திருமுறை 12 · 12.029 · 11

பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

சூதம்நெருங்கு குலைத் தெங்குபலவும் பூகஞ்சூழ் புடைத்தாய்வீதிதோறும் நீற்றின் ஒளிவிரிய மேவி விளங்கு பதிநீதிவழுவா நெறியினராய் நிலவும் குடியால் நெடு நிலத்துமீதுவிளங்கும் தொன்மையது மிழலை நாட்டுப் பெரு மிழலை.
சொற்பிரிப்பு
சூதம் நெருங்கு குலைத் தெங்கு பலவும் பூகம் சூழ் புடைத்தாய்வீதி தோறும் நீற்றின் ஒளி விரிய மேவி விளங்கு பதிநீதி வழுவா நெறியினராய் நிலவும் குடியால் நெடு நிலத்துமீது விளங்கும் தொன்மையது மிழலை நாட்டுப் பெருமிழலை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அன்ன தொன்மைத் திருப்பதிக்கண் அதிபர் மிழலைக் குறும்பனார்சென்னி மதியம் வைத்தவர்தம் அடியார்க்கு ஆனசெய் பணிகள்இன்ன வண்ணம் என்றவர்தாம் உரையா முன்னம் எதிரேற்றுமுன்னம் உணர்ந்து செய்வாராய் முதிரும் அறிவின்பயன் கொள்வார்.
சொற்பிரிப்பு
அன்ன தொன்மைத் திருப்பதிக்கண் அதிபர் மிழலைக் குறும்பனார்சென்னி மதியம் வைத்தவர் தம் அடியார்க்கு ஆன செய்பணிகள்இன்ன வண்ணம் என்று அவர் தாம் உரையா முன்னம் எதிர் ஏற்றுமுன்னம் உணர்ந்து செய்வாராய் முதிரும் அறிவின் பயன் கொள்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

தொண்டர் பலரும் வந்துஈண்டி உண்ணத் தொலையா அமுதுஊட்டிக்கொண்டு செல்ல இருநிதியம் முகந்து கொடுத்துக் குறைந்தடைவார்வண்டு மருவும்குழல் உமையாள் கேள்வன் செய்யதாள் என்னும்புண்ட ரீகம்அக மலரில் வைத்துப் போற்றும் பொற்பினார்.
சொற்பிரிப்பு
தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ணத் தொலையா அமுதூட்டிக்கொண்டு செல்ல இருநிதியம் முகந்து கொடுத்துக் குறைந்து அடைவார்வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும்புண்டரீகம் அகமலரில் வைத்துப் போற்றும் பொற்பினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

இத்தன்மையராய் நிகழும் நாள்எல்லை இல்லாத் திருத் தொண்டின்மெய்த்தன்மையினை உலகு அறிய விதியால் வணங்கி மெய்அடியார்சித்தம் நிலவும் திருத்தொண்டத் தொகைபாடிய நம்பியைப் பணிந்துநித்தன்அருள் பெற்றவர் பாதம் நினைக்கும் நியமத்தலை நின்றார்.
சொற்பிரிப்பு
இத்தன்மையராய் நிகழு நாள் எல்லை இல்லாத் திருத்தொண்டின்மெய்த் தன்மையினை உலகறிய விதியால் வணங்கி மெய்அடியார்சித்தம் நிலவும் திருத்தொண்டத் தொகை பாடிய நம்பியைப் பணிந்துநித்தன் அருள்பெற்றவர் பாதம் நினைக்கும் நியமம் தலைநின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மையார் தடங்கண் பரவையார் மணவாளன் தன்மலர்க் கழல்கள்கையால் தொழுது வாய்வாழ்த்தி மனத்தால் நினைக்கும் கடப்பாட்டில்செய்யாள் கோனும் நான்முகனும் அறியாச் செம்பொற் றாளிணைக்கீழ்உய்வான் சேரஉற்ற நெறிஇதுவே என்று அன்பினில் உய்த்தார்.
சொற்பிரிப்பு
மையார் தடங்கண் பரவையார் மணவாளன் தன் மலர்க்கழல்கள்கையால் தொழுது வாய் வாழ்த்தி மனத்தால் நினைக்கும் கடப்பாட்டில்செய்யாள் கோனும் நான்முகனும் அறியாச் செம்பொன் தாளிணைக் கீழ்உய்வான் சேர உற்ற நெறி இதுவே என்று அன்பினில் உய்த்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலேஆளும் படியால் அணிமாதி சித்தியான அணைந்த அதற்பின்மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்செழுத்தும்கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு வாய்ப்பக் கெழுமினார்.
சொற்பிரிப்பு
நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலேஆளும் படியால் அணிமாதி சித்தி ஆன அணைந்ததன் பின்மூளும் காதல் உடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்செழுத்தும்கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு வாய்ப்பக் கெழுமினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

இன்ன வாறே இவர்ஒழுக ஏறுகொடி மேல்உயர்த்தவர் தாம்பொன்னின் கழல்கள் மண்ணின்மேல் பொருந்த வந்துவழக்கு உரைத்துமன்னும் ஓலைஅவை முன்பு காட்டி ஆண்ட வன்தொண்டர்சென்னி மதிதோய் மாடமலி கொடுங் கோளூரைச் சேர்வுற்றார்.
சொற்பிரிப்பு
இன்னவாறே இவர் ஒழுக ஏறு கொடிமேல் உயர்த்தவர் தம்பொன்னின் கழல்கள் மண்ணின் மேல் பொருந்த வந்து வழக்குரைத்துமன்னும் ஓலை அவை முன்பு காட்டி ஆண்ட வன்தொண்டர்சென்னி மதிதோய் மாடமலி கொடுங்கோளூரைச் சேர்வு உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

அஞ்சைக் களத்து நஞ்சுண்ட அமுதைப் பரவி அணைவுறுவார்செஞ்சொல் தமிழ் மாலைகள் மொழியத்தேவர் பெருமான் அருளாலேமஞ்சில் திகழும் வடகயிலைப் பொருப்பில் எய்தவரும் வாழ்வுநெஞ்சில் தெளியஇங்கு உணர்ந்தார் நீடு மிழலைக் குறும்பனார்.
சொற்பிரிப்பு
அஞ்சைக்களத்து நஞ்சுண்ட அமுதைப் பரவி அணைவுறுவார்செஞ்சொல் தமிழ்மாலைகள் மொழியத் தேவர் பெருமான் அருளாலேமஞ்சில் திகழும் வடகயிலைப் பொருப்பில் எய்த வரும் வாழ்வுநெஞ்சில் தெளிய இங்கு உணர்ந்தார் நீடு மிழலைக் குறும்பனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

மண்ணில் திகழும் திருநாவலூரில் வந்த வன் தொண்டர்நண்ணற்கு அரிய திருக்கயிலை நாளை எய்தநான் பிரிந்துகண்ணில் கரிய மணிகழிய வாழ்வார் போலவாழேன் என்றுஎண்ணிச் சிவன்தாள் இன்றேசென்று அடைவன் யோகத்தால் என்பார்.
சொற்பிரிப்பு
மண்ணில் திகழும் திருநாவலூரில் வந்த வன்தொண்டர்நண்ணற்கு அரிய திருக்கயிலை நாளை எய்த, நான் பிரிந்து,கண்ணிற்கு அரிய மணி கழிய வாழ்வார் போல, வாழேன் என்றுஎண்ணிச் சிவன்தான் இன்றே சென்று அடைவேன் யோகத்தால் என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவுமேல் கொண்டுகாலும் பிரமநாடி வழிக்கருத்துச் செலுத்தக் கபால நடுஏலவே முன்பயின்ற நெறிஎடுத்த மறை மூலம் திறப்பமூல முதல்வர் திருப்பாதம் அணைவார் கயிலைமுன் அடைந்தார்.
சொற்பிரிப்பு
நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவு மேற்கொண்டுகாலும் பிரம நாடி வழிக் கருத்துச் செலுத்தக், கபால நடுஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப,மூல முதல்வர் திருப்பாதம் அணைவார் கயிலை முன் அடைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

பயிலைச் செறிந்த யோகத்தால் பரவை கேள்வன் பாதமுறக்கயிலைப் பொருப்பர் அடிஅடைந்த மிழலைக் குறும்பர்கழல் வணங்கிமயிலைப் புறம்கொள் மென்சாயல் மகளிர் கிளவி யாழினொடும்குயிலைப் பொருவும் காரைக்கால் அம்மை பெருமை கூறுவாம்.
சொற்பிரிப்பு
பயிலைச் செறிந்த யோகத்தால் பரவை கேள்வன் பாதம் உறக்கயிலைப் பொருப்பர் அடி அடைந்த மிழலைக் குறும்பர் கழல் வணங்கிமயிலைப் புறங்கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும்குயிலைப் பொருவும் காரைக்கால் அம்மை பெருமை கூறுவாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.