திருமுறை 12 · 12.032 · 38

திருநீலநக்க நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

பூத்த பங்கயப் பொகுட்டின் மேல் பொருகயல் உகளும்காய்த்த செந் நெலின் காடு சூழ் காவிரி நாட்டுச்சாத்த மங்கை என்று உலகெலாம் புகழ்வுறும் தகைத்தால்வாய்த்த மங்கல மறையவர் முதற்பதி வனப்பு.
சொற்பிரிப்பு
பூத்த பங்கயப் பொகுட்டின் மேல் பொருகயல் உகளும்காய்த்த செந்நெலின் காடு சூழ் காவிரி நாட்டுச்சாத்த மங்கை என்று உலகெலாம் புகழ்வுறும் தகைத்தால்வாய்த்த மங்கல மறையவர் முதல் பதி வனப்பு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நன்மை சாலும் அப்பதியிடை நறு நுதல் மடவார்மென் மலர்த் தடம் படிய மற்றவருடன் விரவிஅன்னம் ஒண்துறை ஆடுவ பாடுவ சாமம்பன் மறைக் கிடையுடன் பயிற்றுவ பல பூவை.
சொற்பிரிப்பு
நன்மை சாலும் அப்பதி இடை நறுநுதல் மடவார்மென்மலர்த் தடம் படிய மற்று அவர் உடன் விரவிஅன்னம் முன்துறை ஆடுவ; பாடுவ சாமம்பன்மறைக் கிடை உடன் பயிற்றுவ பல பூவை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஆய்ந்த மெய்ப் பொருள் நீறு என வளர்க்கும் அக் காப்பில்ஏய்ந்த மூன்று தீ வளர்த்துளார் இரு பிறப்பாளர்நீந்து நல் அறம் நீர்மையின் வளர்க்கும் அத்தீயைவாய்ந்த கற்புடன் நான்கு என வளர்ப்பர் கண் மடவார்.
சொற்பிரிப்பு
ஆய்ந்த மெய்ப்பொருள் நீறு என வளர்க்கும் அக் காப்பில்ஏய்ந்த மூன்று தீ வளர்த்து உளார் இரு பிறப்பாளர்;நீந்து நல் அறம் நீர்மையின் வளர்க்கும் அத் தீயைவாய்ந்த கற்பு உடன் நான்கு என வளர்ப்பர் கண் மடவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

சீலம் உய்த்த அத் திருமறையோர் செழு மூதூர்ஞாலம் மிக்க நான் மறைப் பொருள் விளக்கிய நலத்தார்ஆலம் வைத்த கண்டத்தவர் தொண்டராம் அன்பர்நீல நக்கனார் என்பவர் நிகழ்ந்துளார் ஆனார்.
சொற்பிரிப்பு
சீலம் உய்த்த அத் திருமறையோர் செழு மூதூர்ஞாலம் மிக்க நான்மறைப் பொருள் விளக்கிய நலத்தார்ஆலம் வைத்த கண்டத்தவர் தொண்டராம் அன்பர்நீல நக்கனார் என்பவர் நிகழ்ந்துளார் ஆனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வேத உள்ளுறை ஆவன விரிபுனல் வேணிநாதர் தம்மையும் அவர் அடியாரையும் நயந்துபாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றேகாதலால் அவை இரண்டுமே செய் கருத்து உடையார்.
சொற்பிரிப்பு
வேத உள் உறை ஆவன விரிபுனல் வேணிநாதர் தம்மையும் அவர் அடியாரையும் நயந்துபாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றேகாதலால் அவை இரண்டுமே செய் கருத்து உடையார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மெய்த்த ஆகம விதி வழி வேத காரணரைநித்தல் பூசனை புரிந்து எழு நியமும் செய்தேஅத்தர் அன்பருக்கு அமுது செய்விப்பது முதலாஎத் திறத்தன பணிகளும் ஏற்று எதிர் செய்வார்.
சொற்பிரிப்பு
மெய்த்த ஆகம விதி வழி வேத காரணரைநித்தல் பூசனை புரிந்து எழு நியமமும் செய்தேஅத்தர் அன்பருக்கு அமுது செய்விப்பது முதலாஎத்திறத்தன பணிகளும் ஏற்று எதிர் செய்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

ஆய செய் கையில் அமரும் நாள் ஆதிரை நாளில்மேய பூசனை நியதியை விதியினால் முடித்துத்தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்தநாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார்.
சொற்பிரிப்பு
ஆய செய்கையில் அமருநாள் ஆதிரை நாளில்மேய பூசனை நியதியை விதியினால் முடித்துத்தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்தநாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

உறையுள் ஆகிய மனை நின்றும் ஒருமை அன்புற்றமுறைமையால் வரு பூசைக்கு முற்ற வேண்டுவனகுறைவறக் கொண்டு மனைவியார் தம்மொடும் கூடஇறைவர் கோயில் வந்து எய்தினர் எல்லையில் தவத்தோர்.
சொற்பிரிப்பு
உறையுள் ஆகிய மனை நின்றும் ஒருமை அன்பு உற்றமுறைமையால் வரு பூசைக்கும் முற்ற வேண்டுவனகுறைவு அறக் கொண்டு மனைவியார் தம்மொடும் கூடஇறைவர் கோயில் வந்துஎய்தினர் எல்லையில் தவத்தோர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

அணைய வந்து புக்கு அயவந்தி மேவிய அமுதின்துணை மலர்க் கழல் தொழுது பூசனை செயத் தொடங்கிஇணைய நின்று அங்கு வேண்டுவ மனைவியார் ஏந்தஉணர்வின் மிக்கவர் உயர்ந்த அர்ச்சனை முறை உய்த்தார்.
சொற்பிரிப்பு
அணைய வந்து புக்கு அயவந்தி மேவிய அமுதின்துணை மலர்க்கழல் தொழுது பூசனை செயத் தொடங்கிஇணைய நின்று அங்கு வேண்டுவ மனைவியார் ஏந்தஉணர்வின் மிக்கவர் உயர்ந்த அர்ச்சனை முறை உய்த்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

நீடு பூசனை நிரம்பியும் அன்பினால் நிரம்பார்மாடு சூழ் புடை வலம் கொண்டு வணங்கி முன் வழுத்தித்தேடு மா மறைப் பொருளினைத் தெளிவுற நோக்கிநாடும் அஞ்செழுத்து உணர்வுற இருந்து முன் நவின்றார்.
சொற்பிரிப்பு
நீடு பூசனை நிரம்பியும் அன்பினால் நிரம்பார்மாடு சூழ் புடை வலம் கொண்டு வணங்கி முன் வழுத்தித்தேடு மாமறைப் பொருளினைத் தெளிவுற நோக்கிநாடும் அஞ்செழுத்து உணர்வு உற இருந்து முன் நவின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

தொலைவில் செய் தவத் தொண்டனார் சுருதியே முதலாம்கலையின் உண்மையாம் எழுத்து அஞ்சும் கணிக்கின்ற காலைநிலையின் நின்று முன் வழுவிட நீண்ட பொன் மேருச்சிலையினார் திருமேனி மேல் விழுந்தது ஓர் சிலம்பி.
சொற்பிரிப்பு
தொலைவில் செய்தவத் தொண்டனார் சுருதியே முதலாம்கலையின் உண்மையாம் எழுத்து அஞ்சும் கணிக்கின்ற காலைநிலையின் நின்று முன் வழுவிட நீண்ட பொன் மேருச்சிலையினார் திருமேனி மேல் விழுந்தது ஓர் சிலம்பி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

விழுந்த போதில் அங்கு அயல் நின்ற மனைவியார் விரைவுற்றுஎழுந்த அச்சமோடு இளம் குழவியில் விழும் சிலம்பிஒழிந்து நீங்கிட ஊதி முன் துமிப்பவர் போலப்பொழிந்த அன்பினால் ஊதி மேல் துமிந்தனர் போக.
சொற்பிரிப்பு
விழுந்த போதில் அங்கு அயல் நின்ற மனைவியார் விரைவு உற்றுஎழுந்த அச்சமோடு இளம் குழவியில் விழும் சிலம்பிஒழிந்து நீங்கிட ஊதி முன் துமிப்பவர் போலப்பொழிந்த அன்பினால் ஊதி மேல் துமிந்தனர் போக.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

பதைத்த செய்கையால் மனைவியார் முன்செயப் பந்தம்சிதைக்கு மாதவத் திரு மறையவர் கண்டு தம் கண்புதைத்து மற்றிது செய்தது என் பொறி இலாய் என்னச்சுதைச் சிலம்பி மேல் விழ ஊதித் துமிந்தனன் என்றார்.
சொற்பிரிப்பு
பதைத்த செய்கையால் மனைவியார் முற்செயப் பந்தம்சிதைக்கு மாதவத் திருமறையவர் கண்டு தங்கண்புதைத்து மற்று இது செய்தது என் பொறி இலாய் என்னச்சுதைச் சிலம்பி மேல் விழ ஊதித் துமிந்தனன் என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

மனைவியார் செய்த அன்பினை மனத்தினில் கொள்ளார்புனையும் நூல் மணி மார்பர் தம் பூசனைத் திறத்தில்இனைய செய்கை இங்கு அநுசிதமாம் என எண்ணும்நினைவினால் அவர் தம்மை விட்டு அகன்றிட நீப்பார்.
சொற்பிரிப்பு
மனைவியார் செய்த அன்பினை மனத்தினில் கொள்ளார்புனையும் நூல் மணி மார்பர் தம் பூசனைத் திறத்தில்இனைய செய்கை இங்கு அநுசிதமாம் என எண்ணும்நினைவினால் அவர் தம்மை விட்டு அகன்றிட நீப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

மின் நெடுஞ்சடை விமலர் மேல் விழுந்த நூல் சிலம்பிதன்னை வேறு ஒரு பரிசினால் தவிர்ப்பது தவிரமுன் அணைந்து வந்து ஊதி வாய் நீர்ப் பட முயன்றாய்உன்னை யான் இனித் துறந்தனன் ஈங்கு என உரைத்தார்.
சொற்பிரிப்பு
மின்நெடும் சடை விமலர் மேல் விழுந்த நூல் சிலம்பிதன்னை வேறு ஒரு பரிசினால் தவிர்ப்பது தவிரமுன் அணைந்து வந்து ஊதி வாய் நீர்ப்பட முயன்றாய்;உன்னை யான் இனித் துறந்தனன் ஈங்கு என உரைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

மற்ற வேலையில் கதிரவன் மலைமிசை மறைந்தான்உற்ற ஏவலின் மனைவியார் ஒருவழி நீங்கமுற்ற வேண்டுவ பழுது தீர் பூசனை முடித்துக்கற்றை வேணியார் தொண்டரும் கடிமனை புகுந்தார்.
சொற்பிரிப்பு
மற்ற வேலையில் கதிரவன் மலைமிசை மறைந்தான்;உற்ற ஏவலின் மனைவியார் ஒருவழி நீங்கமுற்ற வேண்டுவ பழுது தீர் பூசனை முடித்துக்கற்றை வேணியார் தொண்டரும் கடிமனை புகுந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

அஞ்சும் உள்ளமோடு அவர் மருங்கு அணைவுற மாட்டார்நஞ்சம் உண்டவர் கோயிலில் நங்கையார் இருந்தார்செஞ்சொல் நான்மறைத் திருநீல நக்கர்தாம் இரவுபஞ்சின் மெல் அணைப் பள்ளியில் பள்ளி கொள்கின்றார்.
சொற்பிரிப்பு
அஞ்சும் உள்ளமோடு அவர் மருங்கு அணைவு உற மாட்டார்நஞ்சம் உண்டவர் கோயிலில் நங்கையார் இருந்தார்;செஞ்சொல் நான்மறைத் திருநீல நக்கர் தாம் இரவுபஞ்சின் மெல்அணைப் பள்ளியில் பள்ளி கொள்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

பள்ளி கொள் பொழுது அயவந்திப் பரமர் தாம் கனவில்வெள்ள நீர்ச் சடையொடு நின்று மேனியைக் காட்டிஉள்ளம் வைத்து எமை ஊதி முன் துமிந்த பால் ஒழியக்கொள்ளும் இப் புறம் சிலம்பியின் கொப்புள் என்று அருள.
சொற்பிரிப்பு
பள்ளி கொள் பொழுது அயவந்திப் பரமர் தாம் கனவில்வெள்ள நீர்ச்சடையொடு நின்று மேனியைக் காட்டிஉள்ளம் வைத்து எமை ஊதி முன் துமிந்தபால் ஒழியக்கொள்ளும் இப்புறம் சிலம்பியின் கொப்புள் என்று அருள.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

கண்ட அப்பெரும் கனவினை நனவு எனக் கருதிக்கொண்ட அச்சமோடு அஞ்சலி குவித்து உடன் விழித்துத்தொண்டனார் தொழுது ஆடினார் பாடினார் துதித்தார்அண்டர் நாயகர் கருணையைப் போற்றி நின்று அழுதார்.
சொற்பிரிப்பு
கண்ட அப்பெரும் கனவினை நனவு எனக் கருதிக்கொண்ட அச்சமோடு அஞ்சலி குவித்து உடன் விழித்துத்தொண்டனார் தொழுது ஆடினார் பாடினார்; துதித்தார்;அண்ட நாயகர் கருணையைப் போற்றி நின்று அழுதார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

போது போய் இருள் புலர்ந்திடக் கோயில் உள் புகுந்தேஆதி நாயகர் அயவந்தி அமர்ந்த அங்கணர்தம்பாத மூலங்கள் பணிந்து வீழ்ந்து எழுந்து முன் பரவிமாதராரையும் கொண்டு தம் மனையில் மீண்டு அணைந்தார்.
சொற்பிரிப்பு
போது போய் இருள் புலர்ந்திடக் கோயில் உள் புகுந்தேஆதி நாயகர் அயவந்தி அமர்ந்த அங்கணர் தம்பாத மூலங்கள் பணிந்து வீழ்ந்து எழுந்து முன் பரவிமாதராரையும் கொண்டு தம் மனையில் மீண்டு அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

பின்பு முன்னையில் பெருகிய மகிழ்ச்சி வந்துஎய்தஇன்புறும் திறத்து எல்லையில் பூசனை இயற்றிஅன்பு மேம் படும் அடியவர் மிக அணை வார்க்குமுன்பு போல் அவர் வேண்டுவ விருப்புடன் முடிப்பார்.
சொற்பிரிப்பு
பின்பு முன்னையில் பெருகிய மகிழ்ச்சி வந்து எய்தஇன்புறும் திறத்து எல்லையில் பூசனை இயற்றிஅன்பு மேம்படும் அடியவர் மிக அணைவார்க்குமுன்பு போல் அவர் வேண்டுவ விருப்புடன் முடிப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

அன்ன தன்மையில் அமர்ந்து இனிது ஒழுகும் அந்நாளில்மன்னு பூந்தராய் வரு மறைப் பிள்ளையார் பெருமைபன்னி வையகம் போற்றிட மற்று அவர் பாதம்சென்னி வைத்து உடன் சேர்வுறும் விருப்பினிற் சிறந்தார்.
சொற்பிரிப்பு
அன்ன தன்மையில் அமர்ந்து இனிது ஒழுகும் அந் நாளில்மன்னு பூந்தராய் வரு மறைப் பிள்ளையார் பெருமைபன்னி வையகம் போற்றிட மற்று அவர் பாதம்சென்னி வைத்துடன் சேர்வு உறும் விருப்பினில் சிறந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

பண்பு மேம்படு நிலைமையார் பயிலும் அப்பருவம்மண் பெரும் தவப் பயன் பெற மருவு நற்பதிகள்விண் பிறங்கு நீர் வேணியார் தமைத் தொழ அணைவார்சண்பை மன்னரும் சாத்த மங்கையில் வந்து சார்ந்தார்.
சொற்பிரிப்பு
பண்பு மேம்படு நிலைமையார் பயிலும் அப் பருவம்மண் பெருந்தவப் பயன் பெற மருவு நல்பதிகள்விண் பிறங்கு நீர் வேணியார் தமைத் தொழ அணைவார்சண்பை மன்னரும் சாத்த மங்கையில் வந்து சார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

நீடு சீர்த் திரு நீலகண்டப் பெரும் பாணர்தோடுலாங் குழல் விறலியார் உடன் வரத் தொண்டர்கூடும் அப் பெரும் குழாத்தொடும் புகலியர் பெருமான்மாடு வந்தமை கேட்டு உளம் மகிழ் நீல நக்கர்.
சொற்பிரிப்பு
நீடு சீர்த் திரு நீலகண்டப் பெரும் பாணர்தோடுலாம் குழல் விறலியர் உடன் வரத் தொண்டர்கூடும் அப்பெரும் குழாத்தொடும் புகலியர் பெருமான்மாடு வந்தமை கேட்டு உளம் மகிழ் நீல நக்கர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

கேட்ட அப் பொழுதே பெரு மகிழ்ச்சியில் கிளர்ந்துதோட்டலங்கலும் கொடிகளும் புனைந்து தோரணங்கள்நாட்டி நீள் நடைக் காவணம் இட்டு நல் சுற்றத்துஈட்டமும் கொடு தாமும் முன் எதிர் கொள எழுந்தார்.
சொற்பிரிப்பு
கேட்ட அப்பொழுதே பெரு மகிழ்ச்சியில் கிளர்ந்துதோட்டு அலங்கலும் கொடிகளும் புனைந்து, தோரணங்கள்நாட்டி, நீள்நடைக் காவணம் இட்டு, நல் சுற்றத்துஈட்டமும் கொடு தாமும் முன் எதிர்கொள எழுந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

சென்று பிள்ளையார் எழுந்தருளும் திருக் கூட்டம்ஒன்றி அங்கு எதிர் கொண்டு தம் களிப்பினால் ஒருவாறுஅன்றி ஆடியும் பாடியும் தொழுது எழுந்து அணைவார்**பொன் தயங்கு நீள் மனையிடை உடன் கொடு புகுந்தார்.( ** அயர்வார் என்றும் பாடம் )
சொற்பிரிப்பு
சென்று, பிள்ளையார் எழுந்தருளும் திருக் கூட்டம்ஒன்றி அங்கு எதிர் கொண்டு தம் களிப்பினால், ஒருவாறுஅன்றி, ஆடியும், பாடியும் தொழுது எழுந்து அணைவார்பொன் தயங்கு நீள் மனைஇடை உடன் கொடு புகுந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

பிள்ளையார் எழுந்து அருளிய பெருமைக்குத் தக்கவெள்ளம் ஆகிய அடியவர் கூட்டமும் விரும்பஉள்ளம் ஆதரவு ஓங்கிட ஓங்கு சீ(ர்க்)காழிவள்ளலாரைத் தம் மனையிடை அமுது செய்வித்தார்.
சொற்பிரிப்பு
பிள்ளையார் எழுந்து அருளிய பெருமைக்குத் தக்க,வெள்ளம் ஆகிய அடியவர் கூட்டமும் விரும்ப,உள்ளம் ஆதரவு ஓங்கிட ஓங்கு சீகாழிவள்ளலாரைத் தம் மனைஇடை அமுது செய்வித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

அமுது செய்த பின் பகலவன் மேல் கடல் அணையக்குமுத வாவியில் குளிர் மதிக் கதிர் அணை போதில்இமய மங்கை தன் திருமுலை அமுது உண்டார் இரவும்தமது சீர் மனைத் தங்கிட வேண்டுவ சமைத்தார்.
சொற்பிரிப்பு
அமுது செய்த பின், பகலவன் மேல்கடல் அணையக்,குமுத வாவியில் குளிர்மதிக் கதிர் அணை போதில்,இமய மங்கைதன் திருமுலை அமுது உண்டார், இரவும்தமது சீர்மனைத் தங்கிட வேண்டுவ சமைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

சீல மெய்த் திருத் தொண்டரோடு அமுது செய்தருளிஞாலம் உய்ந்திட நாயகியுடன் நம்பர் நண்ணும்காலம் முற்பெற அழுதவர் அழைத்திடக் கடிதுநீல நக்கனார் வந்து அடி பணிந்து முன் நின்றார்.
சொற்பிரிப்பு
சீல மெய்த் திருத் தொண்டரோடு அமுதுசெய்து அருளிஞாலம் மிக்கிட நாயகி உடன் நம்பர் நண்ணும்காலம் முற்பெற அழுதவர் அழைத்திடக் கடிதுநீல நக்கனார் வந்து அடி பணிந்து முன் நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

நின்ற அன்பரை நீல கண்டப் பெரும் பாணர்க்குஇன்று தங்க ஓர் இடம் கொடுத்து அருளுவீர் என்னநன்றும் இன்புற்று நடு மனை வேதியின் பாங்கர்ச்சென்று மற்று அவர்க்கு இடம் கொடுத்தனர் திருமறையோர்.
சொற்பிரிப்பு
நின்ற அன்பரை நீல கண்டப் பெரும் பாணர்க்குஇன்று தங்க ஓர் இடம் கொடுத்து அருளூவீர் என்னநன்றும் இன்புற்று நடு மனை வேதியின் பாங்கர்ச்சென்று மற்றவர்க்கு இடம் கொடுத்தனர் திரு மறையோர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

31

ஆங்கு வேதியில் அறாத செந்தீ வலம் சுழிவுற்றுஓங்கி முன்னையில் ஒரு படித்து அன்றியே ஒளிரதாங்கு நூலவர் மகிழ்வுறச் சகோட யாழ்த் தலைவர்பாங்கு பாணியாருடன் அருளால் பள்ளி கொண்டார்.
சொற்பிரிப்பு
ஆங்கு வேதியில் அறாத செந்தீ வலஞ் சுழிவுற்றுஓங்கி, முன்னையில் ஒரு படித்து அன்றியே ஒளிரத்,தாங்கு நூலவர் மகிழ்வுறச் சகோடயாழ்த் தலைவர்பாங்கு பாணியார் உடன் அருளால் பள்ளி கொண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

32

கங்குலில் பள்ளி கொண்ட பின் கவுணியர் தலைவர்அங்கு நின்று எழுந்தருளுவார் அயவந்தி அமர்ந்ததிங்கள் சூடியை நீல நக்கரைச் சிறப்பித்தேபொங்கு செந்தமிழ் திருப்பதிகத் தொடை புனைந்தார்.
சொற்பிரிப்பு
கங்குலில் பள்ளி கொண்ட பின் கவுணியர்க்கு இறைவர்அங்கு நின்று எழுந்து அருளுவார் அயவந்தி அமர்ந்ததிங்கள் சூடியை நீல நக்கரைச் சிறப்பித்தேபொங்கு செந்தமிழ்த் திருப்பதிகத் தொடை புனைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

33

பதிக நாண் மலர் கொண்டு தம்பிரான் கழல் பரவிஅதிக நண்பினை நீல நக்கருக்கு அளித்தருளிஎதிர் கொளும் பதிகளில் எழுந்து அருளினார் என்றும்புதிய செந்தமிழ்ப் பழ மறை மொழிந்த பூசுரனார்.
சொற்பிரிப்பு
பதிக நாள்மலர் கொண்டு தம்பிரான் கழல் பரவிஅதிக நண்பினை நீல நக்கருக்கு அளித்து அருளிஎதிர்கொளும் பதிகளில் எழுந்து அருளினார், என்றும்புதிய செந்தமிழ்ப் பழ மறை மொழிந்த பூசுரனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

34

பிள்ளையார் எழுந்தருள அத்தொண்டர் தாம் பின்புதள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்பில எனினும்வள்ளலார் திருவருளினை வலிய மாட்டாமைஉள்ளம் அங்கு உடன் போக்கி மீண்டு ஒரு வகை இருந்தார்.
சொற்பிரிப்பு
பிள்ளையார் எழுந்தருள அத்தொண்டர் தாம் பின்புதள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்பு இல எனினும்வள்ளலார் திரு அருளினை வலிய மாட்டாமைஉள்ளம் அங்கு உடன் போக்கி மீண்டு ஒருவகை இருந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

35

மேவு நாளில் அவ் வேதியர் முன்பு போல் விரும்பும்தாவில் பூசனை முதற் செய்கை தலைத்தலை சிறப்பச்சேவின் மேலவர் மைந்தராம் திரு மறைச் சிறுவர்பூவடித் தலம் பொருந்திய உணர்வொடும்** பயின்றார்.( ** அறிவொடும் என்றும் பாடம் )
சொற்பிரிப்பு
மேவும் நாளில் அவ் வேதியர் முன்புபோல் விரும்பும்தாவில் பூசனை முதல் செய்கை தலைத்தலை சிறப்பச்சேவின் மேலவர் மைந்தராம் திருமறைச் சிறுவர்பூ அடித்தலம் பொருந்திய உணர்வொடும் பயின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

36

சண்பையாளியார் தாம் எழுந்தருளும் எப் பதியும்நண்பு மேம்பட நாளிடைச் செலவிட்டு நண்ணிவண் பெரும் புகழவர் உடன் பயின்று வந்து உறைந்தார்திண் பெரும் தொண்டர் ஆகிய திரு நீலநக்கர்.
சொற்பிரிப்பு
சண்பை ஆளியார் தாம் எழுந்து அருளும் எப்பதியும்நண்பு மேம்பட நாள் இடைச் செலவிட்டு நண்ணிவண் பெரும் புகழவர் உடன் பயின்று வந்து உறைந்தார்திண் பெரும்தொண்டர் ஆகிய திருநீல நக்கர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

37

பெருகு காதலில் பின் நெடு நாள் முறை பிறங்கவருபெரும் தவ மறையவர் வாழி சீகாழிஒருவர் தம் திருக் கல்லியாணத்தினில் உடனேதிருமணத் திறம் சேவித்து நம்பர் தாள் சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
பெருகு காதலில் பின் நெடு நாள் முறை பிறங்கவருபெரும் தவ மறையவர் வாழி சீகாழிஒருவர் தம் திருக் கல்லியாணத்தினில் உடனேதிருமணத் திறம் சேவித்து நம்பர்தாள் சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

38

தரு தொழில் திரு மறையவர் சாத்த மங்கையினில்வருமுதல் பெரும் திருநீல நக்கர் தாள் வணங்கிஇரு பிறப்புடை அந்தணர் ஏறுயர்த்தவர் பால்ஒருமை உய்த்துணர் நமி நந்தியார் தொழில் உரைப்பாம்.
சொற்பிரிப்பு
தரு தொழில் திரு மறையவர் சாத்த மங்கையினில்வருமுதல் பெரும் திருநீல நக்கர் தாள் வணங்கிஇரு பிறப்புடை அந்தணர் ஏறுயர்த்தவர் பால்ஒருமை உய்த்துணர் நமி நந்தியார் தொழில் உரைப்பாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.