திருமுறை 12 · 12.028 · 11

குலச்சிறை நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

பன்னுதொல் புகழ்ப் பாண்டிநன் நாட்டிடைச்செந்நெலார் வயல்தீம் கரும்பின் அயல்துன்னுபூகப் புறம் பணை சூழ்ந்ததுமன்னு வண்மையினார் மண மேற்குடி.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அப்பதிக்கு முதல்வர் வன் தொண்டர் தாம்ஒப்பரும் பெருநம்பி என்று ஓதியசெப்பரும் சீர்க்குலச் சிறையார் திண்மைவைப்பினால் திருத் தொண்டில் வழாதவர்.

3

காரணங் கண்நுதற்கு அன்பர் என்னவேவாரமாகி மகிழ்ந்தவர் தாள் மிசையாருமன்பொடு வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்துஈர நன்மொழி எய்த இசைத்து உள்ளார்.

4

குறியில் நான்கு குலத்தினர் ஆயினும்நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும்அறிவு சங்கரற்கு அன்பர் எனப்பெறில்செறிவுறப் பணிந்து ஏத்திய செய்கையார்.

5

உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும்அலகில் தீமையர் ஆயினும் அம்புலிஇலகு செஞ்சடையார் அடியார் எனில்தலம் உறப்பணிந்து ஏத்தும் தகைமையார்.

6

பண்பு மிக்கார் பலராய் அணையினும்உண்ப வேண்டி ஒருவர் அணையினும்எண் பெருக்கிய அன்பால் எதிர்கொண்டுநண்பு கூர்ந்து அமுதூட்டும் நலத்தினார்.

7

பூதி கோவணம் சாதனத்தால் பொலிந்துஆதி தேவர்தம் அஞ்செழுத்தாம் அவைஓது நாவணக் கத்தால் உரைப்பவர்பாதம் நாளும் பரவிய பண்பினார்.

8

இன்ன நல்லொழுக் கத்தினார் ஈறில்சீர்த்தென்னவன் நெடு மாறற்குச் சீர்திகழ்மன்னு மந்திரி கட்குமேல் ஆகியார்ஒன்னலர்ச் செற்று உறுதிக்கண் நின்றுளார்.

9

ஆய செய்கையர் ஆயவர் ஆறணிநாயனார் திருப்பாதம் நவின்று உளார்பாய சீர்புனை பாண்டிமா தேவியார்மேய தொண்டுக்கு மெய்த்தொண்டர் ஆயினார்.

10

புன்னயத் தருகந்தர் பொய் நீக்கவும்தென்னன் நாடு திருநீறு போற்றவும்மன்னு காழியர் வள்ளலார் பொன்னடிசென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார்.

11

வாதில் தோற்ற அமணரை வன்கழுத்தீது நீங்கிட ஏற்றுவித்தார் திறம்யாது போற்றினேன் மேல்இனி ஏத்துகேன்வேத நீதிமிழலைக் குறும்பர் தாள்.