1
மானம்மிகு தருமத்தின் வழிநின்று வாய்மையினில்ஊனமில்சீர்ப் பெருவணிகர் குடிதுவன்றி ஓங்குபதிகூனல்வளை திரைசுமந்து கொண்டுஏறி மண்டுகழிக்கானல்மிசை உலவுவளம் பெருகுதிருக் காரைக்கால்.
சொற்பிரிப்பு
மானமிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில்ஊனம் இல் சீர்ப் பெருவணிகர் குடி துவன்றி ஓங்கு பதிகூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழிக்கானல் மிசை உலவு வளம் பெருகு திருக் காரைக்கால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
வங்கமலி கடல்காரைக் காலின்கண் வாழ்வணிகர்தங்கள்குலத் தலைவனார் தனதத்தனார் தவத்தால்அங்கவர்பால் திருமடந்தை அவதரித்தாள் எனவந்துபொங்கியபே ரழகுமிகப் புனிதவதி யார்பிறந்தார்.
சொற்பிரிப்பு
வங்கமலி கடல் காரைக் காலின்கண் வாழ் வணிகர்தங்கள் குலத் தலைவனார் தனதத்தனார் தவத்தால்அங்கு அவர்பால் திருமடந்தை அவதரித்தாள் என வந்துபொங்கிய பேரழகு மிகப் புனிதவதியார் பிறந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
3
வணிகர்பெருங் குலம்விளங்க வந்துபிறந் தருளியபின்அணிகிளர்மெல் அடிதளர்வுற் றசையுநடைப் பருவத்தேபணிஅணிவார் கழற்கடிமை பழகிவரும் பாங்குபெறத்தணிவில்பெரு மனக்காதல் ததும்பவரும் மொழிபயின்றார்.
சொற்பிரிப்பு
வணிகர் பெரும் குலம் விளங்க வந்து பிறந்து அருளியபின்அணிகிளர் மெல் அடி தளர்வுற்று அசையுநடைப் பருவத்தேபணி அணிவார் கழற்கு அடிமை பழகி வரும் பாங்கு பெறத்தணிவில் பெரு மனக்காதல் ததும்ப வரும் மொழி பயின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
4
பல்பெருநற் கிளைஉவப்பப் பயில்பருவச் சிறப்பெல்லாம்செல்வமிகு தந்தையார் திருப்பெருகுஞ் செயல்புரியமல்குபெரும் பாராட்டின் வளர்கின்றார் விடையவர்பால்அல்கியஅன் புடன்அழகின் கொழுந்தெழுவ தெனவளர்வார்.
சொற்பிரிப்பு
பல்பெரு நல் கிளை உவப்பப் பயில் பருவச் சிறப்பு எல்லாம்செல்வ மிகு தந்தையார் திருப்பெருகும் செயல் புரியமல்கு பெரும் பாராட்டின் வளர்கின்றார் விடையவர்பால்அல்கிய அன்பு உடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
5
வண்டல்பயில் வனவெல்லாம் வளர்மதியம் புனைந்தசடைஅண்டர்பிரான் திருவார்த்தை அணையவரு வனபயின்றுதொண்டர்வரில் தொழுதுதா தியர்போற்றத் துணைமுலைகள்கொண்டநுசுப் பொதுங்குபதக் கொள்கையினிற் குறுகினார்.
சொற்பிரிப்பு
வண்டல் பயில்வன எல்லாம் வளர்மதியம் புனைந்த சடைஅண்டர் பிரான் திருவார்த்தை அணைய வருவன பயின்றுதொண்டர் வரில் தொழுதுதா தியர் போற்றத் துணைமுலைகள்கொண்ட நுசுப்பு ஒதுங்கு பதக் கொள்கையினில் குறுகினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
6
நல்லவென உறுப்புநூ லவர்உரைக்கும் நலம்நிரம்பிமல்குபெரு வனப்புமீக் கூரவரு மாட்சியினால்இல்லிகவாப் பருவத்தில் இவர்கள்மர பினுக்கேற்கும்தொல்குலத்து வணிகர்மகட் பேசுதற்குத் தொடங்குவார்.
சொற்பிரிப்பு
நல்லவென உறுப்பு நூ லவர் உரைக்கும் நலம் நிரம்பிமல்கு பெருவனப்பு மீக் கூர வரு மாட்சியினால்இல் இகவாப் பருவத்தில் இவர்கள் மரபினுக்கு ஏற்கும்தொல்குலத்து வணிகர் மகள் பேசுதற்குத் தொடங்குவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
7
நீடியசீர்க் கடல்நாகை நிதிபதிஎன் றுலகின்கண்பாடுபெறு புகழ்வணிகன் பயந்தகுல மைந்தனுக்குத்தேடவருந் திருமரபில் சேயிழையை மகட்பேசமாடமலி காரைக்கால் வளநகரில் வரவிட்டார்.
சொற்பிரிப்பு
நீடிய சீர்க் கடல்நாகை நிதிபதி என்று உலகின்கண்பாடுபெறு புகழ் வணிகன் பயந்த குலமைந்தனுக்குத்தேடவரும் திருமரபில் சேயிழையை மகள் பேசமாடமலி காரைக்கால் வளநகரில் வரவிட்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
8
வந்தமூ தறிவோர்கள் மணங்குறித்த மனைபுகுந்துதந்தையாம் தனதத்தன் தனைநேர்ந்து "நீபயந்தபைந்தொடியை நிதிபதிமைந் தன்பரம தத்தனுக்குமுந்தைமர பினுக்கேற்கும் முறைமைமணம் புரி"கென்றார்.
சொற்பிரிப்பு
வந்த மூது அறிவோர்கள் மணம் குறித்த மனைபுகுந்துதந்தையாம் தனதத்தன் தனை நேர்ந்து “நீ பயந்தபைந்தொடியை நிதிபதி மைந்தன்பரம தத்தனுக்குமுந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக” என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
9
மற்றவனும் முறைமையினால் மனம்இசைந்து செலவிடச்சென்றுஉற்றவர்கள் உரைகேட்ட நிதிபதியும் உயர்சிறப்புப்பெற்றனன்போல் உவந்துதனிப் பெருமகட்குத் திருமலியும்சுற்றமுடன் களிகூர்ந்து வதுவைவினைத் தொழில்பூண்டான்.
சொற்பிரிப்பு
மற்றவனும் முறைமையினால் மணம் இசைந்து செலவிடச் சென்றுஉற்றவர்கள் உரைகேட்ட நிதிபதியும் உயர் சிறப்புப்பெற்றனன்போல் உவந்து தனிப் பெருமகற்குத் திருமலியும்சுற்றமுடன் களிகூர்ந்து வதுவை வினைத் தொழில் பூண்டான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
10
மணமிசைந்த நாளோலை செலவிட்டு மங்கலநாள்அணையவது வைத்தொழில்க ளானவெலாம் அமைவித்தேஇணரலங்கல் மைந்தனையும் மணவணியின் எழில்விளக்கிபணைமுரசம் எழுந்தார்ப்பக் காரைக்கால் பதிபுகுந்தார்.
சொற்பிரிப்பு
மணம் இசைந்த நாள் ஓலை செலவிட்டு மங்கலநாள்அணைய வதுவைத் தொழில்கள் ஆன எலாம் அமைவித்தேஇணர் அலங்கல் மைந்தனையும் மணஅணியின் எழில் விளக்கிப்பணைமுரசம் எழுந்து ஆர்ப்பக் காரைக்கால் பதி புகுந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
11
அளிமிடைதார்த் தனதத்தன் அணிமாடத்துள் புகுந்துதெளிதருநூல் விதிவழியே செயல்முறைமை செய்தமைத்துத்தளிரடிமென் நகைமயிலைத் தாதவிழ்தார்க் காளைக்குக்களிமகிழ்சுற் றம்போற்றக் கலியாணஞ் செய்தார்கள்.
சொற்பிரிப்பு
அளிமிடை தார்த் தனதத்தன் அணிமாடத்து உள் புகுந்துதெளிதரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்துத்தளிர்அடி மென் நகை மயிலைத் தாதவிழ் தார்க் காளைக்குக்களிமகிழ் சுற்றம் போற்றக் கலியாணம் செய்தார்கள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
12
மங்கலமா மணவினைகள் முடித்தியல்பின் வைகுநாள்தங்கள்குடிக் கரும்புதல்வி ஆதலினால் தனதத்தன்பொங்கொலிநீர் நாகையினிற் போகாமே கணவனுடன்அங்கண்அமர்ந் தினிதிருக்க அணிமாடம் மருங்கமைத்தான்.
சொற்பிரிப்பு
மங்கல மாமண வினைகள் முடித்து இயல்பின் வைகுநாள்தங்கள் குடிக்கு அரும் புதல்வி ஆதலினால் தனதத்தன்பொங்கு ஒலிநீர் நாகையினில் போகாமே கணவனுடன்அங்கண் அமர்ந்து இனிது இருக்க அணிமாடம் மருங்கு அமைத்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
13
மகட்கொடையின் மகிழ்சிறக்கும் வரம்பில்தனங் கொடுத்ததற்பின்நிகர்ப்பரிய பெருஞ்சிறப்பில் நிதிபதிதன் குலமகனும்தகைப்பில்பெருங் காதலினால் தங்குமனை வளம்பெருக்கிமிகப்புரியும் கொள்கையினில் மேம்படுதல் மேவினான்.
சொற்பிரிப்பு
மகள்கொடையின் மகிழ்சிறக்கும் வரம்பில் தனம் கொடுத்ததன் பின்நிகர்ப்பு அரிய பெரும்சிறப்பில் நிதிபதிதன் குலமகனும்தகைப்பில் பெரும் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கிமிகப்புரியும் கொள்கையினில் மேம்படுதல் மேவினான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
14
ஆங்கவன்தன் இல்வாழ்க்கை அருந்துணையாய் அமர்கின்றபூங்குழலார் அவர்தாமும் பொருவிடையார் திருவடிக்கீழ்ஓங்கியஅன் புறுகாதல் ஒழிவின்றி மிகப்பெருகப்பாங்கில்வரும் மனைஅறத்தின் பண்புவழாமையில் பயில்வார்.
சொற்பிரிப்பு
ஆங்கு அவன்தன் இல்வாழ்க்கை அருந்துணையாய் அமர்கின்றபூங்குழலார் அவர் தாமும் பொருவிடையார் திருவடிக் கீழ்ஓங்கிய அன்பு உறுகாதல் ஒழிவு இன்றி மிகப் பெருகப்பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
15
நம்பர்அடி யார்அணைந்தால் நல்லதிரு அமுதளித்தும்செம்பொன்னும் நவமணியும் செழுந்துகிலும் முதலானதம்பரிவி னால்அவர்க்குத் தகுதியின்வேண் டுவகொடுத்தும்உம்பர்பிரான் திருவடிக்கீழ் உணர்வுமிக ஒழுகுநாள்.
சொற்பிரிப்பு
நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும்செம்பொன்னும் நவமணியும் செழும் துகிலும் முதலானதம் பரிவினால்அவர்க்குத் தகுதியின் வேண்டுவ கொடுத்தும்உம்பர் பிரான் திருவடிக் கீழ் உணர்வு மிக ஒழுகுநாள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
16
பாங்குடைய நெறியின்கட் பயில்பரம தத்தனுக்குமாங்கனிகள் ஓரிரண்டு வந்தணைந்தார் சிலர்கொடுப்பஆங்கவைதான் முன்வாங்கி அவர்வேண்டுங் குறையளித்தே"ஈங்கிவற்றை இல்லத்துக் கொடுக்க"என இயம்பினான்.
சொற்பிரிப்பு
பாங்குடைய நெறியின்கண் பயில் பரம தத்தனுக்குமாங்கனிகள் ஓர் இரண்டு வந்து அணைந்தார் சிலர் கொடுப்பஆங்கு அவைத்தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே“ஈங்கு இவற்றை இல்லத்துக் கொடுக்க” என இயம்பினான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
17
கணவன்தான் வரவிடுத்த கனிஇரண்டுங் கைக்கொண்டுமணமலியும் மலர்க்கூந்தல் மாதரார் வைத்ததற்பின்பணஅரவம் புனைந்தருளும் பரமனார் திருத்தொண்டர்உணவின்மிகு வேட்கையினால் ஒருவர்மனை யுட்புகுந்தார்.
சொற்பிரிப்பு
கணவன் தான் வரவிடுத்த கனி இரண்டும் கைக்கொண்டுமணமலியும் மலர்க்கூந்தல் மாதரார் வைத்ததன் பின்பண அரவம் புனைந்து அருளும் பரமனார் திருத்தொண்டர்உணவின் மிகு வேட்கையினால் ஒருவர் மனை உள் புகுந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
18
வேதங்கள் மொழிந்தபிரான் மெய்த்தொண்டர் நிலைகண்டு"நாதன்தன் அடியாரைப் பசிதீர்ப்பேன்" எனநண்ணிப்பாதங்கள் விளக்கநீர் முன்னளித்துப் பரிகலம்வைத்(து)ஏதந்தீர் நல்விருந்தா இன்அடிசில் ஊட்டுவார்.
சொற்பிரிப்பு
வேதங்கள் மொழிந்தபிரான் மெய்த்தொண்டர் நிலைகண்டு“நாதன் தன் அடியாரைப் பசி தீர்ப்பேன்” என நண்ணிப்பாதங்கள் விளக்க நீர் முன் அளித்துப் பரிகலம் வைத்துஏதம் தீர் நல்விருந்தா இன் அடிசில் ஊட்டுவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
19
கறியமுதங் குதவாதே திருஅமுது கைகூடவெறிமலர்மேல் திருவனையார் "விடையவன்தன் அடியாரேபெறலரிய விருந்தானால் பேறிதன்மேல் இல்லை"எனும்அறிவினராய் அவர்அமுது செய்வதனுக் காதரிப்பார்.
சொற்பிரிப்பு
கறி அமுது அங்கு உதவாதே திருஅமுது கைகூடவெறிமலர்மேல் திரு அனையார் விடையவன் தன் அடியாரேபெறல் அரிய விருந்தானால் பேறு இதன்மேல் இல்லை” எனும்அறிவினராய் அவர் அமுது செய்வதனுக்கு ஆதரிப்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
20
இல்லாளன் "வைக்க"எனத் தம்பக்கல் முன்னிருந்தநல்லநறு மாங்கனிகள் இரண்டினில்ஒன் றைக்கொண்டுவல்விரைந்து வந்தணைந்து படைத்துமன மகிழ்ச்சியினால்அல்லல்தீர்ப் பவர்அடியார் தமைஅமுது செய்வித்தார்.
சொற்பிரிப்பு
இல்லாளன் “வைக்க” எனத் தம்பக்கல் முன் இருந்தநல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றைக் கொண்டுவல்விரைந்து வந்து அணைந்து படைத்து மன மகிழ்ச்சியினால்அல்லல் தீர்ப்பவர் அடியார் தமை அமுது செய்வித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
21
மூப்புறும்அத் தளர்வாலும் முதிர்ந்துமுடு கியவேட்கைத்தீப்பசியின் நிலையாலும் அயர்ந்தணைந்த திருத்தொண்டர்வாய்ப்புறுமென் சுவைஅடிசில் மாங்கனியோ டினிதருந்திப்பூப்பயில்மென் குழல்மடவார் செயல்உவந்து போயினார்.
சொற்பிரிப்பு
மூப்பு உறும் அத்தளர்வாலும் முதிர்ந்து முடுகிய வேட்கைத்தீப்பசியின் நிலையாலும் அயர்ந்து அணைந்த திருத்தொண்டர்வாய்ப்புறு மென் சுவை அடிசில் மாங்கனியோடு இனிது அருந்திப்பூப்பயில் மென் குழல்மடவார் செயல் உவந்து போயினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
22
மற்றவர் தாம்போயின பின்மனைப்பதி ஆகியவணிகன்உற்றபெரும் பகலின்கண் ஓங்கியபேர் இல்எய்திப்பொற்புறமுன் நீர்ஆடிப்புகுந்து அடிசில் புரிந்துஅயிலக்கற்புடைய மடவாரும்கடப் பாட்டில் ஊட்டுவார்.
சொற்பிரிப்பு
மற்று அவர்தாம் போயினபின் மனைப்பதி ஆகிய வணிகன்உற்ற பெரும் பகலின்கண் ஓங்கிய பேர் இல் எய்திப்பொற்புற முன் நீர் ஆடிப் புகுந்து அடிசில் புரிந்து அயிலக்கற்பு உடைய மடவாரும் கடப்பாட்டில் ஊட்டுவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
23
இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன்பின்மன்னிய சீர்க் கணவன் தான் மனை இடை முன் வைப்பித்தநல் மதுர மாங்கனியில் இருந்ததனை நறும் கூந்தல்அன்ன மனையார் தாமும் கொடு வந்து கலத்து அளித்தார்.
சொற்பிரிப்பு
இன் அடிசில் கறிகள் உடன் எய்து முறை இட்டதன் பின்மன்னியசீர்க் கணவன் தான் மனைஇடை முன் வைப்பித்தநன் மதுர மாங்கனியில் இருந்ததனை நறும் கூந்தல்அன்னம் அனையார் தாமும் கொடுவந்து கலத்து அளித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
24
மனைவியார் தாம் படைத்த மதுர(ம்) மிக வாய்த்த கனிதனை நுகர்ந்த இனிய சுவை ஆராமைத் தார் வணிகன்இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக எனஅனையது தாம் கொண்டு வர அணைவார் போல் அங்கு அகன்றார்.
சொற்பிரிப்பு
மனைவியார் தாம் படைத்த மதுர மிக வாய்ந்த கனிதனை நுகர்ந்த இனிய சுவை ஆராமைத் தார் வணிகன்இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக எனஅனையது தாம் கொண்டு வர அணைவார்போல் அங்கு அகன்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
25 Unavailable
இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.
அம் மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு அங்கு என்செய்வார்மெய்ம் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தாள்தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார்கைம் மருங்கு வந்து இருந்தது அதிமதுரக் கனி ஒன்று.
சொற்பிரிப்பு
அம்மருங்கு நின்று அயர்வார் அருங்கனிக்கு அங்கு என் செய்வார்?மெய்ம்மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தாள்தம்மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ்குழலார்கைம்மருங்கு வந்திருந்தது அதி மதுரக் கனி ஒன்று.
26
மற்றதனைக் கொடு வந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில்உற்ற சுவை அமுதினும் மேல் பட உளதாயிட இது தான்முன் தரு மாங் கனி அன்று மூவுலகில் பெறர்க்கு அரிதால்பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார் தமைக் கேட்டான்.
சொற்பிரிப்பு
மற்று அதனைக் கொடுவந்து மகிழ்ந்து இடலும் அயின்ற அதனில்உற்ற சுவை அமுதினுமேல் பட உளது ஆயிட ”இது தான்முன் தரு மாங்கனி அன்று; மூஉலகில் பெறற்கு அரிதால்பெற்றது வேறு எங்கு என்று பெய்வளையார் தமைக் கேட்டான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
27
அவ்வுரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து அருளும்செவ்விய பேரருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார்கை வரு கற்புடை நெறியால் கணவன் உரை காவாமைமெய் வழி அன்று என விளம்பல் விட மாட்டார் விதிர்ப்பு உறுவார்.
சொற்பிரிப்பு
அவ்உரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து அருளும்செவ்விய பேரருள் விளம்பும் திறம் அன்று என்று உரைசெய்யார்;கைவரு கற்பு உடை நெறியால் கணவன் உரை காவாமைமெய்வழி அன்று என விளம்பல் விடமாட்டார்; விதிர்ப்பு உறுவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
28
செய்த படி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தால்மை தழையும் கண்டர் சேவடிகள் மனத்து உற வணங்கிஎய்தவரும் கனி அளித்தார் யார் என்னும் கணவனுக்குமொய் தரு பூங்குழல் மடவார் புகுந்தபடி தனை மொழிந்தார்.
சொற்பிரிப்பு
செய்தபடி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தால்மைதழையும் கண்டர் சேவடிகள் மனத்து உற வணங்கிஎய்த வரும் கனி அளித்தார் யார் என்னும் கணவனுக்குமொய்தரு பூங்குழல் மடவார் புகுந்தபடி தனை மொழிந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
29
ஈசன் அருள் எனக் கேட்ட இல் இறைவன் அது தெளியான்வாச மலர்த் திரு அனையார் தமை நோக்கி மற்று இது தான்தேசுடைய சடைப் பெருமான் திருவருளேல் இன்னமும் ஓர்ஆசில் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான்.
சொற்பிரிப்பு
ஈசன் அருள் எனக்கேட்ட இல் இறைவன் அது தெளியான்வாசமலர்த் திருஅனையார் தமை நோக்கி மற்று இதுதான்தேசு உடைய சடைப்பெருமான் திருவருளேல் இன்னமும் ஓர்ஆசில் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
30
பாங்கு அகன்று மனைவியார் பணி அணிவார் தமைப் பரவிஈங்கு இது அளித்து அருளீரேல் என் உரை பொய்யாம் என்னமாங்கனி ஒன்று அருளால் வந்து எய்துதலும் மற்று அதனைஆங்கு அவன் கைக் கொடுத்தலுமே அதிசயித்து வாங்கினான்.
சொற்பிரிப்பு
பாங்கு அகன்று மனைவியார் பணி அணிவார் தமைப் பரவிஈங்கு இது அளித்து அருளீரேல் என் உரை பொய்யாம் என்னமாங்கனி ஒன்று அருளால் வந்து எய்துதலும் மற்று அதனைஆங்கு அவன் கைக் கொடுத்தலுமே அதிசயித்து வாங்கினான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
31
வணிகனும் தன் கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான்தணிவரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்திஅணி குழல் அவரை வேறு ஓர் அணங்கு எனக் கருதி நீங்கும்துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்வின்றி ஒழுகு நாளில்.
சொற்பிரிப்பு
வணிகனும் தன் கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான்தணிவு அரும் பயம் மேல் கொள்ள உள்ளமும் தடுமாறு எய்திஅணிகுழல் அவரை வேறு ஓர் அணங்கு எனக் கருதி, நீங்கும்துணிவுகொண்டு, எவர்க்கும் சொல்லான் தொடர்வு இன்றி ஒழுகு நாளில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
32
விடுவதே எண்ணம் ஆக மேவிய முயற்சி செய்வான்படுதிரைப் பரவை மீது படர் கலம் கொண்டு போகிநெடு நிதி கொணர்வேன் என்ன நிரந்தபல் கிளைஞர் ஆகும்வடுவில் சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள்.
சொற்பிரிப்பு
விடுவதே எண்ணம் ஆக மேவிய முயற்சி செய்வான்படுதிரைப் பரவை மீது படர் கலம் கொண்டு போகிநெடு நிதி கொணர்வேன் என்ன நிரந்த பல் கிளைஞர் ஆகும்வடுவில் சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
33
கலஞ் சமைத்து அதற்கு வேண்டும் கம்மியருடனே செல்லும்புலங்களில் விரும்பு பண்டம் பொருந்துவ நிரம்ப ஏற்றிச்சலம் தரு கடவுள் போற்றித் தலைமையாம் நாய்கன் தானும்நலம் தரு நாளில் ஏறி நளிர் திரைக் கடல் மேல் போனான்.
சொற்பிரிப்பு
கலம் சமைத்து அதற்கு வேண்டும் கம்மியர் உடனே, செல்லும்புலங்களில் விரும்பு பண்டம் பொருந்துவ நிரம்ப ஏற்றிச்சலம் தரு கடவுள் போற்றித் தலைமையாம் நாய்கன் தானும்நலந்தரு நாளில் ஏறி நளிர் திரைக் கடல்மேல் போனான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
34
கடல் மிசை வங்கம் ஓட்டிக் கருதிய தேயம் தன்னில்அடைவுறச் சென்று சேர்ந்து அங்கு அளவில் பல் வளங்கள் முற்றிஇடை சில நாட்கள் நீங்க மீண்டும் அக் கலத்தில் ஏறிப்படர் புனல் கன்னி நாட்டோர் பட்டினம் மருங்கு சேர்ந்தான்.
சொற்பிரிப்பு
கடல்மிசை வங்கம் ஓட்டிக் கருதிய தேயம் தன்னில்அடைவுறச் சென்று சேர்ந்து அங்கு அளவில் பல் வளங்கள் முற்றிஇடை சில நாட்கள் நீங்க மீண்டும் அக்கலத்தில் ஏறிப்படர் புனல் கன்னி நாட்டு ஓர் பட்டினம் மருங்கு சேர்ந்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
35
அப் பதி தன்னில் ஏறி அலகில் பல் பொருள்கள் ஆக்கும்ஒப்பில் மா நிதியம் எல்லாம் ஒருவழிப் பெருக உய்த்துமெய்ப் புகழ் விளங்கும் அவ்வூர் விரும்பவோர் வணிகன் பெற்றசெப்பருங் கன்னி தன்னைத் திருமலி வதுவை செய்தான்.
சொற்பிரிப்பு
அப்பதி தன்னில் ஏறி அலகில் பல் பொருள்கள் ஆக்கும்ஒப்பில் மா நிதியம் எல்லாம் ஒருவழிப் பெருக உய்த்துமெய்ப்புகழ் விளங்கும் அவ்ஊர் விரும்ப ஓர் வணிகன் பெற்றசெப்பு அரும் கன்னி தன்னைத் திருமலி வதுவை செய்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
36
பெறல் அரும் திருவினாளைப் பெரு மணம் புணர்ந்து முன்னைஅறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம்புறம் ஒரு வெளி உறாமல் பொதிந்த சிந்தனையினோடுமுறைமையின் வழாமை வைகி முகம் மலர்ந்து ஒழுகும் நாளில்.
சொற்பிரிப்பு
பெறல் அரும் திருவினாளைப் பெரு மணம் புணர்ந்து முன்னைஅறல் இயல் நறுமென் கூந்தல் அணங்கு அனார் திறத்தில் அற்றம்புறம் ஒரு வெளி உறாமல் பொதிந்த சிந்தனையினோடுமுறைமையின் வழாமை வைகி முகமலர்ந்து ஒழுகு நாளில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
37
முருகலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும்இரு நிதிக் கிழவன் என்ன எய்திய திருவின் மிக்குப்பொரு கடல் கலங்கள் போக்கும் புகழினான் மனைவி தன்பால்பெருகொளி விளக்குப் போல் ஓர் பெண்கொடி அரிதில் பெற்றான்.
சொற்பிரிப்பு
முருகு அலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும்இருநிதிக் கிழவன் என்ன எய்திய திருவின் மிக்குப்பொருகடல் கலங்கள் போக்கும் புகழினான் மனைவி தன்பால்பெருகுஒளி விளக்குப் போல் ஓர் பெண்கொடி அரிதில் பெற்றான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
38
மட மகள் தன்னைப் பெற்று மங்கலம் பேணித் தான் முன்புஉடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவி யாரைத்தொடர்வற நினைந்து தெய்வத் தொழு குலம் என்றே கொண்டுகடன் அமைத்தவர் தம் நாமம் காதல் செய் மகவை இட்டான்.
சொற்பிரிப்பு
மடமகள் தன்னைப் பெற்று மங்கலம் பேணித் தான் முன்புஉடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவியாரைத்தொடர்வு அற நினைந்து தெய்வத் தொழுகுலம் என்றே கொண்டுகடன் அமைத்து அவர் தம் நாமம் காதல் செய் மகவை இட்டான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
39
இந்நிலை இவன் இங்கு எய்தி இருந்தனன் இப்பால் நீடும்கன்னி மா மதில் சூழ் மாடக் காரைக்கால் வணிகன் ஆனதன் நிகர் கடந்த செல்வத் தனதத்தன் மகளார் தாமும்மன்னிய கற்பினோடு மனை அறம் புரிந்து வைக.
சொற்பிரிப்பு
இந்நிலை இவன் இங்கு எய்தி இருந்தனன்; இப்பால், நீடும்கன்னிமா மதில்சூழ் மாடக் காரைக்கால் வணிகன் ஆனதன்நிகர் கடந்த செல்வத் தனதத்தன் மகளார் தாமும்மன்னிய கற்பினோடு மனை அறம் புரிந்து வைக.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
40
விளை வளம் பெருக்க வங்கம் மீது போம் பரம தத்தன்வளர் புகழ்ப் பாண்டி நாட்டு ஓர் மாநகர் தன்னில் மன்னிஅளவில் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான் என்றுகிளர் ஒளி மணிக் கொம்பு அன்னார் கிளைஞர் தாம் கேட்டார் அன்றே.
சொற்பிரிப்பு
விளைவளம் பெருக்க வங்கம் மீது போம் பரமதத்தன்வளர்புகழ்ப் பாண்டி நாட்டு ஓர் மாநகர் தன்னில் மன்னிஅளவில் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான்” என்றுகிளர்ஒளி மணிக்கொம்பு அன்னார் கிளைஞர் தாம் கேட்டார் அன்றே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
41
அம் மொழி கேட்ட போதே அணங்கனார் சுற்றத்தாரும்தம் உறு கிளைஞர்ப் போக்கி அவன் நிலை தாமும் கேட்டுமம்மர் கொள் மனத்தர் ஆகி மற்றவன் இருந்த பாங்கர்கொம்மை வெம் முலையினாளைக் கொண்டு போய் விடுவது என்றார்.
சொற்பிரிப்பு
அம்மொழி கேட்ட போதே அணங்கு அனார் சுற்றத்தாரும்தம்முறு கிளைஞர்ப் போக்கி அவன் நிலை தாமும் கேட்டுமம்மர் கொள் மனத்தர் ஆகி மற்றவன் இருந்த பாங்கர்க்கொம்மை வெம் முலையினாளைக் கொண்டு போய் விடுவது என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
42
மாமணிச் சிவிகை தன்னில் மட நடை மயில் அன்னாரைத்தாமரைத் தவிசில் வைகும் தனித் திரு என்ன ஏற்றிக்காமரு கழனி வீழ்த்துக் காதல் செய் சுற்றத்தாரும்தேமொழியவரும் சூழச் சேண் இடைக் கழிந்து சென்றார்.
சொற்பிரிப்பு
மாமணிச் சிவிகை தன்னில் மட நடை மயில் அன்னாரைத்தாமரைத் தவிசில் வைகும் தனித் திரு என்ன ஏற்றிக்காமரு கழனி வீழ்த்துக் காதல் செய் சுற்றத்தாரும்தேமொழியவரும் சூழச் சேண் இடைக் கழிந்து சென்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
43
சில பகல் கடந்து சென்று செந்தமிழ்த் திருநாடு எய்திமலர் புகழ்ப் பரம தத்தன் மாநகர் மருங்கு வந்துகுல முதல் மனைவியாரைக் கொண்டு வந்து அணைந்த தன்மைதொலைவில் சீர்க் கணவனுக்குச் சொல்லி முன் செல்ல விட்டார்.
சொற்பிரிப்பு
சிலபகல் கடந்து சென்று' செந்தமிழ்த் திருநாடு எய்திமலர்புகழ்ப் பரமதத்தன் மாநகர் மருங்கு வந்துகுலமுதல் மனைவியாரைக் கொண்டு வந்து அணைந்த தன்மைதொலைவில் சீர்க் கணவனார்க்குச் சொல்லி முன் செல்ல விட்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
44
வந்தவர் அணைந்த மாற்றம் கேட்டலும் வணிகன் தானும்சிந்தையில் அச்சம் எய்திச் செழு மணம் பின்பு செய்தபைந் தொடி தனையும் கொண்டு பயந்த பெண் மகவினோடுமுந்துறச் செல்வேன் என்று மொய் குழல் அவர் பால் வந்தான்.
சொற்பிரிப்பு
வந்தவர் அணைந்த மாற்றம் கேட்டலும் வணிகன் தானும்சிந்தையில் அச்சம் எய்திச் செழு மணம் பின்பு செய்தபைந்தொடி தனையும் கொண்டு பயந்த பெண் மகவினோடும்முந்துறச் செல்வேன் என்று மொய் குழல் அவர்பால் வந்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
45
தானும் அம் மனைவி யோடும் தளிர் நடை மகவி னோடும்மான் இனம் பிணை போல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தேயான் உமது அருளால் வாழ்வேன் இவ் இளம் குழவி தானும்பான்மையால் உமது நாமம் என்று முன் பணிந்து வீழ்ந்தான்.
சொற்பிரிப்பு
தானும் அம் மனைவியோடும் தளர் நடை மகவினோடும்மான் இளம் பிணைபோல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தேயான் உமது அருளால் வாழ்வேன் இவ்இளம் குழவி தானும்பான்மையால் உமது நாமம் என்று முன் பணிந்து வீழ்ந்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
46
கணவன் தான் வணங்கக் கண்ட காமர் பூங்கொடியனாரும்அணைவுறும் சுற்றத்தார் பால் அச்ச மோடு ஒதுங்கி நிற்பஉணர்வுறு கிளைஞர் வெள்கி உன் திரு மனைவி தன்னைமணம் மலி தாரினாய் நீ வணங்குவது என் கொல் என்றார்.
சொற்பிரிப்பு
கணவர் தாம் வணங்கக் கண்ட காமர் பூங்கொடியனாரும்அணைவுறும் சுற்றத்தார்பால் அச்சமோடு ஒதுங்கி நிற்பஉணர்வுறு கிளைஞர் வெள்கி உன் திரு மனைவி தன்னைமணமலி தாரினாய்! நீ வணங்குவது என்கொல்? என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
47
மற்றவர் தம்மை நோக்கி மானுடம் இவர் தாம் அல்லர்நற் பெரும் தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்புபெற்ற இம் மகவு தன்னைப் பேர் இட்டேன் ஆதலாலேபொற்பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்மின் என்றான்.
சொற்பிரிப்பு
மற்றவர் தம்மை நோக்கி மானுடம் இவர் தாம் அல்லர்;நற்பெரும் தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்புபெற்ற இம் மகவு தன்னைப் பேர் இட்டேன்; ஆதலாலேபொற்பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்மின்” என்றான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
48
என்றலும் சுற்றத்தாரும் இது என் கொல் என்று நின்றார்மன்றலங் குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளாக்கொன்றை வார் சடையினார் தம் குரை கழல் போற்றிச் சிந்தைஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய்கின்றார்.
சொற்பிரிப்பு
என்றலும் சுற்றத்தாரும் இது என் கொல்! என்று நின்றார்மன்றல் அம் குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளாக்கொன்றை வார் சடையினார் தம் குரைகழல் போற்றிச் சிந்தைஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரைசெய்கின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
49
ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்காகத்தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்து இங்கு உன் பால்ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப்பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார்.
சொற்பிரிப்பு
ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆகத்தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்து இங்கு உன்பால்ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப்பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
50
ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலேமேனெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆகவானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார்.
சொற்பிரிப்பு
ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலேமேல்நெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆகவானமும் மண்ணும் எல்லாம் வணங்கு பேய் வடிவம் ஆனார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
51
மலர் மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம்உலகெலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர் தாமும்குலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்றதொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார்.
சொற்பிரிப்பு
மலர்மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம்உலகெலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர் தாமும்குலவினர்; கணங்கள் எல்லாம் குணலை யிட்டன; முன் நின்றதொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
52
உற் பவித்து எழுந்த ஞானத்து ஒருமையின் உமை கோன் தன்னைஅற் புதத் திரு அந்தாதி அப்பொழுது அருளிச் செய்வார்பொற்புடைச் செய்ய பாத புண்ட ரீகங்கள் போற்றும்நற் கணத்தினில் ஒன்று ஆனேன் நான் என்று நயந்து பாடி.
சொற்பிரிப்பு
உற்பவித்து எழுந்த ஞானத்து ஒருமையின் உமைகோன் தன்னைஅற்புதத் திருஅந்தாதி அப்பொழுது அருளிச் செய்வார்பொற்புடைச் செய்ய பாத புண்டரீகங்கள் போற்றும்நற்கணத்தினில் ஒன்று ஆனேன் நான் என்று நயந்து பாடி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
53
ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்துப் பாடிஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்னாள்காய்ந்தவர் இருந்த வெள்ளிக் கைலை மால் வரையை நண்ணவாய்ந்த பேரருள் முன் கூர வழிப் படும் வழியால் வந்தார்.
சொற்பிரிப்பு
ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்துப் பாடிஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்நாள்காய்ந்தவர் இருந்த வெள்ளிக் கயிலை மால் வரையை நண்ணவாய்ந்த பேர் அருள் முன் கூர வழிபடும் வழியால் வந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
54
கண்டவர் வியப்புற்று அஞ்சிக் கை அகன்று ஓடுவார்கள்கொண்டது ஓர் வேடத் தன்மை உள்ளவாறு கூறக் கேட்டேஅண்ட நாயகனாரென்னை அறிவரேல் அறியா வாய்மைஎண் திசை மாக்களுக்கு யான் எவ்வுருவாய் என் என்பார்.
சொற்பிரிப்பு
கண்டவர் வியப்புற்று அஞ்சிக் கைஅகன்று ஓடுவார்கள்கொண்டதோர் வேடத் தன்மை உள்ளவா கூறக் கேட்டேஅண்ட நாயகனார் என்னை அறிவரேல் அறியா வாய்மைஎண்டிசை மாக்களுக்கு யான் எவ் உருவாய் என்?” என்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
55
வட திசைத் தேசம் எல்லாம் மனத்தினும் கடிது சென்றுதொடை அவிழ் இதழி மாலைச் சூல பாணியனார் மேவும்படர் ஒளிக் கைலை வெற்பின் பாங்கு அணைந்து ஆங்குக் காலின்நடையினைத் தவிர்த்து பார் மேல் தலையினால் நடந்து சென்றார்.
சொற்பிரிப்பு
வடதிசைத் தேசம் எல்லாம் மனத்தினும் கடிது சென்றுதொடை அவிழ் இதழி மாலைச் சூல பாணியனார் மேவும்படர்ஒளிக் கயிலை வெற்பின் பாங்கணைந்து ஆங்குக் காலின்நடையினைத் தவிர்ந்து பார் மேல் தலையினால் நடந்து சென்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
56
தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளிமலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்கலை இளம் திங்கள் கண்ணிக் கண் நுதல் ஒரு பாகத்துச்சிலை நுதல் இமய வல்லி திருக் கண் நோக்குற்றது அன்றே.
சொற்பிரிப்பு
தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளிமலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்கலை இளம் திங்கள் கண்ணிக் கண்நுதல் ஒரு பாகத்துச்சிலை நுதல் இமயவல்லி திருக்கண் நோக்கு உற்றது அன்றே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
57
அம்பிகை திருவுள்ளத்தின் அதிசயித்து அருளித் தாழ்ந்துதம் பெருமானை நோக்கித் தலையினால் நடந்து இங்கு ஏறும்எம் பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே என்னநம் பெரு மாட்டிக்கு அங்கு நாயகன் அருளிச் செய்வான்.
சொற்பிரிப்பு
அம்பிகை திருஉள்ளத்தின் அதிசயித்து அருளித் தாழ்ந்துதம்பெருமானை நோக்கித் தலையினால் நடந்து இங்கு ஏறும்எம்பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே! என்னநம்பெருமாட்டிக்கு அங்கு நாயகன் அருளிச் செய்வான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
58
வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண் உமையே மற்று இப்பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றைஅருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மைஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்.
சொற்பிரிப்பு
வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண் உமையே! மற்று இப்பெருமை சேர் வடிவும் வேண்டிப் பெற்றனள் என்று பின்னைஅருகு வந்து அணைய நோக்கி அம்மையே! என்னும் செம்மைஒருமொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
59
அங்கணன் அம்மையே என்று அருள் செய அப்பா என்றுபங்கயச் செம் பொற் பாதம் பணிந்து வீழ்ந்து எழுந்தார் தம்மைச்சங்க வெண் குழையினாரும் தாம் எதிர் நோக்கி நம்பால்இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்பு கின்றார்.
சொற்பிரிப்பு
அங்கணன் அம்மையே! என்று அருள் செய அப்பா என்றுபங்கயச் செம்பொன் பாதம் பணிந்து வீழ்ந்து எழுந்தார் தம்மைச்,சங்கவெண் குழையினாரும் தாம் எதிர் நோக்கி நம்பால்இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்புகின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
60
இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார்பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடிஅறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்.
சொற்பிரிப்பு
இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்மறவாமை வேண்டும்; இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடிஅறவா! நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க” என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
61
கூடு மாறு அருள் கொடுத்துக் குலவு தென் திசையில் என்றும்நீடு வாழ் பழன மூதூர் நிலவிய ஆலங் காட்டில்ஆடும் மாநடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும்பாடுவாய் நம்மை என்றான் பரவுவார் பற்றாய் நின்றான்.
சொற்பிரிப்பு
கூடுமாறு அருள் கொடுத்துக் குலவு தென் திசையில் என்றும்நீடு வாழ் பழன மூதூர் நிலவிய ஆலங்காட்டில்ஆடு மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும்பாடுவாய் நம்மை என்றான் பரவுவார் பற்றாய் நின்றான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
62
அப் பரிசு அருளப் பெற்ற அம்மையும் செம்மை வேதமெய்ப் பொருள் ஆனார் தம்மை விடை கொண்டு வணங்கிப் போந்துசெப்பரும் பெருமை அன்பால் திகழ் திரு ஆலங் காடாம்நற்பதி தலையினாலே நடந்து புக்கு அடைந்தார் அன்றே.
சொற்பிரிப்பு
அப்பரிசு அருளப் பெற்ற அம்மையும் செம்மை வேதமெய்ப்பொருள் ஆனார் தம்மை விடைகொண்டு வணங்கிப் போந்துசெப்பரும் பெருமை அன்பால் திகழ் திரு ஆலங்காடாம்நற்பதி தலையினாலே நடந்து புக்கு அடைந்தார் அன்றே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
63
ஆலங்காடு அதனில் அண்டமுற நிமிர்ந்து ஆடுகின்றகோலம் காண் பொழுது கொங்கை திரங்கி என்று எடுத்து அங்குமூலம் காண்பரியார் தம்மை மூத்த நற் பதிகம் பாடிஞாலம் காதலித்துப் போற்றும் நடம் போற்றி நண்ணும் நாளில்.
சொற்பிரிப்பு
ஆலங்காடு அதனில் அண்டம் உற நிமிர்ந்து ஆடுகின்றகோலம்காண் பொழுது கொங்கை திரங்கி என்று எடுத்துத் தங்குமூலம் காண்பு அரியார் தம்மை மூத்த நல் பதிகம் பாடிஞாலம் காதலித்துப் போற்றும் நடம் போற்றி நண்ணும் நாளில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
64
மட்டவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும்இட்ட மிகு பெருங் காதல் எழுந்து ஓங்க வியப்பு எய்திஎட்டி இலவம் மீகை என எடுத்துத் திருப் பதிகம்கொட்ட முழவம் குழகன் ஆடும் எனப் பாடினார்.
சொற்பிரிப்பு
மட்டுஅவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும்இட்டம் மிகு பெரும்காதல் எழுந்து ஓங்க வியப்பு எய்திஎட்டி இலவம் ஈகை என எடுத்துத் திருப்பதிகம்கொட்ட முழவம் குழகன் ஆடும் எனப் பாடினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
65
மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுர மொழிகொடுத்து அருளப் பெற்றாரைக் குலவிய தாண்டவத்தில் அவர்எடுத்து அருளும் சேவடிக் கீழ் என்றும் இருக்கின்றாரைஅடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவாயினது அம்மா.
சொற்பிரிப்பு
மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுரமொழிகொடுத்து அருளப் பெற்றாரைக் குலவிய தாண்டவத்தில் அவர்எடுத்தருளும் சேவடிக் கீழ் என்றும் இருக்கின்றாரை,அடுத்த பெரும் சீர்ப்பரவல் ஆர் அளவு ஆயினது அம்மா?
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
66
ஆதியோடு அந்தம் இல்லான் அருள் நடம் ஆடும் போதுகீதம் முன் பாடும் அம்மை கிளர் ஒளி மலர்த்தாள் போற்றிச்சீத நீர் வயல் சூழ் திங்களூரின் அப்பூதியாராம்போத மா முனிவர் செய்த திருத் தொண்டு புகலல் உற்றேன்.
சொற்பிரிப்பு
ஆதியோடு அந்தம் இல்லான் அருள் நடம் ஆடும் போதுகீதம் முன் பாடும் அம்மை கிளர் ஒளி மலர்த்தாள் போற்றிச்சீத நீர் வயல் சூழ் திங்களூரில் அப்பூதியாராம்போதமா முனிவர் செய்த திருத்தொண்டு புகலல் உற்றேன்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.