திருமுறை 12 · 12.025 · 128

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

ஏயுமாறு பல் உயிர்களுக்கு எல்லையில் கருணைத்தாய் அனாள் தனி ஆயின தலைவரைத் தழுவஆயு நான்மறை போற்ற நின்று அரும் தவம் புரியத்தூய மாதவம் செய்தது தொண்டை நன்னாடு.
சொற்பிரிப்பு
ஏயும் ஆறு பல் உயிர்களுக்கு எல்லையில் கருணைத்தாய் அனாள் தனி ஆயின தலைவரைத் தழுவஆயும் நான்மறை போற்ற நின்று அரும்தவம் புரியத்தூய மாதவம் செய்தது தொண்டை நல் நாடு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்ததன்மை மேவிய தலைமை சால் பெருங்குடி தழைப்பவன்மை ஓங்கு எயில் வளம் பதி பயின்றது வரம்பின்தொன்மை மேன்மையில் நிகழ் பெரும் தொண்டை நன்னாடு.
சொற்பிரிப்பு
நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்ததன்மை மேவிய தலைமைசால் பெரும் குடி தழைப்பவன்மை ஓங்கு எயில் வளம்பதி பயின்றது வரம்பின்தொன்மை மேன்மையில் நிகழ் பெரும் தொண்டை நல் நாடு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

நற்றிறம்புரி பழையனூர்ச் சிறுத்தொண்டர் நவை வந்துஉற்ற போது தம் உயிரையும் வணிகனுக்கு ஒரு கால்சொற்ற மெய்ம்மையும் தூக்கி அச் சொல்லையே காக்கப்பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது பெரும் தொண்டை நாடு.
சொற்பிரிப்பு
நற்றிறம் புரி பழையனூர்ச் சிறுத்தொண்டர் நவை வந்துஉற்ற போது தம் உயிரையும் வணிகனுக்கு ஒருகால்சொற்ற மெய்ம்மையும் தூக்கி அச்சொல்லையே காக்கப்பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது பெரும் தொண்டை நாடு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஆணையாம் என நீறு கண்டு அடிச்சேரன் என்னும்சேண் உலாவு சீர்ச் சேரனார் திருமலை நாட்டுவாண் நிலாவு பூண் வயவர்கள் மைத்துனக் கேண்மைபேண நீடிய முறையது பெரும் தொண்டை நாடு.
சொற்பிரிப்பு
ஆணையாம் என நீறுகண்டு “அடிச்சேரன்” என்னும்சேண் உலாவு சீர்ச் சேரனார் திருமலை நாட்டுவாள் நிலாவு பூண் வயவர்கள் மைத்துனக் கேண்மைபேண நீடிய முறையது பெரும்தொண்டை நாடு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கறை விளங்கிய கண்டர் பாற் காதல் செய் முறைமைநிறை புரிந்திட நேர் இழை அறம் புரிந்த அதனால்பிறை உரிஞ்சு எயில் பதிபயில் பெரும் தொண்டை நாட்டுமுறைமையாம் என உலகினில் மிகு மொழி உடைத்தால்.
சொற்பிரிப்பு
கறை விளங்கிய கண்டர்பால் காதல் செய் முறைமைநிறை புரிந்திட நேர்இழை அறம் புரிந்ததனால்பிறை உரிஞ்சு எயில் பதி பயில் “பெரும்தொண்டை நாட்டுமுறைமையாம்” என உலகினில் மிகுமொழி உடைத்தால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

தாவில் செம்மணி அருவியாறு இழிவன சாரல்பூவில் வண்டு இனம் புது நறவு அருந்துவ புறவம்வாவி நீள் கயல் வரம்பு இற உகைப்பன மருதம்நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல்.
சொற்பிரிப்பு
தாவில் செம்மணி அருவி ஆறு இழிவன சாரல்;பூவில் வண்டு இனம் புது நறவு அருந்துவ புறவம்;வாவி நீள்கயல் வரம்பு இற உகைப்பன மருதம்;நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

குறவர் பல் மணி அரித்து இதை விதைப்பன குறிஞ்சிகறவை ஆன் நிரை மான் உடன் பயில்வன கானம்பறவை தாமரை இருந்து இற வருந்துவ பழனம்சுறவ முள் மருப்பு அணங்கு அயர்வன கழிச் சூழல்.
சொற்பிரிப்பு
குறவர் பன்மணி அரித்து இதை விதைப்பன குறிஞ்சி;கறவை ஆன் நிரை மான் உடன் பயில்வன கானம்;பறவை தாமரை இருந்து இறவு அருந்துவ பழனம்;சுறவ முள் மருப்பு அணங்கு அயர்வன கழிச் சூழல்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கொண்டல் வானத்தின் மணி சொரிவன குல வரைப்பால்தண்டு உணர்க் கொன்றை பொன் சொரிவன தள வயற்பால்வண்டல் முத்த நீர் மண்டு கால் சொரிவன வயற்பால்கண்டல் முன் துறைக் கரி சொரி வனகலங் கடற்பால்.
சொற்பிரிப்பு
கொண்டல் வானத்தின் மணி சொரிவன குலவரைப்பால்;தண்துணர்க் கொன்றை பொன் சொரிவன தளவு அயல்பால்;வண்டல் முத்த நீர் மண்டு கால் சொரிவன வயல்பால்;கண்டல் முன் துறைக் கரி சொரிவன கலம் கடல்பால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

தேன் நிறைந்த செந்தினை இடி தரு மலைச் சீறூர்பால் நிறைந்த புல் பதத்தன முல்லை நீள் பாடிதூ நெல் அன்னம் நெய் கன்னலின் கனிய தண் துறையூர்மீன் நிறைந்த பேர் உணவின வேலை வைப்பு இடங்கள்.
சொற்பிரிப்பு
தேன் நிறைந்த செந்தினை இடி தரு மலைச் சீறூர்;பால் நிறைந்த புல் பதத்தன முல்லை நீள் பாடி;தூ நெல் அன்னம் நெய் கன்னல் இன் கனிய தண் துறையூர்;மீன் நிறைந்த பேர் உணவின வேலை வைப்பு இடங்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

குழல் செய் வண்டு இனம் குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சிமுழவு கார் கொள முல்லைகள் முகைப்பன முல்லைமழலை மென் கிளி மருதமர் சேக்கைய மருதம்நிழல் செய் கைதை சூழ் நெய்தலங் கழியன நெய்தல்.
சொற்பிரிப்பு
குழல்செய் வண்டு இனம் குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சி;முழவு கார் கொள முல்லைகள் முகைப்பன முல்லை;மழலை மென் கிளி மருது அமர் சேக்கைய மருதம்;நிழல்செய் கைதை சூழ் நெய்தல் அம் கழியன நெய்தல்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

மல்கும் அப்பெரு நிலங்களில் வரை புணர் குறிஞ்சிஎல்லை எங்கணும் இறவுளர் ஏனல் முன் விளைக்கும்பல் பெரும் புனம் பயில்வன படர் சிறைத் தோகைசொல்லும் அப்புனங் காப்பவும் சுரி குழல் தோகை.
சொற்பிரிப்பு
மல்கும் அப்பெரு நிலங்களில் வரை புணர் குறிஞ்சிஎல்லை எங்கணும் இறவுளர் ஏனல் முன் விளைக்கும்பல் பெரும் புனம் பயில்வன படர் சிறைத் தோகைசொல்லும் அப்புனம் காப்பவும் சுரி குழல் தோகை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

அங்கண் வான்மிசை அரம்பையர் கரும் குழல் சுரும்புபொங்கு பூண்முலைக் கொடிச்சியர் குழல் மூழ்கிப் போகாச்செம் கண் மால் விடையார் திருக்காளத்தி என்னும்மங்குல் சூழ் வரை நிலவிய வாழ்வினால் மல்கும்.
சொற்பிரிப்பு
அங்கண் வான் மிசை அரம்பையர் கரும்குழல் சுரும்புபொங்கு பூண்முலைக் கொடிச்சியர் குழல் மூழ்கிப் போகாச்செங்கண் மால் விடையார் திருக்காளத்தி என்னும்மங்குல் சூழ் வரை நிலவிய வாழ்வினால் மல்கும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

பேறு வேறுசூழ் இமையவர் அரம்பையர் பிறந்துமாறில் வேடரும் மாதரும் ஆகவே வணங்கும்ஆறுசூழ் சடை அண்ணலார் திரு விடைச் சுரமும்கூறு மேன்மையின் மிக்க தம் நாட்டு வண் குறிஞ்சி.
சொற்பிரிப்பு
பேறு வேறுசூழ் இமையவர் அரம்பையர் பிறந்துமாறில் வேடரும் மாதரும் ஆகவே வணங்கும்ஆறு சூழ் சடை அண்ணலார் திருஇடைச் சுரமும்கூறு மேன்மையின் மிக்கது அந் நாட்டு வண் குறிஞ்சி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

அம்பொன் வார் குழல் கொடிச்சியர் உடன் அர மகளிர்வம்புலா மலர்ச் சுனை படிந்து ஆடு நீள் வரைப்பின்உம்பர் நாயகர் திருக் கழுக் குன்றமும் உடைத்தால்கொம்பர் வண்டு சூழ் குறிஞ்சி செய் தவங்குறை உளதோ.
சொற்பிரிப்பு
அம்பொன் வார்குழல் கொடிச்சியர் உடன் அர மகளிர்வம்பு உலா மலர்ச்சுனை படிந்து ஆடு நீள் வரைப்பின்உம்பர் நாயகர் திருக்கழுக் குன்றமும் உடைத்தால்கொம்பர் வண்டு சூழ் குறிஞ்சி செய்தவம் குறை உளதோ?.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

கோல முல்லையும் குறிஞ்சியும் அடுத்த சில்லிடங்கள்நீல வாள் படை நீலி கோட்டங்களும் நிரந்துகால வேனிலில் கடும் பகல் பொழுதினைப் பற்றிப்பாலையும் சொலல் ஆவன உள பரல் முரம்பு.
சொற்பிரிப்பு
கோல முல்லையும் குறிஞ்சியும் அடுத்த சில் இடங்கள்நீல வாட்படை நீலி கோட்டங்களும் நிரந்துகால வேனிலில் கடும்பகல் பொழுதினைப் பற்றிப்பாலையும் சொலல் ஆவன உள பரல் முரம்பு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

சொல்லும் எல்லையின் புறத்தன துணர்ச் சுரும்பு அலைக்கும்பல் பெரும் புனல் கானியாறிடை இடை பரந்துகொல்லை மெல் இணர்க் குருந்தின் மேற் படர்ந்த பூம்பந்தர்முல்லை மென் புதல் முயல் உகைத் தடங்கு நீள் முல்லை.
சொற்பிரிப்பு
சொல்லும் எல்லையின் புறத்தன துணர்ச் சுரும்பு அலைக்கும்பல் பெரும்புனல் கானியாறு இடைஇடை பரந்துகொல்லை மெல் இணர்க் குருந்தின் மேல் படர்ந்த பூம்பந்தர்முல்லை மென் புதல் முயல் உகைத்து அடங்கு நீள் முல்லை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

பிளவு கொண்ட தண் மதி நுதல் பேதையர் எயிற்றைக்களவு கொண்டது அளவு எனக் களவலர் தூற்றும்அளவு கண்டவர் குழல் நிறம் கனியும் அக் களவைத்தளவு கண்டு எதிர் சிரிப்பன தமக்கும் உண்டு என்று.
சொற்பிரிப்பு
பிளவு கொண்ட தண் மதிநுதல் பேதையர் எயிற்றைக்களவு கொண்டது தளவு எனக் களவு அலர் தூற்றும்;அளவு கண்டு அவர் குழல் நிறம் கனியும் அக் களவைத்தளவு கண்டு எதிர் சிரிப்பன தமக்கும் உண்டு என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

மங்கையர்க்கு வாள் விழியிணை தோற்ற மான் குலங்கள்எங்கும் மற்றவர் இடைக்கு இடை மலர்க் கொடி எங்கும்அங்கண் முல்லையின் தெய்வம் என்று அருந் தமிழ் உரைக்கும்செங்கண் மால் தொழும் சிவன் மகிழ் திரு முல்லை வாயில்.
சொற்பிரிப்பு
மங்கையர்க்கு வாள் விழி இணை தோற்ற மான் குலங்கள்எங்கும்; மற்றவர் இடைக்கு இடை மலர்க்கொடி எங்கும்;அங்கண் “முல்லையின் தெய்வம்” என்று அருந்தமிழ் உரைக்கும்செங்கண் மால் தொழும் சிவன் மகிழ் திருமுல்லைவாயில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

நீறு சேர் திரு மேனியர் நிலாத் திகழ் முடிமேல்மாறில் கங்கை தான் அவர்க்கு மஞ்சனந்தர அணைந்தேஊறு நீர் தரும் ஒளி மலர்க் கலிகை மா நகரைவேறு தன் பெரு வைப்பு என விளங்கு மாமுல்லை.
சொற்பிரிப்பு
நீறு சேர் திரு மேனியர் நிலாத் திகழ் முடிமேல்மாறில் கங்கை தான் அவர்க்கு மஞ்சனம் தர அணைந்தேஊறு நீர் தரும் ஒளி மலர்க் கலிகை மாநகரைவேறு தன் பெரு வைப்பு என விளங்கு மா முல்லை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

வாச மென் மலர் மல்கிய முல்லை சூழ் மருதம்வீசு தெண்டிரை நதி பல மிக்கு உயர்ந்து ஓடிப்பாசடைத் தடந் தாமரைப் பழனங்கள் மருங்கும்பூசல் வன் கரைக் குளங்களும் ஏரியும் புகுவ.
சொற்பிரிப்பு
வாச மென்மலர் மல்கிய முல்லை சூழ் மருதம்வீசு தெண்கரை நதி பல மிக்கு உயர்ந்து ஓடிப்பாசடைத் தடம் தாமரைப் பழனங்கள் மருங்கும்பூசல் வன் கரைக் குளங்களும் ஏரியும் புகுவ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரி பால்பொங்கும் தீர்த்தமாய் நந்தி மால் வரை மிசைப் போந்தேஅங்கண் நித்திலம் சந்தனம் அகிலொடு மணிகள்பங்கயத் தடம் நிறைப்ப வந்து இழிவது பாலி.
சொற்பிரிப்பு
துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரிபால்பொங்கு தீர்த்தமாய் நந்தி மால்வரை மிசைப் போந்தேஅங்கண் நித்திலம் சந்தனம் அகிலொடு மணிகள்பங்கயத் தடம் நிறைப்ப வந்து இழிவது பாலி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய் போல்மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கை வருடவெள்ள நீர் இரு மருங்கு கால் வழி மிதந்து ஏறிப்பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி.
சொற்பிரிப்பு
பிள்ளை தைவரப் பெருகு பால் சொரி முலைத் தாய்போல்மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கை வருடவெள்ள நீர் இரு மருங்கு கால் வழி மிதந்து ஏறிப்பள்ள நீள்வயல் பருமடை உடைப்பது பாலி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

அனையவாகிய நதி பரந்து அகன் பணை மருங்கில்கனை நெடும் புனல் நிறைந்து திண் கரைப் பெருங்குளங்கள்புனை இருங்கடி மதகுவாய் திறந்திடப் புறம் போய்வினைஞர் ஆர்ப்பொலி எடுப்ப நீர் வழங்குவ வியன்கால்.
சொற்பிரிப்பு
அனைய ஆகிய நதி பரந்து அகன்பணை மருங்கில்கனை நெடும்புனல் நிறைந்து திண் கரைப்பெரும் குளங்கள்புனை இரும் கடி மதகுவாய் திறந்திடப் புறம்போய்வினைஞர் ஆர்ப்பு ஒலி எடுப்ப நீர் வழங்குவ வியன்கால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

மாறில் வண் பகட்டேர் பல நெருங்கிட வயல்கள்சேறு செய்பவர் செந்நெலின் வெண் முளை சிதறிநாறு வார்ப்பவர் பறிப்பவர் நடுபவர் ஆனவேறு பல் வினை உடைப் பெரும் கம்பலை மிகுமால்.
சொற்பிரிப்பு
மாறில் வண் பகட்டு ஏர் பல நெருங்கிட வயல்கள்சேறு செய்பவர், செந்நெலின் வெண்முளை சிதறிநாறு வார்ப்பவர், பறிப்பவர், நடுபவர் ஆனவேறு பல்வினை உடைப்பெரும் கம்பலை மிகுமால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

வரும் புனல் பெரும் கால்களை மறித்திட வாளைபெருங்குலைப்பட விலங்குவ பிறங்கு நீர்ப் பழனம்நெருங்கு சேற்குலம் உயர்த்துவ நீள் கரைப் படுத்துச்சுருங்கை நீர் வழக்கு அறுப்பன பரு வரால் தொகுதி.
சொற்பிரிப்பு
வரும் புனல் பெரும் கால்களை மறித்திட வாளைபெரும் குலைப்பட விலங்குவ பிறங்கு நீர்ப் பழனம்;நெருங்கு சேல்குலம் உயர்த்துவ நீள் கரைப்படுத்துச்சுருங்கை நீர் வழக்கு அறுப்பன பருவரால் தொகுதி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

தளைத்த தடம் பணை எழுந்த செந்தாமரைத் தவிசின்இளைத்த சூல் வளை கண் படுப்பன இடை எங்கும்விளைத்த பாசொளி விளங்கு நீள் விசும்படை ஊர் கோள்வளைத்த மா மதி போன்று உள மருத நீர் வைப்பு.
சொற்பிரிப்பு
தளைத் தடம்பணை எழுந்த செந்தாமரைத் தவிசின்இளைத்த சூல் வளை கண்படுப்பன இடை எங்கும்;விளைத்த பாசொளி விளங்கு நீள் விசும்பு அடை ஊர்கோள்வளைத்த மாமதி போன்று உள மருதநீர் வைப்பு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

ஓங்கு செந்நெலின் புடையன உயர் கழைக் கரும்புபூங்கரும்பு அயல் மிடைவன பூகம் அப்பூகப்பாங்கு நீள் குலைத் தெங்கு பைங்கதலி வண் பலவுதூங்கு தீங்கனிச் சூத நீள் வேலிய சோலை.
சொற்பிரிப்பு
ஓங்கு செந்நெலின் புடையன உயர் கழைக் கரும்பு;பூங்கரும்பு அயல் மிடைவன பூகம்; அப் பூகப்பாங்கு நீள்குலைத் தெங்கு பைங்கதலி வண் பலவுதூங்கு தீம்கனிச் சூதம் நீள் வேலிய சோலை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

நீடு தண் பணை உடுத்த நீள் மருங்கின நெல்லின்கூடு துன்றிய இருக்கைய விருந்து எதிர் கொள்ளும்பீடு தங்கிய பெருங் குடி மனை அறம் பிறங்கும்மாடம் ஓங்கிய மறுகின மல்லல் மூதூர்கள்.
சொற்பிரிப்பு
நீடு தண்பணை உடுத்த நீள் மருங்கின; நெல்லின்கூடு துன்றிய இருக்கைய விருந்து எதிர் கொள்ளும்பீடு தங்கிய பெரும்குடி மனை அறம் பிறங்கும்மாடம் ஓங்கிய மறுகின; மல்லல் மூதூர்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

தொல்லை நான்மறை முதல் பெரும் கலையொலி துவன்றிஇல்லறம் புரிந்து ஆகுதி வேள்வியில் எழுந்தமல்கு தண் புகை மழை தரும் முகில் குலம் பரப்பும்செல்வம் ஓங்கிய திருமறையவர் செழும் பதிகள்.
சொற்பிரிப்பு
தொல்லை நான்மறை முதல் பெரும் கலை ஒலி துவன்றிஇல்லறம் புரிந்து ஆகுதி வேள்வியில் எழுந்தமல்கு தண்புகை மழைதரு முகில் குலம் பரப்பும்செல்வம் ஓங்கிய திருமறையவர் செழும் பதிகள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

தீது நீங்கிடத் தீக் கலியாம் அவுணற்குநாதர் தாம் அருள் புரிந்தது நல்வினைப் பயன் செய்மாதர் தோன்றிய மரபுடை மறையவர் வல்லம்பூதி சாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும்.
சொற்பிரிப்பு
தீது நீங்கிடத் தீக்கலியாம் அவுணற்குநாதர் தாம் அருள் புரிந்தது; நல்வினைப் பயன்செய்மாதர் தோன்றிய மரபு உடை மறையவர் வல்லம்பூதி சாதனம் போற்றியபொற்பினால் விளங்கும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

31

அருவி தந்த செம் மணிகளும் புறவில் ஆய் மலரும்பருவி ஓடைகள் நிறைந்திழி பாலியின் கரையின்மருவு கங்கை வாழ் சடையவர் மகிழ்ந்த மாற் பேறாம்பொருவில் கோயிலும் சூழ்ந்ததப் புறம்பணை மருதம்.
சொற்பிரிப்பு
அருவி தந்த செம்மணிகளும், புறவில் ஆய் மலரும்பருவி ஓடைகள் நிறைந்து இழி பாலியின் கரையின்மருவு கங்கை வாழ் சடையவர் மகிழ்ந்த மாற்பேறாம்பொருவில் கோயிலும் சூழ்ந்தது அப்பூம்பணை மருதம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

32

விரும்பு மேன்மையென் பகர்வது விரி திரை நதிகள்அருங்கரைப் பயில் சிவாலயம் அனேகமும் அணைந்துபருங்கை யானையை உரித்தவர் இருந்த அப் பாசூர்மருங்கு சூழ் தவம் புரிந்தது அன்றோ மற்ற மருதம்.
சொற்பிரிப்பு
விரும்பு மேன்மை என் பகர்வது; விரி திரை நதிகள்அருங்கரைப் பயில் சிவாலயம் அனேகமும் அணைந்துபருங்கை யானையை உரித்தவர் இருந்த அப் பாசூர்மருங்கு சூழ் தவம் புரிந்தது அன்றோ? மற்ற மருதம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

33

பூமரும் புனல் வயல் களம் பாடிய பொருநர்தாமருங் கிளையுடன் தட மென் மலர் மிலைந்துமா மருங்கு தண்ணீழலின் மருத யாழ் முரலும்காமர் தண் பணைப் புறத்தது கருங்கழி நெய்தல்.
சொற்பிரிப்பு
பூமரும் புனல் வயல் களம் பாடிய பொருநர்தாம் அருங்கிளை உடன் தட மென்மலர் மிலைந்துமாமருங்கு தண் நீழலின் மருதயாழ் முரலும்காமர் தண்பணைப் புறத்தது கருங்கழி நெய்தல்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

34

தூய வெண் துறைப் பரதவர் தொடுப்பன வலைகள்சேய நீள் விழிப் பரத்தியர் தொடுப்பன செருந்திஆய பேர் அளத் தளவர்கள் அளப்பன உப்புசாயன் மெல்லிடை அளத்தியர் அளப்பன தரளம்.
சொற்பிரிப்பு
தூய வெண்துறைப் பரதவர் தொடுப்பன வலைகள்;சேய நீள் விழிப் பரத்தியர் தொடுப்பன செருந்தி;ஆய பேரளத்து அளவர்கள் அளப்பன உப்பு;சாயல் மெல் இடை அளத்தியர் அளப்பன தரளம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

35

கொடு வினைத் தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழுமீன்படு மணற் கரை நுளைச்சியர் கொடுப்பன பவளம்தொடு கடல் சங்கு துறையவர் குளிப்பன அவர் தம்வடு வகிர்க் கண்மங்கையர் குளிப்பன மணற்கேணி.
சொற்பிரிப்பு
கொடு வினைத்தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழுமீன்;படுமணல்கரை நுளைச்சியர் கொடுப்பன பவளம்;தொடு கடல்சங்கு துறையவர் குளிப்பன; அவர் தம்வடு வகிர்க் கண் மங்கையர் குளிப்பன மணல் கேணி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

36

சுழிப் புனல் கடல் ஓதமுன் சூழ்ந்து கொண்டு அணியவழிக் கரைப் பொதி பொன்னவிழ்ப்பன மலர்ப் புன்னைவிழிக்கு நெய்தலின் விரை மலர்க் கட்சுரும்பு உண்ணக்கழிக்கரைப் பொதி சோறு அவிழ்ப்பன மடற்கைதை.
சொற்பிரிப்பு
சுழிப்புனல் கடல் ஓதம் முன் சூழ்ந்துகொண்டு அணியவழிக்கரைப் பொதிப் பொன்அவிழ்ப் பனமலர்ப் புன்னை;விழிக்கும் நெய்தலின் விரைமலர்க் கண்சுரும்பு உண்ணக்கழிக்கரைப் பொதி சோறு அவிழ்ப் பனமடல் கைதை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

37

காயல் வண் கரைப் புரை நெறி அடைப்பன கனி முட்சேய தண்ணறுஞ் செழுமுகை செறியும் முண்டகங்கள்ஆய நுண் மணல் வெண்மையை மறைப்பன அன்னம்தாய முன்றுறைச் சூழல் சூழ் ஞாழலின் தாது.
சொற்பிரிப்பு
காயல் வண்கரைப் புரைநெறி அடைப்பன கனிமுள்சேய தண்நறும் செழுமுகை செறியும் முண்டகங்கள்ஆய நுண்மணல் வெண்மையை மறைப்பன அன்னம்தாய முன்துறைச் சூழல் சூழ் ஞாழலின் தாது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

38

வாம் பெருந் திரைவளாக முன் குடி பயில் வரைப்பில்தாம் பரப்பிய கயல்களின் விழிக் கயல் தவிரக்காம்பி நேர் வருந் தோளியர் கழிக் கயல் விலை செய்தேம் பொதிந்த சின் மழலை மென் மொழிய செவ்வழி யாழ்.
சொற்பிரிப்பு
வாம் பெரும்திரை வளாகம் முன் குடிபயில் வரைப்பில்தாம் பரப்பிய கயல்களின் விழிக்கயல் தவிரக்காம்பின் நேர் வரும் தோளியர் கழிக்கயல் விலைசெய்தேம் பொதிந்த சின் மழலை மென் மொழிய செவ்வழி யாழ்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

39

மருட்கொடுந் தொழில் மன்னவன் இறக்கிய வரியைநெருக்கி முன் திருவொற்றியூர் நீங்க என்று எழுதும்ஒருத்தர் தம் பெரும் கோயிலின் ஒரு புறம் சூழ்ந்ததிருப் பரப்பையும் உடைய அத் திரைக் கடல் வரைப்பு.
சொற்பிரிப்பு
மருட்கொடும் தொழில் மன்னவன் இறக்கிய வரியைநெருக்கி முன் திரு ஒற்றியூர் நீங்க என்று எழுதும்ஒருத்தர் தம் பெரும் கோயிலின் ஒருபுறம் சூழ்ந்ததிருப்பரப்பையும் உடையது அத் திரைக்கடல் வரைப்பு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

40

மெய் தரும் புகழ்த் திரு மயிலா புரி விரை சூழ்மொய் தயங்கு தண் பொழில் திருவான்மியூர் முதலாப்பை தரும் பணி அணிந்தவர் பதி எனைப் பலவால்நெய்தல் எய்த முன் செய்த அந்நிறை தவம் சிறிதோ.
சொற்பிரிப்பு
மெய்தரும் புகழ்த் திருமயிலாபுரி விரைசூழ்மொய் தயங்கு தண் பொழில் திருவான்மியூர் முதலாப்பைதரும் பணி அணிந்தவர் பதி எனைப் பலவால்நெய்தல் எய்த முன் செய்த அந் நிறைதவம் சிறிதோ?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

41

கோடு கொண்டு எழும் திரைக் கடல் பவள மென் கொழுந்துமாடு மொய் வரைச் சந்தனச் சினை மிசை வளரும்நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர்நிலம் பலவால்ஆடு நீள் கொடி மாட மா மல்லையே அனைய.
சொற்பிரிப்பு
கோடு கொண்டு எழும் திரைக்கடல் பவள மென் கொழுந்துமாடு மொய் வரைச் சந்தனச் சினைமிசை வளரும்நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர்நிலம் பலவால்ஆடு நீள் கொடி மாடமா மல்லையே அனைய.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

42

மலை விழிப்பன என வயல் சேல் வரைப் பாறைத்தலையுகைப்பவும் தளைச் செறு விடை நெடுங் கருமான்கலை குதிப்பன கரும் பகட்டேர் நிகர்ப்பவுமாய்அலை புனல் பணை குறிஞ்சியோடு அணைவன அனேகம்.
சொற்பிரிப்பு
மலை விழிப்பன என வயல் சேல்வரைப் பாறைத்தலை உகைப்பவும் தளைச்செறு இடைநெடும் கருமான்கலை குதிப்பன கரும் பகட்டு ஏர் நிகர்ப்பவுமாய்அலை புனல் பணை குறிஞ்சியோடு அணைவன அனேகம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

43

புணர்ந்த ஆனிரை புற விடைக் குறு முயல் பொருப்பின்அணைந்த வான் மதி முயலினை இனம் என அணைந்துமணங்கொள் கொல்லையில் வரகு போர் மஞ்சனம் வரைக்கார்இணைந்து முல்லையும் குறிஞ்சியும் கலப்பன எங்கும்.
சொற்பிரிப்பு
புணர்ந்த ஆன் நிரைப் புறவு இடைக் குறுமுயல் பொருப்பின்அணைந்த வான்மதி முயலினை இனம் என அணைந்துமணங்கொள் கொல்லையில் வரகு போர் மஞ்சன வரைக்கார்இணைந்து முல்லையும் குறிஞ்சியும் கலப்பன எங்கும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

44

கவரும் மீன் குவை கழியவர் கானவர்க்கு அளித்துசிவலும் சேவலும் மாறியும் சிறு கழிச்சியர்கள்அவரை ஏனலுக்கு எயிற்றியர் பவள முத்து அளந்தும்உவரி நெய்தலும் கானமும் கலந்துள ஒழுக்கம்.
சொற்பிரிப்பு
கவரும் மீன் குவை கழியவர் கானவர்க்கு அளித்துச்சிவலும் சேவலும் மாறியும் சிறு கழிச்சியர்கள்அவரை ஏனலுக்கு எயிற்றியர் பவளமுத்து அளந்தும்உவரி நெய்தலும் கானமும் கலந்து உள ஒழுக்கம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

45

அயல் நறும் புறவினில் இடைச்சியர் அணி நடையும்வியன் நெடும் பணை உழத்தியர் சாயலும் விரும்பிஇயலும் அன்னமும் தோகையும் எதிர் எதிர் பயிலவயலும் முல்லையும் இயைவன பலவுள மருங்கு.
சொற்பிரிப்பு
அயல் நறும் புறவினில் இடைச்சியர் அணி நடையும்வியன் நெடும்பணை உழத்தியர் சாயலும் விரும்பிஇயலும் அன்னமும் தோகையும் எதிர்எதிர் பயிலவயலும் முல்லையும் இயைவன பலஉள மருங்கு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

46

மீளும் ஓதமுன் கொழித்த வெண் தரளமும் கமுகின்பாளை உக்கவும் விரவலில் பரத்தியர் பணை மென்தோளும் உழத்தியர் மகளிர் மாறாடி முன் தொகுக்கும்நீளும் நெய்தலும் மருதமும் கலந்துள நிலங்கள்.
சொற்பிரிப்பு
மீளும் ஓதம் முன் கொழித்த வெண் தரளமும் கமுகின்பாளை உக்கவும் விரவலில் பரத்தியர் பணை மென்தோள் உழத்தியர் மகளிர் மாறு ஆடி முன் தொகுக்கும்நீளு நெய்தலும் மருதமும் கலந்து உள நிலங்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

47

ஆய நானிலத்து அமைதியில் தத்தமக்கு அடுத்தமேய செய் தொழில் வேறு பல் குலங்களின் விளங்கித்தீய என்பன கனவிலும் நினைவு இலாச் சிந்தைத்தூய மாந்தர் வாழ் தொண்டை நாட்டு இயல்பு சொல் வரைத்தோ.
சொற்பிரிப்பு
ஆய நால் நிலத்து அமைதியில் தத்தமக்கு அடுத்தமேய செய்தொழில் வேறு பல் குலங்களின் விளங்கித்தீய என்பன கனவிலும் நினைவு இலாச் சிந்தைத்தூய மாந்தர் வாழ் தொண்டை நாட்டு இயல்பு சொல் வரைத்தோ?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

48

இவ் வளம் தரு பெரும் திருநாட்டிடை என்றும்மெய் வளந் தரு சிறப்பினால் உலகெலாம் வியப்பஎவ்வுகங்களும் உள்ளது என்று யாவரும் ஏத்தும்கை விளங்கிய நிலையது காஞ்சி மா நகரம்.
சொற்பிரிப்பு
இவ்வளம் தரு பெரும் திரு நாட்டிடை என்றும்மெய்வளம் தரு சிறப்பினால் உலகெலாம் வியப்ப“எவ் உகங்களும் உள்ளது” என்று யாவரும் ஏத்தும்கை விளங்கிய நிலையது காஞ்சி மாநகரம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

49

ஆன தொல் நகர் அம்பிகை தம் பெருமானைமான அர்ச்சனை யால் ஒரு காலத்து வழிபட்டுஊனமில் அறம் அனேகமும் உலகுய்ய வைத்தமேன்மை பூண்ட அப் பெருமையை அறிந்தவா விளம்பில்.
சொற்பிரிப்பு
ஆன தொல்நகர் அம்பிகை தம்பெருமானைமான அர்ச்சனையால் ஒரு காலத்து வழிபட்டுஊனம் இல் அறம் அனேகமும் உலகு உய்ய வைத்தமேன்மை பூண்ட அப் பெருமையை அறிந்தவா விளம்பில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

50

வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்று இருந்து அருளித்துள்ளு வார் புனல் வேணியார் அருள் செயத் தொழுதுதெள்ளு வாய்மையின் ஆகமத் திறன் எலாம் தெரியஉள்ளவாறு கேட்டு அருளினாள் உலகை ஆளுடையாள்.
சொற்பிரிப்பு
வெள்ளி மால் வரைக் கயிலையில் வீற்றிருந்து அருளித்துள்ளு வார் புனல் வேணியார் அருள் செயத் தொழுதுதெள்ளு வாய்மையின் ஆகமத் திறன் எலாம் தெரியஉள்ளவாறு கேட்டு அருளினாள் உலகை ஆள் உடையாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

51

எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்உண்மை ஆவது பூசனை என உரைத்து அருளஅண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்பெண்ணின் நல்லவள் ஆயின பெருந் தவக் கொழுந்து.
சொற்பிரிப்பு
எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்உண்மை ஆவது பூசனை என உரைத்து அருளஅண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்பெண்ணின் நல்லவள் ஆயின பெருந்தவக் கொழுந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

52

நங்கை உள் நிறை காதலை நோக்கி நாயகன் திரு உள்ளத்து மகிழ்ந்தேஅங்கண் எய்திய முறுவலும் தோன்ற அடுத்தது என் கொல் நின் பால் என வினவஇங்கு நாத நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனை அர்ச்சனை புரியப்பொங்குகின்றது என் ஆசை என்று இறைஞ்சி போகமார்த்த பூண் முலையினாள் போற்ற.
சொற்பிரிப்பு
நங்கை உள்நிறை காதலை நோக்கி நாயகன் திரு உள்ளத்து மகிழ்ந்தேஅங்கண் எய்திய முறுவலும் தோன்ற “அடுத்தது என்கொல் நின் பால்”என வினவ“இங்கு நாத! நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனை அர்ச்சனை புரியப்பொங்குகின்றது என் ஆசை” என்று இறைஞ்சிப் போகம் ஆர்த்த பூண் முலையினாள் போற்ற.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

53

தேவ தேவனும் அது திருவுள்ளஞ் செய்து தென் திசை மிக்க செய் தவத்தால்யாவரும் தனை அடைவது மண் மேல் என்றும் உள்ளது காஞ்சி மற்று அதனுள்மா அமர்ந்த நம் இருக்கையில் அணைந்து மன்னு பூசனை மகிழ்ந்து செய்வாய் என்றுஏவ எம் பெருமாட்டியும் பிரியா இசைவு கொண்டு எழுந்து அருளுதற்கு இசைந்தாள்.
சொற்பிரிப்பு
தேவ தேவனும் அது திரு உள்ளம் செய்து தென்திசை மிக்க செய்தவத்தால்யாவரும் தனை அடைவது மண்மேல் என்றும் உள்ளது காஞ்சி;மற்று அதனுள்மா அமர்ந்த நம் இருக்கையில் அணைந்து மன்னு பூசனை மகிழ்ந்து செய்வாய்” என்றுஏவ எம்பெருமாட்டியும் பிரியா இசைவு கொண்டு எழுந்து அருளுதற்கு இசைந்தாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

54

ஏதமில் பலயோனி எண் பத்து நான்கு நூறு ஆயிரந்தனுள் வைத்தபேதமும் புரந்து அருளும் அக் கருணைப் பிரான் மொழிந்த ஆகம வழி பேணிப்போது நீர்மையில் தொழுதனள் போதப் பொருப்பில் வேந்தனும் விருப்பில் வந்து எய்திமா தவம் புரிந்து அருளுதற்கு அமைந்த வளத்தொடும் பரிசனங்களை விடுத்தான்.
சொற்பிரிப்பு
ஏதம் இல் பல யோனி எண்பத்து நான்கு நூறு ஆயிரம் தனுள் வைத்தபேதமும் புரந்து அருளும் அக்கருணைப் பிரான் மொழிந்த ஆகம வழி பேணிப்போது நீர்மையில் தொழுதனள் போதப் பொருப்பில் வேந்தனும் விருப்பில் வந்து எய்திமாதவம் புரிந்து அருளுதற்கு அமைந்த வளத்தொடும் பரிசனங்களை விடுத்தான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

55

துன்னு பல்லுயிர் வானவர் முதலாச் சூழ்ந்து உடன் செலக் காஞ்சியில் அணையத்தன்னை நேர் வரும் பதும மா நாகம் தம்பிராட்டி தாள் தலைமிசை வைத்தேஅன்னையாய் உலகு அனைத்தையும் ஈன்றாய் அடியனேன் உறை பிலம் அதனிடையேமன்னு கோயில் கொண்டு அருளுவாய் என்ன மலை மடந்தை மற்று அதற்கு அருள் புரிந்து.
சொற்பிரிப்பு
துன்னு பல் உயிர் வானவர் முதலாச் சூழ்ந்து உடன் செலக் காஞ்சியில் அணையத்தன்னை நேர் வரும் பதும மா நாகம் தம்பிராட்டி தாள் தலை மிசை வைத்தே“அன்னையாய் உலகு அனைத்தையும் ஈன்றாய்! அடியனேன் உறை பிலம் அதன் இடையேமன்னு கோயில் கொண்டு அருளுவாய்” என்ன மலைமடந்தை மற்று அதற்கு அருள் புரிந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

56

அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப அளவில் இன்பத்தின் அருட் கரு விருத்தித்திங்கள் தங்கிய புரி சடையார்க்குத் திருந்து பூசனை விரும்பினள் செய்யஎங்கும் நாடவும் திரு விளையாட்டால் ஏக மா முதல் எதிர்ப்படாது ஒழியப்பொங்கு மா தவம் செய்து காண்பதற்கே புரிவு செய்தனள் பொன் மலை வல்லி.
சொற்பிரிப்பு
அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப அளவில் இன்பத்தின் அருள் கரு இருத்தித்திங்கள் தங்கிய புரிசடையார்க்குத் திருந்து பூசனை விரும்பினள் செய்யஎங்கும் நாடவும் திருவிளையாட்டால் ஏக மா முதல் எதிர்ப்படாது ஒழியப்பொங்கு மாதவம் செய்து காண்பதற்கே புரிவு செய்தனள் பொன்மலை வல்லி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

57

நெஞ்சம் ஈசனைக் காண்பதே விரும்பி நிரந்தரம் திரு வாக்கினில் நிகழ்வதுஅஞ்செழுத்துமே ஆக ஆளுடைய அம்மை செம்மலர்க் கை குவித்தருளித்தஞ்சம் ஆகிய அரும் தவம் புரியத் தரிப்பரே அவள் தனிப் பெருங் கணவர்வஞ்சம் நீக்கிய மாவின் மூலத்தில் வந்து தோன்றினார் மலை மகள் காண.
சொற்பிரிப்பு
நெஞ்சம் ஈசனைக் காண்பதே விரும்பி நிரந்தரம் திருவாக்கினில் நிகழ்வதுஅஞ்செழுத்துமே ஆக ஆள் உடைய அம்மை செம்மலர்க் கைகுவித்து இறைஞ்சித்தஞ்சம் ஆகிய அரும் தவம் புரியத் தரிப்பரே அவள் தனிப் பெரும் கணவர்வஞ்சம் நீக்கிய மாவின் மூலத்தில் வந்து தோன்றினார் மலைமகள் காண.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

58

கண்ட போதில் அப்பெரும் தவப் பயனாம் கம்பம் மேவிய தம் பெருமானைவண்டு உலாங் குழல் கற்றை முன் தாழ வணங்கி வந்து எழும் ஆசை முன் பொங்கக்கொண்ட காதலின் விருப்பளவு இன்றிக் குறித்த பூசனை கொள்கை மேற் கொண்டுதொண்டையங்கனி வாய் உமை நங்கை தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள்.
சொற்பிரிப்பு
கண்ட போதில் அப் பெரும்தவப் பயனாம் கம்பம் மேவிய தம்பெருமானைவண்டு உலாம் குழல் கற்றை முன் தாழ வணங்கி வந்து எழும் ஆசை முன் பொங்கக்கொண்ட காதலின் விருப்பு அளவு இன்றிக் குறித்த பூசனைக் கொள்கை மேற்கொண்டுதொண்டை அம்கனி வாய் உமை நங்கை தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

59

உம்பர் நாயகர் பூசனைக்கு அவர் தாம் உரைத்த ஆகமத்து உண்மையே தலை நின்றுஎம் பிராட்டி அர்ச்சனை புரிவதனுக்கு இயல்பில் வாழ் திருச் சேடியரானகொம்பனார்கள் பூம் பிடகை கொண்டு அணையக் குலவு மென் தளிர் அடி இணை ஒதுங்கிஅம்பிகாவன மாந்திருவனத்தில் ஆன தூ நறும் புது மலர் கொய்தாள்.
சொற்பிரிப்பு
உம்பர் நாயகர் பூசனைக்கு அவர் தாம் உரைத்த ஆகமத்து உண்மையே தலை நின்றுஎம்பிராட்டி அர்ச்சனை புரிவதனுக்கு இயல்பில் வாழ் திருச்சேடியர் ஆனகொம்பனார்கள் பூம்பிடகை கொண்டு அணையக் குலவு மென்தளிர் அடி இணை ஒதுங்கிஅம்பிகா வனமாம் திருவனத்தில் ஆன தூ நறும் புதுமலர் கொய்தாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

60

கொய்த பன்மலர் கம்பை மா நதியில் குலவு மஞ்சனம் நிலவு மெய்ப் பூச்சுநெய் தரும் கொழும் தூப தீபங்கள் நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின்மெய் தரும்படி வேண்டின எல்லாம் வேண்டும் போதினில் உதவ மெய்ப் பூசைஎய்த ஆகம விதி எலாம் செய்தாள் உயிர்கள் யாவையும் ஈன்ற எம் பிராட்டி.
சொற்பிரிப்பு
கொய்த பன்மலர் கம்பை மா நதியில் குலவு மஞ்சனம் நிலவு மெய்ப் பூச்சுநெய்தரும் கொழும் தூப தீபங்கள் நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின்மெய்தரும்படி வேண்டின எல்லாம் வேண்டும் போதினில் உதவ மெய்ப் பூசைஎய்த ஆகம விதி எலாம் செய்தாள் உயிர்கள் யாவையும் ஈன்ற எம்பிராட்டி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

61

கரந்தரும் பயன் இது என உணர்ந்து கம்பம் மேவிய உம்பர் நாயகர்பால்நிரந்த காதல் செய் உள்ளத்தளாகி நீடு நன்மைகள் யாவையும் பெருகவரம் தரும் பொருளாம் மலை வல்லி மாறிலா வகை மலர்ந்த பேரன்பால்சிரம் பணிந்து எழு பூசை நாள் தோறும் திரு உளம் கொளப் பெருகியது அன்றே.
சொற்பிரிப்பு
கரம் தரும் பயன் இது என உணர்ந்து கம்பம் மேவிய உம்பர் நாயகர்பால்நிரந்த காதல்செய் உள்ளத்தள் ஆகி நீடு நன்மைகள் யாவையும் பெருகவரம் தரும் பொருளாம் மலை வல்லி மாறிலா வகை மலர்ந்த பேரன்பால்சிரம் பணிந்து எழு பூசை நாள் தோறும் திருஉளம்கொளப் பெருகியது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

62

நாதரும் பெரு விருப்பொடு நயந்து நங்கை அர்ச்சனை செய்யும் அப்பொழுதில்காதல் மிக்கதோர் திரு விளையாட்டில் கனங்குழைக்கு அருள் புரிந்திட வேண்டிஓத மார் கடல் ஏழும் ஒன்று ஆகி ஓங்கி வானமும் உட்படப் பரந்துமீது செல்வது போல் வரக் கம்பை வெள்ளம் ஆம் திரு உள்ளமும் செய்தார்.
சொற்பிரிப்பு
நாதரும் பெரு விருப்பொடு நயந்து நங்கை அர்ச்சனை செய்யும் அப்பொழுதில்காதல் மிக்க ஓர் திருவிளையாட்டில் கனம் குழைக்கு அருள் புரிந்திட வேண்டிஓதம் ஆர்கடல் ஏழும் ஒன்று ஆகி ஓங்கி வானமும் உட்படப் பரந்துமீது செல்வது போல் வரக் கம்பை வெள்ளம் ஆம் திருஉள்ளமும் செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

63

அண்ணலார் அருள் வெள்ளத்தை நோக்கி அம் கயல் கண்ணி தம் பெருமான் மேல்விண் எலாம் கொள வரும் பெரு வெள்ளம் மீது வந்துறும் என வெருக் கொண்டேஉண்ணிலாவிய பதைப்புறு காதலுடன் திருக் கையால் தடுத்தும் நில்லாமைதண்ணிலா மலர் வேணியினாரைத் தழுவி கொண்டனள் தன்னையே ஒப்பாள்.
சொற்பிரிப்பு
அண்ணலார் அருள் வெள்ளத்தை நோக்கி அங்கயல் கண்ணி தம்பெருமான் மேல்விண் எலாம் கொள வரும் பெருவெள்ளம் மீது வந்து உறும் என வெருக் கொண்டேஉள் நிலாவிய பதைப்புறு காதல் உடன் திருக்கையால் தடுத்தும் நில்லாமைதண் நிலா மலர் வேணியினாரைத் தழுவிக் கொண்டனள் தன்னையே ஒப்பாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

64

மலைக் குலக் கொடி பரிவுறு பயத்தால் மாவின் மேவிய தேவ நாயகரைமுலைக்குவட்டொடு வளைக் கையால் நெருக்கி முறுகு காதலால் இறுகிடத் தழுவச்சிலைத் தனித் திருநுதல் திரு முலைக்கும் செந் தளிர்க் கரங்களுக்கும் மெத்தெனவேகொலைக் களிற்றுரி புனைந்த தம் மேனி குழைந்து காட்டினார் விழைந்த கொள்கையினார்.
சொற்பிரிப்பு
மலைக்குலக்கொடி பரிவு உறு பயத்தால் மாவின மேவிய தேவ நாயகரைமுலைக் குவட்டொடு வளைக்கையால் நெருக்கி முறுகு காதலால் இறுகிடத் தழுவச்சிலைத் தனித்திரு நுதல் திருமுலைக்கும் செந்தளிர்க் கரங்களுக்கும் மெத்து எனவேகொலைக்களிற்று உரி புனைந்த தம் மேனி குழைந்து காட்டினார் விழைந்த கொள்கையினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

65

கம்பர் காதலி தழுவ மெய் குழையக் கண்டு நிற்பவும் சரிப்பவும் ஆனஉம்பரே முதல் யோனிகள் எல்லாம் உயிரும் யாக்கையும் உருகி ஒன்றாகிஎம் பிராட்டிக்கு மெல்லியர் ஆனார் என்றும் ஏகம்பர் என்று எடுத்து ஏத்தவம்புலா மலர் நிறைய விண் பொழியக் கம்பையாறு முன் வணங்கியது அன்றே.
சொற்பிரிப்பு
கம்பர் காதலி தழுவ மெய் குழையக் கண்டு நிற்பவும் சரிப்பவும் ஆனஉம்பரே முதல் யோனிகள் எல்லாம் உயிரும் யாக்கையும் உருகி ஒன்று ஆகி“எம்பிராட்டிக்கு மெல்லியர் ஆனார் என்றும் ஏகம்பர்” என்று எடுத்து ஏத்தவம்பு உலாமலர் நிறைய விண் பொழியக் கம்பை ஆறு முன் வணங்கியது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

66

பூதியாகிய புனித நீர் ஆடிப் பொங்கு கங்கை தோய் முடிச் சடை புனைந்துகாதில் வெண் குழை கண்டிகை தாழக் கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்ஆதி தேவனாராயுமாதவஞ் செய் அவ் வரங்கொலோ அகிலம் ஈன்று அளித்தமாது மெய்ப் பயன் கொடுப்பவே கொண்டு வளைத் தழும்புடன் முலைச் சுவடு அணிந்தார்.
சொற்பிரிப்பு
பூதி ஆகிய புனித நீறு ஆடிப் பொங்கு கங்கை தோய் முடிச் சடை புனைந்துகாதில் வெண்குழை கண்டிகை தாழக் கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்ஆதி தேவனார் ஆயும் மாதவம் செய் அவ்வரம் கொலோ அகிலம் ஈன்று அளித்தமாது மெய்ப்பயன் கொடுப்பவே கொண்டு வளைத்தழும்பு உடன் முலைச்சுவடு அணிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

67

கோதிலா அமுது அனையவள் முலைக் குழைந்த தம் மணவாள நல் கோலம்மாது வாழவே காட்டி முன் நின்று வரங்கள் வேண்டுவ கொள்க என்று அருளவேத காரணராய ஏகம்பர் விரை மலர்ச் செய்ய தாமரைக் கழல் கீழ்ஏதம் நீங்கிய பூசனை முடிந்த தின்மை தான் அறிவிப்பதற்கு இறைஞ்சி.
சொற்பிரிப்பு
கோது இலா அமுது அனையவள் முலைக்குக் குழைந்த தம் மணவாள நல் கோலம்மாது வாழவே காட்டி முன் நின்று “வரங்கள் வேண்டுவ கொள்க” என்று அருளவேத காரணர் ஆய ஏகம்பர் விரைமலர்ச் செய்ய தாமரைக் கழல்கீழ்ஏதம் நீங்கிய பூசனை முடிந்தது இன்மை தான் அறிவிப்பதற்கு இறைஞ்சி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

68

அண்டர் நாயகர் எதிர் நின்று கூறும் அளவினால் அஞ்சி அஞ்சலி கூப்பிக்கொண்ட இற்றை என் பூசனை இன்னும் குறை நிரம்பிடக் கொள்க என்று அருளவண்டு வார் குழல் மலை மகள் கமல வதனம் நோக்கி அம்மலர்க் கண் நெற்றியின் மேல்முண்ட நீற்றர் நின் பூசனை என்றும் முடிவதில்லை நம் பால் என மொழிய.
சொற்பிரிப்பு
அண்டர் நாயகர் எதிர் நின்று கூறும் அளவினால் அஞ்சி, அஞ்சலி கூப்பிக்,கொண்ட இற்றை என் பூசனை இன்னும் குறை நிரம்பிடக் கொள்க” என்று அருளவண்டு வார்குழல் மலைமகள் கமல வதனம் நோக்கி அம் மலர்க்கண் நெற்றியின் மேல்முண்ட நீற்றர் ”நின் பூசனை என்றும் முடிவது இல்லை நம் பால்” என மொழிய.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

69

மாறிலாத இப் பூசனை என்றும் மன்ன எம்பிரான் மகிழ்ந்து கொண்டு அருளிஈறிலாத இப்பதியினுள் எல்லா அறமும் யான் செய அருள் செய வேண்டும்வேறு செய் வினை திருவடிப் பிழைத்தல் ஒழிய இங்கு உளார் வேண்டின செயினும்பேறு மாதவப் பயன் கொடுத்து அருளப் பெறவும் வேண்டும் என்றனள் பிறப்பு ஒழிப்பாள்.
சொற்பிரிப்பு
“மாறிலாத இப் பூசனை என்றும் மன்ன எம்பிரான் மகிழ்ந்துகொண்டு அருளி,ஈறிலாத இப்பதியின் உள் எல்லா அறமும் யான் செய அருள்செய வேண்டும்;வேறு செய்வினை திருவடிப் பிழைத்தல் ஒழிய இங்கு உளார் வேண்டின செயினும்பேறு மாதவப் பயன்கொடுத்து அருளப் பெறவும் வேண்டும்” என்றனள் பிறப்பு ஒழிப்பாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

70

விடையின் மேலவர் மலைமகள் வேண்ட விரும்பு பூசனை மேவி வீற்றிருந்தேஇடையறா அறம் வளர்க்கும் வித்தாக இக பரத் திரு நாழி நெல் அளித்துக்கடையர் ஆகியும் உயர்ந்தவராயும் காஞ்சி வாழ்பவர் தாம் செய் தீவினையும்தடைபடாது மெய்ந் நெறி அடைவதற்காம் தவங்களாகவும் உவந்து அருள் செய்தார்.
சொற்பிரிப்பு
விடையின் மேலவர் மலைமகள் வேண்ட விரும்பு பூசனை மேவி வீற்றிருந்தேஇடை அறா அறம் வளர்க்கும் வித்து ஆக இகபரத்து இரு நாழி நெல் அளித்துக்கடையர் ஆகியும் உயர்ந்தவர் ஆயும் காஞ்சி வாழ்பவர் தாம் செய் தீ வினையும்தடை படாது மெய்ந் நெறி அடைவதற்காம் தவங்கள் ஆகவும் உவந்து அருள் செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

71

எண்ண அரும் பெரும் வரங்கள் முன் பெற்ற அங்கு எம் பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருளமண்ணின் மேல் வழிபாடு செய்து அருளி மனை அறம் பெருக்கும் கருணையினால்நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க நாடு காதலின் நீடிய வாழ்க்கைப்புண்ணிய திருக் காம கோட்டத்துப் பொலிய முப்பதோடு இரண்டு அறம் புரக்கும்.
சொற்பிரிப்பு
எண் அரும் பெரு வரங்கள் முன் பெற்று அங்கு எம்பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருளமண்ணின் மேல் வழிபாடு செய்து அருளி மனை அறம்பெருக்கும் கருணையினால்நண்ணும் மன்உயிர் யாவையும் பல்க நாடு காதலின் நீடிய வாழ்க்கைப்புண்ணியத் திருக் காமக்கோட்டத்துப் பொலிய முப்பதோடு இரண்டு அறம் புரக்கும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

72

அலகில் நீள் தவத்து அறப் பெரும் செல்வி அண்டமாம் திரு மனைக்கு இடும் தீபம்உலகில் வந்து உறு பயன் அறிவிக்க ஓங்கும் நாள் மலர் மூன்றுடன் ஒன்றுநிலவ ஆண்டினுக்கு ஒரு முறை செய்யும் நீடு தொன்மையால் நிறைந்த பேருலகமலர் பெரும் திருக் காம கோட்டத்து வைத்த நல்லறம் மன்னவே மன்னும்.
சொற்பிரிப்பு
அலகில் நீள் தவத்து அறப்பெரும் செல்வி அண்டம் ஆம் திரு மனைக்கு இடும் தீபம்உலகில் வந்து உறு பயன் அறிவிக்க ஓங்கும் நாள்மலர் மூன்று உடன் ஒன்றுநிலவ ஆண்டினுக்கு ஒருமுறை செய்யும் நீடு தொன்மையால் நிறைந்த பேர் உலகம்மலர்பெரும் திருக் காமக்கோட்டத்து வைத்த நல்அறம் மன்னவே மன்னும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

73

தீங்கு தீர்க்கும் நல் தீர்த்தங்கள் போற்றும் சிறப்பினால் திருக் காமக் கோட்டத்தின்பாங்கு மூன்றுலகத்தில் உள்ளோரும் பரவு தீர்த்தமாம் பைம் புனற்கேணிவாங்கு தெண் திரை வேலை மேகலை சூழ் வையகம் தனக்கு எய்திய படியாய்ஓங்கு தன் வடிவாய் நிகழ்ந்து என்றும் உள்ளது ஒன்று உலகாணி என்று உளதால்.
சொற்பிரிப்பு
தீங்கு தீர்க்கும் நல் தீர்த்தங்கள் போற்றும் சிறப்பினால் திருக் காமக்கோட்டத்தின்பாங்கு மூன்று உலகத்தின் உள்ளோரும் பரவு தீர்த்தமாம் பைம்புனல் கேணிவாங்கு தெண்திரை வேலை மேகலைசூழ் வையகம் தனக்கு எய்திய படியாய்ஓங்கு தன் வடிவாய் நிகழ்ந்து என்றும் உள்ளது ஒன்று உலகு ஆணி என்று உளதால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

74

அந்தம் இன்றி நல் அறம் புரிந்து அளிக்கும் அன்னை தன் திருக் காமக் கோட்டத்தில்வந்து சந்திர சூரியர் மீது வழிக் கொள்ளாத தன் மருங்கு போதலினால்சந்த மாதிர மயங்கி எம் மருங்கும் சாயை மாறிய தன் திசை மயக்கம்இந்த மாநிலத்தவர் எலாம் காண என்றும் உள்ளது ஒன்று இன்றும் அங்கு உளதால்.
சொற்பிரிப்பு
அந்தம் இன்றி நல் அறம் புரிந்து அளிக்கும் அன்னை தன் திருக்காமக்கோட்டத்தில்வந்து சந்திர சூரியர் மீது வழிக்கொளாது அதன் மருங்கு போதலினால்சந்த மாதிரம் மயங்கி எம் மருங்கும் சாயை மாறிய தன் திசை மயக்கம்இந்த மாநிலத்தவர் எலாம் காண என்றும் உள்ளது ஒன்று இன்றும் அங்கு உளதால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

75

கன்னி நன்னெடுங் காப்புடை வரைப்பில் காஞ்சியாம் திரு நதிக் கரை மருங்குசென்னியிற் பிறை அணிந்தவர் விரும்பும் திருப் பெரும் பெயர் இருக்கையில் திகழ்ந்துமன்னு வெங் கதிர் மீது எழும் போதும் மறித்து மேற் கடல் தலை விழும் போதும்தன்னிழல் பிரியாத வண் காஞ்சித் தானம் மேவிய மேன்மையும் உடைத்தால்.
சொற்பிரிப்பு
கன்னி நன் நெடும் காப்பு உடை வரைப்பில் காஞ்சியாம் திருநதிக்கரை மருங்குசென்னியில் பிறை அணிந்தவர் விரும்பும் திருப்பெரும்பெயர் இருக்கையில் திகழ்ந்துமன்னு வெம்கதிர் மீது எழும் போதும் மறித்து மேல்கடல் தலை விழும் போதும்தன் நிழல் பிரியாத வண் காஞ்சித் தானம் மேவிய மேன்மையும் உடைத்தால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

76

மறைகளால் துதித்து அரும் தவம் புரிந்து மாறிலா நியமம் தலை நின்றுமுறைமையால் வரும் பூசனை செய்ய முனிவர் வானவர் முதல் உயிர் எல்லாம்நிறையும் அன்பினால் அர்ச்சனை செய்ய நீடு காமங்கள் அவர் அவர்க்கு அருளிஇறைவர் தாம் மகிழ்ந்து அருளிய பதிகள் எண்ணிறந்த அத் திரு நகர் எல்லை.
சொற்பிரிப்பு
மறைகளால் துதித்து அரும்தவம் புரிந்து மாறிலா நியமம் தலை நின்றுமுறைமையால் வரும் பூசனை செய்ய முனிவர், வானவர், முதல் உயிர் எல்லாம்நிறையும் அன்பினால் அர்ச்சனை செய்ய நீடு காமங்கள் அவர்அவர்க்கு அருளிஇறைவர் தாம் மகிழ்ந்து அருளிய பதிகள் எண் இறந்த அத் திருநகர் எல்லை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

77

மன்னு கின்ற அத் திருநகர் வரைப் பின் மண்ணில் மிக்கதோர் நன்மை யினாலேதுன்னும் யானையைத் தூற்றில் வாழ் முயல் முன் துரக்க எய்திய தொலைவு இல் ஊக்கத்தால்தன்னிலத்து நின்று அகற்றுதல் செய்யும் தானம் அன்றியும் தனு எழும் தரணிஎந் நிலத்தினும் காண்பரும் இறவாத் தானம் என்று இவை இயல்பினில் உடைத்தால்.
சொற்பிரிப்பு
மன்னுகின்ற அத்திருநகர் வரைப்பின் மண்ணில் மிக்கது ஓர் நன்மையினாலேதுன்னும் யானையைத் தூற்றில் வாழ் முயல் முன் துரக்க எய்திய தொலைவில் ஊக்கத்தால்தன் நிலத்து நின்று அகற்றுதல் செய்யும் தானம் அன்றியும் தனு எழும் தரணிஎந்நிலத்தினும் காண்பரும் இறவாத் தானம் என்று இவை இயல்பினில் உடைத்தால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

78

ஈண்டு தீவினை யாவையும் நீக்கி இன்பமே தரும் புண்ணிய தீர்த்தம்வேண்டினார் தமக்கு இட்ட சித்தியதாய் விளங்கு தீர்த்தம் நன் மங்கல தீர்த்தம்நீண்ட காப்புடைத் தீர்த்தம் மூன்று உலகில் நிகழ்ந்த சாருவ தீர்த்தமு முதலாஆண்டு நீடிய தீர்த்தம் எண்ணிலவும் அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார்.
சொற்பிரிப்பு
ஈண்டு தீவினை யாவையும் நீக்கி இன்பமே தரும் புண்ணிய தீர்த்தம்வேண்டினார் தமக்கு இட்ட சித்தியதாய் விளங்கு தீர்த்தம் நன் மங்கல தீர்த்தம்நீண்ட காப்பு உடைத் தீர்த்தம் மூன்று உலகில் நிகழ்ந்த சாருவ தீர்த்தமும் முதலாஆண்டு நீடிய தீர்த்தம் எண்ணிலவும் அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

79

தாளது ஒன்றினில் மூன்று பூ மலரும் தமனியச் செழும் தாமரைத் தடமும்நீள வார் புனல் குடதிசை ஓடி நீர் கரக்கு மா நதியுடன் நீடுநாள் அலர்ந்து செங்குவளை பைங் கமலம் நண்பகல் தரும் பாடலம் அன்றிக்காள மேகம் ஒப்பாள் உறை வரைப்பில் கண் படாத காயாப் புளி உளதால்.
சொற்பிரிப்பு
தாள் அது ஒன்றினில் மூன்று பூ மலரும் தமனியச் செழும் தாமரைத் தடமும்நீள வார்புனல் குடதிசை ஓடி நீர் கரக்கு மா நதி உடன் நீடுநாள் அலர்ந்து செங்குவளை பைங்கமலம் நண்பகல் தரும் பாடலம் அன்றிக்காளமேகம் ஒப்பாள் உறை வரைப்பில் கண்படாத காயாப்புளி உளதால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

80

சாயை முன் பிணிக்கும் கிணறு ஒன்று தஞ்சம் உண்ணின் நஞ்சாந்தடம் ஒன்றுமாயை இன்றி வந்துள்ளடைந்தார்கள் வானரத்து உருவாம் பிலம் ஒன்றுமேய அவ்வுரு நீங்கிடக் குளிக்கும் விளங்கு பொய்கையும் ஒன்று விண்ணவரோடுஆய இன்பம் உய்க்கும் பிலம் ஒன்றோடு அனைய ஆகிய அதிசயம் பலவால்.
சொற்பிரிப்பு
சாயை முன் பிணிக்கும் கிணறு ஒன்று தஞ்சம் உண்ணின் நஞ்சாம் தடம் ஒன்றுமாயை இன்றி வந்து உள் அடைந்தார்கள் வானரத்து உருவாம் பிலம் ஒன்றுமேய அவ்உரு நீங்கிடக் குளிக்கும் விளங்கு பொய்கையும் ஒன்று விண்ணவரோடுஆய இன்பம் உய்க்கும் பிலம் ஒன்றோடு அனைய ஆகிய அதிசயம் பலவால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

81

அஞ்சு வான் கரத்தாறு இழி மதத்தோர் ஆனை நிற்கவும் அரை இருள் திரியும்மஞ்சு நீள்வது போலும் மா மேனி மலர்ப் பதங்களில் வண் சிலம்பு ஒலிப்பநஞ்சு பில்கு எயிற்று அரவ வெற்றரையின் நாம மூன்றிலைப் படை உடைப் பிள்ளைஎஞ்சல் இன்றி முன் திரியவும் குன்றம் எறிந்த வேலவன் காக்கவும் இசையும்.
சொற்பிரிப்பு
அஞ்சு வான் கரத்து ஆறு இழி மதத்து ஓர் ஆனை நிற்கவும் அரை இருள் திரியும்மஞ்சு நீள்வது போலுமா மேனி மலர்ப்பதங்களில் வண் சிலம்பு ஒலிப்பநஞ்சு பில்கு எயிற்று அரவவெற்று அரையின் நாம மூன்று இலைப் படைஉடைப் பிள்ளைஎஞ்சல் இன்றி முன் திரியவும் குன்றம் எறிந்த வேலவன் காக்கவும் இசையும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

82

சத்தி தற் பரசித்தி யோகிகளும் சாதகத் தனித் தலைவரும் முதலாநித்தம் எய்திய ஆயுள் மெய்த் தவர்கள் நீடுவாழ் திருப் பாடியும் அனேகம்சித்தர் விஞ்சையர் இயக்கர் கந்தருவர் திகழ்ந்து மன்னுவார் செண்டுகை ஏந்திவித்தகக் கரி மேற் கொளும் காரி மேவும் செண்டு அணை வெளியும் ஒன்று உளதால்.
சொற்பிரிப்பு
சத்தி தற்பர சித்த யோகிகளும் சாதகத் தனித் தலைவரும் முதலாநித்தம் எய்திய ஆயுள் மெய்த்தவர்கள் நீடு வாழ் திருப்பாடியும் அனேகம்சித்தர் விஞ்சையர் இயக்கர் கந்தருவர் திகழ்ந்து மன்னுவார் செண்டு கை ஏந்திவித்தகக் கரி மேற்கொளும் காரி மேவு செண்டு அணை வெளியும் ஒன்று உளதால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

83

வந்து அடைந்தவர் தம் உரு மாய மற்று உளாரைத் தாம் காண்பிடம் உளதுசிந்தை யோகத்து முனிவர் யோகினிகள் சேரும் யோக பீடமும் உளது என்றும்அந்தமில் அறம் புரப்பவள் கோயில் ஆன போக பீடமும் உளதாகும்எந்தையார் மகிழ் காஞ்சி நீடு எல்லை எல்லை இல்லன உள்ள ஆர் அறிவார்.
சொற்பிரிப்பு
வந்து அடைந்தவர் தம் உரு மாய மற்று உளாரைத் தாம் காண்பிடம் உளதுசிந்தை யோகத்து முனிவர் யோகினிகள் சேரும் யோகபீடமும் உளது என்றும்அந்தம் இல் அறம் புரப்பவள் கோயில் ஆன போக பீடமும் உளது ஆகும்எந்தையார் மகிழ் காஞ்சி நீடு எல்லை எல்லை இல்லன உள்ள; ஆர் அறிவார்?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

84

தூண்டு சோதி ஒன்று எழுந்து இருள் துரக்கும் சுரர்கள் வந்து சூழ் உருத்திர சோலைவேண்டினார்கள் தம் பிறப்பினை ஒழிக்கும் மெய்ந் நெறிக் கணின்றார்கள் தாம் விரும்பித்தீண்டில் யாவையும் செம் பொன் ஆக்குவது ஓர் சிலையும் உண்டு உரை செய்வதற்கு அரிதால்ஆண்ட நாயகி சமயங்கள் ஆறும் அகில யோனியும் அளிக்கும் அந் நகரம்.
சொற்பிரிப்பு
தூண்டு சோதி ஒன்று எழுந்து இருள் துரக்கும் சுரர்கள் வந்து சூழ் உருத்திர சோலைவேண்டினார்கள் தம் பிறப்பினை ஒழிக்கும் மெய்ந்நெறிக்கண் நின்றார்கள் தாம் விரும்பித்தீண்டில் யாவையும் செம்பொன் ஆக்குவது ஓர் சிலையும் உண்டு உரை செய்வதற்கு அரிதால்ஆண்ட நாயகி சமயங்கள் ஆறும் அகில யோனியும் அளிக்கும் அந்நகரம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

85

என்றும் உள்ள இந் நகர் கலியுகத்தில் இலங்கு வேற்கரிகால் பெருவளத்தோன்வன் திறற்புலி இமயமால் வரை மேல் வைக்க ஏகுவோன் தனக்கு இதன் வளமைசென்று வேடன் முன் கண்டு உரை செய்யத் திருந்து காத நான்கு உட்பட வகுத்துக்குன்று போலும் மா மதில் புடை போக்கிக் குடி இருத்தின கொள்கையின் விளங்கும்.
சொற்பிரிப்பு
என்றும் உள்ள இந்நகர் கலியுகத்தில் இலங்கு வேல் கரி கால் பெரு வளத்தோன்வன் திறல் புலி இமயமால் வரைமேல் வைக்க ஏகுவோன் தனக்கு இதன் வளமைசென்று வேடன் முன் கண்டு உரை செய்யத் திருந்து காத நான்கு உட்பட வகுத்துக்குன்று போலும் மாமதில் புடை போக்கிக் குடி இருத்தின கொள்கையின் விளங்கும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

86

தண் காஞ்சி மென் சினைப் பூம் கொம்பர் ஆடல் சார்ந்து அசைய அதன் மருங்கு சுரும்பு தாழ்ந்துபண் காஞ்சி இசை பாடும் பழன வேலிப் பணை மருதம் புடை உடைத்தாய்ப் பாரில் நீடும்திண் காஞ்சி நகர் நொச்சி இஞ்சி சூழ்ந்த செழும் கிடங்கு திரு மறைகள் ஒலிக்கும் தெய்வவண் காஞ்சி அல்குல் மலை வல்லி காக்க வளர் கருணைக் கடல் உலகம் சூழ்ந்தால் மானும்.
சொற்பிரிப்பு
தண்காஞ்சி மென்சினைப் பூங் கொம்பர் ஆடல் சார்ந்து அசைய அதன் மருங்கு சுரும்பு தாழ்ந்துபண் காஞ்சி இசை பாடும் பழன வேலிப் பணை மருதம் புடை உடைத்தாய்ப் பாரில் நீடும்திண் காஞ்சி நகர் நொச்சி இஞ்சி சூழ்ந்த செழும் கிடங்கு திருமறைகள் ஒலிக்கும் தெய்வவண் காஞ்சி அல்குல் மலைவல்லி காக்க வளர் கருணைக் கடல் உலகம் சூழ்ந்தால் மானும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

87

கொந்தலர் பூங் குழல் இமயக் கொம்பு கம்பர் கொள்ளும் பூசனை குறித்த தானம் காக்கமந்திர மா மதில் அகழி அவர் தாம் தந்த வாய்மை ஆகம விதியின் வகுப்புப் போலும்அந்தமில் சீர்க் காஞ்சியை வந்து அடைந்தார்க்கு அன்றி அடைகளங்கம் அறுப்பர் என்றுஅறிந்து சூழவந்து அணைந்து தன் கறுப்பும் உவர்ப்பும் நீக்கும் மா கடலும் போலும் மலர்க் கிடங்கு மாதோ.
சொற்பிரிப்பு
கொந்து அலர் பூங்குழல் இமயக்கொம்பு கம்பர் கொள்ளும் பூசனை குறித்த தானம் காக்கமந்திர மா மதில் அகழி அவர் தாம் தந்த வாய்மை ஆகமவிதியின் வகுப்புப் போலும்;அந்தம் இல்சீர்க் காஞ்சியை வந்து அடைந்தார்க்கு அன்றி அடைகளங்கம் அறுப்பு அரிது என்று அறிந்து சூழவந்து அணைந்து தன்கறுப்பும் உவர்ப்பும் நீக்கும் மாகடலும் போலும் மலர்க் கிடங்கு மாதோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

88

ஆங்கு வளர் எயிலினுடன் விளங்கும் வாயில் அப்பதியில் வாழ் பெரியோர் உள்ளம் போலஓங்கு நிலைத் தன்மையவாய் அகிலம் உய்ய உமைபாகர் அருள் செய்த ஒழுக்கம் அல்லால்தீங்கு நெறி அடையாத தடையும் ஆகிச்செந் நெறிக்கண் நிகழ் வாய்மை திருந்து மார்க்கம்தாங்குலவ நிலவி வளர் ஒளியால் என்றும் தட நெடுவான் அளப்பன வாம் தகைய வாகும்.
சொற்பிரிப்பு
ஆங்கு வளர் எயிலின் உடன் விளங்கும் வாயில் அப்பதியில் வாழ் பெரியோர் உள்ளம் போலஓங்கு நிலைத் தன்மையவாய் அகிலம் உய்ய உமைபாகர் அருள்செய்த ஒழுக்கம் அல்லால்தீங்குநெறி அடையாத தடையும் ஆகிச் செந்நெறிக்கண் நிகழ் வாய்மை திருந்து மார்க்கம்தாம் குலவ நிலவி வளர் ஒளியால் என்றும் தடநெடுவான் அளப்பனவாம் தகைய ஆகும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

89

மாறு பெறல் அரும் கனக மாடம் நீடு மணி மறுகும் நெடும் தெருவும் வளத்தில் வந்தஆறு பயில் ஆவண வீதிகளும் மற்றும் அமைந்த நகர் அணி வரைகள் நடுவு போக்கிக்கூறுபடு நவ கண்டம் அன்றி மல்கக் கொண்ட அனேகம் கண்டம் ஆகி அன்னவேறு ஒரு மண் உலகு தனில் உளதாம் என்ன விளங்கியு மா லோக நிலை மேவிற்று அன்றே.
சொற்பிரிப்பு
மாறு பெறல் அரும் கனக மாடம் நீடு மணி மறுகும் நெடும் தெருவும் வளத்தில் வந்தஆறு பயில் ஆவண வீதிகளும் மற்றும் அமைந்தநகர் அணிவரைகள் நடுவு போக்கிக்கூறுபடு நவகண்டம் அன்றி மல்கக் கொண்ட அனேகம் கண்டம் ஆகி அன்னவேறு ஒரு மண்உலகு தனில் உளதாம் என்ன விளங்கிய மாலோக நிலை மேவிற்று அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

90

பாகம் மருங்கு இரு புடையும் உயர்ந்து நீண்ட படர் ஒளி மாளிகை நிரைகள் பயில் மென் கூந்தல்தோகையர் தம் குழாம் அலையத் தூக்கு முத்தின் சுடர்க் கோவைக் குளிர் நீர்மை துதைந்த வீதிமாகமிடை ஒளி தழைப்ப மன்னி நீடு மருங்கு தாரகை அலைய வரம்பில் வண்ணமேகமிடை கிழித்து ஒழுகும் தெய்வக் கங்கை மேல் நதிகள் பல மண் மேல் விளங்கி ஒக்கும்.
சொற்பிரிப்பு
பாகமருங்கு இருபுடையும் உயர்ந்து நீண்ட படர் ஒளி மாளிகை நிரைகள் பயில் மென்கூந்தல்தோகையர் தம் குழாம் அலையத் தூக்கு முத்தின் சுடர்க்கோவைக் குளிர் நீர்மை துதைந்த வீதிமாகம் இடை ஒளி தழைப்ப மன்னி நீடு மருங்கு தாரகை அலைய வரம்பில் வண்ணமேகம் இடை கிழித்து ஒழுகும் தெய்வக் கங்கை மேல்நதிகள் பல மண்மேல் விளங்கி ஒக்கும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

91

கிளர் ஒளிச் செங்கனக மயந்தானாய் மாடு கீழ் நிலையோர் நீலச் சோபானம் பூணக்கொள அமைத்து மீது ஒருபால் கன்ன சாலை குல வயிரத்தால் அமைத்த கொள்கையாலேஅளவில் சுடர்ப் பிழம்பு ஆனார் தம்மைத் தேடி அகழ்ந்து ஏனம் ஆனானும் அன்னம் ஆகிவளர் விசும்பில் எழுந்தானும் போல நீடு மாளிகையும் உள மற்று மறுகு தோறும்.
சொற்பிரிப்பு
கிளர்ஒளிச் செங்கனகமயம் தானாய் மாடு கீழ்நிலையோர் நீலச் சோபானம் பூணக்கொளஅமைத்து மீது ஒருபால் கன்ன சாலை குலவயிரத்தால் அமைத்த கொள்கையாலேஅளவில் சுடர்ப் பிழம்பு ஆனார் தம்மைத் தேடி அகழ்ந்து ஏனம் ஆனாலும் அன்னம் ஆகிவளர்விசும்பில் எழுந்தானும் போல நீடு மாளிகையும் உளமற்று மறுகு தோறும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

92

மின் பொலி பன் மணி மிடைந்த தவள மாடம் மிசைப் பயில் சந்திர காந்தம் விசும்பின் மீதுபொன் புரையும் செக்கர் நிறப் பொழுது தோன்றும் புனிற்றி மதி கண்டு உருகிப் பொழிந்த நீரால்வன் புலியின் உரியாடைத் திரு ஏகம்பர் வளர்சடையும் இளம் பிறையும் கண்டு கும்பிட்டுஅன்பு உருகி மெய் பொழியக் கண்ணீர் வாரும் அடியவரும் அனையவுள அலகிலாத.
சொற்பிரிப்பு
மின்பொலி பன்மணி மிடைந்த தவள மாடம் மிசைப்பயில் சந்திரகாந்தம் விசும்பின் மீதுபொன்புரையும் செக்கர் நிறப் பொழுது தோன்றும் புனிற்றுமதி கண்டு உருகிப் பொழிந்த நீரால்வன்புலியின் உரிஆடைத் திருஏகம்பர் வளர்சடையும் இளம்பிறையும் கண்டு கும்பிட்டுஅன்புஉருகி மெய்பொழியக் கண்ணீர் வாரும் அடியவரும் அனைய உள அலகிலாத.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

93

முகில் உரிஞ்சும் கொடி தொடுத்த முடிய ஆகும் முழுப் பளிங்கின் மாளிகைக்கண்முற்றும் சுற்றும்நிகரில் சரா சரங்கள் எல்லாம் நிழலினாலே நிறைதலினால் நிறை தவஞ்செய் இமயப் பாவைநகில் உழுத சுவடும் வளைத் தழும்பும் பூண்ட நாயகனார் நான்கு முகற்குப் படைக்க நல்கும்அகிலயோனிகள் எல்லாம் அமைத்து வைத்த அரும் பெரும் பண்டார நிலை அனைய ஆகும்.
சொற்பிரிப்பு
முகில் உரிஞ்சும் கொடிதொடுத்த முடிய ஆகும் முழுப்பளிங்கின் மாளிகைகள் முற்றும் சுற்றும்நிகர்இல் சராசரங்கள் எல்லாம் நிழலினாலே நிறைதலினால் நிறைதவம் செய் இமயப் பாவைநகில் உழுத சுவடும் வளைத் தழும்பும் பூண்ட நாயகனார் நான்முகற்குப் படைக்க நல்கும்அகிலயோனிகள் எல்லாம் அமைத்து வைத்த அரும்பெரும் பண்டாரநிலை அனைய ஆகும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

94

பொன் களப மாளிகை மேல் முன்றில் நின்று பூம் கழங்கு மணிப் பந்தும் போற்றி ஆடும்வில் புருவக் கொடி மடவார் கலன்கள் சிந்தி விழுவனவும் கெழுவு துணை மேவு மாதர்அற்பு முதிர் கலவியினில் பரிந்து சிந்தும் அணிமணி சேடியர் தொகுக்கும் அவையும் ஆகிநற்கனக மழை அன்றிக் காஞ்சி எல்லை நவமணி மாரியும் பொழியும் நாளும் நாளும்.
சொற்பிரிப்பு
பொன் களப மாளிகைமேல் முன்றில் நின்று பூங்கழங்கும் மணிப்பந்தும் போற்றி ஆடும்வில்புருவக் கொடி மடவார் கலன்கள் சிந்தி விழுவனவும் கெழுவு துணை மேவு மாதர்அன்பு முதிர் கலவியினில் பரிந்து சிந்தும் அணி மணிச் சேடியர் தொகுக்கும் அவையும் ஆகிநல்கனக மழை அன்றிக் காஞ்சி எல்லை நவமணி மாரியும் பொழியும் நாளும் நாளும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

95

பூ மகளுக்கு உறையுள் எனும் தகைய ஆன பொன் மாடத் தரமியங்கள் பொலிய நின்றுமா மகரக் குழை மகளிர் மைந்தர் அங்கண் வந்து ஏறுமுன் நறு நீர் வண்டல் ஆடத்தூமணிப் பொன் புனை நாளத்துருத்தி வீசும் சுடர்விடு செங்குங்கும நீர்த் துவலை தோய்ந்தகாமர் மணி நாசிகையின் மருங்கு தங்கும் கருமுகில்கள் செம்முகில் களாகிக் காட்டும்.
சொற்பிரிப்பு
பூமகளுக்கு உறையுள் எனும் தகைய ஆன பொன்மாடத்து அரமியங்கள் பொலிய நின்றுமாமகரக் குழை மகளிர் மைந்தர் அங்கண் வந்து ஏறு முன் நறுநீர் வண்டல் ஆடத்தூமணிப் பொன் புனை நாளத் துருத்தி வீசும் சுடர்விடு செங்குங்கும நீர்த் துவலை தோய்ந்தகாமர் மணி நாசிகையின் மருங்கு தங்கும் கருமுகில்கள் செம்முகில்கள் ஆகிக் காட்டும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

96

இமம் மலிய எடுத்த நெடு வரைகள் போல இலங்கு சுதைத் தவள மாளிகை நீள் கோட்டுச்சிமை அடையும் சோபான நிரையும் விண்ணும் தெரிவு அரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்துதமர் களுடன் இழிந்து ஏறும் மைந்தர் மாதர் தங்களையும் விசும்பிடை நின்று இழியா நிற்கும்அமரரையும் அரமகளிர் தமையும் வெவ்வேறு அறிவரிதாம் தகைமையன அனேகம் அங்கண்.
சொற்பிரிப்பு
இமம் மலிய எடுத்த நெடுவரைகள் போல இலங்கு சுதைத் தவள மாளிகை நீள் கோட்டுச்சிமை அடையும் சோபான நிரையும் விண்ணும் தெரிவு அரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்துதமர்கள் உடன் இழிந்து ஏறு மைந்தர் மாதர் தங்களையும் விசும்பு இடை நின்று இழியா நிற்கும்அமரரையும் அரமகளிர் தமையும் வெவ்வேறு அறிவு அரிதாம் தகைமையன அனேகம் அங்கண்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

97

அரவ நெடுந் தேர் வீதி அருகு மாடத்து அணிமணிக் கோபுரத்து அயலே வியல் வாய் நீண்டவிரவு மரகதச் சோதி வேதித் திண்ணை விளிம்பின் ஒளி துளும்பு முறைப் படி மீது ஏறும்குரவலரும் குழல் மடவார் அடியில் ஊட்டும் குழம்பு அடுத்த செம்பஞ்சின் சுவட்டுக் கோலம்பரவை நெடும் தரங்கம் மிசை விளங்கித் தோன்றும் பவள நறும் தளிர் அனைய பலவும் பாங்கர்.
சொற்பிரிப்பு
அரவநெடும் தேர்வீதி அருகு மாடத்து அணிமணிக் கோபுரத்து அயலே வியல்வாய் நீண்டவிரவு மரகதச் சோதி வேதித் திண்ணை விளிம்பின் ஒளி துளும்பு முறைப் படிமீது ஏறும்குரவுஅலரும் குழல்மடவார் அடியில் ஊட்டும் குழம்பு அடுத்த செம்பஞ்சின் சுவட்டுக் கோலம்பரவை நெடும் தரங்க மிசை விளங்கித் தோன்றும் பவள நறும் தளிர் அனைய பலவும் பாங்கர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

98

வேம்பு சினக் களிற்று அதிர்வும் மாவின் ஆர்ப்பும் வியன் நெடுந் தேர்க் கால் இசைப்பும் விழவுஅறாதஅம் பொன் மணி வீதிகளில் அரங்கில் ஆடும் அரிவையர் நூபுர ஒலியோடு அமையும் இம்பர்உம்பரின் இந்திரன் களிற்றின் முழக்குந் தெய்வ உயர் இரவி மாக் கலிப்பும் அயன் ஊர்தித் தேர்பம்பிசையும் விமானத்துள் ஆடுந் தெய்வப் பாவையர் நூபுர அரவத்துடனே பல்கும்.
சொற்பிரிப்பு
வெம்பு சினக் களிற்று அதிர்வும் மாவின் ஆர்ப்பும் வியன்நெடும் தேர்க் கால் இசைப்பும் விழவு அறாதஅம்பொன்மணி வீதிகளில் அரங்கில் ஆடும் அரிவையர் நூபுர ஒலியோடு அமையும் இம்பர்;உம்பரின் இந்திரன் களிற்றின் முழக்கும் தெய்வ உயர் இரவி மாக்கலிப்பும் அயன் ஊர்தித் தேர்பம்பு இசையும் விமானத்துள் ஆடும் தெய்வப் பாவையர் நூபுர அரவத்து உடனே பல்கும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

99

அருமறை அந்தணர் மன்னும் இருக்கையான ஆகுதியின் புகை அடுத்த அம் பொன் மாடப்பெரு மறுகு தொறும் வேள்விச் சாலை எங்கும் பெறும் அவிப் பாகம் கொடுக்கும் பெற்றி மேலோர்வருமுறைமை அழைக்க விடு மந்திரம் எம்மருங்கும் வானவர் நாயகர் திரு ஏகம்பர் முன்றில்திருமலி பொன் கோபுரத்து நெருங்கும் எல்லாத் தேவரையும் அணித்தாகக் கொண்டு செல்லும்.
சொற்பிரிப்பு
அருமறை அந்தணர் மன்னும் இருக்கை ஆன ஆகுதியின் புகை அடுத்த அம்பொன் மாடப்பெருமறுகு தொறும் வேள்விச் சாலை எங்கும் பெறும் அவிப்பாகம் கொடுக்கும் பெற்றி மேலோர்வருமுறைமை அழைக்க விடு மந்திரம் எம் மருங்கும் வானவர் நாயகர் திருஏகம்பர் முன்றில்திருமலி பொன் கோபுரத்து நெருங்கும் எல்லாத் தேவரையும் அணித்தாகக் கொண்டு செல்லும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

100

அரசர் குலப் பெரும் தெருவும் தெற்றி முற்றத்து ஆயுதங்கள் பயிலும் வியல் இடமும் அங்கண்புரசை மதக் கரிகளொடு புரவி ஏறும் பொற்புடைய வீதிகளும் பொலிய எங்கும்விரை செய் நறுந்தொடை அலங்கல் குமரர் செய்யும் வியப்புறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர்நிரை செறியும் விமான ஊர்திகளின் மேலும் நிலமிசையும் பல முறையும் நிரந்து நீங்கார்.
சொற்பிரிப்பு
அரசர் குலப் பெரும் தெருவும் தெற்றி முற்றத்து ஆயுதங்கள் பயிலும் வியல் இடமும் அங்கண்புரசை மதக் கரிகளொடு புரவி ஏறும் பொற்பு உடைய வீதிகளும் பொலிய எங்கும்விரைசெய் நறும் தொடை அலங்கல் குமரர் செய்யும் வியப்பு உறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர்நிரை செறியும் விமான ஊர்திகளின் மேலும் நிலமிசையும் பலமுறையும் நிரந்து நீங்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

101

வெயில் உமிழும் பன்மணிப் பூண் வணிக மாக்கள் விரவு நிதி வளம் பெருக்கும் வெறுக்கை மிக்கவயின் நிலவு மணிக் கடை மா நகர்கள் எல்லாம் வனப்பு உடைய பொருட்குலங்கள் மலிதலாலேகயிலை மலையார் கச்சி ஆலயங்கள் பலவும் கம்பமுமேவிய தன்மை கண்டு போற்றப்பயிலும் உருப்பல கொண்டு நிதிக் கோன்தங்கப் பயில் அளகாபுரி வகுத்த பரிசு காட்டும்.
சொற்பிரிப்பு
வெயில் உமிழும் பன்மணிப் பூண் வணிக மாக்கள் விரவுநிதி வளம் பெருக்கும் வெறுக்கை மிக்கவயின்நி லவு மணிக்கடை மா நகர்கள் எல்லாம் வனப்பு உடைய பொருள்குலங்கள் மலிதலாலேகயிலை மலையார் கச்சி ஆலயங்கள் கம்பமும் மேவிய தன்மை கண்டு போற்றப்பயிலும் உருப் பல கொண்டு நிதிக்கோன் தங்கப் பயில் அளகாபுரி வகுத்த பரிசு காட்டும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

102

விழவு மலி திருக் காஞ்சி வரைப்பின் வேளாண் விழுக் குடிமை பெரும் செல்வர் விளங்கும் வேணிமழ இள வெண் திங்கள் புனை கம்பர் செம்பொன் மலைவல்லிக் களித் தவளர் உணவின் மூலம்தொழ உலகு பெறும் அவள் தான் அருள பெற்றுத் தொன்னிலத்து மன்னு பயிர் வேத வாய்மைஉழவுத் தொழிலால் பெருக்கி உயிர்கள் எல்லாம் ஓங்க வரும் தரும வினைக்கு உளரால் என்றும்.
சொற்பிரிப்பு
விழவு மலி திருக்காஞ்சி வரைப்பின் வேளாண் விழுக் குடிமைப் பெரும் செல்வர் விளங்கும் வேணிமழஇள வெண் திங்கள் புனை கம்பர் செம்பொன் மலைவல்லிக்கு அளித்த வளர் உணவின் மூலம்தொழ உலகு பெறும் அவள் தான் அருளப் பெற்றுத் தொல் நிலத்து மன்னு பயிர் வேத வாய்மைஉழவு தொழிலால் பெருக்கி உயிர்கள் எல்லாம் ஓங்க வரும் தரும வினைக்கு உளரால் என்றும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

103

ஓங்கிய நால் குலத்து ஒவ்வாப் புணர்வில் தம்மில் உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதிதாம் குழுமிப் பிறந்த குலபேதம் எல்லாம்தம் தகைமைக்கு ஏற்ற தனி இடங்கள் மேவிஆங்கு நிறை கிளை பயின்று மரபின் ஆற்ற அடுத்த வினைத் தொழிலின் முறைமை வழாமை நீடுபாங்கு வளர் இருக்கை நிலை பலவும் எல்லாம் பண்பு நீடிய உரிமைப் பால அன்றே.
சொற்பிரிப்பு
ஓங்கிய நால்குலத்து ஒவ்வாப் புணர்வில் தம்மில் உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதிதாம் குழுமிப் பிறந்த குல பேதம் எல்லாம் தம் தகைமைக்கு ஏற்ற தனி இடங்கள் மேவிஆங்கு நிறை கிளை பயின்று மரபின் ஆற்ற அடுத்த வினைத் தொழில் முறைமை வழாமை நீடுபாங்கு வளர் இருக்கை நிலை பலவும் எல்லாம் பண்பு நீடிய உரிமைப் பால அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

104

ஆதி மூதெயில் அந் நகர் மன்னியசோதி நீள் மணித் தூபமும் தீபமும்கோதில் பல்லியமும் கொடியும் பயில்வீதி நாளும் ஒழியா விழா வணி.
சொற்பிரிப்பு
ஆதி மூது எயில் அந்நகர் மன்னியசோதி நீள்மணித் தூபமும் தீபமும்கோதில் பல்லியமும் கொடியும் பயில்வீதி நாளும் ஒழியா விழா அணி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

105

வாயில் எங்கணும் தோரணம் மாமதில்ஞாயில் எங்கணுஞ் சூழ் முகில் நாள்மதிதோயில் எங்கணும் மங்கலம் தொண்டர் சூழ்கோயில் எங்கணும் உம்பர் குலக் குழாம்.
சொற்பிரிப்பு
வாயில் எங்கணும் தோரணம், மாமதில்ஞாயில் எங்கணும் சூழ்முகில், நாள்மதிதோயில் எங்கணும் மங்கலம், தொண்டர் சூழ்கோயில் எங்கணும் உம்பர் குலக்குழாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

106

வேத வேதியர் வேள்வியே தீயனமாதர் ஓதி மலரே பிணியனகாதல் வீதி விலக்கே கவலையசூத மாதவியே புறம் சூழ்வன.
சொற்பிரிப்பு
வேத வேதியர் வேள்வியே தீயன;மாதர் ஓதி மலரே பிணியன;காதல் வீதி விலக்கே கவலைய;சூத மாதவியே புறம் சூழ்வன.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

107

சாயலார்கள் நுசுப்பே தளர்வனஆய மாடக் கொடியே அசைவனசேய ஓடைக் களிறே திகைப்பனபாய சோலைத் தருவே பயத்தன.
சொற்பிரிப்பு
சாயலார்கள் நுசுப்பே தளர்வன;ஆய மாடக் கொடியே அசைவன;சேய ஓடைக் களிறே திகைப்பன;பாய சோலைத் தருவே பயத்தன.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

108

அண்ணலார் அன்பர் அன்பே முன் ஆர்த்தனதண்ணறுஞ் செழுந்தாதே துகள்வனவண்ண நீள் மணி மாலையே தாழ்வனஎண்ணில் குங்குமச் சேறே இழுக்கின.
சொற்பிரிப்பு
அண்ணலார் அன்பர் அன்பே முன் ஆர்த்தன;தண் நறும்செழும் தாதே துகள்வன;வண்ண நீள்மணி மாலையே தாழ்வன;எண்ணில் குங்குமச் சேறே இழுக்கின.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

109

வென்றி வானவர் தாம் விளையாடலும்என்றும் உள்ளவர் வாழும் இயற்கையும்நன்றும் உள்ளத்து நண்ணினர் வேட்கைகள்ஒன்றும் அங்கு ஒழியா வகை உய்ப்பது.
சொற்பிரிப்பு
வென்றி வானவர் தாம் விளையாடலும்என்றும் உள்ளவர் வாழும் இயற்கையும்நன்றும் உள்ளத்து நண்ணினர் வேட்கைகள்ஒன்றும் அங்கு ஒழியா வகை உய்ப்பது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

110

புரம் கடந்தவர் காஞ்சி புரம் புகழ்பரம்பு நீள் புவனம் பதி நான்கினும்வரம்பில் போக வனப்பின் வளமெல்லாம்நிரம்பு கொள்கலம் என்ன நிறைந்தலால்.
சொற்பிரிப்பு
புரம் கடந்தவர் காஞ்சிபுரம் புகழ்பரம்பு நீள் புவனம் பதினான்கினும்வரம்பில் போக வனப்பின் வளம் எலாம்நிரம்பு கொள்கலம் என்ன நிறைந்ததால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

111

அவ்வகைய திருநகரம் அதன் கண் ஒரு மருங்குறைவார்இவ்வுலகில் பிறப்பினால் ஏகாலிக் குலத்துள்ளார்செவ்விய அன்புடை மனத்தார் சீலத்தின் நெறி நின்றார்மை விரவு கண்டரடி வழித் தொண்டர் உளர் ஆனார்.
சொற்பிரிப்பு
அவ்வகைய திருநகரம் அதன்கண் ஒரு மருங்கு உறைவார்;இவ்உலகில் பிறப்பினால் ஏகாலிக் குலத்து உள்ளார்;செவ்விய அன்பு உடை மனத்தார்; சீலத்தின் நெறி நின்றார்;மைவிரவு கண்டர் அடி வழித்தொண்டர் உளர் ஆனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

112

மண்ணின் மிசை வந்த அதற்பின் மனம் முதல் ஆயின மூன்றும்அண்ணலார் சேவடியின் சார்வாக அணைவிப்பார்புண்ணிய மெய்த் தொண்டர் திருக் குறிப்பு அறிந்து போற்று நிலைத்திண்மையினால் திருக் குறிப்புத் தொண்டர் எனும் சிறப்பினார்.
சொற்பிரிப்பு
மண்ணின் மிசை வந்ததற்பின் மன முதல் ஆயின மூன்றும்அண்ணலார் சேவடியின் சார்வாக அணைவிப்பார்புண்ணிய மெய்த் தொண்டர் திருக்குறிப்பு அறிந்து போற்று நிலைத்திண்மையினால் “திருக்குறிப்புத் தொண்டர்” எனும் சிறப்பினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

113

தேர் ஒலிக்க மா ஒலிக்கத் திசை ஒலிக்கும் புகழ்க் காஞ்சிஊரொலிக்கும் பெரு வண்ணார் எனவொண்ணா உண்மையினார்நீரொலிக்க அரா இரைக்க நிலா முகிழ்க்கும் திருமுடியார்பேரொலிக்க உருகும் அவர்க்கு ஒலிப்பர் பெரு விருப்பி னொடும்.
சொற்பிரிப்பு
தேர் ஒலிக்க மா ஒலிக்கத் திசை ஒலிக்கும் புகழ்க் காஞ்சி“ஊர் ஒலிக்கும் பெரு வண்ணார்” என ஒண்ணா உண்மையினார்;நீர் ஒலிக்க அரா இரைக்க நிலா முகிழ்க்கும் திருமுடியார்பேர் ஒலிக்க உருகும் அவர்க்கு ஒலிப்பர் பெரு விருப்பினொடும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

114

தேசுடைய மலர்க் கமலச் சேவடியார் அடியார்தம்தூசுடைய துகள் மாசு கழிப்பார் போல் தொல்லை வினைஆசுடைய மல மூன்றும் அணைய வரும் பெரும் பிறவிமாசு தனை விடக் கழித்து வரும் நாளில் அங்கு ஒரு நாள்.
சொற்பிரிப்பு
தேசு உடைய மலர்க்கமலச் சேவடியார் அடியார் தம்தூசு உடைய துகள் மாசு கழிப்பார் போல் தொல்லை வினைஆசு உடைய மல மூன்றும் அணைய வரும் பெரும் பிறவிமாசு தனை விடக் கழித்து வருநாளில் அங்கு ஒருநாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

115

பொன் இமயப் பொருப் பரையன் பயந்து அருளும் பூங்கொடிதன்நன்னிலைமை அன்று அளக்க எழுந்து அருளும் நம் பெருமான்தன்னுடைய அடியவர் தம் தனித் தொண்டர் தம்முடையஅந்நிலைமை கண்டு அன்பர்க்கு அருள் புரிவான் வந்து அணைவார்.
சொற்பிரிப்பு
பொன்இமயப் பொருப்பு அரையன் பயந்து அருளும் பூங்கொடி தன்நன் நிலைமை அன்று அளக்க எழுந்து அருளும் நம்பெருமான்தன் உடைய அடியவர் தம் தனித் தொண்டர் தம் உடையஅந்நிலைமை கண்டு அன்பர்க்கு அருள்புரிவான் வந்து அணைவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

116

சீதமலி காலத்துத் திருக் குறிப்புத் தொண்டர்பால்ஆதுலராய் மெலிந்து மிக அழுக்கு அடைந்த கந்தையுடன்மாதவ வேடம் தாங்கி மால் அறியா மலர் அடிகள்கோதடையா மனத்தவர் முன் குறு நடைகள் கொளக் குறுகி.
சொற்பிரிப்பு
சீத மலி காலத்துத் திருக்குறிப்புத் தொண்டர்பால்ஆதுலராய் மெலிந்து மிக அழுக்கு அடைந்த கந்தை உடன்மாதவ வேடம் தாங்கி மால் அறியா மலர்அடிகள்கோது அடையா மனத்தவர் முன் குறுநடைகள் கொளக் குறுகி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

117

திருமேனி வெண்ணீறு திகழ்ந்து ஒளிரும் கோலத்துக்கரு மேகம் என அழுக்குக் கந்தையுடன் எழுந்து அருளிவருமேனி அருந் தவரைக் கண்டு மனம் மகிழ்ந்து எதிர் கொண்டுஉருமேவும் மயிர்ப் புளகம் உளவாகப் பணிந்து எழுந்தார்.
சொற்பிரிப்பு
திருமேனி வெண்நீறு திகழ்ந்து ஒளிரும் கோலத்துக்கருமேகம் என அழுக்குக் கந்தை உடன் எழுந்தருளிவருமேனி அரும் தவரைக் கண்டு மனம் மகிழ்ந்து எதிர்கொண்டுஉருமேவும் மயிர்ப்புளகம் உளவாகப் பணிந்து எழுந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

118

எய்தும் அவர் குறிப்பு அறிந்தே இன் மொழிகள் பல மொழிந்துசெய் தவத்தீர் திருமேனி இளைத்து இருந்தது என் என்றுகை தொழுது கந்தையினைத் தந்து அருளும் கழுவ எனமை திகழ் கண்டம் கரந்த மாதவத்தோர் அருள் செய்வார்.
சொற்பிரிப்பு
எய்தும் அவர் குறிப்பு அறிந்தே இன்மொழிகள் பல மொழிந்து“செய்தவத்தீர்! திருமேனி இளைத்து இருந்தது என்?’ ’என்றுகைதொழுது “கந்தையினைத் தந்தருளும் கழுவ” எனமைதிகழ்கண்டம் கரந்த மாதவத்தோர் அருள்செய்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

119

இக் கந்தை அழுக்கு ஏறி எடுக்க ஒணாது எனினும் யான்மெய்க் கொண்ட குளிர்க் குடைந்து விட மாட்டேன் மேல் கடல் பால்அக் குன்றம் வெங்கதிரோன் அணைவதன் முன் தருவீரேல்கைக் கொண்டு போய் ஒலித்துக் கொடுவாரும் கடிது என்றார்.
சொற்பிரிப்பு
“இக்கந்தை அழுக்கு ஏறி எடுக்க ஒணாது எனினும் யான்மெய்க்கொண்ட குளிர்க்கு உடைந்து விடமாட்டேன்; மேல் கடல்பால்அக்குன்றம் வெம்கதிரோன் அணைவதன் முன் தருவீரேல்கைக்கொண்டு போய் ஒலித்துக் கொடுவாரும் கடிது” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

120

தந்து அருளும் இக் கந்தை தாழாதே ஒலித்து உமக்கு இன்றுஅந்தி படுவதன் முன்னம் தருகின்றேன் என அவரும்கந்தை இது ஒலித்து உணக்கிக் கடிது இன்றே தாரீரேல்இந்த உடற்கு இடர் செய்தீர் என்று கொடுத்து ஏகினார்.
சொற்பிரிப்பு
“தந்தருளும் இக்கந்தை தாழாதே ஒலித்து உமக்கு இன்றுஅந்தி படுவதன் முன்னம் தருகின்றேன்” என அவரும்“கந்தை இது ஒலித்து உணக்கிக் கடிது இன்றே தாரீரேல்இந்த உடற்கு இடர் செய்தீர்” என்று கொடுத்து ஏகினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

121

குறித்த பொழுதே ஒலித்துக் கொடுப்பதற்குக் கொடு போந்துவெறித் தடநீர்த் துறையின் கண் மா செறிந்து மிகப் புழுக்கிப்பிறித்து ஒலிக்கப் புகும் அளவில் பெரும் பகல் போய்ப் பின்பகலாய்மறிக்கரத்தார் திரு அருளால் மழை எழுந்து பொழிந்திடுமால்.
சொற்பிரிப்பு
குறித்த பொழுதே ஒலித்துக் கொடுப்பதற்குக் கொடுபோந்துவெறித்தடநீர்த் துறையின்கண் மாசு எறிந்து மிகப்புழுக்கிப்பிறித்து ஒலிக்கப் புகும் அளவில் பெரும்பகல்போய்ப் பின்பகலாய்மறிக்கரத்தார் திருவருளால் மழை எழுந்து பொழிந்திடுமால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

122

திசை மயங்க வெளியடைத்த செறி முகிலின் குழாம் மிடைந்துமிசை சொரியும் புனல் தாரை விழி நுழையா வகை மிடையஅசையுடைய மனத்து அன்பர் அறிவு மறந்து அருந்தவர் பால்இசைவு நினைந்து அழிந்து இனி யான் என் செய்கேன் என நின்றார்.
சொற்பிரிப்பு
திசை மயங்க வெளி அடைத்த செறிமுகிலின் குழாம் மிடைந்துமிசை சொரியும் புனல் தாரை விழி நுழையா வகை மிடைய,அசைவு உடைய மனத்து அன்பர் அறிவு மறந்து, அருந்தவர்பால்இசைவு நினைந்து, அழிந்து, ‘இனியான் என்செய்கேன்’ என நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

123

ஓவாதே பொழியு மழை ஒரு கால் விட்டு ஒழியும் எனக்காவாலி திருத் தொண்டர் தனி நின்றார் விடக் காணார்மேவார் போல் கங்குல் வர மெய் குளிரும் விழுத்தவர் பால்ஆ! ஆ! என் குற்றேவல் அழிந்த வா என விழுந்தார்.
சொற்பிரிப்பு
“ஓவாதே பொழியுமழை ஒருகால் விட்டு ஒழியும்” எனக்காவாலி திருத்தொண்டர் தனி நின்றார்; விடக்காணார்;மேவார் போல் கங்குல் வர, “மெய்குளிரும் விழுத்தவர்பால்ஆ!ஆ! என் குற்றேவல் அழிந்தவா!” என விழுந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

124

விழுந்த மழை ஒழியாது மெய்த்தவர் சொல்லிய எல்லைகழிந்தது முன்பு ஒலித்து மனைக்கு ஆற்று ஏற்க அறிந்திலேன்செழும் தவர் தம் திருமேனி குளிர் காணும் தீங்கு இழைத்ததொழும்பனேற்கு இனி இதுவே செயல் என்று துணிந்து எழுவார்.
சொற்பிரிப்பு
“விழுந்த மழை ஒழியாது, மெய்த்தவர் சொல்லிய எல்லைகழிந்தது;முன்பு ஒலித்து மனைக் காற்று ஏற்க அறிந்திலேன்செழுந்தவர் தம் திருமேனி குளிர்காணும் தீங்கு இழைத்ததொழும்பனேற்கு இனி இதுவே செயல்”என்று துணிந்து எழுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

125

கந்தை புடைத்திட எற்றும் கல்பாறை மிசைத் தலையைச்சிந்த எடுத்து எற்றுவான் என்று அணைந்து செழும் பாறை மிசைத்தந்தலையைப் புடைத்து எற்ற அப்பாறை தன் மருங்குவந்து எழுந்து பிடித்தது அணி வளைத் தழும்பர் மலர்ச் செங்கை.
சொற்பிரிப்பு
“கந்தை புடைத்திட எற்றும் கல்பாறை மிசைத் தலையைச்சிந்த எடுத்து எற்றுவன்” என்று அணைந்து செழும் பாறை மிசைத்தம் தலையைப் புடைத்து எற்ற, அப்பாறை தன் மருங்குவந்து எழுந்து பிடித்தது அணி வளைத் தழும்பர் மலர்ச்செங்கை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

126

வான் நிறைந்த புனல் மழை போய் மலர் மழையாய் இட மருங்குதேன் நிறைந்த மலர் இதழித் திருமுடியார் பொருவிடையின்மேல் நிறைந்த துணைவி யொடும் வெளி நின்றார் மெய்த் தொண்டர்தான் நிறைந்த அன்பு உருகக் கை தொழுது தனி நின்றார்.
சொற்பிரிப்பு
வான்நிறைந்த புனல்மழைபோய் மலர்மழை ஆயிட மருங்குதேன்நிறைந்த மலர் இதழித் திருமுடியார் பொருவிடையின்மேல்நிறைந்த துணைவியொடும் வெளிநின்றார்; மெய்த்தொண்டர்தான் நிறைந்த அன்பு உருகக் கைதொழுது தனிநின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

127

முன் அவரை நேர் நோக்கி முக் கண்ணர் மூவுலகும்நின் நிலைமை அறிவித்தோம் நீயும் இனி நீடிய நம்மன்னுலகு பிரியாது வைகுவாய் என அருளிஅந் நிலையே எழுந்து அருளி அணி ஏகாம்பரம் அணைந்தார்.
சொற்பிரிப்பு
முன்னவரை நேர் நோக்கி முக்கண்ணர் “மூஉலகும்நின் நிலைமை அறிவித்தோம்; நீயும் இனி நீடிய நம்மன் உலகு பிரியாது வைகுவாய்” என அருளிஅந்நிலையே எழுந்தருளி அணி ஏகாம்பரம் அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

128

சீர் நிலவு திருக் குறிப்புத் தொண்டர் திருத்தொழில் போற்றிப்பார் குலவத் தந்தை தாள் அற எறிந்தார் பரிசு உரைக்கேன்பேர் அருளின் மெய்த் தொண்டர் பித்தன் எனப் பிதற்றுதலால்ஆருலகில் இதன் உண்மை அறிந்து உரைக்க இசைந்து எழுவார்.
சொற்பிரிப்பு
சீர் நிலவு திருக்குறிப்புத் தொண்டர் திருத்தொழில் போற்றிப்பார் குலவத் தந்தை தாள் அற எறிந்தார் பரிசு உரைக்கேன்;பேர் அருளின் மெய்த்தொண்டர் “பித்தன்” எனப் பிதற்றுதலால்ஆர் உலகில் இதன் உண்மை அறிந்து உரைக்க இசைந்து எழுவார்?.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.