திருமுறை 12 · 12.023 · 10

உருத்திர பசுபதி நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

நிலத்தின் ஓங்கிய நிவந்தெழும் பெரும் புனல் நீத்தம்மலர்த் தடம் பணை வயல் புகு பொன்னி நன்னாட்டுக்குலத்தின் ஓங்கிய குறைவு இலா நிறை குடி குழுமித்தலத்தின் மேம் படு நலத்தது பெருந் திருத் தலையூர்.
சொற்பிரிப்பு
நிலத்தின் ஓங்கிய நிவந்து எழும் பெரும்புனல் நீத்தம்மலர்த் தடம்பணை வயல் புகு பொன்னி நன் நாட்டுக்குலத்தின் ஓங்கிய குறைவு இலா நிறைகுடி குழுமித்தலத்தின் மேம்படு நலத்தது பெரும் திருத்தலையூர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வானளிப்பன மறையவர் வேள்வியின் வளர் தீதேனளிப்பன நறுமலர் செறி செழுஞ் சோலைஆனளிப்பன அஞ்சுகந்து ஆடுவார்க்கு அவ்வூர்தானளிப்பன தருமமும் நீதியுஞ் சால்பும்.
சொற்பிரிப்பு
வான் அளிப்பன மறையவர் வேள்வியின் வளர் தீ;தேன் அளிப்பன நறுமலர் செறிசெழும் சோலை;ஆன் அளிப்பன அஞ்சு உகந்து ஆடுவார்க்கு அவ்ஊர்தான் அளிப்பன தருமமும் நீதியும் சால்பும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அங்கண் மா நகர் அதன் இடை அருமறை வாய்மைத்துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர்செங்கண் மால் விடையார் செழும் பொன் மலை வல்லிபங்கனார் அடிமைத் திறம் புரி பசுபதியார்.
சொற்பிரிப்பு
அங்கண் மாநகர் அதன் இடை அருமறை வாய்மைத்துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர்செங்கண் மால் விடையார் செழும் பொன்மலை வல்லிபங்கனார் அடிமைத் திறம் புரி பசுபதியார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஆய அந்தணர் அருமறை உருத்திரம் கொண்டுமாயனார் அறியா மலர்ச் சேவடி வழுத்தும்தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதிநேய நெஞ்சினர் ஆகி அத் தொழில் தலை நின்றார்.
சொற்பிரிப்பு
ஆய அந்தணர் அருமறை உருத்திரம் கொண்டுமாயனார் அறியா மலர்ச் சேவடி வழுத்தும்தூய அன்பொடு தொடர்பினில் இடை அறாச் சுருதிநேய நெஞ்சினர் ஆகி அத்தொழில் தலை நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கரையில் கம்பலை புள் ஒலி கறங்கிட மருங்குபிரச மென் சுரும்பு அறைந்திடக் கரு வரால் பிறழும்நிரை நெடுங் கயல் நீரிடை நெருப்பு எழுந்தது அனையவிரை நெகிழ்ந்த செங் கமலமென் பொய்கையுள் மேவி.
சொற்பிரிப்பு
கரையில் கம்பலை புள் ஒலி கறங்கிட மருங்குபிரச மென்கரும்பு அறைந்திடக் கருவரால் பிறழும்நிரை நெடும் கயல் நீர் இடை நெருப்பு எழுந்து அனையவிரை நெகிழ்ந்த செங்கமல மென் பொய்கையுள் மேவி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

தெள்ளு தண் புனல் கழுத்தளவு ஆயிடைச் செறியஉள்ளுறப் புக்கு நின்று கை உச்சி மேல் குவித்துத்தள்ளு வெண்டிரைக் கங்கை நீர் ததும்பிய சடையார்கொள்ளும் அன்பினில் உருத்திரம்குறிப்பொடு பயின்றார்.
சொற்பிரிப்பு
தெள்ளு தண்புனல் கழுத்து அளவாய் இடைச் செறியஉள் உறப்புக்கு நின்று கை உச்சிமேல் குவித்துத்தள்ளு வெண்திரைக் கங்கை நீர் ததும்பிய சடையார்கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு பயின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

அரு மறைப் பயன் ஆகிய உருத்திரம் அதனைவரு முறைப் பெரும் பகலும் எல்லியும் வழுவாமேதிருமலர்ப் பொகுட்டு இருந்தவன் அனையவர் சில நாள்ஒருமை உய்த்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார்.
சொற்பிரிப்பு
அருமறைப் பயன் ஆகிய உருத்திரம் அதனைவருமுறைப் பெரும் பகலும் எல்லியும் வழுவாமேதிருமலர்ப் பொகுட்டு இருந்தவன் அனையவர் சிலநாள்ஒருமை உய்த்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

காதல் அன்பர் தம் அரும் தவப் பெருமையும் கலந்தவேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பிஆதி நாயகர் அமர்ந்து அருள் செய்ய மற்றவர் தாம்தீது இலா நிலைச் சிவபுரி எல்லையில் சேர்ந்தார்.**( ** சென்றார் எனவும் பாடம் )
சொற்பிரிப்பு
காதல் அன்பர் தம் அருந்தவப் பெருமையும் கலந்தவேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பிஆதி நாயகர் அமர்ந்து அருள் செய்ய மற்றவர் தாம்தீது இலா நிலைச் சிவபுரி எல்லையில் சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்ஆடு சேவடி அருகுற அணைந்தனர் அவர்க்குப்பாடு பெற்ற சீர் உருத்திர பசுபதியாராம்கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற.
சொற்பிரிப்பு
நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்ஆடு சேவடி அருகு உற அணைந்தனர்; அவர்க்குப்பாடு பெற்ற சீர் உருத்திர பசுபதியாராம்கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

அயில் கொள் முக்குடுமிப் படையார் மருங்கு அருளால்பயில் உருத்திர பசுபதியார் திறம் பரசிஎயில் உடைத் தில்லை எல்லையில் நாளைப் போவாராம்செயலுடைப்புறத் திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம்.
சொற்பிரிப்பு
அயில்கொள் முக்குடுமிப் படையார் மருங்கு அருளால்பயில் உருத்திர பசுபதியார் திறம் பரசிஎயில் உடைத் தில்லை எல்லையில் நாளைப் போவாராம்செயல் உடைப் புறத் திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.