1
திருநாவுக்கு அரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழவருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ்பெருநாமச் சீர்பரவல் உறுகின்றேன் பேருலகில்ஒருநாவுக்கு உரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்.
சொற்பிரிப்பு
திருநாவுக்கு அரசு, வளர் திருத்தொண்டின் நெறி வாழவருஞானத் தவமுனிவர் வாகீசர், வாய்மை திகழ்பெருநாமச் சீர் பரவல் உறுகின்றேன்; பேர் உலகில்ஒரு நாவுக்கு உரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றித் துகள் இல்லாநன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கிச்சென்னி மதி புனையவளர் மணி மாடச் செழும் பதிகள்மன்னி நிறைந்து உளது திரு முனைப்பாடி வளநாடு.
சொற்பிரிப்பு
தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றித் துகள் இல்லாநன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கிச்சென்னி மதி புனைய வளர் மணி மாடச் செழும்பதிகள்மன்னி நிறைந்து உளது திரு முனைப்பாடி வளநாடு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
3
புனப் பண்ணை மணியினோடும் புறவின் நறும் புதுமலரின்கனப்பெண்ணில் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டேர்இனப் பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்வுலகும்வனப்பெண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும்.
சொற்பிரிப்பு
புனப் பண்ணை மணியினொடும் புறவின் நறும் புதுமலரின்கனப்பு எண்ணில் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டு ஏர்இனப் பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்உலகும்வனப்பு எண்ண வரும் பெண்ணை மாநதி பாய் வளம் பெருகும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
4
காலெல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன்பாலெல்லாம் கதிர்ச் சாலி பரப்பு எல்லாம் குலைக் கமுகுசாலெல்லாம் தரள நிரை தடம் எல்லாம் செங்கழுநீர்மேலெல்லா ம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை.
சொற்பிரிப்பு
கால் எல்லாம் தகட்டுவரால்; கரும்பு எல்லாம் கண்பொழி தேன்;பால் எல்லாம் கதிர்ச் சாலி; பரப்பு எல்லாம் குலைக்கமுகு;சால் எல்லாம் தரள நிரை தடம் எல்லாம் செங்கழுநீர்;மேல் எல்லாம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
5
கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும் சாறுஇடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன்புடை பரந்து ஞிமிறொலிப்பப் புதுப் புனல் போல் மடை உடைப்பஉடை மடையக் கரும்படு கட்டியின் அடைப்ப ஊர்கள் தொறும்.
சொற்பிரிப்பு
கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும் சாறுஇடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன்புடைபரந்து ஞிமிறு ஒலிப்பப் புதுப்புனல் போல் மடை உடைப்பஉடைமடை அக் கரும்படு கட்டியின் அடைப்ப ஊர்கள் தொறும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
6
கரும் கதலிப் பெருங்குலைகள் களிற்றுக் கைம் முகம் காட்டமருங்கு வளர் கதிர்ச் செந்நெல் வயப் புரவி முகம் காட்டப்பெருஞ்சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பொலி பிறங்கநெருங்கிய சாதுரங்க பல நிகர்பனவாம் நிறை மருதம்.
சொற்பிரிப்பு
கரும் கதலிப் பெரும் குலைகள் களிற்றுக் கைம்முகம் காட்டமருங்கு வளர் கதிர்ச் செந்நெல் வயப்புரவி முகம் காட்டபெரும் சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பு ஒலி பிறங்கநெருங்கிய சாதுரங்க பலம் நிகர்ப்பனவாம் நிறை மருதம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
7
நறையாற்றுங் கமுகு நவ மணிக் கழுத்தின் உடன் கூந்தல்பொறை ஆற்றா மகளிர் எனப் புறம்பு அலை தண்டலை வேலித்துறை ஆற்ற மணி வண்ணச் சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணைநிறை ஆற்று நீர்க் கொழுந்து படர்ந்தேறும் நிலைமையதால்.
சொற்பிரிப்பு
நறை ஆற்றும் கமுகு நவ மணிக் கழுத்தின் உடன் கூந்தல்பொறை ஆற்றா மகளிர் எனப் புறம்பலை தண்டலை வேலித்துறை ஆற்ற மணிவண்ணச் சுரும்பு இரைக்கும் பெரும்பண்ணைநிறை ஆற்று நீர்க் கொழுந்து படர்ந்து ஏறு நிலைமையதால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
8
மரு மேவு மலர் மேய மா கடலினுட் படியும்உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல்வரு மேனிச் செங்கண் வரால் மடி முட்டப் பால் சொரியும்கரு மேதி தனைக் கொண்டு கரை புரள்வ திரை வாவி.
சொற்பிரிப்பு
மருமேவு மலர் மேய மாகடலின் உட்படியும்உருமேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல்வருமேனிச் செங்கண் வரால் மடி முட்டப் பால் சொரியும்கருமேதி தனைக்கொண்டு கரை புரள்வ திரை வாவி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
9
மொய்யளி சூழ் நிரைநீல முழு வலயங்களின் அலையச்செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்பமெய்யொளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியைவைய மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர்ச் சோலை.
சொற்பிரிப்பு
மொய்அளி சூழ் நிரை நீல முழு வலயங்களின் அலையச்செய்யதளிர் நறு விரலில் செழுமுகையின் நகம் சிறப்பமெய்ஒளியின் நிழல் காணும் ஆடி என வெண்மதியைவையமகள் கைஅணைத்தால் போல் உயர்வ மலர்ச்சோலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
10
எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல்பயிர்க் கண்வியல் இடங்கள் பல பரந்து உயர் நெற் கூடுகளும்வெயில் கதிர்மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவிமயில் குலமும் முகில் குலமும் மாறாட மருங்கு ஆடும்.
சொற்பிரிப்பு
எயில் குலவும் வளம்பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல்பயிர்க்கண் வியல் இடங்கள் பல பரந்து உயர் நெல் கூடுகளும்வெயில் கதிர் மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவிமயில் குலமும் முகில் குலமும் மாறு ஆட மருங்கு ஆடும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
11
மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறிஅறம் தரு நாவுக்கரசும் ஆலால சுந்தரரும்பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில்சிறந்த திருமுனைப் பாடித் திறம் பாடும் சீர்ப் பாடு.
சொற்பிரிப்பு
மறம்தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறிஅறம் தரு நாவுக்குஅரசும் ஆலால சுந்தரரும்பிறந்து அருள உளது ஆனால் நம் அளவோ? பேர் உலகில்சிறந்த திரு முனைப்பாடித் திறம் பாடும் சீர்ப்பாடு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
12
இவ் வகைய திரு நாட்டில் எனைப் பல ஊர்களும் என்றும்மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள்சைவ நெறி ஏழ் உலகும் பாலிக்கும் தன்மையினால்தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர் திருவாமூர்.
சொற்பிரிப்பு
இவ்வகைய திருநாட்டில் எனைப்பல ஊர்களும் என்றும்மெய்வளங்கள் ஓங்க வரும் மேன்மையன; ஆங்கு அவற்றுள்சைவநெறி ஏழ் உலகும் பாலிக்கும் தன்மையினால்தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருவாம்ஊர் திருஆமூர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
13
ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடைஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணிக் காஞ்சிஓங்குவன மாட நிரை ஒழுகுவன வழுவில் அறம்நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள்.
சொற்பிரிப்பு
ஆங்கு, வன முலைகள்சு மந்து அணங்குவன மகளிர் இடை;ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணிக்காஞ்சி;ஓங்குவன மாடநிரை ஒழுகுவன வழுவில் அறம்;நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
14
மலர் நீலம் வயல் காட்டும் மைஞ் ஞீலம் மதி காட்டும்அலர் நீடு மறு காட்டும் அணி ஊசல் பல காட்டும்புலர் நீலம் இருள் காட்டும் பொழுது உழவர் ஒலி காட்டும்கல நீடு மனை காட்டும் கரை காட்டாப் பெருவளங்கள்.
சொற்பிரிப்பு
மலர் நீலம் வயல் காட்டும் மைஞ்ஞீலம் மதி காட்டும்அலர் நீடு மறுகு ஆட்டும் அணி ஊசல் பல காட்டும்;புலர் நீலம் இருள் காட்டும் பொழுது உழவர் ஒலி காட்டும்கலம் நீடு மனை காட்டும் கரைகாட்டாப் பெருவளங்கள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
15
தலத்தின் கண் விளங்கிய அத் தனிப் பதியில் அனைத்து விதநலத்தின் கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண்விலங்கின் மனை ஒழுக்கத்தின் மேதக்க நிலைவேளாண்குலத்தின் கண் வரும் பெருமைக் குறுக்கையர் தம் குடி விளங்கும்.
சொற்பிரிப்பு
தலத்தின்கண் விளங்கிய அத் தனிப்பதியில் அனைத்து விதநலத்தின்கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண்விலக்கில் மனை ஒழுக்கத்தின் மேதக்க நிலை வேளாண்குலத்தின்கண் வரும் பெருமைக் குறுக்கையர் தம் குடி விளங்கும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
16
அக் குடியின் மேல் தோன்றலாய பெரும் தன்மையினார்மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார்ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார்திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார்.
சொற்பிரிப்பு
அக்குடியின் மேல் தோன்றல் ஆய பெரும் தன்மையினார்மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார்ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார்திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
17
புகழனார் தமக்கு உரிமைப் பொருவில் குலக்குடியின் கண்மகிழவரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில்நிகழும் மலர்ச் செங்கமல நிரை இதழின் அகவயினில்திகழ வருந் திரு அனைய திலகவதியார் பிறந்தார்.
சொற்பிரிப்பு
புகழனார் தமக்கு உரிமைப் பொருவில் குலக் குடியின் கண்மகிழ வரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில்நிகழு மலர்ச் செங்கமல நிரை இதழின் அகவயினில்திகழ வரும் திரு அனைய திலகவதியார் பிறந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
18
திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின்அலகில் கலைத் துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறிவாழஉலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின்மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார்.
சொற்பிரிப்பு
திலகவதியார் பிறந்து சிலமுறை ஆண்டு அகன்றதன் பின்அலகில் கலைத் துறை தழைப்ப அரும்தவத்தோர் நெறி வாழஉலகில் வரும் இருள்நீக்கி ஒளி விளங்கு கதிர்போல் பின்மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
19
மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர்ப் புகழனார்காதலனார் உதித்த தற்பின் கடன் முறைமை மங்கலங்கள்மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டினுடன்ஏதமில் பல் கிளை போற்ற இளங் குழவிப் பதம் கடந்தார்.
சொற்பிரிப்பு
மாதினியார் திருவயிற்றின் மன்னியசீர்ப் புகழனார்காதலனார் உதித்ததன்பின் கடன் முறைமை மங்கலங்கள்மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டின் உடன்ஏதம் இல் பல் கிளை போற்ற இளங்குழவிப் பதம் கடந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
20
மருள் நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மணவினையும்தெருண் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்பச் செய்து அதற்பின்பொருள் நீத்தம் கொள வீசிப் புலன் கொளுவ மன முகிழ்த்தசுருள் நீக்கி மலர் விக்கும் கலை பயிலத் தொடங்கு வித்தார்.
சொற்பிரிப்பு
மருள்நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மணவினையும்தெருள்நீர்ப் பல் மாந்தர் எலாம் மகிழ் சிறப்பச் செய்ததன் பின்பொருள் நீத்தம் கொள வீசிப் புலன் கொளுவ மனம் முகிழ்த்தசுருள்நீக்கி மலர்விக்கும் கலை பயிலத் தொடங்குவித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
21
தந்தையார் களி மகிழ்ச்சி தலை சிறக்க முறைமையினால்சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம்முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகைமைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர் கின்றார்.
சொற்பிரிப்பு
தந்தையார் களிமகிழ்ச்சி தலைசிறக்க முறைமையினால்சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம்முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகைமைந்தனார் மறு ஒழித்த இளம் பிறைபோல் வளர்கின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
22
அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு இரண்டின்முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடித் தலைவர்மின்னார் செஞ்சடை அண்ணல் மெய் அடிமை விருப்புடையார்பொன்னாரும் மணி மௌலிப் புரவலன் பால் அருள் உடையார்.
சொற்பிரிப்பு
அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு இரண்டின்முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடித்தலைவர்மின்னார் செஞ்சடை அண்ணல் மெய்அடிமை விருப்பு உடையார்பொன்ஆரும் மணி மௌலிப் புரவலன் பால் அருள் உடையார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
23
ஆண் தகைமைத் தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார்காண் தகைய பெருவனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார்பூண்ட கொடைப் புகழனார் பால் பொருவின் மகள் கொள்ளவேண்டி எழுங் காதலினால் மேலோரைச் செலவிட்டார்.
சொற்பிரிப்பு
ஆண் தகைமைத் தொழிலின்கண் அடல் அரிஏறு என உள்ளார்காண் தகைய பெருவனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார்பூண்ட கொடைப் புகழனார்பால் பொருவில் மகள் கொள்ளவேண்டி எழும் காதலினால் மேலோரைச் செலவிட்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
24
அணங்கு அனைய திலகவதியார் தம்மை ஆங்கு அவர்க்குமணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்பக்குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார்பணம் கொள் அரவு அகல் அல்குல் பைந் தொடியை மணம் நேர்ந்தார்.
சொற்பிரிப்பு
அணங்கு அனைய திலகவதியார் தம்மை ஆங்கு அவர்க்குமணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்பக்குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார்பணங்கொள் அரவு அகல் அல்குல் பைந்தொடியை மணம் நேர்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
25
கன்னித் திருத் தாதையார் மணம் இசைவு கலிப்பகையார்முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை வினை முடிப்பதன் முன்மன்னவற்கு வடபுலத்து ஓர் மாறு ஏற்க மற்றவர்மேல்அன்னவர்க்கு விடை கொடுத்தான் அவ்வினை மேல் அவர் அகன்றார்.
சொற்பிரிப்பு
கன்னி திருத்தாதையார் மணம் இசைவு கலிப்பகையார்முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை யினை முடிப்பதன் முன்மன்னவற்கு வட புலத்தோர் மாறு ஏற்க மற்றவர் மேல்அன்னவர்க்கு விடைகொடுத்தான் அவ்வினை மேல் அவர் அகன்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
26
வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெஞ்சமத்தில் விடை கொண்டுபோந்த வரும் பொரு படையும் உடன் கொண்டு சில நாளில்காய்ந்த சினப் பகைப் புலத்தைக் கலந்து கடும் சமர்க் கடலைநீந்துவார் நெடு நாள்கள் நிறை வெம் போர்த் துறை விளைத்தார்.
சொற்பிரிப்பு
வேந்தற்குற்று உழி வினை மேல் வெஞ்சமத்தில் விடைகொண்டுபோந்தவரும் பொருபடையும் உடன்கொண்டு சிலநாளில்காய்ந்த சினப் பகைப்புலத்தைக் கலந்து கடும் சமர்க்கடலைநீந்துவார் நெடுநாள்கள் நிறை வெம்போர்த் துறை விளைத்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
27
ஆய நாள் இடை இப்பால் அணங்கு அனையாள் தனைப் பயந்ததூயகுலப் புகழனார் தொன்று தொடு நிலையாமைமேய வினைப் பயத்தாலே இவ் உலகை விட்டு அகலத்தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார்.
சொற்பிரிப்பு
ஆயநாள் இடைஇப்பால் அணங்கு அனையாள் தனைப்பயந்ததூயகுலப் புகழனார் தொன்று தொடு நிலையாமைமேயவினைப் பயத்தாலே இவ்உலகை விட்டு அகலத்தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
28
மற்றவர் தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார்சுற்றம் உடன் மக்களையும் துகளாகவே நீத்துப்பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும்கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார்.
சொற்பிரிப்பு
மற்றவர் தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார்சுற்றம் உடன் மக்களையும் துகள் ஆகவே நீத்துப்பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும்கற்புநெறி வழுவாமல் கணவனார் உடன்சென்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
29
தாதையாரும் பயந்த தாயாரும் இறந்த அதன் பின்மாதரார் திலகவதியாரும் அவர் பின் வந்தகாதலனார் மருண் நீக்கியாரும் மனக் கவலையினால்பேது உறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார்.
சொற்பிரிப்பு
தாதையாரும் பயந்த தாயாரும் இறந்ததன்பின்மாதரார் திலகவதியாரும் அவர் பின் வந்தகாதலனார் மருள்நீக்கியாரும் மனக் கவலையினால்பேதுறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
30
ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்றத் துயர் ஒழிந்துபெரு வானம் அடைந்தவர்க்குச் செய் கடன்கள் பெருக்கினார்மருவார்மேல் மன்னவற்காய் மலையப் போம் கலிப்பகையார்பொருவாரும் போர்க் களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டார்.
சொற்பிரிப்பு
ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்றத் துயர் ஒழிந்துபெருவானம் அடைந்தவர்க்குச் செய்கடன்கள் பெருக்கினார்மருவார் மேல் மன்னவற்கா மலையப்போம் கலிப்பகையார்பொருவாரும் போர்க்களத்தில் உயிர் கொடுத்துப் புகழ்கொண்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
31
வெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவப் போய்அம் முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்குத்தம் உடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்றச்செம்மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார்.
சொற்பிரிப்பு
வெம்முனைமேல் கலிப்பகையார் வேல்வேந்தன் ஏவப்போய்அம்முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்குத்தம் உடைய கடன் கழித்த பெருவார்த்தை தலம் சாற்றச்செம்மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
32
எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனக் கொடுக்க இசைந்தார்கள்அந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால்இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் எனத் துணியவந்தவர் தம் அடி இணை மேல் மருண் நீக்கியார் விழுந்தார்.
சொற்பிரிப்பு
எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனைக்கொடுக்க இசைந்தார்கள்அந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால்இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் எனத் துணியவந்தவர் தம் அடிஇணை மேல் மருள்நீக்கியார் விழுந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
33
அந் நிலையில் மிகப் புலம்பி அன்னையும் அத்தனும் அகன்றபின்னையும் நான் உமை வணங்கப் பெறுதலின் உயிர் தரித்தேன்என்னை இனித் தனிக் கைவிட்டு ஏகுவீர் எனில் யானும்முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார்.
சொற்பிரிப்பு
அந்நிலையில் மிகப்புலம்பி அன்னையும் அத்தனும் அகன்றபின்னையும் நான் உமை வணங்கப் பெறுதலினால் உயிர் தரித்தேன்;என்னை இனித் தனிக்கை விட்டு ஏகுவீர் எனில் யானும்முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
34
தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயாஉம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கிஅம் பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கிஇம்பர் மனைத் தவம் புரிந்து திலகவதியார் இருந்தார்.
சொற்பிரிப்பு
தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயாஉம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கிஅம்பொன் மணிநூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள்தாங்கிஇம்பர் மனைத் தவம் புரிந்து திலகவதியார் இருந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
35
மாசின் மனத் துயர் ஒழிய மருண் நீக்கியார் நிரம்பித்தேச நெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வாராய்க்காசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்துக் கருணையினால்ஆசில் அறச் சாலைகளும் தண்ணீர்ப் பந்தரும் அமைப்பார்.
சொற்பிரிப்பு
மாசின் மனத்துயர் ஒழிய மருள்நீக்கியார் நிரம்பித்தேச நெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வாராய்க்காசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்துக் கருணையினால்ஆசில் அறச் சாலைகளும் தண்ணீர்ப் பந்தரும் அமைப்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
36
கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல்மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும்நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர்யாவர்க்கும் தவிராத ஈகை வினைத் துறை நின்றார்.
சொற்பிரிப்பு
கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடும் வழுவாமல்மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும்நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர்யாவருக்கும் தவிராத ஈகை வினைத் துறை நின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
37
நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கைஅல்லேன் என்று அறத் துறந்து சமயங்களான வற்றின்நல்லாறு தெரிந்துணர நம்பர் அருளாமை யினால்கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார்.
சொற்பிரிப்பு
நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கைஅல்லேன் என்று அறத் துறந்து சமயங்கள் ஆனவற்றின்நல்லாறு தெரிந்து உணர நம்பர் அருளாமையினால்கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
38
பாடலி புத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளிமாடணைந்தார் வல்லமணர் மருங்கு அணைந்து மற்றவர்க்குவீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன்கூடவரும் உணர்வு கொளக் குறி பலவும் கொளுவினார்.
சொற்பிரிப்பு
பாடலிபுத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளிமாடு அணைந்தார் வல்அமணர் மருங்கு அணைந்து மற்றவர்க்குவீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்கள் உடன்கூடவரும் உணர்வுகொளக் குறிபலவும் கொளுவினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
39
அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம்பொங்கும் உணர்வுறப் பயின்றே அந் நெறியில் புலன் சிறப்பத்துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்குத்தங்களின் மேலாம் தரும சேனர் எனும் பெயர் கொடுத்தார்.
சொற்பிரிப்பு
அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலைநூல் ஆனஎலாம்பொங்கும் உணர்வு உறப்பயின்றே அந் நெறியில் புலன் சிறப்பத்துங் கமுழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்குத்தங்களின் மேலாம் தரும சேனர் எனும் பெயர் கொடுத்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
40
அத்துறையின் மீக் கூரும் அமைதியினால் அகல் இடத்தில்சித்த நிலை அறியாத தேரரையும் வாதின் கண்உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடையவித்தகராய் அமண் சமயத் தலைமையினில் மேம் பட்டார்.
சொற்பிரிப்பு
அத்துறையின் மீக்கூரும் அமைதியினால் அகல் இடத்தில்சித்தநிலை அறியாத தேரரையும் வாதின்கண்உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடையவித்தகராய் அமண் சமயத் தலைமையினில் மேம்பட்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
41
அந் நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவச்செந்நெறியின் வைகும் திலகவதியார் தாமும்தொன்னெறியின் சுற்றத் தொடர்பு ஒழியத் தூய சிவநன்னெறியே சேர்வதற்கு நாதன் தாள் நண்ணுவார்.
சொற்பிரிப்பு
அந்நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவச்செந்நெறியின் வைகும் திலகவதியார் தாமும்தொன்நெறியின் சுற்றத் தொடர்பு ஒழியத் தூய சிவநன்நெறியே சேர்வதற்கு நாதன் தாள் நண்ணுவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
42
பேராத பாசப் பிணிப்பு ஒழியப் பிஞ்ஞகன் பால்ஆராத அன்பு பெற ஆதரித்த அம் மடவார்நீரார் கெடில வட நீள் கரையில் நீடு பெரும்சீரார் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
பேராத பாசப் பிணிப்பு ஒழியப் பிஞ்ஞகன்பால்ஆராத அன்பு பெற ஆதரித்த அம்மடவார்நீரார் கெடில வட நீள் கரையில் நீடுபெரும்சீரார் திரு அதிகை வீரட்டானம் சேர்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
43
சென்று திரு வீரட்டானத்து இருந்த செம் பவளக்குன்றை அடி பணிந்து கோதில் சிவ சின்னம்அன்று முதல் தாங்கி ஆர்வம் உறத் தம் கையால்துன்று திருப் பணிகள் செய்யத் தொடங்கினார்.
சொற்பிரிப்பு
சென்று திரு வீரட்டானத்து இருந்த செம்பவளக்குன்றை அடி பணிந்து கோதில் சிவசின்னம்அன்று முதல் தாங்கி ஆர்வம் உறத் தம் கையால்துன்று திருப்பணிகள் செய்யத் தொடங்கினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
44
புலர்வதன் முன் திருவலகு பணி மாறிப் புனி அகன்றநலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டுமலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்துப்பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார்.
சொற்பிரிப்பு
புலர்வதன் முன் திருஅலகு பணி மாறிப் புனிறு அகன்றநலமலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டுமலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்துப்பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பலசெய்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
45
நாளும் மிகும் பணி செய்து குறைந்து அடையும் நன்னாளில்கேளுறும் அன்புற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார்கோளுறு தீவினை முந்தப் பர சமயம் குறித்து அதற்குமூளும் மனக் கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து.
சொற்பிரிப்பு
நாளும் மிகும் பணிசெய்து குறைந்து அடையும் நன்நாளில்கேளுறும் அன்பு உற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார்கோளுறு தீவினை முந்தப் பர சமயம் குறித்ததற்குமூளு மனக் கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
46
தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியைத் தொழுது என்னைஆண்டு அருளும் நீராகில் அடியேன் பின் வந்தவனைஈண்டு வினைப் பர சமயக் குழி நின்றும் எடுத்து ஆளவேண்டும் எனப் பல முறையும் விண்ணப்பம் செய்தனரால்.
சொற்பிரிப்பு
தூண்டு தவ விளக்கு அனையார் சுடர்ஒளியைத் தொழுது ”என்னைஆண்டு அருளும் நீர் ஆகில் அடியேன் பின் வந்தவனைஈண்டு வினைப் பரசமயக் குழி நின்றும் எடுத்து ஆளவேண்டும் எனப் பல முறையும் விண்ணப்பம் செய்தனரால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
47
தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று உண்ணும்அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் எனச்சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவப்பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார்.
சொற்பிரிப்பு
தவம் என்று பாய் இடுக்கித் தலை பறித்து நின்று உண்ணும்அவம் ஒன்று நெறிவீழ்வான் வீழாமே அருளும் எனச்சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவப்பவம் ஒன்றும் வினைதீர்ப்பார் திருஉள்ளம் பற்றுவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
48
மன்னு தபோ தனியார்க்குக் கனவின் கண் மழ விடையார்உன்னுடைய மனக் கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான்முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றான்அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வம் என அருளி.
சொற்பிரிப்பு
மன்னு தபோதனியார்க்குக் கனவின் கண் மழவிடையார்உன் உடைய மனக்கவலை ஒழி நீ உன் உடன்பிறந்தான்முன்னமே முனி ஆகி எமை அடையத் தவம் முயன்றான்அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வம்என அருளி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
49
பண்டு புரி நல் தவத்துப் பழுதின் அளவில் இறை வழுவும்தொண்டரை ஆளத் தொடங்கும் சூலை வேதனை தன்னைக்கண் தரு நெற்றியர் அருளக் கடும் கனல் போல் அடும் கொடியமண்டு பெரும் சூலை அவர் வயிற்றின் இடைப் புக்கதால்.
சொற்பிரிப்பு
பண்டு புரி நல் தவத்துப் பழுதின் அளவு இறை வழுவும்தொண்டரை ஆளத் தொடங்கும் சூலை வேதனை தன்னைக்கண்தரு நெற்றியர் அருளக் கடும் கனல்போல் அடும் கொடியமண்டுபெரும் சூலை அவர் வயிற்றின் இடைப் புக்கதால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
50
அடைவில் அமண் புரி தரும சேனர் வயிற்று அடையும் அதுவட அனலும் கொடு விடமும் வச்சிரவும் பிறவுமாம்கொடிய எலாம் ஒன்றாகும் எனக் குடரின் அகம் குடையப்படர் உழந்து நடுங்கி அமண் பாழியறை இடை விழுந்தார்.
சொற்பிரிப்பு
அடைவில் அமண் புரி தரும சேனர் வயிற்று அடையும் அதுவட அனலும் கொடு விடமும் வச்சிரமும் பிறவும் ஆம்கொடிய எலாம் ஒன்று ஆகும் எனக் குடரின் அகம் குடையப்படர் உழந்து நடுங்கி அமண் பாழி அறை இடைவிழுந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
51
அச் சமயத்து இடைத் தாம் முன் அதிகரித்து வாய்த்து வரும்விச்சைகளால் தடுத்திடவும் மேல் மேலும் மிக முடுகிஉச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர் தாம்நச்சரவின் விடம் தலைக் கொண்டு என மயங்கி நவையுற்றார்.
சொற்பிரிப்பு
அச்சமயத்து இடைத்தாமுன் அதிகரித்து வாய்த்துவரும்விச்சைகளால் தடுத்திடவும் மேன் மேலும் மிக முடுகிஉச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர்தாம்நச்சு அரவின் விடம் தலைக்கொண்டு என மயங்கி நவை உற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
52
அவர் நிலைமை கண்ட அதற்பின் அமண் கையர் பலர் ஈண்டிக்கவர் கின்ற விடம் போல் முன் கண்டு அறியாக் கொடும் சூலைஇவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார்தவம் என்று வினைப் பெருக்கிச் சார்பு அல்லா நெறிசார்வார்.
சொற்பிரிப்பு
அவர் நிலைமை கண்ட தன்பின் அமண் கையர் பலர் ஈண்டிக்கவர்கின்ற விடம்போல் முன் கண்டு அறியாக் கொடும் சூலைஇவர் தமக்கு வந்தது இனி யாது செயல்? என்று அழிந்தார்தவம் என்று வினைபெருக்கிச் சார்பு அல்லா நெறி சார்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
53
புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாதுகுண்டிகை நீர் மந்திரித்துக் குடிப்பித்தும் தணியாமைகண்டு மிகப் பீலி கொடு கால் அளவும் தடவி இடவும்பண்டையினும் நோவு மிகப் பரிபவத்தால் இடர் உழந்தார்.
சொற்பிரிப்பு
புண்தலை வன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாதுகுண்டிகை நீர் மந்திரித்துக் குடிப்பித்தும் தணியாமைகண்டு மிகப் பீலிகொடு கால் அளவும் தடவிடவும்பண்டையினும் நோவு மிகப் பரிபவத்தால் இடர் உழந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
54
தாவாத புகழ்த் தரும சேனருக்கு வந்த பிணிஓவாது நின்று இடலும் ஒழியாமை உணர்ந்தாராய்ஆ! ஆ! நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய்ப்போவார்கள் இது நம்மால் போக்க அரிதாம் எனப் புகன்று.
சொற்பிரிப்பு
தாவாத புகழ்த் தரும சேனருக்கு வந்த பிணிஓவாது நின்றிடலும் ஒழியாமை உணர்ந்தாராய்ஆ!ஆ! நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய்ப்போவார்கள் இது நம்மால் போக்கு அரிதாம் எனப் புகன்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
55
குண்டர்களும் கை விட்டார் கொடும் சூலை மிசைக் கொண்டுமண்டி மிக மேல் மேலும் பெருகுதலால் மதி மயங்கிப்பண்டை உறவு உணர்ந்தார்க்குத் திலகவதியார் உளராகக்கொண்டு அவர்பால் ஊட்டுவான் தனைவிட்டார் குறிப்பு உணர்த்த.
சொற்பிரிப்பு
குண்டர்களும் கைவிட்டார் கொடும் சூலை மிசைக்கொண்டுமண்டி மிக மேன்மேலும் முடுகுதலால் மதிமயங்கிப்பண்டை உறவு உணர்ந்தார்க்குத் திலகவதியார் உளராக்கொண்டு அவர்பால் ஊட்டுவான் தனைவிட்டார் குறிப்பு உணர்த்த.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
56
ஆங்கு அவன் போய்த் திருவதிகை தணை அடைய அரும் தவத்தார்பூங்கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணையக் கண்டு இறைஞ்சிஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது எனத்தீங்கு உளவோ என வினவ மற்றவனும் செப்புவான்.
சொற்பிரிப்பு
ஆங்கு அவன்போய்த் திருஅதிகை தனை அடைய அருந்தவத்தார்பூங்கமழ் நந்தனவனத்தின் புறம் பணையக் கண்டு இறைஞ்சிஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது எனத்தீங்கு உளவோ என வினவ மற்றவனும் செப்புவான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
57
கொல்லாது சூலை நோய் குடர் முடக்கித் தீராமைஎல்லாரும் கை விட்டார் இது செயல் என் முன் பிறந்தநல்லாள் பால் சென்று இயம்பி நான் உய்யும்படி கேட்டு இங்குஅல்லாகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான்.
சொற்பிரிப்பு
கொல்லாது சூலை நோய் குடர் முடக்கித் தீராமைஎல்லாரும் கைவிட்டார் இது செயல் என் முன் பிறந்தநல்லாள்பால் சென்று இயம்பி நான் உய்யும் படிகேட்டு இங்குஅல்லாகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
58
என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்துநன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம்சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழியஅன்று அவனும் மீண்டு போய்ப் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான்.
சொற்பிரிப்பு
என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்துநன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம்சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழியஅன்று அவனும் மீண்டுபோய்ப் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
59
அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான்எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால்ஒவ்வா இப் புன் சமயத்து ஒழியா இத்துயர் ஒழியச்செவ்வாறு சேர் திலக வதியார் தாள் சேர்வன் என.
சொற்பிரிப்பு
அவ்வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான்எவ்வாறு செய்வன் என ஈசர்அருள் கூடுதலால்ஒவ்வா இப் புன்சமயத்து ஒழியா இத் துயர் ஒழியச்செவ்வாறு சேர் திலகவதியார் தாள் சேர்வன் என.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
60
எடுத்த மனக் கருத்து உய்ய எழுதலால் எழு முயற்சிஅடுத்தலுமே அயர்வு ஒதுங்கத் திருவதிகை அணைவதனுக்குஉடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழியத்தொடுத்த பீலியும் ஒழியப் போவதற்குத் துணிந்து எழுந்தார்.
சொற்பிரிப்பு
எடுத்த மனக் கருத்து உய்ய எழுதலால் எழு முயற்சிஅடுத்தலுமே அயர்வு ஒதுங்கத் திருஅதிகை அணைவதனுக்குஉடுத்து உழலும் பாய் ஒழிய உறிஉறு குண்டிகை ஒழியத்தொடுத்த பீலியும் ஒழியப் போவதற்குத் துணிந்து எழுந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
61
பொய் தரும் மால் உள்ளத்துப் புன் சமணர் இடம் கழிந்துமெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை மெய் சூழ்ந்துகை தருவார் தமை ஊன்றிக் காணாமே இரவின் கண்செய் தவ மாதவர் வாழும் திருவதிகை சென்று அடைவார்.
சொற்பிரிப்பு
பொய்தரு மால் உள்ளத்துப் புன்சமணர் இடம் கழிந்துமெய்தரு வான் நெறி அடைவார் வெண்புடைவை மெய்சூழ்ந்துகைதருவார் தமை ஊன்றிக் காணாமே இரவின்கண்செய்தவ மாதவர் வாழும் திருஅதிகை சென்று அடைவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
62
சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோயுடன் தொடரக்குலவி எழும் பெருவிருப்புக் கொண்டு அணையக் குலவரை போன்றுஇலகு மணி மதில் சோதி எதிர் கொள் திருவதிகையினில்திலக வதியார் இருந்த திரு மடத்தைச் சென்று அணைந்தார்.
சொற்பிரிப்பு
சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோய் உடன் தொடரக்குலவி எழும் பெருவிருப்புக் கொண்டு அணையக் குலவரை போன்றுஇலகு மணி மதில்சோதி எதிர்கொள் திரு அதிகையினில்திலகவதியார் இருந்த திரு மடத்தைச் சென்று அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
63
வந்து அணைந்து திலகவதியார் அடிமேல் உற வணங்கிநம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர்இந்த உடல் கொடும் சூலைக் கிடைந்து அடைந்தேன் இனி மயங்காதுஉய்ந்து கரை ஏறுநெறி உரைத்து அருளும் என உரைத்து.
சொற்பிரிப்பு
வந்து அணைந்து திலகவதியார் அடிமேல் உற வணங்கிநம் தமது குலம் செய்த நல்தவத்தின் பயன் அனையீர்!இந்த உடல் கொடும் சூலைக்கு இடைந்து அடைந்தேன்; இனி மயங்காதுஉய்ந்து கரை ஏறுநெறி உரைத்து அருளும் என உரைத்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
64
தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார் தமை நோக்கிஆள் உடைய தம் பெருமான் அருள் நினைந்து கை தொழுதுகோளில் பரசமய நெறிக் குழியில் விழுந்து அறியாதுமூளும் அரும் துயர் உழந்தீர்! எழுந்தீர்! என மொழிந்தார்.
சொற்பிரிப்பு
தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார் தமை நோக்கிஆள் உடைய தம்பெருமான் அருள் நினைந்து கைதொழுதுகோள் இல் பர சமய நெறிக் குழியில் விழுந்து அறியாதுமூளும் அரும் துயர் உழந்தீர்! எழுந்திரீர்! என மொழிந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
65
மற்ற வுரை கேட்டலுமே மருண் நீக்கியார் தாமும்உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர்கற்றை வேணியர் அருளே காணும் இது கழல் அடைந்தோர்பற்று அறுப்பார் தமைப் பணிந்து பணி செய்வீர் எனப் பணித்தார்.
சொற்பிரிப்பு
மற்ற உரை கேட்டலுமே மருள்நீக்கியார் தாமும்உற்றபிணி உடல் நடுங்கிஎழுந்து தொழ உயர் தவத்தோர்கற்றை வேணியர் அருளே காணும் இது; கழல் அடைந்தோர்பற்று அறுப்பார் தமைப் பணிந்து பணி செய்வீர் எனப் பணித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
66
என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்றுக் கொண்டு இறைஞ்சநின்ற தபோதனியாரும் நின்மலன் பேர் அருள் நினைந்துசென்று திரு வீரட்டம் புகுவதற்குத் திருக் கயிலைக்குன்று உடையார் திரு நீற்றை அஞ்சு எழுத்து ஓதிக் கொடுத்தார்.
சொற்பிரிப்பு
என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்றுக் கொண்டு இறைஞ்சநின்ற தபோதனியாரும் நின்மலன் பேரருள் நினைந்துசென்று திரு வீரட்டம் புகுவதற்குத் திருக்கயிலைக்குன்று உடையார் திருநீற்றை அஞ்செழுத்து ஓதிக் கொடுத்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
67
திரு வாளன் திரு நீறு திலகவதியார் அளிப்பபெரு வாழ்வு வந்தது எனப் பெருந்தகையார் பணிந்து ஏற்று அங்குஉருவார அணிந்து தமக்குற்ற இடத்து உய்யும் நெறிதருவாராய்த் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார்.
சொற்பிரிப்பு
திருவாளன் திரு நீறு திலகவதியார் அளிப்பப்பெருவாழ்வு வந்தது எனப் பெரும் தகையார் பணிந்து ஏற்று அங்குஉரு ஆர அணிந்து தமக்கு உற்ற இடத்து உய்யும் நெறிதருவாராய்த் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
68
நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும்மாற வரும் திருப் பள்ளி எழுச்சியினில் மாதவம் செய்சீர் அடியார் திரு அலகும் திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டுஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரைக் கொடு புக்கார்.
சொற்பிரிப்பு
நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும்மாற வரும் திருப்பள்ளி எழுச்சியினில் மாதவம் செய்சீறடியார் திருஅலகும் திருமெழுக்கும் தோண்டியும் கொண்டுஆறணிந்தார் கோயிலின் உள் அடைந்து அவரைக் கொடுபுக்கார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
69
திரைக் கெடில வீரட்டானத்து இருந்த செங்கனகவரைச் சிலையார் பெரும் கோயில் தொழுது வலம் கொண்டு இறைஞ்சித்தரைத் தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திரு அருளால்உரைத் தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார்.
சொற்பிரிப்பு
திரைக்கெடில வீரட்டானத்து இருந்த செங்கனகவரைச்சிலையார் பெரும்கோயில் தொழுது வலம் கொண்டு இறைஞ்சித்தரைத்தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திருஅருளால்உரைத் தமிழ்மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
70
நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை அன்பு உறுசிந்தையில் நேசம் மிகமாற்றார் புரம் மாற்றிய வேதியரை மருளும் பிணி மாயை அறுத்திடுவான்கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் எனநீடிய கோதில் திருப்பதிகம்போற்றால் உலகு ஏழின் வரும் துயரம் போமாறு எதிர் நின்று புகன்றனரால்.
சொற்பிரிப்பு
நீற்றால் நிறைவு ஆகிய மேனி உடன் நிறை அன்பு உறு சிந்தையில் நேசம் மிகமாற்றார் புரம் மாற்றிய வேதியரை மருளும் பிணி மாயை அறுத்திடுவான்“கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்” என நீடிய கோது இல் திருப்பதிகம்போற்றால் உலகு ஏழின் வரும் துயரும் போமாறு எதிர் நின்று புகன்றனரால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
71
மன்னும் பதிகம் அது பாடியபின் வயிறு உற்று அடு சூலை மறப்பிணிதான்அந் நின்ற நிலைக் கண் அகன்றிடலும் அடியேன் உயிரோடு அருள் தந்தது எனாச்செந் நின்ற பரம் பொருள் ஆனவர் தம் திருவாரருள் பெற்ற சிறப்பு உடையோர்முன் நின்ற தெருட்சி மருட்சியினால் முதல்வன் கருணைக் கடல் மூழ்கினரே.
சொற்பிரிப்பு
மன்னும் பதிகம் அது பாடியபின் வயிறு உற்று அடு சூலை மறப் பிணிதான்அந்நின்ற நிலைக்கண் அகன்றிடலும் “அடியேன் உயிரோடு அருள் தந்தது” எனாச்செந்நின்ற பரம் பொருள் ஆனவர் தம் திருவார் அருள் பெற்ற சிறப்பு உடையோர்முன்நின்ற தெருட்சி மருட்சியினால் முதல்வன் கருணைக் கடல் மூழ்கினரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
72
அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடையப் புளகம் கண் முகிழ்த்து அலரப்பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழியப் புவிமீது விழுந்து புரண்டு அயர்வார்இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால் ஏறாத பெருந்திடர் ஏறிட நின்தங்கும் கருணைப் பெரு வெள்ளம் இடத் தகுமோ என இன்னன தாம் மொழிவார்.
சொற்பிரிப்பு
அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடையப் புளகங்கள் முகிழ்த்து அலரப்பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழியப் புவிமீது விழுந்து புரண்டு அயர்வார்“இங்குஎன் செயல் உற்ற பிழைப்பு அதனால் ஏறாத பெருந்திடர் ஏறிட நின்தங்கும் கருணைப் பெருவெள்ளம் இடத் தகுமோ?” என இன்னன தாம் மொழிவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
73
பொய் வாய்மை பெருக்கிய புன் சமயப் பொறியில் சமண் நீசர் புறத் துறையாம்அவ்வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன்மை வாச நறும் குழல் மா மலையாள் மணவாளன் மலர்க்கழல் வந்து அடையும்இவ் வாழ்வு பெறத் தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என்கொல் எனத் தொழுவார்.
சொற்பிரிப்பு
பொய் வாய்மை பெருக்கிய புன் சமயப் பொறியில் சமண் நீசர் புறத்துறையாம்அவ்வாழ் குழியின்கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன்மை வாச நறும் குழல் மாமலையாள் மணவாளன் மலர்க்கழல் வந்துஅடையும்இவ்வாழ்வு பெறத் தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என்கொல்? எனத் தொழுவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
74
மேவுற்ற இவ் வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால்பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வளப் பதிகத் தொடைபாடிய பான்மையினால்நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நின்நன்நாமம் நயப்புற மன்னுக என்றுயாவர்க்கும் வியப்புற மஞ்சு உறை வான் இடையே ஒருவாய்மை எழுந்ததுவே.
சொற்பிரிப்பு
மேவுற்ற இவ்வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால்“பாவுற்று அலர் செந்தமிழின் சொல்வளப் பதிகத் தொடை பாடிய பான்மையினால்நாவுக்கரசு என்று உலகு ஏழினும் நின் நன்நாமம் நயப்பு உற மன்னுக” என்றுயாவர்க்கும் வியப்பு உற மஞ்சு உறை வான் இடையே ஒரு வாய்மை எழுந்ததுவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
75
இத் தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு இறைஆகிய அன்பரும் இந்நெடுநாள்சித்தம் திகழ் தீவினையேன் அடையும் திருவோ இதுஎன்று தெருண்டு அறியாஅத்தன்மையன் ஆகிய இராவணனுக்கு அருளும் கருணைத் திறமான அதன்மெய்த் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல்கொண்டு வணங்கினர் மெய்யுறவே.
சொற்பிரிப்பு
இத்தன்மை நிகழ்ந்து உழி நாவின் மொழிக்கு இறை ஆகிய அன்பரும்” இந் நெடுநாள்சித்தம் திகழ் தீவினையேன் அடையும் திருவோ இது?” என்று தெருண்டு அறியாஅத்தன்மையன் ஆய இராவணனுக்கு அருளும் கருணைத் திறம் ஆன அதன்மெய்த்தன்மை அறிந்து துதிப்பதுவே மேல்கொண்டு வணங்கினர் மெய் உறவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
76
பரசும் கருணைப் பெரியோன் அருளப்பறி புன்தலையோர் நெறி பாழ்பட வந்துஅரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனாஅடியார் புடை சூழ் அதிகைப் பதி தான்முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன்நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடுமா கடல் என்ன நிறைந்துளதே.
சொற்பிரிப்பு
பரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்துஅரசு இங்கு அருள்பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடைசூழ் அதிகைப் பதிதான்முரசம் படகம் துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டையுடன்நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடுமாகடல் என்ன நிறைந்து உளதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
77
மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர் சீர்வாகீசர் மனத்தொடு வாய்மையுடன்மெய் உற்ற திருப்பணி செய்பவராய் விரவும் சிவ சின்னம் விளங்கிடவேஎய்துற்ற தியானம் அறா உணர்வும் ஈறு இன்றி எழும் திருவாசகமும்கையில் திகழும் உழவாரமுடன் கைக்கொண்டு கலந்து கசிந்தனரே.
சொற்பிரிப்பு
மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன்மெய் உற்ற திருப்பணி செய்பவராய் விரவும் சிவ சின்னம் விளங்கிடவேஎய்துற்ற தியானம் அறா உணர்வும் ஈறு இன்றி எழும் திருவாசகமும்கையில் திகழும் உழவாரம் உடன் கைக்கொண்டு கலந்து கசிந்தனரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
78
மெய்ம்மைப் பணி செய்த விருப்பு அதனால் விண்ணோர் தனி நாயகனார் கழலில்தம் இச்சை நிரம்ப வரம் பெறும் அத்தன்மைப் பதி மேவியதா பதியார்பொய்மைச் சமயப் பிணி விட்டவர் முன்போதும் பிணி விட்டருளிப் பொருளாஎம்மைப் பணிகொள் கருணைத் திறம் இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே.
சொற்பிரிப்பு
மெய்ம்மைப் பணி செய்த விருப்பு அதனால் விண்ணோர் தனிநாயகனார் கழலில்தம் இச்சை நிரம்ப வரம் பெறும் அத் தன்மைப் பதி மேவிய தாபதியார்பொய்ம்மைச் சமயப் பிணி விட்டவர் முன் போதும் பிணிவிட்டு அருளிப் பொருளாஎம்மைப் பணிகொள் கருணைத் திறம் இங்கு யார் பெற்றனர்? என்ன இறைஞ்சினரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
79
இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்திமன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கிய வண்ணம்பன்னு தொன்மையில் பாடலி புத்திர நகரில்புன்மை யே புரி அமணர் தாம் கேட்டு அது பொறாராய்.
சொற்பிரிப்பு
இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்திமன்னு பேரருள் பெற்று இடர் நீங்கிய வண்ணம்பன்னு தொன்மையில் பாடலி புத்திர நகரில்புன்மையே புரி அமணர் தாம் கேட்டு அது பொறாராய்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
80
தரும சேனர்க்கு வந்த அத் தடுப்ப அரும் சூலைஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உய்யப் போய்ப்பெருகு சைவராய்ப் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார்மருவு நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார்.
சொற்பிரிப்பு
தருமசேனர்க்கு வந்த அத் தடுப்பரும் சூலைஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உயப்போய்ப்பெருகு சைவராய்ப் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார்மருவு நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
81
மலையும் பல் சமயங்களும் வென்று மற்றவரால்நிலையும் பெற்ற இந்நெறி இனி அழிந்தது என்று அழுங்கிக்கொலையும் பொய்மையும் இலம் என்று கொடுமையே புரிவோர்தலையும் பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார்.
சொற்பிரிப்பு
மலையும் பல் சமயங்களும் வென்று மற்று அவரால்நிலையும் பெற்ற இந்நெறி இனி அழிந்தது என்று அழுங்கிக்கொலையும் பொய்ம்மையும் இலம் என்று கொடுமையே புரிவோர்தலையும் பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
82
இவ்வகைப் பல அமணர்கள் துயருன் ஈண்டிமெய் வகைத் திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டுசைவனாகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம்செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார்.
சொற்பிரிப்பு
இவ்வகைப் பல அமணர்கள் துயர் உடன் ஈண்டிமெய்வகைத் திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டுசைவன் ஆகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம்செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
83
தவ்வை சைவத்து நிற்றலின் தரும சேனரும் தாம்பொய் வகுத்தது ஓர் சூலை தீர்ந்திலது எனப் போய் இங்குஎவ்வ மாக அங்கு எய்தி நம் சமய லங்கனமும்தெய்வ நிந்தையும் செய்தனர் எனச் சொலத் தெளிந்தார்.
சொற்பிரிப்பு
தவ்வை சைவத்து நிற்றலின் தருமசேனரும் தாம்பொய் வகுத்தது ஓர் சூலை தீர்ந்திலது எனப் போய் இங்குஎவ்வம் ஆக அங்கு எய்திநம் சமயலங்கனமும்தெய்வ நிந்தையும் செய்தனர் எனச் சொலத் தெளிந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
84
சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன் மதியோர்முன்னம் நாம் சென்று முறைப்படுவோம் என முயன்றேஇன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போலமன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன்மதியோர்முன்னம் தாம் சென்று முறைப்படுவோம் என முயன்றேஇன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போலமன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
85
உடை ஒழிந்து ஒரு பேச்சு இடை இன்றி நின்று உண்போர்கடை அணைந்தவன் வாயில் காவலருக்கு நாங்கள்அடைய வந்தமை அரசனுக்கு அறிவியும் என்னஇடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார்.
சொற்பிரிப்பு
உடை ஒழிந்து ஒரு பேச்சு இடை இன்றி நின்று உண்போர்கடை அணைந்து அவன் வாயில் காவலருக்கு நாங்கள்அடைய வந்தமை அரசனுக்கு அறிவியும் என்னஇடை அறிந்து புக்கு அவரும் தம் இறைவனுக்கு இசைப்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
86
அடிகண்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்துகொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் எனக் கூறவடி நெடுவேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால்கடிது அணைவான் அவர்க்கு உற்றது என் கொல் எனக் கவன்று உரைத்தான்.
சொற்பிரிப்பு
அடிகள்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்துகொடிநுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் எனக் கூறவடிநெடுவேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால்கடிது அணைவான் அவர்க்குற்றது என் கொல் எனக் கவன்று உரைத்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
87
கடை காவல் உடையார்கள் புகுத விடக் காவலன் பால்நடை ஆடும் தொழில் உடையார் நண்ணித் தாம் எண்ணியவாறுஉடையார் ஆகிய தரும சேனர் பிணி உற்றாராய்ச்சடையானுக்கு ஆளாய் நின் சமயம் ஒழித்தார் என்றார்.
சொற்பிரிப்பு
கடைகாவல் உடையார்கள் புகுதவிடக் காவலன்பால்நடைஆடும் தொழில் உடையார் நண்ணித் தாம் எண்ணியவாறுஉடையார் ஆகிய தரும சேனர் பிணி உற்றாராய்ச்சடையானுக்கு ஆளாய் நின் சமயம் ஒழித்தார் என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
88
விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்துபுரை உடைய மனத்தினராய் போவதற்குப் பொய்ப் பிணி கொண்டுஉரை சிறந்த சமயத்தை அழித்து ஒழியப் பெறுவதேகரையில் தவத்தீர் இதனுக்கு என் செய்வது எனக் கனன்றான்.
சொற்பிரிப்பு
விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்துபுரைஉடைய மனத்தினராய்ப் போவதற்குப் பொய்ப்பிணிகொண்டுஉரைசிறந்த சமயத்தை அழித்து ஒழியப் பெறுவதேகரையில் தவத்தீர் இதனுக்கு என் செய்வது? எனக் கனன்றான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
89
தலை நெறி ஆகிய சமயம் தன்னை அழித்து உன்னுடையநிலை நின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறி இலியைஅலை புரிவாய் எனப் பரவி வாயால் அஞ்சாது உரைத்தார்கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர்.
சொற்பிரிப்பு
தலைநெறி ஆகிய சமயம் தன்னை அழித்து உன்னுடையநிலைநின்ற தொல்வரம்பின் நெறி அழித்த பொறியிலியைஅலைபுரிவாய் எனப்பரவி வாயால் அஞ்சாது உரைத்தார்கொலைபுரியா நிலைகொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
90
அருள் கொண்ட உணர்வு இன்றி நெறிகோடி அறிவென்றுமருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமை நோக்கித்தெருள் கொண்டோர் இவர் சொன்ன தீயோனைச் செறுவதற்குப்பொருள் கொண்டு விடாது என் பால் கொடுவாரும் எனப் புகன்றான்.
சொற்பிரிப்பு
அருள்கொண்ட உணர்வு இன்றி நெறி கோடி அறிவு என்றுமருள்கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமைநோக்கித்தெருள்கொண்டோர் இவர் சொன்ன தீயோனைச் செறுவதற்குப்பொருள்கொண்டு விடாது என்பால் கொடுவாரும் எனப் புகன்றான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
91
அரசனது பணிதலை நின்ற அமைச்சர்களும் அந்நிலையேமுரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்துவிரை செறியும் சோலை சூழ் திருவதிகை தனை மேவிபரசமயப் பற்று அறுத்த பான்மையினார் பால் சென்றார்.
சொற்பிரிப்பு
அரசனது பணி தலைநின்று அமைச்சர்களும் அந்நிலையேமுரசு அதிரும் தானையொடு முன்சென்று முகில் சூழ்ந்துவிரைசெறியும் சோலை சூழ் திருஅதிகை தனை மேவிப்பரசமயப் பற்று அறுத்த பான்மையினார் பால்சென்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
92
சென்று அணைந்த அமைச்சர் உடன் சேனை வீரரும் சூழ்ந்துமின் தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரைஇன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் எனநின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரை செய்வார்.
சொற்பிரிப்பு
சென்று அணைந்த அமைச்சர் உடன் சேனை வீ ரரும் சூழ்ந்துமின் தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரைஇன்று நுமை அரசன் அழைத்து எமை விடுத்தான்; போதும் எனநின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரைசெய்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
93
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்மறையின்கோமானை நதியின் உடன் குளிர் மதி வாழ் சடை யானைத்தேமாலைச் செந்தமிழின் செழும் திருத் தாண்டகம் பாடிஆமாறு நீர் அழைக்கும் அடைவிலம் என்று அருள் செய்தார்.
சொற்பிரிப்பு
நாமார்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்மறையின்கோமானை நதியின் உடன் குளிர் மதிவாழ் சடையானைத்தேமாலைச் செந்தமிழின் செழும் திருத்தாண்டகம் பாடிஆமாறு நீர் அழைக்கும் அடைவு இலம் என்று அருள்செய்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
94
ஆண்ட அரசருள் செய்யக் கேட்ட வரும் அடி வணங்கிவேண்டியவர்க் கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர்ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார்மூண்ட சினப் போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார்.
சொற்பிரிப்பு
ஆண்ட அரசு அருள் செய்யக் கேட்டு அவரும் அடி வணங்கிவேண்டி அவர்க் கொண்டு ஏகவிடைஉகைத்தார் திருத்தொண்டர்ஈண்டுவரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்திருந்தார்மூண்ட சினப் போர்மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
95
பல்லவனும் அது கேட்டுப் பாங்கு இருந்த பாய் உடுக்கைவல் அமணர் தமை நோக்கி மற்று அவனைச் செய்வது இனிச்சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாதபுல் அறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இடப் புகன்றார்.
சொற்பிரிப்பு
பல்லவனும் அதுகேட்டுப் பாங்கு இருந்த பாய் உடுக்கைவல்லமணர் தமை நோக்கி மற்றவனைச் செய்வது இனிச்சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாதபுல்லறிவோர் அஞ்சாது நீற்ற றையில் இடப் புகன்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
96
அருகு அணைந்தார் தமை நோக்கி அவ் வண்ணம் செய்க எனப்பெருகு சினக் கொடுங் கோலான் மொழிந்திடலும் பெருந் தகையைஉருகு பெரும் தழல் வெம்மை நீற்று அறையின் உள் இருத்தித்திருகு கரும் தாள் கொளுவிச் சேமங்கள் செய்து அமைத்தார்.
சொற்பிரிப்பு
அருகு அணைந்தார் தமை நோக்கி அவ்வண்ணம் செய்க” எனப்பெருகுசினக் கொடுங்கோலான் மொழிந்திடலும் பெருந்தகையைஉருகுபெரும் தழல் வெம்மை நீற்றறையின் உள் இருத்தித்திருகு கரும்தாள் கொளுவிச் சேமங்கள் செய்து அமைத்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
97
ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்துத்தாண்டவம் முன் புரிந்து அருளும் தாள் நிழலைத் தலைக் கொண்டேஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்றுமூண்டமனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார்.
சொற்பிரிப்பு
ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்துத்தாண்டவம் முன் புரிந்து அருளும் தாள் நிழலைத் தலைக்கொண்டேஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்றுமூண்ட மனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
98
வெய்ய நீற்று அறையது தான் வீங்கு இளவேனில் பருவம்தை வரும் தண் தென்றல் அணை தண் கழுநீர்த் தடம் போன்றுமொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய்ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே.
சொற்பிரிப்பு
வெய்ய நீற்று அறை அதுதான் வீங்கு இளவேனில் பருவம்தைவரு தண் தென்றல் அணை தண் கழுநீர்த் தடம் போன்றுமொய்ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய்ஐயர் திருவடி நீழல் அருள் ஆகிக் குளிர்ந்ததே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
99
மாசு இல் மதி நீடுபுனல் மன்னி வளர் சென்னியனைப்பேச இனியானை உலக ஆளுடைய பிஞ்ஞகனைஈசனை எம்பெருமானை எவ் உயிரும் தருவானைஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார்.
சொற்பிரிப்பு
மாசில் மதி நீடுபுனல் மன்னிவளர் சென்னியனைப்,பேச இனியானை,உலகு ஆள் உடைய பிஞ்ஞகனை,ஈசனை,எம்பெருமானை எவ் உயிரும் தருவானை,ஆசையில் ஆராஅமுதை அடிவணங்கி இனிது இருந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
100
ஓர் எழுநாள் கழிந்து அதன்பின் உணர்வில் அமணரை அழைத்துப்பாரும் இனி நீற்று அறையை என உரைத்தான் பல்லவனும்கார் இருண்ட குழாம் போலும் உரு உடைய கார் அமணர்தேரும் நிலை இல்லாதார் நீற்று அறையைத் திறந்தார்கள்.
சொற்பிரிப்பு
ஓர் எழுநாள் கழிந்ததற்பின் உணர்வில் அமணரை அழைத்துப்பாரும் இனி நீற்றறையை என உரைத்தான் பல்லவனும்கார் இருண்ட குழாம் போலும் உருஉடைய கார் அமணர்தேருநிலை இல்லாதார் நீற்றறையைத் திறந்தார்கள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
101
ஆனந்த வெள்ளத்தின் இடை மூழ்கி அம்பலவர்தேன் உந்து மலர் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்திஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார் தமைக் கண்டேஈனம் தங்கியது இலதாம் என்ன அதிசயம் என்றார்.
சொற்பிரிப்பு
ஆனந்த வெள்ளத்தின் இடை மூழ்கி அம்பலவர்தேன்உந்து மலர்ப்பாதத்து அமுது உண்டு தெளிவு எய்திஊனம்தான் இலர் ஆகி உவந்து இருந்தார் தமைக்கண்டேஈனம் தங்கியது இலதாம் என்ன அதிசயம்! என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
102
அதிசயம் அன்றிது முன்னை அமண் சமயச் சாதகத்தால்இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்துமதி செய்வது இனிக் கொடிய வல் விடம் ஊட்டுவது என்றுமுதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள்.
சொற்பிரிப்பு
அதிசயம் அன்று இது முன்னை அமண் சமயச் சாதகத்தால்இது செய்து பிழைத்திருந்தான் என வேந்தற்கு உரைசெய்துமதி செய்வது இனிக் கொடிய வல்விடம் ஊட்டுவது என்றுமுதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
103
ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால்கெடு மன்னன்ஓங்கு பெருமையினால் நஞ்சு ஊட்டும் என உரைப்பத்தேங்காதார் திருநாவுக்கரையரை அத் தீய விடப்பாங்கு உடைய பால் அடிசில் அமுது செயப் பண்ணினார்.
சொற்பிரிப்பு
ஆங்கு அது கேட்டலும் கொடியஅமண் சார்பால் கெடுமன்னன்ஓங்கு பெரு மையலினால் நஞ்சு ஊட்டும் என உரைப்பத்தேங்காதார் திருநாவுக்கு அரசரை அத் தீய விடம்பாங்கு உடைய பால் அடிசில் அமுதுசெயப் பண்ணினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
104
நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்றுவஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தேசெஞ்சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால்வெஞ்சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார்.
சொற்பிரிப்பு
நஞ்சும் அமுதாம் எங்கள் நாதன் அடியார்க்கு என்றுவஞ்சமிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படிஅறிந்தேசெஞ்சடையார் சீர் விளங்கும் திறல் உடையார் தீ விடத்தால்வெஞ்சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
105
பொடி ஆர்க்கும் திருமேனிப் புனிதர்க்குப் புவனங்கள்முடிவாக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுதானால்படியார்க்கும் அறி அரிய பசுபதியார் தம் உடையஅடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ.
சொற்பிரிப்பு
பொடியார்க்கும் திருமேனிப் புனிதர்க்குப் புவனங்கள்முடிவாக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுது ஆனால்படியார்க்கும் அறிவு அரிய பசுபதியார் தம்முடையஅடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ?
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
106
அவ் விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்பவெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெருக் கொண்டேஇவ் விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி எனத்தெவ் விடத்துச் செயல் புரியும் காவலற்குச் செப்புவார்.
சொற்பிரிப்பு
அவ்விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்பவெவ்விடமும் அமுது ஆயிற்றுஎன அமணர் வெருக்கொண்டேஇவ்விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி எனத்தெவ்விடத்துச் செயல் புரியும் காவலற்குச் செப்புவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
107
நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம் தீர்தஞ்சமுடை மந்திரத்தால் சாதியா வகை தடுத்தான்எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும்துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார்.
சொற்பிரிப்பு
நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம் தீர்தஞ்சம் உடை மந்திரத்தால் சாதியா வகைதடுத்தான்;எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின்முறையும்துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறைநின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
108
மற்றவர் தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும்செற்ற அவனை இனிக் கடியும் திறம் எவ்வாறு எனச் செப்பஉற்றவரும் மந்திர சாதகம் நாங்கள் ஒழித்திட நின்கொற்ற வயக் களிற்று எதிரே விடுவது எனக் கூறினார்.
சொற்பிரிப்பு
மற்றவர் தம் மொழிகேட்டு மதிகெட்ட மன்னவனும்செற்றவனை இனிக் கடியும் திறம் எவ்வாறு எனச் செப்பஉற்றவரும் மந்திர சாதக நாங்கள் ஒழித்திட நின்கொற்ற வயக் களிற்று எதிரே விடுவது எனக் கூறினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
109
மா பாவிக் கடை அமணர் வாகீசத் திருவடியாம்கா பாலி அடியவர் பால் கடக் களிற்றை விடுக என்னப்பூ பாலர் செயல் மேற்கொள் புலைத் தொழிலோன் அவர் தம் மேல்கோ பாதி சயமான கொலைக் களிற்றை விடச் சொன்னான்.
சொற்பிரிப்பு
மாபாவிக் கடை அமணர் வாகீசத் திருவடியாம்காபாலி அடியவர்பால் கடக்களிற்றை விடுக என்னப்பூபாலர் செயல் மேற்கொள் புலைத் தொழிலோன் அவர் தம்மேல்கோபாதிசயம் ஆன கொலைக் களிற்றை விடச்சொன்னான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
110
கூடத்தைக் குத்தி ஒரு குன்றம் எனப் புறப்பட்டுமாடத்தை மறித்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றித்தாடத்தில் பரிக்காரர் தலை இடறிக் கடக் களிற்றின்வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம்.
சொற்பிரிப்பு
கூடத்தைக் குத்தி ஒரு குன்றம் எனப் புறப்பட்டுமாடத்தை மறித்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றித்தாடத்தில் பரிக்காரர் தலை இடறிக் கடக்களிற்றின்வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
111
பாசத் தொடை நிகளத் தொடர்பறியத் தறி முறியாமீ சுற்றிய பறவைக் குலம் வெருவத் துணிவிலகாஊசல் கரம் எதிர் சுற்றிட உரறிப் பரி உழறாவாசக் கட மழை முற்பட மதவெற்பு எதிர் வருமால்.
சொற்பிரிப்பு
பாசத்தொடை நிகளத் தொடர் பறியத் தறி முறியாமீ சுற்றிய பறவைக் குலம் வெருவத் துணி விலகாஊசல் கரம் எதிர் சுற்றிட உரறிப் பரி உழறாவாசக் கட மழை முற்பட மத வெற்பு எதிர் வருமால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
112
இடி உற்று எழும் ஒலியில் திசை இப உட்கிட அடியில்படி புக்கு உற நெளியப் படர் பவனக் கதி விசையில்கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின்முடிவில் கனல் என முன் சினம் முடுகிக் கடுகியதே.
சொற்பிரிப்பு
இடி உற்று எழும் ஒலியில் திசை இபம் உட்கிட அடியில்படி புக்குற நெளியப் படர் பவனக் கதி விசையில்கடி துற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின்முடிவில் கனல் என முற் சினம் முடுகிக் கடுகியதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
113
மாடு உற்று அணை இவுளிக் குலம் மறியச் செறி வயிரக்கோடுற்று இரு பிளவிட்டு அறு குறை கைக்கொடு முறியச்சாடுற்றிடு மதில் தெற்றிகள் சரியப் புடை அணி செற்றுஆடுற்று அகல் வெளியுற்று அது அவ்வடர் கைக்குல வரையே.
சொற்பிரிப்பு
மாடுற்று அணை இவுளிக் குலம் மறியச் செறி வயிரக்கோடுற்று இரு பிளவு இட்டறு குறை கைக்கொடு முறியச்சாடுற்று இடு மதில் தெற்றிகள் சரியப் புடை அணிசெற்றுஆடுற்று அகல் வெளி உற்றது அவ் அடர்கைக் குலவரையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
114
பாவக் கொடு வினை முற்றிய படிறுற்று அடு கொடியோர்நாவுக்கரசர் எதிர் முற்கொடு நணுகிக் கருவரை போல்ஏவிச் செறு பொருகைக் கரியினை உய்த்திட வெருளார்சேவிற்று திகழ்பவர் பொன் கழல் தெளிவு உற்றனர் பெரியோர்.
சொற்பிரிப்பு
பாவக் கொடுவினை முற்றிய படிறுற்று அடு கொடியோர்நாவுக்கரசு எதிர் முற்கொடு நணுகிக் கருவரைபோல்ஏவிச் செறு பொருகைக் கரியினை உய்த்திட வெருளார்சேவில் திகழ்பவர் பொற்கழல் தெளிவு உற்றனர் பெரியோர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
115
அண்ணல் அருந் தவ வேந்தர் ஆணை தம் மேல் வரக் கண்டுவிண்ணவர் தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானைச்சுண்ண வெண் சந்தனச் சாந்து தொடுத்த திருப் பதிகத்தைமண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார்.
சொற்பிரிப்பு
அண்ணல் அருந்தவ வேந்தர் ஆனை தம் மேல் வரக் கண்டுவிண்ணவர் தம்பெருமானை விடைஉகந்து ஏறும் பிரானைச்சுண்ணவெண் சந்தனச் சாந்து தொடுத்த திருப்பதிகத்தைமண் உலகு உய்ய எடுத்து மகிழ்வு உடனே பாடுகின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
116
வஞ்சகர் விட்ட சினப் போர் மதவெங் களிற்றினை நோக்கிச்செஞ்சடை நீள் முடிக் கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார்வெஞ்சுடர் மூவிலைச் சூல வீரட்டர் தம் அடியோம் நாம்அஞ்சுவது இல்லை என்று என்றே அருந்தமிழ் பாடி உறைந்தார்.
சொற்பிரிப்பு
வஞ்சகர் விட்ட சினப்போர் மத வெங் களிற்றினை நோக்கிச்செஞ்சடை நீள்முடிக் கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார்வெஞ்சுடர் மூஇலைச் சூல வீரட்டர் தம் அடியோம் நாம்!அஞ்சுவது இல்லை என்று என்றே அருந்தமிழ் பாடி அறைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
117
தண் தமிழ் மாலைகள் பாடித் தம் பெருமான் சரணாகக்கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கைத்தொண்டரை முன் வலமாகச் சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில்எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம்.
சொற்பிரிப்பு
தண்டமிழ் மாலைகள் பாடித் தம்பெருமான் சரண் ஆகக்கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கைத்தொண்டரை முன் வலம் ஆகச் சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில்எண்டிசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
118
ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அவ் வேழம் பெயரத்தூண்டிய மேல் மறப் பாகர் தொடக்கி அடத்துத் திரித்துமீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசிஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே.
சொற்பிரிப்பு
ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அவ் வேழம் பெயரத்தூண்டிய மேன் மறப்பாகர் தொடக்கி அடர்த்துத் திரித்துமீண்டும் அதனை அவர்மேல் மிறைசெய்து காட்டிட வீசிஈண்டவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
119
ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்துப் பிளந்துநாடிப் பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுகநீடிய வேலை கலக்கும் நெடும் மந்தரகிரி போலஆடி அவ் யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே.
சொற்பிரிப்பு
ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்துப் பிளந்துநாடிப் பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுகநீடிய வேலை கலக்கும் நெடு மந்தரகிரி போலஆடு இயல் யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
120
யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம்மானம் அழிந்து மயங்கி வருந்திய சிந்தையர் ஆகித்தானை நில மன்னன் தாளில் தனித் தனி வீழ்ந்து புலம்பமேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனிச் செய்வது என் என்றான்.
சொற்பிரிப்பு
யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம்மானம் அழிந்து மயங்கி வருந்திய சிந்தையர் ஆகித்தானை நிலமன்னன் தாளில் தனித்தனி வீழ்ந்து புலம்பமேன்மை நெறிவிட்ட வேந்தன் வெகுண்டு இனிச் செய்வது என் என்றான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
121
நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி நிலையால்எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ் வண்ணம் நின் சீர்பங்கப் படுத்தவன் போகப் பரிபவம் தீரும் உனக்குப்பொங்கழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார்.
சொற்பிரிப்பு
நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி நிலையால்எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ்வண்ணம் நின் சீர்பங்கப் படுத்தவன் போகப் பரிபவம் தீரும் உனக்குப்பொங்கழல் போக அதன்பின் புகை அகன்றால் என என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
122
அல்லிருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் தான்தொல்லைச் சமயம் அழித்துத் துயரம் விளைத்தவன் தன்னைச்சொல்லும் இனிச் செய்வது என்னச் சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர்கல்லுடன் பாசம் பிணித்துக் கடல் இடைப் பாய்ச்சுவது என்றார்.
சொற்பிரிப்பு
அல் இருள் அன்னவர் கூற அரும்பெரும் பாவத்தவன் தான்தொல்லைச் சமயம் அழித்துத் துயரம் விளைத்தவன் தன்னைச்சொல்லும் இனிச் செய்வது என்னச் சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர்கல் உடன் பாசம் பிணித்துக் கடல்இடைப் பாய்ச்சுவது என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
123
ஆங்கு அது கேட்ட அரசன் அவ்வினை மாக்களை நோக்கித்தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம் உறக் கொடு போகிப்பாங்கு ஒரு கல்லில் அணைத்துப் பாசம் பிணித்து ஓர் படகில்வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்துமின் என்று விடுத்தான்.
சொற்பிரிப்பு
ஆங்கு அது கேட்ட அரசன் அவ்வினை மாக்களை நோக்கித்தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம் உறக்கொடு போகிப்பாங்கு ஒரு கல்லில் அணைத்துப் பாசம் பிணித்து ஓர் படகில்வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்துமின் என்று விடுத்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
124
அவ் வினை செய்திடப் போகும் அவருடன் போயர் உகந்தவெவ்வினை யாளரும் சென்று மேவிட நாவுக்கரசர்செவ்விய தம் திரு உள்ளம் சிறப்ப அவருடன் சென்றார்பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தார் அப்பாதகர்.
சொற்பிரிப்பு
அவ்வினை செய்திடப் போகும் அவர் உடன் போய் அருகந்தவெவ்வினையாளரும் சென்று மேவிட நாவுக்கரசர்செவ்விய தம் திருஉள்ளம் சிறப்ப அவர் உடன் சென்றார்பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தார் அப்பதகர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
125
அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர்ஒப்பரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய்த்தொண்டர் தாமும்எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்றுசெப்பிய வண் தமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார்.
சொற்பிரிப்பு
அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர்ஒப்பரும் ஆழ்கடல் புக்க உறைப்பு உடை மெய்த்தொண்டர் தாமும்எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை” என்றுசெப்பிய வண்டமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
126
சொல் துணை வேதியன் என்னும் தூய் மொழிநல் தமிழ் மாலை ஆம் நமச்சிவாய என்றுஅற்ற முன் காக்கும் அஞ்சு எழுத்தை அன்பொடுபற்றி உணர்வினால் பதிகம் பாடினார்.
சொற்பிரிப்பு
சொற்றுணை வேதியன் என்னும் தூய்மொழிநற்றமிழ் மாலையா நமச்சிவாய என்றுஅற்றம் முன் காக்கும்அஞ்செழுத்தை அன்பொடுபற்றிய உணர்வினால் பதிகம் பாடினர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
127
பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால்அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்குஅரிய அஞ்சு எழுத்தையும் அரசு போற்றிடக்கரு நெடுங்கடலின் உட் கல் மிதந்ததே.
சொற்பிரிப்பு
பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால்அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்குஅரிய அஞ்செழுத்தையும் அரசு போற்றிடகருநெடும் கடலின் உள் கல் மிதந்ததே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
128
அப் பெருங்கல்லும் அங்கு அரசு மேல் கொளத்தெப்ப மாய் மிதத்தலில் செறிந்த பாசமும்தப்பியது அதன் மிசை இருந்த தாவில் சீர்மெய்ப் பெரும் தொண்டனார் விளங்கித் தோன்றினார்.
சொற்பிரிப்பு
அப்பெரும் கல்லும் அங்கு அரசு மேல்கொளத்தெப்பமாய் மிதத்தலில் செறிந்த பாசமும்தப்பியது அதன்மிசை இருந்த தாவில் சீர்மெய்ப்பெரும் தொண்டனார் விளங்கித் தோன்றினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
129
இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின்வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிடஅருளும் மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல்ஒரு கல் மேல் ஏற்று இடல் உரைக்க வேண்டுமோ.
சொற்பிரிப்பு
இருவினைப் பாசம், மும் மலக் கல் ஆர்த்தலின்வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிடஅருளு மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல்ஒருகல் மேல் ஏற்றி டல் உரைக்க வேண்டுமோ?
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
130
அருள் நயந்து அஞ்செழுத்து ஏத்தப் பெற்ற அக்கருணை நாவரசினைத் திரைக் கரங்களால்தெருள் நெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிடவருணனும் செய்தனன் முன்பு மா தவம்.
சொற்பிரிப்பு
அருள்நயந்து அஞ்செழுத்து ஏத்தப் பெற்ற அக்கருணை நாவரசினைத் திரைக் கரங்களால்தெருள்தெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிடவருணனும் செய்தனன் முன்பு மா தவம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
131
வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச்சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிடஏந்தியே கொண்டு எழுந்து அருள் வித்தனன்பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில்.
சொற்பிரிப்பு
வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச்சேர்ந்து அடை கருங்கலேசிவிகை ஆயிடஏந்தியே கொண்டு எழுந்து அருளுவித்தனன்பூந் திருப்பாதிரிப் புலியூர்ப் பாங்கரில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
132
அத் திருப் பதியினில் அணைந்த அன்பரைமெய்த் தவக் குழாம் எலாம் மேவி ஆர்த்தெழஎத் திசையைனும் அர என்னும் ஓசைபோல்தத்து நீர்ப் பெருங்கடல் தானும் ஆர்த்ததே.
சொற்பிரிப்பு
அத்திருப் பதியினில் அணைந்த அன்பரைமெய்த்தவக் குழாம் எலாம் மேவி ஆர்த்து எழஎத்திசையினும் அர என்னும் ஓசைபோல்தத்து நீர்ப் பெருங்கடல் தானும் ஆர்த்ததே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
133
தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன்செழும் திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள் வெண்கொழுந்து அணி சடையாரைக் கும்பிட்டு அன்புறவிழுந்து எழுந்து அருள் நெறி விளங்கப் பாடுவார்.
சொற்பிரிப்பு
தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன்செழும் திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள் வெண்கொழுந்து அணி சடையரைக் கும்பிட்டு அன்புறவிழுந்து எழுந்து அருள் நெறி விளங்கப் பாடுவர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
134
ஈன்றாளுமாய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்துத்தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங் கட்கு என்றுவான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எவ் உயிர்க்கும்சான்றாம் ஒருவனைத் தண் தமிழ் மாலைகள் சாத்தினரே.
சொற்பிரிப்பு
ஈன்றாளுமாய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்துத்தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்கட்கு என்றுவான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எவ்உயிர்க்கும்சான்றாம் ஒருவனைத் தண் டமிழ் மாலைகள் சாத்தினரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
135
மற்றும் இணையன வண் தமிழ் மாலைகள் பாடி வைகிவெற்றி மழவிடை வீரட்டர் பாதம் மிக நினைவால்உற்றதொர் காதலின் அங்கு நின்று ஏகி ஒன்னார் புரங்கள்செற்றவர் வாழும் திருவதிகைப் பதி சென்று அடைவார்.
சொற்பிரிப்பு
மற்றும் இனையன வண்டமிழ்மாலைகள் பாடி வைகிவெற்றி மழவிடை வீரட்டர் பாதம் மிக நினைவால்உற்றதொர் காதலின் அங்கு நின்று ஏகி ஒன்னார் புரங்கள்செற்றவர் வாழும் திருஅதிகைப் பதி சென்று அடைவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
136
தேவர் பிரான் திரு மாணிக் குழியும் தினை நகரும்மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சிப்பூவலர் சோலை மணமடி புல்லப் பொருள் மொழியின்காவலர் செல்வத் திருக் கெடிலத்தைக் கடந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
தேவர் பிரான் திருமாணி குழியும் தினைநகரும்மேவினர் சென்று விரும்பிய சொன்மலர் கொண்டு இறைஞ்சிப்பூஅலர் சோலை மணம் அடி புல்லப் பொருள்மொழியின்காவலர் செல்வத் திருக் கெடிலத்தைக் கடந்து அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
137
வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீயம் இறைகள் எல்லாம்எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்து அருளமஞ்சிவர் மாடத் திருவதிகைப் பதி வாணர் எல்லாம்தம் செயல் பொங்கத் தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார்.
சொற்பிரிப்பு
வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீய மிறைகள் எல்லாம்எஞ்ச என்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்தருளமஞ்சு இவர் மாடத் திருஅதிகைப் பதி வாணர் எல்லாம்தஞ்செயல் பொங்கத் தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
138
மணி நெடுந் தோரணம் வண் குலைப் பூகம் மடற் கதலிஇணையுற நாட்டி எழு நிலைக் கோபுரம் தெற்றி எங்கும்தணிவில் பெருகொளித் தாமங்கள் நாற்றிச் செஞ் சாந்து நீவிஅணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார்.
சொற்பிரிப்பு
மணிநெடும் தோரணம் வண் குலைப் பூகம் மடல் கதலிஇணைஉற நாட்டி எழுநிலைக் கோபுரம் தெற்றி எங்கும்தணிவில் பெருகொளித் தாமங்கள் நாற்றிச் செஞ்சாந்து நீவிஅணிநகர் முன்னை அணி மேல் அணிசெய்து அலங்கரித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
139
மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார்இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்மப்பொன் இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும்தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர் கொண்டனர் தொண்டரையே.
சொற்பிரிப்பு
மன்னிய அன்பின் வளநகர் மாந்தர் வயங்கு இழையார்இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்மப்பொன்இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும்தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர் கொண்டனர் தொண்டரையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
140
தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும்நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகிப்பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச் செஞ் சொல்மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே.
சொற்பிரிப்பு
தூய வெண்நீறு துதைந்த பொன் மேனியும், தாழ்வடமும்,நாயகன் சேவடி தைவரும் சிந்தையும், நைந்து உருகிப்பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும், பதிகச் செஞ்சொல்மேய செவ்வாயும், உடையார் புகுந்தனர் வீதி உள்ளே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
141
கண்டார்கள் கை தலைமேல் குவித்து இந்தக் கருணை கண்டால்மிண்டாய செங்கை அமண்கையர் தீங்கு விளைக்கச் செற்றம்உண்டா யினவண்ணம் எவ் வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும்தொண்டு ஆண்டு கொண்ட பிரானைத் தொழுது துதித்தனரே.
சொற்பிரிப்பு
கண்டார்கள் கைதலை மேல்குவித்து இந்தக் கருணை கண்டால்மிண்டாய செய்கை அமண்கையர் தீங்கு விளைக்கச் செற்றம்உண்டாயின வண்ணம் எவ்வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும்தொண்டு ஆண்டு கொண்ட பிரானைத் தொழுது துதித்தனரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
142
இவ் வண்ணம் போல எனைப் பல மாக்கள் இயம்பி ஏத்தமெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவிச் செல்லஅவ் வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம்பவளச்செவ் வண்ணர் கோயில் திரு வீரட்டானத்தைச் சேர்ந்தனரே.
சொற்பிரிப்பு
இவ்வண்ணம் போல எனைப் பல மாக்கள் இயம்பி ஏத்தமெய்வண்ண நீற்றொளி மேவும் குழாங்கள் விரவிச் செல்லஅவ்வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம்பவளச்செவ்வண்ணர் கோயில்திருவீரட்டானத்தைச் சேர்ந்தனரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
143
உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சிநம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்தேஎம் பெருமான் தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்றுதம் பரிவால் திருத் தாண்டகச் செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார்.
சொற்பிரிப்பு
உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சிநம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்தேஎம்பெருமான்தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்றுதம்பரிவால் திருத்தாண்டகச் செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
144
அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானைவிரி புனல் சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதைத்தெரிவரிய பெரும் தன்மைத் திருநாவுக் கரசு மனம்பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பலபாடிப் பணி செயும் நாள்.
சொற்பிரிப்பு
அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானைவிரிபுனல் சூழ் திருஅதிகை வீரட்டானத்து அமுதைத்தெரிவு அரிய பெருந்தன்மைத் திருநாவுக்கரசு மனம்பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பலபாடிப் பணி செயுநாள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
145
புல் அறிவில் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்து ஒழுகும்பல்லவனும் தன்னுடைய பழவினைப் பாசம் பறியஅல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினைப் பணிந்துவல்லமணர் தமை நீத்து மழவிடையோன் தாள் அடைந்தான்.
சொற்பிரிப்பு
புல்லறிவில் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்து ஒழுகும்பல்லவனும் தன் உடைய பழவினைப் பாசம் பறியஅல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினைப் பணிந்துவல்லமணர் தமைநீத்து மழவிடையோன் தாள் அடைந்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
146
வீடு அறியாச் சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்தகாடவனும் திருவதிகை நகரின் கண் கண் நுதற்குப்பாடலி புத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்கூட இடித்துக் கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான்.
சொற்பிரிப்பு
வீடு அறியாச் சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்தகாடவனும் திருஅதிகை நகரின் கண் கண்நுதற்குப்பாடலிபுத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்கூட இடித்துக் கொணர்ந்து குணபர ஈச்சரம் எடுத்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
147
இந் நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்குமன்னான வாகீசத் திருமுனியும் மதிச் சடைமேல்பன்னாகம் அணிந்தவர் தம் பதி பலவும் சென்று இறைஞ்சிச்சொன்னாமத் தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார்.
சொற்பிரிப்பு
இந்நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன்தமிழ்க்குமன்னான வாகீசத் திருமுனியும் மதிச்சடைமேல்பன்னாகம் அணிந்தவர் தம் பதி பலவும் சென்று இறைஞ்சிச்சொல் நாமத் தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
148
திருவதிகைப் பதி மருங்கு திரு வெண்ணெய் நல்லூரும்அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலாமருவு திருப்பதி பிறவும் வணங்கி வளத் தமிழ் பாடிப்பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகடம் அணைந்தார்.
சொற்பிரிப்பு
திருஅதிகைப் பதி மருங்கு திருவெண்ணெய் நல்லூரும்அருளு திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலாமருவு திருப்பதி பிறவும் வணங்கி வளத் தமிழ்பாடிப்பெருகுவிருப்பு உடன் விடையார் மகிழ் பெண்ணாகடம் அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
149
கார் வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும்சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்திவார் சடையார் மன்னு திருத் தூங்கானை மாடத்தைப்பார் பரவும் திருமுனிவர் பணிந்து ஏத்திப் பரவினார்.
சொற்பிரிப்பு
கார்வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும்சீர் உடை அந்தணர் வாழும் செழும்பதியின் அகத்து எய்திவார்சடையார் மன்னு திருத் தூங்கானை மாடத்தைப்பார் பரவும் திருமுனிவர் பணிந்து ஏத்திப் பரவினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
150
புன் நெறியாம் அமண் சமயத் தொடக்குண்டு போந்தவுடன்தன்னுடனே உயிர்வாழத் தரியேன் நான் தரிப்பதனுக்குஎன்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்றுபன்னு செழுந்தமிழ் மாலை முன் நின்று பாடுவார்.
சொற்பிரிப்பு
புன் நெறியாம் அமண் சமயத் தொடக்கு உண்டு போந்த உடல்தன் உடனே உயிர்வாழத் தரியேன் நான் தரிப்பதனுக்குஎன் உடைய நாயக! நின் இலச்சினை யிட்டு அருள் என்றுபன்னு செழும் தமிழ்மாலை முன் நின்று பாடுவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
151
பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று எடுத்துமுன் ஆகி எப் பொருட்கும் முடிவாகி நின்றானைத்தன் ஆகத்து உமை பாகம் கொண்டானைச் சங்கரனைநல் நாமத் திருவிருத்தம் நலம் சிறக்கப் பாடுதலும்.
சொற்பிரிப்பு
பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று எடுத்துமுன் ஆகி எப் பொருட்கும் முடிவு ஆகி நின்றானைத்,தன் ஆகத்து உமை பாகம் கொண்டானைச், சங்கரனை,நன்நாமத் திருவிருத்தம் நலம் சிறக்கப் பாடுதலும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
152
நீடு திருத் தூங்கானை மாடத்து நிலவு கின்றஆடக மேருச் சிலையான் அருளால் ஓர் சிவபூதம்மாடொருவர் அறியாமே வாகீசர் திருத் தோளில்சேடுயர் மூவிலைச் சூலம் சின விடையின் உடன் சாத்த.
சொற்பிரிப்பு
நீடு திருத் தூங்கானை மாடத்து நிலவுகின்றஆடக மேருச் சிலையான் அருளால் ஓர் சிவபூதம்மாடு ஒருவர் அறியாமே வாகீசர் திருத்தோளில்சேடு உயர் மூ இலைச் சூலம் சின விடையின் உடன் சாத்த.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
153
ஆங்கவர் தம் திருத் தோளில் ஆர்ந்த திரு இலச்சினையைத்தாம் கண்டு மனம் களித்துத் தம் பெருமான் அருள் நினைந்துதூங்கருவி கண் பொழியத் தொழுது விழுந்து ஆர்வத்தால்ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார்.
சொற்பிரிப்பு
ஆங்கு அவர்தம் திருத்தோளில் ஆர்ந்த திரு இலச்சினையைத்தாம்கண்டு, மனம் களித்துத், தம் பெருமான் அருள்நினைந்து,தூங்கு அருவி கண்பொழியத் தொழுது விழுந்து ஆர்வத்தால்ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
154
தூங்கானை மாடத்துச் சுடர்க் கொழுந்தின் அடிபரவிப்பாங்காகத் திருத் தொண்டு செய்து பயின்று அமரும் நாள்பூங்கானம் மணம் கமழும் பொருவில் திரு அரத் துறையும்தேங்காவின் முகில் உறங்கும் திருமுது குன்றமும் பணிந்து.
சொற்பிரிப்பு
தூங்கானை மாடத்துச் சுடர்க் கொழுந்தின் அடிபரவிப்பாங்காகத் திருத்தொண்டு செய்து பயின்று அமருநாள்பூங்கானம் மணம் கமழும் பொருவில் திரு அரத்துறையும்தேங்காவின் முகில் உறங்கும் திருமுதுகுன்றமும் பணிந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
155
வண்தமிழ் மென் மலர் மாலை புனைந்தருளி மருங்குள்ளதண் துறை நீர்ப் பதிகளிலும் தனி விடையார் மேவி இடம்கொண்டருளும் தானங்கள் கும்பிட்டுக் குண திசை மேல்புண்டரிகத் தடம் சூழ்ந்த நிவாக் கரையே போதுவார்.
சொற்பிரிப்பு
வண்தமிழ் மென்மலர் மாலை புனைந்தருளி மருங்கு உள்ளதண்துறை நீர்ப் பதிகளிலும் தனி விடையார் மேவி இடம்கொண்டருளும் தானங்கள் கும்பிட்டுக் குண திசை மேல்புண்டரிகத் தடம் சூழ்ந்த நிவாக்கரையே போதுவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
156
ஆனாத சீர்த் தில்லை அம்பலத்தே ஆடுகின்றவானாறு புடை பரக்கும் மலர்ச் சடையார் அடி வணங்கிஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்துதேனாரும் மலர்ச் சோலைத் திருப்புலியூர் மருங்கு அணைந்தார்.
சொற்பிரிப்பு
ஆனாத சீர்த் தில்லை அம்பலத்தே ஆடுகின்றவானாறு புடைபரக்கும் மலர்ச் சடையார் அடிவணங்கிஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொளநினைந்துதேனாரும் மலர்ச்சோலைத் திருப்புலியூர் மருங்கு அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
157
நாவுக் கரசரும் இருவர்க்கு அரியவர் நடம் ஆடிய திரு எல்லை பால்மேவித் தலம் உற மெய்யில் தொழுத பின் மேல் மேல் எழுதரும் விரைவோடும்காவில் களி மயில் மகிழ் உற்று எதிர் எதிர் ஆடக் கடி கமழ் கமலம் சூழ்வாவித் தடமலர் வதனம் பொலிவுறு மருதத் தண்பணை வழி வந்தார்.
சொற்பிரிப்பு
நாவுக்கரசரும் இருவருக்கு அரியவர் நடம் ஆடிய திரு எல்லைப்பால்மேவித் தலம் உற மெய்யில் தொழுத பின் மேன் மேல் எழுதரும் விழைவோடும்காவில் களிமயில் மகிழ்வுற்று எதிர் எதிர் ஆடக் கடிகமழ் கமலம் சூழ்வாவித் தடமலர் வதனம் பொலிவுறு மருதத் தண்பணை வழி வந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
158
முருகில் செறி இதழ் முளரிப் படுகரில் முது மேதிகள் புதுமலர் மேயும்அருகில் செறிவனம் என மிக்குயர் கழை அளவில் பெருகிட வளர் இக்குப்பெருகிப் புடை முதிர் தரளம் சொரிவன பெரியோர் அவர் திருவடிவைக் கண்டுஉருகிப் பரிவுறு புனல் கண் பொழிவன என முன்புள வள வயல் எங்கும்.
சொற்பிரிப்பு
முருகில் செறி இதழ் முளரிப் படுகரில் முது மேதிகள் புது மலர் மேயும்அருகில் செறிவனம் என மிக்கு உயர் கழை அளவில் பெருகிட வளர் இக்குப்பெருகிப் புடை முதிர் தரளம் சொரிவன பெரியோர் அவர் திருவடிவைக் கண்டுஉருகிப் பரிவுறு புனல் கண் பொழிவன என முன்பு உள வள வயல் எங்கும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
159
அறிவில் பெரியவர் அயல் நெல் பணை வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார்பிறவிப் பகை நெறி விடுவீர் இருவினை பெருகித் தொடர்பிணி உறுபாசம்பறிவுற்றிட அணையுமின் என்று இருபுடை பயில் சூழ் சினை மிசை குயில் கூவும்செறிவில் பலதரு நிலையில் பொலிவுறு திரு நந்தன வனம் எதிர் கண்டார்.
சொற்பிரிப்பு
அறிவில் பெரியவர் அயல் நெற்பணை வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார்;பிறவிப் பகை நெறி விடுவீர் இருவினை பெருகித் தொடர் பிணி உறு பாசம்பறி உற்றிட அணையுமின் என்று இருபுடை பயில் சூழ் சினைமிசை குயில் கூவும்செறிவில் பல தரு நிலையில் பொலிவுறு திரு நந்தனவனம் எதிர்கண்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
160
அவர் முன் பணிவொடு தொழுது அங்கு அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும்தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும் நிலைதலை நின்று உயர் தமிழ் இறையோராம்இவர் தம் திருவடிவது கண்டு அதிசயம் என வந்து எதிர் அரகர என்றேசிவ முன் பயில் மொழி பகர் கின்றன வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை.
சொற்பிரிப்பு
அவர் முன் பணிவொடு தொழுது அங்கு அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும்தவமுன் புரிதலில் வருதொண்டு எனு நிலை தலை நின்று உயர் தமிழ் இறையோராம்இவர் தம் திருவடிவு அது கண்டு அதிசயம் என வந்து எதிர் அர கர என்றேசிவமுன் பயில்மொழி பகர்கின்றன வளர் சிறை மென் கிளியொடு சிறுபூவை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
161
அஞ்சொல் திருமறை அவர் முன் பகர்தலும் அவரும் தொழுது முன் அளிகூரும்நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும் நிறை அன்பொடும் உரை தடுமாறச்செஞ்சொல் திருமறை மொழி அந்தணர் பயில் தில்லைத் திரு நகர் எல்லைப்பால் மஞ்சில்பொலி நெடு மதில் சூழ் குடதிசை மணி வாயில் புறம் வந்துற்றார்.
சொற்பிரிப்பு
அஞ்சொல் திருமறை அவர் முன் பகர்தலும் அவரும் தொழுது முன் அளிகூரும்நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும் நிறை அன்பொடும் உரை தடுமாறச்செஞ்சொல் திருமறை மொழி அந்தணர் பயில் தில்லைத் திருநகர் எல்லைப்பால்மஞ்சில் பொலி நெடு மதில் சூழ் குடதிசை மணிவாயில் புறம் வந்து உற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
162
அல்லல் பவம் அற அருளும் தவ முதல் அடியார் எதிர் கொள அவரோடும்மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின் வழிபுக்கு எதிர் தொழுது அணை உற்றார்கல்வித் துறை பல வரு மா மறை முதல் கரை கண்டு உடையவர் கழல் பேணும்செல்வக் குடி நிறை நல் வைப்பு இடை வளர் சிவமே நிலவிய திருவீதி.
சொற்பிரிப்பு
அல்லல் பவம்அற அருளும் தவ முதல் அடியார் எதிர்கொள அவரோடும்மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின் வழி புக்கு எதிர்தொழுது அணைவுற்றார்கல்வித் துறை பல வரு மாமறை முதல் கரைகண்டு உடையவர் கழல்பேணும்செல்வக் குடி நிறை நல்வைப்பு இடைவளர் சிவமே நிலவிய திருவீதி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
163
நவ மின் சுடர் மணி நெடு மாலையும் நறு மலர் மாலையும் நிறை திருவீதிப்புவனங்களின் முதல் இமையோர் தடமுடி பொருந்திய மணி போகட்டிப்பவனன் பணி செய வருணன் புனல் கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்றுஎவரும் தொழுது எழும் அடியார் திரு அலகு இடுவார் குளிர்புனல் விடுவார்கள்.
சொற்பிரிப்பு
நவமின் சுடர்மணி நெடுமாலையும் நறு மலர்மாலையும் நிறை திருவீதிப்புவனங்களின் முதல் இமையோர் தடமுடி பொருது உந்தியமணி போகட்டிப்பவனன் பணிசெய வருணன் புனல்கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்றுஎவரும் தொழுது எழும் அடியார் திருஅலகு இடுவார் குளிர்புனல் விடுவார்கள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
164
மேலம் பரதலம் நிறையும் கொடிகளில் விரிவெங்கதிர் நுழைவது அரிதாகும்கோலம் பெருகிய திருவீதியை முறை குலவும் பெருமையர் பணிவுற்றேஞாலம் திகழ் திரு மறையின் பெருகு ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும்ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம் உறமெய் கொடு தொழுதுள்புக்கார்.
சொற்பிரிப்பு
மேலம் பரதலம் நிறையும் கொடிகளில் விரி வெம் கதிர் நுழைவு அரிது ஆகும்கோலம் பெருகிய திருவீதியை முறை குலவும் பெருமையர் பணிவுற்றேஞாலம் திகழ் திரு மறையின் பெருகு ஒலி நலம்ஆர் முனிவர்கள் துதியோடும்ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம் உற மெய் கொடு தொழுது உள்புக்கார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
165
வளர் பொன் கனக மணி திரு மாளிகையினை வலம் வந்து அலமரு வரை நில்லாஅளவில் பெருகிய ஆர்வத்து இடை எழும் அன்பின் கடல் நிறை உடல் எங்கும்புளகச் செறி நிரை விரவத் திருமலி பொன்கோபுரம் அது புகுவார் முன்களனில் பொலிவிடம் உடையார் நடநவில் கனகப் பொது எதிர் கண்ணுற்றார்.
சொற்பிரிப்பு
வளர்பொன் கனமணி திருமாளிகையினை வலம் வந்து அலமரும் வரைநில்லாஅளவில் பெருகிய ஆர்வத்து இடை எழும் அன்பின் கடல்நிறை உடல் எங்கும்புளகச் செறி நிரை விரவத் திருமலி பொன்கோபுரம் அது புகுவார் முன்களனில் பொலிவிடம் உடையார் நடம் நவில் கனகப் பொது எதிர் கண்ணுற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
166
நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளி நிறை அம்பலம் நினைவுற நேரேகூடும் படி வரும் அன்பால் இன்புறு குணம் முன் பெறவரு நிலை கூடத்தேடும் பிரமனும் மாலும் தேவரும் முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றாஆடுங்கழல் புரி அமுதத் திரு நடம் ஆரா வகை தொழுது ஆர்கின்றார்.
சொற்பிரிப்பு
நீடும் திரு உடன் நிகழும் பெருகுஒளி நிறை அம்பலம் நினைவு உற நேரேகூடும் படி வரும் அன்பால் இன்புறு குணமுன் பெற வரு நிலை கூடத்தேடும் பிரமனும் மாலும் தேவரும் முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றாஆடும் கழல் புரி அமுதத் திருநடம் ஆரா வகை தொழுது ஆர்கின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
167
கையும் தலை மிசை புனை அஞ்சலியன கண்ணும் பொழி மழை ஒழியாதேபெய்யும் தகையன கரணங்களும் உடன் உருகும் பரிவினபேறுஎய்தும் மெய்யும் தரைமிசை விழுமுன் பெழுதரும் மின்தாழ் சடையொடு நின்றாடும்ஐயன் திருநடம் எதிர் கும்பிடும் அவர் ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால்.
சொற்பிரிப்பு
கையும் தலைமிசை புனை அஞ்சலியன; கண்ணும் பொழிமழை ஒழியாதேபெய்யும் தகையன; கரணங்களும் உடன் உருகும் பரிவினபேறு எய்தும் மெய்யும் தரைமிசை விழும் முன்பு எழுதரும் மின்தாழ் சடையொடு நின்று ஆடும்ஐயன் திருநடம் எதிர்கும்பிடும் அவர் ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
168
இத் தன்மையர் பல முறையும் தொழுது எழஎன்று எய்தினை என மன்றாடும்அத்தன் திரு அருள் பொழியும் கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம்மெய்த் தன்மை யினில் விருத்தத் திருமொழி பாடிப் பின்னையும் மேல் மேலும்சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திருநேரிசை மொழி பகர்கின்றார்.
சொற்பிரிப்பு
இத்தன்மையர் பல முறையும் தொழுது எழ என்று எய்தினை என மன்று ஆடும்அத்தன் திருஅருள் பொழியும் கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம்மெய்த்தன்மையினில் விருத்தத் திருமொழி பாடிப் பின்னையும் மேன்மேலும்சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திருநேரிசை மொழி பகர்கின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
169
பத்தனாய்ப் பாட மாட்டேன் என்று முன் எடுத்துப் பண்ணால்அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு என்றுஇத்திறம் போற்றி நின்றே இன் தமிழ் மாலை பாடிகைத் திருத் தொண்டு செய்யும் காதலில் பணிந்து போந்தார்.
சொற்பிரிப்பு
பத்தனாய்ப் பாட மாட்டேன் என்று முன் எடுத்துப் பண்ணால்அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு என்றுஇத்திறம் போற்றி நின்றே இன் தமிழ் மாலை பாடிக்கைத்திருத் தொண்டு செய்யும் காதலில் பணிந்து போந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
170
நீடிய மணியின் சோதி நிறை திரு முன்றின் மாடும்ஆடு உயர் கொடி சூழ் பொன் தேர் அணி திரு வீதி உள்ளும்கூடிய பணிகள் செய்து கும்பிடும் தொழிலர் ஆகிப்பாடிய புனித வாக்கின் பணிகளும் பயிலச் செய்வார்.
சொற்பிரிப்பு
நீடிய மணியின் சோதி நிறை திரு முன்றில் மாடும்ஆடுஉயர் கொடி சூழ் பொன் தேர் அணி திருவீதி உள்ளும்கூடிய பணிகள் செய்து கும்பிடும் தொழிலர் ஆகிப்பாடிய புனித வாக்கின் பணிகளும் பயிலச் செய்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
171
அருள் பெரு மகிழ்ச்சி பொங்க அன்னம் பாலிக்கும் என்னும்திருக் குறுந் தொகைகள் பாடித் திரு உழவாரங் கொண்டுபெருத்து எழு காதலோடும் பெரும் திருத் தொண்டு செய்துவிருப்புறு மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்டலாட.
சொற்பிரிப்பு
அருட்பெரு மகிழ்ச்சி பொங்க அன்னம் பாலிக்கும் என்னும்திருக்குறுந்தொகைகள் பாடித், திருஉழவாரம் கொண்டுபெருத்து எழு காதலோடும் பெருந் திருத் தொண்டு செய்து,விருப்புறு மேனி கண்ணீர் வெண்நீற்று வண்டல் ஆட.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
172
மேவிய பணிகள் செய்து விளங்குநாள் வேட்களத்துச்சேவுயர் கொடியார் தம்மைச் சென்று முன் வணங்கிப் பாடிக்காவியம் கண்டார் மன்னும் திருக்கழிப் பாலை தன்னில்நாவினுக்கு அரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ.
சொற்பிரிப்பு
மேவிய பணிகள் செய்து விளங்கு நாள் வேட்களத்துச்சே உயர் கொடியார் தம்மைச் சென்று முன் வணங்கிப் பாடிக்காவியங் கண்டர் மன்னும் திருக்கழிப்பாலை தன்னில்நாவினுக்கு அரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
173
சின விடை யேறுகைத் தோறும் மணவாள நம்பிகழல் சென்று தாழ்ந்துவன பவள வாய்திறந்து வானவர்க்கும் தான் அவனே என்கின்றாள் என்றுஅனைய திருப்பதிகம் உடன் அன்புறு வண்தமிழ் பாடி அங்கு வைகிநினைவரியார் தமைப் போற்றி நீடுதிருப்புலியூரை நினைந்து மீள்வார்.
சொற்பிரிப்பு
சின விடைஏறு உகைத்து ஏறும் மணவாள நம்பி கழல் சென்று தாழ்ந்துவனபவள வாய் திறந்து வானவர்க்கும் தானவனே என்கின்றாள் என்றுஅனைய திருப் பதிகம் உடன் அன்புறு வண் தமிழ்பாடி அங்கு வைகிநினைவு அரியார் தமைப்போற்றி நீடு திருப்புலியூரை நினைந்து மீள்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
174
மனைப் படப்பில் கடல் கொழுந்து வளைசொரியும் கழிப் பாலை மருங்கு நீங்கிநனைச்சினை மென் குளிஞாழல் பொழில் ஊடுவழி கொண்டு நண்ணும் போதில்நினைப்பவர் தம் மனம் கோயில் கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனாரைத்தினைத்தனையாம் பொழுது மறந்து உய்வேனோ எனப்பாடி தில்லை சார்ந்தார்.
சொற்பிரிப்பு
மனைப்படப்பில் கடல்கொழுந்து வளைசொரியும் கழிப்பாலை மருங்கு நீங்கிநனைச்சினைமென் குளிர் ஞாழல் பொழில் ஊடு வழிக்கொண்டு நண்ணும் போதில்நினைப்பவர் தம் மனம்கோயில் கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனாரைத்தினைத்தனையாம் பொழுதும் மறந்து உய்வனோ எனப்பாடித் தில்லை சார்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
175
அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை அவர்தம் சிந்தைபிரியாத பெரிய திருத் தாண்டகச் செந்தமிழ் பாடிப் பிறங்கு சோதிவிரியா நின்று எவ் உலகும் விளங்கிய பொன் அம்பலத்து மேவி ஆடல்புரியா நின்றவர் தம்மைப் பணிந்து தமிழால் பின்னும் போற்றல் செய்வார்.
சொற்பிரிப்பு
அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை அவர்தம் சிந்தைபிரியாத பெரிய திருத்தாண்டகச் செந்தமிழ் பாடிப் பிறங்கு சோதிவிரியாநின்று எவ்உலகும் விளங்கிய பொன் அம்பலத்து மேவி ஆடல்புரியாநின்றவர் தம்மைப் பணிந்து தமிழால் பின்னும் போற்றல் செய்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
176
செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் எனும் சிறந்த வாய்மைஅருஞ்சொல் வளத் தமிழ் மாலை அதிசயமாம் படி பாடி அன்பு சூழ்ந்தநெஞ்சு உருகப் பொழி புனல்வார் கண் இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும்தம் செயலின் ஒழியாத திருப்பணியும் மாறாது சாரும் நாளில்.
சொற்பிரிப்பு
செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் எனும் சிறந்த வாய்மைஅஞ்சொல் வளத் தமிழ்மாலை அதிசயமாம் படி பாடி அன்பு சூழ்ந்தநெஞ்சு உருகப் பொழி புனல்வார் கண்ணினையும் பரவிய சொல் நிறைந்த வாயும்தஞ்செயலின் ஒழியாத திருப்பணியும் மாறாது சாரும் நாளில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
177
கடையுகத்தில் ஆழியின் மேல் மிதந்த திருக்கழுமலத்தின் இருந்த செங்கண்விடை உகைத்தார் திரு அருளால் வெற்பரையன் பாவை திருமுலைப் பாலோடும்அடைய நிறை சிவம் பெருக வளர் ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்தஉடைய மறைப் பிள்ளையார் திருவார்த்தை அடியார்கள் உரைப்பக் கேட்டார்.
சொற்பிரிப்பு
கடை யுகத்தில் ஆழியின்மேல் மிதந்த திருக்கழுமலத்தின் இருந்த செங்கண்விடை உகைத்தார் திருஅருளால் வெற்பு அரையன் பாவை திருமுலைப் பாலோடும்அடைய நிறை சிவம் பெருக வளர் ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்தஉடையமறைப் பிள்ளையார் திருவார்த்தை அடியார்கள் உரைப்பக் கேட்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
178
ஆழிவிடம் உண்ட வரை அம்மை திருப்பால் அமுதம் உண்ட போதேஏழ் இசை வண் தமிழ் மாலை இவன் எம்மான் எனக் காட்டி இயம்பவல்லகாழி வரும் பெரும் தகை சீர் கேட்டலுமே அதிசயமாம் காதல் கூரவாழி அவர் மலர்க் கழல்கள் வணங்குவதற்கு மனத்து எழுந்த விருப்பு வாய்ப்ப.
சொற்பிரிப்பு
ஆழி விடம் உண்டவரை அம்மை திருப் பால் அமுதம் உண்ட போதேஏழ் இசை வண் தமிழ்மாலை இவன் எம்மான் எனக் காட்டி இயம்ப வல்லகாழிவரும் பெருந்தகை சீர் கேட்டலுமே அதிசயமாம் காதல் கூரவாழியவர் மலர்க்கழல்கள் வணங்குதற்கு மனத்து எழுந்த விருப்பு வாய்ப்ப.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
179
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி அருள் முன் பெற்றுப்பொய்ப் பிறவிப் பிணி ஓட்டும் திருவீதி புரண்டு வலம் கொண்டு போந்தேஎப் புவனங்களும் நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்திச்செப்பரிய பெருமையினார் திரு நாரையூர் பணிந்து பாடிச் செல்வார்.
சொற்பிரிப்பு
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி அருள்முன் பெற்றுப்பொய்ப்பிறவிப் பிணி ஓட்டும் திருவீதி புரண்டு வலம் கொண்டு போந்தேஎப்புவனங்களும் நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்திச்செப்பு அரிய பெருமையினார் திருநாரையூர் பணிந்து பாடிச் செல்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
180
தொண்டர் குழாம் புடை சூழத் தொழுத கரத்தொடு நீறு துதைந்த கோலம்கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து உருகும் கருணை புறம் பொழிந்து காட்டத்தெண் திரைவாய்க் கல் மிதப்பில் உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும்வண் தமிழால் எழுது மறை மொழிந்த பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார்.
சொற்பிரிப்பு
தொண்டர்குழாம் புடைசூழத் தொழுத கரத்தொடு நீறு துதைந்த கோலம்கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து உருகும் கருணை புறம் பொழிந்து காட்டத்தெண் திரைவாய்க் கல் மிதப்பில் உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும்வண்தமிழால் எழுது மறை மொழிந்த பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
181
நீண்ட வரை வில்லியார் வெஞ்சூலை மடுத்து அருளி நேரே முன்னாள்ஆண்ட அரசு எழுந்து அருளக் கேட்டருளி ஆளுடைய பிள்ளையாரும்காண்டகைய பெரு விருப்புக் கைம் மிக்க திருஉள்ளக் கருத்தினோடுமூண்ட அருள் மனத்து அன்பர் புடை சூழ எழுந்து அருளி முன்னே வந்தார்.
சொற்பிரிப்பு
நீண்ட வரை வில்லியார் வெஞ்சூலை மடுத்து அருளி நேரே முன் நாள்ஆண்டஅரசு எழுந்தருளக் கேட்டு அருளி ஆள் உடைய பிள்ளையாரும்காண்டகைய பெருவிருப்புக் கைம் மிக்க திருஉள்ளக் கருத்தினோடுமூண்ட அருள் மனத்து அன்பர் புடை சூழ எழுந்தருளி முன்னே வந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
182
தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு உருகத் தொண்டர் குழாத்திடையே சென்றுபழுதில் பெரும் காதலுடன் அடிபணியப் பணிந்தவர்தம் கரங்கள் பற்றிஎழுதரிய மலர்க்கையால் எடுத்து இறைஞ்சி விடையின் மேல் வருவார்தம்மைஅழுது அழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே என அவரும் அடியேன் என்றார்.
சொற்பிரிப்பு
தொழுது அணைவுற்று ஆண்ட அரசு அன்பு உருகத் தொண்டர் குழாத்து இடையே சென்றுபழுதில் பெரும் காதல் உடன் அடிபணியப் பணிந்தவர் தம் கரங்கள் பற்றிஎழுதரிய மலர்க்கையால் எடுத்து இறைஞ்சி விடையின் மேல் வருவார் தம்மைஅழுது அழைத்துக் கொண்டவர் தாம் அப்பரே என அவரும் அடியேன் என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
183
அம்பிகை செம் பொன் கிண்ணத்து அமுத ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்தசெம்பவள வாய்ப்பிள்ளை திருநாவுக்கு அரசர் எனச் சிறந்த சீர்த்திஎம் பெரு மக்களும் இயைந்த கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்திஉம்பர்களும் போற்றி இசைப்பச் சிவம் பெருகும் ஒலிநிறைத்தார் உலகம் எல்லாம்.
சொற்பிரிப்பு
அம்பிகை செம்பொன் கிண்ணத்து அமுத ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்தசெம்பவளவாய்ப் பிள்ளை திருநாவுக்கரசர் எனச் சிறந்த சீர்த்திஎம்பெருமக்களும் இயைந்த கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்திஉம்பர்களும் போற்றிசைப்பச் சிவம் பெருகும் ஒலி நிறைத்தார் உலகம் எல்லாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
184
பிள்ளையார் கழல் வணங்கப் பெற்றேன் என்று அரசு உவப்பப் பெருகு ஞானவள்ளலார் வாகீசர் தமை வணங்கப் பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்கஉள்ளம் நிறை காதலினால் ஒருவர் ஒருவரில் கலந்த உண்மை யோடும்வெள்ள நீர் திருத்தோணி வீற்று இருந்தார் கழல் வணங்கும் விருப்பின் மிக்கார் .
சொற்பிரிப்பு
பிள்ளையார் கழல் வணங்கப் பெற்றேன் என்று அரசு உவப்பப் பெருகு ஞானவள்ளலார் வாகீசர் தமை வணங்கப் பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்கஉள்ள நிறை காதலினால் ஒருவர் ஒருவரில் கலந்த உண்மையோடும்வெள்ள நீர்த் திருத்தோணி வீற்றிருந்தார் கழல் வணங்கும் விருப்பின் மிக்கார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
185
அருள் பெருகு தனிக் கடலும் உலகுக்கு எல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும்பொருள் சமய முதல் சைவ நெறி தான் பெற்ற புண்ணியக் கண் இரண்டு எனவும் புவனம் உய்யஇருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள் தன் திரு அருளும் எனவும் கூடித்தெருள் கலை ஞானக் கன்றும் அரசும் சென்று செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே.
சொற்பிரிப்பு
அருட்பெருகு தனிக்கடலும் உலகுக்கு எல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும், ஓங்கும்பொருட்சமய முதல் சைவ நெறி தான் பெற்ற புண்ணியக் கண் இரண்டு எனவும், புவனம் உய்யஇருட்கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள் தன் திருஅருளும் எனவும் கூடித்தெருட்கலை ஞானக்கன்றும் அரசும் சென்று செஞ்சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
186
பண் பயில் வண்டு அறை சோலை சூழும் காழிப் பரமர் திருக் கோபுரத்தைப் பணிந்துள்புக்குவிண் பணிய ஓங்கு பெரு விமானம் தன்னை வலம் கொண்டு தொழுது விழுந்த எல்லைச்சண்பை வரு பிள்ளையார் அப்பர் உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்னக்கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை கலை பயிலும் மொழி பொழியக் கசிந்து பாடி.
சொற்பிரிப்பு
பண்பயில் வண்டு அறை சோலை சூழும் காழிப் பரமர் திருக்கோபுரத்தைப் பணிந்து உள் புக்குவிண்பணிய ஓங்கு பெரு விமானம் தன்னை வலம்கொண்டு தொழுது விழுந்து எழுந்த எல்லைச்சண்பை வரு பிள்ளையார் அப்பர் உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்னக்கண்பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மைக் கலைபயிலும் மொழி பொழியக் கசிந்து பாடி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
187
பெரிய பெருமாட்டியுடன் தோணி மீது பேணி வீற்று இருந்து அருளும் பிரான் முன் நின்றுபரிவுறு செந்தமிழ் மாலை பத்தி யோடும் பார்கொண்டு மூடி எனும் பதிகம் போற்றிஅரிய வகை புறம் போந்து பிள்ளையார் தம் திருமடத்தில் எழுந்து அருளி அமுது செய்துமருவிய நண்புறு கேண்மை அற்றை நாள் போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில்.
சொற்பிரிப்பு
பெரிய பெருமாட்டி உடன் தோணி மீது பேணி வீற்று இருந்து அருளும் பிரான் முன் நின்றுபரிவுறு செந்தமிழ் மாலை பத்தியோடும் பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றிஅரிய வகை புறம் போந்து பிள்ளையார் தம் திருமடத்தில் எழுந்தருளி அமுது செய்துமருவிய நண்பு உறு கேண்மை அற்றை நாள்போல் வளர்ந்து ஓங்க உடன் பலநாள் வைகும் நாளில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
188
அத்தன்மையினில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி அளவு இலாதசித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில் திருநாவுக்கரசு திரு உள்ளம் தன்னில்மைத் தழையும் மணி மிடற்றர் பொன்னி நாட்டு மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கிப் போற்றமெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார்.
சொற்பிரிப்பு
அத்தகைமையினில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி அளவிலாதசித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில் திருநாவுக்கரசு திருஉள்ளம் தன்னில்மைத்தழையும் மணிமிடற்றார் பொன்னி நாட்டு மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கிப் போற்றமெய்த்து எழுந்த பெரும்காதல் பிள்ளையார்க்கு விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
189
ஆண்ட அரசு எழுந்து அருளக் கோலக் காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்புகொண்டுமீண்ட அருளினார் அவரும் விடை கொண்டு இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளானநீண்ட கருப் பறியலூர் புன்கூர் நீடூர் நீடு திருக்குறுக்கை திரு நின்றி யூரும்காண் தகைய நனிபள்ளி முதலா நண்ணிக் கண்ணுதலார் கழல் தொழுது கலந்து செல்வார்.
சொற்பிரிப்பு
ஆண்டஅரசு எழுந்தருளக் கோலக்காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்பு கொண்டுமீண்டுஅருளினார் அவரும் விடைகொண்டு இப்பால் வேதநாயகர் விரும்பும் பதிகள் ஆனநீண்ட கருப்பறியலூர் புன்கூர் நீடூர் நீடு திருக்குறுக்கை திருநின்றியூரும்காண்டகைய நனிபள்ளி முதலா நண்ணிக் கண்நுதலார் கழல் தொழுது கலந்து செல்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
190
மேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து விடை உயர்த்தார் திருச் செம் பொன் பள்ளிபாடிக்காவுயரும் மயிலாடுதுறை நீள் பொன்னிக்கரைத் துருத்தி வேள்விக்குடி எதிர் கொள் பாடிபாவுறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப் பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தேஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடிகாவில் அணைந்து பணிந்து ஆவடு தண் துறையைச் சார்ந்தார்.
சொற்பிரிப்பு
மேவு புனல் பொன்னி இருகரையும் சார்ந்து விடைஉயர்த்தார் திருச்செம்பொன் பள்ளி பாடிக்காவுயரும் மயிலாடு துறை நீள் பொன்னிக் கரைத் துருத்தி வேள்விகுடி எதிர்கொள் பாடிபாவுறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப் பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தேஆவுறும் அஞ்சு ஆடுவர் கோடிகாவில் அணைந்து பணிந்து ஆவடு தண் துறையைச் சார்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
191
ஆவடு தண் துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற அளவில் திருத் தாண்டகம் முன்அருளிச் செய்துமேவு திருக் குறுந்தொகை நேர் இசையும் சந்தவிருத்தங்கள் ஆனவையும் வேறு வேறுபாவலர் செந்தமிழ்த் தொடையால் பள்ளித் தாமம்பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும்பூ வலயத்தவர் பரவப் பல நாள் தங்கிப் புரிஉறு கைத்தொண்டு போற்றிச் செய்வார்.
சொற்பிரிப்பு
ஆவடு தண் துறையாரை அடைந்து உய்ந்தேன் என்று அளவில் திருத்தாண்டகம் முன் அருளிச் செய்துமேவு திருக்குறுந்தொகை நேரிசையும் சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறு வேறுபா அலர் செந்தமிழ்த் தொடையால் பள்ளித் தாமம் பலசாத்தி மிக்கு எழுந்த பரிவினோடும்பூவலயத்தவர் பரவப் பலநாள் தங்கிப் புரிவுறு கைத் திருத்தொண்டு போற்றிச் செய்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
192
எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர்ப் பொன்னி இடைமருதைச் சென்று எய்திஅன்பினோடுமறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண்தமிழ்ப் பாமாலை பல மகிழச் சாத்திப்பொறி அரவம் புனைந்தாரைத் திரு நாகேச்சுரத்துப் போற்றி அரும் தமிழ் மாலை புனைந்துபோந்துசெறி விரை நன்மலர்ச் சோலைப் பழையாறு எய்தித் திருச்சத்தி முற்றத்திற் சென்று சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
எறிபுனல் பொன் மணி சிதறும் திரைநீர்ப் பொன்னி இடைமருதைச் சென்று எய்தி அன்பினோடுமறிவிரவு கரத்தாரை வணங்கி வைகி வண்தமிழ்ப் பாமாலை பல மகிழச் சாத்திப்பொறிஅரவம் புனைந்தாரைத் திருநாகேச்சுரத்துப் போற்றி அரும் தமிழ்மாலை புனைந்து போந்துசெறிவிரை நன் மலர்ச் சோலைப் பழையாறு எய்தித் திருச்சத்தி முற்றத்தில் சென்று சேர்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
193
சென்று சேர்ந்து திருச் சத்தி முற்றத்து இருந்த சிவக் கொழுந்தைகுன்ற மகள் தன் மனக் காதல் குலவும் பூசை கொண்டு அருளும்என்றும் இனிய பெருமானை இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள்முன்றில் அணைந்து செய்து தமிழ் மொழி மாலைகளும் சாத்துவார்.
சொற்பிரிப்பு
சென்று சேர்ந்து திருச்சத்தி முற்றத்து இருந்த சிவக்கொழுந்தைக்குன்ற மகள் தன் மனக்காதல் குலவும் பூசை கொண்டு அருளும்என்றும் இனிய பெருமானை இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள்முன்றில் அணைந்து செய்து தமிழ் மொழி மாலைகளும் சாத்துவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
194
கோவாய் முடுகி என்று எடுத்துக் கூற்றம் வந்து குமைப்பதன் முன்பூவார் அடிகள் என் தலைமேல் பொறித்து வைப்பாய் எனப் புகன்றுநாவார் பதிகம் பாடுதலும் நாதன் தானும் நல்லூரில்வா வா என்றே அருள் செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர்.
சொற்பிரிப்பு
கோவாய் முடுகி என்று எடுத்துக் கூற்றம் வந்து குமைப்பதன் முன்பூவார் அடிகள் என் தலைமேல் பொறித்து வைப்பாய் எனப் புகன்றுநாவார் பதிகம் பாடுதலும் நாதன் தானும் நல்லூரில்வா வா என்றே அருள் செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
195
நன்மை பெருகஅருள் நெறியே வந்து அணைந்து நல்லூரின்மன்னு திருத் தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும் பொழுதில்உன்னுடைய நினைப்பதனை முடிகின்றோம் என்று அவர்தம்சென்னி மிசைப் பாத மலர் சூட்டினான் சிவபெருமான்.
சொற்பிரிப்பு
நன்மை பெருகு அருள்நெறியே வந்து அணைந்து நல்லூரின்மன்னு திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும் பொழுதில்உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் என்று அவர் தம்சென்னி மிசை பாத மலர் சூட்டினான் சிவபெருமான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
196
நனைந்தனைய திருவடி என்தலைமேல் வைத்தார் என்றுபுனைந்த திருத்தாண்டகத்தால் போற்றி இசைத்துப் புனிதர் அருள்நினைந்து உருகி விழுந்து எழுந்து நிறைந்து மலர்ந்து ஒழியாததனம் பெரிதும் பெற்று வந்த வறியோன் போல் மனம் தழைத்தார் .
சொற்பிரிப்பு
நனைந்து அனைய திருவடி என் தலைமேல் வைத்தார் என்றுபுனைந்த திருத்தாண்டகத்தால் போற்றி சைத்துப் புனிதர்அருள்நினைந்து உருகி விழுந்து எழுந்து நிறைந்து மலர்ந்து ஒழியாததனம் பெரிதும் பெற்று உவந்த வறியோன்போல் மனம்தழைத்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
197
நாவுக்கு மன்னர் திரு நல்லூரில் நம்பர் பால்மேவுற்ற திருப் பணிகள் மேவுற நாளும் செய்துபாவுற்ற தமிழ் மாலை பல பாடிப் பணிந்து ஏத்தித்தேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகி செல்லு நாள் .
சொற்பிரிப்பு
நாவுக்கு மன்னர் திரு நல்லூரில் நம்பர்பால்மேவுற்ற திருப்பணிகள் மேவுற நாளும் செய்துபாவுற்ற தமிழ்மாலை பல பாடிப் பணிந்து ஏத்தித்தேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகிச் செல்லுநாள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
198
கருகாவூர் முதலாகக் கண்ணுதலோன் அமர்ந்து அருளும்திருவாவூர் திருப் பாலைத்துறை பிறவும் சென்று இறைஞ்சிப்பெருகு ஆர்வத் திருத் தொண்டு செய்து பெருந்திரு நல்லூர்ஒரு காலும் பிரியாதே உள் உருகிப் பணிகின்றார்.
சொற்பிரிப்பு
கருகாவூர் முதலாகக் கண்நுதலோன் அமர்ந்து அருளும்திருஆவூர், திருப்பாலைத் துறை, பிறவும் சென்று இறைஞ்சிப்,பெருகு ஆர்வத் திருத்தொண்டு செய்து பெரும் திருநல்லூர்ஒரு காலும் பிரியாதே உள்உருகிப் பணிகின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
199
ஆளுடைய நாயகன் தன் அருள் பெற்று அங்கு அகன்று போய்வாளை பாய் புனல் பழனத் திருப் பழனம் மருங்கு அணைந்துகாளவிடம் உண்டு இருண்ட கண்டர் பணிக் கலன் பூண்டுநீள் இரவில் ஆடுவார் கழல் வணங்க நேர் பெற்றார்.
சொற்பிரிப்பு
ஆள் உடைய நாயகன் தன் அருள் பெற்று அங்கு அகன்று போய்வாளை பாய் புனல் பழனத் திருப்பழன மருங்கு அணைந்துகாளவிடம் உண்டு இருண்ட கண்டர் பணிக் கலன் பூண்டுநீள் இரவில் ஆடுவார் கழல் வணங்க நேர்பெற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
200
அப்பதியைச் சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும்ஒப்பரிய தானங்கள் உள் உருகிப் பணிந்தணைவார்மெய்ப்பொருள்தேர் நாவினுக்கு வேந்தர் தாம் மேவினார்செப்பருஞ்சீர் அப்பூதி அடிகள் ஊர் திங்களூர்.
சொற்பிரிப்பு
அப்பதியைச் சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும்ஒப்பு அரிய தானங்கள் உள் உருகிப் பணிந்து அணைவார்மெய்ப்பொருள் தேர் நாவினுக்கு வேந்தர் தாம் மேவினார்செப்பு அரும் சீர் அப்பூதி அடிகள் ஊர் திங்களூர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
201
அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார்தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர்ப்பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமைவந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர் தம் மனை நண்ண.
சொற்பிரிப்பு
அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார்தம் தனயர் உடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர்ப்பந்தர் பல ஆண்டஅரசு எனும் பெயரால் பண்ணினமைவந்து அணைந்த வாகீசர் கேட்ட வர் தம் மனை நண்ண.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
202
மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும்சுற்றமுடன் களி கூரத் தொழுது எழுந்து சூழ்ந்து மொழிக்கொற்றவரை அமுது செயக் குறை கொள்வார் இறைகொள்ளப்பெற்ற பெரும் தவத் தொண்டர் திரு உள்ளம் பெறப் பெற்றார்.
சொற்பிரிப்பு
மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும்சுற்றம் உடன் களிகூரத் தொழுது எழுந்து சூழ்ந்து மொழிக்கொற்றவரை அமுது செயக் குறைகொள்வார் இறை கொள்ளப்பெற்ற பெரும் தவத்தொண்டர் திருஉள்ளம் பெறப்பெற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
203
காண்டகைமை இன்றியுமுன் கலந்த பெருங் கேண்மையினார்பூண்ட பெரும் காதலுடன் போனகமும் கறி அமுதும்வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால்ஆண்ட அரசு அமுது செயத் திரு அமுதாம் படி அமைத்து.
சொற்பிரிப்பு
காண் தகைமை இன்றியும் முன் கலந்த பெரும் கேண்மையினார்பூண்ட பெரும் காதல் உடன் போனகமும் கறி அமுதும்வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால்ஆண்டஅரசு அமுது செயத் திருஅமுதாம் படிஅமைத்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
204
திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்றவர் தம்பெருநாமம் சாத்திய அப்பிள்ளைதனை அழைத்து அன்புதருஞானத் திருமறையோர் தண்டலையின் வண்கதலிக்குரு நாளக் குருத்து அரிந்து கொண்டு வர தனிவிட்டார்.
சொற்பிரிப்பு
திருநாவுக்கு அரசு அமுது செய்து அருள மற்றவர் தம்பெருநாமம் சாத்திய அப் பிள்ளைதனை அழைத்து, அன்புதரு ஞானத் திருமறையோர் தண்டலையின் வண் கதலிக்குருநாளக் குருத்து அரிந்து கொண்டு வரத் தனிவிட்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
205
ஆங்கு அவனும் விரைந்து எய்தி அம்மருங்கு தாழாதேபூங் கதலிக் குருத்து அரியப் புகும் அளவில் ஒரு நாகம்தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருளஓங்கு கதலிக் குருத்துக் கொண்டு ஒல்லை வந்து அணைந்தான்.
சொற்பிரிப்பு
ஆங்கு அவனும் விரைந்து எய்தி அம்மருங்கு தாழாதேபூங்கதலிக் குருத்து அரியப் புகும் அளவில் ஒருநாகம்தீங்கு இழைக்க அது பேணான் திருஅமுது செய்து அருளஓங்கு கதலிக் குருத்துக் கொண்டு ஒல்லை வந்து அணைந்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
206
தீய விடம் தலைக் கொள்ளத் தெருமந்து செழும் குருத்தைத்தாய கரத்தினில் நீட்டித் தளர்ந்து தனைத் தழல் நாகம்மேயபடி உரை செய்யான் விழக் கண்டு கெட்டு ஒழிந்தோம்தூயவர் இங்கு அமுது செயத் தொடங்கார் என்று அது ஒளித்தார்.
சொற்பிரிப்பு
தீய விடம் தலைக்கொள்ளத் தெருமந்து செழும் குருத்தைத்தாயர் கரத்தினில் நீட்டித் தளர்ந்து தனைத் தழல்நாகம்மேயபடி உரைசெய்யான் விழக் கண்டு கெட்டு ஒழிந்தோம்;தூயவர் இங்கு அமுது செயத் தொடங்கார் என்று அது ஒளித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
207
தம் புதல்வன் சவம் மறைத்துத் தடுமாற்றம் இலராகிஎம் பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்சஉம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம்நம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார்.
சொற்பிரிப்பு
தம் புதல்வன் சவம் மறைத்துத் தடுமாற்றம் இலர் ஆகிஎம் பெருமான்! அமுதுசெய வேண்டும் என வந்து இறைஞ்சஉம்பர்பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம்நம்பர் திரு அருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
208
அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த கருணையராய்க்கொன்றை நறும் சடையார் தம் கோயிலின் முன் கொணர்வித்தேஒன்று கொலாம் எனப் பதிகம் எடுத்து உடையான் சீர் பாடப்பின்றைவிடம் போய் நீங்கிப் பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான்.
சொற்பிரிப்பு
அன்று அவர்கள் மறைத்ததனுக்கு அளவு இறந்த கருணையராய்க்கொன்றை நறும் சடையார் தம் கோயிலின் முன் கொணர்வித்தேஒன்று கொலாம் எனப் பதிகம் எடுத்து உடையான் சீர்பாடப்பின்றை விடம் போய் நீங்கிப் பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
209
அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாதுஇருந்ததற்குத் தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்கவருந்தும் அவர் மனைப் புகுந்து வாகீசத் திருமுனிவர்விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள்.
சொற்பிரிப்பு
அருந்தனயன் உயிர்பெற்ற அது கண்டும் அமுதுசெயாதுஇருந்ததற்குத் தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்கவருந்தும் அவர் மனைப் புகுந்து வாகீசத் திருமுனிவர்விருந்து அமுது செய்து அருளி விருப்பின் உடன் மேவும்நாள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
210
திங்களூர் தனில் நின்றும் திருமறையோர் பின் செல்லப்பைங்கண் விடைத் தனிப்பாகர் திருப்பழனப் பதி புகுந்துதங்கு பெரும் காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்துபொங்கிய அன்புற வணங்கி முன் நின்று போற்றி இசைப்பார்.
சொற்பிரிப்பு
திங்களூர் தனில் நின்றும் திருமறையோர் பின்செல்லப்பைங்கண் விடைத் தனிப்பாகர் திருப்பழனப் பதி புகுந்துதங்குபெரும் காதலொடும் தம்பெருமான் கழல் சார்ந்துபொங்கிய அன்பு உற வணங்கி முன் நின்று போற்றிசைப்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
211
புடை மாலை மதிக்கண்ணிப் புரிசடையார் பொன் கழல் கீழ்அடை மாலைச் சீலம் உடை அப்பூதி அடிகள் தமைநடைமாணச் சிறப்பித்து நன்மை புரி தீந்தமிழின்தொடைமாலைத் திருப்பதிகச் சொன்மாலை பாடினார்.
சொற்பிரிப்பு
புடைமாலை மதிக்கண்ணிப் புரிசடையார் பொற்கழற் கீழ்அடைமாலைச் சீலம் உடை அப்பூதி அடிகள்தமைநடைமாணச் சிறப்பித்து நன்மை புரி தீந்தமிழின்தொடைமாலைத் திருப்பதிகச் சொன்மாலை பாடினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
212
எழும் பணியும் இளம்பிறையும் அணிந்தவரை எம் மருங்கும்தொழும்பணி மேற் கொண்டு அருளி திருச்சோற்றுத் துறை முதலாத்தழும்புறு கேண்மையில் நண்ணித் தானங்கள் பல பாடிச்செம்பழனத்து இறை கோயில் திருத் தொண்டு செய்து இருந்தார்.
சொற்பிரிப்பு
எழும்பணியும் இளம்பிறையும் அணிந்தவரை எம்மருங்கும்தொழும்பணி மேற்கொண்டு அருளித் திருச்சோற்றுத் துறை முதலாத்தழும்புறு கேண்மையில் நண்ணித் தானங்கள் பலபாடிச்செழும் பழனத்து இறைகோயில் திருத் தொண்டு செய்து இருந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
213
சால நாள் அங்கு அமர்ந்து தம் தலைமேல் தாள் வைத்தஆலமார் மணி மிடற்றார் அணி மலர்ச் சேவடி நினைந்துசேலுலாம் புனல் பொன்னித் தென்கரை ஏறிச் சென்றுகோல நீள் மணி மாடத் திரு நல்லூர் குறுகினார்.
சொற்பிரிப்பு
சாலநாள் அங்கு அமர்ந்து தம்தலை மேல் தாள் வைத்தஆலம் ஆர் மணிமிடற்றார் அணி மலர்ச் சேவடி நினைந்துசேல்உலாம் புனல் பொன்னித் தென்கரை ஏறிச்சென்றுகோலநீள் மணிமாடத் திருநல்லூர் குறுகினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
214
அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராதுபொங்கிய அன்பொடு திளைத்துப் போற்றி இசைத்துப் பணி செயும் நாள்தங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடுசெங்கண் மால் அறிவரியார் திருவாரூர் தொழ நினைந்தார்.
சொற்பிரிப்பு
அங்கு அணைந்து தம்பெருமான் அடிவணங்கி, ஆராதுபொங்கிய அன்பொடு திளைத்துப், போற்றி சைத்துப், பணிசெயும் நாள்தங்கு பெரும் காதலினால் தாமரைமேல் விரிஞ்சனொடுசெங்கண்மால் அறிவு அரியார் திருஆரூர் தொழ நினைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
215
நல்லூரில் நம்பர் அருள் பெற்றுப் போய்ப் பழையாறைபல்லூர் வெண்டலைக் கரத்தார் பயிலும் இடம் பல பணிந்துசொல்லூர் வண்தமிழ் பாடி வலஞ் சுழியைத் தொழுது ஏத்திஅல்லூர் வெண் பிறை அணிந்தார் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி.
சொற்பிரிப்பு
நல்லூரில் நம்பர் அருள் பெற்றுப் போய்ப் பழையாறைபல்ஊர் வெண் தலைக் கரத்தார் பயிலும் இடம் பல பணிந்துசொல்ஊர் வண் தமிழ் பாடி வலஞ் சுழியைத் தொழுது ஏத்திஅல்ஊர் வெண் பிறை அணிந்தார் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
216
நாலூர் தென் திருச்சேறை குடவாயில் நறையூர் சேர்பாலூரும் இன் மொழியாள் பாகனார் கழல் பரவிமேலூர்தி விடைக் கொடியார் மேவும் இடம் பல பாடிக்சேலூர் தண் பணை சூழ்ந்த தென் திரு வாஞ்சியம் அணைந்தார்.
சொற்பிரிப்பு
நாலூர் தென் திருச்சேறை குடவாயில் நறையூர், சேர்பாலூரும் இன்மொழியாள் பாகனார் கழல் பரவிமேல் ஊர்தி விடைக் கொடியார் மேவும் இடம் பல பாடிச்சேல்ஊர் தண் பணை சூழ்ந்த தென் திருவாஞ்சியம் அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
217
பெருவாச மலர்ச் சோலைப் பெரு வேளூர் பணிந்து ஏத்திமுருகாரும் மலர்க் கொன்றை முதல்வனார் பதி பிறவும்திருவாரும் விளமருடன் சென்று இறைஞ்சி வாகீசர்மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்து அடைந்தார்.
சொற்பிரிப்பு
பெருவாச மலர்ச்சோலைப் பெரு வேளூர் பணிந்து ஏத்திமுருகு ஆரும் மலர்க்கொன்றை முதல்வனார் பதி பிறவும்திருவாரும் விளமர் உடன் சென்று இறைஞ்சி வாகீசர்மருவார் ஊர் எரித்தவர் தம் திருஆரூர் வந்து அடைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
218
ஆண்ட அரசு எழுந்தருள ஆரூரில் அன்பர்கள் தாம்நீண்ட சடை முடியார் பால் நிறைந்த அருள் பெற்றுடையார்காண் தகு மாளிகை மாடம் கவின் சிறந்து ஓங்கிட எங்கும்சேண் திகழ் வீதிகள் பொலியத் திரு மலி மங்கலம் செய்தார்.
சொற்பிரிப்பு
ஆண்டஅரசு எழுந்து அருள ஆரூரில் அன்பர்கள் தாம்நீண்ட சடை முடியார்பால் நிறைந்த அருள் பெற்று உடையார்காண்தகு மாளிகை மாடம் கவின் சிறந்து ஓங்கிட எங்கும்சேண்திகழ் வீதிகள் பொலியத் திருமலி மங்கலம் செய்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
219
வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில்கல்லே மிதப்பாகப் போந்தவர் வந்தார் எனும் களிப்பால்எல்லையில் தொண்டர் எயில்புறம் சென்று எதிர் கொண்டபோதுசொல்லின் அரசர் வணங்கித் தொழுது உரைசெய்து அணைவார்.
சொற்பிரிப்பு
வல்அமண் குண்டர் தம் மாயை கடந்து மறிகடலில்கல்லே மிதப்பாகப் போந்தவர் வந்தார் எனும் களிப்பால்எல்லையில் தொண்டர் எயில் புறம் சென்று எதிர் கொண்டபோதுசொல்லின் அரசர் வணங்கித் தொழுது உரை செய்து அணைவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
220
பற்று ஒன்று இலாவரும் பாதகர் ஆகும் அமணர் தம் பால்உற்ற பிணி ஒழிந்து உய்யப் போந்தேன் பெறல் ஆவது ஒன்றேபுற்றிடம் கொண்டான் தன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் என்றுஉற்ற உணர்வொடும் ஆரூர்த் திருவீதி உள் அணைந்தார்.
சொற்பிரிப்பு
பற்று ஒன்று இலாவரும் பாதகர் ஆகும் அமணர் தம்பால்உற்ற பிணி ஒழிந்து உய்யப் போந்தேன் பெறல் ஆவது ஒன்றே?புற்றிடம் கொண்டான் தன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம்” என்றுஉற்ற உணர்வொடும் ஆரூர்த் திருவீதி உள் அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
221
சூழும் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில் நண்ணிவாழி திரு நெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சிஆழி வரைத் திரு மாளிகை வாயில் அவை புகுந்துநீள் சுடர் மா மணிப் புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார்.
சொற்பிரிப்பு
சூழும் திருத்தொண்டர் தம் உடன் தோரண வாயில் நண்ணிவாழி திருநெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சிஆழி வரைத் திரு மாளிகை வாயில் அவை புகுந்துநீள்சுடர் மாமணிப் புற்று உகந்தாரை நேர் கண்டுகொண்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
222
கண்டு தொழுது விழுந்து கர சரண் ஆதி அங்கம்கொண்ட புளகங்களாக எழுந்து அன்பு கூரக் கண்கள்தண்துளி மாரி பொழியத் திரு மூலட்டானர் தம்மைப்புண்டரிகக் கழல் போற்றித் திருத்தாண்டகம் புனைந்து.
சொற்பிரிப்பு
கண்டு தொழுது விழுந்து கர சரணாதி அங்கம்கொண்ட புளகங்கள் ஆக எழுந்து அன்பு கூரக் கண்கள்தண் துளி மாரி பொழியத் திருமூலட்டானர் தம்மைப்புண்டரிகக் கழல் போற்றித் திருத்தாண்டகம் புனைந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
223
காண்டலே கருத்தாய் நினைந்து என்னும் கலைப் பதிகம்தூண்டா விளக்கு அன்ன சோதி முன் நின்று துதித்து உருகிஈண்டு மணிக் கோயில் சூழ வலம் செய்து இறைஞ்சி அன்புபூண்ட மனத்தொடு நீள் திருவாயில் புறத்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
காண்டலே கருத்தாய் நினைந்து என்னும் கலைப்பதிகம்தூண்டா விளக்கு அன்ன சோதி முன் நின்று துதித்து உருகிஈண்டு மணிக்கோயில் சூழ வலம் செய்து இறைஞ்சி அன்புபூண்ட மனத்தொடு நீள் திருவாயில் புறத்து அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
224
செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின்முன் தேவ ஆசிரியன் சார்ந்துகொய்யுமா மலர்ச் சோலைக் குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரைக்கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்கக் காய்கவர்ந்த கள்வனேன் என்றுஎய்து அரிய கையறவால் திருப்பதிகம் அருள் செய்து அங்கு இருந்தார் அன்றே.
சொற்பிரிப்பு
செய்ய மாமணி ஒளிசூழ் திருமுன்றில்முன் தேவ சிரியன் சார்ந்துகொய்உலாம் மலர்ச்சோலைக் குயில்கூவ மயில்ஆலும் ஆருராரைக்கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேன் என்றுஎய்தரிய கையறவால் திருப்பதிகம் அருள்செய்து அங்கு இருந்தார் அன்றே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
225
மார் பாரப் பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும் மதுரவாக்கில்சேர் வாகும் திருவாயில் தீம் தமிழின் மாலைகளும் செம் பொன் தாளேசார்வான திருமனமும் உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப்பார் வாழத் திரு வீதிப் பணி செய்து பணிந்து ஏத்திப் பரவிச் செல்வார்.
சொற்பிரிப்பு
மார்பாரப் பொழி கண்ணீர் மழைவாரும் திருவடிவும் மதுர வாக்கில்சேர்வு ஆகும் திருவாயில் தீந்தமிழின் மாலைகளும் செம்பொன் தாளேசார்வுஆன திருமனமும், உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப்பார்வாழத் திருவீதிப் பணி செய்து பணிந்து ஏத்திப் பரவிச் செல்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
226
நீடு புகழ்த் திருவாரூர் நிலவு மணிப்புற்றிடம் கொள் நிருத்தர் தம்மைக்கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து கும்பிட்டுக் கோதில் வாய்மைப்பாடு இளம் பூதத்தினான் எனும் பதிகம் முதலான பலவும் பாடிநாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் கரைந்து உருகி நயந்து செல்வார்.
சொற்பிரிப்பு
நீடு புகழ்த் திருஆரூர் நிலவு மணிப் புற்றிடம் கொள் நிருத்தர் தம்மைக்கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து கும்பிட்டுக் கோதில் வாய்மைப்பாடிளம் பூதத்தினான் எனும் பதிகம் முதலான பலவும் பாடிநாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் கரைந்து உருகி நயந்து செல்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
227
நான் மறைநூல் பெருமை நமி நந்தி அடிகள் திருத்தொண்டின் நன்மைபான்மை நிலையால் அவரைப் பரமர் திருவிருத்தத்துள் வைத்துப் பாடிதேன் மருவும் கொன்றையார் திருவாரூர் அரன் நெறியில் திகழும் தன்மைஆன திறமும் போற்றி அணி வீதிப் பணி செய்து அங்கு அமரும் நாளில்.
சொற்பிரிப்பு
நான்மறை நூல் பெருவாய்மை நமிநந்தி அடிகள் திருத் தொண்டின் நன்மைப்பான்மை நிலையால் அவரைப் பரமர் திருவிருத்தத்துள் வைத்துப் பாடித்தேன்மருவும் கொன்றையார் திருஆரூர் அரனெறியில் திகழும் தன்மைஆன திறமும் போற்றி அணி வீதிப் பணிசெய்து அங்கு அமரும் நாளில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
228
நீர் ஆரும் சடை முடியார் நிலவு திருவலி வலமும் நினைந்து சென்றுவார் ஆரும் முலை மங்கை உமை பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடிக்கார் ஆரும் கறைக் கண்டர் கீழ் வேளுர் கன்றாப் பூர் கலந்து பாடிஆராத காதலினால் திருவாரூர் தனில் மீண்டும் அணைந்தார் அன்றே.
சொற்பிரிப்பு
நீர் ஆரும் சடைமுடியார் நிலவு திரு வலிவலமும் நினைந்து சென்றுவார் ஆரும் முலைமங்கை உமை பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடிக்கார் ஆரும் கறைக்கண்டர் கீழ் வேளூர், கன்றாப்பூர் கலந்து பாடிஆராத காதலினால் திருஆரூர் தனில் மீண்டும் அணைந்தார் அன்றே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
229
மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்கப் பெருமான் பவனி தன்னில்தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்களுடன் சேவித்துமூவுலகும் களி கூர வரும் பெருமை முறைமை யெலாம் கண்டு போற்றிநாவினுக்குத் தனி அரசர் நயக்குநாள் நம்பர்திரு அருளினாலே.
சொற்பிரிப்பு
மேவு திரு ஆதிரைநாள் வீதிவிடங்கப் பெருமாள் பவனி தன்னில்தேவர் உடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்கள் உடன் சேவித்துமூ உலகும் களிகூர வரும் பெருமை முறைமை எலாம் கண்டு போற்றிநாவினுக்குத் தனி அரசர் நயக்குநாள் நம்பர் திரு அருளி னாலே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
230
திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவ பெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும்விருப்புடைய உள்ளத்து மேவி எழும் காதல் புரி வேட்கை கூரஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்துப்பொருப்பரையன் மடப் பாவை இடப்பாகர்பதி பிறவும் பணிந்து போந்தார்.
சொற்பிரிப்பு
திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவ பெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும்விருப்பு உடைய உள்ளத்து மேவி எழும் காதல் புரி வேட்கை கூரஒருப்படுவார் திருஆரூர் ஒருவாறு தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்துப்பொருப்பு அரையன் மடப்பாவை இடப்பாகர் பதி பிறவும் பணிந்து போந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
231
அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் திருப்புகலி அதன் கண் நின்றும்பன்னாகப் பூண் அணிவார் பயின்ற திருப்பதி பலவும் பணிந்து செல்வார்புன்னாக மணம் கமழும் பூம் புகலூர் வந்து இறைஞ்சிப் பொருவு இல் சீர்த்திமின் ஆரும் புரி முந்நூல் முருகனார் திருமடத்தில் மேவும் காலை.
சொற்பிரிப்பு
அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் திருப்புகலி அதன்கண் நின்றும்பன்னாகப் பூண் அணிவார் பயின்ற திருப்பதி பலவும் பணிந்து செல்வார்புன்னாக மணம் கமழும் பூம்புகலூர் வந்து இறைஞ்சிப் பொருவில் சீர்த்திமின்ஆரும் புரி முந்நூல் முருகனார் திருமடத்தில் மேவும் காலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
232
ஆண்ட அரசு எழுந்து அருளி அணி ஆரூர் மணிப் புற்றில் அமர்ந்து வாழும்நீண்ட சுடர் மா மணியைக் கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கிமீண்டு அருளினார் என்று கேட்டு அருளி எதிர்கொள்ளும் விருப்பி னோடும்ஈண்டு பெரும் தொண்டர் குழாம் புடை சூழ எழுந்து அருளி எதிரே சென்றார்.
சொற்பிரிப்பு
ஆண்டஅரசு எழுந்தருளி அணி ஆரூர் மணிப்புற்றில் அமர்ந்து வாழும்நீண்டசுடர் மாமணியைக் கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கிமீண்டருளினார் என்று கேட்ட ருளி எதிர்கொள்ளும் விருப்பினோடும்ஈண்டு பெரும் தொண்டர் குழாம் புடை சூழ எழுந்து அருளி எதிரே சென்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
233
கரண்டமலி தடம் பொய்கைக் காழியர் கோன் எதிர் அணையும் காதல் கேட்டுவரன்று மணிப் புனற்புகலூர் நோக்கி வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார்திரண்டு வரும் திரு நீற்றுத் தொண்டர் குழாம் இருதிறமும் சேர்ந்த போதில்இரண்டு நிலவின் கடல்கள் ஒன்றாகி அணைந்த போல் இசைந்த அன்றே.
சொற்பிரிப்பு
கரண்டம் மலி தடம் பொய்கைக் காழியர்கோன் எதிர் அணையும் காதல் கேட்டுவரன்று மணிப் புனல் புகலூர் நோக்கி வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார்திரண்டு வரும் திருநீற்றுத் தொண்டர் குழாம் இருதிறமும் சேர்ந்த போதில்இரண்டு நிலவின் கடல்கள் ஒன்று ஆகி அணைந்தனபோல் இசைந்த அன்றே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
234
திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்சச் சிரபுரத்துத் தெய்வ வாய்மைபெரு ஞான சம்பந்தப் பிள்ளையார் எதிர்வணங்கி அப்பரே நீர்வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூறஅரு நாமத்து அஞ்செழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளிச் செய்தார்.
சொற்பிரிப்பு
திருநாவுக்கு அரசர் எதிர் சென்று இறைஞ்சச் சிரபுரத்துத் தெய்வ வாய்மைப்பெருஞான சம்பந்தப் பிள்ளையார் எதிர் வணங்கி அப்பரே! நீர்வரு நாளில் திருஆரூர் நிகழ் பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூறஅருநாமத்து அஞ்செழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளிச் செய்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
235
சித்தம் நிலாவும் தென் திரு ஆரூர் நகராளும்மைத் தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம்இத் தகைமைத்து என்று என் மொழிகேன்? என்று அருள் செய்தார்முத்து விதான மணிப் பொன் கவரி மொழி மாலை.
சொற்பிரிப்பு
சித்தம் நிலாவும் தென் திரு ஆரூர் நகர் ஆளும்மைத்தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம்இத்தகைமைத்து என்று என் மொழிகேன்? என்று அருள்செய்தார்முத்து விதான மணிப்பொன் கவரி மொழிமாலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
236
அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணி சண்பைமைம் மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும்கொய்ம் மலர் வாவித் தென் திரு ஆரூர் கும்பிட்டேஉம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார்.
சொற்பிரிப்பு
அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணி சண்பைமைம்மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும்,கொய்ம்மலர் வாவித் தென் திரு ஆரூர் கும்பிட்டேஉம் உடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரைசெய்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
237
மா மதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்கச் செந்தாமரை ஓடைச் சண்பையர் நாதன் தான் ஏகநாமரு சொல்லின் நாதரும் ஆர்வத்தொடு புக்கார்பூ மலர் வாசம் தண் பணை சூழும் புகலூரில்.
சொற்பிரிப்பு
மாமதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்கச் செந்தாமரை ஓடைச் சண்பையர் நாதன் தான் ஏகநாமரு சொல்லின் நாதரும் ஆர்வத்தொடு புக்கார்பூமலர் வாசத் தண் பணை சூழும் புகலூரில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
238
அத் திரு மூதூர் மேவிய நாவுக் கரசுந்தம்சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளிவெள்ளம்மொய்த்து இழி தாரைக் கண் பொழி நீர் மெய்ம் முழுதாரப்பைத் தலை நாகப் பூண் அணிவாரைப் பணி உற்றார்.
சொற்பிரிப்பு
அத்திரு மூதூர் மேவிய நாவுக்கு அரசும் தம்சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளிவெள்ளம்மொய்த்து இழி தாரைக் கண் பொழி நீர் மெய்ம் முழுது ஆரப்பைத்தலை நாகப் பூண் அணிவாரைப் பணிவுற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
239
தேவர் பிரானைத் தென் புகலூர் மன்னிய தேனைப்பா இயல் மாலைச் செந்தமிழ் பாடிப் பரிவோடுமேவிய காலம் தோறும் விருப்பில் கும்பிட்டேஓவுதல் ஓவு திருப்பணி செய்து அங்கு உறைகின்றார்.
சொற்பிரிப்பு
தேவர் பிரானைத் தென் புகலூர் மன்னிய தேனைப்பாஇயல் மாலைச் செந்தமிழ் பாடிப் பரிவோடும்மேவிய காலம் தோறும் விருப்பில் கும்பிட்டேஓவுதல் ஓவும் திருப்பணி செய்து அங்கு உறைகின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
240
சீர் தரு செங்காட்டங் குடி நீடும் திருநள்ளாறுஆர் தரு சோலை சூழ்தரு சாந்தை அயவந்திவார் திகழ் மென் முலையான் ஒரு பாகன் திருமருகல்ஏர் தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார்.
சொற்பிரிப்பு
சீர்தரு செங்காட்டங் குடி நீடும் திருநள்ளாறுஆர்தரு சோலை சூழ்தரு சாந்தை அயவந்திவார்திகழ் மென்முலையாள் ஒரு பாகன் திருமருகல்ஏர்தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
241
அப்படிச் சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும்துப்பு உறழ் வேணிக் கண் நுதலாரைத் தொழுது இப்பால்மெய்ப் பொருள் ஞானம் பெற்றவர் வேணு புரத்து எங்கள்பொன் புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில்.
சொற்பிரிப்பு
அப்படிச் சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும்துப்பு உறழ் வேணிக் கண் நுதலாரைத் தொழுது இப்பால்மெய்ப்பொருள் ஞானம் பெற்றவர் வேணுபுரத்து எங்கள்பொற்புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
242
பிள்ளையார் எழுந்து அருளப் பெரு விருப்பால் வாகீசர்உள்ளம் மகிழ்ந்து எதிர் கொண்டு அங்கு உடன்உறையும் நாளின்கண்வள்ளலார் சிறுத் தொண்டர் மற்று அவர் பால் எழுந்து அருளஎள் அரும் சீர் நீல நக்கர் தாமும் எழுந்து அருளினார்.
சொற்பிரிப்பு
பிள்ளையார் எழுந்தருளப் பெருவிருப்பால் வாகீசர்உள்ளம் மகிழ்ந்து எதிர்கொண்டு அங்கு உடன் உறையும் நாளின்கண்வள்ளலார் சிறுத்தொண்டர் மற்றவர் பால் எழுந்தருளஎள் அரும் சீர் நீல நக்கர் தாமும் எழுந்து அருளினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
243
ஆங்கு அணையும் அவர்களுடன் அப்பதியில் அந்தணராம்ஓங்கு புகழ் முருகனார் திரு மடத்தில் உடனாகப்பாங்கில் வரும் சீர் அடியார் பலரும் உடன் பயில் கேண்மைநீங்கரிய திருத் தொண்டின் நிலை உணர்ந்து நிகழ்கின்றார்.
சொற்பிரிப்பு
ஆங்குஅணையும் அவர்களுடன் அப்பதியில் அந்தணராம்ஓங்கு புகழ் முருகனார் திருமடத்தில் உடன் ஆகப்பாங்கில் வரும் சீர்அடியார் பலரும் உடன் பயில் கேண்மைநீங்கரிய திருத்தொண்டின் நிலை உணர்ந்து நிகழ்கின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
244
திருப் பதிகச் செழுந்தமிழின் திறம் போற்றி மகிழ்வுற்றுப்பொருப்பு அரையன் மடப்பாவை இடப் பாகர் பொன் தாளில்விருப்பு உடைய திருத் தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து அங்குஒருப்படும் சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன் பெற்றார்.
சொற்பிரிப்பு
திருப்பதிகச் செழுந்தமிழின் திறம்போற்றி மகிழ்வுற்றுப்பொருப்பு அரையன் மடப்பாவை இடப் பாகர் பொற்றாளில்விருப்புடைய திருத்தொண்டர் பெருமையினை விரித்துரைத்து அங்குஒருப்படு சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன்பெற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
245
அந் நாளில் தமக்கு ஏற்ற திருத் தொண்டின் நெறி ஆற்றமின்னார் செஞ்சடை அண்ணல் மேவும் பதி எனைப் பலவும்முன்னாகச் சென்று ஏத்தி முதல்வன் தாள் தொழுவதற்குப்பொன்னாரும் மணி மாடப் பூம் புகலூர் தொழுது அகன்றார்.
சொற்பிரிப்பு
அந்நாளில் தமக்கு ஏற்ற திருத்தொண்டின் நெறி ஆற்றமின்ஆர் செஞ்சடை அண்ணல் மேவு பதி எனைப் பலவும்முன்ஆகச் சென்று ஏத்தி முதல்வன் தாள் தொழுவதற்குப்பொன்ஆரும் மணிமாடப் பூம் புகலூர் தொழுது அகன்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
246
திரு நீல நக்க அடிகள் சிறுத்தொண்டர் முருகனார்பெருநீர்மை அடியார்கள் பிறரும் விடை கொண்டு ஏகஒரு நீர்மை மனத்து உடைய பிள்ளையாருடன் அரசும்வரும் சீர் செஞ்சடைக் கரந்தார் திரு அம்பர் வணங்கினார்.
சொற்பிரிப்பு
திருநீல நக்கடிகள் சிறுத்தொண்டர், முருகனார்பெருநீர்மை அடியார்கள் பிறரும் விடை கொண்டு ஏகஒருநீர்மை மனத்து உடைய பிள்ளையார் உடன் அரசும்வருநீர் செஞ்சடைக் கரந்தார் திருஅம்பர் வணங்கினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
247
செங்குமுத மலர் வாவித் திருக்கடவூர் அணைந்து அருளிப்பொங்கிய வெங்கூற்று அடர்த்த பொன் அடிகள் தொழுது ஏத்திக்குங்குலியக் கலயனார் திருமடத்தில் குறை அறுப்பஅங்கு அவர்பால் சிவன் அடியாருடன் அமுது செய்தார்கள்.
சொற்பிரிப்பு
செங்குமுத மலர் வாவித் திருக்கடவூர் அணைந்தருளிப்பொங்கிய வெங்கூற்று அடர்த்த பொன் அடிகள் தொழுது ஏத்திக்குங்குலியக் கலயனார் திருமடத்தில் குறைவு அறுப்பஅங்கு அவர்பால் சிவன் அடியாருடன் அமுது செய்தார்கள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
248
சீர் மன்னும் திருக் கடவூர்த் திருமயானமும் வணங்கிஏர் மன்னும் இன்னிசைப்பாப் பல பாடி இனிது அமர்ந்துகார் மன்னும் கறைக் கண்டர் கழல் இணைகள் தொழுது அகன்றுதேர் மன்னும் மணி வீதித் திரு ஆக்கூர் சென்று அணைந்தார்.
சொற்பிரிப்பு
சீர்மன்னும் திருக் கடவூர்த் திருமயானமும் வணங்கிஏர்மன்னும் இன்இசைப் பாப் பல பாடி இனிது அமர்ந்துகார்மன்னும் கறைக்கண்டர் கழல்இணைகள் தொழுது அகன்றுதேர்மன்னும் மணிவீதித் திருஆக்கூர் சென்று அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
249
சார்ந்தார் தம் புகல் இடத்தைத் தான் தோன்றி மாடத்துக்கூர்ந்து ஆர்வம் உறப் பணிந்து கோதில் தமிழ்த்தொடை புனைந்துவார்ந்து ஆடும் சடையார் தம் பதி பலவும் வணங்கி உடன்சேர்ந்தார்கள் தம் பெருமான் திரு வீழி மிழலையினை.
சொற்பிரிப்பு
சார்ந்தார் தம் புகலிடத்தைத் தான்தோன்றி மாடத்துக்கூர்ந்து ஆர்வம் உறப்பணிந்து கோதில் தமிழ்த் தொடை புனைந்துவார்ந்து ஆடும் சடையார் தம் பதி பலவும் வணங்கி உடன்சேர்ந்தார்கள் தம்பெருமான் திருவீழி மிழலையினை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
250
வீழி மிழலை வந்து அணைய மேவும் நாவுக்கு அரசினையும்காழி ஞானப் பிள்ளையையும் கலந்த உள்ளக் காதலினால்ஆழி வலவன் அறியாத அடியார் அடியார் அவர்களுடன்வாழி மறையோர் எதிர் கொண்டு வணங்க வணங்கி உள்புக்கார்.
சொற்பிரிப்பு
வீழி மிழலை வந்து அணைய மேவு நாவுக்கு அரசினையும்காழி ஞானப் பிள்ளையையும் கலந்த உள்ளக் காதலினால்ஆழி வலவன் அறியாத அடியார் அடியார் அவர்களுடன்வாழி மறையோர் எதிர்கொண்டு வணங்க வணங்கி உள்புக்கார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
251
மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின் மணி விளக்குநீடு கதலி தழைப் பூகம் நிரைத்து நிறை பொன் குடம் எடுத்துப்பீடு பெருகும் வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும்கூட மகிழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார்.
சொற்பிரிப்பு
மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின் மணிவிளக்குநீடு கதலி தழைப் பூகம் நிரைத்து நிறை பொன் குடம் எடுத்துப்பீடு பெருக வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும்கூட மகழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்றணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
252
சென்று உள் புகுந்து திருவீழி மிழலை அமர்ந்த செங்கனகக்குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து திருமுன்றில் வணங்கி முன் எய்தி முக்கண் செக்கர் சடை மவுலிவென்றி விடையார் சேவடிக் கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார்.
சொற்பிரிப்பு
சென்று உள் புகுந்து திருவீழி மிழலை அமர்ந்த செங்கனகக்குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து, திருமுன்றில் வணங்கி, முன் எய்தி, முக்கண் செக்கர்ச் சடைமவுலிவென்றி விடையார் சேவடிக் கீழ் விழுந்தார்; எழுந்தார்; விம்மினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
253
கைகள் குவித்துக் கழல் போற்றிக் கலந்த அன்பு கரைந்து உருகமெய்யில் வழியும் கண் அருவி விரவப் பரவும் சொல் மாலைசெய்ய சடையார் தமைச் சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்றுஉய்யும் நெறித் தாண்டகம் மொழிந்து அங்கு ஒழியாக் காதல் சிறந்து ஓங்க.
சொற்பிரிப்பு
கைகள் குவித்துக் கழல்போற்றிக் கலந்த அன்பு கரைந்து உருகமெய்யில் வழியும் கண்அருவி விரவப் பரவும் சொன்மாலைசெய்ய சடையார் தமைச் சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்றுஉய்யு நெறித் தாண்டகம் மொழிந்தங்கு ஒழியாக் காதல் சிறந்து ஓங்க.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
254
முன்னாள் அயனும் திருமாலும் முடிவும் முதலும் காணாதபொன்னார் மேனி மணி வெற்பைப் பூ நீர் மிழலையினில் போற்றிப்பல் நாள் பிரியா நிலைமையினால் பயிலக் கும்பிட்டு இருப்பாராய்அந்நாள் மறையோர் திருப்பதியில் இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள்.
சொற்பிரிப்பு
முன்நாள் அயனும் திருமாலும் முடிவும் முதலும் காணாதபொன்ஆர் மேனி மணிவெற்பைப் பூ நீர் மிழலையினில் போற்றிப்பன்நாள் பிரியா நிலைமையினால் பயிலக் கும்பிட்டு இருப்பாராய்அந்நாள் மறையோர் திருப்பதியில் இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
255
சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சில நாள் சென்று அதன் பின்மாரி சுருங்கி வளம் பொன்னி நதியும் பருவம் மாறுதலும்நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் பல மன் உயிர்கள் எல்லாம்பாரின் மலிந்த இலம் பாட்டில் படர் கூர் வறுமை பரந்ததால்.
சொற்பிரிப்பு
சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சிலநாள் சென்றதன்பின்மாரி சுருங்கி வளம்பொன்னி நதியும் பருவம் மாறுதலும்நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் பல மன் உயிர்கள் எலாம்பாரின் மலிந்த இலம்பாட்டில் படர்கூர் வறுமை பரந்ததால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
256
வையம் எங்கும் வற்கடமாய்ச் செல்ல உலகோர் வருத்தமுறநையும் நாளில் பிள்ளையார் தமக்கும் நாவுக்கு அரசருக்கும்கையில் மானும் மழுவும் உடன் காணக் கனவில் எழுந்து அருளிச்செய்ய சடையார் திருவீழி மிழலை உடையார் அருள் செய்வார்.
சொற்பிரிப்பு
வையம் எங்கும் வற்கடமாய்ச் செல்ல, உலகோர் வருத்தம் உறநையும் நாளில், பிள்ளையார் தமக்கும் நாவுக்கு அரசருக்கும்கையில் மானும் மழுவும் உடன் காணக் கனவில் எழுந்தருளிச்செய்ய சடையார் திருவீழி மிழலை உடையார் அருள் செய்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
257
கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டம் உறீர் எனினும்ஏல உம்மை வழி படுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்றுகோலம் காண எழுந்து அருளிக் குலவும் பெருமை இருவர்க்கும்ஞாலம் அறியப் படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார்.
சொற்பிரிப்பு
கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டம் உறீர் எனினும்ஏல உம்மை வழிபடுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்றுகோலம் காண எழுந்தருளிக் குலவும் பெருமை இருவர்க்கும்ஞாலம் அறியப் படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
258
விண்ணின் நின்று இழிந்த விமானத்தின் கிழக்கும் மேற்கும் பீடத்தில்அண்ணல் புகலி ஆண் தகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும்நண்ணும் நாள்கள் தொறும் காசு படிவைத்து அருள நானிலத்தில்எண்ணில் அடியார் உடன் அமுது செய்து அங்கு இருந்தார் இருவர்களும்.
சொற்பிரிப்பு
விண் நின்று இழிந்த விமானத்தின் கிழக்கும் மேற்கும் பீடத்தில்அண்ணல் புகலி ஆண்டகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும்நண்ணும் நாள்கள் தொறும் காசு படிவைத்து அருள நானிலத்தில்எண்ணில் அடியார் உடனமுது செய்தங்கு இருந்தார் இருவர்களும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
259
அல்லார் கண்டத்து அண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசுபல்லாறு இயன்ற வளம் பெருகப் பரமன் அடியார் ஆனார்கள்எல்லாம் எய்தி உண்கஎன இரண்டு பொழுதும் பறை நிகழ்த்திச்சொல்லால் சாற்றிச் சோறு இட்டார் துயர்கூர் வறுமை தொலைத்திட்டார்.
சொற்பிரிப்பு
அல்லார் கண்டத்து அண்டர்பிரான் அருளால் பெற்ற படிக்காசுபல்ஆறு இயன்ற வளம்பெருகப் பரமன் அடியார் ஆனார்கள்எல்லாம் எய்தி உண்க என இரண்டு பொழுதும் பறை நிகழ்த்திச்சொல்லால் சாற்றிச் சோறிட்டார் துயர் கூர் வறுமை தொலைத்திட்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
260
ஈசர் மிழலை இறையவர் பால் இமையப் பாவை திருமுலைப் பால்தேசம் உய்ய உண்டவர் தாம் திருமா மகனார் ஆதலினால்காசு வாசியுடன் பெற்றார் கைத் தொண்டு ஆகும் படிமையினால்வாசி இல்லாக் காசு படி பெற்று வந்தார் வாகீசர்.
சொற்பிரிப்பு
ஈசர் மிழலை இறையவர்பால் இமயப் பாவை திருமுலைப்பால்தேசம் உய்ய உண்டவர்தாம் திருமாமகனார் ஆதலினால்காசுவாசி உடன் பெற்றார் கைத் தொண்டு ஆகும் படிமையினால்வாசி இல்லாக் காசு படி பெற்று வந்தார் வாகீசர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
261
ஆறு சடை மேல் அணிந்து அருளும் அண்ணல் வைத்த படிக் காசால்ஈறு இலாத பொருள் உடைய இருவர் உடைய திருமடங்கள்சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து உண்ண உண்ணத் தொலையாதேஏறு பெருமை புவி போற்ற இன்புற்று இருக்கும் அந் நாளில்.
சொற்பிரிப்பு
ஆறு சடைமேல் அணிந்தருளும் அண்ணல் வைத்த படிக்காசால்ஈறு இலாத பொருள்உடைய இருவர் உடைய திருமடங்கள்சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து உண்ண உண்ணத் தொலையாதேஏறு பெருமை புவிபோற்ற இன்புற்று இருக்கும் அந்நாளில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
262
காலம் தவறு தீர்ந்து எங்கும் கலிவான் பொழிந்த புனல் கலந்துஞாலம் எல்லாம் குளிர் தூங்கி உணவு பெருகி நலம் சிறப்பமூல அன்பர் இருவர்களும் மொழி மாலைகளும் பல சாத்திநீல கண்டர் உறை பதிகள் பிறவும் வணங்க நினைவுற்றார்.
சொற்பிரிப்பு
காலம் தவறு தீர்ந்து, எங்கும் கலிவான் பொழிந்த புனல்கலந்து,ஞாலம் எல்லாம் குளிர்தூங்கி உணவு பெருகி, நலம் சிறப்பமூல அன்பர் இருவர்களும் மொழி மாலைகளும் பல சாத்திநீலகண்டர் உறைபதிகள் பிறவும் வணங்க நினைவு உற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
263
வாய்ந்த மிழலை மா மணியை வணங்கிப் பிரியா விடை கொண்டுபூந்தண் புனல் சூழ் வாஞ்சியத்தைப் போற்றிப் புனிதர் வாழ்பதிகள்ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை வண்தமிழ்கள் புனைந்து போய்ச்சேர்ந்தார் செல்வத் திருமறைக்காடு எல்லை இல்லாச் சீர்த்தியினார்.
சொற்பிரிப்பு
வாய்ந்த மிழலை மாமணியை வணங்கிப் பிரியா விடைகொண்டுபூந்தண் புனல் சூழ் வாஞ்சியத்தைப் போற்றிப் புனிதர் வாழ்பதிகள்ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை வண் தமிழ்கள் புனைந்துபோய்ச்சேர்ந்தார் செல்வத் திருமறைக்காடு எல்லை இல்லாச் சீர்த்தியினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
264
மன்றல் விரவு மலர்ப் புன்னை மணம் சூழ் சோலை உப்பளத்தின்முன்றில் தோறும் சிறு மடவார் முத்தம் கொழிக்கும் மறைக் காட்டுக்குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் புகுந்து வலம் கொண்டுசென்று சேர்ந்தார் தென் புகலிக் கோவும் அரசும் திரு முன்பு.
சொற்பிரிப்பு
மன்றல் விரவு மலர்ப்புன்னை மணம்சூழ் சோலை உப்பளத்தின்முன்றில் தோறும் சிறுமடவார் முத்தம் கொழிக்கும் மறைக்காட்டுக்குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் புகுந்து வலம்கொண்டுசென்று சேர்ந்தார் தென்புகலிக் கோவும் அரசும் திருமுன்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
265
பரவை ஓதக் கழிக்கானல் பாங்கு நெருங்கும் அப் பதியில்அரவச் சடை அந்தணனாரை அகில மறைகள் அர்ச்சனை செய்துஉரவக் கதவம் திருக் காப்புச் செய்த அந்நாள் முதல் இந்நாள்வரையும் அடைத்தே நிற்கின்ற மணி நீள் வாயில் வணங்குவார்.
சொற்பிரிப்பு
பரவை ஓதக் கழிக்கானல் பாங்கு நெருங்கும் அப்பதியில்அரவச் சடை அந்தணனாரை அகில மறைகள் அர்ச்சனை செய்துஉரவக் கதவம் திருக்காப்புச் செய்த அந்நாள் முதல் இந்நாள்வரையும் அடைத்தே நிற்கின்ற மணி நீள் வாயில் வணங்குவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
266
தொல்லை வேதம் திருக் காப்புச் செய்த வாயில் தொடர் அகற்றவல்ல அன்பர் அணையாமை மருங்கு ஓர் வாயில் வழி எய்திஅல்லல் தீர்ப்பார் தமை அருச்சிப்பார்கள் தொழுவார் ஆம்படி கண்டுஎல்லை இல்லாப் பெரும் புகழார் இதனை அங்குக் கேட்டு அறிந்தார்.
சொற்பிரிப்பு
தொல்லை வேதம் திருக்காப்புச் செய்த வாயில் தொடர்வு அகற்றவல்ல அன்பர் அணையாமை மருங்கு ஓர் வாயில் வழி எய்திஅல்லல் தீர்ப்பார் தமை அருச்சிப்பார்கள் தொழுவாராம் படி கண்டுஎல்லை இல்லாப் பெரும்புகழார் இதனை அங்குக் கேட்டு அறிந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
267
ஆங்கு அப் பரிசை அறிந்து அருளி ஆழித்தோணி புரத்து அரசர்ஓங்கு வேதம் அருச்சனை செய் உம்பர் பிரானை உள் புக்குத்தேங்கா திருவோம் நேர் இறைஞ்சத் திருமுன் கதவம் திருக்காப்புநீங்கப் பாடும் அப்பர் என நீடும் திருநாவுக்கு அரசர்.
சொற்பிரிப்பு
ஆங்கு அப் பரிசை அறிந்தருளி ஆழித் தோணி புரத்து அரசர்ஓங்கு வேதம் அருச்சனை செய் உம்பர் பிரானை உள்புக்குத்தேங்காது இருவோம் நேர் இறைஞ்சத் திருமுன் கதவம் திருக்காப்புநீங்கப் பாடும் அப்பர் என நீடும் திருநாவுக்கரசர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
268
உண்ணீர்மையினால் பிள்ளையார் உரைசெய்து அருள அதனாலேபண்ணினேரு மொழியாள் என்று எடுத்துப் பாடப் பயன் துய்ப்பான்தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு நீக்கத் தாழ்க்கத் திருக் கடைக்காப்புஎண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் என்று பாடி இறைஞ்சுதலும்.
சொற்பிரிப்பு
உள் நீர்மையினால் பிள்ளையார் உரைசெய்து அருள அதனாலேபண்ணின் நேரும் மொழியாள் என்று எடுத்துப் பாடப் பயன் துய்ப்பான்தெண்நீர் அணிந்தார் திருக்காப்பு நீக்கத் தாழ்க்கத் திருக்கடைக்காப்புஎண்ணீர்! இரக்கம் ஒன்று இல்லீர்! என்று பாடி இறைஞ்சுதலும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
269
வேத வனத்தின் மெய்ப் பொருளின் அருளால் விளங்கும் மணிக் கதவம்காதல் அன்பர் முன்பு திருக் காப்பு நீங்கக் கலை மொழிக்குநாதர் ஞான முனிவருடன் தொழுது விழுந்தார் ஞாலத்துள்ஓத ஒலியின் மிக்கு எழுந்த தும்பர் ஆர்ப்பும் மறை ஒலியும்.
சொற்பிரிப்பு
வேத வனத்தின் மெய்ப்பொருளின் அருளால் விளங்கும் மணிக்கதவம்காதல் அன்பர் முன்பு திருக் காப்பு நீங்கக், கலைமொழிக்குநாதர் ஞான முனிவர் உடன் தொழுது விழுந்தார்; ஞாலத்துள்ஓத ஒலியின் மிக்கு எழுந்தது உம்பர் ஆர்ப்பும் மறைஒலியும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
270
அன்பர் ஈட்டம் களி சிறப்ப ஆண்ட அரசும் சிவக் கன்றும்இன்ப வெள்ளத்து இடை மூழ்கி எழுந்து உள் புகுந்து தம் பெருமான்முன்பு பணிந்து போற்றி இசைத்துப் பரவி மொழி மாலைகள் பாடிஎன்பு கரைய உள் உருகி இறைஞ்சி அரிதில் புறத்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
அன்பர் ஈட்டம் களிசிறப்ப ஆண்ட அரசும் சிவக்கன்றும்இன்ப வெள்ளத்து இடைமூழ்கி எழுந்து உள் புகுந்து தம்பெருமான்முன்பு பணிந்து போற்றிசைத்துப் பரவி மொழி மாலைகள் பாடிஎன்பு கரைய உள் உருகி இறைஞ்சி அரிதில் புறத்து அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
271
புறம்பு நின்று வாகீசர் புனிதர் அருளால் இக் கதவம்திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி திருந்தமலையாள் திருமுலையில்கறந்த ஞானம் குழைத்த அமுது செய்த புகலிக் கவுணியரைநிறைந்த கதவம் அடைக்கும் வகை நீரும் பாடி அருளும் என.
சொற்பிரிப்பு
புறம்பு நின்று வாகீசர், புனிதர் அருளால் இக்கதவம்திறந்தும் அடைத்தும் செல்லு நெறி திருத்த மலையாள் திருமுலையில்கறந்த ஞானம் குழைத்து அமுது செய்த புகலிக் கவுணியரை,நிறைந்த கதவம் அடைக்கும் வகை நீரும்பாடி அருளும் என.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
272
சண்பை ஆளும் தமிழ் விரகர் தாமும் திரு நாவுக்கரசர்பண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ்வளவில்கண் பொற்பமைந்த நுதல் காளகண்டர் அருளால் கடிதுடனேதிண் பொன் கதவம் திருக் காப்புச் செய்தது எடுத்த திருப் பாட்டில்.
சொற்பிரிப்பு
சண்பை ஆளும் தமிழ்விரகர் தாமும், திருநாவுக்கரசர்பண்பின் மொழிந்த உரைகொண்டு பதிகம் பாடும் அவ்அளவில்,கண் பொற்பு அமைந்த நுதல் காள கண்டர் அருளால் கடிது உடனேதிண்பொன் கதவம் திருக்காப்புச் செய்தது எடுத்த திருப்பாட்டில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
273
அது கண்டு உடைய பிள்ளையார் தாமும்ஆண்ட அரசும் மகிழ்ந்துஇது நம் பெருமான் அருள் செய்யப் பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின்பதிகம் நிரம்பப் பிள்ளையார் பாடித் தொழுது பணிவு உற்றார்எதிர் பொன் திருவாயிலின் வழக்கம் என்றும் நிகழ்ச்சி எய்தியது ஆல்.
சொற்பிரிப்பு
அது கண்டு உடைய பிள்ளையார் தாமும் ஆண்டஅரசும் மகிழ்ந்துஇது நம் பெருமான் அருள்செய்யப் பெற்றோம் என்றங்கு இறைஞ்சிய பின்பதிகம் நிரம்பப் பிள்ளையார் பாடித் தொழுது பணிவு உற்றார்;எதிர்பொன் திருவாயிலின் வழக்கம் என்றும் நிகழ்ச்சி எய்தியதால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
274
அங்கு நிகழ்ந்த அச்செயல் கண்டுஅடியார் எல்லாம் அதிசயித்துப்பொங்கு புளகம் எய்திட மெய் பொழியும் கண்ணீர் பரந்து இழியஎங்கும் நிகர் ஒன்று இல்லாத இருவர் பாதம் இறைஞ்சினார்நங்கள் புகலிப் பெரும் தகையும் அரசும் மடத்தில் நண்ணிய பின்.
சொற்பிரிப்பு
அங்கு நிகழ்ந்த அச்செயல்கண்டு அடியார் எல்லாம் அதிசயித்துப்பொங்கு புளகம் எய்திட மெய் பொழியும் கண்ணீர் பரந்து இழியஎங்கும் நிகர் ஒன்று இல்லாத இருவர் பாதம் இறைஞ்சினார்நங்கள் புகலிப் பெருந்தகையும் அரசும் மடத்தில் நண்ணிய பின்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
275
அரிதில் திறக்கத் தாம் பாட அடைக்க அவர் பாடிய எளிமைகருதி நம்பர் திருவுள்ளம் அறியாது அயர்ந்தேன் எனக் கவன்றுபெரிதும் அஞ்சித் திருமடத்தில் ஒருபால் அணைந்து பேழ் கணித்துமருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர்.
சொற்பிரிப்பு
அரிதில் திறக்கத் தாம் பாட அடைக்க அவர் பாடிய எளிமைகருதி நம்பர் திருஉள்ளம் அறியாது அயர்ந்தேன் எனக் கவன்று,பெரிதும் அஞ்சித் திருமடத்தில் ஒருபால் அணைந்து பேழ்கணிந்துமருவும் உணர்வில் துயில்கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
276
மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின் கண்உன்னித் துயிலும் பொழுதின் கண் உமை ஓர் பாகம் உடையவர் தாம்பொன்னின் மேனி வெண் நீறு புனைந்த கோலப் பொலிவினொடும்துன்னி அவர்க்கு வாய் மூரில் இருப்போம் தொடர வா என்றார்.
சொற்பிரிப்பு
மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின்கண்உன்னித் துயிலும் பொழுதின்கண் உமையோர் பாகம் உடையவர் தாம்பொன்னின் மேனி வெண்நீறு புனைந்த கோலப் பொலிவினொடும்துன்னி அவர்க்கு வாய்மூரில் இருப்போம் தொடர வா என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
277
போதம் நிகழ வா என்று போனார் என் கொல் எனப் பாடிஈது எம்பெருமான் அருளாகில் யானும் போவேன் என்று எழுந்துவேத வனத்தைப் புறகிட்டு விரைந்து போக அவர் முன்னேஆதி மூர்த்தி முன் காட்டும் அவ் வேடத்தால் எழுந்து அருள.
சொற்பிரிப்பு
போதம் நிகழ வா என்று போனார் என்கொல் எனப்பாடிஈது எம் பெருமான் அருள்ஆகில் யானும் போவேன் என்று எழுந்துவேத வனத்தைப் புறகிட்டு விரைந்து போக, அவர் முன்னேஆதி மூர்த்தி முன்காட்டும் அவ்வேடத்தால் எழுந்து அருள.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
278
சீரார் பதியின் நின்று எழுந்து செல்லும் திருநாவுக்கு அரசர்ஆரா அன்பில் ஆரமுதம் உண்ண எய்தா வாறே போல்நீரார் சடையார் எழுந்து அருள நெடிது பின்பு செல்லும் அவர்பேராளரை முன் தொடர்ந்து அணையப் பெறுவார் எய்தப் பெற்று இலரால்.
சொற்பிரிப்பு
சீரார் பதியின் நின்று எழுந்து செல்லும் திருநாவுக்கரசர்,ஆரா அன்பில் ஆர்அமுதம் உண்ண எய்தாவாறே போல்நீரார் சடையார் எழுந்தருள நெடிது பின்பு செல்லும் அவர்பேராளரை முன் தொடர்ந்தணையப் பெறுவார் எய்தப் பெற்றிலரால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
279
அன்ன வண்ணம் எழுந்து அருளி அணித்தே காட்சி கொடுப்பார் போல்பொன்னின் கோயில் ஒன்று எதிரே காட்டி அதனுள் புக்கு அருளத்துன்னும் தொண்டர் அம் மருங்கு விரைந்து தொடரப் போந்த படிமன்னும் புகலி வள்ளலார் தாமும் கேட்டு வந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
அன்ன வண்ணம் எழுந்தருளி அணித்தே காட்சி கொடுப்பார் போல்பொன்னின் கோயில் ஒன்று எதிரே காட்டி அதன் உள் புக்கு அருளத்துன்னும் தொண்டர் அம்மருங்கு விரைந்து தொடரப், போந்தபடிமன்னும் புகலி வள்ளலார் தாமும் கேட்டு வந்து அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
280
அழைத்துக் கொடு போந்து அணியார் போல் காட்டி மறைந்தார் என அயர்ந்துபிழைத்துச் செவ்வி அறியாதே திறப்பித் தேனுக்கே அல்லால்உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்கப் பாடி அடைப்பித்ததழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என.
சொற்பிரிப்பு
அழைத்துக் கொடுபோந்து அணியார்போல் காட்டி மறைந்தார் என அயர்ந்துபிழைத்துச் செவ்வி அறியாதே திறப்பித்தேனுக்கே அல்லால்உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்கப் பாடி அடைப்பித்ததழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
281
மாட நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மால் அயனும்நேடி இன்னங் காணாதார் நேரே காட்சி கொடுத்து அருளஆடல் கண்டு பணிந்து ஏத்தி அரசும் காணக் காட்டுதலும்பாட அடியார் என்று எடுத்துப் பரமர் தம்மைப் பாடினார்.
சொற்பிரிப்பு
மாடம் நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மால் அயனும்நேடி இன்னம் காணாதார் நேரே காட்சி கொடுத்து அருள,ஆடல் கண்டு பணிந்து ஏத்தி அரசும் காணக் காட்டுதலும்பாட அடியார் என்று எடுத்துப் பரமர் தம்மைப் பாடினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
282
பாடும் தமிழ் மாலைகள் கொண்டு பரமர் தாமும் எழுந்து அருளநீடும் திருவாய்மூர் அடைந்து நிலவும் கோயில் வலம் செய்துசூடும் பிறையார் பெரும் தொண்டர் தொழுது போற்றித் துதி செய்துநாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து அந் நகரில் உடன் உறைந்தார்.
சொற்பிரிப்பு
பாடும் தமிழ்மாலைகள் கொண்டு பரமர் தாமும் எழுந்தருள,நீடும் திருவாய்மூர் அடைந்து நிலவும் கோயில் வலம்செய்து,சூடும் பிறையார் பெரும்தொண்டர் தொழுது போற்றித் துதிசெய்துநாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து அந்நகரில் உடன்உறைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
283
ஆண்ட அரசும் பிள்ளையார் உடனே அங்கண் இனிது அமர்ந்துபூண்ட காதல் பொங்கி எழ வாய் மூர் அடிகள் போற்றிமூண்ட அன்பின் மொழிமாலை சாத்தி ஞான முனிவரொடுமீண்டு வந்து திருமறைக் காடு எய்தி விமலர் தாள் பணிந்தார்.
சொற்பிரிப்பு
ஆண்ட அரசும் பிள்ளையார் உடனே அங்கண் இனிது அமர்ந்துபூண்ட காதல் பொங்கி எழ வாய்மூர் அடிகள் அடி போற்றிமூண்ட அன்பின் மொழிமாலை சாத்தி ஞான முனிவரொடுமீண்டும் வந்து திருமறைக்காடு எய்தி விமலர் தாள் பணிந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
284
ஆதி முதல்வர் தமைப் பணிந்து அங்கு ஆன பணி செய்து அமரும் நாள்சீத மதி வெண் குடை வளவர் மகளார் தென்னன் தேவியாம்கோதில் குணத்துப் பாண்டி மா தேவியார் முன் குலச்சிறையார்போத விட்டார் சிலர் வந்தார் புகலி வேந்தர் தமைக் காண.
சொற்பிரிப்பு
ஆதி முதல்வர் தமைப்பணிந்து அங்கு ஆன பணிசெய்து அமரும் நாள்சீத மதி வெண்குடை வளவர் மகளார் தென்னன் தேவியாம்கோதில் குணத்துப் பாண்டிமா தேவியார் முன் குலச்சிறையார்போத விட்டார் சிலர் வந்தார் புகலி வேந்தர் தமைக் காண.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
285
வந்து சிவனார் திருமறைக் காடு எய்தி மன்னு வேணுபுரிஅந்தணாளர் தமக்கு அறிவித்து அவர் பால் எய்தி அடி வணங்கசிந்தை மகிழ்ந்து தீது இன்மை வினவத் தீங்கும் உளவாமோஇந்த உலகம் உய வந்தீர் இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார்.
சொற்பிரிப்பு
வந்து சிவனார் திருமறைக்காடு எய்தி, மன்னு வேணுபுரிஅந்தணாளர் தமக்கு அறிவித்து, அவர் பால் எய்தி, அடி வணங்கச்சிந்தை மகிழ்ந்து தீது இன்மை வினவத், தீங்கும் உளவாமோஇந்த உலகம் உயவந்தீர் இரு தாள் நினைவார்க்கு? என்றுரைப்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
286
சைவ நெறி வைதிகம் நிற்கச் சழக்கு நெறியைத் தவம் என்னும்பொய் வல் அமணர் செயல் தன்னைப் பொறுக்க கில்லோம் எனக் கேட்டேஅவ் வன் தொழிலோர் செயல் மாற்றி ஆதிசைவ நெறி விளங்கத்தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் கொள் சண்பைத் திரு மறையோர்.
சொற்பிரிப்பு
சைவ நெறி வைதிகம் நிற்கச் சழக்கு நெறியைத் தவம் என்னும்பொய் வல் அமணர் செயல் தன்னைப் பொறுக்க கில்லோம்” எனக் கேட்டேஅவ்வன் தொழிலோர் செயல் மாற்றி ஆதி சைவ நெறி விளங்கத்தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர்கொள் சண்பைத் திருமறையோர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
287
ஆய பொழுது திரு நாவுக்கரசு புகலி ஆண் தகைக்குக்காய மாசு பெருக்கி உழல் கலதி அமணர் கடுவினை செய்மாயை சாலம் மிக வல்லார் அவர் மற்று என்னை முன் செய்ததீய தொழிலும் பல கெட்டேன் செல்ல இசையேன் யான் என்றார்.
சொற்பிரிப்பு
ஆய பொழுது, திருநாவுக்கு அரசு, புகலி ஆண்டகைக்குக்காயம் மாசு பெருக்கி உழல் கலதி அமணர் கடுவினை செய்மாயை சாலம் மிக வல்லார் அவர் மற்று என்னை முன் செய்ததீய தொழிலும் பல கெட்டேன் செல்ல இசையேன் யான் என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
288
என்று கூற எல்லை இலா நீறு போற்றும் இருவரையும்சென்று காணும் கருத்து உடையேன் அங்குத் தீங்கு புரி அமணர்நின்ற நிலைமை அழிவித்துச் சைவ நெறி பாரித்து அன்றிஒன்றும் செய்யேன் ஆணை உமது என்றார் உடைய பிள்ளையார்.
சொற்பிரிப்பு
என்று கூற எல்லை இலா நீறு போற்றும் இருவரையும்சென்று காணும் கருத்து உடையேன் அங்குத் தீங்கு புரிஅமணர்நின்ற நிலைமை அழிவித்துச் சைவ நெறிபாரித்து அன்றிஒன்றும் செய்யேன் ஆணை உமது என்றார் உடைய பிள்ளையார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
289
போமா துணிந்து நீர் அங்குப் போகப் போதா அவ் அமணர்தீ மாயையினை யானே போய்ச் சிதைத்து வருகின்றேன் என்னஆமாறு எல்லாம் உரைத்து அவரை மறுக்க மாட்டது அரசு இருப்பத்தாம் ஆதரவால் தமிழ் நாட்டில் போனார் ஞானத் தலைவனார்.
சொற்பிரிப்பு
போமா துணிந்து நீர் அங்குப் போகப் போதா; அவ்அமணர்தீ மாயையினை யானே போய்ச் சிதைத்து வருகின்றேன் என்னஆமாறு எல்லாம் உரைத்தவரை மறுக்க மாட்டாது அரசு இருப்பத்,தாம் ஆதரவால் தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவனார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
290
வேணு புரக்கோன் எழுந்து அருள விடைகொண்டு இருந்த வாகீசர்பூணும் அன்பால் மறைக்காட்டில் புனிதர் தம்மைப் போற்றி இசைத்துப்பேணி இருந்து அங்கு உறையும் நாள் பெயர்வார் வீழிமிழலை அமர்தாணுவின் தன் செய்ய கழல் மீண்டும் சார நினைக்கின்றார்.
சொற்பிரிப்பு
வேணுபுரக் கோன் எழுந்து அருள விடைகொண்டு இருந்த வாகீசர்பூணும் அன்பால் மறைக்காட்டில் புனிதர் தம்மைப் போற்றிசைத்துப்பேணி இருந்து அங்கு உறையு நாள் பெயர்வார், வீழி மிழலை அமர்தாணுவின் தன் செய்ய கழல் மீண்டும் சார நினைக்கின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
291
சோலை மறைக் காட்டு அமர்ந்து அருளும் சோதி அருள் பெற்று அகன்று போய்வேலை விடம் உண்டவர் வீழி மிழலை மீண்டும் செல்வன் எனஞாலம் நிகழ்ந்த நாகைக் காரோணம் பிறவும் தாம் பணிந்துசாலு மொழி வண் தமிழ்ப் பாடித் தலைவர் மிழலை வந்து அடைந்தார்.
சொற்பிரிப்பு
சோலை மறைக்காடு அமர்ந்தருளும் சோதி அருள் பெற்று அகன்றுபோய்வேலை விடம் உண்டவர் வீழி மிழலை மீண்டும் செல்வன் எனஞாலம் நிகழ்ந்த நாகைக் காரோணம் பிறவும் தாம் பணிந்துசாலும் மொழி வண் தமிழ்பாடித் தலைவர் மிழலை வந்தடைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
292
வீழி மிழலை தனைப் பணிந்து வேத முதல்வர் தாம் இருப்பஆழி வலம் ஏந்திய அரியால் ஆகாசத்தின் நின்று இழிந்தவாழி மலர்ந்த கோயில்தனில் மன்னும் பொருளை போற்றிசைத்துத்தாழும் நாளில் பிறபதியும் பணியும் காதல் தலை நிற்பார்.
சொற்பிரிப்பு
வீழி மிழலை தனைப் பணிந்து வேத முதல்வர் தாம் இருப்பப்ஆழி வலம் ஏந்திய அரியால் ஆகாசத்தின் நின்று இழிந்தவாழி மலர்ந்த கோயில்தனின் மன்னும் பொருளைப் போற்றிசைத்துத்தாழும் நாளில் பிறபதியும் பணியும் காதல் தலைநிற்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
293
பூவில் பொலியும் புனல் பொன்னிக் கரை போய்ப் பணிவார் பொற்பு அமைந்தஆவுக்கு அருளும் ஆவடு தண் துறையார் பாதம் அணைந்து இறைஞ்சிநாவுக் கரசர் ஞானப் போன கர்க்குச் செம் பொன் ஆயிரமும்பாவுக்கு அளித்த திறம் போற்றிப் போந்து பிறவும் பணிகின்றார்.
சொற்பிரிப்பு
பூவில் பொலியும் புனல் பொன்னிக் கரை போய்ப் பணிவார் பொற்பு அமைந்தஆவுக்கு அருளும் ஆவடுதண் துறையார் பாதம் அணைந்து இறைஞ்சிநாவுக்கு அரசர் ஞானபோன கர்க்குச் செம்பொன் ஆயிரமும்பாவுக்கு அளித்த திறம் போற்றிப், போந்து, பிறவும் பணிகின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
294
செய்ய சடையார் பழையாறை எய்த அதனில் செல் பொழுதில்மையல் அமணர் மறைத்த வடதளியின் மன்னும் சிவனாரைக்கைகள் கூப்பித் தொழுது அருளக் கண்டவாற்றால் அமணர்கள் தம்பொய் கொள் விமானம் எனக் கேட்டுப் பொறாத உள்ளம் மிகப் புழுங்கி.
சொற்பிரிப்பு
செய்ய சடையார் பழையாறை எய்த அதனில் செல்பொழுதில்மையல் அமணர் மறைத்த வடதளியின் மன்னும் சிவனாரைக்கைகள் கூப்பித் தொழுதருளக் கண்ட ஆற்றால் அமணர்கள் தம்பொய்கொள் விமானம் எனக் கேட்டுப், பொறாத உள்ளம் மிகப் புழுங்கி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
295
அந்த விமானம் தனக்கு அருகா ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்திக்கந்தம் மலரும் கடிக் கொன்றை முடியார் செய்ய கழல் உன்னிமந்த அமணர் வஞ்சனையால் மறைத்த வஞ்சம் ஒழித்தருளிப்பந்தம் கொண்ட குண்டர் திறம் பாற்றும் என்று பணிந்து இருந்தார்.
சொற்பிரிப்பு
அந்த விமானம் தனக்கு அருகா ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்திக்கந்த மலரும் கடிக்கொன்றை முடியார் செய்ய கழல் உன்னிமந்த அமணர் வஞ்சனையால் மறைத்த வஞ்சம் ஒழித்து அருளிப்பந்தம் கொண்ட குண்டர் திறம் பாற்றும் என்று பணிந்து இருந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
296
வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி அன்றிப் போகேன் என்றுஎண்ண முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதேஅண்ணலாரும் அது உணர்ந்து அங்கு அரசு தம்மைப் பணிவதற்குத்திண்ணமாக மன்னனுக்குக் கனவில் அருளிச் செய்கின்றார்.
சொற்பிரிப்பு
வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி அன்றிப் போகேன் என்றுஎண்ணம் முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே;அண்ணலாரும் அது உணர்ந்து அங்கு அரசு தம்மைப் பணிவதற்குத்திண்ணம் ஆக மன்னனுக்குக் கனவில் அருளிச் செய்கின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
297
அறிவில் அமணர் நமை மறைப்ப இருந்தோம் என்று அங்கு அடையாளக்குறிகள் அறியச் செய்து அருளி நம்மை அரசு கும்பிடுவான்நெறியில் அமணர் தமை அழித்து நீக்கிப் போக்கு என்று அருள் புரியசெறிவில் அறிவுற்று எழுந்து அவனும் செங்கை தலைமேல் குவித்து இறைஞ்சி.
சொற்பிரிப்பு
அறிவு இல் அமணர் நமை மறைப்ப இருந்தோம் என்று அங்கு அடையாளக்குறிகள் அறியச் செய்து அருளி நம்மை அரசு கும்பிடுவான்நெறியில் அமணர் தமை அழித்து நீக்கிப் போக்கு என்று அருள்புரியச்செறிவில் அறிவுற்று எழுந்தவனும் செங்கை தலைமேல் குவித்திறைஞ்சி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
298
கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பிக் கூடக் கடிது எய்திஅண்டர் பெருமான் அருள் செய்த அடையாளத்தின் வழி கண்டுகுண்டர் செய்த வஞ்சனையைக் குறித்து வேந்தன் குலவு பெரும்தொண்டர் தம்மை அடி வணங்கித் தொக்க அமணர் தூர் அறுத்தான்.
சொற்பிரிப்பு
கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பிக் கூடக் கடிது எய்தி,அண்டர் பெருமான் அருள் செய்த அடையாளத்தின் வழிகண்டு,குண்டர் செய்த வஞ்சனையைக் குறித்து வேந்தன் குலவு பெரும்தொண்டர் தம்மை அடிவணங்கித் தொக்க அமணர் தூர் அறுத்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
299
ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண் ஆயிரமும் மாய்ந்தற் பின்மேன்மை அரசன் ஈசர்க்கு விமானம் ஆக்கி விளக்கியபின்ஆன வழி பாட்டு அர்ச்சனைக்கு நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்சஞான அரசும் புக்கு இறைஞ்சி நாதர் முன்பு போற்றுவார்.
சொற்பிரிப்பு
ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண் ஆயிரமும் மாய்ந்ததன் பின்மேன்மை அரசன் ஈசர்க்கு விமானம் ஆக்கி விளக்கிய பின்ஆன வழிபாட்டு அர்ச்சனைக்கு நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்சஞான அரசும் புக்கு இறைஞ்சி நாதர் முன்பு போற்றுவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
300
தலையின் மயிரைப் பறித்து உண்ணும் சாதி அமணர் மறைத்தாலும்நிலை இலாதார் நிலைமையினால் மறைக்க ஒண்ணுமோ என்னும்விலை இல் வாய்மைக்குறுந் தொகைகள் விளம்பிப் புறம் போந்து அங்கு அமர்ந்தேஇலை கொள் சூலப் படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார்.
சொற்பிரிப்பு
தலையின் மயிரைப் பறித்து உண்ணும் சாதி அமணர் மறைத்தாலும்நிலை இலாதார் நிலைமையினால் மறைக்க ஒண்ணுமோ? என்னும்விலையில் வாய்மைக் குறுந்தொகைகள் விளம்பிப் புறம் போந்து அங்கமர்ந்தேஇலைகொள் சூலப் படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
301
பொங்கு புனலார் பொன்னியில் இரண்டு கரையும் பொருவிடையார்தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சித் தமிழ் மாலைகளும் சாத்திப் போய்எங்கும் நிறைந்த புகழ் ஆளர் ஈறில் தொண்டர் எதிர் கொள்ளச்செங்கண் விடையார் திருவானைக் காவின் மருங்கு சென்று அணைந்தார்.
சொற்பிரிப்பு
பொங்கு புனலார் பொன்னியினில் இரண்டு கரையும் பொருவிடையார்தங்கும் இடங்கள் புக்கிறைஞ்சித் தமிழ்மாலைகளும் சாத்திப்போய்,எங்கும் நிறைந்த புகழாளர், ஈறில் தொண்டர் எதிர்கொள்ளச்,செங்கண் விடையார் திருஆனைக்காவின் மருங்கு சென்றணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
302
சிலந்திக்கு அருளும் கழல் வணங்கிச் செஞ்சொல் மாலை பல பாடிஇலங்கு சடையார் எறும்பியூர் மலையும் இறைஞ்சிப் பாடியபின்மலர்ந்த சோதித் திருச்சிராப்பள்ளி மலையும் கற்குடியும்நலம்கொள் செல்வத் திருப்பராய்த் துறையும் தொழுவான் நண்ணினார்.
சொற்பிரிப்பு
சிலந்திக்கு அருளும் கழல் வணங்கிச் செஞ்சொல் மாலை பல பாடிஇலங்கு சடையார் எறும்பியூர் மலையும் இறைஞ்சிப் பாடியபின்மலர்ந்த சோதித் திருச்சிராப்பள்ளி மலையும் கற்குடியும்நலங்கொள் செல்வத் திருப்பராய்த் துறையும் தொழுவான் நண்ணினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
303
மற்றப் பதிகள் முதலான மருங்கு உள்ளனவும் கை தொழுதுபொன் புற்று அமைந்த திருப்பணிகள் செய்து பதிகம் கொடு போற்றிஉற்ற அருளால் காவிரியை ஏறி ஒன்னார் புரம் எரியச்செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீலியினைச் சென்று சேர்கின்றார்.
சொற்பிரிப்பு
மற்று அப்பதிகள் முதலான மருங்கு உள்ளனவும் கைதொழுது,பொற்பு உற்று அமைந்த திருப்பணிகள் செய்து பதிகம் கொடுபோற்றி,உற்ற அருளால் காவிரியை ஏறி ஒன்னார் புரம் எரியச்செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீலியினைச் சென்று சேர்கின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
304
வழி போம் பொழுது மிக இளைத்து வருத்தம் உற நீர் வேட்கையொடும்அழிவாம் பசி வந்து அணைந்திடவும் அதற்குச் சித்தம் அலையாதேமொழி வேந்தரும் முன் எழுந்து அருள முருகுஆர் சோலைப் பைஞ்ஞீலிவிழி ஏந்திய நெற்றியினார் தம் தொண்டர் வருத்தம் மீட்பாராய்.
சொற்பிரிப்பு
வழி போம் பொழுது மிக இளைத்து வருத்தம் உற, நீர் வேட்கையொடும்அழிவாம் பசி வந்து அணைந்திடவும், அதற்குச் சித்தம் அலையாதேமொழி வேந்தரும் முன் எழுந்தருள முருகார் சோலைப் பைஞ்ஞீலிவிழி ஏந்திய நெற்றியினார் தம் தொண்டர் வருத்தம் மீட்பாராய்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
305
காவும் குளமும் முன் சமைத்துக் காட்டி வழி போம் கருத்தினால்மேவும் திருநீற்று அந்தணராய் விரும்பும் பொதி சோறும் கொண்டுநாவின் தனி மன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார் விண்ணின் மேல்தாவும் புள்ளும் மண் கிழிக்கும் தனி ஏனமும் காண்பு அரியவர் தாம்.
சொற்பிரிப்பு
காவும் குளமும் முன் சமைத்துக் காட்டி வழிபோம் கருத்தினால்மேவும் திருநீற்று அந்தணராய் விரும்பும் பொதிசோறும் கொண்டுநாவின் தனி மன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார் விண்ணின் மேல்தாவும் புள்ளும் மண்கிழிக்கும் தனி ஏனமும் காண்பு அரியவர் தாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
306
அங்கண் இருந்த மறையவர் பால் ஆண்டஅரசும் எழுந்து அருளவெங்கண் விடை வேதியர் நோக்கி மிகவும் வழிவந்து இளைத்து இருந்தீர்இங்கு என் பாலே பொதி சோறு உண்டு இதனைஉண்டு தண்ணீர் இப்பொங்கு குளத்தில் குடித்து இளைப்புப் போக்கிப் போவீர் எனப் புகன்றார்.
சொற்பிரிப்பு
அங்கண் இருந்த மறையவர்பால் ஆண்ட அரசும் எழுந்தருளவெங்கண் விடை வேதியர் நோக்கி மிகவும் வழி வந்து இளைத்திருந்தீர்!இங்கு என் பாலே பொதிசோறு உண்டு இதனை உண்டு தண்ணீர் இப்பொங்கு குளத்தில் குடித்து இளைப்புப் போக்கிப் போவீர் எனப் புகன்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
307
நண்ணும் திருநாவுக்கு அரசர் நம்பர் அருள்என்று அறிந்தார் போல்உண்ணும் என்று திருமறையோர் உரைத்துப் பொதிசோறு அளித்தலுமேஎண்ண நினையாது எதிர் வாங்கி இனிதாம் அமுது செய்து இனியதண்ணீர் அமுது செய்து அருளித் தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார்.
சொற்பிரிப்பு
நண்ணும் திருநாவுக்கரசர் நம்பர் அருள் என்று அறிந்தார் போல்உண்ணும் என்று திருமறையோர் உரைத்துப் பொதிசோறு அளித்தலுமே,எண்ண நினையாது எதிர் வாங்கி இனிதா அமுது செய்து, இனியதண்ணீர் அமுது செய்து அருளித் தூய்மை செய்து, தளர்வு ஒழிந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
308
எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி இருந்த மறையவனார்அப்பால் எங்கு நீர் போவது என்றார் அரசும் அவர்க்கு எதிரேசெப்புவார் யான் திருப்பைஞ் ஞீலிக்குப் போவது என்று உரைப்பஒப்பு இலாரும் யான் அங்குப் போகின்றேன் என்று உடன் போந்தார்.
சொற்பிரிப்பு
எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி இருந்த மறையவனார்அப்பால் எங்கு நீர் போவது? என்றார்; அரசும் அவர்க்கு எதிரேசெப்பு வார்,யான் திருப்பைஞ்ஞீலிக்குப் போவது என்று உரைப்பஒப்பிலாரும், யான் அங்குப் போகின்றேன் என்று உடன் போந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
309
கூட வந்து மறையவனார் திருப்பைஞ்ஞீலி குறுகியிடவேடம் அவர் முன் மறைத்தலுமே மெய்ம்மைத் தவத்து மேலவர் தாம்ஆடல் புரிந்தார் அடியேனைப் பொருளாய் அளித்த கருணை எனப்பாடல் புரிந்து விழுந்து எழுந்து கண்ணீர் மாரிபயில் வித்தார் .
சொற்பிரிப்பு
கூட வந்து மறையவனார் திருப்பைஞ்ஞீலி குறுகி இடவேடம் அவர் முன் மறைத்தலுமே மெய்ம்மைத் தவத்து மேலவர் தாம்ஆடல் புரிந்தார் அடியேனைப் பொருளா அளித்த கருணை எனப்பாடல் புரிந்து விழுந்து எழுந்து கண்ணீர் மாரி பயில்வித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
310
பைஞ் ஞீலியினில் அமர்ந்து அருளும் பரமர் கோயில் சென்று எய்திமைஞ் ஞீலத்து மணி கண்டர் தம்மை வணங்கி மகிழ் சிறந்துமெய்ஞ் ஞீர்மையினில் அன்புருக விரும்பும் தமிழ் மாலைகள் பாடிக்கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார்.
சொற்பிரிப்பு
பைஞ்ஞீலியினில் அமர்ந்தருளும் பரமர் கோயில் சென்று எய்திமைஞ்ஞீலத்து மணிகண்டர் தம்மை வணங்கி மகிழ் சிறந்துமெய்ஞ் ஞீர்மையினில் அன்பு உருக விரும்பும் தமிழ்மாலைகள் பாடிக்கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதல் உடன் இருந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
311
நாதர் மருவும் திருமலைகள் நாடும் பதிகள் பல மிகவும்காதல் கூரச் சென்று இறைஞ்சிக் கலந்த இசை வண் தமிழ் பாடிமாதோர் பாகர் அருளாலே வடபால் நோக்கி வாகீசர்ஆதி தேவர் அமர்ந்த திரு அண்ணாமலையை நண்ணினார்.
சொற்பிரிப்பு
நாதர் மருவும் திருமலைகள், நாடும் பதிகள் பலமிகவும்காதல் கூரச் சென்று இறைஞ்சிக், கலந்த இசைவண் தமிழ்பாடி,மாதொர் பாகர் அருளாலே வடபால் நோக்கி வாகீசர்ஆதி தேவர் அமர்ந்த திரு அண்ணா மலையை நண்ணினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
312
செங்கண் விடையார் திரு அண்ணா மலையைத் தொழுது வலம் கொண்டுதுங்க வரையின் மிசை ஏறி தொண்டர் தொழும்புக்கு எதிர் நிற்கும்அங்கண் அரசைத் தொழுது எழுந்து திளைத்துத் திருநாவுக்கரசர்தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார்.
சொற்பிரிப்பு
செங்கண் விடையார் திருஅண்ணா மலையைத் தொழுது வலம்கொண்டுதுங்க வரையின் மிசை ஏறித் தொண்டர் தொழும்புக்கு எதிர் நிற்கும்அங்கண் அரசைத் தொழுது எழுந்து திளைத்துத் திருநாவுக்கரசர்தங்கும் பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
313
அண்ணாமலை மலை மேல் அணிமலையை ஆரா அன்பின் அடியவர் தம்கண்ணார் அமுதை விண்ணோரைக் காக்கக் கடலில் வந்து எழுந்தஉண்ணா நஞ்சம் உண்டானைக் கும்பிட்டு உருகும் சிந்தை உடன்பண்ணார் பதிகத் தமிழ் பாடிப் பணிந்து பரவிப் பணி செய்தார்.
சொற்பிரிப்பு
அண்ணாமலை மேல் அணிமலையை ஆரா அன்பின் அடியவர் தம்கண்ணார் அமுதை, விண்ணோரைக் காக்கக் கடலில் வந்து எழுந்தஉண்ணா நஞ்சம் உண்டானைக், கும்பிட்டு உருகும் சிந்தை உடன்பண்ணார் பதிகத் தமிழ் பாடிப் பணிந்து பரவிப் பணிசெய்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
314
பணியார் வேணிச் சிவ பெருமான் பாதம்போற்றிப் பணி செயும் நாள்மணியார் கண்டத்து எம் பெருமான் மண் மேல்மகிழும் இடம் எங்கும்தணியாக் காதலுடன் சென்று வணங்கித் தக்க பணி செய்வார்அணியார் தொண்டைத் திருநாட்டில் அருளால் அணைவார் ஆயினார்.
சொற்பிரிப்பு
பணியார் வேணிச் சிவபெருமான் பாதம் போற்றிப் பணிசெயும் நாள்மணியார் கண்டத்து எம்பெருமான் மண்மேல் மகிழும் இடம் எங்கும்தணியாக் காதல் உடன்சென்று வணங்கித் தக்க பணிசெய்வார்அணியார் தொண்டைத் திருநாட்டில் அருளால் அணைவார் ஆயினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
315
காதல் செய்யும் கருத்தின் உடன் காடும் மலையும் கான் ஆறும்சூதமலி தண் பணைப் பதிகள் பலவும் கடந்து சொல்லினுக்குநாதர் போந்து பெரும் தொண்டை நன்னாடு எய்தி முன் ஆகச்சீத மலர் மென் சோலை சூழ் திரு ஓத்தூரில் சென்று அடைந்தார்.
சொற்பிரிப்பு
காதல் செய்யும் கருத்தினுடன் காடும் மலையும் கான் யாறும்சூதம் மலி தண் பணைப்பதிகள் பலவும் கடந்து, சொல்லினுக்குநாதர் போந்து, பெரும் தொண்டை நன்நாடு எய்தி, முன் ஆகச்சீத மலர் மென் சோலைசூழ் திருஓத்தூரில் சென்று அடைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
316
செக்கர் சடையார் திரு ஓத்தூர்த் தேவர் பிரானார் தம் கோயில்புக்கு வலம் கொண்டு எதிர் இறைஞ்சிப் போற்றிக் கண்கள் புனல் பொழியமுக் கண் பிரானை விரும்பும் மொழித்திருத் தாண்டகங்கள் முதலாகத்தக்க மொழி மாலைகள் சாத்திச் சார்ந்து பணி செய்து ஒழுகுவார்.
சொற்பிரிப்பு
செக்கர்ச் சடையார் திருஓத்தூர்த் தேவர் பிரானார் தம்கோயில்புக்கு வலம்கொண்டு எதிர் இறைஞ்சிப் போற்றிக் கண்கள் புனல்பொழியமுக்கண் பிரானை விரும்பு மொழித் திருத்தாண்டகங்கள் முதலாகத்தக்க மொழிமாலைகள் சாத்திச் சார்ந்து பணிசெய்து ஒழுகுவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
317
செய்ய ஐயர் திரு ஓத்தூர் ஏத்திப் போந்து செழும் புவனம்உய்ய நஞ்சு உண்டு அருளும் அவர் உறையும் பதிகள்பல வணங்கித்தையல் தழுவக் குழைந்த பிரான் தங்கும் தெய்வப்பதி என்றுவையம் முழுதும் தொழுது ஏத்தும் மதில் சூழ்காஞ்சி மருங்கு அணைந்தார்.
சொற்பிரிப்பு
செய்ய ஐயர் திருஓத்தூர் ஏத்திப் போந்து செழும்புவனம்உய்ய நஞ்சுண்டு அருளும் அவர் உறையும் பதிகள் பலவணங்கித்,தையல் தழுவக் குழைந்தபிரான் தங்கும் தெய்வப் பதி என்றுவையம் முழுதும் தொழுது ஏத்தும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
318
ஞாலம் உய்யத் திருவதிகை நம்பர் தம் பேர் அருளினால்சூலை மடுத்து முன் ஆண்ட தொண்டர் வரப்பெற்றோம் என்றுகாலை மலரும் கமலம் போல் காஞ்சி வாணர் முகம் எல்லாம்சால மலர்ந்து களி சிறப்பத் தழைத்த மனங்கள் தாங்குவார்.
சொற்பிரிப்பு
ஞாலம் உய்யத் திருஅதிகை நம்பர் தம் பேரருளினால்சூலை மடுத்து முன் ஆண்ட தொண்டர் வரப்பெற்றோம் என்றுகாலை மலரும் கமலம்போல் காஞ்சி வாணர் முகம் எல்லாம்சால மலர்ந்து களிசிறப்பத் தழைத்த மனங்கள் தாங்குவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
319
மாட வீதி மருங்கு எல்லாம் மணி வாயில்களில் தோரணங்கள்நீடு கதலியுடன் கமுகு நிறைத்து நிறை பொற்குடம் தீபம்தோடு குலவு மலர் மாலை சூழ்ந்த வாசப் பந்தர்களும்ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணிநீள் காஞ்சி அலங்கரித்தார்.
சொற்பிரிப்பு
மாட வீதி மருங்கு எல்லாம் மணிவாயில்களில் தோரணங்கள்நீடு கதலி உடன் கமுகு நிரைத்து நிறைபொன் குடம் தீபம்தோடு குலவு மலர்மாலை சூழ்ந்த வாசப் பந்தர்களும்ஆடு கொடியும் உடன்எடுத்து அங்கு அணிநீள் காஞ்சி அலங்கரித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
320
தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து சொல்லுக்கு அரசர் பால்கொண்ட வேடப் பொலிவினொடும் குலவும் வீதி பணி செய்யும்அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதல் ஆம் அவை ஏந்திஇண்டை புனைந்த சடை முடியார்க்கு அன்பர் தம்மை எதிர் கொண்டார்.
சொற்பிரிப்பு
தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து சொல்லுக்கு அரசர்பால்கொண்ட வேடப் பொலிவினோடும் குலவும் வீதி பணி செய்யும்அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதலாம் அவை ஏந்திஇண்டை புனைந்த சடைமுடியார்க்கு அன்பர் தம்மை எதிர்கொண்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
321
எதிர் கொண்டு இறைஞ்சும் சீர் அடியார் தம்மை இறைஞ்சி எழுந்து அருளிமதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் மறுகு உள் போந்து வானநதிகுதி கொண்டு இழிந்த சடைக் கம்பர் செம்பொன் கோயில் குறுகினார்அதிர் கொண்டு அலை நேர் மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர்.
சொற்பிரிப்பு
எதிர்கொண்டு இறைஞ்சும் சீர்அடியார் தம்மை இறைஞ்சி எழுந்தருளி,மதில் கொண்டு அணிந்த காஞ்சிநகர் மறுகு உள் போந்து வானநதி,குதி கொண்டு இழிந்த சடைக்கம்பர் செம்பொன் கோயில் குறுகினார்அதிர் கொண்டலை நேர் மணிமிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
322
திரு வாயிலினைப் பணிந்து எழுந்து செல்வத் திரு முன்றிலை அணைந்துகருவார் கச்சி ஏகம்பர் கனக மணி மாளிகை சூழ்ந்துவருவார் செம் பொன் மலை வல்லி தழுவக் குழைந்த மணி மேனிப்பெரு வாழ்வினை முன் கண்டு இறைஞ்சிப் பேரா அன்பு பெருக்கினார்.
சொற்பிரிப்பு
திருவாயிலினைப் பணிந்து எழுந்து செல்வத் திருமுன்றிலை அணைந்துகருவார் கச்சி ஏகம்பர் கனக மணி மாளிகை சூழ்ந்துவருவார் செம்பொன் மலைவல்லி தழுவக் குழைந்த மணிமேனிப்பெரு வாழ்வினை முன் கண்டு இறைஞ்சிப் பேரா அன்பு பெருக்கினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
323
வார்ந்து சொரியும் கண் அருவி மயிர்க் கால் தோறும் வரும் புளகம்ஆர்ந்த மேனிப் புறம்பு அலைப்ப அன்பு கரைந்து புள் அலைப்பச்சேர்ந்த நயனப் பயன் பெற்றுத் திளைப்பத் திருவேகம்பர் தமைநேர்ந்த மனத்தில் உற வைத்து நீடும் பதிகம் பாடுவார்.
சொற்பிரிப்பு
வார்ந்து சொரியும் கண்அருவி மயிர்க் கால் தோறும் வரும் புளகம்ஆர்ந்த மேனிப் புறம்பு அலைப்ப அன்பு கரைந்து என்பு உள் அலைப்பச்சேர்ந்த நயனப் பயன்பெற்றுத் திளைப்பத் திரு ஏகம்பர் தமைநேர்ந்த மனத்தில் உற வைத்து நீடும் பதிகம் பாடுவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
324
கரவாடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்துப்பரவாய சொல் மாலைத் திருப் பதிகம் பாடிய பின்விரிவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின்அரவு ஆரம் புனைந்தவர் தம் திருமுன்றில் புறத்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்துப்பரவு ஆய சொல்மாலைத் திருப் பதிகம் பாடியபின்விரவார் தம் புரம் எரித்தவிடையவனார் வெள் எயிற்றின்அரவு ஆரம் புனைந்தவர் தம் திருமுன்றில் புறத்து அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
325
கையார்ந்த திருத்தொண்டு கழிய மிகும் காதலோடும்செய்யா நின்றே எல்லாச் செந்தமிழ் மாலையும் பாடிமையார்ந்த மிடற்றர் திரு மயானத்தை வலம் கொண்டுமெய்யார்வம் உறத் தொழுது விருப்பினோடு மேவு நாள்.
சொற்பிரிப்பு
கைஆர்ந்த திருத்தொண்டு கழிய மிகும் காதலொடும்செய்யாநின்றே எல்லாச் செந்தமிழ் மாலையும் பாடிமைஆர்ந்த மிடற்றர் திரு மயானத்தை வலம் கொண்டுமெய் ஆர்வம் உறத் தொழுது விருப்பினொடும் மேவும் நாள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
326
சீர் வளரும் மதில் கச்சி நகர்த் திரு மேல் தளி முதலாம்நீர் வளரும் சடையவர் தாம் நிலவி உறை ஆலயங்கள்ஆர்வம் உறப் பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ்ச் சொல் மலரால்சார்வுறு மாலைகள் சாத்தித் தகும் தொண்டு செய்திருந்தார்.
சொற்பிரிப்பு
சீர் வளரும் மதில் கச்சி நகர்த் திருமேற்றளி முதலாம்நீர் வளரும் சடையவர் தாம் நிலவி உறை ஆலயங்கள்ஆர்வம் உறப் பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ்ச் சொல்மலரால்சார்வுறு மாலைகள் சாத்தித் தகும்தொண்டு செய்துஇருந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
327
அந்நகரில் அவ் வண்ணம் அமர்ந்து உறையும் நாளின் கண்மன்னு திரு மாற் பேறு வந்து அணைந்து தமிழ் பாடிச்சென்னி மிசை மதி புனைவார் பதி பலவும் சென்று இறைஞ்சித்துன்னினார் காஞ்சியினைத் தொடர்ந்த பெரும் காதலினால்.
சொற்பிரிப்பு
அந்நகரில் அவ்வண்ணம் அமர்ந்து உறையும் நாளின்கண்மன்னு திருமாற்பேறு வந்து அணைந்து தமிழ்பாடிச்சென்னிமிசை மதி புனைவார் பதி பலவும் சென்று இறைஞ்சித்துன்னினார் காஞ்சியினைத் தொடர்ந்த பெரும் காதலினால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
328
ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் எனப் போற்றிப்பாகம் பெண் உருவானைப் பைங் கண் விடை உயர்த்தானைநாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திரு நீற்றின்ஆகந்தோய் அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார் .
சொற்பிரிப்பு
ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் எனப் போற்றிப்பாகம் பெண் உருவானைப், பைங் கண் விடை உயர்த்தானை,நாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திருநீற்றின்ஆகம் தோய் அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
329
திருக்கச்சி ஏகம்பம் பணிந்து ஏத்தித் திங்களார்நெருக்கச் செஞ்சடைக்கு அணிந்தார் நீடு பதி தொழ நினைவார்வருக்கைச் செஞ்சுளை பொழி தேன் வயல்விளைக்கும் நாட்டு இடை போய்ப்பருக்கைத் திண் களிற்று உரியார் கழுக் குன்றின் பாங்கு அணைந்தார்.
சொற்பிரிப்பு
திருக்கச்சி ஏகம்பம் பணிந்து ஏத்தித் திங்களார்நெருக்கச் செஞ்சடைக்கு அணிந்தார் நீடு பதி தொழ நினைவார்வருக்கைச் செஞ்சுளை பொழி தேன் வயல் விளைக்கும் நாட்டிடைப் போய்பருக்கைத் திண் களிற்று உரியார் கழுக்குன்றின் பாங்கு அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
330
நீடு திருக் கழுக் குன்றில் நிருத்தனார் கழல் வணங்கிப்பாடு தமிழ்த் தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும்சூடும் இளம் பிறை முடியார் தமைத் தொழுது போற்றிப் போய்மாடு பெரும் கடல் உடுத்த வான்மியூர் மருங்கு அணைந்தார்.
சொற்பிரிப்பு
நீடு திருக்கழுக்குன்றில் நிருத்தனார் கழல் வணங்கிப்பாடு தமிழ்த் தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும்சூடும் இளம் பிறை முடியார் தமைத்தொழுது போற்றிப் போய்மாடு பெரும் கடல் உடுத்த வான்மியூர் மருங்கு அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
331
திருவான்மியூர் மருந்தைச் சேர்ந்து பணிந்த அன்பினொடும்பெரு வாய்மைத் தமிழ்பாடி அம் மருங்கு பிறப்பு அறுத்துத்தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சித் தமிழ் வேந்தர்மருவாரும் மலர்ச் சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார்.
சொற்பிரிப்பு
திருவான்மியூர் மருந்தைச் சேர்ந்து பணிந்து, அன்பினொடும்,பெருவாய்மைத் தமிழ்பாடி அம்மருங்கு பிறப்பு அறுத்துத்தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சித், தமிழ்வேந்தர்மருவாரும் மலர்ச்சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
332
வரை வளர் மா மயில் என்ன மாடமிசை மஞ்சாடும்தரை வளர் சீர்த் திருமயிலைச் சங்கரனார் தாள் வணங்கிஉரை வளர் மாலைகள் அணிவித்து உழவாரப் படை ஆளிதிரை வளர் வேலைக் கரை போய் திரு ஒற்றியூர் சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
வரைவளர் மாமயில் என்ன மாடம் மிசை மஞ்சு ஆடும்தரைவளர் சீர்த் திருமயிலைச் சங்கரனார் தாள் வணங்கிஉரைவளர் மாலைகள் அணிவித்து உழவாரப் படையாளிதிரைவளர் வேலைக் கரை போய்த் திருஒற்றியூர் சேர்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
333
ஒற்றியூர் வள நகரத்து ஒளி மணி வீதிகள் விளக்கிநற்கொடி மாலைகள் பூகம் நறும் கதலி நிரை நாட்டிப்பொற்குடங்கள் தூபங்கள் தீபங்கள் பொலிவித்துமற்றவரை எதிர் கொண்டு கொடு புக்கார் வழித் தொண்டர்.
சொற்பிரிப்பு
ஒற்றியூர் வளநகரத்து ஒளி மணி வீதிகள் விளக்கிநற்கொடி மாலைகள் பூகம் நறும்கதலி நிரை நாட்டிப்பொற்குடங்கள் தூபங்கள் தீபங்கள் பொலிவித்துமற்றவரை எதிர்கொண்டு கொடு புக்கார் வழித் தொண்டர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
334
திரு நாவுக் கரசரும் அத் திரு ஒற்றியூர் அமர்ந்தபெரு நாகத்தின் சிலையார் கோபுரத்தை இறைஞ்சிப் புக்குஒரு ஞானத் தொண்டர் உடன் உருகி வலம் கொண்டு அடியார்கரு நாமம் தவிர்ப்பாரைக் கை தொழுது முன் வீழ்ந்தார்.
சொற்பிரிப்பு
திருநாவுக்கு அரசரும் அத் திருஒற்றியூர் அமர்ந்தபொருநாகத் திண்சிலையார் கோபுரத்தை இறைஞ்சிப் புக்குஒரு ஞானத் தொண்டர் உடன் உருகி வலம் கொண்டு அடியார்கருநாமம் தவிர்ப்பாரைக் கைதொழுது முன் வீழ்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
335
எழுதாத மறை அளித்த எழுத்து அறியும் பெருமானைத்தொழுத ஆர்வம் உற நிலத்தில் தோய்ந்து எழுந்தே அங்கம் எல்லாம்முழுது ஆய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்கவிழுதாரை கண் பொழிய விதிர்ப்பு உற்று விம்மினார்.
சொற்பிரிப்பு
எழுதாத மறை அளித்த எழுத்து அறியும் பெருமானைத்தொழுது ஆர்வம் உற நிலத்தில் தோய்ந்து எழுந்தே அங்கம் எலாம்முழுது ஆய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க் கால் மூழ்கவிழுதாரை கண்பொழிய விதிர்ப்பு உற்று விம்மினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
336
வண்டு ஓங்கும் செங் கமலம் என எடுத்து மனம் உருகப்பண் தோய்ந்த சொல் திருத் தாண்டகம் பாடிப் பரவுவார்விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம்கண்டு ஓங்கு களிச் சிறப்பக் கை தொழுது புறத்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
வண்டு ஓங்கும் செங்கமலம் என எடுத்து மனம் உருகப்பண் தோய்ந்த சொல் திருத்தாண்டகம் பாடிப் பரவுவார்விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திருஉருவம்கண்டு ஓங்கு களி சிறப்பக் கை தொழுது புறத்து அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
337
விளங்கு பெருந் திருமுன்றில் மேவும் திருப்பணி செய்தேஉளங்கொள் திரு விருத்தங்கள் ஓங்கு திருக் குறுந் தொகைகள்களங்கொள் திரு நேரிசைகள் பல பாடிக் கை தொழுதுவளங்கொள் திருப் பதியதனில் பல நாள்கள் வைகினார்.
சொற்பிரிப்பு
விளங்கு பெரும் திருமுன்றில் மேவு திருப்பணி செய்தேஉளங்கொள் திருவிருத்தங்கள் ஓங்கு திருக்குறுந்தொகைகள்களங்கொள் திருநேரிசைகள் பல பாடிக் கைதொழுதுவளங்கொள் திருப்பதி அதனில் பல நாள்கள் வைகினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
338
அங்குறையும் நாளின்கண் அருகுளவாம் சிவாலயங்கள்எங்கும் சென்று இனிது இறைஞ்சி ஏத்தும் அவர் இறை அருளால்பொங்கு புனல் திரு ஒற்றியூர் தொழுது போந்து உமையாள்பங்குடையார் அமர்ந்திருப் பாசூராம் பதி அணைந்தார்.
சொற்பிரிப்பு
அங்கு உறையும் நாளின்கண் அருகு உளவாம் சிவாலயங்கள்எங்கும் சென்று இனிது இறைஞ்சி ஏத்தும்அவர் இறை அருளால்பொங்கு புனல் திருஒற்றியூர் தொழுது போந்து உமையாள்பங்கு உடையார் அமர்ந்த திருப்பாசூராம் பதி அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
339
திருப்பாசூர் நகர் எய்திச் சிந்தையினில் வந்து ஊறும்விருப்பு ஆர்வம் மேற் கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்யஇருப்பாரைப் புரம் மூன்றும் எரித்து அருள எடுத்த தனிப்பொருப்பார் வெஞ்சிலையாரைத் தொழுது எழுந்து போற்றுவார்.
சொற்பிரிப்பு
திருப்பாசூர் நகர் எய்திச் சிந்தையினில் வந்து ஊறும்விருப்பு ஆர்வம் மேற்கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்யஇருப்பாரைப், புரம் மூன்றும் எரித்து அருள எடுத்த தனிப்பொருப்பார் வெஞ்சிலையாரைத் தொழுது எழுந்து போற்றுவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
340
முந்தி மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்துச்சிந்தை கரைந்து உருகு திருக் குறுந் தொகையும் தாண்டகமும்சந்தம் நிறை நேர் இசையும் முதலான தமிழ் பாடிஎந்தையார் திரு அருள் பெற்று ஏகுவார் வாகீசர்.
சொற்பிரிப்பு
முந்தி மூ எயில் எய்த முதல்வனார் என எடுத்துச்சிந்தை கரைந்து உருகு திருக் குறுந்தொகையும் தாண்டகமும்சந்தம் நிறை நேரிசையும் முதலான தமிழ்பாடிஎந்தையார் திருஅருள் பெற்று ஏகுவார் வாகீசர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
341
அம் மலர்ச் சீர்ப் பதியை அகன்று அயல் உளவாம் பதி அனைத்தின்மைம் மலரும் களத்தாரை வணங்கி மகிழ்வொடும் போற்றிமெய்ம்மை நிலை வழுவாத வேளாள விழுக் குடிமைச்செம்மையினால் பழையனூர்த் திரு ஆல வனம் பணிந்தார்.
சொற்பிரிப்பு
அம்மலர்ச் சீர்ப் பதியை அகன்று அயல் உளவாம் பதி அனைத்தின்மைம்மலரும் களத்தாரை வணங்கி, மகிழ்வொடும் போற்றி,மெய்ம்மை நிலை வழுவாத வேளாள விழுக்குடிமைச்செம்மையினார் பழையனூர்த் திருஆல வனம் பணிந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
342
திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாம் எனச் சிறப்பின்ஒருவாத பெரும் திருத் தாண்டகம் முதலாம் ஓங்கு தமிழ்ப்பெரு வாய்மைத் தொடை மாலை பல பாடிப் பிற பதியும்மருஆர்வம் பெற வணங்கி வடதிசை மேல் வழிக் கொள்வார்.
சொற்பிரிப்பு
திருஆலங்காடு உறையும் செல்வர் தாம் எனச் சிறப்பின்ஒருவாத பெருந் திருத்தாண்டகம் முதலாம் ஓங்கு தமிழ்ப்பெருவாய்மைத் தொடைமாலை பல பாடிப் பிற பதியும்மரு ஆர்வம் பெற வணங்கி வட திசை மேல் வழிக் கொள்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
343
பல் பதியும் நெடும் கிரியும் படர் வனமும் சென்று அடைவார்செல் கதி முன் அளிப்பார் தம் திருக்காரிக் கரை பணிந்துதொல் கலையின் பெருவேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம்மல்கு திருக் காளத்தி மா மலை வந்து எய்தினார்.
சொற்பிரிப்பு
பல் பதியும் நெடும் கிரியும் படர்வனமும் சென்று அடைவார்செல்கதி முன் அளிப்பார் தம் திருக்காரிகரை பணிந்துதொல்கலையின் பெருவேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம்மல்கு திருக் காளத்தி மாமலை வந்து எய்தினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
344
பொன் முகலித் திருநதியின் புனித நெடும் தீர்த்தத்தில்முன் முழுகிக் காளத்தி மொய் வரையின் தாழ்வரையில்சென்னி உறப் பணிந்து எழுந்து செம் கண் விடைத் தனிப்பாகர்மன்னும் மலை மிசை ஏறி வலம் கொண்டு வணங்குவார்.
சொற்பிரிப்பு
பொன்முகலித் திருநதியின் புனித நெடும் தீர்த்தத்தில்முன் முழுகிக் காளத்தி மொய் வரையின் தாழ்வரையில்சென்னி உறப் பணிந்து எழுந்து செங்கண் விடைத் தனிப்பாகர்மன்னுமலை மிசை ஏறி வலம்கொண்டு வணங்குவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
345
காதணி வெண் குழையானைக் காளத்தி மலைக் கொழுந்தைவேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும்காதல் புரி மனம் களிப்பக் கண் களிப்பப் பரவசமாய்நாதனை என்கண்ணுளான் என்னும் திருத்தாண்டகம் நவின்றார்.
சொற்பிரிப்பு
காதணி வெண் குழையானைக் காளத்தி மலைக் கொழுந்தைவேதமொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும்காதல் புரி மனம் களிப்பக் கண் களிப்பப் பரவசமாய்நாதனை என் கண் உளான் எனும் திருத்தாண்டகம் நவின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
346
மலைச் சிகரச் சிகா மணியின் மருங்கு உற முன்னே நிற்கும்சிலைத் தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்து இறைஞ்சிஅலைத்து விழும் கண் அருவி ஆகத்துப் பாய்ந்து இழியத்தலைக் குவித்த கையினராய்த் தாழ்ந்து புறம் போந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
மலைச் சிகரச் சிகாமணியின் மருங்குற முன்னே நிற்கும்சிலைத் தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்து இறைஞ்சிஅலைத்து விழும் கண்அருவி ஆகத்துப் பாய்ந்து இழியத்தலைக்குவித்த கையினராய்த் தாழ்ந்து புறம் போந்து அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
347
சேண் நிலவு திருமலையில் திருப்பணி ஆயின செய்துதாணுவினை அம்மலை மேல் தாள் பணிந்த குறிப்பினால்பேணிதிருக் கயிலை மலை வீற்று இருந்த பெருங் கோலம்காணுமது காதலித்தார் கலை வாய்மைக் காவலனார்.
சொற்பிரிப்பு
சேண் நிலவு திருமலையில் திருப்பணி ஆயின செய்துதாணுவினை அம்மலைமேல் தாள் பணிந்த குறிப்பினால்பேணி திருக்கயிலைமலை வீற்றி ருந்த பெரும் கோலம்காணும் அது காதலித்தார் கலை வாய்மைக் காவலனார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
348
அங்கண் மா மலைமேல் மருந்தை வணங்கியார் அருளால் மிகப்பொங்கு காதலின் உத்தரத் திசை மேல் விருப்போடு போதுவார்துங்க மால் வரை கானியாறு தொடர்ந்த நாடு கடந்தபின்செங்கண் மால் விடை அண்ணல் மேவும் திருப் பருப்பதம் எய்தினார்.
சொற்பிரிப்பு
அங்கண் மாமலை மேல் மருந்தை வணங்கி ஆர் அருளால் மிகப்பொங்கு காதலின் உத்தரத் திசை மேல் விருப்பொடு போதுவார்துங்க மால்வரை கானியாறு தொடர்ந்த நாடு கடந்தபின்செங்கண் மால்விடை அண்ணல் மேவு திருப்பருப்பதம் எய்தினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
349
மான விஞ்சையர் வான நாடர்கள் வான் இயக்கர்கள் சித்தர்கள்கான கின்னரர் பன்னகாதிபர் காம சாரிகளே முதல்ஞான மோனிகள் நாளும் நம்பரை வந்து இறைஞ்சி நலம் பெறும்தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி வண் தமிழ் சாற்றினார்.
சொற்பிரிப்பு
மான விஞ்சையர், வான நாடர்கள் வான் இயக்கர்கள், சித்தர்கள்,கான கின்னரர், பன்னகாதிபர் காம சாரிகளே முதல்ஞான மோனிகள் நாளும் நம்பரை வந்து இறைஞ்சி நலம் பெறும்தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி வண்டமிழ் சாற்றினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
350
அம் மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில் படைச்செம்மல் வெண் கயிலைப் பொருப்பை நினைந்து எழுந்த ஓர் சிந்தையால்எம் மருங்கும் ஓர் காதல் இன்றி இரண்டு பாலும் வியந்து உளோர்கைம் மருங்கு அணையும் தெலுங்கு கடந்து கன்னடம் எய்தினார்.
சொற்பிரிப்பு
அம்மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில் படைச்செம்மல் வெண்கயிலைப் பொருப்பைநினைந்து எழுந்ததொர் சிந்தையால்எம்மருங்கும் ஓர் காதல் இன்றி இரண்டு பாலும் வியந்துளோர்கைம்மருங்கு அணையும் தெலுங்கு கடந்து கன்னடம் எய்தினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
351
கரு நடம் கழிவாக ஏகிய பின் கலந்த வனங்களும்திரு நதித் துறை யாவையும் பயில் சேண் நெடும் கிரி வட்டையும்பெரு நலம் கிளர் நாடும் எண்ணில பின்படச் செறி பொற்பினால்வரு நெடும் கதிர் கோலு சோலைய மாளவத்தினை நண்ணினார்.
சொற்பிரிப்பு
கருநடம் கழிவாக ஏகிய பின் கலந்த வனங்களும்திருநதித்துறை யாவையும் பயில் சேண் நெடும் கிரி வட்டையும்பெரு நலம் கிளர் நாடும் எண்ணில் பிற்படச் செறி பொற்பினால்வருநெடும் கதிர் கோலும் சோலைய மாளவத்தினை நண்ணினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
352
அங்கு முற்றி அகன்று போகி அரும் சுரங்கள் கடந்து சென்றுஎங்கும் மிக்க அறங்கள் நீடும் இலாட பூமி இகந்து போய்மங்குல் சுற்றிய வெற்பினோடு வனங்கள் ஆறு கடந்து அயல்பங்கயப் பழனத்து மத்திய பை திரத்தினை எய்தினார்.
சொற்பிரிப்பு
அங்கு முற்றி அகன்று போகி அரும் சுரங்கள் கடந்து சென்றுஎங்கும் மிக்க அறங்கள் நீடும் இலாட பூமி இகந்து போய்மங்குல் சுற்றிய வெற்பி னோடு வனங்கள் ஆறு கடந்து அயல்பங்கயப் பழனத்து மத்திய பைதிரத்தினை எய்தினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
353
அன்ன நாடு கடந்து கங்கை அணைந்து சென்று வலம் கொளும்மின்னு வேணியர் வாரணாசி விருப்பினோடு பணிந்து உடன்பின் அணைந்தவர் தம்மை அங்கண் ஒழிந்து கங்கை கடந்து போய்மன்னு காதல் செய் நாவின் மன்னவர் வந்து கற்சுரம் முந்தினார்.
சொற்பிரிப்பு
அன்ன நாடு கடந்து கங்கை அணைந்து சென்று வலம் கொளும்மின்னு வேணியர் வாரணாசி விருப்பினோடு பணிந்து உடன்பின் அணைந்தவர் தம்மை அங்கண் ஒழிந்து கங்கை பெயர்ந்து போய்மன்னு காதல் செய் நாவின் மன்னவர் வந்து கற்சுரம் முந்தினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
354
மாகம் மீது வளர்ந்த கானகம் ஆகி எங்கும் மனித்தரால்போகலா நெறி அன்றியும் புரிகின்ற காதல் பொலிந்து எழச்சாக மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்ந்து தனித்து நேர்ஏகினார் இரவும் பெரும் கயிலைக் குலக்கிரி எய்துவார்.
சொற்பிரிப்பு
மாகம் மீது வளர்ந்த கானகம் ஆகி எங்கும் மனித்தரால்போகலா நெறி அன்றியும் புரிகின்ற காதல் பொலிந்து எழச்சாக மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்ந்து தனித்து நேர்ஏகினார் இரவும் பெரும் கயிலைக் குலக்கிரி எய்துவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
355
ஆயவார் இருளின் கண் ஏகும் அவ்அன்பர் தம்மை அணைந்து முன்தீயவாய விலங்கு வன் தொழில் செய்ய அஞ்சின நஞ்சுகால்வாய நாக மணிப் பணங் கொள் விளக்கு எடுத்தன வந்து கால்தோய வானவராயினும் தனி துன் அருஞ்சுரம் முன்னினார்.
சொற்பிரிப்பு
ஆய வார் இருளின்கண் ஏகும் அவ் அன்பர் தம்மை அணைந்து முன்தீய ஆய விலங்கு வன்தொழில் செய்ய அஞ்சின; நஞ்சுகால்வாய நாக மணிப் பணங் கொள் விளக்கு எடுத்தன; வந்துகால்தோய வானவர் ஆயினும் தனி துன் அரும்சுரம் முன்னினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
356
வெங்கதிர்ப் பகல் அக்கடத்து இடைவெய்யவன் கதிர் கை பரந்துஎங்கும் மிக்க பிளப்பில் நாகர் தம் எல்லை புக்கு எரிகின்றனபொங்கழற்று எறு பாலை வெந்நிழல் புக்க சூழல் புகும் பகல்செங்கதிர்க் கனல் போலும் அத்திசை திண்மை மெய்த்தவர் நண்ணினார்.
சொற்பிரிப்பு
வெங்கதிர்ப் பகல் அக்கடத்து இடை வெய்ய வன்கதிர் கைபரந்துஎங்கும் மிக்க பிளப்பில் நாகர் தம் எல்லை புக்கு எரிகின்றனபொங்கு அழல் தெறு பாலை வெந்நிழல் புக்க சூழல் புகும்பகல்செங்கதிர்க் கனல் போலும் அத்திசை திண்மை மெய்த்தவர் நண்ணினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
357
இங்ஙனம் இரவும் பகற் பொழுதும் அரும் சுரம் எய்துவார்பங்கயம் புரை தாள் பரட்டளவும் பசைத் தசை தேயவும்மங்கை பங்கர் தம் வெள்ளிமால் வரை வைத்த சிந்தை மறப்பரோதம் கரங்கள் இரண்டுமே கொடு தாவி ஏகுதல் மேவினார்.
சொற்பிரிப்பு
இங்ஙனம் இரவும் பகல்பொழுதும் அரும்சுரம் எய்துவார்பங்கயம் புரை தாள் பரட்டளவும் பசைத்தசை தேயவும்மங்கை பங்கர் தம் வெள்ளி மால் வரை வைத்த சிந்தை மறப்பரோ?தம் கரங்கள் இரண்டுமே கொடு தாவி ஏகுதல் மேவினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
358
கைகளும் மணி பந்து அசைந்துறவே கரைந்து சிதைந்தபின்மெய் கலந்து எழு சிந்தை அன்பின் விருப்பு மீமிசை பொங்கிடமொய் கடுங் கனல் வெம்பரல் புகை மூளும் அத்த முயங்கியேமை கொள் கண்டர் தம் அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால்.
சொற்பிரிப்பு
கைகளும் மணி பந்து அசைந்து உறவே கரைந்து சிதைந்த பின்மெய் கலந்து எழு சிந்தை அன்பின் விருப்பு மீமிசை பொங்கிடமொய் கடும்கனல் வெம்பரல் புகை மூளும் அத்தம் முயங்கியேமைகொள் கண்டர் தம் அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
359
மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திடநேர் வரும் குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடு நீடுஆர்வம் அங்கு உயிர் கொண்டு ஊகைக்கும் உடம்பு அடங்கம் ஊன் கெடச்சேர் வரும் பழுவம் புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர்.
சொற்பிரிப்பு
மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திடநேர் வரும் குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடு நீடுஆர்வம் அங்குயிர் கொண்டு உகைக்கும் உடம்பு அடங்கவும் ஊன்கெடச்சேர்வரும் பழுவம் புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
360
அப்புறம் புரள்கின்ற நீள் இடை அங்கம் எங்கும் அரைந்திடச்செப்ப அரும் கயிலைச் சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால்மெய்ப் புறத்தில் உறுப்பு அழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும்தப்புறச் செயல் இன்றி அந்நெறி தங்கினார் தமிழ் ஆளியார்.
சொற்பிரிப்பு
அப்புறம் புரள்கின்ற நீள் இடை அங்கம் எங்கும் அரைந்திடச்செப்பரும் கயிலைச் சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால்மெய்ப் புறத்தில் உறுப்பு அழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும்தப்புறச் செயல் இன்றி அந்நெறி தங்கினார் தமிழ் ஆளியார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
361
அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்கு அருளார்மன்னும் தீந்தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்தநன்னெடும் புனல் தடமும் ஒன்று உடன் கொடு நடந்தார்பன்னகம் புனை பரமர் ஓர் முனிவராம் படியால்.
சொற்பிரிப்பு
அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்கு அருளார்மன்னு தீந்தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்தநன் நெடும்புனல் தடமும் ஒன்று உடன்கொடு நடந்தார்பன்னகம் புனை பரமர் ஓர் முனிவராம் படியால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
362
வந்து மற்றவர் மருங்குற அணைந்து நேர் நின்றுநொந்து நோக்கி மற்றவர் எதிர் நோக்கிட நுவல்வார்சிந்தி இவ் உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால்இந்த வெங்கடத்து எய்தியது என் என இசைத்தார்.
சொற்பிரிப்பு
வந்து மற்றவர் மருங்குற அணைந்து நேர் நின்றுநொந்து நோக்கி மற்று அவர் எதிர் நோக்கிட, நுவல்வார்சிந்தி இவ்உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால்இந்த வெங்கடத்து எய்தியது என் என இசைத்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
363
மாசில் வற்கலை ஆடையும் மார்பின் முந்நூலும்தேசுடைச் சடை மவுலியும் நீறும் மெய் திகழஆசில் மெய்த்தவர் ஆகி நின்றவர் தமை நோக்கிப்பேச உற்றதோர் உணர்வு உற விளம்புவார் பெரியோர்.
சொற்பிரிப்பு
மாசில் வற்கலை ஆடையும் மார்பின் முந்நூலும்தேசு உடைச்சடை மவுலியும் நீறும் மெய் திகழஆசின் மெய்த்தவர் ஆகி நின்றவர் தமை நோக்கிப்பேச உற்றது ஓர் உணர்வுற விளம்புவார் பெரியோர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
364
வண்டுலாங் குழல் மலை மகளுடன் வட கயிலைஅண்டர் நாயகர் இருக்கும் அப் பரிசு அவர் அடியேன்கண்டு கும்பிட விருப்பொடும் காதலின் அடைந்தேன்கொண்ட என் குறிப்பு இது முனியே எனக் கூற.
சொற்பிரிப்பு
வண்டுலாம் குழல் மலை மகள் உடன் வட கயிலைஅண்டர் நாயகர் இருக்கும் அப் பரிசு அவர் அடியேன்கண்டு கும்பிட விருப்பொடும் காதலின் அடைந்தேன்கொண்ட என் குறிப்பு இது முனியே எனக் கூற.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
365
கயிலை மால் வரை யாவது காசினி மருங்குபயிலும் மானுடப் பான்மையோர் அடைவதற்கு எளிதோஅயில் கொள் வேல் படை அமரரும் அணுகுதற்கு அரிதால்வெயில் கொள் வெஞ்சுரத்து என் செய்தீர் வந்து என விளம்பி.
சொற்பிரிப்பு
கயிலை மால்வரை ஆவது காசினி மருங்குபயிலும் மானுடப் பான்மையோர் அடைவதற்கு எளிதோ?அயில் கொள் வேல்படை அமரரும் அணுகுதற்கு அரிதால்;வெயில் கொள் வெஞ்சுரத்து என் செய்தீர் வந்து என விளம்பி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
366
மீளும் அத்தனை உமக்கு இனிக் கடன் என விளங்கும்தோளும் ஆகமும் துவளும் முந்நூல் முனி சொல்லஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால்மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என மறுத்தார்.
சொற்பிரிப்பு
மீளும் அத்தனை உமக்கு இனிக் கடன் என விளங்கும்தோளும் ஆகமும் துவளும் முந்நூல்முனி சொல்லஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால்மாளும் இவ்உடல் கொண்டு மீளேன் என மறுத்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
367
ஆங்கு மற்றவர் துணிவு அறிந்தவர் தமை அறியநீங்கு மாதவர் விசும்பு இடைக் கரந்து நீள் மொழியால்ஓங்கு நாவினுக்கு அரசனே எழுந்திர் என்று உரைப்பத்தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வார்.
சொற்பிரிப்பு
ஆங்கு மற்றவர் துணிவு அறிந்து அவர் தமை அறியநீங்கு மாதவர் விசும்பு இடைக் கரந்து நீள் மொழியால்ஓங்கு நாவினுக்கு அரசனே எழுந்திரு என்று உரைப்பத்தீங்கு நீக்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
368
அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதேவிண்ணிலே மறைந்து அருள் புரி வேத நாயகனேகண்ணினால் திருக் கயிலையில் இருந்த நின் கோலம்நண்ணி நான் தொழ நயந்து அருள் புரி எனப் பணிந்தார்.
சொற்பிரிப்பு
அண்ணலே! எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதே!விண்ணிலே மறைந்து அருள் புரி வேத நாயகனே!கண்ணினால் திருக்கயிலையில் இருந்த நின் கோலம்நண்ணி நான்தொழ நயந்து அருள் புரி எனப் பணிந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
369
தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில்எழு பெரும் திருவாக்கினால் இறைவர் இப் பொய்கைமுழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அம் முறைமைபழுதில் சீர்த் திருவையாற்றில் காண் எனப் பணித்தார்.
சொற்பிரிப்பு
தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில்எழு பெரும் திருவாக்கினால் இறைவர் இப் பொய்கைமுழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அம் முறைமைபழுதில் சீர்த் திரு ஐயாற்றில் காண் எனப் பணித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
370
ஏற்றினார் அருள் தலை மிசைக் கொண்டு எழுந்து இறைஞ்சிவேற்றும் ஆகி விண் ஆகி நின்றார் மொழி விரும்பிஆற்றல் பெற்ற அவ் அண்ணலார் அஞ்சு எழுத்து ஓதிப்பால் தடம் புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால்.
சொற்பிரிப்பு
ஏற்றினார் அருள் தலைமிசைக் கொண்டு எழுந்து இறைஞ்சிவேற்றும் ஆகி விண் ஆகி நின்றார் மொழி விரும்பிஆற்றல் பெற்ற அவ் அண்ணலார் அஞ்செழுத்து ஓதிப்பால் தடம் புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
371
ஆதி தேவர் தம் திரு அருள் பெருமை யார் அறிந்தார்போத மாதவர் பனிமலர்ப் பொய்கையில் மூழ்கிமாதோர் பாகனார் மகிழும் ஐ ஆற்றில் ஓர் வாவிமீது தோன்றி வந்து எழுந்தனர் உலகெலாம் வியப்ப.
சொற்பிரிப்பு
ஆதி தேவர் தம் திருஅருள் பெருமையார் அறிந்தார்?போத மாதவர் பனிவரைப் பொய்கையில் மூழ்கிமாதொர் பாகனார் மகிழும் ஐயாற்றில் ஓர் வாவிமீது தோன்றி வந்து எழுந்தனர் உலகெலாம் வியப்ப.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
372
வம்புலாம் மலர் வாவியின் கரையில் வந்து ஏறிஉம்பர் நாயகர் திரு அருள் பெருமையை உணர்வார்எம் பிரான் தரும் கருணை கொல் இது என இரு கண்பம்பு தாரை நீர் வாவியில் படிந்து எழும் படியார்.
சொற்பிரிப்பு
வம்புலா மலர் வாவியின் கரையில் வந்து ஏறிஉம்பர் நாயகர் திருஅருள் பெருமையை உணர்வார்எம்பிரான் தரும் கருணைகொல் இது என இருகண்பம்பு தாரை நீர் வாவியில் படிந்து எழும் படியார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
373
மிடையும் நீள் கொடி வீதிகள் விளங்கிய ஐயாறுஉடைய நாயகர் சேவடி பணிய வந்து உறுவார்அடைய அப்பதி நிற்பவும் சரிப்பவும் ஆனபுடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன கண்டார்.
சொற்பிரிப்பு
மிடையும் நீள் கொடி வீதிகள் விளங்கிய ஐயாறுஉடைய நாயகர் சேவடி பணிய வந்து உறுவார்அடைய அப்பதி நிற்பவும் சரிப்பவும் ஆனபுடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன கண்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
374
பொன் மலைக் கொடியுடன் அமர்வெள்ளியம் பொருப்பில்தன்மை ஆம் படி சத்தியும் சிவமுமாம் சரிதைப்பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தேமன்னும் மாதவர் தம்பிரான் கோயில் முன் வந்தார்.
சொற்பிரிப்பு
பொன் மலைக்கொடி உடன் அமர் வெள்ளி அம் பொருப்பில்தன்மையாம் படி சத்தியும் சிவமுமாம் சரிதைப்பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தேமன்னு மாதவர் தம்பிரான் கோயில் முன் வந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
375
காணும் அப்பெருங் கோயிலும் கயிலை மால் வரையாய்ப்பேணும் மால் அயன் இந்திரன் முதல் பெருந்தேவர்பூணும் அன்போடு போற்றி இசைத்து எழும் ஒலி பொங்கத்தாணு மா மறை யாவையும் தனித் தனி முழங்க.
சொற்பிரிப்பு
காணும் அப்பெரும் கோயிலும் கயிலைமால் வரையாய்ப்பேணும் மால் அயன் இந்திரன் முதல்பெரும் தேவர்பூணும் அன்பொடு போற்றிசைத்து எழும் ஒலி பொங்கத்தாணு மாமறை யாவையும் தனித்தனி முழங்க.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
376
தேவர் தானவர் சித்தர் விச் சாதரர் இயக்கர்மேவு மாதவர் முனிவர்கள் புடையெலாம் மிடையக்காவி வாள் விழி அரம்பையர் கானமும் முழவும்தாவில் ஏழ் கடல் முழக்கினும் பெருகொலி தழைப்ப.
சொற்பிரிப்பு
தேவர் தானவர் சித்தர் விச்சாதரர் இயக்கர்மேவும் மாதவர் முனிவர்கள் புடை எலாம் மிடையக்காவி வாள்விழி அரம்பையர் கானமும் முழவும்தாவில் ஏழ்கடல் முழக்கினும் பெருகொலி தழைப்ப.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
377
கங்கையே முதல் தீர்த்தமாம் கடவுள் மா நதிகள்மங்கலம் பொலி புனல் பெரும் தடம் கொடு வணங்கஎங்கும் நீடிய பெரும் கண நாதர்கள் இறைஞ்சப்பொங்கியங்களால் பூத வேதாளங்கள் போற்ற.
சொற்பிரிப்பு
கங்கையே முதல் தீர்த்தமாம் கடவுள்மா நதிகள்மங்கலம் பொலி புனல் பெரும் தடம் கொடு வணங்கஎங்கும் நீடிய பெரும் கண நாதர்கள் இறைஞ்சப்பொங்கு இயங்களால் பூத வேதாளங்கள் போற்ற.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
378
அந்தண் வெள்ளி மால் வரை இரண்டாம் என அணைந்து ஓர்சிந்தை செய்திடச் செங்கண் மால் விடை எதிர் நிற்பமுந்தை மாதவப் பயன் பெறு முதன்மையால் மகிழ்ந்தேநந்தி எம்பிரான் நடு விடை ஆடி முன் நணுக.
சொற்பிரிப்பு
அந்தண் வெள்ளி மால் வரை இரண்டாம் என அணைந்தோர்சிந்தை செய்திடச் செங்கண்மால் விடை எதிர் நிற்பமுந்தை மாதவப் பயன் பெறு முதன்மையால் மகிழ்ந்தேநந்தி எம்பிரான் நடுஇடை ஆடி முன் நணுக.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
379
வெள்ளி வெற்பின் மேல் மரகதக் கொடி உடன் விளங்கும்தெள்ளு பேர் ஒளிப் பவள வெற்பு என இடப்பாகம்கொள்ளும் மா மலையாள் உடன் கூட வீற்று இருந்தவள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார்.
சொற்பிரிப்பு
வெள்ளி வெற்பின்மேல் மரகதக் கொடி உடன் விளங்கும்தெள்ளு பேர் ஒளிப் பவள வெற்பு என இடப் பாகம்கொள்ளு மாமலையாள் உடன் கூட வீற்று இருந்தவள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
380
கண்ட ஆனந்தக் கடவினைக் கண்களால் முகந்துகொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலையஅண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார்தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார்.
சொற்பிரிப்பு
கண்ட ஆனந்தக் கடலினைக் கண்களால் முகந்துகொண்டு கைகுவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலையஅண்டர் முன்பு நின்று ஆடினார்; பாடினார்; அழுதார்;தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார்?
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
381
முன்பு கண்டு கொண்டு அருளினார் அமுது உண்ண மூவாஅன்பு பெற்றவர் அளவு இலா ஆர்வம் முன் பொங்கப்பொன் பிறங்கிய சடையாரைப் போற்று தாண்டகங்கள்இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லையில் தவத்தோர்.
சொற்பிரிப்பு
முன்பு கண்டுகொண்டு அருளின் ஆர் அமுது உண்ண மூவாஅன்பு பெற்றவர் அளவு இலா ஆர்வம் முன் பொங்கப்பொன் பிறங்கிய சடையரைப் போற்று தாண்டகங்கள்இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லையில் தவத்தோர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
382
ஆயவாறு மற்று அவர் மனம் களிப்புறக் கயிலைமேய நாதர் தம் துணையொடும் வீற்று இருந்து அருளித்தூய தொண்டரும் தொழுது எதிர் நிற்க அக் கோலம்சேயது ஆக்கினார் திருவையாறு அமர்ந்தமை திகழ.
சொற்பிரிப்பு
ஆயவாறு மற்று அவர் மனம் களிப்பு உறக் கயிலைமேய நாதர் தம் துணையொடும் வீற்றிருந்து அருளித்தூய தொண்டரும் தொழுது எதிர் நிற்க அக் கோலம்சேயது ஆக்கினார் திருஐயாறு அமர்ந்தமை திகழ.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
383
ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட அடித் தொண்டர்மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்குச்செய்ய வேணியர் அருள் இதுவோ எனத் தெளிந்துவையம் உய்ந்திட கண்டமை பாடுவார் மகிழ்ந்து.
சொற்பிரிப்பு
ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட அடித் தொண்டர்மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்குச்செய்ய வேணியர் அருள் இதுவோ எனத் தெளிந்துவையம் உய்ந்திடக் கண்டமை பாடுவார் மகிழ்ந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
384
மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் என்னும்கோதறு தண் தமிழ்ச் சொல்லால் குலவு திருப்பதிகங்கள்வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம்காதல் துணையொடும் கூடக் கண்டேன் எனப் பாடி நின்றார்.
சொற்பிரிப்பு
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் என்னும்கோதறு தண்டமிழ்ச் சொல்லால் குலவு திருப்பதிகங்கள்வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம்காதல் துணையொடும் கூடக் கண்டேன் எனப்பாடி நின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
385
கண்டு தொழுது வணங்கிக் கண் நுதலார் தமைப் போற்றிக்கொண்ட திருத் தாண்டகங்கள் குறுந்தொகை நேரிசை அன்பின்மண்டு விருத்தங்கள் பாடி வணங்கித் திருத்தொண்டு செய்தேஅண்டர் பிரான் திருவையாறு அமர்ந்தனர் நாவுக்கு அரசர்.
சொற்பிரிப்பு
கண்டு தொழுது வணங்கிக் கண் நுதலார் தமைப் போற்றிக்கொண்ட திருத்தாண்டகங்கள் குறுந்தொகை, நேரிசை, அன்பின்மண்டு விருத்தங்கள் பாடி வணங்கித் திருத்தொண்டு செய்தேஅண்டர் பிரான் திருஐயாறு அமர்ந்தனர் நாவுக்கு அரசர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
386
நீடிய அப்பதி நின்று நெய்த்தானமே முதலாகமாடுயர் தானம் பணிந்து மழபாடியாரை வணங்கிப்பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து பணி செய்து போற்றித்தேடிய மாலுக்கு அரியார் திருப் பூந் துருத்தியைச் சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
நீடிய அப்பதி நின்று நெய்த்தானமே முதல் ஆகமாடு உயர் தானம் பணிந்து மழபாடியாரை வணங்கிப்பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து பணி செய்து போற்றித்தேடிய மாலுக்கு அரியார் திருப்பூந்துருத்தியைச் சேர்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
387
சேர்ந்து விருப்பொடும் புக்குத் திரு நட மாளிகை முன்னர்ச்சார்ந்து வலம் கொண்டு இறைஞ்சித் தம் பெருமான் திரு முன்புநேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்து ஒழியா அன்பு பொங்கஆர்ந்த கண்ணீர் மழை தூங்க அயர் உறும் தன்மையர் ஆனார்.
சொற்பிரிப்பு
சேர்ந்து விருப்பொடும் புக்குத் திருநட மாளிகை முன்னர்ச்சார்ந்து வலம்கொண்டு இறைஞ்சித் தம்பெருமான் திரு முன்புநேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்து ஒழியா அன்பு பொங்கஆர்ந்த கண் நீர்மழை தூங்க அயர்வு உறும் தன்மையர் ஆனார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
388
திருப்பூந் துருத்தி அமர்ந்த செஞ்சடையானை ஆன் ஏற்றுப்பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானைப் பொய்யிலியைக் கண்டேன் என்றுவிருப்புறு தாண்டகத்தோடு மேவிய காதல் விளைப்பஇருப்போம் திருவடிக்கீழ் நாம் என்னும் குறுந் தொகை பாடி.
சொற்பிரிப்பு
திருப்பூந்துருத்தி அமர்ந்த செஞ்சடையானை ஆன் ஏற்றுப்பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானைப் பொய் இலியைக் கண்டேன் என்றுவிருப்புறு தாண்டகத்தோடு மேவிய காதல் விளைப்பஇருப்போம் திருவடிக் கீழ் நாம் என்னும் குறுந்தொகை பாடி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
389
அங்கு உறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது என்றுபொங்கு தமிழ்ச் சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்துதங்கித் திருத் தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்றுத்திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார்.
சொற்பிரிப்பு
அங்குறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது என்றுபொங்கு தமிழ்ச்சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்துதங்கித் திருத்தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்றுத்திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம் ஆங்கு ஒன்று செய்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
390
பல் வகைத் தாண்டகத் தோடும் பரவும் தனித் தாண்டகமும்அல்லல் அறுப்பவர் தானத்து அடைவும் திருத் தாண்டகமும்செல் கதி காட்டிடப் போற்றும் திரு அங்க மாலையும் உள்ளிட்டுஎல்லையில் பன்மைத் தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார்.
சொற்பிரிப்பு
பல்வகைத் தாண்டகத்தோடும் பரவும் தனித் தாண்டகமும்அல்லல் அறுப்பவர் தானத்து அடைவு திருத்தாண்டகமும்செல்கதி காட்டிடப் போற்றும் திருஅங்க மாலையும் உள்ளிட்டுஎல்லையில் பன்மைத் தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
391
பொன்னி வலம் கொண்ட திருப் பூந்துருத்தி அவர் இருப்பக்கல் மனத்து வல் அமணர் தமை வாதில் கட்டு அழித்துத்தென்னவன் கூன் நிமிர்த்தி அருளித் திரு நீற்றின் ஒளி கண்டுமன்னிய சீர் சண்பை நகர் மறையவனார் வருகின்றார்.
சொற்பிரிப்பு
பொன்னி வலம் கொண்ட திருப்பூந்துருத்தி அவர் இருப்பக்கல் மனத்து வல் அமணர் தமை வாதில் கட்டு அழித்துத்தென்னவன் கூன் நிமிர்த்து அருளித் திருநீற்றின் ஒளிகண்டுமன்னிய சீர்ச் சண்பை நகர் மறையவனார் வருகின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
392
தீந்தமிழ் நாட்டு இடை நின்றும் எழுந்து அருளிச் செழும் பொன்னிவாய்ந்த வளம் தரு நாட்டு வந்து அணைந்தார் வாக்கினுக்குவேந்தர் இருந்தமை கேட்டு விரைந்து அவர்பால் செல்வன் எனப்பூந்துருத்தி வளம் பதியின் புறம்பு அணையில் வந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
தீந்தமிழ் நாட்டிடை நின்றும் எழுந்தருளிச் செழும் பொன்னிவாய்ந்த வளம் தரு நாட்டு வந்து அணைந்தார் வாக்கினுக்குவேந்தர் இருந்தமை கேட்டு விரைந்து அவர்பால் செல்வன் எனப்பூந்துருத்தி வளம்பதியின் புறம் பணையில் வந்து அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
393
சண்பை வருந் தமிழ் விரகர் எழுந்தருளத் தாங்கேட்டுமண் பரவும் பெருங் கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்துகண் பெருகுங் களிகொள்ளக் கண்டு இறைஞ்சும் காதலினால்எண் பெருகும் விருப்பு எய்த எழுந்து அருளி எதிர் சென்றார்.
சொற்பிரிப்பு
சண்பைவரும் தமிழ் விரகர் எழுந்தருளத் தாம் கேட்டுமண்பரவும் பெரும் கீர்த்தி வாகீசர் மன மகிழ்ந்துகண் பெருகும் களி கொள்ளக் கண்டு இறைஞ்சும் காதலினால்எண்பெருகும் விருப்பு எய்த எழுந்து அருளி எதிர்சென்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
394
காழியர் கோன் வரும் எல்லை கலந்து எய்திக் காதலித்தார்சூழும் இடைந்திடு நெருக்கில் காணாமே தொழுது அருளிவாழி அவர் தமைத் தாங்கும் மணிமுத்தின் சிவிகையினைத்தாழும் உடல் இது கொண்டு தாங்குவன் யான் எனத் தரித்தார்.
சொற்பிரிப்பு
காழியர் கோன் வரும் எல்லை கலந்து எய்திக் காதலித்தார்சூழும் மிடைந்திடு நெருக்கில் காணாமே தொழுதருளிவாழியவர் தமைத் தாங்கும் மணிமுத்தின் சிவிகையினைத்தாழும் உடல் இது கொண்டு தாங்குவன் யான் எனத் தரித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
395
வந்து ஒருவர் அறியாமே மறைந்த வடிவொடும் புகலிஅந்தணனார் ஏறி எழுந்து அருளி வரும் மணி முத்தின்சந்த மணிச் சிவிகையினைத் தாங்குவார் உடன் தாங்கிச்சிந்தை களிப்புற வருவார் தமையாரும் தெளிந்து இலரால்.
சொற்பிரிப்பு
வந்து ஒருவர் அறியாமே மறைந்த வடிவொடும் புகலிஅந்தணனார் ஏறி எழுந்து அருளி வரும் மணிமுத்தின்சந்த மணிச் சிவிகையினைத் தாங்குவார் உடன் தாங்கிச்சிந்தை களிப்பு உற வருவார் தமையாரும் தெளிந்திலரால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
396
திரு ஞான மாமுனிவர் அரசு இருந்த பூந் துருத்திக்குஅருகுகாக எழுந்து அருளி எங்கு உற்றார் அப்பர் எனஉருகா நின்று உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும்பெரு வாழ்வு வந்து எய்தப் பெற்று இங்கு உற்றேன் என்றார்.
சொற்பிரிப்பு
திருஞான மாமுனிவர் அரசு இருந்த பூந்துருத்திக்குஅருகு ஆக எழுந்தருளி எங்கு உற்றார் அப்பர் எனஉருகாநின்று உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும்பெருவாழ்வு வந்து எய்தப் பெற்று இங்குற்றேன் என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
397
பிள்ளையார் அதுகேளாப் பெருகு விரைவு உடன் இழிந்தேஉள்ளமிகு பதைப்பு எய்தி உடைய அரசினை வணங்கவள்ளலார் வாகீசர் அவர் வணங்கா முன் வணங்கத்துள்ளு மான் மறிக் கரத்தார் தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார்.
சொற்பிரிப்பு
பிள்ளையார் அது கேளாப் பெருகு விரைவுடன் இழிந்தேஉள்ளமிகு பதைப்பு எய்தி உடைய அரசினை வணங்கவள்ளலார் வாகீசர் அவர் வணங்கா முன் வணங்கத்துள்ளுவான் மறிக்கரத்தார் தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
398
கழு மலக் கோன் திருநாவுக்கு அரசருடன் கலந்து அருளிச்செழு மதியம் தவழ் சோலைப் பூந்துருத்தித் திருப்பதியின்மழுவினொடு மான் ஏந்தும் திருக்கரத்தார் மலர்த் தாள்கள்தொழுது உருகி இன்புற்றுத் துதி செய்து அங்கு உடன் இருந்தார்.
சொற்பிரிப்பு
கழுமலக் கோன் திருநாவுக்கு அரசர் உடன் கலந்து அருளிச்செழுமதியம் தவழ் சோலைப் பூந்துருத்தித் திருப்பதியின்மழுவினொடு மான் ஏந்து திருக்கரத்தார் மலர்த்தாள்கள்தொழுது உருகி இன்புற்றுத் துதி செய்து அங்கு உடன் இருந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
399
வல் அமணர் தமை வாதில் வென்றதுவும் வழுதி பால்புல்லிய கூன் நிமிர்த்ததுவும் தண் பொருந்தப் புனல் நாட்டில்எல்லை இலாத் திரு நீறு வளர்த்து அதுவும் இருந் தவத்தோர்சொல்ல அது கேட்டு உவந்தார் தூய புகழ் வாகீசர்.
சொற்பிரிப்பு
வல்அமணர் தமைவாதில் வென்றதுவும், வழுதி பால்புல்லிய கூன் நிமிர்த்ததுவும் தண் பொருந்தப் புனல் நாட்டில்எல்லை இல்லாத் திருநீறு வளர்த்ததுவும் இருந்தவத்தோர்சொல்ல அது கேட்டு உவந்தார் தூயபுகழ் வாகீசர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
400
பண்புடைய பாண்டி மா தேவியார் தம் பரிவும்நண்புடைய குலச் சிறையார் பெருமையும் ஞானத் தலைவர்எண் பெருக உரைத்து அருள எல்லையில் சீர் வாகீசர்மண் குலவு தமிழ் நாடு காண்பதற்கு மனம் கொண்டார்.
சொற்பிரிப்பு
பண்பு டைய பாண்டிமா தேவியார் தம்பரிவும்நண்புடைய குலச்சிறையார் பெருமையும் ஞானத்தலைவர்எண்பெருக உரைத்து அருள எல்லையில் சீர் வாகீசர்மண்குலவு தமிழ்நாடு காண்பதற்கு மனம் கொண்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
401
பிரம புரத் திரு முனிவர் பெரும் தொண்டை நல் நாட்டில்அரன் உறையும் தானங்கள் அணைந்து இறைஞ்சிப் பாடுதற்கு அங்குஉரன் உடைய திரு நாவுக்கு அரசர் உரை செய்து அருளப்புரம் எரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுது அகன்றார்.
சொற்பிரிப்பு
பிரமபுரத் திருமுனிவர் பெரும்தொண்டை நன்நாட்டில்அரனுறையும் தானங்கள் அணைந்து இறைஞ்சிப் பாடுதற்கு அங்குஉரன் உடைய திருநாவுக்கு அரசர் உரை செய்தருளப்புரம் எரித்தார் திருமகனார் பூந்துருத்தித் தொழுது அகன்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
402
ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்றப் பதி நின்றும்பாண்டி நாட்டு எழுந்து அருளும் பான்மையராய்த் தென் திசை போய்க்காண் தகைய திருப் புத்தூர் பணிந்து ஏத்திக் கதிர் மதியம்தீண்டு கொடி மதில் மதுரைத் திரு ஆலவாய் சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்று அப் பதி நின்றும்பாண்டிநாட்டு எழுந்தருளும் பான்மையராய்த் தென்திசைப் போய்க்காண்டகைய திருப்புத்தூர் பணிந்து ஏத்திக் கதிர்மதியம்தீண்டு கொடி மதில் மதுரைத் திருஆலவாய் சேர்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
403
சென்று அணைந்து மதுரையினில் திருந்திய நூல் சங்கத்துள்அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில்முன்றிலினை வலம் கொண்டு முன் இறைஞ்சி உள் புக்குவன் தனி மால் விடையாரை வணங்கி மகிழ்வொடும் திளைத்தார்.
சொற்பிரிப்பு
சென்று அணைந்து மதுரையினில் திருந்திய நூல் சங்கத்துள்அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில்முன்றிலினை வலம்கொண்டு முன் இறைஞ்சி உள்புக்குவன் தனிமால் விடையாரை வணங்கி மகிழ்வொடும் திளைத்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
404
எய்திய பேர் ஆனந்த இன்பத்தின் இடை அழுந்திமொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்துச்செய் தவத்தோர் தாண்டகச் செந்தமிழ் பாடிப் புறத்து அணைவார்கை தொழுது பணிந்து ஏத்தித் திரு உள்ளம் களி சிறந்தார்.
சொற்பிரிப்பு
எய்தியபேர் ஆனந்த இன்பத்தின் இடைஅழுந்திமொய்திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்துச்செய்தவத்தோர் தாண்டகச் செந்தமிழ் பாடிப் புறத்து அணைவார்கைதொழுது பணிந்து ஏத்தித் திருஉள்ளம் களிசிறந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
405
சீர் திகழும் பாண்டிமா தேவியார் திரு நீற்றின்சார்வு அடைய கூன் நிமிர்ந்த தென்னவனார் தம் உடனேபார் பரவும் குலச் சிறையார் வாகீசர் தமைப் பணி உற்றுஆரகிலாக் காதல் மிக அடி போற்ற அங்கு இருந்தார்.
சொற்பிரிப்பு
சீர் திகழும் பாண்டிமா தேவியார் திருநீற்றின்சார்வு அடைய கூன் நிமிர்ந்த தென்னவனார் தம் உடனேபார் பரவும் குலச்சிறையார் வாகீசர் தமைப் பணிவுற்றுஆரகிலாக் காதல் மிக அடிபோற்ற அங்கு இருந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
406
திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சுடரைச் செழும் பொருள் நூல்தருவானை நேர் இசையும் தாண்டகமும் முதலானபெரு வாய்மைத் தமிழ் பாடிப் பேணு திருப்பணி செய்துமருவார் தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார்.
சொற்பிரிப்பு
திருஆலவாய் அமர்ந்த செஞ்சுடரைச் செழும்பொருள் நூல்தருவானை நேரிசையும் தாண்டகமும் முதலானபெருவாய்மைத் தமிழ் பாடிப் பேணு திருப்பணி செய்துமருவார் தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
407
கொடி மாடம் நிலவு திருப் பூவணத்துக் கோயிலின் உள்நெடியானுக்கு அறிவு அரியார் நேர் தோன்ற கண்டு இறைஞ்சிவடிவேலு திரிசூலத் தாண்டகத்தால் வழுத்திப் போய்ப்பொடி நீடு திருமேனிப் புனிதர் பதி பிற பணிவார்.
சொற்பிரிப்பு
கொடிமாடம் நிலவு திருப் பூவணத்துக் கோயிலின் உள்நெடியானுக்கு அறிவு அரியார் நேர் தோன்றக் கண்டு இறைஞ்சிவடிவேறு திரிசூலத் தாண்டகத்தால் வழுத்திப் போய்ப்பொடி நீடு திருமேனிப் புனிதர் பதி பிற பணிவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
408
தென் இலங்கை இராவணன் தன் சிரம் ஈரைந்தும் துணித்தமன்னவன் ஆம் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்தபிஞ்ஞகரைத் தொழுவதற்கு நினைந்து போய்ப் பெரு மகிழ்ச்சிதுன்னி மனம் கரைந்து உருகத் தொழுது எழுந்தார் சொல் அரசர்.
சொற்பிரிப்பு
தென் இலங்கை இராவணன் தன் சிரம் ஈர்ஐந்தும் துணித்தமன்னவனாம் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்தபிஞ்ஞகரைத் தொழுவதற்கு நினைந்து போய்ப் பெருமகிழ்ச்சிதுன்னி மனம் கரைந்து உருகத் தொழுது எழந்தார் சொல்அரசர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
409
தேவர் தொழும் தனி முதலைத் திரு இராமேச்சுரத்துமேவிய சங்கரனை எதிர் நின்று விருப்புறு மொழியால்பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடிநாவரசர் திருத் தொண்டு நலம் பெருகச் செய்து அமர்ந்தார்.
சொற்பிரிப்பு
தேவர்தொழும் தனி முதலைத் திருஇராமேச்சுரத்துமேவிய சங்கரனை எதிர் நின்று விருப்பு உறுமொழியால்பாவு திரு நேரிசைகள் முதலான தமிழ்பாடிநாவரசர் திருத்தொண்டு நலம் பெருகச் செய்து அமர்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
410
அங்குறைந்து கண் நுதலார் அடி சூடி அகன்று போய்ப்பொங்கு தமிழ்த் திரு நாட்டுப் புறம் பணை சூழ் நெல் வேலிசெங்கண் விடையார் மன்னும் திருக் கானப் பேர் முதலாம்எங்கும் நிகழ் தானங்கள் எல்லாம் புக்கு இறைஞ்சுவார்.
சொற்பிரிப்பு
அங்கு உறைந்து கண்நுதலார் அடி சூடி அகன்றுபோய்ப்பொங்கு தமிழ்த் திருநாட்டுப் புறம்பணை சூழ் நெல்வேலிசெங்கண் விடையார் மன்னும் திருக்கானப்பேர் முதலாஎங்கும் நிகழ் தானங்கள் எல்லாம் புக்கு இறைஞ்சுவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
411
தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடிவழுவில் திருப்பணி செய்து மனம் கசிவு உற்று எப் பொழுதும்ஒழுகிய கண் பொழி புனலும் ஓவாது சிவன் தாள்கள்தழுவிய சிந்தையில் உணர்வும் தங்கிய நீர்மையில் சரித்தார்.
சொற்பிரிப்பு
தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ்பாடிவழுவில் திருப்பணி செய்து மனம் கசிவுற்று எப்பொழுதும்ஒழுகிய கண் பொழி புனலும் ஓவாது சிவன் தாள்கள்தழுவிய சிந்தையில் உணர்வும் தங்கிய நீர்மையில் சரித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
412
தேன் பொழியும் செந்தமிழ் நாட்டினில் எங்கும் சென்று இறைஞ்சிப்பாம்பு அணிவார் தமைப் பணிவார் பொன்னி நாடது அணைந்துவாம் புனல் சூழ் வள நகர்கள் பின்னும் போய் வணங்கியேபூம் புகலூர் வந்து அடைந்தார் பொய்ப் பாசம் போக்குவார்.
சொற்பிரிப்பு
தேம்பொழியும் செந்தமிழ்நாட்டினில் எங்கும் சென்று இறைஞ்சிப்பாம்பு அணிவார் தமைப் பணிவார் பொன்னிநாடு அது அணைந்துவாம்புனல் சூழ் வளநகர்கள் பின்னும்போய் வணங்கியேபூம்புகலூர் வந்து அடைந்தார் பொய் பாசம் போக்குவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
413
பொய்கை சூழ் பூம் புகலூர்ப் புனிதர் மலர்த் தாள் வணங்கிநையும் மனப் பரிவினோடும் நாள் தோறும் திரு முன்றில்கை கலந்த திருத் தொண்டு செய்து பெரும் காதல் உடன்வைகு நாள் எண் இறந்த வண் தமிழ் மாலைகள் மொழிவார்.
சொற்பிரிப்பு
பொய்கை சூழ் பூம்புகலூர்ப் புனிதர் மலர்த்தாள் வணங்கிநையு மனப் பரிவினொடும் நாடோறும் திருமுன்றில்கைகலந்த திருத்தொண்டு செய்து பெரும் காதல் உடன்வைகுநாள் எண் இறந்த வண்டமிழ் மாலைகள் மொழிவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
414
நின்ற திருத் தாண்டகமும் நீடு தனித் தாண்டகமும்மன்று உறைவார் வாழ் பதிகள் வழுத்து திருத் தாண்டகமும்கொன்றை மலர்ச் சடையார் பால் குறைந்த திரு நேர் இசையும்துன்று தனி நேர் இசையும் முதலான தொடுத்து அமைத்தார்.
சொற்பிரிப்பு
நின்ற திருத்தாண்டகமும் நீடு தனித் தாண்டகமும்மன்று உறைவார் வாழ்பதிகள் வழுத்து திருத்தாண்டகமும்கொன்றைமலர்ச் சடையார்பால் குறைந்த திருநேரிசையும்துன்று தனிநேரிசையும் முதலான தொடுத்து அமைத்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
415
ஆருயிரின் திரு விருத்தம் தச புராணத்து அடைவும்பார் பரவும் பாவ நாசப் பதிகம் பன்முறையும்நேர் பட நின்று அறை கூவும் திருப்பதிகம் முதல் பிறவும்பேர் அருளின் கடல் அளிக்கும் பெருமானைப் பாடினார்.
சொற்பிரிப்பு
ஆர்உயிரின் திருவிருத்தம் தசபுராணத்து அடைவும்பார்பரவும் பாவ நாசப் பதிகம் பன்முறையும்நேர்படநின்று அறை கூவும் திருப்பதிகம் முதல் பிறவும்பேரருளின் கடல் அளிக்கும் பெருமானைப் பாடினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
416
அந் நிலைமையினில் ஆண்ட அரசு பணி செய்ய அவர்நல் நிலைமை காட்டுவார் நம்பர் திரு மணி முன்றில்தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும்பொன்னினொடு நவமணிகள் பொலிந்து இலங்க அருள் செய்தார்.
சொற்பிரிப்பு
அந்நிலைமையினில் ஆண்ட அரசு பணி செய்ய, அவர்நன்னிலைமை காட்டுவார் நம்பர் திரு மணி முன்றில்தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும்பொன்னினொடு நவமணிகள் பொலிந்து இலங்க அருள்செய்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
417
செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கொவையும்உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்கஎம் பெருமான் வாகீசர் உழ வாரத்தினில் ஏந்திவம்பலர் மென் பூங்கமல வாவியினில் புக எறிந்தார்.
சொற்பிரிப்பு
செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கு எவையும்உம்பர்பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்கஎம்பெருமான் வாகீசர் உழவாரத்தினில் ஏந்திவம்பு அலர் மென் பூங்கமல வாவியினில் புக எறிந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
418
புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும்சொல்லோடும் வேறு பாடு இலா நிலைமை துணிந்து இருந்தநல்லோர் முன் திருப் புகலூர் நாயகனார் திரு அருளால்வில்லோடு நுதல் மடவார் விசும்பூடு வந்து இழிந்தார்.
சொற்பிரிப்பு
புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும்சொல்லோடும் வேறுபாடு இலா நிலைமை துணிந்து இருந்தநல்லோர் முன் திருப்புகலூர் நாயகனார் திருஅருளால்வில் ஓடும் நுதல் மடவார் விசும்பு ஊடு வந்து இழிந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
419
வானகம் மின்னுக் கொடிகள் வந்து இழிந்தால் என வந்துதான நிறை சுருதிகளில் தகும் அலங்காரத் தன்மைகான அமுதம் பரக்கும் கனிவாயில் ஒளி பரப்பப்பானல் நெடுங் கண்கள் வெளி பரப்பி இசை பாடுவார்.
சொற்பிரிப்பு
வானக மின்னுக்கொடிகள் வந்து இழிந்தால் என வந்துதான நிறை சுருதிகளில் தகும் அலங்காரத் தன்மைகான அமுதம் பரக்கும் கனிவாயில் ஒளிபரப்பப்பானல் நெடும் கண்கள் வெளி பரப்பி இசை பாடுவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
420
கற்பகப் பூந்தளிர் அடி போம் காமரு சாரிகை செய்யஉற்பலம் மென் முகிழ் விரல் வட்டு அணையோடும் கை பெயரப்பொற்புறும் அக் கையின் வழிப் பொரு கயல் கண் புடை பெயரஅற்புத பொன் கொடி நுடங்கி ஆடுவபோல் ஆடுவார்.
சொற்பிரிப்பு
கற்பகப் பூந்தளிர் அடி போம் காமரு சாரிகை செய்யஉற்பல மென் முகிழ்விரல் வட்டணையோடும் கைபெயரப்பொற்புஉறும் அக் கையின் வழிப் பொருகயல் கண் புடை பெயரஅற்புதப் பொன் கொடி நுடங்கி ஆடுவ போல் ஆடுவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
421
ஆடுவார் பாடுவார் அலர் மாரி மேல் பொழிவார்கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடை நுடங்கஓடுவார் மார வேளுடன் மீள்வார் ஒளி பெருகநீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்.
சொற்பிரிப்பு
ஆடுவார் பாடுவார் அலர் மாரி மேல் பொழிவார்கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடை நுடங்கஓடுவார் மாரவேள் உடன் மீள்வார்; ஒளி பெருகநீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
422
இத் தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரியஅத்தனார் திருவடிக் கீழ் நினைவு அகலா அன்பு உருகும்மெய்த் தன்மை உணர்வு உடைய விழுத் தவத்து மேலோர் தம்சித்த நிலை திரியாது செய் பணியின் தலை நின்றார்.
சொற்பிரிப்பு
இத்தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரியஅத்தனார் திருவடிக் கீழ் நினைவு அகலா அன்பு உருகும்மெய்த்தன்மை உணர்வு உடைய விழுத்தவத்து மேலோர் தம்சித்த நிலை திரியாது செய் பணியின் தலைநின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
423
இம் மாயப் பவத் தொடக்காம் இருவினைகள் தமை நோக்கிஉம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர்அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன் மின் நீர் என்றுபொய்ம் மாயப் பெருங் கடலுள் எனும் திருத் தாண்டகம் புகன்றார்.
சொற்பிரிப்பு
இம்மாயப் பவத் தொடக்காம் இருவினைகள் தமை நோக்கிஉம்மால் இங்கு என்ன குறை உடையேன் நான்? திருஆரூர்அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன்மின் நீர் என்றுபொய்ம்மாயப் பெருங்கடல் உள் எனும் திருத்தாண்டகம் புகன்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
424
மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வசக்காதலர் புரிந்து ஒழுகும் கை தவங்கள் செய்திடவும்பேதம் இலா ஓர் உணர்வில் பெரிய வரைப் பெயர்விக்கயாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் அகன்றார்.
சொற்பிரிப்பு
மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வசக்காதல் அவர் புரிந்து ஒழுகும் கைதவங்கள் செய்திடவும்பேதம் இலா ஓர் உணர்வில் பெரியவரைப் பெயர்விக்கயாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் அகன்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
425
இந் நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்தமன்னிய அன்பு உறு பத்தி வடிவு ஆன வாகீசர்மின் நிலவும் சடையார் தம் மெய்ப் பொருள் தான் எய்த வரும்அந்நிலைமை அணித்து ஆகச் சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார்.
சொற்பிரிப்பு
இந்நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்தமன்னிய அன்பு உறுபத்தி வடிவு ஆன வாகீசர்மின்நிலவும் சடையார்தம் மெய்ப் பொருள்தான் எய்த வரும்அந்நிலைமை அணித்தாகச் சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
426
மன்னிய அந்தக் கரணம் மருவுதலைப் பாட்டினால்தன்னுடைய சரண் ஆன தமியேனைப் புகலூரன்என்னை இனிச் சேவடிக்கீழ் இருத்திடும் என்று எழுகின்றமுன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார்.
சொற்பிரிப்பு
மன்னிய அந்தக்கரணம் மருவு தலைப் பாட்டினால்தன் உடைய சரண் ஆன தமியேனைப் புகலூரன்என்னை இனிச் சேவடிக்கீழ் இருத்திடும் என்று எழுகின்றமுன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
427
மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திருத் தாண்டகத்தைப்புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் எனப் புகன்றுநண்ணரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகிஅண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார்.
சொற்பிரிப்பு
மண்முதலாம் உலகு ஏத்த மன்னு திருத் தாண்டகத்தைப்புண்ணியா! உன் அடிக்கே போதுகின்றேன் எனப் புகன்றுநண்ணரிய சிவானந்த ஞான வடிவே ஆகிஅண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
428
வானவர்கள் மலர் மாரி மண் நிறைய விண் உலகின்மேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல்யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சிதான் நிறைந்த சித்திரையில் சதயம் ஆம் திரு நாளில்.
சொற்பிரிப்பு
வானவர்கள் மலர்மாரி மண் நிறைய விண் உலகின்மேல் நிறைந்த ஐந்து பேர் இய ஒலியும் விரிஞ்சன் முதல்யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெருமகிழ்ச்சிதான் நிறைந்த சித்திரையில் சதயமாம் திருநாளில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
429
அடியனேன் ஆதரவால் ஆண்ட அரசின் சரிதப்படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் அப் பர முனிவன்கடி மலர் மென் சேவடிகள் கை தொழுது குலச் சிறையார்முடிவில் புகழ்த் திருத் தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன்.
சொற்பிரிப்பு
அடியனேன் ஆதரவால் ஆண்ட அரசின் சரிதப்படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் அப் பரமுனிவன்கடிமலர் மென் சேவடிகள் கை தொழுது குலச்சிறையார்முடிவில் புகழ்த் திருத்தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.