திருமுறை 12 · 12.024 · 37

திருநாளைப் போவார் நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

பகர்ந்துலகு சீர் போற்றும் பழைய வளம் பதியாகும்திகழ்ந்த புனற் கொள்ளிடம் பொன் செழுமணிகள் திரைக் கரத்தால்முகந்து தர இரு மருங்கும் முளரி மலர்க் கையேற்கும்அகல் பணை நீர் நன்னாட்டு மேற்காநாட்டு ஆதனூர்.
சொற்பிரிப்பு
பகர்ந்து உலகு சீர் போற்றும் பழைய வளம்பதி ஆகும்திகழ்ந்த புனல் கொள்ளிடம் பொன் செழுமணிகள் திரைக் கரத்தால்முகந்து தர இருமருங்கும் முளரி மலர்க் கை ஏற்கும்அகன்பணை நீர் நன்னாட்டு மேற்கா நாட்டு ஆதனூர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நீற்றலர் பேர் ஒளி நெருங்கும் அப்பதியின் நிறை கரும்பின்சாற்று அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழப் பகட்டேர்ஆற்றலவன் கொழுக் கிழித்த சால் வழி போய் அசைந்து ஏறிச்சேற்றலவன் கரு உயிர்க்க முருகுயிர்க்கும் செழுங் கமலம்.
சொற்பிரிப்பு
நீற்று அலர் பேர் ஒளி நெருங்கும் அப்பதியின் நிறை கரும்பின்சாற்று அலை வன் குலை வயலில் தகட்டு வரால் எழப் பகட்டு ஏர்ஆற்றலவன் கொழுக் கிழித்த சால் வழி போய் அசைந்து ஏறிச்சேற்று அலவன் கரு உயிர்க்க முருகு உயிர்க்கும் செழும் கமலம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

நனை மருவுஞ் சினை பொதுளி நறு விரை சூழ் செறி தளிரில்தினகர மண்டலம் வருடுஞ் செழுந் தருவின் குலம் பெருகிக்கனமருவி அசைந்து அலையக் களி வண்டு புடை சூழப்புனல் மழையோ மதுமழையோ பொழிவு ஒழியா பூஞ்சோலை.
சொற்பிரிப்பு
நனை மருவும் சினை பொதுளி நறுவிரை சூழ் செறி தளிரில்தினகர மண்டலம் வருடும் செழும் தருவின் குலம் பெருகிக்கனமருவி அசைந்து அலையக் களி வண்டு புடை சூழப்புனல் மழையோ மது மழையோ பொழிவு ஒழியா பூஞ்சோலை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பாளை விரி மணங் கமழும் பைங்காய் வன் குலைத்தெங்கின்தாளதிர மிசை முட்டித் தடம் கிடங்கின் எழப்பாய்ந்தவாளை புதையச் சொரிந்த பழமிதப்ப வண் பலவின்நீளமுதிர் கனி கிழி தேன் நீத்தத்தில் எழுந்துகளும்.
சொற்பிரிப்பு
பாளை விரி மணம் கமழும் பைங்காய் வன் குலைத் தெங்கின்தாள் அதிர மிசை முட்டித் தடம் கிடங்கின் எழப் பாய்ந்தவாளை புதையச் சொரிந்த பழம் மிதப்ப வண் பலவின்நீள முதிர் கனிகிழி தேன் நீத்தத்தில் எழுந்து உகளும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வயல் வளமும் செயல் படு பைந் துடவையிடை வருவளமும்வியலிடம் எங்கணும் நிறைய மிக்க பெரும் திருவினவாம்புயலடையும் மாடங்கள் பொலிவு எய்த மலியுடைத்தாய்அயலிடை வேறு அடி நெருங்கக் குடி நெருங்கி உளது அவ்வூர்.
சொற்பிரிப்பு
வயல் வளமும் செயல் படு பைந் துடவையிடை வருவளமும்வியலிடம் எங்கணும் நிறைய மிக்க பெரும் திருவினவாம்புயலடையும் மாடங்கள் பொலிவு எய்த மலியுடைத்தாய்அயலிடை வேறு அடி நெருங்கக் குடி நெருங்கி உளது அவ்வூர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மற்றவ்வூர் புறம் பணையின் வயல் மருங்கு பெரும் குலையில்சுற்றம் விரும்பிய கிழமைத் தொழில் உழவர் கிளை துவன்றிப்பற்றிய பைங் கொடிச் சுரை மேல் படர்ந்த பழம் கூரையுடைப்புற்குரம்பைச் சிற்றில் பல நிறைந்து உளதோர் புலைப்பாடி.
சொற்பிரிப்பு
மற்று அவ்ஊர்ப் புறம்பணையின் வயல் மருங்கு பெரும்குலையில்சுற்றம் விரும்பிய கிழமைத் தொழில் உழவர் கிளை துவன்றிப்,பற்றிய பைங்கொடிச் சுரைமேல் படர்ந்த பழம் கூரை உடைப்புற்குரம்பைச் சிற்றில் பல நிறைந்து உளது ஓர் புலைப்பாடி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கூருகிர் மெல்லடி அளகின் குறும் பார்ப்புக் குழுச் சுழலும்வார் பயில் முன்றிலில் நின்ற வள்ளுகிர் நாய் துள்ளு பறழ்கார் இரும்பின் சரி செறிகைக் கரும் சிறார் கவர்ந்து ஓடஆர் சிறு மென் குரைப்படக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி.
சொற்பிரிப்பு
கூர் உகிர் மெல் அடி அளகின் குறும்பார்ப்புக் குழுச்சுழலும்வார்பயின் முன்றிலில் நின்ற வள்உகிர் நாய்த் துள்ளு பறழ்கார் இரும்பின் சரி செறிகைக் கரும் சிறார் கவர்ந்து ஓடஆர்சிறு மென் குரைப்பு அடக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வன் சிறு தோல்மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும்தன் சினை மென் பெடையொடுங்குந் தடங்குழிசிப் புதை நீழல்மென் சினைய வஞ்சிகளும் விசிப் பறை தூங்கின மாவும்புன்றலை நாய்ப் புனிற்று முழைப் புடைத்து எங்கும் உடைத்து எங்கும்.
சொற்பிரிப்பு
வன் சிறுதோல் மிசை உழத்தி மகவுறங்கும் நிழல் மருதும்தன்சினை மென் பெடை ஒடுங்கும் தடம் குழிசிப் புதை நீழல்மென்சினைய வஞ்சிகளும், விசிப்பறை தூங்கின மாவும்,புன்தலை நாய்ப் புனிற்று முழைப் புடைத்தெங்கும் உடைத்து எங்கும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

செறிவலித் திண் கடைஞர் வினைச் செயல்புரிவை கறை யாமக்குறி அளக்க அழைக்கும் செங் குடுமி வாரணச் சேக்கைவெறி மலர்த் தண் சினைக் காஞ்சி விரி நீழல் மருங்கு எல்லாம்நெறி குழல் புன் புலை மகளிர் நெற் குறு பாட்டு ஒலி பரக்கும்.
சொற்பிரிப்பு
செறிவலித் திண் கடைஞர் வினைச் செயல் புரிவை கறை யாமக்குறி அளக்க உளைக்கும் செங்குடுமி வாரணச் சேக்கைவெறிமலர்த் தண் சினைக்காஞ்சி விரிநீழல் மருங்கு எல்லாம்நெறிகுழல் புன்புலை மகளிர் நெல் குறுபாட்டு ஒலி பரக்கும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கையுடைப் புடை எங்கும்தள்ளும் தாள் நடை அசையத் தளை அவிழ் பூங்குவளை மதுவிள்ளும் பைங் குழல் கதிர் நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள்கள்ளுண்டு களி தூங்கக் கறங்கு பறையும் கலிக்கும்.
சொற்பிரிப்பு
புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கை உடைப் புடை எங்கும்தள்ளும் தாள் நடை அசையத் தளை அவிழ் பூங்குவளை மதுவிள்ளும்;பைங்குழல் கதிர்நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள்கள் உண்டு களி தூங்கக் கறங்கு பறையும் கலிக்கும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

இப்படித்து ஆகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார்மெய்ப்பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வொடும் வந்தார்அப்பதியில் ஊர் புலைமை ஆன்ற தொழில் தாயத்தார்ஒப்பிலவர் நந்தனார் என ஒருவர் உளர் ஆனார்.
சொற்பிரிப்பு
இப்படித்தாகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார்;மெய்ப்பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வொடும் வந்தார்;அப்பதியில் ஊர்ப் புலைமை ஆன்ற தொழில் தாயத்தார்;ஒப்பில் அவர்; நந்தனார் என ஒருவர் உளர் ஆனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறைக் கண்ணிப் பெருந்தகைபால்சிறந்த பெரும் காதலினால் செம்மை புரி சிந்தையராய்மறந்தும் அயல் நினைவு இன்றி வரு பிறப்பின் வழி வந்தஅறம் புரி கொள்கையராயே அடித்தொண்டின் நெறி நின்றார்.
சொற்பிரிப்பு
பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறைக்கண்ணிப் பெருந்தகைபால்சிறந்த பெரும் காதலினால் செம்மை புரி சிந்தையராய்மறந்தும் அயல் நினைவு இன்றி வருபிறப்பின் வழிவந்தஅறம்புரி கொள்கையராயே அடித்தொண்டின் நெறி நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

ஊரில் விடும் பறைத் துடைவை உணவுரிமையாக்கொண்டுசார்பில் வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால்கூரிலைய முக் குடுமிப் படை அண்ணல் கோயில் தொறும்பேரிகையே முதலாய முகக் கருவி பிறவினுக்கும்.
சொற்பிரிப்பு
ஊரில் விடும் பறைத்துடவை உணவு உரிமையாக் கொண்டுசார்பில் வரும் தொழில் செய்வார் தலைநின்றார் தொண்டினால்;கூர் இலைய முக்குடுமிப் படை அண்ணல் கோயில்தொறும்பேரிகையே முதல் ஆய முகக்கருவி பிறவினுக்கும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

போர்வைத் தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசைநேர் வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையில்சேர்வுற்ற தந்திரியும் தேவர் பிரான் அர்ச்சனை கட்குஆர்வத்தினுடன் கோரோசனையும் இவை அளித்து உள்ளார்.
சொற்பிரிப்பு
போர்வைத் தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசைநேர் வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையில்சேர்வுற்ற தந்திரியும் தேவர் பிரான் அர்ச்சனைகட்குஆர்வத்தின் உடன் கோரோசனையும் இவை அளித்து உள்ளார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

இவ் வகையால் தந்தொழிலின் இயன்ற வெலாம் எவ்விடத்தும்செய்வனவும் கோயில்களில் திரு வாயில் புறம் நின்றுமெய் விரவு பேரன்பு மிகுதியினால் ஆடுதலும்அவ்வியல்பில் பாடுதலுமாய் நிகழ்வார் அந்நாளில்.
சொற்பிரிப்பு
இவ்வகையில் தம்தொழிலின் இயன்ற எலாம் எவ்இடத்தும்செய்வனவும் கோயில்களில் திருவாயில் புற நின்றுமெய் விரவு பேரன்பு மிகுதியினால் ஆடுதலும்அவ்இயல்பில் பாடுதலுமாய் நிகழ்வார் அந்நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

திருப் புன்கூர்ச் சிவலோகன் சேவடிகள் மிக நினைந்துவிருப்பினோடும் தம் பணிகள் வேண்டுவன செய்வதற்கேஅருத்தியினால் ஒருப்பட்டு அங்கு ஆதனூர் தனில் நின்றும்வருத்தமுறுங் காதலினால் வந்து அவ்வூர் மருங்கணைந்தார்.
சொற்பிரிப்பு
திருப்புன்கூர்ச் சிவலோகன் சேவடிகள் மிக நினைந்துவிருப்பினொடும் தம் பணிகள் வேண்டுவன செய்வதற்கேஅருத்தியினால் ஒருப்பட்டு அங்கு ஆதனூர்தனில் நின்றும்வருத்தம் உறும் காதலினால் வந்து அவ்ஊர் மருங்கு அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

சீர் ஏறும் இசை பாடித் திருத் தொண்டர் திரு வாயில்நேரே கும்பிட வேண்டும் என நினைந்தார்க்கு அது நேர்வார்கார் ஏறும் எயில் புன் கூர்க் கண்ணுதலார் திரு முன்புபோரேற்றை விலங்க அருள் புரிந்து அருளிப் புலப்படுத்தார்.
சொற்பிரிப்பு
சீர் ஏறும் இசைபாடித் திருத்தொண்டர் திருவாயில்நேரே கும்பிட வேண்டும் என நினைந்தார்க்கு அது நேர்வார்கார் ஏறும் எயில் புன்கூர்க் கண்நுதலார் திருமுன்புபோர் ஏற்றை விலங்க அருள் புரிந்தருளிப் புலப்படுத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

சிவலோகம் உடையவர் தம் திரு வாயில் முன்னின்றுபவ லோகம் கடப்பவர் தம் பணிவிட்டுப் பணிந்து எழுந்துசுவலோடுவார் அலையப் போவார் பின் பொரு சூழல்அவலோடும் அடுத்தது கண்டு ஆதரித்துக் குளம் தொட்டார்.
சொற்பிரிப்பு
சிவலோகம் உடையவர் தம் திருவாயில் முன் நின்றுபவலோகம் கடப்பவர் தம் பணிவிட்டுப் பணிந்து எழுந்துசுவலோடு வார் அலையப் போவார் பின்பு ஒருசூழல்அவலோடும் அடுத்தது கண்டு ஆதரித்துக் குளம் தொட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

வடம் கொண்ட பொன் இதழி மணி முடியார் திரு அருளால்தடம் கொண்ட குளத்து அளவு சமைத்து அதற்பின் தம் பெருமான்இடம் கொண்ட கோயில் புறம் வலம் கொண்டு பணிந்து எழுந்துநடம் கொண்டு விடை கொண்டு தம் பதியில் நண்ணினார்.
சொற்பிரிப்பு
வடம்கொண்ட பொன் இதழி மணிமுடியார் திருவருளால்தடம்கொண்ட குளத்து அளவு சமைத்ததற்பின், தம்பெருமான்இடம்கொண்ட கோயில் புறம் வலம் கொண்டு, பணிந்து எழுந்து,நடம் கொண்டு, விடைகொண்டு, தம் பதியில் நண்ணினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

இத் தன்மை ஈசர் மகிழ் பதி பலவும் சென்று இறைஞ்சிமெய்த்த திருத் தொண்டு செய்து விரவுவார் மிக்கு எழுந்தசித்தமொடுந் திருத் தில்லைத் திரு மன்று சென்று இறைஞ்சஉய்த்த பெருங் காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப.
சொற்பிரிப்பு
இத்தன்மை ஈசர் மகிழ் பதி பலவும் சென்று இறைஞ்சிமெய்த்த திருத்தொண்டு செய்து விரவுவார் மிக்கு எழுந்தசித்தமொடும் திருத்தில்லைத் திருமன்று சென்று இறைஞ்சஉய்த்த பெரும் காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

அன்று இரவு கண் துயிலார் புலர்ந்து அதற்பின் அங்கு எய்தஒன்றியணை தரு தன்மை உறு குலத்தோடு இசைவு இல்லைஎன்று இதுவும் எம்பெருமான் ஏவல் எனப் போக்கு ஒழிவார்நன்றுமெழுங் காதல் மிக நாளைப் போவேன் என்பார்.
சொற்பிரிப்பு
அன்று இரவு கண் துயிலார்; புலர்ந்ததற்பின் “அங்கு எய்தஒன்றி அணை தரு தன்மை உறுகுலத்தோடு இசைவு இல்லை”என்று “இதுவும் எம்பெருமான் ஏவல்” எனப் போக்கு ஒழிவார்;நன்றும் எழும் காதல் மிக “நாளைப் போவேன்” என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

நாளைப் போவேன் என்று நாள்கள் செலத் தரியாதுபூளைப் பூவாம் பிறவிப் பிணிப்பு ஒழியப் போவாராய்ப்பாளைப் பூங்கமுகுடுத்த பழம் பதியினின்றும் போய்வாளைப் போத்து எழும் பழனஞ் சூழ் தில்லை மருங்கணைவார்.
சொற்பிரிப்பு
“நாளைப் போவேன்” என்று நாள்கள் செலத் தரியாது,பூளைப் பூவாம் பிறவிப் பிணிப்பு ஒழியப் போவாராய்ப்,பாளைப் பூங்கமுகு உடுத்த பழம்பதியின் நின்றும் போய்,வாளைப் போத்து எழும் பழனம் சூழ் தில்லை மருங்கு அணைவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

செல்கின்ற போழ்து அந்தத் திரு எல்லை பணிந்து எழுந்துபல்கும் செந்தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும்மல்கு பெரும் இடையோதும் மடங்கள் நெருங்கினவும் கண்டுஅல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார்.
சொற்பிரிப்பு
செல்கின்ற போழ்து அந்தத் திருஎல்லை பணிந்து எழுந்து,பல்கும் செந்தீ வளர்த்த பயில் வேள்வி எழும்புகையும்,மல்கு பெரும் கிடை ஓதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு,அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

நின்றவர் அங்கு எய்தற்கு அரிய பெருமையினை நினைப்பார் முன்சென்று இவையும் கடந்து ஊர் சூழ் எயில் திருவாயிலைப் புக்கார்குன்று அனைய மாளிகைகள் தொறும் குலவும் வேதிகைகள்ஒன்றிய மூவாயிரம் அங்கு உள என்பார் ஆகுதிகள்.
சொற்பிரிப்பு
நின்றவர் அங்கு எய்தரிய பெருமையினை நினைப்பார் ”முன்,சென்று இவையும் கடந்து ஊர் சூழ் எயில் திருவாயிலைப் புக்கால்குன்று அனைய மாளிகைகள் தொறும் குலவும் வேதிகைகள்,ஒன்றிய மூவாயிரம் அங்கு உள என்பார் ஆகுதிகள்”.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்று அஞ்சிஅப்பதியின் மதில் புறத்தின் ஆராத பெருங் காதல்ஒப்ப அரிதாய் வளர்ந்து ஓங்க உள் உருகிக் கை தொழுதேசெப்ப அரிய திரு எல்லை வலங் கொண்டு செல்கின்றார்.
சொற்பிரிப்பு
“இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது” என்று அஞ்சிஅப்பதியின் மதில்பு றத்தின் ஆராத பெரும்காதல்ஒப்பரிதாய் வளர்ந்து ஓங்க உள் உருகிக் கை தொழுதேசெப்பரிய திருஎல்லை வலம் கொண்டு செல்கின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

இவ் வண்ணம் இரவு பகல் வலம் செய்து அங்கு எய்து அரியஅவ் வண்ணம் நினைந்து அழிந்த அடித் தொண்டர் அயர்வு எய்திமை வண்ணத் திரு மிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவதுஎவ் வண்ணம் என நினைந்தே ஏசறவினொடுந் துயில்வார்.
சொற்பிரிப்பு
இவ்வண்ணம் இரவு பகல் வலம் செய்து அங்கு எய்தரிய,அவ்வண்ணம் நினைந்து அழிந்த அடித்தொண்டர் அயர்வு எய்தி,“மைவண்ணத் திருமிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவதுஎவ்வண்ணம்” என நினைந்தே ஏசறவினொடும் துயில்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார்அந் நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்து அருளிமன்னு திருத் தொண்டர் அவர் வருத்தம் எலாம் தீர்ப்பதற்குமுன் அணைந்து கனவின் கண் முறுவலோடும் அருள் செய்வார்.
சொற்பிரிப்பு
“இன்னல் தரும் இழி பிறவி இது தடை” என்றே துயில்வார்அந்நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்தருளிமன்னு திருத்தொண்டர் அவர் வருத்தம் எலாம் தீர்ப்பதற்குமுன் அணைந்து கனவின் கண் முறுவலொடும் அருள் செய்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

இப் பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கிமுப்புரி நூல் மார்பர் உடன் முன் அணைவாய் என மொழிந்துஅப் பரிசே தில்லை வாழ் அந்தணர்க்கும் எரி அமைக்கமெய்ப் பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார்.
சொற்பிரிப்பு
“இப்பிறவி போய் நீங்க எரியின் இடை நீ மூழ்கிமுப்புரிநூல் மார்பர் உடன் முன் அணைவாய்” என்ன மொழிந்துஅப்பரிசே தில்லை வாழ் அந்தணர்க்கும் எரி அமைக்கமெய்ப்பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

தம் பெருமான் பணி கேட்ட தவ மறையோர் எல்லாரும்அம்பலவர் திருவாயின் முன்பு அச்சமுடன் ஈண்டிஎம்பெருமான் அருள் செய்த பணி செய்வோம் என்று ஏத்தித்தம் பரிவு பெருக வரும் திருத் தொண்டர் பால் சார்ந்தார்.
சொற்பிரிப்பு
தம்பெருமான் பணிகேட்ட தவ மறையோர் எல்லாரும்அம்பலவர் திருவாயில் முன்பு அச்சம் உடன் ஈண்டி“எம்பெருமான் அருள்செய்த பணி செய்வோம்” என்று ஏத்தித்தம்பரிவு பெருக வரும் திருத்தொண்டர்பால் சார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

ஐயரே அம்பலவர் அருளால் இப் பொழுது அணைந்தோம்வெய்ய அழல் அமைத்து உமக்குத் தர வேண்டி என விளம்பநையும் மனத் திருத் தொண்டர் நான் உய்ந்தேன் எனத் தொழுதார்தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்த படி மொழிந்தார்.
சொற்பிரிப்பு
“ஐயரே! அம்பலவர் அருளால் இப்பொழுது அணைந்தோம்;வெய்ய அழல் அமைத்து உமக்குத் தர வேண்டி” என விளம்பநையுமனத் திருத்தொண்டர் “நான் உய்ந்தேன்” எனத் தொழுதார்;தெய்வமறை முனிவர்களும் தீ அமைத்தபடி மொழிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

31

மறையவர்கள் மொழிந்து அதன் பின் தென் திசையின் மதில் புறத்துப்பிறை உரிஞ்சும் திருவாயில் முன்பாக பிஞ்ஞகர் தம்நிறை அருளால் மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி எய்திஇறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழ வலம் கொண்டார்.
சொற்பிரிப்பு
மறையவர்கள் மொழிந்ததற்பின் தென்திசையின் மதில் புறத்துப்பிறை உரிஞ்சும் திருவாயில் முன்னாகப் பிஞ்ஞகர் தம்நிறை அருளால் மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி எய்திஇறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழ வலம் கொண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

32

கை தொழுது நடமாடுங் கழலுன்னி அழல் புக்கார்எய்திய அப் பொழுதின் கண் எரியின் கண் இம்மாயப்பொய் தகையும் உருவொழித்துப் புண்ணிய மா முனி வடிவாய்மெய் திகழ் வெண்ணூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார்.
சொற்பிரிப்பு
கைதொழுது நடம் ஆடும் கழல் உன்னி அழல் புக்கார்;எய்திய அப்பொழுதின் கண் எரியின்கண் இம்மாயப்பொய்தகையும் உரு ஒழித்துப் புண்ணிய மாமுனி வடிவாய்மெய்திகழ் வெண்நூல் விளங்க வேணிமுடி கொண்டு எழுந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

33

செந்தீ மேல் எழும் பொழுது செம்மலர் மேல் வந்து எழுந்தஅந்தணன் போல் தோன்றினார் அந்தரத்து துந்துபி நாதம்வந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்துப்பைந்துணர் மந்தாரத்தின் பனி மலர்மாரிகள் பொழிந்தார்.
சொற்பிரிப்பு
செந்தீமேல் எழும்பொழுது செம்மலர்மேல் வந்து எழுந்தஅந்தணன்போல் தோன்றினார்; அந்தர துந்துபி நாதம்வந்து எழுந்தது இருவிசும்பில்; வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்துப்பைந்துணர் மந்தாரத்தின் பனிமலர் மாரிகள் பொழிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

34

திருவுடைய தில்லைவாழ் அந்தணர்கள் கை தொழுதார்பரவரிய தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார்அருமறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்கவருகின்றார் திரு நாளைப் போவாராம் மறை முனிவர்.
சொற்பிரிப்பு
திருஉடைய தில்லை வாழ் அந்தணர்கள் கைதொழுதார்;பரவு அரிய தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார்;அருமறை சூழ் திருமன்றில் ஆடுகின்ற கழல் வணங்கவருகின்றார் திருநாளைப் போவாராம் மறை முனிவர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

35

தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்திகொல்லை மான் மறிக் கரத்தார் கோபுரத்தைத் தொழுது இறைஞ்சிஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும்எல்லையினைத் தலைப்பட்டார் யாவர் களும் கண்டிலரால்.
சொற்பிரிப்பு
தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்திக்கொல்லை மான் மறிக் கரத்தார் கோபுரத்தைத் தொழுது இறைஞ்சிஒல்லைபோய் உட்புகுந்தார்; உலகு உய்ய நடம் ஆடும்எல்லையினைத் தலைப்பட்டார் யாவர்களும் கண்டிலரால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

36

அந்தணர்கள் அதிசயத்தார் அருமுனிவர் துதி செய்தார்வந்தணைந்த திருத் தொண்டர் தம்மை வினை மாசு அறுத்துச்சுந்தரத் தாமரை புரையும் துணை அடிகள் தொழுது இருக்கஅந்தம் இலா ஆனந்தப் பெரும் கூத்தர் அருள் புரிந்தார்.
சொற்பிரிப்பு
அந்தணர்கள் அதிசயித்தார்; அருமுனிவர் துதிசெய்தார்;வந்து அணைந்த திருத்தொண்டர் தம்மை வினைமாசு அறுத்துச்சுந்தரத் தாமரை புரையும் துணைஅடிகள் தொழுது இருக்கஅந்தம்இலா ஆனந்தப் பெரும்கூத்தர் அருள்புரிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

37

மாசு உடம்பு விடத் தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்துஆசில் மறை முனியாகி அம்பலவர் தாள் அடைந்தார்தேசுடைய கழல் வாழ்த்தித் திருக் குறிப்புத் தொண்டர் வினைப்பாசம் அற முயன்றவர்தம் திருத் தொண்டின் பரிசு உரைப்பாம்.
சொற்பிரிப்பு
மாசு உடம்பு விடத் தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்துஆசில் மறை முனி ஆகி அம்பலவர் தாள் அடைந்தார்தேசு உடைய கழல் வாழ்த்தித் திருக்குறிப்புத் தொண்டர் வினைப்பாசம் அற முயன்றவர் தம் திருத்தொண்டின் பரிசு உரைப்பாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.