திருமுறை 12 · 12.026 · 60

சண்டேசுர நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

பூந்தண் பொன்னி எந் நாளும் பொய்யாது அளிக்கும் புனல் நாட்டுவாய்ந்த மண்ணித் தென் கரையில் மன்ன முன் நாள் வரை கிழியஏந்தும் அயில் வேல் நிலை காட்டி இமையோர் இகல் வெம் பகை கடக்கும்சேந்தன் அளித்த திருமறையோர் மூதூர் செல்வச் சேய்ஞலூர்.
சொற்பிரிப்பு
பூந்தண் பொன்னி எந்நாளும் பொய்யாது அளிக்கும் புனல் நாட்டுவாய்ந்த மண்ணித் தென்கரையில் மன்ன முன்னாள் வரை கிழியஏந்தும் அயில் வேல் நிலை காட்டி இமையோர் இகல் வெம்பகை கடக்கும்சேந்தன் அளித்த திருமறையோர் மூதூர் செல்வச் சேய்ஞலூர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

செம்மை வெண்ணீற்று ஒருமையினார் இரண்டு பிறப்பின் சிறப்பினார்மும்மைத் தழலோம்பிய நெறியார் நான்கு வேதம் முறை பயின்றார்தம்மை ஐந்து புலனும் பின் செல்லும் தகையார் அறுதொழிலின்மெய்ம்மை ஒழுக்கம் ஏழு உலகும் போற்றும் மறையோர் விளங்குவது.
சொற்பிரிப்பு
செம்மை வெண்நீற்று ஒருமையினார்; இரண்டு பிறப்பின் சிறப்பினார்மும்மைத் தழல் ஓம்பிய நெறியார்; நான்கு வேதம் முறை பயின்றார்;தம்மை ஐந்து புலனும் பின் செல்லும் தகையார்; அறு தொழிலின்மெய்ம்மை ஒழுக்கம் ஏழ் உலகம் போற்றும் மறையோர் விளங்குவது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கோதில் மான் தோல் புரி முந்நூல் குலவு மார்பில் குழைக் குடுமிஓதுபுடை சூழ் சிறுவர்களும் உதவும் பெருமை ஆசானும்போதின் விளங்கும் தாரகையும் மதியும் போலப் புணர் மடங்கள்மீது முழங்கு முகில் ஒதுங்க வேத ஒலிகள் முழங்குவன.
சொற்பிரிப்பு
கோதில் மான்தோல் புரி முந்நூல் குலவு மார்பில், குழைக்குடுமிஓது கிடை சூழ் சிறுவர்களும் உதவும் பெருமை ஆசானும்போதின் விளங்கும் தாரகையும் மதியும் போலப் புணர்மடங்கள்மீது முழங்கு முகில் ஒதுங்க வேத ஒலிகள் முழங்குவன.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

யாகம் நிலவும் சாலை தொறும் மறையோர் ஈந்த அவியுணவின்பாகம் நுகர வரும் மாலும் அயனும் ஊரும் படர் சிறைப்புள்மாகம் இகந்து வந்து இருக்கும் சேக்கை எனவும் வானவர் கோன்நாகம் அணையும் கந்து எனவும் நாட்டும் யூப ஈட்டமுள.
சொற்பிரிப்பு
யாகம் நிலவும் சாலைதொறும் மறையோர் ஈந்த அவி உணவின்பாகம் நுகர வருமாலும் அயனும் ஊரும் படர்சிறைப்புள்மாகம் இகந்து வந்து இருக்கும் சேக்கை எனவும் வானவர்கோன்நாகம் அணையும் கந்து எனவும் நாட்டும் யூப ஈட்டம் உள.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

தீம் பால் ஒழுகப் பொழுது தொறும் ஓம தேனுச் செல்வனவும்தாம் பாடிய சாமம் கணிப்போர் சமிதை இடம் கொண்டு அணைவனவும்பூம் பாசடைநீர்த் தடம் மூழ்கி மறையோர் மகளிர் புகுவனவும்ஆம் பான்மையினில் விளங்குவன அணி நீள் மறுகு பலவுமுள.
சொற்பிரிப்பு
தீம்பால் ஒழுகப் பொழுதுதொறும் ஓம தேனுச் செல்வனவும்தாம் பாடிய சாமம் கணிப்போர் சமிதை இடக்கொண்டு அணைவனவும்பூம்பாசடை நீர்த் தடம் மூழ்கி மறையோர் மகளிர் புகுவனவும்ஆம்பான்மையினில் விளங்குவன அணி நீள் மறுகு பலவும் உள.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வாழ் பொன் பதி மற்று அதன் மருங்கு மண்ணித் திரைகள் வயல் வரம்பின்தாழ்வில் தரளம் சொரி குலைப்பால் சமைத்த யாகத் தடம் சாலைசூழ் வைப்பு இடங்கள் நெருங்கியுள தொடங்கு சடங்கு முடித்து ஏறும்வேள்வித் தலைவர் பெருந்தேர்கள் விண்ணோர் ஏறும் விமானங்கள்.
சொற்பிரிப்பு
வாழ் பொன் பதி மற்று அதன் மருங்கு மண்ணித் திரைகள் வயல் வரம்பின்தாழ்வில் தரளம் சொரி குலைப்பால் சமைத்த யாகத் தடம்சாலைசூழ் வைப்பு இடங்கள் நெருங்கி உள தொடங்கு சடங்கு முடித்து ஏறும்வேள்வித் தலைவர் பெருந்தேர்கள் விண்ணோர் ஏறும் விமானங்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மடையில் கழுநீர் செழுநீர் சூழ்வயலில் சாலிக் கதிர்க்கற்றைப்புடையில் சுரும்பு மிடை கமுகு புனலில் பரம்பு பூம்பாளைஅடையில் பயிலுந் தாமரை நீள் அலரில் துயிலும் கயல்கள் வழிநடையில் படர்மென் கொடி மௌவல் நனையில் திகழும் சினைக் காஞ்சி.
சொற்பிரிப்பு
மடையில் கழுநீர், செழுநீர் சூழ் வயலில் சாலிக் கதிர்க்கற்றைப்,புடையில் சுரும்பு மிடை கமுகு, புனலில் பரம்பு பூம்பாளை,அடையில் பயிலும் தாமரை,நீள் அலரில் துயிலும் கயல்கள்,வழிநடையில் படர் மென் கொடி மௌவல், நனையில் திகழும் சினைக்காஞ்சி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

சென்னி அபயன் குலோத்துங்கச் சோழன் தில்லைத் திரு எல்லைபொன்னின் மயம் ஆக்கிய வளவர் போர் ஏறு என்றும் புவி காக்கும்மன்னர் பெருமான் அநபாயன் வருந் தொல் மரபின் முடி சூட்டும்தன்மை நிலவு பதி ஐந்தின் ஒன்றாய் நீடும் தகைத்து அவ்வூர்.
சொற்பிரிப்பு
சென்னி அபயன், குலோத்துங்கச் சோழன், தில்லைத் திருஎல்லைபொன்னின் மயம் ஆக்கிய வளவர் போர் ஏறு, என்றும் புவி காக்கும்மன்னர் பெருமான் அநபாயன் வரும் தொல்மரபின் முடி சூட்டும்தன்மை நிலவு பதி ஐந்தின் ஒன்றாய் நீடும் தகைத்து அவ்ஊர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பண்ணின் பயனாம் நல் இசையும் பாலின் பயனாம் இன் சுவையும்கண்ணின் பயனாம் பெருகு ஒளியும் கருத்தின் பயனாம் எழுத்து ஐந்தும்விண்ணின் பயனாம் பொழி மழையும் வேதப் பயனாம் சைவமும் போல்மண்ணின் பயனாம் அப்பதியின் வளத்தின் பெருமை வரம்பு உடைத்தோ.
சொற்பிரிப்பு
பண்ணின் பயனாம் நல்இசையும், பாலின் பயனாம் இன்சுவையும்,கண்ணின் பயனாம் பெருகுஒளியும், கருத்தின் பயனாம் எழுத்து அஞ்சும்,விண்ணின் பயனாம் பொழி மழையும், வேதப் பயனாம் சைவமும் போல்மண்ணின் பயனாம் அப்பதியின் வளத்தின் பெருமை வரம்பு உடைத்தோ?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பெருமை பிறங்கும் அப்பதியின் மறையோர் தம்முள் பெருமனை வாழ்தருமம் நிலவு காசிப கோத்திரத்துத் தலைமை சால் மரபில்அருமை மணியும் அளித்ததுவே நஞ்சும் அளிக்கும் அரவு போல்இருமை வினைக்கும் ஒரு வடிவு ஆம் எச்ச தத்தன் உளனானான்.
சொற்பிரிப்பு
பெருமை பிறங்கும் அப்பதியின் மறையோர் தம்உள் பெருமனை வாழ்தருமம் நிலவு காசிப கோத்திரத்துத் தலைமை சால் மரபில்அருமை மணியும் அளித்து அதுவே நஞ்சும் அளிக்கும் அரவு போல்இருமை வினைக்கும் ஒரு வடிவாம் எச்ச தத்தன் உளன் ஆனான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

மற்றை மறையோன் திரு மனைவி வாய்ந்த மரபின் வந்து உதித்தாள்சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கைத் தொழிலாள் உலகில் துணைப் புதல்வர்பெற்று விளங்கும் தவம் செய்தாள் பெறும் பேறு எல்லைப் பயன் பெறுவாள்பற்றை எறியும் பற்றுவரச் சார்பாய் உள்ள பவித்திரையாம்.
சொற்பிரிப்பு
மற்றை மறையோன் திருமனைவி வாய்ந்த மரபின் வந்து உதித்தாள்சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கைத் தொழிலாள், உலகில் துணைப்புதல்வர்பெற்று விளங்கும் தவம் செய்தாள், பெறும் பேறு எல்லைப் பயன் பெறுவாள்;பற்றை எறியும் பற்று வரச் சார்பாய் உள்ள பவித்திரையாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

நன்றி புரியும் அவர் தம் பால் நன்மை மறையின் துறை விளங்கஎன்றும் மறையோர் குலம் பெருக ஏழு புவனங்களும் உய்யமன்றில் நடம் செய்பவர் சைவ வாய்மை வளர மா தவத்தோர்வென்றிவிளங்க வந்து உதயம் செய்தார் விசார சருமனார்.
சொற்பிரிப்பு
நன்றி புரியும் அவர் தம்பால் நன்மை மறையின் துறை விளங்க,என்றும் மறையோர் குலம் பெருக, ஏழு புவனங்களும் உய்ய,மன்றில் நடம் செய்பவர் சைவ வாய்மை வளர, மாதவத்தோர்வென்றி விளங்க வந்து உதயம் செய்தார் விசார சருமனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

ஐந்து வருடம் அவர்க்கு அணைய அங்கம் ஆறும் உடன் நிறைந்தசந்த மறைகள் உட்பட முன் தலைவர் மொழிந்த ஆகமங்கள்முந்தை அறிவின் தொடர்ச்சியினால் முகைக்கு மலரின் வாசம் போல்சிந்தை மலர உடன் மலரும் செவ்வி உணர்வு சிறந்ததால்.
சொற்பிரிப்பு
ஐந்து வருடம் அவர்க்கு அணைய அங்கம் ஆறும் உடன்நிறைந்தசந்த மறைகள் உட்பட முன் தலைவர் மொழிந்த ஆகமங்கள்முந்தை அறிவின் தொடர்ச்சியினால் முகைக்கும் மலரின் வாசம்போல்சிந்தை மலர உடன்மலரும் செவ்வி உணர்வு சிறந்ததால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

நிகழும் முறைமை ஆண்டு ஏழும் நிரம்பும் பருவம் வந்து எய்தப்புகழும் பெருமை உப நயனப் பொருவில் சடங்கு முடித்து அறிவின்இகழு நெறிய அல்லாத எல்லாம் இயைந்த எனினும் தம்திகழு மரபின் ஓது விக்கும் செய்கை பயந்தார் செய்வித்தார்.
சொற்பிரிப்பு
நிகழும் முறைமை ஆண்டு ஏழும் நிரம்பும் பருவம் வந்து எய்தப்புகழும் பெருமை உபநயனப் பொருவில் சடங்கு முடித்து அறிவின்இகழும் நெறிய அல்லாத எல்லாம் இயைந்த எனினும் தம்திகழும் மரபின் ஓதுவிக்கும் செய்கை பயந்தார் செய்வித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

குலவு மறையும் பல கலையும் கொளுத்துவதன் முன் கொண்டு அமைந்தநிலவும் உணர்வின் திறம் கண்டு நிறுவும் மறையோர் அதிசயித்தார்அலகில் கலையின் பொருட்கு எல்லை ஆடும் கழலே எனக் கொண்டசெலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார் சிறிய பெருந் தகையார்.
சொற்பிரிப்பு
குலவு மறையும் பலகலையும் கொளுத்துவதன் முன் கொண்டு அமைந்தநிலவும் உணர்வின் திறம் கண்டு நிறுவும் மறையோர் அதிசயித்தார்;“அலகில் கலையின் பொருட்கு எல்லை ஆடும் கழலே” எனக் கொண்டசெலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார் சிறிய பெருந்தகையார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

நடமே புரியும் சேவடியார் நம்மை உடையார் எனும் மெய்ம்மைஉடனே தோன்றும் உணர்வின் கண் ஒழியாது ஊறும் வழி அன்பின்கடனே இயல்பாய் முயற்றி வரும் காதல் மேல்மேல் எழும் கருத்தின்திடம் நேர் நிற்கும் செம்மலார் திகழும் நாளில் ஆங்கு ஒரு நாள்.
சொற்பிரிப்பு
“நடமே புரியும் சேவடியார் நம்மை உடையார்” எனும் மெய்ம்மைஉடனே தோன்றும் உணர்வின்கண் ஒழியாது ஊறும் வழி அன்பின்கடனே இயல்பாய் முயற்றி வரும் காதல் மேன்மேல் எழும் கருத்தின்திடம் நேர் நிற்கும் செம்மலார் திகழும் நாளில் ஆங்கு ஒருநாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

ஓது கிடையின் உடன் போவார் ஊர் ஆன் நிரையின் உடன் புக்கபோது மற்று அங்கு ஒரு புனிற்றா போற்றும் அவன் மேல் மருப்பு ஓச்சயாதும் ஒன்றும் கூசாதே எடுத்த கோல் கொண்டு அவன் புடைப்பமீது சென்று மிகும் பரிவால் வெகுண்டு விலக்கி மெய் உணர்ந்து.
சொற்பிரிப்பு
ஓது கிடையின் உடன்போவார் ஊர் ஆன் நிரையின் உடன் புக்கபோது மற்றங்கு ஒரு புனிற்றா போற்றும் அவன் மேல் மருப்பு ஓச்சயாதும் ஒன்றும் கூசாதே எடுத்த கோல் கொண்டு அவன் புடைப்பமீது சென்று மிகும் பரிவால் வெகுண்டு விலக்கி மெய் உணர்ந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

பாவும் கலைகள் ஆகமநூல் பரப்பின் தொகுதிப் பான்மையினால்மேவும் பெருமை அரு மறைகள் மூலமாக விளங்கு உலகில்யாவும் தெளிந்த பொருள் நிலையே எய்த உணர்ந்த உள்ளத்தால்ஆவின் பெருமை உள்ளபடி அறிந்தார் ஆயற்கு அருள் செய்வார்.
சொற்பிரிப்பு
பாவும் கலைகள் ஆகம நூல் பரப்பின் தொகுதிப் பான்மையினால்மேவும் பெருமை அருமறைகள் மூலம் ஆக விளங்கு உலகில்யாவும் தெளிந்த பொருள் நிலையே எய்த உணர்ந்த உள்ளத்தால்ஆவின் பெருமை உள்ளபடி அறிந்தார் ஆயற்கு அருள்செய்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

தங்கும் அகில யோனிகட்கும் மேலாம் பெருமைத் தகைமையனபொங்கு புனித தீர்த்தங்கள் எல்லாம் என்றும் பொருந்துவனதுங்க அமரர் திருமுனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாதஅங்கம் அனைத்தும் தாமுடைய அல்லவோ நல் ஆனினங்கள்.
சொற்பிரிப்பு
“தங்கும் அகில யோனிகட்கும் மேலாம் பெருமைத் தகைமையன;பொங்கும் புனித தீர்த்தங்கள் எல்லாம் என்றும் பொருந்துவன;துங்க அமரர் திருமுனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாதஅங்கம் அனைத்தும் தாமுடைய அல்லவோ? நல் ஆன் இனங்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

ஆய சிறப்பினால் பெற்ற அன்றே மன்றுள் நடம் புரியும்நாயனார்க்கு வளர் மதியும் நதியும் நகு வெண்டலைத் தொடையும்மேய வேணித் திரு முடிமேல் விரும்பி ஆடி அருளுதற்குத்தூய திருமஞ்சனம் ஐந்தும் அளிக்கும் உரிமைச் சுரபிகள் தாம்.
சொற்பிரிப்பு
ஆய சிறப்பினால் பெற்ற அன்றே மன்று உள் நடம் புரியும்நாயனார்க்கு வளர்மதியும் நதியும் நகுவெண் தலைத்தொடையும்மேய வேணித் திருமுடிமேல் விரும்பி ஆடி அருளுதற்குத்தூய திருமஞ்சனம் ஐந்தும் அளிக்கும் உரிமைச் சுரபிகள்தாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

சீலமுடைய கோக்குலங்கள் சிறக்கும் தகைமைத் தேவருடன்காலம் முழுதும் உலகனைத்தும் காக்கும் முதல் காரணர் ஆகும்நீலகண்டர் செய்ய சடை நிருத்தர் சாத்து நீறுதரும்மூலம் அவதாரம் செய்யும் மூர்த்தம் என்றால் முடிவு என்னோ.
சொற்பிரிப்பு
சீலம் உடைய கோக்குலங்கள் சிறக்கும் தகைமைத் தேவர் உடன்காலம் முழுதும் உலகு அனைத்தும் காக்கும் முதல் காரணர் ஆகும்நீல கண்டர் செய்யசடை நிருத்தர் சாத்தும் நீறு தரும்மூலம் அவதாரம் செய்யும் மூர்த்தம் என்றால் முடிவு என்னோ?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

உள்ளும் தகைமை இனிப் பிறவேறுளவே உழை மான் மறிக்கன்றுதுள்ளும் கரத்தார் அணி பணியின் சுடர் சூழ் மணிகள் சுரநதி நீர்தெள்ளும் சடையார் தேவர்கள் தம்பிராட்டி உடனே சேரமிசைக்கொள்ளும் சின மால் விடைத் தேவர் குலம் அன்றோ இச் சுரபி குலம்.
சொற்பிரிப்பு
உள்ளும் தகைமை இனிப்பிற வேறு உளவே! உழை மான் மறிக்கன்றுதுள்ளும் கரத்தார் அணி பணியின் சுடர்சூழ் மணிகள் சுரநதி நீர்தெள்ளும் சடையார் தேவர்கள் தம் பிராட்டி உடனே சேர மிசைக்கொள்ளும் சினமால் விடைத்தேவர் குலம் அன்றோ? இச் சுரபி குலம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

என்றின்னனவே பலவும் நினைந்து இதத்தின் வழியே மேய்த்து இந்தக்கன்று பயில் ஆன் நிரை காக்கும் இதன் மேல் இல்லை கடன் இதுவேமன்றுள் ஆடும் சேவடிகள் வழுத்து நெறியாவதும் என்றுநின்ற ஆயன் தனை நோக்கி நிரை மேய்ப்பு ஒழிக நீ என்பார்.
சொற்பிரிப்பு
என்று இன்னனவே பலவும் நினைந்து “இதத்தின் வழியே மேய்த்து இந்தக்கன்று பயில்ஆன் நிரை காக்கும் இதன் மேல் இல்லை கடன்; இதுவேமன்றுள் ஆடும் சேவடிகள் வழுத்து நெறி ஆவதும்’ ’என்றுநின்ற ஆயன் தனை நோக்கி “நிரை மேய்ப்பு ஒழிக நீ” என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

யானே இனி இந்நிரை மேய்ப்பன் என்றார் அஞ்சி இடை மகனும்தானேர் இறைஞ்சி விட்டு அகன்றான் தாமும் மறையோர் இசைவினால்ஆனே நெருங்கும் பேராயம் அளிப்பார் ஆகிப் பைங்கூழ்க்குவானே என்ன நிரை காக்க வந்தார் தெய்வ மறைச் சிறுவர்.
சொற்பிரிப்பு
“யானே இனி இந்நிரை மேய்ப்பன்” என்றார்; அஞ்சி இடைமகனும்தான் நேர் இறைஞ்சி விட்டகன்றான்; தாமும் மறையோர் இசைவினால்ஆனே நெருங்கும் பேர் ஆயம் அளிப்பார் ஆகிப் பைங்கூழ்க்குவானே என்ன நிரை காக்க வந்தார் தெய்வ மறைச்சிறுவர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

கோலும் கயிறும் கொண்டு குழைக் குடுமி அலையக் குலவு மான்தோலும் நூலும் சிறு மார்பில் துவள அரைக் கோவணம் சுடரப்பாலும் பயனும் பெருக வரும் பசுக்கள் மேய்க்கும் பான்மையினால்சாலும் புல்லின் அவை வேண்டுந் தனையும் மிசையும் தலைச் சென்று.
சொற்பிரிப்பு
கோலும் கயிறும் கொண்டு குழைக் குடுமி அலையக், குலவு மான்தோலும் நூலும் சிறுமார்பில் துவள, அரைக் கோவணம் சுடரப்,பாலும் பயனும் பெருக வரும் பசுக்கள் மேய்க்கும் பான்மையினால்சாலும் புல்லின் அவை வேண்டும் தனையும் மிசையும் தலைச்சென்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

பதவு காலங்களில் மேய்த்தும் பறித்தும் அளித்தும் பரிவு அகற்றிஇதம் உண் துறையு(ள்) நற்றண்ணீர் ஊட்டி அச்சம் எதிர் நீக்கிஅதர் நல்லன முன் செல நீழல் அமர் வித்து அமுத மதுரப்பால்உதவும் பொழுது பிழையாமல் உடையோர் இல்லம் தொறும் உய்த்தார்.
சொற்பிரிப்பு
பதவு காலங்களில் மேய்த்தும் பறித்தும் அளித்தும் பரிவு அகற்றிஇதம் உண் துறையுள் நல் தண்ணீர் ஊட்டி அச்சம் எதிர் நீக்கிஅதர் நல்லன முன் செல நீழல் அமர்வித்து அமுத மதுரப்பால்உதவும் பொழுது பிழையாமல் உடையோர் இல்லம் தொறும் உய்த்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

மண்ணிக் கரையின் வளர் புறவின் மாடும் படுகர் மருங்கினிலும்தண்ணித்தில நீர் மருதத் தண்தலை சூழ் குலையின் சார்பினிலும்எண்ணிற் பெருகு நிரை மேய்த்துச் சமிதை உடன் மேல் எரிகொண்டுநண்ணில் கங்குல் முன் புகுந்தும் நன்னாள் பலவாம் அந் நாளில்.
சொற்பிரிப்பு
மண்ணிக் கரையின் வளர் புறவின் மாடும் படுகர் மருங்கினிலும்தண் நித்தில நீர் மருதத் தண்டலைசூழ் குலையின் சார்பினிலும்எண்ணில் பெருகு நிரைமேய்த்துச் சமிதை உடன் மேல் எரி கொண்டுநண்ணிக் கங்குல் முன் புகுதும் நன்நாள் பலவாம் அந்நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

ஆய நிரையின் குலம் எல்லாம் அழகின் விளங்கி மிகப் பல்கிமேய இனிய புல் உணவும் விரும்பு புனலும் ஆர்தலினால்ஏய மனங்கொள் பெரு மகிழ்ச்சி எய்தி இரவு(ம்) நண்பகலும்தூய தீம்பால் மடி பெருகிச் சொரிய முலைகள் சுரந்தனவால்.
சொற்பிரிப்பு
ஆய நிரையின் குலம் எல்லாம் அழகின் விளங்கி மிகப் பல்கிமேய இனிய புல் உணவும் விரும்பு புனலும் ஆர்தலினால்ஏய மனம்கொள் பெருமகிழ்ச்சி எய்தி இரவும் நண்பகலும்தூய தீம்பால் மடிபெருகிச் சொரிய முலைகள் சுரந்தனவால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

பூணும் தொழில் வேள்விச் சடங்கு புரிய ஓம தேனுக்கள்காணும் பொலிவின் முன்னையினும் அனேக மடங்கு கறப்பனவாய்பேணுந் தகுதி அன்பால் இப் பிரம சாரி மேய்த்த அதற்பின்மாணுந் திறத்தவான என மறையோர் எல்லாம் மனம் மகிழ்ந்தார்.
சொற்பிரிப்பு
பூணும் தொழில் வேள்விச் சடங்கு புரிய ஓம தேனுக்கள்காணும் பொலிவின் முன்னையினும் அநேக மடங்கு கறப்பனவாய்ப்“பேணும் தகுதி அன்பால் இப் பிரமசாரி மேய்த்ததன் பின்மாணும் திறத்தவான” என மறையோர் எல்லாம் மனமகிழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

அனைத்துத் திறத்தும் ஆனினங்கள் அணைந்த மகிழ்ச்சி அளவு இன்றிமனைக் கண் கன்று பிரிந்தாலும் மருவுஞ் சிறிய மறைக் கன்றுதனைக் கண்டு அருகு சார்ந்து உருகித் தாயாந் தன்மை நிலைமையவாய்க்கனைத்துச் சுரந்து முலைக் கண்கள் கறவாமே பால் பொழிந்தனவால்.
சொற்பிரிப்பு
அனைத்துத் திறத்தும் ஆனினங்கள் அணைந்த மகிழ்ச்சி அளவு இன்றிமனைக்கண் கன்று பிரிந்தாலும் மருவும் சிறிய மறைக்கன்றுதனைக்கண்டு அருகு சார்ந்துருகித் தாயாம் தன்மை நிலைமையவாய்க்கனைத்துச் சுரந்து முலைக்கண்கள் கறவாமே பால் பொழிந்தனவால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

31

தம்மை அணைந்த ஆன் முலைப்பால் தாமே பொழியக் கண்டு வந்துசெம்மை நெறியே உறுமனத்தில் திரு மஞ்சனமாம் குறிப்பு உணர்ந்தேஎம்மையுடைய வள்ளலார் எய்த நினைந்து தெளிந்து அதனில்மெய்மைச் சிவனார் பூசனையை விரும்பும் வேட்கை விரைந்து எழலும்.
சொற்பிரிப்பு
தம்மை அணைந்த ஆன் முலைப்பால் தாமே பொழியக் கண்டு உவந்துசெம்மை நெறியே உறு மனத்தில் திருமஞ்சனமாம் குறிப்பு உணர்ந்தேஎம்மை உடைய வள்ளலார் எய்த நினைந்து தெளிந்து அதனில்மெய்ம்மைச் சிவனார் பூசனையை விரும்பும் வேட்கை விரைந்து எழலும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

32

அங்கண் முன்னை அர்ச்சனையின் அளவின் தொடர்ச்சி விளையாட்டாப்பொங்கும் அன்பால் மண்ணி மணற் புளினக் குறையில் ஆத்தியின் கீழ்ச்செங்கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கிச் சிவாலயமும்துங்க நீடு கோபுரமும் சுற்றாலயமும் வகுத்து அமைத்தார்.
சொற்பிரிப்பு
அங்கண் முன்னை அர்ச்சனையில் அளவின் தொடர்ச்சி விளையாட்டாப்பொங்கும் அன்பால் மண்ணி மணல் புளினக் குறையில் ஆத்தியின் கீழ்ச்செங்கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கிச் சிவாலயமும்துங்க நீடு கோபுரமும் சுற்று ஆலயமும் வகுத்து அமைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

33

ஆத்தி மலரும் செழுந்தளிரும் முதலா அருகு வளர் புறவில்பூத்த மலர்கள் தாந்தெரிந்து புனிதர் சடிலத் திரு முடிமேல்சாத்தல் ஆகும் திருப் பள்ளித் தாமம் பலவும் தாம் கொய்துகோத்த இலைப் பூங்கூடையினில் கொணர்ந்து மணம் தங்கிட வைத்தார்.
சொற்பிரிப்பு
ஆத்தி மலரும் செழும்தளிரும் முதலா அருகு வளர் புறவில்பூத்த மலர்கள் தாம் தெரிந்து புனிதர் சடிலத் திருமுடிமேல்சாத்தல் ஆகும் திருப்பள்ளித் தாமம் பலவும் தாம் கொய்துகோத்த இலைப் பூங் கூடையினில் கொணர்ந்து மணம் தங்கிட வைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

34

நல்ல நவ கும்பங்கள் பெற நாடிக் கொண்டு நாணல் பூங்கொல்லை இடத்தும் குறை மறைவும் மேவுங் கோக்கள் உடன் கூடஒல்லை அணைந்து பாலாக்கள் ஒன்றுக்கு ஒரு காலாக எதிர்செல்ல அவையும் கனைத்து முலை தீண்டச் செழும்பால் பொழிந்தனவால்.
சொற்பிரிப்பு
நல்ல நவ கும்பங்கள் பெற நாடிக் கொண்டு நாணல் பூங்கொல்லை இடத்தும் குறைமறைவும் மேவும் கோக்கள் உடன் கூடஒல்லை அணைந்து பால் ஆக்கள் ஒன்றுக்கு ஒருகால் ஆக எதிர்செல்ல அவையும் கனைத்து முலை தீண்டச் செழும்பால் பொழிந்தனவால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

35

கொண்டு மடுத்த குட நிறையக் கொணர்ந்து விரும்பும் கொள்கையினால்அண்டர் பெருமான் வெண்மணல் ஆலயத்துள் அவை முன் தாபித்துவண்டு மருவுந் திருப் பள்ளித் தாமம் கொண்டு வரன் முறையேபண்டைப் பரிவால் அருச்சித்துப் பாலின் திரு மஞ்சனம் ஆட்டி.
சொற்பிரிப்பு
கொண்டு மடுத்த குடநிறையக் கொணர்ந்து விரும்பும் கொள்கையினால்அண்டர் பெருமான் வெண்மணல் ஆலயத்துள் அவை முன் தாபித்துவண்டு மருவும் திருப்பள்ளித்தாமம் கொண்டு வரன்முறையேபண்டைப் பரிவால் அருச்சித்துப் பாலின் திருமஞ்சனம் ஆட்டி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

36

மீள மீள இவ்வண்ணம் வெண் பால் சொரி மஞ்சனம் ஆட்டஆள உடையார் தம்முடைய அன்பர் அன்பின்பால் உளதாய்மூள அமர்ந்த நயப் பாடு முதிர்ந்த பற்று முற்றச் சூழ்கோளம் அதனில் உள் நிறைந்து குறித்த பூசை கொள்கின்றார்.
சொற்பிரிப்பு
மீள மீள இவ்வண்ணம் வெண்பால் சொரி மஞ்சனம் ஆட்டஆள உடையார் தம் உடைய அன்பர் அன்பின் பால்உளதாய்மூள அமர்ந்த நயப்பாடு முதிர்ந்த பற்று முற்றச் சூழ்கோளம் அதனில் உள் நிறைந்து குறித்த பூசை கொள்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

37

பெருமை பிறங்கும் சேய்ஞலூர் பிள்ளையார் தம் உள்ளத்தில்ஒருமை நினைவால் உம்பர்பிரான் உவக்கும் பூசை உறுப்பானதிரு மஞ்சனமே முதல் அவற்றில் தேடாதன அன்பினில் நிரப்பிவரும் அந் நெறியே அர்ச்சனை செய்து அருளி வணங்கி மகிழ்கின்றார்.
சொற்பிரிப்பு
பெருமை பிறக்கும் சேய்ஞலூர்ப் பிள்ளையார் தம் உள்ளத்தில்ஒருமை நினைவால் உம்பர் பிரான் உவக்கும் பூசை உறுப்பு ஆனதிருமஞ்சனமே முதல் அவற்றில் தேடாதன அன்பினில் நிரப்பிவரும் அந்நெறியே அர்ச்சனை செய்து அருளி வணங்கி மகிழ்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

38

இறையோன் அடிக் கீழ் மறையவனார் எடுத்துத் திருமஞ்சனம் ஆட்டும்நிறை பூசனைக்குக் குடங்கள் பால் நிரம்பச் சொரிந்து நிரைக் குலங்கள்குறைபாடு இன்றி மடி பெருகக் குவிந்த முலைப்பால் குறைவு இன்றிமறையோர் மனையின் முன்பு தரும் வளங்கள் பொலிய வைகுமால்.
சொற்பிரிப்பு
இறையோன் அடிக்கீழ் மறையவனார் எடுத்துத் திருமஞ்சனம் ஆட்டும்நிறை பூசனைக்கும் குடங்கள்பால் நிரம்பச் சொரிந்து நிரைக்குலங்கள்குறைபாடு இன்றி மடிபெருகக் குவிந்த முலைப்பால் குறைவு இன்றிமறையோர் மனையின் முன்பு தரும் வளங்கள் பொலிய வைகுமால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

39

செயல் இப்படியே பல நாளும் சிறந்த பூசை செய்வதற்குமுயல்வுற்று அதுவே திருவிளையாட்டாக முந்நூல் அணிமார்பர்இயல்பில் புரியும் மற்று இதனைக் கண்டித் திறத்தை அறியாதஅயல் மற்று ஒருவன் அப் பதியில் அந்தணாளர்க்கு அறிவித்தான்.
சொற்பிரிப்பு
செயல் இப்படியே பலநாளும் சிறந்த பூசை செய்வதற்குமுயல்வுற்று அதுவே திருவிளையாட்டு ஆக முந்நூல் அணி மார்பர்இயல்பில் புரியும் மற்று இதனைக் கண்டு இத்திறத்தை அறியாதஅயல் மற்று ஒருவன் அப்பதியில் அந்தணாளர்க்கு அறிவித்தான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

40

அச் சொல் கேட்ட அருமறையோர் ஆயன் அறியான் என்று அவற்றின்இச்சை வழியே யான் மேய்ப்பேன் என்று எம் பசுக்கள் தமைக் கறந்துபொச்சம் ஒழுகு மாணவகன் பொல்லாங்கு உரைக்க அவன் தாதைஎச்ச தத்தன் தனை அழைமின் என்றார் அவையில் இருந்தார்கள்.
சொற்பிரிப்பு
அச்சொல் கேட்ட அருமறையோர் “ஆயன் அறியான் என்று அவற்றின்இச்சை வழியே யான் மேய்ப்பேன் என்று எம் பசுக்கள் தமைக் கறந்துபொச்சம் ஒழுகு மாணவகன் பொல்லாங்கு உரைக்க அவன் தாதைஎச்ச தத்தன் தனை அழைமின்” என்றார் அவையில் இருந்தார்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

41

ஆங்கு மருங்கு நின்றார்கள் அவ் அந்தணன் தன் திருமனையின்பாங்கு சென்று மற்றவனை அழைத்துக் கொண்டு வரப் பகர்ந்தஓங்கு சபையோர் அவனைப் பார்த்து ஊர் ஆனிரை மேய்த்து உன் மகன் செய்தீங்கு தன்னைக் கேள் என்று புகுந்த பரிசு செப்புவார்.
சொற்பிரிப்பு
ஆங்கு மருங்கு நின்றார்கள் அவ் அந்தணன் தன் திருமனையின்பாங்கு சென்று மற்றவனை அழைத்துக் கொண்டு வரப்பரந்தஓங்கு சபையோர் அவனைப் பார்த்து “ஊர் ஆன் நிரை மேய்த்து உன் மகன் செய்தீங்கு தன்னைக் கேள்” என்று புகுந்த பரிசு செப்புவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

42

அந்தண் மறையோர் ஆகுதிக்குக் கறக்கும் பசுக்களான எலாம்சிந்தை மகிழ்ந்து பரிவினால் திரளக் கொடுபோய் மேய்ப்பான் போல்கந்தம் மலிபூம் புனல் மண்ணி மணலில் கறந்து பால் உகுத்துவந்த பரிசே செய்கின்றான் என்றான் என்று வாய் மொழிந்தார்.
சொற்பிரிப்பு
“அந்தண் மறையோர் ஆகுதிக்குக் கறக்கும் பசுக்கள் ஆன எலாம்சிந்தை மகிழ்ந்து பரிவினால் திரளக் கொடுபோய் மேய்ப்பான் போல்கந்தம் மலி பூம்புனல் மண்ணி மணலில் கறந்து பால் உகுத்துவந்த பரிசே செய்கின்றான் என்றான்” என்று வாய் மொழிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

43

மறையோர் மொழியக் கேட்டு அஞ்சி சிறு மாணவகன் செய்த இதுஇறையும் நான் முன் பறிந்திலேன் இதற்கு முன்பு புகுந்து அதனைநிறையும் பெருமை அந்தணர்காள் பொறுக்க வேண்டும் நீங்கள் எனக்குறை கொண்டு இறைஞ்சி இனிப் புகுதில் குற்றம் எனதேயாம் என்றான்.
சொற்பிரிப்பு
மறையோர் மொழியக் கேட்டு அஞ்சிச் “சிறு மாணவகன் செய்த இதுஇறையும் நான் முன்பு அறிந்திலேன்” இதற்கு முன்பு புகுந்ததனைநிறையும் பெருமை அந்தணர்காள்! பொறுக்க வேண்டும் நீங்கள் எனக்குறைகொண்டு இறைஞ்சி “இனிப் புகுதில் குற்றம் எனதே ஆம்” என்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

44

அந்தணாளர் தமை விடை கொண்டு அந்தி தொழுது மனை புகுந்துவந்த பழி ஒன்று என நினைந்தே மகனார் தமக்கு வாய் நேரான்இந்த நிலைமை அறிவேன் என்று இரவு கழிந்து நிரை மேய்க்கமைந்தனார் தாம் போயின பின் மறைந்து சென்றான் மறை முதியோன்.
சொற்பிரிப்பு
அந்தணாளர் தமை விடைகொண்டு அந்தி தொழுது மனை புகுந்து“வந்த பழி ஒன்று” என நினைந்தே மகனார் தமக்கு வாய் நேரான்“இந்த நிலைமை அறிவேன்” என்று இரவு கழிந்து நிரை மேய்க்கமைந்தனார் தாம் போயின பின் மறைந்து சென்றான் மறை முதியோன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

45

சென்ற மறையோன் திருமகனார் சிறந்த ஊர் ஆன் நிரை கொடு போய்மன்றல் மருவும் புறவின் கண் மேய்ப்பார் மண்ணி மணற் குறையில்அன்று திரளக் கொடு சென்ற அதனை அறிந்து மறைந்தப் பால்நின்ற குரவின் மிசை ஏறி நிகழ்வது அறிய ஒளித்து இருந்தான்.
சொற்பிரிப்பு
சென்ற மறையோன் திருமகனார் சிறந்த ஊர் ஆன் நிரைகொடு போய்மன்றல் மருவும் புறவின்கண் மேய்ப்பார் மண்ணி மணல் குறையில்அன்று திரளக் கொடு சென்ற அதனை அறிந்து மறைந்து அப்பால்நின்ற குரவின் மிசை ஏறி நிகழ்வது அறிய ஒளித்து இருந்தான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

46

அன்பு புரியும் பிரம சாரிகளும் மூழ்கி அரனார்க்குமுன்பு போல மணல் கோயில் ஆக்கி முகை மென் மலர் கொய்துபின்பு வரும் ஆன் முலை பொழிபால் பெருகும் குடங்கள் பேணும் இடம்தன்பால் கொணர்ந்து தாபித்துப் பிறவும் வேண்டுவன சமைத்தார்.
சொற்பிரிப்பு
அன்பு புரியும் பிரமசாரிகளும் மூழ்கி அரனார்க்குமுன்பு போல மணல் கோயில் ஆக்கி முகை மென் மலர் கொய்துபின்பு வரும் ஆன் முலை பொழிபால் பெருகும் குடங்கள் பேணும் இடம்தன்பால் கொணர்ந்து தாபித்துப் பிறவும் வேண்டுவன சமைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

47

நின்ற விதியின் விளையாட்டால் நிறைந்த அரும் பூசனை தொடங்கிஒன்றும் உள்ளத்து உண்மையினால் உடைய நாதன் திரு முடிமேல்மன்றல் விரவும் திருப் பள்ளித் தாமம் சாத்தி மஞ்சனமாநன்று நிறை தீம் பால் குடங்கள் எடுத்து நயப்பு உற்று ஆட்டுதலும்.
சொற்பிரிப்பு
நின்ற விதியின் விளையாட்டால் நிறைந்த அரும் பூசனை தொடங்கிஒன்றும் உள்ளத்து உண்மையினால் உடைய நாதன் திருமுடிமேல்மன்றல் விரவும் திருப்பள்ளித் தாமம் சாத்தி மஞ்சனமாநன்று நிறை தீம் பால் குடங்கள் எடுத்து நயப்புற்று ஆட்டுதலும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

48

பரவ மேல் மேல் எழும் பரிவும் பழைய பான்மை மிகும் பண்பும்விரவ மேதக்கவர் பால் மேவும் பெருமை வெளிப் படுப்பான்அரவம் மேவும் சடைமுடியார் அருளாம் என்ன அறிவு அழிந்துகுரவ மேவு முது மறையோன் கோப மேவும் படி கண்டான்.
சொற்பிரிப்பு
பரவ மேன்மேல் எழும்பரிவும் பழைய பான்மை மிகும் பண்பும்விரவ மேதக்கவர் தம்பால் மேவும் பெருமை வெளிப்படுப்பான்அரவ மேவும் சடைமுடியார் அருளாம் என்ன அறிவு அழிந்துகுரவ மேவும் முதுமறையோன் கோபம் மேவும் படி கண்டான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

49

கண்ட போதே விரைந்து இழிந்து கடிது சென்று கைத் தண்டுகொண்டு மகனார் திரு முதுகில் புடைத்துக் கொடிதாம் மொழி கூறத்தொண்டு புரியும் சிறிய பெரும் தோன்றலார் தம் பெருமான் மேல்மண்டு காதல் அருச்சனையின் வைத்தார் மற்று ஒன்று அறிந்திலரால்.
சொற்பிரிப்பு
கண்ட போதே விரைந்து இழிந்து கடிது சென்று கைத்தண்டுகொண்டு மகனார் திருமுதுகில் புடைத்துக் கொடிதாம் மொழி கூறத்தொண்டு புரியும் சிறிய பெரும் தோன்றலார் தம் பெருமான்மேல்மண்டு காதல் அருச்சனையின் வைத்தார் மற்று ஒன்று அறிந்திலரால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

50

மேலாம் பெரியோர் பலகாலும் வெகுண்டோன் அடிக்க வேறு உணரார்பாலார் திருமஞ்சனம் ஆட்டும் பணியில் சலியாரது கண்டுமாலா மறையோன் மிகச் செயிர்த்து வைத்த திருமஞ்சனக் குடப்பால்காலால் இடறிச் சிந்தினான் கையால் கடமைத் தலை நின்றான்.
சொற்பிரிப்பு
மேலாம் பெரியோர் பலகாலும் வெகுண்டோன் அடிக்க வேறு உணரார்பாலார் திருமஞ்சனம் ஆட்டும் பணியில் சலியாதது கண்டுமாலா மறையோன் மிகச் செயிர்த்து வைத்த திருமஞ்சனக் குடப் பால்காலால் இடறிச் சிந்தினான் கையால் கடைமைத் தலைநின்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

51

சிந்தும் பொழுதில் அது நோக்கும் சிறுவர் இறையில் தீயோனைத்தந்தை எனவே அறிந்து அவன்தன் தாள்கள் சிந்தும் தகுதியினால்முந்தை மருங்கு கிடந்த கோல் எடுத்தார்க்கு அதுவே முறைமை யினால்வந்து மழுவாயிட எறிந்தார் மண் மேல் வீழ்ந்தான் மறையோனும்.
சொற்பிரிப்பு
சிந்தும் பொழுதில் அது நோக்கும் சிறுவர் இறையில் தீயோனைத்தந்தை எனவே அறிந்து அவன் தன் தாள்கள் சிந்தும் தகுதியினால்முந்தை மருங்கு கிடந்த கோல் எடுத்தார்க்கு அதுவே முறைமையினால்வந்த மழுவாயிட எறிந்தார்; மண்மேல் வீழ்ந்தான் மறையோனும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

52

எறிந்த அதுவே அர்ச்சனையில் இடையூறு அகற்றும் படையாகமறிந்த தாதை இருதாளும் துணித்த மைந்தர் பூசனையில்அறிந்த இடையூறு அகற்றினராய் முன் போல் அருச்சித்திடப்புகலும்செறிந்த சடை நீள் முடியாரும் தேவியோடும் விடை ஏறி.
சொற்பிரிப்பு
எறிந்த அதுவே அர்ச்சனையில் இடையூறு அகற்றும் படையாகமறிந்த தாதை இருதாளும் துணித்த மைந்தர் பூசனையில்அறிந்த இடையூறு அகற்றினராய் முன்போல் அருச்சித்திடப் புகலும்செறிந்த சடை நீள் முடியாரும் தேவியோடும் விடை ஏறி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

53

பூத கணங்கள் புடை சூழப் புராண முனிவர் புத்தேளிர்வேத மொழிகள் எடுத்து ஏத்த விமல மூர்த்தி திரு உள்ளம்காதல் கூர வெளிப் படலும் கண்டு தொழுது மனம் களித்துப்பாத மலர்கள் மேல் விழுந்தார் பத்தி முதிர்ந்த பாலகனார்.
சொற்பிரிப்பு
பூத கணங்கள் புடை சூழப் புராண முனிவர் புத்தேளிர்வேத மொழிகள் எடுத்து ஏத்த விமல மூர்த்தி திருஉள்ளம்காதல் கூர வெளிப்படலும் கண்டு தொழுது மனம் களித்துப்பாத மலர்கள் மேல் விழுந்தார் பத்தி முதிர்ந்த பாலகனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

54

தொடுத்த இதழி சூழ் சடையார் துணைத் தாள் நிழல் கீழ் விழுந்தவரைஎடுத்து நோக்கி நம் பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய்அடுத்த தாதை இனி உனக்கு நாம் என்று அருள் செய்து அணைத்து அருளிமடுத்த கருணையால் தடவி உச்சி மோந்து மகிழ்ந்து அருள.
சொற்பிரிப்பு
தொடுத்த இதழி சூழ் சடையார் துணைந்தாள் நிழல் கீழ் விழுந்தவரைஎடுத்து நோக்கி ”நம்பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய்;அடுத்த தாதை இனி உனக்கு நாம்” என்று அருள்செய்து அணைத்தருளிமடுத்த கருணையால் தடவி உச்சி மோந்து மகிழ்ந்தருள.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

55

செங்கண் விடையார் திரு மலர்க்கை தீண்டப் பெற்ற சிறுவனார்அங்கண் மாயை யாக்கையின் மேல் அளவின்று உயர்ந்த சிவமயமாய்பொங்கி எழுந்த திரு அருளின் மூழ்கிப் பூ மேல் அயன் முதலாம்துங்க அமரர் துதி செய்யச் சூழ்ந்த ஒளியில் தோன்றினார்.
சொற்பிரிப்பு
செங்கண் விடையார் திருமலர்க்கை தீண்டப் பெற்ற சிறுவனார்அங்கண் மாயை யாக்கையின்மேல் அளவின்று உயர்ந்த சிவமயமாய்ப்பொங்கி எழுந்த திருஅருளின் மூழ்கிப் பூமேல் அயன் முதலாம்துங்க அமரர் துதி செய்யச் சூழ்ந்த ஒளியில் தோன்றினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

56

அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்து நாம்உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச்சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தட முடிக்குத்துண்ட மதிசேர் சடைக் கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்.
சொற்பிரிப்பு
அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி” அனைத்தும் நாம்உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்கு ஆகச்சண்டீசனுமாம் பதம் தந்தோம்” என்று அங்கு அவர் பொன் தடமுடிக்குத்துண்ட மதிசேர் சடைக்கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

57

எல்லா உலகும் ஆர்ப்பு எடுப்ப எங்கும் மலர் மாரிகள் பொழியப்பல்லாயிரவர் கண நாதர் பாடி ஆடிக் களி பயிலச்சொல்லார் மறைகள் துதி செய்யச் சூழ் பல்லியங்கள் எழச் சைவநல்லாறு ஓங்க நாயகமாம் நங்கள் பெருமான் தொழுது அணைந்தார்.
சொற்பிரிப்பு
எல்லா உலகும் ஆர்ப்பு எடுப்ப எங்கும் மலர்மாரிகள் பொழியப்பல்லாயிரவர் கணநாதர் பாடி ஆடிக் களி பயிலச்சொல்லார் மறைகள் துதிசெய்யச் சூழ் பல்லியங்கள் எழச் சைவநல்லாறு ஓங்க நாயகமாம் நங்கள் பெருமான் தொழுது அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

58

ஞாலம் அறியப் பிழை புரிந்து நம்பர் அருளால் நான் மறையின்சீலம் திகழும் சேய்ஞலூர்ப் பிள்ளையார் தம் திருக்கையில்கோல மழுவால் ஏறுண்டு குற்றம் நீங்கிச் சுற்றமுடன்மூல முதல்வர் சிவ லோகம் எய்தப் பெற்றான் முது மறையோன்.
சொற்பிரிப்பு
ஞாலம் அறியப் பிழை புரிந்து நம்பர் அருளால் நான்மறையின்சீலம் திகழும் சேய்ஞலூர்ப் பிள்ளையார் தம் திருக்கையில்கோல மழுவால் ஏறு உண்டு குற்றம் நீங்கிச் சுற்றமுடன்மூல முதல்வர் சிவலோகம் எய்தப் பெற்றான் முது மறையோன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

59

வந்து மிகை செய் தாதை தாள் மழுவால் துணித்த மறைச் சிறுவர்அந்த உடம்பு தன்னுடனே அரனார் மகனார் ஆயினார்இந்த நிலைமை அறிந்தாரார் ஈறிலாதார் தமக்கு அன்புதந்த அடியார் செய்தனவே தவமாம் அன்றோ சாற்றும் கால்.
சொற்பிரிப்பு
வந்து மிகை செய் தாதை தாள் மழுவால் துணித்த மறைச்சிறுவர்அந்த உடம்பு தன் உடனே அரனார் மகனார் ஆயினார்;இந்த நிலைமை அறிந்தார் ஆர்? ஈறு இலாதார் தமக்கு அன்புதந்த அடியார் செய்தனவே தவமாம் அன்றோ சாற்றும்கால்?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

60

நேசம் நிறைந்த உள்ளத்தால் நீலம் நிறைந்த மணி கண்டத்துஈசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழ எடுத்துத்தேசம் உய்யத் திருத் தொண்டத் தொகை முன் பணித்த திருவாளன்வாச மலர் மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்.மும்மையால் உலகாண்ட சருக்கம் முற்றிற்று.
சொற்பிரிப்பு
நேசம் நிறைந்த உள்ளத்தால் நீலம் நிறைந்த மணிகண்டத்துஈசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழ எடுத்துத்தேசம் உய்யத் திருத்தொண்டத் தொகை முன் பணித்த திருவாளன்வாச மலர் மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.