்துயிலும் மேவார் விழித்தும் இனிது அமரார்பொன் பூந்தவிசின் மிசை இனிஇரார் நில்லார் செல்லார் புறம்பு ஒழியார்மன்பூ வாளி மழை கழியார் மறவார் நினையார் வாய் விள்ளார்என்பூ டுருக்கும் புல வியோ பிரிவோ இரண்டின் இடைப் பட்டார்.
சொற்பிரிப்பு
மென் பூஞ்சயனத்து இடைத் துயிலும் மேவார்; விழித்தும் இனிது அமரார்;பொன் பூந்தவிசின் மிசையின் இரார்; நில்லார்; செல்லார்; புறம்பு ஒழியார்;மன் பூவாளி மழை கழியார்; மறவார்; நினையார்; வாய் விள்ளார்:என்பூடு உருக்கும் புலவியோ? பிரிவோ? இரண்டின் இடைப்பட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

316

ஆன கவலைக் கை அறவால் அழியும் நாளில் ஆரூரர்கூனல்இளம் வெண் பிறைக் கண்ணி முடியார் கோயில் முன்குறுகப்பால் நல் விழியார் மாளிகையில் பண்டு செல்லும் பரிசினால்போன பெருமைப் பரிசனங்கள் புகுதப் பெறாது புறம் நின்றார்.
சொற்பிரிப்பு
ஆன கவலைக் கையறவால் அழியும் நாளில் ஆரூரர்கூனல் இளவெண் பிறைக்கண்ணி முடியார் கோயில் முன் குறுகப்பானல் விழியார் மாளிகையில் பண்டு செல்லும் பரிசினால்போன பெருமைப் பரிசனங்கள் புகுதப் பெறாது புறம் நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

317

நின்ற நிலைமை அவர்கள் சிலர் நிலவு திருவாரூரர் எதிர்சென்று மொழிவார் திரு ஒற்றியூரில் நிகழ்ந்த செய்கை எலாம்ஒன்றும் ஒழியாவகை அறிந்து அங்கு உள்ளார் தள்ள மாளிகையில்இன்று புறமும் சென்று எய்தப் பெற்றிலோம் என்று இறைஞ்சினார்.
சொற்பிரிப்பு
நின்ற நிலைமை அவர்கள் சிலர் நிலவு திருஆரூரர் எதிர்சென்று மொழிவார்; “திருஒற்றியூரில் நிகழ்ந்த செய்கை எலாம்ஒன்றும் ஒழியா வகை அறிந்து அங்கு உள்ளார் தள்ள மாளிகையில்இன்று புறமும் சென்று எய்தப் பெற்றிலோம்” என்று இறைஞ்சினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

318

மற்ற மாற்றம் கேட்டு அழிந்த மனத்தர் ஆகி வன்தொண்டர்உற்றஇதனுக்கு இனி என்னோ செயல் என்று உணர்வார் உலகுஇயல்புகற்ற மாந்தர் சிலர் தம்மைக் காதல் பரவையார் கொண்டசெற்ற நிலைமை அறிந்தவர்க்கு தீர்வு சொல்லச் செல விட்டார்.
சொற்பிரிப்பு
மற்ற மாற்றம் கேட்டு அழிந்த மனத்தர் ஆகி வன்தொண்டர்“உற்ற இதனுக்கு இனி என்னோ? செயல்” என்று உணர்வார், உலகியல்புகற்ற மாந்தர் சிலர் தம்மைக் காதல் பரவையார் கொண்டசெற்ற நிலைமை அறிந்தவர்க்குத் தீர்வு சொல்லச் செலவிட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

319

நம்பி அருளால் சென்ற அவரும் நங்கை பரவையார் தமதுபைம்பொன் மணி மாளிகை அணைந்து பண்பு புரியும் பாங்கினால்வெம்பு புலவிக் கடல் அழுந்தும் மின்னேரிடையார் முன் எய்திஎம் பிராட்டிக்கு இது தகுமோ என்று பலவும் எடுத்துரைப்பார்.
சொற்பிரிப்பு
நம்பி அருளால் சென்றவரும் நங்கை பரவையார் தமதுபைம்பொன் மணிமாளிகை அணைந்து பண்பு புரியும் பாங்கினால்வெம்பு புலவிக் கடல் அழுந்தும் மின் நேர் இடையார் முன் எய்தி“எம்பிராட்டிக்கு இது தகுமோ?” என்று பலவும் எடுத்து உரைப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

320

பேத நிலைமை நீதியினால் பின்னும் பலவும் சொன்னவர் முன்மாதர் அவரும் மறுத் துமனம் கொண்ட செற்றம் மாற்றாராய்ஏதம் மருவும் அவர்திறத்தில் இந்த மாற்றம் இயம்பில் உயிர்போதல் ஒழியாது என உரைத்தார் அவரும் அஞ்சிப்புறம் போந்தார்.
சொற்பிரிப்பு
பேத நிலைமை நீதியினால் பின்னும் பலவும் சொன்னவர் முன்மாதர் அவரும் மறுத்து மனம் கொண்ட செற்றம் மாற்றாராய்“ஏதம் மருவும் அவர் திறத்தில் இந்த மாற்றம் இயம்பில் உயிர்போதல் ஒழியாது” என உரைத்தார். அவரும் அஞ்சிப் புறம்போந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

321

போந்து புகுந்த படி எல்லாம் பூந்தண் பழன முனைப்பாடிவேந்தர் தமக்கு விளம்புதலும் வெரு வுற்று அயர்வார் துயர்வேலைநீந்தும் புணையாம் துணை காணார் நிகழ்ந்த சிந்தாகுலம் நெஞ்சில்காந்த அழிந்து தோய்ந்து எழார் கங்குல் இடையாமகக் கடலுள்.
சொற்பிரிப்பு
போந்து புகுந்தபடி எல்லாம் பூந்தண் பழன முனைப்பாடிவேந்தர் தமக்கு விளம்புதலும் வெருவுற்று அயர்வார் துயர் வேலைநீந்தும் புணையாம் துணை காணார் நிகழ்ந்த சிந்தாகுலம் நெஞ்சில்காந்த அழிந்து தோய்ந்து எழார் கங்குல் இடை யாமக்கடல் உள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

322

அருகு சூழ்ந்தார் துயின்று திரு அந்தயாமம் பணி மடங்கிப்பெருகு புவனம் சலிப்புஇன்றிப் பேயும் உறங்கும் பிறங்கு இருள்வாய்முருகு விரியும் மலர்க் கொன்றை முடிமேல் அரவும் இளமதியும்செருகும் ஒருவர் தோழர் தனி வருந்தி இருந்து சிந்திப்பார்.
சொற்பிரிப்பு
அருகு சூழ்ந்தார் துயின்று திரு அத்த யாமம் பணி மடங்கிப்பெருகு புவனம் சலிப்பு இன்றிப் பேயும் உறங்கும் பிறங்கு இருள்வாய்முருகு விரியும் மலர்க்கொன்றை முடிமேல் அரவும் இளமதியும்செருகும் ஒருவர் தோழர் தனி வருந்தி இருந்து சிந்திப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

323

முன்னை வினையால் இவ் வினைக்கு மூலம் ஆனாள்பால் அணையஎன்னை உடையாய் நினைந்த அருளாய் இந்தயாமத்து எழுந்து அருளிஅன்னம் அனையாள் புல வியினை அகற்றில் உய்யலாம் அன்றிப்பின்னை இல்லைச்செயல் என்று பெருமான் அடிகள் தமை நினைந்தார்.
சொற்பிரிப்பு
“முன்னை வினையால் இவ்வினைக்கு மூலம் ஆனாள் பால்அணையஎன்னை உடையாய்! நினைந்தருள்வாய் இந்த யாமத்து எழுந்தருளிஅன்னம் அனையாள் புலவியினை அகற்றில் உய்யலாம்; அன்றிப்பின்னை இல்லைச் செயல்” என்று பெருமான் அடிகள் தமை நினைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

324

அடியார் இடுக்கண் தரியாதார் ஆண்டு கொண்ட தோழர் குறைமுடியாது இருக்க வல்லரே முற்றும் அளித்தாள் பொற்றளிர்க் கைத்தொடியார் தழும்பும் முலைச்சுவடும் உடையார் தொண்டர் தாம் காணும்படியால் அணைந்தார் நெடியோனும் காணாஅடிகள் படி தோய.
சொற்பிரிப்பு
அடியார் இடுக்கண் தரியாதார், ஆண்டு கொண்ட தோழர் குறைமுடியாது இருக்க வல்லரே? முற்றும் அளித்தாள் பொன்தளிர்க்கைத்தொடியார் தழும்பும் முலைச்சுவடும் உடையார் தொண்டர் தாம் காணும்படியால் அணைந்தார் நெடியோனும் காணா அடிகள் படி தோய.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

325

தம்பிரானார் எழுந்து அருளத் தாங் கற்கு அரிய மகிழ்ச்சியினால்கம்பியா நின்ற அவயவங்கள் கலந்த புளகம் மயிர் முகிழ்ப்பநம்பி ஆரூரரும் எதிரே நளின மலர்க்கை தலைக் குவியஅம்பிகா வல்லவர் செய்ய அடித் தாமரையின் கீழ் விழுந்தார்.
சொற்பிரிப்பு
தம்பிரானார் எழுந்தருளத் தாங்கற்கு அரிய மகிழ்ச்சியினால்கம்பியாநின்று அவயவங்கள் கலந்த புளகம் மயிர் முகிழ்ப்பநம்பி ஆரூரரும் எதிரே நளின மலர்க்கை தலைக் குவியஅம்பிகா வல்லவர் செய்ய அடித் தாமரையின் கீழ் வீழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

326

விழுந்து பரவி மிக்க பெரும் விருப்பினோடும் எதிர் போற்றிஎழுந்த நண்பர் தமை நோக்கிஎன் நீ உற்றது என்று அருளதொழும் தம் குறையை விளம்புவார் யானே தொடங்கும் துரிசு இடைப்பட்டுஅழுந்தும் என்னை இன்னம் எடுத்து ஆளவேண்டும் உமக்கு என்று.
சொற்பிரிப்பு
விழுந்து பரவி மிக்க பெரு விருப்பினோடும் எதிர் போற்றிஎழுந்த நண்பர் தமை நோக்கி “என் நீ உற்றது?”என்று அருளத்தொழும் தம் குறையை விளம்புவார் “யானே தொடங்கும் துரிசிடைப்பட்டுஅழுந்தும் என்னை இன்னம் எடுத்து ஆளவேண்டும் உமக்கு” என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

327

அடியேன் அங்குத் திருவொற் றியூரில் நீரே அருள் செய்யவடிவேல் ஒண்கண் சங்கிலியை மணம் செய்து அணைந்ததிறம் எல்லாம்கொடியேர் இடையாள் பரவைதான் அறிந்து தன்பால் யான் குறுகில்முடிவேன் என்று துணிந்து இருந்தாள்என் நான் செய்வது எனமொழிந்து.
சொற்பிரிப்பு
“அடியேன் அங்குத் திருஒற்றியூரில் நீரே அருள்செய்யவடிவேல் ஒண்கண் சங்கிலியை மணம் செய்து அணைந்த திறம் எல்லாம்கொடி ஏர் இடையாள் பரவை தான் அறிந்து தன்பால் யான் குறுகில்‘முடிவேன்’ என்று துணிந்திருந்தாள்; என் நான் செய்வது” என மொழிந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

328

நாயன்நீரே நான் உமக்கு இங்கு அடியேன் ஆகில் நீர்எனக்குத்தாயின் நல்ல தோழ ருமாம் தம்பிர னாரே ஆகில்ஆய அறிவும் இழந்து அழிவேன் அயர்வு நோக்கி அவ்வளவும்போய் இவ்விரவே பரவையுறு புலவி தீர்த்துத் தாரும் என.
சொற்பிரிப்பு
“நாயனீரே! நான் உமக்கு இங்கு அடியேன் ஆகில் நீர் எனக்குத்தாயின் நல்ல தோழருமாம் தம்பிரானாரே ஆகில்ஆய அறிவும் இழந்து அழிவேன் அயர்வு நோக்கி அவ்வளவும்போய் இவ் இரவே பரவை உறு புலவி தீர்த்துத் தாரும்” என.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

329

அன்பு வேண்டும் தம் பெருமான் அடியார் வேண்டிற்றே வேண்டிமுன்பு நின்று விண்ணப்பம் செய்த நம்பி முகம் நோக்கித்துன்பம் ஒழிநீ யாம் உனக்கோர் தூதன் ஆகி இப்பொழுதேபொன்செய் மணிப்பூண் பரவைபால் போகின்றோம் என்று அருள் செய்தார்.
சொற்பிரிப்பு
அன்பு வேண்டும் தம்பெருமான் அடியார் வேண்டிற்றே வேண்டிமுன்பு நின்று விண்ணப்பம் செய்த நம்பி முகம் நோக்கித்துன்பம் ஒழி நீ யாம் உனக்கு ஓர் தூதன் ஆகி இப்பொழுதேபொன் செய் மணிப்பூண் பரவைபால் போகின்றோம்” என்று அருள்செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

330

எல்லை இல்லாக் களிப்பினராய் இறைவர் தாளில் விழுந்து எழுந்துவல்லபரிசு எல்லாம் துதித்து வாழ்ந்து நின்ற வன் தொண்டர்முல்லை முகை வெண்ணகைப்பரவை முகில் சேர் மாடத்து இடைசெல்லநில்லாது ஈண்ட எழுந்து அருளிநீக்கும் புலவி எனத் தொழுதார்.
சொற்பிரிப்பு
எல்லை இல்லாக் களிப்பினராய் இறைவர் தாளில் வீழ்ந்து எழுந்துவல்ல பரிசு எல்லாம் துதித்து வாழ்ந்து நின்ற வன்தொண்டர்“முல்லை முகை வெண்நகைப் பரவை முகில்சேர் மாடத்து இடைச்செல்லநில்லாது ஈண்ட எழுந்தருளி நீக்கும் புலவி” எனத் தொழுதார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

331

அண்டர் வாழக் கருணை யினால் ஆல காலம் அமுதாகஉண்ட நீலக் கோல மிடற்று ஒருவர் இருவர்க்கு அறிவரியர்வண்டு வாழும் மலர்க் கூந்தல் பரவையார் மாளிகை நோக்கிதொண்டனார் தம் துயர் நீக்க தூதனாராய் எழுந்து அருள.
சொற்பிரிப்பு
அண்டர் வாழக் கருணையினால் ஆல காலம் அமுது ஆகஉண்ட நீலக் கோலமிடற்று ஒருவர் இருவர்க்கு அறிவு அரியார்வண்டு வாழும் மலர்க்கூந்தல் பரவையார் மாளிகை நோக்கித்தொண்டனார் தம் துயர் நீக்கத் தூதனாராய் எழுந்தருள.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

332

தேவா சிரியன் முறை இருக்கும் தேவர் எல்லாம் சேவித்துப்போவார் தம்மில் வேண்டுவார் போத ஒழிந்தார் புறத்து ஒழியஓவா அணுக்கச் சேவ கத்தில் உள்ளோர் பூத கணநாதர்மூவா முனிவர் யோகி களின் முதல் ஆனார்கள் முன்போக.
சொற்பிரிப்பு
தேவாசிரியன் முறை இருக்கும் தேவர் எல்லாம் சேவித்துப்போவார் தம்மில் வேண்டுவார் போத ஒழிந்தார் புறத்து ஒழியஓவா அணுக்கச் சேவகத்தில் உள்ளோர் பூத கணநாதர்மூவா முனிவர் யோகிகளின் முதல் ஆனார்கள் முன் போக.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

333

அருகு பெரிய தேவ ருடன் அணைந்து வரும் அவ்விருடிகளும்மருவு நண்பின் நிதிக்கோனும் முதலாய் உள்ளோர் மகிழ்ந்து ஏத்ததெருவும் விசும்பும் நிறைந்து விரைச்செழும் பூமாரி பொழிந்து அலையப்பொருவில் அன்பர் விடும்தூதர் புனித வீதியி னில் போத.
சொற்பிரிப்பு
அருகு பெரிய தேவருடன் அணைந்து வரும் அவ் இருடிகளும்மருவு நண்பின் நிதிக்கோனும் முதலாய் உள்ளோர் மகிழ்ந்து ஏத்தத்தெருவும் விசும்பும் நிறைந்து விரைச் செழும் பூமாரி பொழிந்து அலையப்பொருவில் அன்பர் விடும் தூதர் புனித வீதியினில் போத.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

334

மாலும் அயனும் காணாதார் மலர்த்தாள் பூண்டு வந்து இறைஞ்சும்காலம்இது என்றுஅங்கு அவரை அழைத்தால் என்னக் கடல் விளைத்தஆலம் இருண்ட கண்டத்தான் அடித்தாமரை மேல் சிலம்பு ஒலிப்பநீல மலர்க்கண் பரவையார் திரு மாளிகையை நேர் நோக்கி.
சொற்பிரிப்பு
“மாலும் அயனும் காணாதார் மலர்த்தாள் பூண்டு வந்து இறைஞ்சும்காலம் இது” என்று அங்கு அவரை அழைத்தால் என்னக் கடல் விளைத்தஆலம் இருண்ட கண்டத்தான் அடித்தாமரை மேல் சிலம்பு ஒலிப்பநீல மலர்க்கண் பரவையார் திரு மாளிகையை நேர் நோக்கி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

335

இறைவர் விரைவின் எழுந்து அருள எய்தும் அவர்கள் பின் தொடரஅறை கொள் திரை நீர் தொடர்சடையில் அரவு தொடர அரியஇளம்பிறை கொள் அருகு நறைஇதழிப் பிணையல் சுரும்பு தொடர உடன்மறைகள் தொடர வன் தொண்டர் மனமும் தொடர வரும் பொழுது.
சொற்பிரிப்பு
இறைவர் விரைவின் எழுந்தருள எய்தும் அவர்கள் பின்தொடரஅறைகொள் திரை நீர் தொடர்சடையில் அரவு தொடர அரியஇளம்பிறைகொள் அருகு நறை இதழிப் பிணையல் சுரும்பு தொடர உடன்மறைகள் தொடர வன்தொண்டர் மனமும் தொடர வரும் பொழுது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

336

பெரு வீரையினும் மிக முழங்கிப் பிறங்கு மத குஞ்சரம் உரித்துமருவீர் உரிவை புனைந்தவர் தம் மருங்கு சூழ்வார் நெருங் குதலால்திரு வீதியினில் அழகர் அவர் மகிழும் செல்வத் திருவா ரூர்ஒரு வீதியிலே சிவ லோகம் முழு தும் காண உளதாமால்.
சொற்பிரிப்பு
பெருவீரையினும் மிக முழங்கிப் பிறங்கு மத குஞ்சரம் உரித்துமருவு ஈர் உரிவை புனைந்தவர் தம் மருங்கு சூழ்வார் நெருங்குதலால்திருவீதியினில் அழகர் அவர் மகிழும் செல்வத் திருஆரூர்ஒருவீதியிலே சிவலோகம் முழுதும் காண உளது ஆமால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

337

ஞாலம் உய்ய எழுந்து அருளும் நம்பி தூதர் பரவையார்கோல மணி மாளிகை வாயில் குறுகுவார் முன் கூடத்தம்பாலங்கு அணைந்தார் புறம் நிற்பப் பண்டே தம்மை அர்ச்சிக்கும்சீலம் உடைய மறை முனிவர்ஆகித் தனியே சென்று அணைந்தார்.
சொற்பிரிப்பு
ஞாலம் உய்ய எழுந்தருளும் நம்பி தூதர், பரவையார்கோல மணி மாளிகை வாயில் குறுகுவார் முன் கூடத்,தம்பால்அங்கு அணைந்தார் புறம்நிற்பப் பண்டே தம்மை அர்ச்சிக்கும்சீலம் உடைய மறைமுனிவர் ஆகித் தனியே சென்று அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

338

சென்று மணி வாயில் கதவம் செறிய அடைத்த அதன் முன்புநின்று பாவாய் திறவாய் என்று அழைப்ப நெறி மென் குழலாகும்ஒன்றும் துயிலாது உணர்ந்து அயர்வார் உடைய பெருமான் பூசனை செய்துன்றும் புரிநூல் மணி மார்பர் போலும் அழைத்தார் எனத் துணிந்து.
சொற்பிரிப்பு
சென்று மணிவாயில் கதவம் செறிய அடைத்த அதன் முன்புநின்று ‘பாவாய்! திறவாய்” என்று அழைப்ப, நெறி மென்குழலாரும்ஒன்றும் துயிலாது உணர்ந்தயர்வார் “உடைய பெருமான் பூசனை செய்துன்றும் புரிநூல் மணிமார்பர் போலும் அழைத்தார்” எனத் துணிந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

339

பாதிமதி வாழ் முடியாரைப் பயில் பூசனையின் பணி புரிவார்பாதி இரவில் இங்கு அணைந்தது என்னோ என்று பயம் எய்திப்பாதி உமையாள் திரு வடிவில் பரமர் ஆவது அறியாதேபாதிமதி வாண் நுதலாரும் பதைத்து வந்து கடை திறந்தார்.
சொற்பிரிப்பு
“பாதி மதி வாழ் முடியாரைப் பயில் பூசனையின் பணிபுரிவார்பாதி இரவில் இங்கு அணைந்தது என்னோ!” என்று பயம் எய்திப்பாதி உமையாள் திருவடிவில் பரமர் ஆவது அறியாதேபாதி மதிவாள் நுதலாரும் பதைத்து வந்து கடைதிறந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

340

மன்னும் உரிமை வன் தொண்டர் வாயில் தூதா வாயில் இடைமுன் நின்றாரைக் கண்டு இறைஞ்சி முழுதும் உறங்கும் பொழுதின் கண்என்னை ஆளும் பெரு மான் இங்கு எய்தி அருளினார் என்னமின்னும் மணி நூல் அணிமார்பீர் எய்த வேண்டிற்று என் என்றார்.
சொற்பிரிப்பு
மன்னும் உரிமை வன்தொண்டர் வாயில் தூதர் வாயில் இடைமுன் நின்றாரைக் கண்டு இறைஞ்சி “முழுதும் உறங்கும் பொழுதின்கண்என்னை ஆளும் பெருமான் இங்கு எய்தி அருளினார் என்னமின்னு மணிநூல் அணிமார்பீர்! எய்த வேண்டிற்று என்” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

341

கங்கைநீர் கரந்த வேணி கரந் தவர் அருளிச் செய்வார்நங்கைநீ மாறாது செய்யின் நான் வந்து உரைப்பது என்னஅங்கயல் விழியி னாரும் அதனை நீர் அருளிச் செய்தால்இங்கு எனக்கு இசையும் ஆகில் இசையலாம் என்று சொல்லி.
சொற்பிரிப்பு
கங்கை நீர் கரந்த வேணி கரந்தவர் அருளிச் செய்வார்“நங்கை நீ மறாது செய்யின் நான் வந்தது உரைப்பது” என்னஅங்கயல் விழியினாரும் “அதனை நீர் அருளிச் செய்தால்இங்கு எனக்கு இசையும் ஆகில் இசையலாம்” என்று சொல்லி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

342

என் நினைந்து அணைந்து என்பால் இன்னது என்றுஅருளிச் செய்தால்பின்னை அதியலும் ஆகில் ஆம் எனப் பிரானார் தாமும்மின்னிடை மடவாய் நம்பி வர இங்கு வேண்டும் என்னநன் நுதலாரும் சால நன்று நம் பெருமை என்பார்.
சொற்பிரிப்பு
“என் நினைந்து அணைந்தது என்பால் இன்னது என்று அருளிச் செய்தால்பின்னையது இயலும் ஆகில் ஆம்” எனப் பிரானார் தாமும்“மின்இடை மடவாய்! நம்பி வர இங்கு வேண்டும்” என்னநன் நுதலாரும் “சால நன்று! நம் பெருமை” என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

343

பங்குனித் திருநாளுக்குப் பண்டு போல் வருவார் ஆகிஇங்கு எனைப் பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி அங்கேசங்கிலித் தொடக்கு உண்டா ருக்கு இங்கு ஒருசார்வு உண்டோநீர்கங்கு லின் வந்து சொன்ன காரியம் அழகிது என்றார்.
சொற்பிரிப்பு
“பங்குனித் திருநாளுக்குப் பண்டுபோல் வருவார் ஆகிஇங்கு எனைப் பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி அங்கேசங்கிலித் தொடக்கு உண்டாருக்கு இங்கு ஒரு சார்வுண்டோ? நீர்கங்குலின் வந்து சொன்ன காரியம் அழகு இது” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

344

நாதரும் அதனைக் கேட்டு நங்கை நீ நம்பி செய்தஏதங்கள் மனத்துக் கொள் ளாது எய்திய வெகுளி நீங்கிநோதக ஒழித்தற்கு அன்றே நுன்னை யான் வேண்டிக் கொண்டதுஆதலின் மறுத்தல் செய்ய அடாது என அருளிச் செய்தார்.
சொற்பிரிப்பு
நாதரும் அதனைக் கேட்டு “நங்கை நீ நம்பி செய்தஏதங்கள் மனத்துக் கொள்ளாது எய்திய வெகுளி நீங்கிநோதகவு ஒழித்தற்கு அன்றோ? நுன்னை யான் வேண்டிக் கொண்டதுஆதலின் மறுத்தல் செய்ய அடாது” என அருளிச் செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

345

அரு மறை முனிவரான ஐயரைத் தைய லார் தாம்கருமம் ஈதாக நீர்இக் கடைத் தலை வருகை மற்(று)உம்பெரு மைக்குத் தகுவது அன்றால் ஒற்றியூர் உறுதி பெற்றார்வருவதற்கு இசையேன் நீரும் போம் என மறுத்துச் சொன்னார்.
சொற்பிரிப்பு
அருமறை முனிவர் ஆன ஐயரைத் தையலார் தாம்“கருமம் ஈது ஆக நீர் இக் கடைத்தலை வருகை மற்று உம்பெருமைக்குத் தகுவது அன்றால்; ஒற்றியூர் உறுதி பெற்றார்வருவதற்கு இசையேன்; நீரும் போம்” என மறுத்துச் சொன்னார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

346

நம்பர் தாம் அதனைக் கேட்டு நகையும் உட்கொண்டு மெய்ம்மைத்தம்பரிசு அறியக் காட்டார் தனிப் பெரும் தோழனார் தம்வெம்புறு வேட்கை காணும் திரு விளை யாட்டின் மேவிவம்பலர் குழலினார் தாம் மறுத் ததே கொண்டு மீண்டார்.
சொற்பிரிப்பு
நம்பர் தாம் அதனைக் கேட்டு நகையும் உட்கொண்டு மெய்ம்மைத்தம்பரிசு அறியக் காட்டார் தனிப்பெரும் தோழனார் தம்வெம்புறு வேட்கை காணும் திருவிளையாட்டின் மேவிவம்பு அலர் குழலினார் தாம் மறுத்ததே கொண்டு மீண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

347

தூதரைப் போக விட்டு வரவு பார்த் திருந்த தொண்டர்நாதரை அறி விலாதே நன் நுதல் புலவி நீக்கிப்போதரத் தொழுதேன் என்று புலம் புவார் பரவை யாரைக்காதலில் இசைவு கொண்டு வருவதே கருத்து உட் கொள்வார்.
சொற்பிரிப்பு
தூதரைப் போக விட்டு வரவு பார்த்து இருந்த தொண்டர்“நாதரை அறிவிலாதே நன்நுதல் புலவி நீக்கிப்போதரத் தொழுதேன்” என்று புலம்புவார்; பரவையாரைக்காதலில் இசைவு கொண்டு வருவதே கருத்துள் கொள்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

348

போய் அவள் மனையில் நண்ணும் புண்ணியர் என் செய்தாரோநாயனார் தம்மைக் கண்டால் நன் நுதல் மறுக்குமோ தான்ஆயஎன் அயர்வு தன்னை அறிந்து எழுந்து அருளினார் தாம்சேயிழை துனி நீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று.
சொற்பிரிப்பு
போய் அவள் மனையில் நண்ணும் புண்ணியர் என் செய்தாரோ?நாயனார் தம்மைக் கண்டால் நன்நுதல் மறுக்குமோ தான்?ஆய என் அயர்வு தன்னை அறிந்து எழுந்தருளினார் தாம்சேயிழை துனி தீர்த்து அன்றி மீள்வது செய்யார்” என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

349

வழி எதிர் கொள்ளச் செல்வர் வரவு காணாது மீள்வர்அழிவுற மயங்கி நிற்பர் அசை வுடன் இருப்பர் நெற்றிவிழி யவர் தாழ்த்தார் என்று மீளவும் எழுவர் மாரன்பொழி மலர் மாரி வீழ ஒதுங்குவார் புன்கண் உற்றார்.
சொற்பிரிப்பு
வழி எதிர் கொள்ளச் செல்வர்; வரவு காணாது மீள்வர்;அழிவுற மயங்கி நிற்பர்; அசைவுடன் இருப்பர்; “நெற்றிவிழியவர் தாழ்த்தார்” என்று மீளவும் எழுவர்; மாறன்பொழிமலர் மாரி வீழ ஒதுங்குவார்; புன்கண் உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

350

பரவை யார் தம்பால் நம்பி தூதராம் பாங்கில் போனஅரவணி சடையார் மீண்டே அறியும் மாறு அணையும் போதில்இரவும்தான் பகலாய் தோன்ற எதிர் எழுந்து அணையை விட்டஉரவு நீர் வெள்ளம் போல ஓங்கிய களிப்பில் சென்றார்.
சொற்பிரிப்பு
பரவையார் தம்பால் நம்பி தூதராம் பாங்கில் போனஅரவு அணி சடையார் மீண்டே அறியுமாறு அணையும் போதில்இரவும் தான் பகலாய்த் தோன்ற எதிர் எழுந்து அணையை விட்டஉரவு நீர் வெள்ளம் போல ஓங்கிய களிப்பில் சென்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

351

சென்று தம் பிரானைத் தாழ்ந்து திருமுகம் முறுவல் செய்யஒன்றிய விளையாட்டு ஓரார் உறுதி செய்து அணைந்தார் என்றேஅன்று நீர் ஆண்டு கொண்ட அதனுக்குத் தகவே செய்தீர்இன்று இவள் வெகுளி எல்லாம் தீர்த்து எழுந்து அருளிஎன்றார்.
சொற்பிரிப்பு
சென்று தம் பிரானைத் தாழ்ந்து திருமுகம் முறுவல் செய்யஒன்றிய விளையாட்டு ஓரார் உறுதி செய்து அணைந்தார் என்றே“அன்று நீர் ஆண்டுகொண்ட அதனுக்குத் தகவே செய்தீர்இன்று இவள் வெகுளி எல்லாம் தீர்த்து எழுந்தருளி” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

352

அம் மொழி விளம்பும் நம்பிக்கையர் தாம் அருளிச் செய்வார்நம்மை நீ சொல்ல நாம்போய்ப் பரவைதம் இல்லம் நண்ணிக்கொம்மை வெம் முலை யினாட்க்கு உன்திறம் எலாம் கூறக் கொள்ளாள்வெம்மை தான் சொல்லி நாமே வேண்டவும் மறுத்தாள் என்றார்.
சொற்பிரிப்பு
அம்மொழி விளம்பும் நம்பிக்கு ஐயர் தாம் அருளிச் செய்வார்;“நம்மை நீ சொல்ல நாம் போய்ப் பரவை தன் இல்லம் நண்ணிக்கொம்மை வெம் முலையினாட்கு உன் திறம் எலாம் கூறக் கொள்ளாள்வெம்மை தான் சொல்லி நாமே வேண்டவும் மறுத்தாள்” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

353

அண் ணலார் அருளிச் செய்யக் கேட்ட ஆரூரர் தாமும்துண்ணென நடுக்கம் உற்றே தொழுது நீர் அருளிச் செய்தவண்ணமும் அடி யாள் ஆன பரவையோ மறுப்பாள் நாங்கள்எண்ண ஆர் அடிமைக்கு என்பதுஇன்று அறிவித்தீர் என்று.
சொற்பிரிப்பு
அண்ணலார் அருளிச் செய்யக் கேட்ட ஆரூரர் தாமும்துண் என நடுக்கம் உற்றே தொழுது, ”நீர் அருளிச் செய்தவண்ணமும் அடியாள் ஆன பரவையோ மறுப்பாள்? நாங்கள்எண்ண ஆர் அடிமைக்கு என்பது இன்று அறிவித்தீர்” என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

354

வானவர் உய்ய வேண்டி மறி கடல் நஞ்சை உண்டீர்தானவர் புரங்கள் வேவ மூவரைத் தவிர்த்து ஆட் கொண்டீர்நான் மறைச் சிறுவர்க்காக காலனைக் காய்ந்து நட்டீர்யான் மிகை உமக்கு இன்று ஆனால் என் செய்வீர் போதா என்றார்.
சொற்பிரிப்பு
வானவர் உய்ய வேண்டி மறிகடல் நஞ்சை உண்டீர்!தானவர் புரங்கள் வேவ மூவரைத் தவிர்த்து ஆட் கொண்டீர்!நான்மறைச் சிறுவர்க்கு ஆகக் காலனைக் காய்ந்து நட்டீர்!யான் மிகை உமக்கு இன்று ஆனால் என் செய்வீர் போதாது? என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

355

ஆவதே செய்தீர் இன்று என் அடிமை வேண்டா விட்டால்பாவி யேன் தன்னை அன்றுவலிய ஆள் கொண்டபற்று என்நோவும் என்அழிவும் கண்டீர் நுடங்கு இடை அவள்பால் இன்றுமேவுதல் செய்யீர் ஆகில் விடும் உயிர் என்று வீழ்ந்தார்.
சொற்பிரிப்பு
“ஆவதே செய்தீர் இன்று என் அடிமை நீர் வேண்டாவிட்டால்பாவியேன் தன்னை அன்று வலிய ஆட் கொண்ட பற்று என்?நோவும் என் அழிவும் கண்டீர் நுடங்கு இடை அவள்பால் இன்றுமேவுதல் செய்யீர் ஆகில் விடும் உயிர்” என்று வீழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

356

தம்பி ரான் அதனைக் கண்டு தரியாது தளர்ந்து வீழ்ந்தநம்பியை அருளால்நோக்கி நாம் இன்னம் அவள் பால்போய் அக்கொம் பினை இப்போதே நீ குறுகுமா கூறு கின்றோம்வெம்புறு துயர் நீங்கு என்றார்வினை எல்லாம் விளைக்க வல்லார்.
சொற்பிரிப்பு
தம்பிரான் அதனைக் கண்டு தரியாது, தளர்ந்து வீழ்ந்தநம்பியை அருளால் நோக்கி, “நாம் இன்னம் அவள்பால் போய் அக்கொம்பினை இப்போதே நீ குறுகுமா கூறுகின்றோம்வெம்புறு துயர் நீங்கு” என்றார் வினை எலாம் விளைக்க வல்லார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

357

மயங்கிய நண்பர் உய்ய வாக்கு எனும் மதுர வாய்மைநயம் கிளர் அமுதம் நல்க நாவலூர் மன்னர் தாமும்முயங்கிய கலக்கம் நீக்கி உம் அடித் தொழும்பன் ஏனைப்பயம் கெடுத்து இவ்வாறு அன்றோபணி கொள்வது என்று போற்ற.
சொற்பிரிப்பு
மயங்கிய நண்பர் உய்ய வாக்கு எனும் மதுர வாய்மைநயங்கிளர் அமுதம் நல்க நாவலூர் மன்னர் தாமும்உயங்கிய கலக்கம் நீக்கி, “உம் அடித் தொழும்பனேனைப்பயங்கெடுத்து இவ்வாறு அன்றோ பணி கொள்வது” என்று போற்ற.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

358

அன்பர் மேல் கருணை கூர ஆண்டவர் மீண்டும் செல்லப்பின்பு சென்று இறைஞ்சி நம்பி பேதுற வோடு மீண்டார்முன்பு உடன் போதா தாரும் முறைமையில் சேவித்து ஏகப்பொன்புரி சடையார் மாதர் புனித மாளி கையில் சென்றார்.
சொற்பிரிப்பு
அன்பர்மேல் கருணை கூர ஆண்டவர் மீண்டும் செல்லப்பின்பு சென்று இறைஞ்சி நம்பி பேதுறவோடு மீண்டார்முன்புடன் போதாதாரும் முறைமையில் சேவித்து ஏகப்பொன்புரி சடையார் மாதர் புனித மாளிகையில் சென்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

359

மதி நுதல் பரவையார் தாம் மறை யவர் போனபின்புமுதிர் மறை முனியாய் வந்தார் அருள்உடை முதல்வர் ஆகும்அதி சயம் பலவும் தோன்ற அறிவுற்றே அஞ்சிக் கெட்டேன்எதிர்மொழி எம்பிரான் முன் என் செய மறுத்தேன் என்பார்.
சொற்பிரிப்பு
மதிநுதல் பரவையார் தாம் மறையவர் போன பின்புமுதிர்மறை முனியாய் வந்தார் அருள்உடை முதல்வர் ஆகும்அதிசயம் பலவும் தோன்ற அறிவுற்றே அஞ்சிக் “கெட்டேன்!எதிர்மொழி எம்பிரான் முன் என் செய மறுத்தேன்” என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

360

கண்துயில் எய்தார் வெய்யகை யறவு எய்தி ஈங்கு இன்றுஅண்டர் தம்பி ரானார் தோழர்க்கு ஆக அர்ச்சிப்பார் கோலம்கொண்டு அணைந்த வரையான் உட் கொண்டிலேன் பாவியேன் என்றுஒண்சுடர் வாயிலே பார்த்து உழைய ரோடு அழியும் போதில்.
சொற்பிரிப்பு
கண்துயில் எய்தார் வெய்ய கையறவு எய்தி “ஈங்கு இன்றுஅண்டர் தம் பிரானார் தோழர்க்கு ஆக அர்ச்சிப்பார் கோலம்கொண்டு அணைந்தவரை யான் உள் கொண்டிலேன் பாவியேன்” என்றுஒண் சுடர் வாயிலே பார்த்து உழையரோடு அழியும் போதில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

361

வெறி யுறு கொன்றை வேணி விமலரும் தாமாம் தன்மைஅறிவுறு கோலத் தோடும் அளவில் பல் பூத நாதர்செறிவுறு தேவர் யோக முனி வர்கள் சூழ்ந்து செல்லமறுவில் சீர் பரவையார் தம் மாளிகை புகுந்தார் வந்து.
சொற்பிரிப்பு
வெறி உறு கொன்றை வேணி விமலரும் தாமாம் தன்மைஅறிவுறு கோலத்தோடும் அளவில் பல் பூதநாதர்செறிவுறு தேவர் யோகர் முனிவர்கள் சூழ்ந்து செல்லமறுவில் சீர்ப் பரவையார் தம் மாளிகை புகுந்தார் வந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

362

பாரிடத் தலைவர் முன்னாம் பல் கண நாதர் தேவர்நேர் வுறு முனிவர் சித்தர் இயக் கர்கள் நிறைதலாலேபேரரு ளாளர் எய்தப் பெற்ற மாளி கைதான் தென்பால்சீர் வளர் கயிலை வெள்ளித் திருமலை போன்றது அன்றே.
சொற்பிரிப்பு
பாரிடத் தலைவர் முன்னாம் பல்கண நாதர் தேவர்நேர்வுறு முனிவர் சித்தர் இயக்கர்கள் நிறைதலாலேபேரருளாளர் எய்தப் பெற்ற மாளிகை தான் தென்பால்சீர்வளர் கயிலை வெள்ளித் திருமலை போன்றது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

363

ஐயர் அங்கு அணைந்த போதில் அகில லோகத்து உள்ளாரும்எய்தியே செறிந்து சூழ எதிர் கொண்ட பரவையார் தாம்மெய்யுறு நடுக்கத் தோடு மிக்கு எழும் மகிழ்ச்சி பொங்கச்செய்யதாள் இணை முன் சேர விரைவினால் சென்று வீழ்ந்தார்.
சொற்பிரிப்பு
ஐயர் அங்கு அணைந்தபோதில் அகிலலோகத்து உள்ளாரும்எய்தியே செறிந்து சூழ எதிர்கொண்ட பரவையார் தாம்மெய் உறு நடுக்கத்தோடும் மிக்கு எழும் மகிழ்ச்சி பொங்கச்செய்ய தாள் இணை முன் சேர விரைவினால் சென்று வீழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

364

அரி அயற்கு அரியர் தாமும் ஆயிழையாரை நோக்கிஉரிமையால் ஊரன் ஏவ மீளவும் உன் பால் வந்தோம்முருகலர் குழலாய் இன்னம் முன்பு போல் மறாதே நின்பால்பிரிவுற வருந்து கின்றான் வரப் பெற வேண்டும் என்றார்.
சொற்பிரிப்பு
அரி அயற்கு அரியார் தாமும் ஆயிழையாரை நோக்கி“உரிமையால் ஊரன் ஏவ மீளவும் உன்பால் வந்தோம்முருகு அலர் குழலாய்! இன்னம் முன்புபோல் மறாதே நின்பால்பிரிவுற வருந்துகின்றான் வரப்பெற வேண்டும்” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

365

பெரும் தடம் கண்ணினாரும் பிரான் முன்பு மிகவும் அஞ்சிவருந்திய உள்ளத் தோடு மலர்க்கரம் குழல் மேல் கொண்டேஅரும்திரு மறையோர் ஆகி அணைந்தீர் முன் அடியேன் செய்தஇரும் தவப் பயனாம் என்ன எய்திய நீரோ என்பார்.
சொற்பிரிப்பு
பெருந்தடங் கண்ணினாரும் பிரான் முன்பு மிகவும் அஞ்சிவருந்திய உள்ளத்தோடு மலர்க்கரம் குழல் மேல் கொண்டே“அருந்திரு மறையோர் ஆகி அணைந்தீர் முன் அடியேன் செய்தஇருந்தவப் பயனாம் என்ன எய்திய நீரோ?” என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

366

துளிவளர் கண்ணீர் வாரத் தொழுது விண் ணப்பம் செய்வார்ஒளிவளர் செய்ய பாதம் வருந்த ஓர் இரவு மாறாதுஅளி வரும் அன்பர்க்காக அங்கு ஒடிங்கி உழல் வீராகிஎளி வருவீரும் ஆனால் என்செய் கேன் இசையாது என்றார்.
சொற்பிரிப்பு
துளிவளர் கண்ணீர் வாரத் தொழுது விண்ணப்பம் செய்வார்“ஒளி வளர் செய்ய பாதம் வருந்த ஓர் இரவு மாறாதுஅளிவரும் அன்பர்க்கு ஆக அங்கொடு இங்கு உழல்வீர் ஆகிஎளி வருவீரும் ஆனால் என் செய்கேன் இசையாது!” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

367

நங்கை நின் தன்மைக்கு ஏற்கும் நன்மையே மொழிந்தாய் என்றுமங்கை யோர் பாகம் வைத்த வள்ளலார் விரைந்து போகதிங்கள் வாள் நுதலினாரும் சென்று பின்இறைஞ்சி மீண்டார்எங்களை ஆளும் நம்பி தூதர் மீண்டு ஏகு கின்றார்.
சொற்பிரிப்பு
“நங்கை! நின் தன்மைக்கு ஏற்கும் நன்மையே மொழிந்தாய்” என்றுமங்கையோர் பாகம் வைத்த வள்ளலார் விரைந்து போகத்திங்கள் வாள் நுதலினாரும் சென்று பின் இறைஞ்சி மீண்டார்எங்களை ஆளும் நம்பி தூதர் மீண்டு ஏகுகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

368

ஆதியும் மேலும் மா லயன் நாடற்கு அருளாதார்தூதினில் ஏகித் தொண் டரை ஆளும் தொழில் கண்டேவீதியில் ஆடிப் பாடி மகிழ்ந்தே மிடை கின்றார்பூதியில் நீடும் பல் கண நாதப் புகழ் வீரர்.
சொற்பிரிப்பு
ஆதியும் மேலும் மால் அயன் நாடற்கு அருளாதார்தூதினில் ஏகித் தொண்டரை ஆளும் தொழில் கண்டேவீதியில் ஆடிப் பாடி மகிழ்ந்தே மிடைகின்றார்பூதியில் நீடும் பல் கணநாதர் புகழ் வீரர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

369

அன் னவர் முன்னும் பின்னும் மருங்கும் அணைவு எய்தமின் இடையார் பால் அன்பரை உய்க்கும் விரை வோடும்சென் னியில் நீடும் கங்கை ததும்ப திரு வாரூர்மன்ன வனார் அம்மறைய வனார் பால் வந் துற்றார்.
சொற்பிரிப்பு
அன்னவர் முன்னும் பின்னும் மருங்கும் அணைவு எய்தமின் இடையார்பால் அன்பரை உய்க்கும் விரைவோடும்சென்னியில் நீடும் கங்கை ததும்பத் திருஆரூர்மன்னவனார் அம்மறையவனார் பால் வந்துற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

370

அன் பரும் என்பால் ஆவி அளிக்கும் படி போனார்என் செய்து மீள்வார் இன்னமும் என்றே இடர் கூரப்பொன் புரி முந்நூல் மார்பினர் செல்லப் பொலி வீதிமுன்புற நேரும் கண் இணை தானும் முகி ழாரால்.
சொற்பிரிப்பு
அன்பரும் “என்பால் ஆவி அளிக்கும்படி போனார்என் செய்து மீள்வார் இன்னமும்?” என்றே இடர் கூரப்பொன்புரி முந்நூல் மார்பினர் செல்லப் பொலிவீதிமுன்புற நேரும் கண்ணினை தானும் முகிழாரால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

371

அந் நிலைமைக் கண் மன்மதன் வாளிக்கு அழிவார் தம்மன் உயிர் நல்கும் தம் பெருமானார் வந்து எய்தமுன் எதிர் சென்றே மூவுலகும் சென்று அடையும் தாள்சென்னியில் வைத்து என் சொல் லுவார் என்றே தெளியாதார்.
சொற்பிரிப்பு
அந்நிலைமைக்கண் மன்மதன் வாளிக்கு அழிவார் தம்மன் உயிர் நல்கும் தம் பெருமானார் வந்து எய்தமுன் எதிர் சென்றே மூஉலகும் சென்று அடையும் தாள்சென்னியில் வைத்து ”என் சொல்லுவர்” என்றே தெளியாதார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

372

எம் பெருமான் நீர் என் உயிர் காவாது இடர் செய்யும்கொம்பு அனையாள் பால் என் கொடுவந்தீர் குறை என்னத்தம் பெருமானும் தாழ் குழல் செற்றம் தணி வித்தோம்நம்பி இனிப்போய் மற்று அவள் தன்பால் நணுகு என்ன.
சொற்பிரிப்பு
“எம்பெருமான்! நீர் என் உயிர் காவாது இடர்செய்யும்கொம்பனையாள்பால் என் கொடு வந்தீர் குறை?”என்னத்தம்பெருமானும் “தாழ்குழல் செற்றம் தணிவித்தோம்;நம்பி! இனிப்போய் மற்றவள் தன்பால் நணுகு” என்ன.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

373

நந்தி பிரானார் வந்து அருள் செய்ய நலம் எய்தும்சிந்தையுள் ஆர்வம் கூர் களி எய்தித் திகழ் கின்றார்பந்தமும் வீடும் நீர் அருள் செய்யும் படி செய்தீர்எந்தை பிரானே என் இனி என்பால் இடர் என்றார்.
சொற்பிரிப்பு
நந்தி பிரானார் வந்து அருள் செய்ய நலம் எய்தும்சிந்தை உள் ஆர்வம் கூர் களி எய்தித் திகழ்கின்றார்பந்தமும் வீடும் நீர் அருள் செய்யும் படிசெய்தீர்;எந்தை பிரானே! என் இனி என்பால் இடர்?” என்றார்;
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

374

என்று அடி வீழும் நண்பர்தம் அன்புக்கு எளிவந்தார்சென்று அணை நீ அச்சேயிழை பால் என்று அருள்செய்துவென்று உயர் சேமேல் வீதி விடங்கப் பெருமாள் தம்பொன் திகழ் வாயில் கோயில் புகுந்தார் புவி வாழ.
சொற்பிரிப்பு
என்று அடி வீழும் நண்பர் தம் அன்புக்கு எளிவந்தார்“சென்று அணை நீ அச்சேயிழை பால்” என்று அருள் செய்துவென்று உயர் சே மேல் வீதி விடங்கப் பெருமாள் தம்பொன் திகழ் வாயில் கோயில் புகுந்தார் புவி வாழ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

375

தம்பிரான் ஆனார்பின் சென்று தாழ்ந்து எழுந்து அருளால் மீள்வார்எம்பி ரான் வல்லவாறு என்று எய்திய மகிழ்ச்சி யோடும்வம் பலர் குழலார் செம்பொன் மாளிகை வாயில் நோக்கிநம்பி ஆரூரர் காதல் நயந்து எழுந்து அருளும் போது.
சொற்பிரிப்பு
தம்பிரானார் பின் சென்று தாழ்ந்து எழுந்து அருளால் மீள்வார்“எம்பிரான் வல்லவாறு” என்று எய்திய மகிழ்ச்சியோடும்வம்பு அலர் குழலார் செம்பொன் மாளிகை வாயில் நோக்கிநம்பி ஆரூரர் காதல் நயந்து எழுந்து அருளும் போது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

376

முன் துயில் உணர்ந்து சூழ்ந்த பரிசனம் மருங்கு மொய்ப்பமின் திகழ் பொலம் பூமாரி விண்ணவர் பொழிந்து வாழ்த்தமன்றல் செய் மதுர சீதம் சீகரம் கொண்டு மந்தத்தென்றலும் எதிர் கொண்டு எய்தும் சேவகம் முன்பு காட்ட.
சொற்பிரிப்பு
முன் துயில் உணர்ந்து சூழ்ந்த பரிசனம் மருங்கு மொய்ப்பமின்றிகழ் பொலம் பூமாரி விண்ணவர் பொழிந்து வாழ்த்தமன்றல் செய் மதுர சீத சீகரம் கொண்டு மந்தத்தென்றலும் எதிர்கொண்டு எய்தும் சேவகம் முன்பு காட்ட.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

377

மாலை தண் கலவைச் சேறுமான் மதச் சாந்து பொங்கும்கோல நல் பசும் கர்ப்பூரம் குங்குமம் முதலாய் உள்ளசாலும் மெய்க் கலன்கள் கூடச் சாத்தும் பூண் ஆடைவர்க்கம்பால னம் பிறவும் ஏந்தும் பரிசனம் முன்பு செல்ல.
சொற்பிரிப்பு
மாலை, தண் கலவைச் சேறு, மான்மதச் சாந்து, பொங்கும்கோல நல் பசுங் கர்ப்பூரம், குங்குமம் முதலாய் உள்ளசாலுமெய்க் கலன்கள் கூடச் சாத்தும் பூண், ஆடை வர்க்கம்,பாலன பிறவும் ஏந்தும் பரிசனம் முன்பு செல்ல.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

378

இவ்வகை இவர் வந்து எய்த எய்திய விருப் பினோடும்மை வளர் நெடுங் கணாரும் மாளிகை அடைய மன்னும்செய்வினை அலங்காரத்துச் சிறப்பு அணி பலவும் செய்துநெய்வளர் விளக்குத் தூபம் நிறை குடம் நிரைத்துப் பின்னும்.
சொற்பிரிப்பு
இவ்வகை இவர் வந்து எய்த எய்திய விருப்பினோடும்மைவளர் நெடுங்கண்ணாரும் மாளிகை அடைய மன்னும்செய்வினை அலங்காரத்துச் சிறப்பு அணி பலவும் செய்துநெய்வளர் விளக்குத் தூபம் நிறை குடம் நிரைத்துப் பின்னும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

379

பூமலி நறும் பொன் தாமம்புனை மணிக் கோவை நாற்றிக்காமர் பொன் சுண்ணம் வீசிக் கமழ்நறும் சாந்து நீவித்தூ மலர் வீதி சூழ்ந்த தோகையர் வாழ்த் தத்தாமும்மாமணி வாயில் முன்பு வந்து எதிர் ஏற்று நின்றார்.
சொற்பிரிப்பு
பூமலி நறும்பொன் தாமம் புனைமணிக் கோவை நாற்றிக்,காமர் பொன் சுண்ணம் வீசிக், கமழ்நறும் சாந்து நீவித்,தூமலர் வீதி சூழ்ந்த தோகையர் வாழ்த்தத் தாமும்மாமணி வாயில் முன்பு வந்து எதிர் ஏற்று நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

380

வண்டு லாம் குழலார் முன்பு வன்தொண்டர் வந்து கூடக்கண்ட போது உள்ளம் காதல் வெள்ளத்தின் கரை காணாதுகொண்ட நாண் அச்சம் கூர வணங்க அக் குரிசிலாரும்தண் தளிர் செங்கை பற்றிக் கொண்டு மாளிகையுள் சாந்தார்.
சொற்பிரிப்பு
வண்டுலாம் குழலார் முன்பு வன்தொண்டர் வந்து கூடக்கண்டபோது உள்ளம் காதல் வெள்ளத்தின் கரைகாணாதுகொண்ட நாண் அச்சம் கூர வணங்க அக் குரிசிலாரும்தண்டளிர்ச் செங்கை பற்றிக் கொண்டு மாளிகை உள் சார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

381

இருவரும் தம் பிரானார் தாம் இடை ஆடிச் செய்ததிரு அருள் கருணை வெள்ளத் திறத்தினைப் போற்றிச் சிந்தைமருவிய இன்ப வெள் ளத்து அழுந்திய புணர்ச் சிவாய்ப்பஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் உயிர் ஒன்று ஆனார்.
சொற்பிரிப்பு
இருவரும் தம்பிரானார் தாம் இடை ஆடிச் செய்ததிருவருள் கருணை வெள்ளத் திறத்தினைப் போற்றிச் சிந்தைமருவிய இன்ப வெள்ளத்து அழுந்திய புணர்ச்சி வாய்ப்பஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் உயிர் ஒன்று ஆனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

382

ஆரணக் கமலக் கோயில் மேவிப் புற்றிடங் கொண்டு ஆண்டநீரணி வேணி யாரை நிரந் தரம் பணிந்து போற்றிபாரணி விளக்கும் செஞ் சொல் பதிக மாலைகளும் சாத்திதாரணி மணிப்பூண் மார்பர் தாம் மகிழ்ந்து இருந்த நாளில்.
சொற்பிரிப்பு
ஆரணக் கமலக் கோயில் மேவிப் புற்றிடம் கொண்டு ஆண்டநீர் அணி வேணியாரை நிரந்தரம் பணிந்து போற்றிப்பார் அணி விளக்கும் செஞ்சொல் பதிக மாலைகளும் சாத்தித்தார் அணி மணிப்பூண் மார்பர் தாம் மகிழ்ந்து இருந்த நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

383

நம்பி ஆரூரர் நெஞ்சில் நடுக்கம் ஒன்று இன்றி நின்றுதம் பிரானாரைத் தூது தையல் பால் விட்டார் என்னும்இம்பரின் மிக்க வார்த்தை ஏயர் கோனார் தாம் கேட்டுவெம்பினார் அதி சயித்தார் வெரு வினார் விளம்பல் உற்றார்.
சொற்பிரிப்பு
“நம்பி ஆரூரர் நெஞ்சில் நடுக்கம் ஒன்று இன்றி நின்றுதம்பிரானாரைத் தூது தையல்பால் விட்டார்” என்னும்இம்பரின் மிக்க வார்த்தை ஏயர்கோனார் தாம் கேட்டுவெம்பினார் அதிசயித்தார் வெருவினார் விளம்பல் உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

384

நாயனை அடி யான் ஏவும் காரியம் நன்று சாலஏயும் என்று இதனைச் செய்வான் தொண்டனாம் என்னே பாவம்பேயனேன் பொறுக்க ஒண்ணாப் பிழை யினைச் செவியால் கேட்பதுஆயின பின்னும் மாயாது இருந்தது என் ஆவி என்பார்.
சொற்பிரிப்பு
“நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று! சாலஏயும் என்று இதனைச் செய்தான் தொண்டனாம் என்னே பாவம்!பேயனேன் பொறுக்க ஒண்ணாப் பிழையினைச் செவியால் கேட்பதுஆயின பின்னும் மாயாது இருந்தது என் ஆவி” என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

385

காரிகை தன் பால் செல்லும் காதலால் ஒருவன் ஏவப்பாரிடை நடந்து செய்ய பாத தாம ரைகள் நோவத்தேரணி வீதி யூடு செல்வது வரு வது ஆகிஓரிரவு எல்லாம் தூதுக்கு உழல் வராம் ஒருவர் என்று.
சொற்பிரிப்பு
“காரிகை தன்பால் செல்லும் காதலால் ஒருவன் ஏவப்பார் இடை நடந்து செய்ய பாத தாமரைகள் நோவத்தேர் அணி வீதி ஊடு செல்வது வருவது ஆகிஓர் இரவு எல்லாம் தூதுக்கு உழல்வராம் ஒருவர்” என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

386

நம்பர் தாம் அடிமை ஆற்றார் ஆகியே நண் ணினாரேல்உம்பரார் கோனும் மாலும் அயனும் நேர் உணர ஒண்ணாஎம் பிரான் இசைந்தால் ஏவப் பெறுவதே இதனுக்கு உள்ளம்கம்பியாது அவனை யான் முன்காணும் நாள் எந்நாள் என்று.
சொற்பிரிப்பு
நம்பர் தாம் அடிமை ஆற்றார் ஆகியே நண்ணினாரேல்உம்பரார் கோனும் மாலும் அயனும் நேர் உணர ஒண்ணாஎம்பிரான் இசைந்தால் ஏவப் பெறுவதே? இதனுக்கு உள்ளம்கம்பியாதவனை யான் முன் காணும் நாள் எந்நாள்?” என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

387

அரிவை காரணத் தினாலேஆளுடைப் பரமர் தம்மைஇரவினில் தூது போக ஏவி அங்கு இருந்தான் தன்னைவரவுஎதிர் காண்பேன் ஆகில் வருவது என்னாம் கொல் என்றுவிரவிய செற்றம் பற்றி விள்ளும் உள்ளத் தர் ஆகி.
சொற்பிரிப்பு
“அரிவை காரணத்தினாலே ஆள்உடைப் பரமர் தம்மைஇரவினில் தூது போக ஏவி அங்கு இருந்தான் தன்னைவரவு எதிர் காண்பேன் ஆகில் வருவது என்னாம்கொல்?” என்றுவிரவிய செற்றம் பற்றி விள்ளும் உள்ளத்தர் ஆகி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

388

ஈறிலாப் புகழின் ஓங்கும் ஏயர்கோன்ஆர் தாம் எண்ணிப்பேறிது பெற்றார் கேட்டுப் பிழை உடன் படுவார் ஆகிவேறினி இதற்குத் தீர்வு வேண் டுவார் விரிபூங் கொன்றைஆறிடு சடைய னாருக்கு அதனை விண் ணப்பம் செய்து.
சொற்பிரிப்பு
ஈறு இலாப் புகழின் ஓங்கும் ஏயர்கோனார் தாம் எண்ணப்பேறு இது பெற்றார் கேட்டுப் பிழை உடன்படுவார் ஆகிவேறு இனி இதற்குத் தீர்வு வேண்டுவார் விரி பூங்கொன்றைஆறு இடு சடையனாருக்கு அதனை விண்ணப்பம் செய்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

389

நாள் தொறும் பணிந்து போற்ற நாதரும் அதனை நோக்கிநீடிய தொண்டர் தம் முள் இருவரும் மேவும் நீர்மைகூடுதல் புரிவார் ஏயர் குரி சிலார் தம்பால் மேனிவாடுறும் சூலை தன்னை அருளி னார் வருந்தும் ஆற்றால்.
சொற்பிரிப்பு
நாடொறும் பணிந்து போற்ற நாதரும் அதனை நோக்கிநீடிய தொண்டர் தம்முள் இருவரும் மேவும் நீர்மைகூடுதல் புரிவார் ஏயர் குரிசிலார் தம்பால் மேனிவாடு உறு சூலை தன்னை அருளினார் வருந்தும் ஆற்றால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

390

ஏதமில் பெருமைச் செய்கை ஏயர்தம் பெரு மான் பக்கல்ஆதியார் ஏவும் சூலை அனல்செய் வேல் குடைவது என்னவேதனை மேல் மேல் செய்ய மிக அதற்கு உடைந்து வீழ்ந்துபூதநாயகர் தம் பொன் தாள் பற்றியே போற்று கின்றார்.
சொற்பிரிப்பு
ஏதம் இல் பெருமைச் செய்கை ஏயர் தம் பெருமான் பக்கல்ஆதியார் ஏவும் சூலை அனல்செய் வேல் குடைவது என்னவேதனை மேன்மேல் செய்ய மிக அதற்கு உடைந்து வீழ்ந்துபூத நாயகர் தம் பொன்தாள் பற்றியே போற்றுகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

391

சிந்தையால் வாக்கால் அன்பர் திருந்து அடி போற்றி செய்யஎந்தமை யாளும் ஏயர் காவலர் தம் பால் ஈசர்வந் துனை வருத்தும் சூலைவன் தொண்டன் தீர்கில் அன்றிமுந்துற ஒழியாது என்று மொழிந்து அருள் செய்யக் கேட்டு.
சொற்பிரிப்பு
சிந்தையால் வாக்கால் அன்பர் திருந்து அடி போற்றி செய்யஎந்தமை ஆளும் ஏயர் காவலர் தம்பால் ஈசர்வந்து ”உனை வருத்தும் சூலை வன்தொண்டன் தீர்க்கில் அன்றிமுந்துற ஒழியாது” என்று மொழிந்து அருள் செய்யக் கேட்டு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

392

எம்பிரான் எந்தை தந்தை தந்தை எங் கூட்டம் எல்லாம்தம்பிரான் நீரே என்று வழி வழி சார்ந்து வாழும்இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை நின்று ஈரும் சூலைவம்பு என ஆண்டுக் கொண்டான் ஒருவனே தீர்ப்பான் வந்து.
சொற்பிரிப்பு
எம்பிரான்! எந்தை, தந்தை, தந்தை எம் கூட்டம் எல்லாம்தம்பிரான் நீரே என்று வழிவழிச் சார்ந்து வாழும்இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை நின்று ஈரும் சூலைவம்பு என ஆண்டு கொண்டான் ஒருவனே தீர்ப்பான் வந்து!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

393

மற்றவன் தீர்க்கில் தீராது ஒழிந்து எனை வருத்தல் நன்றால்பெற்றம் மேல் உயர்த்தீர் செய்யும் பெருமையை அறிந்தார் யாரேஉற் றவன் தொண்டற்கே ஆம் உறுதியே செய்தீர் என்னக்கற்றைவார் சடையார் தாமும் அவர் முன்பு கரந்தார் அன்றே.
சொற்பிரிப்பு
“மற்றவன் தீர்க்கில் தீராது ஒழிந்து எனை வருத்தல் நன்றால்;பெற்றம் மேல் உயர்த்தீர்! செய்யும் பெருமையை அறிந்தார் யாரே!உற்ற வன் தொண்டற்கே ஆம் உறுதியே செய்தீர்” என்னக்கற்றை வார் சடையார் தாமும் அவர் முன்பு கரந்தார் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

394

வன் தொண்டர் தம்பால் சென்று வள்ளலார் அருளிச் செய்வார்இன்று நம் ஏவலாலே ஏயர் கோன் உற்ற சூலைசென்று நீ தீர்ப்பாய் ஆகஎன்று அருள் செயச் சிந்தையோடுநன்று மெய்ம் மகிழ்ந்து போற்றி வணங்கினார் நாவல் ஊரர்.
சொற்பிரிப்பு
வன்றொண்டர் தம்பால் சென்று வள்ளலார் அருளிச் செய்வார்“இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற சூலைசென்று நீ தீர்ப்பாய் ஆக” என்று அருள்செயச் சிந்தையோடுநன்று மெய்ம் மகிழ்ந்து போற்றி வணங்கினார் நாவல் ஊரர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

395

அண் ணலார் அருளிச் செய்து நீங்க ஆரூரர் தாமும்விண்ணவர் தம்பிரான் ஆர் ஏவ லால் விரைந்து செல்வார்கண்ணிய மனத் தின் மேவும் காதலால் கலிக் காமர்க்குத்திண்ணிய சூலை தீர்க்க வரு திறம் செப்பி விட்டார்.
சொற்பிரிப்பு
அண்ணலார் அருளிச் செய்து நீங்க, ஆரூரர் தாமும்விண்ணவர் தம்பிரானார் ஏவலால் விரைந்து செல்வார்கண்ணிய மனத்தின் மேவும் காதலால், கலிக்காமர்க்குத்திண்ணிய சூலை தீர்க்க வருதிறம் செப்பி விட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

396

நாதர் தம் அருளால் நண்ணும் சூலையும் அவர்பால் கேட்டகேதமும் வருத்த மீண்டும் வன் தொண்டர் வரவும் கேட்டுதூத னாய் எம்பிரானை ஏவி னான் சூலை தீர்க்கும்ஏதம் இங்கு எய்தஎய்தில் யான்செய்வது என்னாம் என்பார்.
சொற்பிரிப்பு
நாதர் தம் அருளால் நண்ணும் சூலையும் அவர்பால் கேட்டகேதமும் வருத்த, மீண்டும் வன்தொண்டர் வரவும் கேட்டுத்“தூதனாய் எம்பிரானை ஏவினான் சூலை தீர்க்கும்ஏதம் இங்கு எய்த எய்தில் யான் செய்வது என்னாம்?” என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

397

மற்றவன் இங்கு வந்து தீர்பதன்முன் நான் மாயப்பற்றி நின்று என்னை நீங்காப்பாதகச் சூலை தன்னைஉற்ற இவ் வயிற்றினோடும் கிழிப்பன் என்று உடைவாள் தன்னால்செற்றிட உயிரி னோடும் சூலையும் தீர்ந் தது அன்றே.
சொற்பிரிப்பு
“மற்றவன் இங்கு வந்து தீர்ப்பதன் முன், நான் மாயப்பற்றி நின்று என்னை நீங்காப் பாதகச் சூலை தன்னைஉற்ற இவ் வயிற்றினோடும் கிழிப்பன்” என்று உடைவாள் தன்னால்செற்றிட உயிரினோடும் சூலையும் தீர்ந்தது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

398

கரு தரும் பெருமை நீர்மைக் கலிக் காமர் தேவியாரும்பொரு வரும் கணவரோடு போ வது புரியும் காலைமருவி இங்கு அணைந்தார் நம்பி என்று முன்வந்தார் கூறஒருவரும் அழுதல் செய்யாது ஒழிக என்று உரைத்துப் பின்னும்.
சொற்பிரிப்பு
கருத அரும் பெருமை நீர்மைக் கலிக்காமர் தேவியாரும்பொரு அரும் கணவரோடு போவது புரியும் காலை“மருவி இங்கு அணைந்தார் நம்பி” என்று முன் வந்தார் கூற“ஒருவரும் அழுதல் செய்யாது ஒழிக” என்று உரைத்துப் பின்னும்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

399

கணவர் தம் செய்கை தன்னைக் கரந்து காவலரை நம்பிஅணைவுறும் பொழுது சால அலங்கரித்து எதிர் போம் என்னப்புணர் நிலை வாயில் தீபம் பூரண கும்பம் வைத்துத்துணர் மலர் மாலை தூக்கித்தொழுது எதிர் கொள்ளச் சென்றார்.
சொற்பிரிப்பு
கணவர் தம் செய்கை தன்னைக் கரந்து, காவலரை, ”நம்பிஅணைவுறும் பொழுது சால அலங்கரித்து எதிர் போம்” என்னப்புணர்நிலை வாயில் தீபம், பூரண கும்பம் வைத்துத்துணர்மலர் மாலை தூக்கித் தொழுது எதிர் கொள்ளச் சென்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

400

செம்மை சேர்சிந்தை மாந்தர் சென்று எதிர் கொண்டு போற்றநம்மை ஆளுடைய நம்பி நகை முகம் அவர்க்கு நல்கிமெய்மையாம் விருப்பின் னோடும் மேவி உள் புகுந்து மிக்கமொய்ம் மலர்த் தவிசின் மீது முகம் மலர்ந்து இருந்தபோது.
சொற்பிரிப்பு
செம்மை சேர் சிந்தை மாந்தர் சென்று எதிர் கொண்டு போற்றநம்மை ஆள் உடைய நம்பி, நகைமுகம் அவர்க்கு நல்கிமெய்ம்மையாம் விருப்பினோடும் மேவி உள் புகுந்து மிக்கமொய்ம்மலர்த் தவிசின் மீது முகமலர்ந்து இருந்த போது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

401

பான்மை அர்ச் சனைகள் எல்லாம் பண்பினில் வழாமை ஏய்ந்தநான்மறை தொடர்ந்த வாய்மை நம்பி ஆரூரர் கொண்டு இங்குயான் மிகவருந்து கின்றேன் ஏயர் கோனார் தாம் உற்றஊன வெஞ்சூலை நீங்கி உடன் இருப் பதனுக்கு என்றார்.
சொற்பிரிப்பு
பான்மை அர்ச்சனைகள் எல்லாம் பண்பினில் வழாமை, ஏய்ந்தநான்மறை தொடர்ந்த வாய்மை நம்பி ஆரூரர் கொண்டு ”இங்குயான் மிக வருந்துகின்றேன்; ஏயர்கோனார் தாம் உற்றஊன வெஞ்சூலை நீக்கி உடன் இருப்பதனுக்கு” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

402

மாதர்தம் ஏவலாலே மனைத் தொழில் மாக்கள் மற்று இங்குஏதம் ஒன்று இல்லை உள்ளே பள்ளி கொள்கின்றார் என்னத்தீது அணைவில்லையேனும் என் மனம் தெருளாது இன்னம்ஆதலால் அவரைக் காண வேண்டும் என்று அருளிச் செய்தார்.
சொற்பிரிப்பு
மாதர்தம் ஏவலாலே மனைத்தொழில் மாக்கள் “மற்று இங்குஏதம் ஒன்று இல்லை உள்ளே பள்ளிகொள்கின்றார்” என்னத்“தீது அணைவு இல்லையேனும் என் மனம் தெருளாது இன்னம்ஆதலால் அவரைக் காண வேண்டும்” என்று அருளிச் செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

403

வன் தொண்டர் பின்னும் கூற மற்றவர் தம்மைக் காட்டத்துன்றிய குருதி சோரத் தொடர் குடர் சொரிந்து உள்ளாவிபொன் றியே கிடந்தார் தம்மைக் கண்ட பின் புகுந்தவாறுநன்றுஎன மொழிந்து நானும் நண்ணுவேன் இவர் முன்பு என்பார்.
சொற்பிரிப்பு
வன்றொண்டர் பின்னும் கூற, மற்றவர் தம்மைக் காட்டத்துன்றிய குருதி சோரத் தொடர் குடர் சொரிந்து, உள் ஆவிபொன்றியே கிடந்தார் தம்மைக் கண்டபின் “புகுந்தவாறுநன்று” என மொழிந்து, “நானும் நண்ணுவேன் இவர் முன்பு” என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

404

கோளுறு மனத்தர் ஆகிக் குற்று உடை வாளைப் பற்றஆளுடைத் தம்பி ரானார் அருளி னால் அவரும் உய்ந்துகேளிரே ஆகிக் கெட்டேன் என விரைந்து எழுந்து கையில்வாளினைப் பிடித்துக் கொள்ள வன் தொண்டர் வணங்கி வீழ்ந்தார்.
சொற்பிரிப்பு
கோள் உறு மனத்தர் ஆகிக் குற்று உடைவாளைப் பற்றஆள்உடைத் தம்பிரானார் அருளினால் அவரும் உய்ந்து“கேளிரே ஆகிக் கெட்டேன்” என விரைந்து எழுந்து கையில்வாளினைப் பிடித்துக் கொள்ள, வன்தொண்டர் வணங்கி வீழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

405

மற்றவர் வணங்கி வீழ வா ளினை மாற்றி ஏயர்கொற்ற வனாரும் நம்பி குரை கழல் பணிந்து வீழ்ந்தார்அற்றை நாள் நிகழ்ந்த இந்த அதிசயம் கண்டு வானோர்பொன்தட மலரின் மாரி பொழிந் தனர் புவனம் போற்ற.
சொற்பிரிப்பு
மற்றவர் வணங்கி வீழ, வாளினை மாற்றி, ஏயர்கொற்றவனாரும் நம்பி குரைகழல் பணிந்து வீழ்ந்தார்;அற்றை நாள் நிகழ்ந்த இந்த அதிசயம் கண்டு வானோர்பொன் தடமலரின் மாரி பொழிந்தனர் புவனம் போற்ற.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

406

இருவரும் எழுந்து புல்லி இடை விடா நண்பினாலேபொரு வரும் மகிழ்ச்சி பொங்கத் திருபுன்கூர் புனிதர் பாதம்மருவினர் போற்றி நின்று வன் தொண்டர் தம்பி ரானார்அருளினை நினைந்தே அந்த ணாளன் என்று எடுத்து பாடி.
சொற்பிரிப்பு
இருவரும் எழுந்து புல்லி இடைவிடா நண்பினாலேபொருஅரும் மகிழ்ச்சி பொங்கத் திருப்புன்கூர்ப் புனிதர் பாதம்மருவினர் போற்றி நின்று, வன்தொண்டர், தம்பிரானார்அருளினை நினைந்தே “அந்தணாளன்” என்று எடுத்துப் பாடி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

407

சிலபகல் கழிந்த பின்பு திரு முனைப் பாடி நாடர்மலர் புகழ்த் திருவாரூரில் மகிழ்ந் துடன் வந்த ஏயர்குல முதல் தலைவனாரும் கூடவே குளிர் பூங் கோயில்நிலவினார் தம்மைக் கும்பிட்டு உறைந் தனர் நிறைந்த அன்பால்.
சொற்பிரிப்பு
சில பகல் கழிந்த பின்பு திருமுனைப் பாடி நாடர்மலர் புகழ்த் திருஆரூரில் மகிழ்ந்து உடன் வந்த ஏயர்குல முதல் தலைவனாரும் கூடவே குளிர் பூங்கோயில்நிலவினார் தம்மைக் கும்பிட்டு உறைந்தனர் நிறைந்த அன்பால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

408

அங்கு இனிது அமர்ந்து நம்பி அருளினால் மீண்டும் போந்துபொங்கிய திருவின் மிக்க தம் பதி புகுந்து பொற்பில்தங்கு நாள் ஏயர்கோனார் தமக்குஏற்ற தொண்டு செய்தேசெங்கண் மால் விடையார் பாதம் சேர்ந்தனர் சிறப் பினோடும்.
சொற்பிரிப்பு
அங்கு இனிது அமர்ந்து, நம்பி அருளினால் மீண்டும் போந்துபொங்கிய திருவின் மிக்க தம் பதி புகுந்து, பொற்பில்தங்குநாள், ஏயர் கோனார் தமக்கு ஏற்ற தொண்டு செய்தேசெங்கண்மால் விடையார் பாதம் சேர்ந்தனர் சிறப்பினோடும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

409

நள்ளிருள் நாய னாரைத் தூது விட்டு அவர்க்கே நண்பாம்வள்ளலார் ஏயர் கோனார் மலர் அடி வணங் கிப்புக்கேன்உள்ளு ணர்வான ஞானம் முதலிய ஒரு நான்கு உண்மைதெள்ளு தீந்தமிழால் கூறும் திரு மூலர் பெருமை செப்ப.
சொற்பிரிப்பு
நள்இருள் நாயனாரைத் தூது விட்டவர்க்கே நண்பாம்வள்ளலார் ஏயர் கோனார் மலர் அடி வணங்கிப் புக்கேன்உள் உணர்வு ஆன ஞானம் முதலிய ஒருநான்கு உண்மைதெள்ளு தீந்தமிழால் கூறும் திருமூலர் பெருமை செப்ப.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.